HOME      Khutba      இஃதிகாஃப் நோக்கமும் சிறப்பும் | Tamil Bayan - 785   
 

இஃதிகாஃப் நோக்கமும் சிறப்பும் | Tamil Bayan - 785

           

இஃதிகாஃப் நோக்கமும் சிறப்பும் | Tamil Bayan - 785


இஃதிகாஃப் நோக்கமும் சிறப்பும்
 
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இஃதிகாஃப் நோக்கமும் சிறப்பும்
 
வரிசை : 785
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 07 -04 -2023 | 16-09-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை, தக்வாவை, நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹுவை யார் அல்லாஹ்வை பயப்படுவார்களோ, அல்லாஹுவை யார் அஞ்சி வாழ்வார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தை பின்பற்றுவது மிக இலகுவாக இருக்கும் யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் இல்லையோ, மறுமையின் பயம் இல்லையோ, அல்லாஹ்வுடைய தண்டனையின் மீது பயம் இல்லையோ, நரக நெருப்பின் மீது பயம் இல்லையோ கண்டிப்பாக அவர்களுக்கு இந்த மார்க்கம் சிரமமாக இருக்கும்.
 
ஹலாலை பேணுவதும், ஹராமை விட்டு விலகுவதும், அவர்களுக்குத்தான் மிக கடினமாக இருக்கும். அல்லாஹ்வுடைய மறுமையின் தண்டனையை யார் நினைவில் வைப்பார்களோ, அவர்களுக்கு ஹராமை விட்டு விலகுவது அது எவ்வளவு தான் விருப்பமானதாக இருந்தாலும் பாவங்களை விட்டு விலகுவது ஆக எவ்வளவுதான் நஃப்சுக்கு பிடித்தமாக இருந்தாலும் இன்னும், ஹராமான தடுக்கப்பட்ட தவறான, வழியில் வரக்கூடிய செல்வங்களை விட்டு விலகுவது அத்தகைய வியாபாரங்களை விட்டு விலகுவது, அவை எவ்வளவு தான் லாபமாக இருந்தாலும் சரி, அவை எவ்வளவு தான் செல்வங்களை அதிகம் தரக்கூடியதாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அவர்களுக்கு இலகுவாக இருக்கும்.
 
யார்! மறுமையை பயப்படுவார்களோ, நரகத்தை பயப்படுபவார்களோ, நரகத்தை மறுமையை பயப்படாதவர்களுக்கு இந்த உலகம்த்தான் அவர்களுக்கு சொந்தம், இந்த உலகம் தான் அவர்களுக்கு எல்லாம் இந்த உலகத்தில் அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்று அதே ஒரே கொள்கையில் வெறியிலே இருப்பார்கள் கடைசியில் அவர்கள் அனுபவிக்கப் போவது ஒன்றுமே இல்லை அவர்கள் தின்று அழித்ததை தவிர அவர்கள் உடுத்தி பழையதாக்கியதை தவிர இந்த உலகத்தில் இருந்து அவர்கள் அனுபவிக்க போவது எதுவும் இல்லை மறுமைக்கு அவர்கள் நஷ்டவாளிகளாகத்தான் திரும்புவார்கள் அல்லாஹ் சுபஹானஹூதஆலா என்னையும் உங்களையும் அத்தகைய பெரிய நஷ்டத்தில் இருந்து பாதுகாப்பானாக ஏமாற்றத்தில் இருந்து பாதுகாப்பானாக!
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரமழானுடைய தொடக்கத்தில் இதோ ரமழான் வந்துவிட்டது காலங்களை பயன்படுத்திக் கொள்வோம் என்று நாம் நினைவூட்டல்களை செவியுற்றோம் அந்த ரமழான் பாதியை அடைந்து விட்டது இன்னும், இருக்கக்கூடிய அந்த பாதி எவ்வளவு சீக்கிரம் எவ்வளவு விரைவாக நம்மை விட்டு செல்லுமோ, அல்லாஹ் அறிந்தவன் அதிலே அதுவரை நம்மில் எத்தனை பேர் உயிரோடு இருப்போமோ, நமது உறவுகளில் எத்தனை பேர் உயிரோடு இருப்போமோ,
 
அதையும் அல்லாஹ் ஒருத்தன் தான் அறிந்தவன் நன்மையை சம்பாதித்து கொள்வதற்கு, புண்ணியங்களை சேகரித்துக் கொள்வதற்கு, ஒரு பெரிய வாய்ப்பாக காலமாக கொடுத்த இந்த ரமழான் உண்மையில் அப்படித்தான் நமக்கு கழிகிறதா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எல்லாம் நன்மைகளுக்கும், எல்லா சிறப்புகளுக்கும், உயர்வுகளுக்கும், வணக்க வழிபாடுகளுக்கும், சிறந்த முன்மாதிரி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமழான் மாதத்தில் அல்லாஹ்வை நெருங்குவதற்காக, நன்மைகளை அதிகம் சேகரித்துக் கொள்வதற்காக, அவர்கள் விசேஷமாக கவனம் செலுத்திய ஒரு இபாதத்து தான் இஃதிகாஃப் என்ற இபாதத் அதிலும் குறிப்பாக,
 
இந்த ரமழான் உடைய மாதத்தில் இறுதி பத்திலே அல்லாஹுத்தஆலா மறைத்து வைத்திருக்கிறானே லைலத்துல் கத்ர் என்ற மிகக் கண்ணியமான ஒரு இரவு அல்லாஹுத்தஆலா தன்னுடைய விதிகளை நிர்ணயித்திருக்கிறான் அல்லவா அவற்றையெல்லாம் மக்களுக்கு வெளிப்படுத்தக் கூடிய அந்த உன்னதமான இரவு அந்த இரவை அடைய பெறுவது யார் அந்த இரவை அடையப் பெற்றார்களோ, அதிலே நின்று வணங்கினார்களோ,
 
அவர்களுடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே! அந்த இரவை அவர்களும் தேடினார்கள், அதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதிலே இஃதிகாஃப் இருந்தார்கள், அங்கேயே தங்கியிருந்தார்கள் அல்லாஹ்வோடு தன்னை தனித்து கொண்டார்கள்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இஃதிகாஃப் என்ற  இந்த வணக்கத்தைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம், இஃதிகாஃப் வணக்கத்தினுடைய நோக்கம் என்ன? குறிக்கோள் என்ன? அதை எப்படி நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதை சுருக்கமாக இந்த குத்பாவிலே பார்ப்போம் இஃதிகாஃப் என்றால் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
 
இரவிலோ, பகலிலோ, ஒரு குறிப்பிட்ட நேரம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தை வேண்டி அல்லாஹ்விற்கு மிக சமீபமாக நெருக்கமாக நான் ஆக வேண்டும், நன்மைகளை செய்து அல்லாஹ்வோடு தன்னை தனித்துக்கொண்டு என்ற, இந்த எண்ணத்தில் மஸ்ஜிதிலே தங்குவது இது இஃதிகாஃப் என்று அழைக்கப்படுகிறது.
 
இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்விற்காக தன்னை மஸ்ஜிதிலே ஒதுக்கி கொள்வது அல்லாஹ்வோடு தனிமையில் இருப்பதற்காக அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக இதனுடைய மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால் அறிஞர்கள் சொல்லுகிறார்கள்:
 
அல்லாஹ்வுடைய வணக்கம் வழிப்பாட்டில் தன்னுடைய உள்ளத்தை உறுதிப்படுத்துவது, தன்னுடைய உள்ளத்தை வணக்க வழிபாட்டில் ஈடுபடுத்துவது, அல்லாஹ்வைத் தவிர இந்த உலகத்தில் உள்ள அத்தனை பிற விஷயங்களை விட்டு நம்முடைய உள்ளத்தை திருப்புவது.
 
நம்மை முழுமையாக அல்லாஹ்விற்காக ஒதுக்கி கொள்வது, நம்முடைய அன்றாட ஐந்து நேரத் தொழுகைக்கு மஸ்ஜித்திற்கு வருகிறோம், திரும்ப நாம் நம்முடைய குடும்பத்திற்கு திரும்பச் செல்கிறோம் அல்லது, நம்முடைய வியாபாரத்திற்கு, தொழில்துறைக்கு,  செல்கிறோம், நம்முடைய நண்பர்களை பார்க்கிறோம், இப்படியாக இந்த உலகத்திலே நம்முடைய வணக்க வழிபாடுகள்.
 
இந்த உலகத்தோடு சேர்ந்து இருக்கக்கூடிய இந்த நேரத்தில் நான் என்னை அல்லாஹ்வை சந்திப்பதற்கு தயார்படுத்த விரும்புகிறேன், என்னுடைய உள்ளத்தை முற்றிலும் அல்லாஹ்வை முன்னோக்கியதாக மாற்றிக்கொள்ள விரும்புகிறேன், என்ற அந்த ஒரு உறுதியிலே, மஸ்ஜிதிலே, தங்குவது இஃதிகாஃப் உடைய நோக்கமாக இருக்கிறது.
 
நம்முடைய வணக்க வழிபாட்டில் நம்முடைய ஒரு முழு நாளையோ அல்லது, அதிகமான நேரங்களையோ, அல்லாஹுவுக்காக ஈடுபடுத்துவது, அல்லாஹ்வோடு தனிமையில் இருப்பது, இது இஃதிகாஃப் உடைய அடிப்படை நோக்கமாகும்.
 
அது போன்று படைப்புகளை விட்டு எந்த உலக காரியங்கள் நம்முடைய உள்ளங்களை திசை திருப்பி விடுமோ, மாற்றி விடுமோ, உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நினைவை குறைக்குமோ, அத்தகைய அனைத்தையும் விட்டு விலகி அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டிலே ஈடுபடுவது, திக்ரிலே ஈடுபடுவது, குர்ஆன் ஓதுவதிலே ஈடுபடுவது, அல்லாஹ்வினிடத்தில் துவா செய்வதிலே ஈடுபடுவது,
 
அல்லாஹ்வுடைய சிஃபாத்துகள் வல்லமைகளைப் பற்றி சிந்திப்பதிலே ஈடுபடுவது, இப்படியாக தன்னை முழுமையாக தன்னை அல்லாஹ்வோடு நெருக்கமாக்கிக் கொள்வதற்காக நம்முடைய சிந்தனைகளாலும், நம்முடைய நாவின் மூலமாக நினைவு கூறுவதாலும், நம்முடைய உடல் மூலமாக அமல் செய்வதாகும். முழுமையாக வணக்க வழிபாட்டிலே ஈடுபடுத்திக் கொள்வது தான் இஃதிகாஃப் ஆகும்.
 
இபுனுல் கையும் ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது நூலிலே குறிப்பிடுகிறார்கள். படைப்புகளை விட்டு முற்றிலுமாக தன்னை ஒதுக்கி கொள்வது உலக காரியங்களை விட்டு தன்னுடைய உள்ளத்தை அப்படியே திருப்பிக் கொள்வது மறுமையின் பக்கம் எந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் அடியான் அந்த இஃதிகாஃபிலே ஈடுபட வேண்டும் என்றால்,
 
அடியான் அவனுடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய மற்ற சிந்தனைகள் எல்லாம் நீங்கி அல்லாஹ்வுடைய நினைவு அல்லாஹ்வுடைய அன்பு அல்லாஹ்வை முன்னோக்குவது இந்த உள்ளத்தை அப்படியே ஆக்கிரமித்து விட வேண்டும் நம்முடைய கவலைகள் எல்லாம் அல்லாஹ்வின் மீது மையம் கொண்டிருக்க வேண்டும் நம்முடைய சிந்தனைகள் எல்லாம் அல்லாஹ்வுடைய நினைவிலேயே திளைத்திருக்க வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தரக்கூடிய அல்லாஹ்வுடைய அன்பை நமக்கு ஏற்படுத்தி தரக்கூடிய காரியங்களைப் பற்றியே சிந்திப்பது அல்லாஹ்வுடைய நெருக்கத்தை பற்றி சிந்திப்பது இப்படியாக அடியான் அந்த திக்ரிலே மூழ்கி படைப்புகள் இடத்திலே தனது மனைவியோ பிள்ளைகளோ குடும்பத்தார்களோ நண்பர்களோ இப்படி படைப்புகள் இடத்திலே பேசி மகிழ்ந்து கொண்டிருந்த அடியான் நமக்கு விருப்பமானவர்கள் இடத்திலே பேசினால் நம்முடைய உள்ளம் ராகத்தாக இருக்கும் சந்தோஷமாக இருக்கும்.
 
கவலைகளை மறப்போம், நம்முடைய நல்ல விஷயங்களை அவர்களோடு பரிமாறிக் கொள்வோம், நம்முடைய கவலைகளை அவர்களிடத்திலே சொல்லி சில ஆறுதல்களை பெற்றுக் கொள்வோம் அல்லவா, இப்படி படைப்புகளிடத்திலே பேசி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த உள்ளம், படைப்புகளிடத்திலே பேசி தனக்கு விருப்பமானவர்களிடத்திலே தொடர்பு வைத்துக் கொண்டிருந்த இந்த உள்ளம் முற்றிலுமாக அந்த இஃதிகாஃப் உடைய நாளில் விலகி அல்லாஹ்வை கொண்டு அந்த நிம்மதியை பெற்று விடுவது,
 
அல்லாஹ்வுடைய திக்ரை கொண்டு, குர்ஆன் ஓதுவதைக் கொண்டு, துவாவை கொண்டு, அந்த மன ஆறுதல், அந்த முஹபத் அல்லாஹ்வுடைய அன்பை, அல்லாஹ்வுடைய நெருக்கத்தை, அல்லாஹ்வுடைய அந்த பாசத்தை, உணர்வது அல்லாஹ்விடத்திலே துவா செய்யும் போது எப்படி இந்த உலகத்தில் நமக்கு மிகவும் நெருக்கமான உண்மையான அக்கறையான ஒருவரிடத்திலே நாம் பேசினால் நமக்கு என்ன ஒரு உணர்வு ஏற்படுமோ, அல்லாஹ் அக்பர் அதைவிட மிகப்பெரிய ஒரு ஈமானிய உணர்வு ஏற்பட வேண்டும்.
 
அந்த இஃதிகாஃபிலே அதுதான் நமக்கு நோக்கம் அந்த பயிற்சியின் மூலமாக எப்போதெல்லாம் அல்லாஹ்விடத்திலே துவாவுக்காக கையை உயர்த்துவோமோ, எப்போதெல்லாம் அல்லாஹ்வை நினைவு கூற நாவை அசைவோமோ, அது நமக்கு ஏற்பட வேண்டும்.
 
பொதுவாக வணக்க வழிபாடுகளுடைய ஒரு முக்கியமான நோக்கம் என்னவென்றால் ஒரு இபாதத்தை கொண்டு அந்த இபாதத்தோடு மட்டும் அந்த நோக்கம் முடிந்து விடுவது கிடையாது. மாறாக ஒரு இபாதத்தை கொண்டு அதோடு மட்டும் அந்த நோக்கம் முடிந்து விடுவது கிடையாது, அந்த இபாதத்தில் கிடைக்கக்கூடிய அந்த ஈமானிய உணர்வுகள் ஈமானிய வலிமை தக்குவாவுடைய அந்த பலம் அதை கொண்டு அவருடைய மற்ற வாழ்க்கையின், மற்ற பகுதிகளிலும் அவர் அதை பயன்படுத்துவது அந்த ஈமானை கொண்டு வருவது, அந்தத் தக்வாவை கொண்டு வருவது, அல்லாஹ்வோடு அந்த நெருக்கத்தை கொண்டு வருவது, இதுதான் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமக்கு குர்ஆனிலே சொல்லக்கூடிய அழகிய வழிகாட்டுதல் ஆகும்.
 
اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ, وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى, وَلِبَاسُ التَّقْوٰى  ذٰ لِكَ خَيْرٌ 
 
நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றை விட்டும் தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறது, (பயணத்திற்கு தேவையான உணவு தானியம், பொருளாதாரம் போன்ற) கட்டுச் சாதத்தை (உங்களுடன்) எடுத்துக் கொள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது தக்வா - அல்லாஹ்வின் அச்சம்தான், ஆதமின் சந்ததிகளே! உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கின்ற ஆடைகளையும் (உங்களை அழகுபடுத்தக் கூடிய) அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு படைத்தோம். இறை அச்சத்தின் ஆடை, அதுதான் மிகச் சிறந்தது. (அல்குர்ஆன் 29 : 45, 2 : 197, 7 : 26)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா வணக்க வழிபாடுகளைக் கொண்டு நோக்கம் என்ன?நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது - உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று. அல்குர்ஆன் 2 : 183(
 
ஒவ்வொரு வணக்க வழிப்பாட்டை கொண்டு தக்வாவை அல்லாஹ் சுபஹானஹூதஆலா லட்சியமாக இலக்காக கூறுகிறானே ஏன் அந்த தக்வா அந்த இபாதத்துக்கு மட்டுமா அந்த இபாதத்தில் இருக்கும் போது மட்டுமா அந்த நேரத்தில் மட்டுமா என்றால் கண்டிப்பாக இல்லை அந்த தக்வாவை கொண்டு நம்முடைய வாழ்க்கையை மாற்றுவது அதை நம்முடைய வாழ்க்கையிலே பயிற்சியிலே ப்ராக்டீஸ் பழக்கத்தில் கொண்டு வருவது இஃதிகாஃபின் மூலமாக இத்தகைய உயர்ந்த ஒரு தன்மையை அடியான் அடையப் பெறுகிறான் கண்டிப்பாக மறதி எல்லோருக்கும் இருக்கும் கண்டிப்பாக இந்த உலகத்தில் இருந்தால் மறதி என்பது இருக்கும் சஹாபாக்கள் மறந்து இருக்கிறார்கள் மறதி என்பது அல்லாஹுத்தஆலா படைத்த ஒன்று
 
اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ‌‏
 
நிச்சயமாக (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள், - ஷைத்தானிடமிருந்து ஓர் (தீய) எண்ணம் (அல்லது கோபம்) அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூர்வார்கள்; அப்போது, அவர்கள் (தங்களுக்குரிய அல்லாஹ்வின் கட்டளையைப்) பார்த்துக் கொள்கிறார்கள். (-அந்த தீய எண்ணத்தை விட்டு விலகி, இறைவழிபாட்டின் பக்கம் வந்து விடுகிறார்கள்.) (அல்குர்ஆன் 7 : 201)
 
அல்லாஹுத்தஆலா நல்லவர்கள் மறக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை ஷைத்தான் மறதியைக் கொண்டு அவர்களை தீண்டினால் ஷைத்தான் மறதியை கொண்டு தக்வா உள்ளவர்களை தீண்டினால் மறதியிலே அவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டங்களை சிந்திக்க ஆரம்பித்தால் ஷைத்தானிய எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டாள் கோபப்படக் கூடாத இடத்தில் கோபமோ ஆசைப்பட கூடாத இடத்தில் ஆசைப்படுவதோ பார்க்கக்கூடாததை பார்ப்பதோ கேட்கக்கூடாததை கேட்பதோ இப்படியாக ஷைத்தானின் ஊசலாட்டங்கள் ஏற்பட்டு விட்டால் யாருக்கு அல்லாஹ் சொல்லுகிறான்
 
யார் தக்வாவை சம்பாதித்து வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்பட்டால் ஏற்படும் அல்லாஹ் சொல்லுகிறான் அவர்கள் என்ன செய்வார்கள். உடனே அல்லாஹ்வை நினைத்து விடுவார்கள் உடனே மறுமையை நினைத்து விடுவார்கள் ஆஃகிரத்தை நினைத்து விடுவார்கள் சொர்க்கத்தை நினைத்து விடுவார்கள் நரகத்தை நினைத்து விடுவார்கள்
 
ஷைத்தான் தூண்டக்கூடிய இந்த ஆசை ஷைத்தான் இழுக்கக்கூடிய சுண்டி இழுக்கக்கூடிய இந்த செயல் ஷைத்தான் போடக்கூடிய இந்த எண்ணம் எவ்வளவு ஆபத்தானது அபயகரமானது எவ்வளவு கெட்ட விளைவுகளை உண்டாக்கும் எந்த அளவு அல்லாஹுவின் கோபத்தை உண்டாக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
 
ஒன்றை ஹராம் என்று தெரிவதற்கு கவனியுங்கள் ஒன்றை ஹராம் என்று தெரிவதற்கு இதை செய்யக்கூடாது என்று தெரிவதற்கு மார்க்கத்துடைய இல்மு தேவை மார்க்கத்துடைய இல்மு தேவை அந்த செய்யக்கூடாததை விட்டு விலகுவதற்கு அந்தப் பாவத்தை விட்டு விலகுவதற்கு நமக்கு தேவை இல்மு மட்டும் அல்ல தக்வா தேவை அல்லாஹ்வுடைய பயம் தேவை ஹராமை தெரிந்து கொண்டவர்கள் எல்லாம் ஹராமை விட்டு விலகியவர்கள் இல்லை பாவத்தை தெரிந்து கொண்டவர்கள் எல்லாம் பாவத்தை விட்டு விலகியவர்கள் இல்லை யார் தெரிந்து கொண்டதோடு அல்லாஹ்வை பயப்படவும் செய்கிறார்களோ தெரிந்து கொண்டதோடு அல்லாஹ்வை மறுமையை பயப்படவும் செய்கிறார்களோ அவர்கள்தான் அந்த இல்மை கொண்டு பலன்பெறுவார்கள்
 
 
اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا
 
அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். (அல்குர்ஆன் 35 : 28)
 
அல்லாஹுத்தஆலா இதைத்தான் சொல்லிக் காட்டுகிறான் அல்லாஹுவை பயப்பட கூடியவர்கள் இல்மு உள்ளவர்கள் அதாவது உண்மையான இல்மு உள்ளவர்கள் யார் தெரியுமா எந்த இல்முடைய பழத்தை ருசித்தார்களோ அவர்கள் யார் தெரியுமா அந்த பலனை பெற்றவர்கள் யார் தெரியுமா அல்லாஹ்வை பயப்பட கூடியவர்கள் தான் அன்பிற்குரியவர்களே இமாம் இப்னுல் கையும் அவர்கள் சொல்கிறார்கள் இந்த உன்ஸ் அடியானுக்கு ஏற்பட வேண்டும் இந்த உன்ஸ் அல்லாஹ்வோடு அந்த சந்தோஷம் நமது நண்பரிடத்தில் பேசினால் எப்படி சந்தோஷம் படுகிறோம் நமக்கு வேண்டியவரிடத்தில் பேசினால் யாருக்கு யார் மீது பிரியம் அதிகமாக இருக்குமோ அவரை பார்த்தால் பேசினால் என்ன ஒரு மகிழ்ச்சி இருக்குமோ இதெல்லாம் இந்த உலகத்துடைய மகிழ்ச்சி அல்லாஹ்வினால் கிடைக்கக்கூடிய அந்த ஹாலிக் யாருக்கு
 
وَلَمْ يَكُنْ لَّه كُفُوًا اَحَدٌ‏
 
இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை. (அல்குர்ஆன் 112 : 4)
 
لَيْسَ كَمِثْلِه شَىْءٌ
 
அவனைப் போன்று எதுவும் இல்லை (அல்குர்ஆன் 42 : 11)
 
اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌  تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏
 
அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. (அல்குர்ஆன் 7 : 54)
 
இருக்கிறானோ அவனோடு நமக்கு இருக்கக்கூடிய அந்த உறவு இருக்கிறதே சகோதரர்களே! இந்த படைப்புகள் உடைய உறவுக்கும், யாரோடு இருக்கக்கூடிய எந்த உறவுக்கும் அது ஈடாக முடியாது. ஆகவே, தான் நல்லவர்கள் இறையச்சம் உள்ளவர்கள் அல்லாஹ்வுடைய அந்த நினைவிலே தங்களை மயக்கி கொண்டவர்கள்.
 
அல்லாஹ்வுடைய அன்பிலே மயங்கியவர்கள், அல்லாஹ்வுடைய உபகாரத்தை நினைத்து தங்களையே அல்லாஹ்விற்கு அப்படியே அர்ப்பணிக்க வேண்டும் என்ற அந்த ஈமானிய தேடலிலே உள்ளவர்களை பற்றி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அவர் யார் அவர் தனிமையிலே உட்கார்ந்து அல்லாஹ்வை நினைத்தால்?
 
அவர் தனிமையில் அல்லாஹ்வை நினைத்து விட்டாலே அவருடைய கண்கள் அழுகையால் பீறிட்டு விடும் என்று சொன்னார்கள். இங்கே ஒன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாம் அல்லாஹ்வோடு தனிமையை விரும்ப வேண்டும் என்பதை முதலாவதாக உணர்த்துகிறார்கள். கூட்டு வணக்க வழிபாட்டுக்கு எந்த அளவுக்கு ஆர்வப்படுகிறோமோ, ஈடுபடுகிறோமோ, அதுபோன்று ஏன் நமது மனைவிக்கு கூட தெரியாமல் ரகசியமாக அல்லாஹுவை வணங்குவதற்கு ஒரு நேரத்தை ஒரு இடத்தை வைத்திருக்க வேண்டும்.
 
எந்த நேரத்தில், எந்த இடத்தில், அல்லாஹ்வைத் தவிர யாரும் நம்மை பார்க்க மாட்டார்களோ அத்தகைய ஒரு தனிமையை அல்லாஹ்வுக்காக கொடுக்க வேண்டும் இக்லாஸ் உடைய மிகப்பெரிய ஒரு அடையாளம்.
 
அன்பானவர்களே! சில சலஃப்கள் சொல்வார்கள்: இன்று நாமோ நம்முடைய பாவங்களை மறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், நம்முடைய நன்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம், நம்முடைய சான்றோர் இருக்கிறார்கள் அல்லவா அவர்கள் எத்தகையவர்கள் தெரியுமா அவர்கள் நன்மைகளை மறைத்துக் கொண்டிருந்தார்கள்.
 
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நன்மைகளை எந்த அளவுக்கு முடியுமோ வெளிப்படுத்த நினைக்கிறோம், நம்முடைய தனிப்பட்ட நன்மைகளை நம்முடைய சான்றோர்கள் நன்மைகளை மறைப்பார்கள். 
 
குர்ஆன் ஓதிக் கொண்டே இருப்பார்கள் யாராவது மாணவர் வருகிறார் சந்தேகம் கேட்பதற்காக, விளக்கம் கேட்பதற்காக என்றால் ஒரு பெரிய துணியை வைத்து அந்தக் குர்ஆனை அப்படியே மூடிவிட்டு சும்மா உட்கார்ந்து இருப்பது போன்று இருந்து கொள்வார்கள் அவர் நினைப்பார் ஆசிரியர் சும்மா இருந்தார் வந்து பேசிவிட்டு சென்றோம். 
 
இன்று நம்மிலே பலருடைய நிலை என்னவென்றால் யாராவது வந்தால் தான் அப்போது குர்ஆனை சத்தமாக ஓதுகிறோம் நான் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன் என்று காட்டுவதற்காக போன் எடுத்தால் போனை எடுத்து சிறிது நேரம் குர்ஆனை ஓதிக் கொண்டே இருக்கிறோம். நான் குர்ஆன் ஓதி கிட்டு இருந்தேன் அந்த ஆயத்தை முடிக்கிறதுக்காக முடிக்கிறதுக்காண்டி ஓதிக்கிட்டு இருந்தேன் என்று சொல்லி எந்த அளவுக்கு எல்லாம் நன்மைகள் வெளிப்படுத்தப்பட முடியுமோ?
 
நன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன அங்கே அல்லாஹ்வுடைய பொருத்தம் எடுபட்டு விடுகிறது இக்லாஸ் அங்கே இல்லாமல் போய்விடுகிறது அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக பாதுகாப்பானாக அடுத்து ஒரு உயர்ந்த ஒரு எண்ணத்தை சொல்கிறார்கள் பாருங்கள் இதன் மூலமாக நம்முடைய கபூர் எங்கே தனிமையோ தனிமையோ தனிமை நீண்ட கால தனிமையே அந்த தனிமையிலே நமக்கு அந்த உன்ஸ் அல்லாஹ்வுடைய அந்த அன்பு இந்த உலகத்தில் நமக்கு அந்த அன்பு கிடைக்கப்பெற்று விட்டால் அந்த கப்ருடைய தனிமை நமக்கு தனிமையாக இருக்காது அல்லாஹ் சுபஹானஹூதஆலா நமக்கு மகிழ்ச்சியை சந்தோஷத்தை கொடுப்பான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே இந்த இஃதிகாஃப் பொதுவாக வருடத்தினுடைய எந்த நாளில் இருந்தாலும் தவறில்லைஆனால் குறிப்பாக இப்போது நாம் இருக்கக்கூடிய இந்த கண்ணியமான மாதம் ரமலான் உடைய மாதம் இருக்கிறது அல்லவா அதிலும் குறிப்பாக இந்த கடைசி பத்து வரை இருக்கிறது அல்லவா இதிலே லைலத்துல் கத்ரை தேடி அந்தப் பத்து நாள் இஃதிகாஃப் இருப்பது,
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொடர்ச்சியான வளமையான சுன்னாவாக இருந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் அல்ல ஸஹாபாக்களிலே பலர் இஃதிகாஃப்  இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் முழு ரமலானும் இஃதிகாஃப் இருக்கலாம் ரமலானில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இஃதிகாஃப் இருக்கலாம் ஆண்டிலே எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இஃதிகாஃப் இருக்கலாம் ஆனால் குறிப்பாக இந்த ரமலானுடைய இஃதிகாஃப் என்பது சுன்னாவான ஒன்று ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயலை பற்றி அபூ ஸயீத் அல்குத்ரி ரதியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த இஃதிகாஃப் உடைய தொடக்கத்திலே முதலாவது பத்தில் ரமலான் மாசத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள் பிறகு இரண்டாவது பத்திலே இஃதிகாஃப் இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த இரண்டாவது பத்து முடியும் போது தன்னுடைய கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி மக்களிடத்திலே பேசினார்கள் மக்களே இங்கே வாருங்கள் என்று எல்லோரும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய கூடாரத்திற்கு அருகில் வந்தார்கள் சொன்னார்கள் நான் முதல் பத்திலே இஃதிகாஃப் இருந்தேன் இந்த இரவை தேடியவனாக,
 
எந்த இரவை குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் லைலத்துல் கதர் அண்ட் சகோதரர்களே நாம் கொஞ்சம் உணர வேண்டாம் இன்று இந்த கடைசி பத்துடைய இரவுகள் எல்லாம் நம்மிலே பெரும்பாலானவர்கள் மார்க்கத்தை தெரிந்தவர்கள் கூட அலட்சியத்தினால் கடைத்தெருவுகளிலே ஷாப்பிங்கில் தங்களுடைய அந்த ரமதான் உடைய கடைசி பத்திலே ஈதுடைய அந்த purchaseலே அதிலே கழித்துக் கொண்டிருக்கிறார்களே,
 
ஊர் சுற்றுவதிலே அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே, இங்கே ரசூலுல்லாஹ் உடைய அமலை பாருங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் நன்மைகளே அவர்களது வாழ்க்கை காலையிலிருந்து மாலை வரை திக்ரை தவிர இபாதத்தை தவிர அவர்களிடத்திலே என்ன இருந்தது அந்த நபி லைலத்துல் கத்ருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பாருங்கள் இந்த இரவை தேடியவனாக முதல் பத்திலே நான் இஃதிகாஃப் இருந்தேன் பிறகு இரண்டாவது பத்திலே நான் இஃதிகாஃப் இருந்தேன் பிறகு என்னிடத்திலே வானவர் வந்தார் என்னிடத்திலே வானவர் அதாவது வானவர் வந்தார் சொல்லப்பட்டது நீங்கள் தேடக்கூடிய அந்த இரவு இருக்கிறதே அது கடைசி பத்திலே இருக்கிறது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
 
யார்  இஃதிகாஃப் இருக்க விரும்புவார்களோ அவர்கள் இஃதிகாஃப் இருக்கட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அந்த இஃதிகாஃபை தொடர்ந்தார்கள் கடைசி பத்திலே இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை பதிவு செய்கிறார்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் இது அடுத்த அடுத்த ஆண்டுகளிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் உடைய இறுதி பத்து எப்போதும் இஃதிகாஃப் இருப்பவர்களாக இருந்தார்கள்
 
அல்லாஹுத்தஆலா அவர்களை உயிர் கைப்பற்றுகிற வரை ரசூலுல்லாஹ் இதற்கு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களும் அந்த இஃதிகாஃப் உடைய வணக்கத்தை தொடர்ந்திருந்தார்கள் ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே இந்த ஒரு சிறந்த வணக்கம் அல்லாஹ்வுடைய அந்த நட்பு நமக்கு கிடைப்பதற்காக அல்லாஹ்வுடைய திக்ரில் நம்மை ஈடுபடுத்துவதற்காக மக்களோடு பழகி பழகிய அவர்களுடைய பேச்சிலே அவர்களோடு சிரிப்பதிலே அவர்களோடு நம்முடைய கவலைகளை பரிமாறி கொள்வதிலே இன்பத்தை சுகத்தை ஆதரவை நிம்மதியை தேடிக் கொண்டிருந்த நமக்கு உண்மையான சுகத்தை,
 
உண்மையான இன்பத்தை உண்மையான ஆதரவை தேடுவதற்குரிய ஒரு பெரிய வாய்ப்பு இந்த இஃதிகாஃப் வாய்ப்பு அல்லாஹ்விடத்திலே நம்முடைய தேவைகளை கேட்கலாம் நம்முடைய கஷ்டங்களை அல்லாஹ்விடத்திலே முறையிடலாம் நம்முடைய பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்கலாம் ஆகவே தான் இஃதிகாஃப் இருக்கும் போது கூட மஸ்ஜிதிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகல் நேரங்களிலே திரை போட்டுக் கொண்டார்கள் கூடாரங்கள் போட்டுக் கொண்டார்கள் தான் என்ன செய்கிறோம் தான் எப்படி அல்லாஹ்வை நினைவு கூறுகிறோம் என்பதை மறைக்க வேண்டும் என்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அமல் மக்கள் பார்ப்பதற்காக உள்ளது கற்றுக் கொள்வதற்காக உள்ளது ஆனாலும் இந்த இஃதிகாஃப் உடைய வணக்கத்தில் அவ்வளவு ரகசியமாக அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும் அழ வேண்டும் திக்ரு செய்ய வேண்டும் துவா செய்ய வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நோக்கத்திலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தப் பகலுடைய நேரங்களிலே கூட்டான தொழுகை கூட்டான பயான் போன்ற நிகழ்வுகள் அல்லாத மற்ற எல்லா நேரங்களிலும் இஃதிகாஃபிலே தன்னை ஒரு கூடாரத்திற்குள் ஒரு திரைக்குள் அடைத்துக் கொண்டார்கள் தன்னுடைய வணக்க வழிபாடு அல்லாஹ்வோடு அப்படி இருக்க வேண்டும் அல்லாஹ்வோடு அத்தகைய ஒரு தனிமை நமக்கு வேண்டும்.
 
என்பதற்காக கணியத்திற்குரியவர்களே அது போன்று நாமும் நம்முடைய இபாதத்துக்களை அமைத்துக் கொள்வோமாக இந்த கடைசி பத்தை எதிர்பார்த்து இருப்போமாக அதில் இஃதிகாஃப் உடைய வணக்கத்திற்கு தயாராகுமாக அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா மிஞ்சி இருக்க கூடிய ரமலானின் நாட்களை நமக்கு மிக மிக பயனுள்ள நாட்களாகவும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு நன்மைகள் அதிகரிப்பதற்கு காரணமாக ஆக்கி கொள்வானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/