HOME      Khutba      மஸ்ஜிது - அல்லாஹ்வின் இல்லம் சிறப்புகள் நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகள் | Tamil Bayan - 787   
 

மஸ்ஜிது - அல்லாஹ்வின் இல்லம் சிறப்புகள் நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகள் | Tamil Bayan - 787

           

மஸ்ஜிது - அல்லாஹ்வின் இல்லம் சிறப்புகள் நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகள் | Tamil Bayan - 787


மஸ்ஜிது அல்லாஹ்வின் இல்லம் சிறப்புகள் நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகள்
 
தலைப்பு : மஸ்ஜிது அல்லாஹ்வின் இல்லம் சிறப்புகள் நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகள்
 
வரிசை : 787
 
இடம் : செங்குன்றம் சென்னை – 1
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 21 -04- 23 | 29-11-1442
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார் என்றும் சாட்சி கூறியவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதருடைய கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும்  அல்லாஹ்வுடைய சலவாத்தும் சலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக தக்வா உடைய வாழ்க்கையை பின்பற்றி வாழ வேண்டும்.
 
என்று உபதேசம் செய்தவனாக அல்லாஹ்வுடைய மார்க்க சட்ட வரம்புகளை பின்பற்ற வேண்டும் அல்குர்ஆனும் சுன்னாவும் என்ன வழிகளை காட்டுகின்றனவோ என்ன நற்போதனைகளை நமக்கு கூறுகின்றனவோ அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அல்லாஹ்வை பயந்து மறுமைக்காக வாழ்மாறு உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக  நம்முடைய நோன்புகளையும் நம்முடைய இரவு வணக்கங்களையும் நம்முடைய தான தர்மங்களையும் இன்னும் அனைத்து நன்மைகளையும் அல்லாஹுத்தஆலா ஏற்று அருள் புரிவானாக.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே அல்லாஹ் சுபஹானஹூதஆலா ஒரு சிறந்த ஒரு சிறந்த ஒரு நன்மையை செய்வதற்குரிய ஒரு வாய்ப்பை நமக்கு இந்த நேரத்திலே தந்திருக்கிறான் அல்லாஹ்விற்காக ஒரு மஸ்ஜிதை கட்டி எழுப்புவது அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மிக உயர்ந்த ஜிஹாதிர்க்கு சமமான ஒரு காரியம் ஆகும் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு நன்மைக்கும் முஃமின்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல காரியங்களுக்கும் அதற்குரிய சிறப்பை கூறியிருக்கிறார்கள் அந்த அடிப்படையில் பல ஹதீஸுகளை நாம்  ஸஹிஹான அறிவிப்புகளிலே பார்க்கிறோம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
 
من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة
 
யார் அல்லாஹ்விற்காக ஒரு வீட்டை கட்டுவாரோ உருவாக்குவாரோ அல்லாஹுத்தஆலா அவருக்காக சொர்க்கத்திலே ஒரு வீட்டை கட்டி உருவாக்கி விடுகிறான் சொர்க்கத்திலே ஒரு வீட்டை ஏற்படுத்தி விடுகிறான் என்று அல்லாஹ்வுக்காக மஸ்ஜிதை கட்டுவது இது நிரந்தரமான ஒரு தர்மமாக நிலையான ஒரு தர்மமாக அல்லாஹ்விடத்திலே ஏற்றுக் கொள்ளப்படுகிறது அதாவது இதை கட்டியவருக்கும் அவருடைய சந்ததிகளுக்கும் கியாம நாள் வரை அதனுடைய நன்மை சேர்ந்து கொண்டே இருக்கும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
إِذَا مَاتَ الإنْسَانُ انْقَطَعَ عنْه عَمَلُهُ إِلَّا مِن ثَلَاثَةٍ: إِلَّا مِن صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو له
 
ஆதமுடைய மகன் இறந்து விட்டால் மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களுடைய  அமல்கள் எல்லாம் முடிந்து விடுகின்றன அவர்களுடைய அமல்கள் நின்று விடுகின்றன ஆனால் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்குப் பிறகு மூன்று காரியங்களை சொல்கிறார்கள் அந்த மூன்று காரியங்கள் என்ன
 
நிலையான நிரந்தரமான தொடர்ச்சியாக நன்மைகள் சேரும்படியாக அவர் விட்டுச் சென்ற தான தர்மத்தை தவிர அந்த தர்மங்களுடைய நன்மை அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.
 
எந்த தர்மத்தை கொண்டு மக்கள் தொடர்ந்து பயன்பெறும்படி எவர் ஏற்பாடு செய்து விட்டு சென்றாரோ இன்னுமொரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு ஒரு நீண்ட விளக்கத்தையே சொல்கிறார்கள்:
 
யார்? ஒருவர் அல்லாஹ்விற்காக ஒரு கிணறை மக்களுக்கு தோண்டி வைப்பாரோ, ஒரு நீர் நிலையை ஏற்படுத்தி கொடுப்பாரோ அல்லது, பயணிகள் தங்குவதற்காக ஒரு வீட்டை வழியிலே கட்டி வைப்பாரோ அல்லது, ஒரு குர்ஆனை வாங்கி மக்களுக்காக அதை வக்ஃபு செய்வாரோ அல்லது, ஒரு மஸ்ஜிதை மக்களுக்காக கட்டி விட்டு செல்வாரோ, இப்படியாக ஒரு நீண்ட பட்டியலை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிடுகிறார்கள்.
 
எதற்காக! அந்த நிலையான தர்மத்திற்கு எந்த தர்மத்தின் மூலமாக மக்கள் காலமெல்லாம் பலன் பெறுவார்களோ, நன்மைகளை பெறுவார்களோ, அத்தகைய தர்மத்தை ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்தில் இருந்து தான் சம்பாதித்த செல்வத்திலிருந்து விட்டுச் செல்வாரேயானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அதனுடைய நன்மை அவருடைய மரணத்திற்கு பிறகும் அவருக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 
அல்லது, அவர் மக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்து விட்டு செல்கிறார், புத்தகத்தை எழுதி விட்டோம், அல்லது நாலு பேருக்கு குர்ஆனை சொல்லிக் கொடுத்தோம், நாலு பேருக்கு மார்க்கத்தை சொல்லிக் கொடுத்தோம், தொழுகையை சொல்லிக் கொடுத்து, மார்க்க சட்டங்களை கற்றுக் கொடுத்துவிட்டு, அவர் செல்கிறார் அதன் மூலமாக தொடர்ந்து மக்கள் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவர் கற்றுக் கொடுத்த கல்வியின் மூலமாக யாரெல்லாம் பலன் பெறுவார்களோ அவர் மூலமாக மக்கள் யாரெல்லாம் பலன் பெறுவார்களோ ஒருவர் ஒருவரிடம் இருந்து கல்வியை கற்கிறார் பிறகு, அவரிடம் இருந்து 10 பேர் கேட்கிறார்கள், அந்தப் பத்து நபர்களிடமிருந்து 100 பேர் இப்படியாக அந்த கல்வி பெருகும் போதெல்லாம் அதன் மூலமாக பலன் பெறக்கூடியவர்கள் அதிகமாகும் போதெல்லாம்,
 
ஆரம்பமாக அந்த கல்வியை யார் கற்றுக் கொடுத்தார்களோ அவருக்கு அந்த நன்மை போயி இறுதி நாள் வரை சேர்ந்து கொண்டே இருக்கும் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்குவது,, ஒரு மஸ்ஜிதை உருவாக்குவது, ஒரு மதரஸாவை உருவாக்குவது, பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்களை ஏற்பாடு செய்து கொடுப்பது, அவர்களுடைய வாழ்க்கையில் கல்வியின் ஒளி விளக்கை ஏற்படுத்தி கொடுப்பது, இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அவர் எந்த அளவு என்றால் இதனுடைய நன்மை அதை செய்தவர் இறந்துவிட்டாலும், அதை உருவாக்கியவர் இறந்துவிட்டாலும், அவருக்கு தொடர்ந்து அந்த நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும் அடுத்து மூன்றாவதாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
யார் தனக்கு பின்னால் நல்ல சந்ததிகளை விட்டுச் செல்கிறார்களோ அந்த நல்ல சந்ததிகள் அவர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடத்தில் துவாக்கள் பிரார்த்தனைகள் கேட்கிறார்கள். அந்த பிள்ளைகள் கேட்கக்கூடிய, சந்ததிகள் கேட்கக்கூடிய துவாவும் அவருக்கு தொடர்ந்து சென்று கொண்டே  இருக்கும்.
 
அந்த துவாவின் மூலமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பான், அந்த துவாவின் மூலமாக அல்லாஹ் அவருடைய தரஜாக்களை, அந்தஸ்துகளை, உயர்த்துவான். இப்படியாக ஒரு சிறந்த காரியம் மஸ்ஜிதை உருவாக்குவது, அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல் மஸ்ஜிதை உருவாக்குவது அதுவும் இக்லாஸோடு, உருவாக்குவது தக்வோடு, இறையச்சத்தோடு, உருவாக்குவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவிற்கு வந்தார்கள் அல்லாஹுத்தஆலா மக்காவை அவனுடைய பூமியாக அவனுடைய நகரமாக அங்கீகரித்தார்
 
وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِ وَطُوْرِ سِيْنِيْنَ وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِ
 
அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஆலிவ் மரத்தின் மீது சத்தியமாக! சினாய் மலை மீது சத்தியமாக! அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:1, 2, 3)
 
மக்காவின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான் கண்ணியமான புனிதமான பாதுகாப்பான இந்த நகரத்தின் மீது சத்தியமாக என்று அல்லாஹ்விற்காக இந்த பூமியிலே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறக்கப்படும்  முன்பாகவே இந்த பூமியில் மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதற்காக மலக்குகள் மூலமாக அல்லாஹுத்தஆலா அங்கே காபாவை கட்டி எழுப்பி வைத்திருந்தான்.
 
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏
 
நிச்சயமாக மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா என்றழைக்கப்படும்) ‘பக்கா’வில் உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும் (அதிகமான நன்மைகளை உடையதும்) அகிலத்தார்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 3 : 96)
 
فِيْهِ اٰيٰتٌ  بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  
 
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்ராஹீம் நின்ற இடம். (அல்குர்ஆன் 3 : 97)
 
இந்த பூமியிலே முதல் முதலாக அல்லாஹுவிற்காக கட்டப்பட்ட வீடு மக்காவிலே இருக்கக்கூடிய வீடாகும். பல அறிவிப்புகள் வருகின்றன அதில் ஒரு அறிவிப்பு தான் இது அல்லாஹு சுபஹானஹூதஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த பூமியிலே இறக்கப்பட்ட போது அல்லாஹ் நான் உன்னை வணங்குவதற்கு என்ன செய்வேன்,
 
என்று அல்லாஹ்விடத்தில் வேண்டிய போது அல்லாஹு சுபஹானஹூதஆலா மலக்குகளை அனுப்பி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக காபாவை ஏற்பாடு செய்து கொடுத்தான், அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதற்காக வேண்டி. இந்த பூமி அல்லாஹ்வை வணங்குவதற்காக தான் படைத்த இறைவனை வணங்குவதற்காக தான் அவனுடைய வணக்க வழிபாடு இல்லை என்றால் இந்த பூமியை அல்லாஹுத்தஆலா அழித்து விடுவான்
 
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
 
ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 : 56)
 
மனிதர்களையும் ஜின் வர்க்கத்தையும் நான் படைக்கவில்லை அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியிலே படைக்கப்பட்ட நோக்கம், நம் வாழக்கூடிய நோக்கம் நம்முடைய வாழ்க்கை லட்சியம், அல்லாஹ்வை வணங்குவது, அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை இபாதத்தை இந்த பூமியிலே நிலை நிறுத்துவது, இதன் பக்கம் மக்களை அழைப்பது, இதை மக்களுக்கு எடுத்துச் சொல்வது, அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது,
 
அல்லாஹ்வின் ஏகத்துவத்தை வணக்கத்திற்குரிய இறைவன் வணங்க தகுதியானவன் மனிதர்களுடைய, ஜின்களுடைய, கோடான கோடி படைப்பினங்களுடைய வணக்க வழிபாட்டுக்கு முழுமையான தகுதி உடையவன் அந்த படைத்த இறைவன், அவன் தான் உணவளிக்கின்றான், அவன் தான் உயிர் பிக்கின்றான், அவன் தான் மரணத்தை கொடுக்கின்றான், அவன் தான் எல்லாருடைய நன்மை, தீமைக்கும், பொறுப்பாளன் அவனே!
 
வணங்குவதற்கு தகுதியானவன், வணங்கப்படுவதற்கு  அவனே தகுதியானவன் என்ற அந்த ஓர் அடிப்படையை நிலுவதற்கு அல்லாஹு சுபஹானஹூதஆலா இந்த மஸ்ஜிதை அடையாளச் சின்னமாக வைத்திருக்கிறான். இந்த பூமியிலே மஸ்ஜிதுகள் காபத்துல்லாவாக இருக்கட்டும் வேறு எந்த மஸ்ஜிதாக இருக்கட்டும் அது அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னங்களாம் அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னங்கள் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விற்கு உரியன வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே இல்லை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய தூதர் என்று சாட்சி கூறப்படக்கூடிய இடங்கள் உலகத்திலே மக்கள் எந்த நாட்டிலே வசித்தாலும் சரி, எந்த திசையில் வசித்தாலும் சரி, அங்கே அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்.
 
அல்லாஹு தான் மிகப்பெரியவன், அல்லாஹு தான் மிகப்பெரியவன் அவனை விட பெரிய சக்தி இந்த பூமியிலே எதுவும் இல்லை இறைவனை விட படைத்த அந்த ஓர் இறைவனை விட இந்த பூமியில் எதுவும் பெரியதல்ல அவன் தான் அனைவரையும் படைத்தவன், அனைவரையும் பரிபாலிக்க கூடியவன், இயக்கக் கூடியவன் என்ற அந்த குரலை இந்த பூமியிலே ஓங்கி ஒலிக்க வைக்க கூடிய அந்த சத்தியத்தை முழங்கக் கூடிய இடம் தான் மஸ்ஜிதாகும்.
 
அல்லாஹுத்தஆலா அப்படியாக ஏற்றுக் கொண்டிருக்கிறான் உலகத்திலே எந்த நாட்டிலே சென்றாலும் சரி அங்கே யார் ஆட்சி செய்தாலும் சரி அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே இந்த முழக்கம் சுதந்திரமாக சொல்லப்படுகிறது என்றால் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் மிகப்பெரிய ஒரு அத்தாட்சியாகும். அல்லாஹுத்தஆலா இரவு பகலை சுழற்ச்சியாக வைத்து அவனுடைய பேர் அத்தாட்சிகளிலே ஒன்றாக வைத்திருக்கிறான்
 
اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ ‏
 
நிச்சயமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் நிறைவான அறிவுடையவர்களுக்கு திட்டமாக அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 3 : 190)
 
இரவும், பகலும், சுற்றி வருவதிலே வானங்களையும், பூமியையும், அல்லாஹுத்தஆலா படைத்திருப்பதிலே சிந்திக்க கூடியவர்களுக்கு புத்தி உள்ளவர்களுக்கு மிகப்பெரிய அத்தாட்சி இருக்கிறது என்று அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வுடைய இந்த மாபெரும் ஏற்பாடு நேரங்களின் வித்தியாசம் ஐந்து நேரத் தொழுகை உலகமெல்லாம் இந்த ஐந்து நேர தொழுகையின் உடைய நேரம் சுழற்ச்சியாக வரும் பொழுது இந்த பூமியிலே அல்லாஹு அக்பர்,
 
اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله حي على الصلاة حي على الفلاح لا اله الا الله
 
என்றும் முழங்கப்படாத ஒரு நொடி கூட இந்த பூமியில் இருக்காது, என்றும் முழங்கப்படாத ஒரு நொடி கூட இந்த பூமியில் இருக்காத அளவிற்கு அல்லாஹுத்தஆலா ஏகத்துவத்தினுடைய முழக்கத்தை அவன் இந்த பூமியிலே அல்லாஹ்வின் அடியார்கள் மூலமாக எழுப்பிக் கொண்டிருக்கின்றான் என்றால்,
 
இது இந்த மஸ்ஜிதுகள் மூலமாக தான் ஆகவேதான் அல்லாஹு சுபஹானஹூதஆலா காபாவை அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னமாக ஆக்கினான் அதுபோன்று இந்த பூமியிலே எங்கெல்லாம் மஸ்ஜிதுகள் கட்டப்படுகின்றனவோ அந்த மஸ்ஜிதுகள் அந்த காபாவை நோக்கியதாக இருக்க வேண்டும்.
 
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
 
இன்னும் (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக! நிச்சயமாக இதுவோ உம் இறைவனிடமிருந்து (வந்த) உண்மையாகும். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் அறியாதவனாக இல்லை. (அல்குர்ஆன் 2 : 149)
 
நபியே இந்த பூமியிலே நீங்கள் எங்கு சென்றாலும் சரி நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்கு, ஏக இறைவனை வணங்குவதற்கு  உங்களுடைய முகத்தை அந்த புனிதமான பள்ளியாகிய காபாவை முன்னோக்கி, உங்களுடைய முகத்தை அந்த காபாவை நோக்கி முன்னோக்க வையுங்கள். என்று அல்லாஹுத்தஆலா கட்டளையிட்டானே மேலும் மூஃமின்களுக்கு அல்லாஹ் சொல்கிறான்
 
 
وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ
 
இன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக! (அல்குர்ஆன் 2 : 150)
 
மூமின்களே நீங்கள் இந்த பூமியிலே எங்கு வசித்தாலும் சரி, எங்கே நீங்கள் வாழ்ந்தாலும் சரி, உங்களுடைய முகங்களை அந்த புனித மஸ்ஜிதாகிய காபாவை நோக்கி முன்னோக்க வையுங்கள், அதை முன்னோக்கி நீங்கள் தொழுங்கள் என்று, அல்லாஹ் கட்டளையிட்டானே அதன் மூலமாகத்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகள் அந்த காபாவை நோக்கி கட்டப்படுகின்றன.
 
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகள் அந்த காபாவை நோக்கி அமைக்கப்படுகின்றன அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னமாக அந்த ஒவ்வொரு மஸ்ஜிதும் ஆக்கப்படுகிறது காரணம் என்ன? அங்கே தக்பீருடைய முழக்கம் முழங்கப்படுகிறது, ஷஹாத உடைய முழக்கம் முழங்கப்படுகிறது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நேரத்திலே மக்காவை விட்டு பிரிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள் அப்படி பிரிந்து அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வரும் பொழுது இரண்டு விதமான நிகழ்வுகளை அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகிறான்.
 
 
لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏
 
(நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் அதிகம் பரிசுத்தமாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 9 : 108)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள் அல்லாஹ்வுடைய வீடு இருக்கக்கூடிய காபா இருக்கக்கூடிய முஸ்லிம்களின் முஃமின்களின் இறை அடியார்களின் அல்லாஹ்வுடைய முதல் ஆலயம் ஆகிய அல் மஸ்ஜிதுல் ஹராம் இருக்கக்கூடிய அந்த மக்காவிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள் இப்போது குபாவிலே இருக்கக்கூடிய அந்த சஹாபாக்கள் ஈமானை ஏற்றுக் கொண்டவர்கள், சிந்திக்கிறார்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி நாம் சிறப்பிப்பது, அவர்களை நாம் எப்படி வரவேற்பது,  அவர்களை நாம் எங்கே தங்க வைப்பது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதினாவிற்குள் அழைக்க வேண்டுமே!
 
அவர்களை எப்படி மகிழ வைப்பது, அவர்களுக்காக நாம் என்ன செய்வது, அப்போதுதான் அந்த நல்லடியார்களின் உள்ளத்திலே அல்லாஹுத்தஆலா போடுகிறான் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக மதீனாவிற்குள் நுழையும் போது அவர்கள் அல்லாஹ்வை வணங்கி விட்டு செல்வதற்காக அவர்கள் ஓய்வு எடுத்துவிட்டு செல்வதற்காக, அவர்கள் தங்கி விட்டு செல்வதற்காக,
 
நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒரு மஸ்ஜிதை கட்டி எழுப்புங்கள் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வருகையை எதிர்பார்த்து இருந்த மதினாவின் அந்த வாசலிலே, அந்த மதினாவின் வாசலிலே இருக்கக்கூடிய அந்த கிராமத்திலே இருந்த இந்த குபாவாசிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அவசர அவசரமாக ஒரு தளத்தை அமைத்து பேரித்தம் பழத்தின் கீத்துகளை கொண்டு பேரித்தம் பழத்தின் அந்த தூண்களைக் கொண்டு அவர்கள் உடனடியாக ஒரு சிறிய மஸ்ஜிதை கட்டி எழுப்புகிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் மஸ்ஜித் என்பது இந்த சவருகள் அல்ல, மஸ்ஜித் என்பது இந்த மெஹராப் அல்ல, மஸ்ஜித் என்பது அழகான பெரிய கட்டிடங்கள் அல்ல, மஸ்ஜித் என்பது இன்று நாம் செய்யக்கூடிய இந்த அலங்காரங்கள் அல்ல, மஸ்ஜித் என்பது அல்லாஹ்வுக்காக அல்லாஹுவை வணங்குவதற்காக ஒரு இடத்தை ஒதுக்குவது,
 
அல்லாஹ்வை வணங்குவதற்காக ஒரு இடத்தை ஒதுக்கி விடுவது கியாம நாள் வரை அது மஸ்ஜிதாக தான் இருக்கும் கியாம நாள் வரை அது மஸ்ஜிதாக தான் இருக்கும். அப்படி ஒரு இடத்தை ஒதுக்குவது, பிறகு அதிலே மூஃமின்கள் தொழுவதற்காக ஒரு நிழலை ஏற்படுத்துவது, மழையில் இருந்து வெயிலில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காக ஒரு நிழலை, ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி தருவது அவ்வளவுதான்.
 
மாறாக மஸ்ஜிது அங்கே சுவர்கள், மினாராக்கள், பெரிய ஆடம்பரமான, விளக்குகள், வசதிகள் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை எனவே, அங்கே என்ன இருக்க வேண்டும்? அல்லாஹ்வுடைய இபாதத் இருக்க வேண்டும், ஐந்து நேரம் அல்லாஹ்வுடைய தொழுகைகள் நிறைவேற்றப்பட வேண்டும், அங்கே பாங்கு ஒழிக்கப்பட வேண்டும், அங்கே தவ்ஹீத் லாயிலாஹ இல்லல்லாஹ் உடைய கொள்கை போதிக்கப்பட வேண்டும்.
 
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا
 
இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள. (அல்குர்ஆன் 72 : 18)
 
அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான் மஸ்ஜிதுகள் உடைய பணிகள் என்ன? மஸ்ஜிதுகள் உடைய நோக்கம் என்ன? மஸ்ஜிதுகள் அல்லாஹுக்காக கட்டப்பட்டு, அல்லாஹ்வுக்காக ஒதுக்கப்பட்ட, அல்லாஹ்வுக்காக நிர்ணயம் செய்யப்பட்ட, மூஃமினுடைய இடங்களாகும்.
 
எங்கே நீங்கள் சுஜூது செய்கிறீர்களோ அது மஸ்ஜிது இன்னொரு பக்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا
 
பூமி எல்லாம் எனக்கு மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விட்டது நாம் சுத்தம் செய்வதற்குரிய இடமாக எனக்கு ஆக்கப்பட்டிருக்கிறது என்று அதிலே ஒரு குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் தொழுவதற்காக நாம் ஒதுக்குகிறோம் அல்லவா அதுதான் மஸ்ஜிது அங்கே ஐந்து நேரம் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும் அங்கே அல்லாஹ்வை நினைவு கூற பட வேண்டும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 523, குறிப்பு (1)
 
فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُه يُسَبِّحُ لَه فِيْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ‏
 
(அந்த விளக்கு) இறை இல்லங்களில் எரிக்கப்படுகிறது. அவை உயர்த்தி கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமினான ஆண்கள்) அவனை துதித்து தொழுகிறார்கள். (அல்குர்ஆன் 24 : 36)
 
رِجَالٌ  لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ  يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ 
 
(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும். ‏(அல்குர்ஆன் 24 : 37)
 
لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِه وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
 
(அவர்கள் அப்படி அமல் செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்த மிக அழகிய நன்மைகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 24 : 38)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் அல்லாஹ்வுடைய வீடுகள் அல்லாஹுத்தஆலா அனுமதி கொடுத்திருக்கிறான் கட்டளை கொடுத்திருக்கிறான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்று அன்பு சகோதரர்களை மஸ்ஜிதுகள் உடைய கட்டிடங்களை வைத்து அல்ல கண்ணியம் பெரிய மஸ்ஜிதாக அதிகமான கண்ணியம் சாதாரண கீத்து கொட்டாய் மஸ்ஜிதாக இருந்தால் சாதாரணமானது, எப்படி வேண்டுமானாலும் அதில் நடந்து கொள்ளலாம்.
 
அன்பிற்குரியவர்களே! மஸ்ஜிதினுடைய கட்டிடங்களை வைத்து அல்ல, அதில் இருக்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்களை வைத்து அல்ல, மஸ்ஜிதிலே சொல்லப்படக்கூடிய அதானை வைத்து கண்ணியம் மஸ்ஜிதிலே யாருக்கு இபாதத் செய்யப்படுகிறது, யாரை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லையோ, யார் இந்த பூமியை வானத்தை, சூரியனை, சந்திரனை, காற்றை, திடலை, கடலை, மழையை, அனைத்து பிரபஞ்சத்தை படைத்தானோ அந்த ரப்புக்கு இங்கே இபாதத் செய்யப்படுகிறது.
 
உலகத்திலேயே படைத்த இறைவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகள் செய்யப்படக்கூடிய ஒரே பரிசுத்தமான இடம் அல்லாஹ்வுடைய இந்த மஸ்ஜிதுகள் மட்டும்தான். உலகத்தில் மக்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய வகைப்பாட்டு தளங்கள் எல்லாம் அங்கே படைத்த இறைவனுக்கு இணை கற்பிக்கப்படுகின்றன.
 
எந்த இணையைக் கொண்டு அந்த ஏக இறைவன் அல்லாஹுத்தஆலா கோபிக்கிறானோ எது அவனுக்கு மிக வெறுப்பான செயலோ எதை அல்லாஹுத்தஆலா மன்னிக்க மாட்டானோ எது அல்லாஹ்விற்கு மிகப்பெரிய அநியாயம் செய்யப்படக்கூடிய காரியமோ அதுவாகும். 
 
اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏
 
நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும். (அல்குர்ஆன் 31 : 13)
 
இணைவைத்தல் படைத்த இறைவனுக்கு சமமாக ஒரு படைப்பை வணங்குவது மிகப்பெரிய அநியாயமான ஒரு காரியம்
 
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِه وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِيْدًا
 
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார். (அல்குர்ஆன் 4 : 116)
 
அல்லாஹ்வுக்கு இணை வைக்கப்படுவதை அவன் மன்னிக்கவே மாட்டான் அதை தவிர மற்ற எல்லா பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான் . இந்த மஸ்ஜிது மட்டும் தான் பாதுகாப்பாகஇருக்கிறது படைத்த இறைவன் ஏக இறைவன் ஒருவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகள் செய்யப்படக்கூடிய ஒரு பரிசுத்தமான இடமாக அல்லாஹுத்தஆலா பாதுகாத்து வைத்திருக்கிறான்.
 
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا 
 
இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள்! (அல்குர்ஆன் 72 : 18)
 
இதிலே அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாரையும் வணங்கி விடாதீர்கள், அல்லாஹ்வைத் தவிர யாரையும் அழைத்து விடாதீர்கள். இன்று ஒரு கவலையான செய்தியை நாம் அறிந்து செல்ல வேண்டும். நம்முடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு இந்த லாயிலாஹ இல்லல்லாஹு உடைய கல்வி குர்ஆனுடைய கல்வி குறைந்த காரணத்தால், அதை சரியாக கற்காத காரணத்தால், இன்று பல முஸ்லிம்களுடைய மஸ்ஜிதுகளே இணை வைக்கப்படக் கூடிய இடமாகமாறி இருக்கிறது.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! எந்த மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காக கட்டப்பட்டு அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை பிரகனப்படுத்துகின்றனவோ லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற முழக்கம் செய்யப்படுகிறதோ அந்த மஸ்ஜிதிலே உட்கார்ந்து கொண்டு தர்காக்களின் பெயர்களால், ஃபாத்திஹா தர்காக்களின் பெயர்களால் மௌலித் அங்கே நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய இடத்திலே பிரார்த்தனை, அங்கே மௌலிது, கச்சேரிகள் நடக்கின்றன.
 
இப்படியாக பல ஷிர்க்குகளை நம்முடைய முஸ்லிம் சமுதாயம் அறியாமையில் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! இங்கே நாம் கவனிக்க வேண்டிய அந்த முக்கியமான விஷயம் மீண்டும் அந்த நிகழ்வுக்கு வருவோம் “அந்த குபாவாசிகள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக என்ன செய்தார்கள் மஸ்ஜிதை கட்டி தந்தார்கள் அல்லாஹ்வுக்கு அவ்வளவு பிரியமான ஒரு அமலாக ஆகிவிட்டது.
 
இந்தக் குர்ஆனிலே அல்லாஹுத்தஆலா போற்றி புகழ்ந்து காபத்துல்லாவிற்கு பிறகு  அல் மஸ்ஜிதுல் அப்சாவிற்கு பிறகு அவன் போற்றி புகழ்ந்து சொல்ல கூடிய அந்த ஒரு இறை இல்லமாக குபா உடைய மஸ்ஜித் இருக்கிறது.
 
لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى
 
(நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது (அல்குர்ஆன் 9 : 108)
 
இறையச்சத்தின் அடிப்படையிலே கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் நபியே நீங்கள் அங்கே நின்று தொழுங்கள்அந்தப் பள்ளி நீங்கள் தங்குவதற்கு நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்கு தகுந்த பொருத்தமான இடம் என்று அல்லாஹுத்தஆலா கட்டளை இடுகிறான்.
 
இதேபோன்று இன்னொரு மஸ்ஜிதும் மதினாவிலே கட்டப்பட்டது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொள்வதற்காக முனாஃபிக்குகள் கட்டினார்கள். அங்கே வெளிப்படையில் பள்ளியாக ஆக்கி வைத்திருந்தார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தங்கினால் அங்கே அவர்களைக் கொன்றுவிடலாம் என்று திட்டம் தீட்டு இருந்தார்கள் அதையும் அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான் எந்த மஸ்ஜித் அங்கே தவ்ஹீத் லாயிலாஹ இல்லல்லாஹ் ஈமான் நிலை நிறுத்தப்படுகிறதோ, எந்த மஸ்ஜிதில் இருந்து சுன்னா உடைய அழைப்பு கொடுக்கப்படுகிறதோ, எந்த மஸ்ஜிதிலே ஷிர்க்கிர்க்கும், பித்அத்திற்கும், அனாச்சாரத்திற்கும், எதிரான பிரச்சாரம் செய்யப்படுகிதோ, எந்த மஸ்ஜிதிலே நன்மைகள் ஏவப்படுகின்றனவோ, எங்கே தீமைகள் தடுக்கப்படுகின்றனவோ, முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வி, குர்ஆனுடைய கல்வி, சுன்னாவுடைய கல்வி, சஹாபாக்களின் கல்வி, போதிக்கப்படுகிறதோ, 
 
அந்த மஸ்ஜிதுகள் நாம் ஆதரிப்பதற்கு தகுதியானவை, அங்கே நாம் வணங்குவதற்கு தகுதியானவை, அங்கே நம்முடைய நேரங்களை நாம் கொடுக்க வேண்டும், அந்த மஸ்ஜிதுகளை நாம் செழிப்பாக்க வேண்டும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எவ்வளவு வலியுறுத்தினார்கள்.
 
இந்த மஸ்ஜிதை செழிப்பாக்குவதைப் பற்றி ஏழு வகையான மக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாளை மறுமையிலே அல்லாஹ்வுடைய நிழலிலே இருப்பார்கள் என்று சொன்னார்களே! அதிலே ஒரு கூட்டம் யார் யாருடைய கல்பு மஸ்ஜிதோடு தொடர்பிலே இருக்குமோ!
 
ورجل قلبه معلق بالمساجد
 
யாருடைய கல்பு மஸ்ஜித்தோடு கட்டப்பட்டு இருக்குமோ, இணைக்கப்பட்டு இருக்குமோ, அவர்கள் நாளை மறுமையிலே அல்லாஹ்வுடைய நிழலிலே இருப்பார்கள் என்று சொன்னார்கள். அது மட்டும் அல்ல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய பாதையிலே போர் புரிவதற்கு சமமான வணக்கம் சொல்லும் போது
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660, 1423, குறிப்பு (2)
 
وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ
 
ஒரு தொழுகைக்குப் பிறகு இன்னொரு தொழுகை எதிர்பார்த்து இருப்பது ஒரு தொழுகை முடிந்த பிறகு அடுத்த தொழுகைக்காக எதிர்பார்த்து இருப்பது
 
فَذَلِكُمُ الرِّبَاطُ
 
இது எல்லையை பாதுகாக்க கூடியதற்கு சமமான ஒரு அமல் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டினார்கள். ஆகவே, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை கட்டுவது எப்படி ஒரு சிறப்பான, முக்கியமான, அல்லாஹ்விற்கு பிரியமான, காரியமோ அதுபோன்று அந்த மஸ்ஜிதை நாம் பாதுகாப்பதை, அந்த மஸ்ஜிதை செழிப்பாக்குவதை, அதிலே அமல்களை நாம் உருவாக்குவது, அமல்களை நாம் ஹயாத் ஆக்குவது இது மிக முக்கியமான ஒரு கடமை.
 
மஸ்ஜிதினுடைய அமல்கள் என்ன? மஸ்ஜிதினுடைய பொறுப்புகள் என்ன? இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மஸ்ஜிதை ஒருவர் கட்டுகிறார் என்றாலும், ஒரு மஸ்ஜிதை ஒருவர் நிர்வகிக்கிறார் என்றால், அவர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம், இஸ்மாயில் அலைஹி ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை தனக்கு முன் உதாரணமாக வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
 
இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் தொழுமிடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும், “(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்கி இருப்பவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம் பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்” என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம். (அல்குர்ஆன் 2 : 125)
 
அல்லாஹுத்தஆலா சொல்லுகிறான்: நாம் இப்ராஹிமுக்கு கட்டளை கொடுத்தோம், இஸ்மாயிலுக்கு கட்டளை கொடுத்தோம் மஸ்ஜிதை நீங்கள் ஷிர்க்கிலிருந்து சுத்தமாக வையுங்கள். மஸ்ஜிதினுடைய தடங்களை சுத்தப்படுத்துவது மட்டும் நோக்கம் அல்ல,மாறாக மஸ்ஜிதினுடைய கழிவறைகளை சுத்தமாக வைப்பது மட்டும் நோக்கம் அல்ல, அதெல்லாம் வெளிப்படையான சுத்தமாகும். ஷிர்க் இல்லாமல் மஸ்ஜிதை பாதுகாக்க வேண்டும், 
 
இணை வைத்தல் இல்லாமல் மஸ்ஜிதை பாதுகாக்க வேண்டும் என்று பல மஸ்ஜிதுகளுக்கு செல்லுங்கள் அங்கே சென்றால் வரிசையாக கேலண்டர்கள் மாட்டியிருப்பார்கள் அத்தனை காலண்டர்களுடைய பேப்பர்களிலும் அதனுடைய பின் அட்டைகளை பார்த்தால் சிலைகள் எக்கச்சக்கமாக இருக்கும்.
 
மஸ்ஜிது ஆனால் அங்கே சிலைகள் மாட்டப்பட்டு இருக்கின்றன தொழ வைக்கக்கூடிய இமாமுக்கும் அந்த உணர்வு இல்லை, அங்கே இருக்கக்கூடிய முத்தவள்ளிகளுக்கும் அந்த உணர்வு இல்லை, சிலை என்பது அது ஒரு சிறிய அளவாக இருந்தாலும் சரி, பெரிய அளவாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கப் படக்கூடிய சிலை சிலை தான் அதிலிருந்து மஸ்ஜிதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று இப்ராஹிமுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான் இஸ்மாயிலுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
 
ஆகவே, ஒரு முத்தவல்லி உடைய, ஒரு நிர்வாகி உடைய, பொறுப்பு என்னவென்றால் இந்த மஸ்ஜிது லாயிலாஹ இல்லல்லாஹு உடைய அந்தத் தூய கொள்கையின் மீது இருக்கிறதா! இங்கே அல்லாஹ்விற்கு இணை வைக்கப்படாமல் அங்கே தவ்ஹீத் உடைய வணக்க வழிபாடுகள் பரிசுத்தமாக அல்லாஹ்வுக்கு மட்டும் செய்யப்படுகின்றனவா! என்பதை அங்கே கவனிப்பது அந்த அடிப்படையில் பராமரிப்பது முத்தவல்லியினுடைய பொறுப்பாளருடைய முதல் கடமையாகும்.
 
பிறகு அங்கே வரக்கூடிய தொழுகையாளிகள் இருப்பார்கள், அங்கே தங்கக்கூடிய இஃதிகாஃப் இருக்கக்கூடியவர்கள் இருப்பார்கள், அவர்களுக்காக மஸ்ஜிதை திறந்து வைத்திருக்க வேண்டும், சுத்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும், அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும், சில பள்ளிகளில் நீங்கள் பார்க்கலாம் கமிட்டிகள் வந்தால் அவர்களுக்கு ஃபேன் போடுவார்கள், தொழுகையாளிகள் வந்தால் தொழுகை நேரத்தில் மட்டும்தான் ஃபேன் போட வேண்டும் என்று சொல்வார்கள்.
 
 தொழுகையாளிகளுக்கு மஸ்ஜிது திறக்கப்படாது இன்ன பிற விசேஷங்களுக்கு மஸ்ஜிதிலே எல்லாம் செய்து கொள்வார்கள் மஸ்ஜிதிலே உட்கார்ந்து வீண்பேச்சு பேசுவார்கள் மஸ்ஜிதிலே தொழுகை நடத்த வந்தால் இன்று ஜமாத் முடிந்து விட்டது தனியா தொழுது விட்டு ஓடி விடு என்று சொல்லுவார்கள் மஸ்ஜிதிலே பெண்களுக்கு அனுமதி இருக்காது சிறுவர்களை விரட்டுவார்கள் இதெல்லாம் இஸ்லாம் சொல்லக்கூடிய ஒழுக்கங்களுக்கு மாற்றமானதாகும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் இருந்து அல்லாஹ்வின் அடிமை பெண்களை தடுக்காதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய காலத்திலே இந்த மஸ்ஜிதில் இருந்து தான் முஸ்லிம் பெண்மணிகள் மார்க்கத்தை கற்றார்கள் தொழுகையின் மூலமாக பிரசங்கத்தின் மூலமாக தக்வாவை கற்று சென்றார்கள்.ஒரு உயர்ந்த உன்னதமான முஸ்லிம் பெண்மணியாக உருவாகி சமுதாயத்தை உருவாக்கினார்கள்.
 
இன்று நம்முடைய முஸ்லிம் பெண்களை, நம்முடைய சிறுவர்களை மஸ்ஜிதை விட்டு தொடர்பை நாம் அறுத்துவிட்டோம், மற்ற எல்லா அனாச்சாரங்கள் உடைய இடங்களோடு அவர்களுடைய தொடர்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம் அதனுடைய கெட்ட பிரதிபலிப்பை தான் நம் சமுதாயத்திலே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
 
மஸ்ஜித் என்பது அங்கே மதரசாக்கள் காலை, மாலை மதரஸாக்கள் நடக்க வேண்டும், அங்கே முஸ்லிம்களுக்கான காரியங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும், அந்த மஸ்ஜிதை சுற்றி இருக்கக்கூடிய முஸ்லிம்களுடைய ஏழைகள், தேவை உள்ளவர்கள், அவர்களுடைய காரியங்கள் அங்கே நிர்வகிக்கப்பட வேண்டும், ஒரு மஸ்ஜிதினுடைய முத்தவல்லி என்பவர் அந்த மஸ்ஜிதினுடைய சுவருக்கு மட்டுமல்ல முத்தவல்லி அந்த மஸ்ஜிதினுடைய காசு, பணத்தை நிர்வகிப்பதற்கு மட்டுமல்ல, அந்த முஹல்லாவியே நிர்வகிப்பதற்காக பொறுப்பு கொடுக்கப்பட்டவர் என்பதை உணர வேண்டும்.
 
அப்படித்தான் சஹாபாக்கள் மஸ்ஜிதை பராமரித்தார்கள், மஸ்ஜிதின் மூலமாகத்தான் அத்தனை நல்ல காரியங்களையும் அவர்கள் நடத்தினார்கள். எப்படி மஸ்ஜிதை உருவாக்குவது மிகப்பெரிய ஒரு காரியமோ, அந்த மஸ்ஜிதை கட்டி எழுப்புவது ஒரு சிறப்பான ஒரு அமலோ, அதுபோன்று அந்த மஸ்ஜிதை குர்ஆன் சுன்னாவுடைய அடிப்படையிலே இணைவைத்தல் இல்லாமல், பித்அத்கள் இல்லாமல், ஷிர்க்காண காரியங்கள் இல்லாமல், 
 
அனாச்சாரமான காரியங்கள் இல்லாமல், அல்லாஹ்வும், ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி மஸ்ஜிது நபவியை பாதுகாத்தார்களோ, காபத்துல்லாஹ் பாதுகாக்கப்பட்டு இருக்கிறதோ, அதே அடிப்படையிலே இந்த மஸ்ஜிதை தொழுகைகளைக் கொண்டு, வணக்க வழிபாடுகளை கொண்டு, மார்க்க கல்வியை கொண்டு குர்ஆன், சுன்னா உடைய ஒழுக்க போதனைகளைக் கொண்டு முஸ்லிம்களுக்கு தேவையான நன்மையான காரியங்களைக் கொண்டு, பராமரிப்பதும், அதை செழிப்பாக்குவதும், அந்த அடிப்படையிலே இயக்குவதும், இந்த முஹல்லாஹ்வாசிகள் ஆகிய உங்களுடைய கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.
 
அல்லாஹ் சுபஹானஹூதஆலா அந்த அடிப்படையிலே இந்த மஸ்ஜிதை நீங்கள் நிர்வகிப்பதற்கு செழிப்பாக்குவதற்கு நடத்துவதற்கு அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா இந்த மஸ்ஜிதை ஏற்றுக் கொள்வானாக இதை கட்டியவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பரக்கத் செய்வானாக இதன் மூலமாக யார் யாரெல்லாம் பலன் பெறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அல்லாஹுத்தஆலா பரக்கத் செய்வானாக! இந்த மஸ்ஜிதை கட்டுவதற்கு யாரெல்லாம், எந்த வகையில் எல்லாம், உதவி செய்தார்களோ துணை நின்றார்களோ, இதற்கு ஆதரவு கொடுத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா இம்மை, மறுமையினுடைய பரக்கத்துக்களை, நன்மைகளை, தந்தருள்வானாக!
 
மேலும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகளை இந்த நாட்டிலே உருவாக்குவதற்கு, கட்டி எழுப்புவதற்கு அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமக்கு அருள் புரிவானாக! மஸ்ஜிதுகளை, மதராஸாக்களை, மர்க்கஸ்களை, அல்லாஹ் பாதுகாப்பானாக! அதற்கு உதவக்கூடிய நல்ல மக்களில் தியாகிகளில் அல்லாஹுத்தஆலா என்னையும் உங்களையும் ஆக்குவானாக! நம்முடைய செல்வத்தையும், நம்முடைய உடல் உழைப்புகளையும், அல்லாஹுத்தஆலா அவனுடைய மார்க்கத்திற்காக, அவனுடைய தீனுக்காக ஏற்றுக் கொள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
)صحيح مسلم (1/ 371
 
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا، وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً، وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ "
 
குறிப்பு 2)
 
صحيح البخاري (1/ 133)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/