HOME      Khutba      முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் சினிமாக்கள் | Tamil Bayan - 788   
 

முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் சினிமாக்கள் | Tamil Bayan - 788

           

முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் சினிமாக்கள் | Tamil Bayan - 788


முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் சினிமாக்கள் 
 
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் சினிமாக்கள்
 
வரிசை : 788
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 05- 05- 2023 | 15-10-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71
 
மதிபிற்கும், கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹுத் தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக! அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய மதிப்பிற்குரிய  தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும், ஸலவாத்தும், ஸலாமும், என்றென்றும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும்! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும், அன்பையும், இம்மை மறுமையின் வெற்றியையும், மறுமையின் சொர்க்க வெற்றியையும், வேண்டியவனாக! இந்த ஜும்மா குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அதன்படி நடந்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடையக்கூடிய நற்பாக்கியத்தை தந்த அருள்வானாக! எல்லா விதமான வழிகேடுகளிலும் இருந்து, பாவங்களில் இருந்து, பெரும் குற்றங்கள், சிறு குற்றங்களிலிருந்து, அல்லாஹ் என்னையும், உங்களையும், நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தையும் என்றென்றும் பாதுகாப்பானாக! ஆமீன்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே அல்லாஹ் சுபஹானஹூதஆலா அவனுடைய உயர்ந்த திருவேதமாகிய  அல்குர்ஆனிலே கூறுகிறான்.  
 
هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِه وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏
 
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் : 62:2)
 
அல்லாஹ்வின் அடியார்களே இந்த இஸ்லாம் என்ற மார்க்கம் கிடைக்க பெறுவதற்கு முன்பாக முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்படுவதற்கு முன்பாக நாமெல்லாம் வழிகேட்லே இருந்தோம்.
 
இந்த தீன் நமக்கு கிடைத்திருக்கவில்லை என்றால், இந்த மார்க்கம் நமக்கு கிடைத்திருக்கவில்லை என்றால், நாம் மிகப்பெரிய அறிவிலே, நாசத்திலே, ஜஹாலத் என்ற மடமையிலே இருந்திருப்போம் அல்லாஹுத்தஆலா இந்த மார்கத்தைக் கொண்டு நம்மை கரை சேர்த்தான், பாதுகாத்தான், இந்த மார்க்கத்தை கொண்டு அல்லாஹுத்தஆலா நல்லறிவை கொடுத்தான் ஏன் ! 
 
எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது, எதை உடுத்த வேண்டும், எதை உடுத்த கூடாது, எப்படி படுக்க வேண்டும், எப்படி படுக்கக் கூடாது, எப்படி உண்ண வேண்டும், எப்படி உண்ணக்கூடாது ,எப்படி ஒருவரை சந்திக்க வேண்டும், என்று எல்லா ஒழுக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கை தத்துவங்களையும், நேர்வழிகளையும், அல்லாஹுத்தஆலா இந்த மார்க்கத்தின் மூலமாக நமக்கு கொடுத்தான் எவ்வளவு பெரிய பாக்கியம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் சூரா அல் ஜும்மா உடைய இரண்டாவது வசனத்திலே
 
அப்படியே அந்த சஹாபாக்கள் உடைய காலத்தை கண்ணுக்கு முன்னால் கொண்டு வாருங்கள் நம்மை அந்த சஹாபாக்கள் உடைய காலத்திலே கொண்டு போய் நிறுத்தி வைத்து பாருங்கள் அல்லாஹ் சொல்கிறான் படிப்பறிவற்ற, கல்வி அறிவற்ற பாமர மக்களாகிய அந்த அரபுகளுக்கு மத்தியிலே அல்லாஹ் ஒரு நபியை அனுப்பினான்.
 
هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّينَ رَسُوْلًا
 
நினைத்துப் பாருங்கள் இந்த மார்க்கம் கிடைத்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி வழி கேட்டிலே, மௌட்டிகளத்திலே, இணைவைப்பிலே, இறை நிராகரிப்பிலே, அசிங்கத்திலே, ஆபாசத்திலே, இருந்திருப்போமோ அதே நிலைதான் அன்றைய அரபு மக்களுடைய நிலை அநியாயத்திற்கு பஞ்சமில்லை, ஆபாசத்திற்கு பஞ்சமில்லை, வழிகேட்டுக்கு, கொலை கொள்ளைக்கு  பஞ்சமில்லை, எல்லாம் நிரம்பி இருந்தது.
 
ஒரு சில நல்லவர்களும் இருந்தார்கள் ஆனால், தீமை தான் மிகைத்திருந்தது அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் என்ன செய்தான் ஒரு ரசூலை அனுப்பினான் அந்த ரசூல் செய்த புரட்சி என்ன? நினைத்துப் பார்க்க வேண்டும் இதை தான் நம்முடைய உலமாக்கள் சத்தியத்தில் உள்ளவர்கள் எப்போதும் சொல்வார்கள் நபிமார்கள் செய்த முயற்சியை தவிர கவனியுங்கள்!
 
நபிமார்கள் செய்த முயற்சிகளை தவிர வேறு எந்த முயற்சியைக் கொண்டு சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தாலும், ஒற்றுமைப்படுத்த நினைத்தாலும், அதிலே அல்லாஹ்வுடைய அருள் இருக்காது அந்த முயற்சி வெற்றியை தராது அந்த முயற்சி உடைய தொடக்கம் பெரிய ஒரு கவர்ச்சியாக இருக்கலாம், ஆனால் அதிலே மிகப்பெரிய சீர்கேடுகளும், குழப்பங்களும், தான் மிஞ்சும் அல்லாஹுத்தஆலா ரசூலை அனுப்பி என்ன செய்தான்
 
يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِه
 
குர்ஆனை அல்லாஹ்வுடைய வசனங்களை அந்த மக்களுக்கு ஓதி காண்பித்தார்கள் சகோதரர்களே! இந்த வசனம் கெட்டவர்களை நல்லவர்களாக ஆக்குவதற்காக இறக்கப்பட்ட வசனங்கள் அல்லாஹ்வுடைய வசனங்கள் இதைத் தவிர வேறு ஒன்றை கொண்டு நீங்கள் மக்களை சீர்திருத்த முடியாது.
 
நம்முடைய தத்துவம், நம்முடைய சிந்தனை, நம்முடைய பிரச்சாரம் எல்லாம் குர்ஆனோடு இணையவில்லை என்றால் குர்ஆன் அதற்குள் இறங்கவில்லை என்றால் குர்ஆனின் அடிப்படையில் இல்லை என்றால் அது முட்டாள் தனமாகத்தான் இருக்கும் இன்று கவர்ச்சியாக அழகாக தெரியும் நாளை அது ஒத்து வராத சரக்காக ஆகிவிடும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் நபி என்ன செய்தார்கள்.
 
مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِه
 
என்னுடைய வேதத்தின் வசனங்களை அந்த மக்களுக்கு ஓதி காண்பித்தார்கள் அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆனில் இல்லாத ஒரு நன்மையை ஒரு சீர்திருத்தத்தை ஒரு சத்தியத்தை ஒரு சமுதாய பாதுகாப்பிற்கு உண்டான சமுதாயத்தின் ஒழுக்கத்திற்கு நன்மைக்கு உத்தரவாதம் உள்ள ஒன்றை உலகத்திலே யாராவது கொண்டு வர முடியுமா? 
 
உலக அறிவாளிகள் எல்லாம் உலக சீர்திருத்தவாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே கருத்திலே இது நல்லது என்று ஒருமித்து முடிவெடுத்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து பல ஆண்டுகளாக அந்த கருத்தை கண்டுபிடிப்பதற்கு முன்னாள் அது 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே அல்குர்ஆனிலே அழகாக சொல்லப்பட்டு இருக்கும், தெளிவாக சொல்லப்பட்டிருக்கும், உறுதியாக சொல்லப்பட்டு இருக்கும், ஆணித்தரமாக சொல்லப்பட்டு இருக்கும்.
 
இன்று மக்கள்  புத்திக்கு வந்திருக்கிறார்கள் இன வேறுபாடு கூடாது, மொழி வேறுபாடு கூடாது, நாட்டின் பெயரால், இனத்தின் பெயரால், பிறப்பின் பெயரால், சமூகத்தின் பெயரால், மனிதர்களை பாகுபடுத்த கூடாது என்று இவ்வளவு கால சீரழிவு இவ்வளவு கால உயிர் இழப்பிற்கு பிறகு இவர்கள் கண்டுபிடித்தார்கள் ஆனால், அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரபுகளுக்கு அறிவிப்பு செய்ய சொன்னான்
 
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
 
மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும், பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் மற்றவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.‏ (அல்குர்ஆன் : 49:13)
 
மக்களே நாம் உங்களை படைத்தோம், உங்கள் எல்லோரையும் படைத்தோம், கருப்பரை, வெள்ளையறை, செல்வந்தரை, ஏழையை, உலகத்தின் பகுதியில் உள்ள எல்லா மனிதர்களையும் நாம் தான் படைத்தோம். ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து தான் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் உங்களை நாமே பல நாடுகளிலே பிரித்தோம், பல நிறங்களிலே அமைத்தோம், பல மொழிகளை பேச வைத்தோம்.
 
لِتَعَارَفُوْا
 
உங்களுக்கு மத்தியிலே அடையாளம் தெரிவதற்காக, உங்களுக்கு மத்தியிலே அறிமுகம் ஏற்படுத்துவதற்காக, உங்களுக்கு மத்தியிலே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதற்காக அல்ல உங்களுக்கு மத்தியிலே அல்லாஹ்விடத்திலே கண்ணியம் எதைக் கொண்டு என்றால்,
 
اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ
 
நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், இன்னும் பூமியின் மறைவான விஷயங்களை நன்கறிவான். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் : 49:13)
 
அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய பயம் யாரிடத்திலே அதிகமாக இருக்குமோ மார்க்கப்பற்று யாருக்கு அதிகமாக இருக்குமோ அவர்கள் தான் கண்ணியமான்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி நாள் வரை வரக்கூடிய உலக மக்களுக்கெல்லாம் அன்றே அரஃபா மைதானத்திலே தெளிவான அறிவிப்பு செய்தார்கள்ز
 
அநியாயக்காரர்கள் நாம்தான் அந்த அறிவிப்பை உலக மக்களின் ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் காதுக்கும் கொண்டு செல்லாதவர்கள்தான் என்ன சொன்னார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களே நீங்கள் ஆதமிலிருந்து வந்தவர்கள்.
 
يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُقَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: أَيُّ يَوْمٍ هَذَا؟، قَالُوا: يَوْمٌ حَرَامٌ، ثُمَّ قَالَ: أَيُّ شَهْرٍ هَذَا؟ ، قَالُوا: شَهْرٌ حَرَامٌ، قَالَ: ثُمَّ قَالَ: أَيُّ بَلَدٍ هَذَا؟، قَالُوا بَلَدٌ حَرَامٌ، قَالَ: فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ: وَلَا أَدْرِي قَالَ:أَوْ أَعْرَاضَكُمْ، أَمْ لَا كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ"، قَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ، قَالَ: لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ
 
ஆதம் மண்ணிலிருந்து வந்தவர் ஒரு அரபியாக பிறந்து விட்டால் அவர் தன்னை சிறந்தவராக கொண்டாட முடியுமா? அரபி அல்லாதவரை பார்த்து முடியாது ஒரு அஜமி அரபி அல்லாதவன் தன்னுடைய அறிவு மற்றும்,  ஆட்சியை வைத்து ஒரு அரபியை பார்த்து உனக்கு ஒன்றும் தெரியாது நான் தான் சிறந்தவன் என்று சொல்ல முடியுமா? அப்படியும் சொல்ல முடியாது. வெள்ளையனுக்கு கருப்பனை விட கருப்பனுக்கு வெள்ளையை விட எந்த மேன்மையும் கிடையாது. அல்லாஹ்வுடைய அச்சத்தை கொண்டே தவிர.
 
அறிவிப்பாளர் : அபூ நழ்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 23489
 
அன்பு சகோதரர்களே! குர்ஆன் நம்மை உருவாக்க கூடியது, நம்மை சீர்திருத்த கூடியது, நமக்கு வழிகாட்ட கூடியது, பிறகு அல்லாஹ் தஆலா அந்த நபியுடைய அந்தப் பணியை சொல்கிறான்: 
 
يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِه وَيُزَكِّيْهِمْ
 
அவர்களுக்கு நற்குணங்களை போதித்தார்கள், ஒழுக்கத்தை போதித்தார்கள், அவர்களுடைய உள்ளங்களில் உள்ள கெட்ட எண்ணங்களை, கெட்ட சிந்தனைகளை களைந்தார்கள், நல்ல அறிவைக் கொண்டு, நல்ல சிந்தனையை கொண்டு, ஒழுக்கங்களை கொண்டு, அவர்களை மேம்படுத்தினார்கள்.
 
அன்பு சகோதரர்களே! ஒழுக்கத்திற்கான, உண்மைக்கான, ஒழுக்க கட்டுப்பாட்டுக்கான, நீதத்திற்கான, நேர்மைக்கான, பயிற்சி இல்லாமல் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் எல்லாம் எப்படி சீரழிகின்றன எப்படி சீரழிக்கின்றன என்பதை நீங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.
 
ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கிய சமூகம் எத்தகைய சமூகம் தெரியுமா? யார் பார்க்கவில்லை என்றாலும் அல்லாஹ் பார்க்கின்றான் என்ற பயம் நிறைந்த சமுதாயம் சஹாபாக்கள் உடைய சமுதாயம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அல்லாஹ்வுடைய அச்சத்தால் நடுநடுங்க கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் பயத்தை புகழ்ந்து அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே சொல்லிக் காட்டுகின்றான் உள்ளங்கள் நடுங்கக்கூடியவர்கள்.
 
இன்று எல்லாம் செய்யப்படுகிறது ஆனால், தக்வாவுக்கான பயிற்சி, இறையச்சத்திற்கான பயிற்சி கொடுக்கப்படுகிறதா? என்றால் யார் மக்களை தன் பக்கம் சேர்க்க நினைக்கிறார்களோ அவர்களே அந்த மக்களிலேயே மிகவும் கேடு கெட்டவர்களாக இருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஹதீஸிலே சொல்லிக் காட்டியதைப் போன்று அமானிதம் ஒப்படைக்கப்பட்டால், அதற்கு தகுதி இல்லாதவர்கள் இடத்தில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால், அதற்கு தகுதி இல்லாதவர்கள் இடத்திலே மக்களின் தலைவராக அவர்களுடைய பெரும் பாவியாகிவிட்டால் மக்களுக்கான பொறுப்பாளராக அவர்களில் உள்ள அர்ப்பமக ஆகிவிட்டால் மறுமையின் அடையாளங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்தார்கள் தன்னை திருத்தாமல், தன்னை உருவாக்காமல், தன்னை சீர்திருத்தம் செய்யாமல், மக்களை சீர்திருத்த வந்தவர்கள் எல்லாம் அவர்களால் ஒரு சீர்திருத்தமும் ஏற்படாது
 
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ اَفَلَا تَعْقِلُوْنَ‏
 
நீங்களோ வேதத்தை ஓதுபவர்களாக இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா? (அல்குர்ஆன் 2 : 44)
 
நீங்கள் வேதத்தை ஓதிக் கொண்டு சிந்திக்காமல் நீங்கள் மக்களுக்கு நன்மையை ஏவி விட்டு உங்களை மறந்து விடுகிறீர்களா? உங்களை விட்டு விடுகிறீர்களா? நீங்கள் புரிய மாட்டீர்களா? என்று அல்லாஹுத்தஆலா கேக்கின்றானே! இது யூதர்களுக்கு மட்டுமா, அஹ்லே கிதாப் அவர்களுக்கு மட்டுமா, அல்குர்ஆனிலே அல்லவா இது சொல்லப்படுகிறது.
 
நம்மைப் பார்த்து அல்லாஹ் பேசவில்லையா! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த சீர்திருத்த முயற்சி சஹாபாக்களுக்கு ஒழுக்கங்களை சொல்லி கொடுத்தார்கள், தர்பியத் கொடுத்தார்கள், அவர்களுடைய உள்ளங்களை பண்படுத்தினார்கள், அன்பை அவர்களுடைய உள்ளத்தில் கொண்டு வந்தார்கள், சகிப்புத்தன்மையை கொண்டு வந்தார்கள், இறக்கத் தன்மையை கொண்டு வந்தார்கள், நீதன்மையை போதித்தார்கள்,
 
கருணையை கொண்டு வந்தார்கள், வீரர்களாக இருக்கும் அதே நேரத்தில் வலிமையுள்ளவர்களாக, இருக்கும் அதே நேரத்தில் கருணை உள்ளவர்களாக, அன்பு உள்ளவர்களாக, பாசமுள்ளவர்களாக, அவர்களை மாற்றினார்கள், கோபத்தை எங்கே காட்ட வேண்டுமோ அங்கே தான் காட்ட வேண்டும், கடுமையை எங்கே காட்ட வேண்டுமோ அங்கே தான் கடுமையை காத்த வேண்டுமே தவிர மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் விட்டுக் கொடுத்தவர்களாக, புரிந்தவர்களாக, மன்னிப்பவர்களாக, வாழ வேண்டும் என்பதை சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், இதை இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் .
 
இன்று உலக மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஒற்றுமையை பேசும்போது உனக்கு தெரிந்தாலும், தெரியவில்லை என்றாலும் நீ சலாமை அவருக்கு சொல், பிறரை பார்த்த உடனேயே புன் முறுவலாக சிரிப்பது நீ அல்லாஹ்வின் பாதையில் கொடுக்கக் கூடிய தர்மம் என்ற தத்துவத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்தார்கள்.
 
உனக்கு மட்டும் அல்ல நீ ஒரு பாதையிலே நடக்கும் போது அந்தப் பாதையில் மக்களுக்கு இடையூறு தருவதை நீ அகற்றினால் அது அல்லாஹ்வுக்காக நீ செய்யக்கூடிய ஒரு தர்மம் அதை இறை நம்பிக்கையில் ஒரு பகுதி என்ற உன்னத தத்துவத்தை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுக்கு போதித்து தர்பியா, தஸ்கியா செய்தார்கள் பிறகு என்ன செய்தார்கள்
 
وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ
 
அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். (அல்குர்ஆன் 62 : 2)
 
இந்தக் குர்ஆனை மக்களுக்கு படித்துக் கொடுத்தார்கள் உங்களுக்கு அறிவு வேண்டுமா, சிந்தனை வேண்டுமா, உங்களுடைய குடும்பத்தை நீங்கள் உருவாக்க வேண்டுமா, உங்களை ஹலாலிலே கொண்டு வர வேண்டுமா, அல்லாஹ்வுடைய பொருத்தத்திலே கொண்டு வர வேண்டுமா,  குர்ஆனை திறந்து படியுங்கள்و
 
இதோ அந்தக் குர்ஆனுக்கு விளக்கமாக நான் சொல்லக்கூடிய ஞானங்களை கேளுங்கள், படியுங்கள் அல்லாஹ்வுடைய அடியார்களே குர்ஆனிலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவிலும் நமக்கு மறுமைக்கு தேவையான இந்த உலக வாழ்க்கையை நமக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் இருக்கிறது.
 
நம்முடைய வசதிகளுக்கு தான் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் உதவுமே தவிர நிம்மதியான வாழ்க்கைக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் பலர் தத்துவவாதிகள் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம், பணத்தை கொண்டு வசதியான வீட்டை கட்டலாம், நிம்மதியை வாங்க முடியாது பணத்தை கொண்டு வீட்டிலே வசதியான பொருட்களை வாங்கலாம், கொண்டு வரலாம் ,உயர்வான வசதியான மென்மையான படுக்கைகளை வாங்கலாம், நிம்மதியான தூக்கத்தை வாங்க முடியாது என்று பலர் பேசுவதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள் மார்க்கம் நிம்மதி உனக்கு எங்கிருந்து வரும் என்பதை கற்றுத் தருகிறது என்றால் இப்போது சொல்லுங்கள் இந்த உலகத்திலே புதிதாக உருவாகிய இந்த அறிவியல் கல்வி சிறந்ததா? I
 
இது இல்லை என்றாலும் எப்படி நிம்மதியாக பாதுகாப்பாக வாழலாம் என்று சொல்லி கொடுக்கக்கூடிய குர்ஆன், சுன்னா உடைய கல்வி பெரியதா கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும் உலக மாற்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப அல்லாஹுத்தஆலா மனிதனுடைய அறிவிலே விசாலத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருப்பான்.
 
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ الَّذِىْ خَلَقَ فَسَوّٰى وَ الَّذِىْ قَدَّرَ فَهَدٰى ‏
 
(நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்தி தொழுவீராக! அவன் படைத்தான்; இன்னும், (தனது படைப்புகளை) ஒழுங்கு படுத்தினான். . இன்னும், அவன் நிர்ணயம் செய்தான் (-அளவிட்டான், திட்டமிட்டான்); (அல்குர்ஆன் 87 : 1, 2, 3)
 
எந்த காலத்தில் எது உருவாக வேண்டும் என்பதை அல்லாஹு நிர்ணயித்து விட்டான் அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ப அதை நோக்கி செல்வதை அதை கண்டுபிடிப்பதை மனிதனுக்கு அல்லாஹுத்தஆலா வழிகாட்டுகிறான் மனிதனுக்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான் அல்லாஹ் வழிகாட்டவில்லை என்றால் எந்த ஒரு பொருளையும் மனிதனால் உருவாக்கி இருக்க முடியாது மனிதனால் கண்டுபிடித்து இருக்க முடியாது மனிதனுக்கு கண்டுபிடிக்க கொடுத்தவன் அல்லாஹுத்தஆலா அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்
 
وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏
 
இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
 
இந்த வேதம் கிடைப்பதற்கு முன்னால் இந்த நபி அனுப்பப்படுவதற்கு முன்னால் மக்கள் எல்லாம் வழிகேட்டிலே இருந்தார்கள் அன்பு சகோதரர்களே ஒரு நீண்ட இந்த முன்னுரையை எதற்கு சொல்லுகிறேன் என்றால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணம் அவர்களுடைய காலத்தில் ஏற்படாத பிரச்சனையா நமக்கு ஏற்பட்டு விட்டது.
 
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ
 
அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு - அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்தவராக இருப்பவருக்கு - திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33 : 21)
 
அல்லாஹ்வின் தூதரிலே உங்களுக்கு அழகிய முன்மாதிரி கண்டிப்பாக இருக்கிறது, இருக்கும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கும்போது நமக்கு இன்று ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது போன்ற பிரச்சனை ரசூலுல்லாஹ் உடைய காலத்திலேயே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரசூலுல்லாஹ்வுக்கும், சஹாபாக்களுக்கும் ஏற்படாமல் இருந்திருக்குமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி உடைய காலத்திலே நபி உயிரோடு இருக்கும் பொழுது நபியை அவமானமாக பேசவில்லையா, அவதூராக பேசவில்லையா, நபியின் சஹாபாக்களை அவதூறாக, அவமானமாக, பேசவில்லையா, ஒரு பக்கம் மக்காவிலே காஃபீர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுமைகள் செய்தார்கள் அங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சகித்தார்கள், பொறுத்தார்கள்,
 
பின்பு மதீனாவிற்கு வந்ததற்குப் பிறகு ஆட்சி, அதிகாரம், என்று வந்ததற்கு பிறகு அங்கே முனாஃபிக்குகள் என்று ஒரு கூட்டம் மக்காவிலே, காஃபீர்களின் கூட்டம் மதினாவிலே, முனாஃபிக்குகளுடைய கூட்டம் மக்காவிலே எப்படி காஃபிர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்களோ உடல் ரீதியான தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள், அங்கே காஃபீர்கள் மதினாவிலே முனாஃபிக்குகள் மனரீதியான தொந்தரவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எப்போதும் மனவேதனை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அல்லாஹுத்தஆலா பல வசனங்களை இறக்கினான்:
 
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ اٰذَوْا مُوْسٰى
 
நம்பிக்கையாளர்களே! மூஸாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். (அல்குர்ஆன்  33 : 69)
 
பொதுவாக ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து அந்த முனாஃபிக்குகளுக்கு அல்லாஹ் உபதேசம் செய்தான் மூஸாவுக்கு மனவேதனை கொடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். என்று அல்லாஹுத்தஆலா அந்த மக்களுக்கு உபதேசம் செய்தான் ஆனால் அவர்களிலே பலர் அந்த உபதேசத்திற்கு கீழ்ப்படியவில்லை .
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன செய்தார்கள், சஹாபாக்கள் என்ன செய்தார்கள், அந்த சோதனை காலங்களிலே எப்படி பொறுமையாக இருந்தார்கள், அல்லாஹ்வுடைய சட்டம் இறங்குகிற வரை அந்த சட்டத்தின் படி அந்த காஃபிர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தார்களே தவிர நபியின் மீது அவதூறு சொல்லி விட்டாயே! நபியின் சஹாபிய பெண்களின் மீது அவதூறு சொல்லிவிட்டாயே! இல்லாததை சொல்லி விட்டாயே! என்று அவர்களுடைய வீட்டுக்கு சென்று கல் எடுத்து அடித்தார்களா? அவர்களை இழுத்துப் போட்டு தெருவிலே அறைந்தார்களா? யோசித்துப் பார்க்க வேண்டும்.
 
அதிகாரம் இருந்தது என்று தன் கையிலே எல்லாவிதமான பலமும் இருந்தது ஆனால், பொறுமை காத்தார்கள் அல்லாஹ்வுடைய சட்டம் இறங்கட்டும் என்று அந்த சட்டத்திற்கு ஏற்ப தான் முடிவெடுத்தார்களே தவிர உணர்ச்சியின் அடிப்படையிலே, தங்களுடைய கோபத்தின் அடிப்படையிலே ரசூலுல்லாஹ்வும் முடிவு எடுக்கவில்லை, சஹாபாக்களும் முடிவு எடுக்கவில்லை
 
இன்று என்ன நடக்கிறது என்றால் சமுதாயத்திலேதொழுகை இல்லையே, அதை பற்றி கவலை இல்லை சமுதாயத்திலே ஒழுக்கம் இல்லையே, அதை பற்றி கவலை இல்லை சமுதாயத்திலே பாதி கூட்டம் சினிமாவுக்கும் சீரியல்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள்,
 
அதை பற்றி கவலை இல்லை சமுதாயத்திலே வட்டி மிகைத்து இருக்கிறது அதற்கான எந்த ஒரு சீர்திருத்தத்திற்கான எந்த ஒரு ஏற்பாடும் இல்லை சமுதாயம் கூட்டங்களாக, இயக்கங்களாக பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன,
 
ஒவ்வொருவரும் ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தன்னை தலைவர் என்று தன் பக்கம் வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் எப்படி அல்லாஹ்வுடைய வெற்றி கிடைக்கும் பிறகு இதுபோன்று ஏற்படக்கூடிய சில நேரங்களிலே தங்களுடைய அந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக, தங்களுடைய இயக்கத்தை அடையாளப்படுத்துவதற்காக, பொதுமக்களுடைய அந்த ஈமானிய உணர்வுகளை கிளப்பி விடுகிறார்கள்,
 
இந்த சினிமா என்பதே இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்று ஆபாசம், அசிங்கம், பொய்மை,  வன்மம் ஒரு மனிதனை எப்படி கழகக் காரனாக,  கெட்டவனாக உருவாக்குவது இதுதான் அந்த சினிமா உடைய தத்துவமே நம்மை தாக்கி, நம்மை எதிர்த்து, அவர்கள் எடுத்தால் மட்டும்தான் சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அல்ல இஸ்லாமிய மார்க்கத்திலே சினிமா என்பதே பொய்யாலும்,
 
ஒழுக்க கேடுகலாலும், வன்மத்தாலும், நிறைந்த ஒன்று அதுதான் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலே குர்ஆன் ஹதீஸை புரிந்தவர்கள் எடுக்கக்கூடிய முடிவு ரசூலுல்லாஹ் உடைய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய காலத்திலே அவர்களை ஏசவில்லையா! விமர்சனம் செய்யவில்லையா! அதற்குப் பின்னால் நடக்கவில்லையா ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நமக்கு என்ன சொல்லுகிறான் சூரா ஆல இம்ரான் உடைய 185 வது வசனம் இதை படித்துப் பாருங்கள் இன்று நமக்காக இறக்கப்பட்டதை போன்று இருக்கும்
 
وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌
 
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை (-உங்களை சங்கடப்படுத்தும் பேச்சுகளை) நிச்சயம் நீங்கள் செவியுறுவீர்கள். (அல்குர்ஆன் 3 : 186)
 
முஃமின்களே சத்தியமாக நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட யூத கிறிஸ்தவர்கள் மூலமாகவும் இணை வைக்கக் கூடியவர்கள் மூலமாகவும் உங்களை உங்களுடைய மனதை காயப்படுத்தக்கூடிய உங்களுக்கு மன வேதனை தரக்கூடிய பேச்சுகளை செவியுருவீர்கள் கண்டிப்பாக நடக்கும் இது என்ன செய்ய வேண்டும் அதற்கு அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்
 
اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏
 
நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி) வாழ்ந்தால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த, வெற்றிக்குரிய) காரியங்களில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3 : 186)
 
நீங்கள் சகித்து பொறுமையாக இருந்து என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை நீங்கள் செய்தால்? அல்லாஹ்வுடைய தக்வா இறையச்சம் உள்ளவர்களாக நீங்கள் இருந்தால்,
 
அதுதான் வீரம், அதுதான் உறுதியான காரியம், எவ்வளவு அழகான உபதேசம் பாருங்கள் சிந்தித்துப் உணர்ச்சிவசப்பட்டு ஒரு நாளைக்கு எடுக்கப்படக்கூடிய முடிவல்ல இஸ்லாம் உடைய வெற்றி நம்முடைய சமுதாயத்தின் அந்த கண்ணியம் என்பது ஆகவே ஒவ்வொன்றையும் குர்ஆன் ஹதீஸினுடைய அடிப்படையிலே அணுகி அதிலிருந்து நாம் என்ன ஆக்கபூர்வமான ஒரு வெற்றிக்கு நம்முடைய முயற்சிகளை கொண்டு செல்ல முடியுமோ?
 
சகோதரர்களே! அதில் தான் வெற்றி இருக்கிறதே தவிர, உணர்ச்சிக்கு வசப்பட்டு நாம் போடக்கூடிய கோஷங்களிலோ, செய்யக்கூடிய போராட்டங்களிலோ, பிறகு அது கலவரமாக முடிந்து நம்மில் எத்தனை அப்பாவிகள் காலமெல்லாம் சிறைச்சாலையிலே அவர்கள் அவதிப்படுகிறார்களே இதுவா வெற்றி, இதுவா கண்ணியம், இதுவா இஸ்லாத்திற்குண்டான தியாகம், என்பதை சிந்தித்து உணர்ந்து கொள்ளுங்கள் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமக்கு நல்லறிவை தந்தருள்வானாக வழிகேட்டிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/