HOME      Khutba      தூதரின் ஹதீஸையா மறுக்கிறீர்கள்? | Tamil Bayan - 790   
 

தூதரின் ஹதீஸையா மறுக்கிறீர்கள்? | Tamil Bayan - 790

           

தூதரின் ஹதீஸையா மறுக்கிறீர்கள்? | Tamil Bayan - 790


தூதரின் ஹதீஸையா மறுக்கிறீர்கள்?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : தூதரின் ஹதீஸையா மறுக்கிறீர்கள்?
 
வரிசை : 790
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் 12- 05 -2023 | 22-10-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார்கள் மீதும், அந்த தூதருடைய தோழர்கள் மீதும், ஸலவாத்தும், ஸலாமும், கூறியவனாக! உங்களுக்கும், எனக்கும், அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக! தக்வாவை, இறை அச்சத்தை, உபதேசம் செய்தவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா எனக்கும், உங்களுக்கும், எல்லா மூமின்களுக்கும், நமது குடும்பத்தார்களுக்கும், ஈமானையும், தக்குவாவையும், உறுதிப்படுத்தி, தருவானாக! அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டு முற்றிலும் அல்லாஹ்வை பயந்தவர்களாக, அல்லாஹ்விற்கும், அவருடைய தூதருக்கும், கீழ்ப்படிந்தவர்களாக, வாழ்வதற்கு அல்லாஹுத்தஆலா எனக்கும், உங்களுக்கும் அருள் புரிவானாக ஆமீன்! .
 
ஒரு உதாரணத்தை சொல்லி இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்:- கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் ஒருவருக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்கிறீர்கள், இஸ்லாமின் பக்கம் அவரை அழைக்கிறீர்கள், அவரோ ஒரு கடவுள் மறுப்பாளராக அல்லது, சிந்தனை, அறிவை முற்படுத்தக் கூடியவராக இருக்கிறார் அல்லது, ஒரு சிலை வணக்கம் செய்பவராக,
 
அல்லது, வேறு ஏதோ ஒரு வழிகெட்ட கொள்கையில் இருக்கிறார், அவருக்கு நீங்கள் இஸ்லாமை எடுத்துச் சொல்லும் போது, மார்க்கத்தின் பக்கம் நீங்கள் அழைக்கும் போது, அவர் உங்களிடத்திலே சொல்கிறார் சரி நான் இஸ்லாமிய ஏற்றுக்கொள்கிறேன் அதற்கு பிறகு, நீங்கள் கொடுக்கக்கூடிய குர்ஆனை படித்துப் பார்ப்பேன், எனக்கு புரிந்ததை, எனது அறிவுக்கு விளங்கியதை நான் நம்பிக்கை கொள்வேன் ஏற்றுக்கொள்வேன்.
 
உங்களுடைய நபியுடைய ஹதீஸை எனக்கு கற்றுக் கொடுங்கள் அதிலே  என்னுடைய அறிவுக்கு பட்டதை நான் சரி காண்பதை  என்னுடைய சிந்தனைக்கு சரியாக வருவதை அல்லது, எதார்த்த அறிவியல் உண்மைகளோடு நடப்பிலே எதார்த்த வாழ்க்கை எது எனக்கு சரியாக தெரியுமோ அதை நான் நம்பிக்கை கொள்வேன் என்று உங்களிடத்திலே நிபந்தனை வைத்தாள் என்ன? சொல்கிறார் “குர்ஆனை எனக்கு கொடுங்கள் நான் அதை சரி பார்த்து எனக்கு சரியானதை நான் நம்பிக்கை கொள்வேன், நீங்கள் நபியை நம்பிக்கை கொள்ள அழைக்கிறீர்கள், 
 
நபியினுடைய ஹதீஸை நம்பிக்கை கொள்ள அழைக்கிறீர்கள், சரி அந்த ஹதீஸ்களை நான் படித்துப் பார்த்தேன் எனக்கு சரியாக தெரிவதை நான் நம்பிக்கை கொள்வேன், மற்றதை நான் ஒதுக்கி விடுவேன் நிராகரித்து விடுவேன் என்று அவர் சொன்னால் அவர்களுக்கு நீங்கள் கலிமா சொல்லிக் கொடுப்பீர்களா? அவரை நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொள்வீர்களா? பெரிய, பெரிய, அறிவாளிகள் இருக்கிறார்கள் இல்லையா! கடவுள் மறுப்பாளர்களிலே கம்யூனிச வாதிகளிலே எத்தனையோ சிந்தனைவாதிகள் இருக்கிறார்கள்.
 
அவர்களுக்கு நீங்கள் இஸ்லாமை எடுத்துச் சொல்லும் பொழுது அவர் இப்படி ஒரு நிபந்தனையை வைத்தாள் உங்களில் யாராவது அவருக்கு கலிமா சொல்லிக் கொடுப்பீர்களா? அவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு ஷஹாதா சொல்லி கொடுப்பீர்களா? செய்ய மாட்டோம், செய்ய முடியாது, அதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது.
 
அப்படிப்பட்டவனுக்கு கலிமா சொல்லிக் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது, அப்படி சொல்லிக் கொடுத்தால் நமது கலிமாவே வீணாகிவிடும் அல்லாஹ் பாதுகாப்பானாக! அப்படி ஒரு நிபந்தனை வைப்பவனுக்கு நாம் ஷஹாதா சொல்லிக்கொடுத்தால் நம்ம ஷஹாத போகிவிடும்.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆனால், சகோதரர்களே! இங்கு இப்போ எப்படி நிலைமை மாறி இருக்கிறது என்றால் முஸ்லிம்களிலே ஒரு கூட்டம் அவர்களில் அறிஞர்கள் என்றும் ஒரு கூட்டம் அவர்களில் அழைப்பாளர்கள் என்றும் ஒரு கூட்டம் அவர்களில் மூத்த அறிஞர் என்ற ஒருவர் இப்படி எல்லோரும் சேர்ந்து கொண்டு நாளுக்கு ஒரு ஹதீஸை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள், வாரத்துக்கு ஒரு ஹதீஸை கேவலமாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள், இது சரியா இருக்குமா, இது அறிவுக்கு புலப்படுதா, இது அறிவியலுக்கு புலப்படுதா,
 
இது இஸ்லாமிய அடிப்படையோடு, தத்துவத்தோடு, ஒத்து வருதா, என்று சஹிஹான, கவிய்யான அதாவது அறிவிப்பாளர்களால் தொடர் சரியாக இருக்கக்கூடிய அறிவிப்பாளர்கள் எல்லோரும் உறுதியான, உயர்ந்த தரத்தில் இருக்கக்கூடிய ஹதீஸ்களைகளை எல்லாம் இப்படி மறுத்துக் கொண்டிருக்கிறார், புறக்கணித்து கொண்டிருக்கிறார், விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார் அவரையும், அவருடைய கூட்டத்தையும், முஸ்லிம்கள் என்று நீங்கள் நம்பி கொண்டு இருக்கிறீர்கள்.
 
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நம்முடைய இஸ்லாம் அவ்வளவு பலவீனம் ஆகிவிட்டதா? நம்முடைய ஈமானுக்கு என்ன கேடு ஏற்பட்டது? நம்முடைய இஸ்லாமிற்கு என்ன நாசம் ஏற்பட்டது? அல்லாஹ்வுடைய தூதரை நிராகரிப்பது எப்படியோ அப்படித்தான் அல்லாஹ்வுடைய தூதரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களடைய ஸஹிஹான ஹதீஸை விமர்சிப்பதும்,  நிராகரிப்பதும், புறக்கணிப்பதும், மக்கள் இதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்.
 
ஒருவன் நபிக்கு பின்னால் நானும் ஒரு நபி என்று சொல்பவனை மூர்த்தது என்றும் ஜின்திக் என்றும், காஃபிர் என்றும், அறிந்து வைத்திருக்கிறார் இந்த முஸ்லிம் சமுதாயம் அந்த நபியினுடைய ஹதீஸ்களை விமர்சிக்கக்கூடியவனை, நபியினுடைய ஹதீஸ்களை நிராகரித்து  தூண்டக்கூடியவனை முர்த்தது என்றும், காஃபிர் என்றும், புரியாமல் இருக்கிறது. 
 
இங்கே பிரச்சனை நம்முடைய மார்க்க கல்வியில் தான் இருக்கிறது  நாம் புரிந்து இருக்கிற நம்முடைய புரிதலிலே தான் இங்கே பிரச்சனை இருக்கிறது. சகோதரர்களே! இப்படி அறியாமையில் இருக்கிற காரணத்தினால் தான் சர்வ சாதாரணமாக நிராகரிப்பின் பக்கம் ஒரு பெரும் கூட்டத்தை அவர்கள் நாளுக்கு நாள் எடுத்துக் கொண்டே செல்கிற அதிகப்படுத்தி கொண்டே செல்கிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! நாமெல்லாம் முட்டாள்கள், நாமெல்லாம் முஷிரிக்குகளாக இருந்தோம், நாமெல்லாம் ஜாஹில்களாக இருந்தோம், இந்த இஸ்லாம் என்ற நேர்வழி மட்டும் நமக்கு கிடைத்திருக்கவில்லை என்றால் எத்தனை கற்பனைக் கதைகளை, பொய்களை புரட்டுகளை, எத்தனை அசிங்கங்களை, நாம் நம்பிக்கை கொண்டிருப்போம் படித்து பாருங்கள் இந்த ஈமான் என்ற நேர்வழி மட்டும் நமக்கு கிடைத்திருக்கவில்லை என்றால்! அதிலே நாம் இருந்திருக்கவில்லை என்றால்! எவ்வளவு அசிங்கங்களை எல்லாம் மார்க்கமாக, மதமாக கொள்கையாக, நாம் நம்பி இருப்போம்.
 
எத்தனை முட்டாள்தனமான வாதங்களை எல்லாம் ஒரு பக்தியாக நாம் நினைத்துக் கொண்டிருந்திருப்போம், அல்லாஹுத்தஆலா நமக்கு நேர் வழியை கொடுத்ததற்கு பிறகு, இஸ்லாமிய மார்க்கத்தில் நம்மை சேர்த்ததற்கு பிறகு, நம்முடைய புத்தி அந்த அல்லாஹ்வின் மீதே கேள்வி கேட்கத் தூண்டுகிறதா? நமக்கு நேர் வழியை கொண்டு வந்து தூதரையே எதிர்த்து கேள்வி கேட்க தூண்டுகிறதா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்” ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதை புரியுங்கள்” 
 
رسول من الله
 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர் அவர் ரசூல் நபி வஹி பெற்ற மனிதர் அந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு செய்தியை நமக்கு சொல்கிறார்கள் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்றும் அவர்கள் சொல்வதெல்லாம் நேர்வழி என்றும் அல்லாஹ் சொல்கிறான்
 
وَاِنَّكَ لَـتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
 
இன்னும், (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான பாதையின் பக்கமே அழைக்கிறீர். (அல்குர்ஆன் 23 : 73)
 
நபியே! நீங்கள் அவர்களை நேரான பாதையின் பக்கம் தான் அழைக்கிறீர்கள் நபி எதன் பக்கம் அழைக்கிறாரோ நபி எதை சொன்னாரோ அதுதான் நேரான பாதை 
 
يس  وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
 
யா ஸீன். ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர். நேரான பாதையின் மீது இருக்கிறீர். (அல்குர்ஆன் 36 : 1, 2, 3, 4 )
 
அவர் நேரான பாதையில் இருக்கிறார் நேரான பாதையில் இருந்து கொண்டு நேரான பாதையின் பக்கம் நம்மை அழைக்கிறார் அல்லாஹுத்தஆலா நமக்கு என்ன சொன்னான் நமக்கு என்ன கட்டளை கொடுத்தான் நமக்கு என்ன வழிகாட்டுகிறான் உலக மக்களே நீங்கள் எந்த காலத்தில் வாழ்ந்தாலும் சரி நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி நீங்கள் எந்த சிந்தனை உடையவராக இருந்தாலும் சரி நீங்கள் எந்த கொள்கையில் இருந்தாலும் சரி இதற்கு முன்பு இந்த நபி வந்ததற்கு பிறகு 
 
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَه بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ
 
அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அ(ந்த சத்திய மார்க்கத்)தை மேலோங்க வைப்பதற்காக. (அல்குர்ஆன் 61 : 9)
 
وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
 
இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
 
நீங்கள் எல்லாம் வழிகேடர்கள் நீங்கள் எல்லாம் தவறான வழியில் உள்ளவர்கள் நீங்கள் எல்லாம் அசத்திய பாதையிலே உள்ளவர்கள் எல்லாம் வீண் எல்லாம் குப்பை எல்லாம் மத நம்பிக்கைகளும் குப்பை எல்லா சிந்தனைகளும் குப்பை இறைவனைக் குறித்து மறுமையை குறித்து மார்க்கத்தை குறித்து மதத்தை குறித்து எதையெல்லாம் நீங்கள் நம்பி வைத்திருந்தீர்களோ அது எல்லாம் தவறு இந்த நபி கொண்டு வந்தது தான் நேர்வழி
 
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَه بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ
 
இந்த நபி கொண்டு வந்த மார்க்கம் தான் சத்தியமான உண்மையான மார்க்கம் இப்போ  உங்களுக்கு என்ன வேலை நீங்கள் படித்தவராக இருங்கள் ஆடு மேய்க்கக்கூடிய இடையூறாக இருந்து நாட்டை ஆளக்கூடிய பெரிய அரசராக இருந்து பல கண்டுபிடிப்புகளை பிடித்த பெரிய நிபுணராக வல்லுனர்களாக பெரிய அறிவியல்வாதியாக இருங்கள் நீங்கள் எப்படி இருந்தாலும் சரி
 
وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا
 
இன்னும், நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர் வழிப் பெறுவீர்கள். (அல்குர்ஆன் 24 : 54)
 
நீங்கள் இந்த நபிக்கு கீழ்படிந்தால் மட்டுமே அல்லாஹ்வின் பக்கம் செல்லக்கூடிய நேர்வழி உங்களுக்கு கிடைக்கும் முடிந்தது அவ்வளவுதான் என்ன செய்ய வேண்டும் நீங்கள்
 
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ
 
நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை, அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவருக்கு (எல்லோரும்) கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. (அல்குர்ஆன் 4 : 64)
 
மனிதர்களே நாம் உங்களுக்கு ரசூலை  அனுப்புவது உடைய நோக்கமே நாம் ஏன் உங்களுக்கு ரசூலை அனுப்பி இருக்கிறோம் என்றால் அந்த ரசூலுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகத்தான் எப்படி கீழ் படிய வேண்டும் ரசூல் இடத்திலே ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க முடியுமா
 
اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْــٴَــلُوْا رَسُوْلَـكُمْ كَمَا سُٮِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُ وَمَنْ يَّتَبَدَّلِ الْکُفْرَ بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ‏
 
(இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார். (அல்குர்ஆன் 2 : 108)
 
நீங்கள் நபியிடத்திலே கேள்வி கேட்பீர்களா? ஷிர்கிலே இருக்கும்போது குஃப்ரில் இருக்கும் போது முட்டாள்தனத்திலே மடத்தனத்தில் கேவலத்திலே சிங்கத்திலே இருக்கும்பொழுது நீங்கள் கேள்வி கேட்கவில்லை இல்லையா உங்களை நேர் வழிக்கு கொண்டு வந்ததற்கு பிறகு சத்தியத்திற்கு கொண்டு வந்ததற்கு பிறகு மிருகமாக இருந்த உங்களை மனிதராக மாற்றியதற்கு பிறகு முட்டாள்களாக இருந்த உங்களை அறிவாளியாக மாற்றி அதற்குப்,
 
பிறகு கேவலமாக இருந்த உங்களை கண்ணியவான்கள் ஆக மாற்றியதற்கு பிறகு உங்களுக்கு புத்தியை அறிவை தெளிவுபடுத்தியதற்கு பிறகு அந்த அறிவை புத்தியை தெளிவுபடுத்திய நேர் வழியை உங்களுக்கு கொண்டு வந்த அந்த தூதர் இடத்திலே கேள்வி கேட்கிறீர்களா அவருடைய கூற்றின் மீது நீங்கள் ஆட்சியபனை செய்கிறீர்களா அல்லாஹ் சொல்கிறான்  எனக்கு ஒன்றும் பொருட்டல்ல நீங்கள் அப்படி மீறி கேள்வி கேட்டால் வழிகெட்டு விட்டீர்கள் முடிந்தது நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பிறகு கவனியுங்கள்
 
وَمَنْ يَّتَبَدَّلِ الْکُفْرَ بِالْاِيْمَانِ
 
நீங்கள் நபியை நம்பிக்கை கொண்டீர்கள் இப்போது அவரை எதிர்த்து கேள்வி கேட்டதற்கு பிறகு குஃப்ரை மாற்றிக் கொண்டீர்கள் நீங்கள் வழி கெட்டு விட்டீர்கள் அன்பு சகோதரர்களே நாம் யாரும் அல்லாஹ்வுக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் நமக்கு அல்லாஹ் தேவை நமக்கு அல்லாஹ்வுடைய ஹிதாயத் தேவை சொர்க்கத்திற்கு நாம் தேவையில்லை நமக்கு சொர்க்கம் தேவை ஹிதாயத்து நமக்குத் தேவை அல்லாஹ் சுபஹானஹூதஆலா அந்த ஹிதாயத்தை எதிலே வைத்திருக்கிறான் நபிக்கு இதாஅத் செய்வதிலே வைத்திருக்கிறான்  நபிக்கு கட்டுப்பட வேண்டும்.
 
அதுதான் ஈமான் அந்த ஈமானில் தான் அறிவு இருக்கிறது உலகத்திலேயே அன்பு சகோதரர்களே மிகப்பெரிய புத்திசாலிகள் யார் மிகப்பெரிய அறிவாளிகள் யார் படைத்த இறைவனை நம்பிக்கை கொண்டவர்கள் இந்த நேர்வழியைப் பெற்றவர்கள் அவர்கள் இந்த உலகத்தில் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் சரி பெரிய அறிவியல் தத்துவங்களை அவர்கள் சொல்லவில்லை என்றாலும் சரி இந்த பூமியிலே அறிவாளிகள் என்று அல்லாஹுவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் யார் தெரியுமா சிந்தனைவாதிகள் கல்வியாளர்கள் என்று அல்லாஹ்வால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் யார் தெரியுமா முஃமீன்கள் மட்டும் தான் 
 
قُلْ اَفَغَيْرَ اللّٰهِ تَاْمُرُوْٓنِّىْۤ اَعْبُدُ اَيُّهَا الْجٰـهِلُوْنَ
 
(நபியே) கூறுவீராக! ஆக, அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாதவர்களையா நான் வணங்க வேண்டும் என்று எனக்கு நீங்கள் ஏவுகிறீர்கள்? (அல்குர்ஆன் 39 : 64)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் முட்டாள்களே அல்லாஹ்வுடைய அல்லாஹ்வைத் தவிர வேறொருவனை நான் வணங்கும்படி எனக்கு நீங்கள் கட்டளை போடுகிறீர்களா! ஜாஹில் என்று அல்லாஹ் சொல்கிறான். முஸ்லிம்களைத் தவிர, மூமின்களைத் தவிர, உலகத்தில் எந்த மதக் கொள்கையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அல்லாஹ் அல்லாத ஒரு படைப்பை வணங்க கூடியவர்கள் அவர்கள் எல்லோரையும் அல்லாஹுத்தஆலா ஜாஹில் என்ற பட்டியலுக்கு கீழே கொண்டு வருகிறான்.
 
அவர்கள் உலகத்தில் அற்புதமான படைப்புகளை கண்டுபிடித்து இருக்கலாம் அறிவியலின் உச்சத்திலே சென்றிருக்கலாம் ஆனால், அல்லாஹ்வை அறியக்கூடிய விஷயத்திலே மறுமையை அறியக்கூடிய விஷயத்திலே மனிதர்களை நேர்வழிப்படுத்துகிற, மனிதர்களை பக்குவப்படுத்துகிற, சத்தியத்தை அறிகிற விஷயத்தில் அவர்கள் யார் அவர்கள் ஜாஹில்கள் அவர்கள் முட்டாள்கள் மூடர்கள்.
 
அன்பு சகோதரர்களே! இங்கே இப்போது பிரச்சினை என்ன ஏற்பட்டிருக்கிறது நபியை நம்பிக்கை கொண்டோம் என்று சொல்லக்கூடியவர்கள் அங்கே ஒரு நிபந்தனை வைக்கிறார்கள் நிபந்தனையோடு சொல்லக்கூடிய ஷஹாதா ஏற்றுக்கொள்ளப்படாது என்று நீங்கள் புரிந்து இருக்கும் போது ஒருவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதால், தன்னை ஒரு மார்க்க கல்வியாளர் என்று சொல்லிக் கொள்வதால், இப்போது அவருடைய பிரச்சாரத்தை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்? நம்பிக்கை கொள்கிறீர்கள் என்றால் இது எப்படி ஈமானாக இஸ்லாமாக இருக்கும்.
 
அல்லாஹுத்தஆலா நமக்கு அறிவை கொடுத்ததே அந்த நபியை கொண்டு தானே ஒரு உறுதியான, சரியான, ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் காரணம்? இது அறிவுக்கு முரணாக இருக்கிறது அல்லது, இது தவ்ஹீதுக்கு முரணாக இருக்கிறது, இன்னும் எப்படிப்பட்ட  கேடுகள் பாருங்கள்!
 
“சஹிஹான ஹதீஸ் எதாற்த்திற்கு முரணாக இருக்கிறதாம், தவ்ஹீதுக்கு முரணாக இருக்கிறதாம், சஹியான ஹதீஸ் ஷிர்கை தூண்ட கூடியதாக இருக்கிறதாம், இப்போது என்ன கேள்வி இவர்கள் தங்களுடைய தொழுகைக்கு, தங்களுடைய நோன்புக்கு, தங்களுடைய ஜகாத் ஹஜ்ஜுக்கு இன்ன பிற இபாதத்துகளுக்கு இன்னும், ஈமான் சம்பந்தப்பட்ட மற்ற எல்லா விஷயங்களுக்கும் அவர்கள் ஆதாரங்களை கொண்டு வர வேண்டும் என்றால், யார் அறிவித்த ஆதாரங்களை தான் கொண்டு வர வேண்டும் சற்று நேரத்திற்கு முன்பதாக எந்த அறிவிப்பாளர்கள் அறிவித்த ஹதீஸ்களை எல்லாம் ஷிர்க்கு தூண்டுகிறது, இஸ்லாமிய அடிப்படையை தகர்க்கிறது, என் என்றல்லாம் சொன்னார்கள்  என்ன பக்தி பாருங்கள்!
 
என்று மறுத்தார்களோ அதே அறிவிப்பாளர்கள் உடைய ஹதீஸை தானே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும் ஒரு அறிவிப்பாளர் நம்முடைய மார்க்க அறிஞர்கள் ஹதீஸ்களை சஹாபாக்களிடம் இருந்து, தாபியீன்கள் இடமிருந்து, தபவுத் தாபியீன்களிடமிருந்து அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களை, நம்பகத்தன்மை உள்ளவர்களாக, ஏற்றுக் கொள்வதற்கு அவர் வெளிப்படையாக பெரும் பாவம் செய்பவராக இருக்கக் கூடாது, வெளிப்படையாக பொய் பேசக் கூடியவராக இருக்கக் கூடாது, ஞாபக மறதி மிகைத்தவராக இருக்கக் கூடாது,
 
இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான காரியத்தை அவர்  செய்பவராக இருக்கக் கூடாது, இப்படி எல்லாம் நிபந்தனை வைத்து அவர்கள் ஹதீஸ்களை நமக்கு தொகுத்து உறுதியாக ஸனதோடு வழங்கி இருக்கும்போது, கவனிக்க வேண்டியது என்ன அறிவிப்பாளர் எப்படி இருக்க கூடாது பெரும் பாவம் செய்தவராக இருக்கக் கூடாது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு குற்றத்தை செய்தார் என்று வெளிப்படையாக அறியப்பட்டவராக இருக்கக் கூடாது,
 
இப்படி நிபந்தனை வைத்திருக்கும் போது நீங்கள் சொல்கிறீர்கள் அந்த அறிவிப்பாளர்கள் அறிவித்த ஹதீஸ்கள் தவ்ஹீதையே தகர்த்து விடுகிறது, ஷிர்கை தூண்டி விடுகிறது, இஸ்லாமிய அடிப்படை தவிர்த்து விடுகிறது என்று சொன்னால் அந்த அறிவிப்பாளர்கள் அறிவிக்கக்கூடிய மற்ற ஹதீஸ்களை நீங்கள் எங்கே இருந்து நம்ப முடியும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்,
 
உங்களுடைய கொள்கையில் இருக்கக்கூடிய உங்களுடைய நம்பிக்கையில் இருக்கக்கூடிய அறிவிப்பாளர்களை கொண்டு ஹதீஸ்களை கொண்டு வாருங்கள் ஷியாக்கள் என்ன செய்தார்கள் ராஃபிதாக்கள் என்ன செய்தார்கள் அவர்கள் ஒதுங்கி  விட்டார்கள் நாங்கள் சஹாபாக்களை நம்பவில்லை நாங்கள் சஹாபாக்களை நம்பவில்லை,
 
எங்களுக்கு இத்தனை சகாபாக்கள் மட்டும் தான் முக்கியம் மற்றவர்கள் எல்லாம் வழி கெட்டவர்கள் அதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் மொத்தமா எல்லாவற்றையும் சேர்த்து அவர்களாவது நான்கு சஹாபாக்களை ஆவது ஏற்றுக் கொண்டார்கள் இவர்களைப் பொறுத்தவரை எல்லா சஹாபாக்களிலும் வழி கேடு பரவி விட்டது.
 
அப்போ தாபியீன்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இந்த ஷியாக்கள் என்ன செய்தார்கள் எங்களுக்கென்று நாங்கள் அறிவிப்பாளர்களை வைத்து அந்த அறிவிப்பாளர்கள் அடிப்படையில் தான் எங்களுடைய ஃபிக்ஹ், எங்களுடைய அகீதா, எங்களுடைய மதுஹப், என்று ஒதுங்கி விட்டார்கள் இப்போது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
 
இந்த புதிய ஷியாக்களுக்கும் அந்த பழைய ஷியாக்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது இந்த புதிய ஷியாக்கள் புதிய ராஃபிதாக்கள் இவர்களுடைய கேலி கிண்டல் என்னவென்றால் ஸஹாபாக்களை கிண்டல் செய்வார்கள் சஹாபாக்களை நரகவாசிகள் என்று சொல்வார்கள் சஹாபாக்களின் புரிதல்  தவறு என்று சொல்வார்கள் சஹாபாக்களை நம்ப வேண்டிய அவசியமில்லை என்று சொல்வார்கள் அவர்கள் அறிவித்த ஹதீஸ்களில் பல ஒன்றல்ல பல ஒன்றிலிருந்து ஆரம்பித்து 100ஐ தாண்டிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது.
 
இப்போது அந்த ஸஹாபாக்கள் அறிவித்த ஹதீஸை கொண்டு இவர்கள் தொழுவார்களாம் இவர்கள் நோன்பு வைப்பார்களாம் இவர்கள் ஃபத்துவா கொடுப்பார்களாம்  அந்த சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களை கொண்டு இஸ்லாமிய அடிப்படையை உருவாக்கி இஸ்லாமிய அடிப்படையில் உருவாக்கி பிறகு அதே சஹாபாக்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ்களில் பல அந்த அடிப்படைகளுக்கு முரண் என்று மறுப்பார்களா நான் சொல்றது ஏதாவது புரிகின்றதா எத்தகைய முட்டாள்தனம் எத்தகைய ஒரு அறிவிலித்தனம் இன்று மக்களுக்கு அதை எப்படி அலங்கரித்து அதை அப்படியே கவர்ச்சியான வாதங்களை கொண்டு அதை மூடி மறைத்து மக்களுடைய மூளைகளை மழுங்க வைத்து குஃப்ரிலே தள்ளுகிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே இந்த பிஜே உடைய பிரச்சனையும் அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுடைய கொள்கையையும் தயவு செய்து குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் காதியானிகளுடைய பிரச்சனை எப்படி அணுகப்பட வேண்டுமோ குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் வேண்டாம் என்று முற்றிலுமாக வெளிப்படையாக மறுக்கக்கூடிய ரஷாத் கலீபாவுடைய கூட்டம் 19 கூட்டம் என்று அழைக்கப்படக்கூடிய அவர்கள் எப்படி எதிர்கொள்ளப்பட வேண்டும்.
 
அவர்களை எப்படி இந்த உம்மத் பார்க்கிறதோ அதுபோன்று ஷியாக்களை போன்று பஹாஇய்யாவை போன்று தாவூதியக்களை போன்று இஸ்மாயிலிவை போன்று இப்படி இஸ்லாமை விட்டு வெளிப்படையாக வெளியேறி விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்ட இந்த கூட்டங்களை போன்று தான் பிஜேவும் அவருடைய கொள்கையில் இருக்கக்கூடிய அத்தனை ஜமாத்துகளும் எதிர்கொள்ளப்பட வேண்டும் அப்படி தான் அவர்கள் இந்த சமுதாயத்தில் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
 
இல்லையென்றால் நம்பிக்கை கொண்டதற்கு பிறகு அவர்கள் குஃப்ரிலே உங்களை தள்ளி விடுவார்கள் அல்லாஹ்வுடைய ரசூலுக்கு கீழ்படிந்ததற்கு பிறகு அல்லாஹ்வுடைய ரசூலை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு அவர்கள் மீது சந்தேகத்தை தூண்டுகிற அந்த வழிகெட்ட தலைவருக்கு கீழ்ப்படிய கூடியவராக ஈமான் கொள்ள கூடியவராக உங்களை ஆக்கிவிடுவார் இது சாதாரணமான விஷயம் அல்ல,
 
சகோதரர்களே நம்முடைய ஈமான் சம்பந்தப்பட்ட விஷயம் ஒரு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் வாழ்கிற காலத்திலும் அவர்தான் பின்பற்றப்பட வேண்டும் ஒரு ரசூல் அவர் வாழ்கிற காலத்திலும் அவர்தான் பின்பற்றப்பட வேண்டும், அவர் இறந்துவிட்டாலும் அவர்தான் பின்பற்றப்பட வேண்டும் இறுதி நாள் வரை அந்த ரசூல் தான் பின்பற்றப்பட வேண்டுமே,
 
தவிர அந்த ரசூல் சொன்னார் என்று உறுதியான சொல்லை மறுக்க தூண்டுகிற,  நிராகரிக்க தூண்டுகிற, சந்தேகப்படத் தூண்டுகிற ஒருவனை நீங்கள் நம்பி விட்டால் அவன் பின்னால் சென்று விட்டால் எப்படி நபிக்கு பின்னால் இன்னொருவனை நபியாக ஏற்றுக் கொள்வது குற்றமோ அதே குற்றத்திற்கு சற்றும் குறைப்பில்லாத குற்றம் தான் இது சகோதரர்கள் புரிந்து கொள்ளுங்கள் ஈமானிய அடிப்படையில் அல்லாஹுத்தஆலா என்ன சொல்கிறார்
 
وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌
 
முஹம்மது ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் (வந்து) சென்றுவிட்டார்கள். அவர் இறந்தால்; அல்லது, கொல்லப்பட்டால் நீங்கள் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3 : 144)
 
முஹம்மது ஒரு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் இறந்துவிட்டாலோ, கொல்லப்பட்டு விட்டாலோ, நீங்கள் மார்க்கத்தை விட்டு சென்று விடுவீர்களா? நபி உயிரோடு இருக்கும்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியே நீங்கள் சொல்கிற செய்தி எனக்கு அறிவுக்கு ஒத்து வரவில்லை, எங்களுடைய அடிப்படை தத்துவத்திற்கு ஒத்துவரவில்லை, இது என்னுடைய புத்திக்கு புலப்படவில்லை, என்று ஒருவன் மறுத்தானேயானால் அவன் எப்படியோ அவனை அல்லாஹ் குர்ஆனில் எப்படி அடையாளம் காட்டியிருக்கிறானோ ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு, எப்படி நடந்து கொண்டார்களோ,
 
அன்பு சகோதரர்களே! அப்படித்தான் நபியின் இறப்புக்கு பின்னால் நபி சொன்னார்கள் என்று சஹாபாக்கள் அறிவிக்க பிறகு, தாபியுங்கள் அறிவிக்க பிறகு, அவர்களிடம் இருந்து நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்க, அந்த ஹதீஸை பார்த்து ஒருவன் விரல் நீட்டினால், அதிலே சந்தேகப்பட்டால், சந்தேகத்தை தூண்டினால், அவனுக்கும் அதே சட்டம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
இங்கு மார்க்கத்திலே ஸனது மட்டும்தான்  அறிவு அதை புரிவதற்கு தான் அறிவை வைத்து ஸனதை  மறுத்தால் அறிவிப்பாளர் தொடரை ஒருவன் மறுத்தால் அவன் அபூஜஹலுக்கு சற்றும் குறைவில்லாதவன், அபூலஹபை போன்றவன், உமையாவை போன்றவன், உபைப் இப்னு கலஃபை போன்றவன், அப்துல்லாஹ் இப்னு உபைப் இப்னு சலூனை போன்றவன் ஆவான். ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே அவர்களுடைய பொது சமூகத் தேவைகளை பார்த்தும் அவர்கள் செய்யக்கூடிய ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரங்களை பார்த்தும் அல்லது பித்அத் ஒழிப்பு பிரச்சாரங்களை பார்த்தும் நீங்கள் மயங்கி விடாதீர்கள், ஏமாந்து விடாதீர்கள்.
 
ஈமானை, இஸ்லாமை தவிர்த்து அதற்குப் பிறகு என்ன நன்மைகளை கோடி கோடியாக, மலை மலையாக செய்தாலும் அல்லாஹுத்தஆலா அவற்றை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், ரசூலுக்கு கீழ்படியாத தூதருக்கு, பணியாத யாராக இருந்தாலும் சரி, அல்லாஹுத்தஆலா அவர்களை புறக்கணித்து விடுவான், அல்லாஹ் நம்மை பாதுகாப்பான! நம்முடைய ஈமானை உறுதிப்படுத்துவானாக! மார்க்கத்தில் குழப்பங்களுக்கு ஆளாகுவதிலிருந்து அல்லாஹுத்தஆலா என்னையும், உங்களையும், பாதுகாத்து, அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/