HOME      Khutba      ஹஜ்ஜில் ஆர்வப்படுங்கள்! | Tamil Bayan - 796   
 

ஹஜ்ஜில் ஆர்வப்படுங்கள்! | Tamil Bayan - 796

           

ஹஜ்ஜில் ஆர்வப்படுங்கள்! | Tamil Bayan - 796


ஹஜ்ஜில் ஆர்வப்படுங்கள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ்ஜில் ஆர்வப்படுங்கள்!
 
வரிசை : 796
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -19-05-2023 | 29-10-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும், மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக இந்த ஜும்மா உரையை ஆரம்பம் செய்கிறேன்,
 
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக நம் மீது அருள் புரிவானாக அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை நம் மீது கடமையான வணக்க வழிபாடுகளையும் அதுபோன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டிய வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கு ஏற்ப மனத்தூய்மையோடு அதிகம் அதிகம் நிறைவேற்றுவதற்கு அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக.
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இஸ்லாமிய மார்க்க கடமைகளில் மிக முக்கிய கடமையாகிய ஹஜ் என்ற வணக்கம் நெருங்கி வருவதை நாம் பார்க்கிறோம். அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா முஸ்லிம்கள் மீது ஐந்து கடமைகளை அவன் கடமையாக்கி இருக்கிறான்,
 
ஷஹாதா, தொழுகை, ஜக்காத் கொடுப்பது, அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்வது, ரமலான் மாதத்திலே நோன்பு நோற்பது இப்படியாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடிய ஹதீஸை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார். ஹஜ் என்பது மார்க்க கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமையாகும் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா அல்குர்ஆன் மூலமாக இதை நேரடியாக நம் மீது கடமையாக்குகிறான்.
 
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‏
 
நிச்சயமாக மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா என்றழைக்கப்படும்) ‘பக்கா’வில் உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும் (அதிகமான நன்மைகளை உடையதும்) அகிலத்தார்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 3 : 96)
 
فِيْهِ اٰيٰتٌ  بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  وَمَنْ دَخَلَه كَانَ اٰمِنًا  وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا
 
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்ராஹீம் நின்ற இடம். இன்னும், எவர் அ(ந்த இறை ஆலயத்)தில் நுழைகிறாரோ அவர் அச்சமற்றவராக ஆகிவிடுவார். அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 97)
 
இந்த பூமியில் முதலாவதாக அல்லாஹ்வை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலயம் மக்காவில் இருக்கக்கூடிய இறை ஆலயமாகும். மக்கள் மீது கடமையாக இருக்கிறது அல்லாஹ்வுக்காக இந்த வீட்டை அவர்கள் ஹஜ் செய்ய வர வேண்டும் என்பது, யார் நிராகரிக்கிறார்களோ அத்தகைய மக்களை விட்டு அல்லாஹுத்தஆலா மிகவும் தேவையற்றவனாக இருக்கிறான்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! ஒவ்வொரு வணக்கத்தையும் நாம் செய்யும்போது இந்த வணக்கத்துடைய நன்மை நமக்கு தேவை, இந்த வணக்கத்தில் இருந்து அல்லாஹுத்தஆலா என் மீது கருணை காட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் பக்கம் தேவை உள்ளவர்களாக மனத்தூய்மையோடு அந்த இபாதத்தை நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்விற்கு நாமும் தேவையில்லை, நம்முடைய வழிபாடுகளும் தேவையில்லை, அல்லாஹுத்தஆலா எத்தகைய தேவையிலிருந்தும் பரிசுத்தமானவனாக இருக்கிறான்.
 
இந்த ஹஜ்ஜுடைய வணக்கம் இருக்கிறதே இது நாம் மிகவும் ஆர்வப்பட வேண்டிய, ஆசைப்பட வேண்டிய, வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் எனக்கு அருள் புரிவாயாக என்று, அதிகம் அதிகம் வேண்டக்கூடிய ஒரு முக்கியமான இபாதத்தாகும். சிலர் எண்ணி இருப்பதைப் போன்று வயதான காலத்தில் வாழ்க்கையில் செட்டில் ஆனதற்கு பிறகு, நமது பிள்ளைகளை மட்டும் அல்ல பிச்சலங்களையும் செட்டில் ஆக்கியதற்கு பிறகு, கப்ரிலே கால் தொங்கும்போது எல்லா நோய்களும் வந்து விட்டன என்ற அறிவிப்புகள் வந்ததற்கு பிறகு, ஹஜ்ஜை பார்க்கலாம் ஹஜ்ஜிற்கான ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணுகிறார்களே!
 
من أراد الحجَّ فليتعجَّلْ فإنَّهُ قد يمرضُ المريضُ وتضلُّ الضالَّةُ وتعرِضُ الحاجَةُ
 
அன்பிற்குரிய சகோதரர்களே! அப்படி அல்ல இந்த ஹஜ் வணக்கம் என்பது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யார் மீது ஹஜ் கடமையாகி, ஹஜ் நிறைவேற வேண்டுமென்று அவர் நாடிவிட்டாரோ அவர் உடனடியாக தீவிர படுத்தட்டும் இந்த வணக்கத்தை நிறைவேற்றுவதில் காரணம் அவருக்கு இடையூறு ஏதாவது ஏற்படலாம், நோய் ஏற்பட்டு விடலாம், அவருடைய செல்வம் அழிந்துவிடலாம், இப்படியாக எச்சரிக்கையோடு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா எண் : 2349
 
அன்பு சகோதரர்களே! இங்கே இரண்டு விஷயங்களை அடிப்படையாக நாம் கவனிக்க வேண்டும் ஒன்று என்ன? அல்லாஹுத்தஆலா இந்த ஹஜ் வணக்கத்திற்கு நமக்கு வாக்களித்து இருக்கக்கூடிய நன்மைகள், அல்லாஹ்வுடைய வீட்டை தரிசிக்க வர வேண்டும், அங்கே இபாதத்து செய்ய வேண்டும், என்று அவனும்,
 
அவனுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டி இருக்கக்கூடிய, அந்த வாக்கியங்கள், அந்த வசனங்கள், அந்த ஹதீஸ்கள் பிறகு, ஒரு உண்மை முஃமின், ஒரு இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வை மறுமையை நம்பிக்கை கொண்டவன், அல்லாஹுத்தஆலா பூமியில் தனக்காக ஒரு ஊரை தேர்ந்தெடுத்து இருக்கிறான், அந்த ஊரிலே ஒரு வீட்டை அவன் அமைத்திருக்கிறான், அவருடைய நபிமார்கள் மூலமாக அந்த வீட்டுக்கு தன்னுடைய வீடு
 
بيت الله بيتي كعبتي
 
அல்லாஹ்வுடைய வீடு என்று அவன் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்று அறிந்திருப்பதே போதுமானது, அந்த வீட்டை நோக்கி நம்முடைய உள்ளங்கள் எல்லாம் ஈர்க்கப்படுவதற்கு, அந்த வீட்டை நோக்கி உடனடியாக நாம் புறப்பட வேண்டும், என்னுடைய செல்வத்தில் நான் முதலாவதாக சொத்து வாங்குவதை விட, என்னுடைய பிள்ளைகளுக்கு நகை வாங்குவதைவி,ட என்னுடைய இன்ன பிற மற்றமற்ற ஆசைகளை வாங்குவதை விட, நிறைவேற்றுவதை விட, 
 
என்னுடைய ஈமானுடைய ஆசை, அல்லாஹ்வுடைய வீட்டை பார்க்க வேண்டும் என்று செலவு செய்யக்கூடிய அந்த எண்ணம், அதன் பக்கம் துடிதுடிப்போடு ஆர்வத்தோடு செல்லக்கூடிய எண்ணம், ஆர்வம் இது தானாகவே ஏற்பட்டு விட வேண்டும். இந்த ஆசை உள்ளத்தில் இருந்து அப்படியே உதிக்க வேண்டும்   மனிதனை உந்த வேண்டும் அல்லாஹு சுபஹானஹூதஆலா உடைய ஊர் என்று ஒன்று இருக்கிறது பூமியை அவனுக்கு சொந்தம் தான் ஆனால் பலதுல்லாஹ் என்னுடைய ஊர் என்று அல்லாஹ் ஒரு ஊரை இதிலிருந்து தேர்ந்தெடுத்து இருக்கிறான். 
 
وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ
 
இன்னும், உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், (தான் விரும்பியவர்களை நேர்வழிக்கு) தேர்ந்தெடுக்கிறான். (அல்குர்ஆன் 28 : 68)
 
நபியே உமது இறைவன் எதை வேண்டுமானாலும் படைப்பான் அது அவருடைய விருப்பம் அந்தப் படைப்புகளிலிருந்து தனக்காக தனது விருப்பத்திற்காக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அவன் தேர்ந்தெடுப்பவன் அதுவும் அவனுடைய விருப்பம் அவனை நம்பிக்கை கொண்ட மூஃமின்களாகிய நம் மீது என்ன கடமை  
 
وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
 
இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும். (அல்குர்ஆன் 22:32)
 
அல்லாஹ்வுக்கு பிடித்தமான, அல்லாஹ்வுக்கு பிரியமான, அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை யார் கண்ணியப்படுத்துவாரோ, யார் அவற்றை மதிப்பாரோ அது அவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ்வுடைய தக்குவா இருக்கிறது என்பதற்கு உரிய அடையாளம், அவர்கள் அல்லாஹ்வை பயப்பட கூடியவர்கள், அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்கள் என்பதற்குரிய அடையாளம், அல்லாஹ் நபிமார்களை நேசித்தான் எனவே நாமும் நபிமார்களை நேசிக்க வேண்டும் அவர்களை நாம் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
அல்லாஹுத்தஆலா அவனுடைய குர்ஆனை நேசிக்கிறான், அனுருடைய கலாம் இது எனவே நாமும் குர்ஆனை நேசிக்க வேண்டும், அல்லாஹுத்தஆலா அதுபோன்று தான் மக்காவை நேசிக்கின்றான், மக்காவின் மீது அல்லாஹ்வுடைய அன்பு இருக்கிறது, அல்லாஹ்வுடைய வீட்டின் மீது அல்லாஹ்வுடைய அன்பு இருக்கிறது எனவே அந்த ஊரை நோக்கி அந்த வீட்டை நோக்கி என்னுடைய முதல் பயணம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இது ஈமானிய தேடல் இது இப்ராஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துவா அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்லாஹ் அவர்களுடைய துவாவின்படி அப்படியே அந்த வீட்டை அமைத்தான் என்று அல்லாஹ் சாட்சி சொல்கிறான்.
 
وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا
 
இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 2 : 125)
 
அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான் இந்த ஆலயத்தை  இந்த வீட்டை நபியே நாம் அமைத்திருக்கிறோம் அதை நினைத்துப் பாருங்கள் எப்படி அமைத்திருக்கிறோம். ஒருமுறை வந்தவர் அவர் எத்தகைய சிரமத்தோடு வந்திருந்தாலும் எத்தகைய செலவழிப்போடு வந்திருந்தாலும் எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருந்தாலும் எந்த வயதில் இருந்து வந்திருந்தாலும்
 
அவர் வந்ததற்கு பிறகு திரும்பி செல்லும்போது என் இறைவா என்னை மீண்டும் உனது வீட்டுக்கு கொண்டு வா என்ற துவாவோடு செல்வார் அதுதான். திரும்பத் திரும்ப வருவதற்கு ஆசை படும் இடமாக திரும்பத் திரும்ப மீண்டும் மீண்டும் வருவதற்கு விருப்பப்படக்கூடிய இடமாக நபியே மக்களுக்கு நாம் இந்த காபாவை இந்த வீட்டை ஆக்கி இருக்கிறோம் அதை நினைத்து பாருங்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துவா செய்தார்கள் யா அல்லாஹ் நான் எனது குடும்பத்தை இந்த வீட்டுக்கு அருகில் வைத்திருக்கிறேன். 
 
فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ
 
எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். (அல்குர்ஆன் 14 : 37)
 
மக்களை இந்த மக்காவாசிகள் மீது நேசம் கொள்பவர்களாக நீ ஆக்கிவை உலகத்தில் ஆயிரம் அழகானவர்கள் ஒரு இடத்திலே சென்றாலும் ஆயிரம் வசதி படைத்தவர்கள் சென்றாலும் அங்கே ஒரு மக்காவை சேர்ந்த அரபி என்ன நிலையில் சென்றாலும் மக்களெல்லாம் அந்த அரபியைத்தான் பார்ப்பார்கள் உலகத்தில் வேறு யாரையும் பார்க்க மாட்டார்கள் அல்லாஹுத்தஆலா அப்படித்தான் ஆக்கி இருக்கின்றான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துவா இது அன்பு சகோதரர்களே சாதாரண விஷயமா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
 
لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إلى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِي هذا، وَمَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الأقْصَى 
 
நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக எந்த வீட்டுக்கும் எந்த பள்ளிக்கும் பயணம் செய்யக்கூடாது எந்த இடத்துக்கும் பயணம் செய்யக் கூடாது நீங்கள் இருந்த இடத்தில் உங்களது மொஹல்லாவில் உள்ள உங்கள் ஊரில் உள்ள மஸ்ஜிதுகளில் தான் நீங்கள் தொழ வேண்டும் நீங்கள் வணக்க வழிபாட்டுக்காக புனிதத்தை நாடி துவாவை நாடி தொழுகையை நாடி நீங்கள் எந்த இடத்திற்கும் பயணம் செய்யக்கூடாது மூன்று மஸ்ஜிதுகளை தவிர,
 
ஒன்று என்ன என்னுடைய இந்த மஸ்ஜித் المسجد النبوي, இரண்டாவது وَمَسْجِدِ الْحَرَام அல்லாஹுத்தஆலா புனித பாக்கிய புனிதமான கண்ணியமான مَسْجِدِ الْحَرَامِ, மூன்றாவதாக وَمَسْجِدِ الأَقْصَى ‏ பைத்துல் முகத்தஸ் என்ற அந்த மஸ்ஜிதுல் அக்ஸா இத்தகைய சிறப்பு அல்லாஹ் சுபஹானஹூதஆலா மூன்று மஸ்ஜிதுகளுக்கு கொடுத்து இருக்கிறான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1397
 
நாம் தேடிச் செல்ல வேண்டும் அங்கே சென்று இபாதத்து செய்ய வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் அல்லாஹுத்தஆலா நபிமார்களின் மிகச்சிறந்தவர்களாகிய இரண்டு நபிமார்களுக்கு இந்த மஸ்ஜிதுக்கான பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள் இந்த மஸ்ஜிதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் ஷிருக்குலிருந்து மட்டுமல்ல இந்த இடத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ
 
இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் தொழுமிடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும், “(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்கி இருப்பவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம் பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்” என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம். (அல்குர்ஆன் 2 : 125)
 
وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ
 
இப்ராஹீமே! இஸ்மாயிலே! என்னுடைய வீட்டை, சகோதர்களே! எனது வீடு என்று அல்லாஹ் சொல்கிறான் இந்த எனது வீட்டை மிக சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயிலுக்கும் கட்டளை கொடுத்தோம் அப்படி நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்று வாக்குறுதி ஒப்பந்தம் ஆகிடும் அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான் யாருக்காக
 
என்னுடைய வீட்டை தவாஃப் செய்பவர்களுக்காக, அங்கே தங்கி வணக்க வழிபாடுகள் செய்பவர்களுக்காக, அங்கே தொழக்கூடியவர்களுக்காக. அல்லாஹுத்தஆலா அவனுடைய வீட்டுக்கு வரக்கூடிய ஹாஜிகளை அந்த முஃதமிர்களை அங்கே தொழக்கூடிய முசள்ளிகளை எவ்வளவு நேசித்து இருப்பான் எவ்வளவு நேசம் அன்பு அல்லாஹுத்தஆலா அவர்கள் மீது கொண்டிருப்பான் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா!’
 
தன்னுடைய நபிக்கு அல்லாஹ் கட்டளை இடுகிறான் இவர்களுக்காக இந்த வீட்டை நீங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அன்றிலிருந்து அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் பார்க்கலாம் அந்த அரபு மக்கள் தங்களுடைய உலகம் எப்படி போனாலும் சரி, தங்களிடத்தில் எந்த ஒரு கொடியம் கடினமான வறுமை இருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய வீட்டுக்கு வரக்கூடிய அந்த ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதில் அவர்கள் ஒருபோதும் குறை செய்ததே இல்லை, குறை செய்யவும் மாட்டார்கள் அல்லாஹுத்தஆலா அப்படியே ஆக்கிவிட்டான்.
 
யாராவது ஒரு சிலருடைய முரட்டு குணங்கள் இருக்கலாமே தவிர ஆனால், அல்லாஹ் சுபஹானஹூதஆலா அந்த மக்களுடைய உள்ளத்திலே ஹாஜிகள் மீது அன்பை ஏற்படுத்தி விட்டான், ஹாஜிகளுக்கு மரியாதை செய்வதை, ஹாஜிகளை கண்ணியப்படுத்துவதை, ஹாஜிகளுக்கு தேவையான சேவைகளை செய்வதை, அந்த மக்களுடைய குணமாகவே ஆக்கிவிட்டார்,
 
ஏனென்றால் இது ஒரு தனிப்பட்ட விஷயம் அல்ல இது நாம் நம்பிக்கை கொண்டிருக்கக் கூடிய அல்லாஹுவின் மீது உண்டான ஈமானுடைய காரியம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி சொல்கிறார்கள் பாருங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அதாவது
 
أَبُو بَكْرٍ قَالَ: ثنا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: قَالَ عُمَرُ: «يُغْفَرُ لِلْحَاجِّ وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ الْحَاجُّ بَقِيَّةَ ذِي الْحِجَّةِ وَالْمُحَرَّمِ وَصَفَرٍ وَعَشْرٍ مِنْ شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ
 
ஹாஜ் உடைய மதிப்பு என்னவென்றால் ஹாஜிக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும், அந்த ஹாஜ் யாருக்காக துவா செய்கிறார்களோ மன்னிப்பு தேடுகிறார்களோ அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு,
 
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் : 12657
 
اللَّهُمَّ اغْفِرْ لِلْحَاجِّ، وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ الْحَاجُّ
 
மேலும் சொன்னார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். யா அல்லாஹ் ஹஜ்ஜுக்கு வரக்கூடியவர்களை மன்னிப்பாயாக, ஹாஜ் யாருக்கெல்லாம் பாவமன்னிப்புடைய துவா கேட்பார்களோ அவர்களுக்கும் நீ பாவமன்னிப்பு செய்வாயாக!
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 1612
 
الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ، وَفْدُ اللَّهِ، دَعَاهُمْ، فَأَجَابُوهُ، وَسَأَلُوهُ، فَأَعْطَاهُمْ 
 
மேலும் சொன்னார்கள்: ஹஜ்ஜுக்கு வரக்கூடியவர்கள் உம்ராவிற்கு வரக்கூடியவர்கள் அல்லாஹ்வுடைய குழுக்கள் அல்லாஹ்வை சந்திக்க வரக்கூடிய அல்லாஹ்வுடைய வஃப்த் அல்லாஹ்வுடைய குழுக்கள் விசேஷமான குழுக்களுக்கு வஃப்த் என்று சொல்லப்படும் ஒரு பெரிய மன்னரை ஒரு பெரிய அதிபரை விசேஷமாக ஒரு அபிஷியல் முறையாக மிகவும்,
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், இப்னு மாஜா, எண் : 2892, 2893
 
ஒரு அப்பாயின்மென்ட்டோடு ஒரு சிறப்பு ஏற்பாட்டோடு சந்திக்க வருகிறார்கள் அல்லவா அவர்களுக்கு வஃப்த் என்று சொல்லப்படும் அந்த வார்த்தையை தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இங்கே பயன்படுத்துகிறார்கள் ஹாஜிகளுக்காக உம்ரா செய்யக்கூடியவர்களுக்காக. 
 
ஹஜ்ஜுக்கு வரக்கூடியவர்களும் உம்ராவுக்கு வரக்கூடியவர்களும் அல்லாஹ்வுடைய குழுக்கள் ஆவார்கள்  دعاه அல்லாஹ் அவர்களை அழைத்து இருக்கிறான் யார் வீட்டிற்கு வருகிறார்களோ அல்லாஹ்வுடைய அழைப்பின்படி வருகிறார் அல்லாஹுத்தஆலா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிட்டான்.
 
وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ‏
 
இன்னும், ஹஜ்ஜுக்காக மக்களுக்கு (மத்தியில்) அறிவிப்(புச் செய்து அவர்களை அழைப்)பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள். இன்னும் தூரமான பாதைகளிலிருந்து வருகின்ற மெலிந்த எல்லா (வகையான) வாகனத்தின் மீது (வாகனித்தவர்களாகவும் வருவார்கள்). (அல்குர்ஆன் 22:27)
 
لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ
 
அவர்கள் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும், (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்த கால்நடை பிராணிகள் மீது குறிப்பிட்ட (அந்த ஹஜ்ஜுடைய) நாட்களில் (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூர்வதற்காகவும் (அவர்களை ஹஜ்ஜுக்கு அழைப்பீராக!) (அல்குர்ஆன் 22 : 28)
 
இப்ராஹீமே நீங்கள் அறிவிப்பு செய்யுங்கள் உலக மக்களுக்கெல்லாம் அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்ய வர வேண்டும் என்று இதிலே அவர்களுக்கு நிறைய பலன்கள் இருக்கின்றன அவர்கள் அல்லாஹ்வுடைய பெயரை இங்கே சொல்வார்கள் தங்களுடைய குர்பானி பிராணிகளை அறுக்கும் பொழுது.
 
அன்பு சகோதரர்களே! பலன்களிலேயே மிகப்பெரிய பலன் இந்த உலகத்திலேயே அல்லாஹ்வுடைய வீட்டை சந்திப்பதை விட ஒரு பெரிய பலன் என்ன இருக்கும் அந்த காபாவை பார்ப்பதை விட இப்ராஹிம் நபியும் இஸ்மாயில் நபியும் உயர்த்தி எழுப்பிய அந்த காபாவை அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய வணக்கத்திற்காக சுற்றுவதை விட உலகத்தில் வேறு எந்த இடத்தையும் சுற்ற முடியாது அல்லாஹ்வுடைய அந்த வீட்டைத் தவிர வேறு எந்த இடத்தில் தொழக்கூடிய தொழுகைக்கும் அத்தகைய நன்மை இல்லை அல்லாஹ்வுடைய வீட்டில் தொழக்கூடிய அந்த தொழுகைகே தவிர எத்தகைய பலன்கள் இருக்கின்றன அல்லாஹுத்தஆலா
 
اٰيٰتٍ بَيِّنٰتٍ‌‌
 
இன்னும், (நபியே!) திட்டவட்டமாக தெளிவான வசனங்களை நாம் உமக்கு இறக்கினோம். (அல்குர்ஆன் 2 : 99)
 
தெளிவான அத்தாட்சிகள் ஜம் ஜம் ஒரு அத்தாட்சி ஹஜருல் அஸ்வத் ஒரு அத்தாட்சி காபத்துல்லாஹ் ஒரு அத்தாட்சி அந்த ஊர் ஒரு அத்தாட்சி அரஃபா, மீனா ,முஸ்தலிஃபா இவையெல்லாம் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் அன்பு சகோதரர்களே ஈமான் அங்கே பரிசுத்தமாக கூடிய அல்லாஹ்வுடைய அன்பு அதிகமாக கூடிய இறை நம்பிக்கையை உறுதியாக கூடிய மறுமையின் தேடல் வணக்க வழிபாட்டின் ஆர்வம் அதிகரிக்கக் கூடிய ஒரு புனிதமான நகரம் தான் அல்லாஹுத்தஆலா ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த மக்கா நகரம் எந்த ஊரின் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்யவில்லை அல்குர்ஆனிலே ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் மக்காவின் மீது சத்தியம் செய்கிறான்
 
لا اقسم بهذا البلد وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏ وَطُوْرِ سِيْنِيْنَۙ‏ وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
 
இந்த நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன் அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஆலிவ் மரத்தின் மீது சத்தியமாக!, சினாய் மலை மீது சத்தியமாக!, அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 95 : 1, 2, 3)
 
பாதுகாப்பு மிக்க பாதுகாப்பு அளிக்கக்கூடிய இந்த பட்டினத்தின் மீது சத்தியமாக என்று இந்த ஊர் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான் என்றால் பல இடங்களில் குர்ஆனிலே குரைஷிகளுக்கு சொல்லும் பொழுது ஹரம் இந்த புனித பூமியை நாம் உங்களுக்கு கொடுத்தது எத்தகைய பெரிய அருட்கொடை என்பதை நினைத்துப் பாருங்கள் 
 
فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْت اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا
 
ஆக, இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும். நாம் அவர்களுக்காக பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? (அல்குர்ஆன் 28 : 57, 106 : 3)
 
பாதுகாப்பான புனிதமான கண்ணியமான பாதுகாப்பு அளிக்கக்கூடிய இந்த ஹரம் இந்த பூமியை எனது பூமியை நான் உங்களுக்கு வசதியாக்கி கொடுத்தேனே அதிலே உங்களுக்கு இடம் கொடுத்தேனே நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் என்று அல்லாஹுத்தஆலா அந்த குரைஷிகளுக்கு அந்த மக்கா வாசிகளுக்கு எடுத்துச் சொல்கிறான்.
 
அன்பு சகோதரர்களே! அது மட்டுமா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ் உடைய வணக்கத்தை பற்றி சொன்னார்கள் நாம் செலவழிக்க கூடிய செலவுகள் எத்தனையோ செலவுகள் இருக்கின்றன நமது வாழ்வாதாரத்துக்காக நமது குடும்பத் தேவைகளுக்காக தான தர்மமாக ஏழை எளியவர்களுக்காக இந்த ஹஜ் உடைய சலவை பற்றி சொன்னார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
 
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: النَّفَقَةُ فِي الْحَجِّ كَالنَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ 
 
ஹஜ் காக செலவழிக்கப்படக்கூடிய தர்மங்கள் செலவுகள் இருக்கின்றன அல்லவா அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்கப்படக்கூடிய செலவை போல ஜிகாதுக்கு செலவழிக்கப்படக்கூடிய பட கூடிய செலவைப் போல அதைவிட 700 மடங்கு அதிகமாக கிடைக்கும்.
 
அறிவிப்பாளர் : புரைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 23000
 
عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لاَ، لَكِنَّ أَفْضَلَ الجِهَادِ حَجٌّ مَبْرُورٌ
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கிறார்கள் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் ஜிஹாது செய்ய வேண்டும் நாங்கள் அல்லாஹ்வுடைய பாதையிலே போர் புரிய வேண்டும் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்,
 
என்று எத்தகைய ஆர்வம் பாருங்கள் இன்று மக்கள் தொழுகைக்கு வருவதற்கே சோம்பேறிகளாக இருக்கிறார்கள் ஆயிஷா ரலியல்லாஹு அந்தப் பெண்மணி அல்லாஹ்வுடைய தூதரே நான் போருக்கு செல்ல வேண்டும் என்னைப் போன்று பல பெண்கள் என்னைப் போன்று பல பெண்கள் இருக்கிறார்கள் அல்லாஹ்வுடைய பாதையிலே போருக்கு செல்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டார்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
உங்களுக்கு போர் இருக்கிறது உங்களுக்கு போர் இருக்கிறது ஆனால் அந்தப் போரிலே யுத்தம் இருக்காது சண்டே இருக்காது எதிரிகளை நேரடியாக சந்தித்து செய்யப்படக்கூடிய சண்டை இருக்காது அந்தப் போர் என்ன தெரியுமா அதுதான் உங்களுக்கு ஹஜ் அதுதான் உங்களுக்கு ஹஜ் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹஜ்ஜை ஜிகாதுக்கு சமமான ஒரு பெரிய வணக்கமாக சொன்னார்கள் மேலும் சொன்னார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஹா , நூல் : புகாரி எண் : 1520
 
حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
 
யார் ஹஜ் செய்வாரோ அல்லாஹ்வுடைய வீட்டை தனது மனைவிடத்தில் ஆபாசமாக பேசவில்லையோ தனது ஹஜ்ஜை மனைவியிடத்தில் சேர்வதைக் கொண்டு முறிக்க வில்லையோ வேறு பாவமான காரியங்களை செய்யவில்லையோ அவர் தனது இல்லத்திற்கு திரும்பும் போது அவருடைய தாய் அவரை பெற்றெடுத்ததினத்தில் எப்படி இருந்தாரோ அப்படி திரும்புவார் யோசித்துப் பாருங்கள் எந்த அளவு அல்லாஹ் சுபஹானஹூதஆலா ஒரு ஹாஜ் உடைய தரத்தை தரஜாவை உயர்த்துகிறான் இத்தகைய மக்களுக்கு பணிவிடை செய்வது அவர்களை நேசிப்பது எவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த காரியம் என்பதை யோசித்துப் பாருங்கள் மேலும் சொன்னார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ
 
ஒரு உம்ராவிற்கு பிறகு அடுத்த உம்ரா செய்யும் போது இடையில் இருக்கக்கூடிய எல்லா பாவங்களுக்கும் அந்த உம்ரா கஃப்பாராவாக ஆகிவிடுகிறது மேலும் சொன்னார்கள். பாவங்கள் செய்யாமல் ஆபாசமாக பாவமான காரியங்களை செய்யாமல் யார் ஹஜ் செய்வாரோ நன்மைகளைக் கொண்டு இபாதத்துகளைக் கொண்டு ஹஜ்ஜை நிரப்பி வைத்திருப்பாரோ ஷாப்பிங்கை கொண்டு அல்ல ஊர் சுற்றுவதை கொண்டு அல்ல தூங்குவதைக் கொண்டு அல்ல ஹஜ் வணக்கம் என்பது இபாதத்தால் நிறைவேற்றப்பட வேண்டும்,
 
தல்பியாவால் அந்த ஹஜ் நிறைவேற்றப்பட வேண்டும் குர்பானியால் அல்லாஹ்வை திக்ரு செய்வதால் இங்கே நாம் கவனிக்க வேண்டும் சகோதரர்களே பல ஹாஜிகள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் தல்பியாவை கூட சரியாக ஓதவும் தெரியாது அதை சொல்வதும் கிடையாது அப்படியே சொன்னாலும் மிகக் குறைவாக ஹதீஸிலே வருகிறது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் வந்து சொன்னார் நபியே உங்களது தோழர்களுக்கு கட்டளை கொடுங்கள்
 
يَا مُحَمَّدُ مُرْ أَصْحَابَكَ فَلْيَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالتَّلْبِيَةِ فَإِنَّهَا مِنْ شِعَارِ الْحَجِّ
 
சத்தமாக கத்தி தல்பியா அவர்கள் சொல்லட்டும் காரணம் என்ன, இது ஹஜ்ஜுடைய ஒரு அடையாளமாகும் சஹாபாக்கள் மதினாவில் இருந்து ஹஜ்ஜுக்கு புறப்பட்டு அவர்கள் துல் உதைஃபா இஹ்ராம் கட்டி தல்பியா சொன்னால் அவர்கள் மக்கா வரும்போது அவர்களுடைய வாயிலிருந்து காற்று தான் வருமே தவிர சத்தம் வராது அந்தளவுக்கு உரக்க அவர்கள் தல்பியா சொன்னதால் அவர்களது தொண்டை எல்லாம் வறண்டு சத்தம் எல்லாம் இல்லாமல் போய்விடும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : சைது இப்னு காலித் அல் சுஹன்னி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அப்னு மாஜா எண் : 2/ 975
 
ஹஜ்ஜிலே சிறந்த ஹஜ் எது தெரியுமா எந்த ஹஜ்ஜிலே தல்பியா அதிகமாக ஓதப்பட்டதோ எந்த ஹஜ்ஜிலே குர்பானி அதிகமாக கொடுக்கப்பட்டதோ இன்று பல ஹாஜிகள் செல்வம் இருந்து கூட குர்பானி கொடுப்பதற்கு சோம்பேறிகளாக இருந்து கொண்டு அவர்கள் நோன்பு வைக்க பார்க்கிறார்கள்,
 
இன்னும் சில ஹாஜிகள் உடைய அறிவு எந்த அளவுக்கு முத்தி விட்டது என்றால் அவர்கள் ஊரிலே குர்பானி கொடுப்போம் என்பதாக நிய்யத் வைக்கிறார்கள் அங்கே குர்பானி கொடுத்தால் இவ்வளவு செலவு ஊரிலே குர்பானி கொடுத்தால் செலவு கம்மியாகிறது என்று ஹஜ்ஜே நிறைவேறாது ஹஜ் உடைய குர்பானி என்பது மக்காவிலே கொடுக்கப்பட வேண்டுமே தவிர ஊரில் அல்ல ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
وَالْحَجُّ الْمَبْرُورُ
 
ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்மைகளால் ஆன ஹஜ் இருக்கிறது அதற்கு கூலி அல்லாஹ்விடத்திலே சொர்க்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை இத்தகைய உயர்ந்த வணக்கம் ஹஜ் உடைய வணக்கம் அதிலே ஒவ்வொரு அமலுக்கும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நன்மைகளை சொல்லி இருக்கிறான் தவாஃப் செய்வதற்கு நன்மை அங்கே ஸஃபா மர்வாவிலே ஸயீ
 
செய்வதற்கு நன்மை ஏன் அங்கே நாம் குடிக்கக்கூடிய ஜம்ஜம் தண்ணீர் இருக்கிறதே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் இந்த பூமியிலேயே சிறந்த தண்ணீர் இந்த ஜம்ஜம் உடைய நீர் தான் அது நோய்க்கு ஷிஃபா அது பசிக்கு உணவு என்ன நோக்கத்தில் குடிக்கப்படுகிறதோ அந்த நோக்கத்திற்காக தான் அந்த தண்ணீர் என்று சொன்னார்கள் அன்பு சகோதரர்களே இன்னும் நிறைய சிறப்புகள்.
 
அந்த ஹஜ் உடைய வணக்கத்திற்கு அல்லாஹ்வுடைய அந்த வீட்டிற்கு பயணம் செய்வதற்கு இருக்கின்றன அவற்றை அறிந்து கொள்வோம் ஆக யார் மீது ஹஜ் கடமையாகி விட்டதோ அதை நிறைவேற்றுவதிலே அவர்கள் தீவிரம் காட்டட்டும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய கட்டளைக்கு ஏற்ப யாருக்கு எந்த அளவுக்கு வசதி கொடுத்திருக்கிறானோ முதலாவது குறைந்தபட்சம்,
 
ஒரு உம்ரா உடைய பயணத்தை ஆவது அவர்கள் செய்யட்டும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா அல்லாஹ்வுக்காக நாம் நிறைவேற்றும் பொழுது கண்டிப்பாக நமக்கு நம்முடைய செல்வத்திலே பரக்கத் செய்வான் ஒரு ஹதீஸிலே வருகிறது ஹஜ் உம்ரா இருக்கிறது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
 
تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ
 
ஹஜ் உம்ராவை  ஒரு முறை செய்துவிட்டு அப்படியே நீங்கள் இருந்து விடாதீர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் காரணம் என்ன இந்த ஹஜ் உம்ராவும் பாவங்களையும் போக்கி விடுகின்றன வறுமையையும் போக்கிவிடுகிறது சொன்னார்கள் எப்படி கொல்லனின் துருத்தி இரும்பினுடைய அசுத்தத்தை தங்கத்தின் அசுத்தத்தை வெள்ளியின் அசுத்தத்தை போக்கிவிடுமோ அது போன்று வறுமையை போக்க கூடியதாகவும் ஹஜ் உம்ராவும் இருக்கிறது ஆகவே  நம்மால் முடிந்த அளவுக்கு இந்த ஹஜ் உடைய வணக்கத்திலும் உம்ரா உடைய  வணக்கத்திலும் ஆர்வ படுவோமாக இறுதியாக ஒரு ஹதீஸை சொல்லி நிறைவு செய்கிறேன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அல்லாஹ் கூறியதாக, 
 
قَالَ اللَّهُ إِنَّ عَبْدًا صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لَا يَفِدُ إِلَيَّ لَمَحْرُومٌ 
 
ஒரு அடியான் அவனுக்கு நான் உடல் ஆரோக்கியத்தை கொடுத்தேன், அவனுடைய வாழ்வாதாரத்திலே அவனுக்கு விசாலமாக வாழ்வாதாரத்தை வழங்கினேன் செல்வத்தை விசாலமாக வழங்கினேன். ஐந்து வருடங்கள் ஆகி விடுகின்றன, அவன் என்னை பார்க்க வருவதில்லை என்று சொன்னால் மஃரூமுன் அவன் என்னுடைய அருளிலிருந்து இழப்புக்குரியவனாவான் யோசித்துப் பாருங்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிபான், எண் : 370
 
இத்தகைய நன்மைகளும் அல்லாஹ்வுடைய அன்பும் அல்லாஹ்வுடைய விசேஷமான அருளும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த ஹஜ் உம்ராவுடைய வணக்கத்தை நாமும் செய்ய வேண்டும் நம்மால் முடிந்த அளவு நம்முடைய உறவுகள் நண்பர்களிலே யாருக்கு வசதி இல்லையோ அவர்களை அனுப்புவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் இரண்டும் ஒரு சிறந்த ஒரு வணக்கம்,
 
நாம் ஹஜ் செய்வது நம்மை சுற்றி உள்ளவர்களை ஹஜ்ஜுக்கு உம்ராவுக்கு அனுப்புவது அல்லாஹ்வுடைய பாதையிலே ஜிஹாதுக்கு அனுப்புவதற்குரிய சமமான கூலி என்பதை மறந்து விடாதீர்கள் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமக்கு ஹஜ் உம்ரா உடைய பாக்கியத்தை தந்தருள்வானாக மீண்டும் மீண்டும் அல்லாஹ்வுடைய வீட்டுக்கு செல்லக்கூடிய நான் பாக்கியத்தை தருவானாக!
 
அங்கே செல்லும்போது ஹஜ் உம்ராவுடைய ஒழுக்கங்களை அந்த புனிதங்களை அந்த சட்டங்களை பேணி நிறைவேற்றி அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அன்பையும் அடைந்து வருவதற்கு அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது குடும்பத்தார்களுக்கும் நமது சந்ததிகளுக்கும் அருள் புரிவானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/