HOME      Khutba      மக்கா முகர்ரமாவின் சிறப்புகள்! | Tamil Bayan - 798   
 

மக்கா முகர்ரமாவின் சிறப்புகள்! | Tamil Bayan - 798

           

மக்கா முகர்ரமாவின் சிறப்புகள்! | Tamil Bayan - 798


மக்கா முகர்ரமாவின் சிறப்புகள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மக்கா முகர்ரமாவின் சிறப்புகள்!
 
வரிசை : 798
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 26- 05- 2023 | 06-11-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கு மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக! அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதருடைய பாசத்திற்குரிய குடும்பத்தார், கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும், ஸலவாத்தும், ஸலாமும், நிலவட்டும் என்று வேண்டியவனாக! உங்களுக்கும், எனக்கும், அல்லாஹ்வின் பயத்தை, தக்வாவை, நினைவூட்டியவனாக! உங்களுக்கும், எனக்கும், அல்லாஹ்விடத்தில் இம்மை, மறுமையின், நன்மைகளை வேண்டியவனாக!
 
அல்லாஹ்வின் மன்னிப்பை, அல்லாஹ்வின் அருளை, வேண்டியவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறான். அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நமக்கு இறையச்சத்தை, தக்வாவை அதிகப்படுத்துவானாக! நம்முடைய யக்கீனை அல்லாஹுத்தஆலா மேலும் உறுதிப்படுத்துவானாக ஆமீன்!
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா புனிதமாக்கிய கண்ணியத்திற்குரிய மாதங்கள் அந்த மாதங்களில் மிக முக்கிய கடமையாகிய ஒரு கடமை ஹஜ் கடமையை அல்லாஹுத்தஆலா தன்னுடைய அடியார்கள் மீது  ஏற்படுத்தியிருக்கிறான்.
 
ஹஜ் என்ற இந்த வணக்கம் அல்லாஹ் சுபஹானஹூதஆலா புனிதமாக்கிய, கண்ணியமான, மக்காவிலே நடைபெறக்கூடிய ஒரு வணக்கம் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும், நம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு இந்த மக்கா நகரத்தின் மீது இயற்கையான ஒரு ஈடுபாட்டை, ஒரு பாசத்தை, ஒரு தேடுதலை, ஒரு ஆர்வத்தை, அல்லாஹுத்தஆலா ஏற்படுத்தியிருக்கிறான். கண்ணியத்திற்குரிய நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துவாக்களிலே மிக முக்கியமான ஒன்று.
 
فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ
 
“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். (அல்குர்ஆன் 14 : 37)
 
சென்ற குத்துபாவிலே பார்த்தோம் யா அல்லாஹ் மக்களின் உள்ளங்களை இந்த மக்கா வாசிகளை நேசிக்கக் கூடியதாக, அவர்கள் மீது விருப்பப்படக்கூடியதாக, நீ ஆக்கு என்று. அந்த விருப்பம் என்பது அல்லாஹ்வுடைய அந்த ஊரை மூஃமின்கள் நேசிக்கின்ற அந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைந்ததாகும், அல்லாஹ்வுடைய காபாவின் மீது உண்டான அந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
 
நம்முடைய இறை நம்பிக்கை ஈமானுடைய அந்தத் தேடலில் ஒன்று. அல்லாஹ்வுடைய ஊராகிய அந்த மக்காவின் சிறப்புகளை தெரிந்து கொள்வது, அது போன்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஊராகிய அந்த மதீனாவின் சிறப்புகளை அறிந்து கொள்வது, எப்படி தொழுகையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ, நோன்பு, ஸக்காத்து, ஹஜ் உடைய சிறப்புகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ, அது போன்று தான் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும், மக்காவிற்கும், மதீனாவிற்கும், என்ன சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்வது நம்முடைய, ஈமானுடைய, இஸ்லாமுடைய, அம்சங்களில் உள்ளதாகும்.
 
எதுவரை அந்த சிறப்புகளை நாம் தெரிந்து கொள்ள மாட்டோமோ, அதன் மேன்மைகளை நாம் உணர்ந்து கொள்ள மாட்டோமோ, அங்கு செல்லும்பொழுது என்ன ஒரு ஈமானிய உணர்வோடு அங்கே வணக்கங்களை நிறைவேற்ற வேண்டுமோ, அந்த நிலை ஏற்படாது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இன்று பலர் ஹஜ்ஜிற்கு செல்கிறார்கள் ஒரு சுற்றுலாவை போன்று செல்கிறார்கள் திரும்ப வரும் பொழுது அவர்கள் என்ன உணர்வை கொண்டு வருகிறார்கள் என்றால்! ஈமானுடைய உணர்வு, இறை அச்சத்தினுடைய உணர்வு, வணக்க வழிபாட்டால் அவர்களுடைய உள்ளம் எந்த அளவு பண்பட்டு இருக்கிறது இந்த உணர்வுகள் எல்லாம் இருக்கிறதா? என்றால் அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ் மன்னிப்பானாக! மிக குறைவானவர்களே! அந்த எண்ணத்தோடு, அந்த உணர்வுகளோடு ,திரும்புவதை பார்க்கிறோம். பலருக்கு அந்த ஹஜ்ஜுடைய வணக்கத்தை முடித்த உடனேயே, இஹ்ராமை அவிழ்த்த உடனேயே, அவர்கள் முற்றிலுமாக தங்களுடைய வணக்க வழிபாட்டை மறந்து துன்யாவிலே மூழ்கி விடுவதை பார்க்கிறோம். உலக ஆசாபாசங்களை  பற்றி பேசுவதை பார்க்கிறோம், இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால்? 
 
அந்த ஊருடைய அருமையை உணர்வுகளை அந்த ஊர்களுடைய சிறப்புகளை தெரியாமல் அங்கே சென்றார்கள். அங்கே எத்தகைய ஈமானிய உணர்வுகளை உள்ளத்திலே ஏந்த வேண்டுமோ அதை ஏந்தாமல் அவர்கள் திரும்பி விடுகிறார்கள். அல்லாஹு சுபஹானஹூதஆலா இந்த அல்குர்ஆனிலே மக்காவை பற்றி, மதினாவை பற்றி பேசும் போதெல்லாம் எப்படி பேசி இருக்கிறான்.
 
தங்களுடைய நபிமார்களின் வாயிலாக சில நேரங்களில், சில நேரம் அல்லாஹ் நேரடியாக மக்காவை எப்படி குறிப்பிடுகிறான்? இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்திலே துவா செய்யும்போது எப்படி சொன்னார்கள்?
 
رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ
 
“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். (அல்குர்ஆன் 14 : 37)
 
இரண்டாவது முறையாக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவிற்கு செய்த துவா என் இறைவா என்னுடைய குடும்பத்தார்களை நான் எந்த விவசாயமும் விளைச்சலும் இல்லாத ஒரு பள்ளத்தாக்கிலே குடி அமர்ந்து விட்டு செல்கிறேன். அந்த பள்ளத்தாக்கு عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ மிகப் புனிதமான உன்னுடைய வீட்டுக்கு அருகிலே இருக்கிறது. عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ அல்லாஹ்வுடைய வீட்டைப் பற்றி அவர்கள் சொல்லும் பொழுது எத்தகைய ஈமானிய உணர்வுகளோடு அல்லாஹ்வுக்கு முன்னால் அல்லாஹ்வுடைய வீட்டை புகழ்ந்து சொல்கிறார்கள். 
 
اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ
 
நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; (அல்குர்ஆன் 8 : 2)
 
அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டால் மூமின்களுடைய உள்ளங்கள் நடுங்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். அதுபோன்று தான் எதை அல்லாஹ் புனிதப்படுத்தி இருக்கிறானோ, எது அல்லாஹ்விற்கு பிடிக்குமோ, எதைக்கொண்டு அல்லாஹுத்தஆலா மகிழ்ச்சி அடைவானோ, எதற்கு அல்லாஹ்விடத்தில் உயர்ந்த கண்ணியம் இருக்குமோ, அதை நாம் உச்சரிக்கும் பொழுதும், அந்தப் பெயர்களை நாம் சொல்லும் பொழுதும், அதே கண்ணியத்தோடு, அதே சிறப்போடு, அதே மதிப்போடு, நாம் சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்த உள்ளத்திலே அந்த ஈமானிய உணர்வு இருக்கிறது.  
 
ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏
 
இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும். (அல்குர்ஆன் 22 : 32)
 
அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை அல்லாஹ்வின் புனித அடையாளங்களை யார் கண்ணியப்படுத்துவாரோ, யார் மகிமைப்படுத்துவாரோ, அதற்குரிய மரியாதையை யார் கொடுப்பாரோ, அது அவருடைய உள்ளத்தில் தக்வா உடைய, அவனுடைய உள்ளத்திலே தக்வா, இறையச்சம் இருக்கிறது. என்பதற்கு உரிய அடையாளத்தில்  உள்ளதாகும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் சொல்கிறார்கள் யா அல்லாஹ் உன்னுடைய பாதுகாக்கப்பட்ட புனிதமான வீட்டிற்கு அருகிலே என்னுடைய குடும்பத்தை விட்டு செல்கிறேன் மேலும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த காபாவை பற்றி மக்காவை பற்றி சொல்லும் பொழுது.
 
وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ
 
இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 2:125)
 
இந்த காபாவை நாம் எப்படி அமைத்தோம் என்றால் مَثَابَةً لِّلنَّاسِ  மக்கள் திரும்பத் திரும்ப வருவதற்கு ஆசை படக்கூடிய இடமாக நாம் ஆக்கி வைத்திருக்கிறோம். எத்தனையோ மக்களை அங்கு பார்க்கிறோம் முடியாதவர்கள், கை கால்களால் ஊனமானவர்கள், செல்வத்தால் வறுமையில் இருப்பவர்கள், ஒரு முறை அவர்கள் ஹஜ்ஜீக்கு வந்ததே அல்லது, உம்ராவுக்கு வந்ததே மிகுந்த சிரமத்தோடு வந்திருப்பார்கள். அவர்களிடத்திலே அவர்கள் திரும்ப செல்லும் பொழுது நீங்கள் இறுதியாக என்ன துவாவை அதிகமாக செய்தீர்கள் என்று அவர்களிடத்திலே கேட்டால்!
 
ஒருவர் ஹஜ் உம்ரா செய்துவிட்டு திரும்பும் பொழுது நீங்கள் என்ன துவாவை கடைசி தவாஃபிலே அல்லது, கடைசியாக காபத்துல்லாவிலே அதிகம் கேட்டீர்கள் என்று அவர்களிடத்திலே நீங்கள் விசாரித்து பார்த்தால் தெரியும், யா அல்லாஹ்! உன்னுடைய வீட்டிற்கு திரும்ப வரக்கூடிய பாக்கியத்தை கொடு எங்களுடைய இந்த பயணத்தை இறுதிப் பயணமாக ஆக்கி விடாதே! நடக்க முடியாமல் இருப்பார், சிரமத்தோடு இருப்பார், வறுமையில் இருப்பார், ஆனாலும், அவருடைய உள்ளத்தில் உள்ள ஆசை அன்பு சகோதரர்களே! இதைத்தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى
 
அல்லாஹுத்தஆலா இந்த காபாவை மக்கள் திரும்பத் திரும்ப வரக்கூடிய திரும்பத் திரும்ப வருவதற்கு ஆசை படக்கூடிய ஒரு இடமாக ஆக்கி இருக்கிறான். மக்களுக்கு பாதுகாப்பு மிக்க ஒரு இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் அதற்குப் பிறகு அல்லாஹ் சொல்கிறான்:
 
இப்ராஹிம் நின்ற அந்த கல்லுக்கு அருகிலே உங்களுடைய தொழும் இடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் எப்போது நீங்கள் தவாப் செய்தாலும் அந்த இடத்திலே இரண்டு ரக்அத் தொழுகையை நீங்கள் தொழுது கொள்ளுங்கள் என்று அல்லாஹு சுபஹானஹூதஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களுடைய உம்மத்திற்கும், வழி காட்டினான்.
 
அது மட்டுமா! அந்த மக்காவை சுத்தமாக வைத்திருப்பது காபத்துல்லாவை சுத்தமாக வைத்திருப்பதை இப்ராஹிம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையாக ஆக்கி கொடுத்தான் அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிஃராஜிற்கு அழைத்துச் செல்லும் பொழுது எவ்வளவு அழகாக அந்த பயணத்தை ரப்புல் ஆலமீன் வர்ணிக்கின்றான் பாருங்கள்.
 
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا
 
(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மது நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். (அல்குர்ஆன் 17 : 1)
 
அல்லாஹுத்தஆலா தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறான் தன்னை அல்லாஹுத்தஆலா போற்றுகிறான் அந்த அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் யார் அவன் தன்னுடைய அடிமையை தன்னுடைய அடியாரை இரவிலே அவன் அழைத்துச் செல்கிறான் எங்கிருந்து الْمَسْجِدِ الْحَـرَامِ  புனிதமான அந்த மஸ்ஜிதில் இருந்து,அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான், அந்த மஸ்ஜிதுல் அக்ஸாவை சுற்றி நாம் பரக்கத் செய்து இருக்கிறோம்.
 
முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை காண்பித்துக் கொடுப்பதற்காக அன்பு சகோதரர்களே அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா இந்த மஸ்ஜிதுல் ஹராமை பற்றி எங்கெல்லாம் குர்ஆனிலே சொல்லுகின்றானோ அதுபோன்று அந்த மஸ்ஜிதுடைய ஹராமுடைய ஊரைப்பற்றி குர்ஆனிலே எங்கெல்லாம் சொல்லி இருக்கின்றானோ அதை மிக புனிதமானதாகவும் கண்ணியமாகவுமே அல்லாஹுத்தஆலா நினைவு கூறுவதை நீங்கள் பார்க்கலாம். அல்லாஹ் சொல்வதை பாருங்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 
 
لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ
 
திட்டவட்டமாக அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் பார்த்த) கனவை யதார்த்தத்தில் உண்மையாக நிகழ்த்திக் கொடுத்தான். அல்லாஹ் நாடினால், - பாதுகாப்பு பெற்றவர்களாக உங்கள் தலை(முடி)களை சிரைத்தவர்களாக; இன்னும், (உங்களில் சிலர்) தலை முடியை குறைத்தவர்களாக - நிச்சயமாக நீங்கள் புனிதமான மஸ்ஜிதில் நுழைவீர்கள். (அப்போது எந்த எதிரியையும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 48 : 27)
 
அல்லாஹ் சொல்கிறான் தன்னுடைய ரசூலுக்கு அல்லாஹ் அவர் பார்த்த கனவை சத்தியமாக நிறைவேற்றி கொடுத்தான் அந்த கனவு என்ன நபியே நிச்சயமாக அல்லாஹ்வின் நாட்டப்படி நீங்கள் அல் மஸ்ஜிதுல் ஹராம் புனிதமான அந்த மஸ்ஜித்திற்கு செல்வீர்கள் اٰمِنِيْنَ எந்த பயமும் இல்லாமல்,அங்கே சென்று உங்களுடைய தலை முடிகளை நீங்கள் சிறைத்துக் கொள்வீர்கள், உங்களில், சிலர் தலை முடிகளை குறைத்துக் கொள்வார்கள்.
 
நீங்கள் யாரையும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது அன்பு சகோதரர்களே அல்லாஹு சுபஹானஹூதஆலா தன்னுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இப்படி கட்டளையிடுகிறான் நபியே  நீங்கள் சொல்லுங்கள்: 
 
اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِىْ حَرَّمَهَا وَلَه كُلُّ شَىْءٍ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَ
 
(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம், இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். இன்னும், அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவையாகும். இன்னும், நான் (அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுகிற) முஸ்லிம்களில் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன். (அல்குர்ஆன் 27 : 91)
 
மக்களே! எனக்கு கட்டளை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஊருடைய இறைவனை வணங்குவதற்காக, அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா காபாவை, மக்காவை, தன் பக்கம் சேர்ப்பதிலே மிகவும் பெருமைப்படுகிறான். வானங்கள் பூமி, சூரியன், சந்திரன், எல்லாம் அவன் படைத்த படைப்புகள் ஆனால், அந்த படைப்பில் சிலவற்றை அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா மேன்மைப்படுத்தி, சிறப்பு படுத்தி, அதை தன்னோடு சேர்த்து சொல்கிறான். அப்படி சொன்ன அந்த ஊர்களில் ஒன்றுதான், 
 
رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ
 
இந்த ஊருடைய இறைவனை நீங்கள் வணங்குங்கள் என்று அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதோடு அந்த ஊருடைய சிறப்பை அல்லாஹ் சொல்கிறான் حَرَّمَهَا இந்த மக்காவை, இந்த ஊரை, அல்லாஹ் புனிதப்படுத்தி இருக்கிறான். ஹுரூமத் கண்ணியப்படுத்தி இருக்கிறான். இதை பாதுகாக்கப்பட்டதாக சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியை விட்டு, கெடுதி செய்பவர்களின் கெடுதியை விட்டு, இதன் மீது போர் தொடுப்பவர்களின் படையெடுப்பை விட்டு, இதை அல்லாஹுத்தஆலா தடுத்து பாதுகாத்து வைத்திருக்கிறான். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுடைய கலீல் இந்த ஊருக்காக துவா செய்தார்கள் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا
 
“என் இறைவா! இவ்வூரை பாதுகாப்புமிக்கதாக ஆக்கு! மேலும், என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டும் தூரமாக்கி வை!” என்று இப்ராஹீம் பிரார்த்தனை செய்ததை நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 14 : 35)
 
وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَ‏
 
என்னையும் என்னுடைய சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதை விட்டு தூரமாக்கி வை மேலும் அல்லாஹுத்தஆலா இப்ராஹிம் நபிக்கு தான் செய்த அருளை தான் செய்த அருள் குடையை நினைவு கூர்ந்து அல்லாஹ் சொல்கிறான்.
 
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِىْ شَيْـٴًـــا وَّطَهِّرْ بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْقَآٮِٕمِيْنَ وَ الرُّكَّعِ السُّجُوْدِ‏
 
இன்னும், (நபியே!) இப்ராஹீமுக்கு (கஅபாவாகிய எனது) ஆலயத்தின் இடத்தை நாம் (காண்பித்து கொடுத்து அதில் ஆலயத்தை புதிதாக கட்டி எழுப்ப) அமைத்து கொடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் தொழுகையில் நிற்பவர்களுக்காகவும், குனிபவர்களுக்காகவும், சிரம் பணிபவர்களுக்காகவும் (சிலைகளை விட்டும்) சுத்தமாக வைத்திருப்பீராக! (அல்குர்ஆன் 22 : 26)
 
அல்லாஹுத்தஆலா நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பின்பு மறைக்கப்பட்டிருந்த அந்த காபாவின் இடத்தை மக்காவை அல்லாஹுத்தஆலா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு காட்டி கொடுக்கின்றான் அவர்கள் மூலமாக அந்த மக்கா நகரம் மீண்டும் எழுப்பப்படுகிறது அல்லாஹ்வின் வீடு மீண்டும் உயர்த்தப்படுகிறது.
 
وَاِذْ يَرْفَعُ اِبْرٰهمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُ
 
இன்னும், இப்ராஹீமும் இஸ்மாயீலும் இறை இல்லத்தின் அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூர்வாயாக! (அவ்விருவரும் பிரார்த்தனை செய்தார்கள்:) “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்.”(அல்குர்ஆன் 2 : 127)
 
இப்ராஹிம் மக்காவின் அந்த காபாவை உயர்த்திய நேரத்தை அவரோடு இஸ்மாயிலும் அந்த காபாவை உயர்த்தி காட்டி அந்த நேரத்தை நீங்கள் நினைவு கூர்ந்து பாருங்கள் என்று அல்லாஹுத்தஆலா அந்த நிஃமத்தை நாம் நினைவு கூற வேண்டும் நினைக்க வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகிறான் அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான் நபியே நீங்கள் நினைத்துப் பாருங்கள்
 
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَنْ لَا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
 
இன்னும், (நபியே!) இப்ராஹீமுக்கு (கஅபாவாகிய எனது) ஆலயத்தின் இடத்தை நாம் (காண்பித்து கொடுத்து அதில் ஆலயத்தை புதிதாக கட்டி எழுப்ப) அமைத்து கொடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் தொழுகையில் நிற்பவர்களுக்காகவும், குனிபவர்களுக்காகவும், சிரம் பணிபவர்களுக்காகவும் (சிலைகளை விட்டும்) சுத்தமாக வைத்திருப்பீராக!.(அல்குர்ஆன் 22 : 26)
 
இப்ராஹிமுக்கு நாம் வசதி ஏற்படுத்தி கொடுத்தோம், காட்டி கொடுத்தோம், அமைத்துக் கொடுத்தோம், காபத்துல்லா உடைய அந்த இடத்தை அங்கே எந்த விதமான வெளிப்படையான அடையாளங்கள் இல்லாமல் இருந்தது. அல்லாஹுத்தஆலா கட்டளையிட்ட போது யா அல்லாஹ்! நான் எங்கே செல்வேன், எப்படி அதை அடையாளம் காணுவேன், எப்படி நான் உனது வீட்டை தெரிந்து கொள்வேன் என்று சொன்னபோது.
 
அல்லாஹுத்தஆலா இப்ராஹீமே! நீங்கள் புறப்படுங்கள் நாம் உங்களுக்கு அந்த வீட்டை காட்டிக் கொடுப்போம், காண்பித்துக் கொடுப்போம், என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: இப்ராஹிமுக்கு நாம் வசதி செய்து கொடுத்தோம் அந்த இடத்தை கண்டு கொள்வதற்கு, காபத்துல்லாவின் அந்த இடத்தை அவருக்கு  நாம் அங்கே தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: பாருங்கள் அந்த ஊருடைய சிறப்பை, எனக்கு எதையும் நீங்கள் இணை வைத்து விடாதீர்கள், என்னுடைய வீட்டை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் தவாஃப் செய்பவர்களுக்கு அங்கே நின்று தொழக்கூடியவர்களுக்கு ருக்கு, சுஜூது செய்து தொழக்கூடியவர்களுக்கு.
 
இப்படி அல்லாஹு சுபஹானஹூதஆலா கண்ணியத்திற்குரிய மக்காவுடைய மஸ்ஜிதுல் ஹராமுடைய சிறப்பை மிக உயர்வாக தன்னுடைய கண்ணியத்திற்குரிய குர்ஆனிலே தொடர்ந்து கூறுவதை நாம் பார்க்கிறோம்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களே பார்த்தால் எத்தனை ஹதீஸ்களிலே காபாவை பற்றி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயர்வாக சொல்லியிருக்கிறார்கள். அதாவது ஸஹீஹுல் புகாரி உடைய ஒரு அறிவிப்பிலே வருகிறது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலே அல்லாஹ்வை புகழ்ந்ததற்குப் பிறகு ஃபத்ஹே மக்கா உடைய நாளிலே சொன்னார்கள்: 
 
ثُمَّ قَالَ إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلاَ يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلاَ يَعْضِدَ بِهَا شَجَرَةً, وقد عادت حرمتها اليوم كحرمتها بالأمس
 
அல்லாஹுத்தஆலா இந்த மக்காவை புனிதப்படுத்தி இருக்கிறான்: மக்காவுடைய புனிதம் மக்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல, மக்கள் இதை ஏற்படுத்தவில்லை ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னர் தான் உருவாக்கக்கூடிய நகரத்தை அவர் கண்ணியப்படுத்துவது போன்று, சிறப்பிப்பது போன்றோ, பாதுகாப்பது போன்றோ, அப்படி ஏற்படுத்தப்பட்டது அல்ல. ரப்புல் ஆலமீன் இதை புனிதப்படுத்தி, பாதுகாத்து இருக்கிறான்.
 
அல்லாஹ்வையும், மறுமை நாளையும், நம்பிக்கை கொள்ளக்கூடிய முஃமினுக்கு அனுமதியில்லை அந்த மக்காவிலே ரத்தங்களை சிந்துவது. ஒரு மரத்தை வெட்டுவது கூட அவருக்கு அங்கே அனுமதிக்கப்பட்டது அல்ல. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் அந்த மக்கா வெற்றுடைய தினத்திலே சிறிது நேரம் அங்கே போர் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிவிட்டு.
 
பிறகு இதனுடைய இந்த புனிதம் மீண்டு விட்டது நேற்று எப்படி அதற்கு புனிதம் இருந்ததோ ஆகவே யாரும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போர் தொடுத்த அந்தப் போரை காரணம் காட்டி மக்காவின் புனிதத்தை சேதப்படுத்தி விடக்கூடாது, களங்கப்படுத்தி விடக்கூடாது, என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்தார்கள்,
 
அறிவிப்பாளர் : அம்ரு இப்னு ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 104,1349
 
ஸஹீஹுல் முஸ்லிம் ஸஹீஹுல் புகாரியிலே இன்னொரு அறிவிப்பு வருகிறது அல்லாஹுத்தஆலா இந்த மக்காவை எப்படி கண்ணியப்படுத்தி இருக்கிறான் என்று அபூதர் ரலியல்லாஹு அன்ஹு கேட்டார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே
 
أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلَ؟ قَالَ: «المَسْجِدُ الحَرَامُ» قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ المَسْجِدُ الأَقْصَى قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الفَضْلَ فِيهِ
 
பூமியிலே முதலாவதாக ஏற்படுத்தப்பட்ட மஸ்ஜித் தொழும் இடம் எது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், பிறகு கேட்டார்கள் அபூதர் அல்லாஹ்வுடைய தூதரே பிறகு எந்த மஸ்ஜித் சொன்னார்கள். பிறகு கேட்டார்கள் இந்த இரண்டுக்கும் இடையிலே எவ்வளவு காலம் இருந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள்
 
இந்த இரண்டுக்கும் இடையிலே 40 ஆண்டுகள் இடைவெளி இருந்தது என்று இந்த பூமியிலே முதலாவதாக அல்லாஹ்வை வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இறை இல்லம் உள்ள ஊர் தான் அந்த மக்காவாகும்.
 
قَالَ: صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ 
 
மேலும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், மஸ்ஜிதுல் ஹராமிலே நீங்கள் ஒரு தொழுகை தொழுவது. வேறு மஸ்ஜிதிலே நீங்கள் தொழக்கூடிய ஒரு லட்சம் தொழுகையை விட மிகச் சிறந்தது என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த மக்காவை நேசித்தார்கள் அதன் மீது மிகுந்த பாசத்தை வைத்திருந்தார்கள்.
 
எப்படி ஒருவர் தன்னுடைய தாயை நேசிப்பாரோ, தன்னுடைய தந்தையை நேசிப்பாரோ, தன்னுடைய பிள்ளையை நேசிப்பாரோ, அவர்களோடு இருப்பதை விரும்புவாரோ, அவர்களை விட்டு பிரிவதை மிகச் சிரமமாக உணர்வாரோ, அப்படித்தான் சஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நபிமார்கள் மக்காவில் இருப்பதை, மக்காவில் வசிப்பதை, விரும்பினார்கள். அதை விட்டு பிரிவதை மிகச் சிரமமாக வலியோடு அவர்கள் உணர்ந்தார்கள்.
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1406
 
: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَّةَ: «مَا أَطْيَبَكِ مِنْ بَلَدٍ، وَأَحَبَّكِ إِلَيَّ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய ஹதீஸை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிப்பதை இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள். மக்கா நீ எவ்வளவு ஒரு பரிசுத்தமான ஒரு ஊர் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மக்காவை முன்னோக்கி பேசினார்கள்.
 
உணர்ந்தார்கள் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் ஹிஜ்ரத்துடைய நேரத்திலே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன வார்த்தை மக்காவானது உலகத்தில் உள்ள ஊர்களிலேயே எவ்வளவு ஒரு பரிசுத்தமான ஊர் நீ, எனக்கு நீ எவ்வளவு விருப்பம் உள்ள ஊராக இருக்கிறாய். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3926
 
وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகப் பிடித்தமான ஊர் மக்கா சொன்னார்கள், என்னுடைய இந்த சமூகத்தார் உன்னில் இருந்து என்னை வெளியேற்றி இருக்கவில்லை என்றால், நான் உன்னல்லாத வேறொரு ஊரிலே சென்று குடியேறி இருக்க மாட்டேன் மேலும் சொன்னார்கள் ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
 
மக்கா அல்லாஹ்வுடைய பூமியிலேயே நீ மிக சிறந்த பூமி அல்லாஹ்வுடைய பூமியிலேயே அல்லாஹ்விற்கு நீ மிகவும் விருப்பமான பூமி, நான் உன்னிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை என்றால் உன்னிலிருந்து நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கவில்லை என்றால் உன்னை விட்டு ஒருபோதும் நான் வெளியேறி இருக்க மாட்டேன்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னி அதி இப்னி ஹம்ரா  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திரிமிதி எண் : 3925
 
அன்பு சகோதரர்களே! ஒரு முறை சில அரபு பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்த போது அந்த அரபு பிழையிடத்திலே நீங்கள் இந்தியாவிலேயே தங்கி விடுங்கள் என்றேன் உங்களுக்கு அங்கே வசதி செய்து கொடுக்கிறோம், அது இருக்கிறது, இது இருக்கிறது என்று பெரிய ஒரு லிஸ்ட் போட்டு அந்த அரபு பையனுக்கு சொன்ன பொழுது அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தான் குறிப்பாக அவன் மக்காவிலே இருக்கக்கூடிய பையன், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கடைசியாக அவன் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?
 
உங்க ஊர்ல மக்கா இருக்கா என்று? உங்க ஊரிலே காபா இருக்கிறதா என்று? நீங்கள் என்ன செய்து கொடுத்தாலும் சரி இது கேட்டது ஏறக்குறைய 30 வருடத்திற்கு முன்னால் உள்ள சம்பவம் இந்த மக்காவை விட, காபாவை விட, வேறு ஒன்றை என்னால் உலகத்தில் தேர்ந்தெடுக்கவே முடியாது.
 
சாதாரணமாக அடிப்படை ஒரு சின்ன அறிவுள்ள ஒரு சிறுவன் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா இயற்கையாக அந்த உள்ளத்திலே கொடுத்திருக்கக் கூடிய அந்த காபாவின் மீது உண்டான அன்பை பாருங்கள், இதை நாம் நம்முடைய குடும்பத்தில் கூட பார்க்கலாம், நம்முடைய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய ஈமானை, ரசூலுல்லாவுடைய ஈமானை, இஸ்லாமிய வரலாற்றை, நீங்கள் சொல்லி வளர்க்கும் பொழுது அந்த பிள்ளைகளின் உள்ளத்திலே மக்காவிற்கு, மதீனாவிற்கு, செல்ல வேண்டுமென்று ஆசை, அந்த சிறு குழந்தைகளுடைய கல்பிலே அல்லாஹ் போடக்கூடிய அந்த ஈமானிய உணர்விலிருந்து வெளிப்படக்கூடிய அந்த ஆசையை நீங்கள் பார்க்கலாம்.
 
 உலகத்தில் எந்த இடத்தில் மீதும் அந்த பிள்ளைகளுக்கு அத்தகைய நேசம் ஏற்படாது மக்காவை பற்றி பேசும்போதே மதினாவை பற்றி பேசும்போது ‍ ஏற்படக்கூடிய ஆசையைப் போல இது ஈமானுடைய ஃபித்ரா மேலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த மக்காவிலே காபத்துல்லாவை சுற்றியும் அங்கே செய்யப்படக்கூடிய வணக்க வழிபாடுகளை சுற்றியும் எத்தனை சிறப்புகளை சொல்லி இருக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
 
யார் இந்த வீட்டிற்கு வருவாரோ அல்லாஹ்வுடைய வீட்டிற்கு அங்கே அவர் தன்னுடைய உம்ராவை ஹஜ்ஜை உடலுறவைக் கொண்டு வீணாக்கிக் கொள்ளவில்லையோ, பாவம் செய்யவில்லையோ இஹ்ராமுடைய நிலையில், அவருடைய தாய் அவரை பெற்றெடுத்ததை போன்று அவர் மீண்டும் வருவார் மேலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அந்த மக்காவிலே காபாவிலே ருக்னுல் யமானியை தடவுவது ஹஜருல் அஸ்வதை தடுவுவது பாவங்களை எல்லாம் அப்படியே போக்கிவிடுகிறது என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1521,1819
 
لَيَأْتِيَنَّ هَذَا الْحَجَرُ، يَوْمَ الْقِيَامَةِ وَلَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا، وَلِسَانٌ يَنْطِقُ بِهِ، يَشْهَدُ عَلَى مَنْ يَسْتَلِمُهُ، بِحَقٍّ
 
இந்த ஹஜருல் அஸ்வத் மறுமை நாளிலே வரும் அதற்கு இரண்டு கண்கள் இருக்கும் அந்த கண்களை கொண்டு அது பார்க்கும் அது பேசும் அதற்கு நாவு இருக்கும் யார் ஈமானோடு அந்த ஹஜருல் அஸ்வத்தை முத்தமிட்டார்களோ தடவினார்களோ அவர்களுக்காக அது சாட்சி சொல்லும் அங்கே அல்லாஹுத்தஆலா அற்புதமான ஒரு தண்ணீரை கொடுத்திருக்கிறான்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 2944
 
قال رسول الله صلى الله عليه وسلم زمزمُ طعامُ طُعمٍ وشفاءُ سُقْمٍ
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அந்த ஜம் ஜம் உடைய நீர் இருக்கிறதே பசிக்கு உணவாகவும் நோய்க்கு மருந்தாகவும் இருக்கிறது அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அந்த காபத்துல்லாவிற்கு செல்வதற்கு கட்டளையிட்டான் அங்கே தொழுவதற்கு கட்டளையிட்டான் ஹஜ் உம்ரா செய்வதற்கு அல்லாஹ் கட்டளையிட்டான் முஃமின்களுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் கட்டளையிட்டு இருக்கிறான்.
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹ் ஜாமிஃ எண் : 3572
 
தன்னுடைய வீட்டை அமைப்பதற்கான ஊராக அல்லாஹ் சுபஹானஹூதஆலா அந்த மக்காவை தேர்ந்தெடுத்து இருக்கிறான் என்றால் கண்ணியத்திற்குரிய அவர்களே நாம் எந்த அளவு அந்த ஊரை மதிக்க வேண்டும் அங்கே செல்ல வேண்டும் என்று ஆர்வப்பட வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அந்த உயர்ந்த பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் வாழ்நாள் எல்லாம் திரும்பத் திரும்ப தருவானாக அல்லாஹு சுபஹானஹூதஆலா அங்கே செல்லக்கூடிய எல்லா பயணிகளுக்கும் அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் அல்லாஹுத்தஆலா நசீப்வானாக அந்த ஊரை புனிதமான ஊராக கண்ணியப்படுத்தப்பட்ட ஊராக பாதுகாக்கப்பட்ட ஊராக அல்லாஹுத்தஆலா நிரந்தரமாக ஆக்கி அருள்வானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/