மதீனா முனவ்வரா சிறப்புகள் | Tamil Bayan - 800
ஜுமுஆ குத்பா தலைப்பு : மதீனா முனவ்வரா சிறப்புகள்
வரிசை : 800
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 02- 06 -2023 | 13-11-1444
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே உங்களுக்கு முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தும் அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் மீதும் அந்த தூதருடைய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக தக்வாவை உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமக்கு ஈமானையும் ஈமானுடைய குணங்களையும் பண்புகளையும் தந்தருள்வானாக குப்ரிலிருந்தும் ஷிர்க்கில் இருந்தும் நயவஞ்சகத்தில் இருந்தும் குஃப்ரு ஷிர்க்கு நயவஞ்சகத்தின் உடைய எல்லா வகையான குணங்களிலிருந்தும் அல்லாஹுத்தஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள்வானாக ஆமீன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! முஃமினுக்கும், காஃபிருக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன கண்டிப்பாக” அத்தகைய வித்தியாசங்கள் இருந்தே ஆக வேண்டும். வெறும் பெயரைக் கொண்டோ அல்லது, சில வாதங்களைக் கொண்டோ ஈமான் என்பது கிடைத்து விடாது.
அந்த அடிப்படையில் தான் அல்குர்ஆனிலே நீங்கள் எங்கு பார்த்தாலும் அல்லாஹுத்தஆலா உயர்ந்த பண்புகளை, சிறந்த நற்குணங்களை, பல நல்ல அமல்களை கூறி அந்த அமல்களை அந்த குணங்களை, அந்தப் பண்புகளை, உடையவர்களை முஃமீன்கள், உண்மையான முஃமின்கள், என்னுடைய விருப்பத்திற்குரியவர்கள், சொர்க்கத்திற்குரியவர்கள் என்று, அல்லாஹுத்தஆலா போற்றுவதை, புகழ்வதை, பார்க்கிறோம்.
لَا يُؤْمِنُ أحَدُكُمْ، حتَّى أكُونَ أحَبَّ إلَيْهِ مِن والِدِهِ ووَلَدِهِ والنَّاسِ أجْمَعِينَ
ஈமானுடைய உயர்ந்த அந்த தன்மைகளிலேயே ஒன்றுதான் ஒரு அடியான் தன்னுடைய உள்ளத்தை அல்லாஹ்வுக்காகவும், அல்லாஹ்வுடைய தூதருக்காகவும், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பரிசுத்தப்படுத்தி விடுவது, இந்த கல்பை அல்லாஹ்வுடைய அன்பைக் கொண்டு நிரப்பமாக்குவது, இந்த கல்பை நிரப்புவது அல்லாஹ்வுடைய அன்பைக் கொண்டு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பைக் கொண்டு யாருடைய உள்ளம் அல்லாஹ்வுடைய அன்பை கொண்டு நிறைந்து விடுமோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பை கொண்டு நிறைந்து விடுமோ கண்டிப்பாக அவர்கள் ஈமானுடைய ஹலாவத் அந்த இனிப்பை சுவையை உணர்வார்கள் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15
இந்த உலகத்தில் அல்லாஹ்வுடைய அன்பை விட, அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பை விட, வேறு யாருடைய அன்பும் அந்த உள்ளத்தில் மிகைத்து விடக்கூடாது? இத்தகைய ஒரு நிலை அடியானுக்கு கிடைக்கும் பொழுது அடுத்து அவனுடைய குணங்கள் மாறிவிடும், அவனுடைய வாழ்க்கை, அவனுடைய செயல்பாடுகள், அவனுடைய தேடல், அவனுடைய விருப்பம், அவனுடைய வெறுப்பு, எல்லாம் மாறிவிடும்.
எப்படி ஆகி விடுவான் என்னுடைய ரப்புக்கு எது பிடிக்கும்? அதுதான் எனக்கு பிடிக்கும். என்னுடைய நபிக்கு எது பிடிக்கும்? அதுதான் எனக்கு பிடிக்கும் என்று, அந்த அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய நபிக்கும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எது பிடிக்குமோ? அதை தேடக்கூடியவனாக, அதை நேசிக்கக் கூடியவனாக, அதிலே உள்ளத்தை பறிகொடுத்தவனாக, ஆகிவிடுவான்.
இது எந்த அளவு அவனுக்கு மிகைக்கும் என்றால் தன்னுடைய இயற்கையான அன்பை விட இயற்கையாக உள்ளத்தில் என்னென்ன அன்புகள் இருக்குமோ, என்னென்ன தேடல்கள் இருக்குமோ, யார் மீது எல்லாம் பாசம் இருக்குமோ, நேசம் இருக்குமோ, அவை அனைத்தையும் இந்த ஈமானுடைய அன்பு மிகைத்து விடும், இதைத்தான் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
لا يُؤْمِنُ أحدُكم حتى أَكُونَ أَحَبَّ إليه مِن وَلَدِه، ووالِدِه، والناس أجمعين
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15
அன்பு சகோதரர்களே! இங்கே நாம் ஏன் நினைவு கூறுகிறோம் என்றால் அல்லாஹ்வுடைய வீடு இருக்கக்கூடிய மக்கா ஒரு பக்கம் அடுத்து ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹிஜிரத்திற்காக தேர்ந்தெடுத்த அல் மதீனத்துள் முனவ்வரா ஒரு பக்கம் நான் முஃமினாக இருப்பது என்னுடைய அடையாளங்களில் ஒன்று,
நம்முடைய உள்ளத்தில் ஈமான் நிறைவு பெறுவதுடைய அடையாளத்திலே ஒன்று, இந்த இரு நகரங்களின் மீது நமக்கு அன்பு அதிகமாகிக் கொண்டே இருப்பது, இந்த இரு நகரங்களின் மீது நமக்கு தேடுதல் அதிகமாகும், அங்கே செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு வர வேண்டும், அங்கே தங்க வேண்டும் என்ற ஆசை வரவேண்டும்,
அந்த இரு நகரங்களின் மீது நமது உள்ளத்திலே கண்ணியம், மதிப்பு கூடிக் கொண்டே போக வேண்டும், அந்த இரு நகரங்கள் மீது நமக்கு மதிப்பும், மரியாதையும், மகத்துவமும், கூடிக் கொண்டே போக வேண்டும், ரெஸ்பெக்ட் அங்கே யார் என்ன செய்கிறார்களோ, அந்த கண்ணியத்திற்கு கெடுதியாக, கண்ணியத்தை குறைக்கும் விதமாக, அவர்கள் நடந்து கொண்டால் அதற்கு அல்லாஹ் கூலி கொடுப்பான்.
وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (-அவனது மார்க்கத்திலிருந்தும்) அல்மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளிவாசலிலிருந்தும் (முஃமின்களை) தடுக்கிறார்களோ (அவர்களுக்குக் கடுமையான தண்டனையை சுவைக்க வைப்போம். (அல்குர்ஆன் 22 : 25)
அங்கே யாராவது வரம்பு மீறினால், அநியாயம் செய்தால், பாவங்கள் செய்தால் கடுமையான வலிமிக்க தண்டனையை நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்போம் ஆனால், அன்பிற்குரிய அப்படி தவறு செய்பவர்களுடைய அந்த தவறை பார்த்து, அந்த குற்றத்தை பார்த்து, அந்த நகர மக்களோ, அந்த நகரத்துடைய நாட்டு மக்களோ, அங்கே செய்யக்கூடிய தவறுகளையோ, தப்புகளையோ, அநியாயங்களையோ, மதிப்பு குறைவாக நடந்து கொள்வதையோ, பார்த்து ஒரு முஃமினுடைய உள்ளத்தில் அந்த இரு நகரங்களின் மீது மதிப்பு குறைந்து விடக்கூடாது.
மனிதர்கள் குற்றம் செய்யக் கூடியவர்கள் தவறு செய்யக் கூடியவர்கள் இன்று தவறு செய்கிறார்கள் நாளை அவர்கள் மீது அல்லாஹ் தவ்பா செய்து அவர்கள் திருந்தலாம்! அவர்கள் இன்று ஒழுக்கம் இல்லாதவர்களாக மக்காவின் கண்ணியத்தையோ, மதினாவின் கண்ணியத்தையோ, பாழ்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை மன்னிக்க போதுமானவன், அல்லாஹ் அவர்களை நேர்வழிக்கு கொண்டு வர போதுமானவன் ஆனால், நம்முடைய உள்ளத்தில் ஒருபோதும் மக்கா முகர்ரம்மாவின் மீது வெறுப்போ, மரியாதை, குறைவோ, மதீனா முனவ்வராவின் மீது வந்து விடக்கூடாது அது நம்முடைய ஈமானை பாதித்துவிடும்.
அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய அடியாருக்கும் இடையே உள்ள நம்முடைய அந்தத் தொடர்பை அது பாதித்துவிடும் ஒரு மனிதன் நபியை வெறுத்தால் அவன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பது பொய்யாகிவிடும். ஒரு மனிதன் சஹாபாக்களை வெறுத்தால், ஏசினால், விமர்சித்தால், அவன் நபியை நேசிக்கிறான் என்பது பொய்யாகிவிடும். அது போன்று தான் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எது பிடிக்குமோ, எந்த நிபந்தனையும் இல்லாமல் அது நமக்கு பிடிக்க வேண்டும்.
இடையிலே வரக்கூடிய காரணங்கள் வந்து போகும் பாவத்தை வெறுக்க வேண்டுமே தவிர, குற்றத்தை வெறுக்க வேண்டுமே தவிர, அந்த புனித நகரத்தை நாம் வெறுத்து விடக்கூடாது காரணம் என்ன இந்த பூமியை அல்லாஹுத்தஆலா படைக்கும் பொழுதே மக்காவை புனிதம் ஆக்கி விட்டான்.
இந்த பூமியை அல்லாஹுத்தஆலா படைக்கும் போதே, உருவாக்கும் போதே, அதனுடைய கண்ணியத்தை அல்லாஹ் எழுதி விட்டான். அது போன்று தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஸ்ஜித் இருக்கக்கூடிய அந்த அல்மதினத்துள் முனவ்வரா அல்லாஹுத்தஆலா இந்த இஸ்லாம் பரவுவதற்கு கோட்டையாக இஸ்லாத்திற்காக தன்னுடைய உயிரைக் கொடுக்கக்கூடிய, தன்னுடைய செல்வத்தை கொடுக்கக்கூடிய, தன்னுடைய குடும்பத்தை எல்லாம் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும், முழுமையாக அர்ப்பணம் செய்த அந்த சிறந்த அன்சாரிகள் உடைய ஊராக அந்த அல் மதீனா முனவ்வராவை தேர்ந்தெடுத்தான். கண்ணியப்படுத்தினான்.
ஆகவே அந்த ஊர் அல்லாவிற்கு பிரியமான ஊர் எப்படி மக்கா அல்லாவிற்கு பிரியமானதோ நபியின் உடைய ஊராகிய மதினாவும் அல்லாஹ்விற்கு பிரியமானது மக்காவிலே அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பிறக்க வைத்தான், அங்கே அவர்களுக்கு அல்லாஹ் வஹியை கொடுத்தான், வஹியை ஆரம்பித்தான், நுபுவத்தின் ஏகத்துவ பிரகனத்தை அல்லாஹுத்தஆலா அங்கிருந்து செய்ய வைத்தான், அந்த ரப்புல் ஆலமீன் அந்த வஹியை மதீனா முனவ்வராவிலே அவர்களுக்கு நிறைவு செய்தான், முழுமைப்படுத்தினான்.
இஸ்லாமிய மார்க்கத்துடைய அந்தப் பிரகடனம் மக்காவிலே ஆரம்பமானது மதினாவில் நிறைவு செய்யப்பட்டது. சட்ட திட்டங்கள், இஸ்லாமிய வாழ்வியல் முறை, இஸ்லாமிய அரசாங்கம், இஸ்லாம் சொல்லக்கூடிய கொடுக்கல், வாங்கல், வியாபாரம், வர்த்தகம் எல்லாம் மதினா முனவ்வரா உடைய வாழ்க்கையிலே ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹியிலே இறக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது .
அந்த மதினாவிற்கு உரிய சிறப்புகளில், அந்த மதீனாவை அல்லாஹுத்தஆலா நபியினுடைய தாருல் ஹிஜ்ராவாக தேர்ந்தெடுத்தானே அது மிகப்பெரிய சிறப்பு ஹிஜ்ரத் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை ஹிஜ்ரத் செய்யாதவர்கள் மூமின்கள் அல்ல அவர்கள் இறந்தால் நரகவாசிகள் என்று குர்ஆன் சொல்கிறது யார் ஹிஜ்ரத் செய்யாமல் பூமியிலே இருந்தார்களோ அதாவது மக்காவிலே இருந்தார்களோ
اِنَّ الَّذِيْنَ تَوَفّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِىْ الْاَرْضِ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا فَاُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ وَسَآءَتْ مَصِيْرًا
நிச்சயமாக எவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, அவர்களிடம் -(“மார்க்கக் கட்டளையை நிறைவேற்றி ஹிஜ்ரத் செய்யாமல்) - நீங்கள் எவ்வாறு (தங்கி) இருந்தீர்கள்?” என்று வானவர்கள் கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்”
என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (வசித்த நெருக்கடியான இடத்திலிருந்து) அதில் (பூமியில் வேறு பகுதிக்கு) ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இத்தகையவர்கள் அவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது (மிகக்) கெட்ட மீளுமிடமாகும்! (அல்குர்ஆன் 4 : 97)
மிகவும் வயது முதிர்ந்த பலவீனமான வயோதிகர்கள், பெண்கள், சிறுவர்கள், கை கால் ஊனமுற்றவர்கள் இவர்களை தவிர மற்ற எல்லோரும் கண்டிப்பாக மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றே ஆக வேண்டும் அவர்கள் தான் முஃமின்கள் என்று அல்லாஹ் விதித்து விட்டான். யார் தங்களை பலவீனமானவர்களாக கருதிக் கொண்டு அவர்கள் உண்மையில் பலவீனமானவர்களாக இருக்கவில்லை பயம் அதிகரித்த காரணத்தால் அப்படி செய்தார்களோ அவர்களை கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
நினைத்துப் பார்க்க வேண்டும் அல்லாஹுத்தஆலா ஈமானுடைய ஒரு அடையாளமாக மதினாவை அப்போதே ஆக்கினான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து சொன்னார்கள்:
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان ليَأْرِزُ أي يَلجَأُ إلى المدينة كما تَأْرِزُ الحيَّةُ إلى جُحرها
ஈமான் மதினாவின் பக்கம் ஒதுங்கிவிடும் எப்படி ஒரு பாம்பு தன்னுடைய பொந்தை நோக்கி ஓடுகிறதோ ஒதுங்குவதற்கு அதுபோன்று அது போன்று ஈமான் மதினாவிற்கு உரியது மதினாவை நோக்கி வந்து விடும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே அதை புரிய வேண்டும்.
அல்லாஹ் நபியினுடைய ஹிஜ்ரத்திற்காக அந்த ஊரை தேர்ந்தெடுத்தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு நற்செய்தி சொன்னார்கள் இந்த பூமியிலே எந்த இடத்திற்கு செல்வதற்கு என்று தேடி ஹபஷாவிற்கு ஒரு கூட்டத்தை அனுப்பினார்கள், கடல் கடந்து செல்ல வேண்டிய தூரம் அது, அடுத்து எங்கே செல்வது, எத்தனை மக்களை அங்கு அனுப்புவது, அதுவோ வேறு ஒரு தேசம், வேறு மொழி, பேசக் கூடியவர்கள் இனத்தால் வேறு இனத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அரபுகள், அவர்களோ அரபு அல்லாதவர்கள், எத்தகைய மிகப்பெரிய சவால்களை சந்தித்து இருப்பார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தேடல் அல்லாஹ் இந்த மூமின்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை கொடுக்க வேண்டுமே என்ற துவா ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வுடைய தூதர் இதைத்தான் கேட்பார்கள்.
யாராவது இருக்கிறார்களா! என்னை அழைத்து செல்வதற்கு, நான் என்னுடைய ரப்புடைய இந்த தாவாவை அவர்களுக்கு எடுத்து வைக்க வேண்டுமே! அவர்கள் என்னை பாதுகாக்க வேண்டுமே! அத்தகைய ஒரு மக்கள் தயாராக மாட்டார்களா! என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
அரபுகளுக்கு மத்தியிலே இந்த அழைப்பை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் அல்லாஹுத்தஆலா தேர்ந்தெடுத்தான் மதினா வாசிகளை அல்லாஹுத்தஆலா அந்த மதீனாவாசிகளின் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறான் தெரியுமா? அல்குர்ஆனிலே அல்லாஹ் சுபஹானஹூதஆலா கண்ணியத்திற்குரிய நபி தோழர்களை அவன் புகழும் பொழுது ஒரு கூட்டத்தை அல் முஹாஜிர் என்று புகழ்கிறான் அல் முஹாஜிருன் அல் முஹாஜிரின் என்று புகழ்கிறான்,
அல்லாஹ்வால் ஒரு சிறந்த பட்டப் பெயரோடு, சிறந்த ஒரு சிறப்பு பெயரோடு, ஒரு கூட்டம் அழைக்கப்படுகிறது என்றால், அதைவிட வேறு என்ன சிறப்பு இருக்க முடியும். சொல்லுங்கள் பார்க்கலாம், ஒரு கூட்டத்திற்கு அல்லாஹுத்தஆலா தன்னிடத்தில் பிரியமான தான் ஈமானுக்கு அடையாளம் என்று அங்கீகரித்த எதற்கு அல்லாஹுத்தஆலா சொர்க்கத்தை கூலியாக தருவேன் என்று வாக்களித்தானோ அந்த உயர்ந்த தன்மைகளைக் கொண்டு அந்த சஹாபாக்களை அல்லாஹுத்தஆலா நினைவு சொல்கிறான் நினைவு கூறுகிறான்:
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ
(இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். (அல்குர்ஆன் 9 : 100)
لَـقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِىِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِىْ سَاعَةِ الْعُسْرَةِ
நபி; இன்னும், (தபூக் போருடைய) சிரமமான நேரத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகளை அல்லாஹ் திட்டவட்டமாக மன்னித்தான், (தோழர்களாகிய) அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் வழிதவற நெருங்கிய பின்னர். பிறகு, அவன் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிகவும் இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன். (அல்குர்ஆன் 9 : 117)
இப்படித்தான் அல்லாஹுத்தஆலா நினைவு கூறுகிறான் சஹாபாக்களை நினைவு கூறும் பொழுது ஈமானோடு நினைவு கூறுகிறான். அவர்களுடைய தொழுகையோடு நினைவு கூறுகிறான். அவர்களுடைய நோன்புகளோடு அல்லாஹுத்தஆலா நினைவு கூறுகிறான். உயிரையும், பொருளையும், அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்த அந்த ஜிஹாத் அந்த தியாகத்தோடு அல்லாஹுத்தஆலா நினைவு கூறுகிறான்.
இங்கே மதீனா வாசிகளை அல்லாஹ் சொல்லும் போதெல்லாம் அல் அன்சார் அல்லாஹ்வுடைய தீனின் உதவியாளர்கள், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவியாளர்கள், எத்தகைய உயர்ந்த ஒரு சிறப்பு பெயர் பாருங்கள். அவர்கள் மன்னிக்கப்படுவதற்கு இதுவே போதுமானது அல்லாஹுத்தஆலா உங்களையும், என்னையும், மன்னிப்பான் என்று ஆதரவு வைக்கின்றோமே! நமக்கு இருக்க கூடிய எந்த அமலும் உருப்படியில்லாமல் இருக்கக்கூடிய, எந்த ஒரு அமலும் உருப்படி இல்லாமல் அல்லாஹ்வுடைய மன்னிப்பை நாம் நமக்கு ஆதரவு வைப்பதற்கு உரிமை இருக்கிறது என்றால்?
அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, புகழப்பட்டு, உயர்வாக பேசப்பட்டு, நான் மன்னித்து விட்டேன் என்றும் அல்லாஹுத்தஆலா அவர்களைப் பற்றி சொல்லியதற்கு பிறகு, அவர்களுக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்பை நீங்கள் ஆதரவு வைக்க மாட்டீர்களா? அவர்களுக்கு அல்லாஹ்வுடைய கருணையை நீங்கள் ஆதரவு வைக்க மாட்டீர்களா? அல்லாஹ் சூரத்துல் ஹஷ்ருடைய எட்டாவது அத்தியாயம் ஒன்பதாவது அத்தியாயம் சஹாபாக்களின் இரு வகைகளை பற்றி புகழ்ந்ததற்கு பிறகு நமக்கு சொல்கிறான்:
وَالَّذِيْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
(-முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ஆகிய) இ(ந்த இரு)வர்களுக்கும் பின்னர் வந்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் ஈமானில் எங்களை முந்திய எங்கள் (முஹாஜிர், அன்ஸாரி) சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை (-பொறாமையை) எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.” (அல்குர்ஆன் 59 : 10)
பின்னால் வந்த மூமின்கள் சொல்வார்கள் முஃமீன்கள் சொல்வார்கள் நீ முஃமினா இல்லையா என்பதை நீ சோதித்துப் பார்ப்பதற்கு அல்லாஹ் உனக்கு கொடுத்திருக்கக் கூடிய பரீட்சை நீ முனாஃபிக்கா மூஃமினா சஹாபாக்களுக்கு பாவமன்னிப்புடைய துவாவை கேட்டால் நீ முஃமீன் சஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்வை கூறி அவர்களை நீ விமர்சனம் செய்தால் அவர்களை நீ தர குறைவாக பேசினால் நீ முனாஃபிக் இந்த உம்மத்தை விட்டு நீ வெளியேறியவன் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் அது போன்று தான் சூரத்துல் ஃபத்ஹ் உடைய இறுதி வசனம்,
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ وَالَّذِيْنَ مَعَه اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًاسِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـه فَاٰزَرَه فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِه يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ
முஹம்மது (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்னும்,
இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்) (அல்குர்ஆன் 48 : 29)
சஹாபாக்களை அல்லாஹுத்தஆலா உருவாக்கினான், அவர்களை வளர்ச்சி அடைய செய்தான், இந்த சஹாபாக்களை கொண்டு காபிர்களுக்கு ரோஷம் ஊட்டுவதற்காக காபிர்களுக்கு வெறுப்பு ஊட்டுவதற்காக இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதி கிடைக்கிறார்கள் எப்படி என்றால் யார் சஹாபாக்களை பற்றி நினைவு கூறும் போது,
அவருடைய உள்ளத்தில் அவர்கள் மீது அன்பு வருகிறதோ அவர்கள் அல்லாஹ்வுடைய முஃமினான அடியார்கள் யாருக்கு சஹாபாக்களை பற்றி பேசும்போது வெறுப்பு வருகிறதோ இதோ அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த எச்சரிக்கைக்கு ஆளானவர்கள் சஹாபாக்களை பற்றி பேசும்பொழுது யாருக்கு வெறுப்பு வருகின்றதோ அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் இந்த சஹாபாக்களை கொண்டு அல்லாஹ் காஃபிர்களை வெறுப்படைய செய்வான் கோபம் ஊட்டுவான் என்று. அந்த நிலையை தான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
அல்லாஹுத்தஆலா மதினாவை தேர்ந்தெடுத்தான் யாருக்காக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதுபோன்று மக்காவுடைய முஃமின்கள் உடைய ஹிஜ்ரத்திற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு காட்டப்பட்டது உங்களுடைய ஹிஜ்ரத் உடைய இடம் எந்த ஊர் என்பதை எனக்கு காட்டப்பட்டது என்று அவர்கள் சஹாபாக்களுக்கு நற்செய்தி சொன்னார்கள்.
அதற்குப் பிறகுதான் மதினா நோக்கி ஹிஜ்ரத் செய்யும்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்கள் எல்லோரும் அந்த ஊருக்கு சென்று சேர்ந்தார்கள். அந்த ஊரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பினார்கள் நேசித்தார்கள் சொல்கிறார்கள் பாருங்கள்,
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ
அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள் நாம் துஆ கேட்க வேண்டியது நம்முடைய வயிற்றுக்கு மட்டுமல்ல இது முடிவு செய்யப்பட்ட ஒன்று ஆனால் நாமோ காலையிலிருந்து மாலை வரை மாலையில் இருந்து காலை வரை தஹஜத்தில் எழுந்தால் கூட இந்த சாப்பாட்டிற்கு தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம், இந்த வயித்துக்கு தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம் அதோட முடிஞ்சு நம்ம துவா இங்கே?
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1889 குறிப்பு (1)
நபியினுடைய துவாவை பாருங்கள் யா அல்லாஹ் எனக்கு மதீனாவை விருப்பம் ஆக்கி வை மதீனாவின் மீது முஹபத்தை கொடு ஹஜ் செய்பவர்கள் உம்ராவிற்கு செல்பவர்கள் எதையெதையோ ஏற்பாடு செய்து கொண்டு செல்கிறார்கள் சட்டையை வாங்கினார்கள், இஹ்ராமை வாங்கினார்கள், பிரஷை வாங்கினார்கள், பேஸ்ட்டை வாங்கினார்கள், மூட்டையை கட்டினார்கள்,
அதுபோக தின்பண்டங்கள் என்று ஒரு பக்கம் மூட்டை மூட்டையாக, அங்கே செல்வதற்கு இது தேவையா அல்லது, ஈமான் தேவையா இந்த துவாக்கள் தேவையா, என்று யோசித்துப் பாருங்கள் யா அல்லாஹ் எங்களுக்கு மக்காவின் மீது ஈமானை கொடு, எங்களுக்கு மக்காவின் மீது முஹப்பதை கொடு, அதனுடைய மகத்துவத்தை எங்களின் உள்ளத்திலே கொண்டு வா, மதீனாவின் மீது எங்களுக்கு நேசத்தை கொடு, அந்த ஊருக்கு நாங்கள் செல்லும்போது எங்களுடைய ஈமான் அதிகரிக்க வேண்டும்.
உன்னுடைய முஹபத் அதிகரிக்க வேண்டும் இந்த ஒரு அழுகையோடு அல்லவா நாம் மக்காவிற்கு மதினாவிற்கு தயாராக இருக்க வேண்டும் ஒரு ஊசியில் இருந்து எல்லாம் அங்கே லிஸ்ட் போடப்படுகிறது எது வேண்டுமோ அது அங்கே மறக்கப்பட்டு விடுகிறது நம்முடைய கல்பு தயாராகவில்லை ஏதோ ஒரு கடமை அல்லது மேலோட்டமான ஒரு ஆசை உண்மையான பொங்கி எழக்கூடிய ஈமானுடைய உணர்வுகளோடு இருக்கக்கூடிய அந்த ஆசை எங்கே சகோதரர்களே அதைப் பற்றி கேட்கக் கூடியவர்கள் எங்கே என்னுடைய ஒரு அனுபவத்தை சொல்கிறேன் உங்களுக்கு எனக்கு வரக்கூடிய பெரும்பாலான ஃபோன் கால்களிலே உஸ்தாத் நாளைக்கு நான் உம்ராவிற்கு போறேன் எனக்கு கொஞ்சம் உம்ரா விளக்கம் சொல்லுங்களேன் நாளைக்கு காலையில பயணம் காலையில பிளைட் சாந்தரம் ஆறு மணிக்கு அல்லது ஒன்பது மணிக்கு இரவுல போன் பண்றாங்க எங்களுக்கு கொஞ்சம் உம்ரா விளக்கம் சொல்லுங்களேன் ஒரு ரெண்டு ஹதீஸ் சொல்லுங்களேன்!
என்று சொல்லிட்டு எந்த அளவு விளையாட்டாக அல்லது ஒரு அலட்சியமாக இந்த ஹஜ் உம்ரா உடைய பயணம் மாறி இருக்கிறது பாருங்கள் எல்லாவற்றையும் விசாரிக்கிறார்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் ஆனால் நான் செல்லக்கூடிய இந்த ஊர் எதை பற்றி குர்ஆன் பேசுகின்றதோ அதை பற்றி ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் பேசுகின்றனவோ அந்த ஊருடைய சிறப்பு என்ன அங்கே நாம் எப்படி செல்ல வேண்டும் சிந்திக்க வேண்டாமா!
இஹ்ராம் இல்லாமல் முதல்முறையாக மக்காவிற்கு வருபவர் முக்காவிற்கு நுழையவே கூடாது. என்று அல்லாஹுத்தஆலா ஒரு சட்டத்தை வைத்திருக்கிறான் என்றால் அந்த ஊருடைய மகத்துவத்தை உணர வேண்டாமா அடுத்து மதீனா அல்லாஹ்விடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துவா செய்கிறார்கள் அந்த அன்பு எங்கே நமக்கு இருக்கிறது.
மதினாவிற்கு போனா தங்கம் கண்டிப்பா வாங்கணும் மதினாவிற்கு போனா என்ன வாங்கணுமா தங்கம் கண்டிப்பா கொஞ்சமாவது வாங்கிடனுமா பரக்கத் தான் அங்க கொஞ்சம் வாங்கிட்டா அதுக்கு அப்புறம், வாழ்நாள் எல்லாம் தங்கம் வாங்கிக்கிட்டே இருக்கலாமா அல்லாஹ் ரஹ்மானே ஈமானிற்காக வேண்டி மதினாவிற்கு வாருங்கள் மஸ்ஜிதே நபவியிலே தொழுகைக்காக வேண்டி மதினாவிற்கு வாருங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் அழைத்தால் தங்கம் வாங்கக்கூடிய நோக்கத்திலே எந்த பரக்கத்தை இவர்கள் தேடுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதிலே அவர்களுடைய மஸ்ஜிதிலே தொழுவதை விடவா” ஒரு பரக்கத் இந்த உலகத்திலே நமக்கு கிடைத்து விட முடியும் எந்த மஸ்ஜிதை முஹம்மது ரசூலுல்லாஹ் ஹாத்தமுல் அம்பியா கட்டினார்களோ! தங்களுடைய இரு கரங்களால் அதற்கு அடித்தளம் விட்டார்களோ! எந்த மஸ்ஜிதை முஹாஜீர்கள் அன்சாரிகள் சேர்ந்து கட்டினார்களோ இந்த மஸ்ஜிதை பற்றி அல்லாஹுத்தஆலா,
لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ
(நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. (அல்குர்ஆன் 9 : 108)
நபியே தக்வாவின் அடிப்படையிலே அமைக்கப்பட்ட இந்த மஸ்ஜிதிலே நீங்கள் நின்று தொழுவது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது என்று அல்லாஹுத்தஆலா அந்த மஸ்ஜிதை புகழ்கின்றானே அதனுடைய தேடல் இல்லையா அங்கே தொழுவதை விட ஒரு பரக்கத் இருக்க முடியுமா சொன்னார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொதுவாகவே மஸ்ஜிதுகளின் மீது முஃமினுக்கு ஒரு முஹபத் இருக்க வேண்டும் எந்த மஸ்ஜிதாக இருந்தாலும் சரி அதனுடைய கட்டிடங்கள் எப்படி இருந்தாலும் சரி அதனுடைய உயர்வும் அகலமும் விசாலமும் எப்படி இருந்தாலும் சரி அதிலே எந்த வசதி இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அல்லாஹ்வுடைய சுஜூதிக்காக ஒரு இடத்தில் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு விட்டால் நம்முடைய கல்பு அதை நேசிக்க வேண்டும் அல்லாஹுத்தஆலா கன்ஃபார்ம் உறுதியாக அர்ஷுடைய உடைய இடத்திலே அல்லாஹுத்தஆலா நமக்கு நிழல் கொடுத்து விடுகிறான்.
وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ
மஸ்ஜிதுகளோடு உள்ளத்தால் தொடர்புடையவர் எல்லா மஸ்ஜிதும் அல்லாஹ்வுடைய வீடு என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660, 1423 குறிப்பு (2)
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صلاةٌ في مسجدي هذا خيرٌ مِن ألف صلاةٍ فيما سواه إلا المسجد الحرام
அதற்குப் பிறகு மஸ்ஜிதுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்கக்கூடிய அல் மஸ்ஜிதுல் ஹராம் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீடு என்னுடைய இந்த மஸ்ஜிதிலே நீங்கள் தொழுதால் ஆயிரம் தொழுகையை விட சிறந்தது என்று சொன்னார்களே!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :1190, முஸ்லிம், எண் :1394
عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، قالَ: ما بيْنَ بَيْتي ومِنْبَرِي رَوْضَةٌ مِن رِيَاضِ الجَنَّةِ، ومِنْبَرِي علَى حَوْضِي
இந்த மஸ்ஜிதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடையிலே இந்த இடம் இருக்கிறதே இது சுவர்க்கப் பூங்கா என்று சொன்னார்கள் இது சுவர்க்கப் பூங்கா என்று சொன்னார்கள். அங்கே தொழுவதற்கு சஹாபாக்கள் தாபியீன்கள் ஸாலிஹீன்கள் ஆர்வப்பட்டார்கள் அந்த மதினாவில் குடியேறுவதை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வப்படுத்தினார்கள் சகோதரர்களே அந்த மதினாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்ட துவாவை பாருங்கள்!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1888
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ
யா அல்லாஹ் எங்களுக்கு மக்காவின் மீது எப்படி இயற்கையாக அன்பு இருக்கிறதோ கண்டிப்பாக மக்கா அல்லாஹ் உடைய ஒரு بلد الله அல்லாஹ்வுடைய மஸ்ஜித் இருக்கக்கூடிய அல் பலதுல் ஹராம் உம்முல் குர்அ எல்லா ஊர்களுக்கும் தாய் அதுதான் அந்த ஊரின் மீது எங்களுக்கு இருக்கக்கூடிய அந்த முஹபத்தை போல அல்லது அதைவிட அதிகமாகவே எங்களுக்கு மதினாவின் மீது அன்பை கொடு மதினா நகரம் என்றால் அதை சுற்றி இருக்கக்கூடிய அந்த உஹது மலை அந்த மலையை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசித்தார்கள் அது மட்டுமா அந்த மலையை பார்த்து சொன்னார்கள் இந்த மலை நம்மை நேசிக்கிறது இந்த உஹது மலை நம்மை நேசிக்கிறது நாம் இந்த மலையை நேசிக்கிறோம் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
மதினாவில் தங்குவதை மதினாவில் வாழ்வதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பினார்கள். நிர்ப்பந்தமாக மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் ஆனால் அதே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பத்து ஆண்டுகள் இஸ்லாமிய பிரச்சாரத்தை நிறைவு செய்து மக்காவிலே அங்கே அவர்கள் கனிமத்தை பங்கு வைத்த போது அன்சாரிகள் கவலைப்பட்டார்கள் நாங்கள் எங்களுடைய நெஞ்சை எதிரிகளுக்கு முன்னால் கொடுத்தோம்,
இப்போது கனிமத் இந்த குரைஷிகளுக்கு பங்கியிடப்படுகிறதே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்து சொன்னார்கள் இப்படி சொன்னீர்களா ஆம் நீங்கள் கேட்டது உண்மைதான் அப்போது சொன்னார்கள் அன்சாரிகளே ஒரு நீண்ட சம்பவம் சுருக்கமாக அந்த ஹதீஸ்னுடைய இறுதியிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அன்சாரிகளே மக்கள் எல்லாம் இந்த தங்கத்தையும் வெள்ளியையும் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டு செல்ல நீங்கள் உங்களது ஊருக்கு அல்லாஹ்வுடைய நபியை கொண்டு செல்வதை விரும்பவில்லையா!
இவர்களுக்கு மிஞ்சுவது இப்போதே இந்த ஒட்டகமும் ஆடும் தான் இந்த தங்கமும் வெள்ளியும் தான் நான் உங்களோடு வருகின்றன இது உங்களுக்கு திருப்தியாக இல்லையா அன்சாரிகள் அழுது விட்டார்கள் அழுதுவிட்டார்கள் அல்லாஹ்வுடைய தூதருக்கு சமமாக இந்த உலகத்திலே எது இருக்க முடியும் சகோதரர்களே அழுதுவிட்டார்கள் அல்லாஹ்வை பொருந்தி கொண்டோம் ரசூல்லை பொருந்தி கொண்டோம் சொன்னார்கள்:
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கள் எல்லாம் ஒரு பாதையில் சென்று அன்சாரிகள் ஒரு பாதையிலே சென்றால் நான் அன்சாரிகள் பின்னால் தான் செல்வேன் மக்கள் எல்லாம் ஒரு பாதையிலே சென்று ஒரு ஓடையிலே சென்றால் அன்சாரிகள் ஒரு ஓடையிலே சென்றால் நான் அன்சாரிகள் செல்லக்கூடிய ஓடையில் தான் செல்வேன் மக்கள் எல்லாம் என்னுடைய வெளி ஆடை என்றால் அன்சாரிகள் என்னுடைய உடலோடு ஒட்டிக் கொண்டிருக்க கூடிய என்னுடைய உள் ஆடை என்று சொன்னார்கள்.
ஏன் இந்த சில ஹதீஸ்களை நாம் நினைவு கூறுகிறோம் என்றால் ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜிகள் உங்கள் குடும்பத்திலே இருப்பார்கள் உங்களில் இருப்பார்கள் இவற்றையெல்லாம் நாம் நினைவு கூற வேண்டும் இன்னும் பல ஹதீஸ்கள் இருக்கின்றன.
இன்ஷா அல்லாஹ் முடிந்த அளவு அடுத்த ஜும்மாக்களிலே பார்ப்போம் சுருக்கம் கருத்து என்னவென்றால் எதை அல்லா நேசித்தானோ அது மனிதர்களாக இருந்தாலும் சரி, பொருள்களாக இருந்தாலும் சரி எந்த ஒன்றாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய நேசம் ஒன்றில் இருக்கிறது என்றால் நாமும் அதை அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும் நாமும் நம்முடைய உள்ளத்தில் அதனுடைய முஹப்பத்தை கொண்டு வர வேண்டும் நம்முடைய எது குர்ஆனிலே நமக்கு சொல்லப்பட்டு விட்டதோ எது ஹதீஸ்லே நமக்கு புகழப்பட்டு விட்டதோ அது நம்முடைய ஈமானோடு சம்பந்தப்பட்டு விடுகிறது.
வெறும் தக்பீர் கட்டி தொழுவது மட்டுமல்ல வெறும் தக்பீர் கட்டி தொழுவது மட்டுமல்ல குர்ஆன் சுன்னாவுடைய அத்தனை விஷயங்களையும் நாம் நம்முடைய உள்ளத்திலே உள்வாங்கும் போது தான் இந்த தொழுகையிலும் நமக்கு ஒரு இன்பம் கிடைக்கும் இந்தத் தொழுகையினுடைய உயிரோட்டத்தையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமக்கு உண்மையான ஈமானை, இக்லாஸை, யக்கீனை, தந்தருள்வானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக நயவஞ்சகத்தை விட்டும் குழப்பங்களை விட்டும் அல்லாஹுத்தஆலா நம்மையும் நமது உம்மத்தையும் பாதுகாத்து அருள்வானாக .
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்பு(1)
1889 5/ صحيح البخاري
لَمَّا قَدِمَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ المَدِينَةَ، وُعِكَ أبو بَكْرٍ وبِلَالٌ، فَكانَ أبو بَكْرٍ إذَا أخَذَتْهُ الحُمَّى يقولُ: كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ في أهْلِهِ ... والمَوْتُ أدْنَى مِن شِرَاكِ نَعْلِهِ وكانَ بلَالٌ إذَا أُقْلِعَ عنْه الحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ يقولُ: أَلَا لَيْتَ شِعْرِي هلْ أبِيتَنَّ لَيْلَةً ... بوَادٍ وحَوْلِي إذْخِرٌ وجَلِيلُ وَهلْ أرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ ... وهلْ يَبْدُوَنْ لي شَامَةٌ وطَفِيلُ قالَ: اللَّهُمَّ الْعَنْ شَيبةَ بنَ رَبِيعَةَ، وعُتْبَةَ بنَ رَبِيعَةَ، وأُمَيَّةَ بنَ خَلَفٍ كما أخْرَجُونَا مِن أرْضِنَا إلى أرْضِ الوَبَاءِ، ثُمَّ قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: اللَّهُمَّ حَبِّبْ إلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أوْ أشَدَّ، اللَّهُمَّ بَارِكْ لَنَا في صَاعِنَا وفي مُدِّنَا، وصَحِّحْهَا لَنَا، وانْقُلْ حُمَّاهَا إلى الجُحْفَةِ. قالَتْ: وقَدِمْنَا المَدِينَةَ وهي أوْبَأُ أرْضِ اللَّهِ، قالَتْ: فَكانَ بُطْحَانُ يَجْرِي نَجْلًا. تَعْنِي مَاءً آجِنًا.
குறிப்பு(2)
1/133 ) صحيح البخاري(
660 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/