HOME      Khutba      நபி ﷺ நேசித்த மதீனா நகரம் | Tamil Bayan - 810   
 

நபி ﷺ நேசித்த மதீனா நகரம் | Tamil Bayan - 810

           

நபி ﷺ நேசித்த மதீனா நகரம் | Tamil Bayan - 810


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசித்த மதீனா நகரம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசித்த மதீனா நகரம்!
 
வரிசை : 810
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -9-06-2023 | 20-11-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கணையத்திற்கு, மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள், மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே, அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றக்கூடிய நற்பாக்கியத்தை வேண்டியவனாக, மறுமையின் வெற்றியை வேண்டியவனாக, இந்த  குத்பாவை  ஆரம்பம் செய்கின்றேன்.
 
யார் அல்லாஹு தஆலாவை பயந்து கொண்டார்களோ, அல்லாஹ்வுடைய அச்சத்தோடு இந்த உலகத்தில் வாழ்கின்றார்களோ, கண்டிப்பாக அல்லாஹ் சுபஹானஹூதஆலா அவர்களுடைய சிரமங்களை நீக்கிவிடுவான். அவர்களுடைய இன்னல்களை போக்குவான். நாளை மறுமையிலே, உயர்ந்த சொர்க்கத்திலே அல்லாஹு தஆலா அவர்களை தங்க வைப்பான். அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை எப்படி பயப்பட வேண்டுமோ, அல்லாஹ்வை எப்படி அஞ்ச வேண்டுமோ, அந்த உரிய முறையில் அல்லாஹ்வை பயப்படுவதற்கும், அஞ்சுவதற்கும், அருள் புரிவானாக!
 
நம்முடைய தக்வாவை குறைக்கக்கூடிய, கெடுக்கக்கூடிய, ஒவ்வொரு கொள்கையில் இருந்தும், சொல்லில் இருந்தும், செயலில் இருந்தும், அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது. அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தை நேசிப்பது. நல்ல அமல்களை நேசிப்பது. இது நம்முடைய உள்ளத்திற்கு ஒரு ஒளியை ஏற்படுத்துகின்றது.
 
நம்முடைய உள்ளத்திற்கு அமைதியை தருகிறது. நம்முடைய உள்ளத்தை சுத்தப்படுத்துகிறது. யாரை நேசிக்க வேண்டுமோ, எதை நேசிக்க வேண்டுமோ, அந்த அடிப்படையில் நம்முடைய நேசம் இல்லை என்றால், யாரை நேசிக்கக் கூடாதோ, எதை நேசிக்கக் கூடாதோ, அவரையும், அதையும் நாம் நேசிக்க ஆரம்பித்து விடுவோம்.
 
அல்லாஹ்வை நேசிக்கின்ற உள்ளம், அல்லாஹ் விரும்பாததை நேசிக்காது. அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களை விரும்பக்கூடிய நேசிக்கக் கூடிய உள்ளம், எது அல்லாஹ்வுடைய தூதருக்கு பிடிக்காதோ, அதை ஒருபோதும் விரும்பாது, நேசிக்காது. அதன் பக்கம் நெருங்காது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் மீது பற்றோடு, அல்லாஹ்வுடைய தீனை நேசிக்கக்கூடிய, அல்லாஹ்வுடைய தீனின் மீது உண்மையான முஹபத்தை வைக்கக்கூடிய கல்பானது, கண்டிப்பாக இந்த தீன் ஹராமாக்கிய பாவங்களை ஒருபோதும் நேசிக்காது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹூதஆலா, இந்த உலகத்திலே நமக்கு. அவன் கொடுத்திருக்கக் கூடிய ஈமான், இஸ்லாம். பிறகு, அந்த ஈமானோடு, இஸ்லாமோடு, பிணைந்து இருக்கக்கூடிய அமல்கள். அந்த ஈமானோடு இஸ்லாமோடு இணைந்து இருக்கக்கூடிய காலங்கள். அந்த ஈமானோடு இஸ்லாமோட பிணைந்து இருக்கக்கூடிய இடங்கள். இவற்றையெல்லாம் நாம் நேசிக்கும் படி அல்லாஹுதஆலா நமக்கு வழிகாட்டி இருக்கின்றான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி இருக்கின்றார்கள்.
 
அப்படி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் விரும்பக்கூடிய இடங்களில் ஒன்று தான். மதினத்தூர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹ்வுடைய தூதர் உடைய, இறுதி இருப்பிடமாக. இறுதி தங்குமிடமாக. அவர்களுடைய ஹிஜிரத்திற்கு தகுந்த நகரமாக மாறிய, மதீனா Munav'ara என்று அழைக்கப்படக்கூடிய அந்த மதினா நகரம்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். போரிலிருந்து. அல்லது வேறு ஏதாவது பயணத்திலிருந்து அவர்கள் திரும்பினால், மதீனா நெருங்க நெருங்க. அவர்கள் தங்களுடைய வாகனத்தை விரட்டுவார்கள். வாகனத்தை விரைவாக செலுத்துவார்கள். ஒட்டகம், குதிரை போன்ற வாகனங்களை ஓட்டியவர்களுக்கு தெரியும். வாகனங்களை  விரைவு படுத்துவதற்காக, தங்களுடைய குதிங்கால்களை அதனுடைய வயிற்று பகுதியிலே வைத்து அழுத்துவார்கள் தட்டுவார்கள். வாகனம் விரைவாக ஓடு வதற்காக. 
 
أنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ كانَ إذَا قَدِمَ مِن سَفَرٍ، فَنَظَرَ إلى جُدُرَاتِ المَدِينَةِ، أوْضَعَ رَاحِلَتَهُ، وإنْ كانَ علَى دَابَّةٍ حَرَّكَهَا؛ مِن حُبِّهَا
 
சஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும், மதினா நெருங்க, நெருங்க, தங்களுடைய வாகனத்தை அவர்கள்  விரைவு படுத்துவார்கள். எதற்காக தெரியுமா? அந்த மதீனாவின் மீது உண்டான ஆசை ஆர்வத்தினால். மதினாவிற்கு நுழைய வேண்டும். சீக்கிரமாக நுழைய வேண்டும். என்று அந்த ஆசையால் அந்த வாகனத்தை அவ்வளவு விரைவாக  விரட்டுவார்கள். இது, அந்த மதினாவின் மீது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்த அந்த உயர்ந்த நேசத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1886
 
اللَّهُمَّ حَبِّبْ إلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أوْ أشَدَّ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் மீது உண்டான இந்த அன்பை அவர்கள் வாய்திறந்து வெளிப்படுத்தினார்கள் யா! அல்லாஹ்! எங்களுக்கு மதீனாவை பிரியமாக்கி வைப்பாயாக! மக்காவின் மீதி எங்களுக்கு இருக்கக்கூடிய, அந்த அன்பை போன்று. அல்லது அதைவிட அதிகமாக.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1889 (குறிப்பு 1)
 
عن عَبَّاسٍ، عن أَبِيهِ، عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: أُحُدٌ جَبَلٌ يُحِبُّنَا ونُحِبُّهُ
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். உஹது மலையை பார்த்து சொன்னார்கள். இதோ, இந்த உஹது மலை இருக்கிறதே, இந்த மலை எங்களை நேசிக்கிறது. நாம் இந்த மலையை நேசிக்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அந்த உஹது மலையின் மீது அத்தகைய ஒரு முஹபத். அந்த மதினா நகரத்தின் மீது அத்தகைய ஒரு அன்பு இருந்தது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுமைத் அஸ்ஸாயிதி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 1481, 1392 , (குறிப்பு 2)
 
فَقالَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ: لو سَلَكَ النَّاسُ وادِيًا، وسَلَكَتِ الأنْصَارُ شِعْبًا؛ لَاخْتَرْتُ شِعْبَ الأنْصَارِ
 
மேலும் சொன்னார்கள்.  ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மதீனாவை தவிர, வேறு ஒரு நகரத்தில் நான் குடியேற மாட்டேன். மதினாவை தவிர வேறு ஒரு நகரத்திலே நான் தங்க மாட்டேன் என்று அந்த மதினாவை சிறப்பித்து சொல்லும் பொழுது, மக்கள் எல்லாம் ஒரு பள்ளத்தாக்கிலே சென்றால், மக்கள் எல்லாம் ஒரு ஓடையிலே சென்றால், ஒரு வழியிலே சென்றால், அன்சாரிகள் ஒரு பாதையிலே சென்றால், அன்சாரிகள் செல்லக்கூடிய  பாதையில் தான் நான் செல்வேன் என்று, அன்சாரிகள் உடைய அந்த ஊரை, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசித்து சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 4333 (குறிப்பு 3)
 
எப்படி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மதினாவை நேசிக்காமல் இருக்க முடியும்? அல்லாஹ் அவர்களுக்காக தேர்ந்தெடுத்த ஊராயிற்றே! இந்த இஸ்லாம் வளர்வதற்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஒரு புனித ஒரு நகரம் ஆயிற்றே! 
 
وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
 
இன்னும், எவர்கள் (மதீனாவில்) வீடுகளை அமைத்துக் கொண்டார்களோ; அவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு) முன்னதாக ஈமானை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தங்களிடம் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை நேசிக்கிறார்கள். இன்னும், தங்களுக்கு கொடுக்கப்பட்டவற்றில் தங்கள் நெஞ்சங்களில் (தங்களுக்கு என்று முன்னுரிமைப்படுத்தப்படும்) எந்தத் தேவையையும் அவர்கள் காணமாட்டார்கள். தங்களுக்கு (வறுமையும்) கடுமையான தேவை(யும்) இருந்தாலும் தங்களை விட (முஹாஜிர்களைத்தான்) தேர்ந்தெடுப்பார்கள். (-அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.) யார் தனது உள்ளத்தின் கருமித்தனத்தை விட்டும் பாதுகாக்கப்படுவாரோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59 : 9)
 
எப்படி அல்லாஹு தஆலா மக்காவை பற்றி எல்லாம் அல்குர்ஆனிலே சொல்லும்பொழுது, அல்பலத் என்று சொல்கின்றானோ, மதினாவை அல்லாஹு தஆலா சொல்லும் பொழுது,  அல்-மதினா என்று சொல்கின்றான். அல்லது அத்தார். அது முஸ்லிம்களுக்கான வீடு என்று அல்லாஹு தஆலா சொல்கின்றான்.
 
உலகத்திலே எங்கே முஸ்லிம்களுக்கு வீடு இல்லையோ, நகரம் இல்லையோ, யார் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக வேண்டி விரட்டப்பட்டார்களோ, ஒதுக்கப்பட்டார்களோ, நசுக்கப்பட்டார்களோ, அவர் எல்லாம் இந்த நகரத்திற்கு வாருங்கள். இந்த வீட்டிற்கு வாருங்கள். அவர்களுக்கு எங்களுடைய வீடு வீடாக இருக்கும். அவர்களுக்கு எங்களுடைய செல்வம், செல்வமாக இருக்கும்.
 
என்று அழைத்த அன்சாரிகளுடைய நகரம் ஆயிற்றே! அல்லாஹு தஆலா சொல்லுகின்றான். இந்த வீட்டிலே வசிக்க கூடியவர்கள், இந்த வீட்டை தங்களுடைய வீடாக ஆக்கிக் கொண்டவர்கள். ஈமானை உள்ளடக்கியவர்கள். 
 
அன்புக்குரிய சகோதரர்களே! உலகத்திலே எந்த ஒரு சமுதாயமும், நாடோடிகளை, நாடற்றவர்களை நேசித்திருக்காது. மதினாவாசிகள் நாடோடிகளை முஹாஜிர்களை நேசித்தது போன்று. உலகத்தில் எந்த ஒரு சமுதாயமும், நாடோடிகளுக்கு குடியுரிமை  வழங்குவதோ, உரிமைகளை வழங்குவதோ, தங்களுடைய சொந்த சொத்தை, அரசாங்கத்தின் சொத்தை அல்ல. தங்களுடைய சொந்த சொத்தை, அப்படியே சமபாதியாக பங்கிட்டு கொடுத்ததோ, அன்சாரிகள் செய்ததைப் போன்று, உலகத்தில் எந்த சமுதாயமும், அவர்களுக்கு முன்னாலும் செய்ததில்லை. அவர்களுக்கு பின்னாலும் செய்ததில்லை. 
 
தங்களை விட, தங்களிடம் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை,  அவர்கள் மனப்பூர்வமாக நேசித்தார்கள் என்று அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். தங்களுடைய வறுமை பட்டினியிலும், அந்த முஹாஜிர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள் என்று அல்லாஹு தஆலா அவர்களுக்கு சான்று வழங்குகின்றான்.
 
அத்தகைய மதினாவின் மீது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி நேசம் இல்லாமல் இருந்திருப்பார்கள். அந்த மதீனாவின் நகரவாசிகள் அன்சாரிகளை எப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  நேசிக்காமல் இருந்திருப்பார்கள். அன்சாரிகளே! மக்களிலே, நீங்கள் மிகவும் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்று அந்த அன்சாரிகளை பார்த்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள்.
 
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ الْأَنْصَارَ أَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَ الْأَنْصَارَ أَبْغَضَهُ اللَّهُ» قَالَ شُعْبَةُ: قُلْتُ لِعَدِيٍّ: أَسَمِعْتَهُ مِنَ الْبَرَاءِ بْنِ عَازِبٍ؟ قَالَ: إِيَّايَ حَدَّثَ
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு சொன்னார்கள். யார் அன்சாரிகளை விரும்பாரோ, நேசிப்பாரோ, அல்லாஹ் அவரை நேசிப்பானாக! யார் அன்சாரிகளை வெறுப்பாரோ, அல்லாஹ் அவரை வெறுப்பானாக!
 
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 163
 
الأنْصارُ لا يُحِبُّهُمْ إلَّا مُؤْمِنٌ، ولا يُبْغِضُهُمْ إلَّا مُنافِقٌ، فمَن أحَبَّهُمْ أحَبَّهُ اللَّهُ، ومَن أبْغَضَهُمْ أبْغَضَهُ اللَّهُ.
 
மேலும் சொன்னார்கள் ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இந்த அன்சாரிகளை மூமின்கள் நேசிப்பார்கள். யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது இந்த மார்க்கத்தின் மீது நம்பிக்கை இருக்குமோ, அவர்கள் அன்சாரிகளை நேசிப்பார்கள். அந்த அன்சாரிகளை வெறுப்பவர் நயவஞ்சகராக இருப்பார். யார் அவர்களை நேசிக்கின்றார்களோ, அல்லாஹ் அவர்களை நேசிப்பானாக! யார் அவர்களை வெறுக்கின்றார்களோ, பகைக்கின்றார்களோ, அவர்கள் மீது நேசம் கொள்ளவில்லையோ, அல்லாஹ் அவரை வெறுப்பானாக! பகைப்பானாக! 
 
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3783
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இந்த மதினாவின் மீது  நேசம் கொண்ட, மதினாவின் மீது அவர்கள் வைத்த அந்த அன்புடைய வெளிப்பாடு. மதினாவிற்காக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்தார்கள்.
 
மதினாவின் உடைய மதிப்பிற்காக, கண்ணியத்திற்காக, உயர்விற்காக, புனிதத்திற்காக, ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்திலே துஆ செய்கிறார்கள். நாம் ஒன்றை மறுமைக்காக, அல்லாஹ்விற்காக, நேசிக்கின்றோம் என்றால், நாம் ஒருவரை அல்லாஹ்விற்காக மறுமைக்காக நேசிக்கின்றோம் என்றால்,
 
அதனுடைய முக்கியமான வெளிப்பாடுகளில், அடையாளங்களில், ஒன்றுதான் அவருக்காக நாம் அல்லாஹ்விடத்திலே மறைவிலே துவா செய்வது. அந்த துஆ அல்லாஹ்விடத்திலே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்ல. அந்த துவாவின் பிரதி பலனை நாமும் கண்டிப்பாக அடைவோம்.
 
اللَّهمَّ إنَّ إبْراهِيمَ حَرَّمَ مَكَّةَ وإنِّي حرَّمت ما بينَ لابتَيها ودَعا لَها، وحَرَّمْتُ المَدِينَةَ كما حَرَّمَ إبْراهِيمُ مَكَّةَ، ودَعَوْتُ لها في مُدِّها وصاعِها مِثْلَ ما دَعا إبْراهِيمُ عليه السَّلامُ لِمَكَّةَ
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுவிடத்திலே துஆ செய்கின்றார்கள். எத்தகைய அழகிய துஆ பாருங்கள். அல்லாஹ்வே! இப்ராஹிம் மக்காவை புனிதம் ஆக்கினார். மக்கா புனிதமாக இருக்க வேண்டும் என்று, உன்னிடத்திலே துஆ செய்தார். மக்காவை புனிதம் ஆக்கினார். நான் இந்த மதினாவின் இரண்டு மலைகளுக்கிடையில் உள்ள, இந்த நகரத்தின் மலைகளுக்கு இடையில் உள்ள எல்லா பகுதிகளையும் நான் புனிதம் ஆகின்றேன். அதாவது நீ அதை புனிதமாக்கி எங்களுக்கு தர வேண்டும் என்று உன்னிடத்தில் தூஆ செய்கின்றேன்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸைது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2129
 
ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எப்படி மக்கா புனிதம் ஆக்கப்பட்டதோ ஹரமாக்கப்பட்டதோ, அதுபோன்று மதினாவும் புனிதம் ஆக்கப்பட்டது.
 
அந்த மதினா எப்படி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நேசத்திற்குரிய பூமியாக இருக்க முடியாது. யோசித்துப் பாருங்கள். அது சாதாரணமான ஒரு நகரமா? எந்த நகரத்தில் முஸ்லிம்களுடைய இரண்டாவது மிகப்பெரிய மஸ்ஜித். எந்த மஸ்ஜிதை பற்றி அல்லாஹு தஆலா.
 
لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
 
(நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் அதிகம் பரிசுத்தமாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 9 : 108)
 
 எந்த மஸ்ஜித் தக்குவாவின் அடிப்படையிலே கட்டப்பட்டதோ. நபியே! அந்த மஸ்ஜிதிலே நின்று நீங்கள் வணக்கவழிபாடு செய்வது மிகவும் தகுதியானது என்று. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஸ்ஜிதை அல்லாஹு தஆலா புகழ்ந்து சொல்கின்றானோ, அந்த மஸ்ஜித் இருக்கக் கூடிய நகரம் அல்லவா அந்த மதினா நகரம்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூமின்கள் ஆகிய நமக்கு வழி காட்டினார்கள். நம்முடைய உள்ளம் எப்போதுமே ஒரு புனிதத்தை தேடக்கூடியது. ஒரு புனிதமான காலத்தை தேடக்கூடியது.
 
ஒரு புனிதமான இடத்தை தேடக்கூடியது. அங்கே சென்று நம்முடைய நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காக, அங்கே சென்று நம்முடைய பாவங்கள் மன்னிக்கபடுவதற்கு அல்லாஹ்விடத்திலே இறைஞ்சுவதற்காக, இது அல்லாஹு தஆலா உள்ளங்களில் ஏற்படுத்திய ஒரு இயற்கையான ஒன்று. எங்கே சென்றாள் நம்முடைய உள்ளங்கள் மென்மையாகவோ,
 
எங்கே சென்றாள் அல்லாஹ்வின் அச்சத்தால் உள்ளங்கள் இலகி விடுமோ, உள்ளங்கள் உருகுமோ, அத்தகைய இடங்களை முன்னோக்குவது, அத்தகைய இடங்களை தேடிச் செல்வது, அது உள்ளத்தில் இருக்கக்கூடிய ஒரு இறையச்சத்தினுடைய வெளிப்பாடு.
 
அல்லாஹு தஆலா அதை நமக்கு மார்க்கமாக ஆக்கி வரைமுறைப்படுத்தி கொடுத்தான். அதை ஈமானாக ஆக்கி அதை நமக்கு அல்லாஹு தஆலா முறைப்படுத்தி கொடுத்தான். இத்தகைய இந்த புனிதத்தை, நீங்கள் தேடும் பொழுது, அதற்காக என்னுடைய வீடு இருக்கிறது.
 
அதற்காக என்னுடைய நபி உடைய மஸ்ஜித் இருக்கிறது. அதற்காக அல் மஸ்ஜிதுல் அக்ஸா இருக்கிறது. இந்த இடங்களுக்கு நீங்கள் பயணம் செய்து வாருங்கள். இதைத் தவிர வேறு இடங்களுக்கு, அந்த புனிதத்தை, அந்த நன்மையை நாடி நீங்கள் பயணம் செய்யக்கூடாது.
 
இந்த ஹதீஸை மக்கள் புரியாத காரணத்தினாலோ, புறக்கணித்த காரணத்தினாலோ, இன்று ஒவ்வொரு ஊரிலும், முஸ்லிம்கள் குலதெய்வங்களை, காஃபிர்களுடைய குலதெய்வங்களை போன்று தர்காக்களை ஏற்படுத்திக் வைத்து கொண்டு அங்கே சென்று நிம்மதியை தேடுகின்றார்கள்.
 
ஒன்று. நாம் செழிப்பு ஆக்குவதற்கு. நாம் நின்று வணவதற்கு. நம்முடைய ஊரில் இருக்கக்கூடிய நம்முடைய மஸ்ஜித். அதற்குப் பிறகு நாம் பயணம் செய்ய வேண்டும் என்றால், அந்த மூன்று மசூதிகளை தவிர, வேறு இடங்களுக்கு நாம் பயணம் செய்யக்கூடாது. அந்த மூன்று புனிதமான மஸ்ஜிதுகளில், இரண்டாவது மஸ்ஜித் இருக்கக்கூடிய நகரம் அல்லவா அந்த மதினா நகரம். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
 
وَلا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ الأَقْصَى
 
மூன்று மஸ்ஜித்களுக்கே தவிர பயணங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது. அதாவது மார்க்க அடிப்படையில். நன்மையை நாடி, புனிதத்தை நாடி, பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. மூன்று மஸ்ஜிதுகளுக்கே தவிர. வியாபாரத்திற்காக நீங்கள் பயணம் செய்யலாமா? தாராளமாக நீங்கள் செய்யலாம்.
 
நீங்கள் கல்விக்காக வேண்டி பயணம் செய்யலாமா? உறவுகளை சந்திப்பதற்காக, உங்களுடைய நண்பர்களை சந்திப்பதற்காக நீங்கள் செல்லலாமா? தாராளமாக நீங்கள் பயணம் செய்யலாம். ஆனால் இபாதத்தின் அடிப்படையிலே.
 
அறிவிப்பாளர் : அபூ ஸயித் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1864 (குறிப்பு 4)
 
இங்கே சென்று தொழுதால், குர்ஆன் ஓதினால், துஆ செய்தால், எனக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்று எண்ணத்தில் நீங்கள் பயணம் செய்வதாக இருந்தால், இந்த மூன்று மசூதிகளுக்கு தான் பயணம் செய்ய வேண்டும். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
பயணங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது. மூன்று மஸ்ஜித்களுக்கு தவிர. அல் மஸ்ஜிதுல் ஹரம். ஒன்று. புனிதமான மஸ்ஜித் காபத்துல்லா இருக்கக்கூடிய அந்த புனிதமான மஸ்ஜித். இரண்டாவது. ரசூலுல்லாஹ் உடைய மஸ்ஜித். Wa- masjidul -Aqsa. அல் - பைத்துல் முகத்தஸில் இருக்கக்கூடிய, அந்த அல் மஸ்ஜிதுல் அக்ஸா.
 
அறிவிப்பாளர் : அபூ ஸயித் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1864 (குறிப்பு 4)
 
அந்த மதினா நகரத்திலே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஸ்ஜித். அதற்கு பிறகு அந்த மஸ்ஜிதிலே ஒரு விசேஷமான இடம் இருக்கிறது. அந்த முழு மஸ்ஜிதும் விசேஷமான ஒன்று.
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ
 
அந்த மஸ்ஜிதிலே, நாம் ஒருமுறை தொழுவது, மற்ற மஸ்ஜிதில் ஆயிரம் தொழுகைகளை விட நமக்கு சிறந்தது என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். Haram ஷெரிப்னுடைய தொழுகையை தவிர, மற்ற இடங்களில் தொழ படக்கூடிய தொழுகையை விட அல் மஸ்ஜிதுன் நபவியிலே தொழுவது, ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது என்று சொன்னார்கள். மேலும் அந்த மஸ்ஜிதிலே ஒரு விசேஷமான இடம் இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1190
 
عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، قالَ: ما بيْنَ بَيْتي ومِنْبَرِي رَوْضَةٌ مِن رِيَاضِ الجَنَّةِ، ومِنْبَرِي علَى حَوْضِي.
 
நம்முடைய ஈமானோடு சம்பந்தப்பட்ட இடம். நமக்கு சொர்க்கத்தை இந்த உலகத்திலேயே காட்சி தரக்கூடிய இடம். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். என்னுடைய வீட்டிற்கும், என்னுடைய மிம்பருக்கும், இடையில் இருக்கக்கூடிய அந்த இடம் இருக்கிறதே, அது சொர்க்கப் பூங்காக்களிலே ஒன்று. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1888
 
ஒரு முஃமின் இதை நம்ப வேண்டும். இந்த பூமி நாளை மறுமையிலே சொர்க்கத்தின் உடைய இடமாக மாற்றப்படும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த வாக்கு. இந்த உலகத்திலேயே, அந்த சொர்க்கத்தினுடைய, அந்த இன்பத்தை உணர்வதற்கு அல்லாஹு தஆலா ஏற்படுத்திக் கொடுத்த அந்த இடம். மூமின்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஸ்ஜிதிலே, அவர்களுடைய வீட்டிற்கும் அவர்களுடைய மிம் பருக்கும், இடையில் இருக்கக்கூடிய அந்த இடம்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1888
 
அன்பிற்குரிய சகோதரர்களே! அங்கே மதீனாவில் உடைய சிறப்புகளிலே, மதினாவின் மீது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இத்தகைய மாபெரும் நேசத்திற்கான காரணங்களிலே ஒன்று என்ன தெரியுமா? அங்கே அல்லாஹ் சுபஹானஹூதஆலா குபா என்ற ஒரு சிறிய கிராமத்தை வைத்திருக்கின்றான்.
 
அங்கே மூமின்கள் ஒரு மஸ்ஜிதை கட்டி எழுப்பினார்கள்.  அந்த குபா மஸ்ஜித். அதனுடைய வரலாற்று பின்னணி என்ன? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, கேள்விப்பட்டபோது, ரசூலுல்லாவை வரவேற்பதற்காக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதினாவிலே வரவேற்று அழைத்துச் செல்வதற்காக, அன்சாரிகளுடைய உள்ளங்கள் எல்லாம் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.
 
அன்பு சகோதரர்களே! நம்முடைய வீட்டிற்கு விருந்தாளி வருகின்றார்கள் என்றால், உறவினரான விருந்தாளி. வசதி உள்ள விருந்தாளி. அவர் எத்தனை நாள் தங்குவார்? அவரால் நமக்கு என்ன சிரமங்கள் இருக்கும்? அவரால் நமக்கு நன்மையா தீமையா? பிரச்சனையா? இப்படி எல்லாம் பலர் யோசிப்பார்கள்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் வருவதற்கு முன்பும் பல நூறு தோழர்கள் வந்து விட்டார்கள். அடுத்து இன்னும் பல நூறு தோழர்கள் வர இருக்கின்றார்கள். இனி இவர்கள் இந்த ஊருடைய குடிமக்களாக ஆகப் போகின்றார்கள். இனி இந்த ஊரை விட்டு அவர்கள் போக மாட்டார்கள். என்றெல்லாம் ஒரு சிறிய நகரத்தினுடைய மக்களுக்கு தெரியும் பொழுது, பொதுவாக மனநிலை எப்படி இருக்கும்? அவர்களுக்கு உணவளிக்க வேண்டுமே, அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டுமே, பிள்ளை குட்டிகளோடு வருவார்களே!
 
அன்பு சகோதரர்களே! அன்சாரிகளை அல்லாஹு தஆலா எப்படி நேசித்தான் என்பதற்கு. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் அந்த அன்சாரிகளின் மீது இத்தகைய பரிவு வைத்திருந்தார்கள் என்பதற்கு. இது மிகப்பெரிய அடையாளம்.
 
ஒரு சமூகம் நாடோடியாக வரப்போகிறது. குடியரப்போகிறது என்பதை அறிந்தபோது, ஊரின் உடைய எல்லையிலேயே அவர்களை வரவேற்பதற்காக மஸ்ஜிது கட்டி வரவேற்றவர்கள் தான் அந்த குபவாசிகள். அல்லாஹு தஆலா அவர்களை புகழ்கின்றான். 
 
لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
 
(நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் அதிகம் பரிசுத்தமாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 9 : 108)
 
அந்த குபாவாசிகள் சுத்தத்தை விரும்பக் கூடியவர்கள். இஸ்லாம் வருவதற்கு முன்பே அவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றால், தண்ணீரை கொண்டு சுத்தம் செய்வார்கள். அத்தகைய சுத்தத்தை விரும்பக் கூடியவர்கள்.
 
பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுக்கு அந்த குபாவாசிகள் காட்டிய அந்த அன்பு, அவர்கள் வரவேற்ற அந்த விதம், தங்களுக்காக அவர்கள் செய்த அந்த சிறிய தியாகம், அவர்களால் முடிந்த அளவு, ஒரு பேரித்த மரத்தினுடைய கீற்றினால், கீழே மணலை நிரப்பி ஒரு மஸ்ஜிதை கட்டினார்கள். நம்முடைய மஸ்ஜிதுகளை போன்று ஆடம்பரமான மஸ்ஜிதுகள் அல்ல. ஒரு எளிமையான ஒரு வீட்டை அல்லாஹ்விற்காக கட்டி எழுப்பினார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கே தங்கி ஓய்வெடுத்துவிட்டு, ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, அவர்கள் மதினாவிற்கு செல்கின்றார்கள்.
 
இந்த அன்பு, இந்த பாசம், ரசூலுல்லாஹ் உடைய அன்பு, அந்த குபாவாசிகள் உடைய தியாகம். இவை எல்லாம் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, இந்த நிகழ்வுக்குப் பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மதீனாவில் இருந்த காலம் எல்லாம், அவர்கள் மதினாவை விட்டு ஜிஹாதிக்கோ, ஹஜ்ஜுக்கோ, உம்ராவிற்க்கோ, போன நேரங்களை தவிர. 
 
كانَ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ يَأْتي مَسْجِدَ قُباءٍ كُلَّ سَبْتٍ ماشِيًا وراكِبًا. وكانَ عبدُ اللَّهِ بنُ عُمَرَ رَضيَ اللهُ عنهما يَفْعَلُه
 
மதினாவில் அவர்கள் இருந்த காலம் எல்லாம், ஒவ்வொரு நாளும், குறிப்பாக சனிக்கிழமை அவர்கள் குபாவிற்கு சென்று விடுவார்கள். எப்படி செல்வார்கள்? வாகனங்களை எதிர்பார்த்து இருந்தார்களா? வாகனம் இருந்தால் வாகனத்தில் சென்று விடுவார்கள். வாகனம் இல்லை என்றால், மஸ்ஜித் நபவிலிருந்து ஏறக்குறைய ஆறிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவுடைய அந்த குபாவிற்கு நடந்தே சென்று விடுவார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1193
 
அந்த குபா மஸ்ஜிதின் மீது ரசூலுல்லாஹ்விற்கு இருந்த பிரியம். அந்த குபாவாசிகளின் மீது ரசூலுல்லாஹ்விற்கு இருந்த பிரியம். அங்கே சென்று, ஒன்று. பரலான தொழுகைகளைதொழுது விட்டு வருவார்கள்.
 
அந்த நேரத்தில் பார்லான தொழுகையுடைய நேரமாக இருந்தால். இல்லையென்றால் இரண்டு ரக்காத்து நஃபிலாவது அவர் தொழுது விட்டு அந்த மக்களோடு அமர்ந்து விட்டு ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருவார்கள்.
 
பாருங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தான் மட்டும் இதை செய்ததல்ல. இந்த தியாகத்தை நாம் நினைவு கூர்ந்து, அந்த மதினாவாசிகளுக்காக, குபாவாசிகளுக்காக நாமும் துஆ செய்ய வேண்டும். அந்த அன்பு நம்மிடத்திலே வரவேண்டும். அந்த தியாக உணர்வு நம்மிடத்திலே வரவேண்டும். இதை முன்னிட்டு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு வழிகாட்டிய அந்த வழிமுறையை பாருங்கள் சொன்னார்கள்.
 
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ , من تطَهَّرَ في بيتِهِ , ثمَّ أتى مسجدَ قباءٍ ، فصلَّى فيهِ صلاةً ، كانَ لَهُ كأجرِ عمرةٍ
 
குபா மசூதிலே தொழுவது உம்ராவை போன்றதே. அதற்கு சிறப்பை சொன்னார்கள். உம்ராவுடைய நன்மை கிடைக்கும் என்பதாக. மற்றும் ஒரு ஹதீஸிலே வருகிறது. யார் தன்னுடைய வீட்டிலே உளூ செய்துவிட்டு அவர்கள் இந்த மஸ்ஜித்விற்கு. குபா மசித்ததற்கு வந்து தொழுவாரோ, அவருக்கு ஒரு உம்ராவிற்கு சமமான நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : உஸைத் இப்னு ளுஹைர், ஸஹ்லு இப்னு ஹனீப் ரழியல்லாஹு அன்ஹுமா , நூல் : திர்மிதி, இப்னு மாஜா, எண் : 324, 1168
 
அன்பிற்குரியவர்களே! இந்த மதினாவிலே குடியேறி தங்கி இருப்பதை, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்கும் விரும்பினார்கள். தங்களுடைய தோழர்களுக்கும் விரும்பினார்கள். வருங்காலத்தை குறித்து எச்சரிக்கை செய்தார்கள். 
 
تُفْتَحُ اليَمَنُ، فَيَأْتي قَوْمٌ يُبِسُّونَ، فَيَتَحَمَّلُونَ بأَهْلِهِمْ ومَن أطَاعَهُمْ، والمَدِينَةُ خَيْرٌ لهمْ لو كَانُوا يَعْلَمُونَ، وتُفْتَحُ الشَّأْمُ، فَيَأْتي قَوْمٌ يُبِسُّونَ، فَيَتَحَمَّلُونَ بأَهْلِيهِمْ ومَن أطَاعَهُمْ، والمَدِينَةُ خَيْرٌ لهمْ لو كَانُوا يَعْلَمُونَ، وتُفْتَحُ العِرَاقُ، فَيَأْتي قَوْمٌ يُبِسُّونَ، فَيَتَحَمَّلُونَ بأَهْلِيهِمْ ومَن أطَاعَهُمْ، والمَدِينَةُ خَيْرٌ لهمْ لو كَانُوا يَعْلَمُونَ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வருங்காலத்திலே சில மக்கள் இந்த மதினாவை விட்டுவிட்டு, வசதியான நகரங்களுக்கு குடி பெயர்வார்கள். அவர்கள் இந்த மதினாவிலேயே தங்கியிருக்க வேண்டுமே! மதினா அவர்களுக்கு சிறந்த நகரம் ஆயிற்று. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? எமன் நாடு வெற்றி கொள்ளப்படும். 
 
அறிவிப்பாளர் : ஸுஃப்யான் இப்னு அபீ  ஸுஹைர் அல்அஸ்தீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1875
 
அங்கே இருக்கக்கூடிய வசதிகளை பார்த்து, மக்கள் எல்லாம் வசதியான இடத்திற்கு வாருங்கள். செழிப்பான இடத்திற்கு வாருங்கள் என்று அழைப்பார்கள். மக்கள் இங்கிருந்து அங்கே செல்வார்கள். இவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே. மதினா நகரம் இவர்களுக்கு சிறந்ததாயிற்று.
 
Iraq நகரம் வெற்றி கொள்ளப்படும். அதனுடைய வசதிகளை பார்த்து மக்கள் அழைப்பார்கள். Iraq நாட்டிற்கு வாருங்கள் என்று. மக்கள் அங்கே குடி பெயர்ந்து செல்வார்கள்.
 
மதினா நகரம் அவர்களுக்கு சிறந்ததாயிற்றே! இதிலே அவர்கள் தங்கி இருக்க வேண்டுமே. சிரியா நகரம் வெற்றி கொள்ளப்படும். அதனுடைய வசதிகளை பார்த்து மக்கள் அழைப்பார்கள். வாருங்கள் அங்கே குடியேறலாம் என்று. மதீனாவிலேயே இவர்கள் தங்கி இருக்க வேண்டுமே! இது சிறந்த இடம் ஆயிற்றே! 
 
அறிவிப்பாளர் : ஸுஃப்யான் இப்னு அபீ  ஸுஹைர் அல்அஸ்தீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1875
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். யார் மதீனாவில் அதனுடைய சிரமங்களை சகிப்பவர்களாக அங்கே தங்கி இருக்கின்றார்களோ, அவர்களை குறித்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ قَطَنِ بْنِ وَهْبِ بْنِ عُوَيْمِرِ بْنِ الْأَجْدَعِ، عَنْ يُحَنَّسَ، مَوْلَى الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فِي الْفِتْنَةِ، فَأَتَتْهُ مَوْلَاةٌ لَهُ تُسَلِّمُ عَلَيْهِ، فَقَالَتْ: إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ، يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، اشْتَدَّ عَلَيْنَا الزَّمَانُ، فَقَالَ لَهَا عَبْدُ اللهِ: اقْعُدِي لَكَاعِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَصْبِرُ عَلَى لَأْوَائِهَا وَشِدَّتِهَا أَحَدٌ، إِلَّا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ
 
யார் மதினா உடைய தட்பவெப்ப நிலைகள். மதினாவினுடைய அந்த climate. அது எவ்வளவுதான் கடினமாக இருந்தாலும். வெயிலாகவோ, குளிராகவோ, அதனுடைய சிரமங்களை பொறுத்தவராக அங்கே தங்கி இருப்பாரோ, நான் அவருக்கு மறுமையிலே சாட்சியாளராக இருப்பேன். நான் அவருக்கு மறுமையிலே ஷஃபாத் செய்யக்கூடிய பரிந்துரையாளராக இருப்பேன். என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இதனுடைய வெளிப்பாடு தான் பார்க்கின்றோம்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1377
 
கண்ணியத்திற்குரிய அந்த சஹாபாக்கள், மதினாவிற்கு வருவதை நேசித்தார்கள். அவர்களுக்கு ஜிஹாத் என்ற கடமை மட்டும் இருக்கவில்லை என்றால், அல்லது வெற்றி கொண்ட நாடுகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும்.
 
அங்கே அந்த நாட்டு மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற கடமை உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் ஒருபோதும் மதினாவை விட்டு வெளியேறி இருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றி இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கின்றார்கள்.
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي [ص:24] فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَقَالَ ابْنُ زُرَيْعٍ، عَنْ رَوْحِ بْنِ القَاسِمِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: سَمِعْتُ عُمَرَ نَحْوَهُ وَقَالَ هِشَامٌ، عَنْ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ
 
மதினாவின் மீது கலீபா உமருக்கு இருந்த அந்த ஆசை, அந்த ஆர்வம், இன்னொரு பக்கம். அல்லாஹ் உடைய பாதையிலே தன்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்று shaஹாதத்தின் மீது இருந்த ஆசை. அவர்கள் எப்போதுமே துஆ செய்வார்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1890
 
அல்லாஹ்வே! உன்னுடைய பாதையில் எனக்கு ஷஹாதத்தை கொடு. என்னுடைய மௌத்தை உன்னுடைய ரசூலுடைய நகரத்திலே ஆக்கு. இந்த துஆவை செவியுறுக்கின்ற சஹாபாக்கள். உமருடைய தோழர்கள் பார்த்து கேட்பார்கள். உமரே! அது எப்படி மதினா வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. இது தாருல் khiலாபத்தாக இருக்கிறது. இங்கே இருக்கும் போதே எப்படி உங்களுக்கு shaஹாதத்து கிடைக்கும். நீங்கள் shaஹாதத்து வேண்டுமென்றால், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய பாதையிலே, எதிரிகளின் நாட்டை நோக்கி அல்லவா செல்ல வேண்டும் என்று.
ஆனால் ஒருபோதும் உமருல் பாரக் ரலியல்லாஹு அன்ஹு இந்த துஆவை விட்டதில்லை. அவர்கள் எப்படி எண்ணினார்களோ, துஆ செய்தார்களோ, அதுபோன்று அவர்களுடைய துவாவை அல்லாஹு தஆலா கபூல் செய்து விட்டான்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1890
 
தொழுகையிலே இருக்கும்பொழுது, மஸ்ஜித் நபவியில் இருக்கும் பொழுது, தொழுகைக்கு வருவது, தொழுகையை எதிர்பார்த்து இருப்பது, இது அல்லாஹ்வுடைய பாதையாகும். அந்த தொழுகையிலே இருக்கும் பொழுது அவர்கள் காஃபிரால் கொல்லப்படுகிறார்கள். அன்பிற்குரிய சகோதரர்களே! இது சஹாபாக்கள் மதினாவை நேசித்ததுடைய வெளிப்பாடு.
 
அது மட்டுமா? இந்த மதினா நகரம் ஒரு பர்கத்தான நகரம். ரசூலுல்லாவால் துஆ செய்யப்பட்டு, இந்த நகரத்திற்காக அவர்கள் அல்லாஹ்விடத்திலே மன்றாடினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் சொன்னார்கள். 
 
كانَ النَّاسُ إذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاؤُوا به إلى النبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، فَإِذَا أَخَذَهُ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، قالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا في ثَمَرِنَا، وَبَارِكْ لَنَا في مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا في صَاعِنَا، وَبَارِكْ لَنَا في مُدِّنَا، اللَّهُمَّ إنَّ إبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ، وإنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ، وإنَّه دَعَاكَ لِمَكَّةَ، وإنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بمِثْلِ ما دَعَاكَ لِمَكَّةَ، وَمِثْلِهِ معهُ، قالَ: ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ له فيُعْطِيهِ ذلكَ الثَّمَرَ
 
யா! அல்லாஹ்! எங்களுக்கு எங்களுடைய பழங்களிலே பரக்கத் செய். மதினா வாசிகள் என்ன செய்வார்கள் என்றால், பழங்கள் காய்த்து விட்டால், அந்த பழங்களை அறுத்து வந்து, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன் முறையாக கொடுப்பார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1373
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு அந்த அன்சாரிகளுக்கு துஆ செய்வார்கள். யா! அல்லாஹ்! எங்களுடைய பழங்களிலே எங்களுக்கு பரக்கத் செய். எங்களுடைய மதினா நகரத்திலே எங்களுக்கு பர்கத் செய். நாங்கள் அளந்து கொடுக்கக்கூடிய எங்களுடைய சா அளவிலே பரக்கத் செய். 
 
நாங்கள் கையளவு அளந்து கொடுக்கக்கூடிய அந்த முத்திலே நீ எங்களுக்கு பர்கத் செய். சொல்வார்கள். அல்லாஹ்வே! நிச்சயமாக இப்ராஹிம் இருக்கின்றாரே. அவர் உன்னுடைய அடியார். அவர் உன்னுடைய உற்ற நண்பர். அவர் உன்னுடைய நபி அல்லாஹ்வே! நிச்சயமாக நானும் உன்னுடைய அடிமையாக இருக்கின்றேன். உன்னுடைய நபியாக இருக்கின்றேன். (30:04-30:06) நிச்சயமாக அவர் மக்காவிற்கு துஆ செய்தார் என் இறைவா! நான் உன்னிடத்திலே மதினாவிற்காக துஆ செய்கின்றேன்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1373
 
இப்ராஹிம் மக்காவிற்கு செய்த தூ ஆவை போன்று. இன்னும் அது போன்று இன்னொரு மடங்கு நீ இந்த மதினாவிற்கு செய்ய வேண்டும் என்று உன்னிடத்திலே நான் பிரார்த்திக்கின்றேன். இப்படியாக கண்ணியத்திற்குரிய வர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த மக்காவிற்காக பரக்கத் வேண்டி துஆ செய்தார்கள். 
 
மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மக்காவை பாதுகாக்கப்பட்ட பூமியாக ஆக்கியதன் வெளிப்பாடாக, அந்த மதினா உடைய நகரங்களுக்கு தஜ்ஜால் வர முடியாது. தாவூன் வர முடியாது. என்று அந்த முன்னறிவிப்பை செய்தார்கள். 
 
عَلَى أنْقابِ المَدِينَةِ مَلائِكَةٌ، لا يَدْخُلُها الطَّاعُونُ، ولا الدَّجَّالُ.
 
சொன்னார்கள் மதினா உடைய வாசல்களில் எல்லாம் மலக்குகள் இருக்கின்றார்கள். அங்கே தஜ்ஜால் நுழைய முடியாது. அதுபோன்று காலரா நோய் நுழைய முடியாது என்று.  இந்த மதினா நகரம் இருக்கிறதே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். நல்லவர்கள் விரும்பக்கூடிய, ஈமானால் சுத்தம் உள்ளவர்கள் விரும்பக்கூடிய இடம் என்று இந்த மதினாவை போற்றினார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1880
 
أنَّ أعْرَابِيًّا بَايَعَ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ علَى الإسْلَامِ، فأصَابَ الأعْرَابِيَّ وعْكٌ بالمَدِينَةِ، فأتَى الأعْرَابِيُّ إلى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقَالَ: يا رَسولَ اللَّهِ، أقِلْنِي بَيْعَتِي، فأبَى رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أقِلْنِي بَيْعَتِي، فأبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أقِلْنِي بَيْعَتِي، فأبَى، فَخَرَجَ الأعْرَابِيُّ، فَقَالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: إنَّما المَدِينَةُ كَالكِيرِ، تَنْفِي خَبَثَهَا، ويَنْصَعُ طِيبُهَا
 
ஒரு கிராமவாசி வருகின்றார். ரசூலுல்லாஹ்விடத்திலே பையத் செய்துவிட்டு அங்கே தங்குகின்றார். ஆனால் அடுத்த நாளை அவருக்கு உடல் மிகவும் மோசமாகிவிடுகிறது. சொன்னார்கள் அந்த அந்த ஆராபி ரஸூலாவிடத்திலே வந்து. (Akhilne) பையத்தை முடித்து விடுங்கள். நான் மதீனாவை விட்டு வெளியே செல்ல போகின்றேன்.
 
எனக்கு அனுமதி கொடுங்கள் என்று மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்டார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இந்த மதினா நகரம் கொல்லனின் துருக்கியை போல. எப்படி அது இரும்பின் உடைய அசுத்தத்தை போக்கி விடுகின்றதோ, அதுபோன்ற இந்த மதினா அசுத்தமானவர்களை போக்கி விடும். அதனுடைய நறுமணம் வெளிப்படுமென்று,
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7211
 
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! இவ்வளவு உயர்ந்த நகரமாகிய இந்த மதினாவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி விரும்பாமல் இருக்க முடியும்? அவர்கள் விரும்பிய அந்த நகரத்தை மூமின்கள், முஸ்லிம் களாக நாம் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்? நமக்கு ஈமானுடைய ஒரு ஒதுங்குமிடமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவை குறித்து சொன்னார்கள்.
 
روى الشيخان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان ليَأْرِزُ أي يَلجَأُ إلى المدينة كما تَأْرِزُ الحيَّةُ إلى جُحرها
 
எப்படி ஒரு பாம்பு பொந்தை நோக்கி ஒதுங்கு கின்றதோ, அது போன்று ஈமான் மதினாவை நோக்கி ஒதுங்கிவிடும் என்பதாக. அது மட்டுமல்ல. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதியாக இறந்து, அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நகரம் தான்அந்த மதினா நகரம்.
 
யார் மஸ்ஜிதுன் நபவிக்கு செல்வார்களோ, அங்கே தொழுது வருவோம் என்ற எண்ணத்தில் மதினாவிற்கு செல்ல வேண்டும். மஸ்ஜித் நபவியில் தொழக்கூடிய, தொழ வேண்டும் என்ற எண்ணத்திலே செல்ல வேண்டும். அங்கே தொழுததற்கு பிறகு, ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சலாம் சொல்வது.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 1876, 291
 
அவர்களுடைய இரண்டு தோழர்களுக்கு சலாம் சொல்வது. இது விரும்பத்தகுந்த சிறந்த ஒரு காரியமாக இருக்கிறது. அதற்கு பிறகு bakki சென்று அங்கு அடங்கியிருக்கக்கூடிய சஹாபாக்களுக்கு, தாபியீன்களுக்கு, சலாம் சொல்வது. பிறகு குபா மசூதிக்கு சென்று தொழுவது. பிறகு shuhadahu Uhad. உஹது போரிலே shaheed ஆனவர்களுக்கு சென்று சலாம் சொல்லி, அவர்களுக்காக துஆ செய்வது.
 
இத்தகைய உயர்ந்த நற் பேருகளை அடங்கி இருக்கக்கூடிய நர் பாக்கியங்கள் நிறைந்துள்ள அந்த மதீனாவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசித்தார்கள். அந்த நேசத்தின் அடிப்படையில் நாமும் மதினாவை நேசிக்க வேண்டும்.
 
அல்லாஹ் சுபஹானஹூதஆலா, எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக! அந்த புனிதமான நகரங்களுக்கு மீண்டும் மீண்டும் நம்முடைய வாழ்க்கையில் செல்வதற்கு, நம்முடைய அமல்களை அதிகப்படுத்துவதற்கு, அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கு அருள் புரிவானாக! ஆமீன். 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
(குறிப்பு 1)
 
لَمَّا قَدِمَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ المَدِينَةَ، وُعِكَ أبو بَكْرٍ وبِلَالٌ، فَكانَ أبو بَكْرٍ إذَا أخَذَتْهُ الحُمَّى يقولُ: كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ في أهْلِهِ ... والمَوْتُ أدْنَى مِن شِرَاكِ نَعْلِهِ وكانَ بلَالٌ إذَا أُقْلِعَ عنْه الحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ يقولُ: أَلَا لَيْتَ شِعْرِي هلْ أبِيتَنَّ لَيْلَةً ... بوَادٍ وحَوْلِي إذْخِرٌ وجَلِيلُ وَهلْ أرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ ... وهلْ يَبْدُوَنْ لي شَامَةٌ وطَفِيلُ قالَ: اللَّهُمَّ الْعَنْ شَيبةَ بنَ رَبِيعَةَ، وعُتْبَةَ بنَ رَبِيعَةَ، وأُمَيَّةَ بنَ خَلَفٍ كما أخْرَجُونَا مِن أرْضِنَا إلى أرْضِ الوَبَاءِ، ثُمَّ قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: اللَّهُمَّ حَبِّبْ إلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أوْ أشَدَّ، اللَّهُمَّ بَارِكْ لَنَا في صَاعِنَا وفي مُدِّنَا، وصَحِّحْهَا لَنَا، وانْقُلْ حُمَّاهَا إلى الجُحْفَةِ. قالَتْ: وقَدِمْنَا المَدِينَةَ وهي أوْبَأُ أرْضِ اللَّهِ، قالَتْ: فَكانَ بُطْحَانُ يَجْرِي نَجْلًا. تَعْنِي مَاءً آجِنًا  : الراوي : عائشة أم المؤمنين | المحدث : البخاري | المصدر : صحيح البخاري : الصفحة أو الرقم: 1889 | خلاصة حكم المحدث : [صحيح]
 
(குறிப்பு 2)
 
 
 
غَزَوْنَا مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ غَزْوَةَ تَبُوكَ، فَلَمَّا جَاءَ وادِيَ القُرَى إذَا امْرَأَةٌ في حَدِيقَةٍ لَهَا، فَقالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ لأصْحَابِهِ: اخْرُصُوا، وخَرَصَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ عَشَرَةَ أَوْسُقٍ، فَقالَ لَهَا: أَحْصِي ما يَخْرُجُ منها. فَلَمَّا أَتَيْنَا تَبُوكَ قالَ: أَما إنَّهَا سَتَهُبُّ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ، فلا يَقُومَنَّ أَحَدٌ، ومَن كانَ معهُ بَعِيرٌ فَلْيَعْقِلْهُ. فَعَقَلْنَاهَا، وهَبَّتْ رِيحٌ شَدِيدَةٌ، فَقَامَ رَجُلٌ، فألْقَتْهُ بجَبَلِ طَيِّئٍ، وأَهْدَى مَلِكُ أَيْلَةَ للنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ بَغْلَةً بَيْضَاءَ، وكَسَاهُ بُرْدًا، وكَتَبَ له ببَحْرِهِمْ، فَلَمَّا أَتَى وادِيَ القُرَى قالَ لِلْمَرْأَةِ: كَمْ جَاءَ حَدِيقَتُكِ؟ قالَتْ: عَشَرَةَ أَوْسُقٍ، خَرْصَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: إنِّي مُتَعَجِّلٌ إلى المَدِينَةِ، فمَن أَرَادَ مِنكُم أَنْ يَتَعَجَّلَ مَعِي، فَلْيَتَعَجَّلْ. فَلَمَّا قالَ ابنُ بَكَّارٍ كَلِمَةً مَعْنَاهَا: أَشْرَفَ علَى المَدِينَةِ قالَ: هذِه طَابَةُ، فَلَمَّا رَأَى أُحُدًا قالَ: هذا جُبَيْلٌ يُحِبُّنَا ونُحِبُّهُ، أَلَا أُخْبِرُكُمْ بخَيْرِ دُورِ الأنْصَارِ؟ قالوا: بَلَى، قالَ: دُورُ بَنِي النَّجَّارِ، ثُمَّ دُورُ بَنِي عبدِ الأشْهَلِ، ثُمَّ دُورُ بَنِي سَاعِدَةَ -أَوْ دُورُ بَنِي الحَارِثِ بنِ الخَزْرَجِ- وفي كُلِّ دُورِ الأنْصَارِ. يَعْنِي خَيْرًا. وقالَ سُلَيْمَانُ بنُ بلَالٍ: حدَّثَني عَمْرٌو: ثُمَّ دَارُ بَنِي الحَارِثِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ. وقالَ سُلَيْمَانُ: عن سَعْدِ بنِ سَعِيدٍ، عن عُمَارَةَ بنِ غَزِيَّةَ، عن عَبَّاسٍ، عن أَبِيهِ، عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: أُحُدٌ جَبَلٌ يُحِبُّنَا ونُحِبُّهُ. : الراوي : أبو حميد الساعدي | المحدث : البخاري | المصدر : صحيح البخاري : الصفحة أو الرقم: 1481 | خلاصة حكم المحدث : [صحيح] [قوله: وقال سليمان بن بلال... معلق وقد صله في موضع آخر] [وقوله: قال سليمان عن سعد... معلق]
 
(குறிப்பு 3)
 
لَمَّا كانَ يَوْمُ حُنَيْنٍ، التَقَى هَوَازِنُ ومع النبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ عَشَرَةُ آلَافٍ والطُّلَقَاءُ، فأدْبَرُوا، قالَ: يا مَعْشَرَ الأنْصَارِ، قالوا: لَبَّيْكَ يا رَسولَ اللَّهِ وسَعْدَيْكَ، لَبَّيْكَ نَحْنُ بيْنَ يَدَيْكَ، فَنَزَلَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ فَقالَ: أنَا عبدُ اللَّهِ ورَسولُهُ. فَانْهَزَمَ المُشْرِكُونَ، فأعْطَى الطُّلَقَاءَ والمُهَاجِرِينَ ولَمْ يُعْطِ الأنْصَارَ شيئًا، فَقالوا، فَدَعَاهُمْ، فأدْخَلَهُمْ في قُبَّةٍ، فَقالَ: أمَا تَرْضَوْنَ أنْ يَذْهَبَ النَّاسُ بالشَّاةِ والبَعِيرِ، وتَذْهَبُونَ برَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ؟ فَقالَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ: لو سَلَكَ النَّاسُ وادِيًا، وسَلَكَتِ الأنْصَارُ شِعْبًا؛ لَاخْتَرْتُ شِعْبَ الأنْصَارِ. الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 4333 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (4333)، ومسلم (1059
 
(குறிப்பு 4)
 
سَمِعْتُ أَبَا سَعِيدٍ -وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً- قَالَ: أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ -أَوْ قَالَ: يُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ، فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي-: أَلَّا تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلا صَوْمَ يَوْمَيْنِ: الفِطْرِ وَالأَضْحَى، وَلا صَلاةَ بَعْدَ صَلاتَيْنِ: بَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ الأَقْصَى. : الراوي : أبو سعيد الخدري | المحدث : البخاري | المصدر : صحيح البخاري : الصفحة أو الرقم: 1864 | خلاصة حكم المحدث : [صحيح]
 
 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/