HOME      Khutba      அல்லாஹ்வின் அன்பை அதிகப்படுத்தும் ஹஜ் - Tamil Bayan - 807   
 

அல்லாஹ்வின் அன்பை அதிகப்படுத்தும் ஹஜ் - Tamil Bayan - 807

           

அல்லாஹ்வின் அன்பை அதிகப்படுத்தும் ஹஜ் - Tamil Bayan - 807


அல்லாஹ்வின் அன்பை அதிகப்படுத்தும் ஹஜ்.
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் அன்பை அதிகப்படுத்தும் ஹஜ்.
 
வரிசை : 807
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -14-07-2023 | 26-12-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாகவும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய  ஸலவாத்தும், ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும். உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும்,
 
அவனுடைய அருளையும் வேண்டியவனாகவும், நம் அனைவருக்கும் அல்லாஹ்விடத்திலே சொர்க்க வாழ்க்கையை வேண்டியவனாகவும், மறுமையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாகவும், இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்வானாக! நம்மை மன்னித்து அருள்வானாக! ஆமீன்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!  அல்லாஹ் சுபஹானஹூதஆலா அவனது கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனிலே 165 வது வசனத்திலே மூமின்கள், நம்பிக்கையாளர்கள், எத்தகையவர்கள்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்று சொல்கின்றான்.
 
وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ
 
மக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள்.
 
அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 2 : 165)
 
 யார். நம்பிக்கை கொண்டு விடுகின்றார்களோ, அல்லாஹ்வை. யார் தன்னுடைய வணக்கத்திற்குரிய இறைவனாக ஏற்றுக் கொண்டார்களோ, தன்னை படைத்து பரிபாலிக்க கூடிய ரப்பாக ஏற்றுக் கொண்டார்களோ, அந்த மூமின்கள். அவர்கள் எத்தகையவர்கள்? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?) அவர்கள் அல்லாஹ்வை அதிகம் அதிகம் நேசித்துக் கொண்டே இருப்பார்கள்.
 
அல்லாஹ்வின் மீது அதிகமான அன்புடையவர்களாக இருப்பார்கள். அவர்களது உள்ளம் எப்போதும் அல்லாஹ்வுடைய அன்புக்காக ஏங்கிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு இபாதத்திலும், அல்லாஹ்வுடைய அன்பை அவர்கள் உணர்வார்கள். அல்லாஹ்வுடைய அன்பை தேடுவார்கள். அல்லாஹ்வுடைய அன்பிற்காக அல்லாஹ்விடத்திலே அவர்கள் துஆ கேட்பார்கள்.
 
அல்லாஹ்வை நேசிப்பது போன்று, இந்த உலகத்தில் எதையும் அவர்கள் நேசிக்கவே மாட்டார்கள். எப்படி அல்லாஹ்விற்கு அவர்கள் இணை கற்பிக்க மாட்டார்களோ, வணக்க வழிபாட்டில். இபாதத்தில் எப்படி அவர்கள் அல்லாஹ்விற்கு ஷிருக்கு செய்ய மாட்டார்களோ, அதுபோன்று அல்லாஹ்வுடைய நேசத்திலும், அல்லாஹ்விற்கு சமமாக யாரையும் அவர்கள் ஆக்க மாட்டார்கள். அது அவர்களால் முடியாது. அப்படி செய்தால் அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள்.
 
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
 
(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் தந்தைமார்களும், (உங்கள் தாய்மார்களும்) உங்கள் ஆண் பிள்ளைகளும், (உங்கள் பெண் பிள்ளைகளும்) உங்கள் சகோதரர்களும், (உங்கள் சகோதரிகளும்) உங்கள் மனைவிகளும், (நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் கணவன்மார்களும்) உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுமோ என்று நீங்கள் பயப்படும் வர்த்தகமும்,
 
நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வை விட; இன்னும், அவனுடைய தூதரை விட; இன்னும், அவனுடைய பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் (உங்களிடம்) தன் (தண்டனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். இன்னும், அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 9 : 24)
 
நபியே! நீங்கள் சொல்லுங்கள். அந்த மூமின்களை பார்த்து சொல்லுங்கள். யார் உங்களுக்கு பின்னால் இந்த இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்களோ, உங்களை நபியாகவும் என்னை ரப்பாகவும் ஏற்றுக் கொண்டார்களோ, யார் மறுமைக்காக வேண்டி வாழ்கின்றோம் என்று சொல்கின்றார்களோ, அவர்களை நோக்கி சொல்லுங்கள். உங்களது பெற்றோர், நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள்,
 
உங்களுடைய சகோதரர்கள், உங்களுடைய வாழ்க்கை ஜோடிகள், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வங்கள், நீங்கள் விருப்பமாக கட்டி வைத்திருக்கும் உங்களுடைய இல்லங்கள், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ, நஷ்டம் ஏற்படக்கூடாது என்று பயந்து பயந்து நீங்கள் செய்யக்கூடிய உங்களுடைய வியாபாரங்கள், வர்த்தகங்கள், இவை எல்லாம் உங்களுக்கு, அல்லாஹ்வை விட, அவனுடைய ரசூலை விட, அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதை விட, மிக விருப்பமாக இருக்குமேயானால், அல்லாஹ்வின்  கட்டளையை, அதாவது அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பார்த்து விடுங்கள்.
 
ஒரு முஃமினால். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு இறை  நம்பிக்கையாளனால் அல்லாஹ்விற்கு சமமாக எதையும் நேசிக்க முடியாது. அல்லாஹ்வுடைய அன்பில் அவன் எதையும் கூட்டாகி கொள்ள முடியாது. அல்லாஹ்வுடைய இந்த அன்பை உணரும்போது தான், நம்முடைய நிலையிலே, Qiyamலே நமக்கு அந்த இன்பம் கிடைக்கும். நம்முடைய Rukuலே இன்பம் கிடைக்கும்.
 
நம்முடைய சுஜூதிலே இன்பம் கிடைக்கும். நம்முடைய திலாவத்திலே இன்பம் கிடைக்கும். நம்முடைய திக்ருலே இன்பம் கிடைக்கும். நம்முடைய சதக்காவிலே நமக்கு இன்பம் கிடைக்கும். ஒவ்வொரு இபாதத்தும் நம்முடைய நப்ஸ்விற் கு விருப்பமானதாக ஆகிவிடும். கவனியுங்கள். ஒவ்வொரு இபாதத்தும், நமக்கு நம்முடைய நப்ஸ்விற்கு மிக விருப்பமானதாக ஆகிவிடும். அல்லாஹ்வுடைய அன்பை தேட ஆரம்பித்து விட்டால். அல்லாஹ்வுடைய அன்பை உணர ஆரம்பித்து விட்டால். அந்த இபாதத்து எவ்வளவு சிரமமானதாக இருந்தாலும் சரியே.
 
அந்த இபாதத்திற்காக வேண்டி நாம் எத்தகைய பெரிய இழைப்பை இழக்க நேரிட்டாலும் சரியே. பலருக்கு. அல்லாஹ்வுடைய அன்பு என்றால் ஒன்றும் புரியவில்லை. இபாதத்தில் அல்லாஹ்வுடைய அன்பு இருக்க வேண்டும். என்ற அந்த அடிப்படையே பலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது. எந்த இபாதத்தில் அல்லாஹ்வுடைய பயமும், அல்லாஹ்வுடைய அன்பும் சேரவில்லையோ,
 
நீங்கள் தக்பீர் கட்டும்போது அல்லாஹு அக்பர் என்று சொல்லும் பொழுது, ஒரு தர்மத்தை கொடுக்கும் பொழுது, ஒரு நோன்பை நோற்கும் பொழுது, அல்லாஹ்வுடைய அன்பும் அல்லாஹ்வுடைய பயமும் உள்ளத்தில் சேரவில்லை என்றால், அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இபாதத்தாக ஆகாது.
 
فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
 
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 21 : 90)
 
وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
 
இன்னும், பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம் ஏற்பட்)ட பின்னர் கலகம் (-குழப்பம், விஷமம்) செய்யாதீர்கள். இன்னும், பயத்துடனும், ஆசையுடனும் அவனை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நல்லறம் புரிவோருக்கு மிக சமீபமானதாகும். (அல்குர்ஆன் 7 : 56)
 
அல்லாஹு தஆலா இபாதத்தினுடைய அந்த அடிப்படையை சொல்லிக்காட்டுகின்றான். இறைத்தூதர்கள் என்னை வணங்கினார்கள். என்னை அழைத்தார்கள். எனக்கு முன்னால் அழுது மன்றாடினார்கள். எப்படி? என்னை பயந்தவர்களாக. எப்படி? என் மீது ஆசை கொண்டவர்களாக. என் மீது நேசம் கொண்டவர்களாக.
 
இன்று நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே என்ற நம்மில் பலர்  ஏங்குவது உண்டு. பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு காரணம். அல்லாஹ்வை பயந்தவர்களாக அழைத்தோமா? அல்லாஹ்வின் மீது நேசம் கொண்டவர்களாக அழைத்தோமா? எப்படி நமக்கு நெருக்கமான ஒரு நண்பனிடம் உரிமையாக கேட்போமோ, அப்படி நெருக்கமான நண்பரிடம் கேட்டுவிட்டால்,
 
அவன் கண்டிப்பாக கொடுப்பான் என்று நமக்கு நம்பிக்கை இருக்குமோ, அதைவிட ஆழமான நம்பிக்கை,  நேசர்களிலேயே நமக்கு மிகப்பெரிய நேசனாகிய அல்லாஹ்விடத்தில் கேட்கும் போது இருந்ததா? கேட்டதற்கு பின்பு அந்த நம்பிக்கை இருக்கிறதா? 
 
எத்தகைய அவநம்பி கையோடு அல்லாஹ்விடத்திலே கையேந்த கூடியவர்களாக இன்று நாம் இருக்கின்றோம். அல்லாஹ் மன்னிப்பானாக! அன்பு சகோதரர்களே! அந்த நேசம். அல்லாஹு தஆலா, இபாதத்திலே நம்மிடத்திலே எதிர்பார்க்கின்றான். என்னுடைய அடியான் எப்படி கைகட்டி நிற்கின்றான். அவனுடைய நோன்பு எதற்காக? அவன் உடைய ஹஜ் எதற்காக? அவனுடைய வணக்க வழிபாடுகள் எதற்காக என்று. நம்முடைய வணக்க வழிபாடுகள் உயிரோட்டம் உள்ளதாக ஆகுவதும்.
 
அந்த வணக்க வழிபாடுகளுக்கு, அல்லாஹ்விடத்திலே ஒரு வலிமை. ஒரு பலம். ஒரு கணம். ஒரு மதிப்பு கிடைப்பது இருக்கிறதே, அதில் எந்த அளவுக்கு அல்லாஹ்வை பயப்படக்படுகிறதோ, எந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய அன்பை கொண்டு, நேசத்தை கொண்டு, அந்த இபாதத்தை நிரப்பப்படுகின்றதோ, அதை கொண்டுதான். அத்தகைய கல்பிடத்திலிருந்து வரக்கூடிய சிறிய அமலும், அல்லாஹ்விடத்திலே மிகப்பெரிய நன்மைக்குரியதாகவும் மதிப்பு கூறியதாகவும் இருக்கும்.
 
சஹாபாக்களுடைய அமல்களுக்கு அல்லாஹ்விடத்தில் இத்தகைய மதிப்பு, இத்தகைய அந்த உயர்வுக்கு காரணம் என்ன? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,
 
لا تَسُبُّوا أصْحابِي؛ فلوْ أنَّ أحَدَكُمْ أنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا، ما بَلَغَ مُدَّ أحَدِهِمْ ولا نَصِيفَهُ
 
நீங்கள் மலையளவு செய்யக்கூடிய தர்மமும் சரி. என்னுடைய தோழர்கள் கைப்பிடி அளவுக்கு கொடுத்த தர்மமும் சரி. நீங்கள் தங்கத்தையே மலையளவு தர்மம் செய்தாலும், எனது தோழர்கள் கைப்பிடி அளவு கொடுத்த ஒரு தானியத்திற்கு அது சமமாகாது என்று சொன்னார்களே, அந்த சஹாபாக்களுடைய உள்ளத்தில் இருந்த அல்லாஹ்வின் muhabbat மற்றும் அல்லாஹ்வின் பயமும் தான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஸயிது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3673
 
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களுக்கு, மார்க்கத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். மறுமையைப் பற்றி பல விஷயங்களை தோழர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபை எப்பொழுதும் மறுமையை நினைவூட்டக்கூடிய சபையாக இருக்கும். மார்க்க சட்டங்களை கற்றுக் கொடுக்கக்கூடிய சபையாக இருக்கும். வீண் பேச்சுக்களுக்கு, விளையாட்டுகளுக் கோ, அல்லது தேவையற்ற வாக்குவாதங்களுக் கோ, அங்கே எந்தவிதமான இடமும் கிடையாது.
 
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ: أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ البَادِيَةِ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ قَائِمَةٌ؟ قَالَ: «وَيْلَكَ، وَمَا أَعْدَدْتَ لَهَا» قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ» فَقُلْنَا: وَنَحْنُ كَذَلِكَ؟ قَالَ: «نَعَمْ» فَفَرِحْنَا يَوْمَئِذٍ فَرَحًا شَدِيدًا، فَمَرَّ غُلاَمٌ لِلْمُغِيرَةِ وَكَانَ مِنْ أَقْرَانِي، فَقَالَ: «إِنْ أُخِّرَ هَذَا، فَلَنْ يُدْرِكَهُ الهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ» وَاخْتَصَرَهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
 
ஒரு தோழர் ரசூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே குறுக்கே கேள்வி கேட்கின்றார். அல்லாஹ்வின் தூதரே! எந்த மறுமையை பற்றி நீங்கள் பேசுகின்றீர்களோ, எங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றீர்களோ, எங்களை பயமுறுத்துகின்றார்களோ, அந்த மறுமை எப்போது நிகழும்? பயத்தால் துடிதுடித்து கேட்கின்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6167
 
தங்களுடைய பேச்சை தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்கள். கேட்டவர், சபையில் இருந்து எழுந்து சற்று ஓரமாக சென்று விட்டார். பல காரணங்கள் இருக்கலாம். பேச்சை முடித்ததற்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கின்றார்கள். அந்த மறுமையைப் பற்றி கேட்டவர் எங்கே என்று. அந்தத் தோழர் சொல்கிறார். ها أنا ரசூலுல்லாஹ்! அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் தான் இங்கே இருக்கின்றேன் என்று சொல்கின்றார்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழரை பார்த்து கேட்கின்றார்கள்? அந்த மறுமைக்காக நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்? என்ன தயாரிப்பு உன்னிடத்திலே இருக்கிறது? ஏனென்றால் சகோதரர்களே! அந்த மறுமை முற்றிலும் வித்தியாசமான ஒன்று. நாம் கட்டிய வீடுகளோ, சேகரித்து வைத்திருக்கின்ற செல்வங்களோ, இந்த உலகத்தில் இருந்து நமக்கு எதுவும் அங்கே வராது. எதை நாம் முற்படுத்திக் கொண்டோமோ அதை தவிர.
 
தர்மமாகவும், அமல்களாகவும், இபாதத்துகளாகவும், அல்லாஹ்வுடைய பாதையில் நாம் எதை கொடுத்தோமோ, அதை தவிர எதுவும் அங்கே இருக்காது. அந்தத் தோழர் சொல்கின்றார். யா!ரசூலல்லாஹ்! நான் அதிகமான அமல்களையோ, அதிகமான நோன்பையோ, நான் எதையும் வைத்திருக்கவில்லையே. என்னிடத்தில் எதுவும் இல்லையே என்று சொல்கின்றார்.
 
சுபஹானல்லாஹ்! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழரிடத்திலே மீண்டும் பார்க்கின்றார்கள். யா!ரசூலல்லாஹ்! என் இடத்தில் அதிகமான அமல்கள் இல்லையே. இபாதத்துகள் என்னிடத்தில் அதிகமாக இல்லையே,  என்று சொல்லிவிட்டு அவர் சொல்கின்றார்.  என்றாலும் நான் அல்லாஹ்வை நேசிப்பவனாக இருக்கின்றேன். அல்லாஹ்வுடைய ரசூல் ஆகிய உங்களை நேசிப்பவனாக இருக்கின்றேன். இதுதான் என்னிடத்தில் இருக்கிறது அல்லாஹ்வின் தூதரே! என்ன வார்த்தையை சொன்னார்கள் பாருங்கள். இது உள்ளத்தில் இருந்து வரக்கூடிய வார்த்தையாக இருக்க வேண்டும். யதார்த்தமான வார்த்தையாக இருக்க வேண்டும்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6167
 
அங்கே ஜோடிப்பதர்கோ, பகட்டாக  புகழ்வதற்கோ, ரசூலுல்லாஹ் உடைய சபையிலே வேலை இருக்காது. முடியாது. உடனே அல்லாஹு தஆலா நயவஞ்சகன் என்ற வசனத்தை இறக்கி விடுவான். பொய்யன். உங்களை ஏமாற்றுவதற்காக இப்படி போலியாக பேசுகின்றான் என்று அல்லாஹ் வசனத்தை இறக்கி விடுவான்.
 
உங்களைப் பேச்சிலே கவர பார்க்கின்றான் என்று அல்லாஹு தஆலா வசனத்தை இறக்கி விடுவான். அந்த தோழர் சொல்கின்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அப்படியா? நீ யாரை நேசிக்கின்றாயோ, அவர்களோடு இருப்பாய். மனிதன் யாரை நேசிக்கின்றானோ, அவர்களோடு இருப்பான் என்று சொல்கின்றார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6167
 
இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள். எங்களுக்கு அன்றைய நாள் மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாக இருந்தது. சஹாபாக்களுக்கு இந்த வார்த்தை கூறப்பட்ட அந்த நாள் மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாக இருந்தது. ஏன் சொன்னார்கள்.
 
அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தார்கள் உண்மையாக. அல்லாஹ்வுடைய ரசூலை நேசிப்பவர்களாக இருந்தார்கள்  உண்மையாக. இந்த ஹதீஸை அடுத்த பிற்காலத்திலே அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் பொழுது, 
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கின்றார்கள். அல்லாஹ்வுடைய ரசூலுக்கு பத்து ஆண்டுகள் இடைவிடாமல் பணிவிடை செய்த, பயணத்திலும், உள்ளூரிலும், போரிலும் ரசூலல்லாஹ்விற்கு தோழராக இருந்த அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள். நான் அல்லாஹ்வுடைய ரசூலை நேசிக்கின்றேன். நான் அபூபக்கரை நேசிக்கின்றேன். நான் உமரை நேசிக்கின்றேன். நாளை மறுமையில் நான் அவர்களோடு எழுப்பப்படுவேன் என்று ஆதரவு வைக்கின்றேன்.
 
யோசித்துப் பாருங்கள்.  சகோதரர்களே! நம்முடைய அமல்களால் ஆதரவு வைக்க முடியாததை, நம்முடைய அமல்களால் ஆதரவு வைக்க முடியாததை, அல்லாஹ்வின் மீது உண்டான அன்பால் ஆதரவு வைத்து விடலாம். அல்லாஹ்வுடைய அன்பு. அவ்வளவு ஒரு பவர்ஃபுல்.  அவ்வளவு ஒரு பலம் மிக்கது. வலிமை மிக்கது. அல்லாஹு தஆலா இந்த அன்பிற்காகவே  நபிமார்களை சோதித்தான். அவர்களது உள்ளத்திலே அன்பு எவ்வளவு இருக்கிறது என்று நம்முடைய வணக்க வழிபாடுகளில்,
 
மிகப்பெரிய முக்கிய வணக்க வழிபாடு ஆகிய இந்த ஹஜ். இந்த அன்பிற்கான மிகப்பெரிய பாடமாக, படிப்பினையாக, எதார்த்த உண்மையாக, இருக்கிறது. இந்த ஹஜ் வணக்கத்தினுடைய, அந்தப் புரட்சி, இரண்டாம் புரட்சி என்று சொல்லலாம். இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களைக்கொண்டு அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த காபாவை மீண்டும் உயர்த்தி கட்டி எழுப்பி தன்னுடைய அன்பின் அடையாளமாக அவர்களை ஆக்கினான்.
 
அன்பிற்கான தியாகங்களை. புரிய வேண்டும் என்றால், அன்பிற்காக எதை எல்லாம் செய்யலாம். அல்லாஹ்வுடைய அன்பிற்காக எதை எல்லாம் இழக்கலாம். என்பதற்கு மூமின்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டுமென்றால், மூமின்களுக்கு ஒரு முன் உதாரணம் இருக்க வேண்டும் என்றால்,  அதற்கு இலக்கணமாக. அதற்கு முன் படிப்பினையாக, அல்லாஹு தஆலா இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை ஆக்கினான்.
 
ஹஜ் உடைய வரலாற்றை நினைவு கூறும் பொழுது, ஹஜ் உடைய இபாதத்தை நாம் படிக்கும் பொழுது, இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட்டு பிரித்து அதை படிக்க முடியாது. உணர முடியாது. ஹஜ் உடைய வணக்க வழிபாடுகளோடு, இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களுடைய இபாதத்தையும், தியாகத்தையும், அல்லாஹு தஆலா ஒன்றோடு ஒன்று  பிணைத்து விட்டான், இணைத்து விட்டான். காபா மீண்டும் உயர்த்தி கட்டி எழுப்பப்பட்டது. இப்ராஹிம் அலைஹிஸ் சலாத்து வஸ்ஸலாம்  அவர்களுடைய அந்த அர்ப்பணிப்பினால், அவர்களுடைய தியாகத்தினால்.
 
பிறகு அந்த காபாவை சுற்றி செய்யப்படக்கூடிய, அமல்களை,  இபா தத்துக்கள். இவையெல்லாம், இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் காட்டி தந்தவை. அவர்கள் எப்படி அல்லாஹ்விற்கு உற்ற நேசராக மாறினார்கள். அந்த அன்பினுடைய அடையாளமாக, எப்படி அல்லாஹு தஆலா ஹஜ்ஜை நமக்கு ஆக்கி இருக்கின்றான்.
 
அன்பு சகோதரர்களே! அதை புரியாமல், உணராமல் பலர்  இன்று ஹஜ்க்காக செல்வது. மிகப்பெரிய ஒரு வேதனைக்குரிய விஷயம். ஹஜ் செய்யக்கூடியவர்கள். பல வகையில் இருக்கின்றார்கள். ஒன்று. (வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டவர்கள்.) (2) வேறு வழி இல்லை பிள்ளை கழுத்தை பிடித்து தள்ளுகின்றான். மனைவி இழுக்கின்றாள் என்பதற்காக ஹஜ்க்கு வந்தவர்கள்.
 
இவர்கள் ஒரு பக்கம். இவர்கள் இந்த நிலையில் வந்தாலும் கூட, இவர்களையும் அல்லாஹு தஆலா ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றான். வந்ததற்கு பிறகு, இவர்கள் தங்களுடைய நிய்யத்தை மாற்றிக் கொண்டாள். அல்லாஹ்வின் பக்கம் திரும்பி விட்டால். அல்லாஹ் நம்முடைய ரப்பு எத்தனைவன் என்றால், எந்த பாவியையும் ஒருபோதும் அவன் நிராசை அடையச் செய்வதில்லை.
 
நீங்கள் எப்படி எந்த அளவு அல்லாஹ்வை புறக்கணித்து சென்றாலும் சரி. அல்லாஹு தஆலா உங்களை நிராசை ஆக்க மாட்டான். இறுதி மவ்த் வரை அல்லாஹு தஆலா அவகாசம் கொடுப்பான். தன்னுடைய அடியானுக்கு. அவன் ரஹ்மான், ரஹீம், கரீம், Rauf ஆக இருக்கின்றான். என்னுடைய அடியான் இறுதி மூச்சுக்கு முன்னால் திரும்பினால் கூட அவனை நான் மன்னிக்க தயார். அத்தகைய பேரருளாளன் அவன். சிலர் என்ன நினைக்கின்றார்கள்?
 
எல்லா கடமையும் முடிந்துவிட்டது. சரி. இது ஒன்று மீதம் இருக்கிறது. பலர் கேட்கின்றார்கள். போய் வந்து விடுவோமே என்று தொட்டும் தொடாமலும், உள்ளம் ஈடுபடாமல், ஒரு உணர்வு இல்லாமல், இப்படியாக செல்பவர்கள். இன்னொரு கூட்டம் இருக்கின்றார்கள். அல்லாஹ் என் மீது கடமையாக்கிய கடமை, அல்லாஹு தஆலா என்னை இந்த கடமையின் மூலமாக சோதிக்க விரும்புகின்றான். என்னுடைய செல்வத்தையும் மனமுவந்து இதற்கு செலவழிக்க நான் தயாரா? இந்த ஹஜ்ஜி லே ஏற்படக்கூடிய சிரமங்களை எல்லாம் மனமுவந்து சந்திக்க நான் தயாரா? எனக்கு விருப்பமான, எனக்கு பழகிப்போன, வணக்க வழிபாடுகளில், என்னுடைய மனது ஈடுபடுகிறதே! நான் பழகாத, நான் இதுவரை செல்லாத, ஒரு புதிய இடத்திற்கு, பழகாத பல அமல்களை செய்வதற்கு அல்லாஹு தஆலா எனக்கு இப்போது ஒரு கட்டளையை வைத்திருக்கிறான். நான் எப்படி அதை இப்போது ஈடு பாட்டுடன் செய்ய இருக்கின்றேன்.
 
இந்த இபாதத்திலே என்னுடைய மனம் எந்த அளவு நாட்டம் கொள்கின்றது. இதிலே நான் எந்த அளவிற்கு அல்லாஹ்விற்கு நான் விருப்பத்தை வெளிப்படுத்தப் போகின்றேன். என்று அல்லாஹ் என்னை சோதிக்க விரும்புகின்றான். அந்த சோதனையில் நான் வெற்றி பெற வேண்டும். அல்லாஹ்! நீ என்னிடமிருந்த நல்லதை தவிர வேற எதையும் பார்க்க கூடாது.
 
உன்னுடைய அன்பை தவிர வேறு எதையும் பார்க்க கூடாது. உனக்கு முன்னால் பணிவதை தவிர நீ எதையும் பார்க்க கூடாது. உனக்கு கீழ்படிவதை தவிர என்னிடமிருந்த வேறு எதுவும் வெளிப்பட்டு விடக்கூடாது என்று நான் அல்லாஹ்விற்கு உண்மையான, அவனை நேசிக்கக்கூடிய, அடிமையாக இருக்கின்றேன். நான் அவனுக்காக எதையும் துறக்க தயார். நான் அவனுக்காக என்னை மாற்றிக் கொள்ள தயார். என்னுடைய கண்ணியத்தை இழக்க தயார்.
 
எந்த இடத்தில் படுக்க சொன்னாலும் அதற்குத் தயார். எங்கே ஓட சொன்னாலும் அதற்கு தயார். எங்கே மாற சொன்னாலும் அதற்கு தயார். எத்தகைய சிரமங்களுக்கும் என்னுடைய ரப்புக்காக நான் தயார். அவனுக்கு பணிவதில் தான் என்னுடைய கண்ணியம் இருக்கிறது. அவனுக்காக என்னுடைய கண்ணியத்தை தூ றப்பதில் தான் எனக்கு கண்ணியம் இருக்கிறது.
 
இம்மையிலும் மறுமையிலும். இத்தகைய ஈமானிய உணர்வுகளோடு, வரக்கூடியவர்கள் இருக்கின்றார்களே, அவர்கள் தான் உண்மையில். இந்த தல்பியாவை அவர்கள் ஓதுவதற்கு தகுதியானவர்கள். யார் அல்லாஹ்வுடைய அந்த அன்போடு, அந்த ஏக்கத்தோடு அல்லாஹ்விற்கு முன்னால், அவன் என்னை பணிந்தவனாக, பயந்தவனாக, அவனுடைய ஒரு அன்பனாக, ஒரு நேசர் ஆக ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ற அந்த ஏக்கத்தோடு அல்லாஹ்வுடைய அந்த வீட்டை நோக்கி ஓடி வருகின்றார்களே, அவர்களுடைய இந்த தல்பியா. அதை அல்லாஹு தஆலா ரசிக்கின்றான்.
 
அந்த தல்பியாவை அல்லாஹ் விரும்புகின்றான். அவர்கள் சொல்லக்கூடிய அந்த தக்பீரை அல்லாஹு தஆலா எதிர்பார்க்கின்றான். அத்தகைய ஹாஜிகள் ஒன்று சேரக்கூடிய அந்த அரபாவை அல்லாஹ் விரும்புகின்றான். அத்தகைய ஹாஜிகள் ஒன்று சேரக்கூடிய அந்த முஸ்தலிபாவை அல்லாஹ் விரும்புகின்றான்.
 
தங்களுடைய மாடமாளிகைகள், வசதிகள், அனைத்தையும் விட்டு கூடாரங்களிலும், கூடாரங்கள் இல்லாமலும், அல்லாஹ்விற்காக நின்று கொண்டிருக்கின்றார்களே, சிரமப் படுகின்றார்களே, இந்த சிரமத்தின் போது, அவர்களுடைய உள்ளங்கள் எப்படி துடிக்கின்றன, அல்லாஹ்வின் அன்பிற்காக. அல்லாஹ்வின் மன்னிப்பிற்காக. அல்லாஹ்வின் ஏ க்கத்திற்காக. அதை அல்லாஹு தஆலா ஹாஜிகளிடமிருந்து பார்க்க விரும்புகின்றான்.
 
அந்த ஏக்கத்திற்காக வரக்கூடியவர்களை அல்லாஹு தஆலா ஹாஜிகள் என்று ஏற்றுக்கொள்கின்றான். அவர்களுக்கு அல்லாஹு தஆலா சொர்க்கத்தை கூலியாக தர தயாராக இருக்கின்றான். அவர்களுக்கு அல்லாஹு தஆலா அவர்களுடைய பாவங்களை மன்னிக்க தயாராக இருக்கின்றான். அன்பானவர்களே! ஹஜ் என்பது ஒரு சுற்றுலா அல்ல. வசதி இருக்கிறது. நம்முடைய வசதிக்கு ஏற்ப செல்வோம். வசதிக்கு ஏற்ப தங்குவோம்.
 
கையில் நிறைய பணம் இருக்கிறது. நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும், அன்பளிப்புகளை வாங்கி வருவோம். என்று செல்லக்கூடிய பயணம் அல்ல இந்த ஹஜ் என்பது. இது ஈமானுக்கான சோதனை. இது நம்முடைய இஸ்லாமிற்கான சோதனை. இது நம்முடைய இக்லாஸுக்கான சோதனை. இது நாம் அல்லாஹ்விற்கு பணிகின்றோமா? கட்டுப்படுகின்றோமா? அல்லாஹ்விற்காக நாம் எதை இழக்க தயார். என்பதற்கான சோதனை.
 
وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا
 
யார் அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைப்பாரோ (-அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபடுவாரோ); - அவரோ நற்குணமுடையவராக இருக்கும் நிலையில், - இன்னும், இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியானவராக (இணைவைத்தலை விட்டு முற்றிலும் விலகியவராக) பின்பற்றுவாரோ அவரை விட மார்க்கத்தால் (-கொள்கையால்) மிக அழகானவர் யார்? இன்னும், அல்லாஹ் இப்ராஹீமை (தனது) உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன் 4 : 125)
 
அல்லாஹு தஆலா எப்படி கேட்கின்றான் தெரியுமா? சூரா அன் நிsaa உடைய 125 வது வசனத்தை படித்து பாருங்கள். உங்களில் மார்க்கத்தால். மார்க்க பற்றினால். அந்த மார்க்க பிடிப்பு. இந்த மார்க்கத்தால் அழகானவர் யார் தெரியுமா? அல்லாஹ் கேட்கின்றான்?  என்னுடைய மார்க்கப்பற்று அல்லாஹ்விடத்தில் மிக அழகாக இருக்கிறது.
 
 அதாவது மிக சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு அடையாளம் என்ன? அல்லாஹ் சொல்லுகின்றான். தன்னை, தனது முகத்தை அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிய வைத்து விட்டவன். இவனை விட மார்க்கத்தால் அழகானவர் யார் இருக்க முடியும்? அதாவது. 
 
அல்லாஹ்விற்கு, அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முற்றிலுமாக பணிந்து விடுவது. கட்டுப்பட்டு விடுவது. அந்த கட்டளையை இன்பத்தோடு செய்வது. வலுக்கட்டாயத்தின் பெயரில் அல்ல. நிர்பந்தத்தின் பெயரில் அல்ல. வேண்டா வெறுப்புக்கு அல்ல. கசப்போடு அல்ல. வேறு வழியில்லை என்பதற்காக அல்ல. அந்த சிரமம், அந்த கஷ்டம், அந்த கடினம், நமக்கு விருப்பமானதாக ஆக வேண்டும்.
 
இதற்கு சோதனை அல்லாஹ் சுபஹானஹூதஆலா இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை கொண்டும், அவர்களுடைய மகனாரை கொண்டும்,  நமக்கு படிப்பினை தருகின்றான்.
 
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ , فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
 
ஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன்ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.” ,ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.
 
சகோதரர்களே! நினைத்துப் பாருங்கள். சூரா saafஃபாத் உடைய 102,103 வது வசனத்தை ஓதி பாருங்கள். ஏன் ஹஜ் உடைய வணக்க வழிபாடு. இப்ராஹிம் நபியோடு தொடர்பு பாடுகிறது. அல்லாஹு தஆலா இப்ராஹிம் நபிக்கு ஒரு கனவை தருகின்றான். அந்த கனவை தனது மகனுக்கு முன்னால் சொல்லிக் காட்டுகின்றார்கள்.
 
மகனே!  என் அன்பு மகனே! நான் ஒரு கனவிலே பார்த்தேன். உங்களை நான் அறுப்பதாக. கண்டிப்பாக தெரியும் அல்லாஹ்வுடைய கட்டளை என்று. அல்லாஹு தஆலா நபிமார்களுக்கு கனவிலே காட்டுவது அல்லாஹ்வுடைய கட்டளை. எவ்வளவு பாசமான குழந்தை. அல்லாஹ்விடத்திலே துஆ செய்து கிடைக்கப்பெற்ற குழந்தை.
 
அல்லாஹ்வால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. அந்த குழந்தையின் உயர்வை அல்லாஹ் சுபச் செய்தியாக அந்த நபிக்கு சொன்னான். அல்லாஹ்வால் நற்செய்தி சொல்ல பட்ட குழந்தை. அந்த குழந்தையை பார்த்து சொல்லுகின்றார்கள். உன்னை நான் கழுத்திலே அறுப்பதாக பார்த்தேன் மகனே! நீ என்ன சொல்கிறாய் என்பதை நீ யோசித்து எனக்கு பதில் சொல். அந்த மகன் சொல்கின்றார். 
 
அவர்களுக்கு இது எத்தகைய கஷ்டமாக இருக்கும். என் பாசத்திற்குரிய தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்! பொறுமையாளர்களில் தான் நீங்கள் என்னை காண்பீர்கள். பிறகு அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அந்த இருவரும் அல்லாவிற்கு பணிந்துவிட்ட பொழுது, இப்ராஹிம் தனது மகனை அறுப்பதற்கு பணிந்துவிட்டார் அல்லாஹ்விற்கு முன்னால்.
 
மகன் அல்லாஹ்விற்கு முன்னால் தான் அருப்படுவதை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வுடைய கட்டளைக்கு பணிந்து விட்டார். முகம்  குப்புர இப்ராஹிம் தனது மகனை கிடத்துவிட்ட பொழுது, பிறகு அல்லாஹ் சுபஹானஹூதஆலா சொர்க்கத்தின் ஒரு பலிப் பிராணியை இறக்கி அவர்களுக்கு பகரமாக அல்லாஹு தஆலா ஆக்கி கொடுத்தான்.
 
அன்பு சகோதரர்களே!இப்ராஹிம்  நபி உடைய இந்த மில்லத்தை பின்பற்றுவது நாம் உண்மையாக, நம்முடைய அந்த பின்பற்றுதல் உண்மையாக இருக்குமேயானால், அல்லாஹ்வுடைய எந்த தேசத்திற்காக தன்னுடைய மகனை அறுப்பதற்கு, இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் தயார் ஆனார்களோ, அல்லாஹ்வுடைய எந்த அன்பிற்காக தான் அருப்படுவதை அந்த மகனார் ஏற்றுக் கொண்டார்களோ, அந்த அன்பு நம்முடைய ஹஜ்ஜில வெளிப்பட வேண்டும்.
 
அந்த அன்பிற்காக வேண்டி ஹஜ்ஜை நோக்கி நாம்  ஓட வேண்டும். அந்த ஹஜ்ஜுலே நாம் படக்கூடிய ஒவ்வொரு இன்னல்களையும், சிரமங்களையும், இடையூறுகளையும், அசௌ கரியங்களையும், ஒவ்வொரு நெருக்கடிகளையும், அல்லாஹ்வுடைய அந்த அன்பிற்காக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, அதை கொண்டு அல்லாஹ்விடத்திலே அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அல்லாஹ்வுடைய அருளையும் தேம்பித் தேம்பி தேடக்கூடியவர்களாக, கெஞ்ச கூடியவர்களாக இருக்க வேண்டும்.
 
அப்படி இருந்தால் நாம் செய்யக்கூடிய ஹஜ். ஹஜ் ஆக இருக்கும். அதை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இருக்கும். நம்முடைய சுகங்களுக்காக, நம்முடைய ஆடம்பரங்களுக்காக, நம்முடைய பெயர் புகழுக்காக, நம்முடைய இன்ன பிற நோக்கங்களுக்காக, ஹஜ்ஜு செய்யப்படுமே யானால், அது உலகத்தில் வேண்டுமானால், உங்களுக்காக ஹாஜி என்றோ, அல்லது டபுள் ஹஜ் செய்திருந்தால், 
 
அல்ஹாஜி என்றோ, உங்களுக்கு கல்யாண பத்திரிகைகளிலும் மஸ்ஜிதுடைய அந்தப் பெயர்  பலகை களிலும் பெயர்கள் வேண்டுமானால் முன் பின் சேர்ந்து கொள்ளலாமே தவிர,  அல்லாஹ்விடத்திலே, எந்த ஹாஜிகள், அல்லாஹ்வுடைய குழுக்கள், அல்லாஹ்வுடைய விருந்தாளிகள் என்று சொல்லப்படுகின்றதோ, அந்த ஹாஜிகளுடைய பட்டியலில் ஆக முடியாது.
 
அல்லாஹ் சுபஹானஹூதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய நேசர்களுக்கு, அல்லாஹ்வை விரும்பக் கூடியவர்களுக்கு, அல்லாஹ்வுடைய அன்பிற்காக, அல்லாஹ்வுடைய மன்னிப்பிற்காக வாழக்கூடியவர்களுக்கு எந்த ஹஜ்ஜை நசீப் ஆக்கினானோ,
 
அல்லாஹ்வுடைய நபிமார்களும், இறை நேசர்களும், நல்லவர்களும், ஹஜ்ஜை எந்த நோக்கத்திற்காக செய்தார்களோ, அந்த நோக்கத்திற்காக செய்யக்கூடியவர்களாகவும், அதன் நோக்கத்தை பெற்றவர்களாகவும், அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக!  அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டை செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும், மனத்தூய்மையையும், அல்லாஹ்வுடைய பயத்தையும், அல்லாஹ்வுடைய அன்பையும் தந்தருள்வானாக! மறுமையிலே சொர்க்கத்தை தந்துருவானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469fa044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/