HOME      Khutba      முஃமின்களே மனம் தளராதீர்கள்!!! | Tamil Bayan - 608   
 

முஃமின்களே மனம் தளராதீர்கள்!!! | Tamil Bayan - 608

           

முஃமின்களே மனம் தளராதீர்கள்!!! | Tamil Bayan - 608


மூஃமின்களே மனம் தளராதீர்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மூஃமின்களே மனம் தளராதீர்கள்
 
வரிசை : 608
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : H-22-05-1441| 17-01-2020
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
நாம் இப்போது கடந்து கொண்டிருக்கின்ற நிலைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள். இந்த நேரத்தில் நமக்கு ஒரு பக்கம் கவலை எது என்று சொன்னால் நம்முடைய வாலிபர்களை நெறிப்படுத்த கூடிய அல்லாஹ்வின் மார்க்கத்தை நினைவுபடுத்த கூடிய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றி எந்த ஒரு காரியத்தையும், திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்,
 
என்ற அறிவுறுத்தல்கள், நினைவூட்டல்கள் அவர்களிடம் குறைந்துகொண்டே போகின்றதோ ,அநியாயத்திற்கு எதிராக நம்மீது இழைக்கப்படக்கூடிய அந்தத் துன்பத்திற்கு எதிராக நம்முடைய உரிமைகளைக் கேட்டுப் பெறுவது நம்முடைய ஹக்குகள் நமக்கென்று என்னென்ன சலுகைகள் இருக்கின்றனவோ அவற்றைக் கேட்டுப் பெறுவது அதில் தவறு கிடையாது.
 
அவசியமான,கடமையான ஒன்றாகும். ஆனால், அவற்றைக் கேட்கின்றோம்; நிறைவேற்றுகின்றோம்; அவற்றிற்காக போராடுகின்றோம் என்ற பெயரில் வணக்க வழிபாடுகளை பாழாக்குவது, வணக்க வழிபாடுகளை அலட்சியம் செய்வது, ஆண்கள் பெண்கள் என்ற ஒவ்வொரு சாராருக்கும் அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய அந்த வரம்புகளை மீறுவது, அன்னியர்களின் கலாச்சாரத்தில் கரைந்து போய் இஸ்லாமிய அடையாளங்களை தொலைத்துக் கொள்வது.
 
மேலும், அல்லாஹ் எதை நமக்கு தடை செய்து இருக்கின்றானோ அதன் மூலமாக நாம் நம்முடைய இந்த போராட்டங்களை எடுத்துச் செல்வது, இதெல்லாம் மேலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ! அல்லாஹ்வின் கோபத்தை அதிகப்படுத்திவிடுமோ! என்று பயப்படக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம் அல்லாஹ்  பாதுகாப்பானாக!
 
ஒரு முஸ்லிம் ஒரு முஃமின் அவன் மனம் தளர வேண்டிய அவசியமில்லை அவன் எதிர்கொள்கின்ற துன்பங்களை,ஆபத்துகளை அழிவுகளை இன்னும், எதிரிகளின் தாக்குதல்களை பார்த்து அவன் மனம் தளர வேண்டிய அவசியமில்லை. பயப்பட வேண்டிய அவசியமில்லை, கோழையாக வேண்டிய அவசியமில்லை.
 
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
 
நீங்கள் கோழையாகி விடாதீர்கள். பலவீனப்பட்டு விடாதீர்கள். எதிரிகளின் தாக்குதல் எதிரிகளின் அச்சுறுத்தல்களால் மன சஞ்சலத்திற்க்கு ஆளாகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 139)
 
அல்லாஹ் உங்களைக் கை விட்டு விடுவானோ நாமெல்லாம் அழிந்து விடுவோமோ! இவ்வளவு தான் நமக்கு அல்லாஹ்வுடைய உதவியோ! என்றெல்லாம் நீங்கள் சஞ்சலத்தில் ஆளாகி விடாதீர்கள். நீங்கள்தான் உயர்வீர்கள் நீங்கள்தான் மிகைப்பீர்கள்.   
 
நீங்கள் முஃமின்களாக இருந்தால், நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் நீங்கள்தான் மிகைப்பீர்கள்; வெற்றி கொள்வீர்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான். அல்லாஹ் நாடாமல் எந்த ஒரு சோதனையும் நம்மை தீண்டாது அல்லாஹ் நாடாமல் நமக்கு எந்த ஒரு துன்பமும் நேராது இதுதான் ஒரு முஃமினுடைய நம்பிக்கை.
 
قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوْلَىٰنَا وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
 
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (எதுவும்) எங்களுக்கு அறவே ஏற்படாது. அவன்தான் எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)க்கவும். (அல்குர்ஆன் 9 : 51)
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படவில்லையா? அவர்களை எதிரிகள் அச்சுறுத்த வில்லையா? அவர்களை எதிரிகள் அடிக்கவில்லையா? அல்லாஹ்வுடைய வீட்டிலேயே அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது அபூஜஹல் ரசூலுல்லாஹ்வை கொல்வதற்காக வரவில்லையா? 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவருடைய கழுத்தில் அவர்கள் சுஜூதிலே இருந்தபோது ஒட்டகத்தின் குடல்களை வந்து போடவில்லையா? ரசூலுல்லாவையும் நபியின் தோழர்களையும் காபாவில் தவாப் செய்யாமல் அங்கே உம்ராவை நிறைவேற்ற முடியாமல் முஷ்ரிக்குகள் தடுக்க வில்லையா?
 
كان رسول الله - صلى الله عليه وسلم - يطوف بالبيت ويده في يد أبي بكر ، وفي الحجر عقبة بن أبي معيط وأبو جهل وأمية بن خلف فمر رسول الله - صلى الله عليه وسلم - فأسمعوه بعض ما يكره ثلاث مرات ، فلما كان في الشوط الرابع ناهضوه ، وأراد أبو جهل أن يأخذ بمجامع ثوبه فدفعته ، ودفع أبو بكر أمية بن خلف ، ودفع رسول الله - صلى الله عليه وسلم - عقبة فهذا السياق مغاير لحديث عبد الله بن عمرو ، وفي حديث عبد الله قول أبي بكر : " أتقتلون رجلا أن يقول ربي الله ؟ "
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி எண் : 233 
 
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين
 
முஃமின்களே அந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள் இறை நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை நிராகரித்த காபிர்கள்  நபியை சிறை பிடிக்க வேண்டுமென்ற சதித்திட்டம் தீட்டினார்கள். எந்த நபியினுடைய பாட்டன் மக்காவை உருவாக்கினாரோ எந்த நபியினுடைய ரப்பு அல்லாஹுத்தஆலா நபியை மக்காவிற்கு சொந்தக்காரனாக ஆக்கினாரோ எந்த வீட்டை அல்லாஹூதஆலா தன்னுடைய கலீல் மூலம் அல்லாஹ் உயர்த்தினானோ அந்த நபியின் வம்சத்தில் வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அந்த முஷ்ரிக்குகள் மக்காவிலேயே சிறை செய்து வைத்துவிட வேண்டும்.
 
அவர்களின் நான்கு சுவற்றில் சிறைப்பிடித்து வைத்துவிடவேண்டும் சங்கிலிகளால் பிணைத்து விட வேண்டும் அல்லது உங்களை கொலை செய்துவிட வேண்டும் .என்ன குற்றம் செய்தார்கள்? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் முஷ்ரிக்குகள் சூழ்ந்துகொண்டு அடித்தபோது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓடோடி வருகிறார்கள்.
 
أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ   
 
என்னை படைத்து பரிபாலிப்பவன் ரப்பி அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொள்ளப் போகிறீர்கள் .அல்லது இந்த மக்காவிலிருந்து உங்களைத் துரத்தி விட வேண்டும் என்று அந்த காஃபிர்கள் சதி திட்டம் தீட்டி அதை நபியே நீங்கள் நினைத்துப் பாருங்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3678
 
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
 
அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான் சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் மிகச் சிறந்தவன். திட்டங்கள் தீட்டுவதில் அல்லாஹ் மிக மேலானவன். )அல்குர்ஆன்: 8 : 30(
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு துன்பம் ஏற்படவில்லையா? அவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வில்லையா? நபியின் தோழர்கள் அபூபக்கர் இலிருந்து ரதியல்லாகு அன்ஹு எத்தனை சஹாபாக்கள் இந்த பூமியிலே வாழ்ந்தார்களோ அவர்கள் எதிரிகளால் அச்சுறுத்த படவில்லையா?அவர்களில் எத்தனைபேர் எதிரிகளால் கொடுமையாக கொல்லப்பட்டார்கள்.
 
கப்பாபை  நினைத்துப் பார்க்க வேண்டாமா சுமைய்யாவை நினைத்துப் பார்க்க வேண்டாமா? இன்னும் எத்தனை தோழர்கள் ஹூபைபை நினைத்துப் பாருங்கள் முஸாபை நினைத்துப்பாருங்கள் நபியின் தந்தையின் சகோதரர் ஹம்ஸாவை  நினைத்துப்பாருங்கள் எத்தனை தோழர்கள் அன்பு சகோதரர்களே நம்முடைய நம்பிக்கை என்ன அல்லாஹ்வின் நாட்டத்தின் படிதான் இந்த உலகத்தில் எல்லாம் நடக்கின்றது.
 
நமக்கு வரக்கூடிய சோதனை அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நடக்காது அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது இந்த சோதனையை அல்லாஹ் ஏன் கொடுத்தான் இந்த சோதனையிலிருந்து அல்லாஹ் நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கின்றான் இதிலிருந்து நாம் மீள்வதற்கு உண்டான குர்ஆன் கூறக்கூடிய தீர்வு என்ன ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை அச்சுறுத்தல்களை எப்படி எதிர்கொண்டார்கள் அந்த வழிகாட்டுதல் நம்மிடத்தில் இல்லையா? குர்ஆனை நாம் படிக்கவில்லையா  
 
قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ   
 
நிச்சயமாக அதிகாரம் கட்டளை அல்லாஹ்வுக்கு உரியதுஉலக மக்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் சரிஅல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்குமா? ஏன் அல்லாஹ்வை மறக்கின்றோம். )அல்குர்ஆன் 3 : 154(
 
فوالله لو اجتمع الإنس والجن على أن ينفعوك بشيء لن ينفعوك إلا بشيء قد كتبه الله لك , ولو اجتمعوا على أن يضروك بشيء فلن يضروك بشيء إلا قد كتبه الله عليك
 
இப்னு அப்பாஸிற்க்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கூறிய அறிவுரையை  கொண்டு நாம் படிப்பினை பெற வேண்டாமா? மகனே சிறுவனே மனிதர்கள் எல்லாம் ஜீன்கள் எல்லாம் ஒன்று கூடிஉனக்கு ஒரு தொந்தரவை தரவேண்டும் என்று உனக்கு ஒரு சிரமத்தை தர வேண்டும் என்று ஒன்றுகூடி முயற்சி செய்தாலும்சரி  அல்லாஹ் உனக்கு விதியில் எதை எழுதி விட்டானோஅதைத் தவிர எந்த தொந்தரவையும் எந்த சிரமத்தையும் கொடுக்க முடியாதுஅல்லாஹ்வுடைய நாட்டம் 
 
அறிவிப்பாளர் : இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல் : திர்மிதி எண் : 2516
 
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ
 
அவன் நாடினால் ஆகு என்றுதான் கூறுவான் அது ஆகிவிடும்  ஆட்சி அதிகாரங்கள் சர்வவல்லமை  சர்வ லோகத்தின் ராஜ்யம் அல்லாஹ்வினுடைய கையில் இருக்கின்றது .அவன் பரிசுத்தமானவன் நீங்கள் அவனிடம்தான் கொண்டு வரப்படுவீர்கள் இந்த பூமியிலே அல்லாஹுத்தஆலா ஆட்சி அதிகாரத்தை சிலநேரங்களில் முஸ்லிம்களுக்கு கொடுப்பான் சில நேரங்களில் சோதிப்பதற்காக முஸ்லிம்களுடைய எதிரிகள் இடத்திலே கொடுப்பான். (அல்குர்ஆன்: 36 : 82, 83)
 
قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِين 
 
இந்த பூமி அல்லாஹ்விற்கு சொந்தமானது அவன் அவனுடைய அடியார்களில் யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாக்கி தருவான். ஆனால் முடிவு நல்ல முடிவு உயர்ந்த முடிவு மிகச்சிறந்த வெற்றி இம்மையின் வெற்றி மறுமையின் வெற்றி யாருக்கு உரியது லில் முத்தக்கீன் தக்வா உடையவர்களுக்கு.அல்லாஹ்வை பயந்தவர்களுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உயிரை கொடுத்தவர்களுக்கு இன்று பல சூழல்நிலை  இருக்கின்றது. நாம் இந்த நாட்டிலே துன்புறுத்தப்படுகின்றோம் என்றால்  நாம் மூமின்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் பழிதீர்க்க படுகின்றோம். (அல்குர்ஆன் 7 : 128) 
 
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ   
 
எப்படி அஸ்ஹாபுல்  உஹ்தூதை அல்லாஹ்  சொல்லி காட்டினானோ அவர்கள் மூமின்கள் என்ற ஒரே காரணத்திற்காக மிகைத்தவன் ஆகிய புகழுக்குரியவன் ஆகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அந்த அநியாயக்காரர்கள் இந்த முஸ்லிம்களை கொலை செய்தார்கள் கொடுமைப்படுத்தினார்கள் என்று அல்லாஹ் சொல்லுகின்றான். (அல்குர்ஆன்: 85 : 8)
 
நாம் மூமின்கள் என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் அந்த உயர்ந்த மார்க்கத்தை பின்பற்றினோம் பின்பற்றுகின்றோம் முஸ்லிம்கள் என்று நம்மை அடையாளப்படுத்திக் கின்றோம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் துன்புறுத்தப்படுகின்றோம்.
 
பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஆளாகின்றோம் ஆனால் அப்படி அச்சுறுத்தல்கள் வரும்பொழுது அப்படி இன்னல்கள் வரும்போது அப்படிப்பட்ட சோதனைகள் வரும்போது எனக்கும் இஸ்லாமிற்க்கும் சம்பந்தமில்லை எனக்கு தேவை இந்த உலகத்தின் வாழ்க்கை என்று சென்று விட்டாள்  பிறகு எப்படி நாம் சொர்க்கத்தைப் பெற முடியும்.
 
பிறகு எப்படி அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற முடியும் நாம் இப்போது என்னென்ன துன்புறுத்தல்களுக்கும்,  அச்சுறுத்தல்களுக்கும் எப்படி அல்லாஹ்வுடைய தூதரை அந்த மக்காவின் முஷ்ரிக்குகள் சூழ்ச்சிக்கு உள்ளாக்கினார்களோ இவ்வாறு கூறினார்கள்.
 
ஒன்று நபியை சிறைபிடித்து வைத்துவிடவேண்டும், இல்லையென்றால் நபியை கொள்ள வேண்டும், இல்லையென்றால் நபியை இந்த மக்காவை விட்டு துரத்தி விட வேண்டும் நபியை மட்டுமல்ல நபியோடு இஸ்லாமை ஏற்றுக்கொண்ட, கலிமாவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு சஹாபியையும் அதே அச்சுறுத்தலை தானே நாமும் சந்திக்கின்றோம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் எவ்வளவு உயர்ந்த நபி!, அல்லாஹ்விடத்தில் எவ்வளவு நெருக்கமானவர்கள் அவர்களுக்கு ஏற்படாததா? தாயிபிலே ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் சந்திக்காத சோதனைகளா? 
 
அறிவிப்பாளர் : ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 3477 
 
அவ்வளவு பெரிய அந்த நபியை ஊரே சேர்ந்து கொண்டு கல்லால் அடித்து அடித்து துரத்தி ஊருக்கு வெளியே கொண்டு வந்து விடுகின்றார்கள்.அல்லாஹுத்தஆலா நமக்கு என்ன சொல்கின்றான்.                      
 
 قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الْحُسْنَيَيْنِ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَنْ يُصِيبَكُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ عِنْدِهِ أَوْ بِأَيْدِينَا فَتَرَبَّصُوا إِنَّا مَعَكُمْ مُتَرَبِّصُونَ
 
நாம் முஃமினாக இருக்கின்றோம் முஸ்லிமாக இருக்கின்றோம் என்பதற்காக சோதிக்கப்படும் போது அந்த   சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக  அந்த இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்காக அந்த ஆபத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதற்காக இஸ்லாம் எனக்கு வேண்டாம் எனக்கு வேண்டியது வாழ்க்கை என்றால் பிறகு இந்த வாழ்க்கையால் என்ன பிரயோஜனம்? (அல்குர்ஆன் 9 : 52)
 
அப்படி வாழ்ந்து இந்த உலகத்திலே அப்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து விடுவோமா? ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதால் பிறகு மரணம் இருக்காதா? மரணத்திற்க்கு பிறகு விசாரணை இருக்காதா? இஸ்லாம் இல்லாத நிலையில், ஈமான் இல்லாத நிலையில், மரணித்து விட்டால் முடிவு இல்லாத அந்த மறுமை வாழ்க்கையிலே நரகத்தில் நிரந்தரமாக தங்கி விடுவானே அந்த பயம் நமக்கு இல்லையா? மூஸா அலைஹிஸ்ஸலாம் ஈமான் கொண்ட அந்த சூனியக்காரர்கள்  பிர்அவுன் இடத்தில் சொன்னார்களே? அல்லாஹ்வுடைய ஆதாபை பயப்படுகின்றோம் .
 
உன்னுடைய வேதனை நீ என்ன செய்து விடுவாய் நீ என்னதான் எங்களைக் கொடுமைப் படுத்தினாலும் இறுதியாக மரணம் தானே  நாங்கள் எங்களது ரப்பை பயப்படுகிறோம், எங்களது ரப்பு எங்களை மன்னிக்க வேண்டும், என்று ஆசைப்படுகின்றோம். ௨ன்னாள் என்ன செய்ய முடியும்   நீ எதை முடிவு செய்ய  வேண்டுமோ எங்கள் விஷயத்தில் அதை நீ முடிவு செய்து கொள்.
 
உன்னால் என்ன செய்ய முடியும் மாறுகால் மாறுகை வாங்குவாயா? கை கால்களில் வெட்டு வாயா உறுப்புகள் ஒவ்வொன்றையும் வெட்டுவாயா? கடைசியாக இந்த உலக வாழ்க்கையை தான் முடிக்க முடியும். உலகத்தின் ஒவ்வொரு துன்பத்தின் முடிவும் மரணத்தை கொண்டு முடிந்துவிடும் ஆனால், மறுமையின் துன்பம் மறுமையின் வேதனை அந்த நரக நெருப்பிலே முடிவில்லாத ஒன்று நிரந்தரமான ஒன்று ஹாலிதீன பீஹா அபதா      
 
قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا
 
(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் எது வந்ததோ அதை விடவும்; இன்னும், எங்களைப் படைத்த (இறை)வனை விடவும் உன்னை (பின்பற்றுவதை) நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை (முடிவு) செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ (முடிவு) செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)” (அல்குர்ஆன் 20 : 72) 
 
 إِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنْزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ  أَنْبِيَاءَ اللَّهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ  
 
இன்னும், “அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” எனக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னால் இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்ராத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே!) கூறுவீராக: “(உங்கள் வேதத்தை உண்மையாகவே) நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?” (அல்குர்ஆன் 2 : 90)
 
அல்லாஹுத்தஆலா நமக்கு சொல்லிக் காட்டுகின்றான் காபிர்கள் உங்களை சோதித்தாள், அச்சுறுத்தினால், பயமுறுத்தினாள், நபியே நீங்கள் சொல்லுங்கள் அவர்களைப்பார்த்து
 
 تَرَبَّصُونَ إِلَّا بِنَا إِحْدَى الْحُسْنَيَيْنِ  قُلْ هَلْ
 
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் இரண்டு வெற்றிகளில் ஒரு வெற்றி எங்களுக்கு ஒன்று உலகத்தில் அல்லாஹுத்தஆலா உங்கள் மீது ஆட்சியை கொடுப்பான் இல்லை உங்களால் நாங்கள் கொல்லப்பட்டால்  எங்களுக்கு சொர்க்கத்தில் வெற்றி. (அல்குர்ஆன்  9 : 52)
 
உஹது போர் முடியும்போது அபூ சுபியான் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் நடந்த அந்த உதாரணத்தை நினைத்துப் பாருங்கள் அந்த சம்பாஷணையை உரையாடலை நினைத்துப்பாருங்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கொடுக்க சொன்னார்கள்.
 
قتلانا وقتلاكم في الجنة    
 
எங்களில் யார் அல்லாஹ்விற்காக உயிர் நீத்தார்களோ  உயிர் கொடுத்தார்களோ அவர்கள் சொர்க்கத்திலே (உங்களில் யார் கொல்லப்பட்டார்கள் இறை நிராகரிப்பின் ஈமான் கொண்டவர்களை எதிர்ப்பதற்காக நடந்த அந்தப் போரிலே) உங்களில் யார் கொல்லப்பட்டார்களோ அவர்கள் நரகத்திலே அல்லாஹ் எங்களது எஜமானன் உங்களுக்கு எஜமானன் இல்லை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.,
 
அறிவிப்பாளர் : ஷஹல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 367
 
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا  
 
அல்லாஹ் நம்முடைய எஜமானன் எவ்வளவு பெரிய வார்த்தை தெரியுமா? ஒரு முஃமின் மனம் தளர வேண்டியதில்லை இந்த வார்த்தையை அவன் கூறும் போது அவன் பயப்பட படவேண்டிய சஞ்சலப்பட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை இந்த வார்த்தையை சொல்லும் பொழுது இந்த வார்த்தையை யார் சொன்னார் தெரியுமா? 
 
"حسبي الله ونعم الوكيل"
 
ஹஸ்பி அல்லாஹ் வ நியமல் வக்கீல் எவ்வளவு பெரிய வார்த்தை தெரியுமா?சூரா ஆல இம்ரானில் அல்லாஹு தஆலா ஒரு பெரிய சம்பவத்தை நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். உஹதுப் போர் முடிகிறது சகாபாக்கள் எல்லாம் பெரிய இன்னல்களில் இருந்தார்கள் கடுமையான காயம் 70 பேர் கொல்லப்பட்டு விட்டார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தலையில் காயம் முகத்தில் காயம் எந்த ஒரு ஸஹாபியும் வாளாலோ அல்லது ஈட்டியாலோ காயப்படாமல் மிஞ்சவில்லை. எல்லோரும் காயப்பட்டு இருக்கிறார்கள்,
 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து கட்டளை வருகிறது எதிரிகள் உங்களை தாக்குவதற்கு மீண்டும் வந்து கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் புறப்பட வேண்டும் என்று அப்போது சஹாபாக்களில் சிலர் எண்ணினார்கள் என்ன சோதனை இவ்வளவு துன்பத்திலே இருக்கிறோம்அப்படி இருந்தும் இப்படி நமக்கு மீண்டும் மீண்டும் ஒரு துன்பமா? இவ்வளவு வலியில் நாம் இருக்கின்றோமே எவ்வளவு வேதனைகளில் நாம் இருக்கின்றோமே,
 
இந்த நினைப்பு அவர்களுக்கு வந்தது அவ்வளவுதான் போக மாட்டோம் என்று சொல்லவில்லை, புறப்பட மாட்டோம் என்று சொல்லவில்ல அல்லாஹ்வுடைய தூதர் அழைத்த பொழுது வேறு வழி இல்லையா நமக்கு நீங்கள் துவா செய்து கராமத்து காட்டி விடமாட்டீர்களா? அற்புதத்தை காட்ட மாட்டீர்களா? இன்று அப்படித்தான் நாம் எதிர்பார்க்கின்றோம். நபி அப்படி எதிர்பார்க்கவில்லை சகோதரர்களே... அல்லாஹுத்தஆலா வசனம் இருக்கிறது.  
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல் : புகாரி, எண் : 86
 
وَلَا تَهِنُوا فِي ابْتِغَاءِ الْقَوْمِ إِنْ تَكُونُوا تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ وَتَرْجُونَ مِنَ اللَّهِ مَا لَا يَرْجُونَ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
 
(எதிரி) கூட்டத்தைத் தேடி செல்வதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வலியை உணர்பவர்களாக இருந்தால் நீங்கள் வலியை உணர்வது போன்று நிச்சயமாக அவர்களும் வலியை உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி, நன்மைகள் அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆசை வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4  : 104)
 
முஃமின்களே உங்களுக்கு வலிக்கிறதா அவர்களுக்கும் வலிக்கிறது. போர் என்றால் உங்களுக்கும் வலி இருக்கும் அவர்களுக்கும் வலி இருக்கும், உங்களுக்கும் காயம் இருக்கும், அவர்களுக்கும் காயம் இருக்கும், உங்களுக்கும் சேதம் இருக்கும், அவர்களுக்கும் சேதம் இருக்கும், அவர்கள் சேதப் படவில்லையா?  பத்ரிலே அவர்கள் 70 பேர் கொல்லப்பட வில்லையா? அவர்களிலே பல வீரர்களுக்கு காயம் ஏற்பட வில்லையா? உங்களுக்கு மட்டும்தானா போரில் காயம் ஆனால் அவர்கள் ஆதரவு வைக்காத ஒன்றை நீங்கள் ஆதரவு வைக்கின்றீர்கள் மறந்துவிடாதீர்கள். அவர்கள் ஆதரவு வைக்காததை நீங்கள் ஆதரவு வைக்கின்றீர்கள். என்ன ஆதரவு ? நாம் அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக மூமின்கள் என்பதற்காக நாம் எந்த ஒரு சிரமத்தை சந்தித்தாலும் அவை ஒவ்வொன்றிற்கும் அல்லாஹுத்தஆலா நன்மையை கொடுக்கின்றான். 
 
مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُمْ مِنَ الْأَعْرَابِ أَنْ يَتَخَلَّفُوا عَنْ رَسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنْفُسِهِمْ عَنْ نَفْسِهِ ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَيْلًا إِلَّا كُتِبَ لَهُمْ بِهِ عَمَلٌ صَالِحٌ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
 
மதீனாவாசிகள்; இன்னும், அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரை விட தங்கள் உயிர்களை நேசிப்பதும் - ஆகுமானதல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகமோ, களைப்போ, பசியோ எது ஏற்பட்டாலும்; இன்னும், நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற இடத்தை இவர்கள் மிதித்தாலும்; இன்னும், எதிரிகளிடமிருந்து துன்பத்தை அவர்கள் அடைந்தாலும், இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்படாமல் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான். (அல்குர்ஆன் 9 : 120)
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு தாகம் ஒரு சிரமம் அல்லது ஒரு பசிஅல்லது எதிரிகளால் தாக்கப்படுவது இவை ஒவ்வொன்றிற்கும் உங்களுக்கு நன்மை எழுதப்படுகிறது. நீங்கள் தொழுதால் நோன்பு வைத்தால் ஜக்காத் கொடுத்தால் ஹஜ் செய்தால் அல்லாஹ்வை திக்ரு செய்தால் எப்படி உங்களுடைய ஏட்டிலே நன்மையின் ஏடுகளிலே அமல்கள் பதியப்படுகின்றதோ அதுபோன்ற அமல்கள் உங்களுக்கு பதியப்படுகின்றது.ஏன் கவலைப்பட வேண்டும் ஏன் துக்கப் படவேண்டும் ஏன் சஞ்சலப்பட வேண்டும் ஏன்  மனம் தளர வேண்டும் சஹாபாக்களை அல்லாஹுத்தஆலா புறப்பட ஆர்வம் ஊடினான் புறப்பட்டார்கள் அப்போது..சிலர் சிந்தித்தார்கள் ஆஹா என்ன நீங்கள் தப்பு   செய்கிறீர்கள்.
 
ألَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ 
 
إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் ஒரு பெரிய வரலாற்றை இந்த மூன்று வசனங்களிலே அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அப்படி புறப்பட்ட தோழர்களைப் பார்த்து மக்கள் சொன்னார்கள் எந்தப் போருக்கு செல்கிறீர்கள் உங்களை அடியோடு வேறறுத்து விடுவார்கள் அப்படிப்பட்ட தயாரிப்பிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.
 
பயந்து கொள்ளுங்கள் தலைதெறிக்க எங்கேயாவது தப்பித்தோம், பிழைத்தோம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி விடுங்கள் என்று சொன்னார்கள் அவ்வளவு அச்சுறுத்தல் கொடுத்தார்கள். சுபஹானல்லாஹ் அந்த தோழர்கள் சொன்னார்கள் ஹஸ்புநல்லாஹ் அல்லாஹ் எங்களுக்கு துணை இருக்கின்றான்.
 
அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்  வநியமல் வக்கீல். பொறுப்பை ஏற்பதில் எங்களை காப்பதில் அவன் சிறந்தவன். ஆயுதங்கள் எங்களை காப்பாற்றாது எண்ணிக்கைகள் எங்களை காப்பாற்றாது.தந்திரங்கள் எங்களை காப்பாற்றாது எங்களை காப்பாற்றுவதற்கு வநியாமல் வக்கீல்எங்களது எஜமானன்  அல்லாஹ்  இருக்கின்றான். (அல்குர்ஆன் 3  : 173 : 175)
 
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதுகின்றார்கள் .
 
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
 
ஸஹாபாக்கள் இந்த ஆயத்தை இந்த திக்ரை இந்த துவாவை கூறினார்கள் மிகப் பெரிய துவா அல்லாஹு தஆலா அவர்களுடைய உள்ளத்திலே எப்படிப்பட்ட ஈமானை கொடுத்தான்   என்றாள் இதை சொல்ல சொல்ல அல்லாஹ்வுடைய உதவி கண்டிப்பாக இருக்கும் என்ற யக்கீன்  அவர்களுக்கு அதிகமானது.
 
நம்முடைய ரப்பு அல்லாஹ் நமக்கு உதவுவான் கைவிட மாட்டான் என்ற  யக்கீன் அதிகமானது. இந்த வார்த்தையை திக்கரை அவர்கள் கூற அவர்களின் ஈமான் அதிகரிக்க அல்லாஹ் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை போட்டான். பயப்பட வேண்டி அவர்கள் யாராக இருந்தார்கள் பலவீனமாக இருந்த தயாரிப்புகள் இல்லாமலிருந்த எந்தவிதமான போர் தளவாடங்கள் இல்லாமல் சாதாரணமான நிலையில் இருந்த அந்த மூமீன்கள் பயப்படுவதற்கு பதிலாக முழு ஆயுதங்களோடு முழு தயாரிப்போடு எண்ணிக்கையிலும் அதிகமாக இருந்த அந்த எதிரிகள் பயந்தார்கள். அனைத்து செல்வங்களையும் கொண்டு வந்த போர் ஆயுதங்களையும் உணவுகளையும் விட்டு விட்டு  ஓடினார்கள் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.(அல்குர்ஆன் 3 : 173)
 
فَانقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ ۗ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
 
அல்லாஹ்வுடைய அருளைப் பெற்று வந்தார்கள் அல்லாஹ்வுடைய செல்வத்தைப் பெற்று வந்தார்கள் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லைஅல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடினார்கள் அல்லாஹ் அவர்களுக்கு உதவினான்.இப்படி உங்களை பயமுறுத்த கூடியவர்கள் யார் தெரியுமா சைத்தான் . (அல்குர்ஆன் 3 : 174)
 
إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
அந்த ஷைத்தானுடைய வேலையே நம்பிக்கை கொண்டவர்களை பயமுறுத்துவதுதான். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ஷைதான்களை பயப்படாதீர்கள் ஷைத்தான்களின் ஏஜெண்டுகளை  பயபடாதீர்கள். நீங்கள் என்னை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் என்னை பயந்தவர்களாக இருங்கள். எனது தண்டனைக்காக பயப்படுங்கள். எனது பிடியை நினைத்து நீங்கள் அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 3 : 175)
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு சொல்லி காட்டுகின்றார்கள்...எவ்வளவு பெரிய வார்த்தை தெரியுமா ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல் 
 
عن ابن عباس حسبنا الله ونعم الوكيل: قالها إبراهيم عليه السلام حين أُلقي في النار، وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا: إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا، وقالوا: حسبنا الله ونعم الوكيل
 
சொன்னார்கள் இந்த வார்த்தை எப்பேர்ப்பட்ட வார்த்தை தெரியுமா? இது அல்லாஹ்வுடைய கலில் இப்ராஹிம் உடைய நாவிலிருந்து வந்த வார்த்தை இது எப்பேர்பட்ட துவா தெரியுமா? இது எப்பேர்பட்ட வலிமையுள்ள  தாக்கத் உள்ள ஒரு பிரார்த்தனை தெரியுமா?  இது கலிலுல்லா இப்ராஹிம் அலை அவர்களுடைய நாவிலிருந்து வந்த பிரார்த்தனையாகும்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 86
 
எந்த நிலையில் எப்போது அவர் கருவியிலே  கட்டப்பட்டு நெருப்பிலே தூக்கிப்போட படுவதற்காக நிறுத்தப்பட்டு இருந்தாரோ அந்த நேரத்திலே கூறினார்கள் . ஜிப்ரீல் வந்து கேட்கிறார் அல்லாஹ்வின் நண்பரே என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு சொல்கிறார்கள் அல்லாஹ் அனுப்பினானா? எனக்கு உன் பக்கம் தேவையில்லை ஆனால் அல்லாஹ்வின் பக்கம் தேவை உள்ளவன் ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்.எனக்கு அல்லாஹ் போதுமானவன்.
 
என்னை பாதுகாப்பதற்கு  எனக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு எனக்கு தேவையான பாதுகாப்பு களை பெறுவதற்கு எனது ரப்பு சிறந்தவன். அல்லாஹ் எப்பேர்ப்பட்ட உதவி செய்தான் தெரியுமா? போடப் பட்டார்கள் நெருப்பில் கண்டிப்பாக நெருப்பிலே போடப்பட்டார். ஆனால் நேரடியாக அல்லாஹ்வினுடைய கட்டளை வந்தது நெருப்பே குளிர்ச்சியாக ஆகி விடு...    சலாமத்தாக ஆகி விடு  ...  
 
قُلْنَا يَانَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ
 
இப்ராஹீமுடைய இரப்பை நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களாக நாம் இல்லையா? இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களுக்கு  மிகத் தகுதியானவர்கள் .இப்ராஹிமுக்கு மிக உரியவர்கள் இப்ராஹிம் உடைய காலத்திலே இப்ராஹீமை பின்பற்றியவர்கள் இந்த நபியும் அல்லாஹுத்தஆலா நம்முடைய நபியைப் பார்த்து சொன்னார்கள் இந்த நபியோடு ஈமான் கொண்டவர்களும் எவ்வளவு அழகான படிப்பினை இருக்கின்றது அல்லாஹ் பாதுகாப்பான். (அல்குர்ஆன் 21 : 69)
 
إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ
 
எத்தனை போர்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சந்தித்தார்கள்  மதினா உடைய அந்தப் பத்து ஆண்டு கால வாழ்க்கையிலே 17 அல்லது பத்தம்போது போர்களை பிறகு ஏறக்குறைய 64 சிறிய சிறிய தாக்குதல்களை சண்டைகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்சந்தித்தார்கள் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான், (அல்குர்ஆன் 3 : 68)
 
يَاأَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ
 
நபியே அல்லாஹ் உங்களுக்கு போதுமானவன் உங்களை நம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு உதவ வந்துவிட்டாள் யாரும்  நம்மை எந்த விதத்திலும் எதுவும் செய்துவிட முடியாது ரப்புல் ஆலமீன் சொல்லிக் காட்டுகின்றான்.
 
(அல்குர்ஆன் 8 : 64)
 
إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
(உங்களை அச்சுறுத்திய) அவனெல்லாம் ஷைத்தான்தான். (அவன்) தன்(னை நம்புகின்ற) நண்பர்களை பயமுறுத்துகிறான். ஆகவே, நீங்கள் (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களைப் பயப்படாதீர்கள்; (உங்கள் இறைவனாகிய) என்னைப் பயப்படுங்கள். (அல்குர்ஆன் 3 : 175)
 
அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால் அவனுக்குப் பிறகு உங்களுக்கு உதவ கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? அல்லாஹ்வின் மீது மட்டுமே மூமின்கள் நம்பிக்கை வைத்தி இருக்கட்டும், அவனை மட்டுமே மூமின்கள் சார்ந்து இருக்கட்டும்.
 
இன்று என்ன பிரச்சனை உலகத்திற்கு முஸ்லிம்களை முஃமின்களை வேரறுக்க வேண்டும் அவர்களை இந்த பூமியிலே நெருக்கடிக்கு ஆளாக வேண்டும் என்று சதி திட்டம் தீட்ட கூடிய அந்த சூழ்ச்சி யாளர்களின் நோக்கம் என்ன இஸ்லாம் பரவுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை மக்கள் இந்த மார்க்கத்தில் இணைவது அவர்களுக்கு மிக பெரியநெருக்கடி கொடுக்கின்றது.
 
இஸ்லாம் பரவுவதை பார்த்து பயப்படுகின்றார்கள். இது நடந்தே ஆக வேண்டிய ஒன்றுஅல்லாஹ்வுடைய முடிவு இது அல்லாஹ்வினுடைய அடியார்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு தங்களைப் படைத்த ரப் உடைய மார்க்கத்திற்கு அவர்கள் வந்தே தீருவார்கள் அவர்கள் என்ன கொடுமைக்கு ஆளாக பட்டாலும் சரியே
 
அந்த மக்கள் யார்    இந்தியர்களாக இருக்கட்டும் ஐரோப்பிய அமெரிக்க ஆஸ்திரேலிய இருக்கட்டும் யார் அவர்கள் அல்லாஹ்வினுடைய அடிமைகள் அல்லாஹ்வின் படைப்பு அவர்களைப் படைத்தவன் அல்லாஹ்அல்லாஹ்வைத் தவிர படைத்தவன் வேறு யார் இருக்கிறானா காட்டுங்கள்.
 
يَاأَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ
 
மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கிற படைப்பாளன் அல்லாஹ்வை அன்றி யாரும் உண்டா? அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனை விட்டு) திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன் 35 : 3)
 
هَذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ بَلِ الظَّالِمُونَ فِي ضَلَالٍ مُبِينٍ
 
இவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். ஆக, அவனல்லாத மற்றவர்கள் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள்! மாறாக, அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். (அல்குரான் 31 : 11)
 
இவர்களெல்லாம் நான் படைத்த படைப்பு அல்லாஹ்வைத் தவிர நீ வேறு ஒருவனை வணங்குகிறாயோ அவர்கள் என்ன படைத்தார்கள்  கொண்டு வந்த காட்டு அல்லாஹ் கேட்கின்றான்.
 
قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّهُ قُلْ أَفَاتَّخَذْتُمْ مِنْ دُونِهِ أَوْلِيَاءَ لَا يَمْلِكُونَ لِأَنْفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ أَمْ جَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ قُلِ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَارُ
 
(நபியே!) கூறுவீராக: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” (நபியே!) கூறுவீராக: (அவன்) “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவனை அன்றி, (உங்களுக்கு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டீர்களா? அவர்கள் தங்களுக்கு தாமே நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள்.
 
(நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது, இருள்களும் ஒளியும் சமமாகுமா? அல்லது, அல்லாஹ்விற்கு இணைக(ளாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)ளை அவர்கள் ஏற்படுத்தினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்திருக்கின்றனவா? அதனால், படைத்தல் (யார் மூலம் நிகழ்கிறது என்பது) இவர்களுக்கு குழப்பமடைந்து விட்டதா?” (நபியே! இதற்கு பதிலாக நீர்) கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் ஆவான். இன்னும், அவன் (நிகரற்ற) ஒருவன், (அனைவரையும்) அடக்கி ஆளுபவன் ஆவான். (அல்குர்ஆன் 13 : 16)
 
நான் படைத்தது போன்று இவர்கள் ஏதாவது படைத்து இருக்கின்றார்களா? அல்லாஹ்வைத் தவிர இவரை அவரை அதை இதை வணங்குகின்றீர்களே அவர்கள் எதைப் படைத்தார்கள் காட்டுங்கள் பார்க்கலாம் உங்களுக்கு குழம்பி விட்டதா? படைத்தவன் யார் என்று நான் ஒருவன்தான் படைத்தவன்.
 
அல்லாஹ்வினுடைய அடியார்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு வருகிறார்கள் இஸ்லாம் என்ன முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமா? இது நாம் உருவாக்கிய மார்க்கமா இந்த வானத்தை இந்த பூமியை சூரியனை சந்திரனை காற்றை மழையை இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த ரப்புல் ஆலமீன் உடைய மார்க்கம் இது அல்லாஹ்வுடைய மார்க்கம் இது அல்லாஹ்வுடைய அடியார்களுக்காக தேர்ந்தெடுத்த மார்க்கம் இது. நீதி நேர்மை சத்தியம் ஒழுக்கம் உண்மை அனைத்து நேர்மை களும்  ஒழுக்கங்களும் கட்டுப்பாடுகளும் மனிதனுக்குத் தேவையான அத்தனை நன்மைகளும் உள்ளடக்கிய பரிசுத்தமான மார்க்கமாகும்.
 
يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
 
மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும், பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் மற்றவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 49 : 13)
 
மக்களே ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து உங்களை நாம் படைத்தோம் சமூகமாக கோத்திரங்களாக அவர்களை  மாற்றினோம் மக்களிலிலே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இத்தகைய ஒரு வாசகத்தை வேறு எங்கிருந்தாவது கொண்டுவர முடியுமா?
 
இந்த மார்க்கத்தை கொடுத்து அல்லாஹு தஆலா இறுதித் தூதராக இறக்கினானே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள்? 
 
لا فضلَ لعربيٍّ على عجميٍّ ، ولا لعجميٍّ على عربيٍّ ، ولا لأبيضَ على أسودَ ، ولا لأسودَ على أبيضَ - : إلَّا بالتَّقوَى ، النَّاسُ من آدمُ ، وآدمُ من ترابٍ
 
ஒரு அரபி ஒரு அரபி அல்லாதவரை பார்த்து பெருமைபேச முடியாது ஒரு அரபி அல்லாதவர் அரபியை பார்த்து பெருமைபேச முடியாது ஒரு வெள்ளையன் ஒரு கருப்பரை பார்த்து நான் உன்னை விட சிறந்தவன்என்று பெருமை பேச முடியாதுநீங்கள் எல்லோரும் ஆதமில்  இருந்த படைக்கப்பட்டவர்கள்ஆதம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். 
 
அறிவிப்பாளர் : நழ்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது எண் : 22 391
 
இந்த சத்தியத்தை வேறு எந்த மார்க்கம் ஆவது ஒத்துக் கொள்ளுமா? இதற்காக அவர்கள் பொறாமைப் படுகிறார்கள் இதைப் பார்த்த அவர்கள் கால் புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள் 
 
يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ,هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
 
இவர்கள் தங்கள் வாய்களால் (ஊதி) அல்லாஹ்வுடைய ஒளியை அணைப்பதற்கு விரும்புகிறார்கள். நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தன் ஒளியை முழுமைப்படுத்தியே தீருவான். அவன், தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான், - எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அதை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே! (அல்குர்ஆன் 9 : 32, 33)
 
அவர்கள் அல்லாஹ்வினுடைய ஒளியை தங்களுடைய வாய்களால் அணைக்க நினைக்கின்றார்கள் அல்லாஹூ தஆலா முடிவு செய்து விட்டால் அவனுடைய ஒளியை அவன் பரிபூரண மாக்கியே தீருவேன்.அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே அந்த ரப்பு எத்தகையவன் அவன் தன்னுடைய தூதரை நேர்வழியை கொடுத்து அனுப்பினான் சத்திய உண்மையான மார்க்கத்தை கொடுத்து அனுப்பினான் இதனுடைய முடிவு என்ன இந்த தீனை வேறு அனைத்து  விதமான சமயங்கள் கோட்பாடுகள் பார்க்கிலும் இதை மேலோங்க வைத்தே தீருவான் முஷ்ரிக்குகள் வெறுத்தாலும் சரியே.
 
இரவும் பகலும் இந்தப் பிரபஞ்சத்தில் மேற்பரப்பில் எதுவரை செல்கின்றதோ அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் சென்று அடைந்தே தீரும் மாடி வீடாக இருக்கட்டும் ஒரு ஏழையின் குடிசை வீடாக இருக்கட்டும் இந்த மார்க்கத்தை அந்த வீட்டுக்குள் அல்லாஹ் உழைத்தே தீருவான். ஒன்று கண்ணியத்தோடு அல்லது பணிந்து நீங்களாக விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லையெனில் பணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்ணியம் அல்லாஹ் இஸ்லாமிற்கு கொடுப்பான் அந்த இழிவு அந்த பயம் குபுறுக்கு  அல்லாஹ் கொடுப்பான்.
 
அன்பு சகோதரர்களே இந்த நேரத்தில் நம்முடைய பொறுப்பு எது? அல்லாஹ்வை சார்ந்திருக்க வேண்டும் அல்லாஹ்வுடைய திக்ருகளை அதிகப்படுத்த வேண்டும் வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்த வேண்டும் பிரார்த்தனைகள் அதிகப்படுத்த வேண்டும் அல்லாஹ்வுடைய கட்டளைகளை மீறி எதுவும் செய்யக்கூடாது . தங்களை மாற்றாத வரை அல்லாஹ் ஒரு மக்களின் நிலைகளை மாற்ற மாட்டான்.
 
لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ
 
(மனிதனாகிய) அவனுக்கு முன்புறத்திலிருந்தும், அவனுக்குப் பின்புறத்திலிருந்தும் (அவனை பாதுகாப்பதற்காக) பின்தொடரக்கூடியவர்கள் (-ஒரு கூட்டத்திற்கு பின்னர், ஒரு கூட்டம் என்று மாறி மாறி வரக்கூடிய வானவர்கள் அவனுடன்) இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து (அல்லாஹ் நாடிய காலம் வரை) அவனை பாதுகாக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான், அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்ற வரை. மேலும், அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; இன்னும், அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை. (அல்குர்ஆன் 13 : 11)
 
இந்த நேரம் தாவா உடைய நேரம் பிற மக்களுக்கு  இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ்வுடைய தீனை குர்ஆனை நபியுடைய சுன்னாவை எடுத்துச் சொல்ல வேண்டிய நேரம் இது பயப்பட வேண்டிய நேரம் இல்லை. இந்த நேரம் நாம் மிகத் துணிவாக இருக்க வேண்டிய நேரம் கோழையாக இருக்க வேண்டிய நேரமில்லை.
 
இது இந்த நேரத்தில் தான் நாம் முஸ்லிம் என்பதை மிகவும் தெளிவாக மிகவும் துணிவாக மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது .இங்கு சில அடையாளங்களை மறைக்க நினைக்கின்றார்கள் அடையாளங்களை விட்டு வெளியேற நினைக்கின்றார்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்எந்த விதத்திலும் மனம் சோர்வடைய  வேண்டிய பின்தங்க வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய கோழையாக வேண்டிய என்ன நடக்குமோ அவ்வளவுதானா? இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் என்று நிலை தடம் மாற வேண்டிய அவசியம் இல்லை ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல் .
 
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
 
(-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்,) மக்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்காக (-உங்களை எதிர்ப்பதற்காக) திட்டமாக ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்! (அவர்களுடன் போருக்கு சென்று விடாதீர்கள்!)’’ ஆனால், இந்த அச்சுறுத்தலோ அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான் மேலும்) அதிகப்படுத்தியது. இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் (நம்பிக்கையுடன்) கூறினார்கள். (அல்குர்ஆன் 3 : 173)
 
அல்லாஹ் நமக்கு இருக்கின்றான்  நம்மை பாதுகாப்பதற்கு பொறுப்பேற்பதற்கு இந்த துவாவை ஸஹாபாக்கள் உடைய துஆவை ஓதிக் கொண்டுநம்முடைய பாவங்களுக்காக பாவமன்னிப்பு கேட்டு மேலும் மார்க்கத்திலே உறுதியாக இருந்து இந்த இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்காக இந்த இஸ்லாமை ஏற்று அதை அறிந்து கொள்வதற்காக எத்தனையோ மக்கள் மாற்றார்கள் இருக்கின்றார்களே அவர்களுடைய உள்ளங்களில் எல்லாம் வென்றெடுத்து படைத்தரப்பின் பக்கம் அழைக்க வேண்டிய நேரம் இது.
 
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் அந்த மக்களை அழைக்க வேண்டிய நேரம் இது அந்த ஒரு நல்ல வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் கண்டிப்பாக இந்த தீமையிலிருந்து அல்லாஹ்  நம்மை பாதுகாத்து தீமையையும் நன்மையாக மாற்றித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன் என்ற மன உறுதி வேண்டும்.
 
قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
 
(நபியே!) கூறுவீராக! (பாவங்கள் செய்து) தங்கள் ஆன்மாக்கள் மீது எல்லை மீறிய என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். (நீங்கள் வருந்தி, திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் உங்களது) எல்லாப் பாவங்களையும் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (அல்குர்ஆன் 39 : 53)
 
ஒருபோதும் நிராசை ஆகாதீர்கள் நிச்சயமாக மனத்தூய்மை உள்ளவர்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய அருள் மிக நெருக்கமாக இருக்கின்றது.
 
وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
 
(இறை அருள்களில்) வேறு ஒன்றும் (உங்களுக்கு) உண்டு. அதை நீங்கள் விரும்புவீர்கள். (அதுதான்) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து (உங்களுக்கு) உதவியும் வெகு விரைவில் கிடைக்க இருக்கும் வெற்றியும் ஆகும். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 61 : 13)
 
அல்லாஹ்வுடைய உதவியும் அல்லாஹ்வுடைய வெற்றியும் மூமின்களுக்கு எப்போதும் மிக சமீபமாக இருக்கின்றது என்று அல்லாஹ்வுடைய வாக்குகளை நம்புவோமாக.அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா நம்முடைய காரியங்களை லேசாக்கி நம்முடைய பாவங்களை மன்னித்து இந்த சூழ்நிலையில் நமக்கு எப்படி உதவ வேண்டுமோ அந்த சிறந்த முறையில் உதவி நம்மையும் பலவீனமான பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் பாதுகாப்பானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/