அல்லாஹ்வின் மாதம் அல்முஹர்ரம் | Tamil Bayan - 811
அல்லாஹ்வின் மாதம் அல் - முஹர்ரம்.
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் மாதம் அல் - முஹர்ரம்.
வரிசை : 811
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -28-07-2023 | 10-01-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கு மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும், இன்னும் அந்த தூதர் என் பாசத்திற்குரிய குடும்பத்தார், கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக. உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும்,
அல்லாஹ்வுடைய மன்னிப்பையும், மறுமையில் மகத்தான வெற்றியும் வேண்டியவனாக, இம்மை மறுமையின் குழப்பங்களில் இருந்து பாதுகாப்பை வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்மை மன்னிப்பானாக! நம்முடைய பாவங்களை போக்கிவிடுவானாக! அல்லாஹ்விற்கு பொருத்தமான, அல்லாஹ்வை பொருந்தி கொண்ட, நல்லடியார்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹூதஆலா நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கின்றான். அல்குர்ஆன் தொழுகையில் ஓதப்படும் போதெல்லாம். அல்லாஹ்வுடைய வசனத்தை நாம் செவியுறுகின்றோம். அந்த அல்குர்ஆன் நமக்கு மறுமையை நினைவூட்டி கொண்டே இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை நினைவூட்டுகிறது.
இந்த உலகத்தில் நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்பது நினைவூட்டுகிறது. இந்த உலக வாழ்க்கை உடைய குழப்பங்களை குறித்து நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. மறுமையில் சொர்க்கத்தை பற்றி ஆர்வமூட்டி நரகத்தை குறித்து நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த அல்குர்ஆனை அவனுடைய கலாமாக, அவன் பேசிய பேச்சாக நமக்கு இறக்கி இருக்கின்றான். இந்த அல்குர்ஆனிலே அல்லாஹ் சுபஹானஹூதஆலா உலகத்தை படைத்தது, அதிலே காலங்களை அவன் உருவாக்கியது, அனைத்தையும் நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கின்றான்.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில், அல்லாஹ்வின் விதியில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு மாதங்கள் உள்ளன. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அவற்றில் (-அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு தீங்கு இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவது போன்று. நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9 : 36)
இந்த உலகத்தை அல்லாஹ் சுபஹானஹூதஆலா படைத்த நாளிலேயே மாதங்களுடைய எண்ணிக்கை 12- கள் ஆகும். 12 மாதங்கள் ஆண்டுக்கு என்பதாக. அல்லாஹ் நிர்ணயித்தான். அந்த 12 மாதங்களில், நான்கு மாதங்களை அல்லாஹு தஆலா புனித மாதங்களாக, கண்ணியமிக்க மாதங்களாக, அந்த 12 மாதங்களிலேயே மிகச் சிறப்பிற்குரிய மாதங்களாக அல்லாஹு தஆலா தேர்ந்தெடுத்தான். அதில் ஒரு மாதம் தான் மொஹரம் என்ற மாதம். அந்த மாதத்திலே நாம் இப்போது இருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த முஹர்ரம். இந்த மாதத்திற்கு, இந்த பெயர் வந்ததற்கு என்ன காரணம்? அறிஞர்கள் பல கருத்துக்களை சொல்லுகின்றார்கள். அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த மாதத்தில், போர் செய்வது, யுத்தங்கள் நடப்பதை பெரும் குற்றமாக ஆக்கினான். இந்த மாதத்தை புனித மாதமாக ஆக்கி, இதில் போர் செய்வதை அல்லாஹ் சுபஹானஹூதஆலா ஒரு பெரும் குற்றமாக ஆக்கினான்.
போர்கள் நடந்து கொண்டிருந்தாலும், அந்தப் போர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த மாதத்தினுடைய கண்ணியத்தை வெளிப்படுத்தும் விதமாக அல் முஹர்ரம். ஹுர்மத். அதாவது புனிதம். கண்ணியம். என்ற அந்த வேர்ச்சொல்லில் இருந்து வரக்கூடிய ஹர்ரம யுஹர்ரிமூவ் அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்டது.
அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட மாதம். இந்த மாதத்தினுடைய கண்ணியத்தை பேணுவது மக்கள் மீது கட்டாய கடமையாக இருக்கிறது. இதனுடைய கண்ணியத்தை பாழாக்கும் விதமாக எந்த ஒன்றையும் செய்து விடக்கூடாது. பொதுவாகவே பாவங்கள் செய்வது, அல்லாஹ்வுடைய தடைகளை மீறுவது, பெரும் குற்றமாக இருந்தாலும், இந்த மாதத்தில், இந்த கண்ணியமான மாதங்களில் அதை செய்வது குற்றத்தால் இன்னும் கடுமையாகிறது.
எப்படி பொதுவாக நாம் சொல்வோம். மஸ்ஜித் உள்ளே நின்று கொண்டு பொய் பேசாதே என்று. அதற்கு என்ன அர்த்தம் இல்லை. மஸ்ஜித் விற்கு வெளியே சென்றாள், பொய் போசலாம் என்று அர்த்தம் இல்லை. பொய் பேசுவதே பெரிய பாவம். அதுவும் மஸ்ஜித் உள்ளே இருந்து கொண்டு, அல்லாஹ்வுடைய வீட்டிலிருந்து கொண்டு போய் பேசுகின்றாயா? அப்படி செய்யாதே! அந்த அடிப்படையில் தான் அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த கண்ணியத்திற்குரிய மாதங்களில், அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறுவது, பாவங்களை மீறுவதை கடுமையான ஒரு குற்றமாக தடை செய்திருக்கின்றான்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹூதஆலா எல்லா மாதங்களும் அவனுக்கு சொந்தமான, அவன் படைத்த, அவன் உருவாக்கிய மாதங்களாக இருந்தாலும், இந்த முஹர்ரம் உடைய மாதத்தை மட்டுமே, شهر الله محرم அல்லாஹ்வுடைய மாதம், அல்லாஹ்வோடு இணைக்கப்பட்டு, அல்லாஹ்வுடைய மாதம் என்று கண்ணியமாக அழைக்கப்படுகிறது.
202 - (1163) حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ : صحيح مسلم (2/ 821)
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இந்த மாதத்தை shahurulla hil muharram. அல்லாஹ்வுடைய மாதம் என்பதாக அவர்கள் இணைத்து சொல்லியிருக்கின்றார்கள். அல்லாஹ் சுபஹானஹூதஆலா, நபிமார்களில் பலரை தன்னோடு இணைத்து சொல்லுகின்றான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163
அது போன்று அல்லாஹ்வுடைய அற்புதமாக வந்த ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம். அவர்களுடைய ஒட்டகத்தை. அல்லாஹ்வுடைய ஒட்டகம் என்பதாக அல்லாஹ்வுடன் சேர்த்து அது சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோன்று காபாவாகிய அல்லாஹ்வுடைய வீட்டை Baitullah! அல்லாஹ்வுடைய வீடு என்று அல்லாஹ்வின் பக்கம் சேர்த்து சொல்லப்படுகிறது.
அதுபோன்ற மக்காவை பலதுல்லா! அல்லாஹ்வுடைய ஊர் என்பதாக அல்லாஹ்வோடு சேர்த்து சொல்லப்படுகிறது. இப்படி அல்லாஹ்வுடைய படைப்புகளில் ஒன்று அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்படுமேயானால், சகோதரர்களே! அதனுடைய மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனுடைய கண்ணியத்தை புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஈமானிய உணர்வு நமக்கு வேண்டும். முஹர்ரம் என்ற புனித மாதத்தில் நான் இருக்கின்றேன்.
அல்லாஹ் கண்ணியமாக்கிய மாதத்தில் நான் இருக்கின்றேன். இதில் நான் எப்படி என்னுடைய நேரங்களை பயன்படுத்துவது? அல்லாஹ்வை நான் பயந்து கொள்வது? எப்படி அமல்களை அதிகப்படுத்துவது? இந்த ஒரு சிந்தனை தக்வா மிகைத்திருக்க வேண்டும்.
இப்படி இந்த குறிப்பிட்ட மாதங்களில், நமக்கு தக்வா உடைய, அல்லாஹ்வுடைய அச்சத்துடைய பாடங்களை படிப்பினைகளை கொடுத்து, இந்த தக்வாவின் பிரதிபலிப்பு, இந்த தக்வாவின் மீதம், நம்முடைய வாழ்நாளில் மற்ற மாதங்களிலும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வுடைய நோக்கமாக இருக்கிறது.
கண்ணியத்திற்குரியவர்களே! ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு அழகிய கருத்தை குறிப்பிடுகின்றார்கள். சொல்லுகின்றார்கள். அல்லாஹ் சுபஹானஹூதஆலா முஸ்லிம்களாகிய நமக்கு. இந்த சந்திர ஆண்டை ஆரம்பிப்பதையே, ஒரு கண்ணியமான ஒரு மாதத்தை கொண்டு ஆரம்பிக்கின்றான்.
நம்முடைய ஆண்டையே அல்லாஹ் சுபஹானஹூதஆலா ஒரு கண்ணியமான மாதத்தை கொண்டு ஆரம்பிக்கின்றான். அதாவது muharram மாதத்தை கொண்டு. அது போன்று. நம்முடைய இந்த ஆண்டை. அதாவது ஒவ்வொரு ஆண்டை அல்லாஹ் சுபஹானஹூதஆலா முடிப்பதையும், புனித மாதத்தை கொண்டு முடிக்கின்றான். ஒரு வருஷத்தினுடைய முதல் மாதமும் புனித மாதமாக இருக்கிறது. அந்த வருடத்தினுடைய இறுதி மாதமும் புனித மாதமாக இருக்கிறது. Dhul hijjah வாக இருக்கிறது.
عن أبى هُريرةَ رَضِيَ اللهُ عنه يرفَعُه، قال:(سُئِلَ- أي النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم- أيُّ الصَّلاةِ أفضَلُ بعد المكتوبةِ؟ وأيُّ الصِّيامِ أفضَلُ بعد شَهرِ رمضانَ؟ فقال: أفضَلُ الصَّلاةِ بعد الصَّلاةِ المكتوبةِ، الصَّلاةُ في جَوفِ اللَّيلِ. وأفضَلُ الصِّيامِ بعد شَهرِ رَمَضانَ، صِيامُ شَهرِ اللهِ المُحَرَّم
மேலும் சொன்னார்கள். இந்த முழு ஆண்டிலே. அல்லாஹ்விடத்தில் ரமலானுக்கு பிறகு, முழு ஆண்டில். ரமலானுக்குப் பிறகு, அல்லாஹ்விடத்திலே muharram ஐ விட ஒரு மகத்தான கண்ணியமிக்க மாதம் இல்லை.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில், அல்லாஹ்வின் விதியில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு மாதங்கள் உள்ளன. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அவற்றில் (-அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு தீங்கு இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவது போன்று. நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9 : 36)
மேலும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா அவனது அல்குர்ஆன். சூரா தவ்பாவிலே குறிப்பிடுகின்றான் பாருங்கள். என்று ஆரம்பிக்கக் கூடிய அந்த வசனத்திலே, நான்கு மாதங்கள் புனிதமான மாதங்கள். அந்த மாதங்களில், நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளைகளை மீறுவதின் மூலமாக, பாவங்களின் மூலமாக, உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து கொள்ளாதீர்கள். என்று இமாம் kurtubi ரஹிமஹுல்லாஹ் அவர்கள், இதற்கு விளக்கம் சொல்லுகின்றார்கள்.
அல்லாஹ் சுபஹானஹூதஆலா, இந்த புனித மாதங்களை, விசேஷமாக குறிப்பிட்டு, அதிலே பாவங்கள் செய்வதை, ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்வதை தடுக்கின்றான். இந்த மாதங்களை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக.
பொதுவாக எல்லா மாதங்களிலும் குற்றங்கள் செய்வது ஒரு அடியான் இன்னொரு அடியானுக்கு அநியாயம் செய்வது தடுக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த மாதத்தில் விசேஷமாக அல்லாஹ் சுபஹானஹூத ஆலா, இதை தடுப்பது மூலமாக இந்த மாதத்தின் கண்ணியத்தை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை அல்லாஹு தஆலா நமக்கு உணர்த்துகின்றான்.
அதுபோன்று கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்படுகின்றது.
عن أبى هُريرةَ رَضِيَ اللهُ عنه يرفَعُه، قال:(سُئِلَ- أي النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم- أيُّ الصَّلاةِ أفضَلُ بعد المكتوبةِ؟ وأيُّ الصِّيامِ أفضَلُ بعد شَهرِ رمضانَ؟ فقال: أفضَلُ الصَّلاةِ بعد الصَّلاةِ المكتوبةِ، الصَّلاةُ في جَوفِ اللَّيلِ. وأفضَلُ الصِّيامِ بعد شَهرِ رَمَضانَ، صِيامُ شَهرِ اللهِ المُحَرَّم
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே, இரவிலே எந்த பகுதி சிறந்தது? மாதங்களில் எந்த மாதம் சிறந்தது? என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163
உங்களுக்கு நன்றாக தெரியும். சஹாபாக்களுடைய கேள்விகள் எப்படி அமைந்திருக்கும் என்று. உலகத்திலேயே சிரமத்தை, வறுமையை, மிகப்பெரிய சோதனைகளை, எல்லா வகையிலும் எதிரிகளின் மூலமாக ஒரு அச்சுறுத்தல், அதுபோன்று பொருளாதாரக் நெருக்கடிகள். இன்னும் பல விதமான குழப்பங்கள்.
இப்படி இந்த உலகத்திலே, எல்லா மனிதர்களும் சந்திக்கக்கூடிய, பல குழப்பங்களை, சோதனைகளை, சிரமங்களை, மிக அதிகமாக சந்தித்தவர்கள் தான் சஹாபாக்கள் சமுதாயம். அப்படி இருந்தும், துனியாவை பற்றி பொருட் படுத்தாமல், ஒருமுறை கூட ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே, எனக்கு பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? எனக்கு வாழ்க்கையில் அதிகம் செல்வம் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
இப்படி உலகத்தைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே எந்த கேள்வியும் அவர்கள் கேட்காமல். அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம். மறுமையை பற்றி. சொர்க்கத்தைப் பற்றி நரகத்தில் இருந்த தப்பிப்பதற்கு உண்டான வழியை பற்றி. சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா அந்த சஹாபாக்களை தேர்ந்தெடுத்தான். அங்கீகரித்தான் என்றால், அவர்களிடத்திலே இந்த மறுமையின் பயம். மறுமையிலே சொர்க்கத்தின் தேடல், எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும்?
இன்று நம்மால் ஒரு சின்ன அர்ப்பமான ஒரு சிறிய சோதனையை கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. பதட்டப்பட்டு விடுகின்றோம்.
إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا, وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
நிச்சயமாக மனிதன் பேராசைக்காரனாக படைக்கப்பட்டான்., அவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு தனது செல்வத்தை கொடுக்காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்). (அல்குர்ஆன் 70 : 19, 20, 21)
மனிதன் மிகப்பெரிய பேராசை காரனாக படைக்கப்பட்டிருக்கின்றான். தடுமாறக்கூடியவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். அவனுக்கு தீமைகள் வந்துவிட்டால், அப்படியே நடு நடுங்கி விடுகின்றான்.
அவனுக்கு செல்வம் வந்துவிட்டால், அந்த செல்வத்தை பிறருக்கு கொடுக்காமல், தனக்கென, எனக்கு நான் சம்பாதித்தது. எனது செல்வம் என்று, அந்த செல்வத்தை தடுத்து கொள்கின்றான். மனிதனுடைய அந்த இயற்கை சுபாவம். குறிப்பாக மறுமையை நம்பாதவர்கள். ஆகிரத்தை நம்பாதவர்களுடைய நிலையை அல்லாஹு தஆலா விவரித்து விட்டு,
إِلَّا الْمُصَلِّينَ ,الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ ,لِلسَّائِلِ وَالْمَحْرُومِ ,وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُون ,َإِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ
(ஆனால்,) தொழுகையாளிகளைத் தவிர.அவர்கள் தங்கள் தொழுகையில் நிரந்தரமாக இருப்பார்கள்.,இன்னும், அவர்களுடைய செல்வங்களில் குறிப்பிட்ட உரிமை உண்டு,யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும்.,இன்னும், அவர்கள் (தீர்ப்பு கொடுக்கப்படும்) கூலி நாளை, இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனையைப் பயப்படுவார்கள் நிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியது அல்ல. (அல்குர்ஆன் 70 : 22, 23, 24, 25, 26, 27, 28)
அல்லாஹு தஆலா இந்த மறுமைக்காக வாழக்கூடியவர்கள் எப்படி இருப்பார்கள்? மறுமைக்காக வாழக்கூடியவர்கள் எப்படி இருப்பார்கள்? அல்லாஹ்விற்காக வாழக்கூடியவர்கள் எப்படி இருப்பார்கள்? யாருடைய உள்ளத்தை, உலகத்தின் எந்த மாற்றமும் உலகத்துடைய எந்த ஏற்றத்தாழ்வுகளும் தடுமாறச் செய்து விடாதோ, செல்வம் கிடைத்தால் அல்லாஹ்விற்காக நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.
அந்த செல்வத்தைக் கொண்டு, அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த செல்வத்தை அல்லாஹ் எங்கே செலவழிக்க வேண்டும் என்று கட்டளை இட்டானோ, அல்லாஹ் எங்கே செலவழிக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ, அங்கே மட்டுமே அவர்கள் செலவழிப்பார்கள். தனக்கு அந்த செல்வத்தைக் கொண்டு பலன் பெறுவதை விட, அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பது, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு கொடுப்பது, அவர்களுக்கு மிக விருப்பமாக இருக்கும்.
அல்லாஹு தஆலா அவர்களின் பண்பை சொல்லுகின்றான். அவர்களை அப்படி உருவாக்கக்கூடியது எது? அவர்களை மறுமைக்காக அப்படி உருவாக்கியது எது? அவர்களுடைய உள்ளங்களை எது பன்படுத்தியது? சொல்கின்றான். அவர்கள் தொழுகையை அப்படி நிரந்தரமாக தொழுதது. தொழுகையில் அக்கறை உள்ளவர்களாக இருந்தது.
அது மட்டுமல்ல. அடுத்து அல்லாஹ் சொல்லுகின்றான். அவர்களது செல்வங்களில் ஒரு குறிப்பிட்ட அளவை, அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள். அல்லாஹ்வுடைய அடியார்களுக்காக. யாசகம் கேட்டு வரக்கூடியவர்களுக்காகவும், யாசகம் கேட்கவில்லை என்றாலும், யாரை குறித்து தனது நண்பர்களிலே, தனது உறவுகளிலே அவர்கள் வறியவர்கள் என்று தெரிகின்றதோ, அவர்களுக்கு கொடுப்பதற்காக.
இந்த செல்வத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்திருக்க மாட்டார்கள். அல்லாஹ்வுடைய அன்பும் மறுமையும் தான் அவர்களது உள்ளத்தில் இருக்கும். அந்த செல்வத்தில் ஒரு பெரும் பகுதியை ஒதுக்கி விடுவார்கள் தர்மத்திற்காக. மேலும் அல்லாஹ் சொல்கின்றான். அவர்கள் யார்? ஆகிரத்தை உண்மை படுத்தக்கூடியவர்கள். (அல்குர்ஆன் 70 : 22, 23, 24, 25, 26, 27, 28)
அன்பு சகோதரர்களே! நம்முடைய உள்ளத்திற்கு ஒவ்வொரு நாளும், தொழுகைக்கு நிற்க கூடிய ஒவ்வொரு நேரத்திலும், காலையில் எழும்போது, மாலையில் நாம் இருக்கும்போதும், இரவிலே தூங்கும் போதும், மறுமையை, ஆகிரத்தை நினைவூட்டி கொண்டே இருக்க வேண்டும்.
தன்னுடைய மரணத்தை நினைவூட்டி கொண்டே இருக்க வேண்டும். நான் இன்று நான் மரணித்து இருக்கலாம். இன்று எனக்கு அல்லாஹ் மலக்குல் மவுத்தை அனுப்பி இருக்கலாம். அல்லாஹ் எனக்கு இன்று ஒரு நாள் அவகாசத்தை கொடுத்திருக்கின்றான்.
இன்றைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு, சென்ற காலங்களில் நிகழ்ந்த என்னுடைய பாவங்களுக்கு தவ்பா செய்வதற்காக அல்லாஹ் எனக்கு ஒரு நாளை நீட்டி கொடுத்திருக்கின்றான் என்ற உணர்வு வரவேண்டும். இரவிலே தூங்கும் போது, அல்லாஹ் நாடினால் இந்த இரவிலேயே என்னை உயிர் கைப்பற்றிக் கொள்ளலாம். அல்லாஹ்வுடைய தூதர் அப்படித்தானே நமக்கு சொல்லிக் காட்டுகின்றார்கள்.
كانَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إذَا أرَادَ أنْ يَنَامَ قالَ: باسْمِكَ اللَّهُمَّ أمُوتُ وأَحْيَا، وإذَا اسْتَيْقَظَ مِن مَنَامِهِ قالَ: الحَمْدُ لِلَّهِ الذي أحْيَانَا بَعْدَ ما أمَاتَنَا وإلَيْهِ النُّشُورُ. ,إذا أوَى أحَدُكُمْ إلى فِراشِهِ، فَلْيَنْفُضْ فِراشَهُ بداخِلَةِ إزارِهِ؛ فإنَّه لا يَدْرِي ما خَلَفَهُ عليه، ثُمَّ يقولُ: باسْمِكَ رَبِّ، وضَعْتُ جَنْبِي، وبِكَ أرْفَعُهُ، إنْ أمْسَكْتَ نَفْسِي فارْحَمْها، وإنْ أرْسَلْتَها فاحْفَظْها بما تَحْفَظُ به عِبادَكَ الصَّالِحِينَ.
இரவில் தூக்கம் ஒரு மரணத்தை நினைவு ஊட்டுகின்றது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இரவிலே தூங்கும் பொழுது கேட்ட துஆக்களிலே ஒன்று. யா அல்லாஹ்! நீ இந்த உயிரை கைப்பற்றுகின்றாய். நீ இந்த உயிரை கைப்பற்றுகின்றாய். நீ உன்னிடத்தில் இந்த உயிரை தடுத்துக் கொண்டால், எனது இந்த உயிர் மீது கருணை காட்டுவாயாக!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 6324 6320, 2714
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய கருணையை எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கெஞ்சினார்கள் பாருங்கள். அடுத்து சொல்கின்றார்கள். யா அல்லாஹ்! இந்த உயிரை மீண்டும் எனக்கு உலகத்திலே அனுப்பி கொடுத்தாய். எப்படி உன்னுடைய நல்லடியார்களை, எதை கொண்டு நீ பாதுகாத்தாயோ, பாவங்களில் இருந்து. ஈமான் தடுமாறுவதில் இருந்து. குற்றங்களை செய்வதிலிருந்து அப்படி என்னுடைய nafs ஐயும் நீ பாதுகாத்துக்கொள். என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ கேட்டார்கள்.
மேலும் அல்லாஹ் சொல்லுகின்றான். அவர்கள் யார்? அல்லாஹ்வுடைய தண்டனையை எப்போதும் பயந்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ் சொல்லுகின்றான். கண்டிப்பாக அல்லாஹ்வுடைய தண்டனை. அது பயம் அற்று இருக்கக்கூடிய ஒன்றல்ல. பயப்பட வேண்டிய ஒன்று. இப்படியாக அல்லாஹ் சுபஹானஹூதஆலா அந்த இறை நேசர்களின் பண்பை குறிப்பிடுகின்றான். அந்த தன்மையில் தான் அந்த சஹாபாக்கள் இருந்தார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே அவர்கள் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் ஒவ்வொன்றும் மறுமையை நோக்கி. எப்படி கேட்டார்கள்? அல்லாஹ்வின் தூதரே! இரவில் சிறந்த பகுதி எது? எதற்காக? கேட்டார்கள். அல்லாஹ்விடத்தில் நெருங்குவதற்காக. அல்லாஹ்வை தொழுவதற்காக. பாவமன்னிப்பு தேடுவதற்காக. அல்லாஹ்வின் நெருக்கத்திற்காக. இன்று. நம்முடைய பகலை விட இரவு நேரங்கள் தான் அல்லாஹ்வை நாம் அதிகம் மறப்பதற்குரிய நேரங்களாக இருக்கின்றன.
வீணாக கழிக்கப்படக்கூடிய நேரங்களாக இருக்கின்றன. அல்லாஹ்வை விட்டு ஒரு அடியான் அல்லாஹ்விடம் நெருக்கமாவதற்காக கொடுக்கப்பட்ட அந்த இரவு நேரம், அல்லாஹ்வை விட்டு தூரமாவதற்குரிய நேரமாக இன்று நம்முடைய சமுதாயத்தில் மாறி இருக்கிறது. சஹாபாக்கள் கேட்டார்கள்? அல்லாஹ்வின் தூதரே! இரவிலே எந்த பகுதி சிறந்தது? மாதங்களிலே எது சிறந்தது? எதற்காக? இன்று மக்கள் செய்கின்ற சடங்கு சம்பிரதாயங்களுக்காக வேண்டியா? இந்த muharram மாதத்தில். எத்தகைய சடங்கு களை உருவாக்கி இருக்கின்றார்கள்.
எந்த குற்றங்கள் எந்த அதாவது மௌடீதமான, மூடத்தனமான, மடமை தனமான செயல்களில் இருந்து இஸ்லாம் நம்மை தடுத்து, வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வந்ததோ, பரிசுத்தத்தின் பக்கம் கொண்டு வந்ததோ, ஒழுக்கத்தின் பக்கம், நாகரிகத்தின் பக்கம், கொண்டு வந்ததோ, அந்த சமுதாயத்திலே ஒரு கூட்டம்,
இந்த muharram மாதத்தை இதனுடைய இந்த முதல் பத்து நாட்களை, பிறகு அந்த பத்தாவது நாளை எப்படிப்பட்ட ஒரு சடங்குகளுடைய நாட்களாக. தங்களை கீரி கிழித்து சேதப்படுத்திக் கொண்டு, அசிங்கப்படுத்திக் கொண்டு, மொத்த உலகத்திலேயே இஸ்லாமை, அதாவது அனாகரிகமாக கூடிய எவ்வளவு ஒரு மூடத்தனமான செயல்களை செய்கின்றார்கள். அதற்கும் இஸ்லாமுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த muharram மாதத்திலே ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டது ஒரு எதார்த்த நிகழ்வு. அதற்கும் இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்காக இன்று துக்கம் கொண்டாடுவதோ, தங்களது நெஞ்சுகளில் அடித்துக் கொள்வதோ, நெஞ்சுகளை கிழித்து கொள்வதோ, இவை எல்லாம் இஸ்லாமிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாத ஒரு செயல்களாக இருக்கின்றன.
அது போன்று மாற்றார்களை போல இன்று ஒரு கூட்டம் தீ மிதிக்கின்றார்கள். பஞ்சா தூக்குகின்றார்கள். எவ்வளவு கேவலமான செயல். சைத்தானை சந்தோஷப்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வை சந்தோஷப்படுத்தவில்லை. இதைக்கொண்டு அல்லாஹ்வோ, அல்லாஹ்வுடைய தூதரோ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு போதும் சந்தோஷப்பட மாட்டார்கள்.
இவை எல்லாம் முழுக்க முழுக்க சைத்தானிய சிந்தனைகளால், இப்லீஸ் உடைய சிந்தனைகளால், இந்த சமுதாயத்தில் வழிகேடர்களின் உள்ளங்களிலே போடப்பட்ட மிக kufr ஆன இறை நிராகரிப்பான சடங்குகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நம்மைச் சுற்றி வாழக்கூடிய மக்களுக்கு இந்த எச்சரிக்கையை, இந்த விழிப்புணர்வை, நாம் கொடுக்க வேண்டும். அல்லாஹு தஆலா இந்த மாதத்தை சிறப்பாக்கினானே, பாருங்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு அவர்கள் சொன்னார்கள். இரவிலே மிகச் சிறந்தது.
இரவிலே மிகச்சிறந்தது எது? அதனுடைய நடுப்பகுதி. முந்தைய இரவிலே தூங்கி, நடுப்பகுதியிலே எழுந்திருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளுக்காக. பிறகு அந்த வணக்க வழிபாடுகள், தொழுது கொண்டிருந்து சஹர் நேரம் வந்தவுடன், அல்லாஹ்விடத்தில் இஸ்திக் ஃபார் செய்வதற்காக ஒதுங்கிவிட வேண்டும். அடுத்தச் சொன்னார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மாதங்களிலே மிக சிறந்த மாதம் எது? அதுதான் அல்லாஹ்வுடைய மாதம். எந்த மாதத்தை நீங்கள் muharram என்று அழைக்கின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுடைய மாதம். ஆக, இந்த மாதத்தில் அமல் செய்வது மிகச் சிறப்பானது. அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இந்த மாதத்தின் உடைய அமல்களிலே மிக முக்கியமான, அவர்கள் விரும்பிய அமல். அவர்கள் தொடர்ந்து செய்த அமலை, அபூ Huரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
عن أبى هُريرةَ رَضِيَ اللهُ عنه يرفَعُه، قال: ((سُئِلَ- أي النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم- أيُّ الصَّلاةِ أفضَلُ بعد المكتوبةِ؟ وأيُّ الصِّيامِ أفضَلُ بعد شَهرِ رمضانَ؟ فقال: أفضَلُ الصَّلاةِ بعد الصَّلاةِ المكتوبةِ، الصَّلاةُ في جَوفِ اللَّيلِ. وأفضَلُ الصِّيامِ بعد شَهرِ رَمَضانَ، صِيامُ شَهرِ اللهِ المُحَرَّم
அதாவது நோன்புகளிலேயே ரமலானுக்கு பிறகு, சிறந்த நோன்பு இருக்கிறதே, அது அல்லாஹ்வுடைய மாதமாகிய muharram மாதத்தினுடைய நோன்புகளாகும்., farலான தொழுகைக்குப் பிறகு, அல்லாஹ்விடத்தில் மிக சிறப்பான தொழுகை இருக்கிறதே, ஸலாத்துல் Lail. இரவினுடைய உபரியான தொழுகைகள். த ஹஜத்துடைய தொழுகை என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163
قَدِمَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ المَدِينَةَ، فَوَجَدَ اليَهُودَ يَصُومُونَ يَومَ عَاشُورَاءَ فَسُئِلُوا عن ذلكَ؟ فَقالوا: هذا اليَوْمُ الذي أَظْهَرَ اللَّهُ فيه مُوسَى، وَبَنِي إسْرَائِيلَ علَى فِرْعَوْنَ، فَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا له، فَقالَ النبيُّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: نَحْنُ أَوْلَى بمُوسَى مِنكُم فأمَرَ بصَوْمِهِ
கண்ணியத்திற்குரியவர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே, குரேஷிகள் மக்காவிலே இந்த நோன்பு வைத்துக் கொண்டிருந்தார்கள். Muharramமுடைய 10-வது தினத்திலே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ரமலானுடைய நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பாக மக்காவிலும் இந்த நோன்பை வைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு மதீனா வந்தார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ரமலானுடைய நோன்பு கடமையாக்கப்பட்டது. இந்த நோன்பை அவர்கள் விட்டு விட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1130
பிறகு யூதர்களை பார்த்தார்கள். அவர்கள் இந்த நாளிலே விசேஷமாக நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்ட பொழுது, மூஸா அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை அல்லாஹு தஆலா இந்த நாளில் தான் firounனிடமிருந்து பாதுகாத்தான் என்று கூறிய உடனே, உங்களை விட மூஸா அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கூறி, தானும் நோன்பு நோற்றார்கள். தங்களுடைய சஹாபாக்களை நோன்பு நோற்கும்படி வலியுறுத்தினார்கள.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1130
أَرْسَلَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إلى قُرَى الأنْصَارِ: مَن أصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَومِهِ، ومَن أصْبَحَ صَائِمًا، فَليَصُمْ. قالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، ونُصَوِّمُ صِبْيَانَنَا، ونَجْعَلُ لهمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أحَدُهُمْ علَى الطَّعَامِ، أعْطَيْنَاهُ ذَاكَ حتَّى يَكونَ عِنْدَ الإفْطَارِ
எந்த அளவிற்கு என்றால், தங்களது தோழர்களை அனுப்பினார்கள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு. யாராவது காலையிலே அறியாமல் சாப்பிட்டு இருந்தால் கூட, நோன்பு இல்லாமல் இருந்தால் கூட, தெரிந்ததிலிருந்து அவர் அந்த நோன்பை தொடரட்டும் என்பதாக உணவை சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு நோன்பை தொடரட்டும் என்பதாக இந்த நாள் உடைய அந்த அழுத்தத்தை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். இந்த muharramமுடைய பத்தாவது நாளிலே, நோன்பு நோற்கக்கூடிய சிறப்பு இருக்கிறதே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது.
அறிவிப்பாளர் : ரபீஆ பின்த் அல்முஅவ்விது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1960
எங்கெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே கேள்வி கேட்கப்படுகின்றதோ, தயவு செய்து அந்த இடத்திலே நீங்கள் கவனித்து பாருங்கள். சஹாபாக்கள் உடைய ஈமான், yakeen. அவர்களுடைய அமல்களுடைய, ஆர்வம் வெளிப்படும். அவர்கள் கேட்டார்கள்.
عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه: أنَّ رسول الله ﷺ سُئل عن صوم يوم عرفة، فقال: يُكفِّر السنة الماضية والباقية، وسُئل عن صوم يوم عاشوراء، فقال: يُكفِّر السنة الماضية ,عن أبي قَتادةَ رَضِيَ اللهُ عنه قال: قال النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: صيامُ يومِ عاشُوراءَ، أحتسِبُ على اللهِ أن يكَفِّرَ السَّنةَ التي قَبْلَه
அல்லாஹ்வின் தூதரே! இந்த muharramமுடைய பத்தாவது நாளிலே நோன்பு வைப்பது பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது. சொன்னார்கள். உங்களுடைய கடந்த கால அந்த ஆண்டு உடைய பாவங்களை இது போக்கி விடுகின்றது. மற்றும் ஒரு அறிவிப்பிலே சொன்னார்கள். இந்த muharram உடைய 10 ஆவது நாளுடைய நோன்பு இருக்கிறதே, அல்லாஹ்விடத்திலே நான் ஆதரவு வைக்கின்றேன்.
இதற்கு முந்திய ஆண்டுடைய பாவங்களை இது போக்கிவிடும் என்று. அவ்வளவு சிறப்பான நன்மைகளை உடைய ஒரு நோன்பு. அதாவது நம்முடைய சிறு பாவங்கள் எல்லாம் இது போன்ற நன்மைகளைக் கொண்டு மன்னிக்கப்பட்டு விடுகிறது.
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162
அந்த பெரும் பாவங்களும் மன்னிக்கப்படலாம். எப்போது என்று சொன்னால், அடியான் இந்த நோன்பை வைக்கும் பொழுது அல்லாஹ்விடத்திலே தௌபாவுடைய எண்ணத்திலே, யா! அல்லாஹ்! நான் செய்த பெரும் பாவங்களையும் மன்னித்து! நான் அதற்காக வருந்துகின்றேன். என்று அந்த ஈமானிய உணர்வோடு அந்த தவ்பாவின் வாசகங்களையும் கூறியவனாக, அவன் நோற்பானே ஆனால் கண்டிப்பாக அவருடைய சிறு பாவங்கள் மன்னிக்கப்படுவது போன்று, அவனுடைய பெரும் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்.
سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عنْهمَا، وَسُئِلَ عن صِيَامِ يَومِ عَاشُورَاءَ فَقالَ: ما عَلِمْتُ أنَّ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ صَامَ يَوْمًا يَطْلُبُ فَضْلَهُ علَى الأيَّامِ إلَّا هذا اليومَ وَلَا شَهْرًا إلَّا هذا الشَّهْرَ. يَعْنِي رَمَضَانَ.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹூமாவிடத்திலே கேட்கப்படுகின்றது. Ashoora வுடைய நோன்பை பற்றி. அவர்கள் சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாளின். குறிப்பிட்டு நோன்பு நோற்பதில் கவனம் செலுத்தியவர்களாக.
மற்ற நாள்களில் இல்லாத சிறப்பு, இந்த நாளில் தனக்கு இருக்கிறது. இந்த நாளுடைய நோன்பி லே இருப்பதாக கருதி, ஒரு விசேஷமான ஒரு நாளை தேடி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்றால், இது முஹர்ரம் உடைய இந்த பத்தாவது நாளாகிய Ashoora உடைய நோன்பைத்தான்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1132
அதுபோன்று. ஒரு மாதம் முழுக்க. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முழுமையாக நோன்பு நோற்றார்கள் என்றால், அது ரமலானுடைய மாதம். இந்த ரமலான் உடைய மாதத்தின் நோன்புகளையும்,
அது போன்று மொஹரம் உடைய இந்த பத்தாவது நாளுடைய நோன்பையும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனுடைய நன்மையை பெறவேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பார்கள். கண்ணியத்திற்குரியவர்களே! இத்தகைய ஒரு சிறந்த மாதம் நமக்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கை முடிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி ஒவ்வொரு ஆண்டு வருவது போவது இருக்கிறதே, இதிலிருந்து நாம் என்ன படிப்பினை பெற வேண்டும்? நம்முடைய மரணம் நெருங்குகின்றது. நம்முடைய ஆயுள் குறைந்து கொண்டுபோகிறது. அல்லாஹ்வை சந்திக்க கூடிய நாளை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.
اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُعْرِضُونَ
மக்களுக்கு அவர்களின் விசாரணை (நாள்) நெருங்கி வருகிறது. அவர்களோ மறதியில் இருக்கிறார்கள், (நமது எச்சரிக்கையை) புறக்கணிக்கிறார்கள். (அல்குர்ஆன் 21 : 1)
மக்களின் விசாரணை நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ அலட்சியத்தில் மூழ்கியவர்களாக, அல்லாஹ்வுடைய உபதேசங்களை, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புறக்கணித்து கொண்டிருக்கின்றார்கள் என்று அல்லாஹ் சொல்லுகின்றான்.
أَتَى أَمْرُ اللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
அல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை (உடனே கொண்டுவரும்படி கூறி) நீங்கள் அவசரப்படுத்தாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் (-சிலை வணங்கிகள்) இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன். (அல்குர்ஆன் 16 : 1)
அல்லாஹ்வுடைய கட்டளை மறுமை மிக சமீபமாக வந்துவிட்டது. மறுமைக்கான எல்லா சிறிய அடையாளங்களும் வெளி பட்டு விட்டன. பெரிய அடையாளங்கள் மட்டும் தான் மீதம் இருக்கின்றன அன்பிற்குரியவர்களே! ஒன்று நம்முடைய மரணம். அதுவே நமக்கு ஒரு மிகப் பெரிய மறுமை. ஒரு மனிதன் மரணித்து விட்டால், அவன் உடைய மறுமை அவனுக்கு நிகழ்ந்து விடுகின்றது.
நாம் அங்கே மலக்குகளை சந்திக்க வேண்டும். முன்கர் நக்கீரை சந்திக்க வேண்டும். கப்ருடைய வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். நமக்கு முன்னால் இறந்துவிட்ட நம்முடைய உறவுகளை நினைத்துப் பாருங்கள். மஹஷரை நினைத்துப் பாருங்கள்.
அல்லாஹ்விற்கு முன்னால் விசாரணைக்காக நிறுத்தப்படக்கூடிய அந்த நாளை நினைத்துப் பாருங்கள். நாம் என்ன சேகரித்து வைத்திருக்கின்றோம்? வாழ்நாளிலே ஹிஜ்ரத் செய்த, ஜிஹாது செய்த, nusrat செய்த, அல்லாஹ்வுடைய தூதருக்காக, இந்த மார்க்கத்திற்காக, தங்களது உயிரை கொடுத்து, தங்களது செல்வத்தை எல்லாம் அர்ப்பணம் செய்த, தங்களுடைய எல்லா உலக வாழ்க்கையின் அத்தனை நியாமத்துகளையும், அல்லாஹ்வுடைய பாதையிலே அர்ப்பணம் செய்த அந்த சஹாபாக்கள், மறுமையை குறித்து பயந்தார்கள்.
Qabr ஐ குறித்து பயந்தார்கள். ஆkhiratத்தை குறித்து பயந்தார்கள். நம்மிடத்தில் எந்த அமலும் இல்லையே என்று அவர்கள் அழுதார்கள். இன்று பார்லான அமல் களிலும் குறைபாடு. நஃபீலான sunnatதான அமல்கள். அறவே இல்லை. அல்லது இருந்தாலும் உருப்படியாக இல்லை. தர்மங்களிலே குறைபாடு. தொழுகையிலே பலவீனம். நபிலான வணக்க வழிபாடுகளில் பலவீனம்.
இது போக. ஹராமை கணக்கிட்டால். நாம் செய்த அமல்களை விட, ஹராமுடைய எண்ணிக்கை அவ்வளவு மலை போன்று குவிந்திருக்கும். தவ்பா செய்து இருக்கின்றோமா? இஸ்திஃபார் செய்திருக்கின்றோமா?
واللَّهِ إنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وأَتُوبُ إلَيْهِ في اليَومِ أكْثَرَ مِن سَبْعِينَ مَرَّةً
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6307
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு நாளும் 100 முறை அல்லாஹ்விடத்தில் இஸ்திக் ஃபார் கேட்பார்கள் தனியாக. தொழுகையில் கேட்பது தவிர, மஜிலிஸ் களிலே உட்கார்த்திருக்கும் போது கேட்பதை தவிர, துஆ கேட்கும் போதும் கூட, தனியாக அல்லாஹ்விடத்தில் 100 முறை இஸ்திஃபார் செய்வார்கள்.
இப்படி சகோதரர்களே! யார் மறுமையை பயந்து மறுமைக்காக வாழ்ந்தார்களோ, அவர்களுக்குத்தான் இந்த துனியா அர்த்தம் உள்ளதாக இருக்கும். நன்மை உள்ளதாக இருக்கும். அவர்களுடைய வாழ்நாளிலே வெற்றியைத் தேடிக் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு தான் அல்லாஹ்வுடைய அறிவிப்பு வரும்.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ , نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்! “நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.”(அல்குர்ஆன் 40 : 30, 31(
அவர்கள் மரணிக்கின்ற நேரத்திலே, மலக்குகள் இறங்கி அவர்களுக்கு நற்செய்தி சொல்வார்கள். நீங்கள் மறுமைக்கு வரப் போகின்றீர்கள். பயப்படாதீர்கள். அந்த மறுமையை இது நாள் வரை பயந்து கொண்டிருந்தீர்கள். இனி நீங்கள் அந்த மறுமையை குறித்து பயப்பட வேண்டாம்.
உங்களுக்கு சொர்க்கம் இதோ! பிறகு உங்களுடைய குடும்பம், உங்களுடைய மனைவி, பிள்ளைகள் உங்களுடைய உறவுகளை விட்டு வருகின்றீர்களே! அவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். அல்லாஹ்! அவர்களை பொறுப்பேற்றுக் கொள்வான். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்வான் என்று அந்த மலக்குகள் அவர்களுக்கு சொல்வார்கள். பயப்படாதீர்கள். கவலைப்படாதீர்கள். சொர்க்கத்தை கொண்டு சுபச்செய்தியைப் பெற்று எங்களுடன் வாருங்கள் என்று.
அன்பு சகோதரர்களே! இத்தகைய இந்த உயர்ந்த நற்செய்தியை பெற வேண்டும் என்றால், இந்த உலக வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கழிக்க வேண்டும். ஒரு குறிக்கோளோடு கழிக்க வேண்டும். அமல்களுக்கான பட்டியலை போட வேண்டும். காலையில் எழுந்தவுடன் இந்த அமல். பிறகு ஐங்கால தொழுகையிலே ஜமாத்தோடு நிறைவேற்றுவது. இத்தனை ஜூஸ் நாம் ஓத வேண்டும்.
இவ்வளவு நாம் மார்க்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இன்னென்ன அமல்கள் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு தர்மம் செய்ய வேண்டும் நம்முடைய பாவங்களுக்காக இஸ்திஃபார் செய்ய வேண்டும். இப்படியாக வாழ்க்கையில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அமல்களுக்காக tarteeb செய்து, எப்படி காலையில் எட்டு மணி ஒன்பது மணி பத்து மணிக்கு கடைக்குச் செல்ல வேண்டும். இவ்வளவு நேரம் தொழில் செய்ய வேண்டும் என்று நமக்கு நாமே இந்த துனியாவிற்காக விதியை ஏற்படுத்திக் கொண்டோமோ,
இதை விட சிறப்பாக Akhiratகான tarteeb ஐ செய்து கொள்ள வேண்டும். ஆகாரத்திற்கான அமல்களுக்கு உரிய tarteeb ஐ நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமாகத்தான் நாம் இறக்கும் பொழுது அல்ஹம்துலில்லாஹ்! இவ்வளவு அமல்களோடு நாம் செல்கிறோம் என்ற அந்த சந்தோஷத்தோடு திருப்தியோடு செல்ல முடியும். அல்லாஹ் சுபஹானஹூதஆலா என்னையும் உங்களையும், யார் இந்த உலக வாழ்க்கையை மறுமைக்காக பயன்படுத்திக் கொண்டார்களோ, அத்தகைய உயர்ந்த நல்லவர்களில் ஆக்கி வைப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469fa044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/