சோதனைகளில் நம்பிக்கை இழந்து வீடாதீர் | Tamil Bayan - 814
சோதனையில் நம்பிக்கை இழந்து விடாதீர்.
ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனையில் நம்பிக்கை இழந்து விடாதீர்.
வரிசை : 814
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -04-08-2023 | 17-01-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்வோமாக! அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுவோமாக! அல்லாஹ்வை பயந்து வாழ்வோமாக! அல்லாஹு தஆலா தனது அல்குர்ஆனிலே நமக்கு ஒரு வசியத்தை சொல்லுகின்றான்.
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். இன்னும், நீங்கள் நிராகரித்தால் (அது அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக (எத்தேவையுமற்றவனாக), பெரும் புகழுக்குரியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 131)
அதே வசியத்தை முந்தைய சமுதாயத்திற்கும் அல்லாஹ் சொல்லி இருக்கின்றான். அல்லாஹு தஆலா நபியை பார்த்து பேசுகின்றான். சஹாபாக்களை பார்த்து பேசுகின்றான். அல்லாஹ்வை, மறுமை நாளை நம்பிக்கை கொண்ட மூமின்களை பார்த்து பேசுகின்றான். அல்லாஹு தஆலா சொல்லுகின்றான். திட்டமாக நாம் உபதேசம் செய்திருக்கின்றோம். கட்டளையிட்டிருக்கின்றோம்.
இவ்வளவு அழுத்தம் திருத்தமாக அல்லாஹு தஆலா நமக்கு, நமது மனதிலே உறுதிப்படுத்துகின்றான். பாருங்கள். உங்களுக்கு முன்னால் வந்த மக்கள். யாருக்கெல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வேதங்கள் அனுப்பப்பட்டதோ, வேதங்கள் இறக்க பட்டனவோ, நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ, அவர்கள் எல்லோருக்கும் நாம் கட்டளை கொடுத்தோம். அதே கட்டளையை உங்களுக்கும் கொடுக்கின்றோம். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். தக்வா உடைய வாழ்க்கையை கடைப்பிடியுங்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த தக்வா. நம்முடைய ஈமானை உறுதிப்படுத்துகின்றது. நம்முடைய மறுமையின் மீளும் இடத்தை மிக அழகிய இடமாக ஆக்கி விடுகின்றது. நமது கேள்வி கணக்கை எளிதாக்கி விடுகின்றது. அல்லாஹ்விடம் நமது நெருக்கத்தை அதிகப்படுத்துகின்றது. இந்த உலக வாழ்க்கையில், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை நமக்கு இழுத்துக் கொண்டு வருகின்றது. அல்லாஹ்வுடைய தண்டனையை நமக்கு தடுக்கின்றது.
இந்த தக்வாவை, நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வருவது, இந்த தக்வாவை அதிகப்படுத்துவது, தக்வா உடைய அமல்களை செய்வது, பிறகு எந்த செயல்களால், தக்வா பாதிக்குமோ, தக்வாவிலே பலவீனம் ஏற்படுமோ, அந்த செயல்களை விட்டு, வெகு தூரம் விலகி இருப்பது. இது நாம் கடைபிடிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய, நம்மை நாமே கண்காணிக்க வேண்டிய, மிக முக்கியமான விஷயம். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவிடத்திலே துஆ செய்வோம். அல்லாஹு தஆலா நமக்கு அந்த தக்வாவை தருவானாக!)
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான். (அல்குர்ஆன் 16 : 128)
நிச்சயமாக அல்லாஹ் அந்த மக்களோடு இருக்கின்றான். யார் அல்லாஹ்வை பயந்த வாழ்கின்றார்களோ. யார் ihsanனோடு வாழ்கின்றார்களோ, அல்லாஹ்விற்கும் தங்களுக்கும் இடையில் உண்டான உறவை சரி செய்து கொண்டார்களோ,
யார் பிற மக்களுக்கு உதவி உபகாரம் செய்யக்கூடியவர்களாக, நல்லறம் செய்பவர்களாக இருக்கின்றார்களோ, அவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான். அவர்களை அல்லாஹு தஆலா கைவிட மாட்டான்.
அல்லாஹ்வின் அடியார்களே! தொடர்ந்து பல நாடுகளில், பல இடங்களில், பல ஊர்களில், நாம் வாழக்கூடிய நாடு உள் பட முஸ்லிம்களுக்கு எதிராக என்னென்ன சதி திட்டங்கள் தீட்டப்படுகின்றனவோ, முஸ்லிம்கள் மீது என்னென்ன கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றனவோ, கண்டிப்பாக ஒரு முஃமின் உடைய உள்ளத்தை அவை பாதிக்கக் கூடியது தான். நாம் யார்? நாம் ஒரு உடலை போல. மூமின்கள்.
இந்த பூமியில் எந்த பகுதியில் வசித்தாலும் சரி. அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு ஆபத்து. அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு இன்னல். அவர்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடம், சிரமம், கொடுமை, இதனுடைய வலியை, இந்த பூமியில் எந்த திசையில், இன்னொரு முஃமின் வாழ்ந்தாலும் அவன் உணர்வானே ஆனால் அவன் தான் உண்மையான முஃமின். அவன் தான் ஈமானை உடையவன்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ، وَتَرَاحُمِهِمْ، وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
அல்லாஹு தஆலா உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். முஃமின்கள். தங்களுக்குள் அன்பு வைப்பதிலே, தங்களுக்குள் ஒருவர் மற்றவர் மீது கருணை காட்டுவதிலே அவர்கள் எப்படி என்றால், ஒரு உடலை போல. அந்த உடலில் ஒரு உறுப்புக்கு ஏதாவது வலி ஏற்பட்டால், எல்லா உறுப்புகளும் சேர்ந்து அந்த வலியை உணருகின்றன. இரவிலே விழித்திருக்கின்றன.காய்ச்சலால் அவதிப்படுகின்றன. மூமின்கள் எல்லாம் அப்படித்தான்.
அறிவிப்பாளர் : நூஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 2586
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலே நமக்கு அழகிய படிப்பினை, பாடம் இருக்கிறது. இறைத்தூதர்களின் வாழ்க்கையிலே நமக்கு படிப்பினை, பாடம் இருக்கிறது. எந்த இறைத்தூதர்களும் எதிரிகளால் சோதிக்கப்படாமல் இந்த உலகத்தை விட்டுச் செல்லவில்லை.
எல்லா இறைத்தூதர்களும் எதிரிகளால் சோதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏன்? பல நபிமார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பல இறை தூதர்கள், பல ரசூல்மார்கள், அல்லாஹுவின் பாதையிலே மார்க்கத்தை எடுத்து சொன்னதற்காக, எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ZAkariya அலைஹிஸ்ஸலாம் இரண்டு துண்டாக அறுக்கப்பட்டார்கள். இன்னும் எத்தனை நபிமார்கள் அல்லாஹு தஆலா இஸ்ரவேலர்களை பார்த்து சொல்லும்பொழுது, நபிமார்களின் வம்சத்தில் வந்தவர்களே! நபிமார்களுக்கு எதிரிகளாக இருந்து நபிமார்களை கொன்று இருக்கின்றார்கள்.
وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ
இன்னும், “மூஸாவே! ஒரே ஓர் உணவை (மட்டும் சாப்பிட்டு வாழ்வதில்) நாங்கள் அறவே பொறுமையாக இருக்க மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக அவன் வெளியாக்குவான்” என நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். “சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு (அங்கே) உண்டு” என அவர் கூறினார்.
இன்னும், இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தினாலாகும். அது, அவர்கள் பாவம் செய்த காரணத்தினாலும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தினாலும் ஆகும். (அல்குர்ஆன் 2 : 61)
அவர்கள் நபிமார்களை கொலை செய்தார்கள். என்று அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். Nuh அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூசா அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி அல்குர்ஆனிலே மிக அதிகமாக வரலாறுகள் சொல்லப்பட்ட நபிமார்களை நாம் எடுத்துப் பார்த்தால், இந்த எல்லா இறைத்தூதர்களும் எதிரிகளால் சோதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்களுடைய சமுதாய மக்கள் எதிரிகளால் சோதிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் அடியார்களே! எந்த நேரத்தில், நாம் சோதிக்கப்படுவோமோ, இது போன்ற இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவோமோ, இது போன்ற கொடுமைகள் நிகழுமோ, அப்போது ஒரு mumin உடைய நிலை எப்படி இருக்க வேண்டும்?
பதட்டப்படுவதோ, பலவீனப்படுவதோ, தாழ்வு மனப்பான்மை விற்கு ஆளாகுவதோ, அல்லாஹ்வுடைய உதவி நமக்கு வராது என்று நிராசை அடைவதோ, அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டான் என்று அவ நம்பிக்கைக்கு ஆளாகுவதோ, ஒரு முஃமினுக்கு அழகல்ல.
இந்த சோதனைகள். நமக்கு அல்லாஹ்வின் மீது உண்டான அன்பை. அல்லாஹ்வின் மீது yakeen ஐ, தவக்குல்லை, husnulman. அழகிய அந்த எண்ணத்தை, அல்லாஹ்வின் மீது அழகிய அந்த நம்பிக்கையை நமக்கு அதிகப்படுத்த வேண்டும். அல்லாஹு தஆலா இந்த சோதனைகள் மூலமாக, என்னை, எனது சமுதாயத்தை பரிசுத்தப்படுத்த விரும்புகின்றான். அல்லாஹ்வின் பக்கம் நான் திரும்ப வேண்டும். கெஞ்ச வேண்டும். துஆ கேட்க வேண்டும். என்று அல்லாஹ் விரும்புகின்றான். என்பதை முஃமின் உணர வேண்டும்.
இந்த சோதனைகள் நீக்கப்பட வேண்டும் என்றால், இந்த நிலைமைகள் மாற வேண்டும் என்றால், இந்த குழப்பங்களில் இருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், பலர். பல ஆலோசனைகளை கூறலாம். பலர் பல வழிகளை நமக்கு கற்பிக்கலாம்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் எந்த வழியை சொல்கின்றானோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த வழியை காட்டினார்களோ, அதில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது. உண்மையான இரட்சிப்பிருக்கிறது. உண்மையான பாதுகாப்புக்குரிய வழியாக இருக்கும். அல்லாஹு தஆலா நபிமார்களுடைய வரலாற்றை நமக்கு எடுத்துச் சொல்கின்றான். நமக்கு வழிகாட்டுகின்றான். அல்லாஹு தஆலா சொல்வதை பாருங்கள்.
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.” . (அல்குர்ஆன் 40 : 60)
இந்த சோதனைகளின் நேரத்திலே, நாம் துஆவை அதிகபடுத்த வேண்டும். நமக்காக. நம்முடைய மூமினாக சகோதரர்களுக்காக. எந்த இடத்தில் மூமின்கள் சோதிக்கப்படுகின்றார்களோ, அவர்களுடைய இடத்தைக் கூறி, அவர்களுடைய பெயர்களை கூறி, அந்த சமுதாயத்தினுடைய ஊரை கூறி அவர்களுக்காக நாம் துஆ செய்ய வேண்டும்.
எந்த எதிரிகள் அவர்கள் மீது கொடுமை நடத்துகின்றார்களோ, அவர்களை அநியாயமாக கொல் கின்றார்களோ, அந்த எதிரி சமுதாயத்தின் பெயரை கூறி அல்லாஹ்விடத்திலே துஆ கேட்பது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் அப்படித்தான் துஆ கேட்டார்கள்.
أنَّ النَّبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ كانَ إذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَن حَمِدَهُ، في الرَّكْعَةِ الآخِرَةِ مِن صَلَاةِ العِشَاءِ؛ قَنَتَ: اللَّهُمَّ أنْجِ عَيَّاشَ بنَ أبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أنْجِ الوَلِيدَ بنَ الوَلِيدِ، اللَّهُمَّ أنْجِ سَلَمَةَ بنَ هِشَامٍ، اللَّهُمَّ أنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ علَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عليهم سِنِينَ كَسِنِي يُوسُفَ.
அல்லாஹ்வே! உன்னுடைய பிடியை கடுமைப் படுத்திவிடு. இந்த முதற் கூட்டத்தின் மீது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் zakwan, Ra-al. அந்த கோத்திரத்தார்களுக்கு எதிராக துஆ செய்தார்கள். அவர்கள் மூமின்களைக் கொன்ற போது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 6393, 677
இன்று நம்முடைய நிலை எப்படி இருக்கிறது என்றால், செய்திகளை தெரிந்து கொள்வதிலே நமக்கு இருக்க கூடிய ஆர்வம். நடந்த நிகழ்வுகளை பார்ப்பதிலோ, கேட்பதிலோ, நமக்கு இருக்க கூடிய ஆர்வமும் ஈடுபாடும், அல்லாஹ்வின் பக்கம் திரும்பவதில்லை. அந்த மூமின்களுக்காக துஆ கேட்பதிலே நமக்கு இருப்பதில்லை.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த செய்திகளை கேட்கும் போதெல்லாம், உடனே துஆவின் பக்கம் விரைந்தார்கள். துஆவை அதிகப்படுத்தினார்கள் அல்லாஹ் சொல்லுகின்றான். உங்களது ரப்பு உங்களுக்கு சொல்கின்றான். நீங்கள் என்னிடத்திலே துஆ கேளுங்கள். நான் உங்களுக்கு பதில் அளிப்பேன் என்று.
அன்பான சகோதரர்களே! இந்த நேரத்தில் நாம் அல்லாஹ்வின் இரட்சிப்புக்காக, அல்லாஹ்வுடைய உதவி இறங்குவதற்காக, அல்லாஹ்வுடைய பாதுகாப்பிற்காக துஆ செய்யவில்லை என்றால், வேறு எந்த நேரத்திலே இதற்காக நாம் துஆ செய்யப்போகின்றோம் கஷ்டங்கள் அலைகளாக நம் மீது மோதும் போது, எதிரிகளின் புறத்திலிருந்து இன்னல்களும் அநியாயங்களும் நம்மை சூழும் பொழுது, அதுவல்லவா துஆ கேட்கக்கூடிய நேரம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வழிமுறை. போர் உக்கிரமமாக மூண்டு விட்டால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆவை அதிகப்படுத்துவார்கள். முந்தைய சமுதாய மக்களை பார்த்து அல்லாஹ் சொல்லுகின்றான். அவர்களுடைய வழிமுறையை அல்லாஹு தஆலா நபிக்கும், சஹாபாக்களுக்கும், கற்றுக் கொடுத்தான். ஜாலூத்தை தாலூத் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய படை எதிர்கொண்ட பொழுது, அவர்கள் அந்த உக்கிரமான போர் நிறுத்தலே அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டார்கள்.
وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
இன்னும், அவர்கள் (-தாலூத்தும் அவரின் படையும்) ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! இன்னும், நிராகரிப்பாளர்களாகிய மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 40 : 60)
யா அல்லாஹ்! நாங்கள் பலவீனமானவர்கள். எங்களின் பாதத்தை நீங்கள் பலப் படுத்தவில்லை என்றால், எங்களின் உள்ளத்திலே நீ உறுதியை கொடுக்கவில்லை என்றால், நாங்கள் கோழையாகி விடுவோமே. எங்களுக்கு பொறுமையை மழையாக பொழிய வை. எங்களது உள்ளத்தை பொறுமையைக் கொண்டு நிரப்பு. எங்களது பாதங்களை பலப்படுத்து. அன்பான சகோதரர்களே! அல்லாஹ் நம்முடைய பாதத்தை பலப்படுத்தவில்லை என்றால், நம்மை அல்லாஹ் உறுதிப்படுத்தவில்லை என்றால், நாம் தடுமாறி விடுவோம்.
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக! (அல்குர்ஆன் 40 : 60)
அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை யாரும் மிகைக்க முடியாது. அல்லாஹ் உங்களை கைவிட்டால், உங்களுக்கு உதவக்கூடியவர் யார் இருக்கிறார்? அல்லாஹ்விற்கு பிறகு. புரிய வேண்டும் அன்பானவர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்டார்கள். துஆ கேட்கும் படி சொன்னார்கள். சோதனைகள் அதிகமாகும் பொழுது, இது போன்ற இன்னல்கள் அதிகமாகும் பொழுது, அல்லாஹ்விடத்தில் அழ வேண்டும்.
فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ
ஆக, நம் தண்டனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? எனினும், அவர்களுடைய உள்ளங்கள் இறுகின. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்ததை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்தான். (அல்குர்ஆன் 6 : 43)
அல்லாஹ் சொல்லு கின்றான். நம்முடைய சோதனைகள். அல்லது தண்டனைகள். இது இரண்டில் ஒன்றாக இருக்கலாம். அல்லாஹ்வின் புறத்திலிருந்து, நம்மை நம்முடைய ஈமானை பக்குவப்படுத்துவதற்கு, நம்முடைய பாவங்களை போக்குவதற்கு ஒரு சோதனையாக இருக்கலாம். அல்லது நம்மில் சிலர் செய்கின்ற, அல்லது நாம் பொதுவாக செய்கின்ற குற்றங்களுக்காக மார்க்க புறக்கணிப்பிற்காக இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையாகவும் இருக்கலாம்.
அல்லாஹு தஆலா சொல்கின்றான். நம்முடைய பிடிவந்த போது நம்முடைய தண்டனை வந்த போது அவர்கள் பயந்திருக்க வேண்டுமே. பணிந்திருக்க வேண்டுமே. நம்மிடத்திலே துஆ கேட்டிருக்க வேண்டுமே. ஏன் அவர்களது உள்ளங்கள் இறுகிப்போகினர்.
சைத்தான் அவர்களுக்கு அலங்கரித்து விட்டான். இவ்வளவு சோதனைகள் உடைய நேரத்திலும், நாம் இங்கு சோதிக்கப்படாமல் இருக்கின்றோம் என்று, மூமின்கள் மார்க்கத்திற்கின் பக்கம் திரும்பாமல், தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை, தவ்ஹீதை, சுன்னாவை பலப்படுத்தாமல் இருந்தார்களேயானால் அங்கு ஏற்படக்கூடிய சோதனைகள் இங்கே நிகழ்வது ஒன்றும் தூரமானது அல்ல. சோதனைகளின் நேரத்திலே துஆக்கள் அதிகமாக வேண்டும்.
فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ
ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் (பலவீனமாக இருக்கிறேன்,) தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ (எனக்காக) பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார . (அல்குர்ஆன் 54 : 10)
Nuh அலைஹிஸ் சலாது வஸ்ஸலாம் அவர்களை பற்றி அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்விடத்திலே எப்படி மன்றாடினார்கள். எப்படி அல்லாஹ்விடத்திலே கேட்டார்கள். யா! அல்லாஹ்! எல்லா வகையான சோதனைகளுக்கும் நான் ஆளாகி விட்டேன். நான் மிகைக்கப்பட்டு விட்டேன். நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். இனி இந்த மக்களுக்கு தாவா செய்ய முடியாது. என்னை கொல்ல முயற்சிக்கின்றார்கள். என்னோடு நம்பிக்கை கொண்டவர்களை கொல்ல முயற்சிக்கின்றார்கள்.
இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டார்கள். Nuh அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை எங்கு பார்த்தாலும் கல்லால் எரிந்து கொண்டிருந்தார்கள். Nuh உடைய உம்மத்தை அலைஹிஸ் ஸலாத்து வஸலாம். எங்கு பார்த்தாலும் கல்லால் எரிந்து கொண்டிருந்தார்கள். நடக்க முடியாது. சமுதாயத்தில் எங்கும் வெளியே செல்ல முடியாது.
எந்த அளவு இந்த குஃபார்கள் கொடியவர்கள் என்றால், அவர்களிலே ஒருவன் தன்னுடைய மகனை தோளிலே சுமந்து செல்வான். நபி நூஹ் அலைஹிஸ் ஸலாத்து அஸ்ஸலாம் அவர்களை பார்த்து விட்டால் அல்லது ஒரு முஃமினை பார்த்து விட்டால், தான் கல்லால் அடிப்பது மட்டுமல்ல. தனது மகனை தோளிலிருந்து இறக்கிவிட்டு அவனது கையிலே கற்களை கொடுத்து அடிக்கச் சொல்வார், இதைத்தான் நூஹ் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹ்விடத்திலே இதை எல்லாம் சொன்னார்கள்:
إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا
நிச்சயமாக நீ அவர்களை (உயிருடன்) விட்டுவிட்டால் (நம்பிக்கை கொண்ட) உனது அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். பாவியை, மிகப் பெரிய நிராகரிப்பாளனைத் தவிர (நல்லவர்களை, நம்பிக்கையாளர்களை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (அவர்களும் வழிகெட்டு, தாங்கள் பிள்ளைகளையும் வழிகெடுப்பார்கள்.) (அல்குர்ஆன் 54 : 10)
யா அல்லாஹ்! இனி இந்த காபிர்களை நீ பூமியிலே விட்டுவிட்டால், இவர்கள் மட்டும் வழிகெட்டதல்ல. இவர்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளையும் காபிர்களாகத்தான் ஆக்குவார்கள். இஸ்லாம் மின் எதிரிகளாகத்தான் ஆக்குவார்கள்.
சகோதரர்களே! அதை தானே இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. நம்மை பொருத்தவரை இந்த சோதனைகள் நமக்கு புதியது அல்ல. நம்முடைய சமுதாயத்திற்கு ummate முமீனாவிற்கு இது புதியதல்ல. ஆனால் நாம் படிப்பினை பெறுவது இல்லையே. முந்திய சமுதாயத்தினுடைய வரலாறுகளை அல்லாஹ் சொல்லி நமக்கு அறிவுரை கூறுகின்றானே, அதிலிருந்து ஒரு அறிவுரையாக நாம் அமல்படுத்திநோமா? கொண்டு வந்தோமா? வாழ்க்கையிலே.
முதலாவது துஆ. இந்த துஆ நம் இடத்தில எந்த அளவு இருக்கிறது? Nuh அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அத்தனை கொடுமைகளையும் அல்லாஹ்விடத்திலே சொன்னார்கள். அத்தனை கொடுமைகளையும். Surah Nuh ஐ படித்துப் பாருங்கள். யா! அல்லாஹ்! என்னென்ன கொடுமைகளை செய்கின்றார்கள். நான் இவர்களை எப்படி எல்லாம் இர க்கத்தோடு, கருணையோடு இவர்களை அழைக்கின்றேன்.
فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا ,وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارً ,ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا ,ثُمَّ إِنِّي أَعْلَنْتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا ,فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا ,وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا ,مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا
அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன். ,ஆனால், எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை, (அவர்கள் எனது அழைப்பிலிருந்து) விரண்டு ஓடுவதைத் தவிர. ,நீ அவர்களை மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் ஆக்கிக் கொண்டனர். (என்னை அவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக தங்களை) தங்கள் ஆடைகளால் மூடிக்கொண்டனர். இன்னும், (நிராகரிப்பில்) பிடிவாதம் பிடித்தனர். பெருமையடித்தனர். ,பிறகு, நிச்சயமாக நான் அவர்களை பகிரங்கமாக அழைத்தேன். ,பிறகு, நிச்சயமாக நான் அவர்களிடம் (பொது இடத்தில்) வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக இரகசியமாகப் பேசினேன். ,ஆக, நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான். ,அவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான். ,இன்னும், உங்களுக்கு செல்வங்களாலும் ஆண் பிள்ளைகளாலும் உதவுவான். இன்னும், உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான். இன்னும், நதிகளை உங்களுக்கு ஏற்படுத்துவான். ,உங்களுக்கு என்ன ஆனது அல்லாஹ்வின் கண்ணியத்தை (மகத்துவத்தை) நீங்கள் பயப்படுவதில்லை?,திட்டமாக அவன் உங்களை பல நிலைகளாக (பல கட்டங்களாக -இந்திரியம், இரத்தக்கட்டி, சதைத்துண்டு இப்படியாக ஒரு நிலைக்குப் பின் ஒரு நிலையாக இறுதியில் முழு மனிதனாக) படைத்(து முடித்)தான். (அல்குர்ஆன் 71 : 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14)
அல்லாஹ் இடத்திலே பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். யா! அல்லாஹ்! பகிரங்கமாக அழைக்கின்றேன் எனது சமுதாயத்தை. ரகசியமாக அழைக்கின்றேன். வெளிப்படையாக அழைக்கின்றேன். தனியாக சென்று பேசுகிறேன். உன்னுடைய அன்பை எல்லாம் அவர்களுக்கு சொல்லிக் காட்டுகின்றேன்.
அல்லாஹ் உன்னைப் பற்றி நான் இவர்களிடம் பேசுகின்றேன். இவர்களோ என்னை இப்படி துன்புறுத்துகின்றார்கள். யா! அல்லாஹ்! இனி இந்த காபிர்கள் திருந்த மாட்டார்கள். அல்லாஹ்விடத்திலே கையேந்தினார்கள். தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் அல்லாஹ்விடத்திலே சொன்னார்கள்.
நபிமார்களில் சோதிக்கப்பட்டவர்களில் நூஹ் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் மிகப்பெரிய முன்னோடியாக இருக்கின்றார்கள் எல்லா நபிமார்களுக்கும். முதலாவது அனுப்பப்பட்ட ரசூலே இந்த பூமியில், ஒரு பெரும்பான்மையான கூட்டத்தால், நிராகரிப்பாளர்களால், முஷ்ரிக்குகளால், சோதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். யோசித்துப் பாருங்கள். முதல் ரசூல். ஆதம் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய காலத்திலிருந்து, காலத்தால் அவர்கள் தான் மிக நெருக்கமானவர்கள்.
அப்படி இருந்தும் இந்த குஃப்ர், ஷிர்க், இருக்கிறதே, இது உள்ளத்திலே ஊறிவிட்டால், இந்த ஷிர்க்கு, kufr எவ்வளவு மோசமானது என்றால், கொடிய நோய். கொடிய நோய் எப்படி மனிதனுடைய ரத்தத்தை, மனிதனுடைய உடலை கெடுத்து நாசமாக்கி விடுமோ, அதுபோன்று தான் குஃபுரும், shirkக்கும் மனிதனுடைய குணங்களை கெடுத்து விடும். மனிதனுடைய அனைத்து பண்புகளையும் கெடுத்துவிடும். ஆகவேதான் அல்லாஹு தஆலா நமக்கு சொல்லுகின்றான்.
وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ
இன்னும், குழப்பம் (-இணைவைத்தல்) இல்லாமல் ஆகி, வழிபாடு எல்லாம் அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போரிடுங்கள். ஆக, (விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் (அதற்கேற்ப அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 8 : 39)
நீங்கள் தாவா கொடுத்துக் கொண்டே இருங்கள். ஈமான் பரவ வேண்டும். ஈமான் ஓங்க வேண்டும். ஈமான் மக்களுக்கு மத்தியிலே மிகைக்க வேண்டும். இஸ்லாம் ஓங்க வேண்டும். இஸ்லாம் இஸ்லாமின் பக்கம் மக்கள் வரவேண்டும். Shirkக்கும், kufr ஒடுங்கி இருக்க வேண்டும். அடங்கியிருக்க வேண்டும். ஈமானுக்கும் இஸ்லாமிற்கும். இல்லையென்றால் இந்த shirkக்கும், kufr ஆனது மக்களை நிம்மதியாக விடாது.
كَيْفَ وَإِنْ يَظْهَرُوا عَلَيْكُمْ لَا يَرْقُبُوا فِيكُمْ إِلًّا وَلَا ذِمَّةً يُرْضُونَكُمْ بِأَفْوَاهِهِمْ وَتَأْبَى قُلُوبُهُمْ وَأَكْثَرُهُمْ فَاسِقُونَ
எவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (அவர்களுக்கு இருக்கின்ற வமிச, குடும்ப இரத்த) உறவையும் (அவர்கள் உங்களுடன் செய்த) உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்; இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை ஏற்க) மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர் (சட்டங்களை மீறுகின்ற) பாவிகள் ஆவர். (அல்குர்ஆன் 9 : 8)
أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) தூண்டுகின்றன. (அல்குர்ஆன் 19 : 83)
இந்த shirk விலே ஊறியவர்கள். அவர்கள் மீது சைத்தான் சவாரி செய்வான். அவர்களுடைய உள்ளங்களை சைத்தான் கெடுத்துக் கொண்டே இருப்பான். மூமின்களுக்கு எதிராக சைத்தான் அவர்களை தூண்டிக்கொண்டே இருப்பான். நிம்மதியாக மூமின்களை வாழ விட மாட்டார்கள். அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
(இந்த) புனித மாதம், அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (-அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (புனித மாதத்தில் போர் செய்வதை விட பாவத்தால்) மிகப்பெரியதாகும். (அல்லாஹ்விற்கு) இணைவைப்பது(ம் அவனை நிராகரிப்பதும் பாவத்தால்) கொலையை விட மிகப் பெரியதாகும்.” அவர்களால் முடியுமேயானால் உங்களை உங்கள் மார்க்கத்தை விட்டு அவர்கள் மாற்றிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி - அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே - இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2 : 217)
அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் உங்களை கொள்ளுவார்கள். உங்களோடு பழகியதை மறந்து விடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு செய்த உதவிகளை மறந்து விடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு காட்டிய ஜீவக் காருணியத்தை மனிதநேயத்தை, மறந்து விடுவார்கள். அத்தனையும் மறந்து விட்டு, உங்களை கொள்வதில் தான் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களை உங்களது மார்க்கத்தில் இருந்து திருப்பாத வரை அவர்கள் ஓய மாட்டார்கள்.
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ
மேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். ஆக, அவர்களுடைய இறைவன், “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு) வஹ்யி அறிவித்தான். (அல்குர்ஆன் 14 : 13)
Shuaib அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு நடந்ததை நினைத்து பாருங்கள். shuaib எத்தகைய பெரிய நபி. அந்த சமுதாயத்தின் தலைவராக இருந்தவர்கள். மிகப்பெரிய பொருளாதார வசதி கொடுக்கப்பட்டவர்கள். இந்த தாவாவை செய்த காரணத்தினால் மட்டுமே பகைக்கப்பட்டார்கள். கடுமையான சோதனைக்கு ஆளானார்கள். ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து கொண்டு, shuaib அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களிடத்திலே வந்து, இரண்டு சாய்ஸ் கொடுக்கின்றார்கள்.
ஒன்று ஊரை விட்டு ஓடி விடுங்கள். ஊரை விட்டு ஓடி விடுங்கள். இல்லை என்றால். எங்களுடைய கொள்கைக்கு திரும்ப வந்து விடுங்கள். சூரா இப்ராஹீமை படித்து பாருங்கள். சூரா ஆராfவை படித்துப் பாருங்கள். குர்ஆனை புரட்டுங்கள். அல்லாஹ் எனக்கு இந்த நேரத்திலே என்ன வழி காட்டுகின்றான்? நபிமார்களின் வரலாற்றில் என்ன படிப்பினைகளை பாடங்களை நமக்கு கூறுகிறது என்று. அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டினான். என்ன சொன்னான்?
وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ
“இன்னும், அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் வசிக்க செய்வோம். இ(ந்த வாக்கான)து, எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ; இன்னும், என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்.” (அல்குர்ஆன் 14 : 14)
தளர்ந்து விடாதீர்கள் மூமின்களே! பயந்து விடாதீர்கள். நாம் அநியாயக்காரர்களை அழித்து ஒழிப்போம். அல்லாஹ்வுடைய வாக்கு. இன்று நடக்கவில்லை என்றாலும் நாளை நடக்கத்தான் போகிறது. அல்லாஹ் இருக்கின்றான். அல்லாஹ் விடமாட்டான். நமக்கு உதவுவதற்கு தான் அவன் காத்துக் கொண்டிருக்கின்றான். நம்முடைய கைகள் அவனை நோக்கி உயராதா? நம்முடைய கண்களில் இருந்து அழுகை வராதா? நம்முடைய நெஞ்சங்கள் அல்லாஹ்விடம் கதராதா? மன்றாட மாட்டார்களா என்று அல்லாஹ் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய உதவி இறக்குவதற்காக. அல்லாஹ் சொல்லுகின்றான். பயப்படாதீர்கள். நாம் இந்த எதிரிகளை அழிப்போம். அவர்களுக்குப் பிறகு அவர்களின் பூமியிலேயே உங்களை நாம் வசிக்க வைப்போம் சத்தியமாக. ஆனால் இந்த நிபந்தனை பூர்த்தியாக வேண்டும் என்றால், நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்னை நீங்கள் பயப்பட வேண்டும். எனக்கு முன்னால் நிற்க வேண்டிய அந்த மறுமை நாளை பயந்து வாழ வேண்டும். எனது எச்சரிக்கையை பயந்து வாழ வேண்டும்.
ஈமானோடு இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி வரும். அல்லாஹ் கண்டிப்பாக நமக்கு உதவுவதற்கு இருக்கின்றான். எத்தனை நபிமார்களின் வரலாற்றை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காண்பிக்கின்றான். அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலே நமக்கு அழகிய படிப்பினைகள் பாடங்கள் இருக்கின்றன. மக்காவில் இருந்து விரட்டபட்டார்கள்.
சாதாரணமான நிலையிலா? அநீதி இழைக்கப்பட்டு, அவர்களுடைய உடமைகள் பறிக்கப்பட்டு, அவருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு பெரிய குறைஷி குடும்பத்தை சேர்ந்த, மக்காவிற்கே சொந்தத்தை உடைய, மக்காவிற்கு உரிமை உடைய, அந்த குடும்பத்தில் பிறந்த, அவர் அனாதையாக வெளியேற்றப்பட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் விரட்டி அடிக்கப்படுகின்றார். அவரோடு எத்தனை நூற்றுக்கணக்கான தோழர்கள்.
Taifலே நடந்த நிகழ்வை நினைத்து பாருங்கள். அதற்குப் பிறகு மதினாவின் பத்து ஆண்டுகளில் தொடர்ந்து காபிர்கள் செய்த அந்த சூழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள். இந்த எல்லா நேரத்திலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்திலே அவர்கள் கேட்ட துஆ. அவர்கள் இந்த உம்மத்துடைய வெற்றிக்காக செய்த முதலாவது முயற்சி என்ன? துஆ. அல்லாஹ்விடத்திலே இறைஞ்சுவது. நபிமார்கள் மக்களை ஒன்று சேர்த்தார்கள். இந்த சோதனைகளின் நேரத்திலே நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருங்கிணைய வேண்டும்.
أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ
(நபியே!) மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளைச் சேர்ந்த (அந்த) பிரமுகர்களை நீர் கவனிக்கவில்லையா? “எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்” என்று தங்களது நபியிடம் அவர்கள் கூறியபோது, “போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?’’ என்று அ(ந்த நபியான)வர் கூறினார். “அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினார்கள். ஆக, போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும் போரை விட்டு) விலகிவிட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 246)
இது மிக முக்கியமான ஒன்று. இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்ட பொழுது, அவர்கள் அந்தக் காலத்த நபி இடத்திலே சென்று சொன்னார்கள். உங்களது ரப்பிடத்திலே நீங்கள் தூஆ கேளுங்கள் என்று அந்த நபி இடத்திலே கூறி, எப்படி சொல்கின்றார்கள்? அல்லாஹ் நமக்கு ஒரு அரசரை ஏற்படுத்திக் கொடுக்கட்டும்.
அன்பு சகோதரர்களே! இன்று முஸ்லிம்கள் பிரிந்திருப்பது. தங்களுக்குள் இயக்கங்களாக, குழுக்களாக, இப்படி வேறு வேறு சமூகத்தவர்களாக ஒற்றுமை இல்லாமல், அவர்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவருடைய வழியை உணராமல், பிரிந்து இருப்பது. இது மிகப்பெரிய ஒரு வேதனை. அல்லாஹு தஆலா எப்படி நமக்கு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகின்றான்.
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (உங்களுக்குள்) தர்க்கிக்காதீர்கள் (சண்டை சச்சரவு செய்து கொள்ளாதீர்கள்)!. அவ்வாறாயின், நீங்கள் தோற்றுவிடுவீர்கள்; இன்னும், உங்கள் ஆற்றலும் போய்விடும். இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். )அல்குர்ஆன் 8 : 46)
மூமின்களே! மூமின்களே! அல்லாஹ்விற்கு இத ஆத்து செய்யுங்கள். கீழ்ப்படிந்து நடங்கள். ரசூலுக்கு கீழ்படிந்து நடங்கள். நீங்கள் சண்டை செய்து கொள்ளாதீர்கள். உங்களுக்குள் பிரிவு செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் கோழையாகி விடுவீர்கள். உங்களது வலிமை எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இன்று சகோதரர்களே! நாம் செய்ய வேண்டிய அடிப்படை கடமை நம் மீது. இதற்காக துஆ செய்வது.
யா!அல்லாஹ்! எங்களுக்கு நீ உனது உதவியை இறக்கு. எங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்து. நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு உரிய ஒரு நல்ல தலைவரை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடு. தலைவர் இல்லாத ஒரு சமுதாயம் எப்படி என்றால், மேய்ப்பர் இல்லாத ஆட்டு மந்தையை போல. யார் வேண்டுமானாலும் அதை ஒட்டி செல்வார். எந்த ஓனர் வேண்டுமானாலும் விரும்பி அதை கவிச் செல்லும். கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
நமக்கு புரியவில்லை. குர்ஆனும் புரியவில்லை. ஹதீஸும் புரியவில்லை. இந்த சூழ்நிலையினுடைய விபரீதமும். அடுத்து எப்படியெல்லாம் மாறும் என்கின்ற நிலைமையும் நமக்கு புரியவில்லை. நாம் எப்படியோ அன்றாட வாழ்க்கையிலே பசியை போக்கினோமா, தாகத்தை போக்கினோமா, திருமணத்தை முடித்தோமா, பிள்ளைகளை பெற்றோமா, சொத்துக்களை வாங்கினோமோ, இப்படியே நம்முடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
நம்முடைய சமுதாயத் தலைவர்களோ, அவர்களுக்குள் யாருக்கு, எந்த அளவு அதிகம் பதவி கிடைக்கும்? யாருக்கு எந்த அளவுக்கு அரசாங்கத்தினுடைய நெருக்கம் கிடைக்கும். என்பதில் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உம்மத்துடைய நிலைக்காக வேண்டி உண்மையான நிலையிலேயே உழைக்கக்கூடிய தலைவர்களை அல்லாஹ்விடத்திலே கேட்க வேண்டும். அல்லாஹ் கொடுத்தால்தான். அல்லாஹு தஆலா உதவினால் தான் அது கிடைக்குமே தவிர நம்முடைய முயற்சியால் கிடைக்காது.
நம்முடைய துஆ அதற்கு அல்லாஹ்விடத்திலே வழிவகுக்கும் சகோதரர்களே! அல்லாஹ் சுபஹானஹூ வதஆலா நமக்கு அருள் புரிவானாக! பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, முஃமின்களுக்கு அல்லாஹு தஆலா உதவி செய்வானாக! கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹு தஆலா அழகிய ஆறுதலை தருவானாக! பொறுமையை தருவானாக! அவர்களுடைய குடும்பத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக!
முஸ்லிம்களுடைய தீனையும் சொத்தையும் அவர்களுடைய செல்வத்தையும் அல்லாஹு தஆலா பாதுகாத்து கொடுப்பானாக! அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விட, அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு துனியாவிலே சிறந்த பிரதிபலனையும் மறுமையிலே சொர்க்கத்தையும் தந்தருள்வானாக! அல்லாஹ் முஸ்லிம்களுடைய உயிரையும் பொருளையும் உலகம் எங்கும் பாதுகாத்து அருள்வானாக! முஸ்லிம்களுக்கு எதிராக யார் சூழ்ச்சி செய்கின்றார்களோ,
அவர்களின் சூழ்ச்சியை அந்த சூழ்ச்சி செய்யக்கூடிய வர்களுக்கு எதிராகவே அல்லாஹு தஆலா திருப்பிவிடுவானாக! அந்த காபிர்களின் கூட்டங்களை அல்லாஹ் பிளவு படுத்தி விடுவானாக! பிரிவினை ஏற்படுத்துவானாக! அவர்களுடைய சதி திட்டங்களை அவர்களுக்கு எதிராகவே அல்லாஹு தஆலா மாற்றி விடுவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/