HOME      Khutba      நரகத்தை பயந்து கொள்ளுங்கள் | Tamil Bayan - 820   
 

நரகத்தை பயந்து கொள்ளுங்கள் | Tamil Bayan - 820

           

நரகத்தை பயந்து கொள்ளுங்கள் | Tamil Bayan - 820


தலைப்பு : நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.
 
வரிசை : 820
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -11-08-2023 | 24-01-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும். அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மீதும். தோழர்கள் மீதும். ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக. உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே அவருடைய மன்னிப்பையும் அன்பையும், மறுமையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாக துஆ செய்தவனாக. இந்த உரையை ஆரம்பம் செய்கின்றேன். 
 
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நம்முடைய சிறிய, பெரிய அனைத்து பாவங்களையும், அறிந்தும் அறியாமலும். நினைவோடு மறதியோடும், செய்த எல்லா பாவங்களையும். தனிமையில். சபையில், செய்த எல்லா குற்றங்களையும் மன்னித்து அருள்வானாக! நரக நெருப்பிலிருந்து அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும், நம்முடைய பெற்றோர், மூமின்கள் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! மனிதர்கள். அதிகம் பயப்பட வேண்டிய ஒன்று. அல்லாஹ்வுடைய தண்டனையைத்தான். இந்த உலகத்தின் எந்த ஒரு ஆபத்தாக இருந்தாலும் சரி. அது மௌத்தோடு முடிந்துவிடும். ஆனால், மறுமையின் அல்லாஹ்வின் தண்டனை இருக்கிறதே, அது மிகக் கடுமையானது ,நிரந்தரமானது. 
 
وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى
 
இன்னும், யார் வரம்பு மீறுவாரோ; தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டாரோ அவரை இவ்வாறுதான் தண்டிப்போம். இன்னும், (அவனுக்கு) மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும். (அல்குர்ஆன் 20 : 127)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். மறுமையில் நரக தண்டனை. மிகக் கடுமையானது. Wa ab kha. மிக நிரந்தரமானது. மறுமையில் நரக நெருப்பிற்கு முடிவு கிடையாது. அல்லாஹ் சுபஹானஹூ வதஆலா. ஒன்றுக்கு மேற்பட்ட பல வசனங்களில். முஸ்லிம்களை, மூமின்களை, முன்னோக்கி பேசுகின்றான். நரகத்தை பயந்து கொள்ளுமாறு அவன் நமக்கு அறிவுரை சொல்லுகின்றான். 
 
وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ
 
இன்னும், நிராகரிப்பாளர்களுக்காக தயார்படுத்தப்பட்ட (நரக) நெருப்பை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 3 : 131)
 
முஃமின்களே! காபிர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட. காஃபிர்களுக்காக தயார்படுத்தப்பட்ட, நரக தண்டனையை, நரக நெருப்பை. நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என்ன சொல்ல வருகின்றான்? அல்லாஹ் சுபஹானஹூ வதஆலா. நரகம் அது படைக்கப்பட்டது இணைவைப்பவர்களுக்காகو அல்லாஹ்வை நிராகரிக்க கூடிய மக்களுக்காக, அதே நேரத்திலே. எந்த பாவங்களை அல்லாஹ் சுபஹானஹூ வதஆலா மூமின்களாக நமக்கு தடுத்தானோ, அந்தப் பாவங்களை செய்து விட்டால், அவற்றை நெருங்கி விட்டால், நீங்களும் அந்த நரக தண்டனைக்கு ஆளாகி விடுவீர்கள். 
 
ஆகவே, அந்த நரகத்தை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என்று அல்லாஹு தஆலா நமக்கு எச்சரிக்கை செய்கின்றான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஜூம்மாவிலும், பிறகு தங்களுடைய எல்லா பிரச்சாரங்களிலும். தங்களுடைய தோழர்களுக்கு நரகத்தை குறித்த பயத்தை, அச்சத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்தார்கள். 
 
அன்பு சகோதரர்களே! இன்று நமக்கு மத்தியிலே, நரகத்தைப் பற்றி பேசப்படுவது குறைந்துவிட்டது. நரகத்தின் பயம் குறைந்துவிட்டது. அல்லாஹ்வுடைய தண்டனையை பற்றிய அச்சம் உள்ளத்தில் இருந்து நீங்கி விட்டது. அதன் காரணமாகத்தான் நம்முடைய உள்ளத்திலே, தொழுகையிலே அந்த உள்ளச்சம் இல்லை, துஆவிலே அந்த ஈடுபாடு இல்லை, மறுமையை குறித்த அந்த அச்ச உணர்வு நமக்கு இல்லாமல் போய்விட்டது.
 
அல்லாஹ் சுபஹானஹூ வதஆலா கண்ணியத்திற்குரிய அவனுடைய வேதம் அல்குர்ஆனில் சொல்லக்கூடிய, நரகத்தின் தன்மைகளை கொஞ்சம் படித்துப் பார்க்க வேண்டும், நரகத்தை நினைவூட்டலை அல்லாஹு தஆலா தொடர்ந்து நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றான். ஒவ்வொரு சூராவிலும். ஒவ்வொரு விதமாக. நரகத்தின் அந்த தண்டனைகளின். வகைகளை. வகைப்படுத்தி அல்லாஹ் சொல்லுகின்றான். 
 
அல்லாஹு தஆலா சொன்னதோ, மிகக் குறைவானது தான். அங்கே அல்லாஹ் சொன்னதை விட. குர்ஆனிலே கூறியதை விட. இன்னும் பயங்கரமான தண்டனைகள் இருக்கின்றன. வகை வகையான தண்டனை இருக்கிறது. 
 
وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ
 
இன்னும், தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு. (அல்குர்ஆன் 38 : 58)
 
அல்லாஹ் நரகத்தின் தண்டனைகளை சொல்லி முடிக்கும் பொழுது, இது மட்டுமல்ல. இந்த வகையை சேர்ந்த இன்னும் பல தண்டனைகள் இருக்கின்றன என்று அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். பாவம் செய்யக்கூடிய அடியான் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். நாளை மறுமையிலே. நம்முடைய அமல்கள் தான் அல்லாஹ்விடத்தில் பேசும். அல்லாஹு தஆலா ஒரு அடியானை நெருக்கமாக்குவான். அவன் தனது வலது பக்கம் பார்ப்பான். இடது பக்கம் பார்ப்பான். அவன் செய்த அமல்கள் மட்டும் தான் இருக்கும். வேறு எதுவும் இருக்காது. முன்னால் பார்த்தால். அவனுக்கு முன்னால் அல்லாஹு தஆலா அவனிடத்திலே பேசுவான். 
 
அல்லாஹ் சுபஹானஹூ வதஆலா. இந்த நரகத்தை குறித்து சொல்ல கூடிய ஒவ்வொரு எச்சரிக்கையை பாருங்கள் அல் குர்ஆனிலே. 
 
إِنَّهُ مَنْ يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى
 
நிச்சயமாக விஷயமாவது, எவன் தன் இறைவனிடம் பாவியாக வருகிறானோ நிச்சயமாக அவனுக்கு நரகம்தான். அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; (நிம்மதியாக) வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் 20 : 74)
 
ரப்புல் ஆலமீன் கூறுகின்றான். சூரா தாஹாவுடைய 74 வது வசனம். நரகத்தின் ஒரு வர்ணையை அல்லாஹ் சொல்லுகின்றான். யார் தன்னுடைய இறைவனிடத்தில் நாளை மறுமையில் வருவாரோ, குற்றவாளியாக. பாவம் செய்தவராக. இந்த வார்த்தை ஒவ்வொரு இணைவைப்பவனையும், நிராகரிப்பாளனையும், அதற்குப் பிறகு, முஸ்லிம்களில் யார் பெரும் பாவங்களில் ஈடுபடுகின்றார்களோ, அவர்களையும் எடுத்துக் கொள்ளும்.
 
யார் தன்னுடைய இறைவனிடத்தில் நாளை மறுமையிலே வருவாரோ, குற்றவாளியாக. அல்லாஹ் சொல்லுகின்றான். அவருக்கு நரகம் தான் அங்கே. நரகத்துடைய தண்டனை இருக்கிறது. பிறகு, அல்லாஹ் சுபஹானஹூ வதஆலா. அதுல யார் இணைவைப்பவர்களாக இருக்கின்றார்கலோ, mushrikகளாக நிரந்தர நரகவாசிகளாக ஆகிவிட்டார்களோ, அவர்களை குறித்து சொல்லுகின்றான். 
 
لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى
 
அந்த நிரந்தர நரகவாசிகளுக்கு அங்கே மௌத்உம் இருக்காது. அங்கே அவர்களுக்கு ஹயாதும் இருக்காது. (அல்குர்ஆன் 20 : 74)
 
அன்பு சகோதரர்களே!  நரகத்துடைய. அந்த வலி மிக்க. வேதனை மிக்க. கொடிய தண்டனைகளிலே ஒன்று என்னவென்றால். அங்கே வாழவும் முடியாது, சாகவும் முடியாது. எப்படி வாழ முடியும்? கொதிக்க கூடிய நெருப்போடு சேர்ந்த கொதிநீர் அவனுடைய தலையிலே ஊற்றப்படும். 
 
هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِنْ نَارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ ,يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ,وَلَهُمْ مَقَامِعُ مِنْ حَدِيدٍ
 
(அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர், இன்னும், அவனை நிராகரித்தவர் ஆகிய) இவ்விருவரும் தங்கள் இறைவனின் விஷயத்தில் தர்க்கிக்கிறார்கள். ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட செம்பிலிருந்து) ஆடைகள் செய்யப்படும். அவர்களின் தலைகளுக்கு மேலிருந்து கடுமையாக கொதிக்கின்ற சுடு நீர் ஊற்றப்படும். , அதன் மூலம் அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை (எல்லாம்) உருக்கப்பட்டு விடும். இன்னும், (அவர்களுடைய) தோல்களும் (உருகி விடும்). , அவர்களுக்கு இரும்பு சம்மட்டிகள் (உடைய அடிகள்) உண்டு. (அல்குர்ஆன் 22 : 19, 20, 21)
 
அவர்களுக்கு தலைக்கு மேல் இருந்து. கொதிக்கக்கூடிய. கடினமாக. அதற்கு மேல் அதை கொதிக்க வைக்க முடியாது. அத்தகைய கொதிநீர் அவர்களுடைய தலை வழியாக ஊற்றப்படும். அல்லாஹ் சொல்கின்றான். அதனால் அவர்களுடைய உடலுக்குள் இருக்கக்கூடிய குடல்கள் எல்லாம் உருகிவிடும் என்பதாக. தோல்கள் உடைய நிலையை நினைத்துப் பாருங்கள். 
 
ஊற்ற ப்பட்டால். அவனுடைய குடல் உறுகி விடும் என்றால், அவனுடைய தோளுடைய நிலையை என்னவென்று சொல்வது. எப்படி இருக்கும் மனிதனுடைய நிலை? அவன் தலை தெரிக்க. எந்த திசையில் ஓடுவது என்று ஓட முயற்சிப்பான். 
 
وَلَهُمْ مَقَامِعُ مِنْ حَدِيدٍ
 
அல்லாஹ் சொல்லுகின்றான். இரும்பு சம்மட்டிகளை கொண்ட மலக்குகள் அவனை அடித்து. திரும்ப அந்த நீர் கொட்டப்படக்கூடிய இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள் கடுமையான தண்டையாக இருக்கும். அந்த அங்கே கொடுக்கப்படக்கூடிய குடிபானம். அங்கே கொடுக்கப்படக்கூடிய உணவு. இதுவெல்லாம் சாதாரணமானதல்ல. அவனுக்கு கைகளிலும் கால்களிலும் போடப்படக்கூடிய விலங்குகள். 
 
إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا, وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا
 
நிச்சயமாக (கை, கால்களில் போடப்படுகிற) விலங்குகளும் சுட்டெரிக்கிற நரகமும் நம்மிடம் (அவர்களுக்காக) உண்டு. ,இன்னும், தொண்டையில் சிக்கிக் கொள்கிற உணவும் வலிமிகுந்த தண்டனையும் உண்டு. (அல்குர்ஆன் 73 : 12, 13)
 
அல்லாஹ் சொல்கின்றான்: நரகவாதிகள் எப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றால். அவர்களுடைய கைகள் கால்கள் கழுத்துகளோடு சேர்ந்து. அவர்களுக்கு விளங்கிடப்பட்டு விடும். Ankhalan. அந்த விலங்குகள் எப்படிப்பட்டவை? பழுக்க காய்ச்சப்பட்டவை. சாதாரணமான சங்ககளிலேயே அதிக கனம் உள்ளதை ஒரு மனிதனுக்கு கைவிலங்காக, கால் விலங்காக கழுத்தோடு சேர்த்து கட்டப்பட்டால் அவனுடைய நிலை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். 
 
அன்பு சகோதரர்களே! அதே அந்த விலங்குகள். பழுக்க நெருப்பிலே காய்ச்சப்பட்டதாக இருந்து, அவனுடைய கைகளுக்கும் கால்களுக்கும் போடப்பட்டால். அது மட்டுமா? அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். பாருங்கள் இவையெல்லாம் குர்ஆனிலே நேரடியாக சொல்லப்பட்டவை. ஹதீசிலே உள்ளதை நீங்கள் படித்தால் இன்னும் பயங்கரமானவை. 
 
خُذُوهُ فَغُلُّوهُ,  ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ, ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوه
 
(அல்லாஹ், வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! இன்னும், அவனை விலங்கிடுங்கள்!” “பிறகு, நரகத்தில் அவனை எரித்துப் பொசுக்குங்கள்!” “பிறகு, ஒரு சங்கிலியில், - அதன் முழம் எழுபது முழங்களாகும் - அவனைப் புகுத்துங்கள்!” (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.) (அல்குர்ஆன் 69 : 30, 31, 32, )
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.  மலக்குகளே! வானவர்களே! அவனை பலமாக பிடியுங்கள். இறுக்கமாக பிரியுங்கள். உலகத்திலே குற்றவாளிகள் காவலர்களால் அப்படி ஒருபோதும் பிடிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். அத்தகைய இறுக்கமான பிடியால் மலக்குகள் பிடிப்பார்கள்.
 
Khuzuhu அந்த மலக்குகளின் பிடி கடுமையானதாக இருக்கும் யோசித்துப் பாருங்கள் ஒரு பலவீனமான ஒரு மனிதரை. ஒரு நல்ல உடல் திடகாத்திரமுள்ள. உடற்பயிற்சி செய்த குற்றவாளிகளை பிடிப்பதற்காகவே பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு காவலர் இறுகி பிடிப்பார் என்றால் அந்த பிடி எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். அந்த மலக்கு பிடிப்பார். நசுக்குவார் அவரை அப்படியே. அல்லாஹ் சொல்லுகின்றான். Khuzuhu. மலக்குகளே! பிறகு அவனது கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போடுங்கள். அல்லாஹ் சொல்லுவான். பிறகு, நரகத்திலே அவனை பொசுக்குங்கள். அல்லாஹு அக்பர்! மலக்கு சாதாரண மலக்கு அல்ல. 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
 
நம்பிக்கையாளர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மக்களும் கற்களும் ஆவார்கள். கடுமையானவர்களான மிகவும் வலிமைமிக்கவர்களான வானவர்கள் அவற்றின் மீது இருப்பார்கள். அல்லாஹ்விற்கு அவன் அவர்களுக்கு ஏவியதில் அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள். இன்னும், அவர்கள் எதை ஏவப்பட்டார்களோ அதையே செய்வார்கள். (அல்குர்ஆன் 66 : 6)
 
சகோதரர்களே!  நரகத்தின் காவலாளிகள் இருக்கின்றார்களே. குணத்தால் முரடர்களாக இருப்பார்கள். இரக்கமே இருக்காது. நீ கத்து. கதறு. புலம்பு. அல்லாஹ்வை கூப்பிடுவான். இங்கே அல்லாஹ்வை அழைக்க சொல்லப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வை அழைக்கவில்லை. 
 
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ
 
அவர்களின் பார்வைகள் தாழ்ந்தவையாக இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலக வாழ்க்கையில்,) சுகமானவர்களாக இருந்தபோது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.) (அல்குர்ஆன் 68 : 43)
 
இங்கே சுஜூdவிற்கு அழைக்கப்பட்டார்கள். Sujood செய்யவில்லை. அங்கே அல்லாஹ்வை அழைப்பார்கள். ரப்பை அழைப்பார்கள். அந்த நரகத்தின் காவலாளி இடத்திலே கெஞ்சுவார்கள். 
 
وَنَادَوْا يَامَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ, وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِنَ الْعَذَابِ
 
இன்னும், “மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (நரகத்தின் காவலாளியான மாலிக்கை) அழைப்பார்கள். அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)” நரகத்தில் உள்ளவர்கள் நரகத்தின் காவலாளிகளுக்குக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனை அழையுங்கள்! அவன் எங்களை விட்டும் ஒரு நாளாவது தண்டனையை இலகுவாக்குவான்.” (அல்குர்ஆன் 43 : 77, 40 : 49)
 
மாலிகே! நரகத்தின் காவலாளி. உங்களது ரப்பை அழையுங்கள். அழுவார்கள். அல்லாஹ் இங்கே  அழ சொன்னான். அழவில்லை. இங்கே பயப்பட சொன்னான். பயப்படவில்லை. மலக்கு கேட்பார்.
 
تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ ,قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ,  وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ , فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ
 
அ(ந்த நரகமான)து (நிராகரிப்பாளர்கள் மீதுள்ள) கோபத்தால் (தனித் தனியாக பிரிந்து) தெரித்துவிட நெருங்கிவிடும். அதில் (பாவிகளின்) ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள். ,அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை, திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!) நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை என்று நாங்கள் கூறினோம்.”, இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் செவி ஏற்பவர்களாக; அல்லது, சிந்தித்து புரிபவர்களாக இருந்திருந்தால் (இன்று) நரகவாசிகளில் ஆகி இருக்க மாட்டோம்.” ஆக, அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, நரகவாசிகளுக்குக் கேடுதான்!  (அல்குர்ஆன் 67 : 8, 9, 10, 11)
 
உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வந்தாரா இல்லையா? அந்த மலக்கு கேட்பார். உங்களை எச்சரிப்பவர் வரவில்லையா? உங்களுக்கு புத்தி செல்பவர் வரவில்லையா? அல்லாஹ்வின் தண்டனையை உங்களுக்கு உபதேசித்தவர் வரவில்லையே? வந்தார்கள். வந்தார்கள். நாங்கள் தான் நம்பவில்லையே. எங்களுக்கு புத்தி இருந்தால். அவர்களின் பேச்சை நாங்கள் கேட்டிருந்தால். இந்த  நரக நெருப்பில் நாங்கள். இந்த நரகவாசிகளிலே நாங்கள் ஆகி இருக்க  மாட்டோமே! 
 
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ
 
இன்னும், “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்” என்று அவர்கள் அ(ந்த நரகத்)தில் கதறுவார்கள். “அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற காலம் வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? இன்னும், உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார் அல்லவா? ஆகவே, (இந்த தண்டனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை” (என்று அவர்களுக்கு பதில் கூறப்படும்). (அல்குர்ஆன் 35 : 37)
 
அழுவார்கள் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் கதறுவார்கள் என்று  Yastarikoon என்று சொன்னால். ஒரு மனிதன் உச்சக்கட்ட அந்த தண்டனையின் வேதனையை அனுபவிக்கும் பொழுது. கடுமையான அந்த தண்டனையை அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் எப்படி கதறுவான்? அரபில அதற்குத்தான் சொல்வார்கள். Yastarikoon. Istarakh. அவனுடைய கதறல். அதன் அலறல் சத்தம். அல்லாஹு தஆலா அந்த மலக்குக்கு அந்த நேரத்திலே கட்டளை இடுவான். 
 
மலக்குகளே! அந்த மலக்குகளை அல்லாஹு தஆலா செவிடர்களை போன்று ஆக்கி இருப்பான். நரகவாசிகளின் எந்த குகூறலும், எந்த அழகையும் அவர்களை பாதிக்காது. மிகக் கடுமையான வலிமை உள்ளவர்கள் நரகவாதி நரகத்திலே எங்கே போனாலும் அவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட மலக்கு அவனை அசால்டாக தூக்கிவந்து மிதிப்பார் இழுத்துக் கொண்டு வந்து விடுவார். 
 
அல்லாஹ் சொல்லுவான் அந்த மலக்கு இடத்திலே அடுத்து சொல்லுகின்றான் பாருங்கள். நரகத்தின் தண்டனைகளிலே ஒருவகை. அந்த மலக்குகளுக்கு அல்லாஹ் சொல்லுவான், மலக்கே! எழுவது மூலம், நீளமுள்ள, நரகத்தில் பழுக்க காய்ச்சப்பட்ட சங்கலியை கொண்டு வந்து. அவன் உடைய வாய் வழியாக விட்டு அவனுடைய பின் துவாரம் வழியாக வெளியாக்குவீராக! அவனுடைய உடலுக்குள் அந்த சங்கிலி உள்ளே நுழைக்கப்படும். (அல்குர்ஆன் 69 : 30, 32)
 
அவனுடைய வாய்வழியாக நுழைக்கப்பட்டு, அவனுடைய பின் துவாரம் வழியாக எடுக்கப்பட்டு பிறகு சங்கிலியால் கட்டப்படுவான். யோசித்துப் பாருங்கள் அல்லாஹு தஆலா உடைய தண்டனை பயங்கரமானது, கடுமையானது என்று எச்சரிக்கை செய்கின்றானே!
 
சாதாரணமான எச்சரிக்கையா? அது ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி விளக்கம் சொல்கின்றார்கள். நரகவாதிகளுக்கு இந்த தண்டனை கடுமையான தண்டனை. உடல் வலியை ஏற்படுத்தக்கூடிய. அது மட்டுமல்ல விஷ ஜந்துக்களை கொண்டு தீண்டப்படக்கூடிய தண்டனை, அந்த விஷம் உடலிலே ஏறும், அதனுடைய வலி நரக நெருப்பு பொசுக்கி கொண்டிருக்கும். அல்லாஹு தஆலா நரகவாசியை எப்படி விகாரமாக அமைத்து விடுவான் என்றால்.
 
ما بيْنَ مَنْكِبَيِ الكافِرِ مَسِيرَةُ ثَلاثَةِ أيَّامٍ للرَّاكِبِ المُسْرِعِ
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நரகத்தில் தள்ளப்படக்கூடிய அந்த மனிதன் இருக்கின்றானே, அவனுடைய உடல், அந்த தோற்றம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அவனுடைய தோளுடைய தடிப்பும். மூன்று நாள் ஒருவன் நடந்து சென்றால், எவ்வளவு தூரம் நடப்பனோ, அத்தகைய அந்த அளவுக்கு தடுப்ப மனத்தாக தோல் ஆகிவிடும் என்று.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 6551
 
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
 
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் எரிப்போம். அவர்கள் தண்டனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து (உருகி) விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு புதிய) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 56)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இத்தகைய இந்த மொத்தமான இந்த தோல் இருக்கின்றதே, நரகத்தில் அந்த நெருப்பிலே பட்ட உடனேயே. நீங்கள் ஒரு பேப்பரை போடுறீங்க கொதிக்கிற நெருப்பிலே. ஒரு பிளாஸ்டிக் போடுகின்றீர்கள். கொதிக்க நெருப்பிலே அது எப்படி சுருங்குகிறது? அது எப்படி உருகுது? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அவர்களுடைய தோல்கள் எல்லாம் அப்படியே உருகி ஓடும். அல்லாஹ் சொல்லுகின்றான் முடிந்துவிடுமா? வேறு தோலை நாம் அவர்களுக்கு மாற்றி கொடுப்போம். 
 
தோல் உருகி விட்டு ஓடும்போதெல்லாம் அவர்களுக்கு புதிய தோள்கள் அணிவிக்கப்பட்டு கொண்டே இருக்கும். தண்டனையை அவர்கள் நிரந்தரமாக சுவைக்க வேண்டும் என்பதற்காக. மலக்குகளின் அடி ஒரு பக்கம். நெருப்பு எரித்து கொண்டிருக்கும் ஒரு பக்கம். ஒரு பக்கம் கடுமையான உஷ்ணம் காற்று வீசிக்கொண்டிருக்கும். மலக்குகள் கொதிக்கக்கூடிய நீரை அவர்களது தலையில் ஊற்றிக் கொண்டிருப்பார்கள். விஷ ஜந்துக்கள் தீண்டு கொண்டிருக்கும். இவற்றோடு சேர்ந்து கடுமையான பசி. கடுமையான தாகம். அவர்கள் மீது போடப்படும். 
 
ஹசன் பசரி ரஹிமஹுல்லாஹ் விளக்கம் சொல்கின்றார்கள். ஐம்பதினாயிரம் ஆண்டுகள். இந்த தண்டனையை அனுபவித்தவனாக. பசி பசி என்று கதறுவான். யோசித்துப் பாருங்கள். ஒரு நாள் கொடிய பசியோடு நம்மால் இருக்க முடியுமா? இந்த உலகத்தினுடைய நேற்று சாப்பிட்டுவிட்டு, இன்று ஒரு நாள் காலையிலிருந்து மூன்று வேளை சாப்பிடாமல் இருந்தால் நம்முடைய நிலை என்ன ஆகிறது?
 
அதே அடுத்த நாளும் நிலைத்தால் என்னவாகும்? அதே மூன்றாவது நாளும் நீடித்தால் என்னவாகும்? சகோதரர்களே! நரகவாசிகள் மீது அல்லாஹு தஆலா பசியை போடுவான். அது எல்லை மீறிய பசியாக இருக்கும். 50,000 ஆண்டுகள் கதறுவார்கள் ஏதாவது உன்ன கிடைக்குமா என்று. 
 
ஏதாவது சாப்பிட கிடைக்குமா? என்று. தங்களுக்கு தெரிந்த சொர்க்கவாசி அனைவரையும்  அவர்கள் அழைப்பார்கள். உங்களுக்கு அல்லாஹு தஆலா கொடுத்த உணவுகளில் ஏதாவது ஒன்றை எங்களுக்கு தூக்கி போடுங்களேன். உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த  குடிப்பானத்தில் இருந்து ஏதாவது ஒன்றை எங்கள் மீது ஊற்றுங்கள் என்று கத்துவார்கள். 
 
சூரா ஆராfபை படித்து பாருங்கள். எங்களுக்கு ஏதாவது உணவு கொடுங்கள் என்ற கதறுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்களின் நண்பர்கள். அவர்களின் உறவினர்கள். யாரை பார்த்து இந்த நரகவாசிகள். இவர்கள் எல்லாம் பிழைக்க தெரியாதவர்கள். இவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள். இபாதத். இபாதத் என்று வியாபாரத்தை மறந்து. விவரம் கெட்டு அலைகின்றார்களே என்று சொன்னவர்கள். ஹலால் ஹராம் பார்த்து பிழைக்க தெரியாமல் இருக்கின்றார்களே என்று பரிகாசம் செய்யப்பட்டவர்கள். மார்க்கத்தை பேசி, மறுமையை பேசி, உலகத்தின் இன்பத்தை இவர்கள் இழந்து விட்டார்களே என்று குறை பேசப்பட்டவர்கள். அந்த சொர்க்கவாசிகள் அப்போது என்ன பதில்கள் சொல்வார்கள் தெரியுமா?,
 
وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ
 
இன்னும், “(நீங்கள் குடிக்கின்ற) நீரிலிருந்து (கொஞ்சம்) எங்கள் மீது ஊற்றுங்கள்; அல்லது, அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றிலிருந்து (கொஞ்சம் உணவளியுங்கள்).” என்று (கூறி) நரகவாசிகள் சொர்க்கவாசிகளை அழைப்பார்கள். “நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்கள் மீது அவ்விரண்டையும் தடைசெய்தான்” என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 7 : 50)
 
நரகவாசிகளே! காபிர்கள் மீது சொர்க்கத்தின் உணவையும், சொர்க்கத்தின் குடிபானத்தையும், அல்லாஹ் ஹராமாக்கி விட்டான். உங்களுக்கு கிடைக்காது. கொஞ்சம் தெளியுங்கள் தண்ணீர் எங்கள் மீது. கொஞ்சம் உணவுகளை அள்ளி வீசுங்களேன். அந்த சொர்க்கவாசிகள் சொல்வார்கள். அல்லாஹ் ஹராமாக்கி விட்டான் உங்களுக்கு கிடைக்காது. 
 
لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ, أَذَلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ
 
“ஸக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள். அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா? அல்லது, ஸக்கூம் என்ற கள்ளி மரமா (அல்குர்ஆன் 56 : 52, 37 : 62)
 
ஐம்பதாயிரம் ஆண்டுகள் கதறியத ற்கு பிறகு மலக்குகள் உணவைக் கொண்டு வருவார்கள். உணவை கொண்டு வருவார்கள். அந்த உணவு என்ன தெரியுமா? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். நரகத்திலே கள்ளி மரம். நெருப்பாலானது. முட்கள் நிறைந்தது. அது அவர்களுக்கு உணவாக கொடுக்கப்படும். சாப்பிட முடியுமா? பசியின் கொடுமையால், பசியின் கொடுமையால், அதை எடுத்து அந்த நெருப்பு மரத்தை எடுத்து அந்த முள் மரத்தை எடுத்து அவன் கடிப்பான். சரியாக தொண்டையில் போய் சிக்கிக் கொள்ளும். அந்த உணவானது.
 
إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا, وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا
 
நிச்சயமாக (கை, கால்களில் போடப்படுகிற) விலங்குகளும் சுட்டெரிக்கிற நரகமும் நம்மிடம் (அவர்களுக்காக) உண்டு. இன்னும், தொண்டையில் சிக்கிக் கொள்கிற உணவும் வலிமிகுந்த தண்டனையும் உண்டு. (அல்குர்ஆன் 73: 12, 13)
 
அந்த நெருப்பு அப்படியே. நரகத்தின்  நெருப்பு அணையாது. உலகத்தின் நெருப்பை நீங்கள் அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தலாம், பல பவுடர்களை பயன்படுத்தலாம், பல கேஸ்களை பயன்படுத்தலாம். இன்னும் நீங்கள் எத்தனையோ கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
 
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
 
அதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும். (அல்குர்ஆன் 104 : 6)
 
ஆனால், அல்லாஹ்வின் நெருப்பை அல்லாஹ் மூட்டிய நெருப்பது அல்லாஹ் சொல்லுகின்றான் நான் மூட்டிய நெருப்பு அது என்று சொல்லுகின்றான். நேரடியாக அல்லாஹ்வின் கட்டளையால் எரிக்கப்பட்ட நெருப்பு. 
 
أنَّ رَسولَ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: نَارُكُمْ جُزْءٌ مِن سَبْعِينَ جُزْءًا مِن نَارِ جَهَنَّمَ، قيلَ: يا رَسولَ اللَّهِ، إنْ كَانَتْ لَكَافِيَةً، قالَ: فُضِّلَتْ عليهنَّ بتِسْعَةٍ وسِتِّينَ جُزْءًا، كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபாக்களிடத்திலே கேட்டார்கள். உங்களுக்கு நரக நெருப்பை பற்றி தெரியுமா உங்களுக்கு ஏதாவது. அல்லாஹ்வுடைய தூதரே! எங்களுக்கு ஒன்றும் தெரியாது சொன்னார்கள்: நரகத்தினுடைய 70 மடங்கு. இந்த உலகத்தை விட. நரகத்தினுடைய 70 மடங்கு கடுமையானது  அதில் இருந்து ஒரு மடங்கு தான், இந்த ஒரு பகுதி தான். இந்த உலகத்துடைய நெருப்பு. சஹாபாக்கள் பயந்து நடுங்கி கேட்டார்கள்! அல்லாஹ்வின் தூதரே! இந்த நெருப்பையே தாங்க முடியவில்லை. இதுவே பெரிய தண்டனையாக இருக்குமே. அப்போது சொன்னார்கள் இல்லை இதைவிட அந்த நரக நெருப்பு கடுமையாக்கப்பட்டது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 3265
 
உஷ்ணத்தால் அதிகப்படுத்தப்பட்டது. நரகவாசிகளின் அந்த தண்டனைக்காக வேண்டி. அந்த கள்ளிமரம். நெருப்பு. அப்படியே அவனுடைய தொண்டையிலே சிக்கிக் கொள்ளும். ஒரு பக்கம் வேதனை தொடர்கிறது. இந்த சிக்கிய உணவுக்காக வேண்டி அவன் தண்ணீர் தண்ணீர் என்று குடிபான த்திற்காக 50,000 ஆண்டுகள் கதறுவான். ஏற்கனவே பசியாலும் தாகத்தாலும் 50,000 ஆண்டுகள். பிறகு கொடுக்கப்பட்ட உணவு, இந்த உணவு. 
 
இனி உணவை கேட்க மாட்டான். எப்படி கேட்பான்? நெருப்பு கங்குகள். அந்த zakoom மரங்கள் அவனுக்கு கொடுக்கப்பட்டால், பிறகு உணவை அவன் கேட்பானா? தண்ணீரை கொடுங்கள். தண்ணீரை கொடுங்கள். என்று கதறுவான். 50 ஆயிரம் ஆண்டுகள் அல்லாஹ் அவர்களை கதற விட்டுவிடுவான். அதற்குப் பிறகு கடுமையாக கொதிக்க வைக்கப்பட்ட. அதுவும் எப்படி? நரகவாதிகளின் சீல் சலங்கலால். அவர்களுடைய உடம்பிலிருந்து வழிந்து ஓட கூடிய ரத்தங்கள் எல்லாம், 
 
நரகத்தின் ஒரு பகுதியிலே, சூடு காட்டப்பட்டு, கொதிக்க வைக்கப்பட்டு, அது அவர்களுக்கு குடிப்பதற்காக கொண்டு வரப்படும். அதனுடைய துர்நாற்றம் அவ்வளவு மோசமானதாக இருக்கும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
 27621 عن رسول الله صلى الله عليه وسلم لو أن دلوا من غساق يهراق في الدنيا لأنتن أهل الدنيا
 
அதிலிருந்து ஒரு சொட்டு. ஒரு வாளி இந்த பூமியிலே ஊற்றப்பட்டு விட்டால் உலகத்தையே நாசமாக்கிவிடும். உலகத்தையே கேவலமான துர்நாற்றத்தால் நிரப்பி விடும் என்று. அதுவே அவனுக்கு குடி பானமாக கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அதனுடைய அந்த உஷ்ணம். அதிலிருந்து வரக்கூடிய அந்த ஆவி. 
 
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்னது அஹ்மத், எண் : 27621
 
وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا, تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ
 
இன்னும், (நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். விரும்பியவர்கள் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம், (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது. மேலும், அவர்கள் இரட்சிப்பை தேடினால் முகங்களை பொசுக்கக்கூடிய முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திரவத்தைப் போன்ற நீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். அது மகா கெட்ட பானமாகும். இன்னும், அது ஒரு தீய ஓய்விடம் ஆகும். நரக நெருப்பு அவர்களது முகத்தை பொசுக்கிவிடும். இன்னும், அவர்கள் அதில் உதடுகள் பொசுங்கி பற்கள் வெளியே தெரிந்தவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 18 : 29)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் குர்ஆனுடைய வசனங்கள் சகோதரர்களே! அன்றாடம் நாம் ஓதக்கூடிய சூராவிலே உள்ள வசனங்கள். ஓதி பாருங்கள். அல்லாஹ் சொல்லுகின்றான். அது அவர்களின் முகங்களை அப்படியே பொசுக்கிவிடும். அதனுடைய ஜுவாலை அதனுடைய ஆவி அவர்களது முகத்தில் அடித்த உடனே முகம் எல்லாம் கருத்து விடும் என்று அல்லாஹ் சொல்லுகின்றான். சுருங்கிவிடும். அவர்களுடைய முகத்தின் தோல்கள் எல்லாம் உருகிவிடும். குடி பானத்திலேயே கெட்ட குடிபானம் என்று அல்லாஹ் சொல்லுகின்றான்: 
 
அதுபோன்று ஒரு நாற்றமிக்க. துர்நாற்றம் உடைய. குடிப்பவர்களால் அறவே சகித்துக் கொள்ள முடியாத ஒரு குடிபானம் இருந்திருக்கவே முடியாது. பிறகு என்னவாகும் தெரியுமா?  அவன் அதை குடிப்பானா? ஏற்றுக் கொள்வானா? குடிக்க மறுப்பான். அதிலிருந்து தப்பிக்க மறுப்பான். மலக்குகள் அவனை அடித்து குடிக்க வைப்பார்கள். பிறகு மீண்டும் அதன் பானம் உள்ளே செல்ல செல்ல அவனுடைய உடலுடைய அத்தனை உறுப்புகளும் உருகிவிடும். வேதனை முடிந்ததா? அதைத்தான் அல்லாஹு தஆலா சொல்லுகின்றான். அங்கே மவுத் கிடையாது. வாழவும் முடியாது.
 
وَمَا أَدْرَاكَ مَا سَقَر, لَا تُبْقِي وَلَا تَذَر ُ, لَوَّاحَةٌ لِلْبَشَرِ, عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
 
“சகர்” என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா? அது (தன்னில் யாரையும்) வாழ வைக்காது! இன்னும், (செத்து அழிந்து விடுவதற்கு யாரையும்) விட்டுவிடாது. ,அது தோல்களை எரித்துவிடும். ,அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். (அல்குர்ஆன் 74 : 27, 28, 29, 30)
 
அல்லாஹுத்தஆலா கேட்கின்றான். நரகத்தின் வகைகளை அல்லாஹ் சொல்லுகின்றான். எத்தனை வகையான நரக கூடங்களை அல்லாஹ் படைத்து வைத்திருக்கின்றான். அதிலே ஒன்றுதான் sakar. அந்த Sakar இருக்கிறதே, அது மனிதர்களின் தோலை பொசுக்கிக் கொண்டே, எரித்துக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு புதிய தோல்களும், புதிய உடல்களும், அவர்களுக்கு அணிவித்து கொண்டே இருக்கப்படும். 19 ஸ்பெஷல் வானவர்கள் அங்கு இருந்து, அவர்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பார்கள்., 
 
அதை யாரையும் உள்ளே வைக்காது. யாரையும் வெளியே விடவும் செய்யாது. தப்பிக்க முடியுமா? உலகத்தின் சிறைச்சாலைகளில் இருந்து தப்பித்து விடலாம். லஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம். ஐடியா செய்து தப்பிக்கலாம். அல்லாஹ்வுடைய சிறைச்சாலை நரகம். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. 
 
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى, لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى, الَّذِي كَذَّبَ وَتَوَلَّى, لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى
 
பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும், வாழவும் மாட்டான். ,(இஸ்லாமை ஏற்று பாவங்களை விட்டு) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்., அதில் எரிய மாட்டான், பெரிய தீயவனைத் தவிர.,அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான். (அல்குர்ஆன் 87: 13, 14, 92 : 15, 16)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: அல்லவா? நரகத்தின் அந்த நெருப்பு இருக்கிறதே. அதிலே வாழவும் முடியாது. சாகவும் முடியாது. 
 
يُؤْتَى بالمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أمْلَحَ، فيُنادِي مُنادٍ: يا أهْلَ الجَنَّةِ، فَيَشْرَئِبُّونَ ويَنْظُرُونَ، فيَقولُ: هلْ تَعْرِفُونَ هذا؟ فيَقولونَ: نَعَمْ، هذا المَوْتُ، وكُلُّهُمْ قدْ رَآهُ، ثُمَّ يُنادِي: يا أهْلَ النَّارِ، فَيَشْرَئِبُّونَ ويَنْظُرُونَ، فيَقولُ: هلْ تَعْرِفُونَ هذا؟ فيَقولونَ: نَعَمْ، هذا المَوْتُ، وكُلُّهُمْ قدْ رَآهُ، فيُذْبَحُ، ثُمَّ يقولُ: يا أهْلَ الجَنَّةِ، خُلُودٌ فلا مَوْتَ، ويا أهْلَ النَّارِ، خُلُودٌ فلا مَوْتَ. ثُمَّ قَرَأَ: {وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ}، وهَؤُلاءِ في غَفْلَةٍ أهْلُ الدُّنْيا {وَهُمْ لَا يُؤْمِنُونَ} [مريم: 39].
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டினார்கள். நாளை மறுமையிலே அந்த நரகவாசிகளுடைய துக்கம் இருக்கிறதே, ஒரு நேரத்தில் பன்மடங்காக ஆக்கிவிடும். அது எப்போது என்றால். அல்லாஹ் சுபஹானஹு வதஆலா மலக்குகளுக்கு கட்டளை இடுவான். மலக்குகளுக்கு அல்லாஹு தஆலா கட்டளை இடுவான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 4730 குறிப்பு (1
 
மலக்குகள் அந்த மௌத்தை ஒரு ஆட்டுடைய உருவத்திலே கொண்டு வருவார்கள்சொர்க்கவாசிகளே! பாருங்கள். பிறகு நரகவாசிகளை நோக்கி. நரகவாசிகளே பாருங்கள் என்று. இதுதான் மவுத் என்று அந்த ஆட்டை அறுத்து விடுவார்கள். இனி யாருக்கும் மௌத் இல்லை. சொர்கத்தில் கதவுகள் சாத்தப்பட்டு விடும். நரகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு விடும். 
 
இனி உங்களுக்கு மரணமே இல்லை என்று அந்த நரகவாசிகளுக்கு அறிவிப்பு செய்யப்படும். அதற்குப் பிறகு, அவர்களுடைய கை சேதங்கள். அவர்களுடைய துக்கங்கள் இருக்கின்றனவே, கூடிக்கொண்டே போகும். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 4730 குறிப்பு (1
 
கண்ணியத்திற்குரிய,  சகோதரர்களே! ஒரு சின்ன திருத்தம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில உதாரணங்களை நமக்கு சொன்னார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! நமக்கு புரிவதற்காக சொன்னார்கள். உண்மையை எடுத்துச் சொன்னார்கள். 
 
நரகத்தின் தண்டனையை, நீங்கள் அலட்சியமாக நினைத்து விடாதீர்கள். சாதாரணமாக கருதி விடாதீர்கள்! பாவம் செய்யும் பொழுது அந்த தண்டனை நமக்கு நினைவுக்கு வரவேண்டும். நரகத்தின் பயம் அல்லாஹ்வுடைய ஹராம். அல்லாஹ் தடுத்த ஹராமில் லிருந்து  நம்மை தடுக்க வேண்டும். ஹராமை செய்ய நினைக்கும் போது நரகத்தின் நெருப்பு நமக்கு நினைவிற்கு வர வேண்டும். 
 
إنَّ أهْوَنَ أهْلِ النَّارِ عَذابًا يَومَ القِيامَةِ، لَرَجُلٌ تُوضَعُ في أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَةٌ، يَغْلِي مِنْها دِماغُهُ.
 
ஒரு ஹதீஸை பாருங்கள். இமாம் புகாரி பதிவு செய்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நாளை மறுமையிலே நரகத்திலேயே. ரொம்பவும், ரொம்பவும். நரகத்திலே ரொம்பவும் லேசான தண்டனை உள்ளவர். ரொம்பவும் லேசான தண்டனை உள்ளவர். யார் தெரியுமா? அவனுக்கு ஒரு தண்டனை எப்படி என்றால், ஒரு நெருப்பு கங்கம். இரண்டு நெருப்பு கங்கங்களை எடுத்து, அல்லாஹ் சொல்லுவான். 
 
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 6561
 
மலகுகளுக்கு அவனுடைய கால் பாதத்திலே ஒரு குழி இடம் இருக்கிறதல்லவா? முன் பக்கம், பின் பக்கம் இது இரண்டும் ஒரு லெவல் இருக்கும் நடுவிலே கொஞ்சம் இடம், குழி இருக்கும் இல்லையா? இரண்டு நெருப்பு கங்கம் எடுத்து வந்து, அந்த குழி நடுவில் வையுங்கள் என்று அல்லாஹ் சொல்லுவான். அந்தகுழி எவ்வளவு பெருசு. அந்த குழியிலே வைக்கச் சொல்வான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அவனுடைய மூளை கொதிக்க ஆரம்பித்து விடும். 
 
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 6561
 
எவ்வளவு பெரிய தோற்றம் உடையவன். அவனுடைய தோலே மூன்று நாட்கள். அவனுடைய புஜம் ஒரு மாத காலம். அவனுடைய உடலை நினைத்துப் பாருங்கள். இத்தகைய உடலுடைய அந்த நரகவாசி, நெருப்புக்கங்கு அவனுடைய காலிலே வைக்கப்பட்டவுடன், அந்த கங்கு உடைய உஷ்ணம் அவனுடைய மூளையை உருக்க ஆரம்பித்து விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ்வுடைய  அடியார்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேலும் சொன்னார்கள். 
 
2577 - حَدَّثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا شَيْبَانُ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ غِلَظَ جِلْدِ الكَافِرِ اثْنَتَانِ وَأَرْبَعُونَ ذِرَاعًا، وَإِنَّ ضِرْسَهُ مِثْلُ أُحُدٍ، وَإِنَّ مَجْلِسَهُ مِنْ جَهَنَّمَ كَمَا بَيْنَ مَكَّةَ وَالمَدِينَةِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الأَعْمَشِ "
 
நரகத்தினுடைய அந்த நரகவாசிகளுடைய உடல் எப்படி இருக்கும் என்று சொன்னால் அவனுடைய ஒரு பல். கடவாய் பல். உஹது மலையைப் போன்று பெருசாக இருக்கும். உஹது மலை எவ்வளவு? ஒரு கிலோமீட்டர் உயரம். 5 km நீளம். அந்த மாதிரி ஒரு பல் ஒரு கடைவாய் பல்லாகிவிடும் சொன்னார்கள் அவனுடைய பின்தண்டு இருக்கிறதே, மக்காவிற்கு மதீனாவிற்கும் இடையில் உள்ள தூரத்தை போன்று ஆகிவிடும். இவ்வளவு கொடிய உருவம் கொடுக்கப்பட்ட இவ்வளவு கொடிய உருவம் கொடுக்கப்பட்ட அந்த நரகவாசி அந்த வேதனையை தாங்கி கொள்ள முடியாது என்று சொன்னால், அது எப்பே ர்ப்பட்ட பயங்கரமான தண்டனையாக இருக்கும். யோசித்துப் பாருங்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திர்மிதி, எண் : 2577, குறிப்பு (2
 
அன்பு சகோதரர்களே! அந்த நேரத்திலே நரகவாசி. அவன் ஆசைப்படுவான். அல்லாஹ்விடத்திலே பேசுவான். மலக்குகள் இடத்திலே பேசுவான். சொர்க்கவாசிகள் இடத்திலே பேசுவான். கதறுவான். தன்னை விடுவதற்காக. அல்லாஹு தஆலா அந்த தண்டனையின் உச்சத்தை சொல்லி காட்டுகின்றான்:
 
إِنَّ الَّذِينَ كَفَرُوا لَوْ أَنَّ لَهُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لِيَفْتَدُوا بِهِ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيَامَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ, يُرِيدُونَ أَنْ يَخْرُجُوا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنْهَا وَلَهُمْ عَذَابٌ مُقِيمٌ
 
நிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் தண்டனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. ,அவர்கள் நரகத்திலிருந்து வெளியேற விரும்புவார்கள். ஆனால், அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது. இன்னும் நிலையான தண்டனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 5 : 36, 37)
 
பாருங்கள். உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை செல்வங்களும் அவனுக்கு கிடைத்து. அது போன்று இன்னொரு மடங்கு செல்வமும் அவனுக்கு கிடைத்து. யா! அல்லாஹ்! இந்த செல்வங்களை பெற்றுக்கொண்டு, என்னை விட்டு விடுவித்து என்று சொன்னாலும் அவன் விடுவிக்கப்பட மாட்டான். நரகத்தில் இருந்து தப்பிக்க விரும்புவார்கள். அதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு அங்கே நிலையான வேதனை இருக்கிறது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களும், அதிகமாக பயந்தது அந்த நரகத்தை குறித்து. நல்லவர்களின் தூக்கத்தை போக்கியது இந்த நரகத்தின் பயம். 
 
நல்லவர்களை நல்லவர்களாக ஆக்கியது இந்த நரகத்தின் மீது உண்டான பயம். இந்த நரகத்தை பயந்து கொள்ளும் போது தான் நம்முடைய வணக்க வழிபாடுகள் சரியாகும். ஹலால் ஹராமுடைய பிடிப்பு வரும். மார்க்கப்பற்று வரும். உண்மையான அல்லாஹ்வுடைய தக்வா வருவதற்கு, நரகத்துடைய பயம் அவசியம் சகோதரர்களே! நாமும் இந்த நரகத்தை குறித்து அறிய வேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். 
 
அல்லாஹ் சுபஹானஹூ   வதஆலா, இந்த நரக தண்டனையிலிருந்து  என்னை உங்களையும், நம்முடைய பெற்றோர்களையும், சந்ததிகளையும் பாதுகாப்பானாக! அல்லாஹு தஆலா அவனுடைய கோபத்தை விட்டும் சாபத்திலிருந்தும்,  அவன் காஃபிர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நரகத்தின் தண்டனையில் இருந்தும், நம்மை முழுமையாக பாதுகாப்பானாக! முதலாவதாக, இலகுவான விசாரணையோடு சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய அந்த நல்ல மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு (1
 
يُؤْتَى بالمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أمْلَحَ، فيُنادِي مُنادٍ: يا أهْلَ الجَنَّةِ، فَيَشْرَئِبُّونَ ويَنْظُرُونَ، فيَقولُ: هلْ تَعْرِفُونَ هذا؟ فيَقولونَ: نَعَمْ، هذا المَوْتُ، وكُلُّهُمْ قدْ رَآهُ، ثُمَّ يُنادِي: يا أهْلَ النَّارِ، فَيَشْرَئِبُّونَ ويَنْظُرُونَ، فيَقولُ: هلْ تَعْرِفُونَ هذا؟ فيَقولونَ: نَعَمْ، هذا المَوْتُ، وكُلُّهُمْ قدْ رَآهُ، فيُذْبَحُ، ثُمَّ يقولُ: يا أهْلَ الجَنَّةِ، خُلُودٌ فلا مَوْتَ، ويا أهْلَ النَّارِ، خُلُودٌ فلا مَوْتَ. ثُمَّ قَرَأَ: {وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ}، وهَؤُلاءِ في غَفْلَةٍ أهْلُ الدُّنْيا {وَهُمْ لَا يُؤْمِنُونَ} [مريم: 39].
 
குறிப்பு (2
 
2577 - حَدَّثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا شَيْبَانُ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ غِلَظَ جِلْدِ الكَافِرِ اثْنَتَانِ وَأَرْبَعُونَ ذِرَاعًا، وَإِنَّ ضِرْسَهُ مِثْلُ أُحُدٍ، وَإِنَّ مَجْلِسَهُ مِنْ جَهَنَّمَ كَمَا بَيْنَ مَكَّةَ وَالمَدِينَةِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الأَعْمَشِ "
 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/