HOME      Khutba      அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது! | Tamil Bayan - 823   
 

அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது! | Tamil Bayan - 823

           

அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது! | Tamil Bayan - 823


அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது!
 
வரிசை : 823
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -18-08-2023 | 02-02-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தும். அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய பிறகு. உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவு நினைவூட்டியவனாக, இந்த குத்துபாவை ஆரம்பம் செய்கின்றேன். 
 
அல்லாஹ்வை யார் அதிகம் அதிகம் பயப்படுகிறார்கலோ, அஞ்சுகின்றார்களோ, அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து அழுகின்றார்களோ, அந்த தண்டனையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த மன உறுதியோடு, அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகி வாழ்கின்றார்களோ. அல்ஹம்துலில்லாஹ்! கண்டிப்பாக அவர்கள் இம்மையிலும் கண்ணியம் பெறுவார்கள் மறுமையில் அல்லாஹ்விடத்திலே மிக உயர்ந்த நிரந்தரமான கண்ணியத்தை சொர்க்கத்திலே அவர்கள் பெறுவார்கள். 
 
தக்வாவை விட சிறந்த ஒரு மருந்து இல்லை நம்முடைய உள்ளம் உடைய நோய்களை குணப்படுத்துவதற்கு. அல்லாஹ்வுடைய பயம் ஒன்றுதான் நம்முடைய ஈமானை உறுதிப்படுத்தும். நம்முடைய அமல்களை சரி செய்யும். நம்மை நம்முடைய பாவங்களில் இருந்து தூரமாக்கும். அல்லாஹ்வின் அடியார்களே! ரப்புல் ஆலமீன். தன்னை பற்றி தனது அடியார்களுக்கு. நபியே! நீங்கள் சொல்லி விடுங்கள். அறிவித்துக் கொடுங்கள். நான் எத்தகையவன். என்பதை பற்றி சொல்கின்றான் பாருங்கள். 
 
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ, وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ
 
(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.“இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!” (அல்குர்ஆன் 15 : 49, 50)
 
நபியே!  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். என்னுடைய அடியார்களுக்கு என்னுடைய இந்த செய்தியை சொல்லி விடுங்கள். Wanabbee. இந்த அறிவிப்பை மக்களுக்கு நீங்கள் அறிவித்து விடுங்கள். என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் சொல்லி விடுங்கள். என்ன சொல்லி விட வேண்டும்? நான் மகா கருணை உள்ளவன்.
 
Al-Gafoor. Ar- Raheem. பாவங்களை மன்னிக்கக் கூடியவன். அடியார்களின் பாவங்களை எந்தவிதமான. ஒரு அதிலே கருமித்தனம் இல்லாமல் விசாலமான தயாள தோடு  அல்லாஹு தஆலா பாவங்களை மன்னிப்பவன். அல்லாஹு தஆலா ஒரு ஹதீஸ் Qudusiலே சொல்வதாக ஸஹீஹான அறிவிப்பிலே வருகிறது. அல்லாஹு தஆலா மறுமையில் சொல்வான். 
 
قال اللهُ تعالى : يا ابنَ آدمَ ! إِنَّكَ ما دَعَوْتَنِي ورَجَوْتَنِي غَفَرْتُ لكَ على ما كان فيكَ ولا أُبالِي يا ابنَ آدمَ ! لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنانَ السَّماءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لكَ ( ولا أُبالِي ( يا ابنَ آدمَ ! لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأرضِ خطَايا ثُمَّ لَقِيْتَني لاتُشْرِكْ بِيْ شَيئاً لأتيْتُكَ بِقِرَابِها مَغْفِرَةً
 
என் அடியானே! இந்த பூமி நிரம்ப. நீ பாவங்களை செய்து விட்டாலும். பிறகு என்னிடத்திலே. என் ரப்பே! என்னை படைத்தவனே! என்னை நீ மன்னித்துவிடு என்று சொல்லிவிட்டால். நான்  உன்னை மன்னித்து விடுவேன். நான் இதில் யாரையும் பொருட்படுத்த மாட்டேன்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திர்மிதி, எண் : 3540
 
எத்தகைய மகா மன்னிப்பாளன் பாருங்கள். இன்னொரு ஹதீஸிலே வருகிறது. நாளை மறுமையிலே எனக்கு இணை வைக்காமல். எனக்கு இணை வைக்காமல் நீ என்னை சந்தித்து விட்டால் உன்னை நான் மன்னித்து விடுவேன்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திர்மிதி, எண் : 3540
 
இந்த இணைவைத்தல் என்பது எவ்வளவு ஆபத்தானது, பயங்கரமானது, அல்லாஹ்வின் மன்னிப்பை ஒரு அடியானுக்கு நிரந்தரமாக தடை செய்து விடக் கூடியது. இந்த முஸ்லிம் உம்மத் ஷிர்க் என்றால் என்ன என்று கற்றுக் கொள்ளாததால், தவ்ஹீத் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாததால், இன்று Shirkக்கையும் இஸ்லாமிய மார்க்கத்திற்குள் புகுத்தி, அதற்கும் ஒரு இஸ்லாமிய அடையாளத்தை கொடுத்து விட்டார்கள், 
 
நிலைமை இன்னும் எந்த அளவு மோசமாக மாறியிருக்கிறது என்றால் அந்த shirkக்கை ஏற்றுக் கொள்ளாத மக்களை பார்த்து, நம்மை போன்ற அந்த shirkக்கை எதிர்க்கக்கூடிய மக்களை பார்த்து, இவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வஹாபிகள், புதுமைவாதிகள், இறை நேசர்களை அவமதிக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
 
இதுதான் ட்ரெடிஷனல் இஸ்லாம். எது? தர்காக்களை வணங்குவது. அங்கே நடக்கக்கூடிய அந்த அத்தனை அசிங்கமான, ஆபாசமான, மூட தனமான, அனாச்சாரங்களையும், ஏற்றுக்கொள்வதை டிரடிஷனல் இஸ்லாம். இதுதான் பரம்பரை பரம்பரையாக, தொன்று தொட்டு, வழிமுறை வழிமுறையாக வரக்கூடிய இஸ்லாம் என்று அடையாளப்படுத்தி விட்டார்கள்.
 
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَابَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ
 
“நிச்சயமாக அல்லாஹ் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: “இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான். இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை. (அல்குர்ஆன் 5 : 72)
 
அல்லாஹ் மன்னிப்பானாக! பாதுகாப்பானாக! நம்மை சீர்திருத்தம் செய்வானாக! அல்லாஹு தஆலா சொல்கின்றான். யார் அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பானோ. யாராக இருந்தாலும் சரி. ஏன்? தன்னுடைய நபியை பார்த்து அல்லாஹு தஆலா இப்படி எச்சரிக்கை செய்கின்றான் என்றால். 
 
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.” (அல்குர்ஆன் 39 : 65)
 
நபியே! முஹம்மதே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். உங்களுக்கும் wahi இன் மூலமாக உறுதியாக அறிவிக்க பட்டுவிட்டது. உங்களுக்கு முன் சென்ற நம்பிமார்களுக்கும் இந்த செய்தி உறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த செய்தி என்ன? நபியே! நீ இணை வைத்தாலும். நபியே! நீ இணை வைத்தாலும். உன்னுடைய அமல்கள், நீ செய்த புண்ணியங்கள் எல்லாம், நாசமாகிவிடும். மறுமையில் நிரந்தர நஷ்டவாளிகளில் நீ ஆகிவிடுவாய். 
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் பாதுகாப்பானாக! பயப்பட வேண்டாமா அந்த shirkக்கை நினைத்து. வார்த்தையில் shirk, செயலிலே ஷிர்க்கு, நம்பிக்கையில் shirk, அல்லாஹு தஆலா குர்ஆனிலே சூரா அன்ஆமிலே ஒரே இடத்திலே நபிமார்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே வருகின்றான்.
 
وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ, وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ, وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ, وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ, ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ
 
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி நடத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி நடத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம். ,இன்னும், ஸகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரும் நல்லோரில் உள்ளவர்களே. (அல்குர்ஆன் 6 : 84, 85, 86, 87, 88)
 
இன்னும், இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரையும் அகிலத்தார்களை விட மேன்மைப்படுத்தினோம். ,இன்னும், இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், (அல்குர்ஆன் 6 : 84, 85, 86, 87, 88)
 
இவர்களுடைய சகோதரர்களிலும் (நாம் விரும்பிய பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை (நபித்துவத்திற்காக) தேர்ந்தெடுத்தோம். இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம். (அல்குர்ஆன் 6 : 84, 85, 86, 87, 88)
 
இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி நடத்துகிறான். இன்னும், அவர்கள் (-மேற்கூறப்பட்ட நபிமார்கள்) இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6 : 84, 85, 86, 87, 88) 
 
Nuh வில் ஆரம்பித்து Esa அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் வரை எல்லா நபிமார்களுடைய பட்டியல ையும் ஒரு இடத்திலே கொண்டு வந்து விட்டு சொல்கின்றான். இவர்கள் இணை வைத்தாலும். இவர்கள் செய்த அமல்கள் எல்லாம் வீணாகிவிடும் என்று நபிமார்களை குறித்து அல்லாஹ் சொல்லுகின்றான். நாம் எத்தகைய அச்சம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
 
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹு தஆலா அடுத்து சொல்கின்றான். என்னுடைய நபியே!என்னுடைய அடியார்களுக்கு இந்த செய்தியை சொல்லுங்கள். நான் மிகவும் மன்னிக்கக் கூடியவன். Al- gafoor. Ar- Raheem. மகா கருணையாளன். மூமின்கள் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன். அல்லாஹு தஆலா மூமின்கள் மீது அவ்வளவு விசேஷமான கருணை வைத்திருக்கின்றான். அந்த ரப்பை இவ்வளவு கருணையாளன் ஆகிய, பொறுமையாளனாகிய, அந்த ரப்பை கோபப்படுத்தக் கூடிய பாவங்களை அடியான் செய்யும் பொழுது எவ்வளவு வெட்கப்பட வேண்டும் யோசித்துப் பாருங்கள்.
 
மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன் என்று சொல்கின்றான். ஆனால் அந்த மன்னிப்பை தேடாமல், பாவங்களுக்கு மேல் பாவங்களை செய்து கொண்டு இருக்கின்ற அடியான். வெட்கப்பட வேண்டாமா? தன்னை நினைத்து வருத்தப்பட வேண்டாமா? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். நபியே! இன்னும் ஒரு அடுத்த அறிவிப்பை நீங்கள் செய்யுங்கள். 
 
وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ
 
என்னுடைய azaab. என்னுடைய தண்டனை. அதுதான் மிகக் கடுமையான. வலி தரக்கூடிய. எந்த வலி? எந்த வலிக்கு முடிவு இருக்காதோ. எந்த வலி தொடர்ந்து கொண்டே இருக்குமோ. 
 
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
 
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னம் - நரகத்தின் தண்டனையை தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை (நிராகரிப்பாளர்களை விட்டும்) நீங்காத ஒன்றாக இருக்கிறது.” (அல்குர்ஆன் 25 : 65)
 
அல்லாஹு தஆலா அல்குர்ஆன் சூரா அல் புர்கானிலே படித்துப் பாருங்கள். அதனுடைய இறுதிப் பகுதியில். மூமின்கள். உண்மையான மூமின்கள் இன்று தங்களை மூமின்கள் என்று சொல்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். அவர்கள் உண்மையில் மூமின்கள் அல்ல. தங்களை முஸ்லிம்கள் என்று சொல்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். 
 
அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. ஈமான் என்பது, இஸ்லாம் என்பது, நமது வெறும் வாய் சொற்களால் நம்மை பற்றி சொல்வதல்ல. என்னுடைய சொல். நான் பேசக்கூடிய பேச்சு. நான் செய்யக்கூடிய செயல். என்னுடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய எண்ணங்கள். தூய எண்ணங்கள். இது என்னை முஸ்லிம் என்று அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையிலே சாட்சி சொல்ல வேண்டும். நான் என்னை பற்றி பேசிய பெருமைகள் நாளை மறுமையிலே சாட்சி சொல்லாது.
 
நம்முடைய ஒவ்வொரு சொல்லும், செயலும், நம்பிக்கையும். அல்லாஹ்விடத்திலே சாட்சி சொல்ல வேண்டும். அவர்கள் தான் உண்மையான முஃமின்கள். அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே வர்ணிப்பதை பாருங்கள். நம்பிக்கையாளர்கள் என்று எப்படி வருணிக்கின்றான்? முஸ்லிம்கள் என்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரையெல்லாம் சொல்கின்றார்கள்.
 
அது நம்மிடத்தில் இருக்கின்றதா? அதைத்தான் நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்தில் சாட்சி சொல்லும். அந்த நல்லவர்களை பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது அவர்கள் சொல்வார்கள்  அந்த நல்லவர்களின் இரவு நேர தூஆவிலே அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். 
 
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا, إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
 
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னம் - நரகத்தின் தண்டனையை தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை (நிராகரிப்பாளர்களை விட்டும்) நீங்காத ஒன்றாக இருக்கிறது.” நிச்சயமாக அது நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் மிக கெட்டது.” 
 
யா! அல்லாஹ்! எங்களது ரப்பே! நரகத்தின் தண்டனையை எங்களை விட்டு அகற்றி விடு தூரமாக்கி விடு. அந்த நரகம். மிக கடுமையானது. அதன் உடைய தண்டனை, வேதனை, ஒருவனை தொட்டுவிட்டால்! அந்த வேதனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். 
 
உலகத்தினுடைய காயங்கள் எப்படி? உலகத்தின் உடைய காயங்கள் எப்படி என்றால். அது ஆரம்பத்தில் வரும் பொழுது கடுமையான வலியோடு இருக்கும். பிறகு கொஞ்சம் கூடும். பிறகு அது நிவாரணத்தை நோக்கி ஆரம்பமாகி குறைந்து கொண்டே போய் இல்லாமல் போய்விடும். இது உலகத்துடைய காயங்கள். வலிகள் உடைய தன்மையை அல்லாஹு தஆலா அப்படி வைத்திருக்கின்றான்.
 
நரகத்தினுடைய காயம் இருக்கின்றதே, நரகத்துடைய வலி இருக்கிறதே, அது அப்படி அல்ல. அது கூடி கொண்டே போகும். ஒவ்வொரு நிமிடமும். அதனுடைய வலி. அடியானுக்கு கூடிக் கொண்டே போகும். அதனுடைய முதல் வலியையே தாங்க முடியாது என்றால், அது கூடிக் கொண்டே இருந்தால், அதனுடைய நிலை எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ
 
இன்னும், நிராகரிப்பாளர்களுக்காக தயார்படுத்தப்பட்ட (நரக) நெருப்பை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 3 : 131)
 
அன்பு சகோதரர்களே! அந்த நரகத்தை பயப்பட வேண்டும். அந்த நரகத்தை பயந்து கொள்ளுங்கள். நரகத்தை பயப்படுங்கள் என்று அல்லாஹ் நமக்கு கட்டளை இடுகின்றான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளை இடுகின்றார்கள்.
 
இன்று மூமின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலே, நரகத்தைப் பற்றி பேசப்படுவது குறைந்து கொண்டே போகின்ற காரணத்தால். அல்லாஹ் பாதுகாப்பானாக! நம்முடைய ஈமான் பலவீனம் அடைந்து கொண்டே போகின்றது. ஏதோ ஒரு மூலையில் மறுமையின் நம்பிக்கை இருக்கிறதே தவிர, அந்த மறுமையை கண்ணுக்கு முன்னால் பார்ப்பதைப் போன்று, அதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றோமா?
 
அதனுடைய நினைவு நம்முடைய சிந்தனையை விட்டு மறக்காத அளவிற்கு நீங்காத அளவிற்கு அதை பற்றி நாம் தொடர்ந்து பேசுகின்றோமா? தொழுகையிலே அலட்சியம் ஏன் ஏற்படுகின்றது? நம்முடைய ஜக்காத்திலே ஏன் அலட்சியம் ஏற்படுகின்றது, அன்றாட வாழ்க்கையில் நன்மைகளை நோக்கி விரைவதை விட, பாவங்களை நோக்கி நாம் ஓடுவது அதிகமாக இருக்கிற தே! 
 
முஸ்லிம்கள் இடத்திலே பொய் அதிகமாகி விட்டது, முஸ்லிம்கள் இடத்தில் ஒருவர் மற்றவரை ஏமாற்றுவது அதிகமாகிவிட்டது, ஒருவர் மற்றவருக்கு மோசடி செய்வது அதிகமாகிவிட்டது, வாக்குகளை ஒப்பந்தங்களை மீறுவது அதிகமாகிவிட்டது, உறவுகளை துண்டித்து வாழ்வது அதிகமாகிவிட்டது, தான தர்மங்கள் குறைந்து விட்டன. அன்பு, நேசம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், ஒத்தாசை செய்தால், குறைந்து கொண்டே போகிறது. 
 
உறவுகளோடு ஒட்டி வாழ்வது, அவர்களுடைய இன்னல்களிலே, துன்பங்களிலே, உதவி செய்வது. தன்னுடைய நண்பனுக்கு உதவுவது. ஏழைகளுக்கு உதவுவது. என்று உயர்ந்த மூமின்களுடைய அடையாளங்கள் எல்லாம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
 
இப்படி நீங்கள் எடுத்துப் பாருங்கள். அல்லாஹ்வும் ரசூலும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். எத்தகைய மூமினான சமுதாயத்தை, இந்த குர்ஆன் மூலமாக சுன்னாவின் மூலமாக கட்டமைக்க நாடினார்களோ, அந்த சமுதாயமாகவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? 
 
எத்தகைய பாவங்கள் இந்த சமுதாயத்திலே அறவே இருக்கக் கூடாது என்று, அதற்கு கடுமையான தண்டனைகளை அல்லாஹ்வும் ரசூலும் உறுதி செய்தார்களோ, அந்த பாவங்கள் மலிந்து விட்டன. அதை குற்றமாக பார்க்கக் கூடியவர்கள் குறைந்து விட்டார்கள். அந்த பாவங்கள் எல்லாம் ஜீரணிக்க படக்கூடிய ஒரு பாவமா. ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு கலாச்சாரமாக மாறி இருப்பதை பார்க்கின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அன்பான சகோதரர்களே! மறுமை. நாம் நினைப்பதை போன்று சாதாரணமானதல்ல. அல்லாஹ் சுபஹானஹு வதஆலா. Surah al -isra உடைய 97 வது வசனத்திலே சொல்லுகின்றான் பாருங்கள். 
 
وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِنْ دُونِهِ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا
 
அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்துவானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். (அல்லாஹ்) எவரை வழி கெடுப்பானோ அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர்களை நீர் அறவே காணமாட்டீர். மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீது (நடந்து வரும்படி செய்து) ஒன்று திரட்டுவோம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது அனல் தணியும் போதெல்லாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு அதிகப்படுத்துவோம். (அல்குர்ஆன் 17 : 97)
 
மறுமையிலே, அந்த இறை மறுப்பாளர்களோ, இணை வைப்பவர்களோ, அந்தப் பாவிகளோ, எழுப்பப்படக்கூடிய அந்த காட்சி பயங்கரமாக இருக்கும். எழுப்பப்படக்கூடிய அந்த காட்சி பயங்கரமாக இருக்கும். அந்த நிலையே கேவலமாக இருக்கும்.
 
அல்லாஹ் சொல்லுகின்றான் நாளை மறுமையிலே அந்த பாவிகளை நாம் எழுப்பும் பொழுது அவர்களுடைய முகம் களின் மீது எழுப்புவோம். அவர்களுடைய முகங்களின் மீது எழுப்புவோம். தரையிலே கால் இருப்பதற்கு பதிலாக, கால் மேலே இருக்கும். அவர்களுடைய முகம் காலின் இடத்திலே தரையில் இருக்கும். 
 
எத்தகைய அவமானம் பாருங்கள் அதுவும் umyan அவர்கள். அங்கே குருடர்களாக ஆக்கப்பட்டு இருப்பார்கள். Wabookman அவர்கள் ஊமைகளாக ஆக்கப்பட்டிருப்பார்கள். Wasumman. செவிடர்களாக ஆக்கப்பட்டிருப்பார்கள். இது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர்களை இழிவு படுத்துவதற்காக.
 
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். அதன் மீது நடப்பதற்கு அவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். அல்லாஹ் சொல்லுகின்றான். அவர்களுக்கு தங்கும் இடம் Jahannam நரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்.
 
அந்த நரகம் சாதாரணமானதல்ல. ஒரு வரியில் ஒரு வாசகத்திலே. சிறிய வாசகத்தில் சொல்லி செல்கின்றான் பாருங்கள் ரப்பு. அந்தப் பாவிகளுடைய சீல், சலன்கள். இவர்களுடைய உடலில் இருந்து ஓடக்கூடிய இந்த ரத்தங்கள். இதெல்லாம் அந்த நரக நெருப்பின் மீது பட்டு. அதனுடைய ஜூவாலை அதனுடைய வேகம் குறையும் பொழுது, அல்லாஹ் சொல்லுகின்றான். 
 
முன்பிருந்த வேகத்தை விட மிகவும் கொதித்து எழக்கூடிய, கொழுந்து விட்டு எறிய கூடிய நெருப்பாக அதனுடைய வேகத்தை நான் கூட்டுவோம். இந்த வசனத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிய பொழுது, அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள். 
 
54 - (2806) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالَا: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ كَيْفَ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى رِجْلَيْهِ فِي الدُّنْيَا، قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟» قَالَ قَتَادَةُ: بَلَى، وَعِزَّةِ رَبِّنَا
 
அல்லாஹ்வுடைய தூதரின் சபையில் இருந்த ஒருவர் கேட்டார். யா! ரசூலுல்லாஹ்! நாளை மறுமையில் அந்த kafir எப்படி? அவனுடைய முகத்தின் மீது எழுப்பப்பட்டு நடக்க வைக்கப்படுவான் முகத்தின் மீது எப்படி நடக்க முடியும்? கால்களை கொண்டு தானே நடக்க முடியும்? முகத்தின் மீது எப்படி நடக்க முடியும்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
அவனை இந்த உலகத்திலே கால்களின் மீது நடக்க வைத்த இறைவன். நாளை மறுமையிலே அவனை அவனுடைய முகத்தின் மீது நடக்க வைப்பதற்கு சக்தி உள்ளவனாக இருக்க மாட்டானா?) அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய கத்தாதா சொல்கின்றார்கள். இந்த ஹதீஸை கேட்டுவிட்டு. ஏன் இல்லை ஏன் இல்லை எங்கள் இறைவன் மீது சத்தியமாக. அவன் கண்டிப்பாக அதற்கு ஆற்றல் உள்ளவன்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 2806
 
அன்பு சகோதரர்களே! அந்த மறுமையில் எழுப்பப்படக்கூடிய காட்சியை பற்றி அல்லாஹு தஆலா சூரா இப்ராஹிமுடைய 43-வது வசனத்திலே சொல்லுகின்றான்:
 
مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ
 
(அந்நாளில் அந்த அநியாயக்காரர்கள்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக வருவர். அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும். (அல்குர்ஆன் 14 : 43)
 
இப்படி ஒரு இடத்திலா? எத்தனை இடங்களில், அந்த மறுமையில் எழுப்பப்படக்கூடிய காட்சியை மட்டுமே அல்லாஹ் வருணித்து கொண்டு செல்கின்றான் சொல்கின்றான். Muhutyeen. விரண்டு ஓடிக் கொண்டிருப்பார்கள் அழைக்கக் கூடியவருடைய அந்த அழைப்பாளரை நோக்கி தங்களது கபருகளில் இருந்து அவர்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள் திக்கு தெரியாமல் ஓடுவார்கள். அல்லாஹு அக்பர்! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 
 
இந்த பிரபஞ்சத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம் ஒரே நேரத்தில் ஒரு ஆபத்து ஏற்பட்டு, எங்கு சென்றால் தப்பிக்க முடியும்? எங்கு சென்றால். எங்கு ஒதுங்கினால் தப்பிக்க முடியும்? என்று ஒரு திசை தெரியவில்லையோ. அத்தகைய ஒரு ஆபத்து அவர்களை சூழ்ந்து கொண்டால்.
 
அவர்கள் தங்களுடைய வியாபாரத்தை கவனிப்பார்களா? தங்களுடைய செல்வங்களை எண்ணிக்கொண்டு இருப்பார்களா? தன்னுடைய மனைவியை பிள்ளைகளை தேடிக்கொண்டிருப்பார்களா? தன்னுடைய நகைகளை அவர்கள் அணிந்து கொண்டிருப்பார்களா? தங்களுடைய அலங்கார ஆடைகளை உடுத்தி அவர்கள் தயாராகுவார்களா? நினைத்துப் பாருங்கள் சகோதரரே! அப்படி பயங்கரமான ஒரு ஆபத்தாக இருக்கும். 
 
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى, فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
 
ஆக, (-எக்காளத்தில் முதல் ஊதுதல் ஊதப்பட்டு மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால், ஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால், (அல்குர்ஆன் 79 : 34, 80 : 33)
 
அல்லாஹ் சொல்கின்றான் அந்த மறுமை இருக்கிறதே, மிக பயங்கரமான அமலிகளை உடையதாக இருக்கும். அது நிகழும் போது, உங்களது நிலை எப்படி இருக்கும்? அந்த சப்தம் இருக்கிறதே, மனிதனின் காதுகளை செவிடாக்கும்.
 
சில நேரங்களில் உலகத்தில். ஒருவர் கடுமையான சத்தத்தை கேட்டாரே ஆனால் அவரை அறியாமல் அவரும் சத்தம் போடுவார் அவரை அறியாமல் சில பயங்கரமான சத்தத்தை கேட்கும் பொழுது நம்மை அறியாமல் நாமும் ஒரு சப்தத்தை வெளியாக்குவோம். நாம் வெளியாக்க கூடிய சத்தத்தால் நமது காதே செவிடா ஆகும்படி இருக்கும் ஆனால் நாம் போடக்கூடிய சத்தம் எத்தகைய பயங்கரமான சத்தமாக இருக்கும். நாம் கேட்ட சத்தம் எவ்வளவு பயங்கரமான சத்தமாக இருக்கும். அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
அன்பு சகோதரர்களே!  மறுமையைப் பற்றி படிக்காத காரணத்தால். குர்ஆனிலே அதை ஓதி உணராத காரணத்தால், அலட்சியமாக கடந்து கொண்டிருக்கின்றோம். இதுவெல்லாம் யார் சொல்லக்கூடிய செய்தி அந்த நரகத்தை படைத்த ரப்பு சொல்கின்றான். பாவிகளுக்காக அதை தயார் செய்து வைத்திருக்கக் கூடிய அந்த அல்லாஹ் நமக்கு அது குறித்து எச்சரிக்கை செய்கின்றான்.
 
هْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ
 
ஏதோ செய்திகளில் வரக்கூடிய. மனிதர்கள் சொல்லக்கூடிய செய்தி அல்ல. Muhutyeen. விரண்டோடி கொண்டிருப்பார்கள். அவர்களுடைய தலைகள் அப்படியே உயர இருக்கும் தலைகளை தாழ்த்த முடியாது, தலைகளை தாழ்த்த முடியாது, அவர்களது பார்வை  அங்கும் இங்கும் திரும்பாது, தன்னையே அவர்கள் பார்க்க முடியாது. நிலை. அப்படியே அது அவர்களுடைய பார்வைகள் எல்லாம் ஒரு திசையை நோக்கி அப்படியே சென்றுவிட்டால். அந்த பார்வை அவர்களின் பக்கம் திரும்பாது. அவ்வளவு பயங்கரமான அந்த காட்சிகளை அவர்கள் கண்டு விடுவார்கள். அவர்களுடைய உள்ளங்கள் எம்டி ஆகிவிடும். 
 
எந்த எண்ணமும் இருக்காது, எந்த சிந்தனையும் இருக்காது, தப்பித்தால் போதும் என்பதைவிட உள்ளங்கள் எல்லாம் அச்சத்தால் வெறுமையாகிவிடும். அல்லாஹ் சொல்லுகின்றான் பாருங்கள் அவர்கள் மறுமையில் எழுப்பப்படும் பொழுது, surah yaseen உடைய எட்டாவது வசனத்தை ஓதி பாருங்கள். 
 
إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْمَحُونَ
 
நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகளில் அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை எப்போதும்) உயர்த்தியவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 36 : 8)
 
நாளை மறுமையிலே அல்லாஹு தஆலா சங்கலிகளை, கை விலங்குகளை, கைகளுக்கும் கால்களுக்கும் அந்த பாவிகளுக்கு விலங்குகளை போடுகின்றானே, சொல்கின்றார்கள். அவர்கள் என்ன, அல்லாஹ்விடம் இருந்து தப்பித்து ஓடுவார்கள் என்பதற்காகவா?
 
அவர்களை பிடிக்க முடியாது என்பதற்காகவா? அவர்களை இழிவு படுத்துவதற்காக. அந்த நரகத்தின் ஆழத்திலே அவர்கள் சென்று கொண்டே இருக்கும் பொழுது, அதை கொண்டு அவர்கள் மேலே மீண்டும் உயர்த்தப்படுவார்கள்.
 
அல்லாஹ் சொல்லுகின்றான். அவர்களுடைய கழுத்து களிலே அறிகண்டங்களை. அந்தக் காலத்திலே கைதிகளுக்கு போடப்படும். நீங்கள் அந்த படங்களில் பார்த்தால் தெரியும். கழுத்து அப்படியே கீழே  இறக்க முடியாத அளவிற்கு. பெரிய ஒரு வளையமாக மாட்டப்பட்டிருக்கும். பாவிகளுக்கு அதாவது குற்றவாளிகள் கைதிகளுக்கு அந்த மாதிரி. அரிகண்டம் என்று சொல்வார்கள். அல்லாஹ் சொல்லுகின்றான். அவர்களது கருத்துகளிலே அரிகண்டங்கள் மாட்டப்பட்டுவிடும். 
 
அது அப்படியே இந்த தொண்டை இப்படி வரைக்கும். அப்படியே கவர் செய்து விடுவார்கள். அதோடு சேர்த்து அவர்களுடைய கைக்கரங்கள் எல்லாம் அவர்களுடைய கழுத்திற்கு பின்னால் கட்டப்பட்டு இருக்கும் அவர்கள் அப்படியே தலையை உயர்த்தியவர்களாக வே இருப்பார்கள்.
 
நினைத்துப் பாருங்கள் சகோதரர்களே! இதுவே எவ்வளவு பயங்கரமான தண்டனையாக இருக்கும். இது அகற்றப்படுமா? யோசித்துப் பாருங்கள். ஒன்றும் இல்லை. ஒரு இரும்பு துண்டை எடுத்து, கழுத்தில மாட்டிவிட்டு. இது உனது கழுத்தில் இருந்து அகற்றப்படாது என்று சொன்னால். எப்படி இருக்கும்? அந்த மனிதனுடைய நிலை. இதற்குப் போக. இன்னும் அவன் மீது தண்டனைகள் கூட்டப்பட்டு கொண்டே இருந்தால். அந்த நிலையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா சொல்கின்றான்:
 
كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا مِنْ غَمٍّ أُعِيدُوا فِيهَا وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ
 
(அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின்) துக்கத்தினால் அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு நாடும்போதெல்லாம் அ(ந்த நரகத்)திலேயே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், (அவர்களை நோக்கி கூறப்படும்:) பொசுக்கக்கூடிய தண்டனையை சுவையுங்கள். (அல்குர்ஆன் 22 : 22)
 
அல்லாஹு தஆலா மலக்குகளிடத்திலே இரும்பு சம்மட்டிகளை கொடுத்து விடுவான் அந்த மலக்குகள் என்ன செய்வார்கள்? இந்த பாவி இங்கும் அங்குமாக அவ்வளவு கடினத்திற்கு இடையிலும் கைகளிலே விலங்கு, கால்களிலே விலங்கு, கழுத்துகளிலே விலங்கு, ஓட  முயற்சிக்கும் பொழுது, அந்த மனிதனை இரும்பு சம்பட்டிகளை கொண்டு அடிப்பார்கள். அல்லாஹ் சொல்கின்றான். 
 
அந்த நரகத்திலிருந்து அவர்களுடைய அந்த கவலை எந்த தண்டனையால் அவர்கள் அத்தகைய கவலைக்கு ஆள் ஆனார்களோ அதிலிருந்து அவர்கள் வெளியேறிவிடலாம் என்று முயற்சி செய்யும் பொழுது எல்லாம் இரும்பு சம்மட்டிகளால் அடிக்கப்பட்டு மீண்டும் நரகத்தின் அவர்களுக்கு முடிவு செய்யப்பட்ட அந்த தண்டனை இடத்திற்கு கொண்டுவரப்படுவார்கள். 
 
உங்களை பொசிக்கி விடக்கூடிய, உங்களை சுட்டு எரித்து விடக்கூடிய, அந்த தண்டனையை நீங்கள் சுவைத்துக் கொண்டு இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா சூரா ஆராf உடைய நற்பதி ஒன்றாவது வசனத்தில் சொல்லுகின்றான்: 
 
لَهُمْ مِنْ جَهَنَّمَ مِهَادٌ وَمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ
 
நரகத்தில் அவர்களுக்கு (கீழே நெருப்பினால் ஆன) விரிப்பும், அவர்களுக்கு மேலே (நெருப்பினால் ஆன) போர்வைகளும் உண்டு. இன்னும், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாம் கூலிகொடுப்போம். (அல்குர்ஆன் 7 : 41)
 
நரகம் எப்படி? அந்த காபிர்களை சூழ்ந்து கொண்டிருக்கும்.
 
وَمِنْهُمْ مَنْ يَقُولُ ائْذَنْ لِي وَلَا تَفْتِنِّي أَلَا فِي الْفِتْنَةِ سَقَطُوا وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌ بِالْكَافِرِينَ
 
இன்னும், (நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்” என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சோதனையில்தான் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது. (அல்குர்ஆன் 9 : 49)
 
surah tawba உடைய நாற்பத்தி ஒன்பதாவது வசனம் சூழ்ந்து கொண்டிருக்கும். எங்கும் தப்பிக்க முடியாது. அவர்கள் கொஞ்சம் அதிலிருந்து வெளியே சென்றால். ஏதாவது ஒரு. நல்ல ஒரு ஆரோக்கியத்தையோ, ஏதாவது ஒரு சுகத்தையோ சுவைக்கலாம் என்றால். முடியாது. நரகம் எப்போதும் அவர்களை சூழ்ந்து கொண்டே இருக்கும்.
 
لَهُمْ مِنْ جَهَنَّمَ مِهَادٌ وَمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ
 
நரகத்தில் அவர்களுக்கு (கீழே நெருப்பினால் ஆன) விரிப்பும், அவர்களுக்கு மேலே (நெருப்பினால் ஆன) போர்வைகளும் உண்டு. இன்னும், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாம் கூலிகொடுப்போம். (அல்குர்ஆன் 7 : 41)
 
இந்த ஆராf உடைய வசனத்திலே 41 விலே வசனத்திலே அல்லாஹ் எப்படி சொல்கின்றான் என்றால், அல்லாஹு அக்பர்! அல்லாஹு தஆலா எப்படி கேடியாக, குத்தலாக அந்த காபிர்களை பரிகாசம் செய்கின்றான் பாருங்கள். 
 
இந்த உலகத்திலே ரப்பை பரிகாசம் செய்தார்கள் அல்லவா? ரப் உடைய மார்க்கத்தை பரிகாசம் செய்தார்கள் அல்லவா? நபிமார்களை பரிகாசம் செய்தார்கள் அல்லவா? மூமின்களை பரிகாசம் செய்தார்கள் அல்லவா? அல்லாஹ் பாருங்கள். அவர்களுக்கு நரக நெருப்பில் ஆளான பெட்டுகள் விரிக்க ப்படும். எப்படி சொல்கின்றான்.
 
அவர்களுக்கு படுக்கை விரிப்பு நரகத்திலே உண்டு. எப்படி? நெருப்பால் ஆன விரிப்புகள் விரிக்க ப்படும். அது மட்டுமா? அவர்களுக்கு  போர்த்துவதற்கும்  போர்வைகள் கொடுக்கப்படும். நெருப்பால் ஆன போர்வைகள் அவர்களுக்கு கொடுக்கப்படும். அநியாயக்காரர்களுக்கு இத்தகைய தண்டனை தான் நாம் கொடுப்போம்.
 
سَرَابِيلُهُمْ مِنْ قَطِرَانٍ وَتَغْشَى وُجُوهَهُمُ النَّارُ
 
அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். இன்னும், அவர்களுடைய முகங்களை நரக நெருப்பு சூழ்ந்து விடும். (அல்குர்ஆன் 14 : 50)
 
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா. சூரா இப்ராஹிமுடைய ஐம்பதாவது வசனத்திலே சொல்லுகின்றான் பாருங்கள். நரகவாசிகளுக்கு அல்லாஹு தஆலா கீழ் ஆடை மேலாடை என்றும் கொடுப்பான். எப்படி? நரகத்திலே அவர்கள் அணிவதற்கு ஆடை இருக்கும். அது எத்தகைய ஆடை சொல்கின்றான் பாருங்கள். 
 
தாரினால் ஆன ஆடை அவர்களுக்கு கொடுக்கப்படும். ஏற்கனவே கொதித்து கொண்டிருக்கும். அதிலிருந்து ஆடை அவர்களுக்கு அணி விக்கப்படும். மீண்டும் அது எரிக்கப்படும் என்றால். அதைத்தான் அவன் அணிந்து கொண்டு இருக்க வேண்டுமென்றால். அவர்களது முகத்தை போர்த்திக் கொள்வதற்காக அவர்களுக்கு துப்பட்டா கொடுக்கப்படும். அதுவும் நெருப்பால் இருக்கும் என்று அல்லாஹு தஆலா சொல்கின்றான். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாமற்றும் ஒரு இடத்திலே சொல்கின்றான்.
 
هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِنْ نَارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ
 
(அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர், இன்னும், அவனை நிராகரித்தவர் ஆகிய) இவ்விருவரும் தங்கள் இறைவனின் விஷயத்தில் தர்க்கிக்கிறார்கள். ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட செம்பிலிருந்து) ஆடைகள் செய்யப்படும். அவர்களின் தலைகளுக்கு மேலிருந்து கடுமையாக கொதிக்கின்ற சுடு நீர் ஊற்றப்படும். (அல்குர்ஆன் 22 : 19)
 
அவர்களுடைய அளவுக்கு ஏற்றார் போல் நரகத்திலிருந்து அவர்களுக்கு ஆடை தயாரிக்கப்படும். நரக நெருப்பிலிருந்து. யோசித்துப் பாருங்கள்! அல்லாஹு தஆலா மீண்டும் சொல்கின்றான். இத்தகைய ஆடை அவர்களுக்கு அணிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மேலிருந்து கொதிக்க கூடிய நீர் ஊற்றப்படும். அவர்களுடைய தோல்களும், அவர்களுடைய வயிற்றுக்குள் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளும் அப்படியே உருகிவிடும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே!  இன்னும் நரகத்தை குறித்து நிறைய எச்சரிக்கைகள் குர்ஆனிலும், அல் ஹதீஸ்விலும் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் முடிந்த அளவு சில ஜூம்மாக்களிலே அதை நாம் பார்ப்போம். அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தண்டனையை பயந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹு தஆலா மூமின்களுடைய ஒரு அடையாளமாக சொல்லுகின்றான். 
 
وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ
 
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனையைப் பயப்படுவார்கள். (அல்குர்ஆன் 70 : 27)
 
மூமின்கள் அல்லாஹ்வுடைய  தண்டனையை எப்பொழுதும் பயந்து கொண்டே இருப்பார்கள் என்று. அல்லாஹுதஆலா அந்த உண்மையான பயத்தை நமக்கு தருவானாக!  அல்லாஹ்  தடுத்த பாவங்களில் இருந்து நம்மை தடுக்கக்கூடிய அந்த நரகத்தின் பயத்தை, அல்லாஹ்வின் தக்வாவை, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹு தஆலா தந்தருள்வானாக! என்னையும் உங்களையும், நம்முடைய பெற்றோர்களையும், குடும்பத்தார்களையும், மூமின்களையும், நரக, தண்டனையில் இருந்து அல்லாஹு தஆலா நிரந்தரமாக பாதுகாப்பானாக! ஆமீன். அல்லாஹு தஆலா நம் அனைவரையும் சொர்க்கவாசிகளிலே ஆக்கி அருள்வானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/