நரகத்தில் தள்ளும் பாவங்கள் | Tamail Bayan - 825
தலைப்பு : நரகத்தில் தள்ளும் பாவங்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : நரகத்தில் தள்ளும் பாவங்கள்.
வரிசை : 825
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -25-08-2023 | 09-02-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹுடைய பயத்தை எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக! இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹுவை பயந்து கொண்டவர்கள் அல்லாஹுடைய பயத்தை முன்னுறுத்தி தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள் அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகியவர்கள் அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை செய்தவர்கள் இம்மையைலையும் கண்ணியம் பெறுவார்கள், மறுமையில் அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தில் உயர்ந்த கண்ணியத்தை பெறுவார்கள்.
அல்லாஹு தஆலா அவனுடைய அன்பை அவனுடைய மன்னிப்பை கருணையை சொர்க்கத்தின் அந்த வாழ்க்கையின் அந்த அனுமதியை அல்லாஹு தஆலா எந்த ஒரு அடியான் அல்லாஹுடைய கட்டளைகளை பேனுகிறானோ அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகி தன்னை பாதுகாத்து கொள்கிறானோ அவனுக்கு தான் அல்லாஹு தஆலா வைத்து இருக்கிறான் .
அல்லாஹ்வின் அடியார்களே! தொடர்ந்து சில உரைகளில் நரகத்தை பற்றிய பல விசையத்தை நாம் செவியுற்றோம். அந்த தொடரின் இடையிலே சில பாவங்களை குறித்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.
எந்த பாவங்கள் ஒரு மனிதனை நரகத்தில் தள்ளிவிடுமோ நிரந்தரமாகவோ அல்லது, நீண்ட காலமாகவோ அந்த சில பாவங்களை பற்றி இன்ஷா அல்லாஹ் இந்த உரையில் பார்போம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா அவர்கள் அறிவிப்பதாக இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقاتِ، قالوا: يا رَسولَ اللَّهِ وما هُنَّ؟ قالَ: الشِّرْكُ باللَّهِ، والسِّحْرُ، وقَتْلُ النَّفْسِ الَّتي حَرَّمَ اللَّهُ إلَّا بالحَقِّ، وأَكْلُ الرِّبا، وأَكْلُ مالِ اليَتِيمِ، والتَّوَلِّي يَومَ الزَّحْفِ، وقَذْفُ المُحْصَناتِ المُؤْمِناتِ الغافِلاتِ.
நீங்கள் விலகிக் கொள்ளுங்கள், தூரமாகி கொள்ளுங்கள், இங்கே ஒன்றை புரிய வேண்டும் எங்கல்லாம் பாவங்களை குறித்து, குற்றங்களை குறித்து, நம்முடைய மார்க்கம் நமக்கு உணர்த்துகிறதோ, கட்டளையாக எச்சரிக்கையாக அல்லது, துஆக்களின் மூலமாக அங்கே நீங்கள் கவனிக்க வேண்டும், ஒரு அடியான் எப்போதும் தன்னை நன்மைக்கு நெருக்கமாக வைத்து இருக்கவேண்டும், பாவத்தை விட்டு தூரமாக வைத்து இருக்க வேண்டும், நீங்கள் அல்குர் ஆனிலே சூரா இஸ்ராவிலே படித்து இருப்பீர்கள் அல்லாஹு தஆலா சொல்லுகிறான்:
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
(மனிதர்களே!) விபச்சாரத்தை நெருங்காதீர்கள்! நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது கெட்ட வழியாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17 : 32)
விபச்சாரத்தின் பக்கம் நெருங்கி விடாதீர்கள் அது ஒரு இடத்திலே இருக்குமையனால் அதை விட்டு வெகு தூரத்தில் நீங்கள் இருங்கள். அல்லாஹு தஆலா அல்குர் ஆனில் அவன் தடுத்த பாவங்களை சொல்லுவான் சில இடங்களில் அவன் கடமையாக்கிய கட்டாய கட்டளைகளை சொல்லுவான் அங்கு கவனித்து பாருங்கள். எங்கே அல்லாஹு தஆலா பாவங்களை குறித்து குற்றங்களை குறித்து நமக்கு எச்சரிக்கை தருகிறானோ அப்போது அவன் சொல்லுவான்:
تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا
இவை அல்லாஹ்வுடைய சட்டங்களாகும். ஆகவே, அவற்றை நெருங்காதீர்கள். (அல்குர்ஆன் 2 : 187)
இவை அல்லாஹுடைய வரம்புகள், அல்லாஹுடைய எல்லைகள், அவற்றிக்கு அருகில் கூட சென்று விடாதீர்கள், அதன் சமீபமாக சென்று விடாதீர்கள், அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
107 - (1599) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: - وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ - «إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ، وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلَا وَإِنَّ حِمَى اللهِ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلَحَتْ، صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ، فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ».
ஹலாலும் தெளிவாக இருக்கிறது ஹராமும் தெளிவாக இருக்கிறது இந்த இரண்டிற்கும் இடையில் சந்தேகமான குழப்பமான சில விஷயங்கள் இருக்கலாம் யார் இந்த சந்தேகமான குழப்பமான விஷயங்களை விட்டு தன்னை பாதுகாத்துக் கொள்கிறாரோ அவர் தனது மார்க்த்தை பாதுகாத்துகொண்டார் ஹராமிலே தன்னை விழுவதை விட்டு பாதுகாத்துக் கொண்டார்.
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 1599 (குறிப்பு 1)
இமாம் ஹசன் பசரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லுகிறார்கள் : நாங்கள் பல ஹலாலையே விட்டோம் ஏனென்றால் அது எங்களை ஹராமில் இழுத்துச்சென்று விடுமோ என்ற பயத்தின் காரணமாக,
அனுமதிக்கப்பட்டது, அங்கே செல்லலாம், அதை பார்க்கலாம், இப்படி அனுமதிக்கப் பட்ட பல விஷயங்களை நாங்கள் விட்டு விட்டோம் எதை? அஞ்சி பாவத்தில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக நாங்கள் ஆகுமாக்கபட்ட பல விஷயங்களை விட்டோம் என்று, இமாம் அவர்கள் சொல்லுகிறார்கள். இது எதை உணர்த்துகிறது? அந்த பாவத்தின் மீது உண்டான பயம் இந்த பாவத்தை செய்தால் மறுமையில் தண்டிக்கப் படுவோமே! அல்லாஹ் கேட்கிறான் அல்லவா!
أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ
அவர்கள் எத்தகையோர் என்றால் (அல்லாஹ்வின்) நேர்வழிக்குப் பதிலாக (ஷைத்தானின்) வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்கள் எவ்வளவு துணிவாக இருக்கிறார்கள்? (அல்குர்ஆன் 2 : 175)
நரக நெருப்பை தாங்கிக் கொல்வதர்ற்கு பொருத்துக் கொல்வதற்க்கு இவர்களிடத்தில் என்ன சக்தி இருக்கிறது, இவர்கள் எப்படி துணிந்து விட்டார்கள், ஒருவன் தொடர்ந்து, அல்லாஹ் பாதுகாப்பானாக! விபசாரத்திலே செல்கிறான், மதுவிலே மூழ்கி இருக்கிறான், சூதாட்டத்தில் மூழ்கி இருக்கிறான், மோசடியில் மூழ்கி இருக்கிறான்,
ஒப்பந்தகளை முறிப்பதில் மூழ்கி இருக்கிறான், உறவுகளை துண்டித்து வாழ்வதில் மூழ்கி இருக்கிறான், போய் பேசுவதில் மூழ்கி இருக்கிறான், புறம் பேசுவதே குறிக்கோளாக வைத்து இருக்கிறான் இப்படி தொடர்ந்து பாவங்கள் செய்கிறான் அவனுக்கு எச்சரிக்கை கொடுக்கப் படுகிறது, உபதேசம் சொல்லப் படுகிறது, இருந்தும் அதை அவன் மதிப்பது இல்லை புறக்கணிக்கிறான்.
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ
தனது இறைவனின் வசனங்களினால் அறிவுரைக் கூறப்பட்டு, பிறகு அவற்றை புறக்கணித்த ஒருவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளிடம் பழிவாங்குவோம். (அல்குர்ஆன் 32 : 22)
அல்லாஹ் சொல்லுகிறான்: அவனை விட பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும் யார் அவன் அவனுக்கு உபதேசம் செய்யபடுகிறது, அறிவுரை கொடுக்கபடுகிறது, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யபடுகிறது அவனோ அதை புறக்கணித்து அலச்சியம் செய்து கொண்டே இருக்கிறான்.
அல்லாஹ் சொல்லுகிறான் இத்தகைய குற்றவாளிகளிடத்தில் நாம் பலி தீர்போம் கண்டிப்பாக பழிவாங்குவோம் إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ இந்த குற்றவாளிகளை கண்டிப்பாக தண்டிப்போம் என்று சொல்கிறான்.
அந்த குர்ஆனுடைய வசனங்களிலே எங்கே பவங்களை குறித்து வருமோ அல்லாஹ் இவ்வாறாக சொல்லுவான் تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا இவையெல்லாம் அல்லாஹுடைய எல்லைகள், வரம்புகள் அருகில் கூட சென்று விடாதீர்கள், சமீபமாக சென்று விடாதீர்கள். சில இடங்களில் அல்லாஹு தஆலா நாம் கட்டயமாக செய்ய வேண்டிய கடமைகளை சொல்லுவான் அங்கே அல்லாஹ் சொல்லுவான்:
تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا
இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். (அல்குர்ஆன் 2 : 229)
நீங்கள் பாருங்கள் நாம் தொழுகையில் ஓதக்கூடிய முக்கியமான துஆ ஆனால், புரிந்து ஓதுகிரோமா அல்லது, புரியாமல் ஓதுகிரோமா அதுதான் இங்கு கேள்வி சூரத்துல் ஃபாதிஹாவை புரிந்து இருந்தாலே போதும் நாமல்லாம் பெரிய இறை நேசர்களாக ஆகி இருப்போம்.
இந்த சமுதாயத்தில் இணைவைப்பே நடந்து இருக்காது, பெரும் பாவங்கள் இருந்து இருக்காது எதை தொழுகையில் ஓதுகிறோம் புரியுதலே இல்லாமல் பலர் ஓதிக்கொண்டு இருக்கிறார்கள் தக்பீர் கட்டியவுடன் வஜ்ஜஹத் ஓதுகிரோமே அதற்க்கு என்ன அர்த்தம்? அது என்ன குறிக்கோளை உனக்கு உணர்த்துகிறது அதுவும் தெரியாது.
இந்த தலைப்பின் தொடரோடு அந்த துஆவை பாருங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகையாளியும் தக்பீர் கேட்டியதற்க்கு பிறகு ஓத வேண்டுமென்று கற்றுக்கொடுத்த துஆவாகும். என்ன சொன்னார்கள்:
كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَسْكُتُ بيْنَ التَّكْبِيرِ وبيْنَ القِرَاءَةِ إسْكَاتَةً - قالَ أَحْسِبُهُ قالَ: هُنَيَّةً - فَقُلتُ: بأَبِي وأُمِّي يا رَسولَ اللَّهِ، إسْكَاتُكَ بيْنَ التَّكْبِيرِ والقِرَاءَةِ ما تَقُولُ؟ قالَ: أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وبيْنَ خَطَايَايَ، كما بَاعَدْتَ بيْنَ المَشْرِقِ والمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كما يُنَقَّى الثَّوْبُ الأبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بالمَاءِ والثَّلْجِ والبَرَدِ.
யா அல்லாஹ் என்னை பாவத்திலிருந்து தூரமாக்கி வைப்பாகயாக! எந்த அளவு என்னை தூரத்தில் கொண்டு போய் விடு என்றால் கிழக்கிலிருந்து மேற்கு எவ்வளவு தூரத்தில் உள்ளதோ, மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரம் உள்ளதோ, அந்த தூரத்தில் என்னை வைத்து விடு என்னை பாவத்திலிருந்து.
எவ்வளவு பயந்திருப்பார்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாவம் என்றால் என்ன அல்லாஹுடைய கட்டளைகளை மீறுவது அல்லாஹ் ரப்புல் அர்ஷ் மகத்தான இறைவன்
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 744
يَاأَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ, الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ, فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ , كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? ,அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான். , எந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான். ,அவ்வாறல்ல! மாறாக, (நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவதையும்) கூலி கொடுக்கப்படுவதை(யும்) பொய்ப்பிக்கிறீர்கள். (அல்குர்ஆன் 82 : 6, 7, 8, 9)
நம்மை படைத்து பரிபாலித்து நமக்கு உணவு அளிக்கிற இறைவனுக்கு மாறுசெய்வது, நன்றி கெட்டத்தனமாக நடப்பது, இந்த உடலை இவ்வளவு அழகான இந்த உருவத்தில் இந்த உருவத்திற்குள் அற்புதமான ஒரு அமைப்பில் அல்லாஹு தஆலா உன்னை படைத்து இருக்கிறானே மனிதனே! அத்தகைய கண்ணியமான இறைவனின் பக்கம் வராமல் உன்னை ஏமாற்றி வேறொன்றின் பக்கம் எது இழுத்து கொண்டு செல்கிறது.
அல்லாஹ் கேட்கிறான், அவனை வணங்க மறுக்கிறாய், அவனக்கு கீழ்படிய மறுக்கிறாய், அவனுடைய தூதர்களுக்கு மாறு செய்கிறாயே! இப்படி உன்னை ஏமாற்றியது எது மறுமையை நம்ப மறுக்கிறாயே! அல்லாஹுடைய தூதர் அவ்வளவு பயந்தார்கள்.
பாவம் என்பது அவ்வளவு பயங்கரமான ஒன்று அல்லாஹு தஆலா அல் குர்ஆனிலே இரண்டு நபிமார்களுடைய முக்கியமான ஒரு நிலைகளை சொல்கிறான். அவர்களுடைய ஒரு உறுதியை அல்லாஹு தஆலா சொல்கிறான். நூஹ் நபியை அல்லாஹ் சொல்ல வைத்தான், இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் சொல்ல வைக்கிறான்.
ஒரே வார்த்தை, குர் ஆனுடைய ஒரே வாசகம் இதை யாரும் கூறினார்கள்? நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கூறினார்கள், பிறகு இதே வார்த்தையை யாரும் சொன்னார்கள்? முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அது என்ன வார்த்தை
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
(நபியே!) கூறுவீராக! “நான் என் இறைவனுக்கு மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.” (அல்குர்ஆன் 39 : 13)
நபியே! நீங்கள் சொல்லிவிடுங்கள் நிச்சயமாக நான் பயப்பிடுகிறேன், அச்சப்படுகிறேன், எனது ரப்புக்கு மாறாக நடந்து கொண்டால், அவனுக்கு பாவம் செய்துவிட்டால், மகத்தான பெரிய மறுமைநாளின் தண்டனையில் சிக்கிக்கொள்வேனோ என்று, நான் பயப்பிடுகிறேன். என்பதை மக்களுக்கு நீங்கள் சொல்லுங்கள் ஒரு நபினுடைய அறிவிப்பு இது ஒரு நபினுடைய பயம் இப்படிதான் இருக்க வேண்டுமென்று அல்லாஹு தஆலா சொல்லி காட்டுகிறான்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு நாளும் அவர்கள் இரவில் தூங்கும் போது கண் மூடுவதற்கு முன்பாக அல்லாஹ்விடத்தில் கெஞ்சுதல் கேட்பார்கள். கெஞ்சுதல் என்றால் என்ன? நாம் நம்முடைய தந்தையிடத்திலோ, தாயினிடத்திலோ ஒரு பொருளை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து இது எனக்கு வேண்டுமென்று கெஞ்சுகிறோம் அல்லவா?
அத்தைகைய ஒரு கெஞ்சுதலை யாரிடத்திலே கெஞ்ச வேண்டுமோ, அந்த கெஞ்சுதலை யார் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியுமோ, அவனை தவிர வேறு யாரும் அந்த கெஞ்சுதளுக்கு பதிலளிக்க மாட்டார்கள், அத்தகைய ரப்பிடதிலே, ரஹ்மானிடதிலே ஒரு கெஞ்சுதல் கேட்பார்கள் என்ன சொல்லுவார்கள்:
1159 - و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ مِسْعَرٍ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ ابْنِ الْبَرَاءِ عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ فَسَمِعْتُهُ يَقُولُ رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ أَوْ تَجْمَعُ عِبَادَكَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ
என்னை படைத்தவனே! ரப்பீ என்னை படைத்து பரிபாளிப்பவனே! (கினிஈ) என்னை பாதுகாத்து விடு எதிலிருந்து? (அதாபக்) உன்னுடைய தண்டனையிலிருந்து எப்போது மறுமைநாளில் உன்னுடைய அடியார்களை எல்லாம் ஓன்று சேர்ப்பாய் அல்லவா அந்த நாளில் உன்னுடைய தண்டனையிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள் இதற்க்கு முன்பாக இன்னொரு கெஞ்சுதலை, இன்னொரு இறைஞ்சுதலை, இன்னொரு பிராத்தனை அல்லாஹ் விடத்தில் கேட்பார்க்கள்.
பயந்த காரணத்தால் எத்தனை துஆக்களை கேட்டு விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கினார்கள் பாருங்கள் சொல்லுவார்கள்: யா அல்லாஹ் இந்த உயிர் உனது கையிலே இருக்கிறது.
اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَى إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் உயிர் கைப்பற்றுகிறான். இன்னும், (அவ்வாறே இது வரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன்தான் உயிர் கைப்பற்றுகிறான். (தூங்கும்போது) மரணத்தை எதன் மீது விதித்து விட்டானோ அதை (-அதனுடைய உயிரை தூக்கத்திலேயே) அவன் தடுத்துக் கொள்கிறான். (மரணம் விதிக்கப்படாத) மற்றொன்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) அவன் விட்டு வைக்கிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 39 : 42)
إذا أوَى أحَدُكُمْ إلى فِراشِهِ، فَلْيَنْفُضْ فِراشَهُ بداخِلَةِ إزارِهِ؛ فإنَّه لا يَدْرِي ما خَلَفَهُ عليه، ثُمَّ يقولُ: باسْمِكَ رَبِّ، وضَعْتُ جَنْبِي، وبِكَ أرْفَعُهُ، إنْ أمْسَكْتَ نَفْسِي فارْحَمْها، وإنْ أرْسَلْتَها فاحْفَظْها بما تَحْفَظُ به عِبادَكَ الصَّالِحِينَ.
நான் தூங்குகிறேன் இந்த உயிரை நீ கைபற்றிக் கொண்டாள், தடுத்துக்கொண்டாள் மீண்டும் தூக்கத்திலிருந்து எழமுடியாமல், தூக்கத்திலேயே எனது உயிர் பிரிந்து விட்டால் உன்னிடத்திலேயே இந்த உயிரை தடுத்துக் கொண்டாள், என்னுடைய இந்த ஆத்மாவின் மீது நீ கருணை காட்டு அதற்க்கு பிறகு சொல்லுவார்கள். இந்த உயிரை இந்த உலகத்திற்கு அனுப்பினால் என்னுடைய இந்த ஆன்மாவை பாதுகாத்துக்கொள்! பாவங்களிலிருந்து எப்படி உன்னுடைய நல்லடியார்களை நீ பாவங்களிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்கிறாயோ!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 6320
ஒரு மனிதன் ஆபத்துகளிலிருந்து, வறுமையிலிருந்து, சேதங்களிருந்து, தொழில் துறையில் நஷ்டங்களிருந்து, பாதுகாக்கப் படுவது, பெரிதல்ல பாவன்களிருந்து பாதுகக்கப்படுவதுதான் பெரிது. இந்த உலகத்தில் எல்லாவகையான சோதனைகளும், எல்லோருக்கும் இருக்கும் நஷ்டங்கள், இழப்புகள், உயிர் இழப்புகள், பொருளாதர இழப்புகள் இவையெல்லாம் சாதாரண மானவையாகும்.
இந்த உலகத்தோடு முடிந்து விட கூடியவை இன்னும், சொல்லப் போனால் இந்த ஒவ்வொரு சொதனைக்கும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத நன்மைகளை அல்லாஹு தஆலா மறுமையில் அங்கே கொடுப்பதற்காக எழுதி வைத்து இருக்கிறான்.
தடுக்கி விழுந்தால் நமக்கு நன்மை, ஒரு எறும்பு கடித்தால் நமக்கு நன்மை ஒரு முள் குத்தினால் நமக்கு நன்மை, காய்ச்சல் வந்தால் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, ஒவ்வொரு உடல் சுகவீனத்திறக்கும் அங்கே நன்மைகள் விசாலமாக கொடுக்க பட்டு கொண்டே இருக்கும் ஒருவர் இறந்து விட்டால் பொறுமையாக இருக்கிறோம் அதற்கும் நன்மை, நம்முடைய குழந்தை இறந்து விட்டால் அதற்க்கு நன்மை, இப்படி எந்த இழப்புகளும் ஒரு முஃமினுக்கு வெறும் உலகத்தில் பார்பதற்கு இழப்பாக இருக்குமே தவிர, அது மறுமையில் அவனுக்கு இழப்பாக இருக்காது லாபமாக நன்மையாக இருக்கும்.
ஆனால், பாதிப்புகளிலே பெரிய பாதிப்பு என்ன? ஒரு அடியான் பாவத்தைக்கொண்டு சோதிக்க படுவது, அவனுடைய ஈமானை தடுமாறம் செய்யக்கூடிய செயல்களைக் கொண்டு சோதிக்கப்படுவது, அவனுடைய தக்குவாவை குறிக்ககூடிய அவனுடைய தகுவாவை பலவீனத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்களைக் கொண்டு சோதிக்கப்படுவது.
ஆகவேதான் அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து அதிலிருந்து பாவமன்னிப்பு தேடிக்கொண்டே இருந்தார்கள், சதா நேரமும் தேடிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் அந்த துஆவிலே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَسْكُتُ بيْنَ التَّكْبِيرِ وبيْنَ القِرَاءَةِ إسْكَاتَةً - قالَ أَحْسِبُهُ قالَ: هُنَيَّةً - فَقُلتُ: بأَبِي وأُمِّي يا رَسولَ اللَّهِ، إسْكَاتُكَ بيْنَ التَّكْبِيرِ والقِرَاءَةِ ما تَقُولُ؟ قالَ: أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وبيْنَ خَطَايَايَ، كما بَاعَدْتَ بيْنَ المَشْرِقِ والمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كما يُنَقَّى الثَّوْبُ الأبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بالمَاءِ والثَّلْجِ والبَرَدِ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 744 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (744) واللفظ له، ومسلم (598)
பாவம் கிழக்கிலே இருந்தால் என்னை மேற்கில் வைத்து விடு என்று, பாவம் மேற்கிலே இருந்தால் என்னை கிழக்கிலே வைத்து விடு பிறகு, அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். ஒரு உயர்ந்த அழகான வெள்ளை நிற ஆடை அழுக்கிலிருந்து சுத்தப்படுத்தப்படுவது போல, என்னுடைய பாவத்திலிருந்து சுத்தமாக வை யா அல்லாஹ்!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 744
நமது வெள்ளை ஆடை அணிந்தால் அதிலே ஆளுக்கு படக்கூடாது என்பதற்காக எவ்வளவு பேனிக்கையாக இருப்போம் அப்படி பாவத்திலிருந்து பேனிக்கையுள்ளவனாக, தகுவாவுள்ளவனாக என்னை ஆக்கி வை இந்த இரண்டும் வருங்காலதிற்க்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்ட துஆவாகும்.
நம்முடைய வருங்காலத்தை நினைத்து பயப்பிடுகிறோம், எனக்கு என்னுடைய வருமானம் உறுதியா, என்னுடைய வேலை எனக்கு உறுதியானதா, என்னுடைய உடல் ஆரோக்கியம் உறுதியானதா, இப்படி நிலையில்லாத வாழ்கை இது, நிரந்தரமற்ற வாழ்கையில் எனக்கு இது நிலைக்குமா, அது நிலைக்குமா, இதுலே எனக்கு அப்படி, எதுலே எனக்கு இப்படி, என்பதாக பல திட்டங்கள் தீட்டுகிறோம்.
பாவமில்லாமல் வாழ்வதற்கு, தக்குவாவுடைய சூழ்நிலையில் வாழ்வதற்கு, என்ன திட்டங்களை வைத்து இருக்கிறோம், என்ன யோசனைகளை வைத்து இருக்கிறோம், என்ன துஆக்களை அல்லாஹ்விடத்தில் கேட்கிறோம், அதற்க்குறிய துஆ இது ஆனால், உணர்ந்து கேட்கிறோமா? அல்லது, புரிந்து கேட்கிறோமா? அதுதான் பிரச்சனை அடுத்து சொன்னார்கள்:
اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بالمَاءِ والثَّلْجِ والبَرَدِ
என்னுடைய பாவத்திலிருந்து என்னை கழுவி விடுவாயாக எப்படி வெள்ளை நிற ஆடை தண்ணீரைக் கொண்டு, ஆலங்கட்டியைக் கொண்டு, பனிக்கட்டியைக் கொண்டு கழுவப்படுமோ அது போன்று என்னை கழுவி விடுவாயாக. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழகிய வார்த்தையை பாருங்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 744
- حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ المَدَنِيِّ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ
அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதாக: நம்மீது அக்கறையோடு, நம்மீது பாசத்தோடு, நாம் மறுமையில் தண்டிக்கபட்டு விடகூடாது, அல்லாஹுடைய வேதனையை தாங்க முடியாது நம்மால், அந்த ஒரு பாசத்தோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு உபதேசம் செய்கிறார்கள். நம்முடைய நபி எத்தகையவர் நம்மீது அவ்வளவு பாசம் வைத்திருப்பவர்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 2766
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார். (அல்குர்ஆன் 9 : 128)
நம்மீது பேராசைவுடையவர் நம் மீது அதிகம் பாசத்தை பொழியக்கூடியவர் முஃமின்கள் மீது கருணையாளர் என்று அல்லாஹ் கூறுகிறான். சொல்லுகிறார்கள் நீங்கள் விலகி விடுங்கள், உங்களை அழித்து நாசமாக்கக்கூடிய, மறுமையில் உங்களை நரக நெருப்பில் தள்ளிவிடக்கூடிய, அந்த ஏழு பெரும் பாவங்களை விட்டு தூரமாகி விடுங்கள்.
ஸஹாபாக்களுக்கு ஒரு எச்சரிக்கையை சொன்னார்கள் நாமாக இருந்தால் என்ன? சொல்லிருப்போம் நமக்கும் சஹாபாக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும், இப்படி சொன்னால் நம்மிடத்தில் சொல்லபட்டு இருந்தால் அதோடு கடந்து அடுத்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள், வேறு ஏதாவது பரகத்துக்கு சொல்லுவார்களா? ரிஸ்க் பரகதுக்கு, வியாபார பாரகதுக்கு, எதாவது சொல்லுவார்களா? அடுத்து பரக்துடைய ஹதீஸுக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று, கடந்து இருப்போம் இதான் உள்ளத்தில் இருக்க கூடிய அந்த ஈமானிய பயம் இதை சொல்லி முடித்த உடனேயே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடுத்து என்ன சொல்ல போகிறார்கள் என்று, அவர்கள் எதிர் பார்க்கவில்லை.
அல்லாஹ்வின் தூதரே! அவை என்ன என்று எங்களுக்கு சொல்லுங்கள் என்று சொன்னார்கள் அல்லாஹு அக்பர் எத்தகைய பயத்தை பாத்தீர்களா, எத்தகைய அச்சத்ததை பாத்தீர்களா அல்ல்ஹுடைய தூதரே அந்த பாவங்கள் என்ன என்று எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ்விற்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, செய்ய சொல்லுவது, எந்த உயிர்களை அல்லாஹ் புனிதமாக்கி வைத்து இருக்கிறானோ, யாரும் யாரையும் கொள்ள கூடாது, அல்லாஹுடைய சட்ட வரைபுகளைக் கொண்டே தவிர அப்படி புனிதமாக்கிய ஒரு உயரை அநியாயமாக கொள்ளுவது மேலும்,
சொன்னார்கள், வட்டி வாங்கி உண்பது, அனாதைகளுடைய செல்வங்களை அனுபவிப்பது, அபகரிப்பது, விழுங்குவது, முஸ்லிம்களுக்கு இறை மறுப்பாலருக்கும் மத்தியிலே அமீருடைய உத்தரவின் படி போர் மூண்டு விடுமையானால் அந்த போர் மைதானத்திலிருந்து புறமுது கேட்டு ஓடுவது, பத்தினிதனமாக வாழக்கூடிய, தன்னுடைய கர்ப்பை பேணி வாழக்கூடிய,
நம்பிக்கை உள்ள முஃமினான, பாவங்களை பற்றி அறியாத, தன்னை பற்றி என்ன பேசப்படுகிறது என்னபை கூட உணராமல், தான் உண்டு, தனது வாழ்க்கை உண்டு, தனது வணக்க வழிபாடுகள் உண்டு, என்று இருக்ககூடிய அத்தகைய உத்தமியான பெண்களை அவர்கள் மீது பழிபோடுவது, ஒழுக்கமான முஃமீனான அப்பாவியான பெண்கள் மீது விபச்சாரத்தின் குற்றம் சுமத்துவது, இந்த ஏழு பெரும்பாவங்களை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், இதை விட்டு விலகி விடுங்கள் என்று சொன்னார்கள்.
முதலாவது என்ன அல்லாஹ்விற்கு இணைவைப்பது, சூனியத்தில் ஈடுபடுவது, அல்லாஹ் புனிதமாகிய உயிரை கொள்ளுவது, வட்டி வாங்கி உண்பது அனாதைவுடைய சொத்தை அனுபவிப்பது போருடைய நாளிலே மைதானத்திலிருந்து புரமுதிகெட்டு ஓடுவது, பத்தினிதனமான ஒழுக்கமான அப்பாவி பெண்களை இட்டு கட்டுவது, அவர்கள் மீது பழிபோடுவது.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜும்ஆ உரைகளிலே இந்த பாவங்களை பற்றிய விளக்கங்களை பார்ப்போம். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! பாவங்களிலிருந்து நம்மை அல்லாஹ் தஆலா நம்மை தூரமாக ஆக்கி வைப்பானாக! நாம் அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், நாம் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ செய்த சிறிய, பெரிய பாவங்களை மன்னித்து அருளுவனாக! நம்முடைய எந்த தவறுகளைக் கொண்டு நாளை மறுமையில் நம்மை குற்றம் பிடிக்காமல் இருப்பைனகாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்பு 1)
107 - (1599) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: - وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ - «إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ، وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلَا وَإِنَّ حِمَى اللهِ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلَحَتْ، صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ، فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/