HOME      Khutba      ரஸூலுல்லாஹ்வின் நேசமும் அதன் அடையாளங்களும் | Tamil Bayan - 833   
 

ரஸூலுல்லாஹ்வின் நேசமும் அதன் அடையாளங்களும் | Tamil Bayan - 833

           

ரஸூலுல்லாஹ்வின் நேசமும் அதன் அடையாளங்களும் | Tamil Bayan - 833


ரஸூலுல்லாஹ்வின் நேசமும் அதன் அடையாளங்களும்! 
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரஸூலுல்லாஹ்வின் நேசமும் அதன் அடையாளங்களும்! 
 
வரிசை : 883
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -06-10-2023 | 21-03-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை உங்களுக்கும், எனக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன். 
 
அல்லாஹ்வை யார் பயந்து கொண்டார்களோ, அவர்களுக்கு ஒவ்வொரு நெருக்கடியில் இருந்தும் விசாலத்தை அல்லாஹ் ஏற்படுத்துகின்றான். அவர்கள் அறியாத புறத்தில் இருந்து அவர்களின் வாழ்வாதாரங்களை அல்லாஹு தஆலா கொண்டு வந்து சேர்க்கின்றான். 
 
அவர்களுடைய இம்மை வாழ்க்கையை விட, மறுமை வாழ்க்கையை மிகச் சிறந்த வாழ்க்கையாக அல்லாஹு தஆலா ஆக்கி கொடுக்கின்றான். சொர்க்கங்களிலும், சொர்க்கத்தின் ஊற்றுகளிலும் நிழல்களிலும் அல்லாஹு தஆலா அவர்களை தங்க வைக்கின்றான். 
 
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
 
நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள். (அல்குர்ஆன் 15 : 45)
 
நிச்சயமாக அல்லாஹ்வை பயந்து கொண்ட இறையச்சம் உள்ளவர்கள், சொர்க்கங்கள் இருப்பார்கள். சொர்க்க ஊற்றுக்களிலே அருகில் இருப்பார்கள். அல்லாஹுவின் அடியார்களே! அல்லாஹ்வின் பயம். அல்லாஹ்வை. அவன் நம்மை பார்க்கின்றான். 
 
நாம் அவனை பார்க்கவில்லை என்றாலும். அவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
 
بصير நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான். 
 
سميع நாம் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சையும் அவன் நன்கு செவி சாய்த்துக் கொண்டிருக்கின்றான்.
 
 عليم நம்முடைய ஒவ்வொரு செயலையும். அந்த செயலை எந்த நோக்கத்திற்காக நாம் செய்கின்றோம் என்பதையும் அறிந்து கொண்டிருக்கின்றான்.நம்முடைய செயல்களும் அவனுக்கு மறைந்தவை அல்ல. அந்த செயல்களை எந்த எண்ணத்தில் எந்த நோக்கத்தில் செய்கின்றோம், என்பதும் அல்லாஹ்விற்கு மறைந்ததல்ல. அல்லாஹ் சுபஹானஹு வதஆலா இந்த தக்வாவின் அடிப்படையில் தான் இம்மை மறுமையின் சிறந்த வாழ்க்கையை வைத்திருக்கின்றான். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹு வதஆலா இந்த மார்க்கத்திலே நமக்கு கொடுத்திருக்கக்கூடிய மிகப்பெரிய நற்பாக்கியம். மிகப்பெரிய அந்த கல்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக்கூடிய அந்த விசாலம் இருக்கின்றதே, அது தான் அல்லாஹ்வையும் அவனுடைய ரசூலையும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேசிக்கக் கூடிய அந்த நற்பாக்கியம். ஈமானின் என்பது. பெருமண அது ஒரு தத்துவம் மட்டும் அல்ல. ஈமான். உணர்வு பூர்வமான. உள்ளத்துடைய அந்த உணர்வுகளோடு கூடிய ஒரு அல்லாஹ்விற்கு விருப்பமான ஒரு தன்மையாகும்.
 
ஈமான் என்பது நான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன், ரசூலை நம்பிக்கை கொண்டேன் என்று சொல்வதோடு முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல மாறாக, அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பது, அல்லாஹ் உடைய தூதரை நேசிப்பது பிறகு, அல்லாஹ்வும், 
 
அல்லாஹ்வுடைய தூதரும்  யாரையெல்லாம் நேசிக்கின்றார்களோ, எதையெல்லாம் நேசிக்கின்றார்களோ, அவர்களையும், அந்த விஷயங்களையும், நேசிப்பது, இந்த முஹப்பத், அல்லாஹ்வின் மீது உண்டான அன்பு, ரசூலின் மீது உண்டான அன்பு, இது நம்முடைய ஈமானை வலுப்படுத்தக் கூடிய ஒன்றாகும்,
 
நம்முடைய ஈமானை அதிகரிக்க செய்யக்கூடிய ஒன்றாகும் நம்முடைய ஈமானிலே, ஒரு சுவையை, ஒரு ருசியை, ஒரு உணர்வை கொடுக்கக் கூடிய ஒன்றாகும். ஆகவே, தான் அல்லாஹ் சுபஹானஹு வதஆலா இந்த muhabbat ஐ. எப்படி நம் மீது ஈமானை கட்டாயமாக்கினானோ, ஈமான்கொள்வதை அல்லாஹு தஆலா நம் மீது கட்டாயம் ஆக்கினானோ. அதுபோன்று அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதரையும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும், நாம் நேசிப்பதையும், அன்பு வைப்பதையும், நம் மீது கட்டாயமாக்கி விட்டான். 
 
அதுமட்டுமல்ல அல்லாஹ்வை விட, அவனுடைய ரசூலை விட, அவனுடைய மார்க்கத்தை விட, இந்த உலகத்தில் எதுவும் நமக்கு பிரியமானதாக, விருப்பமானதாக இருக்கக் கூடாது. அல்லாஹ்வுடைய அன்பை. அவனுடைய ரசூலுடைய அன்பை. அவருடைய மார்க்கத்துடைய நேசத்தை. இந்த உலக வஸ்துக்களில் எதுவும் மிகைத்து விடக்கூடாது என்று அல்லாஹு தஆலா நமக்கு எச்சரிக்கையும் செய்திருக்கின்றான்.
 
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
 
(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் தந்தைமார்களும், (உங்கள் தாய்மார்களும்) உங்கள் ஆண் பிள்ளைகளும், (உங்கள் பெண் பிள்ளைகளும்) உங்கள் சகோதரர்களும், (உங்கள் சகோதரிகளும்) உங்கள் மனைவிகளும், (நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் கணவன்மார்களும்) உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுமோ என்று நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வை விட; இன்னும், அவனுடைய தூதரை விட; இன்னும், அவனுடைய பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் (உங்களிடம்) தன் (தண்டனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். இன்னும், அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 9 : 24)
 
ரப்புல் ஆலமீன் சூரா தவ்பா உடைய 24-வது வசனத்திலே கூறுகின்றான். நபியே! உங்கள் தோழர்களை அழைத்து நீங்கள் சொல்லுங்கள். உங்களுடைய பெற்றோர். உங்களுடைய தாய் தந்தை. உங்களுடைய பிள்ளைகள். உங்களுடைய சகோதரர்கள். உங்களுடைய வாழ்க்கை துணைகள். இன்னும் உங்களுடைய நெருங்கிய உறவினர்கள். 
 
குடும்பத்தார்கள். நீங்கள் சேர்த்து வைத்திருக்கக்கூடிய உங்களுடைய எல்லா செல்வங்களும். நஷ்டம் ஆகிவிட க் கூடாது. மந்தமாகி விடக்கூடாது. என்று பயந்து, பயந்து நீங்கள் செய்கின்ற உங்களுடைய வியாபாரங்கள். உங்களுக்கு மிகவும் பிரியமான உங்களுடைய இல்லங்கள் வீடுகள் இவை எல்லாம். 
 
உங்களுக்கு அல்லாஹ்வை விட. பிரியமானதாக இருந்தால் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், மனைவி, குடும்பத்தார்கள், சேர்த்து வைத்திருக்க கூடிய செல்வம், நாம் செய்யக்கூடிய வர்த்தக வியாபாரம், நாம் கட்டி வைத்திருக்கக்கூடிய நம்முடைய தங்க கூடிய நம்முடைய வீடுகள்.
 
இந்த எட்டு காரியங்கள் அல்லாஹ்வை விட உங்களுக்கு விருப்பமானதாக ஆகிவிட்டால். மேலும் அல்லா ஹ் சொல்லுகின்றான். அவனுடைய ரசூலை விட உங்களுக்கு விருப்பமானதாக ஆகிவிட்டால். மேலும் அல்லாஹ்வுடைய பாதையில்,
 
ஜிஹாத் செய்வதை விட உங்களுக்கு விருப்பமானதாக ஆகிவிட்டால்.  நீங்கள் எதிர்பார்த்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் அவனுடைய கட்டளையை கொண்டு வருவதை. அல்லாஹு தஆலா. இத்தகைய பாவிகளுக்கு நேர்வழி காட்ட மாட்டான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹு வதஆலா. இந்த முஹபத்தை நம் மீது கட்டாயம் ஆக்கினான். இந்த முஹபத் இல்லை என்றால். கவனியுங்கள். இத்தகைய முஹabbat ஒருவரிடம் இல்லை என்றால். அவரை அல்லாஹு தஆலா faasik. பெரும் பாவி என்று சொல்கின்றான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
பிறகு எச்சரிக்கை செய்கின்றான். இத்தகைய இந்தப் பாவத்தை செய்யக்கூடியவர்களுக்கு. எந்த பாவம்? அல்லாஹ்வுடைய அன்பை விட. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பை விட. மார்க்கத்தினுடைய அன்பை விட. இந்த எட்டு வஸ்துக்கள்களுடைய அன்பை, உள்ளத்தில் அதிகப் படுத்திக் கொண்டவர்களை, ஃபாசிக் என்று சொல்லிவிட்டு. அவர்களுக்கு நேர்வழியின் நற்பாக்கியம் கிடைக்காது. 
 
அவர்களுக்கு ஏதோ மார்க்கத்தின் பெயருக்கு இருப்பார்கள். ஆனால், அல்லாஹ்வுடைய அந்த ஹிதாயத். விசேஷமான அந்த ஹிதாயத். உண்மையான ஈமானை எப்படி அடைந்து கொள்வது? உண்மையான தக்வாவை எப்படி அடைந்து கொள்வது? அல்லாஹ்விற்கு பிரியமானதை நோக்கி எப்படி செல்வது? உண்மையான சுன்னத்தை நோக்கி எப்படி செல்வது? அந்த ஹிதாயத்து அவர்களுக்கு கிடைக்காது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த முஹப்பத்தை. அல்லாஹ்வுடைய தூதரை நேசிப்பதை, நம்முடைய இறை நம்பிக்கை. ஈமானோடு சம்பந்தப்படுத்தி சொன்னார்கள். இந்த முஹப்பத் இல்லாதவருக்கு ஈமான் இல்லை என்று எச்சரிக்கை செய்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
لَا يُؤْمِنُ أحَدُكُمْ، حتَّى أكُونَ أحَبَّ إلَيْهِ مِن والِدِهِ ووَلَدِهِ والنَّاسِ أجْمَعِينَ
 
உங்களில் யார் ஒருவரும். ஒரு குழுமையான, நிறைவான. ஈமான் உடையவர்களாக ஆக முடியாது. எது வரை? நான் அவருக்கு. அவருடைய தந்தையை விட, அவருடைய பிள்ளைகளை விட. மக்கள் அனைவரையும் விட விருப்பமானவனாக, நேசிக்க கூடியவனாக ஆகின்ற வரை, உங்களில் யார் ஒருவரும். முமீனாக ஆகவே முடியாது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த முஹப்பத்தை பெறாதவர்களுக்கு ஈமான் இல்லை என்று எச்சரித்தார்கள். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்கள் மீது நாம் அன்பு வைப்பது, இது நம்முடைய அல்லாஹ்வின் மீது நாம் அன்பு வைப்பதுனுடைய, அதனுடைய வெளிப்பாடு அல்லாஹ்வுடைய தூதரை நாம் நேசிப்பது. இந்த உலகத்தில் நமக்கு மிகப்பெரிய நன்மைக்கு காரணமானவர்கள்,
 
நாம் இந்த உலகத்திலே பிறப்பதற்கு காரணமானவர்கள் நம்முடைய பெற்றோர், அவர்களை நேசிப்பதை அல்லாஹ் நமக்கு கடமை ஆக்கி இருக்கின்றான் என்றால் யார் நம்முடைய இம்மையும், மறுமையின், வாழ்க்கைகுரிய, அந்த ஹிதாயத் அந்த தீனுக்கு நமக்கு போதகராக ரசூலாக இருந்தார்களோ, 
 
யார் மூலமாக நாம் அல்லாஹ்வை தெரிந்து கொண்டோமோ, இந்தக் குர்ஆனை பெற்றோமா, மாபெரும் ஹிதாயத்தை பெற்றோமோ, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவர்களை நாம் எந்த அளவு நேசிக்க வேண்டும். அல்லாஹு தஆலா சொல்கின்றான் பாருங்கள். ஸூரா அஹ்சாப் உடைய ஆறாவது வசனத்திலே. ஒரு மூமின். நம்பிக்கையாளர். தன்னுடைய நபியை எப்படி அவர் உணர வேண்டும். சொல்கின்றான். 
 
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُهَاجِرِينَ إِلَّا أَنْ تَفْعَلُوا إِلَى أَوْلِيَائِكُمْ مَعْرُوفًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورً
 
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் (வாரிசு அல்லாத) உங்கள் சொந்தங்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 33 : 6)
 
மூமின்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு. இறைத்தூதர் நபி. அந்த மூமின்களுடைய உயிரை விட. நம்முடைய உயிரை விட நமக்கு நெருக்கமானவராக, விருப்பமானவராக இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹு வதஆலா சஹாபாக்களுக்கு ஒரு வசனத்தை இறக்கினான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். எப்போதும் அவர்களுடைய விருப்பம் என்னவென்றால், அல்லாஹ்வுடைய பாதையிலே செல்லக்கூடிய அந்த போரிலே கலந்து கொள்ள வேண்டும். 
 
ஒவ்வொரு ஜிஹாதுடைய கூட்டத்தோடு அவர்களும் புறப்பட்டு செல்ல வேண்டும், அதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரமப்பட்டார்கள். எந்த வகையிலும். போரிலிருந்து பின்தங்கி விடாமல், தொடர்ந்து அந்த ஜிஹாதுடைய பயணத்தை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் அந்த நேரத்திலே அல்லாஹ் வசனத்தை இறக்கினான். எப்படி சொல்லுகின்றான் ரப்புல் ஆலமீன் கவனியுங்கள். சூரா அத்தபா உடைய 120 ஆவது வசனத்தில்.
 
مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُمْ مِنَ الْأَعْرَابِ أَنْ يَتَخَلَّفُوا عَنْ رَسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنْفُسِهِمْ عَنْ نَفْسِهِ ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَيْلًا إِلَّا كُتِبَ لَهُمْ بِهِ عَمَلٌ صَالِحٌ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
 
மதீனாவாசிகள்; இன்னும், அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரை விட தங்கள் உயிர்களை நேசிப்பதும் - ஆகுமானதல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகமோ, களைப்போ, பசியோ எது ஏற்பட்டாலும்; 
 
இன்னும், நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற இடத்தை இவர்கள் மிதித்தாலும்; இன்னும், எதிரிகளிடமிருந்து துன்பத்தை அவர்கள் அடைந்தாலும், இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்படாமல் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான். (அல்குர்ஆன் 9 : 120)
 
மதினாவில் இருக்கக்கூடியவர்களுக்கோ, மதினாவில் சுற்று இருக்கக்கூடிய கிராமத்து அரபிகளுக்கோ, ஒருபோதும் அனுமதி கிடையாது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போருக்கு புறப்பட்டுச் செல்ல. இவர்கள் போருக்கு செல்லாமல், பின் தங்கி இருந்து விடுவதற்கு. அதுமட்டுமா? 
 
நபியின் உடைய உயிரை விட, தங்களுடைய உயிரை நேசிப்பதற்கும் அனுமதி கிடையாது. அல்லாஹ்வுடைய தூதர் ஷாஹாதத்தை எத ிர்பார்த்து. இந்த தீனுக்காக உயிர் கொடுக்க வேண்டும், இந்த தீனை பாதுகாக்க வேண்டும் என்று புறப்பட்டு செல்ல, நீங்களும் உங்களது உயிர் மீது ஆசை கொண்டவர்களாக, உங்களது இல்லங்களிலே தங்கி விடுவதற்கு, ஒரு போதும் அனுமதி கிடையாது. 
 
அல்லாஹு தஆலா உடைய இந்த வசனம் நமக்கு எத்தகைய அச்சுறுத்தலை கொடுக்க வேண்டும் சகோதரர்களே! அல்லாஹ்வுடைய நபியின் மீது, நம்முடைய நேசம், ஆழமானதாக இருக்க வேண்டும், உறுதியானதாக இருக்க வேண்டும், பற்று உடையதாக இருக்க வேண்டும், இந்த முஹப்பத் இல்லாமல். அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை அடைய முடியாது. 
 
நம்முடைய வணக்க வழிபாடுகள், நம்முடைய அனைத்து விதமான அர்ப்பணிப்புகள், அனைத்திற்கும். இந்த முஹப்பத். மிகப்பெரிய ஒரு ஒன்று சக்தியாக, அல்லாஹ்விடத்திலே அவை அங்கீகரிக்கப்படுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது. 
 
உமர் அல் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு. எத்தகைய நபி தோழர் என்று தெரியுமா? ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அபூபக்கருக்கு பிறகு சொல்ல வேண்டும் என்றால், அவ்வளவு பாசத்தை கொட்டியவர், அவ்வளவு அன்பை கொட்டியவர். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு யாராவது அவர்களுடைய. அதாவது கை கால்களால் அல்லது ஆயுதங்களால் தீங்கு செய்வதல்ல. யாரும் ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு. தனது வார்த்தைகளால். தனது சொற்களால் கடின சொற்களை சொல்லி, காயப்படுத்துவதை கூட தாங்கிக் கொள்ள முடியாத சஹாபி. ஒரு சபையில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்க. 
 
அந்த சபையில் உமர் இருக்க யாராவது ஒருவர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கடினமாக பேசிவிட்டால். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கும்படி பேசிவிட்டால். 
 
فَقالَ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: أمَا إنَّه قدْ صَدَقَكُمْ، فَقالَ عُمَرُ: يا رَسولَ اللَّهِ، دَعْنِي أضْرِبْ عُنُقَ هذا المُنَافِقِ
 
உமர் அவர்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியாது. வாழை உருவி விடுவார். அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள் இந்த முனாஃபிக்கை வெட்டி விடுகின்றேன் என்று. அந்த அளவுக்கு. ஒரு பாசத்தை, ஒரு அன்பை, பிரியத்தை வைத்திருந்தவர் உமர்
 
அறிவிப்பாளர் : அலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4274 குறிப்பு 1)
 
كُنَّا مع النَّبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ وهو آخِذٌ بيَدِ عُمَرَ بنِ الخَطَّابِ، فَقالَ له عُمَرُ: يا رَسولَ اللَّهِ، لَأَنْتَ أحَبُّ إلَيَّ مِن كُلِّ شَيْءٍ إلَّا مِن نَفْسِي، فَقالَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: لَا، والَّذي نَفْسِي بيَدِهِ، حتَّى أكُونَ أحَبَّ إلَيْكَ مِن نَفْسِكَ، فَقالَ له عُمَرُ: فإنَّه الآنَ، واللَّهِ، لَأَنْتَ أحَبُّ إلَيَّ مِن نَفْسِي، فَقالَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: الآنَ يا عُمَرُ.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒருமுறை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்று கொண்டிருக்க. உமருக்கு ரொம்ப பெருமதம் தாங்க முடியவில்லை. நபி ஸல்லல்லாஹு அவர்களுடைய கரத்தோடு தன்னுடைய கரம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சென்று கொண்டிருக்க.. அப்போது நபியை பார்த்துச் சொன்னார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நீங்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். ஆனால் என்னுடைய உயிரைத் தவிர. என்னுடைய உயிரை தவிர. நீங்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் அப்போது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
உமரே! இல்லை. உமரே இல்லை. உடனே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு எனது உயிரை விடவும் விருப்பமானவர்கள். என்று. அப்போதுதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். உமரே! இப்போதுதான். இப்போதுதான். அதாவது உங்களுடைய இமான் இப்போதுதான் நிறைவடைகிறது என்பதாக.
 
அறிவிப்பாளர் : அலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4274 குறிப்பு 1)
 
கண்ணியத்திற்குரிய வர்களே! கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த முஹப்பத்தை  உணர்வது. இதை உள்ளத்திலே எப்போதும் பசுமையாக கொண்டிருப்பது. இது ஒரு அமல். ஒவ்வொரு நாளுடைய அமலை போன்று, என்னுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு அதிகரிக்கிறதா? 
 
ரசூலுடைய அன்பு அதிகரிக்கின்றதா? என்று நாம் சுய பரிசோதனை அன்றாடம் செய்து கொள்ள வேண்டிய கட்டாய கடமைகளில் ஒன்று. 
 
ஏதோ தொழுதோம் சென்றோம் என்பதல்ல, இந்த தொழுகையில் அல்லாஹ்வுடைய அன்பை உணர்ந்தோமா? ஒரு சுன்னாவை செய்யும் பொழுது, அதை அல்லாஹ்வுடைய அன்போடு, ரசூல் உடைய அன்போடு அந்த சுன்னாவை நிறைவேற்றுகின்றோமா? இது கண்டிப்பாக நாம் பரிசோதனை செய்ய வேண்டிய ஒன்று சகோதரர்களே!
 
ثَلاثٌ مَن كُنَّ فيه وجَدَ حَلاوَةَ الإيمانِ: أنْ يَكونَ اللَّهُ ورَسولُهُ أحَبَّ إلَيْهِ ممَّا سِواهُما، وأَنْ يُحِبَّ المَرْءَ لا يُحِبُّهُ إلَّا لِلَّهِ، وأَنْ يَكْرَهَ أنْ يَعُودَ في الكُفْرِ كما يَكْرَهُ أنْ يُقْذَفَ في النَّارِ.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். நம்முடைய ஈமான் உடைய உணர்வுக்கு சொன்னார்கள். மூன்று காரியங்கள். 3 காரியங்கள் யாரிடத்திலே இருக்குமோ, அவர்தான் ஈமானுடைய ஹலாவத் ஈமான் உடைய சுவையை அவர் உணர முடியும். யார் தெரியுமா? என்ன காரியங்கள் தெரியுமா? அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும். அவர்கள் அல்லாத. மற்ற அனைவரை விட, அவருக்கு விருப்பமானவராக ஆகி விட வேண்டும். 
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும். மற்ற அனைவரை விட, விருப்பமானவராக ஆகிவிட வேண்டும். அடுத்ததாக. யாரையாவது ஒருவரை அவர் நேசித்தால். அல்லாஹ்விற்காக மட்டுமே நேசிக்க வேண்டும். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6941 
 
யாரை நேசித்தாலும் சரி, அல்லாஹ்விற்காக மட்டுமே நேசிக்க வேண்டும். இவரால் எனக்கு ஒரு ஆதாயம் என்பதற்காக யாரையும் நேசிக்க கூடாது. பதவிக்காகவோ, பொருளுக்காகவோ, பெயருக்காகவோ, புகழுக்காகவோ, உலக வஸ்துக்களில் எந்த ஒன்றுகாகவும் யாரையும் நேசிக்க கூடாது. ஒருவரை நேசித்தால், பரிசுத்தமான நேசமாக அல்லாஹ்விற்காக நேசிப்பது.
 
மேலும் சொன்னார்கள், இதை நிராகரிப்பிலே மீழ்வதை வெறுக்க வேண்டும். எப்படி நெருப்பில் போடப்படுவ தை வெறுப்பானோ. எப்படி நெருப்பில் போடப்படுவதை வெறுப்பாரோ. அத்தகைய வெறுப்பு. குஃபுர். இறை நிராகரிப்பை பார்த்தவருக்கு ஏற்பட வேண்டும். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6941 
 
அன்பு சகோதரர்களே! இந்த மூன்று தன்மைகள் இருந்தால். அவருக்கு ஹலாவத்துள் ஈமான். உடைய சுவை தெரியும் என்று சொன்னார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த நேசம் இருக்கின்றதே, நமக்கு நம்முடைய ஈமானிலே, அந்த உண்மையான உணர்வை. அந்த உண்மையான சக்தியை கொடுக்கக்கூடியது. 
 
அதுமட்டுமா? நாளை மறுமையிலே. அல்லாஹ் நல்லவர்களுக்காக ஏற்படுத்தி இருக்கக்கூடிய சொர்க்கம் இருக்கின்றதே. இந்த சொர்க்கம். நம்முடைய வெறுமண அமல்களைக் கொண்டு மட்டும் கிடைத்து விடக்கூடியது அல்ல. எந்த அமளோடு, எந்த அளவிற்கு முஹம்மதுல்லா, முஹம்மதுர்ரசூல். அல்லாஹ்வுடைய அன்பு சேர்ந்து இருக்கிறதோ, நபியின் உடைய அன்பு சேர்ந்து இருக்கின்றதோ, அங்கே சொர்க்கத்திலே இந்த அமல்களுக்கு மிகப்பெரிய உயர்ந்த தரஜாதுக்கள், அந்தஸ்துகள், தகுதிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 
أنَّ رَجُلًا سَأَلَ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: مَتَى السَّاعَةُ يا رَسولَ اللَّهِ؟ قالَ: ما أعْدَدْتَ لَهَا قالَ: ما أعْدَدْتُ لَهَا مِن كَثِيرِ صَلَاةٍ ولَا صَوْمٍ ولَا صَدَقَةٍ، ولَكِنِّي أُحِبُّ اللَّهَ ورَسولَهُ، قالَ: أنْتَ مع مَن أحْبَبْتَ.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பாருங்கள். அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மசூதியிலே தோழர்களிடத்திலே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். 
 
அப்போது ஒரு தோழர் வந்தவர் கேட்டார்? அல்லாஹ்வுடைய தூதரே! (Madas'aa) மறுமை எப்போது நிகழும் என்று நீங்கள் சொல்ல முடியுமா? என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழரை பார்த்து கேட்டார்கள்? அந்த மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் என்று? அந்தத் தோழர் சொன்னார். நான் அல்லாஹ்வுடைய அன்பை தயார் செய்து வைத்திருக்கிறேன். நான் அவனுடைய ரசூல் உடைய அன்பை நான் தயார் செய்து வைத்திருக்கின்றேன். இன்னொரு அறிவிப்பிலே வருகிறது. 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6171
 
بيْنَما أنَا والنبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ خَارِجَانِ مِنَ المَسْجِدِ، فَلَقِيَنَا رَجُلٌ عِنْدَ سُدَّةِ المَسْجِدِ، فَقالَ: يا رَسولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ؟ قالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: ما أعْدَدْتَ لَهَا؟، فَكَأنَّ الرَّجُلَ اسْتَكَانَ، ثُمَّ قالَ: يا رَسولَ اللَّهِ، ما أعْدَدْتُ لَهَا كَبِيرَ صِيَامٍ، ولَا صَلَاةٍ، ولَا صَدَقَةٍ، ولَكِنِّي أُحِبُّ اللَّهَ ورَسولَهُ، قالَ: أنْتَ مع مَن أحْبَبْتَ.
 
அல்லாஹ்வுடைய தூதரே! நான் அதிகமான அமல்களை தொழுகைகளை நோன்புகளை தயார் செய்து வைக்க வில்லை. ஆனால், அல்லாஹ்வுடைய அன்பையும் அவனுடைய ரசூல் உடைய அன்பையும் நான் எனது உள்ளத்திலே தயார் செய்து வைத்திருக்கிறேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். நிச்சயமாக நீ. நாளை மறுமையிலே. நீ யாரை நேசித்தாயோ அவர்களோடு இருப்பாய். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7153
 
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள். எங்களுக்கு இஸ்லாமிய பாக்கியம். இஸ்லாமிய மார்க்கத்தினுடைய நற்பாக்கியம் கிடைத்ததற்கு பிறகு நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இந்த செய்தியை கேட்டதற்கு பிறகு. ஏற்பட்ட சந்தோஷத்தை போன்று, மகிழ்ச்சியை போன்று, வேறு ஒரு மகிழ்ச்சியை நாங்கள் அடைத்ததில்லை.
 
இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய போது, என்ன ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு கிடைத்ததோ, குஃபுரில் இருந்து ஷிர்க்கிலிருந்து, அல்லாஹ் விடுவித்தானே என்று, அதற்கு பிறகு. இந்த ஹதீஸ மூலம் எங்களுக்கு ஏற்பட்ட ஒரு மகிழ்ச்சியை போன்று. வேறு ஒரு மகிழ்ச்சியை நாங்கள் அடைந்ததில்லை. என்று சொல்லிவிட்டு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பதிவு செய்கின்றார்கள். பாருங்கள். அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த கூற்றை. அனஸ் சொல்கின்றார். நானும் அல்லாஹ்வை நேசிக்கின்றேன். 
 
أنَّ رَجُلًا سَأَلَ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: ومَاذَا أعْدَدْتَ لَهَا. قَالَ: لا شيءَ، إلَّا أنِّي أُحِبُّ اللَّهَ ورَسوله صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقَالَ: أنْتَ مع مَن أحْبَبْتَ. قَالَ أنَسٌ: فَما فَرِحْنَا بشيءٍ، فَرَحَنَا بقَوْلِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أنْتَ مع مَن أحْبَبْتَ قَالَ أنَسٌ: فأنَا أُحِبُّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ وأَبَا بَكْرٍ، وعُمَرَ، وأَرْجُو أنْ أكُونَ معهُمْ بحُبِّي إيَّاهُمْ، وإنْ لَمْ أعْمَلْ بمِثْلِ أعْمَالِهِمْ.
 
நானும் ரசூலுல்லாஹ்வை நேசிக்கின்றேன். நான் அபூபக்கரை நேசிக்கின்றேன். உமர் ரலியல்லாஹு அன் அவர்களை நேசிக்கின்றேன். அவர்களோடு நான் இருப்பேன் என்று அல்லாஹ் இடத்திலே ஆதரவு வைக்கின்றேன். 
 
அவர்களின் அமல்களை நான் செய்யவில்லை என்றாலும் சரி. அவர்கள் எந்த அளவு அமல்கள் செய்தார்களோ, அத்தகைய அமல்களை நான் செய்யவில்லை என்றாலும் அபூபக்கரை, உமரை, ரலியல்லாஹு அன்ஹு நான் நேசிக்கின்ற காரணத்தால். அல்லாஹ் அல்லாஹ்வுடைய அருளால் நானும் அவர்களோடு இருப்பேன் என்று நான் அல்லாஹ் இடத்திலே ஆதரவு வைக்கின்றேன்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3688
 
இப்படி கண்ணியத்திற்குரியவர்களே! இந்த அன்பை ஆனது நம்முடைய தரஜாவை அல்லாஹ்விடத்திலே உயர்த்துவதாகும். 
 
جَاءَ رَجُلٌ إلى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَقالَ: يا رَسولَ اللَّهِ، كيفَ تَقُولُ في رَجُلٍ أحَبَّ قَوْمًا ولَمْ يَلْحَقْ بهِمْ؟ فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: المَرْءُ مع مَن أحَبَّ
 
இப்னு மசூவூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள். ஒரு மனிதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே வந்து கேட்கின்றார்? எப்படி அழகாக, சூசகமாக கேட்கின்றார் பாருங்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதரே! ஒருவர் ஒரு கூட்டத்தாரை நேசிக்கின்றார். ஆனால் அமல்களில் அந்த கூட்டத்தாரை பிடிக்க முடியவில்லை. ஒருவர். ஒரு சமூகத்தை நேசிக்கின்றார். ஆனால். அந்த சமூகத்தை போன்று அமல்கள் இவரால் செய்ய முடியவில்லை. அமல்களிலே அந்தக் கூட்டத்தை சென்று சேர முடியவில்லை. அவர் சூசகமாக தன்னை பற்றி கேட்கின்றார். 
 
அல்லாஹ்வுடைய தூதரே! உங்களை எனக்குப் பிடிக்கின்றது. உங்களுடைய நெருக்கமான இந்த தோழர்களை நான் நேசிக்கின்றேன். ஆனால், உங்களைப் போன்று என்னால் அமல் செய்ய முடியவில்லையே! அபூ பக்கரை போன்று, 
 
உமரை போன்று, உஸ்மானை போன்று, அலியைப் போன்று இத்தகைய உயர்ந்த தரஜா உடைய இந்த தோழர்களை போன்று என்னால் அமல் செய்ய முடியவில்லை ஏ அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர் கேட்ட விதத்திலே அவருக்கு பதில் சொன்னார்கள்.
 
المَرْءُ مع مَن أحَبَّ
 
மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ, அவன் அவர்களோடு இருப்பான். மனிதன் யாரை நேசிக்கின்றானோ, அவர்களோடு இருப்பான். 
 
அன்பு சகோதரர்களே! கொஞ்சம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இத்தகைய ஒரு அன்பு. நம்முடைய உள்ளத்திலே எப்போதும் இருக்க வேண்டும். அந்த அன்பானது. கோஷங்களை கொண்டு அல்ல, அந்த அன்பானது சடங்குகளை செய்வதைக் கொண்டு அல்ல இன்று அல்லாஹ்வுடைய அன்பு. 
 
அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அன்பு என்று பேசினாலே, இன்றைய சமுதாயத்தில் மக்கள், பெரும் கேவலமான சடங்குகளை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அந்த சடங்குகளை செய்வதை தான் அல்லாஹ்வுடைய தூதருடைய அன்பு இருப்பதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
 
அந்த காரியங்களுக்கும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. தொடர்பும் கிடையாது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை மட்டும் யார் இந்த மார்க்கத்தில் செய்கின்றார்களோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன ஃபர்லான அமல்களை நமக்கு போதித்தார்களோ, பிறகு எந்த நபிலான சுன்னத்தான அமல்களை நமக்கு கற்றுத் தந்தார்களோ, 
 
அந்த ஃபர்லான, சுன்னத்தான, நபிலான அமல்களை கொண்டுதான் அல்லாஹ்வுடைய மொஹப்பத்தை நாம் பெற முடியும். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அன்பை ஷஃபாத்தை நாம் பெற முடியும். இபாதத் என்றால். அது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்து காட்டியதாக மட்டும் தான் இருக்க வேண்டும்.
 
இபாதத்துகளை புதிது புதிதாக நம்முடைய கற்பனைக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப, நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப, நாம் புரிந்து கொள்வதற்கு ஏற்ப, உருவாக்குவதற்கு நமக்கு அனுமதி இல்லை. இபாதத்துகளை கற்றுத் தருவதற்கு தான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் அனுப்பினான். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு ஒவ்வொரு இபாதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். எது நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்குமோ, எந்த இபாதத்தை அல்லாஹ் பொருந்தி கொள்வானோ, எந்த இபாதத்திற்கு அல்லாஹ் சொர்க்கத்தை கூலியாக தருவானோ, அந்த இபாதத்துக்கள் அனைத்தையும், அந்த வழிகள் அனைத்தையும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு காட்டி கொடுத்து விட்டார்கள், கற்பித்து விட்டார்கள்.
 
ஆகவே, நாமாக ஒரு அமலை உருவாக்கி, அல்லாஹ்வுடைய விருப்பத்தை தேடுவதோ, நபியினுடைய அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்று சொல்வதோ, அல்லது இதன் மூலமாக சொர்க்கத்தை தேடுகின்றோம் என்று சொல்வதோ, ஒருபோதும் நமக்கு அனுமதிக்கப்பட்டது அல்ல. 
 
أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
 
(அல்லாஹ்வின்) மார்க்கத்தில் அல்லாஹ் எதை கட்டளை இடவில்லையோ அதை இவர்களுக்கு சட்டமாக (-மார்க்கமாக) ஆக்கித்தருகின்ற தெய்வங்களும் இவர்களுக்கு உண்டா? (இவர்களுக்கு தண்டனை மறுமையில்தான் என்ற) தீர்ப்பின் வாக்கு மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 42 : 21)
 
அல்லாஹு தஆலா கேட்கின்றான்? இவர்கள் என்ன? எனக்கு நிகராக, எனக்கு சமமாக, இணை தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்களா? அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ் அனுமதிக்காததை அவர்கள் மார்க்கமாக ஆக்கிக் கொடுப்பதற்கு. 
 
இந்த தீன் அல்லாஹ்வுடைய தீன். இந்த தீனுடைய வழிகாட்டி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 31)
 
நபியே! நீங்கள் சொல்லுங்கள். உங்களுக்கு அல்லாஹ்வுடைய முஹப்பத் இருக்குமேயானால், நீங்கள் இந்த நபியை பின்பற்றுங்கள். உங்களுடைய வணக்க வழிபாடுகளை கொண்டு,  அல்லாஹ் உடைய அன்பை பெற வேண்டும் என்றால், அல்லாஹ்வுடைய அன்பை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றால், நபியை பின்பற்றித்தான் நீங்கள் அமல் செய்ய வேண்டும். அதாவது நபி எதை சொன்னாரோ அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்களது பாவங்களை மன்னிப்பான்.
 
அன்பு சகோதரர்களே! இப்படிப்பட்ட தெளிவான விளக்கங்கள் இருக்க. அது போக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேலும் எச்சரிக்கை செய்தார்கள். 
 
مَن عَمِلَ عَمَلًا ليسَ عليه أمْرُنا فَهو رَدٌّ.
 
யார் ஒரு காரியத்தை செய்வாரோ, அதற்கு நம்முடைய கட்டளை இல்லையோ. யார் ஒரு காரியத்தை செய்வாரோ, அந்த காரியத்தை செய்வதற்கு நம்முடைய கட்டளை இல்லையோ, அது மறுக்கப்பட்ட ஒன்று. அது தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று. யார் நம்முடைய மார்க்கத்தில் அதில் இல்லாததை உருவாக்குவாரோ, அதை மறுக்கப்பட வேண்டிய ஒன்று. அன்பு சகோதரர்களே! சுன்னா மட்டும் தான் மார்க்கம். 
 
مَن أَحْدَثَ في أَمْرِنَا هذا ما ليسَ فِيهِ، فَهو رَدٌّ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக் கொடுத்தது. சஹாபாக்கள் செய்தது. எதை வாழ்க்கையிலே அவர்கள் நடைமுறைப்படுத்தினார்களோ, அது மட்டும் தான் மார்க்கம். சகோதரர்களே! இன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பிற்கு அடையாளமாக மக்கள் உருவாக்கி வைத்திருக்கின்றார்களே, மௌலூது சபைகள். மீலாது வைபவங்கள் என்றும் இது போன்று, அந்த புதுமையான கலாச்சாரங்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா , நூல் : முஸ்லிம், புகாரி,  எண் : 1718, 2697
 
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ஆரம்பத்திலே நபியினுடைய அன்பு. அந்த நபி பிறந்தநாள். அதிலே நாம் விருந்து கொடுக்கின்றோம். அதிலே நபியை பற்றிய புகழ்களை நாம் பாடுகின்றோம். என்பதாக உருவாக்கி உருவாக்கி. இன்று மொத்தமாக இந்த மௌலூதுகளையும், மீளாதுகளையும் எப்படி மாற்றி இருக்கின்றார்கள் என்றால், இறை மறுபாளர்கள், 
 
இணை வைப்பவர்கள் செய்யக்கூடிய, சடங்கு சமிர்தாயங்களை விட ஷிர்க்கின் வெளிப்பாடுகளை விட ஒரு கேவலமான ஒரு நிலை இருக்கிறது. Shirk உடைய அடையாளமாக, kufr உடைய அடையாளமாக, நயவஞ்சகத்தின் அடையாளமாக, ஆச ஆபாசங்களுடைய அடையாளம் ஆக்கி வைத்திருக்கிறார்களே, இதையும் அவர்கள் ரசூல் உடைய அன்பை என்று கூறி அதை அவர்கள் அங்கீகரிக்கின்றார்களே, எந்த அளவு அவர்களுடைய அந்த ஈமானுடைய நிலை தரம் தாழ்ந்து விட்டது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அன்பிற்கும், ரசூலுடைய அன்பிற்கும் இவர்கள் செய்யக்கூடிய இந்த சடங்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரசூலையும் நேசிக்க கூடியவர். அவர் மார்க்கத்தை முறையாக கற்றுக் கொள்ள கூடியவராக இருப்பார். அந்த மார்க்கத்தை ஆதாரத்தோடு பின்பற்றக் கூடியவராக இருப்பார். 
 
அல்லாஹ்வின் பக்கம், அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்க கூடியவராக இருப்பார். அதற்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லாத, வழி காட்டாத, எந்த ஒன்றையும் இந்த மார்க்கத்தில் அவர் செய்ய மாட்டார். அவர் தான் உண்மையில் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர். அவர்தான் உண்மையில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கக் கூடியவர். 
 
சஹாபாக்கள் நபியின் மீது உண்டான அன்பை இப்படித்தான் வெளிப்படுத்தினார்கலே தவிர. கோஷங்களை கொண் டோ, சடங்குகளை கொண்டோ,புதிய புதிய அமல்களை உருவாக்கி, நபியுடன் பெயரால் கவிதைகள் பாடி, இப்படிப்பட்ட வைபவங்களை, விசேஷங்களை கொண்டாடுவதை கொண்டோ ஒருபோதும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பை, அந்த சஹாபாக்கள் செய்ததில்லை. என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
இது குறித்து விழிப்புணர்வு நம்முடைய மக்களுக்கு நாம் அதிக படுத்த வேண்டும். எங்கே நாம் இந்த விழிப்புணர்வை செய்வதை விட்டு விடுகின்றோமோ, இத்தகைய அனாச்சாரங்களை கண்டிப்பதை விட்டு விடுகின்றோமோ, அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அந்த தீமைகள் பரவுவதற்கு உரிய காரணங்களில் நாமும் ஒருவராக இருந்து விடுவோம்.
 
அல்லாஹ்விடத்தில் அது பயங்கரமான குற்றம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் சுபஹானஹு வதஆலா. நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய சமுதாயத்தை சுன்னாவின் பக்கம் திருப்புவனாக! ஒவ்வொரு வழிகேட்டிலிருந்து, பித்அத்  என்ற என்ற அனாச்சாரத்தில் இருந்து, அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நம்முடைய சமுதாயத்தையும் பாதுகாப்பானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
بَعَثَنِي رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ أنَا، والزُّبَيْرَ، والمِقْدَادَ، فَقالَ: انْطَلِقُوا حتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ؛ فإنَّ بهَا ظَعِينَةً معهَا كِتَابٌ، فَخُذُوا منها. قالَ: فَانْطَلَقْنَا تَعَادَى بنَا خَيْلُنَا حتَّى أتَيْنَا الرَّوْضَةَ، فَإِذَا نَحْنُ بالظَّعِينَةِ، قُلْنَا لَهَا: أخْرِجِي الكِتَابَ، قالَتْ: ما مَعِي كِتَابٌ، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ الكِتَابَ، أوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ، قالَ: فأخْرَجَتْهُ مِن عِقَاصِهَا، فأتَيْنَا به رَسولَ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ، فَإِذَا فِيهِ: مِن حَاطِبِ بنِ أبِي بَلْتَعَةَ، إلى نَاسٍ بمَكَّةَ مِنَ المُشْرِكِينَ، يُخْبِرُهُمْ ببَعْضِ أمْرِ رَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ. فَقالَ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: يا حَاطِبُ، ما هذا؟! قالَ: يا رَسولَ اللَّهِ، لا تَعْجَلْ عَلَيَّ؛ إنِّي كُنْتُ امْرَأً مُلْصَقًا في قُرَيْشٍ -يقولُ: كُنْتُ حَلِيفًا، ولَمْ أكُنْ مِن أنْفُسِهَا- وكانَ مَن معكَ مِنَ المُهَاجِرِينَ مَن لهمْ قَرَابَاتٌ يَحْمُونَ أهْلِيهِمْ وأَمْوَالَهُمْ، فأحْبَبْتُ -إذْ فَاتَنِي ذلكَ مِنَ النَّسَبِ فيهم- أنْ أتَّخِذَ عِنْدَهُمْ يَدًا يَحْمُونَ قَرَابَتِي، ولَمْ أفْعَلْهُ ارْتِدَادًا عن دِينِي، ولَا رِضًا بالكُفْرِ بَعْدَ الإسْلَامِ، فَقالَ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: أمَا إنَّه قدْ صَدَقَكُمْ، فَقالَ عُمَرُ: يا رَسولَ اللَّهِ، دَعْنِي أضْرِبْ عُنُقَ هذا المُنَافِقِ، فَقالَ: إنَّه قدْ شَهِدَ بَدْرًا، وما يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ علَى مَن شَهِدَ بَدْرًا، فَقالَ: اعْمَلُوا ما شِئْتُمْ؛ فقَدْ غَفَرْتُ لَكُمْ. فأنْزَلَ اللَّهُ السُّورَةَ: {يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ} إلى قَوْلِهِ: {فقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ} [الممتحنة: 1].
 
الراوي : علي بن أبي طالب | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
 
الصفحة أو الرقم: 4274 | خلاصة حكم المحدث : [صحيح]
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/