HOME      Khutba      அனாச்சாரத்தை அங்கீகரிக்காதீர்!! | Tamil Bayan - 839   
 

அனாச்சாரத்தை அங்கீகரிக்காதீர்!! | Tamil Bayan - 839

           

அனாச்சாரத்தை அங்கீகரிக்காதீர்!! | Tamil Bayan - 839


அனாச்சாரத்தை அங்கீகரிக்காதீர்!
 
 
தலைப்பு : அனாச்சாரத்தை அங்கீகரிக்காதீர்!
 
வரிசை : 849
 
இடம் : யூனிட்டி பப்ளிக் ஸ்கூல், கோட்டுர்புரம்
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -27-10-2023 | 12-4-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதரர்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! பாதிக்கப்பட்ட நம்முடைய மூமினான சகோதரர்களுக்கு சிறந்த பிரதிபலனை அல்லாஹுத்தஆலா தந்தருள்வானாக! அநியாயம் செய்யப்பட்ட அந்த சமுதாயத்திற்கு அல்லாஹுத்தஆலா இம்மையிலும் மறுமையிலும் அவனுடைய அருளை தந்தருள்வானாக! 
 
முஸ்லிம்களின் நிலத்தை பறித்துக் கொண்டு அவர்களுக்கு இன்னல்களை துன்பங்களை தரக்கூடிய ஆக்கிரமிப்பாளர்களான யூதர்களை அந்த புனித பூமியிலிருந்து கேவலப்பட்டவர்களாக அல்லாஹுத்தஆலா வெளியேற்றுவானாக ஆமீன்!
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய மார்க்கம் அந்த தீனுல் இஸ்லாமை பற்றி அல்லாஹ் சொல்கிறான்
 
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ذَلِكُمْ فِسْقٌ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
 
(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக (சிலைகள், இறைநேசர்கள், போன்றவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு) அவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்று மீதமிருப்பது ஆகியவை உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, அடையாள சின்னம், சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளால் (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு) தடுக்கப்பட்டுவிட்டன. இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். 
 
ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் (அனுமதிக்கப்பட்ட உணவின்றி) நிர்ப்பந்தத்திற்கு ஆளானால் (மேல் விலக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது. ஏனெனில்), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 3)
 
இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களது மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த பூமியிலிருந்து அவர்கள் கைப்பற்றப்பட்டார்கள் அவர்கள் உயிர் கைப்பற்றப்பட்டார்கள்.
 
இந்த மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டதற்கு பிறகு, அல்லாஹுவை எப்படி வணங்க வேண்டும், நம்முடைய எல்லா வகையான வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு எந்த முறையில் செய்ய வேண்டும், எது வணக்க வழிபாடு, நம்முடைய கொடுக்கல் வாங்கலில் எது ஹலால், ஹராம், நம்முடைய திருமணம் இப்படியாக ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கைக்கு தேவையான அத்தனை பகுதிகளையும் தெளிவாக விவரித்து விட்டு தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உலகத்தில் இருந்து அவர்கள் உயிர் கைப்பற்றப்பட்டார்கள்.
 
அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய, நமக்கு சொர்க்கத்தை தேடி தரக்கூடிய எந்த ஒரு அமலையும் நமக்கு ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தராமல் விடவில்லை. அல்லாஹ்வை வணங்கி அவனுடைய அன்பை, அவருடைய பொருத்தத்தை, அவனுடைய மன்னிப்பை நாம் பெற வேண்டும் என்றால்!
 
சகோதரர்களே! அதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றி இபாதத் செய்வது. அவர்கள் கற்றுக் தந்ததைக் கொண்டு மட்டும் அல்லாஹ்வை வணங்குவது அல்லாஹுத்தஆலா சூரா ஆல இம்ரான் உடைய 31வது வசனத்திலே குறிப்பிடுகிறான்
 
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’(அல்குர்ஆன் 3 : 31)
 
நபியே நீங்கள் உங்களுடைய உம்மத்திற்கு சொல்லுங்கள் உம்மத்தே! எனது சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் அதாவது உங்களது வணக்க வழிபாடுகளை கொண்டு அல்லாஹ்வுடைய அன்பை, அல்லாஹ்வுடைய முஹபத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்!
 
فَاتَّبِعُوْنِىْ என்னை பின்பற்றுங்கள் அதாவது என்னை பின்பற்றி இபாதத் செய்யுங்கள் நான் காட்டித் தருகிற இபாதத்தை செய்யுங்கள் நான் வழிகாட்டிய இபாதத்தை செய்யுங்கள் நான் சொல்லால், செயலால், அங்கீகாரத்தால் உங்களுக்கு ஷரியத்தாக ஆக்கி கொடுத்த அதை நீங்கள் செய்யுங்கள், அதை கொண்டு அல்லாஹ்வுடைய மஹப்பத்தை தேடுங்கள்.
 
يُحْبِبْكُمُ اللّٰهُ அல்லாஹ் உங்களுக்கு தன்னுடைய முஹபத்தை கொடுப்பான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ உங்களுடைய பாவங்களை எல்லாம் அல்லாஹ் மன்னித்து விடுவான் وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ அல்லாஹ் மகாம மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக, இருக்கிறான் தொடர்ந்து அல்லாஹ் சொல்கிறான்:
 
قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
 
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விற்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மீது அன்பு வைக்கமாட்டான்.’’(அல்குர்ஆன் 3 : 32)
 
நபியே! மேலும் உங்களது உம்மத்துக்கு சொல்லுங்கள்! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்படியுங்கள், அல்லாஹ்வுடைய கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுடைய கட்டளைக்கு ஏற்ப செய்யுங்கள்.
 
وَالرَّسُوْل ரசூலுக்கு கீழ்படியுங்கள் ரசூல் உங்களுக்கு எப்படி வழி காட்டினாரோ அவரை பின்பற்றி இபாதத்து செய்யுங்கள் அவரை பின்பற்றி உங்களது வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள். ஆகவே, 
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இந்த மார்க்கம் நிறைவு படுத்தப்பட்டதற்கு பிறகு அல்லாஹ் உடைய தூதரால் அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டிய இபாதத்துகளும் அந்த இபாதத்துகளை எப்பொழுது எந்த இடத்தில் எப்படி செய்ய வேண்டும் என்பதும்,
 
நமக்கு தெளிவாக உறுதியான ஆதாரங்களில் தெளிவுபடுத்தப்பட்டதற்கு பிறகு, யாருக்கும் அனுமதியில்லை தன்னுடைய விருப்பத்தின்படி அல்லாஹுவை வணங்குவதற்கு யாருக்கும் அனுமதியில்லை அவர் விரும்பியதை இந்த மார்க்கத்தில் நுழைப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை.
 
அவருக்கு பிடித்ததை அவர் இபாதத்தாக கருதுவதை தானும் செய்து மக்களுக்கு கற்றுத் தருவதற்கு அது ஒருபோதும் இபாதத் ஆகாது அதனுடைய தோற்றம் இபாதத்தாக இருக்கலாம் ஆனால், அது அல்லாஹ்விடத்திலே மிகப்பெரிய பாவமாக இருக்கும். அன்பு சகோதரர்களே! சூரத்து ஷூறாவுடைய 21 ஆவது வசனத்திலே அல்லாஹ் கேட்கின்றான்:
 
اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ اللّٰهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
 
(அல்லாஹ்வின்) மார்க்கத்தில் அல்லாஹ் எதை கட்டளை இடவில்லையோ அதை இவர்களுக்கு சட்டமாக (-மார்க்கமாக) ஆக்கித்தருகின்ற தெய்வங்களும் இவர்களுக்கு உண்டா? (இவர்களுக்கு தண்டனை மறுமையில்தான் என்ற) தீர்ப்பின் வாக்கு மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 42 : 21)
 
அல்லாஹ் கேட்கிறான் என்ன இந்த மக்களுக்கு அல்லாஹ்வுக்கு சமமான இணை தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்களா அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ் அனுமதிக்காததை இவர்களுக்கு மார்க்கமாக கற்றுக் கொடுப்பதற்கு.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்:
 
قال الإمام مالك: من ابتدع في الإسلام بدعة يراها حسنة فقد زعم أن محمداً صلى الله عليه وآله وسلم خان الرسالة
 
இன்று மக்கள் பித்அத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் ஸலவாத்து தானே ஓதுகின்றோம் திக்ரை தானே கூட்டமாக உட்கார்ந்து ஓதுகிறோம் நாங்கள் நோன்பு தானே நோற்கிறோம் நாங்கள் இரவிலே தொழுகை தானே செய்கிறோம் என்று மக்கள் அனாச்சாரங்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலும் பித்அத் என்பது பெரும் பாவங்களை விட கொடியது அல்லாஹ்விடத்தில் கோபத்தாலும் சாபத்தாலும் பித்அத்துகள், அனாச்சாரங்கள் மிகவும் கடுமையானது இஸ்லாமிய மார்க்கத்தில்.
 
ஷிர்க் என்ற இணைவைத்தல் குஃப்ரு என்ற இறை நிராகரிப்புக்குப் பிறகு மற்ற எல்லா பெரும் பாவங்களை விட, ஜினாவை விட, திருட்டை விட, கொலை, கொள்ளை விட பாவத்தால் கடுமையான ஒன்றுதான் பித்அத் அனாச்சாரம் என்பது அது பார்ப்பதற்கு தொழுகையாக இருக்கும், பார்ப்பதற்கு நோன்பாக இருக்கும், பார்ப்பதற்கு உம்ராவாக கூட இருக்கும், பார்ப்பதற்கு திக்ர் மஜ்லிஸ் ஆக இருக்கும்.
 
ஆனால், அல்லாஹ்விடத்தில் கோபத்தால் பயங்கரமானது ஏனென்றால் அல்லாஹுத்தஆலா யார் இந்த மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாததை நுழைக்கிறார்களோ அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் நீங்கள் எனக்கு அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டீர்களா எனக்கு சமமாக அவர்களை ஆக்கிக் கொண்டீர்களா!
 
இந்த தீன் என்னுடைய தீன் நான் உங்களுக்கு ஒரு இபாதத்தை கற்றுத் தருவேன் என்னுடைய அனுமதியோடு என்னுடைய தூதர் உங்களுக்கு இபாதத் கற்றுத் தருவார் அதற்குப் பிறகு, மூன்றாவது ஆக ஒருவரும் உங்களுக்கு இபாதத்தை வணக்க வழிபாடுகளை செய்து காண்பிப்பார் வணக்க வழிபாடு உங்களுக்கு நடைமுறைப்படுத்துவார் என்றால் அவரை எனக்கு சமமாக இந்த மார்க்கத்தில் நீங்கள் ஆக்கி விட்டீர்களா என்று அல்லாஹுத்தஆலா கேட்கிறான்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த பித்அத் பார்ப்பதற்கு இபாதத்தாக இருக்கும் ஆனால், அது இபாதத் அல்ல ஏன் இபாதத் என்பது என்ன எதை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்களோ, எதை நமக்கு வழிகாட்டினார்களோ அதுதான் இபாதத் அந்த இபாதத்தை எப்படி செய்ய வேண்டும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன முறையிலேயே செய்ய வேண்டும்.
 
அவர்கள் காட்டித் தந்த இடத்தில் செய்ய வேண்டும், அவர்கள் காட்டித் தந்த நேரத்தில் செய்ய வேண்டும் பொதுவான இபாதத்துகள் என்றால் எப்படி நபியவர்கள் பொதுவாக விட்டு விட்டார்களோ போர் துவாக அந்த இபாதத்தை நாமும் விட்டுவிட வேண்டும், செய்து விட வேண்டும் அதற்கென்று நாம் ஒரு உருவத்தை, நாம் ஒரு வழிமுறையை, நாம் ஒரு தோற்றத்தை, நாம் ஒரு தன்மையை கொடுக்கக் கூடாது.
 
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் அவர்களுக்கு பின்னால் வந்த தாபியீன்கள் எப்போதும் மக்களுக்கு பித்ஹத்தை குறித்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள் மக்களுக்கு இந்த பித்அத்தினுடைய கடுமையை உணர்த்திக் கொண்டே இருந்தார்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்:
 
قال عبد الله بن مسعود رضي الله عنه: اتبعوا ولا تبتدعوا؛ فقد كفيتم
 
நீங்கள் இந்த மார்க்கத்தில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுங்கள் அவர்கள் செய்ததை செய்யுங்கள் நீங்கள் நூதனமாக புதிதாக நீங்கள் இபாதத்துகளை உருவாக்காதீர்கள்.
 
அன்பு சகோதரர்களே! உங்களுக்கு குழப்பமாக இருக்கின்றதா எது பித்அத்தாக இருக்கும் எது சுன்னாவாக இருக்கும் என்று குலம்புகிறீர்களா  உங்களுக்கு சந்தேகமாக இருக்கின்றதா எப்படி அடையாளம் காண்பது என்பதாக சொல்கிறார்கள் பாருங்கள் எவ்வளவு அழகான ஒரு விளக்க உரையை ஒரு உரையை நமக்கு தருகிறார்கள்:
 
وعن حذيفة رضي الله عنه قال: كل عبادة لا يتعبدها أصحاب محمد فلا تتعبدوها؛ فإن الأول لم يدع للآخر مقالًا، فاتقوا الله يا معشر القراء، وخذوا طريق من كان قبلكم
 
எந்த ஒரு வணக்கத்தை ரசூலுல்லாஹ் உடைய தோழர்கள் செய்யவில்லையோ அந்த வணக்கத்தை நீங்கள் செய்யாதீர்கள் நீங்கள் ஒரு வணக்கத்தை செய்ய ஆசைப்படுகிறீர்கள் மீலாது கொண்டாடலாமா மௌலது கொண்டாடலாமா சீறா மஜ்லிஸ் நடத்தலாமா திக்குரு மஜ்லிஸ் நடத்தலாமா கூட்டு திக்குரு செய்யலாமா இருட்டு திக்குரு செய்யலாமா இப்படியாக ஒரு நீண்ட பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
 
மக்கள் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை சடங்குகளால் வாழ்க்கையை நிரப்பி வைத்திருக்கிறார்கள் நிக்காஹ் என்றால் சடங்குகள் மவுத் என்றால் அங்கேயும் சடங்குகள் இப்படியாக எப்படி யூதர்கள் சிலை வணங்கிகள் தங்களுடைய மதத்தை சடங்குகளால் நிரப்பி வைத்திருக்கிறார்களோ அதுபோன்று இந்த இஸ்லாமிய சமுதாயமும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் பரிசுத்தமாக கொடுத்த இந்த  மார்க்கத்தில் திருப்தி அடையாமல் பித்அத்தை கொண்டு இந்த மார்க்கத்தை நிரப்பி விட்டார்கள்.
 
அல்லாஹ்வுடைய உண்மையான வணக்க வழிபாட்டிலே ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்து காட்டிய சுன்னாவிலே இவர்களின் மனசு திருப்தி படுவது கிடையாது, அந்த இபாதத்திலே நாட்டம் கொள்வது கிடையாது,
 
அதை ஒரு சாதாரணமாக அற்பமாக பார்க்கிறார்கள் ஆனால் இவர்கள் உருவாக்கிய பித்அத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அதற்கு, அந்த பித்அத்திலே உணர்ச்சி பரவசப்படுகிறார்கள் அந்த சடங்குகளை அப்படி ஒரு மிக விமர்சையாக அதற்காக என்னென்னவெல்லாம் செலவுகள் எத்தனை முயற்சிகள் இப்படியாக இபாதத்துகளிலே அப்படி திளைத்து விட்டார்கள் இந்த சமுதாயம்.
 
கண்ணியத்திற்குரிய அவர்களே! ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் எந்த இபாதத்தை சஹாபாக்கள் செய்யவில்லையோ அதை நீங்கள் செய்யாதீர்கள் அது இபாதத் அல்ல அவ்வளவுதான் உங்களுக்கு என்ன குழப்பம் இருந்தாலும் இதை கொண்டு வாருங்கள்,
 
மௌலது ஓதலாமா ஓத கூடாதா உள்ளே செல்வதற்கு முன்னால் அபூபக்கர் ஓதினாரா உமர் ஓதினார் உஸ்மான் ஓதினாரா அலி ஓதினாரா ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மயஈன் ஓதவில்லையா அது இபாதத் அல்ல நீங்கள் செய்யக்கூடிய கூட்டு திக்ருகள் நீங்கள் செய்யக்கூடிய தரிக்கா எதுவாக இருந்தாலும் சரி நேராக நீங்கள் செல்லுங்கள்  الخلفاء راشدون யாரைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களோ!
 
فإنَّه مَن يَعِشْ منكم فسيَرَى اختِلافًا كثيرًا، فعليكم بسُنَّتي وسُنَّةِ الخُلَفاءِ الرَّاشِدينَ المَهْدِيِّينَ، عَضُّوا عليها بالنَّواجِذِ، وإيَّاكم ومُحدَثاتِ الأُمورِ؛ فإنَّ كُلَّ بِدعةٍ ضَلالةٌ
 
என்னுடைய வழிமுறையை பின்பற்றுங்கள் நேர்வழி காட்டப்பட்ட நேர்வழியிலே நடக்கக்கூடிய கலீபாக்களின் வழிமுறையை பின்பற்றுங்கள் கவ்வி பிடித்துக் கொள்ளுங்கள், உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள், அது மட்டுமா சகோதரர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள்,
 
அறிவிப்பாளர் : இர்பால் இப்னு ஸாரியா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2676
 
مَن أَحْدَثَ في أَمْرِنَا هذا ما ليسَ فِيهِ، فَهو رَدٌّ
 
யார் நம்முடைய மார்க்கத்திலே அதில் இல்லாததை கொண்டு வருவாரோ அது மறுக்கப்பட வேண்டிய ஒன்று,
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2697 
 
مَن عَمِلَ عَمَلًا ليسَ عليه أمْرُنا فَهو رَدٌّ.
 
நாம் கட்டளையிடாததை யார் செய்வார்களோ அது மறுக்கபட வேண்டிய ஒன்று.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1718
 
நமக்கு தெளிவான வழிகாட்டுதலை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்து விட்டார்கள் கண்ணியத்திற்குரிய இமாம்கள் இந்த பித்அத்தை குறித்து நமக்கு கடுமையாக எச்சரிக்கை செய்தார்கள் இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னார்கள்:
 
وقال الإمام الشافعي رضي الله عنه: لأن يلقى الله العبد بكل ذنب ما خلا الشرك خير له من أن يلقاه بشيء من الأهواء
 
ஒரு மனிதன் ஷிருக்கு இல்லாமல் ஒரு மனிதன் இணை வைத்தல் இல்லாமல் வேறு எந்த பெரும் பாவங்களோடு நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் வந்தாலும் அது பரவாயில்லை ஆனால், பித்அத்தோடு அவன் வந்து விடக்கூடாது அனாச்சாரத்தோடு அவன் வந்து விடக்கூடாது அது மிக பயங்கரமான ஒன்று,
 
அன்பு சகோதரர்களே! இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இந்த பித்ஹத்வாதிகளை பற்றி சொன்னார்கள் அதாவது இந்த சடங்கு சம்பிரதாயங்களை செய்து அதன் பக்கம் மக்களை அழைக்கக் கூடியவர்கள் அதை மார்க்கத்திலே புகுத்த கூடியவர்கள் மக்களுக்கு அதை தூண்டக்கூடியவர்கள் இவர்கள்தான் اهل البدعه اهل الاهواء என்று அறியக் கூடியவர்கள்.
 
இமாம் மாலிக் சொன்னார்கள்: 
 
قال مالك: بئس القوم هؤلاء أهل الأهواء لا يسلم عليهم
 
இவர்கள் மிகவும் கெட்டவர்கள் அவர்களுக்கு சலாம் சொல்லக்கூடாது அவர்களை விட்டு விலகி இருப்பது இது எனக்கு மிக விருப்பமானது امير المؤمنين في الحديث ஹதீஸினுடைய அணியில் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் சொன்னார்கள்:
 
قال لي ابن المبارك: يكون مجلسك مع المساكين وإياك أن تجلس مع صاحب بدعة 
 
ஒரு பித்அத்வாதியோடு யார் மக்களை பித்அத்தின் பக்கம்  அழைக்கிறானோ அவனோடு நீ உட்காருவதை விட்டு உன்னை நான் எச்சரிக்கை செய்கிறேன் கண்ணியத்திற்குரிய அவர்களே இமாம் அவ்சாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னார்கள்:
 
الأوزاعي قال: ما ابتدع رجل بدعة إلا سلب الورع
 
யார் எந்த சமுதாயம் எந்த மனிதன் பித்அத்துக்களை செய்வார்களோ, அவர்களிடத்தில் இருந்து பேணுதல் பிடுங்கப்பட்டுவிடும் அவர்கள் ஹலால் ஹராமை பார்க்க மாட்டார்கள் ஒழுக்கம் அவர்களிடத்திலே இருக்காது எவ்வளவு அழகான உண்மையை அவர்கள் உணர்ந்து சொல்கிறார்கள் பாருங்கள் யார் சுன்னாவின் மீது திருப்தி கொள்ளாமல் பித்அத்திலே செல்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள்,
 
எப்படி யூத கிறிஸ்தவர்களை பற்றி அவர்களுடைய பாதிரிகளை பற்றி அல்லாஹ் சொன்னானோ அவர்களில் அதிகமானவர்கள் மக்களின் செல்வங்களை ஹராமிலே  விழுங்குவார்கள் என்று அதே செயலை தான் இந்த பித்அத்துக்களை பரப்பக்கூடியவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
ஆகவே, கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியதை நாம் கவனத்திலே வைக்க வேண்டும், சுன்னத்திலே திருப்தி அடைய வேண்டும், அதை பின்பற்ற வேண்டும், அதை கற்க வேண்டும், அதை பிற மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் ஒரு சுன்னாவை உறுதியாக அதை தெளிவாக பற்றி பிடிப்பது பல ஆயிரக்கணக்கான பித்அத்துகளிலே இன்று மனிதர்கள் கடும் முயற்சி எடுத்து செய்கிறார்களே அதைவிட அல்லாஹ்விடத்தில் சிறந்தது சொன்னார்கள்:
 
قال: الاقتصاد في السنة خير من الاجتهاد في البدعة
 
ஒரு பித்அத்திலே கடுமையாக முயற்சி எடுப்பதை விட இரவெல்லாம் உட்கார்ந்து கொண்டு இன்று மக்கள் தரிக்காவின் பெயரிலே திக்ருகள் செய்கிறார்களே, மண்டையை ஆட்டிக்கொண்டு குதித்துக் கொண்டு துள்ளிக் கொண்டு இப்படியாக என்னென்ன செய்கிறார்கள் சொல்கிறார்கள் ஒரு பித்அத்திலே கடுமையாக முயற்சி எடுத்து அதை செய்வதை விட ஒரு சுன்னாவை சாதாரணமாக அதை பின்பற்றுவது, எளிமையாக அதை செய்வது, நாடு நிலையாக அந்த சுன்னாவை செய்து செல்வது, அல்லாஹ்விடத்தில் மிக சிறந்தது.
 
ஆகவே, கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் நம்முடைய ஒவ்வொரு வணக்கமும் நம்முடைய ஒவ்வொரு இபாதத்தும் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டி தந்த வழிமுறையிலே இருக்கின்றதா என்று நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும் மார்க்கத்தை தெரிந்த அறிஞர்கள் இடத்திலே கேட்டு மார்க்கத்தை படித்துக் கொள்ள வேண்டும்.
 
எந்த வகையிலும் நம்முடைய தொழுகையில், நம்முடைய நோன்பில், நம்முடைய ஹஜ், வணக்க வழிபாடுகளில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஒரு பித்அஃ கழந்து விடக்கூடாது அப்படி ஒன்றை பித்அத் என்று தெரிந்து கொள்வோமேயானால் உடனே அதை விட்டு விலகக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அல்லாஹ் உடைய வேதத்தை பற்றி பிடிப்பதற்கும் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பற்றி பிடிப்பதற்கும் பித்அத்தை விட்டு விலகி வாழ்வதற்கும் அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/