சிரமங்களை சகிப்போம்! | Tamil Bayan - 843
தலைப்பு : சிரமங்களை சகிப்போம்!
ஜும்ஆ பயான் தலைப்பு : சிரமங்களை சகிப்போம்!
வரிசை : 843
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 10- 11- 2023 | 29-10-1444
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும், எனக்கும் தக்வாவை நினைவூட்டியவனாக, தக்வாவை உபதேசம் செய்தவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹுத்தஆலா பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு சிறந்த உதவியை, உதவியாளர்களை ஏற்படுத்தி தருவானாக! ஆக்கிரமிப்பு செய்த யூதர்களுக்கு தகுந்த பாடத்தை, படிப்பினையை ஆது சமூது கூட்டத்தார்க்கு கொடுத்த தண்டனையை அல்லாஹுத்தஆலா தருவானாக ஆமீன்!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இந்த உலக வாழ்க்கையில் சோதனைகள் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் சிரமங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை அல்லாஹு சுபஹானஹூதஆலா கண்டிப்பாக சோதிப்பான், நமக்கு முன் சென்றவர்களையும் சோதித்து இருக்கிறான்.
உண்மையான மூமின்கள் யார்? பொய்யர்கள் யார்? நயவஞ்சகர்கள் யார்? ஈமானிலே உறுதி உள்ளவர்கள் யார்? ஈமானிலே பொறுமையாளர்கள் யார்? அல்லாஹ்வை அவனுடைய விதியை சடைந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டக் கூடியவர்கள் யார்? இப்படி அல்லாஹுத்தஆலா தனது அடியார்களை பிரித்து அல்லாஹ்வை திருப்தி கொண்ட, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட உண்மையான மூமின்களை அவன் பரிசுத்தப்படுத்தி தேர்ந்தெடுக்க விரும்புகிறான், அதற்காக கண்டிப்பாக சோதனை என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
அல்லாஹுத்தஆலா சூரா ஆல இம்ரான் உடைய 141-வது வசனத்திலே சொல்கிறான் எந்த நேரத்திலே இந்த வசனத்தை இறக்குகிறான் இன்று நம்முடைய பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு என்ன ஒரு இக்கட்டான நிலை, ஒரு ஆபத்தான நிலை அவர்கள் அடியோடு இனமாக அழிக்கப்படுவார்கள் என்ற, இந்த சூழ்நிலையை கொண்டுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மதீனா வாழ்க்கை இருந்தது.
உஹது போரும், அஹ்ஸாப் யுத்தமும் இதற்கு சிறந்த முன்மாதிரி முன் உதாரணங்கள் முஸ்லிம்களை அடியோடு வேரோடு அழித்துவிட வேண்டும் என்பதற்காக குஃபார்கள் ஒன்று திரண்டு படையெடுத்து வந்தார்கள். உஹது போரிலே 70-க்கும் மேற்பட்ட உற்ற தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டவர்கள் அவர்கள் இறந்ததற்கு பிறகு, உயிர் பிரிந்ததற்குப் பிறகு, அவர்களுடைய உறுப்புகள் அறுக்கப்பட்டன, துண்டிக்கப்பட்டன, அவர்களுடைய நெஞ்சு பிளக்கப்பட்டது, காது மூக்கு என்று அறுக்கப்பட்டார்கள்.
அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ் வசனத்தை இறக்கினான், நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்கள் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்றா,
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ
பொறுமையாளர்களை அறிவதுடன், உங்களில் (‘ஜிஹாது’) போர் புரிந்தவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல், நீங்கள் சொர்க்கத்தில் பிரவேசிக்க நினைத்தீர்களா? (அல்குர்ஆன் 3 : 142)
உங்களிலே அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்கள் பிறகு, அந்த போரிலே உறுதியாக இருப்பவர்களை அல்லாஹ் பிரித்தெரியாதவரை நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? பிறகு, அல்லாஹுத்தஆலா சொல்கிறான் நான் ஏன் சோதிக்கிறேன் தெரியுமா!
وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ
இன்னும், நம்பிக்கையாளர்களை சோதி(த்து சுத்த)ப்ப(டுத்துவ)தற்காகவும், நிராகரிப்பாளர்களை அழிப்பதற்காகவும் (அல்லாஹ் காலங்களை சுழற்றுகின்றான்). (அல்குர்ஆன் 3 : 141)
நம்பிக்கை கொண்டவர்களை நான் பரிசுத்தப்படுத்த விரும்புகிறேன் அவர்களை கலப்பற்ற முறையிலே தூய்மைப்படுத்த விரும்புகிறேன்
وَيَمْحَقَ الْكٰفِرِيْنَ
காஃபிர்களை அல்லாஹுத்தஆலா அழிக்க விரும்புகிறான் அன்பு சகோதரர்களே! இந்த சோதனைக்கு பின்னால் கண்டிப்பாக அல்லாஹ்வுடைய உதவி, கண்டிப்பாக வெற்றி இருக்கிறது, அந்த நம்பிக்கை முஃமினுக்கு வர வேண்டும், அந்த நம்பிக்கை இருப்பவன்தான் முஃமின் அல்லாஹுத்தஆலா கேட்கிறான் சூரா அன் கபூத்துடைய ஆரம்ப வசனங்களை படித்து பாருங்கள்.
الم أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
அலிஃப் லாம் மீம். “நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று அவர்கள் கூறுவதால் அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று மக்கள் நினைத்துக் கொண்டனரா? (அல்குர்ஆன் 29 : 1, 2)
மூமின்கள் எண்ணிக் கொண்டார்களா அல்லது மக்கள் எண்ணி கொண்டார்களா? தாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம் என்று சொல்லிவிட்டால் அவர்கள் அப்படியே விட்டுவிடப்படுவார்கள் சோதிக்கப்படாமல் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா?
وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ
இவர்களுக்கு முன் உள்ளவர்களையும் திட்டமாக நாம் சோதித்து இருக்கிறோம். அல்லாஹ் சொல்கிறான்:
فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ
திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை சோதித்தோம். ஆக, அல்லாஹ் நிச்சயமாக உண்மையாளர்களையும் அறிவான். இன்னும், நிச்சயமாக பொய்யர்களையும் அவன் அறிவான். (அல்குர்ஆன் 29 : 3)
அல்லாஹுத்தஆலா பிரித்தெறிய விரும்புகிறான் உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதாக, உண்மையாக அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்கள் யார் அல்லது, உலக ஆதாயத்திற்காக ஈமான் கொண்டவர்கள் யார் என்று அல்லாஹ் பிரித்தெறிய விரும்புகிறான்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலகம் எப்படி என்றால் கவனியுங்கள்:
طُبعتْ على كدر وأنت تريدها ****** صفواً من الأقذار والأكدار
ومُكلّفُ الأيام ضد طباعها ******* مُتطلبٌ في الماء جذوة نار
சொல்கிறார்கள்: இந்த உலகம் சோதனையின் மீதுதான் அமைக்கப்பட்டிருக்கிறது சோதனையே இல்லாமல் எனக்கு உலக வாழ்க்கை வேண்டுமென்றால் இதனுடைய இயற்கையை மாற்ற நினைப்பவனை போல, தண்ணீரிலிருந்து நெருப்பை எதிர்பார்ப்பவனை போல, இந்த துன்யா இத்தகைய சோதனைகளுக்கு உரிய இடமாக, உரிய காலமாக இருக்கிறது.
قلتُ يا رسولَ اللهِ أيُّ النَّاسِ أشدُّ بلاءً قالَ الأَنبياءُ ثمَّ الأَمثلُ فالأَمثلُ ؛ يُبتلَى الرَّجلُ علَى حسَبِ دينِهِ ، فإن كانَ في دينِهِ صلبًا اشتدَّ بلاؤُهُ ، وإن كانَ في دينِهِ رقَّةٌ ابتليَ علَى قدرِ دينِهِ ، فما يبرحُ البلاءُ بالعبدِ حتَّى يترُكَهُ يمشي علَى الأرضِ وما علَيهِ خطيئةٌ.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது அல்லாஹ்வின் தூதரே! அதிகமாக சோதனைகளுக்கு ஆளாக கூடியவர்கள் யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் நபிமார்கள் பிறகு கேட்கப்பட்டது அல்லாஹ்வின் தூதரே அடுத்து யார் என்பதாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அதற்கு அடுத்து அவர்களைப் போன்றவர்கள் அவர்களை போன்றவர்கள்.
அறிவிப்பாளர் : ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2398
கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு மனிதனுடைய மார்க்கப்பற்றிற்கு ஏற்ப அவன் கண்டிப்பாக சோதிக்கப்படுவான் ஒரு மனிதனுடைய மார்க்கப்பற்று ஏற்ப அவன் சோதிக்கப்படுவான், அவனுடைய மார்க்கப்பற்று உறுதியாக இருந்தால் அவருடைய சோதனையும் அதிகமாக தான் இருக்கும், அவர்களுடைய மார்க்கப்பற்று பலவீனமாக இருந்தால் அந்த பலவீனத்திற்கு ஏற்ப அவன் சோதிக்கப்படுவான் அடியானுக்கு அந்த சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், இறுதியாக அவன் பூமியிலே நடக்கும் போது அவன் மீது எந்த பாவமும் இல்லாத அளவிற்கு அந்த சோதனையானது அவனை சுத்தப்படுத்தி விடுகிறது.
அறிவிப்பாளர் : ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2398
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழகான நபிமொழி சகோதரர்களே! சோதனைக்கு பின்னாடி இருக்கக்கூடிய தத்துவங்களை, அந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அல்லாஹுத்தஆலா அவனுடைய அடியார்களாகிய நம்மை சிரமப்படுத்தி, வேதனை படுத்தி, தண்டித்து அவன் சந்தோஷப்படுவதில்லை, சோதனைகளுக்கு பின்னால் அல்லாஹ்வுடைய தத்துவங்கள், ஞானங்கள், ஹிக்குமத்துகள் ஏராளம் இருக்கின்றன.
நபிமார்கள் சோதிக்கப்படவில்லையா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் யாரை அல்லாஹுத்தஆலா தன்னுடைய நண்பராக தேர்ந்தெடுத்தானோ அவன் நெருப்பு குண்டத்திலே தூக்கி எறியப்பட்டார் அவருடைய ஊரிலிருந்து விரட்டப்பட்டார், நாடோடியாக அவர் ஒவ்வொரு இடமாக தேடிச் சென்றார், அவர்களுடைய குழந்தையை அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் அவர்களை சோதித்தான், அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கீழ் படிந்தார்கள், அந்த குழந்தையை அறுப்பதற்கு அவர்கள் தயாரானார்கள்.
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் மீன் வயிற்றிலே அவர்கள் சோதிக்கப்பட்டார்கள், கடலிலே தூக்கி எறியப்பட்டார்கள், மூன்று இருள்கள் கடலின் இருள், இரவின் இருள், மீன் வயிற்றின் இருள் என்பதாக இருளுக்குள் இருளிலே அவர்கள் சோதிக்கப்பட்டார்கள்.
யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதிக்கப்பட்டார்கள் யார் மூலமாக தன்னுடைய சொந்த சகோதரர்கள் மூலமாக தந்தை இவர் மீது பிரியமாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக தங்களுடைய அந்த உற்ற சகோதரனை கொல்வதற்காக அவர்கள் முடிவெடுத்தார்கள், கிணற்றிலே தூக்கி எறிந்தார்கள் பிறகு, கிணற்றிலிருந்து அவர்கள் வெளியே வந்தவுடன் அவரை அடிமை என்று, சொல்லி விற்றார்கள்,
பிறகு, அந்த மிஸ்ருடைய தெருக்களிலே மிஸ்ருடைய கடை தெருவிலே அவர் விற்கப்படுகிறார், எந்த வீட்டுக்கு செல்கிறாரோ சென்றாரோ அந்த வீட்டிலே அந்த மந்திரியின் உடைய மனைவியின் மூலமாக அவருக்கு சோதனை, சிறையிலே அடைக்கப்படுகின்றார், இப்படியாக சோதனைக்கு மேல் சோதனை அவர்கள் சந்தித்துக் கொண்டே இருந்தார்கள்.
நபிமார்கள் பலர் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்திற்காக, இந்த ஈமானுக்காக, இந்த இஸ்லாமுக்காக படுகொலையே செய்யப்பட்டு இருக்கிறார்கள், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்கள் சூனியக்காரர் என்று சொன்னார்கள், பைத்தியக்காரர் என்று சொன்னார்கள், பொய்யர் என்று சொன்னார்கள்.
بيْنَما رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قَائِمٌ يُصَلِّي عِنْدَ الكَعْبَةِ وجَمْعُ قُرَيْشٍ في مَجَالِسِهِمْ، إذْ قَالَ قَائِلٌ منهمْ: ألَا تَنْظُرُونَ إلى هذا المُرَائِي أيُّكُمْ يَقُومُ إلى جَزُورِ آلِ فُلَانٍ، فَيَعْمِدُ إلى فَرْثِهَا ودَمِهَا وسَلَاهَا، فَيَجِيءُ به، ثُمَّ يُمْهِلُهُ حتَّى إذَا سَجَدَ وضَعَهُ بيْنَ كَتِفَيْهِ، فَانْبَعَثَ أشْقَاهُمْ، فَلَمَّا سَجَدَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وضَعَهُ بيْنَ كَتِفَيْهِ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலே காபாவிலே அல்லாஹ்வை தொழுது கொண்டிருக்கும் போது ஒட்டகத்தின் குடலை கொண்டு வந்து அவர்கள் மீது போடுகின்றாகள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : பக்கம் நம்பர் 520 குறிப்பு 1
தாயிப் நகரத்திலே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உடலெல்லாம் ரத்த கரையாகும்படி தலையில் இருந்து கால் வரை ரத்தம் சொட்டும்படி கற்களால் அடிக்கப்படுகிறார்கள் விரட்டப்படுகிறார்கள், துரத்தப்படுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோழர்களை அழைத்துக்கொண்டு தாவாவுக்கு சென்றால் உணவும் இல்லை உணவு அளிப்பவரும் இல்லை அங்கே ஆடுகள் உண்ணக்கூடிய, சாப்பிடக்கூடிய இலைகளை சாப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில் மட்டுமல்ல, மதினாவிலும் பல முறை ரகசியமாக செய்யப்படுவதற்கு கொலை முயற்சி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நடந்திருக்கிறது.
உஹது போரிலே நபி அவர்களுடைய தலை உடைக்கப்படுகிறது, அவர்களுடைய தலையில் இருந்த அந்த இரும்பு கவசம் அதனுடைய ஆணி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தலையிலே பதிந்து விடுகிறது, ரத்தம் முகமெல்லாம் வழிந்து ஓடுகிறது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முன் பற்கள் நான்கு உடைக்கப்படுகிறது,
இதே உஹது போரிலே நபியவர்களுக்கு மிகப் பிரியமான தோழர், இன்னொரு பக்கம் தன்னுடைய தந்தையின் சகோதரர், இன்னொரு பக்கம் தன்னோடு பால் குடித்த பால் குடி சகோதரர், ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு வயதால் நெருக்கமானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
அவர்களுடைய நபியினுடைய தோழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், நபியை மூமின்களை வேரறுப்பதற்காக, உஹது போரிலே ஒன்று கூடினார்கள், அஹ்ஸாப் போரிலே ஒன்று கூடினார்கள், மதினாவில் சுற்றி இருந்த யூதர்கள் எல்லாம் செய்த ஒப்பந்தங்களை முறித்து நபியையும்,
நபியுடைய தோழர்களையும் அவர்களை வேறு அறுத்து விட வேண்டும் என்பதற்காக, இறை மறுப்பாளர்களுக்கு உதவி செய்கிறார்கள், வேதக்காரர்கள், அவர்களுடைய நபி மூஸாவை ஈமான் கொண்ட நம்மை அவர்கள் வேர் அறுக்க நினைக்கிறார்கள், யாரோடு? கைகோர்த்துக் கொண்டு முஷிரிக்குகளோடு கைகோர்த்துக்கொண்டு.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலே அவர்கள் சந்திக்காத சோதனையா அவர்களுடைய ஆண்மக்கள் நபியினுடைய வாழ்க்கையிலே நபி உயிராக இருக்கும் போதே இறந்து விடுகின்றார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய நான்கு பெண் மக்களிலே மூன்று பெண்மக்கள் நபி உயிராக இருக்கும் போதே இறந்து விடுகின்றார்கள், நபிக்கு மக்காவிலே உறுதி கொடுப்பவராக ஆறுதல் கொடுப்பவராக துணை நிற்பவராக இருந்த முதல் முஃமீனாகிய கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அதற்கு பிறகு, ஈமான் கொள்ளவில்லை என்றாலும் உன்னை ஆதரிப்பேன், உன்னை பாதுகாப்பேன் என்று கூறிக்கொண்டு, தனக்கு முழு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த தன்னுடைய சிறிய தந்தை தன்னுடைய சாச்சா அபுதாலிப் இருவரும் ஒரே ஆண்டிலே இறந்து விடுகின்றார்கள்,
ஆதரவற்றவர்களாக, பாதுகாப்பற்றவர்களாக நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த ஆண்டிலே துக்க ஆண்டு என்று வரலாற்றிலே அழைக்கப்படுகின்ற அளவுக்கு அவ்வளவு துக்கத்தை சந்தித்தார்கள். வாழ்நாளிலே அவர்கள் தங்களுடைய வயிற்றிலே பசியினால் கற்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்
இப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்திக்காத சிரமங்களையா, துன்பங்களையா, இன்னல்களையா, எதிரிகளின் அச்சுறுத்தல்களையா அவர்களுடைய தோழர்கள் சந்திக்காத துன்பங்களையா, அச்சுறுத்தல்கலையா, அன்பு சகோதரர்களே! இன்று நாம் சந்திக்கின்றோம் நமக்கு அழகிய முன்மாதிரி அழகிய படிப்பினை அவர்களிலே இருக்கிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வதை கவனியுங்கள்” சொல்கிறார்கள்: முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக்கொண்ட ஏழு மக்கள் நாங்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு, அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, அம்மார் ரலியல்லாஹு அன்ஹு, அம்மாருடைய தாயார் சுமையா பிறகு, பிலால் ரலியல்லாஹு அன்ஹு பிறகு, சுஹைப் அர்ரூமி பிறகு, அல்மிக்குதாத் இப்படி ஏழு பேர் மட்டும் தான் நாங்கள் மூமின்களாக, முஸ்லிம்களாக அப்போது இருந்தோம்.
அப்துல்லா இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ, அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கோ அவர்களுடைய குடும்பத்தார்கள், அவர்களுடைய கோத்திரத்தார்கள் பாதுகாப்பாக இருந்தார்கள், அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால், மீதம் இருக்கின்ற ஐந்து பேராகிய நாங்கள் இருக்கிறோமே எங்களை எதிரிகள் காப்பீர்கள் ஒரு வழி செய்து விட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்:
كانَ أوَّلَ مَن أظهرَ إسلامَه سبعةٌ رسولُ اللَّهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ وأبو بَكرٍ وعمَّارٌ وأمُّهُ سميَّةُ وصُهيبٌ وبلالٌ والمقدادُ فأمَّا رسولُ اللَّهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فمنعَه اللَّهُ بعمِّهِ أبي طالبٍ وأمَّا أبو بَكرٍ فمنعَه اللَّهُ بقومِه وأمَّا سائرُهم فأخذَهمُ المشرِكونَ وألبسوهم أدْرَاعَ الحديدِ وصَهروهم في الشَّمسِ فما منهم من أحدٍ إلَّا وقد واتاهم علَى ما أرادوا إلَّا بلالًا فإنَّهُ هانت عليهِ نفسُه في اللَّهِ وَهانَ علَى قومِه فأخذوهُ فأعطوهُ الولدانَ فجعلوا يطوفونَ بِه في شِعابِ مَكةَ وَهوَ يقولُ أحدٌ أحدٌ
அல்லாஹு அக்பர்” இரும்பு ஆடைகளை எங்களுக்கு அணிவிக்கப்படும், எங்களை இழுத்துச் செல்வார்கள், பாலைவனக் கொடிய வெயிலிலே எங்களை படுக்க வைத்து அடிப்பார்கள், இறுதிவரை வெயில் தாழும் வரை எங்களை அடித்துக் கொண்டே இருப்பார்கள், எங்களிலே பலர் நிர்பந்தத்தால் இந்த வலி தாங்க முடியாமல் அவர்கள் எங்களிடம் என்ன விரும்பினார்களோ அதை நாங்கள் சொல்லிவிட்டோம்,
ஆனால், பிலாலைத் தவிர இந்த பிலால் அவ்வளவு துன்பத்திற்கு இடையிலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு நேரடி அறிவிப்பு சொல்கிறார்கள்:
فإنَّهُ هانت عليهِ نفسُه في اللَّهِ
பிலாலுக்கு அவருடைய நப்ஸ் அல்லாஹ்வின் விஷயத்தில் ரொம்ப அற்புதமாகிவிட்டது இந்த நஃப்ஸை அவர் பெரிது படுத்தவில்லை அடித்தார்கள், சிறைபிடித்து வைத்தார்கள், கொடிய வேதனை செய்தார்கள் அவ்வளவு அந்த இன்னல்களுக்கு இடையிலும் அவர் ஒரே வார்த்தை அல்லாஹ் ஒருவன் அல்லாஹ் ஒருவன் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 122
அன்பு சகோதரர்களே! இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது! சோதிக்கப்படுவது சிறந்ததா? அல்லது, நாம் இந்த பூமியிலே வசதி ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது சிறந்ததா? என்று இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்: சோதிக்கப்படாத வரை ஒரு சமுதாயத்திற்கு இந்த பூமியிலே ஆதிக்கம் ஆட்சி கொடுக்கக் கூடாது என்று எவ்வளவு அழகான வார்த்தையை சொன்னார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்: அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அல்குர்ஆனிலே 90 இடங்களிலே பொறுமையை பற்றி சொல்லுகிறான், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பது அது ஸப்ர், சோதனைகள், சிரமங்கள் எதிரிகளால் ஏற்படக்கூடிய இன்னல்களை, ஆபத்துகளை தாங்கி சகித்துக் கொண்டு மார்க்கத்தில் உறுதியாக இருப்பது,
மார்க்கத்தை பாதுகாப்பதிலே உறுதியாக இருப்பது, அல்லாஹ்வுடைய விதியின் அடிப்படையிலே ஏற்படக்கூடிய மாற்றங்கள் அதிலே உறுதியாக ஸப்றாக இருந்து, உண்மையான மூமினாக இருப்பது, இந்த பொறுமையை பற்றி அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே 90 இடங்களிலே சொல்கிறான்.
சுலைமான் காசிம் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:
قال سليمان بن القاسم رحمه الله: " كل عمل يُعرف ثوابه إلا الصبر
இந்த உலகத்தில் அல்லாஹுத்தஆலா கூறியிருக்கக்கூடிய எல்லா நல்ல அமல்களுக்குரிய நற்கூலி அது அறியப்பட்டதாக இருக்கிறது, தெரிந்ததாக இருக்கிறது ஆனால், பொறுமையைத் தவிர பொறுமைக்குரிய கூலியை பற்றி மட்டும் அல்லாஹ் சொல்கிறான்:
قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
(நபியே நான் என் அடியார்களுக்கு கட்டளையிடுவதாக) கூறுவீராக! “நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மை (-சொர்க்கம்) உண்டு. இன்னும் அல்லாஹ்வின் பூமி விசாலமானதாகும். பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி (மறுமையில்) வழங்கப்படுவதெல்லாம் கணக்கின்றிதான். (முடிவுறாத நற்பாக்கியங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.)” (அல்குர்ஆன் 39 : 10)
பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி கணக்கில்லாமல் கொடுக்கப்படும், மனிதனுடைய கணக்குக்கு அது வராது எந்த கணக்கும் இல்லாமல் அவர்களுக்கு அளவில்லாமல் கூழி கொடுக்கப்படுவார்கள்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா சொல்கிறான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
நம்பிக்கையாளர்களே! பொறுமை இன்னும் தொழுகையின் மூலம் உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2 : 153)
அல்லாஹுதஆலா பொறுமையாளர்களோடு இருக்கிறான்.
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவு இழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 3 : 146)
பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான் சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு செல்லும்போது இந்த பொறுமையாளர்களை வரவேற்பதற்காகவே விசேஷமான வானவர்கள் இருப்பார்கள் சொல்வார்கள்:
سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! ஆக, மறுமையின் அழகிய முடிவு மிகச் சிறந்ததாகும். (அல்குர்ஆன் 13 : 24)
உங்களுக்கு சலாம் உண்டாகட்டும்! உங்களுடைய பொறுமையின் காரணமாக உங்களுடைய மறுமை வீட்டுடைய அந்த சொர்க்கத்தின் அழகிய முடிவு சிறந்த முடிவு.
- ما يُصِيبُ المُسْلِمَ، مِن نَصَبٍ ولَا وصَبٍ، ولَا هَمٍّ ولَا حُزْنٍ ولَا أذًى ولَا غَمٍّ، حتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إلَّا كَفَّرَ اللَّهُ بهَا مِن خَطَايَاهُ.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் ஒரு முஃமினுக்கு ஏற்படக்கூடிய வலிகள், வேதனைகள், கவலைகள், துக்கங்கள், அவனை மக்கள் அவரது உள்ளத்தை காயப்படுத்தும் படியாக பேசக்கூடிய பேச்சுகள், அவனுக்கு ஏற்படக்கூடிய மனசஞ்சலகள் இது எது ஒரு மூமினுக்கு ஏற்பட்டாலும் சரி ஏன் அவனுடைய காலில் ஒரு முள் தைத்தாலும் கூட அல்லாஹுத்தஆலா அவனுடைய பாவங்களை இவற்றுக்கு பகரமாக போக்கிக் கொண்டே இருக்கிறான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 5642, 2573
அன்பு சகோதரர்களே! இந்த சோதனையில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற கூலியை தவிர வேறு கூலி இல்லை என்றாலும் இதுவே எவ்வளவு மகத்தான கூலி என்பதை யோசித்துப் பாருங்கள்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுத்தஆலா அடியார்களை சோதிப்பான் பொறுமையாக இருப்பதும் ஒரு இபாதத் என்று புரிந்து கொள்ள வேண்டும். நம்மை அழித்து நம்மை நாசமாக்குவதற்காக அல்லாஹ் நம்மை சோதிக்கவில்லை, நம்முடைய ஈமானை உயர்த்துவதற்காக நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக, மறுமையிலே நம்முடைய அந்தஸ்துகளை உயர்த்துவதற்காக அல்லாஹ் சோதிக்கிறான்.
ஆகவே, எப்படி செல்வ நிலையில் நன்றி செலுத்துவது மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வை புகழ்வது இபாதத்தோ அதுபோன்று தான் சிரமங்களில், துன்பங்களில் நமக்கு ஏற்படக்கூடிய சோதனைகளில் பொறுமையாக இருப்பது இது அல்லாஹ்விற்கு பிரியமான ஒரு இபாதத்.
مَن يُرِدِ اللَّهُ به خَيْرًا يُصِبْ منه.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹுத்தஆலா ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை சோதிக்கின்றான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5645
يقولُ اللَّهُ تَعالَى: ما لِعَبْدِي المُؤْمِنِ عِندِي جَزاءٌ، إذا قَبَضْتُ صَفِيَّهُ مِن أهْلِ الدُّنْيا ثُمَّ احْتَسَبَهُ، إلَّا الجَنَّةُ.
பலவிதமாக அல்லாஹ் சோதிப்பான் ஹதீஸிலே வருகிறது பாருங்கள் என்னுடைய அடியார் அவனுக்கு பிரியமான ஒருவரை நான் உயிர் வாங்கி விடுகின்றேன், பிறந்த குழந்தையையோ, அவனுக்கு நெருக்கமான ஒருவரையோ நான் உயிர் வாங்கி விடுகிறேன், உயிரை கைப்பற்றி விடுகிறேன் இதற்கு அவன் பொறுமையாக இருந்து, இதனுடைய நன்மையை அல்லாஹ்விடத்தில் எதிர்பார்த்தால் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் அத்தகைய முஃமினான என்னுடைய அடியானுக்கு சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6424
அன்பு சகோதரர்களே! ஒரு குழந்தை தானாக சாதாரணமாக இருந்தாலே அது அவ்வளவு பெரிய ஒரு முஃமினுக்கு பாக்கியம் என்றால் இன்று பாலஸ்தீன குழந்தைகள் எதிரிகளால் கொல்லப்படுவது ஒரு பக்கம் நமக்கு வேதனையை, கவலையை, மிகப்பெரிய மனக்கஷ்டத்தை கொடுத்துக் கொண்டிருந்தாலும்,
அல்லாஹுத்தஆலா அந்த குழந்தைகளுக்கு கொடுத்திருக்கக் கூடிய ஷஹாதத், நாளை அந்த குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு சிபாரிசு செய்பவர்களாக, அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக ஆகுவது, அதன் மூலமாக அவர்களுடைய பெற்றோர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது இந்த நன்மையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
அன்பு சகோதரர்களே நம்முடைய ஸலஃப்புகள் சொல்வார்கள்:
قال بعض السلف : " لولا مصائب الدنيا لوردنا يوم القيامة مفاليس "
இந்த உலகத்தில் சோதனைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு இந்த உலகத்தில் சோதனைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாளை மறுமையில் நாம் வரும்போது நன்மைகள் இல்லாமல் வந்திருப்போம் ஒரு நன்மையும் நம்மிடத்தில் இருந்திருக்காது.
அன்பு சகோதரர்களே! எப்படி அல்லாஹுத்தஆலா நன்மையை தருகிறான் பாருங்கள் நம்முடைய யாருக்காவது ஒருவருடைய இரண்டு கண்கள் பார்வை பறிபோகிவிட்டால் அதற்கு அவன் ஸபுராக இருந்தால் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் அதற்குப் பகரமாக சொர்க்கத்தில் நான் அவனுக்கு கூலி கொடுப்பேன் என்று நாளை மறுமையிலே அல்லாஹ்வை முதலாவதாக பார்க்க கூடியவர்கள் முதலாவதாக பார்க்கக் கூடியவர்கள் யார் என்றால்? நபிமார்கள், ரசூல்மார்கள்,
இரண்டாவது யார் தெரியுமா நாளை மறுமையிலே அல்லாஹ்வை நம்முடைய ரப்பை ரஹ்மானை ரஹீமை அந்த அர்ஷுடைய அதிபதியை நம்முடைய மஃபுதை பார்க்கக் கூடிய அந்த பாக்கியம் நபிமார்களுக்கு அடுத்ததாக இரண்டாவது யாருக்கு என்றால் இந்த உலகத்திலே கண் இல்லாமல் இருந்தார்கள் அல்லவா பார்வை இல்லாமல் இருந்தார்கள் அல்லவா பொறுத்துக் கொண்டு சகித்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா அவர்களுக்கு அந்த பாக்கியம் என்பதாக நம்முடைய மார்க்க அறிஞர்கள் எழுதுகிறார் அன்பு சகோதரர்களே இந்த துன்யாவுடைய வாழ்க்கை என்பது அப்படித்தான்
الَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُ
அவன்தான் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான் - உங்களில் செயலால் மிக அழகானவர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக. அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான். (அல்குர்ஆன் 67 : 2)
இந்த உலக வாழ்க்கையிலே மௌத்தையும், ஹயாத்தையும் அல்லாஹ் படைத்தான் உங்களை சோதிப்பதற்காக உங்களில் அமல்களில் யார் சிறந்த அமலுடையவர் என்று சோதிப்பதற்காகவே! நாளை மறுமையினுடைய நிலையை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்: உலகத்தில் சோதனை இல்லாமல் வந்திருப்பார்கள் அல்லவா சிலர் அவர்களுடைய நிலைமை எப்படி என்றால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகின்றார்கள்:
قال عليه السلام: ليودن أهل العافية يوم القيامة أن جلودهم قرضت بالمقاريض لما يرون من ثواب أهل البلاء.
அந்த சொர்க்கவாசிகளின் பலர் யார் இந்த உலகத்தில் சோதனைகளே இல்லாமல் வந்தார்களோ அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள் துன்னியாவில் நாம் வாழும் போது துனியாவில் நாம் வாழும் போது நம்முடைய தோல்கள் சதைகள் கத்திரிக்கோல்களால் ரம்பங்களால் அறுக்கப்பட்டு இருக்க வேண்டுமே! ஏன் தெரியுமா எதிரிகளால் துன்புறுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, சொர்க்கத்திற்கு வந்தவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய அந்த கூலியை பார்த்துவிட்டு இந்த உலகத்திலே சுகமாக வாழ்ந்தவர்கள் அவர்கள் சொர்க்கத்தில் ஆசைப்படுவார்கள்.”
நாமும் இந்த துன்யாவிலே சோதிக்கப்பட்டிருக்க வேண்டுமே! என்று அதுவும் எப்படி சோதிக்கப்பட்டிருக்க வேண்டுமே தங்களுடைய தோள்கள் இரும்பு சீப்புகளை கொண்டு கத்தரிக்கோல்களை கொண்டு ரம்பங்களைக் கொண்டு வகுறப்பட்டு இருக்க வேண்டுமே என்று ஆசைப்படுவார்கள்.
அல்லாஹுத்தஆலா இந்த சோதனைக்கு பின்னால் கண்டிப்பாக வெற்றி வைத்திருக்கிறார் அல்லாஹ் சொல்கிறான்:
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ
(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் (நமக்கு முன்) பணிவதற்காக வறுமை இன்னும் நோயின் மூலம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன் 6 : 42)
நபியே! உங்களுக்கு முன்னால் பல சமுதாய மக்களுக்கு தூதர்களை அனுப்பி இருக்கிறோம் அவர்களை நாம் சோதித்தோம், கடுமையான வறுமையைக் கொண்டு சோதித்தோம், நோய் நொடிகளை கொண்டு சோதித்து இருக்கிறோம், போரை கொண்டு அவர்களை சோதித்து இருக்கிறோம், அவர்கள் பணிந்து நம் பக்கம் திரும்புவதற்காக.
கண்ணியத்திற்குரியவர்களே! பொறுமையை குறித்து நாம் அதிகம் அறிய வேண்டியது இருக்கிறது, இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்மாவிலும் தொடர்ந்து பார்ப்போம் கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! எந்த ஒரு சூழ்நிலை நடந்தாலும் சரி அதிலே கண்டிப்பாக ஒரு நன்மை இருக்கிறது, எத்தகைய ஒரு ஆபத்து, ஒரு தீங்கு, ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் சரி அல்லாஹ் இவருக்கு அதிலே ஒரு ஹிக்மத் இருக்கிறது,
நம்மிலே கொல்லப்படுபவர்கள் சொர்க்கவாசிகள், அவர்களே கொல்லப்படுபவர்கள் நரகவாசிகள், இந்த துன்பங்கள் இந்த இன்னல்கள் நம்முடைய ஈமானை பரிசுத்தப்படுத்துவதற்காக, நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய பிரிவினைகளை, நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய வேற்றுமைகளை ஒழிப்பதற்காக.
அல்லாஹுதஆலா இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம் யார் உண்மையான மூமின்கள் யாருடைய உள்ளத்தில் ஈமான், இஸ்லாம் முஸ்லிம்களுடைய அன்பு இருக்கிறது, யாருடைய உள்ளத்திலே யூதர்களின் அன்பு இருக்கிறது, யார் அல்லாஹ்வை நேசிக்கிறார்கள், அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக, நபியினுடைய உம்மத்தை பாதுகாப்பதற்காக, உயிரை, பொருளை தியாகம் செய்யக்கூடியவர்கள் யார்?
யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு தங்களை விற்று விட்டவர்கள், இந்த மார்க்கத்தை கொண்டு உலக ஆதாயத்தை தேடக்கூடியவர்கள், நயவஞ்சகர்கள் யார்? யார் அல்லாஹ்வுக்காக தங்களுடைய உயிரை துச்சமாக மதிக்கக் கூடியவர்கள், இவற்றையெல்லாம் இது போன்ற சோதனைகளிலே நாம் அறிந்து கொள்ளலாம்.
அன்பு சகோதரர்களே! நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து விடாதீர்கள் அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடத்தில் அழுது, கையேந்த கூடிய இந்த துவாக்கள் கண்டிப்பாக எப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலே அவதிப்பட்ட மூமின்களுக்காக துவா செய்தார்கள்:
كانَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَدْعُو في القُنُوتِ اللَّهُمَّ أنْجِ سَلَمَةَ بنَ هِشَامٍ، اللَّهُمَّ أنْجِ الوَلِيدَ بنَ الوَلِيدِ، اللَّهُمَّ أنْجِ عَيَّاشَ بنَ أبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وطْأَتَكَ علَى مُضَرَ، اللَّهُمَّ سِنِينَ كَسِنِيِّ يُوسُفَ.
குஃப்பார்கள் இந்த சஹாபாக்களை எல்லாம் சிறை பிடித்து வைத்து விட்டார்கள், அல்லாஹ்விடத்தில் கையேந்தினார்கள் யா அல்லாஹ்! வலித் இப்னு வலிதை பாதுகாத்துக் கொள், ஐயாஷ் இப்னு ரபியாவை காப்பாற்றி எங்கள் இடத்திலே கொண்டு வா என்று, இப்படி நாம் கேட்க கூடிய ஒவ்வொரு துவாவும் கண்டிப்பாக சகோதரர்களே! அந்தப் பாலஸ்தீன மக்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருந்து உதவிய இறக்கி தரும் அவர்களுக்காகவும், நமக்காகவும் அல்லாஹ்விடத்திலே பாவ மன்னிப்பு தேடுவோமாக, பிரிந்திருக்கக்கூடிய மூமின்கள், முஸ்லிம்கள் ஒன்று சேருவதற்கு அல்லாஹ்விடத்திலே துவா செய்வோமாக,
எந்த ஒரு வார்த்தையாக இருந்தாலும் நல்ல துவாக்களை கொண்டு அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைப்போமாக அல்லாஹு சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து இந்த பலவீனமான நிலையை மாற்றி அந்த பாலஸ்தீன காஸா முஃமின்களுக்கு, முஸ்லிம்களுக்கு அவனுடைய சிறந்த உதவியை விரைவாக மிக இலகுவாக ஆக்கித் தருவானாக!
அல்லாஹுத்தஆலா அவர்களை பொருந்து கொள்வானாக! அவர்களுடைய பாதங்களை பலப்படுத்துவானாக! அவர்களை இந்த ஒரு இக்கட்டான நிலைமைக்கு ஆளாக்கிய அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களுடைய அந்த எல்லாவிதமான சக்திகளையும், திட்டங்களையும், சூழ்ச்சிகளையும் அல்லாஹ் முறியடிப்பானாக! அவருடைய ஒற்றுமையை அல்லாஹ் பிரிப்பானாக! அவர்களுடைய அனைத்து சதி திட்டங்களையும் அவர்களுக்கு எதிராகவே அல்லாஹுத்தஆலா ஆக்கிவிடுவானாக! அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்முடைய நல்ல துஆக்களை ஏற்றுக் கொள்வானாக!
بيْنَما رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قَائِمٌ يُصَلِّي عِنْدَ الكَعْبَةِ وجَمْعُ قُرَيْشٍ في مَجَالِسِهِمْ، إذْ قَالَ قَائِلٌ منهمْ: ألَا تَنْظُرُونَ إلى هذا المُرَائِي أيُّكُمْ يَقُومُ إلى جَزُورِ آلِ فُلَانٍ، فَيَعْمِدُ إلى فَرْثِهَا ودَمِهَا وسَلَاهَا، فَيَجِيءُ به، ثُمَّ يُمْهِلُهُ حتَّى إذَا سَجَدَ وضَعَهُ بيْنَ كَتِفَيْهِ، فَانْبَعَثَ أشْقَاهُمْ، فَلَمَّا سَجَدَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وضَعَهُ بيْنَ كَتِفَيْهِ، وثَبَتَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ سَاجِدًا، فَضَحِكُوا حتَّى مَالَ بَعْضُهُمْ إلى بَعْضٍ مِنَ الضَّحِكِ، فَانْطَلَقَ مُنْطَلِقٌ إلى فَاطِمَةَ عَلَيْهَا السَّلَامُ - وهي جُوَيْرِيَةٌ -، فأقْبَلَتْ تَسْعَى، وثَبَتَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ سَاجِدًا حتَّى ألْقَتْهُ عنْه، وأَقْبَلَتْ عليهم تَسُبُّهُمْ، فَلَمَّا قَضَى رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ الصَّلَاةَ، قَالَ: اللَّهُمَّ عَلَيْكَ بقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بقُرَيْشٍ، ثُمَّ سَمَّى: اللَّهُمَّ عَلَيْكَ بعَمْرِو بنِ هِشَامٍ، وعُتْبَةَ بنِ رَبِيعَةَ، وشيبَةَ بنِ رَبِيعَةَ، والوَلِيدِ بنِ عُتْبَةَ، وأُمَيَّةَ بنِ خَلَفٍ، وعُقْبَةَ بنِ أبِي مُعَيْطٍ، وعُمَارَةَ بنِ الوَلِيدِ. قَالَ عبدُ اللَّهِ: فَوَاللَّهِ لقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى يَومَ بَدْرٍ، ثُمَّ سُحِبُوا إلى القَلِيبِ، قَلِيبِ بَدْرٍ، ثُمَّ قَالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: وأُتْبِعَ أصْحَابُ القَلِيبِ لَعْنَةً. : الراوي : عبدالله بن مسعود | المحدث : البخاري | المصدر : صحيح البخاري : الصفحة أو الرقم: 520
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/