இஸ்லாமை அறியாத முஸ்லிம்கள் அமர்வு 2 | Tamil Bayan - 748
இஸ்லாமை அறியாத முஸ்லிம்கள் அமர்வு 2
தலைப்பு : இஸ்லாமை அறியாத முஸ்லிம்கள் அமர்வு 2
வரிசை : 748
இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான் (KIDC) காரைக்கால்
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 19-11-2022 | 25-04-1444
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமை மறந்த முஸ்லிம்கள் என்ற தலைப்பின் கீழே முதல் அமர்விலே இன்றைய முஸ்லிம்களாகிய நாம் நமது சமுதாயம் இந்த இஸ்லாமிய மார்க்கத்தினுடைய அடிப்படையாகிய தவ்ஹீதில் ஏக இறைவனை மட்டும் வணங்குவதில் ஏக இறைவனுக்கு மட்டும் வணக்க வழிபாடு செய்வதில் எந்த அளவு அலட்சியம் உள்ளவர்களாக எந்த அளவு அதிலே குறை செய்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோம்.
அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும், வணக்க வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் எல்லா நபிமார்களின் அழைப்பாக இருந்தது இஸ்லாமிய மார்க்கத்தின் உடைய தனித்தன்மையாக இருந்தும் இன்றைய சமுதாயம் அதை மறந்திருக்கிறது, மறந்தது மட்டுமல்ல அலட்சியம் செய்தது.
கடைசியிலே எப்படி ஆகிவிட்டது என்றால் நிலைமை அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூடியவர்கள் அவர்கள் ஒரு வகை முஸ்லிம் எப்படி ஆயிட்டாங்க எப்படி ஆக்கிவிட்டார்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க கூடியவர்கள் அவங்க எல்லாம் ஒரு வகை முஸ்லீம் இன்னும், சொல்லப்போனால் புதுவகையான முஸ்லீம்,
நவீன முஸ்லிம்கள், சில பேர் அவங்க எல்லாம் சவுதி முஸ்லிம், அவங்க எல்லாம் சலபி முஸ்லிம் யார் தர்காக்களை வழிபடுகிறார்களோ அல்லாஹ்வுடைய இறைநேசர்களுக்கு வணக்க வழிபாடுகள் செய்கிறார்களோ அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய துஆக்கள் நேர்ச்சைகள், பணிவு, மரியாதை, சுஜூது, ருக்குகூ தவாப் இதையெல்லாம் அல்லாஹ் படைத்த மனிதர்களாகிய அல்லாஹ்வுடைய அடியார்களில் இறந்துவிட்டவர்களுக்கும்,
அவருடைய சமாதிகளுக்கும் கபுர்களுக்கும் சென்று செய்கின்றார்களோ அவர்களெல்லாம் பாரம்பரியம் முஸ்லிம் எப்படி அவர்களுக்கெல்லாம் பெயர் அவர்களெல்லாம் தொண்று தொட்டு வரக்கூடிய பாரம்பரிய முஸ்லிம்கள், அவர்களெல்லாம் சமூகவாதிகள், அவர்களெல்லாம் நல்லிணக்க வாதிகள், என்ற அளவுக்கு இன்று மாற்றர்களும் சேர்ந்து பேசக்கூடிய அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.
ஆகவே, இந்த முஷ்ரிக்குகள் யாரு யார சொல்றேன்? தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு இபாதத்துகளை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்கிறார்களே இந்த முஷ்ரிக்குகள் இருக்கிறார்களே எப்ப ஷிருக்கு செய்யணும் என்று ஆகிவிட்டதோ இனி என்ன இருக்கு? உங்க திருவிழாவுக்கு நாங்க காவடி தூக்குவோம் பால்குடம் தூக்குவோம் அதையும் பாத்தியா ஓதி ஆரம்பிப்போம் ஏன ஏற்கனவே ஷிர்க்க பாத்தியா ஓதி தானே ஆரம்பிக்கிறீங்க,
இந்த ஷிர்க்க பாத்தியா ஓதி ஆரம்பித்தால் என்ன அந்த ஷிர்க்கை பாத்தியா ஓதி ஆரம்பித்தால் என்ன சமரசம் செய்து கொள்வதற்கு தயார் இந்த சைத்தான பொருத்தவரைக்கும் அவனுக்கு என்ன வேலை அல்லாஹ்வுடைய அடியார்களை ஷிர்கிலே தள்ள வேண்டும், அவ்வளவுதான் நீ அதை நிக்க வைத்து சிலையாக வணங்கினாலும் சரி,
அல்லாஹ்வுக்கு இணை வைக்கப்படுவதை நிறுத்தி ஒரு சிலையாக வணங்கினாலும் சரி அல்லது, அல்லாஹ்வுடைய அடியானை இறந்து விட்டவனை வணங்கினாலும் சரி இரண்டு அல்லாஹ் என்று சொல்வதுதான் ஷிர்க்கு என்று புரிஞ்சு வச்சிருக்காங்க பாருங்க அதுவும் ஒரு ஷிர்க் ஒரு அல்லாஹ் இரண்டு அல்லாஹ், மூன்று அல்லாஹ் இறைவன் ஒன்று இரண்டு மூன்று அதுவும்,
ஷிர்க்க்கினுடைய ஒரு வகை, அதை செய்றவங்க உலகத்துல ரொம்ப ரொம்ப குறைவு இன்று இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய கோடான கோடி சிலைகளை வணங்க கூடியவர்கள் கூட கடவுள் இரண்டு என்று இறைவன் இரண்டு என்று சொல்வதில்லை, தெய்வம் இரண்டு என்று சொல்வதில்லை படைத்தவன் அவன் ஒருவன் தான் எல்லாம் பல தோற்றங்கள்.
சகோதரர்களே! அப்ப ஷிர்க் என்பது அல்லாஹ் இரண்டு என்று சொல்வதில் தான் தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க இவங்கள அல்லாஹ் என்று சொல்வதில்லையே யார எந்த இறைநேசரை போய் வணங்குகிறார்களோ சுஜூது, ருக்கு யாருக்கு போய் செய்கிறார்களோ என்ன சொல்றாங்க நாங்க இவங்கள அல்லாஹ் நான் சொன்னோம், இவங்கதான் எங்கள படைச்சாங்க நான் சொன்னோம் அப்படி செய்யலையே! இது உங்களுடைய தவறான புரிதல்,
அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய மரியாதையை அது ருக்கூவின் மூலமாகவோ சுஜூதின் மூலமாகவோ எதுவுமே இல்ல இப்படி கைகட்டி பணிந்து முன்னாடி நின்னாலே போதும் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய மரியாதையை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வது தான் ஷிர்க் நீங்க ஒரு கோவில்ல போய் செய்தாலும் சரி, ஒரு சர்ச்சிலே செய்தாலும் சரி, தர்காவிலும் செய்தாலும் சரி அல்லாஹ் அதை முடிவு செய்வது ஷிர்க் அவ்வளவுதான் முடிந்துவிட்டது.
அது ஷிர்க் எந்த இடத்திலும் செய்யப்பட்டாலும் சரி அதுக்கு தண்டனை என்ன அல்லாஹுத்தஆலா பாவ மன்னிப்பு கேட்கும் வரை அதை மன்னிக்க மாட்டான், அதை செய்தவர்களின் நன்மைகள் எல்லாம் அழிந்து விடும், அதை செய்தவருக்கு நரகத்தில் நிரந்தரமாக இடம் முடிவு செய்யப்பட்டு விடும், அதை செய்தவருக்கு சொர்க்கம் ஹராம் ஆகிவிடும்,
சரி அதை மட்டும் அவர் செய்யல பள்ளிவாசலுக்கு வந்து தொழவும் செய்து இருக்காரு ரொம்ப பேருடைய சந்தேகம் அதுதான் நோன்பு வைக்கிறார், தர்மம் கொடுக்கிறார், ஜகாத் கொடுக்கிறார், ஹஜ் செய்றாரு இத எல்லாவற்றையும் அவர் செய்தாலும் இந்தப் புண்ணியங்களுக்கான கணக்கு வழக்கு உலகத்திலேயே தீர்க்கப்பட்டு விடும் இந்த துன்னியாவில் முடிந்து விடும், ஆகிரத்தில் வரும்போது இந்த நன்மை எதுவும் அவரிடம் இருக்காது, ஷிர்க்கை மட்டும் சுமந்து கொண்டவராக வருவார், இணை வைப்பதை மட்டும் இனி நிராகரிப்பை மட்டும் சுமந்து கொண்டு வருவார்.
ஆக, அன்பான சகோதரர்களே! இன்று நாம் உணர வேண்டியது, படிப்பினை பெற வேண்டியது, படிப்பினை கொடுக்க வேண்டியது, விழிப்புணர்வு அடைய வேண்டியது, விழிப்புணர்வு கொடுக்க வேண்டியது இன்று இஸ்லாமிய சமுதாயம் மறந்திருக்க கூடிய தவ்ஹீத் என்ற அந்த அடிப்படையை குறித்து மனிதனை இஸ்லாமிலிருந்து வெளியேற்றக்கூடிய முதல் முதன்மையான ஒரு காரியம் இருக்கிறது என்றால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அது ஷிர்க்.
லுக்குமான் அலைஹிஸ்ஸலாம் அவர் ஒரு பெரிய நபி இல்லை அவர் ஒரு ஞானி ஹக்கீம் அல்லாஹ்வுடைய இல்ம் இறை நேசம் கொடுக்கப்பட்ட நபிமார்களுடைய காலத்தில் வாழ்ந்த ஒரு நல்ல மனிதர் தக்குவா உடைய ஒரு நல்ல மனிதர் அல்லாஹுத்தஆலாவிற்கு அந்த அடியார் மீது ரொம்ப பிரியம் வந்துருச்சு அவர் ஒரு நீக்ரோ அடிமை இந்த குர்ஆனில் அவரை பற்றி அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கி இருக்குறான்,
அப்பொழுது ஹபஷா இருந்து கொண்டுவரப்பட்ட சிரியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஹசன் பசரி சொல்கிறார்கள் அவர் ஒரு நீக்ரோ அடிமை உரிமையிடப்படுகிறார் அல்லாஹ்விடத்தில் அவர் குரிய அந்தஸ்து என்னன்னு தெரியுமா? இந்த குர்ஆனில் அவரைப் பற்றி ஒரு சூரா இறக்கி இருக்கிறான், அது மட்டுமல்ல நபிமார்கள் தங்களுடைய உம்மத்திற்கு செய்த உபதேசங்களை சிலாஹித்து சொல்லுவதைப் போன்று அந்த லுக்குமான் தனது மகனுக்கு செய்த அறிவுரையை அல்லாஹுத்தஆலா சிலாகித்து உம்மத்திலேயே சிறந்த உம்மத்தாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய உம்மத்திற்கு சொல்கிறான் என்றால்,
ஏன் அந்த லுக்மான் தனது மகனுக்கு தினமும் நசிகத் செய்வார், நம்ம தினமும் சாப்பாடு வாங்கி கொடுப்போம், யாருக்கு பிள்ளைக்கு முட்டாய் வாங்கி கொடுப்போம் தவ்ஹீதை சொல்லிக் கொடுப்போமா? லுக்குமான் தினமும் தனது மகனுக்கு அறிவுரை சொல்வார் அந்த அறிவுரையினுடைய ஆரம்பம் இன்றைக்கு ஒரு அடிப்படையில் உபதேசம் செய்யப் போகிறார் என்றால் முதல் உபதேசம் எதைப் பற்றி செய்யப்போவதாக இருந்தாலும் சரி,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
இன்னும், லுக்மான் தனது மகனாருக்கு - அவர் அவருக்கு உபதேசித்தவராக - கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும். (அல்குர்ஆன் 31 : 13)
தவ்ஹீதை நீங்கள் நேசித்தால் அல்லாஹ்வால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள், கௌரவிக்கப்படுவீர்கள், தவ்ஹீது உள்ளவர்களுக்கு தான் இந்த பூமியிலும் கண்ணியத்தை கொடுப்பான், மறுமையிலும் கண்ணியத்தை கொடுப்பான்,
அறிஞர்கள் சொல்லுகிறார்கள்” அல்லாஹுத்தஆலா படைக்கிறான், அந்த படைப்பை உயர்த்துகிறான் தாழ்துகிறான் இஸ்லாமில் ஒரு படைப்பு இருக்கிறது, அது வீட்டுக்குள் இருந்தால் மலக்கு வரமாட்டார்கள் என்று சொல்லிக்கிட்டு அது என்ன படைப்பு நாய் ஆனால், அந்த நாயை கூட அல்லாஹ் குர்ஆனிலே உயர்வாக சொல்லுகிறான்
وَ تَحْسَبُهُمْ اَيْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ وَنُـقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِيْنِ وَ ذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيْدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا
இன்னும், அவர்களோ உறங்குபவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை விழித்திருப்பவர்களாக கருதுவீர். மேலும், (அவர்களின் உடல்களை மண் தின்றுவிடாமல் இருக்க) அவர்களை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் புரட்டுகிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு குடங்கைகளையும் முற்றத்தில் விரித்து (உட்கார்ந்து)ள்ளது. நீர் அவர்களை எட்டிப்பார்த்தால் அவர்களை விட்டுத் திரும்பி விரண்டு ஓடி இருப்பீர். இன்னும், உமது உள்ளம் அவர்களின் பயத்தால் நிரப்பப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 18 : 18)
இந்த அஸ்காபுல் ககுப் குகை வாசிகள் தவ்ஹீதுக்காக வேண்டியே ஓடியவர்கள் ஊரை விட்டு, பதவியை விட்டு, சுகமான வாழ்க்கையை விட்டு நமக்கு இன்னைக்கு நாலு பேரு ஏசுவதை பொறுக்க முடிய வில்லை நம்மை ஒருவர் வஹாபின்னு சொல்லிறான் தவ்ஹீதுல போனா வஹாபினு சொல்லிறான் சொன்னா என்ன இருக்கு என்ன வேணாலும் பேர் வச்சுக்க அல்லாஹ்விடத்தில் எங்களை அல்லாஹ் முஸ்லிம் என்று அங்கீகரிக்க வேண்டும்
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى
அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம். (அல்குர்ஆன் 18 : 13)
ஈமானில், தவ்ஹீதில், இஸ்லாமில் உறுதியாக அந்த வாலிபர்கள் இருந்தார்கள். இந்த ஊர்ல இருந்தால் ஷிர்கிலே தள்ளி விடுவார்கள் ஓடி விடுவோம் அல்லாஹுத்தஆலா எப்படி சுலைமான் நபி உடைய காலத்தில் அந்த எறும்புக்கு அறிவு கொடுத்திருந்தானோ இன்னும், அதே போல சில நபிமார்களுடைய காலத்தில் சில மிருகங்களுக்கு அறிவை கொடுத்து இருந்தானோ,
அவர்களிடத்திலிருந்து நாய் சொல்லுச்சு என்னையும் இந்த முஷ்றிக்குகளிடத்திலே விட்டுப் போயிடாதீங்க என்னையும் சேர்த்து கூட்டிட்டு போங்க சுபஹானல்லாஹ்! யோசித்துப் பாருங்கள்” அல்லாஹுத்தஆலா குர்ஆனிலே இந்த நாயை பற்றி சொல்லுகிறான் வெறும் நாய் என்று சொன்னால் உங்களுக்கு நன்மை கிடையாது, கல்புகும் ஓதினால் நன்மை, அந்த நல்லவர்களைப் பற்றி புகழ்ந்து சொல்லக் கூடிய அல்லாஹுத்தஆலா அதைப்பற்றி சொல்லுகிறான் என்றால் தவ்ஹீத் தான் காரணம்.
நீங்க படிச்சு இருப்பீங்க சூரா அந்நம்லில் அழகான ஒரு சம்பவம் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்தப் பேராச்சி அல்லாஹுத்தஆலா சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி சொல்லும் போது பறவையைப் பற்றி அல்லாஹுத்தஆலா ரொம்ப அழகாக சொல்லுகிறான்”
وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ
(மற்றொரு சமயம்) ஸுலைமான் பறவைகளின் நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் கூறினார்: “என்ன விஷயம்? நான் ஹுத்ஹுத் மரங்கொத்தி பறவையைக் காணவில்லையே! அது எங்காவது காணாமல் போய்விட்டதா? (அல்குர்ஆன் 27 : 20)
எனக்கு என்ன ஆனது ஏன் இந்த ஹுது ஹுதை காணவில்லை கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்தது அப்புறம் வந்து விட்டது, சுலைமான் உங்களுக்கு தெரியுமா? என்ன பிரச்சனை தெரியுமா? ஒரு பறவையின் உடைய நிலைமையை பாருங்கள்” அல்லாஹ் குர்ஆனிலே புகழ்ந்து சொல்லுகிறான்”
தவ்ஹீதோடு நாம் நம்மை இணைத்துக் கொண்டால் இபாதத் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடு செய்வது அதன் பக்கம் அழைப்பது, அதற்காகத்தான் நான் வாழ்கிறேன், நான் செய்வேன் அதன் பக்கம் நான் மக்களை அழைப்பேன், அல்லாஹ்விற்கு பிடித்தமானது, நபிமார்களுடைய அந்தஸ்திலே அல்லாஹ் கொண்டு போய் வைப்பான் நபி மார்களோடு அல்லாஹ் சேர்த்து விடுவான்.
நபிமார்கள் புகழப்படக் கூடிய இடத்தில் நீங்கள் புகலப்படக் கூடியதாக அல்லாஹ் உங்களை ஆக்கி விடுவான், இந்த ஹுது ஹுது என்ன செய்தது சுலைமான் உங்களுக்கு தெரியுமா? என்ன பிரச்சனை நாட்டில் நடந்துகொண்டு இருக்கிறது.
اِنِّىْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ
அங்கு அம்மக்கள் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு எல்லாவிதமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கம்பீரமான ஓர் அரியணையும் அவளுக்கு உள்ளது. (அல்குர்ஆன் 27 : 23)
وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ
அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம் பணிவதையும் நான் கண்டேன்.” ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து, நேரிய பாதையில் செல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டான். (அல்குர்ஆன் 27 : 24)
நான் ஒரு பெண்ணை பார்த்தேன் அந்தப் பெண்ணு தான் அந்த மக்களுக்கு ஆட்சியாளராக இருக்கிறாள், அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய சுஜூதை அந்த சூரியனுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள், அந்த பறவையினுடைய கவலை சுலைமானே கிளம்பு புறப்படு,
தவ்ஹீது அவ்வளவு பெரிய ஒன்று நான் இன்னைக்கு நம்ம உம்மத்து எதை மறந்திருகிறதோ இல்லையோ சுத்தமா இந்த உம்மத்து மறந்திருக்கிற ஒன்று எது என்றால் தவ்ஹீத்” பிள்ளைகளுக்கு நினைவூட்டுவதில்லை, சகோதரர்களுக்கு நினைவூட்டுவது இல்லை, இப்ப நம்முடைய நிலைமையை பார்ப்போம் நம்மெல்லாம் பக்கா தவ்ஹீத் வாதி ஆச்சு நம்மளே மறந்தாச்சு எப்படி நம்முடைய நிலைமை என்னன்னு சொன்னா நம்மதான் தவ்ஹீத் ஆயிட்டோமே நமக்கு எதுக்கு தவ்ஹீத் பயான் நமக்கு எதுக்கு அதையே பற்றி பேசிக்கொண்டு இருப்பது,
இல்லை சகோதரர்களே! காலை, மாலை, இரவு, பகல் என்று இது பேசப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எதுவரை தவ்ஹீது ஆழமாக விசாலமாக பதியும் வரை இந்த தவ்ஹீத் நம்மளிடத்திலே உயிரோடு இருக்கும், சொல்வதை நிறுத்திவிட்டால் சைத்தான் சிறுக்கை புகுத்து விடுவான், எப்போது இதை பேசுவதை நிறுத்துகிறோமோ நமது வணக்க வழிபாடுகளில் குறைபாடு ஏற்படும்,
நமது இக்லாஸிலே பலவீனம் ஏற்படும், நமது அமல்களிலே பலவீனம் ஏற்படும், சைத்தான் சிறுக்கை சாதாரணமாக உள்ளே நுழைத்து விட்டு சென்று விடுவான், இந்த உம்மத்தில் ஒரு பெரிய கூட்டத்தை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி இருக்கிறானென்றால் அதுக்கு என்ன காரணம்,
இந்த சிருக்கை அவர்கள் அறியாதது தான் மறந்து விட்டார்கள் தவ்ஹீத் என்ற ஒன்றை மறந்து விட்டார்கள் சிருக்கு என்ற பாவம் ஒருவனை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றி விடும் என்று மறந்து விட்டார்கள் அடுத்து ஒரு பாவம் இருக்கு 10 பெரிய பாவங்களை பத்து பெரிய காரியங்களை நம்முடைய உலமாக்கள் சொல்லுகிறார்கள் மனிதனை தவ்ஹீதை முறித்து விடும் ஒரு மனிதனை இஸ்லாத்தில் இருந்து.
இரண்டாவது என்ன அல்லாஹ்விற்கும் அவனுடைய அடியார்களுக்கு இடையிலும் ஒரு இடைத்தரகர்களை வைத்துக் கொள்வது அல்லாஹுத்தஆலா உடைய இபாதத்துகளை முஸ்லிம்கள் செய்கிறார்கள் ஆனால், அல்லாஹுத்தஆலாவை ரஹ்மானாக ரஹீம் ஆக தனக்கு நெருக்கமானவனாக உணரவில்லை அல்லாஹ்விடத்தில் துவா கேட்கும் போது பயம் இருக்க வேண்டும், அதேபோல ஆதரவும் இருக்க வேண்டும், ஆசையும் இருக்க வேண்டும்.
فَاسْتَجَبْنَا لَه وَوَهَبْنَا لَه يَحْيٰى وَاَصْلَحْنَا لَه زَوْجَه اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ
பிறகு நாம் அவருடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, அவருக்கு யஹ்யாவை கொடையாக வழங்கினோம். அவருடைய மனைவியை அதற்கு அருகதையுள்ளவராகவும் ஆக்கினோம். இவர்கள் யாவரும் நற்பணிகளில் முனைந்து செயற்படுவோராகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும் நம்மிடம் இறைஞ்சக் கூடியவர்களாயும் திகழ்ந்தார்கள். நம் முன் பணிந்தவர்களாயும் விளங்கினார்கள். (அல்குர்ஆன் 21 : 90)
இன்றைக்கு இந்த ஷிர்க்கை உள்ளத்தில் புகுத்தி உம்மத்தை கெடுப்பதற்கு சைத்தான் இந்த இல்மை அறியாத மக்களிடத்தில் உள்ள மனதில் போட்ட ஒரு பெரிய நோய் என்ன? நம்ம எல்லாம் பாவிங்கள் நம்முடைய இபாதத்தை அல்லாஹ் ஏத்துப்பானா? இபாதத்தை உட்டாங்க நம்முடைய துவாக்களை ஏத்துப்பானா? துவாவை விட்டுவிட்டார்கள், அல்லாஹ்விடத்தில் நேரடியாக கேட்க முடியுமா அதையும் விட்டுவிட்டார்கள்.
இவங்க எல்லாம் அல்லாஹ்வுடைய நேசர்கள் நம்மை மாதிரி மனிதர்கள் தான் அல்லாஹ்விற்கு இவர் இடத்தில் நாம் சொல்லிவிட்டால் இவர்களிடத்திலே நாம் கேட்டுவிட்டால் அல்லாஹ்விடத்தில் சொல்லி நமக்கு எல்லா காரியத்தையும் நிறைவேற்றி விடுவார்கள்.
சகோதரர்களே! இஸ்லாம் என்ற மார்க்கத்தின் மிக முக்கியமான அடிப்படை எதை இந்த உம்மத்து மறந்திருக்கிறதோ அந்த அடிப்படைகளிலேயே ஒன்று என்னவென்றால் அல்லாஹ்வை நீ நேரடியாக வணங்கு, உலக மக்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு நடுவரை வைத்து வணங்கிக்கொண்டிருந்தபோது நீ அல்லாஹ்வை நேரடியாக வணங்கு அல்லாஹ்வை வணங்குவதற்கு ஓர் இடைத்தரகர் தேவை இல்லை மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கு அனுப்பப்பட்டவர்கள் தான் நபிமார்கள்.
இப்ப இந்த உம்மத்திலே ஒரு தத்துவம் எப்படி ஆகிவிட்டது என்று சொன்னால்” நம்ம முஸ்லிம்கள் ஆனால், நாம் எல்லாம் பாவிகள் நம்முடைய இபாதத்துகள், துவாக்கள் நேரடியாக ஏற்கப்படாதே இந்த மாதிரியான பணிவுகள் அவர்கள எல்லாம் செய்வார்கள் பாருங்கள்” சுஜூது ருக்கு நேர்ச்சை எல்லாம் அவர்கள் இபாதத் என்று ஏற்றுக் கொள்வதில்லை,
அவர்களுக்குப் புரியவில்லை இபாதத் என்பதை என்ன விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றால் ஒரு செய்து பள்ளிவாசலில் நிய்யத்து வைத்து தக்பீர் கெற்றோம் பாருங்க அல்லது நிய்யத்து வைத்து நோன்பு வைக்கிறோம் பாருங்க அல்லாஹ்விற்கு என்று சொல்லி அல்லாஹ்விற்கு செய்வது மட்டும்தான் இபாதத் இந்த தர்காக்களுக்கு அவ்லியாக்களுக்கு செய்வதெல்லாம் ஜஸ்ட்”,
ஒரு ரெஸ்பெக்ட் எல்லாம் வெறும் ஒரு மரியாதை தான் அப்படி என்று நினைத்து கொள்கிறார்கள் இந்த மரியாதையை தான் அல்லாஹ் நீ சிறுக்கு செய்திட்டேன்னு சொல்ற ஏன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பப்பட்ட போது கூட அந்த குரேஷி முஷ்ரிக்குகள் சிலைகளை ரப்பு என்று சொல்லவே இல்லை,
اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِه اَوْلِيَآءَ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَاۤ اِلَى اللّٰهِ زُلْفٰى اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ
அறிந்துகொள்ளுங்கள். தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். எவர்கள் அவனை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் (தம்முடைய இச்செயலுக்கு இப்படிக் காரணம் கூறுகிறார்கள்:) “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவர்களை வணங்குகின்றோம்.” எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்களோ, அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாகவும், சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. (அல்குர்ஆன் 39 : 3)
இவற்றை நாம் வணங்குகிறோம் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்குவதற்கு அன்பான சகோதரர்களே! இன்று இந்த முஸ்லிம்கள் சமுதாயம், அல்லாஹ்விற்கு முன்னாடி அல்லாஹ்விற்கும் இவர்களுக்கும் இடையே ஒரு இடை தரகர்களை கூடாது என்ற சட்டத்தை மறந்து அந்த,
சட்டத்தை புறக்கணித்து இடைதரகர்களை நியமித்துக் கொண்டார்கள் அந்த செயல் முஷ்ரிக்குலே தள்ளிவிட்டது இணை வைப்பிலே தள்ளிவிட்டது, அந்த செயல் இஸ்லாமை விட்டு வெளியேற்றி விட்டது அதனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். எது? இடைத்தரவர்களை இவரை நாம் சந்தித்தால் தான் அல்லாஹ்விடத்தில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தாலே முடிந்து விட்டது நரகம் தான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருக்கிறார்களே அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற சகாதாவை சொல்லிவிட்டால் அதற்குண்டான நிபந்தனைகளை பூர்த்தி செய்து விட்டால் அல்லாஹ்விடத்திலே நீங்கள் முஸ்லிம்.
இப்பொழுது நபி உயிரோடு இருக்காங்க உதாரணத்துக்கு ஒருவரால் அந்த நபியை வந்து சந்திக்கவே முடியல சகாதா சொல்லிட்டார் இவர் முஸ்லிமா இல்ல அஹ்லூல் ஜன்னா இல்லையா இவர் முஸ்லிம் அஹ்லூல் ஜன்னா இதுதான் இஸ்லாமிய நிலைபாடு இதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி தந்தது,
உவைசுல் கர்ணி என்று ஒருவர் இருந்தார் ரசூலுல்லாஹ் காலத்தில் இவர் இஸ்லாமை ஏற்று மிகப்பெரிய நல்ல மனிதராக இருந்தார் ரஸூலுல்லாஹ் சந்திக்க வரவே இல்லை ஏன் தன்னுடைய தாய்க்கு பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தினால், இப்ப அல்லா அல்லாதவருடைய ஸ்டேட்டஸ் இஸ்லாமில் இதுதான் யாருக்கு என்ன தகுதியை நாம் ஈமான் கொண்டால் போதும், அஷ்ஹது அன்ன முஹம்மது ரசூலுல்லாஹ் சொல்லிடுறோம் இபாதத்துகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிய முறைப்படி நாம் செய்துவிட்டால்முடிந்தது.
அதற்குப் பிறகு, ரசூலுல்லாஹ்வும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்றால் அவர் உங்களுக்கு வழிகாட்டி உங்களை சொர்க்கத்தின் பக்கம் அழைக்க வந்தவர் அல்லாஹ்வின் பொருத்தம் எதிலே இருக்கிறது அல்லாஹ்வின் கோபம் அல்லாஹ்வின் கோபம் எதிலே இருக்கிறது, என்று காட்ட வந்தவர் அல்லாஹ்வுடைய மஹப்பத்தை கொண்டு நேசிக்கவேண்டும் அவர் கொண்டு வந்த மார்க்கத்தை நேசிக்க வேண்டும் அதற்குப் பிறகு, வேறு என்ன செய்ய வேண்டும். அவர்களிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்,
وَاِذَا عَلِمَ مِنْ اٰيٰتِنَا شَيْــٴًـــا اۨتَّخَذَهَا هُزُوًا اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ
நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது. (அல்குர்ஆன் 45 : 9)
அல்லாஹ்வுடைய இபாதத்தை அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய பணிவுகளை எந்த ஒன்றையாவது இந்த உலகத்திலேயே மனிதர்களிலேயே மிக அல்லாஹ்விடத்தில் அந்தஸ்து உடைய ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதிகளிலே மாற்றுக் கருத்து ஒருவர் இருப்பாரே ஆனால், அவர்கள் அதிலே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட வேறு யார் இருக்க முடியும்?
அந்த நபிக்கே உயிராக இருக்கும்போது சரி, இறந்த பிறகும் சரி, அல்லாஹ்விற்கு செய்யப்படக்கூடிய மரியாதைகளில் அவருக்கு செய்ய முடியாது என்றால், இன்றைக்கு ஊர் ஊருக்கு ஒரு தர்காவை வைத்துக் கொண்டு ஒரு கப்ரை கட்டிக்கொண்டு பள்ளிவாசல்களில் அல்லாஹ்வுக்கு செய்யப்படக்கூடிய பணிவுகளை விட இபாதத்துகளை விட அந்த கோரிகளுக்கு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
ஒரு தொழக்கூடியவன் அல்லாஹ்வை தொழுவதில் அவன் பயப்படற பயத்தை விட அல்லாஹ்வின் முன்னால் பயப்படுவதை விட அந்த தர்காவிற்கு முன்னாடி கையை கட்டிக்கொண்டு பணிந்து கொண்டு அங்கே சுஜூது செய்து விழுந்து புறண்டு அழுது என்னென்ன நடக்குது பணிவினுடைய உச்சகட்டத்தை அங்கே செய்கிறார்கள், இது இபாதத் இல்ல நாங்க ஒரு ஜஸ்ட் ரெஸ்பெக்ட் பண்றோம் என்று சொல்கிறார்கள்.
சகோதரர்களே! அல்லாஹ்விற்கும் அவர்களுக்கும் இடையிலே ஒரு இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் இது அவர்களை இஸ்லாமிய விட்டு வெளியேற்றி விடுகிறது, செய்த எல்லா வணக்க வழிபாடுகளும் வீணாகிவிடும் அடுத்ததாக மூன்றாவது
لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِۙ قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் தாஃகூத்தை* நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக, மிகப் பலமான பிடிமானத்தைப் பற்றிக் கொண்டவராவார். அது என்றுமே அறுந்துவிடாது. (அவர் தன்னுடைய ஆதரவாளனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட) அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிவோனுமாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2 : 256)
எது நேர் வழி எது வழிகேடு என்று தெளிவாகி விட்டது தவ்ஹீத் எது குஃப்ர் எது ஈமான் எது வழிகாட்டி விட்டான் இப்ப ஒருவருக்கு சந்தேகம் வருகிறது அது சிறுக்கா இருக்குமோ, குஃபூரா இருக்குமோ, இந்த நிலை இருக்குமேயானால் நிலையும் ஒருவரை இஸ்லாமிலிருந்து வெளியேற்றி விடும், அல்லாஹ் பாதுகாக்கணும்! எப்படின்னு பாருங்க எத்தனை ஆபத்தை தாண்டி நாம் போக வேண்டியது இருக்கிறது.
இன்றைக்கு சில பேர் தங்களுக்கு வைத்துக் கொள்ளக் கூடிய பேர் என்னவென்றால் நாங்க ஜென்டிலா இருந்துக்குறோம், நாங்க எந்த வம்புக்கும் போறது இல்ல நாங்க யாரை பத்தியும் பேசறது இல்ல அல்லாஹ் யாரைப் பற்றி பேசினானோ அவர்களைப் பற்றி பேசு அவர்களை முஷ்ரிக் என்று அடையாளப்படுத்தி விட்டால் அவர்களை நீ முசிறிக்கு என்று தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்,
இவையெல்லாம் சிருக்கு இவற்றையெல்லாம் செய்தால் இஸ்லாமை விட்டு வெளியேறி விடுவார்கள் அல்லாஹ் சொல்லுகிறான்” நீங்க சொல்றீங்க அது அவங்க விருப்பங்கள் அது அவங்க கருத்து அது அவங்க யோசனை அதைப்பற்றி நாம் ஏன் கருத்து சொல்ல வேண்டும்.
இது ஒரு நவீன தவ்ஹீத் இது ஒரு நவீனத்துவமான இஸ்லாம் நம்ம வேலையை பார்க்கவும் நமக்கு நம்மை பற்றி நாம் பேசுவோமே அப்படித்தான் ஒரு கூட்டம் அவர்கள் என்ன செய்தார்கள் வெறும் நாம் நன்மையவே சொல்லிக்கொண்டு இருப்போம், ஊரை சுத்துவார்கள், என்னென்னவோ செய்வார்கள் எதற்காக அதை பற்றி பேசணும் பாவம் இதை சிருக்கு என்று சொல்லிக்கிட்டு நம்ம பிசாட்டுக்கு தொழுதோம் என்று சொல்லுவோம் எல்லாம் சரியாகிவிடும் அப்போ குர்ஆனில் உள்ள 6000 வசனங்களை என்ன செய்கிறது?
பாவம் இந்த ஹிக்மத் அல்லாஹ்வுக்கு தெரியல, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரியல, சஹாபாக்களுக்கு தேரியல குரான்ல எங்கேயாவது நீங்க பார்த்து இருக்கீர்களா? நண்மையை ஏவி தீமையை தடுக்கப்படாமல் இருக்கிற ஒரு இடத்தை எங்கேயாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
குர்ஆனிலே எங்கே எல்லாம் நன்மையை ஏவு என்று சொல்லுகிறானோ அங்க எல்லாம் தீமையை தடுக்க வேண்டும் என்பதாகத்தான் அல்லாஹ் சொல்லுகிறான், உண்மை பேசுங்கள் பொய் பேசாதீர்கள் அளவையை முழுமைப்படுத்துங்கள் அளவையே குறைவு செய்யாதீர்கள், தொழுகையை முழுமையாக நிறைவேற்றுங்கள், தொழுகையில் மோசடி செய்யாதீர்கள்,
ஒரு ஹிக்மத் புதுசா கண்டுபிடித்துவிட்டார்கள் நூறு வருடம் ஆகி இருந்தால் கூட தாயத்து போடுவது ஷிர்க்கு என்று இவர்களுக்கு தெரியாது, தர்காவில் போய் சுஜூது செய்வது சிர்க் என்று தெரியாது, இவர்களுடைய துவாக்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எங்களுடைய துவாவை ரசூலல்லாஹ் பொருட்டலை ஏற்றுக்கொள்!
துவாவை இன்ன பெரியாருடைய பொருட்டால் ஏற்றுக்கொள்! அல்லாஹ் உன்னுடைய அழகிய பேரை கொண்டு கேட்கிறோம் என்று சொன்னாள் வராத பீறிட்டு அழுகை எப்ப வரும் அவர்களுடைய பெரியார்களுடைய பெயரை சொல்லிட்டா வரும் பாருங்க அழுக இதுதான் சைத்தானுடைய வேலை அல்லாஹ் சொல்லுகிறான்” காபிர்கள் உடைய அடையாளத்தை பற்றி சொல்லும் போது,
وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَاِذَا ذُكِرَ الَّذِيْنَ مِنْ دُوْنِه اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَ
ஏக அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்படுமாயின் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் குமைய ஆரம்பிக்கின்றன. ஆனால், அவனை விடுத்து மற்றவர்களைப் பற்றிக் கூறப்படுமாயின் உடனே அவர்கள் மகிழ்ச்சியினால் பூரிப்படைகின்றார்கள். (அல்குர்ஆன் 39 : 45)
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் உள்ளம் அது சுருங்கி போய்விடும் என்ன நீங்க அல்லாஹ்வைப் பற்றியே பேசிகொண்டு இருக்கிறீர்களே பெரியவர்கள் பத்தி கொஞ்சம் சொல்லுங்க சில பேரு இஸ்லாம்ல ஒரு மாடல் இட் இஸ்லாம் ஒரு மாடல் இஸ்லாம் ஒரு நவீன இஸ்லாம் ஒரு புரிதலான இஸ்லாம்,
கடைசியில் எந்த அளவுக்கு ஆகிடுச்சு என்று சொன்னால் ஒரு முசிறிக்க சந்திக்கும் போதும் கூட அவன்னுடைய ஷிர்க்கு அவனுடைய முகத்தில் நியாயப்படுத்தக் கூடிய அளவுக்கு உங்க வழியில நீங்க கடவுளை தேடுறீங்க எங்க வழியில நாங்க கடவுளை தேடுகிறோம் இரண்டு பேரும் சொர்க்கத்துக்கு தான் போக போறோம், எங்க கொண்டு போய் விட்டுருச்சு பாத்தீங்களா?
ஆகவே, அன்பான சகோதரர்களே! இந்த மோசமான நிலையிலேயே ஒன்று என்ன இந்த ஷிருக்கை குஃபுரை நியாயப்படுத்துவது அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நிராகரிப்பு இணைவைப்பு சிறுத்தை குஃபூர் என்று ஏற்றுக் கொள்ளாமல் அவுங்களுடைய விருப்பம் அவங்க செய்யறாங்க அவர்களுடைய ரப்பு அவர்களை விசாரணை செய்து கொள்வார்கள்.
அவன்தான் விசாரணை செய்யப் போகிறான் நமக்கு அந்த அதிகாரத்தை நீ அதை சிறுக்கு நம்ப வேண்டும் என்று அல்லாஹ் சொல்றான் உன்னுடைய முகத்திற்கு முன்னாடி நீ தாவா கொடுக்கும்போது இறுதி சிருக்கு அவனுக்கு சொல்லு என்று அல்லாஹ் சொல்லுகிறான் நீ சொல்ல மாட்டேன்னு மறுத்தா நீ இருக்கிறதுல உனக்கு சந்தேகம் வந்துவிட்டது பிரச்சனை என்ன நீ இருக்கக்கூடிய கொள்கையில் உனக்கு சந்தேகம் வந்துவிட்டது.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எப்படி அனுப்பப்பட்டார்கள் என்றால் சகோதரர்களே! இங்க பாருங்க” இந்த தவ்ஹீதும் சுன்னாவும் இருக்கிறது இது புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சரியான கான்செப்ட் என்னன்னா எந்த அளவுக்கு இதனை சைத்தான் குழப்பி வைத்திருக்கிறான், என்றால் குர்ஆன் இதெல்லாம் நமக்கு புரியாதுங்க ஆயத்தை நேரடியாக படித்தீர்கள் என்றால் வழி கெட்டுப் போய் விடுவீர்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் சைத்தான் எப்படி ஆக்கி வைத்திருக்கிறான் என்று பாருங்கள் ஹதீஸை தொடுவதற்கு நமக்கு தகுதி கிடையாது,
அதற்கு அப்புறமா எப்ப குரானை தொட்ட புரியாது என்றால் ஹதீஸை தொட்டால் விளங்காது என்று சொன்னியோ உனக்கு மிஞ்சினது என்னதான் மிஞ்சும் அதுதான் மிஞ்சும் அந்த ஷிர்க்குதான் மிஞ்சும் இல்லையா அதுதான் மிஞ்சும் உனக்கு தவ்ஹீதை படிக்க தகுதி இல்லை என்றால் அப்ப எத படிக்க தகுதி இருக்கு?
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய சுன்னாவை படிக்க உனக்கு தகுதி இல்லை என்று சொன்னால் அப்ப எதைப் படிக்க போற பித்அதத்தை தான் படிக்கப் போற என்ன செய்றாங்க ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை இருக்கு பாருங்க அல்லாஹ் அவர்களை நபியாக அனுப்பி இருக்கான் பாருங்க கான்செப்ட் நம்பர் ஒன்னு அல்லாஹ் என்ன சொல்லுகிறான் அல்லாஹ் என்ன சொல்லுகிறான்”
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَىِ اللّٰهِ وَرَسُوْلِه وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49 : 1)
என்ன செய்யக்கூடாது நீங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நீங்கள் முந்தக் கூடாது முந்தாதீர்கள் என்றால் என்ன ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முந்தி பேசாதீர்கள் அவர்களுடைய கருத்து அல்லாத கருத்துக்களை சொல்லாதீர்கள்,
நீங்கள் எங்க வெயிட் பண்ணனும் தீன் என்று வந்துவிட்டால் நீங்கள் முற்ப்படுத்தவேண்டியது என்ன இரண்டாவது கான்செப்ட் உலகத்தில் நல்லவர்கள் இருக்கலாம் நல்லவர்களை போதிக்க கூடியவர்கள் இருக்கலாம் இப்படி நம்ம எல்லாரையும் பாவியானு சொல்ல வேண்டியதுதான் அவர்கள் அவர்களிடத்தில் இபாதத்தை செய்ய வேண்டியது தான் இமான் தக்வா இக்லாஸ் எல்லாமே இருக்கு அவர்களுடைய இபாதத்திற்கு நான் கூலி தரப் போகிறேன்.
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே பொறுப்பாக இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.) (அல்குர்ஆன் 88 : 25, 26)
உங்களுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை ஃபாலோ பண்ணுவதற்கு ஒருத்தர் தேவை அந்த பாலோ பண்ண கூடியவர்கள் நீங்க யாரை ஃபாலோ பண்ணுகிறீர்களோ அவர் கண்டிஷன் இல்லாமல் இருக்கணும் அப்படிபட்டவர் ஒருத்தராக தான் இருக்க முடியும் அல்லா என்ன சொல்லிட்டான் ஆலுஇம்ரான் அல்ல தெளிவா சொல்லிட்டான்.
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.” (அல்குர்ஆன் 3 : 31)
மூமின்களை உங்களுக்கு அல்லாஹ்வுடைய அன்பு இருக்குமேயானால் என்னை பின்பற்றுங்கள் நோ எனி கண்டிஷன் ரசூல் பண்ணி தான் ஆக வேண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேள்வி கேட்க முடியாது எனக்கு பிடிக்கல யாரசூலல்லாஹ் எனக்கு சிரமமா இருக்கு யாரசூலல்லாஹ் இது எனக்கு ஒத்து வராது யாரும் சொல்லல எதுவும் சொல்லக்கூடாது செஞ்சு தான் ஆக வேண்டும்.
போருக்கு போனார்களா போய் தான் ஆக வேண்டும் தர்மம் செய்ய சொன்னாங்களா செஞ்சு தான் ஆக வேண்டும் அவர்கள் ஹிஜ்ரத் செய்ய சொன்னார்களா செஞ்சுதான் ஆக வேண்டும். அவருக்கு நீ மாறு செய்யக் கூடாது நீ மாத்தி யோசிக்கவே கூடாது இதுதான் சஹாபாக்களுக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்த தர்பியத் நபியுடைய,
அமலை பார்த்தால் உடனே அதை செய்துவிட நபி இது எனக்கு மட்டும் கொடுத்த தனிப்பட்ட விஷயம் என்று சொன்னால் மட்டும் தவிர அப்படி இல்லையென்றால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் என்று நாம் பின்னாடி போய்க் இந்த தகுதி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவிர வேறு யாருக்கும் கிடையாது கொடுக்கிறவர்கள் தான் முஸ்லிம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன செய்தார்கள்.
650 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى إِلْقَاءِ نِعَالِكُمْ»، قَالُوا: رَأَيْنَاكَ أَلْقَيْتَ نَعْلَيْكَ فَأَلْقَيْنَا نِعَالَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فِيهِمَا قَذَرًا - أَوْ قَالَ: أَذًى - " وَقَالَ: " إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ: فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا"،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலிலே தொழுகை வைத்துக் கொண்டிருந்தார்கள் செருப்பு போட்டு இருந்தார்கள் தொழுதுகிட்டு இருக்கும்போது செருப்பை கழற்றி வைத்தார்கள் அதை பார்த்து பின்னாடி இருக்கும் மக்களும் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் செருப்பை கழற்றி வைத்தார்கள் அவர்கள் சலாம் கொடுத்த பிறகு நான் தான் செருப்பை கழட்டினேன் நீங்கள் ஏன் கழற்றினீர்கள் யா ரசூலுல்லாஹ் நீங்கள் கழட்டினீர்கள் அதனால் நாங்களும் கழற்றினோம் பதில் அதுதான்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குதுரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூது, எண் : 650
இன்றைக்கு பாருங்க அல்லாஹ் பாதுகாக்கணும் யா ரஹ்மான் யா ரஹீம் கடைசியில் முஸ்லிம் சமுதாயத்திற்கு வந்த கேடு என்ன ஹதீஸில் கேள்வி ஹதீஸ் இருக்கு மாற்றமாக ஒருவனை வழி இடத்தில் கேள்வி கேட்காமல் அவர் முன்னாடி நின்று இருக்கிறார்கள்,
ரசூல் அஸ்ஸலாமு அலைக்கும் ஹதீஸை விமர்சனம் செய்கிறார்கள். சஹிஹான ஹதீஸை மறுக்கிறார்கள் விடுகிறார்கள் அதற்கு மாற்றமான ஒரு அமலை செய்கிறார்கள். ஹதீஸில் இல்லாததை சொல்லித் தருகிறார்கள் இதற்கு மாற்றமாக போதிக்கிறார்கள் அவரையும் நம்புகிறார்கள்.
ஹதீஸை நம்பினால் குஃபூர் என்று சொல்லுகிறார்கள் அதனையும் சஹீஹான ஹதீஸை நம்புறது ஈமானா? குப்ரா? ஒருவன் சொல்லுகிறான் ஸஹீஹான ஹதீஸை நீ நம்பினால் நீ காபிர் ஆகி விடுவாய் பி நபி ஸல்லல்லாஹு அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸை ஏற்க மறுக்கிறார்கள், அப்ப என்ன ஆகிருச்சு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒருத்தருக்கு தகுதி கொடுக்கப்பட்டது, அவர்களுடைய அறிவை விட, அவர்களுடைய கலாச்சாரத்தை விட, அவருடைய தத்துவத்தை விட இன்னொருவருடைய கலாச்சாரம் உயர்ந்து விட்டது,
அது எந்த பெயரில் சொன்னாலும் சரி அறிவியல் என்ற பெயரில் சொல்லுங்க நவீனம் என்ற பெயரில் சொல்லுங்க அல்லாஹ்விடத்தில் குப்ரு குப்ரு தான் இன்றைக்கு இந்த முஸ்லிம்கள் மறந்துவிட்ட மிக முக்கியமான அடிப்படைலான ஒன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸ்டேட்டஸ் இந்தப் பக்கம் உள்ள கூட்டம் எல்லாம் சொல்லும் ரசூலுல்லாஹ்வை அவமரியாதை செய்கிற கூட்டம் மௌலது ஓதுவது இல்லையா, மீலாது கொண்டாடுவது இல்லையா உங்க பேர் என்ன சொல்றாங்க ரசூலுல்லாஹ் அவ மரியாதை செய்யற கூட்டம் என்று சொல்லுகிறார்கள் ரசூலுல்லாவிற்கு கண்ணியம் கொடுக்காத கூட்டம்.
இன்னொரு கூட்டம் இருக்கிறது தங்களுக்கு தாங்களே தவ்ஹீத் பெயர் என்ற வச்சுக்கிட்ட கூட்டம் தங்களுக்கு தாங்களே குர்ஆனை சுன்னாவை அசலாக பின்பற்ற போகிறோம் என்ற கூட்டம் என்ன சொல்றாங்க இவங்க எல்லாம் ரசுல்லாவை தக்லீது பண்ணலங்க இவர்களெல்லாம் ஸலஃபுகளை தக்லீது செய்யக்கூடிய கூட்டம் ஒரு கூட்டம் சொல்லுது ரசூலுல்லாஹ்வை அவமரியாதை செய்யக்கூடிய கூட்டம் ஹதீஸை உறுதி செய்யப்பட்ட ஹதீஸை சஹாபாக்கள் உடைய கருத்துகள் இருந்தால் கூட தாபியீன்கள் கருத்துக்கள் இருந்தால் கூட அதனை விடக்கூடிய நம்மளை பார்த்து சொல்லுகிறார்கள் இவர்களெல்லாம் ஸலபுகளை தக்லீது செய்யக்கூடியவர்கள். யாரு ஹதீஸை ஆய்வு என்ற பெயரில் மறுக்கிறார்களோ அவர்களை பெரிய அறிவாளி பெரிய வழிகாட்டி என்று நினைக்கிறார்கள்.
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.” (அல்குர்ஆன் 3 : 31)
எந்த கண்டிஷனும் இல்லாமல் எதுக்குன்னு கேட்காம பின்னாடி போகிற தகுதியான ஒரே மனிதர் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அடுத்த கண்டிஷன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்து நீங்கள் எதுவும் பேசக்கூடாது நீங்கள் பின்பற்ற வேண்டும்,
இங்க பாருங்க நபிபிட்ட பிரச்சினை பண்ற வேலையே வச்சுக்காதீங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகின்ற செயலை மாற்றமாக செய்வதுதான் பிரச்சனை காஃபிர்கள் நபியை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று போய் விட்டார்கள் முனாபிக்குகள் என்று ஒரு கூட்டம் இருந்தது அவர்கள் என்ன சொன்னார்கள்.
اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُه وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ
(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான். (அல்குர்ஆன் 63 : 1)
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் மீது சாட்சி சொன்னார்கள் ஆனால், அவர்கள் என்ன சொன்னாலும் பிரச்சனை செய்வார்கள் போருக்கு போகச் சொன்னால்,
وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا وَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّا تَّبَعْنٰكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَٮِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِىْ قُلُوْبِهِمْ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَ
மேலும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்று அல்லாஹ் இனங்கண்டு கொள்வதற்காகவும்தான் (ஏற்பட்டன). “வாருங்கள், இறைவழியில் போர்புரியுங்கள்; அல்லது குறைந்த பட்சம் (உங்களின் நகரத்தையாவது) தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று இந்த நயவஞ்சகர்களிடம் கூறப்பட்டது. அதற்கு, “இன்று போர் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்களும் உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நேரத்தில் இறைநம்பிக்கையைவிட நிராகரிப்புடன் (குஃப்ருடன்) அவர்கள் மிக நெருக்கமாய் இருந்தார்கள். தம் உள்ளங்களில் இல்லாதவற்றை நாவினால் கூறுகின்றார்கள்; மேலும், அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 167)
இது ஒரு போரா நாங்க எல்லாம் போக மாட்டோம் நீங்க போயிட்டு வாங்க தர்மம் செய்யுங்க முகமே உங்களுக்கு ரொம்ப அவசியமாக இருக்கிறது என்ன நீங்க உசாட்க்கு அள்ளி அள்ளி கொடுத்துட்டு இருக்கீங்க எங்க குடும்பத்துக்கு தேவை இல்லையா நபியின் உடைய கருத்தோடு முரண்படக்கூடியவர்கள் முனாஃபிக்குகள்,
முனாஃபிகள் தொழுதார்களா இல்லையா, மஸ்ஜிதுகளை நோன்பு வைத்தார்களா இல்லையா, ரசூலுல்லாஹ்வோடு ஹஜ் செய்தார்களா இல்லையா எல்லாம் செஞ்சாங்க செய்த பிரச்சனை அல்லாஹ்வுடைய செய்த பிரச்சனை நபியுடன் இல்லன்னு பிரச்சினை பண்ணாங்களா நபியை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை மாற்றமாக செய்வது தான் பிரச்சனை.
அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் தவ்ஹீத் என்ற பெயரில் நபியிடம் இருந்து சஹாபாக்களிடமிருந்து நம்பப்பட்ட இமாம்களிடமிருந்து அவருடைய ஹதீஸுகளை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள் மாற்றி கொண்டிருக்கிறார்கள் அதை நம்புவது குஃப்ரா என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை,
அந்த அறிவு கெட்ட மூடனுக்கு என்ன சொல்றாரு தலைப்பு கொடுத்து தெரியும் யாருன்னு உங்களுக்கு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதற்கு மாற்றமாக செய்வது சிந்திப்பது அதை சரி காணுவது அது எதுவாக இருந்தாலும் சரி ஒரு தத்துவத்தை செய்தாலும் சரி அது அந்த மனிதனை குஃபரிலே போய் சேர்த்து விடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை வெறுப்பது. அவர்களுடைய வழிமுறையை வெறுப்பது இரண்டு விஷயம் இருக்கின்றது ஜஸ்ட் நீங்கள் சொன்னதை விடுறீங்க சுன்னத்தை ஏற்றுக் கொள்கின்றீர்கள் ஆனால், விட்டு விடுகின்றீர்கள் அந்த ஈமானுடைய முழுமை கிடைக்கவில்லை நன்றி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஹபத் கிடைக்கவில்லை.
ஆனால், அதைப் பற்றிய வெறுப்பையோ விமர்சனத்தையோ நீங்கள் வெளியிடவில்லை இது ஒரு பாவம் அல்லாஹ் இதற்கு தண்டனை கொடுத்து மன்னித்து விடுவான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா என்று அறியப்பட்டதை வெறுப்பது இது ஒரு மனிதனை குஃப்ரிலே போய் சேர்த்து விடும் இது இன்றைய உள்ள மக்களுக்கு தெரியாமலே இருக்கின்றது. அல்லாஹுத்தஆலா தன்னுடைய குர்ஆனில் காஃபிர்களை பற்றி கூறுகிறான்:
وَالَّذِينَ كَفَرُوا فَتَعْسًا لَهُمْ وَأَضَلَّ أَعْمَالَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا مَا أَنْزَلَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ
இன்னும், எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கேடு (-இழிவு, கேவலம், துர்பாக்கியம்) உண்டாகட்டும். அவர்களின் செயல்களை அவன் வழிகேட்டில் விட்டுவிடுவான். அது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் இறக்கிய (வேதத்தை, தூதர் கொண்டு வந்த மார்க்கத்)தை வெறுத்தார்கள். ஆகவே, அவன் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான். (அல்குர்ஆன் 47 : 8, 9)
இந்த காபிர்கள் எந்த புண்ணியம் செய்தாலும் சரி அவர்களுக்கு நன்மையே கிடைக்காது இவர்களுடைய எந்த அமலும் நேர்வழியில் வந்து சேராது அனைத்தும் வழிகேட்டில் தான் போய் முடியும் ஏன் தெரியுமா அல்லாஹ் இதற்கு ஒரு காரணம் சொல்லுகின்றான் அல்லாஹ் இறக்கியதை இவர்கள் வெறுத்தார்கள் குர்ஆனையும் அல்லாஹ் தான் இறக்கினான். சுன்னாவையும் அல்லாஹ் தான் இறக்கினான்.
அடுத்ததாக ஆறாவது விஷயம் என்னவென்று பார்த்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும் ஹதிஸையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும், நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் அதை நீங்கள் அமலில் கொண்டு வர வேண்டும், இப்பொழுது ஒருவர் என்ன செய்கிறார் என்று சொன்னால் அதை அவர் அமலிலும் கொண்டு வரவில்லை, குறைந்தபட்சம் அந்த ஸுன்னத்தின் மீது மரியாதையும் இல்லை, அந்த சுன்னத்தை கேலி கிண்டல் செய்கிறார், விமர்சனம் செய்கிறார், பரிகாசம் செய்கிறார்.
சில நபர்களை பார்த்தோம் என்று சொன்னால் எக்குத்தப்பாக படித்தவர்களாக இருந்தால் புர்கா படுவதைக் கூட அவர்கள் கேளியாக அழைப்பார்கள் தாடி வளர்ப்பதை கிண்டல் செய்வார்கள் இவர்கள் ஓபன் ஆகவே, சுன்னத்தை கேலி செய்வார்கள் எவர் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும் ஹதீசையும் மதிக்கவில்லையோ கேலி செய்கின்றாரோ அது எதுவாக இருந்தாலும் சரி அது அவரை இறை நிராகரிப்பில் கொண்டு சென்று விடும். அல்லாஹுத்தஆலா தன்னுடைய குர்ஆனில் கூறுகிறான்:
وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ
(இதைப் பற்றி) நீர் அவர்களிடம் கேட்டால், “நாங்கள் எல்லாம் (சிரித்து கேலியாக பேசுவதில் கவனமற்று மிகத் தீவிரமாக) மூழ்கி இருந்தோம்; இன்னும், (பேசி) விளையாடிக் கொண்டிருந்தோம்” என்று அவர்கள் நிச்சயம் (பதில்) கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையுமா கேலிசெய்து கொண்டிருந்தீர்கள்?”
நீங்கள் (செய்யும் விஷமத்தனத்திற்கு) சாக்குப்போக்கு கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் திட்டமாக நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தால் (மற்ற) ஒரு கூட்டத்தை, - நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால் - தண்டிப்போம். (அல்குர்ஆன் 9 : 65, 66)
ஒரு சம்பவத்தை நான் இங்கு பார்க்கலாம் ஒரு சஹாபி இருக்கிறார் அவருக்கு ஒரு அடிமைப்பெண் இருந்தார்கள் அடிமைப்பெண் மூலமாகத்தான் அவருக்கு குழந்தை அவருக்கு மனைவி கிடையாது அந்த அடிமைப்பெண் எப்படி என்று சொன்னால் அந்த கண் தெரியாத சஹாபியை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் ஆனால், அந்த சஹாபி சொல்கிறான் அவளுக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை என்னவென்று சொன்னால் இரவில் அமர்ந்தால் நன்றி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யேச ஆரம்பித்து விடுவாள்.
ஒரு நாள் அந்த சஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகிறார் வந்து யாரசூலல்லாஹ் என்னால் தாங்க முடியவில்லை என்னுடைய குழந்தையை பெற்றெடுத்த அடிமைப்பெண் உங்களை ஏசுகிறாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதுவும் சொல்லவில்லை பொறுமையாக இரு என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்,
ஒரு நாள் ராத்திரி அதே போல இரவு படுத்த உடனே அந்தப் பெண் இயேசு ஆரம்பித்து விடுகிறாள் உடனே இந்த சஹாபி தப்பி தவழ்ந்து அங்குள்ள அடிமைகளுடைய ஈட்டியை எடுத்து வந்து அந்தப் பெண்ணை தேடுகிறார் வயிற்றில் ஒரே சொருகாக சொருகி கதையை முடித்து விடுகிறார்,
அதோட ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகிறார்கள் நபியவர்களே என்னால் தாங்க முடியவில்லை நான் கொலை செய்து விட்டேன் அவளுடைய ரத்தத்தை குற்ற பரிகார ரத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை
இஸ்லாத்தில் நபியை ஏசுவது அவ்வளவு பெரிய பாவம். நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் சகோதரிகளே! நம்முடைய ரீதியிலேயே ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை ஏசி கொண்டிருக்கின்றான் அவனை நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பாருங்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா என்று அறிந்தால் நம்முடைய உள்ளத்தில் அன்பும் கண்ணியமும் வரவேண்டும்.
அடுத்தது பார்த்தோம் என்று சொன்னால் சூனியம் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் சரி இரண்டு கூட்டம் இருக்கிறார்கள் நடுவில் நாம் இருக்கின்றோம் ஒரு கூட்டம் யார் என்று சொன்னால் சூனியத்தை ஆகுமாக்கக்கூடிய கூட்டம்,
இந்த கூட்டம் மொத்தமாக காஃபீர் இப்பொழுது புதிய கூட்டம் யாரு இவர்களுடைய பிரச்சனை என்னவென்று சொன்னால் சூனியம் என்பது இருக்கு என்பதை ஏற்றுக் கொண்டாலே அவர்கள் காஃபிர் எவ்வாறு இருக்கிறது என்று சொன்னால் இப்லீஸ் என்று ஒருத்தன் இருக்கின்றான் என்று சொன்னாலே,
அவன் காஃபீர் என்பதைப் போன்ற இருக்கின்றது நீ முஃமின் என்றால் இப்லீஸ் இல்லை என்று சொல்லு ப்ளீஸ் இருக்கின்றான் என்று சொன்னால் நீ காபிர். மூன்று மனிதர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் ஒருவர் யார் என்றால் சூனியத்தை ஈமான் கொள்ளக் கூடியவர் இவர்கள் சூனியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் என்பதாக அர்த்தம் வைப்பார்கள். சூனியத்தை ஏற்றுக் கொள்வது என்பது வேறு சூனியத்தை மறுப்பது என்பது வேறு.
சூனியத்தின் மீது ஈமான் கொண்டவர் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரை சொல்கிறார்கள் என்று சொன்னால் சூனியத்தை பின்பற்றுபவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். யார் ஒருவன் சூனியம் செய்யத் தொடர்கின்றானோ சூரியத்தை பின்பற்றுகின்றானோ அவன் சென்று விட்டான்.
எட்டாவது விஷயம் இணை வைக்கக் கூடியவர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக உதவுவது முஸ்லிம்களிடத்திலேயே சண்டே சச்சரவு செய்து கொண்டு யாருக்கு போய் சப்போர்ட் செய்வது காஃபிர்களுக்கு சப்போர்ட் செய்வது தவ்ஹீத் ஜமாத் இவர்கள் எப்படி என்றால் நம்மிடம் சண்டை செய்துவிட்டு காபிர்களுக்கு உதவுவார்கள். இரண்டு விஷயம் இருக்கின்றது,
பிற மதத்தவர்களோடு இணக்கமாக இருப்பது சமூக பணிகளில் அவர்களுடன் ஒத்துழைப்பு செய்வது அல்லாஹ் குர்ஆனில் சொல்லக்கூடிய கட்டளை. முஸ்லிம்களிடம் சண்டை செய்து முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களை தூண்டுவது என்பது இது ஒரு மனிதனை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றிவிடும்.
ஒன்பதாவது விஷயமாக இருக்கும் குறிப்பாக ஷூஃபிகள் சம்பந்தப்படுவார்கள். இந்த சூபி கொள்கையில் முக்கியமான கொள்கை என்னவென்று சொன்னால் இவர்கள் ஆரம்பத்தில் பார்த்தால் தொழுகை வருவார்கள் அனைத்திலும் சரியாக இருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் சென்றவுடன் அடுத்தது இவர்களுக்கு என்ன போதிக்கப்படும் என்று சொன்னால் யார் இந்த சரீரத்தை பின்பற்றி பின்பற்றி ஒரு கட்டத்திற்கு சென்று விடுகின்றார்களோ,
உங்களுக்கு அடுத்ததாக அவர்களுடைய மஃரிபத்து, லெவலுக்கு போனதற்குப் பிறகு இனி அவர்கள் மார்க்கத்தை பின்பற்றக்கூடிய அவசியம் இல்லை சரியத்தை பின்பற்றக்கூடிய அவசியம் இல்லை அதற்கு வெளியில் சென்று விட்டார்கள். ஹலால் ஹராம் சட்டம் எல்லாம் அவர்களுக்கு கிடையாது. கடைசியில் எந்த அளவுக்கு போய் விடுவார்கள் என்று சொன்னால் இப்பொழுது நாம் தொழுகிறோம்,
அந்த தொழுகையை அவர்கள் மறுத்து விடுவார்கள் நாங்கள் ஷரியத்திலிருந்து வெளியேறி விட்டோம் நாங்கள் இனிமேல் காஃபாவில் போய் தொழுது விடுவோம். தான் ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் என்னங்க அர்த்தம் அல்லாஹ் பாதுகாப்பான!
இஸ்லாத்தில் அல்லாஹ்வுடைய ஷரியத்தை மீறுவதற்கு திட்ட மக்களுக்கு அனுமதி இருக்கு அப்படி என்று நம்பி விட்டால், அவர்கள் குஃபூருக்கு சென்று விடுவார்கள் யாறாக இருந்தாலும் சரி அவர்கள் இஸ்லாத்தை தான் பின்பற்ற வேண்டும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை தான் பின்பற்ற வேண்டும். இதுதான் ஈமான்.
பத்தாவது விஷயம் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது அல்லாஹ்வுடைய தீனை எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் கற்றுக்கொண்டதை மீண்டும் படித்துப் படித்து நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் இதுதான் நாம் செய்ய வேண்டியது. இதற்கு ஆப்போசிட்டாக ஒன்று இருக்கின்றது,
அறவே மார்க்கத்தை படிப்பது கிடையாது எதைப் பற்றியும் கவலை கிடையாது அல்லாஹ்வுடைய தீனை பற்றி ஹலால் ஹராமை பற்றி எந்த ஒரு அக்கறையும் எடுப்பது கிடையாது எப்பொழுதாவது வாய்ப்பு ஏற்பட்டால் பள்ளிக்கூடம் எப்பொழுதாவது வாய்ப்பு ஏற்பட்டால் நோன்பு நோற்பார் அதற்கு மேல் தீனை பற்றி எந்தவிதமான அக்கறையும் கிடையாது இதுவும் ஒரு மனிதனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடும் அல்லாஹ் பாதுகாப்பான!
ஆக அன்பான சகோதரர்களே! இத்தகைய 10 விஷயங்கள் இருக்கின்றன ஒன்று ஈமானுடைய நிலை இதற்கு எதிராக இந்த பத்து நிலை இருக்கின்றன இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடும் இந்த பத்து விஷயங்களும் ஒரு மனிதனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக்கூடிய முக்கியமான விஷயங்களாக கருதப்படுகின்றது. நீங்கள் சென்று இரவில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும் இந்த அளவிற்கு சமுதாயத்தில் பரவி இருக்கின்றது என்று அல்லாஹ் பாதுகாக்கணும் சகோதரிகளே
அல்லாஹ் சுபஹானஹூதஆலா நாம் கற்றுக் கொண்ட இந்த இலுமை கொண்டு உனக்கு தக்வாவையும் அமலையும் அதிகப்படுத்துவானாக நாம் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களை நம்முடைய குடும்பத்தார்களுக்கு நம்முடைய சமூகத்திற்கு எடுத்துச் சொல்லி விளையும் தவ்ஹீதின் பக்கம் இஸ்லாத்தின் பக்கம் ஈமானின் பக்கம் நினைக்கக்கூடிய நல்ல பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!!!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/