திருமண வாழ்க்கையில் இறை அச்சமும் மனநிம்மதியும் | Tamil Bayan - 750
திருமண வாழ்க்கையில் இறையச்சமும் மன நிம்மதியும்
தலைப்பு : திருமண வாழ்க்கையில் இறையச்சமும் மன நிம்மதியும்
வரிசை : 750
இடம் : சக்தி கல்யாண மண்டபம், காரைக்கால்
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -20-11-2022 | 26-04-1444
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய விருந்தினர்களே! இந்த வலிமா நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கின்ற பெரியோர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! உங்கள் அனைவரையும் இந்த வலிமா நிகழ்ச்சியின் வரவேற்றவனாக அல்லாஹ்விடத்தில் உங்களுக்கும், எனக்கும் இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக! இம்மை மறுமையின் பாக்கியங்களை வேண்டியவனாக!
நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும், நம்முடைய இல்லற வாழ்க்கையிலும், நம்முடைய சமூக வாழ்க்கையிலும் அல்லாஹுத்தஆலா உடைய பொருத்தத்தையும், அன்பையும் வேண்டியவனாக! நம்முடைய வணக்க வழிபாடுகளிலும் அல்லாஹ்வுடைய அங்கீகாரத்தை அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் வேண்டியவனாக! இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அன்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா முஃமின்களாகிய நம் மீது மிகப்பெரிய கருணை உடையவனாக இருக்கிறான். நம் மீது அல்லாஹ்வுடைய அன்பு அதிகம்.
هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا
அவன் இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் உங்களை வெளியேற்றுவதற்காக உங்கள் மீது விசேஷமாக அருள் புரிகிறான். இன்னும், அவனது வானவர்கள் (உங்களுக்காக அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கிறார்கள். (அல்குர்ஆன் 33 : 43)
அல்லாஹுத்தஆலா சொல்லுகின்றான்: அவன் நம்பிக்கையாளர்கள் மீது அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளக்கூடிய, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக்கூடிய, அல்லாஹ்வை கட்டுப்படக்கூடிய, அந்த இறை விசுவாசிகள் மீது அல்லாஹுத்தஆலா கருணை உள்ளவனாக, இரக்கம் உள்ளவனாக இருக்கின்றான்.
அல்லாஹ்வுடைய கருணையின் வெளிப்பாடு தான், அல்லாஹ்வுடைய அன்பின் வெளிப்பாடு தான் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்மை இந்த உலகத்திலே வாழ வைப்பதற்காக இந்த உலகத்திலே அல்லாஹுத்தஆலா நம்மை வசதியாக, இலகுவாக வாழ வைப்பதற்காக அருட்கொடைகளை அல்லாஹுத்தஆலா வழங்கி இருக்கின்றான்.
هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
அவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்திற்கு மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். ஆக, அவற்றை ஏழு வானங்களாக அவன் அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 29)
இந்த பூமியில் உள்ள அனைத்தையும் அவன் உங்களுக்காக படைத்திருக்கின்றான். இந்த பூமியில் உள்ள எல்லா படைப்புகளும் நாம் அவற்றின் மூலமாக பயன்படுவதற்காக, நன்மைகளை பெறுவதற்காக, நம்முடைய வசதிக்காக, நம்முடைய பயன்களுக்காக அல்லாஹுத்தஆலா படைத்திருக்கிறான்.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ
மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்த்தித்து அதை நீக்கக் கோரி) மன்றாடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16 : 53)
உங்களிடத்தில் இருக்கக்கூடிய எல்லா அருட்கொடைகளும் நான் கொடுத்திருக்கிறேன்.
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ
மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். (அல்குர்ஆன் 16 : 18)
உங்களுக்கு நான் கொடுத்திருக்கக் கூடிய அருட்கொடைகளை நீங்கள் என்ன நினைத்தால் அவற்றை எண்ணி கணக்கிட்டு விட முடியாது.
அன்பான சகோதரர்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அத்தகைய மாபெரும் அருளாளன் மகா கருணையாளன். அந்த கருணையின் வெளிப்பாடுதான் இத்தகைய நியாமத்துகளை உலக அருட்கொடைகளை அல்லாஹ் கொடுத்தது.
அதோடு அல்லாஹ் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நிறுத்தி விடவில்லை. இந்த உலகத்திலே நாம் என்னென்ன நியாமத்துகளை அருட்கொடைகளை அவற்றின் மூலமாக பயன் பெற்றுக் கொண்டிருக்கிறோமோ அனுபவித்துக் கொண்டிருக்கிறோமோ இந்த அருட்கொடைகள் எல்லாம் இந்த உலகத்தோடு முடிந்து விடக் கூடியவை.
இந்த உலகத்திலே நம்முடைய செல்வம், நாம் கட்டி மகிழ கூடிய நம்முடைய வீடுகள், பயணம் செய்து மகிழக்கூடிய நம்முடைய சொகுசு வாகனங்கள், நம் அணிந்து மகிழ்ச்சியடைய கூடிய நம்முடைய ஆடைகள், அணிகலன்கள் இவை எல்லாம் இந்த உலகத்தோடு முடிந்து விடக் கூடியவை.
உங்களுக்கெல்லாம் தெரியும் இந்த உலகத்தில் இருந்து யாரும் பிரிந்து வரும்போது எந்த செல்வத்தையும் அவர் எடுத்துச் செல்ல மாட்டார். மனிதன் பேராசைக்காரன் உண்மையைத் தெரிந்தும் கூட மறந்து விடுகிறான்.
أَلْهَاكُمُ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
(செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது. இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள். (அல்குர்ஆன் 102 : 1, 2)
இன்னும் வேண்டும் எவ்வளவு? கணக்கில்லை. அதிகம் வேண்டும் வேண்டு மென்ற ஆசை உங்களை மறக்கச் செய்து விட்டது. மறதியில் தள்ளி விட்டது. யாரை மறந்து விட்டான் மனிதன் படைத்த இறைவனை மறந்து விட்டான். அவனுடைய கடமைகளை மறந்து விட்டான் ஏன் மறுமை வாழ்க்கை கூட மறந்து விட்டான். தனது கப்ருடைய மன்னரை வாழ்க்கையை மறந்து விட்டான்.
இறுதி இல்லம் சொர்க்கமாக இருக்க வேண்டும் அதற்காக அமல் செய்ய வேண்டும், அதையும் மறந்து விட்டான். எதன் காரணமாக? இந்த அழியக்கூடிய செல்வத்தை தேடுகின்ற காரணத்தால். உலகத்திலே செல்வத்தைத் தேடித் தேடி தேடி அதன் மோகத்திலே மனிதன் சிக்கிக் கொண்டு மறுமை மறைந்து விடுகிறான் படைத்த இறைவன் அல்லாஹ்வை மறந்துவிடுகிறான். இந்த உலகத்திலே அல்லாஹ் இவன் மீது சுமத்திய கடமைகளை மறந்து விடுகிறான். அல்லாஹுத்தஆலா சொல்லுகிறான்:
وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
அல்லாஹ்வை மறந்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். அதனால் அவர்களுக்கு அவர்களையே அவன் மறக்கச் செய்துவிட்டான். அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59 : 19)
மனிதனே! நீ அல்லாஹ்வை மறந்து விடாதே, படைத்த இறைவனை மறந்து விடாதே. உன்னை படைத்து பரிபாலிக்கிற அந்த ஏக இறைவனை மறந்து விடாதே. அல்லாஹ்வுடைய நியாமத்துகளை அனுபவிக்கிறான். அல்லாஹ்வுடைய உணவை சாப்பிடுகிறான்.
அல்லாஹ்வுடைய தண்ணீரை குடிக்கிறான். அல்லாஹ் படைத்த காற்றை சுவாசிக்கிறான். இப்படி அல்லாஹ்வுடைய நியாமத்துக்கள் இல்லாமல் அவனால் வாழ முடியாது. இருந்தும் படைத்த இறைவனை அவன் மறந்து விடுகின்றான்.
அன்பான சகோதரர்களே! இந்த அழியக்கூடிய இந்த உலக வாழ்க்கையில் அழியக்கூடிய செல்வங்களைத் தேடி மனிதன் தன்னுடைய மறுமையை வீணடித்துக் கொள்ளக்கூடாது.
தனது ஆகிறதினுடைய வாழ்க்கையிலே அவன் நஷ்டவாளியாக ஆகி விட கூடாது. என்பதற்காக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நபிமார்களை அனுப்பினான், வேதங்களை அல்லாஹ் இறக்கினான்.
அன்பான சகோதரர்களே! நமக்கு இரண்டு விதமான நியாமத்துக்கள் அருட்கொடைகள் இருக்கின்றன. அல்லாஹுத்தஆலா சொல்லுகின்றான்:
أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ
நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். இன்னும், உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். அல்லாஹ்வின் விஷயத்தில் கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் தர்க்கம் செய்பவர்கள் மக்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 31 : 20)
முஸ்லிம்களே! முஃமின்களே! உங்கள் மீது இரண்டு விதமான அருட்கொடைகளை, இரண்டு விதமான மாபெரும் செல்வங்களை அவன் பொழிந்திருக்கிறான். யார் வணக்கத்திற்குரிய இறைவனாக அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டார்களோ, அல்லாஹ்வுடைய நபிமார்கள் மீது நம்பிக்கை கொண்டார்களோ, இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்பிக்கை கொண்டார்களோ, குர்ஆனை வேதமாக ஏற்றார்களோ அந்த மூமின்களுக்கு அல்லாஹுத்தஆலா இரண்டு விதமான அருட்கொடைகளை செய்திருக்கிறான்.
யார் அல்லாஹ்வை நம்பவில்லையோ நிராகரித்து விட்டார்களோ, நபிமார்களை ஏற்றுக் கொள்ளவில்லையோ, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இறைவனிடம் இருந்து ஒரே ஒரு அருட்கொடையை தான் அனுபவிக்கிறார்கள்.
உலகத்தினுடைய அருட்கொடைகளை உலக செல்வங்களை அனுபவத்தில் அனுபவிக்கிறார்கள் ஆனால், இன்னொரு அருட்கொடை இருக்கிறது அல்லாஹ் சொல்கிறானே
وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً
இன்னொரு அருட்கொடை இருக்கிறது அதுதான் மார்க்கம் என்ற அருட்கொடை இஸ்லாம் என்ற அருட்கொடை. நியம்மத்துல் இஸ்லாம் என்ற அருட்கொடை. அல்லாஹுத்தஆலா எப்படி சொல்கின்றான்:
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ذَلِكُمْ فِسْقٌ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக (சிலைகள், இறைநேசர்கள், போன்றவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு) அவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்று மீதமிருப்பது ஆகியவை உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 5 : 3)
(எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, அடையாள சின்னம், சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளால் (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு) தடுக்கப்பட்டுவிட்டன.
இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன்.
ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் (அனுமதிக்கப்பட்ட உணவின்றி) நிர்ப்பந்தத்திற்கு ஆளானால் (மேல் விலக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது. ஏனெனில்), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 3)
நான் இன்று உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்.
وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى
என்னுடைய இந்த அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.
وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَٰمَ دِينًا
இஸ்லாமை உங்களுக்கு நான் மார்க்கமாக ஏற்று அங்கீகரித்து கொண்டேன்.
அன்பான சகோதரர்களே! இந்த உலகத்தில் உள்ள நியாமத்துக்கள் எல்லாம் அழிந்து விடக்கூடிய நியாமத்துக்கள். ஆட்சியாக இருக்கட்டும், செல்வமாக இருக்கட்டும், தங்கம் வெள்ளியின் குவியலாக இருக்கட்டும் ஆனால், இந்த இஸ்லாம் என்ற அருட்கொடை இருக்கிறதே இந்த இஸ்லாம் என்ற அருட்கொடை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அவருடைய உலக வாழ்க்கையும் சீராகிவிடும். அவருடைய மறுமை வாழ்க்கையும் சீராகிவிடும். அல்லாஹுத்தஆலா அத்தகைய இரண்டு பெரிய பாக்கியங்களை கிடைக்கப்பெற்றவர்களாக நம்மை ஆக்கி இருக்கிறானே அல்லாஹ்விற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
ஏன் இதை சொல்ல வருகிறேன் என்றால் இந்தத் திருமணம் நிக்காஹ் திருமணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை ஒரு முஸ்லிமுக்கும், அல்லாஹ் உடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அல்லாஹ்வுடைய தீனின் படி வழி நடக்க கூடிய ஒரு முஃமினுக்கும் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தை தெரியாத மற்றவர்களுக்கும் இடையில் கண்டிப்பாக வேறுபாடு வித்தியாசங்கள் இருக்கும்.
ஏன்? முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு தங்களை இஸ்லாமியர்கள் என்று அடையாளப்படுத்திக் கூட இஸ்லாமை தெரியாதவர்கள், அதை படிக்காதவர்கள், அதை பின்பற்றாதவர்கள் நம்மிலே பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய தூதர் என்று பெருமையாக பேசுவார்கள்.
ஆனால், அந்த தூதர் என்ன வழிகாட்டி இருக்கிறார்கள், அவர்களுடைய ஹதீஸ் என்ன சொல்கிறது, வணக்க வழிபாட்டை பற்றி என்ன சொன்னார்கள், குடும்ப வாழ்க்கையைப் பற்றி என்ன சொன்னார்கள், ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும், ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும், பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்னென்ன வழிகாட்டுதலை குடும்ப வாழ்க்கையிலே அல்லாஹ்வுடைய தூதர் தத்ரூபமாக எதார்த்தமாக வழிகாட்டி இருக்கிறார்கள்.
என்பதிலிருந்து சில விஷயங்களை ஆவது அவரை படித்து தெரிந்து இருக்கிறாரா? கற்று இருக்கிறாரா? என்றால் கூட்டத்தோடு கூட்டமாக பள்ளிக்குச் செல்வார் ஏதோ இமாம் பயான் செய்து கொண்டிருக்கும் பொழுது தூங்கி நிலையிலே கேட்டுவிட்டு அப்படியே கடமையை நிறைவேற்றி விட்டு வந்து விடுவார். நம்மில் பலருடைய பரிதாப நிலை தான் இருக்கிறது.
அன்பானவர்களே! எப்படி கையிலையும் மாணிக்கத்தை வைத்திருப்பவன் தனது அருமையை உணர்ந்தால் தான், அதனுடைய விலை மதிப்பை உணர்ந்தால் தான், அதனுடைய பெரு மதிப்பை அவன் உணர்ந்தால் தான் அதன் மூலமாக அவன் பயன் பெற முடியுமோ கையிலே தங்கத்தையும் வெள்ளியையும் வைத்திருப்பவன் அதனுடைய மதிப்பு உணரவில்லை என்றால் அது எப்படி எந்த பலனையும் தராதோ அது போன்று தான் நம்முடைய மார்க்கமும்.
இந்த மார்க்கத்தினுடைய மதிப்பை இந்த மார்க்கத்தால் என்னால் என்ன செய்ய முடியும். சகோதரர்களே! நம்முடைய தீன் நம்மை மாற்ற வேண்டும். எப்படி நம்முடைய கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். நம்முடைய குணங்களை மாற்ற வேண்டும். நம்முடைய சிந்தனைகளை மாற்ற வேண்டும். எப்படி? அல்லாஹ்வுடைய கட்டளைக்கு ஏற்ப நபி உடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப அப்படி மாற்றிக் கொண்டவர் தான் உண்மையான முஸ்லிம். உண்மையான முஃமின்.
அவர்தான் இந்த இஸ்லாம் என்ற நியாமத்தை கொண்டு பலன் பெறக்கூடியவர். இந்த இஸ்லாம் என்ற அருட்கொடையை கொண்டு இதன் மூலமாக நற் பலன்களை அடைய கூடியவர். அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இந்த இஸ்லாமிய மார்க்கத்திலே குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை மிக முக்கியமான பகுதி. நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த பரிசுத்தமான தூய்மையான அருட்கொடையான மார்க்கம் இருக்கிறதே!
புரிந்து கொள்ளுங்கள்” தொழுகையை மட்டும் கற்றுத் தரவில்லை. நோன்பை மட்டும் கற்றுத் தரவில்லை. ஹஜ்ஜை மற்றும் கற்று தரவில்லை. தொப்பி வைப்பதையும் தாடி வைப்பதையும் புர்கா போடுவதையும் மட்டும் கற்றுத் தரவில்லை.
வாழ்க்கையின் ஒவ்வொரு முனைகளிலும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமக்குத் தேவையான வழிகாட்டல்களை கொடுக்கக் கூடியது தான் நம்முடைய மார்க்கம் இஸ்லாம். அதைப் படித்து உணரும்போது தான் அதனுடைய மதிப்பும் அதனுடைய பலனும் நமக்கு தெரிய வரும்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலாவதாக இந்த திருமணத்தை எப்படி அணுகினார்கள் பாருங்கள்” நாம் நினைக்கலாம் திருமணம் என்பது நமது உடல் ஆசைக்கு மட்டும் என்பதாக இல்லை சகோதரர்களே! உடல் ஆசையின் மூலமாக ஹலாலான முறையில் நிறைவேற்றக்கூடிய சமயத்தில் ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தேவை அவனுடைய மன நிம்மதி.
அவனுடைய மனம் அமைதி பெற வேண்டும். அவனுடைய வாழ்க்கையிலே நிம்மதி கிடைக்க வேண்டும். அல்லாஹுத்தஆலா இந்த திருமணத்தைப் பற்றி சொல்லும் போது உங்களுக்கு நிம்மதி கிடைப்பதற்காக,
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
இன்னும், அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை - அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக - படைத்ததும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், உங்க(ள் இரு குடும்பங்க)ளுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)
சூரா ரூம் உடைய வசனம் எவ்வளவு அழகாக தத்ரூபமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இன்று பலருடைய வாழ்க்கை நிம்மதி இல்லாமல் தொலைந்து இருக்கிறது. செல்வம் இருக்கு குடும்பத்தினுடைய எல்லா வசதிகளும் இருக்கிறது ஆனால், வாழ்க்கையிலே நிம்மதி இல்லை. அல்லாஹுத்தஆலா குடும்ப வாழ்க்கையினுடைய திருமணத்தின் உடைய அந்த அடிப்படை நோக்கமாக நிம்மதியை சொல்கின்றான்.
அல்லாஹ்வுடைய பெயர் அத்தாட்சிகளில் ஒன்று அவன் உங்களுக்காக உங்களிலிருந்து ஜோடிகளைப் படைத்தான். அல்லாஹ்வுடைய அத்தாட்சி கணவன் மனைவி என்ற இந்த உறவுமுறை இருக்கிறதே இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாக ரப்பு குறுப்பிடுகின்றான். சொல்லுகின்றான் ஏன் கணவனுக்கு மனைவியையும், மனைவிக்கு கணவனையும் அல்லாஹுத்தஆலா ஏன் படைத்தான்? என்றால் அந்த மனைவியின் மூலமாக உங்களுக்கு மன நிம்மதியை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அதுபோன்று மனைவிக்கு கணவனின் மூலமாக நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் அவ்வாறு ஆக்கினான்.
وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةًۚ
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கணவனின் குடும்பத்தாருக்கும் மனைவியின் குடும்பத்தாருக்கும் இடையிலே பாசத்தை அல்லாஹுத்தஆலா ஏற்படுத்துகிறான். கருணை இரக்கத்தை அல்லாஹுத்தஆலா ஏற்படுத்துகிறான். இது அல்லாஹ்வுடைய பேர் அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்திக்க கூடியவர்களுக்கு இதில் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. படைத்த ஒருவன் இருக்கின்றான் அவனுடைய கட்டளையின் படி தான் இவையெல்லாம் நடக்கின்றன மாறுகின்றன.
அன்பான சகோதரர்களே! குடும்ப வாழ்க்கையினுடைய, திருமண வாழ்க்கையினுடைய அடிப்படையே மன நிம்மதியாகும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? காசை வைத்து நிம்மதியை வாங்க முடியுமா சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதன் இடத்திலே கோடிக்கு கோடி இருக்கிறது எங்கேயாவது நிம்மதி விற்கப்படுகிறதா?. நிம்மதி எங்கேயாவது விற்கப்படுகிறதா என்றால் எங்கயுமே விற்கப்படாது.
சாமான்கள் விற்கப்படும் உங்களிடத்தில் இருக்கக்கூடிய செல்வங்களைக் கொண்டு நீங்கள் விலை உயர்ந்த சாமான்களை வாங்கலாம். கண்ணை கவரக்கூடிய ஆச்சரியப்படக்கூடிய விலை உயர்ந்த உணவுகளையோ சாமான்களையோ வாங்கலாம். ஆனால், அவற்றின் மூலமாக நிம்மதியை வாங்க முடியுமா என்றால் ஒருபோதும் நிம்மதியை வாங்க முடியாது. பெருமைப்படலாம் காசை வைத்துக் கொண்டு பெரிய வீட்டைக் கட்டி பெருமைப்படலாம். காசை வைத்து பெரிய வாகனத்தை வாங்கி பெருமை படலாம்.
இப்படியாக பணத்தை வைத்து பெருமைப்படலாமே தவிர நிம்மதி பெற முடியாது. நிம்மதி பெற வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதருக்கும் குடும்ப வாழ்க்கை தேவை என்பதை அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான்.
குடும்ப வாழ்க்கை எப்படி தேவை இன்று பலர் குடும்ப வாழ்க்கையிலே இருப்பவர்களே என்ன சொல்கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் குடும்ப வாழ்க்கையை முறையாக அமைத்துக் கொள்ளாததால், கணவன் மனைவியை எப்படி பராமரிக்க வேண்டுமோ அப்படி பராமரிக்காததால், கணவன் மனைவிக்கு என்ன கடமைகளை செய்ய வேண்டுமோ அந்தக் கடமை செய்யாத காரணத்தால், கணவன் மனைவியோடு எப்படி பழக வேண்டுமோ என்ன நற்குணங்களை மனைவியோடு கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடிக்காத காரணத்தால்,
அதுபோன்று மனைவி கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னென்ன ஒழுக்கம் என்னென்ன நற்குணங்கள் இவற்றையெல்லாம் கடைப்பிடிக்காமல் வெறும் மெட்டீரியல் லைஃப் ஆடம்பரமான வீடு, ஆடம்பரமான வாழ்க்கை, இதுதான் முக்கியம் என்று கணவனும் மாறிவிட்ட காரணத்தால், இதுதான் தேவை என்று மனைவியும் மாறிவிட்ட காரணத்தால், சமுதாய மாறிவிட்ட காரணத்தால், எத்தனையோ பேர் இன்று சமுதாயத்திலேயே வசதியான பங்களாக்களிலே வசதியான வாழ்க்கையிலே வாழ்வார்கள் நிம்மதி இருக்கிறதா? கணவனுக்கு மனைவி மீது அன்பு இருக்கிறதா? மனைவிக்கு கணவனின் மீது அன்பு இருக்கிறதா? பிள்ளைக்கு பெற்றோர் மீது பெற்றோருக்கு பிள்ளையின் மீது அன்பு இருக்கிறதா? அந்த உறவு இருக்கிறதா? தேடல் இருக்கிறதா? பாசம் இருக்கிறதா? பற்று இருக்கிறதா என்று கேட்டால் ஒன்றும் இருக்காது.
ஒவ்வொருவர் உடைய வாழ்க்கையும் வேறு ஒரு திசையிலே இருக்கும். உலகத்திலே சகோதரர்களே ஒரு ஆணுக்கு எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள். ஒரு பெண்ணுக்கு எத்தனையோ தோழிகள் இருப்பார்கள் ஆனால்
குடும்பத்தில் ஒரு சுவற்றுக்குள் உறவை ஏற்படுத்தக் கொண்டவர்கள் கணவன் மனைவி உறவு என்பது இருவருடைய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்டது. பெற்றோர் பிள்ளைகள் உறவு அல்லாஹுத்தஆலா ரத்த உறவாக ஏற்படுத்தி விட்டான். இத்தகைய உறவுகளுக்குள்
இத்தகைய இந்த முடிச்சுகளுக்குள் இருந்து கொண்டே பகைவர்களாக, ஒருவரை ஒருவர் வெறுப்பவர்களாக, ஒருவர் ஒருவர் மீது கடுமையான கோபம் உடையவர்களா,க கால்புணர்ச்சி உடையார்களாக வாழ்கின்ற பல குடும்பங்கள் இன்று நம்முடைய சமுதாயத்திலே இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
முந்திய காலத்தில் அன்பாக பாசமாக இருக்கக்கூடிய குடும்பங்கள் வசதி இல்லாவிட்டாலும் கூட ஏராளம் இருப்பார்கள். குடும்பத்தினுடைய சண்டை என்றால் ஏதாவது ஊரில் ஒரு வீட்டில் அல்லது, இரண்டு வீட்டில் இருக்கும்.
சமுதாய தலைவர்களுக்கு தெரியும் முந்திய காலத்திலெல்லாம் தலாக் பிரச்சனை குலா பிரச்சினை என்பது மொத்த ஊரிலே ஒரு வருஷம் இரண்டு வருஷம் மூன்று வருஷத்திலே ஒரு பிரச்சனை வந்தாலே பெரியது. ஆனால் இன்று ஒரு மாசத்திற்கு 10 பிரச்சனை. ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய ஊரிலே காரணம் என்ன சகோதரர்கள்?
அல்லாஹுத்தஆலா கொடுத்த இஸ்லாம் என்ற நியாமத்தை அவர்கள் காட்சி பொருளாக வைத்து விட்டார்கள். குடும்ப வாழ்க்கைக்குள் கொண்டு வரவில்லை. அல்லாஹ் கொடுத்த இஸ்லாம் என்ற அருளை தங்களுடைய பெயருக்கு மட்டும் வைத்து விட்டார்கள் தங்களுடைய குணங்களுக்கு கொண்டு வரவில்லை.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கணவனை பொருத்தவரை மனைவியோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் அந்தப் பாசம், அந்த அன்பு, அந்த கருணை அதற்குரிய சிறந்த முன்மாதிரியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழ்ந்தார்கள்.
இன்று பெரும்பாலான வாலிபர்கள் என்ன நினைக்கிறார்கள் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரை சம்பாதித்து கொடுத்து விட்டேன், வீட்டுக்கு கொடுத்து விட்டேன், உனக்கு கார் கொடுத்து விட்டேன், உனக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்து விட்டேன் அவ்வளவுதான்.
இதற்கு மேலாக தன்னுடைய மனைவியின் மீது அக்கறை காட்டுவது அவளோடு பேசுவது அவளை அழைத்து செல்வது அவளுடைய கவலைகளை கேட்பது அவளை மகிழ்விப்பது என்றால் படுக்கையில் மட்டுமல்ல, அறையில் மட்டுமல்ல அவர்களுடைய 24 மணி நேர வாழ்க்கையிலே உணவு சாப்பிடும் போது இருவரும் அமர்ந்து பேசும்போது பிள்ளைகளோடு இருக்கும்போது இப்படி ஒரு நிம்மதியான ஈடுபாட்டை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுக் கொடுத்தார்களே! இன்று நம்முடைய வாழ்க்கையில் இது பின்பற்றப்படுகிறதா?
முந்திய காலங்களில் சொல்வார்கள் டிவி வந்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்றி விட்டது. டிவியினால் சமுதாயம் கெட்டுவிட்டது என்று. அதற்குப் பிறகு, சீரியல்கள் அதன் மூலமாக சமுதாயம் கெட்டுவிட்டது எல்லோரும் அதை பார்ப்பதிலேயே மூழ்கி விட்டார்கள். குடும்பத்தில் யாரும் பேசுவதில்லை எல்லோரும் டிவி பேசுவதைக் கேட்கிறார்கள். அதைப் பார்க்கிறார்கள் அப்படியே வாழ்க்கை என்பதாக.
சகோதரர்களே! எல்லோரையும் ஆட்டி படைத்திருப்பது இந்த செல்போன் மொபைல் போன். கணவனை வேறு பக்கம் திருப்பி விட்டது. மனைவியை வேறு பக்கம் திருப்பி விட்டது. கணவனுக்கு மனைவியின் மீது உண்டான அன்பை மறைத்து விட்டது. மனைவிக்கு கணவனின் மீது உண்டான ஈடுபாட்டை மறைந்து விட்டது. அதாவது இன்டர்நெட் மூலமாக டிவி மூலமாக என்னென்ன இருந்ததோ எல்லாவற்றிலும் இந்த செல்போனில் கொண்டு வந்து கொடுத்து மனிதனுடைய வாழ்க்கை என்னமோ அவன் திருமணம் முடித்தது உயிருள்ள ஒரு பெண்ணை அல்ல இந்த ஃபோனை தான் என்பதைப் போன்று.
அது போன்று ஒரு பெண்ணும் அவள் திருமணம் முடித்தது ஒரு ஆணை அல்ல. ஒரு செல் ஃபோனை தான் என்பதாக எல்லோருடைய வாழ்க்கையில் இதற்குள்ளே ஒன்றிபோய் அப்படியே குறுகிப் போய் இருப்பதை பார்க்கிறோம்.
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، وَعَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلَ رَجُلٌ عَائِشَةَ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ شَيْئًا؟ قَالَتْ: نَعَمْ، «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். சில உதாரணங்களைப் பாருங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களிலேயே மிகச் சிறந்த ஒரு பெண்மணி நம்முடைய தாய் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது ரசூல் அல்லாஹுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எங்களுக்கு சொல்லுங்கள்!
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் முஸ்னது அஹ்மது, : எண் : 25341
வீட்டில் வந்தால் என்ன செய்வார்கள்? சகோதரர்களே! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொல்லுகிறார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டுக்கு வந்தால் சலாம் கூறிவிட்டு எங்களோடு சேர்ந்து எங்கள் வேலைகளை செய்வார்கள். அதுவும் எப்படி? வீட்டை கூட்டுவார்கள், கிழிந்திருக்கக் கூடிய துணிகளை தைப்பார்கள், வீட்டிலே ஆடி இருந்தால் எங்களுக்கு அதிலே பால் தேவைப்பட்டால் பால் கறந்து கொடுப்பார்கள். தங்களுடைய மனைவிமார்களுக்கு பணிவிடை செய்வார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் முஸ்னது அஹ்மது, : எண் : 25341
சகோதரர்களே! இது ஆண் ஆகிய நாம் எப்படி மனைவிக்கு செய்வது என்ற அந்தப் பெருமை அல்ல அந்த உயர்வு அல்ல இது அன்பை பிரியத்தை வெளிப்படுத்துவதற்கு உண்டான பாசத்தை அக்கறையை வெளிப்படுத்துவதற்கு உண்டான ஒரு அழகிய ஒரு வழிமுறை என்பதை கற்றுக் கொடுத்தார்கள்.
- يا عائِشَ هذا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلامَ قُلتُ: وعليه السَّلامُ ورَحْمَةُ اللَّهِ، قالَتْ: وهو يَرَى ما لا نَرَى.
ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா என்று முழுமையாக அழைக்க மாட்டார்கள் யா அயிஷ் என்று மென்மையாக அழைப்பார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல திருமணங்களை முடித்து வாழ்ந்தவர்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 6201,
ரசூலுல்லாஹ் உடைய மனைவிமார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி என்ன தகவல் கொடுக்கிறார்கள் பாருங்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ إِيَاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ذُبَابٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَضْرِبُنَّ إِمَاءَ اللَّهِ» ، فَجَاءَ عُمَرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ ذَئِرَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ، فَأْمُرْ بِضَرْبِهِنَّ، فَضُرِبْنَ، فَطَافَ بِآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَائِفُ نِسَاءٍ كَثِيرٍ، فَلَمَّا أَصْبَحَ، قَالَ: «لَقَدْ طَافَ اللَّيْلَةَ بِآلِ مُحَمَّدٍ سَبْعُونَ امْرَأَةً، كُلُّ امْرَأَةٍ تَشْتَكِي زَوْجَهَا، فَلَا تَجِدُونَ أُولَئِكَ خِيَارَكُمْ
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை மாலை நேரத்தில் பார்த்தால் பல பெண்கள் வீட்டுக்கு வந்து செல்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டுக்கு வந்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிடத்திலே கேட்கிறார்கள் ஆயிஷா ஏன் பல பெண்கள் வீட்டுக்கு வந்து விட்டு செல்கிறார்கள் என்பதாக சொன்னார்கள். தங்களுடைய கணவன்மார்கள் கைநீட்டி அடிக்கிறார்கள் என்பதாக வந்து முறையிட்டு செல்கிறார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா, திர்மிதி, எண் : 1985, 3895
உடனே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களை தோழர்களை எல்லாம் மஸ்ஜிலிருந்து வீட்டிற்கு திரும்பிய தோழர்களை எல்லாம் மீண்டும் மஸ்ஜிதுக்கு அழைக்கிறார்கள் உட்கார சொல்கிறார்கள். அந்தத் தோழர்களுக்கு உடனே ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள். அதில் சொல்கிறார்கள் யார் தங்களுடைய மனைவிமார்களை அடிப்பார்களோ முதலாவது சொன்னார்கள்;
சில பெண்கள் தங்களுடைய வீட்டிற்கு வந்து சென்றார்கள் தங்களுடைய கணவர்மார்கள் தங்களை அடிப்பதாக, சொன்னார்கள் யார் தங்களுடைய மனைவியை கைநீட்டி அடிப்பாரோ அவர் உங்களில் சிறந்தவராக ஆக முடியாது. உங்களில் உயர்ந்தவராக ஆக முடியாது.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா, திர்மிதி, எண் : 1985, 3895
அது மட்டுமா? மேலும் சொன்னார்கள்:
خيرُكُم خَيرُكُم لأَهْلِهِ وأَنا خيرُكُم لأَهْلي ، وإذا ماتَ صاحبُكُم فدَعوهُ
உங்களில் சான்றோர் உயர்ந்தவர் சிறந்தவர் யார் என்றால் யார் தனது குடும்பத்திலே சிறந்தவராக இருக்கிறாரோ என்று சொல்லிவிட்டு நான் எனது குடும்பத்தாருக்கு சிறந்தவராக நடந்து கொள்கிறேன். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொல்லுகின்றார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய மனைவிமார்கள் யாரையும் அடித்ததில்லை திட்டியதில்லை யேசியதில்லை தன்னுடைய பணியாளர்களில் யார் மீதும் கோபித்ததில்லை.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 3895
இன்று நம்முடைய வாழ்க்கை பாருங்கள் நம்முடைய மனைவிமார்கள் மீது சின்ன சின்ன அற்பமான காரியங்களுக்கெல்லாம் கோபத்தில் நெருப்பை அவர்கள் மீது வீசுகிறோம். வெறுப்பை அவர்கள் மீது உமிழ்கிறோம். அவர்களை சிலர் அடிக்கவும் செய்கிறார்கள். சிலர் அடிக்காத குறையாக அவர்களை கடிந்து கொள்கிறார்கள் அந்தக் குறையை காலமெல்லாம் சொல்லிக்காட்டக் கொண்டே இருக்கிறார்கள்.
மனைவிக்கு கணவன் மீது உண்டான அந்த இயற்கையான அன்பு பாசம் இருக்கிறதே குறைந்து கொண்டே போகிறது. முதலாவதாக மனைவியை அழைப்பதிலேயே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகிய வழிமுறையை சொன்னார்கள் சலாம் சொல்லுவது, பேசுவது, சிரிக்க வைப்பது, அன்போடு உறயாடுவது இந்த ஒரு கலாச்சாரமே நம்மிலே இல்லாமல் போய்விட்டது. ஏதாவது ஒரு குணத்தை வைத்துக் கொண்டே மட்டும் அவளை குறை சொல்லிக் கொண்டே இருப்பது.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 3895
وحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، حَدَّثَنَا عِيسَى يَعْنِي ابْنَ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ» أَوْ قَالَ: «غَيْرَهُ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின் இருக்கிறானே அவன் முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அந்தப் பெண்ணுடைய ஒரு குணம் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இன்னொரு குணம் அவனுக்கு பிடிக்கும் படி இருக்கும். உங்களது மனைவிமார்களிகத்தில் நீங்கள் பிரியப்படக் கூடிய என்ன குணம் இருக்கிறது என்று பாருங்கள் உங்களுக்குப் பிடிக்காத குணங்களை தேடாதீர்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1469
இன்று பலர் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் இப்படித்தான் நடக்கிறார்கள். ஏதோ மனைவியானவள் எப்படி என்றால் தனக்கு சமைத்துக் போடுவதற்கும் தங்களுடைய பிள்ளைகளை வேலை செய்வதற்கும் என்று மட்டுமே நினைக்கிறார்களே தவிர அவர்களை ஒரு உயிர் உள்ள ஜீவனாக அவர்களிடத்திலே பேச வேண்டும் அவர்களது கவலைகளை கேட்க வேண்டும். இப்படியான உணர்வுகளை அவர்கள் இழந்து விடுகிறார்கள்.
இங்கே ஆண்களுடைய நிலை இப்படி என்றால், இன்னொரு பக்கம் நம்முடைய சமுதாயத்தின் உடைய பெண்களுடைய நிலைமை அதைவிட மோசமாக இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு பெண் எப்படி கணவனிடத்திலே நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உண்டான வழிகாட்டுதலை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். கணவனை சந்தோஷப்படுத்துவது,
கணவனை மகிழ்விப்பது, கணவனுக்கு பணிவிடை செய்வது, கணவன் அழைத்தால் செல்வது, கணவனுக்கு தேவையான அந்த ஆலோசனைகளை கொடுப்பது இப்படியாக ஒரு அன்னியோன்யமான வாழ்க்கையை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக் கொடுத்தார்கள்.
குர்ஆன் சூரா அண்ட் நிஸா உடைய நான்காவது அத்தியாயத்தினுடைய 34-வது வசனத்திலே அல்லாஹ் சொல்லுகின்றான் பெண்களைப் பற்றி சொல்லும் பொழுது
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
அவர்களில் சிலரை (-பெண்களை) விட சிலரை (-ஆண்களை) அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பார்கள். ஆகவே, நல்ல பெண்கள் (அல்லாஹ்விற்கும்; பிறகு, கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் இருக்கும்போது (பெண்) எதை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறினானோ அதை (-கணவனின் செல்வத்தையும் தமது கற்பையும்) பாதுகாப்பார்கள்.
இன்னும், (பெண்களில்) எவர்கள் (உங்கள் கட்டளைக்கு) மாறுசெய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இன்னும், (அவர்கள் திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்தி வையுங்கள். இன்னும், (அதிலும் அவர்கள் திருந்தாவிட்டால்) அவர்களை (காயமேற்படாதவாறு) அடியுங்கள். ஆக, அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) ஏதேனும் ஒரு வழியைத் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 34)
நல்ல பெண்கள் என்று குர்ஆனிலே அல்லாஹுத்தஆலா அந்த நல்ல பெண்களுக்கு உரிய அடையாளத்தை அல்லாஹுத்தஆலா வர்ணிக்கின்றான். சகோதரர்களே! யாரை அல்லாஹ் சொல்லுகின்றான்? இன்று பலர் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னால் வெறும் தொழுது விட்டால் மட்டும் நல்ல பெண்களாக ஆகிவிடலாம் அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை அடையலாம்.
நாம் ஹிஜாபை பேணி விட்டால் மட்டும் அல்லாஹ்விடத்திலே மதிப்பை பெற்று விடலாம் மார்க்க பெண்ணாக மாறிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய கடமை உங்களதோ சொர்க்கத்திற்கா உங்கள் ரப்புக்காக நீங்கள் இதை செய்துதான் ஆக வேண்டும். அல்லாஹுத்தஆலா ஸாலிஹான பெண் என்பதற்கு அவன் என்ன சொல்கிறான்?
فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ
ஸாலிஹான பெண்கள் யாரென்றால் தங்களது கணவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள்.” அன்பானவர்களே! ஒரு பெண் படித்தவர்களாக இருக்கலாம், கணவனை விட அதிகமாக, ஒரு பெண் கணவனை விட அதிக வசதி உள்ளவர்களாக இருக்கலாம், ஒரு பெண் கணவனை விட பெரிய அறிவாளியாக இருக்கலாம்,
ஆனால், தனது கணவனின் மீது பெருமை பிடித்தவளாக நடப்பது, கணவன் இடத்திலே பணியாமல் நடப்பது, அவனுடைய மனதை காயப்படுத்துவது, அவனை எடுத்து அறிந்து பேசுவது, அவனை புறக்கணிப்பது, இது ஒரு முஃமினான பெண்ணுக்கு அழகு அல்ல. அவளுடைய பேச்சில் பணிவு வேண்டும், அவருடைய பேச்சில் கணவன் மீது உண்டான அக்கறை வேண்டும், அவளின் பணிவிடையிலேயே கணவன் மீது உண்டான பாசம் வேண்டும்.
ألَا أخبرُكَ بخيرِ ما يكنِزُ المرءُ ؟ المرأةُ الصالِحَةُ ، إذا نظرَ إليها سرَّتْهُ ، وإذا أمرَها أطاعَتْهُ ، وإذا غاب عنها حفِظَتْهُ
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸின் கருத்திலே வருகிறது சாலிஹான பெண்ணுக்கு அவர்கள் இலக்கணம் சொன்னார்கள் நீங்கள் பார்த்தால் உங்களுக்கு சந்தோஷம் ஏற்பட வேண்டும் நீங்கள் பார்த்தால் அதற்கு அவள் கட்டுப்பட வேண்டும் இது அல்லாஹுத்தஆலா குர்ஆனிலும் சொல்லி இருக்கின்றான்.
حَٰفِظَٰتٌ لِّلْغَيْبِ
நீங்கள் வீட்டை விட்டு சென்று விட்டால் மறைந்து விட்டால் உங்களுடைய செல்வத்தையும் தன்னுடைய கர்ப்பையும் பாதுகாத்து கொள்வாள்.
இப்படியாக அல்லாஹ் தஆலா கொடுத்திருக்கக் கூடிய இந்த இஸ்லாம் என்ற உயர்ந்த சிறந்த மார்க்கம் இருக்கிறது சகோதரர்களே! உலகத்திலே அல்லாஹுத்தஆலா கொடுத்திருக்கக் கூடிய செல்வங்களிலேயே மிகப்பெரிய செல்வம் குடும்ப செல்வம். மனைவி என்ற செல்வம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا حَيْوَةُ، أَخْبَرَنِي شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ، أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ
உலகத்திலே எத்தனையோ செல்வங்கள் இருக்கின்றன. அன்பு சகோதரர்களே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் வாங்கி இருக்க கூடிய வாகனங்களில் உங்களால் பேச முடியுமா? நீங்கள் கட்டி வைக்கக் கூடிய வீட்டோடு நீங்கள் பேச முடியுமா? உங்களிடத்தில் இருக்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் இருக்கின்றனவே அந்தப் பொருட்களை பார்த்து பேச முடியுமா? அவை உங்கள் கவலைகளை கேட்குமா? நீங்கள் அழுதால் உங்கள் கண்களை துடைக்குமா?
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1467
நீங்கள் மன சஞ்சலத்தில் இருக்கும் போது உங்களுக்கு ஆறுதல் அளிக்குமா? எல்லா துன்பங்களிலும் உங்களுக்கு துணை நிற்கக்கூடிய உங்கள் கண்களின் அழுகையை துடைக்க கூடிய, உங்கள் வாழ்க்கையிலே உங்கள் சிரமத்தை போக்க போக்கக்கூடிய, ஆலோசனை கொடுக்கக் கூடிய, ஆறுதலான வார்த்தைகளை பேசக்கூடிய ஒரு உயிருள்ள ஜீவன் மனைவி என்ற நியமத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதை நம்மிலே பலர் நியாமத்தாக விலைமதிக்கத்தக்கதாக உணர்வதே இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் பாருங்கள்”
وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ
துன்யாவுடைய நியாமத்துகளிலேயே சிறந்த நியாமத் சாலிஹான மனைவி அமைவது. ஆகவே, அன்பானவர்களே இந்த குடும்ப வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த நியாமத் இந்த நியாமத்தை நாம் பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும் என்றால், நம்முடைய குணங்கள் சரியாக வேண்டும். ஒரு ஏழை மகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழ வேண்டும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1467
அவனுடைய குணங்கள் சரியாக இருக்குமேயானால். கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான உறவு அன்பு, பாசம், நேசம், அக்கறையின் மீது அமைக்கப்படுமேயானால் அதே நேரத்திலே மகிழ்ச்சி இன்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் ஒரு செல்வந்தனிடத்தில் இருந்து ஒரு பெரிய பணக்காரன் இடத்தில் இருந்து எல்லா தேவையும் அவனுக்கு நிறைவேறியும் கூட வசதியான ஒரு கணவன் மனைவி தம்பதி நிம்மதி இல்லாமல் குடும்ப மகிழ்ச்சி இல்லாமல் சிதைந்து போகலாம்.
எப்போது அவர்களுக்கு இடையில் அன்பு, பரஸ்பரம், பாசம், விட்டு கொடுத்தல்,மன்னித்தல் , ஒருவர் ஓர் மீது அக்கறை காட்டுதல், ஒருவர் ஒருவருக்கு ஒரு உதவுதல், ஒருவர் ஒருவரை மதித்தல் என்ற இஸ்லாம் போதித்த பண்புகள் இல்லை என்றால்.
அன்பானவர்களே! இந்த குடும்ப வாழ்க்கை நமக்கு தக்குவாவை தரவேண்டும் இறையச்சத்தை தர வேண்டும். கணவனின் வரம்பு மீறுதலை மனைவி கண்டிக்க வேண்டும். மனைவியின் வரம்பு மீறுதலை கணவன் கண்டிக்க வேண்டும்.
கணவன் தொழுகைக்கு அலட்சியம் செய்தால் மனைவி அவனை தொழுகைக்கு எழுப்ப வேண்டும் தொழுகைக்கு அனுப்ப வேண்டும். ஹராம் ஹலால் உடைய வியாபார சட்ட திட்டங்களிலே அவரிடத்தில் குறைபாடு இருக்குமேயானால் அவற்றை அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதுபோன்றுதான் மனைவி இடத்திலே ஹிஜாபுடைய விஷயமாக இருக்கட்டும் ஏனைய ஒழுக்கங்களுடைய விஷயமாக இருக்கட்டும் அதிலே குறையை பார்த்தால் அவளுக்கு தக்வாவுடைய பாடத்தை இல்முடைய பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். அவளை தொழுகையாளியாக ஆக்க வேண்டும். குர்ஆனை ஓதக் கூடியவளாக ஆக்க வேண்டும்.
ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸை படிக்கக் கூடியவளாக ஆக்க வேண்டும். இத்தகைய ஒரு வாழ்க்கையை நம்முடைய குடும்பத்தில் உருவாக்கினால் தான் இந்த குடும்ப வாழ்க்கையை கொண்டு சந்தோஷமான நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் அடைய பெறுவோம். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அத்தகைய நல்வாழ்க்கையை தந்தருள்வானாக!!!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/