HOME      Khutba      ஜிப்ரீலின் அறிவுரை அமர்வு 2-2 | Tamil Bayan - 602   
 

ஜிப்ரீலின் அறிவுரை அமர்வு 2-2 | Tamil Bayan - 602

           

ஜிப்ரீலின் அறிவுரை அமர்வு 2-2 | Tamil Bayan - 602


بسم الله الرّحمن الرّحيم
 
ஜிப்ரீலின் அறிவுரை அமர்வு - 2
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரப்புல் ஆலமீன் அவனது கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆன் சூரா அன் நிஸா 131 -வது வசனத்தில் கூறுகிறான்;
 
وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ
 
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் ‘‘அல்லாஹ் ஒருவனையே பயப்படுங்கள்'' என்றே நல்லுபதேசம் செய்திருக்கிறோம். (அல்குர்ஆன் 4 : 131)
 
அந்த உபதேசத்தை இந்த குத்பாவின் ஆரம்பத்தில் எனக்கும் உங்களுக்கும் செய்துகொண்டு அல்லாஹ்வை நேசித்தவர்களாக, அல்லாஹ்வின் பக்கம் ஆர்வம் கொண்டவர்களாக, அல்லாஹ்வை பயந்தவர்களாக, மறுமையின் தேடல் உள்ளவர்களாக, மறுமையை நினைவுகூர்ந்தவர்களாக வாழக்கூடிய நல்ல அந்த தவ்ஃபீக்கை அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நசீப் ஆக்குவானாக!
 
அல்லாஹு தஆலா கூறிய அறிவுரைகளின் படி வாழ்ந்து, அல்லாஹ் நல்லவர்களுக்காக தயாரித்து வைத்திருக்கக்கூடிய அந்த சொர்க்க இன்பங்களை அடைவதற்கு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹு தஆலா அருள் புரிவானாக! பாவங்களை விட்டும், அல்லாஹ்விற்கு வெறுப்பான ஒவ்வொரு செயல்களை விட்டும், சொல்களை விட்டும், கொள்கைகளை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறிய உபதேசத்தின் ஒரு முதல் பகுதியை சென்ற வார குத்பாவிலே பார்த்தோம்.
 
ஸஹ்ல் இப்னு ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; இமாம் ஹாகிம் பதிவு செய்கிறார்கள்;
 
يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَأَحْبِبْ مَنْ أَحْبَبْتَ فَإِنَّكَ مَفَارِقُهُ
 
ஜிப்ரீல் என்னிடம் வந்து கூறினார்; யா முஹம்மத்! நீங்கள் வாழ விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஆனால் அதற்கு பிறகு நீங்கள் மரணிப்பீர்கள். 
 
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நேசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அன்பு வையுங்கள். யாரை நீங்கள் விரும்புகிறீர்களோ? யார் மீது உங்களுக்கு நேசம் வருகிறதோ? அவரை நீங்கள் நேசித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் நீங்கள் அவரை பிரிந்தே ஆக வேண்டும். நீங்கள் விரும்பியவரை நேசித்துக் கொள்ளுங்கள். 
 
நீங்கள் இந்த உலகத்தில் நிரந்தரமாக அந்த அன்போடு வாழ்ந்து விட முடியாது. நிச்சயமாக நீங்கள் அவரை பிரிவீர்கள் என்றால் ஒன்று அவருக்கு முன்னால் நீங்கள் மரணித்து ஆக வேண்டும், அல்லது உங்களுக்கு முன்னால் அவர் மரணித்து ஆக வேண்டும். எப்படி நிகழ்ந்தாலும் சரி பிரிவு இருக்கும். (1)
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 7921, தரம் : ஸஹீஹ் (தஹபி), இமாம் அல்பானி ஹசன் என்று கூறியுள்ளார்கள்.
 
நம்முடைய உயிரும், உலகமும் அந்த தூதர் மீது அர்ப்பணமாகட்டுமாக! அந்த தூதரின் மீது ஸஹாபாக்கள் வைத்திருந்த நேசம் மிக உயர்ந்தது. 
 
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு செல்கிறார்கள்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வந்த அந்த நாளை விட வெளிச்சமான ஒரு நாளை நாங்கள் மதினாவில் பார்த்ததில்லை, ரசூலுல்லாஹ் மரணித்த அந்த நாளை விட இருளான ஒரு நாளை நாங்கள் மதினாவில் பார்த்ததில்லை. (2)
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12234.
 
உமர் போன்ற பெரும் பெரும் வீரர்களெல்லாம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மரணித்து இருப்பார்களா? அல்லது மூசா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வை சந்திக்க சென்றது போன்று சந்திக்க சென்று இருப்பார்களோ? என்று உள்ளத்திலே பல எண்ணங்கள், எண்ண ஓட்டத்திலே அப்படியே செயலற்று அமர்ந்து விட்டார்கள். (3)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா, எண் : 1627, முஸ்னத் அஹ்மது, எண் : 25841, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்; அந்த தூதர் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள்! எவ்வளவு நேசம் வைத்திருப்பார்கள்! 
 
குபைப் உடைய வரலாற்றை நினைத்துப் பாருங்கள். அபூஸுஃப்யான் கேட்கிறார்; 
 
குபைபே! உங்களை பிணைக்கைதியாக பிடித்தோம். உங்களை கொல்லப் போகிறோம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் சரி என்று சொல்லி விடுங்கள். நாங்கள் உங்களை விட்டு விடுகிறோம் என்று குபைபை தங்களுக்கு எதிராக நிறுத்தி வைத்துக் கொண்டு வில்எறியக்கூடிய ஈட்டி எறியக்கூடிய அத்தனை வீரர்களையும் குபைபுக்கு முன்னால் நிறுத்திக்கொண்டு அபூசுஃப்யான் கேட்கிறார்;
 
இந்த இடத்தில் உங்களுக்கு பதிலாக முஹம்மது இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? விரும்புகிறேன் என்று சொல்லி விடுங்கள் போதும். அவ்வளவுதான் நாங்கள் உங்களை விட்டு விடுகிறோம். 
 
குபைப் சொல்கிறார்; நான் இந்த இடத்தில் துண்டுதுண்டாக வெட்டப்பட, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டில் இருக்கின்ற நிலையில், அவர்களுடைய காலில் முள் தைப்பது கூட என்னால் சகித்துக் கொள்ள முடியாது. 
 
நூல் : தபகாத் குப்ரா-இப்னு ஸஅத்.
 
எப்பேற்ப்பட்ட நேசம் வைத்திருப்பார்! முகீரா கூறுகிறார்; 
 
நான் எத்தனையோ மனிதர்களை, மன்னர்களை பார்த்திருக்கிறேன். அவர்களுடைய பணியாளர்களை பார்த்து இருக்கின்றேன். ஆனால் முஹம்மதுடைய தோழர்கள் அவர்களை நேசிப்பது போன்று, முஹம்மதிற்கு கண்ணியம் கொடுத்தது போன்று யாரையும் நான் பார்த்ததில்லை. 
 
அறிவிப்பாளர் : மிஸ்வர் இப்னு மக்ரமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2731.
 
அன்பு சகோதரர்களே! அந்தத் தோழரயே இந்த உலகம் பிரிந்து விட்டது என்றால், அதற்குப் பிறகு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?! அல்லாஹ்வுடைய தூதரின் மீது அந்த சஹாபாக்கள் வைத்திருந்த நேசம்! ஸஹாபாக்களுக்கு உங்களில் ஒவ்வொருவரும் தன்னுடைய ஆயுளை ரசூலுல்லாஹ்விற்கு கொடுப்பீர்களா என்ற ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்குமேயானால் கண்டிப்பாக ஒவ்வொரு ஸஹாபியும் ரசூலுல்லாஹ்விற்க்கு கொடுத்திருப்பார்கள். 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரிவை அவர்களுடைய மனைவிமார்கள் தாங்க வேண்டியதாயிற்று. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள்?! சுபஹானல்லாஹ்! 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு சொல்லப்படக்கூடிய அந்த புனைப்பெயர் என்னவென்றால், நேசிக்கப்படுகின்ற பெண்மணி, நேசிக்கப்படுபவரின் மகள். நேசிக்கப்படுபவரின் மனைவி. 
 
அல்லாஹ்வுடைய தூதரும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அவ்வளவு நேசித்தார்கள். அவர்களும் அப்படித்தான். இருவருக்குமிடையே இருந்த அந்த நேசமானது சாதாரணமானதல்ல. அந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் கணவன் பிரிந்த வேதனையை அனுபவித்தார்கள். 
 
ஃபாத்திமாவை எடுத்துக்கொள்ளுங்கள், 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போது ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்கின்றார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபாத்திமாவை அழைத்து ரகசியமாக பேசுகின்றார்கள். ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அழுகிறார்; அழுகிறார்; அழுகிறார். சிறிது நேரம் அமைதி நிலவுகின்றது. 
 
மீண்டும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அழைக்கின்றார்கள். ஃபாத்திமா விடத்தில் இரகசியமாக பேசுகின்றார்கள். ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா சிரிக்கிறார்கள். அழகாக சிரிக்கிறார்கள்; சம்பவம் முடிந்து விட்டது.
 
சில மாதங்கள் கழித்து அல்லது சில வாரங்கள் கழித்து ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா தனது மகள் ஃபாத்திமாவை அழைத்து, அல்லாஹ்வின் தூதரின் மகளே! அல்லாஹ்வின் தூதர் மரண நேரத்திலே ஒரு ரகசியம் பேசினார்கள்; அழுதீர்கள். பிறகு இரகசியம் பேசினார்கள்; சிரித்தீர்களே! அந்த விளக்கத்தை எனக்கும் நீங்கள் சொல்ல வேண்டும். 
 
ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா திகைத்து விட்டார்கள். இப்படி ஒரு கேள்வியை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்பார்களா? என்று. அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சொன்னார்கள்; ரசூலுல்லாஹ்வுடைய ரகசியத்தை நான் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்போது மரணித்து விட்டார்கள். 
 
எனவே, அதை உங்களிடத்தில் சொல்வதில் தவறில்லை என கூறிவிட்டு, முதலாவது ரகசியம்; ஃபாத்திமா! நான் இந்த நோயிலேயே இறந்து விடுவேன் என்று சொன்னார்கள். இதற்காக நான் அழுதேன்; அழுதேன். பிறகு என்னை அழைத்துச் சொன்னார்கள்; ஃபாத்திமா! எனது குடும்பத்திலேயே நீங்கள்தான் என்னை விரைவாக வந்து சந்திப்பீர்கள். என்னிடம் விரைவாக வந்து சேர்வீர்கள் என்று. இதனால் நான் சந்தோஷத்தால் சிரித்தேன். (4)
 
நூல் : புகாரி, எண் : 6285. 
 
அன்பு சகோதரர்களே! இன்று யாராவது ஒரு தந்தை தன் மகளைப் பார்த்து, மகளே! நான் இன்னும் சில காலத்தில் இறந்து விடுவேன். அனேகமாக எனக்குப் பின்னால் நீதான் இறப்பாய் என்று சொன்னால், அந்த மகளுடைய நிலை எப்படி இருக்கும்? அதுபோன்று தன் மனைவியை அழைத்து இப்படி சொன்னால் அதை ஏற்றுக்கொள்வார்களா?
 
அன்பு சகோதரர்களே! நினைத்துப்பாருங்கள்; இந்த பிரிவு எல்லாம் எழுதப்பட்ட ஒன்று. தாங்கி தான் ஆகவேண்டும். இந்த உலகத்தில் நாம் யாரை நேசித்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வின் நேசத்தை மிகைத்து விடக்கூடாது. உள்ளம் பரிகொடுப்பதற்கு தகுதியானவன் அல்லாஹுத்தஆலா மட்டும் தான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தங்களுடைய தோழர்களை நேசித்தார்கள். ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலுல்லாஹ்விற்கு ஒரு வகையில் பால்குடி சகோதரர். இன்னொரு வகையில் சாச்சா. அவர்கள் கொல்லப்பட்ட அந்த பிரிவை நினைத்து ரசூலுல்லாஹ் அழுதார்கள். அவர்களால் வேதனையை தாங்க முடியவில்லை. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக விசேஷமாக ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். 
 
இப்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்கள் நேசித்த எத்தனையோ உற்ற தோழர்களை தங்களுடைய வாழ்நாளில் பிரிந்து இருக்கிறார்கள். எத்தனை போர்களில் எத்தனை தோழர்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இழந்தார்கள். யோசித்துப் பாருங்கள். 
 
உஹதிலே முஸ்அபை இழந்தார்கள்; ஹம்ஸாவை இழந்தார்கள்; இன்னும் நழ்ரு இப்னு அனசை இருந்தார்கள். இப்படி எத்தனை சஹாபாக்களை நபி (ஸல்) இழந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். 
 
நம்முடைய வாழ்க்கையில் மட்டும் தான் பிரிவு ஏற்படுகிறதா? நம்முடைய குடும்பத்தில் மட்டும்தான் நமக்கு மரணம் ஏற்படுகிறதா? சில முட்டாள்கள் பேசுகிறார்கள்; அல்லாஹ்வுக்கு கண்ணே இல்லையா? நவூது பில்லாஹ்! வீட்டிலே மரணம் ஏற்பட்டுவிட்டால் நாங்க என்ன அநியாயம் பண்ணினோம்? நாங்க யாருக்கு என்ன துரோகம் பண்ணினோம்? ஏன் இந்த சின்ன வயசுல எங்களுடைய உயிர வாங்கணும்? என் அத்தா உடைய உயிரை பறிக்கணும்? என் அம்மாவோட உயிரை, என் அண்ணனுடைய உயிரை, என் தம்பியுடைய உயிரை, அப்ப இந்த முட்டாள்கள் என்ன நினைக்கிறார்கள்? வரக்கூடிய மலக்குல் மவ்த் ஊர்ல உள்ள எல்லாருடைய உயிரையும் வாங்கிட்டு இவங்க வீட்டை மட்டும் வாழ வச்சுட்டு போயிரனும்னா? அல்லாஹ்விற்கு வேறு யாரும் கிடைக்கலையா? நாம என்ன துரோகம் பண்ணினோம்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
கவலை வரலாம். உள்ளத்தில் அந்த மனவேதனை இருக்கலாம். அழுகையும் கூட வரலாம். ஆனால் அல்லாஹ்வுடைய விதியை பொருந்திக் கொள்ள வேண்டும்.
 
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
 
(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
 
(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2 : 155,156)
 
அவர் முன்னால் சென்று விட்டார். நாங்கள் பின்னால் செல்லப் போகிறோம் அவ்வளவுதான். சில கால தாமதங்கள் தான். சென்று சேர வேண்டிய ஊருக்கு இன்று அவருக்கு ரிசர்வேஷன் கிடைத்தது. அவர் சென்று விட்டார். அடுத்து ரிசர்வேஷன் நமக்கு நாளை அல்லது நாளை மறுநாள் ஏதோ ஒரு நாளில் நாம் செல்லப் போகிறோம். சென்று அங்கே சந்திக்க போகிறோம். 
 
அன்பு சகோதரர்களே! இந்த உலகம் நிரந்தரமாக சேர்ந்து வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. இந்த உலகம் பிரிவால் முத்திரையிடப்பட்டது. எழுதப்பட்டது. பிறக்கும்போதே மரணம் எழுதப்பட்டுவிட்டது.
 
நபி (ஸல்) அவர்கள் முஃதா போருக்கு அனுப்பினார்கள். அங்கே ஜாஃபர் கொல்லப்பட்டார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுகிறார்கள். பிறகு ஜெய்து கொல்லப்பட்டார்; அழுகிறார்கள். இப்படியாக ஒவ்வொருவரின் செய்தியை சொல்லி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுகிறார்கள். (5)
 
நூல் : புகாரி, எண் : 3757. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மகனார் இப்ராஹிம் அலைஹிவசல்லம் அவர் ஓராண்டு பூர்த்தியாகி சில மாதங்கள்தான் கடந்தன. அப்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது என்ற செய்தி வருகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓடோடி வருகிறார்கள். அந்த குழந்தையை எடுத்து மடியிலே வைக்கிறார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்ராஹீமை மிக அதிகம் நேசித்தார்கள். 
 
தன்னுடைய அடிமைப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை. மிக அதிகமாக அந்த குழந்தையின் மீது அன்பு வைத்திருந்தார்கள். இந்த செய்தியை கேட்ட உடன் ஓடோடி வந்து குழந்தையை மடியில் வைத்துக்கொண்டார்கள். இரக்கமாக, பாசத்தோடு, கருணையோடு அந்த குழந்தையை பார்க்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமாகிறது அதனுடைய உயிர் பிரிகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது. 
 
அருகிலிருந்த தோழர் கேட்கிறார்; அல்லாஹ்வுடைய தூதரே! நீங்களா அழுகிறீர்கள்? என்று. அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا
 
எங்களுடைய கண்கள் கண்ணீரை சிந்துகின்றன; எங்களுடைய உள்ளம் துக்கத்தால் வருத்தப்படுகின்றன. ஆனால் எங்களுடைய ரப்பை திருப்திப்படுத்தக் கூடிய வார்த்தையை தவிர எதையும் நாங்கள் பேச மாட்டோம். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) (6)
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1303.
 
ரசூலுல்லாஹ் உடைய மகளார் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு செய்து அனுப்புகிறார்கள். உங்களுடைய பேரன்களில் ஒருவர் மரணத் தருவாயில் இருக்கிறார்; வாருங்கள் என்பதாக. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒரு முக்கியமான பணியில் சஹாபாக்கள் உடன் இருந்தார்கள். வந்தவரிடத்தில் சொல்லி அனுப்பினார்கள். என்னுடைய மகளுக்கு சொல்லுங்கள்; பொறுமையாக இருக்கட்டும். அல்லாஹ்விடத்தில் இதற்கு பதிலாக நன்மையை ஆதரவு வைக்கட்டும் என்று. (7)
 
நூல் : புகாரி, எண் : 1284.
 
இன்று நாம் தக்பீர் கட்டி இருந்தால் தக்பீரை விட்டுவிட்டு ஓடிப் போய் விடுவோம். யாருடைய திட்டங்களும் தந்திரங்களும் யாரையும் மரணத்திலிருந்து பாதுகாக்காது. 
 
சோதனையின் போது தான் தெரியும் நம்முடைய ஈமான் எப்படி இருக்கிறது என்று. 
 
அந்த காலத்தில் சில அறிஞர்கள் சம்பவம் சொல்வார்கள். மரண நேரத்தில் அழுதுகொண்டிருந்தாராம். என்னுடைய மரணம் லா யிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா உடன் இருக்க வேண்டும். ரொம்ப அழுதாராம். சுற்றியுள்ள மாணவர்கள் கேட்டார்களாம்; நீங்கள் எவ்வளவு பெரிய மகான்! எவ்வளவு பெரிய அறிஞர்! நீங்கள் மரண நேரத்தில் ஈமானைப் பற்றி இப்படி பயப்படுகிறீர்களே? என்று. 
 
அதற்கு அவர்கள் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்; ஒரு கிளிக்கு அந்த கிளியின் உடைய எஜமானன் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லி வளர்த்தான். ஒருநாள் அந்த கிளியை ஒரு பூனை பிடித்தபோது, அது அதனுடைய சப்தத்தில் தான் கத்தியது தவிர அல்லாஹ் என்ற சத்தத்தில் கத்தவில்லை. அதுபோல என்னுடைய நிலைமை மாறி விடுமோ என்று பயப்படுகிறேன். 
 
நமக்கு ஏதாவது திடீரென்று ஒரு திடுக்கம் ஏற்பட்டால் நம்மில் எத்தனை பேர் அல்லாஹு, லா யிலாஹ இல்லல்லாஹ், லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுகிறோம்? எத்தனை பேர் உடனே அம்மா, ஐயோ என்று கூறுகிறார்கள். சில நிமிடங்கள் கழித்து தான் ஓஹ்! நம்ம அல்லாஹ்ன்னு சொல்லணுமோ! அப்படிங்கிற நியாபகம் வருகிறதே தவிர, அந்த நேரத்தில் முற்றிலுமாக சிலருடைய நிலை அல்லாஹ்வுக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாததை போல் ஆகிவிடுகின்றது.
 
ஹதீஸின் தொடர் : அந்த மகள் கூறினாள்; நான் பொறுமையாக இருக்கிறேன். நன்மையை ஆதரவு வைக்கிறேன். ஆனால் என்னுடைய மகனது ரூஹ் உங்களது மடியில் பிரியவேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகளின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த குழந்தையை தனது மடியிலே வைக்கிறார்கள்.
 
குழந்தையின் உயிர் பிரிகிறது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் :
 
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى
 
கொடுத்ததும் அல்லாஹ்விற்கே உரியது. எடுத்ததும் அல்லாஹ்விற்கே உரியது. ஒவ்வொன்றும் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட தவணையில் நடக்கிறது. 
 
நூல் : புகாரி, எண் : 1284.
 
அன்பு சகோதரர்களே! இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தங்களது தோழர்களுக்கு தர்பியா கொடுத்தார்கள். எந்த ஒரு இழப்பும் இழப்பல்ல, நாம் சொர்க்கத்தை பெற்று விட்டால். எந்த ஒரு பிரிவும் பிரிவல்ல, நாம் சொர்க்கத்தை பெற்று விட்டால். சொர்க்கத்தை இழப்பதுதான் இழப்பு. சொர்க்கத்தில் பிரிந்து விடுவதுதான் பிரிவு. ஒருவர் சொர்க்கத்திலும் இன்னொருவர் நரகத்திலும் இருப்பது தான் பிரிவு. 
 
இந்த உலகத்தில் நாம் நேசிப்பவர்கள் நமக்கு முன் இறந்துவிடுவதோ, அல்லது நாம் அவர்களுக்கு முன் இறந்து விடுவதோ பிரிவல்ல. எது உண்மையான பிரிவு, ஒருவரை சொர்க்கத்திலும் ஒருவரை நரகத்திலும் பார்ப்பது தான். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
எத்தனையோ குர்ஆனுடைய வசனங்களை நீங்கள் படித்துப் பாருங்கள்;
 
قَالَ قَائِلٌ مِنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ
 
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார். (அல்குர்ஆன் 37 : 51)
 
فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ
 
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார். (அல்குர்ஆன் 37 : 55)
 
வசனத்தின் கருத்து : சொர்க்கவாசிகள் சொல்வார்கள்; எனக்கு சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை இங்கே காணவில்லையே! அல்லாஹ் சொல்வான்; கொஞ்சம் எட்டிப் பாருங்கள் என்று. எட்டிப் பார்த்தால் அவர்கள் நரகத்தில் இருப்பார்கள். அப்போது இந்த சொர்க்கவாசிகள் சொல்வார்கள்; அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் எங்களை பாதுகாத்தானே என்று. 
 
அன்பு சகோதரர்களே! ரப்புல் ஆலமீன் கூறுகிறான்;
 
الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ
 
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். (அல்குர்ஆன் 43 : 67) 
 
உற்ற தோழர்கள் நாளை மறுமையில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு எதிரியாக ஆகிவிடுவார். தக்வாவின் அடிப்படையில் நட்பு வைத்தவர்களை தவிர. கணவன் மனைவியாக இருந்தாலும், பெற்றோர் பிள்ளைகளாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், வியாபார பார்ட்னர்களாக இருந்தாலும், இப்படி யாராக இருந்தாலும் சரி, எந்த நட்பு இறையச்சத்தின் அடிப்படையில் அமைந்ததோ அதுதான் சொர்க்கத்திலும் நீடிக்கும். 
 
அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான்;
 
وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ
 
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 52 :  21)
 
வசனத்தின் கருத்து : நீங்கள் ஈமான் கொண்டு உங்கள் பிள்ளைகளுக்கும் அந்த ஈமானை, தர்பியத்தை கொடுத்து, பிறகு நீங்கள் இறந்து விட்டால், நாளை மறுமையில் சொர்க்கத்திலும் நாம் உங்களை சேர்த்து வைப்போம்; பிரிக்க மாட்டோம். ஒருக்கால் அமல்களில் அவர்கள் குறைவாக இருந்தாலும் உங்களோடு நாம் சேர்ப்போம் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
ஆனால் ஈமான் இருக்கவேண்டும். ஷிர்க் இருக்கக்கூடாது. இஸ்லாமை விட்டு விலகி விடக்கூடாது. அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு புரண்டு விடக்கூடாது. எத்தனையோ பெற்றோர்கள் பிள்ளைகளை அளவுக்கதிகமாக, கண்மூடித்தனமாக நேசிக்கிறார்கள். அந்த நேசத்தினால் தனது பிள்ளை மார்க்கத்தை விட்டும் மீறுவதை பார்த்துவிட்டு, ஒரு காஃபிரைப் போன்று வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டதையும் பார்த்துவிட்டு, பிறகும் என் பிள்ளை என்று சொல்கிறார்கள். படிக்க வைக்கிறார்கள். 
 
படிக்க வையுங்கள். ஆனால் எத்தனை முஸ்லிம்கள் குடும்பத்தில் குறிப்பாக பெண் பிள்ளைகள், தங்களோடு படித்த காஃபிர்களை மணம் முடித்து விட்டு சென்று விட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகும் அந்தப் பெற்றோர்கள் என் பிள்ளை! என் பிள்ளை என்று கூறி காஃபிராக சென்றுவிட்ட அந்த பிள்ளையோடு உறவை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நேசிக்கிறார்கள். 
 
அதுபோன்றுதான் ஆண்பிள்ளைகள். ஈமான் தக்வா என்ற அடிப்படையில் நேசம் இல்லை என்று சொன்னால், அவர்களின் அந்த செயலை அந்தப் பெற்றோர் பொருந்திக் கொண்டால், அவர்களும் காஃபிர்கள் தான். 
 
தன்னுடைய மகள் ஒரு முஸ்லிம் அல்லாதவனுடன் திருமணம் செய்வதை ஒரு பெற்றோர் ஏற்றுக் கொண்டால், அவர்களும் காஃபிர்கள் தான். 
 
அன்பு, நேசம் நம் கண்களை குருடாக்கி விடக்கூடாது. இந்த அன்பு நேசம் என்பது நம்முடைய உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அல்லாஹு ரப்புல் ஆலமீன் எந்த ஒரு அளவுகோலோடு சொல்கிறானோ அந்த அளவோடு இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக இருக்கவேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; 
 
«مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانَ»
 
யார் அல்லாஹ்விற்காக நேசித்தார்களோ, அல்லாஹ்விற்காக வெறுத்தார்களோ, அல்லாஹ்விற்காக கொடுத்தார்களோ, அல்லாஹ்விற்காக தடுத்தார்களோ, அவர்கள் ஈமானை நிறைவு செய்து கொண்டார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4681, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
தோழர்களே! இந்த உபதேசத்தின் பக்கம் நாம் மிகத் தேவை உள்ளவர்களாக இருக்கிறோம். மனிதர்களை நேசித்தாலும் அல்லது உலகத்தை நேசித்தாலும் சரி. அதாவது துன்யாவின் செல்வங்களை, பதவியில் இருப்பவர்கள் பதவியை, இப்படியாக எந்த ஒன்றை இந்த உலகத்தில் நாம் நேசித்தாலும் சரி, கண்டிப்பாக அதிலிருந்து பிரிவு இருக்கிறது. அதை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். 
 
அல்லாஹ் கொடுத்தான். எடுத்துக்கொண்டான். ஹஸ்புனல்லாஹ்!! அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன். 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் எங்களை மறுமையில் சொர்க்கத்தில் ஒன்று சேர்க்க வேண்டும். அந்த சொர்க்கத்தின் உடைய சேருதல் தான் நிரந்தரமான சந்திப்பு, உண்மையான சந்திப்பு. அல்லாஹ்வுடைய அருளோடு, அன்போடு, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் சந்திக்கின்ற சந்திப்பு. 
 
பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரண நேரத்தில் சிரிக்கின்றார்கள். சந்தோஷமாக இருக்கின்றார். மனைவி அழுது கொண்டிருக்கிறார்கள்; கவலையில் இருக்கிறார்கள். மனைவி பிலாலிடம் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்; பிலால் சொல்கிறார்கள்; 
 
غَدًا نَلْقَى الْأَحِبَّهْ مُحَمَّدًا وَحِزْبَهْ
 
நாளை என் நேசர்களை சந்திக்கப் போகின்றேன். முஹம்மதையும் அவருடைய தோழர்களையும் நான் சந்திக்கப் போகின்றேன் என்று. 
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12026.
 
அன்பு சகோதரர்களே! இந்த வார்த்தை சொல்வதற்கு நாம் நம்மை தகுதி உள்ளவர்களாக ஆக்க வேண்டும். வாயால் சொல்வது அல்ல. இன்று நிறைய பேர் நிறைய தக்பீர், சிந்தாபாத், ஈட்டி முனையில் நின்றாலும் ஈமானை விட மாட்டோம். இப்படி என்னென்னமோ கோஷங்கள் போடுவார்கள். ஆனால் மார்க்கம் என்றால் அல்லாஹ்வுடைய தீன் என்றால் ஒன்றுமே தெரியாது. எல்லாம் வெட்டியான வேஷங்கள். வெறும் கோஷங்கள் மட்டும் தான் இருக்கும். 
 
தொழுகை இருக்காது, நோன்பு இருக்காது, ஒரு ஹலால் ஹராம் உடைய பேணுதல் இருக்காது. ஏன் அவர்களில் பலர் வட்டி வாங்குபவர்களாக, ஹராமான வியாபாரங்கள் செய்பவர்களாக, இன்னும் எத்தனையோ கேடுகெட்ட செயல் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் கோஷம் போடுவதில் மட்டும் குறைச்சல் இருக்காது.
 
ஒரு அறிஞர் சில காலங்களுக்கு முன் பேசும்போது சொன்னார்; ஒரு நேரத்தில் இந்த மீலாது விழா ஊர்வலத்தில், நாரே தக்பீர், ஈட்டி முனையில் நின்றாலும் ஈமானை விடமாட்டோம் என்று கோஷம் போட்டார்கள். கரெக்டா போலீஸ் வந்துருச்சு. வந்த உடனே ஒருத்தரையும் காணோம். ரோட்ல போயிட்டு இருந்தவர்களில் ஒருத்தரையும் காணோம். செருப்பு போட்டா ஓட முடியலன்னு செருப்பு கீழபோட்டுட்டு போய்ட்டான். ஆயிரக்கணக்கான காலணிகள் எடுக்கப்பட்டதாம். 
 
அன்பு சகோதரர்களே! ஆம். எங்கே நிஃபாக், நயவஞ்சகம் இருக்குமோ, பித்அத் இருக்குமோ, அனாச்சாரங்கள் இருக்குமோ, அங்கே உண்மையான முஹப்பத், ஈமான், பின்பற்றுதல் இருக்காது. எங்கே உண்மையான பின்பற்றுதல் இருக்குமோ அங்கே பித்அத் இருக்காது. அனாச்சாரம் இருக்காது. 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்தவிதமான அழகிய மார்க்கத்தை கொடுத்தானோ அந்த அழகிய மார்க்கத்தை பின்பற்றக்கூடியவர்களாக நம்மை ஆக்கவேண்டும். 
 
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் இந்த வசியத், இந்த அறிவுரை நபியே! நீங்கள் யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள். ஆனால் நீங்கள் அவரை பிரிந்தே ஆகவேண்டும். 
 
நூல் : ஹாகிம், எண் : 7921. 
 
இந்த அறிவுரையை நாம் நினைவு கூற வேண்டும். நாம் அவர்களுக்கு முன்னால் சென்று விட்டாலும் சரி, அல்லது அவர்கள் நமக்கு முன்னால் சென்று விட்டாலும் சரி. நாம் சொர்க்கத்தில் ஒன்றாக சந்திப்பவர்களாக இருக்கின்றோமா? அதுதான் நம்முடைய கவலையாக இருக்க வேண்டும். 
 
ஒரு சம்பவத்தை கூறி நிறைவு செய்வோம். நல்லவர்களில் ஒருவர் இறக்கக்கூடிய அந்த தருணத்தில் அவருடைய தந்தையும் அருகிலே இருக்கிறார், பிள்ளைகளும் அருகிலே இருக்கிறார்கள். பிள்ளைகளும் அழுகிறார்கள். தந்தையும் அழுகிறார். தந்தையைப் பார்த்து கேட்கிறார்; தந்தையை! ஏன் அழுகிறீர்கள் என்று? தந்தை சொல்கிறார்; நீ எங்களுடைய மகன் ஆயிற்றே! எங்களுக்கு எவ்வளவு பெரிய ஒரு ஆதாரமாக நீ இருந்தாய்! எங்களுக்கு முன்னால் நீ மரணிக்கிறாயே! உன்னுடைய பிரிவால் நாங்கள் அழுகின்றோம். 
 
பிறகு மகனைப் பார்த்து கேட்கிறார்கள்; மகனே! நீ ஏன் அழுகிறாய் என்று? தந்தையே! என்னை இப்படி யத்தீமாக விட்டுவிட்டு செல்கிறீர்களே! அதை நினைத்து அழுகிறேன் என்று. 
 
அப்போது அந்த நல்ல மனிதர் கூறினார்; உங்களில் யாருமே என் மறுமைக்காக அழவில்லையா? நான் இப்போது மரணித்தால் என்னுடைய கப்ர் எப்படி இருக்கும்? ஆஹிரத்து எப்படி இருக்கும்? சொர்க்கம் எப்படி இருக்கும்? அதற்காக யாரும் அழவில்லையா? உங்களின் தேவைக்காக பிரிவுக்காகத்தான் நீங்கள் அழுதீர்களா? 
 
யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே! எப்படி அவர்களுடைய சிந்தனை இருந்தது. எவ்வளவு தூரம் அவர்கள் யோசித்தார்கள். மறுமை அவர்களின் முன்னால் எப்படி காட்சி தந்து கொண்டிருந்தது. இப்படி மறுமையின் நினைவோடு வாழக்கூடிய அந்த வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை.
 
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
 
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.” (அல்குர்ஆன் 26 : 88)
 
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (அல்குர்ஆன் 26 : 88,89)
 
வசனத்தின் கருத்து : அல்லாஹ் சொல்கிறான்; நாளை மறுமையில் செல்வமோ, பிள்ளைகளோ பலன் தர மாட்டார்கள். யாருடைய உள்ளம் சலாமத் ஆக பாதுகாப்பானதாக, சுத்தமானதாக, ஈமானால் நிறைந்திருந்ததோ, அல்லாஹ்வுடைய அன்பால் நிறைந்திருந்ததோ, அல்லாஹ்வின் விதியின் நம்பிக்கையால் நிறைந்திருந்ததோ அந்த உள்ளத்தோடு வந்தவர்களை தவிர. 
 
அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அவனுடைய கருணைக்கும் அன்புக்கும் உரிய நல்லவர்களாக ஆக்கியருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْمُذَكِّرُ الرَّازِيُّ، ثَنَا أَبُو زُرْعَةَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، ثَنَا عِيسَى بْنُ صُبَيْحٍ، حَدَّثَنَا زَافِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ مَرَّةً: عَنِ ابْنِ عُمَرَ، وَقَالَ مَرَّةً: عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: جَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَأَحْبِبْ مَنْ أَحْبَبْتَ فَإِنَّكَ مَفَارِقُهُ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ» ثُمَّ قَالَ: «يَا مُحَمَّدُ شَرَفُ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ وَعِزُّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ، وَإِنَّمَا يُعْرَفُ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ حُمَيْدٍ، عَنْ زَافِرٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ شَيْخٍ ثِقَةٍ الشَّكُّ وَتِلْكَ الرِّوَايَةُ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ بِلَا شَكٍّ فِيهِ (المستدرك على الصحيحين للحاكم 7921 - ) "التعليق - من تلخيص الذهبي] 7921 – صحيح
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ قَالَ: " لَمَّا هَاجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْكَبُ وَأَبُو بَكْرٍ رَدِيفُهُ، وَكَانَ أَبُو بَكْرٍ يُعْرَفُ فِي الطَّرِيقِ لِاخْتِلَافِهِ إِلَى الشَّامِ، وَكَانَ يَمُرُّ بِالْقَوْمِ فَيَقُولُونَ: مَنْ هَذَا بَيْنَ يَدَيْكَ يَا أَبَا بَكْرٍ؟ فَيَقُولُ: هَادٍ يَهْدِينِي. فَلَمَّا دَنَوْا مِنَ الْمَدِينَةِ بَعَثَا إِلَى الْقَوْمِ الَّذِينَ أَسْلَمُوا مِنَ الْأَنْصَارِ إِلَى أَبِي أُمَامَةَ وَأَصْحَابِهِ، فَخَرَجُوا إِلَيْهِمَا فَقَالُوا: ادْخُلَا آمِنَيْنِ مُطَاعَيْنِ، فَدَخَلَا " قَالَ أَنَسٌ: «فَمَا رَأَيْتُ يَوْمًا قَطُّ أَنْوَرَ وَلَا أَحْسَنَ مِنْ يَوْمِ دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ الْمَدِينَةَ، وَشَهِدْتُ وَفَاتَهُ، فَمَا رَأَيْتُ يَوْمًا قَطُّ أَظْلَمَ، وَلَا أَقْبَحَ مِنَ الْيَوْمِ الَّذِي تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ» (مسند أحمد-12234)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ عِنْدَ امْرَأَتِهِ، ابْنَةِ خَارِجَةَ بِالْعَوَالِي، فَجَعَلُوا يَقُولُونَ، لَمْ يَمُتِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّمَا هُوَ بَعْضُ مَا كَانَ يَأْخُذُهُ عِنْدَ الْوَحْيِ، فَجَاءَ أَبُو بَكْرٍ، فَكَشَفَ عَنْ وَجْهِهِ وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ وَقَالَ: «أَنْتَ أَكْرَمُ عَلَى اللَّهِ أَنْ يُمِيتَكَ مَرَّتَيْنِ، قَدْ وَاللَّهِ مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَعُمَرُ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ يَقُولُ: وَاللَّهِ مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا يَمُوتُ حَتَّى يَقْطَعَ أَيْدِيَ أُنَاسٍ مِنَ الْمُنَافِقِينَ كَثِيرٍ وَأَرْجُلَهُمْ، فَقَامَ أَبُو بَكْرٍ، فَصَعِدَ الْمِنْبَرَ فَقَالَ: " مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لَمْ يَمُتْ، وَمَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ {وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ، أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ، وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا، وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ} [آل عمران: 144] قَالَ عُمَرُ: فَلَكَأَنِّي لَمْ أَقْرَأْهَا إِلَّا يَوْمَئِذٍ (سنن ابن ماجه 1627 -) حكم الألباني - صحيح دون جملة الوحي
 
குறிப்பு 4)
 
حَدَّثَنَا مُوسَى، عَنْ أَبِي عَوَانَةَ، حَدَّثَنَا فِرَاسٌ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، حَدَّثَتْنِي عَائِشَةُ أُمُّ المُؤْمِنِيِنَ، قَالَتْ: إِنَّا كُنَّا أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهُ جَمِيعًا، لَمْ تُغَادَرْ مِنَّا وَاحِدَةٌ، فَأَقْبَلَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلاَمُ تَمْشِي، لاَ وَاللَّهِ مَا تَخْفَى مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَآهَا رَحَّبَ قَالَ: «مَرْحَبًا بِابْنَتِي» ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ، ثُمَّ سَارَّهَا، فَبَكَتْ بُكَاءً شَدِيدًا، فَلَمَّا رَأَى حُزْنَهَا سَارَّهَا الثَّانِيَةَ، فَإِذَا هِيَ تَضْحَكُ، فَقُلْتُ لَهَا أَنَا مِنْ بَيْنِ نِسَائِهِ: خَصَّكِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالسِّرِّ مِنْ بَيْنِنَا، ثُمَّ أَنْتِ تَبْكِينَ، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا: عَمَّا سَارَّكِ؟ قَالَتْ: مَا كُنْتُ لِأُفْشِيَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِرَّهُ، فَلَمَّا تُوُفِّيَ، قُلْتُ لَهَا: عَزَمْتُ عَلَيْكِ بِمَا لِي عَلَيْكِ مِنَ الحَقِّ لَمَّا أَخْبَرْتِنِي، قَالَتْ: أَمَّا الآنَ فَنَعَمْ، فَأَخْبَرَتْنِي، قَالَتْ: أَمَّا حِينَ سَارَّنِي فِي الأَمْرِ الأَوَّلِ، فَإِنَّهُ أَخْبَرَنِي: «أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ بِالقُرْآنِ كُلَّ سَنَةٍ مَرَّةً، وَإِنَّهُ قَدْ عَارَضَنِي بِهِ العَامَ مَرَّتَيْنِ، وَلاَ أَرَى الأَجَلَ إِلَّا قَدِ اقْتَرَبَ، فَاتَّقِي اللَّهَ وَاصْبِرِي، فَإِنِّي نِعْمَ السَّلَفُ أَنَا لَكِ» قَالَتْ: فَبَكَيْتُ بُكَائِي الَّذِي رَأَيْتِ، فَلَمَّا رَأَى جَزَعِي سَارَّنِي الثَّانِيَةَ، قَالَ: «يَا فَاطِمَةُ، أَلاَ تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ المُؤْمِنِينَ، أَوْ سَيِّدَةَ نِسَاءِ هَذِهِ الأُمَّةِ» (صحيح البخاري 6285 -)
 
குறிப்பு 5)
 
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَعَى زَيْدًا، وَجَعْفَرًا، وَابْنَ رَوَاحَةَ لِلنَّاسِ، قَبْلَ أَنْ يَأْتِيَهُمْ خَبَرُهُمْ، فَقَالَ «أَخَذَ الرَّايَةَ زَيْدٌ، فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ ابْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، وَعَيْنَاهُ تَذْرِفَانِ حَتَّى أَخَذَ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ» (صحيح البخاري3757 -)
 
குறிப்பு 6)
 
حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ هُوَ ابْنُ حَيَّانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ القَيْنِ، وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، فَقَبَّلَهُ، وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ»، ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ» رَوَاهُ مُوسَى، عَنْ سُلَيْمَانَ بْنِ المُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ [ص:84] عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري 1303 -)
 
குறிப்பு 7)
 
حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ» (صحيح البخاري 1284 -)
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/