HOME      Khutba      பயம்!! | Tamil Bayan 633   
 

பயம்!! | Tamil Bayan 633

           

பயம்!! | Tamil Bayan 633


بسم الله الرّحمن الرّحيم
 
பயம்!!
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணி வாழும் படி, அல்லாஹ்வுடைய சட்டங்களை மதித்து நடக்கும் படி, ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றும் படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம் பாவங்களை மன்னித்தருள்வாயாக! இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற நல்லோரில் உங்களையும் எங்களையும் சேர்த்து அருள்புரிவானாக! ஆமீன்.
 
ஒரு முஃமினுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது ஆதரவு எப்படி இருக்க வேண்டுமோ அதே போல் அல்லாஹ்வுடைய பயமும் இருக்கவேண்டும். அல்லாஹ்வை பயப்படுவது, அல்லாஹ்வை அஞ்சுவது, ஈமானுடைய தன்மைகளில் ஒன்று. ஈமானுடைய அடையாளங்களில் ஒன்று.
 
وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள். (அல்குர்ஆன் 3 : 175)
 
وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ
 
அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறான். (அல்குர்ஆன் 3 : 28)
 
இந்த உலகத்தில் நாம் எத்தனையோ விஷயத்தை குறிப்பிட்டு பயப்படுகிறோம். எதிரியை பற்றிய பயம். வாழ்வாதாரத்தை பற்றிய பயம். நோய்களைப் பற்றிய பயம். நம்முடைய வருங்காலத்தைப் பற்றிய பயம். 
 
இப்படியாக அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு பயந்து கொண்டு இருக்கிறோம். அல்லாஹ் தஆலா எந்த ஒரு பயத்தை ஈமானுக்கு அடையாளமாக ஆக்கியிருக்கின்றானோ, நம்முடைய இஸ்லாமிய அடிப்படையின் அடையாளமாக ஆக்கி இருக்கின்றானோ, அந்த பயத்தை நாம் விட்டுவிட்டோம். அந்த பயத்தை நாம் மறந்துவிட்டோம். உலகம், பொருளாதாரம், அன்றாட வாழ்க்கை சார்ந்த பல விஷயங்கள் குறித்து நாம் பயப்படுகிறோம்.
 
எது உண்மையான பயமோ, எந்த பயம் இருக்க வேண்டுமோ அந்த பயம் நம்மில் பல பேரின் உள்ளங்களில் இருந்து எடுபட்டு உள்ளது. அல்லாஹ்வைப் பற்றிய பயம், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய பயம், அல்லாஹ்வுடைய பிடியின் பயம், நரகத்தின் பயம், மஹ்ஷருடைய பயம், சிராத் பாலத்தை பற்றிய பயம், நம்முடைய அமல்களுடைய குறிப்பு வலது கையில் கொடுக்கப்படுமா? இடது கையில் கொடுக்கப்படுமா? வலப்பக்கம் பிரிக்கப்படும் நல்லோர்கள் பக்கம் செல்வோமா? அல்லது இடது பக்கம் (நரகத்தின் பக்கம்) விரட்டக்கூடிய பாவிகள் பக்கம் நாம் விரட்டப்படுவோமா?
 
அல்லாஹ்வின் அடியார்களே! இதுவெல்லாம் நாம் பயப்பட வேண்டிய விஷயங்கள். நாம் அஞ்ச வேண்டிய விஷயங்கள். நம்முடைய முடிவை குறித்த பயம். என்னுடைய முடிவு எந்த நிலையில் இருக்கும்? லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா என்ற தூய திருதவ்ஹீத் அதை மொழியக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டுமே! நல்ல அமல் செய்யக் கூடிய நிலையில் எனக்கு மரணம் வரவேண்டுமே! அல்லாஹ்வை நினைவு கூர்ந்து இருக்கும் நிலையில் எனக்கு அல்லாஹ்வுடைய சந்திப்பு ஏற்படவேண்டுமே! மறதியான நிலையில் எனக்கு மரணம் வந்துவிடக்கூடாதே! இதுபோன்ற பயம் எல்லாம் நமக்குள் இருக்க வேண்டும்.
 
ஆனால், இன்று இந்த பயங்கள் எல்லாம் நம் உள்ளத்தை விட்டு மறைந்து, உலக தேவைகளுடைய பயம், இந்த உலகத்தில் மாறி வரக்கூடிய சூழலுடைய பயம், இதுதான் நம் உள்ளத்தில் பெரும்பாலான இடத்தை கவ்விப்பிடித்து இருக்கின்றது.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் ஒரு ஹதீஸ், அல்லாஹ் கூறுகின்றான். 
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِي عَنْ رَبِّهِ جَلَّ وَعَلَا، قَالَ:  «وَعِزَّتِي لَا أَجْمَعُ عَلَى عَبْدِي خَوْفَيْنِ وَأَمْنَيْنِ، إِذَا خَافَنِي فِي الدُّنْيَا أَمَّنْتُهُ يَوْمَ الْقِيَامَةِ، وَإِذَا أَمِنَنِي فِي الدُّنْيَا أَخَفْتُهُ يَوْمَ الْقِيَامَةِ».
( صحيح ابن حبان 640 -) تعليق الألباني] حسن صحيح - «الصحيحة» (742(
 
ரப்புல் ஆலமீன் தனது கண்ணியத்தின் மீது சத்தியம் செய்கின்றான். என்னுடைய  அடியானுக்கு இரண்டு பயங்களை ஒன்று சேர்த்து நான் கொடுக்க மாட்டேன். அதுபோன்று இரண்டு நிம்மதிகளை அல்லாஹ் கொடுக்க மாட்டான்.
 
இந்த உலகத்தில் என்னை பயப்படாமல் நிம்மதியாக இருந்தால் மறுமையில் நான் அவனுக்கு பயத்தை கொடுப்பேன். (1)
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு ஹிப்பான், எண்: 742.
 
-அல்அம்ன் என்று சொன்னால் அல்லாஹ்வின் தண்டனை குறித்து அச்சமற்று இருப்பது. எனக்கு ஒன்றும் நடக்காது. எனக்கு எதுவும் ஏற்படாது. என்னை எல்லாம் அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்று இறுமாப்பு கொள்வது. அல்லாஹ்வின் மீது துணிவு கொள்வது, நன்மைகளை விடுவது, பாவங்களை செய்வதில் துணிவு கொள்வது, அல்லாஹ்வுடைய தண்டனை பற்றி பயமற்று இருப்பது- 
 
அல்லாஹ் கூறுகின்றான்; இந்த உலகத்தில் என்னை பயப்படாமல் இருந்தால் மறுமையில் நான் அவனுக்கு பயத்தை கொடுப்பேன். அடியான் உலகத்தில் என்னை பயந்துவிட்டால், 
 
-அல்லாஹ்வை பயந்து விடுவது என்றால், அல்லாஹ்வுடைய தாத் அவனுடைய  கண்ணியத்தை நினைத்துப் பயப்படுவது; அவனுடைய தண்டனையை நினைத்து பயப்படுவது; மறுமையை நினைத்து பயப்படுவது; நரகத்தை நினைத்துப் பயப்படுவது; இது எல்லாம் அல்லாஹ்வை பயப்படுவதிலே வரும்.
 
சில வறட்டுத் தத்துவம் பேசக்கூடிய சூஃபிகள் சொல்வார்கள்; எங்களுக்கு நரகத்தை பற்றி எல்லாம் பயம் இல்லை. எங்களை நரகத்தில் போடுவது அல்லாஹ்விற்கு விருப்பம் என்றால் எங்களுக்கு நரகமே வேண்டும் என்று சொல்வார்கள். சகோதரர்களே! இது குஃப்ருடைய வார்த்தை; இறை நிராகரிப்புடைய வார்த்தை.
 
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருக்குமேயானால், அல்லாஹ் எந்த தண்டனையை குறித்து எச்சரித்தானோ, என்ன தண்டனையை குறித்து நபிமார்கள் எச்சரித்தது மட்டுமல்லாமல், நபிமார்களும் எதைக் குறித்து பயந்து வந்தார்களோ அந்த நரகத்தைக் குறித்து நாமும் பயப்படவேண்டும். அல்லாஹ்வை பயப்படுவது உண்மை என்றால் அல்லாஹ்வுடைய தண்டனையை பயப்படவேண்டும். நரக தண்டனையை பயப்படவேண்டும். நரக நெருப்பை பயப்படவேண்டும்.
 
அல்லாஹ் கூறுகிறான்;
 
وَاتَّقُوا النَّارَ
 
நரக நெருப்பிற்கு பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 3 : 131)
 
நபி )ஸல்( வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;
 
عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ، قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ، وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ " )سنن الترمذي 1669 –) حكم الألباني] : حسن
 
அல்லாஹ்விற்கு இரண்டு சொட்டுகளை விடவும், இரண்டு காலடிகளை விடவும் விருப்பமானது பிரியமானது எதுவும் இல்லை. முதலாவதாக சொல்கிறார்கள். அல்லாஹ்வுடைய பயத்தால் கண்களில் சிந்தக்கூடிய அந்த கண்ணீர் சொட்டுக்கள்.
 
-நம்முடைய சுஜூதில் ஒரு சொட்டு கண்ணீர், அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை கேட்டு, நரகத்தை பயந்து, நம்முடைய துஆக்களில் நம்முடைய தனிமையில் இதற்காக தனியாக நாம் நேரம் ஒதுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் வாகனத்தில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். அல்லாஹ்வை நினைக்கிறீர்கள். உங்கள் கண்ணிலே அப்படியே தண்ணீர் வருகிறது. நீங்கள் இரவில் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு விழிப்பு வருகிறது. அல்லாஹ்வை நினைக்கிறீர்கள். சொர்க்கத்தை நினைக்கிறீர்கள். நரகத்தை நினைக்கிறீர்கள் அந்த நேரத்தில் ஒரு அழுகை- 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (3)
 
وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ
 
ஏழு கூட்டத்தார்கள் அர்ஷுடைய நிழலில் இருப்பார்கள். அதில் ஒருவர், யாரும் பார்க்காத போது தனிமையில் அல்லாஹ்வை நினைத்தவர். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண்: 1423.
 
உங்கள் பயணத்திலோ, உங்களது அறைகளிலோ, உங்களது அலுவலகத்திலோ, யாரும் இல்லை. நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். அந்த நேரத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் அல்லாஹ்வுடைய திக்ரை ஓதி, ஒரு குர்ஆன்  வசனத்தை ஓதி, அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை கேட்கின்றேன். உன்னிடத்தில் நரகத்தை விட்டு பாதுகாப்புத் தேடுகின்றேன். துஆக்களில் பெரிய துஆ இந்த வார்த்தையைக் கூறி ஒரு அழுகை, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இதை விட அல்லாஹ்வுக்கு விருப்பமானது ஒன்று கிடையாது.
 
இன்று பலருக்கு சொர்க்கத்தை கேட்கும்போதும் நரகத்தை விட்டு பாதுகாப்புத் தேடும் போதும் அழுகை வருவது இல்லை. அல்லாஹ்வுடைய பயம் வருவது இல்லை. சொர்க்கத்தை கேட்கும்போது அந்த சொர்க்கத்திற்கு நான் தகுதி உள்ளவனாக இருக்கின்றேனா என்று ஒரு பயத்தோடு கேட்க வேண்டும். நரகத்திலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கேட்கும்போது என்னிடத்தில் நரகத்திற்குரிய பாவங்கள் இருக்கிறதே! நான் அந்தப் பாவத்திலிருந்து என்னை சுத்தப்படுத்தி கொண்டேனா என்று அந்த பயத்தோடு நரகத்தை விட்டு பாதுகாப்புத் தேடவேண்டும்.
 
முஸ்னது அஹ்மதில் வரக்கூடிய ஒரு அறிவிப்பில் வருவதாவது;
 
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: «كَيْفَ تَقُولُ فِي الصَّلَاةِ؟» قَالَ: أَتَشَهَّدُ ثُمَّ أَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ، أَمَا إِنِّي لَا أُحْسِنُ دَنْدَنَتَكَ وَلَا دَنْدَنَةَ مُعَاذٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَوْلَهَا نُدَنْدِنُ» 
(مسند أحمد15898 - ) 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு கிராமவாசி ஒருவர் வருகின்றார். அவர் சொல்கிறார். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் செய்வதை போன்று அழகான வாக்கியங்களில் அற்புதமான அமைப்பில் துஆ கேட்பதெல்லாம் எனக்கு தெரியாது. முஆத் (ரலி) கேட்கிறாரே அது போல் எனக்கு அழகான வாக்கியங்களைக் கொண்டு எனக்கு துஆ கேட்க தெரியாது. 
 
நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். தோழரே! உங்களுக்கு என்ன தெரியும்? என்று. அவர் சொல்கிறார். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு தெரிந்த துஆ ஒன்று மட்டும் தான். அது,
 
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
 
யா அல்லாஹ்! உன்னிடத்தில் சொர்க்கத்தை கேட்கிறேன். யா அல்லாஹ்! உன்னிடத்தில் நரகத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். 
 
நபியவர்கள் பதில் சொன்னார்கள்; தோழரே! நானும் சரி, முஆதும் சரி நாங்கள் எதை கேட்டாலும் எங்களுடைய துஆக்கள் எல்லாம் இதைச் சுற்றித்தான் இருக்கும். சொர்க்கத்தை தேடி, நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடி, சொர்க்கத்தை வேண்டி, நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடி தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தத் தோழருக்கு சொல்லி அனுப்புகிறார்கள். 
 
நூல் : முஸ்னத் அஹ்மது, எண்: 15898.
 
ஹதீஸின் தொடர்ச்சி;
 
இரண்டு கண் துளிகள், இரண்டு சொட்டுகள் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது அதைவிட விருப்பமானது ஒன்றும் கிடையாது என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிவிட்டு, ஒன்று அல்லாஹ்வுடைய பயத்தால் அச்சத்தால் ஒரு சொட்டு கண்ணீர் விடும்போது அது அல்லாஹ்வுக்கு விருப்பமானது. இரண்டாவது அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு ஷஹீத் கொல்லப்படும்போது, அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு முஜாஹித் போர் செய்யும்போது, அவருடைய உடலில் இருந்து சொட்டக்கூடிய அந்த சொட்டு இரத்தம். 
 
அடுத்து, இரண்டு காலடிகள் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது. அதைவிட விருப்பமான ஒன்று இல்லை. ஒன்று, அல்லாஹ்வின் பாதையில் போருக்காக செல்லும்போது எடுத்துவைக்கும் காலடி. இரண்டாவது அல்லாஹ் தன் மீது கடமையாக்கிய கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் எடுத்து வைக்கும் காலடி.
 
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1669.
 
ஒரு மனிதர் தொழுகைக்கு வருகிறார்; ஒரு மனிதர் தன் மீது உள்ள கடமையான ஸகாத்தைக் கொடுக்க செல்கிறார்; ஒருவர் தன் பெற்றோரை சந்திக்க செல்கிறார்; தன்னுடைய உறவுகளை சேர்ப்பதற்காக செல்கிறார்; ஒரு ஏழைக்கு உதவுவதற்காக செல்கிறார்; இப்படி அல்லாஹ் தன் மீது கடமையாக்கிய கடமையைச் செய்வதற்காக அடியான் எடுத்து வைக்கும் இந்த ஒரு காலடி விருப்பமானது. அப்படி என்றால் அவர் எவ்வளவு தூரம் பயணிக்கிறாரோ, அவ்வளவு தூரம் அல்லாஹ்விற்கு விருப்பமானதாக இருக்கும்.
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இந்த பயம் என்பது மலக்குமார்கள் அல்லாஹ்வை பயந்த பயம். 
 
சில நண்பரை அழைத்து சென்ற போது ஹஜ்ஜில் நடந்த சம்பவம் இது. கஃபதுல்லாஹ்வை சுற்றி அங்கே ஹாஜிகள் தவாஃப் செய்து கொண்டு அழுது கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தொழுகையில் அழுகிறார்கள். வந்தவர்களில் சிலர் இவர்களெல்லாம் ஏன் அழுகிறார்கள் என்று கேட்கிறார். அதுதான் நாம் தவாப் செய்தோமே. அல்லாஹ் பாவத்தை மன்னித்து விட்டானே. அப்போது ஏன் அழுக வேண்டும்? அதுதான் உம்ரா முடித்து விட்டோமே. நம்ம பாவம் எல்லாம் முடிந்து விட்டதே. நாம் எதற்கு அழுக வேண்டும். எப்படிப்பட்ட கேள்வி பாருங்கள்?
 
அல்லாஹ்வின் அடியார்களே! உள்ளத்தில் ஈமான் எந்த அளவு வறண்டுவிடுமோ, அல்லாஹ்வை பற்றிய அறிவு, அல்லாஹ்வுடைய ஸிஃபாத்துகளைப் பற்றிய அறிவு, எந்த அளவு குறைந்துவிடுமோ அவர்கள் பேசக்கூடிய பேச்சு தான் இது. யார் அல்லாஹ்வை பற்றி அதிகம் அறிவார்களோ, அல்லாஹ்வைப் பற்றிய ஸிஃபத்துகளை அறிவார்களோ, அவர்கள் அந்த அளவிற்கு பயப்படுவார்கள்.
 
மலக்குமார்கள் என்ன பாவம் செய்தார்கள்? அல்லாஹு தஆலா சொல்லிக்காட்டுகிறான்,
 
يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
 
அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை செய்து கொண்டிருக்கின்றனர். (அல்குர்ஆன் 16 : 50)
 
அடுத்து நபிமார்கள் ரசூல்மார்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
 
الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّهَ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا 
 
அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (அல்குர்ஆன் 33 : 39)
 
ஒவ்வொரு நபி உடைய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். அவர்கள் அழுத அழுகையை எடுத்துப்பாருங்கள். நூஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நூஹ் என்று பெயர் வைத்த காரணத்தை இமாம் குர்துபீ (ரஹ்) சொல்கிறார்கள். அல்லாஹ்வின் அச்சத்தால் அதிகம் கதறி அழக்கூடியவராக இருந்தார்கள். நூஹ் என்றால் பயத்தால் கதறி அழக்கூடியவர் என்று அர்த்தம். நூஹ் அலைஹிஸ்ஸலாம் நபிமார்களில் ஐந்து போற்றத்தக்க மிகப்பெரிய நபிமார்களில் ஒருவர். அல்லாஹ்வுடைய அச்சத்தால் அவ்வளவு அழக்கூடியவர்கள்.
 
அதுபோன்று இப்ராஹிம் நபி, மூஸா நபி, ஈஸா நபி இவர்களின் சம்பவங்களை எடுத்துப் படித்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு அல்லாஹ்வை பயந்தார்கள் என்பது புரியும்.
 
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُصَلِّي وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ» سنن النسائي 1214 - -حكم الألباني صحيح
 
இறுதியாக நம்முடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழுகையின் சத்தம் எப்படி இருக்கும் என்றால் அடுப்பில் பாத்திரத்தில் நீர் கொதித்தால் எப்படி சத்தம் வருமோ அது போன்று அழுகையின் சத்தம் அவர்களின் நெஞ்சில் இருந்து வெளியாகும். அந்த சத்தத்தை நான் இரவில் படுத்து இருக்கும் போது அல்லாஹ்வின் தூதரிடம் செவியுறுவேன் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 
நூல் : நஸாயீ, எண் : 1216.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நல்லோர்களுடைய வாழ்க்கைப் பற்றி சொல்கிறான். மறுமை குறித்த பயத்தை சொல்லிக்காட்டுகிறான்.
 
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا (9) إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
 
(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்), ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்'' (என்றும் கூறுவார்கள்). (அல்குர்ஆன் 76 : 9,10)
 
இங்கே தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. நல்லவர்கள் நன்மைகளை செய்து கொண்டு, வணக்க வழிபாடுகளை செய்து கொண்டு, பாவத்தை விட்டு விலகி இருந்து அல்லாஹ்வை பயந்து கொண்டு இருப்பார்கள்.
 
ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்; 
 
عملوا والله بالطاعات واجتهدوا فيها وخافوا أن ترد عليهم
 
நல்லவர்கள் எப்படி என்றால் நன்மைகளைச் செய்வார்கள். வணக்க வழிபாடுகளை செய்வார்கள். அதில் மிகத் தீவிரமாக இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த அமல்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். 
 
முஃமின்கள் நன்மைகளைச் செய்வார்கள். அல்லாஹ்வை பயப்படவும் செய்வார்கள். நயவஞ்சகம் உள்ளவர்கள், ஈமானில் நிஃபாக் கலந்தவர்கள் பாவம் செய்வார்கள். ஆனால் பயப்படாமல் இருப்பார்கள். 
 
வசனத்தின் கருத்து : நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கின்றான். அவர்கள் தர்மம் கொடுப்பார்கள். அப்போது சொல்வார்கள், நாங்கள் அல்லாஹ்விற்காக கொடுக்கின்றோம். நீங்கள் எங்களுக்கு எந்த பிரதிபலனையும் செய்ய வேண்டாம். நீங்கள் எங்களுக்கு நன்றி கூற வேண்டும் என்று நாங்கள் உங்களிடத்தில் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பயப்படுகிறோம். மிகக்கடினமான உஷ்ணம் உள்ள மறுமை நாளை நாங்கள் பயப்படுகிறோம். அந்த பயத்தால் நாங்கள் எங்கள் செல்வத்தை உங்களுக்கு தர்மம் செய்கின்றோம். (அல்குர்ஆன் 76 : 9,10)
 
சகோதரர்களே! இதுதான் முஃமின்களுடைய அடையாளம். அல்லாஹ் தஆலா முஃமின்களைப் பற்றிக் கூறுகின்றான். அதற்க்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய விளக்கமும் கூறியுள்ளார்கள்.
 
إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ
 
நல்லவர்கள் அல்லாஹ்வுடைய பயத்தால் பயந்து கொண்டு இருப்பார்கள். அல்லாஹ்வை பயந்து கொண்டு இருப்பார்கள். (அல்குர்ஆன் : 23:57)
 
இரண்டு விதமான முரண்பாடுகளை குறைகளை இன்று பார்க்கிறோம். தான் வாழ்நாளில் மலை போல் செய்து குவித்து வைத்திருக்க கூடிய பாவங்களை மறந்து விடுவார்கள். அனால், செய்த சில சில்லறை அமல்களை நினைவில் வைத்திருப்பார்கள். இந்த சில்லறை அமல்களைக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். தாங்கள் மலைகள் போல குவித்து வைத்திருக்கும் பாவத்தைப் பற்றிய பயம் அவர்களுக்கு இருக்காது 
 
அல்லாஹ் இதையும் சொல்லிக் காட்டுகிறான். பலர் பாவங்களை செய்து விட்டு அந்த பாவத்தை மறந்து இருப்பார்கள். நாளை மறுமையில் அவர்கள் செய்த பாவம் எல்லாம் அவர்களுக்கு வெளிக்காட்டப்படும்.
 
وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
 
அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவை அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (அல்குர்ஆன் 45 : 33)
 
நல்லவர்கள் அல்லாஹ்வுடைய அச்சத்தால் பயந்துகொண்டிருப்பார்கள்.
 
وَالَّذِينَ هُمْ بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ (58) وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ (59) وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ (60) أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ
 
எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கைகொள்கிறார்களோ அவர்களும், எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும், எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும், ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர். (அல்குர்ஆன் 23 : 58-61)
 
இந்த வசனத்தை கேட்டுவிட்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! செய்வதை செய்துவிட்டு பயந்து கொண்டு இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே! யாரைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான், மது அருந்தி விடுவார்களோ, விபச்சாரம் செய்துவிடுவார்களோ, திருடி விடுவார்களோ, பிறகு அல்லாஹ்வை பயப்படுவார்களோ, அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறானா? என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விளக்கம் கேட்கிறார்கள்.
 
أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ هَذِهِ الآيَةِ: {وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ} [المؤمنون: 60] قَالَتْ عَائِشَةُ: أَهُمُ الَّذِينَ يَشْرَبُونَ الخَمْرَ وَيَسْرِقُونَ؟ قَالَ: " لَا يَا بِنْتَ الصِّدِّيقِ، وَلَكِنَّهُمُ [ص:328] الَّذِينَ يَصُومُونَ وَيُصَلُّونَ وَيَتَصَدَّقُونَ، وَهُمْ يَخَافُونَ أَنْ لَا تُقْبَلَ مِنْهُمْ {أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ} [المؤمنون: 61] سنن الترمذي 3175 - حكم الألباني] : صحيح
 
நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். சித்தீகுடைய மகளே! அப்படி அல்ல. அவர்கள் யார் என்று தெரியுமா? அவர்கள் நோன்பு வைப்பார்கள். தொழுவார்கள். தர்மம் கொடுப்பார்கள். இவை எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று பயப்படுவார்கள் .
 
அடுத்த வசனத்தை நீர் பார்க்கவில்லையா?
 
أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ ]
 
இவர்கள் நன்மையில் விரைவார்கள். நன்மைகளில் முந்தி முந்தி செல்வார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். 
 
நூல் : திர்மிதி, எண் : 3175.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வை பயப்படுவதால் நம்முடைய உள்ளங்களில் அமல் செய்வதற்கு ஆர்வம் ஏற்படுகிறது. அந்த பயம் நமக்கு இக்லாஸை ஏற்படுத்துகிறது. ஹராமான இச்சைகளில் இருந்து நம்மை தடுத்து கொள்கிறது. 
 
நம்முடைய நஃப்ஸும் நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மை பாவத்தில் இழுக்கும் போது இந்த அல்லாஹ்வுடைய பயம் எந்த அளவிற்கு இருக்குமோ அந்த அளவு நம்மை நாம் பாதுகாக்க முடியும். 
 
அது போன்று நாளை மறுமையில் யாருடைய உள்ளத்தில் இந்த பயம் மிகைத்திருந்ததோ அவர்களை கண்டிப்பாக அல்லாஹ் மன்னித்து விடுவான்.
 
ஒரு சம்பவத்தை பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் சொல்லி காட்டுகின்றார்கள். அந்த காலத்தில் ஒரு மனிதர் இருந்தார் அவருக்கு மரணம் வந்தபோது தனது பிள்ளைகளை அழைத்து நான் உங்களுக்கு எத்தகைய தந்தையாக இருந்தேன் என்று கேட்கிறார். அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்தீர்கள் என்று கூறுகிறார்கள். அவர் சொல்கிறார், ஆனால் எனக்கு ஒரு பயம் இருக்கிறது. நான் உங்களுக்கு ஒரு வசியத்தை செய்கின்றேன். நான் இறந்துவிட்டால் என்னை எரித்து சாம்பலாக்கி ஒரு பெரிய புயல் காற்று வீசும்போது என்னை நீங்கள் பரத்தி விடுங்கள். காரணம், நான் ஒரு அமலும் செய்யவில்லை. அல்லாஹ் என்னை மறுமையில் தண்டித்து விடுவானோ என்று நான் பயப்படுகிறேன் என்று கூறுகின்றார்.
 
அவர் இறந்தார். அப்படியே அவருடைய பிள்ளைகளும் செய்தார்கள். அல்லாஹு தஆலா அவரை தனக்கு முன்னால் கொண்டு வந்தான். அல்லாஹ் கேட்கின்றான். நீ இவ்வாறு வசியத்து செய்வதற்க்கு உன்னை எது தூண்டியது? அந்த அடியான் சொல்கின்றான். இறைவா! உன்னை பயந்தேன். உன் மீது உள்ள பயம் தான் என்னை அப்படி வசியத்து செய்ய தூண்டியது. அல்லாஹ் அக்பர்! அல்லாஹ்வுடைய தூதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அல்லாஹு தஆலா தன்னுடைய கருணையால் அவரை அப்படியே அணைத்துக் கொண்டான். (4)
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி எண்: 3219, முஸ்லிம் 4952
 
கண்ணியத்திற்குரியவர்களே! இது சாதாரண விஷயம் அல்ல. பாவம் செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும் என்று. நாம் என்ன பாவம் செய்தோம் என்று. 
 
நம் உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள் வந்து போகின்றன. எவ்வளவோ அல்லாஹ்வை மறந்து இருக்கின்றோம். இதற்கெல்லாம் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேட வேண்டும். 
 
அதற்கு அப்பாற்பட்டு அல்லாஹ்வுடைய ஸிஃபாத்துகளில் ஒன்று, அந்த ஸிஃபாத்துகளில் அறிந்து இருக்க கடமையில் ஒன்று, அல்லாஹ்வை எப்படி ஈமான் கொண்டு இருக்கிறோம்? அல்லாஹ்வை நாம் எப்படி நேசிக்க வேண்டும்? நம்முடைய ரப்பு என்ற அடிப்படையில், அதே நேரத்தில் நம்முடைய ரப்பு தான் பெரிய அரசன் என்ற அடிப்படையில் அவனை பயந்து கொண்டு இருப்பது நம்முடைய ஈமானின் பண்புகளில் ஒன்று. அல்லாஹு தஆலா அந்த பயத்தை கொண்டு நம்மை நேசிக்கின்றான். அல்லாஹ்வைப் பயப்படுபவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
 
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
 
எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். (அல்குர்ஆன் 49 : 13)
 
அல்லாஹ்வுடைய கண்ணியம், அல்லாஹ்வுடைய நேசம், இந்த பயத்தால் அடியானுக்கு கிடைக்கிறது. இந்த பயத்தை நாமும் உணர்வதோடு நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும். ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க கூடிய மிகச் சிறந்த அன்பளிப்பு மிகச்சிறந்த வசியத்து அல்லாஹ்வுடைய பயம் ஆகும். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் யார் எப்போது உபதேசம் கேட்டு வந்தாலும் சரி, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். 
 
அதுபோன்று அல்லாஹ் தஆலா இடத்தில் நாம் துஆவும் செய்து கொண்டு இருக்க வேண்டும் 
 
اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ
 
யா அல்லாஹ்! உன்னுடைய பயத்தை எனக்கு கொடு. எனக்கும் பாவத்துக்கும் இடையில் தடையாக இருக்கக் கூடிய அளவிற்கு உன்னை பயப்படக்கூடிய தக்வாவை எனக்கு கொடு என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்டிருக்கிறார்கள்.
 
اللهم إني أسألك خشيتك في السر والعلن
 
இரகசியமாக இருக்கும் போது, மறைவாக இருக்கும் போது, மக்களுக்கு மத்தியில் இருக்கும் போது, உன்னை பயப்படக்கூடிய நற்பாக்கியத்தை எனக்கு கொடு என்று அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார்கள். 
 
முஸ்னது அஹமது :18047.
 
அல்லாஹு தஆலா அந்த பயப்படக்கூடிய ஈமானை எனக்கும், உங்களுக்கும் தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஹசன், சஹீஹ் –நல்ல தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.
 
குறிப்பு 2).
 
குறிப்பு 3).
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ " (صحيح البخاري1423 -)
 
குறிப்பு 4).
 
- حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الغَافِرِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَجُلًا كَانَ قَبْلَكُمْ، رَغَسَهُ اللَّهُ مَالًا، فَقَالَ لِبَنِيهِ لَمَّا حُضِرَ: أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ؟ قَالُوا: خَيْرَ أَبٍ، قَالَ: فَإِنِّي لَمْ أَعْمَلْ خَيْرًا قَطُّ، فَإِذَا مُتُّ فَأَحْرِقُونِي، ثُمَّ اسْحَقُونِي، ثُمَّ ذَرُّونِي فِي يَوْمٍ عَاصِفٍ، فَفَعَلُوا، فَجَمَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَقَالَ: مَا حَمَلَكَ؟ قَالَ: مَخَافَتُكَ، فَتَلَقَّاهُ بِرَحْمَتِهِ " وَقَالَ مُعَاذٌ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الغَافِرِ، سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري 3478)
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/