HOME      Khutba      அல்லாஹ்வை ஆசைப்படுவோம் | Tamil Bayan - 585   
 

அல்லாஹ்வை ஆசைப்படுவோம் | Tamil Bayan - 585

           

அல்லாஹ்வை ஆசைப்படுவோம் | Tamil Bayan - 585


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
அல்லாஹ்வை ஆசைப்படுவோம்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதரின் மீதும், அந்தத்தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலாமும் ஸலவாத்தும் கூறியவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை கொண்டு உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! சென்ற ஜும்ஆவிலே ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் பக்கம் எந்த அளவு ஆர்வம் உள்ளவனாக, ஆசை உடையவனாக இருக்கவேண்டும் என்பதை நாம் பார்த்தோம். நாம் ஆசைப்பட வேண்டிய ஆர்வப்பட வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்று, முதன்மையான ஒன்று அல்லாஹ்தான்.
 
அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வை நாம் ஆசைப்படவேண்டும்.
 
அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் விருப்பம் தான் முதலாவது விருப்பமாகவும் அனைத்து விருப்பங்களையும் மிகைத்ததாகவும் இருக்கவேண்டும்.
 
அல்லாஹு தஆலா குர்ஆனிலே, 
 
وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّه
 
முஃமின்கள் அல்லாஹ்வை மிக அதிகம் நேசிப்பவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்-2 : 165)
 
அல்லாஹ்வுடைய நேசத்திற்கு சமமாக வேறு எந்த நேசத்தையும் அவர்கள் உள்ளத்தில் வைக்க மாட்டார்கள். 
 
அல்லாஹ்வுடைய நேசத்திற்கு இடையூறாக இருக்கக்கூடிய எதையும் அவர்கள் அந்த இடையூறு தரக்கூடிய விஷயங்களிலே அவர்கள் ஈடுபடமாட்டார்கள்.அல்லாஹ்வை 
 
மறக்க வைக்கக்கூடிய அல்லாஹ்வின் நினைவிலிருந்து, அன்பிலிருந்து உள்ளத்தை திசை திருப்பக் கூடிய எந்த ஒன்றிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக எதையும் அவர்கள் விடத் தயாராக இருப்பார்கள். அல்லாஹ்வின் விருப்பத்தை எந்த நிலையிலும் இந்த துனியாவுடைய எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்கள் விட மாட்டார்கள்.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّه
 
முஃமின்களே!உங்களுடைய செல்வங்களும் சரி, உங்களுடைய குடும்பங்கள் பிள்ளைகளும் சரி, அல்லாஹ்வின் நினைவிலிருந்து உங்களை திருப்பி விட வேண்டாம். (அல்குர்ஆன் 63 : 9)
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம்முடைய இந்த கல்பை அல்லாஹ்வுடைய அன்புக்காக, அல்லாஹ்வின் மீது ஆசை கொள்வதற்காக, ஆர்வம் கொள்வதற்காக படைத்திருக்கிறான். அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்காக அல்லாஹ்வை நேசிப்பதற்காக இந்த கல்பைப் படைத்திருக்கிறான்.எப்படி உடல் உறுப்புகளுக்கு இபாதத் இருக்கின்றனவோ அது போன்று நம்முடைய கல்புடைய இபாதத்துதான் ஈமான்.அல்லாஹ்வை நம்புவது, அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வின் மீது ஆர்வம் கொள்வது, அல்லாஹ்வின் மீது தேட்டம் உள்ளவர்களாக இருப்பது.இது குறித்து பல விஷயங்களை சென்ற ஜும்ஆவிலே பார்த்தது போன்று இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆ விலும் சில விஷயங்களைப் பார்ப்போம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களுடைய ஒரு செயலை அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். எந்த அளவு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வின் மீது ஆர்வம் உள்ளவர்களாக, அந்த ஆசை உள்ளவர்களாக இருந்தார்கள் என்றால், மழை பொழிய ஆரம்பித்தால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய மேலாடையை கொஞ்சம் களைந்து விட்டு அந்த மழையிலே நனைவார்கள்.ஸஹாபாக்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! என்ன இப்படி செய்கிறீர்கள்? என்று. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்:
 
عَنْ أَنَسٍ قَالَ قَالَ أَنَسٌ أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ قَالَ فَحَسَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ 
 
حَتَّى أَصَابَهُ مِنْ الْمَطَرِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا قَالَ لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى (صحيح مسلم- 1494) 
 
இந்த மழை என்னுடைய ரப்பிடம் இருந்து புத்தம் புதுசாக வருகிறது. எந்த கலப்படமும் இல்லாமல் அந்த ரஹ்மத், அது என் மீது பட வேண்டும் என்னுடைய ரப்பிடம் இருந்து வருகிறது.
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 1494
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்விடமிருந்து எந்த கலப்படமும் இல்லாமல் இறங்கக் கூடிய அந்த மழை தன் மீது படவேண்டும் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய விருப்பம். இது எதைக் காட்டுகிறது அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு உள்ள ஆர்வத்தை, ஆசையை என்னுடைய ரப்பிடம் இருந்து வந்தது.
 
நாம் நேசிக்கக் கூடிய ஒருவரிடமிருந்து நமக்கு ஒரு அன்பளிப்பு வருமேயானால் அந்த அன்பளிப்பை நாம் அந்த மனிதருடைய நேசத்தின் அளவிற்கு மதிப்போம். நாம் யார் மீது நேசம் வைத்திருக்கிறோமோ, அந்த மனிதர் மீது நமக்கு எந்த அளவு நேசம் இருக்குமோ அந்த அளவு அந்த அன்பளிப்பிற்கு உண்டான முக்கியத்துவம், அந்த அன்பளிப்பிற்கு உண்டான மரியாதை, கண்ணியம் நமது உள்ளத்திலே இருக்கும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த செயல் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது இருக்கின்ற அந்த ஆசையையும், ஆர்வத்தையும் காட்டுகின்றது.
 
கண்ணியத்திற்குரியவர்களே! ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கக் கூடிய மற்றொரு சம்பவத்தை பார்க்கும்போது இன்னும் இந்த விஷயத்தை நாம் தெளிவாக புரியலாம்.
 
ரசூலுல்லாஹி சல்லல்லாஹுஅலைஹி வசல்லம் தங்களுடைய அந்த இறுதி காலத்திலே, மரணத் தருவாயிலே அவர்கள் நோயுற்றிருக்கும் பொழுது ஏறக்குறைய ஒரு வாரம் அந்த நோயுடைய காலம் நீடிக்கின்றது. ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அதில் ஒரு நாள் மஸ்ஜிதிற்கு வந்து மிம்பரிலே அமர்கிறார்கள். அப்போது அவர்கள் ஒரு விஷயத்தை மக்களுக்கு முன் வைக்கின்றார்கள்.
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ قَالَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ
 
خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ فَبَكَى أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ إِنْ يَكُنْ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْعَبْدَ وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا قَالَ يَا أَبَا بَكْرٍ لَا تَبْكِ إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا مِنْ أُمَّتِي لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ وَلَكِنْ أُخُوَّةُ الْإِسْلَامِ وَمَوَدَّتُهُ لَا يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ بَابٌ إِلَّا سُدَّ إِلَّا بَابُ أَبِي بَكْرٍ (صحيح البخاري-446) 
 
அல்லாஹு தஆலா ஒரு அடியானுக்கு அவருடைய விருப்பத்தின் படி எதை தேர்ந்தெடுக்க வேண்டுமோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தான். ஒன்று இந்த துனியாவின் வாழ்க்கை சுகங்களை, வாழ்க்கை வசதிகளை அவர் தேர்ந்தெடுக்க விரும்பினால் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வுடைய நிஃமத்களை அல்லாஹ்விடம் இருக்கக்கூடிய மறுமையின் நிஃமத்களை தேர்ந்தெடுக்க விரும்பினால் அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ் அனுமதி அளிக்க, அந்த அடியாரோ அல்லாஹ்விடம் இருக்கக்கூடிய நிஃமத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று கூறுகிறார்கள்.(1)
 
புகாரி எண் :446
 
சகோதரர்களே! இதைக் கேட்ட மற்ற எல்லா சஹாபாக்களும் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், அபூபக்ர் அவர்களோ தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்போது ஸஹாபாக்கள் சொன்னார்கள், நாங்கள் பேசிக் கொண்டோம். அதாவது அபூபக்கர் ஏன் இப்படி செய்கிறார்? ஒரு மனிதரைப் பற்றி ரசூல் (ஸல்) அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் அவ்வளவுதான்! ஏன் இப்படி அபூபக்கர் அழுகிறார்? என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
 
பிறகு சொல்கிறார்கள், இந்த ஹதீசை பின்பு அறிவிக்கக்கூடிய காலத்திலே, அபூபக்ருக்கு "எங்களுடைய தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்!".எங்களில் அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸை அதிகம் புரிந்து கொண்டவர் அவர் தான்.என்ன நடந்தது சம்பவம்? சகோதரர்களே! எந்த மனிதரைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களோ அந்த மனிதர் அல்லாஹ்வுடைய ரசூல்.அதை அபூபக்கர் புரிந்துகொண்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் நம்மை விட்டு பிரியப் போகிறார்கள். தன்னுடைய மரணத்தைப் பற்றிய முன்னறிவிப்பைச் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதை தாங்க முடியாமல் அபூபக்கர் அழுதார்கள்.மற்ற சஹாபாக்களுக்கு அது அப்போது புரியவில்லை.பின்பு தான் புரிந்தது.
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு சொல்கிறார்கள். எங்களிலே அபூபக்கர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீசை மிகவும் அறிந்தவர்களாக இருந்தார்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பதிவு செய்யக்கூடிய இந்த ஹதீசிலே பாருங்கள். அல்லாஹு தஆலா,கடைசி இந்த வாழ்க்கையிலே, இதற்கு முன்பிருந்த சிரமங்கள் உங்களுக்கு இனி இருக்காது.
 
ஹதீஸில் எப்படி வருகிறது? என்றால்,
 
مِنْ زَهْرَةِ الدُّنْيَا
 
புகாரி எண் :3615
 
இனி வாழ்க்கையில் உங்களுக்கு வசதி தான். அப்படிப்பட்ட வசதியான வாழ்க்கையை உங்களுக்கு நான் அமைத்து தருகிறேன்.அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது ஆகிரத் வேண்டுமா?என்று கேட்கும் போது, தான் இவ்வளவு காலம் சிரமப்பட்ட இந்த சிரமத்திற்கு இனி வரக்கூடிய இந்த வயோதிக காலத்தில், சில காலங்களை நிம்மதியாக சந்தோஷமாக இந்த துனியாவிலே அனுபவித்துவிட்டு செல்வோம்."அல்லாஹ்! எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடு!" என்று அல்லாஹ்வுடைய தூதர் கேட்கவில்லை.உடனே அல்லாஹ்! என்னை நீ அழைத்துக் கொள்! உன்னிடத்தில் உள்ளதை நான் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்று மவ்த்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்களே, விரும்பினார்களே இதைத்தான் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.
 
அறிஞர்கள் கூறுகிறார்கள், அல்லாஹ்வின் மீது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்த அந்த விருப்பம், அந்த ஆசை,அந்த தேடல், 
 
கண்ணியத்திற்குரியவர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய மரணத்தருவாயைப் பற்றி மேலும் ஆயிஷா (ரழி) அன்ஹா சொல்கின்றார்கள்:
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலை அன்னை ஆயிஷாவுடைய மடியில் இருக்கிறது.மீண்டும் மீண்டும் ரசூல் (ஸல்) அவர்கள்,
 
أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ صَحِيحٌ إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنْ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرَ فَلَمَّا نَزَلَ بِهِ وَرَأْسُهُ عَلَى فَخِذِي غُشِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى سَقْفِ الْبَيْتِ ثُمَّ قَالَ اللَّهُمَّ الرَّفِيقَ الْأَعْلَى فَقُلْتُ إِذًا لَا يَخْتَارُنَا وَعَرَفْتُ أَنَّهُ الْحَدِيثُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا وَهُوَ صَحِيحٌ قَالَتْ فَكَانَتْ آخِرَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا اللَّهُمَّ الرَّفِيقَ الْأَعْلَى (صحيح البخاري-4104 )
 
இல்லை! எனக்கு உயர்ந்த நண்பன் தான் வேண்டும்.இல்லை!எனக்கு உயர்ந்த நண்பன் தான் வேண்டும்.இல்லை!எனக்கு உயர்ந்த நண்பன் தான் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மரணத்தருவாயிலே அவர்களுக்கு மீண்டும் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இன்னும் வாழ விரும்புகிறீர்களா? அல்லது உயர்ந்தோன் அல்லாஹ்விடத்தில் வர விரும்புகிறீர்களா? என்று.அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறுக்கிறார்கள்.இல்லை, எனக்கு துனியா வேண்டாம்.எனக்கு உயர்ந்த நண்பனாகிய அல்லாஹ் வேண்டும் என்று.
 
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது சொல்கிறார்கள்; மீண்டும் மீண்டும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இனி எங்களோடு இருக்க அவர்கள் விரும்பவில்லை. எங்களை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அல்லாஹ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். புகாரி எண்: 4104
 
கண்ணியத்திற்குரியவர்களே! நம்முடைய உள்ளத்தை நம்முடைய கல்பை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உலகத்தில் உள்ள அத்தனை சிறிய, பெரிய, அற்பமான, உயர்ந்த, சாதாரணமான,சிறந்த எல்லா வஸ்துக்கள் உடைய பிரியத்தையும் உள்ளத்தில் வைத்து, அந்த வஸ்துக்கள் உடைய தேடலில் தான் நமது கவனம் இருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இபாதத்தில் கூட, அல்லாஹ்வுடைய நாட்டம் வரவில்லை. இபாதத் செய்யும் போது கூட அல்லாஹ்வுடைய பாசத்தை உணர்ந்தவர்களாக இபாதத் செய்ய முடியவில்லை.
 
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب
 
நபியே! உங்களுடைய ரப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களாக இபாதத் செய்யுங்கள்.(அல் குர்ஆன் 94 : 8)
 
يَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا
 
நபிமார்கள் தொழும்போது அல்லாஹ்வின் மீது ஆசை உள்ளவர்களாக தொழுவார்கள். அல்லாஹ்வின் மீது பயம் உள்ளவர்களாக தொழுவார்கள். (அல்குர்ஆன் 21 : 90)
 
சகோதரர்களே! இன்று நாம் என்ன விளங்கி வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அல்லாஹ்வை ஈமான் கொண்டால் போதும்; ஆசை என்பதும், அன்பு என்பதும், தேடல் என்பதும், உள்ளத்தின் ஆர்வம் என்பதும், இந்த உலக வஸ்துகளுக்காக,மனைவிக்காக, பிள்ளைகளுக்காக, தான் செய்கின்ற வியாபாரத்திற்காக என்று அழியக் கூடிய இந்த துனியாவுக்காக இந்த உள்ளத்தை நாம் வைத்து விட்டோம். வெறும் ஈமான் இருந்தால் போதும் என்று.
 
அன்பு சகோதரர்களே! ஈமான் எப்படி என்றால் அது அடிப்படையான ஒன்று.அல்லாஹ்வை நம்புவது அல்லாஹ்வை வணக்கத்திற்குரியவனாக, தன்னுடைய ரப்பாக, தன்னை படைத்த இறைவனாக நம்புவது. அந்த நம்பிக்கையில் உயிரோட்டம் ஏற்பட வேண்டுமென்றால் அந்த நம்பிக்கை அதனுடைய பலனை கொடுக்க வேண்டுமென்றால், அந்த நம்பிக்கையின் மூலமாக நம் வாழ்க்கையிலே சீர்திருத்தம் ஏற்பட வேண்டுமென்றால், அந்த நம்பிக்கையில் அல்லாஹ்வின் அன்பு கலந்து இருக்க வேண்டும்.அல்லாஹ்வின் மீது ஆசை கலந்திருக்க வேண்டும்.அல்லாஹ்வின் மீது ஆர்வம் கலந்திருக்க வேண்டும்.அப்போது தான் அந்த அல்லாஹ்வை பார்ப்பதற்கு நல்ல அமல்களை கொண்டு நாம் தயாராகுவோம்.
 
அல்லாஹ்வுடைய கண்ணியத்தின் மீது அல்லாஹ்வுடைய தண்டனையின் மீது பயம் இருக்க வேண்டும்.அந்த பயம் இருக்கும் போது தான் அல்லாஹ்வை நாளை மறுமையிலே சந்திக்கின்ற நாளில் அல்லாஹ் என்னை தண்டித்து விட கூடாது என்ற பயத்தால் அல்லாஹ் தடுத்த பாவங்களிலிருந்து விலகி இருப்போம்.இப்படி ஆசையும் பயமும் இல்லாமல் இந்த ஈமான் இருக்குமேயானால் எந்த விதமான நன்மையையும் கொடுக்காது. எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
 
நபிமார்களுடைய ஈமான், சஹாபாக்களின் ஈமான், ஸாலிஹீன்களின் ஈமான் இந்த அன்பையும் இந்த அச்சத்தையும் கொண்டு தான் கலந்திருந்தது.அதன் காரணமாகத்தான் எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தாலும் அந்த சோதனையை அவர்களால் அல்லாஹ்விற்காக என்று தாங்கிக் கொள்ள முடிந்தது.ஒவ்வொரு அமலையும் அவர்கள் செய்வதற்கு ஆர்வப்பட்டார்களே, அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது இருந்த அந்த ஆசை அதற்கு காரணம். சிறிய பாவங்களையும் விட்டு விலகினார்களே அல்லாஹ்வுடைய தண்டனையின் மீது அவர்களுக்கு இருந்த பயம்.
 
அன்பிற்குரியசகோதரர்களே! அல்லாஹ் சுபஹானஹு தஆலா குர்ஆனிலே முந்திய வேதங்களில் கூறப்பட்ட அந்த விஷயங்களை எல்லாம் நமக்கு சுருக்கமாக சொல்லி இருக்கிறான்.அல்லாஹ்வின் மீது எப்படி தேடல் ஆர்வம் இருக்க வேண்டும் என்பதை முந்தைய வேதங்களிலும் அல்லாஹ் கூறியிருக்கிறான். அதனுடைய உண்மை ஆழத்தை அல்லாஹ் நம்முடைய வேதத்திலே, அல்குர்ஆனிலே கூறுகிறான்; ஒரு வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
 
فَفِرُّوا إِلَى اللَّه
 
அல்லாஹ்வின் பக்கம் விரண்டோடி வந்து விடுங்கள். அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் விரண்டோடி, ஓடோடி வந்து விடுங்கள்.' (அல்குர்ஆன் -51 : 50)
 
فرار என்று சொன்னால் ஒரு மனிதன் தன்னுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, ஓடக்கூடிய அந்த ஓட்டத்திற்கு ' فرار என்று சொல்வது, விரண்டோடுதல்.ஒரு சிங்கம் துரத்துகிறது அல்லது ஒரு பெரிய விலங்கு துரத்துகிறது தப்பிக்க வேண்டுமென்றால் மனிதன் முடிந்த அளவு ஓடுவோம் இல்லையென்றால் நின்று விடுவோம் என்று இருப்பானா? அவன் தன்னுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி எப்படி ஓடுவானோ அந்த ஓட்டத்திற்கு தான்'فرار' என்று சொல்லப்படும்.
 
அல்லாஹு தஆலா தன் பக்கம் வருவதற்கு فرار ஆக வாருங்கள்,ஓடோடி வாருங்கள்,நிற்காமல் வாருங்கள்,வந்து கொண்டே இருங்கள். எதுவரை என்னிடம் நீங்கள் வந்து சேருகின்ற வரை. இந்த துனியாவின் மோகங்களிலிருந்து, இந்த துனியாவின் ஆசைகளில் இருந்து விடுபட்டு உங்களுடைய உள்ளத்தை என்னுடைய நினைவிலிருந்து திருப்பக்கூடிய ஒவ்வொரு போலியான ஏமாற்றக்கூடிய இந்த உலக இன்பங்களில் இருந்து விடுபட்டு என்னோடு என் பக்கம் ஓடோடி வந்து கொண்டே இருங்கள்.
 
நிற்கவே கூடாது, நின்றோம் என்றால் ஆபத்து. ஒதுங்கினோம் என்றால் ஆபத்து. ஒதுங்குவது அல்லாஹ்வின் பக்கம்.
 
لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ
 
நாம் ஒதுங்க முடியாது.நாம் பாதுகாப்பிற்காக எங்கேயும் நிற்க முடியாது, அல்லாஹ்விடம் இருந்து அல்லாஹ்விடமே தவிர.
 
அறிவிப்பாளர்: பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி எண்: 239
 
அன்பு சகோதரர்களே! இதனுடைய கருத்துகளை நம்முடைய தாபியீன்கள் யார், தவ்ராத்தையும் இஞ்ஜீலையும் படித்து பிறகு இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்களோ அந்த கண்ணியத்திற்குரிய தாபியீன்கள் சொல்வதைப் பாருங்கள்.நாங்கள் தாவூது அலைஹிஸ்ஸலாத்துவஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அந்த ஜபுரிலே இருந்து நாங்கள் படித்திருக்கிறோம்.அல்லாஹ் கூறுகிறான் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து, அன்பு சகோதரர்களே! தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறக்கூடிய அந்த வசனத்தை நீங்கள் சிந்தித்தால் இப்போது நாம் படிக்க இருக்கின்ற இந்த கருத்தின் உண்மையை நீங்கள் புரியலாம்.
 
அல்லாஹு தஆலா தாவூது நபி அவர்களை தன்னுடைய இபாதத்துக்காக தேர்ந்தெடுத்தான்.
 
اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا
 
தாவூத்! நீங்கள் எனக்கு நன்றி செலுத்துவதற்காக இறை வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் -34 : 13)
 
அல்லாஹ்வை மறக்காமல் அல்லாஹ்விற்கு அந்த வணக்க வழிபாடுகளை செவ்வனே செய்த அந்த நபி தான் தாவூத் அலைஹிஸ்ஸலாத்துஸ்ஸலாம். அல்லாஹ் சுபஹானஹு தஆலா அவர்களுடைய இபாதத்தை புகழ்ந்து சொல்லுகிறான்.
 
نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ
 
என்னுடைய அடியார்களில் தாவூத் மிகச் சிறந்தவர்.அவர் என்னை வணங்குவதில் என் பக்கமே முன்னோக்கியவர். (அல்குர்ஆன் -38 : 30)
 
அன்பு சகோதரர்களே! தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் ஜபூரிலே கூறிய அந்த கருத்தை அறிவிக்கின்றார்கள்.
 
يا دَاوُود ابلغ اهل ارضي اني حبيب لمن احبني
 
தாவூத் அவர்களே!பூமியில் உள்ள எனது அடியார்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்.
 
யார் என்னை நேசிப்பார்களோ நான் அவர்களுடைய நேசன் ஆக இருக்கிறேன்.
 
و جليس لمن جالسني
 
யார் என்னோடு பேச விரும்புகிறார்களோ நான் அவர்களோடு பேசுகிறேன்.
 
و مئنس لمن انس بذكري
 
யார் என்னுடைய நினைவில் மனமகிழ்ச்சியை காண்கிறார்களோ அவர்களுடைய மனதை நான் மகிழ்விப்பேன்.
 
و صاحب لمن صاحبني
 
யார் என்னோடு நட்பு வைக்க விரும்புகிறார்களோ நான் அவர்களுடைய நண்பனாக இருக்கின்றேன்.
 
و مختار لمن اختارني
 
யார் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்களோ நான் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.
 
و مطيع لمن اطاعني
 
யார் எனக்கு கட்டுப்படுவார்களோ அவர்களுடைய கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.
 
ما احبني عبد اعلم ذلك يقينا بقلبه الا قبلته لنفسه واحببته حبا لا يتقدمه احد من خلقي
 
என்னுடைய அடியான் என்னை நேசிக்கிறான் என்று தெரிந்துவிட்டால், நான் அவனை எனக்காக ஏற்றுக் கொள்கிறேன்.நானும் அவனை நேசிக்கிறேன்.என்னுடைய நேசத்தை போன்று அவனுக்கு வேண்டப்பட்டவர்களில் யாரும் அவனை நேசிக்க முடியாது.நாம் அல்லாஹ்வை நேசித்து விட்டால் அல்லாஹ் நம்மை எப்படி நேசிக்கிறான் என்றால்,
 
பூமியிலே இன்று நாம் பெருசாக பேசுவோம். என்னுடைய மனைவிக்கு என் மீது ரொம்ப விருப்பம் என்று, என்னுடைய நண்பனுக்கு என் மீது ரொம்ப விருப்பம் என்று, என்னுடைய பிள்ளைகளுக்கு என் மீது விருப்பம் என்று, இப்படியாக மனிதர்களுடைய பிரியத்தை கொண்டு நாம் பல நேரங்களிலே பெருமைப்பட்டுக் கொண்டிருப்போம். ஆனால், சகோதரர்களே! எந்த மனிதர்களின் மீது பல நேரங்களிலே நாம் ஆதரவு வைக்கிறோமோ அவர்களே நமக்கு எதிரிகளாக ஆகிவிடலாம். அவர்களுடைய அன்பே நமக்கு சோதனையாக ஆகி விடலாம்.ஆனால்,ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிக்கும் போது அல்லாஹ் கூறுகிறான்; நான் அவனுடைய நண்பனாக நேசராக மாறி விடுகின்றேன். 
 
(இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)
 
அவனை நான் நேசிப்பது போன்று அவன் வேண்டப்பட்டவர்கள் என்று யாரை எண்ணுகிறானோ அவர்களில் யாரும் அவனை அந்த அளவு நேசிக்க முடியாது.
 
من طلبني بالحق وجدني
 
உண்மையில் யார் என்னைத் தேடுகிறானோ அவன் என்னை பெற்றுக் கொள்வான்.
 
ومن طلب غيري لم يجدني
 
யார் என்னை விட்டு விட்டு உலகத்தை தேடுகின்றானோ அவன் ஒரு காலும் என்னை அடைய முடியாது.
 
فارفضوا يا اهل الارض ما انتم بضرورها
 
பூமியில் உள்ளவர்களே! இந்த உலகத்தை கொண்டு ஏமாந்து இருப்பவர்களே! இதை நீங்கள் தூக்கி எறியுங்கள்.
 
وهلموا الى قرابتي ومصاحبتي ومجالستي
 
என்னுடைய கண்ணியத்தின் பக்கம் ஓடோடி வாருங்கள்.என்னோடு நட்புக் கொள்வதற்கு ஓடோடி வாருங்கள்.என்னோடு பேசுவதற்கு ஓடோடி வாருங்கள்.
 
وائنسوا بي اؤنسكم
 
தனிமையில் அமர்ந்து என்னுடைய நினைவில் இன்பம் காணுவதற்கு ஓடோடி வாருங்கள்.நான் உங்களுக்கு இன்பத்தை தருகிறேன்.
 
واسارعكم الى محبتكم
 
உங்களை நேசிப்பதற்கு நான் விரைந்து வருகிறேன்.
 
(இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)
 
இதை யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே! இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அல்லாஹ் கூறுவதாக ஹதீஸ் குதுஸியிலே நமக்குச் சொன்னார்கள்.
 
"அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னை நெருங்கிக் கொண்டே இருக்கும் போது அவன் பார்க்கக்கூடிய கண்ணாக நான் ஆகி விடுகிறேன்.அவன் பிடிக்கக்கூடிய கையாக நான் ஆகி விடுகிறேன். அவன் கேட்கக் கூடிய காதாக நான் ஆகி விடுகின்றேன்.அவன் நடக்கக்கூடிய காலாக நான் ஆகி விடுகின்றேன்.அவன் என்னிடத்திலே கேட்டால் நான் நிச்சயமாக அவனுக்கு கொடுப்பேன்.அவன் என்னிடத்திலே பாதுகாப்பு தேடினால் நிச்சயமாக நான் அவனை பாதுகாப்பேன்.அவனிடத்திலே யாராவது சண்டைக்கு வந்தால் அவர்களிடத்திலே நான் போரை அறிவித்து விடுவேன். (3)
 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6021
 
அல்லாஹு அக்பர்!! மேலும், அல்லாஹ் கூறியதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸ் குதுஸியிலே சொன்னார்கள். இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்:
 
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّهِ قَالَ إِذَا تَقَرَّبَ الْعَبْدُ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً
(صحيح البخاري 6982 -)
 
"ஒரு அடியான் என்னிடத்திலே ஒரு ஜான் வந்தால் நான் ஒரு முழம் வருவேன்.அவன் ஒரு முழம் வந்தால் நான் ஒரு கஜம் நெருங்கி வருவேன்.அவன் என்னிடத்திலே நடந்து வந்தால் நான் ஓடி வருவேன்.அவன் என்னிடத்திலே ஓடி வந்தால் நான் ஓடோடி வருவேன் என்பதாக.
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி எண்: 6982
 
அன்பு சகோதரர்களே! இதைத்தான் நாம் அந்த ஜபுரிலே பார்க்கிறோம்.மேலும்,கூறுகிறான்:
 
யார் என்னை நேசிக்கின்றார்களோ,என் மீது அன்பு கொண்டார்களோ, என்னுடைய அன்புக்காக அவர்களுடைய உள்ளத்தைப் பரிசுத்தமாக்கி கொண்டார்களோ, அவர்களுடைய அந்த மண், அவர்கள் எந்த மண்ணில் இருந்து படைக்கப்பட்டார்கள் என்றால் என்னுடைய நண்பர் இப்ராஹிமை எந்த மண்ணிலிருந்து படைத்தேனோ, என்னுடைய பேச்சுக்கு தகுதியான மூஸாவை எந்த மண்ணில் இருந்து படைத்தேனோ, என்னுடைய தூய்மையான நட்புக்கு தகுதியான முஹம்மதை எந்த மண்ணிலிருந்து படைத்தேனோ, அந்த மண்ணிலிருந்து நான் அவர்களை படைத்திருக்கிறேன்.
 
 (இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)
 
யார் தன்னுடைய உள்ளத்தை அல்லாஹ்விற்கு என்று ஒதுக்கிக் கொண்டார்களோ, அல்லாஹ்வை தன்னுடைய நேசர்களாக ஆக்கிக் கொண்டார்களோ, அல்லாஹ் அவர்களைப் பற்றி சொல்கின்றான். அவர்கள் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்றால் இப்ராஹிம், மூஸா, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்களோ, அந்த மண்ணிலிருந்து நான் அவர்களைப் படைத்தேன்.
 
(இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)
 
என் பக்கம் ஆசை உள்ள அந்த நல்லோர்களின் உள்ளங்களை எனது ஒளியிலிருந்து படைக்கின்றேன். நான் அவர்களை என்னுடைய ஜலால் என்ற கம்பீரத்தைக் கொண்டு, அந்த உள்ளங்களை நிஃமத்தால் நிரப்புகிறேன் என்று.
 
கண்ணியத்திற்குரியவர்களே! கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மைப் படைத்த ரஹ்மான், நம்முடைய ரப்பு,நம் மீது நேசம் கொள்வதற்கு எவ்வளவு தயாராக இருக்கிறான். ஆனால், நம்முடைய உள்ளத்தை உலகத்திற்க்கு பறி கொடுத்து விட்டு, அற்ப வஸ்துக்களுக்கு பறி கொடுத்து விட்டு, அதனுடைய இழப்பிற்காக கவலைபடுகின்றோம்.அதனுடைய இழப்பிற்காக கை சேதப்படுகின்றோம். கவலைப்படுகின்றோம். எவ்வளவு நேரங்களை வீணாக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
 
அல்லாஹ்வை இழந்து நிற்பதை விட வேறு ஒரு மோசமான இழப்பு இருக்க முடியுமா? துனியாவிலே, ஒரு மனைவிக்கு கணவன் இறந்து விட்டால், இன்னொரு கணவனைக் கட்டிக் கொள்ளலாம்.ஒரு கணவனுக்கு மனைவி இறந்து விட்டால் இன்னொரு மனைவியைக் கட்டிக் கொள்ளலாம். ஒரு நண்பன் இல்லையென்றால் இன்னொரு நன்பண்.இப்படி இந்த உலகத்திலே யாரை நாம் இழந்தாலும், எதை நாம் இழந்தாலும் அதற்கு ஒரு பரிகாரம் இருக்கும். அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வை நாம் இழந்து விட்டால், ரப்பை ஒரு மனிதன் தவற விட்டு விட்டால்,அந்த ரப்பைத் தவிர, வேறு யார் அவனுக்கு, அந்த ரப்புக்கு நிகராக ஆக முடியும்.
 
أَإِلَٰهٌ مَعَ اللَّه
 
அல்லாஹ்வை விட, அல்லாஹ்வை தவிர்ந்து இன்னொரு கடவுள் நமக்கு இருக்கின்றானா? (அல்குர்ஆன் -27 : 60)
 
நம்மை மன்னிப்பதற்கு! நமக்கு ஆதரவு தருவதற்கு!நமக்கு சொர்க்கத்தை தருவதற்கு! மறுமையிலே நம்மை பாதுகாப்பதற்கு!
 
அன்பு சகோதரர்களே! நம்முடைய பாவங்களால் அல்லாஹ்வை இழந்து நிற்கிறோம்.
 
அமல்களில் உள்ள அலட்சியத்தால் நாம் அல்லாஹ்வை இழந்து நிற்கிறோம்.ஆனால் அந்த இழப்பிற்காக வருந்தக் கூடியவர்கள் இன்று இல்லை. 
 
அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை கஹ்புல் அஹ்பார், இவர்கள் முன்பு யூதராக இருந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மிகப்பெரிய தாபியீன்.அவர்களிடத்திலே கேட்கிறார்கள் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு.கஹ்பே!தவ்ராத்திலே நீங்கள் படித்த வசனங்களிலிருந்து ஒரு விசேஷமான வசனத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று. அப்போது கஹ்புல் அஹ்பார் சொல்கின்றார்கள்.அல்லாஹ் தவ்ராத்திலே கூறுகின்றான்:
 
فاق شوق الابرار الى لقائي واني الى لقائهم لاشد شوقا
 
நல்லோர்கள் அவர்களுடைய ஆர்வம் என்னை சந்திப்பதற்காக நீண்டுகொண்டே இருக்கிறது. நானோ அவர்களை விட,அவர்களை சந்திப்பதற்கு ஆசை உள்ளவனாக
 
இருக்கிறேன்.அவர்கள் என்னை சந்திப்பதற்கு எவ்வளவு ஆசை உள்ளவர்களாக இருக்கிறார்களோ அதை விட அதிகமாக நான் அவர்களை சந்திப்பதற்கு ஆசை உள்ளவனாக இருக்கிறேன்.
 
(இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்,சூரத்துல் பஜ்ருடைய இறுதி வசனங்களிலே, 
 
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27) ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً (28) فَادْخُلِي فِي عِبَادِي (29) وَادْخُلِي جَنَّتِي
 
நல்லோர்களுடைய உயிர் வாங்கப்படுகின்ற அந்த தருணத்திலே அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்டான அழைப்பாளர் அந்த நப்சுக்கு இதை கேட்க வைப்பார்.
 
அல்லாஹ்வுடைய திக்ரால், நினைவால், அன்பால், அமைதி பெற்ற ஆன்மாவே! உன்னுடைய ரப்பின் பக்கம் வா!அவன் உன்னை கொண்டு திருப்தியாக இருக்கிறான். நீயும் அவனைக் கொண்டு திருப்தி அடைந்த நிலையில் உன்னுடைய ரப்பிடம் திரும்ப வா !
 
என்னுடைய அடியார்களிலே சேர்ந்து கொள்! என்னுடைய சொர்க்கத்திற்குள் நீ வந்துவிடு! (அல்குர்ஆன் -89 : 27-29)
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் அந்த தவ்ராத்திலே கூறுகிறான்: என்னுடைய
 
நல்லடியார்கள் என் மீது அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அந்த ஆசையை விட, என்னை காணவேண்டுமென்று அவர்களுக்கு இருக்கக்கூடிய விருப்பத்தை விட, அவர்களை சந்திப்பதில் நான் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்.மேலும் கூறுகிறான், 
 
என்னை தேடுபவர்கள் என்னை அடைவார். என்னை யார் தேடவில்லையோ, உலக வஸ்துக்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களோ அவர் என்னை ஒரு போதும் அடைய மாட்டார்.
 
(இத்ஹாபுஸ் ஸாதத்தில் முத்தகீன்-ஷரஹ் இஹ்யா உலூமித்தீன்)
 
மேலும், அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கஹ்பு இந்த வார்த்தை கூறியதற்குப் பிறகு சொன்னார்கள்.இது போன்ற ஹதீஸை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவியுற்று இருக்கிறேன் என்று.
 
கண்ணியத்திற்குரியவர்களே! தாவூது அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கூறிய ஜபூருடைய அந்த வசனத்தையும் பார்க்கிறோம்.
 
தாவூதே! என்னை விட்டு விலகி செல்கிறார்களே, என்னை விட்டு யார் விலகி செல்கிறார்களோ! அவர்கள் அறிந்து கொள்வார்களேயானால், நான் அவர்களுக்காக எப்படி எதிர்பார்த்திருக்கிறேன் என்று. அல்லாஹ்வுடைய அருள் பாருங்கள் சகோதரர்களே! தன்னை விட்டு விலககூடியவர்களை கூட அல்லாஹு தஆலா தொலைந்து போ!நாசமாக போ! என்று சொல்வதில்லை.
 
இதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான்.சூரத்துல் சுமருடைய 53வது வசனத்தைப் படியுங்கள்.
 
يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِم
 
தனக்குத்தானே வரம்பு மீறி அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! வரம்பு மீறி பாவம் செய்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் கருணையிலிருந்து, ஏன் நிராசை ஆகின்றீர்கள்.அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து நிராசை ஆகாதீர்கள். (அல்குர்ஆன் -39 : 53)
 
அல்லாஹ் உங்களை மன்னிக்கக் காத்துக் கொண்டிருக்கிறான். பாவிகள், குற்றமிழைத்தவர்கள், அதுவும் வரம்பு மீறி பாவம் செய்து கொண்டவர்கள், சகோதரர்களே! அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.
 
தாவூதே! என்னை விட்டு விலகக்கூடியவர்கள் அவர்களை நான் எப்படி எதிர்பார்த்து இருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டால், நான் அவர்களோடு எப்படி மென்மையாக நடந்து கொள்கிறேன் என்பதை அவர்கள் புரிந்து கொண்டால், நான் அவர்கள் என் பக்கம் வரவேண்டும் என்று எந்த அளவு ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டால்,அவர்கள் எனக்கு மாறு செய்வதை விட வேண்டும் என்று எந்த அளவு நான் விரும்புகிறேன் என்பதை அவர்கள் புரிந்து கொண்டால், என் மீது அவர்களுக்கு பாசம் ஏற்பட்டு, அந்த ஷவ்க்கால்', அந்த ஆசையாலே அவர்கள் துடி துடித்து இறந்து போயிருப்பார்கள்.
 
இப்படிப்பட்ட பேரருளாலனுக்கா நாம் நன்றி கெட்டவர்களாக இருந்தோம் என்று அவர்களது உள்ளம் வெடித்து செத்திருப்பார்கள். தாவூதே! என்னை புறக்கணிப்பவர்களுக்கே நான் இப்படி நல்லெண்ணம் கொள்கிறேன் என்றால் என்னை தேடி வரக்கூடியவர்கள் மீது நான் என்ன எண்ணம் வைத்திருப்பேன் பாருங்கள்.
 
தாவூதே! என்னுடைய அடியான் என்னை விட்டு புறக்கணித்தால் அவன் வேறு எங்கு செல்வான்.எவ்வளவு தேவை உள்ளவன் அவன்.என்னை விட்டு புறக்கணிப்பவன், எனது கருணைக்கு எவ்வளவு தேவை உள்ளவன்.அதே நேரத்திலே அந்த அடியான் என் பக்கம் திரும்பி வந்துவிட்டால் என்னிடத்திலே அவன் எவ்வளவு கண்ணியத்திற்குரியவனாக மாறி விடுகின்றான். அடியான் என்னை விட்டு புறக்கணிக்கும் போதே நான் அவன் மீது கருணை காட்டுகின்றேன்;என்னை விட்டு விலகிச் செல்லும் போதே, நான் அவனிடத்தில் மென்மையாக நடந்து அவன் என் பக்கம் திரும்ப வேண்டும் என்ற ஆசைப்படுகின்றேன் என்றால் அவன் என்னை நோக்கி வந்து விட்டால், என்னிடம் சரணடைந்து விட்டால், எனது அன்பிலே திளைத்துவிட்டால், அவன் என்னிடத்தில் எவ்வளவு கண்ணியத்திற்குரியவனாக இருப்பான்.இதனுடைய உண்மையை அல்குர்ஆனிலே இதை படித்துப் பாருங்கள்.
 
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
 
உங்களில் யார் அல்லாஹ்விடத்திலே மிக கண்ணியத்திற்குரியவர், உங்களில் யார் அல்லாஹ்வை அதிகம் பயப்படுகின்றார்களோ! (அல்குர்ஆன் -49 : 13)
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்னும் அனேக விஷயங்கள் இது குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம். அல்லாஹ் சுபஹானஹு தஆலாவிடத்திலே நாம் துஆச் செய்ய வேண்டும். அல்லாஹ்வுடைய அன்புக்காக நாம் அல்லாஹ்விடத்திலே துஆச் செய்ய வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய அன்புக்காக, அந்த அன்புக்காக ஏங்கி அவர்கள் தொழுதார்கள்,நோன்பு நோற்றார்கள்,பசியோடு பல நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்று இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பாதையிலே அவர்கள் செய்த ஹிஜ்ரத், அவர்கள் செய்த ஜிஹாத், அத்தனையும் இந்த அல்லாஹ்வுடைய அன்புக்காகத்தான். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அந்த நபியுடைய உம்மத்தாக இருக்கக்கூடிய நாம், அல்லாஹ்வுடைய அந்த இபாதத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதும், பாவங்களை விட்டு விலகி இருப்பதும் தான், அல்லாஹ்வுடைய அந்த அன்பு நம்முடைய உள்ளத்தில் இருக்கின்றது என்பதற்குரிய அடையாளம்.இந்த அன்பு நமக்கு குறைந்து விடுமேயானால், பிறகு அமல்களிலே நமக்கு ருசி இருக்காது. பாவங்களை விட்டு விலகுவதற்கு நம்முடைய ஆன்மா நம்மைத் தடுக்காது. அந்த சோதனை மிகப்பெரிய சோதனை.அதைத்தான் அல்லாஹ் சொல்கின்றான்.அல்லாஹ்வை மறந்தவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
 
وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
 
அல்லாஹ்வை நீங்கள் மறந்து விட்டால் உங்களையே உங்களுக்கு மறக்க செய்து விடுவான்.யார் அல்லாஹ்வை மறந்தார்களோ அவர்கள் தான் பெரும் பாவிகள். (அல் குர்ஆன் 59 : 19)
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா என்னையும் உங்களையும் அல்லாஹ்வுடைய அந்த அன்பைக் கொண்டும், ஈமானைக் கொண்டும், தக்வாவைக் கொண்டும் அலங்கரிப்பானாக!! நம்முடைய உள்ளங்களில் மறதியும், அலட்சியமும் ஏற்படுவதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!!
 
ஆமீன்
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ قَالَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ
 
خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ فَبَكَى أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ إِنْ يَكُنْ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْعَبْدَ وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا قَالَ يَا أَبَا بَكْرٍ لَا تَبْكِ إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا مِنْ أُمَّتِي لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ وَلَكِنْ أُخُوَّةُ الْإِسْلَامِ وَمَوَدَّتُهُ لَا يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ بَابٌ إِلَّا سُدَّ إِلَّا بَابُ أَبِي بَكْرٍ (صحيح البخاري-446) 
 
குறிப்பு 2).
 
عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ (صحيح البخاري239 -)
 
குறிப்பு 3).
 
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (صحيح البخاري 6021 -)
 
 
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/