HOME      Khutba      உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 8-9 | Tamil Bayan - 530   
 

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 8-9 | Tamil Bayan - 530

           

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 8-9 | Tamil Bayan - 530


உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்-8-9

வரிசை : 530

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 09-11-2018 | 01-03-1440

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!உங்களுக்கு முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்துவனாக அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் மீதும் தூதருடைய பாசத்துக்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலாமும் ஸலவாத்தும் கூறியவனாக

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறியவனாக உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக இந்த ஜும்ஆவுடைய உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு தஆலா நம்மை மன்னித்து நம்முடைய முடிவை அழகிய முடிவாக ஈமானுடன் கூடிய முடிவாக ஆக்கி அருள் புரிவானாக!

மரணத்தின் கஷ்டத்தை அல்லாஹ் நமக்கு லேசாக்கி தருவானாக!சகராத் சிரமங்களில் அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக!

முழு ஈமானோடு முழு யகீனோடு அல்லாஹ்வை முற்றிலும் வழிபட்டவர்களாக அல்லாஹ்வின் தூதரை நம்பிக்கை கொண்டவர்களாக இந்த உலகத்தை விட்டுப் பிரியக் கூடிய நல்ல முடிவை எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தரவேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக என் உரையை ஆரம்பம் செய்கிறேன்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்அவர்கள் உள்ளங்களை உருக்கக்கூடிய செய்திகள் என்ற தலைப்பின் கீழ் இந்த உலகிற்கு தேவையான பல உபதேசங்களை குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் தொகுத்துالرقاق))என்று ஒரு அத்தியாத்தைஅமைத்து தந்திருக்கிறார்கள்

அதிலிருந்துதான் நாம் பல விஷயங்களைப் பார்த்து வருகிறோம்.அதில் இன்று நாம் பார்க்கக்கூடிய பாடம்,

(سكرات الموت)மவுத்துடைய மயக்கங்கள் :

உண்மையில் இந்த வார்த்தை ரசூலுல்லாஹ் அவர்களுடைய ஹதீஸில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஒரு வார்த்தை. இதை தொடர்ந்து இமாம் அவர்கள் ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹாஅவர்களுடைய ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள்.

இந்த உலகத்தில் நாம் அதிகமாக மறந்த ஒன்று இருக்குமானால் அது மரணமாக இருக்கும்.கண்டிப்பாக நிகழும் என்று அறிவால் நாம் அதை அறிந்திருந்தும் கூட அதை மறந்திருக்கின்றோம்.பல நேரங்களில் பல நிகழ்வுகளை நாம் மறந்திருந்தாலும் கூட அவற்றை நினைவுபடுத்தி பார்த்து நாம் அதற்காக தயாரிப்புகள் செய்வதுண்டு.

ஆனால்,இந்த உலக இன்பங்களில் நமக்கு இருக்கக்கூடிய அதிகப்படியான மோகம் வெகு சீக்கிரமாக வெகு விரைவாக நம்மை மரணத்தை மறக்கச் செய்துவிடுகிறது.

இந்த மரணத்தை நினைவு கூருவது குர்ஆனுடைய கட்டளை. அல்லாஹு தஆலா ஒன்றுக்கு மேற்பட்ட வசனங்களில் நினைவுகூர்ந்து நமக்கு அறிவுரை கூறுகிறான்.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 21:35)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ

(உங்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29 : 57)

அதிகமான உரைகளில் இந்த வசனத்தைக் கேட்டு கேட்டு நம்மில் அதிகமானோருக்கு இந்த வசனம் மனப்பாடம் ஆயிருக்கும்.

ஆனால்,இதை நாம் அறிந்திருந்தும் நினைத்துப் பார்க்கின்றோமா? அல்லாஹ்விடத்தில் இதற்காக இன்னும் துஆ கேட்கிறோமா? இதை நினைத்து நாம் நம்மை மாற்றி இருக்கின்றோமா? நம்முடைய நன்மைகளை அதிகப்படுத்தி இருக்கிறோமா? செய்த பாவங்களுக்காக தவ்பா செய்திருக்கிறோமா?

ஏதாவது பாவம் நம்மிடத்தில் இருந்தால் அந்த பாவத்தை விட்டு விலகி அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மௌத்திற்காக தயாராகிவிட்டோமா? நம்முடைய இரவும் பகலும் கடந்து கொண்டிருக்கிறது.

கஅப் இப்னு ஜுபைர் என்ற ஒரு பெரிய கவிஞர் கூறுகிறார் ;

كلّ ابن انثى وإن طالت سلامته  يوما على آلة حدباء محمول

எந்த ஒரு பெண் பெற்றெடுத்த பிள்ளையாக இருக்கட்டும்,அவன் எவ்வளவு காலம் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தாலும் கண்டிப்பாக சந்தூக் பெட்டியில் அவன் சுமக்க பட்டே ஆவான்.

எத்தனை அறிஞர்கள் நமக்கு குர்ஆனிலிருந்து ஹதீஸிலிருந்து மரணத்தை நினைவூட்டுகிறார்கள்.

அபுல் அத்தாஹியா என்ற ஒரு பெரிய இறை சிந்தனைவாதி, இறையச்சத்தை கொடுக்கக் கூடிய பல விஷயங்களை கவிதையின் மூலமாக மக்களுக்கு தந்தவர்கள், அவர்கள் தன்னைப் பற்றி சொல்கிறார்கள் ;

نَسيتُ المَوتَ فيما قَد نَسيتُكَأَنّي لا أَرى أَحَداً يَموتُ

أَلَيسَ المَوتُ غايَةَ كُلِّ حَيٍّفَما لي لا أُبادِرُ ما يَفوتُ

நான் எத்தனையோ பல விஷயங்களை மறந்தேன், அதில் ஒன்றாக மரணத்தையும் மறந்துவிட்டேன். நான் எண்ணிக் கொண்டு இருக்கின்றேன்; யாரும் மரணிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் நானும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனின் முடிவும் மரணமாக இல்லையா? எனக்கு என்ன கேடு நிகழ்ந்தது! என்னை விட்டு தவறி விடக் கூடிய இந்த வாழ்க்கையில் பணிகளை செய்வதில் தீவிரப் படாமல் நான் இருக்கின்றேனே!

இந்த மரணம் என்பது ஒரு வித்தியாசமான ஒன்று,இதுவரை நாம் சந்திக்காத ஒன்று.

ரபீஃ இப்னு அசிம் என்பவர்கள் கூறுகின்றார்கள்;

أكثروا ذكر هذا الموت الذي لم تذوق قبله مثله

இந்த மரணத்தை நீங்கள் அதிகமாக நினைவு கூறுங்கள். இதற்கு முன்னால் இப்படி ஒன்றை நீங்கள் சுவைத்து இருக்கவே மாட்டீர்கள்.

எத்தனையோ உணர்வுகளை சிரமங்களை துன்பங்களை இன்னல்களை வேதனைகளை வலிகளை இந்த உலகத்தில் நாம் அனுபவித்து இருக்கலாம்.ஆனால்,மரணத்தைப் போன்று ஒன்றை இந்த உலகத்தில் நாம் அனுபவித்திருக்க முடியாது.அதுதான் முதலும் அதுதான் கடைசியும்.

இன்று நம் நிலைமை எப்படி என்றால் மரணித்தவர்களை பார்த்த பிறகு கூட, மரணத்தருவாயில் இருக்கக்கூடியவர்களை பார்த்த பிறகு கூட உள்ளம் இறங்காமல் கண்ணீர் சிந்தாமல் இறுகிய உள்ளத்தில் இன்று நாம் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!

ஒரு மரணித்தவருடைய வீட்டுக்கு வந்தபிறகு கூட இந்த உலகத்தைப் பற்றிய பேச்சுக்கள் உலக வாழ்க்கையை பற்றிய சிந்தனைகள் அதனை பற்றிய உரையாடல்கள் இப்படியாக இருக்கிறார்கள்.

நம்முடைய முன்னோர்களைப் பாருங்கள்! இமாம் அஃமஷ் ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள்;

நாங்கள் எங்கள் காலத்தில் ஜனாஸாவில் கலந்து கொண்டால் யாருக்கு ஆறுதல் சொல்வது,யாரைப் பார்த்து மவுத் விசாரிப்பது என்பது எங்களுக்கு தெரியாது. காரணம், எல்லோருமே கவலைகளில் துக்கத்தில் இருப்பார்கள்.

பொதுவாக ஒரு இடத்தில் மரணம் ஏற்பட்டது என்றால் அந்த வீட்டில் உள்ளவர்கள் கவலையில் இருப்பார்கள்.பார்த்தவுடனே அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.அந்த ஜனாஸாவிற்கு வந்திருப்பவர்கள் ஜனாசா தொழுதுவிட்டு அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செல்வார்கள்.

ஆனால்,இன்று நிலைமை அதிலும் வித்தியாசமாக ஆகிவிட்டது.குடும்பத்தார்கள் வந்திருப்பவர்களை விட கேளியிலும் தமாஷிலும் விளையாட்டிலும் வீண் பேச்சுகளிலும் இருப்பதைப் பார்க்கிறோம்.

யாராவது ஆறுதல் சொல்ல வந்தால் மட்டும் முகத்தை அப்படியே தொங்க விட்டு அவர்கள் நின்று கொள்வார்கள், அந்த ஆறுதலை கேட்கின்ற வரை. அதற்குப் பிறகு சகஜமாக ஆகிவிடுவார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கிரம் அந்த மரணத்தை மறப்பதும், மவுத் வீட்டில் மரண சிந்தனை இல்லாமல் இருப்பதும் எப்படி சாத்தியமாகிறது? என்னமோ இந்த மரணம் இவருக்கு தான் வந்தது, எனக்கு வரவே வராது என்பதை போன்று இருக்கின்றது.

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ்பற்றி அறிவிக்கப்படுகிறது;யாராவது ஒருவருடைய மவ்த் செய்தியை அவர்கள் கேள்விப்பட்டால் போதும், ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்தி கிடைத்தால் போதும், இந்த மரணம் என்னுடைய மரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?! என்பதாக அமல்களில் தீவிரம் காட்டுவார்கள். ஒவ்வொரு மரணச் செய்தியை கேட்கும் பொழுது இப்படி தான் எனக்கு மரணம் வரும், இது என்னுடைய ஜனாஸாவாக இருந்திருக்க கூடாதா! என்பதாகக் கூறி அமல்களில் தீவிரம் காட்டுவார்கள். இப்படி தான் அவர்களுடைய இறுதிக்காலம் இருந்தது,அவர்களுக்கும் மவுத் வந்தது.

அவ்ன் இப்னு அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் கூறுகிறார்கள்;

كم من مستقبل يوما لا يستكمله، ومنتظر غدا لا يبلغه، لو تنظرون إلى الأجل ومسيره لأبغضتم الأمل وغروره

இன்றைய தினத்தை எதிர்பார்த்திருக்க கூடிய எத்தனை பேர், அதை அவர்கள் முழுமைப்படுத்த முடியாது. நாளைய தினத்தை எதிர்பார்த்திருக்கக்கூடிய எத்தனையோ பேர் அதை அவர்கள் அடைய முடியாது.

நீங்கள் உங்கள் மரணத்தின் காலத்தை சிந்தித்துப் பார்த்தால் அதனுடைய முடிவை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்தால் ஆசையை வெறுத்து இருப்பீர்கள். அந்த ஆசையால் ஏமாந்து போகக் கூடியதையும் நீங்கள் வெறுப்பீர்கள்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இந்த மரணத்தைப் பற்றி நபிமார்கள் பயந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பயந்தார்கள்.

மரண நேரத்தில் அவர்களுடைய நிலை எப்படி இருந்தது என்பதை ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹாஅவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸை தான் இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹாஅவர்கள் கூறுகிறார்கள்;ரசூலுல்லாஹ் மரண நேரத்தில் அவர்களுக்கு முன்னால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது. தன்னுடைய கையை அந்த பாத்திரத்திற்குள் நனைத்து அந்த தண்ணீரை எடுத்து அவர்களுடைய முகத்தில் தடவிக் கொண்டே இருக்கிறார்கள். لا اله الا اللهஎன்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

பிறகு சொல்கிறார்கள் ;

«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ»

மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன.மரணத்தினால் பல சிரமங்கள் இருக்கின்றன என்ற வார்த்தையும் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

பிறகு கையை உயர்த்தியவர்களாக,

«فِي الرَّفِيقِ الأَعْلَى»

உயர்ந்த நண்பர்களுடைய கூட்டத்தில் நான் சேர வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுடைய உயிர் பிரிந்தது. அவர்களுடைய கை சாய்ந்தது.

இந்த ஹதீசை அறிவிக்கக்கூடிய ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹாஅவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய உயிர் என்னுடைய மடியில் பிரிந்தது என்று சொன்னார்கள்.(1)

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 6029, 6510.

தங்களுடைய மனைவியுடைய மடியில் ரசூலுல்லாஹ் அவர்கள் உயிர் பிரிகிறார்கள்.ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவ்வளவு நெருக்கமாக அல்லாஹ்வுடைய தூதரின் மரணத்தை கண்கூடாக பார்க்கிறார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :

«مَاتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّهُ لَبَيْنَ حَاقِنَتِي وَذَاقِنَتِي، فَلاَ أَكْرَهُ شِدَّةَ المَوْتِ لِأَحَدٍ أَبَدًا، بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மரண நேரத்தில் அனுபவித்த அந்த வலிகளைப் பார்த்ததற்கு பிறகு இனி வேறு யாருக்கும் அந்த மரணத்தின் சிரமத்தை நான் வெறுக்க மாட்டேன்.

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 4091, 4446.

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதற்கு விளக்கமாக ரசூலுல்லாஹ் அவர்களுடைய ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் :

«إِنَّا مَعْشَرَ الْأَنْبِيَاءِ يُضَاعَفُ لَنَا الْبَلَاءُ، كَمَا يُضَاعَفُ لَنَا الْأَجْرُ،»

நாங்கள் நபிமார்களின் கூட்டத்தார்கள் எங்களுக்கு சோதனைகள் இரண்டு மடங்காக கொடுக்கப்படும்,எப்படி எங்களுக்கு நன்மைகள் இரண்டு மடங்குகளாக கொடுக்கப்படுமோ அதுபோல.(2)

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது,எண் : 11458, 11893.

இந்த ஹதீஸிலிருந்து இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் ஒரு விளக்கம் சொல்கிறார்கள்;

மவுத் உடைய நேரத்தில் ஒருவர் சிரமப்படுவதை பார்த்தால்,மரணப்படுக்கையில் அவர் சிரமத்தோடு மரண நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதை ஒருவர் பார்த்தால், அவர்கள் அமல்கள் குறைவானவர்கள், அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதாக எண்ணிவிடாதீர்கள்.

ஈமான் உள்ளவர்கள், அமல்கள் உள்ளவர்கள், இறையச்சம் உள்ளவர்களை பொறுத்தவரை இந்த சிரமம் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு நன்மையை அதிகப்படுத்தி கொடுக்கும் அல்லது அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கு காரணமாக அமையும்.

அந்த மரணத்தை மறந்ததால் தான் இந்த மனிதர்கள் பாவத்தில் வரம்பு மீறி செல்கிறார்கள். பாவம் செய்யாமல் இருப்பது என்பது வேறு, பாவத்தை வரம்பு மீறி கணக்கில்லாமல் செய்வது என்பது வேறு.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள்:

«كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ»

ஆதமுடைய மகன்கள் பிள்ளைகள் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான்.தவறு செய்யக்கூடியவர்களில் சிறந்தவர்கள், அந்த தவறை நினைத்து வருந்தி அழுது அதற்காக பாவ மன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்ப கூடியவர்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 4241, 4251, தரம் : ஹசன் (அல்பானி)

இன்று மக்கள் பாவங்களை செய்கிறார்கள். அல்லாஹு தஆலா திரை போடுகிறான். மீண்டும் செய்கிறார்கள். அல்லாஹு தஆலா அந்த திரையை அகற்றுகிறான். பிறகு அந்த பாவத்தை நியாயப்படுத்துகிறார்கள். பிறகு அந்தப் பாவத்தைச் சரி காணுகிறார்கள்.

அல்லாஹ் பாதுகாப்பானாக! பாவத்தை செய்வது மிக பயங்கரமான ஒன்று. பிறகு, அந்த பாவத்தை ;நியாயப்படுத்துவது அதை சரி காணுவது அதை சாதாரணமாக கருதுவது மிக பயங்கரமானது.

ரசூலுல்லாஹ் சொன்னார்கள்;ஒரு முஃமின் சிறு பாவத்தைச் செய்தாலும் கூட,ஒரு பெரிய மலை தன்மீது விழுவதாக இருந்தால் எப்படி பயப்படுவானா அதுபோன்று, தான் செய்த சிறிய சிறிய பாவங்களை நினைத்து பயந்து கொண்டிருப்பான்.

நயவஞ்சகம் உள்ளவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும் பாவங்களை செய்தாலும் மூக்கில் ஈ உட்கார்ந்து அதை தட்டி விட்டால் எப்படி உணர்வார்களோ அப்படிதான் உணர்வார்கள்.

நூல் : திர்மதி,எண் : 2421.

இந்த மரணத்தை நினைக்காமல் இருக்கக்கூடிய நிலை,இது மனிதர்களை மார்க்கத்தை விட்டு தடம் புரளச் செய்கிறது.அல்லாஹ்வை விட்டு தூரம் ஆக்குகிறது.மறுமைக்குண்டான தயாரிப்பில் இருந்து திருப்பி இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் அவர்களை மூழ்க சொல்கிறது.

நம்முடைய முன்னோர்கள், ரஸூலுல்லாஹி அவர்களுடைய பாடசாலையில் வளர்ந்த தோழர்களை பாருங்கள்.

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்,ரசூலுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள் :

"يَتْبَعُ المَيِّتَ ثَلاَثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ: يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ"

மையத்தோடு மூன்று வகையினர் செல்வார்கள். இரு வகையினர் திரும்ப வந்து விடுகிறார்கள். ஒரு வகையினர் தான் அந்த மையத்தோடு நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள். அந்த மையத்தோடு அவருடைய உறவினர்களும் அவருடைய செல்வமும் செல்கிறது. இரண்டும் அந்த மையத்தை அடக்கம் செய்து விட்டு திரும்பி விடுகிறது. அவருடைய அமல் மட்டும்தான் அவருடன் நிரந்தரமாக தங்க போகிறது.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6033, 6514.

யார் நம்முடன் நிரந்தரமாக தங்குவார்களோ அதில் அவ்வளவு அலட்சியம், அந்த அவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம். ஆனால், யார் நம்மை விட்டு பிரிந்து விடுவார்களோ அவர்களோடு இருப்பதில் அவர்களோடு நேரம் கொடுப்பதில் அந்த செல்வத்தை சேகரிப்பதில் நாம் அவ்வளவு ஈடுபாடு காட்டுகிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மரண நேரம் வந்தபோது குர்ஆனுடைய வசனத்தை ஓதினார்கள்,

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ

மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 50:19)

பிறகு,தங்கள் மகள்,ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்தார்கள் தன்னிடமிருந்த இரண்டு பழைய ஆடையை சுட்டிக்காட்டி சொன்னார்கள்;சுத்தமாக கழுவி பிறகு இந்த ஆடைகளையே எனக்கு கஃபன் இட்டுவிடுங்கள். ஏனென்றால் புதிய ஆடை உயிரோடு இருப்பவர்களுக்கு தான் தகுதியானது. எனக்கு பழைய துணியையே கழுவி கஃபனிட்டு விடுங்கள்.

எந்த அளவுக்கு அவர்கள் பணிவோடு,எவ்வளவு பயம் உடையவர்களாக இருந்தார்கள் என்று பாருங்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அபூ லுஃலுஆ என்ற மஜூஸி கத்தியால் அவர்களை குத்தி அவன் வெற்றி கண்டான். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த கத்தியால் தாக்கப்பட்டு குடல் எல்லாம் வெளியே வந்துவிட்டது. ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மயக்க நிலையில் இருக்கிறார்கள். பல சஹாபாக்கள் உமரை சந்தித்து நற்செய்தி சொல்கிறார்கள். அதில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் வருகிறார்கள்.

உமர் இடத்தில் இருக்கக்கூடிய நல்ல வார்த்தைகளை புகழ்ந்து சொன்னார்கள்; உமரே! மக்கள் உங்களை நிராகரித்த போது நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டீர்கள்; நீங்கள் இப்பொழுது ஷஹீதாக கொல்லப்பட்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வுடைய தூதர் மரணித்த போது உங்களை பொருந்தி கொண்டவர்களாக அவர்கள் மரணித்து இருக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்! இப்பொழுது நீ சொன்ன வார்த்தையை திரும்ப சொல்! என்பதாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கிறார்கள். அதைக் கேட்டுவிட்டு உமர் அவர்கள் சொல்கிறார்கள் ;

الْمَغْرُورُ مَنْ غَرَرْتُمُوهُ

இப்படித்தான் நீங்கள் மக்களை மயக்குகிறீர்கள், வார்த்தைகளால் ஏமாற்றுகிறீர்கள். உங்களுடைய புகழ் வார்த்தையை கேட்டு மயங்கியவர்தான் மயக்கத்திற்குரியவர், ஏமாற்றத்திற்குறியவர். நான் இந்த புகழ் வார்த்தைகளால் மயங்ககூடியவன் அல்ல.

பிறகு சொன்னார்கள்;

لَوْ أَنَّ مَا عَلَى ظَهْرِهَا مِنْ بَيْضَاءَ وصفراء، لافتديت به من هول المطلع

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய எல்லாம் எனக்கு சொந்தமாக இருந்து இப்பொழுது நான் என்ன கஷ்டத்தில் இருக்கிறேனோ அதிலிருந்து விடுதலை ஆவதற்கு நான் கொடுக்க முடிந்தால் கொடுத்து இந்த கஷ்டத்தில் இருந்து நான் விடுதலை தேடி இருப்பேன்.

நூல் : இப்னு ஹிப்பான், எண் : 6891.

நபியால் சொர்க்கம் உண்டு என்று சுபச்செய்தி சொல்லப்பட்ட அந்த சஹாபாக்கள் மரண நிலையில் இப்படி ஒரு சிரமத்தைப் பார்த்து பயந்து அவர்கள் சொல்கின்ற வார்த்தைகளை பாருங்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொல்கிறார்கள்;தங்களுடைய தந்தை உமர் அல் பாரூக் அவர்களுடைய மரண நேரத்தில்,மகனே என்னுடைய தலையை மண்ணில் வை.இந்த விரிப்பை எடுத்துவிட்டு என்னுடைய தலையை மண்ணில் வை என்பதாக.

தகப்பனாரே! இறக்கப் போகக்கூடிய நேரத்தில் உங்களுடைய தலை மண்ணில் இருந்தால் என்ன? என் மடியில் இருந்தால் என்ன? அதைப்பற்றி ஏன் நீங்கள் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்.

உமர் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. என்னை மண்ணில் வை என்பதாகச் சொல்லி விட்டு சொன்னார்கள்; என்னுடைய ரப்பு என் மீது கருணை காட்டவில்லை என்றால் எனக்கும் என் தாய்க்கும் நாசம் உண்டாகட்டும்.இந்த நேரத்தில் நான் ஏன் என்னுடைய தலையை மண்ணில் வைக்க சொல்கிறேன் என்றால், இதன் காரணமாக அல்லாஹ் என் மீது கருணை காட்டலாம் அல்லவா!

அன்பு சகோதரர்களே! உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹுஅன்ஹுஉங்களுடைய மரணத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த மோசடிக்காரர்கள் வஞ்சகர்கள் கலகக்காரர்கள் உஸ்மான் அவர்கள் தஹஜ்ஜுத் உடைய நேரத்தில் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் பொழுது கொல்லப் படுகிறார்கள். அவர்களுடைய தாடி எல்லாம் அந்த ரத்தத்தால் நனைகிறது.

அவர்கள் சொன்னார்கள் :

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم إني أستعديك وأستعينك على جميع أموري وأسألك الصبر على بليتي

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் நேர்வழி தேடுகிறேன்.என்னுடைய எல்லா காரியங்களிலும் நான் உன்னிடத்தில் உதவி தேடுகிறேன்.என்னுடைய சோதனையில் நான் உன்னிடத்தில் எப்போதுமே பொறுமையை கேட்கிறேன்.

என்பதாக அவர்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள். அதே நிலையில் அவர்களுக்கு மரணம் வந்துவிட்டது. மரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பிறகு,அவர்களிடத்தில் ஒரு பூட்டப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது.

அவர்களின் குடும்பத்தார் அந்தப் பெட்டியை திறந்து பார்க்கிறார்கள்.திறந்து பார்த்தால் அதில் ஒரு காகிதம் ஒன்று தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய ஒரு ஆட்சியாளர். பரம்பரை பரம்பரையாக செல்வந்தராக இருந்த ஒரு பெரிய செல்வந்தர். அதில் வெறும் ஏடு மட்டும் இருக்கிறது.

அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது,

بسم الله الرحمن الرحيم

عثمان بن عفان يشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن الجنة حق. وأن الله يبعث من في القبور ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. عليها يحيا وعليها يموت وعليها يبعث إن شاء ال.له

இதுதான் உஸ்மான் உடைய மரணசாசனம்.உஸ்மான் இப்னு அஃப்பான் சாட்சிசொல்கிறார்.لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله

சொர்க்கம் உண்மை.கப்ரில் உள்ளவர்களை கண்டிப்பாக சந்தேகம் இல்லாத அந்த நாளில் அல்லாஹ் எழுப்புவான். அல்லாஹ் தன்னுடைய வாக்குக்கு மாறு செய்ய மாட்டான். இந்த கொள்கையின் மீது தான் உஸ்மான் வாழ்ந்தார். இந்தக் கொள்கையின் மீது அவர் மரணிக்கிறார். இந்த நம்பிக்கையில் அவர் மறுமையில் இன்ஷா அல்லாஹ் எழுப்பப்படுவார்.

இதுதான் அவர்களுடைய சொத்தாக அந்த பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சம்பவம் மிக முக்கியமான ஒன்று.அவர்களும் அப்படித்தான்.தொழுகைக்காக மக்களை எழுப்பிக்கொண்டு சுபுஹ் நேரத்தில் சென்று கொண்டிருந்த பொழுது,அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் என்ற காரிஜி கோடாரியால் அவர்களுடைய நெற்றியில் வெட்டி விடுகிறான்.

இரத்தம் சொட்டியவர்களாக மயக்கமுற்று கீழே விழுகிறார்கள். மயக்கம் தெளிந்த உடன் கேட்கிறார்கள்; என்னை கொன்றவனை நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதாக.நாங்கள் அவனை பிடித்து வைத்திருக்கிறோம் என்று மக்கள் சொன்னார்கள்.

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :

أطعموه من طعامي، و اسقوه من شرابي، فإن أنا عشت رأيت فيه رأيي، وإن أنا مت فاضربوه ضربة واحدة لا تزيدوه عليها

என்னுடைய உணவை அவருக்குக் கொடுங்கள். நான் குடிக்கக்கூடிய அதே பானத்தையும் அவருக்கு கொடுங்கள். அவரை ஒன்றும் செய்யாதீர்கள். என்னுடைய காயத்திலிருந்து நான் சுகம் பெற்று உயிரோடு வாழ்ந்தால் அவரை என்ன செய்ய வேண்டும் என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். நான் இறந்துவிட்டால் அவனை வேதனை கொடுத்து அடிக்காதீர்கள். ஒரே வெட்டில் அவனை கொன்று விடுங்கள். இரண்டு வெட்டுகள் வெட்டி விடாதீர்கள்.

இதன் பிறகு தங்களுடைய மகன் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் சொல்கிறார்கள்; மகனே!என்னை நீ குளிப்பாட்டு,எனக்காக நீ கஃபன் வாங்கும் பொழுது அதிகமான செல்வத்தை கொடுத்து கஃபனை வாங்கி விடாதே.

ரசூலுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்டிருக்கிறேன்.நீங்கள் கஃபன் வாங்குவதில் அதிகம் செலவு செய்யாதீர்கள். அதாவது அதிகம் விலை கொடுத்து வாங்காதீர்கள். ஏனென்றால் மையத்திடம் இருந்து மிக வேகமாக பறிக்கக் கூடியது கஃபன்தான் என்று சொன்னார்கள்.

பிறகு சொன்னார்கள்; என்னை இரண்டு நடைகளுக்கு மத்தியில் மிகப் பொறுமையாகவும் இல்லாமல் மிக வேகமாகவும் இல்லாமல் மிதமான நடையில் என்னை தூக்கிச் செல்லுங்கள். என்னை அவசரப் படுத்தியும் எடுத்துச் செல்லாதீர்கள். என்னை தாமதமும் படுத்தாதீர்கள்.

எனக்கு நன்மையாக இருக்குமேயானால் என்னை அந்த நன்மை இடம் கொண்டு போய் சீக்கிரம் சேர்க்கப் போகிறீர்கள். நான் செய்த அமல்கள் தீயவைகள் ஆக இருந்தால் உங்களுடைய புஜத்தில் இருந்து என்னை சீக்கிரம் கொண்டு வைக்கப் போகிறீர்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மரணத்தைக் குறித்து மிகப்பெரிய எச்சரிக்கைகளை செய்திருக்கிறார்கள் அவருடைய தோழர்கள் இந்த மரணத்தருவாயில் நினைத்து மிகப்பெரிய உபதேசங்களை நமக்கு செய்திருக்கிறார்கள். மரணத்தோடு இந்த நிலைகளை நினைப்பது நம்மை பாவத்திலிருந்து தடுக்கக்கூடியது.

ரசூலுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள் ; குர்ஆனை விட மவுத்தை நினைப்பதைவிட சிறந்த உபதேசி யாரும் இல்லை என்பதாக.

நூல் : ஷுஅபுல் ஈமான் பைஹகி, எண் : 10072.

ஒரு மனிதனுக்கு உபதேசம் செய்வதற்காக யார் இடத்திலாவது அழைத்துச் சென்றால் அவருக்கு உபதேசம் பயன் அளிக்கலாம் அல்லது பலனளிக்காமல் போகலாம்.

ஆனால், ஒரு மனிதன் தனியாக அமர்ந்து அல்லாஹ்வுடைய வேதத்தை படித்து சிந்தித்து பார்ப்பாயானால் அது அவனுடைய உள்ளத்தில் மாற்றத்தைக் கொடுக்கும்.

அதுபோன்றுதான் தனிமையில் அமர்ந்து எனக்கும் மரணம் உண்டு, நான் மரணிப்பேன், எந்த உலக இன்பங்களில் நான் மூழ்கி இருக்கிறேனோ இதை விட்டு ஒரு நாள் நான் பிரிந்து விடுவேன் என்று மரணத்தை நினைத்தால் கண்டிப்பாக அவன் வரம்பு மீற மாட்டான். தன்னுடைய ஆசைகளை சுருக்கி கொள்வான். தன்னுடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்வான்.

ஆகவே, நாமும் நம் குடும்பத்தாரும் அதிகம் நினைக்க வேண்டியது இந்த மரணம். அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு மரணத்தின் வேதனையை லேசாக்கி தருவானாக! நம்முடைய மரணத்தருவாயை அல்லாஹ் லேசாக்கி கொடுப்பானாக! சக்ராத்துடைய நேரத்தில் மறுமையை நினைத்தவர்களாக திரு கலிமாவை கூறியவர்களாக மரணிப்பதற்கு அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ أَبَا عَمْرٍو ذَكْوَانَ مَوْلَى عَائِشَةَ، أَخْبَرَهُ: أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، كَانَتْ تَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ - أَوْ عُلْبَةٌ فِيهَا مَاءٌ، يَشُكُّ عُمَرُ - فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي المَاءِ، فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ، وَيَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ» ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ: «فِي الرَّفِيقِ الأَعْلَى» حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «العُلْبَةُ مِنَ الخَشَبِ، وَالرَّكْوَةُ مِنَ الأَدَمِ» (صحيح البخاري 6510)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: وَضَعَ رَجُلٌ يَدَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: وَاللَّهِ مَا أُطِيقُ أَنْ أَضَعَ يَدِي عَلَيْكَ مِنْ شِدَّةِ حُمَّاكَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا مَعْشَرَ الْأَنْبِيَاءِ يُضَاعَفُ لَنَا الْبَلَاءُ، كَمَا يُضَاعَفُ لَنَا الْأَجْرُ، إِنْ كَانَ النَّبِيُّ مِنَ الْأَنْبِيَاءِ يُبْتَلَى بِالْقُمَّلِ حَتَّى يَقْتُلَهُ، وَإِنْ كَانَ النَّبِيُّ مِنَ الْأَنْبِيَاءِ لَيُبْتَلَى بِالْفَقْرِ، حَتَّى يَأْخُذَ الْعَبَاءَةَ، فَيَجُونَهَا، وَإِنْ كَانُوا لَيَفْرَحُونَ بِالْبَلَاءِ، كَمَا تَفْرَحُونَ بِالرَّخَاءِ» (مسند أحمد- 11893)

குறிப்பு 2)

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ*، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ دَخَلَ عَلَى عُمَرَ حِينَ طُعِنَ، فَقَالَ:  «أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَسْلَمْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ كَفَرَ النَّاسُ، [ص:315] وَقَاتَلْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَذَلَهُ النَّاسُ، وَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْكَ رَاضٍ وَلَمْ يَخْتَلِفْ فِي خِلَافَتِكَ رَجُلَانِ، وَقُتِلْتَ شَهِيدًا» فَقَالَ: أَعِدْ، فَأَعَادَ فَقَالَ: «الْمَغْرُورُ مَنْ غَرَرْتُمُوهُ لَوْ أَنَّ مَا عَلَى ظَهْرِهَا مِنْ بَيْضَاءَ وَصَفْرَاءَ، لَافْتَدَيْتُ بِهِ مِنْ هَوْلِ الْمَطْلَعِ» (صحيح ابن حبان- 6891)

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/