ஸிராத் பாலம் | Tamil Bayan - 483
ஸிராத் பாலம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஸிராத் பாலம்
வரிசை : 483
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 24-11-2017 | 06-03-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை கொண்டு உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பிக்கிறேன்.
மறுமை நாளில் நம்மை திடுக்கிடச் செய்கின்ற காட்சிகளில் ஒன்று, நரகத்தின் மீது ஒரு பாலத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொண்டு வருகின்ற காட்சி.
அதற்கு 'சிராத்' என்று சொல்லப்படும்; அல்லது 'ஜிஸ்ர்' என்று சொல்லப்படும்.
மனிதர்கள் தடுமாறக் கூடிய, மனிதர்கள் வெற்றியாளர்களா? அல்லது நஷ்டவாளிகளா? என்று முடிவாகின்ற தருணங்களில் அந்த சிராத் தருணமும் ஒன்று.
அல்லாஹ் மறுமையின் அந்த தினத்தை பற்றி குறிப்பிடும் போது, குர்ஆனில் ஓர் இடத்தில் அல்ல, ஆயிரக்கணக்கான இடங்களில் மறுமையின் பயத்தை நமக்கு சொல்கிறான்.
وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا
இன்னும், ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும். (அல்குர்ஆன் 76 : 7)
அந்த நல்லவர்கள் மறுமையின் அந்த நாளை பயப்படுவார்கள்.
அந்த நாள் உடைய தீமைகள், அந்த நாள் உடைய தண்டனைகள் மிகப்பெரியதாக அனைவரையும் சூழ்ந்ததாக எங்கு பார்த்தாலும் அந்த திட்டத்தின் அச்சம் மனிதர்களுடைய உள்ளங்களில் பரவியதாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
நல்லவர்கள் நபிமார்கள் ஸாலிஹீன்கள் பயந்தார்கள். அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த அந்த மக்களுடைய துக்கங்கள் எல்லாம் இரவு நேரங்களில் தொலைந்து போனதற்கு காரணம், மறுமையுடைய அந்த நாளின் ஒவ்வொரு காட்சியை ஒவ்வொரு நிலையை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து அந்த நல்லவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
தங்களது அமல்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவர்கள் அந்த அமல்களை மிக அற்பமாக மிகக்குறைவாக பார்த்தார்கள்.
அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
(இரவில் அவர்கள் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதால்) அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். அவர்கள் தங்கள் இறைவனை பயத்துடனும் ஆசையுடனும் வணங்குவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள். (அல்குர்ஆன் 32 : 16)
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சம்பவத்தை ஹில்யத்துல் அவுலியா என்ற நூலில் பார்க்கிறோம். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை ஒரு வழியில் செல்லும் போது ஒரு மரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு குருவி உட்காருவதை பார்த்தார்கள். அதை பார்த்துவிட்டு அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்:
நான் ஒரு குருவியாக இருந்திருக்க கூடாதா! எவ்வளவு சுதந்திரமாக அது பறக்கிறது! தான் விரும்பிய மரத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறது, பறந்து சென்று விடுகின்றது. இப்படி ஒரு குருவியாக நான் இருந்திருக்க கூடாதா? நான் ஏன் மனிதனாக பிறந்தேன்?
பிறகு, மரத்தைப் பார்த்து சொன்னார்கள்: இப்படி ஒரு நல்ல மரமாக இருந்தால் மக்கள் இதை வெட்டி தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி இருப்பார்கள். ஒரு செடிகொடியாக இருந்தால் ஒட்டகங்கள், ஆடு மாடுகள் தின்று பிறகு அது தின்றதை விட்டையாக வெளியாகியிருக்கும். இப்படி ஒரு மரமாக ஒரு செடி கொடியாக நான் இருந்திருக்க மாட்டேனா? நான் ஏன் மனிதனாக இருக்கின்றேன்? என்று அவர்கள் பயந்தார்களே!
பார்க்க : ஹில்யத்துல் அவுலியா : 1/52 ஷுஅபுல் ஈமான்.
இதற்கெல்லாம் என்ன காரணம், மனிதர்களுக்கு தான் மறுமையில் விசாரணை உண்டு. அவர்கள் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப் படுவார்கள்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சம்பவத்தை இதே நூலில் நாம் பார்க்கிறோம்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, நான் ஒரு ஆடாக இருக்கக் கூடாதா? ஒரு வீட்டில் வளர்க்கக்கூடிய கால்நடையாக இருந்திருக்கக் கூடாதா? அந்த வீட்டார்கள் நன்கு அதற்கு தீனி கொடுத்து வளர்க்கிறார்கள். பின்பு, தங்களுக்கு விருப்பமான விருந்தாளிகள் யாராவது வந்தால் அதை அவர்கள் அவர்களுக்கு சமைத்துக் கொடுக்கிறார்கள்.
இப்படி ஒரு பிராணியாக நான் இருந்திருக்க வேண்டாமா? மனிதனாக பிறந்து விட்டேனே! என்பதாக கலீபா உமர் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மறுமையை குறித்து பயந்த நிகழ்வை நாம் பார்க்கிறோம்.
மறுமை என்பது அப்படித்தான். அந்த நாள் பயப்படக்கூடிய நாள்தான். அந்த நாளில் நடக்க இருக்கின்ற நிகழ இருக்கின்ற ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு தருணமும் நம்முடைய இறுதி எல்லையை முடிவு செய்யக் கூடியதாக இருக்கும்.
இவன் நரகப் படுகுழியில் விழுவானா? அல்லது சொர்க்கப் பூஞ்சோலையில் அனுமதிக்கப்படுவரா? என்பதை முடிவு செய்யக்கூடிய தருணமாக அந்த மறுமை நாள் இருக்கும்.
அந்த கட்டங்களில் ஒன்றுதான், ஸிராத் என்ற அந்த பாலம். நரகத்தின் மீது அல்லாஹ் அமைக்க இருக்கின்ற அந்தப் பாலம்.
நூற்றுக்கணக்கான குர்ஆனுடைய வசனங்கள் ஹதீஸ்கள் மறுமையின் அந்த காட்சியை தெளிவுப்படுத்தும் போது இந்த ஸிராத் என்ற அந்தப் பாலத்தை நமக்கு உறுதி செய்வதை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு முஃமினும் அந்த பாலத்தை நம்ப வேண்டும். அதன் மீது நம்முடைய ஈமான் இருக்க வேண்டும். மறுமையின் மீது ஈமான் கொள்ளக்கூடிய நாம் அந்த ஆஹிரத்தின் உடைய காட்சிகளை பற்றி அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொல்கிற ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே நாம் ஈமான் கொள்ள வேண்டும்.
நம்முடைய சிற்றறிவில் அவற்றை போட்டு நாம் எடை போட முடியாது. நம்முடைய சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட உலகம், நம்முடைய அனுபவத்திற்கு அப்பாற்பட்ட உலகம், மனிதனுடைய அறிவியலுக்கு அப்பாற்பட்ட உலகம்.
அல்லாஹ்வின் நேரடி ஆட்சி அல்லாஹ்வின் நேரடி கட்டளை அங்கே வந்து கொண்டிருக்கும். மனிதனுடைய அறிவுக்கு எல்லாம் அப்பாற்பட்ட உலகம்தான் அந்த மறுமை உலகம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களில் பார்க்கிறோம்;
أَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُمْ فِي الظُّلْمَةِ دُونَ الْجِسْرِ»
அல்லாஹு தஆலா அவனுடைய குர்ஆனில் சொல்கிறான், வானமும் பூமியும் மறுமை தினத்தில் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும். (அல்குர்ஆன் 14 : 48)
நாம் பார்க்கக்கூடிய பூமியாக அந்த மஹ்ஷர் உடைய பூமி இருக்காது.
பூமி என்பது ஒரு பெயர், எதன் மீது நாம் வசிக்கிறோமோ அதற்கு பூமி என்று சொல்கிறோம். இந்த துன்யா உடைய பூமி இதனுடைய மேற்பரப்பு மண்ணாலும், கல்லினாலும், பாறைனாலும் இருக்கிறது.
நாளை மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மஹ்ஷருடைய பூமியை ஏற்படுத்துவான். அது இந்த மண்ணால் ஆன பூமியாக இருக்காது. வேறு பூமியாக மாற்றி விடுவான். வானம் அதுபோன்றுதான், வேறு ஒரு வானமாக மாற்றப்பட்டுவிடும்.
அப்படி மாற்றப்படும்போது மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
அவர்கள் பாலத்திற்கு முன்பாக ஓரிருளில் இருப்பார்கள்.
இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், தனது ஆசிரியர் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அறிவிக்கின்றார்கள்:
இப்னு அப்பாஸ் கேட்கின்றார்கள்:
قَالَ ابْنُ عَبَّاسٍ: أَتَدْرِي مَا سِعَةُ جَهَنَّمَ؟ قُلْتُ: لَا، قَالَ: أَجَلْ، وَاللَّهِ مَا تَدْرِي، إِنَّ بَيْنَ شَحْمَةِ أُذُنِ أَحَدِهِمْ وَبَيْنَ عَاتِقِهِ مَسِيرَةَ سَبْعِينَ خَرِيفًا
முஜாஹித்! நரகத்தின் உடைய விசாலம், நீளம் அகலம் எப்படி இருக்கும்? என்று உனக்கு தெரியுமா? இமாம் முஜாஹித் கூறினார்கள், எனக்குத் தெரியாது ஆசிரியரே!
ஆம், தெரியாதுதான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
நரகத்தின் விசாலத்தைப் பற்றி சொல்வதற்கு அதில் போடப்பட்ட ஒரு மனிதனுடைய உருவத்தை உனக்கு சொல்கிறேன். அதை வைத்து நரகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று யோசித்துக் கொள் என்று கூறி, அவர்கள் சொன்னார்கள்;
நரகவாசிகளில் ஒரு மனிதனுடைய காதுக்கும் அவனுடைய புஜத்துக்கும் இடையே 70 ஆண்டுகள் தூரமாகும். இப்படிப்பட்ட ஒரு கோர பயங்கரமான உடல் உடையதாக நரகவாதிகள் மாற்றப்படுகிறார்.
இது ஒரு நரகவாதியின் உடல். இப்படியாக அவனுடைய உடலை 140 ஆண்டுகள் வரை தொலை உள்ள அளவுக்கு அவனுடைய உடல் பருமனாகிவிடும்.
இந்த காதுக்கும் இந்த புஜத்திற்க்கும் இடையில் இவ்வளவு தூரம். நரக வேதனையில் அந்த நெருப்பில் அவன் வேதனைப்பட்டு அவனுடைய உடலில் தீக்காயங்களால் சீழ்களும் சலங்களும் பெரும் பெரும் ஓடைகளாக அதில் ஓடிக்கொண்டிருக்கும்.
(ஆம்! அல்லாஹ் அந்த நரகத்தை அவ்வளவு பெரிய நெருப்பு குண்டமாக படைத்திருக்கின்றான்.)
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய ஹதீஸை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.
எனக்கு ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ
பூமி நாளை மறுமையில் அவனுடைய ஒரு பிடியில் இருக்கும். வானம் எல்லாம் சுருட்டப்பட்டு அல்லாஹ்வுடைய வலது கையில் இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறானே! (அல்குர்ஆன் 39 : 67)
மக்கள் அந்நாளில் அந்நேரத்தில் எங்கே இருப்பார்கள் என்று ரஸுல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
அப்போது, அந்த மக்கள் நரகத்தின் மீது அமைக்கப்படக் கூடிய அந்த பாலத்தின் மீது கொண்டு வரப்படுவார்கள். அந்த பாலத்தை மனிதன் கடந்து சென்றே ஆக வேண்டும். (1)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 24856
இந்த உலகில் மனிதன் அல்லாஹ்வின் கட்டளைகளை செயல் படுத்தலாம் அல்லது விட்டுவிடலாம் என்று அவனுக்கு இஷ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடைய கட்டளையை உனது விருப்பத்தோடு நீ செயல்படுத்தினால் நன்மை. நீ அதை அலட்சியம் செய்தால் அல்லது புறக்கணித்தால் அவனுடைய தண்டனையை எதிர் பார்த்துக் கொள்.
மறுமை பொருத்தவரை அங்கே இந்த விருப்பம் இஷ்டம் சுய கருத்து என்பதற்கெல்லாம் இடம் இருக்காது. அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டால் அனைவரும் அதை பின்பற்றியே ஆக வேண்டும். தப்பிக்கவும் முடியாது. ஓடவும் முடியாது.
எங்கே ஓட முடியும்? அல்லாஹ் கேட்கிறான்:
يَامَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் ஓரங்களில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது. (அல்குர்ஆன் 55 : 33)
வானம் பூமியின் கடைக்கோடிகளில் நீங்கள் ஓடி ஒளிந்து கொள்ள முடியுமா? எங்கும் ஓட முடியாது. எங்கு பார்த்தாலும் அல்லாஹ் மலக்குகளை நிறுத்தி வைத்திருக்கின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த பாலத்தை குறித்த எச்சரிக்கையை, அது எப்படி இருக்கும்? என்பதையும் சொல்லி இருக்கின்றார்கள்.
துன்யா உடைய பாலத்தை போன்று கற்பனை செய்து விடமுடியாது. அதற்கு முற்றிலும் அப்பாற்பட்ட வித்யாசமான ஒன்று.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அபூ சயீது அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
مَدْحَضَةٌ مَزِلَّةٌ
நடக்கக்கூடிய அந்தப் பாலம் மக்கள் தடுமாறி கீழே விழக் கூடியதாக இருக்கும். தடுமாறி சறுக்கி கீழே விழக்கூடியதாக தான் இருக்கும், இந்த நரகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தின் உடைய தன்மையை ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர் : அபூ சயீது அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7439.
நரகம் எப்படிப்பட்டது என்பதை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பின் வாயிலாக பார்த்தோம். நரகத்தின் மீது அதனுடைய ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அமைக்கப்படுகிறது அந்த பாலம் தான் இந்த பாலம்.
அது எவ்வளவு தூரம் இருக்கும்? நரகத்தில் ஒரு மனிதனுடைய உடல் 140 ஆண்டுகள் பயணிக்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு பெரியதாக இருந்தால் எத்தனை கோடி மக்கள் அந்த நரகத்தில் காணப்படுவார்கள். அதற்குப் பிறகு, இன்னும் எவ்வளவு பெரிய வேதனைகளை உடைய நரகமாக அது இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
உலகத்தில் மனிதர்கள் தோன்றியதிலிருந்து இறுதி நாள் வரை வருகின்ற காஃபிர்கள், பாவிகள், முஷ்ரிக்குகள், மஜூஸிகள், நஸ்ராணிகள், அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்களை எல்லாம் போட்டு நிரப்ப பட்டதற்கு பிறகும் கூட, அதுவும் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கோர உடலை கொடுக்கப்பட்டு அந்த நரகத்தில் போடப்பட்ட பிறகும் கூட, அந்த நரகம் காலியாக இருக்கும்.
அல்லாஹ் கேட்பான்:
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ
அல்லாஹ் அந்த நரகத்தை நோக்கி கேட்பான்; நரகமே! உனக்கு வயிறு நிரம்பியதா? என்று. அந்த நரகம் அல்லாஹ்விடத்தில் பேசும்; இன்னும் இருக்கிறார்களா பாவிகள்? (அல்குர்ஆன் 50 : 30)
அல்லாஹு தஆலா தன்னுடைய பாதத்தை அதன் மீது வைத்து நெருக்குவான். அத்தோடு அது சுருங்கி விடும்.
அவ்வளவு பெரிய நரகத்தின் மீது அமைக்கக்கூடிய பாலமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ள பாலமாக இருக்கும்! அந்த பாலம் அதனுடைய தொடக்கத்திலிருந்து இறுதிவரை இருக்கும்.
مَدْحَضَةٌ مَزِلَّةٌ -மக்கள் சறுக்கி விடக் கூடியதாக தடுமாறி விழ கூடியதாக அந்த பாலம் இருக்கும்.
இந்தப் பாலத்தைப் பற்றி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வளவு எச்சரிக்கை சொன்னார்களே! நல்லவர் இதை குறித்து பயந்தார்களே! அந்தப் பாலம் எப்படிப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நரகத்துடைய ஆழத்தை அதனுடைய விசாலத்தை பற்றிக் கூறும்போது சொன்னார்கள்:
«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»
நரகம் மறுமையில் 70,000 கடிவாளங்கள் அல்லது சங்கிலிகளால் கட்டப்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு சங்கிலிகளையும் 70,000 மலக்குகள் சுமந்து வருவார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2842.
ஒரு மலக்குடைய ஆற்றல் வானத்தில் இருக்கக்கூடிய அனைத்து நட்சத்திரங்களையும் பிடித்து தூக்கி எறியக் கூடிய ஆற்றல் உடையதாக இருக்கும். இந்த பூமியை அப்படியே சுருட்டி விடுவார்கள்.
(பார்க்க - அல் குர்ஆன் 22:9,11:82,66:6)
அப்பேற்ப்பட்ட ஆற்றல் உள்ள மலக்கு ஒருவர், இதுபோன்று எழுபது ஆயிரம் மலக்குகள் ஒரு சங்கிலியை இழுத்து வருவார்கள். இதுபோன்று எழுபதினாயிரம் சங்கிலிகள் இருக்குமென்றால் அந்த நரகம் எவ்வளவு நீளம் ஆழம் அகலம் உடையதாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: நரகத்தின் மேலிருந்து ஒரு கல் போடப்பட்டால் அது 70 ஆண்டுகள் ஆனாலும் கூட அந்த நரகத்தின் ஆழத்தில் கடைசி தட்டில் போய் சேர்ந்து இருக்காது.
நூல் : முஸ்லிம் எண் : 5268, திர்மிதி எண்: 2498.
அவ்வளவு பெரிய நகரத்தின் மீது அந்தப் பாலம் அமைக்கப்பட்டிருக்கும். அதனுடைய ஜுவாலைகள் வீசிக்கொண்டிருக்கும்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த சிராத் பாலத்தை பற்றி குறிப்பிடும்போது சொன்னார்கள்: அதனுடைய இரண்டு பக்கங்களிலும் ஒரு சுற்றுசுவர் இருக்கும். அந்த பாலத்திற்கு வலது பக்கமும் இடது பக்கமும் ஓரங்கள் இருக்கும்.
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அந்தப் பாலம் கண்ணுக்கெட்டிய தூரம் அளவுக்கு விசாலமாக இருக்காது. அதற்கு ஓரங்கள் இருக்கும். மறுமை நாளில் அந்தப் பாலத்தின் மீது மக்கள் செல்ல வேண்டும் என்பதற்காக நிர்பந்திக்க படுவார்கள்; தள்ளப்படுவார்கள்.
அப்போது, அந்த ஓரங்களில் மக்கள் கூட்டமாக செல்லும் போது, (நீங்கள் பார்த்திருப்பீர்கள் கூட்டமாக மாடுகள் செல்லும்போது ஒரு மாடு இன்னொரு மாட்டின் மீது அவசரத்தால் ஓடும் போது ஏற்றிவிடும். அதன் கழுத்து இன்னொரு மாட்டின் பிற்பகுதியில் மீது அமைந்துவிடும்.)
இதுபோன்று, அந்த மக்கள் தள்ளப்படுவார்கள். அந்த மக்கள் வேகமாக அவர்கள் கடப்பதற்காக கூட்டம் அதிகரிக்கும். அந்த நேரத்தில் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி விடுவார்கள்.
இந்த நேரத்தில் விட்டில் பூச்சி எப்படி நெருப்பில் விழுகின்றதோ அதைப் போன்று யார் அந்த நரக நெருப்பில் விழவேண்டும் என்று அல்லாஹ் முடிவு செய்து விட்டானோ அவர்களுடைய பாவங்களினால் அவர்கள் நரக நெருப்பில் விழுந்து கொண்டிருப்பார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 19544
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«وَفِي حَافَتَيِ الصِّرَاطِ كَلَالِيبُ مُعَلَّقَةٌ مَأْمُورَةٌ بِأَخْذِ مَنِ اُمِرَتْ بِهِ، فَمَخْدُوشٌ نَاجٍ، وَمَكْدُوسٌ فِي النَّارِ»
அந்த பாலத்தில் இரண்டு ஓரங்களிலும் பல கொக்கிகளை உடைய சங்கிலிகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.
(நீங்கள் பார்க்கலாம்; ஆடு மாடு விற்கக்கூடிய கடைகளுக்கு சென்றால், அறுக்கப்பட்ட ஆடுமாடுகளை தொங்க விடுவதற்கான பல கொக்கிகளை உடைய சங்கிலிகள் அங்கே மாற்றப்பட்டிருக்கும்.)
அதுபோன்று, அந்த பாலங்களில் இரண்டு ஓரங்களிலும் இப்படியாக பல கொக்கிகளை உடைய சங்கிலிகள் இருக்கும்.
சுங்கலிகளில் யாருடைய பெயர் எழுதப்பட்டு இருக்கிறதோ அவர் அந்த இடத்தை கடந்து செல்லும்போது, அது அவரை அப்படியே தூக்கிக் கொள்ளும். யார் அவருடைய தீய செயல்களின் காரணமாக நரகத்தில் விழ வேண்டும் என்பதாக அல்லாஹ் முடிவு செய்துவிட்டானோ அவர் அந்த இடத்தை கடக்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் அவருடைய பெயர் எழுதப்பட்ட அந்த கொக்கிகள் அவரை கொத்திக்கொளும். தப்பிக்க முடியாது. (2)
அறிவிப்பாளர் : ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 195.
இதுகுறித்து, மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை அபூ ஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! மறுமையின் அந்த பாலம் எப்படி இருக்கும் என்பதை எங்களுக்குச் சொல்லித் தாருங்கள்.
(அந்த ஸஹாபாக்கள் மறுமைக்காக வாழ்ந்தார்கள். பஞ்சம் பசி என எவ்வளவோ பெரிய பிரச்சினை இருந்தாலும் அவர்களுடைய பிரச்சினைகளை எல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கவில்லை.
காரணம், அல்லாஹ் இந்த துன்யாவுடைய பிரச்சினைக்கான தீர்வை தீனில் வைத்திருக்கிறான் என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள்.
அவர்கள் கூறிய பிரச்சனைகளில் எல்லாம் பெரிய பிரச்சனையாக மறுமையுடைய பிரச்சினை தான் இருந்தது. மறுமையைப் பற்றி அவர்கள் ஒரு குர்ஆனில் ஹதீஸில் செவியுறக்கூடிய ஒவ்வொன்றும் அதை குறித்து பயந்து அந்த மறுமையில் பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிப்பது. இதுதான் அவர்களுடைய கேள்வியாக இருந்தது.)
அபூ ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ரசூலுல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அந்த நரகத்தின் மீது ஒரு பாலம் அமைக்கப்படும் என்று சொல்லுகின்றீர்களே!
அந்தப் பாலம் என்றால் என்ன? இந்த உலகத்தில் நாம் பார்க்கக்கூடிய பாலத்தை போன்றா? அது எப்படி இருக்கும்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
مَدْحَضَةٌ مَزِلَّةٌ، عَلَيْهِ خَطَاطِيفُ وَكَلاَلِيبُ، وَحَسَكَةٌ مُفَلْطَحَةٌ لَهَا شَوْكَةٌ عُقَيْفَاءُ، تَكُونُ بِنَجْدٍ، يُقَالُ لَهَا: السَّعْدَانُ
அந்த பாலம் மக்கள் தடுமாறி விழக்கூடியதாக இருக்கும். கீழே விழக்கூடியதாக இருக்கும். அதன் மீது كَلاَلِيبُ -கலாலீப் இருக்கும். கலாலீப் என்று சொன்னால் பல கொக்கிகளை உடைய சங்கலி. خطوف என்று சொன்னால் ஒரே ஒரு கொக்கி உடைய தூண்டில் மாதிரி, அதுபோன்று கொக்கிகள் அங்கு இருக்கும்.
அது மட்டுமல்ல, நன்கு தடிப்பமான கூர்மையான முட்கள் அங்கே இருக்கும். அது வளைந்து நெளிந்து இருக்கும். இவ்வளவு ஆபத்துகளை மனிதன் அங்கே கடந்து செல்லவேண்டும்.
யாருடைய பெயர் எழுதப்பட்டு அதில் இருக்கிறதோ அவர்களை அந்த கொக்கிகள் அது கல்லூப் ஆக இருக்கட்டும், பல கொக்கிகளை உடைய சங்கிலியாக இருக்கட்டும், அல்லது ஒரு கொக்கியுடைய சங்கிலியாக இருக்கட்டும், அல்லது அந்த நெளிந்து வளைந்த கூர்மையான முட்கள் அதில் ஏதாவது ஒன்று அந்த பாவிகளை அப்படியே இழுத்து நரகத்தில் தள்ளி விடும்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7439.
மேலும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மறுமையுடைய பாலத்தை பற்றி சொன்னார்கள்;
(நாம் நினைப்பது போன்று சமமான பாலமாக இருக்காது. எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் நடந்து ஓடி சென்று விடலாம் என்று மனிதன் கற்பனை செய்து விடுவான் அல்லவா, அப்படி ஒரு சமமான பாலமாக இருக்காது.)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
وَيُوضَعُ الصِّرَاطُ مِثْلَ حَدَّ الْمُوسَى فَتَقُولُ الْمَلَائِكَةُ: مَنْ تُجِيزُ عَلَى هَذَا؟ فَيَقُولُ: مَنْ شِئْتَ مِنْ خَلْقِي، فَيَقُولُ: سُبْحَانَكَ مَا عَبَدْنَاكَ حَقَّ عِبَادَتِكَ
கூர்மையான வாள் அல்லது கூர்மையான கத்தியைப் போன்று கூர்மை உடையதாக அந்த பாலம் இருக்கும்.
இதை அல்லாஹ் ஏற்படுத்தியபோது மலக்குகள் கேட்கிறார்கள்; அல்லாஹ்வே! இப்படிப்பட்ட பாலத்தின் மீது நீ யாரை கடக்க வைப்பாய்? யாரால் இந்த பாலத்தை கடக்க முடியும்? என்று வானவர்கள் பயந்து கேட்கிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்; என்னுடைய அடியார்களில் நான் யாரை நாடுகின்றேனோ அவர்களை இந்த பாலத்தை நான் கடக்க வைத்துவிடுவேன்.
அப்போது மலக்குகள் சொன்னார்கள்; அல்லாஹ்வே! உன்னை வணங்க வேண்டிய முறையில் நாங்கள் வணங்கவில்லை. அதாவது, உன்னுடைய ஆற்றலை புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. (3)
அறிவிப்பாளர் : சல்மான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 8739.
மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
وَالصِّرَاطُ كَحَدِّ السَّيْفِ دَحْضُ مَزِلَّةٍ
அந்த நரகத்தின் பாலம் ஒரு வாளுடைய கூர்மை போன்றிருக்கும். மக்கள் வழுக்கி கீழே விழக்கூடியதாக சறுக்கி விழக்கூடியதாக இருக்கும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 3424.
கண்ணியத்திற்குரியவர்களே! இந்தப் பாலத்தில் யார் எல்லாம் கிடப்பார்கள்?
பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இந்த பாலத்தில் காஃபிர்கள் முஷ்ரிக்குகள்தான் கடப்பார்கள்; அவர்கள் கீழே விழுந்து விடுவார்கள்; நாமெல்லாம் தப்பித்துவிடலாம் என்பதாக.
இந்த எண்ணம் தவறானது. அவர்களுக்கும் இந்தப் பாலத்திற்கும் சம்பந்தமே இல்லை. காரணம், அவர்கள் விசாரிக்கப்பட்டு நரக நெருப்பில் வீசப்பட்டிருப்பார்கள்.
அந்த பாலம் யாருக்காக போடப்படும் என்றால், நம்பிக்கையாளர்களுக்காக வேண்டி போடப்படும். அவர்களில் உள்ள பாவிகளை பிரிப்பதற்காக வேண்டி அவர்களில் உள்ள முனாஃபிக்களை பிரிப்பதற்காக அனுமதி கொடுக்கப்படும்.
முஸ்லிம்களாக இருந்தவர்கள் அவர்கள் பாவிகளாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்து வைத்த முனாஃபிக்குகளாக இருந்தாலும் சரி, அவர்கள்தான் இந்த பாலத்தை கடப்பதற்கு அனுமதிக்கப் படுவார்கள். இந்த பாலத்தில் அவர்கள் தான் கடக்க வைக்கப்படுவார்கள்.
அல்லாஹ் சொல்கின்றான்; உங்களில் எல்லோரும் இந்த நரகத்தின் மீது உள்ள பாலத்தை கடந்து தான் ஆக வேண்டும். இது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் மீது விதித்துக் கொண்ட கட்டாயமான கடமையாக இருக்கின்றது.
وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا
உங்களில் எல்லோரும் அதன் மீது கடந்து சென்றே ஆக வேண்டும். அது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட உறுதியான காரியமாக இருக்கிறது. (அல்குர்ஆன் 19 : 71)
இந்த நரகத்தின் பாலம் என்பது நரகத்தின் ஜுவாலை மேலே வீசிக்கொண்டிருக்கும். அல்லாஹு தஆலா அதனுடைய கரும் புகையை பற்றி சொல்கின்றான்,
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
நிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்! (அல்குர்ஆன் 77 : 32)
இப்படியாக, நரகத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்தப் பாலம் முற்றிலும் இருள் சூழ்ந்ததாக இருக்கும். அந்தப் பாலத்தை கடப்பதற்கு ஒரு ஒளி தேவை, அந்த ஒளி கொடுக்கப்பட்டவர்கள் அந்த பாலத்தில் கடப்பார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
وَيُعْطَى كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ مُنَافِقًا، أَوْ مُؤْمِنًا نُورًا، ثُمَّ يَتَّبِعُونَهُ
அந்த பாலத்தை கடக்கக்கூடிய ஒவ்வொருவரும் அவர் முஃமின்களாக இருந்தாலும் முனாஃபிக்குகளாக இருந்தாலும் அவருக்கு ஒளி கொடுக்கப்படும். அந்த ஒளியை பின்பற்றி தான் அவர்கள் செல்வார்கள். (4)
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 191.
முனாஃபிக்கள் உடைய நிலை எப்படி மாறும்? என்பது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதை பின் காண்போம்.
அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடிய அந்த ஒளி எதை வைத்துக் கொடுக்கப்படும்? வசதியானவர்களுக்கு அதிகமாக, பெரும் படிப்பு படித்தவர்களுக்கு இன்னும் வெளிச்சமாக, பதவியில் இருக்க கூடியவர்களுக்கு இன்னும் அதிகமாக, அல்லது பரம்பரையாக வளர்ந்தவர்களுக்கு அல்லது அழகானவர்களுக்கு என்ற அடிப்படையில் இல்லை.
மறுமை நாள் என்பது அமல்கள் மட்டுமே பேசக் கூடிய நாள். நம்முடைய காசு, பணம், பெருமை, மதிப்பு, மரியாதை இதற்கெல்லாம் அங்கே வேலை இருக்காது.
நாம் யாரை சில நேரங்களில் மதிப்பு குறைவாக பார்த்தோமோ அவர்களெல்லாம் எங்கோ இருப்பார்கள்.
அல்லாஹு தஆலா அப்படி தானே சொல்கிறான். காஃபிர்கள் முஃமின்களை பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
மூஃமின்கள் மறுமையில் காஃபிர்களை பார்த்து சிரிப்பார்கள். எந்த நிராகரிப்பாளர்கள் இணைவைப்பாளர்கள் முஃமின்களை பார்த்து இந்த துன்யாவில் பரிகாசம் கேலி கிண்டல் நக்கல் செய்தார்களோ அவர்கள் நாளை மறுமையில் வரும் பொழுது இந்த முஸ்லிம்கள் யாருடைய ஏழ்மையினால் யாருடைய இந்த துன்யாவின் அந்த அந்தஸ்து குறைந்து இருந்த காரணத்தால் பழிக்கப்பட்ட அந்த முஃமீன்கள் பாவிகளை பார்த்து சிரிப்பார்கள். (அல்குர்ஆன் கருத்து 83 : 29-34)
அந்த பாலத்தை கடப்பதற்கு மறுமையில் கொடுக்கும் அந்த ஒளி என்பது அமல்களை வைத்துக் கொடுக்கப்படும். காசு பணங்களை வைத்து அல்ல. நீங்கள் எவ்வளவு அமல் வைத்திருக்கிறார்களோ அதை பொறுத்து வெளிச்சம் கொடுக்கப்படுவீர்கள். அந்த வெளிச்சத்தின் அளவிற்கு நீங்கள் விரைவாக செல்லலாம்.
கடக்க வேண்டிய பாலத்தின் நீளம் எவ்வளவு? அதனுடைய கூர்மை எவ்வளவு? அதனுடைய தன்மை எப்படிப்பட்டது? அதனுடைய இரண்டு ஓரங்களிலும் என்னென்ன இருக்கும்?
இப்படிப்பட்ட ஆபத்துகளை உடைய அந்தப் பாலத்தை கடப்பதற்கு ஒளி தேவை. அந்த பிரகாசம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவு தான் விரைவாக பாலத்தை கடக்க முடியும்.
நம்முடைய கற்பனையில் அல்ல. அமல்கள் செய்து பழகவேண்டும். அமல்களை அதிகரித்து பழகவேண்டும். இந்த துன்யாவிலிருந்து நாம் எடுத்துச் செல்வது அமல்களை தான்.
எவ்வளவு தொழுகை, எவ்வளவு திக்ர், எவ்வளவு குர்ஆன் ஓதினோம், எவ்வளவு நன்மை செய்கிறாய், இப்படியாக அமல்களை தான் அங்கே அல்லாஹ் பார்ப்பான். அந்த அடிப்படையில்தான் அல்லாஹ் ஒளியை கொடுப்பான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
فَيُعْطَوْنَ نُورَهُمْ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ قَالَ: فَمِنْهُمْ مَنْ يُعْطَى نُورَهُ مِثْلَ الْجَبَلِ بَيْنَ يَدَيْهِ، وَمِنْهُمْ مَنْ يُعْطَى نُورَهُ فَوْقَ ذَلِكَ، وَمِنْهُمْ مَنْ يُعْطَى نُورَهُ مِثْلَ النَّخْلَةِ بِيَمِينِهِ، وَمِنْهُمْ مَنْ يُعْطَى دُونَ ذَلِكَ بِيَمِينِهِ حَتَّى يَكُونَ آخِرُ ذَلِكَ مَنْ يُعْطَى نُورَهُ عَلَى إِبْهَامِ قَدَمِهِ يُضِيءُ مَرَّةً، وَيُطْفِئُ مَرَّةً
அமல்களுக்கு ஏற்ப அவர்கள் அங்கே ஒளி கொடுக்கப் படுவார்கள். அவர்களில் சிலருக்கு ஒரு பெரிய மலையை போன்று ஒளி கொடுக்கப்படும். இன்னும் பலருக்கு அதைவிட பெரிதாக கொடுக்கப்படும்.
சிலருக்கு அவருடைய வலது பக்கத்தில் ஒரு பேரீத்த மரத்தின் அளவிற்கு கொடுக்கப்படும். அவருடைய இடது பக்கத்திலும் அப்படித்தான். சிலருக்கு அவருடைய கட்டை விரல் அளவிற்கு கொடுக்கப்படும்.
சில நேரங்களில் அது பிரகாசிக்கும்; சில நேரங்களில் அது அணைந்து விடும். கொஞ்சம் பிரகாசிக்கும், கொஞ்சம் அணைந்துவிடும். அது பிரகாசித்தால் அவர் அடுத்தடுத்த அடி எடுத்து வைப்பார். அது அணைத்து விட்டால் அப்படியே நின்று விடுவார்.
இப்படியாக, அந்த பாலத்தைக் கடப்பது, மனிதர்களுடைய அமல்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய ஒளிக்கு ஏற்ப, அந்த பிரகாசம் எவ்வளவு இருக்குமோ அதற்கேற்ப தான் அவர்கள் அந்த பாலத்தில் வேகமாக செல்வதற்கு ஆற்றல் பெறுவார்கள்.
மேலும் இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இது குறித்து அறிவிக்கும்போது சொல்கிறார்கள்:
فَيَمُرُّ وَيَمُرُّونَ عَلَى الصِّرَاطِ وَالصِّرَاطُ كَحَدِّ السَّيْفِ دَحْضُ مَزِلَّةٍ فَيُقَالُ: انْجُوا عَلَى قَدْرِ نُورِكُمْ، فَمِنْهُمْ مَنْ يَمُرُّ كَانْقِضَاضِ الْكَوْكَبِ، وَمِنْهُمْ مَنْ يَمُرُّ كَالطَّرْفِ، وَمِنْهُمْ مَنْ يَمُرُّ كَالرِّيحِ، وَمِنْهُمْ مَنْ يَمُرُّ كَشَدِّ الرَّجُلِ، وَيَرْمُلُ رَمَلًا، فَيَمُرُّونَ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ حَتَّى يَمُرَّ الَّذِي نُورُهُ عَلَى إِبْهَامِ قَدَمِهِ
அந்த பாலத்தில் மக்கள் கடப்பார்கள். அந்த பாலம் வாளின் கூர்மை போன்று மக்கள் சறுக்கி விழக் கூடியதாக இருக்கும்.
உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பிரகாசத்திற்கு ஏற்ப நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்படும்.
அவர்களில் சிலர், ஒரு நட்சத்திரம் விழுவது போன்று வேகமாக சென்று விடுவார்கள். அந்தப் பாலத்தினுடைய ஆரம்பத்திலிருந்து அதனுடைய இறுதிவரை.
இன்னும் சிலர், மிகப்பெரிய புயல் காற்று வீசும் போது அந்த காற்று எவ்வளவு வேகமாக வீசுறுகிறதோ அதுபோன்று கடப்பவர்கள் இருக்கின்றார்கள்.
இன்னும் சிலர், கண் சிமிட்ட கூடிய அந்த சிமிட்டுதலை போன்ற கடக்க கூடியவர்களும் இருக்கின்றார்கள்.
இன்னும் சிலர், வேகமாக ஒரு மனிதன் நடந்து செல்வது போன்று அந்த பாலத்தை கடப்பவர்களும் இருக்கின்றார்கள். இன்னும் சிலர், ஓடியும் கடப்பார்கள்.
ஆக, அவர்களுடைய அமல்களுக்கு ஏற்ப அவர்கள் கடப்பார்கள். கடைசியாக யாருடைய ஒளி அவருடைய கட்டை விரல் அளவுக்கு மட்டும் இருக்கிறதோ அவர்கள் இறுதியாக ஓடுவார்கள்.
கொஞ்ச நேரம் வெளிச்சமாக இருக்கும். நடப்பார்கள். பிறகு, அணைந்துவிடும். நின்று விடுவார்கள். இப்படியாக தட்டுத்தடுமாறி அவர் வந்து சேர்வார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய மனிதர்களை பற்றி சொன்னார்கள்;
قَالَ: يَجُرُّ يَدًا وَيُعَلِّقُ يَدًا وَيَجُرُّ رِجْلًا وَيُعَلِّقُ رِجْلًا وَتَضْرِبُ جَوَانِبَهُ النَّارُ
தட்டுத் தடுமாறி வரும் பொழுது, அந்த ஓரத்தில் இருக்கக்கூடிய கொக்கிகள் முட்கள் இவையெல்லாம் அவனைக் குத்திக் கொள்ளும். இதில் அவருடைய கை கால்கள் இப்படியாக காயப்பட்டு தப்பித்தவறி அவன் வந்து கொண்டே இருப்பான். இறுதியாக அந்தப் பாலத்தினுடைய கடைசி வந்து சேருவான்.
கொஞ்சம் ஒளி கிடைத்தவர்கள் யாரை அல்லாஹ் ரப்பில் ஆலமீன் தப்பிக்க வைக்க வேண்டும் என்று அந்தப் பாவிகளில் நினைத்தானோ பாவங்கள் இன்னும் அதிகமாகி அதிகமாகி நன்மைகள் அறவே இல்லை என்று சொன்னால் அவ்வளவுதான், நரகத்தில் அவர்கள் வீசப்பட்டு விடுவார்கள்.
இப்படியாக பல ஆபத்துகளை சந்தித்து அவன் அந்த பாலத்தை கடந்ததற்கு பிறகு கடைசியில் நின்று அந்த பாலத்தை பார்த்து அவன் சொல்வான்:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنْكِ بَعْدَ الَّذِي أَرَانَاكِ لَقَدْ أَعْطَانَا اللَّهُ مَا لَمْ يُعْطِ أَحَدًا
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! உன்னை விட்டு என்னை அல்லாஹ் பாதுகாத்தான். உன்னில் என்னை நடக்க வைத்து உன்னை எனக்குக் காண்பித்ததற்கு பிறகு உன்னிலிருந்து என்னை பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அந்த மனிதன் சொல்வான்; யாருக்கும் கொடுக்காததை எனக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டான்.
ஏனென்றால், அந்த நாளில் எப்படி இருக்கும் என்று சொன்னால் யாரும் யாரையும் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் நிலை தடுமாறி இருப்பார்கள்.
கோடிக்கணக்கான மக்கள் அந்த நரகத்தில் கடந்து செல்வார்கள். ஆனால், ஒவ்வொருவரும் அவருடைய பிரச்சனையால் சிக்கியிருப்பார். பிறரை சிந்திப்பதற்கு பிறரை பார்ப்பதற்கு பிறருடைய நிலை என்னவென்று அறிவதற்கு அவரால் முடிந்திருக்காது.
அவர் கடந்ததற்குப் பிறகு மற்றவர்களுடைய நிலைமை என்ன ஆயிருக்கும்? என்று அவருக்குத் தெரியாது. இந்த நிலைமையில் அவர் கடந்து அல்லாஹ்வுடைய பாதுகாப்பு பெற்றதற்கு பிறகு சொல்வார்;
உன்னை எனக்கு அல்லாஹ் காண்பித்ததற்கு பிறகு, உன்னில் என்னை சிக்க வைத்த பிறகு, அல்ஹம்து லில்லாஹ் -என்னை பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். யாருக்கும் கொடுக்காததை அல்லாஹ் எனக்கு கொடுத்து விட்டான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 3424, 3785, 8738.
இவ்வளவு கஷ்டத்திற்கு பிறகு தப்பித்தாலும் கூட, அதுவும் அல்லாஹ்வின் பெரிய நிஃமத் தான்; நரகப் படுகுழியில் அவன் விழுவதை கவனித்துப் பார்க்கும்போது.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பாலத்தை கடப்பவர்களுடைய வேகத்தைப் பற்றி கூறினார்கள்,
உங்களில் அமல்களில் முந்தியவர்கள் மின்னலைப் போன்று கடந்து சென்று விடுவார்கள். அந்த பாலத்தின் மீது இருக்கக்கூடிய எந்த ஆபத்துக்களும் ஒன்றும் செய்து விடாது. மின்னல் வெட்டுவது போன்று அவர்கள் விட்டு சென்றுவிடுவார்கள்.
பிறகு, காற்றைப் போன்று. பிறகு, வேகமாகப் பறக்கக் கூடிய பறவைகள் போன்று. பிறகு, வேகமாக நடக்கக்கூடிய மனிதருடைய நடையை போன்று.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
تَجْرِي بِهِمْ أَعْمَالُهُمْ وَنَبِيُّكُمْ قَائِمٌ عَلَى الصِّرَاطِ يَقُولُ: رَبِّ سَلِّمْ سَلِّمْ
அவர்களுடைய அமல்களால் தான் அவர்கள் அந்த பாலத்தை கடக்க முடியும். உங்களது நபியாகிய நான் அந்தப் பாலத்திற்கு அருகிலேயே நின்று கொண்டிருப்பேன். என் இறைவா! பாதுகாத்துக்கொள்! பாதுகாத்துக்கொள்! என்பதாக அவ்விடத்தில் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பேன்.
மனிதர்களுடைய அமல்கள் எல்லாம் பலவீனமாகி விடும் என்ற நிலையில் ஒரு மனிதன் வருவான். அவன் அந்த பாலத்தை நடந்தோ ஓடியோ காற்றை போன்றோ மின்னலைப் போன்றோ கடக்க முடியாது. தன்னுடைய உடலை இழுத்தவராக தவழ்ந்தராக வருவார். (2)
அறிவிப்பாளர் : ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 195.
இன்னொரு ஹதீஸில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்: இன்னும் சிலர், தன்னுடைய வயிற்றின் மீது புரண்டவராக புரண்டு புரண்டு அந்த பாலத்தை கடப்பவர்களும் இருக்கின்றார்கள்.
அல்லாஹ் சொல்வதை நினைத்துப் பாருங்கள். ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا، فَلْيَحْمَدِ اللهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ
என் அடியார்களே! நீங்கள் மறுமையில் அனுபவிக்கப் போவதெல்லாம் உங்களது அமல்கள்.
(நீங்கள் மறுமையில் சொர்க்கத்தை அனுபவித்தாலும் அல்லது நரகத்தை நீங்கள் அனுபவித்தாலும் அது உங்களது அமல்கள் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.)
நீங்கள் துன்யாவில் செய்த அமல்கள் நான் அதைப் பாதுகாத்து எழுதி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நீங்கள் மறுமையில் வரும்பொழுது அதற்குரிய முழுமையான கூலியை நான் கொடுக்கப் போகிறேன்.
யாருக்கு மறுமையில் பாக்கியம் கிடைத்ததோ அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். யார் அதை தவற விட்டாலும் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2577.
அல்லாஹ்வா உன்னை தடுத்தான்? அவன் உனக்கு எத்தனை எச்சரிக்கையாளர்களை அனுப்பினான். அழைப்பவரை, உபதேசம் செய்பவரை, நினைவூட்ட கூடியவரை அல்லாஹ் அனுப்பினான். (அல்குர்ஆன் 50 : 28)
அல்லாஹ்வுடைய அந்த தீர்ப்பு என்பதுமிக நீதமாக இருக்கும். அமல்களை வைத்து அல்லாஹ் முடிவு செய்வான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த பாலத்தில் கடப்பதை பற்றி மேலும் கூறியதை பார்க்கிறோம். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
«يَرِدُ النَّاسُ النَّارَ ثُمَّ يَصْدُرُونَ مِنْهَا بِأَعْمَالِهِمْ، فَأَوَّلُهُمْ كَلَمْحِ البَرْقِ، ثُمَّ كَالرِّيحِ، ثُمَّ كَحُضْرِ الفَرَسِ، ثُمَّ كَالرَّاكِبِ فِي رَحْلِهِ، ثُمَّ كَشَدِّ الرَّجُلِ، ثُمَّ كَمَشْيِهِ»
மக்கள் அந்தப் பாலத்திற்கு வருவார்கள். தங்களுடைய அமல்களுக்கு ஏற்ப அந்த பாலத்தை அவர்கள் கடப்பார்கள். அவர்களில் முதலாமவர் என்று சொன்னால் அமல்களில் முதலாமவர். யாருடைய அமல்கள் அதிகமாக இருக்குமோ அவர் ஒரு மின்னல் வெட்டி, மின்னல் பிரகாசிப்பது போன்று கடந்து விடுவார்கள்.
பிறகு, காற்றைப் போன்று, பிறகு வேகமாக ஓடக்கூடிய குதிரையைப் போன்று, பிறகு ஒரு பயணி தன்னுடைய பயணத்தில் வேகமாக நடந்து செல்வதைப் போன்று, சிலர் மெதுவாக நடந்து செல்வது போன்று. இப்படியாக அவர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய அந்த ஒளிக்கு ஏற்ப அவர் அந்த பாலத்தை கடந்து செல்லக் கூடும்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3159.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த அந்த நரகத்தின் பாலத்தில் இருந்து இறுதியாக வரக்கூடிய ஒரு மனிதருடைய காட்சியை நமக்கு கூறியிருக்கின்றார்கள்.
ثُمَّ يَكُونُ آخِرُهُمْ رَجُلًا يَتَلَبَّطُ عَلَى بَطْنِهِ» ، قَالَ: فَيَقُولُ: " أَيْ رَبِّ لِمَاذَا أَبْطَأْتَ بِي؟ فَيَقُولُ: لَمْ أُبْطِئْ بِكَ إِنَّمَا أَبْطَأَ بِكَ عَمَلُكَ
கடைசியாக ஒரு மனிதன் தன்னுடைய வயிற்றின் மீது தவழ்ந்தவராக அந்தப் பாலத்தை கடந்து வருவான். அப்போது அந்த மனிதன் அல்லாஹ்விடத்தில் கேட்பான், என் இறைவா! எனக்கு ஏன் இப்படிப்பட்ட சோதனை? என்னை ஏன் இப்படி தாமதிக்க வைத்தாய்? என்று.
அல்லாஹ் கூறுவான்; நான் உன்னை தாமதிக்கவில்லை. நான் உனக்கு இந்த நிலையை ஏற்படுத்தவில்லை. உன்னுடைய அமல் உனக்கு இந்த நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. உன்னுடைய அமல்கள் உன்னை தாமதித்து வைத்திருப்பதாக.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 8519.
மேலும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் சொர்க்கத்தில் கடைசியாகவரக்கூடிய ஒரு மனிதன் யார் என்றால் அவன் அந்த பாலத்தை கடந்து வருவான். சிலநேரம் விழுவான் தடுமாறுமவான். நரக நெருப்பு அவனை தீண்டும்.
இப்படியாக தப்பிப் பிழைத்து பாலத்திற்கு இறுதியாக வந்த பிறகு அவன் கூறுவான்
تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ، لَقَدْ أَعْطَانِي اللهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
உன்னிலிருந்து பாதுகாத்த அல்லாஹ் மிகப்பெரிய அருள் பெற்றவன். அல்லாஹ் எனக்கு யாருக்கும் கொடுக்காத பெரிய நிஃமத்தை அவன் எனக்கு கொடுத்து விட்டான்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 187.
என்று இந்த நிலையில் தப்பித்தவன் நினைத்துப் பார்ப்பான் என்றால், ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் தப்பினார்களே, காற்றின் வேகத்தில் தப்பினார்களே, கண்சிமிட்டும் நேரத்தில் தப்பினார்களே, அவர்கள் அல்லாஹ்வுடைய நிஃமத்தை எப்படி நினைத்துப் பார்த்திருப்பார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இடத்தில் மிகப்பெரிய ஒரு எச்சரிக்கையை சொன்னார்கள்;
இந்த நரகத்தின் பாலத்தை கடக்கும்போது அந்த நரகத்தின் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் அமானிதமும் ரத்த பந்தமும் இரத்த உறவுகளும் இருக்கும். அப்படியே இரண்டு ஓரங்களிலும் இருக்கும்.
நூல் : முஸ்லிம், எண் : 288.
யாரெல்லாம் மோசடிக்காரர்களாக வருவார்களோ, முகம் அழகாக இருக்கும், உருவம் அழகாக இருக்கும், பார்ப்பதற்கு இபாதத் உள்ளவர்களாக இருப்பார்கள். மோசடி செய்தவன் எந்த விதத்தில் மோசடி செய்திருந்தாலும் சரி.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஹதீஸை பார்க்கிறோம்.
«وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ»
ஒரே ஒரு மிஸ்வாக் குச்சியை தனது சகோதரனிடம் இருந்து அவனுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்தால் அதற்காகவும் அவன் நிறுத்தி வைக்கப்படுவான்.
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 137.
அப்படி என்றால் இன்று திருட்டு எவ்வளவு வந்துவிட்டது தெரியுமா? திருடுவது அதுவே ஒரு தொழிலாக மாறியிருக்கிறது. மக்கள் அதை அதற்கு பல பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரின் மார்க்கத்தில் நீங்கள் வைக்கக்கூடிய பெயரை வைத்து அல்ல தீர்ப்பு. அந்த செயலுக்கு தான் தீர்ப்பு.
ஒரு சமயம் யமனிலிருந்து ஒரு கூட்டம் வந்தார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! நாங்கள் ஒரு பானத்தை செய்து குடிக்கிறோம். கோதுமையினால் ஆன பார்லியினால் ஆன ஒரு பானத்தை செய்து குடிக்கின்றோம். அதை குடிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்; அது போதை தருகிறதா? ஆம் என்று சொன்னார்கள். அப்படி என்றால் அதுவும் மது தான் என்று சொன்னார்கள்.
நூல் : அபூதாவூது, எண் : 3199, நசாயி சுகுரா, எண் : 5509, 5511.
ஏனென்றால், அரபு கலாச்சாரத்தில் மது என்பது, திராட்சைப் பழத்தில் இருந்து மட்டுமே எடுக்கக் கூடியதாக இருந்தது. மது ஹராமாக்கப்பட்ட போது மக்கள் எண்ணிக் கொண்டார்கள்; திராட்சையில் இருந்து எடுக்கப்பட்டதுதான் ஹராமாக இருக்குமென்று.
எனவே, இவர்கள் இப்படி கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்க எதிலிருந்து செய்தால் என்ன அது உங்களுக்கு போதை கொடுக்கிறதா மயக்கத்தை கொடுக்கிறதா அதுவும் சாராயம் என்று சொன்னார்கள்.
அமானிதம் கொண்டு வரப்படும். அதுபோன்று உறவுகள். இந்த இரண்டின் விஷயத்தில் யாரெல்லாம் தவறாக நடந்து கொண்டார்களோ அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்விடத்தில் வாதாடி அவர்களை நரக நெருப்பில் தள்ளாமல் விடாது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
فَأَكُونُ أَنَا وَأُمَّتِي أَوَّلَ مَنْ يُجِيزُهَا
நரகத்தின் பாலத்தின் மீது அமைக்கப்பட்ட கூடிய அந்தப் பாலத்தை நானும் என்னுடைய உம்மத்தும் தான் முதலாவதாக கடப்போம் என்பதாக.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7437.
நபிமார்கள் எல்லாம் யா அல்லாஹ்! பாதுகாப்பாயாக, பாதுகாப்பாயாக என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.
மேலும், பல விஷயங்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த பாலத்தை குறித்து சொல்லியிருக்கின்றார்கள்.
அந்த நாளை பயந்து அல்லாஹ்விடத்தில் நாம் துஆ செய்ய வேண்டும். அதிகமாக அமல்கள் செய்ய வேண்டும். பாவங்களை நம்முடைய வாழ்க்கையில் குறைத்து அதை விட்டு விலகி எவ்வளவு தூய்மையாக தவ்பா செய்ய முடியுமோ அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் ஏதாவது தெரியாமல் தவறுகள் குற்றங்கள் நிகழ்ந்து விட்டால் நாம் உடனே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பாவத்தின் நிலையிலேயே நாம் தொடர்ந்து விடக்கூடாது.
காரணம், நாம் சுதாரிப்பதற்கு முன்பாக நாம் தவ்பா கேட்பதற்கு முன்பாக நமக்கு மரணம் வந்துவிட்டால் நம்முடைய நிலைமை எப்படி இருக்கும்? என்று யோசித்துப் பாருங்கள்.
எனவே ஹக் உடையவர்களிடம் அந்தக் ஹக்கை கொடுத்து விடுவோம். நம்மால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்போம். யாருடைய ஹக்கிலாவது நாம் தவறாக நடந்து கொண்டால் அந்த ஹக்கை அல்லாஹ்வை பயந்து அடியார்களுடைய ஹக்குகளை நிறைவேற்றி ரத்த உறவுகளை பேணிவாழ்வோமாக!
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் அந்த பாலத்தை மிகவும் எளிதாக கடக்கக் கூடியதாக ஆக்குவானாக!
நரக நெருப்பிலிருந்தும் அந்த பாலத்தின் ஆபத்துகளிலிருந்தும் எங்களையும் உங்களையும் பெற்றோரையும் குடும்பத்தாரையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الطَّالْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، وَعَلِيُّ بْنُ إِسْحَاقَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَنْبَسَةَ بْنِ سَعِيدٍ [ص:350]، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: أَتَدْرِي مَا سِعَةُ جَهَنَّمَ؟ قُلْتُ: لَا، قَالَ: أَجَلْ، وَاللَّهِ مَا تَدْرِي، إِنَّ بَيْنَ شَحْمَةِ أُذُنِ أَحَدِهِمْ وَبَيْنَ عَاتِقِهِ مَسِيرَةَ سَبْعِينَ خَرِيفًا، تَجْرِي فِيهَا أَوْدِيَةُ الْقَيْحِ وَالدَّمِ، قُلْتُ: أَنْهَارًا؟ قَالَ: لَا، بَلْ أَوْدِيَةً، ثُمَّ قَالَ: أَتَدْرُونَ مَا سِعَةُ جَهَنَّمَ؟ قُلْتُ: لَا، قَالَ: أَجَلْ، وَاللَّهِ مَا نَدْرِي، حَدَّثَتْنِي عَائِشَةُ أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ: {وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ} [الزمر: 67] فَأَيْنَ النَّاسُ يَوْمَئِذٍ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «هُمْ عَلَى جِسْرِ جَهَنَّمَ» (مسند أحمد- 24856)
குறிப்பு 2)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفِ بْنِ خَلِيفَةَ الْبَجَلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا أَبُو مَالِكٍ الْأَشْجَعِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبُو مَالِكٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:187]: " يَجْمَعُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى النَّاسَ، فَيَقُومُ الْمُؤْمِنُونَ حَتَّى تُزْلَفَ لَهُمُ الْجَنَّةُ، فَيَأْتُونَ آدَمَ، فَيَقُولُونَ: يَا أَبَانَا، اسْتَفْتِحْ لَنَا الْجَنَّةَ، فَيَقُولُ: وَهَلْ أَخْرَجَكُمْ مِنَ الْجَنَّةِ إِلَّا خَطِيئَةُ أَبِيكُمْ آدَمَ، لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ، اذْهَبُوا إِلَى ابْنِي إِبْرَاهِيمَ خَلِيلِ اللهِ "، قَالَ: " فَيَقُولُ إِبْرَاهِيمُ: لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ، إِنَّمَا كُنْتُ خَلِيلًا مِنْ وَرَاءَ وَرَاءَ، اعْمِدُوا إِلَى مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَلَّمَهُ اللهُ تَكْلِيمًا، فَيَأْتُونَ مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُولُ: لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ، اذْهَبُوا إِلَى عِيسَى كَلِمَةِ اللهِ وَرُوحِهِ، فَيَقُولُ عِيسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَسْتُ بِصَاحِبِ ذَلِكَ، فَيَأْتُونَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُومُ فَيُؤْذَنُ لَهُ، وَتُرْسَلُ الْأَمَانَةُ وَالرَّحِمُ، فَتَقُومَانِ جَنَبَتَيِ الصِّرَاطِ يَمِينًا وَشِمَالًا، فَيَمُرُّ أَوَّلُكُمْ كَالْبَرْقِ " قَالَ: قُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي أَيُّ شَيْءٍ كَمَرِّ الْبَرْقِ؟ قَالَ: " أَلَمْ تَرَوْا إِلَى الْبَرْقِ كَيْفَ يَمُرُّ وَيَرْجِعُ فِي طَرْفَةِ عَيْنٍ؟ ثُمَّ كَمَرِّ الرِّيحِ، ثُمَّ كَمَرِّ الطَّيْرِ، وَشَدِّ الرِّجَالِ، تَجْرِي بِهِمْ أَعْمَالُهُمْ وَنَبِيُّكُمْ قَائِمٌ عَلَى الصِّرَاطِ يَقُولُ: رَبِّ سَلِّمْ سَلِّمْ، حَتَّى تَعْجِزَ أَعْمَالُ الْعِبَادِ، حَتَّى يَجِيءَ الرَّجُلُ فَلَا يَسْتَطِيعُ السَّيْرَ إِلَّا زَحْفًا "، قَالَ: «وَفِي حَافَتَيِ الصِّرَاطِ كَلَالِيبُ مُعَلَّقَةٌ مَأْمُورَةٌ بِأَخْذِ مَنِ اُمِرَتْ بِهِ، فَمَخْدُوشٌ نَاجٍ، وَمَكْدُوسٌ فِي النَّارِ» وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ إِنَّ قَعْرَ جَهَنَّمَ لَسَبْعُونَ خَرِيفًا (صحيح مسلم - 195)
குறிப்பு 3)
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثَنَا الْمُسَيَّبُ بْنُ زُهَيْرٍ، ثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يُوضَعُ الْمِيزَانُ يَوْمَ الْقِيَامَةِ فَلَوْ وُزِنَ فِيهِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ لَوَسِعَتْ، فَتَقُولُ الْمَلَائِكَةُ: يَا رَبِّ لِمَنْ يَزِنُ هَذَا؟ فَيَقُولُ اللَّهُ تَعَالَى: لِمَنْ شِئْتُ مِنْ خَلْقِي، فَتَقُولُ الْمَلَائِكَةُ: سُبْحَانَكَ مَا عَبَدْنَاكَ حَقَّ عِبَادَتِكَ، وَيُوضَعُ الصِّرَاطُ مِثْلَ حَدَّ الْمُوسَى فَتَقُولُ الْمَلَائِكَةُ: مَنْ تُجِيزُ عَلَى هَذَا؟ فَيَقُولُ: مَنْ شِئْتَ مِنْ خَلْقِي، فَيَقُولُ: سُبْحَانَكَ مَا عَبَدْنَاكَ حَقَّ عِبَادَتِكَ «هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخْرِجَاهُ» (المستدرك على الصحيحين للحاكم- 8739)
குறிப்பு 4)
حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، كِلَاهُمَا عَنْ رَوْحٍ، قَالَ عُبَيْدُ اللهِ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ الْقَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يُسْأَلُ عَنِ الْوُرُودِ، فَقَالَ: نَجِيءُ نَحْنُ يَوْمَ الْقِيَامَةِ عَنْ كَذَا وَكَذَا، انْظُرْ أَيْ ذَلِكَ فَوْقَ النَّاسِ؟ قَالَ: فَتُدْعَى الْأُمَمُ بِأَوْثَانِهَا، وَمَا كَانَتْ تَعْبُدُ، الْأَوَّلُ فَالْأَوَّلُ، ثُمَّ يَأْتِينَا رَبُّنَا بَعْدَ ذَلِكَ، فَيَقُولُ: مَنْ تَنْظُرُونَ؟ فَيَقُولُونَ: نَنْظُرُ رَبَّنَا، فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: حَتَّى نَنْظُرَ إِلَيْكَ، فَيَتَجَلَّى لَهُمْ يَضْحَكُ، قَالَ: فَيَنْطَلِقُ بِهِمْ وَيَتَّبِعُونَهُ، وَيُعْطَى كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ مُنَافِقًا، أَوْ مُؤْمِنًا نُورًا، ثُمَّ يَتَّبِعُونَهُ وَعَلَى جِسْرِ جَهَنَّمَ كَلَالِيبُ وَحَسَكٌ، تَأْخُذُ مَنْ شَاءَ اللهُ، ثُمَّ يُطْفَأُ نُورُ الْمُنَافِقِينَ، ثُمَّ يَنْجُو الْمُؤْمِنُونَ، فَتَنْجُو أَوَّلُ زُمْرَةٍ وُجُوهُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ سَبْعُونَ أَلْفًا لَا يُحَاسَبُونَ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ كَأَضْوَأِ نَجْمٍ فِي السَّمَاءِ، ثُمَّ كَذَلِكَ ثُمَّ تَحِلُّ الشَّفَاعَةُ، وَيَشْفَعُونَ حَتَّى يَخْرُجَ مِنَ النَّارِ مِنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً، فَيُجْعَلُونَ بِفِنَاءِ الْجَنَّةِ، وَيَجْعَلُ أَهْلُ الْجَنَّةِ يَرُشُّونَ عَلَيْهِمُ الْمَاءَ حَتَّى يَنْبُتُوا نَبَاتَ الشَّيْءِ فِي السَّيْلِ، وَيَذْهَبُ حُرَاقُهُ، ثُمَّ يَسْأَلُ حَتَّى تُجْعَلَ لَهُ الدُّنْيَا وَعَشَرَةُ أَمْثَالِهَا مَعَهَا "(صحيح مسلم-191)
குறிப்பு 5)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ الدَّارِمِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا، يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ، إِلَّا مَنْ أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ، إِلَّا مَنْ كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي، فَتَنْفَعُونِي، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ، يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا، فَلْيَحْمَدِ اللهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» قَالَ سَعِيدٌ: كَانَ أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ، إِذَا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ، جَثَا عَلَى رُكْبَتَيْهِ. (صحيح مسلم- 2577)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/