HOME      Khutba      உணர்வுகளை மதிப்போம்! | Tamil Bayan - 458   
 

உணர்வுகளை மதிப்போம்! | Tamil Bayan - 458

           

உணர்வுகளை மதிப்போம்! | Tamil Bayan - 458


உணர்வுகளை மதிப்போம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உணர்வுகளை மதிப்போம்!
 
வரிசை : 458
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 24-03-2017 | 25-06-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் பயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பேணி வாழும்படியும் அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பாதுகாக்கும் படியும் எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமது பாவங்களை மன்னித்து நம்மையும் அவனுடைய நல்லடியார்களுடன் சேர்த்து அருள்புரிவானாக!
 
அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கக் கூடியவர்களாகவும் அவனுடைய நபியின் சுன்னாவை பேணக்கூடியவர்களாகவும் என்னையும் உங்களையும் அல்லாஹு தஆலா ஆக்கியருள்வானாக ஆமீன்!
 
இன்றைய ஜும்ஆவின் தலைப்பு, நமக்கு மத்தியில் நம்முடைய பழக்க வழக்கங்களில் நாம் ஒருவர் மற்றவரோடு எப்படி நடந்து கொள்கிறோம்? அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மிக முக்கியமான ஒரு அம்சம் நம்முடைய குணங்கள். 
 
வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ்வுடைய தீனில் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, இன்னும் கொள்கைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு சமமாக நமது நற்பண்புகளுக்கு நமது நல்லொழுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அனைத்தையும்  ஒரே தராசில் வைத்துப் பார்க்கிறான். அந்த முக்கியமான பண்புகளில் ஒன்று என்னவென்றால், பிறருடைய உணர்வுகளை மதிப்பது. பிறருடைய உள்ளங்களை காயப்படுத்தாமல் இருப்பது. பிறருடைய உணர்வுகளை உள்ளங்களை காயப்படுத்தாமல் இருப்பது.
 
நம்முடைய செயல் நம்முடைய பேச்சு, ஏன் நம்முடைய பார்வை கூட, பிறருடைய மனதை காயப்படுத்தி விடக்கூடாது. நம்முடைய ஒரு சொல் பிறருடைய மனதை பாதித்து விடக்கூடாது. அந்த அளவிற்கு நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலாவும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இதனை பல வரலாற்று சம்பவங்கள் மூலமாகவும் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
 
இன்று, நமது சமூகத்தில், பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, பிறருடைய உள்ளம் காயப்படாத அளவிற்கு நாம் நமது விஷயங்களை எடுத்துச் சொல்வது, நன்மையை ஏவுவதாக இருந்தாலும் தீமையை தடுப்பதாக இருந்தாலும், நாம் சொல்லக்கூடிய விஷயங்களை எவ்வாறு அழகிய முறையில் சொல்வது? பிறருடைய உள்ளத்தை காயப்படுத்தாமல் உண்மையை எப்படி வெளிப்படுத்துவது? பிறருடைய உள்ளங்கள் உடைந்து விடாமல் எப்படி பேணுவது? என்பதற்கு அல்லாஹு தஆலா நிறைய சான்றுகளை கொடுத்திருக்கிறான்.
 
ஆனால், நம்மில் பல பேருக்கு, இப்படியும் ஒரு அம்சம் நற்பண்பில் இருக்கிறதா?  என்பதைப் பற்றி அறியாமல் உள்ளனர்.
 
சிலர், பேச ஆரம்பித்தால் வாளெடுத்து கத்திச் சண்டை போடுவது போல் இருக்கும். எப்படி கத்திச்சண்டை செய்தால் உடலில் காயம் ஏற்படுமோ அதுபோன்று சிலருடைய பேச்சினால் பிறருடைய உள்ளம் தொடர்ந்து உடைந்து கொண்டே இருக்கும். 
 
சிலர், தாய் தந்தையோடு பேசும்பொழுது, சிலர், மனைவியோடு பேசும்பொழுது, சிலர், தங்கள் பிள்ளைகளோடு பேசும்பொழுது, சிலர், தங்கள் பணியாளர்களோடு, சிலர், நண்பர்களோடு பேசும் பொழுது, இப்படி யாரோடு பேசினாலும் உள்ளத்தை உடைப்பது, காயப்படுத்துவது, பிறரைக் கேவலமாகவோ இழிவாகவோ மட்டம் தட்டியோ பேசுவது என்பதை வழமையாக கொண்டுள்ளனர்.
 
இது மிகவும் வெறுக்கத்தக்க குணம் என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வினாலும் தூதர் நபி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலும் மிகவும் வெறுக்கப்பட்ட குணம் என்பதை நாம் புரிய வேண்டும்.
 
நமது மார்க்கமோ நமது இறைத்தூதர்களின் வரலாறுகளோ இப்படியான விஷயத்தை நமக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.
 
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் குணத்தை தான் நமது இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகளும் நற்பண்புகளும் நமக்கு போதிக்கின்றன.
 
சில முக்கியமான நிகழ்வுகளை பார்த்தோமேயானால், குறிப்பாக நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் உடைய வரலாற்றைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும் போதே அதனை வரலாறுகளில் மிக அழகிய வரலாறு என்று கூறுகிறான்.
 
ஆகவேதான், குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அல்குர்ஆன் உடைய விரிவுரை அறிஞர்கள், யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றின் பாடங்களை படிப்பினைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்து முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .
 
அவ்வளவு பாடங்களை அவர்களுடைய வரலாற்றில் அல்லாஹ் வைத்திருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்:
 
لَقَدْ كَانَ فِي يُوسُفَ وَإِخْوَتِهِ آيَاتٌ لِلسَّائِلِينَ
 
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 12 : 7)
 
யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய மிஸ்ருடைய ராஜ்யத்தில் அரசவையில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது, அவர்களுடைய குடும்பத்தார்கள் சகோதரர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள்.
 
இந்த நேரத்தில் தன்னுடைய சகோதரர்கள் தங்களுக்கு செய்த கொடுமைகளை நினைத்து அதனை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்களா?
 
தங்களுடைய சகோதரர்கள் தனக்கு செய்த துரோகங்களை அநியாயங்களை எடுத்துச்சொல்லி அவர்களுடைய உள்ளங்களை புண்படுத்தினார்களா? பழைய விஷயங்களை எல்லாம் எடுத்துக் கூறி அவர்களுடைய மனதை காயப்படுத்தினார்களா?
 
இல்லை. மாறாக, அவர்கள் இப்படி கூறினார்கள்:
 
وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَاأَبَتِ هَذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ وَجَاءَ بِكُمْ مِنَ الْبَدْوِ مِنْ بَعْدِ أَنْ نَزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
 
பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதைச் செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவனாக இருக்கிறான். நிச்சயமாக அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்றார். (அல்குர்ஆன் 12 : 100)
 
அல்லாஹு தஆலா இந்த ஒழுக்கங்களை தான் நமக்குச் சொல்லித் தருகிறான்.
 
அந்த சகோதரர்களைப் பார்த்து யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் சொல்லியிருக்கலாம்; நீங்கள் என்னை கிணற்றில் தள்ளி கொல்லப் பார்த்தீர்கள், அல்லாஹ் என்னை பாதுகாத்தான் என்று.
 
அல்லாஹ்வைப் புகழ வேண்டிய நேரம் புகழவேண்டும், புகழ்ந்தார்கள். 
 
இந்த சம்பவத்தைச் சொல்லியிருந்தால், அந்த இடத்தில் யூசுப் நபியுடைய சகோதரர்கள் சபையில் வெட்கத்தால் தலைகுனிந்து இருப்பார்கள். அவமான பட்டிருப்பார்கள். ஆகையால், அவ்வாறு சொல்லவில்லை.
 
ஒருவேளை அவர்கள் அவ்வாறு சொல்லியிருந்தால் கூட, அது உண்மையான ஒன்றாகத்தான் இருந்திருக்கும். பொய்யான ஒன்று அல்ல. ஆனாலும் கூட அவ்வாறு சொல்லவில்லை.
 
தன்னை கொலை செய்ய வேண்டுமென்று நாடி, அதற்காக முயற்சி செய்த, அதற்காக பல திட்டங்களைத் தீட்டி, அதை செய்து காட்டிய அந்த சகோதரர்களை கூட அவமானப்படுத்தி விடக்கூடாது, அவர்களுடைய உள்ளத்தை காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக  யூசுப் அலைஹிஸ்ஸலாம் தேர்ந்தெடுத்த வார்த்தை அல்லாஹ்விற்கு பிடித்தமாகிவிட்டது. ஆகையால்தான், அதனை அல்லாஹ் அல்குர்ஆனில் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்.
 
வசனத்தின் கருத்து : யூசுஃப் கூறினார்; அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அல்லாஹ் என்மீது பேருபகாரம் செய்தான். என்னை சிறையில் இருந்து வெளியாக்கி இந்த அரச கட்டிலில் அமர வைத்தான்.
 
மேலும் சொல்கிறார்கள், ஒரு தீமை ஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறது. அதை மனிதன் செய்கிறான். பெரும்பாலும் மனிதர்களின் பக்கம் தான் அந்த தீமையை நாம் சேர்ப்போம்.
 
இங்கு தனது சகோதரர்கள் தனக்கு இவ்வளவு பெரிய அநியாயத்தை செய்தார்கள். உலகத்திலேயே மிகவும் ஒரு கொடுமையான காரியத்தை செய்தார்கள். இவர் தனது தந்தைக்கு மிகவும் விருப்பமானவர் என்ற காரணத்தினாலேயே இவரை கொல்ல நினைத்தார்கள். இதைவிட பெரிய அநியாயம் என்ன இருக்க முடியும்? சகோதரத் துரோகம் வேறு என்ன இருக்க முடியும்?
 
அவர் ஏதேனும்  சொத்தை பிடுங்கி கொண்டாரா? அல்லது தனது குடும்பத்தில் தங்களது மானத்தை பறிக்கும் படியான  காரியத்தை  செய்தாரா? வேறு ஏதாவது குற்றம் புரிந்தாரா? இல்லை.
 
ஒழுக்கமானவர் நல்லபண்புடையவர் என்பதால் தந்தையின் பிரியத்திற்கு தகுதி உடையவராக இருக்கிறார். தந்தை இவரை அதிகம் நேசிக்கிறார் என்ற ஒரே காரணத்தினால் அவரை படுகொலை செய்ய நினைக்கிறார்கள்.
 
இது எவ்வளவு பெரிய துரோகமாக இருக்கும்! ஆனால் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த இடத்தில் அவர்களை குத்திக்காட்ட வில்லை. காயப்படுத்த வில்லை.
 
என் சகோதரர்களே! எனக்கும் உங்களுக்கும் இடையில் ஷைத்தான் கெட்ட ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விட்டான். அதனால் நமக்கு மத்தியில் இந்த பிணக்குகள் ஏற்பட்டன. (அல்குர்ஆன்  12 : 100)
 
என்ன அழகான வாக்கியம் பாருங்கள்! இன்று, நம்மில் பலர், நண்பர்களுக்கு மத்தியிலும் சரி, குடும்பத்திலும் சரி, சகோதரர்களுக்கு மத்தியிலும் சரி, நல்லதை கூட தீய பார்வையில் பார்க்கிறார்கள்.
 
இங்கு யூஃசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சகோதரர்கள் செய்த தீமையை கூட, தனது சகோதரர்கள் செய்த அந்த பழிவாங்குதலை கூட சொல்லிக்காட்டவில்லை.
 
நீங்கள் நல்லவர்கள் தான், ஆனால், ஷைத்தான் நமக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஊசலாட்டங்களை ஏற்படுத்தி விட்டான். என்ன அழகான வார்த்தை பாருங்கள்!
 
இப்போது அந்த சகோதரர்களும் கூட, பழைய நிலைமையில் இல்லை. அவர்கள் திருந்தி விட்டார்கள். அதற்காக வருந்துகிறார்கள். 
 
தந்தை, பிரிந்த அந்த மகனுடைய துக்கத்தால் வேதனைப்படுவார் என்று கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
 
அவர்கள் இப்போது ஓர் தாழ்ந்த நிலையில் ஒரு குறைந்த நிலையில் சாதாரண மக்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
 
ஆனால், யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் இப்போது மன்னராக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அவர் நாடியிருந்தால் தனது சகோதரர்களை அவர் எப்படி வேண்டுமானாலும் பழித்துப் பேசியிருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் குத்திக் காட்டி இருக்கலாம், குறை சொல்லி இருக்கலாம். ஒருவேளை அப்படி சொல்லி இருந்தாலும் கூட, அது உண்மையானதாகவே இருந்திருக்கும்.
 
ஆனால், யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்; ஷைத்தான் நமக்கிடையே ஊசலாட்டங்களை ஏற்படுத்தி இவ்வாறு நடந்துவிட்டது என்று கூறி, நீங்கள் எல்லாம் கண்ணியமானவர்களாக பாதுகாப்பு பெற்றவர்களாக எனது ஊருக்குள் வாருங்கள் என்று அழைக்கிறார்கள்.
 
எப்படிப்பட்ட அழகிய பண்பாட்டை யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றின் மூலமாக அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்!
 
இன்று எதற்கெடுத்தாலும் நாம் பிறருடைய உள்ளத்தை காயப்படுத்துகிறோம், பிறரை ஏசுகிறோம், திட்டுகிறோம். பிறருடைய மனதை நோகடிக்கிறோம்.  இதனை இஸ்லாமிய பண்புகளில் எந்த பண்புகளில் கொண்டு போய் சேர்ப்பது? என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்!
 
ஒரு முஸ்லிம் இவ்வாறு இருக்க முடியுமா? அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மிருகத்துடைய உள்ளத்தை கூட காயப்படுத்துவதை விரும்பவில்லை
 
அப்படி என்றால் ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தை காயப்படுத்துவது என்ற செயலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
 
இன்று, சக மனிதனுடைய தவறுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், திருத்தப் படுவதில்லை. இன்று, குற்றங்கள் திருத்தப்படுவதில்லை. ஆனால், பகிரங்கப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப் படுகிறார்கள்.
 
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய பிரச்சாரம் செய்பவர்களாக இருக்கட்டும், அல்லது சீர்திருத்தவாதியாக இருக்கட்டும், அழைப்பாளர்களாக இருக்கட்டும், எழுத்தாளர்களாக இருக்கட்டும்.
 
இன்று, நாம் நன்மையை ஏவுகிறோம் தீமையை தடுக்கிறோம் என்று குடும்பத்தினர் இடையிலேயோ அல்லது மனைவியிடமோ பிள்ளைகளை திருத்துவதற்கோ ஒரு நல்ல வார்த்தை நாம் சொல்வது கிடையாது.
 
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படித்தான் பிள்ளைகளைத் திருத்தினார்களா?
 
ஒருதடவை ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸதகாவுடைய பேரீச்சம் பழத்தை பசியினால் எடுத்து வாயில் வைத்து மென்றுவிட்டார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று அவர்கள் வாயிலிருந்த பேரிச்சம்பழத்தை மெதுவாக வெளியில் எடுத்தார்கள்.
 
பிறகு சொன்னார்கள், 
 
«أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ»
 
மகனே! நீங்கள் நபியுடைய குடும்பத்தார்கள் நமக்கு ஸதகா ஹலால் அல்ல.
 
என்று அன்பாக எடுத்துக்கூறினார்கள். என்ன அழகான போதனை பாருங்கள்!
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1491.
 
இன்று, எதற்கெடுத்தாலும் தரக்குறைவான வார்த்தைகள். கீறிக்கிழித்து தின்னக் கூடிய மிருகங்கள் தாக்குவது போன்று வார்த்தையால் தாக்கப்படுகிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மிருகத்தின் உணர்வைக்கூட மதித்தார்கள் என்றால், நாம் ஒரு மனிதனின் உணர்வை,  ஒரு இறைநம்பிக்கையாளரின் உணர்வை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;
 
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِحَدِّ الشِّفَارِ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ، وَإِذَا ذَبَحَ أَحَدُكُمْ فَلْيُجْهِزْ»
 
நீங்கள் ஒரு பிராணியை அறுப்பதாக இருந்தால் அந்தப் பிராணியின் கண்ணுக்கு எதிராக நீங்கள் கத்தியை தீட்டாதீர்கள் என்று சொன்னார்கள். ஒரு பிராணியை அறுக்கும் பொழுது இன்னொரு பிராணி அதை பார்க்கும்படி அறுக்காதீர்கள்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 5864.
 
கால்நடைகளின் உள்ளத்தை கூட நாம் காயப்படுத்தி விடக்கூடாது. ஏனென்றால், அல்லாஹ் கால்நடைகளை நமக்கு புசிப்பதற்காக கொடுத்து இருக்கிறானே தவிர, அதை வேதனை செய்வதற்கோ துன்புறுத்துவதற்கோ இம்சை செய்வதற்கோ அதை பதஷ்டப்பட வைப்பதற்கோ பயமுறுத்துவதற்கோ நமக்கு அனுமதி அளிக்கவில்லை.
 
எனவேதான், நமக்கு கூறப்பட்டிருக்கிறது; ஓர் கால்நடையை அறுப்பதற்கு முன் மற்ற பிராணியை அதன் கண்ணில் இருந்து மறைத்து விடுங்கள்.
 
ஒரு கால்நடை பார்க்கின்ற நிலையில் இன்னொரு பிராணியை அறுக்கதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 
எந்த அளவு இதயத்தின் உணர்வுகளை அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேணியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
 
«إِذَا كُنْتُمْ ثَلاَثَةً، فَلاَ يَتَنَاجَى رَجُلاَنِ دُونَ الآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ، أَجْلَ أَنْ يُحْزِنَهُ»
 
நீங்கள் ஓரிடத்தில் மூன்று பேராக இருந்தால், ஒருவரை விட்டு இரண்டு பேர் மட்டும் தனியாக ரகசியம் பேச வேண்டாம். நீங்கள் மக்களோடு கலக்கின்ற வரை, மக்கள் அதிகமாகின்ற வரை. நீங்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அவருடைய உள்ளத்தை காயப்படுத்தும். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6290.
 
என்னைப் பற்றி ஏதேனும் பேசுகிறார்களா? என்னுடைய குறையை பற்றி ஏதும் சொல்கிறார்களா? அல்லது எனக்கு எதிராக இவர்கள் ஏதேனும் திட்டம் தீட்டுகிறார்களா? இப்படியாக அவருடைய உள்ளத்திற்கு கவலையை கொடுக்கும்.
 
மூன்று பேர் இருக்கும் இடத்தில் ஒருவர் மற்றவருக்கு தெரிந்தவராக இருக்கலாம், தெரியாதவராக இருக்கலாம், அந்நியராக கூட இருக்கலாம்.
 
எந்த சூழ்நிலையிலும் என்ன தான் நிர்பந்தம் ஏற்பட்டாலும் கூ,ட ஒருவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் தனியாக, அந்த இருவருக்கு மட்டும் கேட்கின்ற நிலையில் தனித்துப் பேச வேண்டாம்.
 
இவ்வாறு நடந்து கொள்வது, அந்த மூன்றாம் நபருக்கு அவருடைய மனதை காயப்படுத்தும், வேதனை அடையச் செய்யும், அவரது உள்ளத்தை கவலைக்குள்ளாக்கிவிடும்.
 
இன்று, அதெல்லாம் சர்வசாதாரணம். இன்று, நமக்கு மத்தியில் பிறருடைய உள்ளம் கவலைப்பட்டால் என்ன? அந்த கவலையிலேயே மூழ்கி செத்தால் என்ன? அதைப்பற்றியெல்லாம் ஒருவரும்  பொருட்படுத்துவதில்லை.
 
அந்தக் காலத்தில் கைதிகளை எந்த அளவு வேதனைப்படுத்தி சித்திரவதை செய்வார்களோ அதுபோன்று, இன்றோ ஒருவர் மற்றவருக்கு உள்ளத்தின் சித்திரவதையை அளிக்கிறார்கள்.
 
அழுது நொந்து நூலாகி, அவன் வேதனைப்பட்டு, என்னை இப்படி சொல்லி விட்டார்களே என்று அவன் மனதிலேயே புழுங்கி, அவன் தனது வாழ்நாளை கழிக்கின்ற வரை இன்று வார்த்தைகளால் மற்றவரை நாம் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மற்றொரு ஹதீஸில் மேலும் ஒரு வழிகாட்டுதலை கூறுகிறார்கள்:
 
«لاَ يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ» «أَنَّهُ نَهَى أَنْ يُقَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ وَيَجْلِسَ فِيهِ آخَرُ، وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا»
 
ஒருவர் சபையில்  அமர்ந்திருக்கும் பொழுது, இன்னொருவர் உள்ளே வருகிறார். ஏற்கனவே அமர்ந்திருந்தவரை எழுப்பி விட்டு இப்போது உள்ளே நுழைந்தவர் அந்த இடத்தில் உட்கார வேண்டாம்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6269, 6270.
 
இப்போது ஒரு சூழ்நிலையை பாருங்கள்! ஒரு வசதியானவரோ அல்லது ஜமாத்தின் தலைவரோ யாரோ ஒருவர் உள்ளே நுழைகிறார். அவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சபையில் ஏற்கனவே உட்கார்ந்து இருப்பவர்களில் ஒரு மனிதரை அவருடைய இடத்திலிருந்து எழுப்பிவிட்டு வந்தவரை உட்கார வைப்பது.
 
இப்படி நீங்கள் செய்யாதீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துவிட்டு கூறினார்கள்; எப்போதும் சபையை விசாலமாக்கி கொள்ளுங்கள்.
 
ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்று பார்த்தோமேயானால், ஏற்கனவே அமர்ந்திருந்த அந்த மனிதரின் உள்ளம் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.
 
என்னை குறைவாக மதித்து என்னை இவ்வாறு எழுப்பி விட்டார்களே! நான் உட்கார்ந்திருந்த இடத்தை என்னைவிட்டு பறித்துக் கொண்டார்களே! என்னை பின்னால் செல்ல சொல்லி விட்டார்களே!
 
இவ்வாறாக, அவருடைய உள்ளம் வேதனைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடந்து கொள்வதை தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தடுத்தார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகிறார்கள்,
 
ஒருவர் ஒரு இடத்தில் உட்கார்ந்து, பின்னர் ஒளுவுடைய தேவைக்காகவோ அல்லது வேறு தேவைக்காகவோ எழுந்து செல்கிறார். இப்பொழுது, இன்னொருவர் அந்த இடத்திற்கு வந்து அந்த இடத்தை பூர்த்தி செய்து உட்கார்ந்து கொள்கிறார்.
 
இப்பொழுது முந்திச் சென்றவர், திரும்பி வருவதைப் பார்த்து விட்டால், இரண்டாவதாக உட்கார்ந்தவர் அந்த இடத்தை  காலி செய்து முதலாமவருக்கு கொடுத்துவிட வேண்டும். முந்தி வந்தவர் தான் அந்த இடத்திற்கு உரிமையாளர்.
 
நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 7124.
 
இதெல்லாம் எதற்காக கூறப்படுகிறது என்றால், நம்முடைய செயல்கள் பிறரை காயப்படுத்தி விடக்கூடாது. என்றுமே நாம் பிறரை மதிப்பவராக இருக்கவேண்டும். மூஃமினுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் பிறருடைய எண்ணங்களுக்கு உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا»
 
நம்முடைய பெரியவர்களை மதிக்காதவர்கள் சிறியவர்களுக்கு இறக்கம் காட்டாதவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்ல.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1919.
 
இன்னொரு அறிவிப்பில், நம்முடைய பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவர்கள் அவருக்குரிய மரியாதையை தராதவர்கள் நம்மை சேர்ந்தவர்களே அல்ல என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 
நூல் : முஸ்னத் அஹ்மது, எண் : 22755.
 
வயதில் மூத்தவர்கள், ஓரு சமுதாய தலைவர்கள், ஓரு முக்கியஸ்தர்கள் என்றால் அவருக்குரிய மரியாதையை கொடுக்கும்படி அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَإِذَا أَتَاهُ كَرِيمُ قَوْمٍ فَلْيُكْرِمْهُ»
 
அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய சமுதாயத்தில் கண்ணியமாக மதிக்கப்படுபவர்களை  நீங்களும் கண்ணியப்படுத்துங்கள். (1)
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 7791.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் நாடியிருந்தால், அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அந்த மதீனாவின் நிலைமைகளையே முற்றிலுமாக மாற்றி இருக்கலாம்.
 
அங்கே கபீலாக்கள் இருந்தன, கோத்திரங்கள் இருந்தன, அங்கே குடும்பங்கள் இருந்தன. இஸ்லாமிய மார்க்கம் கோத்திரத்தால் ஏற்றத்தாழ்வு காட்டுவதை அடியோடு நிராகரித்து விட்டது. குலப் பெருமை கொள்வதை அடியோடு இஸ்லாம் மறுத்துவிட்டது.
 
ஆனால், ஒவ்வொரு குலத்திற்கும் என்ன கண்ணியமோ, அந்த குலத்தின் தலைவர்களுக்கு என்ன மதிப்போ, அதை அல்லாஹ்வும் வழங்கினான்; அல்லாஹ்வுடைய தூதரும் வழங்கினார்கள்.
 
இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குலத்தால் ஏற்றத்தாழ்வு காட்டுவது குலத்தால் பாகுபாடு காட்டி ஒருவரை உயர்ந்தவராகவும் ஒருவரை தாழ்ந்தவராகவும் பார்ப்பதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. ஆனால், அவரவருக்குரிய கண்ணியத்தை இஸ்லாம் கொடுக்கச் சொல்கிறது
 
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். அப்பொழுது அவர்கள் தான் முஸ்லிம்கள் அனைவருக்கும் தலைவர்.
 
அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்ன செய்தார்கள்? அங்கே நபி அவர்கள் வருவதற்கு முன்பு, ஒவ்வொரு குடும்பத்திற்கும்  ஒரு பொறுப்பாளர் ஒரு தலைவர் இருப்பார். இங்கே எப்படி ஜமாத்துக்கு ஒரு தலைவர் இருப்பாரோ அதுபோன்று.
 
தங்களுக்கு எந்தவித குழப்பங்களாக இருந்தாலும் அந்த தலைவர்களிடம் சென்றுதான் பிரச்சினையை பேசி முடிப்பார்கள்.
 
இப்பொழுதும் மதீனாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் வந்துவிட்டார்கள் நபியவர்கள் ஒரு அழகிய பண்பாட்டை சொன்னார்கள்.
 
உங்களுடைய பிரச்சனைகளை உங்களுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய பிணக்குகளை உங்களுடைய குடும்பத்தலைவரிடத்தில் சொல்லுங்கள். அவர் எனக்கு அதை சொல்லுவார்.
 
எவ்வளவு அழகான ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் பாருங்கள்! இதோ நான் வந்துவிட்டேன், என்னைத்தவிர யாரிடத்திலும் நீங்கள் பேசக் கூடாது, எதுவாக இருந்தாலும் நேரடியாக என்னிடத்தில் தான் வரவேண்டும். அப்படியா கட்டளை போட்டார்கள்? இல்லை.
 
அந்த சமுதாய தலைவர்களுக்கு நபியவர்கள் வருவதற்கு முன்பு என்ன கண்ணியம் கொடுக்கப்பட்டதோ அந்த கண்ணியத்தை தான் வந்த பிறகும் அப்படியே அந்த தலைவர்களுக்கு கொடுக்கும்படி செய்தார்கள்.
 
இப்படி அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய ஒரு நடைமுறையை கையாண்டார்கள்.
 
நபியவர்களுடைய ஒவ்வொரு அணுகுமுறையும் அவர்களுடைய பழக்கவழக்கங்களும் பிறருடைய உள்ளத்தை மதிப்பதாக இருக்கும். பிறருடைய உணர்வுகளை மதிப்பதாக இருக்கும்.
 
«كَانَ يَقْبَلُ الْهَدِيَّةَ، وَلَا يَقْبَلُ الصَّدَقَةَ»
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பழக்கங்களில் ஒன்று, அன்பளிப்பை ஏற்றுக்கொள்வது.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 3838, 8714.
 
அன்பளிப்பை ஏற்றுக் கொள்வது என்பது, அந்த அன்பளிப்பை கொடுப்பவருடைய உணர்வை மதிப்பது ஆகும்.
 
உங்களுக்கு கண்டிப்பாக அந்த அன்பளிப்பு தேவையில்லாமல் கூட இருக்கலாம். உங்களுக்கு அதை விட சிறந்ததை அல்லாஹ் கொடுத்திருக்கலாம். அதை விடவும் உயரிய பல பொருள்கள் உங்களிடத்தில் இருந்தாலும் கூட, உங்களை நேசித்தவராக ஒருவர் அன்பளிப்பை கொண்டு வரும்பொழுது அந்த அன்பளிப்பை அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குத் தேவையுள்ளதைப் போன்று பெறுவார்கள். (2)
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1277.
 
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
 
«لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لَأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَيَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ»
 
ஒரு ஆட்டுக்கால் சமைக்கப்பட்டு அந்த விருந்துக்கு நான் அழைக்கப்பட்டாலும் பதிலளிப்பேன். ஒருவேளை அது எனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டாலும் அதையும் நான் ஏற்றுக் கொள்வேன்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2568.
 
பிறருடைய உள்ளத்தை மதித்ததால், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி செய்தார்கள்.
 
أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِمَارًا وَحْشِيًّا وَهُوَ بِالأَبْوَاءِ، أَوْ بِوَدَّانَ، فَرَدَّ عَلَيْهِ، فَلَمَّا رَأَى مَا فِي وَجْهِهِ، قَالَ: «أَمَا إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلَّا أَنَّا حُرُمٌ»
 
ஒருசமயம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஹ்ராமிலிருந்த போது ஓர் சஹாபி வேட்டைப் பிராணியை வேட்டையாடி சமைத்துக் கொண்டு வருகிறார்.
 
அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் இஹ்ராமில் இருக்கிறார்கள். இஹ்ராமில் இருக்கும்பொழுது தானும் வேட்டையாடக் கூடாது. தனக்காக வேட்டையாடப்பட்டதை சாப்பிடவும் கூடாது.
 
இந்த நிலையில் தனக்காக சமைத்து கொண்டுவரப்பட்ட வேட்டை மாமிசத்தை மறுப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே, அதை மறுத்துவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
 
சகோதரரே! இந்த வேட்டைப் பிராணியை இப்பொழுது உங்களிடமிருந்து நான் வாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால், நான் இஹ்ராமில் இருக்கும்பொழுது அதை புசிக்க முடியாது .
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1825, 2573. முஸ்னது அஹ்மது, எண்: 16423.
 
ஒரு விஷயத்தை நீங்கள் மறுப்பதாக இருந்தாலும் கூட, அதற்குரிய அழகிய காரணத்தை அதற்குரிய அழகிய விளக்கத்தை எடுத்துச் சொல்லி, பிறருடைய உள்ளம் காயப்படாமல் காரணத்தை புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் அங்கே ஏற்படும்படி கூறவேண்டும்.
 
நான் எதற்கு காரணம் சொல்ல வேண்டும்? எனக்கு என்ன தேவை இருக்கிறது? உனக்கெல்லாம் விளக்கம் கொடுப்பதற்கு? என்ற பெருமை இருக்க கூடாது.
 
உங்கள் மனைவியிடமோ பிள்ளைகளிடமோ  தந்தையிடமோ யாரிடத்தில் பேசினாலும் சரி, நீங்கள் ஒன்றை மறுக்கும் பொழுது கடுகடுப்பான முகத்தோடு காட்டமான குரலிலும் மறுக்கும் பொழுது அவர்களுக்கு மன வேதனை ஏற்படும்.
 
அதற்கு மாறாக நாம் அழகிய வார்த்தைகளைக் கொண்டு மறுக்கும் பொழுது, அவர்களுடைய உள்ளம் காயப்படாது. அப்படி இல்லாமல் தனக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தினால் சரியான விளக்கத்தை சொல்லாமல் கடுகடுப்பான வார்த்தைகளின் மூலமாகவோ, முரட்டுத்தனமாகவோ மறுப்பதன் மூலமாக சம்பந்தப்பட்டவரின் உள்ளங்கள் காயப்பட்டு விடலாம்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஒரு நிகழ்வு நடந்தது.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னை ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய திருமணத்திற்காக வலீமா ஏற்பாடு செய்து விருந்து கொடுத்தார்கள். வலீமா சாப்பிட வந்தவர்கள் விருந்தும் சாப்பிட்டு விட்டு தங்களுடைய பேச்சில் மூழ்கி விட்டார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஜைனப்  ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. நபியவர்களுடைய இருப்பிடமோ ஒரு சிறிய இடம். அதில் ஒரு திரை போட முடியும் அவ்வளவுதான். பெரிய அறைகள் கிடையாது .
 
விருந்துக்கு வந்தவர்கள் அப்படியே உட்கார்ந்து விட்டதால் தன்னுடைய மனைவியை எப்படி சந்திப்பது? என்று யோசித்தார்கள்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா வானத்திலிருந்து வசனத்தை இறக்கி விட்டான்.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا
 
நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்களுடைய நபி விருந்துக்காக அழைத்திருந்தபோதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள். அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப் பட்டால்தான் உள்ளே செல்லவும். தவிர, நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளிப்பட்டு விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமானதன்று. அன்றி, அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும். (அல்குர்ஆன் 33 : 53)
 
பிறகு, இது எல்லா முஃமின்களுக்கும் பொதுவான சட்டமாக ஆகியது. எனவேதான், நாம் விருந்துக்காக ஒரு வீட்டிற்கு சென்றால் விருந்து முடிந்தவுடன் கண்ணியமாக அந்த வீட்டை விட்டு நாம் விரைவாக வெளியேறி விடவேண்டும். அந்த வீட்டை சார்ந்தவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக.
 
அந்த விருந்து வீட்டிலேயே இருந்து கொண்டு நீண்ட நேரம் பேசி அந்த வீட்டை சார்ந்த ஆண்களுக்கோ பெண்களுக்கு மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட வேண்டும்.
 
ஏனென்றால், நாம் அவ்வாறு நடந்து கொள்வது, அந்த வீட்டை சார்ந்தவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
 
அந்த விருந்து வீட்டை சார்ந்தவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் இடையூறாக விருந்தினர்கள் அங்கு நீண்ட நேரம் இருக்கும்போது, அவர்களால் வெளியே சொல்ல முடியாமல் மனவேதனை அடையலாம். அவருடைய உணர்வுகள் பாதிக்கப்படலாம். எனவே அவ்வாறு செய்யாதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுறுத்தினார்கள்.
 
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ، وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ»
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விருந்தோம்பலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, விருந்து உபசாரம் செய்வது ஈமானுடைய குணம் என்று சொன்னார்களோ அதேநேரத்தில், ஒருநாள் தங்குங்கள். 
 
ஒரு நாள் தங்குவதற்கு உணவளிப்பது மிகவும் சிறந்தது. இரண்டாவது நாள் மூன்றாவது நாள் ஸதகா என்று சொல்லிவிட்டு, மூன்று நாட்களுக்கு மேல் விருந்தாளியாக தங்க வேண்டாம். காரணம், அது விருந்து கொடுப்பவருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஷுரைஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6135.
 
இவ்வாறாக அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உள்ளங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள்.
 
ஒருசமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மஸ்ஜிதில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
தன் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அங்கே ஒரு கிராமத்து மனிதர் வருகிறார். வந்தவருக்கு அவசரத்தேவை. எனவே, மஸ்ஜிதின் ஓரத்தில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்துவிட்டார். இங்கே உரை கேட்டுக்கொண்டிருந்த தோழர்கள் எல்லாம் அந்த மனிதரை பாதியிலேயே நிறுத்துவதற்கு சப்தத்தோடு எழுந்து விட்டார்கள்.
 
ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்: நிறுத்தாதீர்கள்! நிறுத்தாதீர்கள்.
 
அவர் பக்கம் திரும்பிப் பார்ப்பதில் இருந்து கூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களை தடுத்து விட்டார்கள்.
 
அந்த மனிதரோ தன்னுடைய தேவையை முடித்தார். அதற்கு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். பிறகு அந்த மனிதரை உட்காரச் சொல்லிவிட்டு அங்கு அமர்ந்திருந்த தனது தோழர்கள் சிலரை நோக்கி சொன்னார்கள்;
 
(அந்த தோழர்களில் அபூபக்ர் இருந்திருக்கலாம், உமர் இருந்திருக்கலாம், உஸ்மான் இருந்திருக்கலாம்)
 
அந்த அசுத்தம் ஏற்பட்ட இடத்தில் இருந்த மண்ணை எடுத்து தூக்கி போட்டு விட்டு அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றுங்கள். நபியுடைய தோழர்களும் அதை செய்தார்கள். 
 
நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லி இருப்போம்? நீ அசுத்தம் செய்த இடத்தை நீயே சுத்தம் செய் என்று.
 
ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி செய்யவில்லை.
 
ஏனென்றால்,  அப்படி செய்தால் அது அவரை கேவலப்படுத்துவதாக, குறைவாக நடத்துவதாக ஆகிவிடும்.
 
ஆகவேதான், அந்த மனிதரை அமரச் சொன்னார்கள். பிறகு தனது தோழர்களை நோக்கி அந்த இடத்தை சுத்தம் செய்ய சொன்னார்கள்.
 
ஸஹாபாக்களும் உடனே சென்று அந்த மனிதர் சிறுநீர் கழித்த இடத்தில் உள்ள மண்ணை எடுத்து அப்புறப்படுத்திவிட்டு தண்ணீரை எடுத்து சுத்தம் செய்கிறார்கள்.
 
நபியோ, அசுத்தம் செய்த மனிதரை எந்தத் தவறுமே செய்யாத மனிதரைப் போல் தனது அருகில் அமர்த்தி அவருக்கு பின்வருமாறு அறிவுரை செய்தார்கள்;
 
«إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ»
 
தோழரே! மஸ்ஜிதுகளில் சிறுநீர் கழிப்பதோ அசுத்தம் செய்வதோ கூடாது. மஸ்ஜித் என்பது அல்லாஹ்வுடைய வீடு.
 
அது, அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக உள்ளவை. இன்னும் தொழுவதற்காக குர்ஆன் ஓதுவதற்காக உள்ளவை.
 
மஸ்ஜிதுகளில் சிறுநீர் கழிப்பது, அசுத்தம் செய்வது நல்லதல்ல என்று அந்த தோழருக்கு அறிவுரை செய்தார்கள். (3) 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 285.
 
கண்டிக்க வேண்டிய வேகமாக பேச வேண்டிய இடமாக இருந்தாலும் கூட, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எப்படிப் பேசினார்கள் என்று கவனிக்க வேண்டும்.
 
ஒருவேளை அந்த மனிதரை  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அதட்டி இருந்தாலும் கூட, அந்த அதட்டலுக்கு அவர் தகுதியானவர். அவரை ஏசி இருந்தால் அந்த ஏச்சுக்கு அவர் தகுதியானவர் தான்.
 
ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அந்த மனிதருடைய நிலைமையை பார்த்தார்கள். அந்த மனிதர் யார்? என்று பார்த்தார்கள். அவர் அறியாத புதிய மனிதராக இருக்கிறார். முதலாவதாக மதினாவிற்கு வருகிறார். முதலாவதாக சபைக்கு வருகிறார்.
 
எனவே, இப்போது அவர் செய்திருக்கின்ற செயல் பெரிய தவறான செயலாக இருந்தாலும் கூட, எப்படிப்பட்ட தவறு என்று பார்த்தோமேயானால் முதலாவதாக மக்கள் பார்க்கின்ற நிலையில் அவர்களுக்கு முன்பாக சிறுநீர் கழிப்பது ஒரு தவறு.
 
இரண்டாவதாக, மஸ்ஜிதில் சிறுநீர் கழிப்பது, அது மிகவும் முன்னதை விடவும் பயங்கரமான தவறு.
 
இப்படியாக தவறுக்கு மேல் தவறு அவர் செய்திருந்தாலும் கூட, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நேரத்தில் அவர் புதியவர், அறியாதவர், சட்டம் தெரியாதவர், முதன் முதலாக மஸ்ஜிதுந் நபவிக்கு வருகிறார்.
 
எனவே, அவருடைய உணர்வை மதித்து அவரை சுத்தம் செய்ய சொல்லவில்லை. அசுத்தத்தை அவர் செய்து கொண்டிருந்த நிலையில் அவரை தடுக்க கூட இல்லை. அவருடைய தேவையை அவராக முடிக்கும் வரை விட்டு விட்டார்கள். அதன்பிறகு அவருக்கு அன்பாக அறிவுரை சொல்கிறார்கள் .
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இன்னொரு ஒழுக்கத்தை பார்க்கிறோம்.
 
நோய்வாய்ப்பட்டவர்கள் உதாரணமாக, குஷ்டரோகிகள் வெண்குஷ்டவாதிகள் இதுபோன்று இன்னும் கடுமையான நோய்க்கு ஆளானவர்கள்.
 
இவர்களை நீங்கள் கடந்து செல்லும் பொழுது, அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே செல்லாதீர்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு அறிவுரை சொல்கிறார்கள். ஏனென்றால், அவ்வாறு நாம் செய்வது அந்த நோயாளி உடைய மனதை காயப்படுத்தும்.
 
தான் இப்படிப்பட்ட நோயில் அவதிப்படுவதை நினைத்து அவர் வருத்தமடைவார். இன்னும் மக்கள் வெறுக்கும் படியான ஒரு நோய்க்கு, ஒரு குறைக்கு, உடல் பலவீனத்திற்கு ஆளாகி விட்டோமே என்று தன்னைத்தானே அவர் கேவலமாக, குறையாக எண்ண ஆரம்பித்துவிடுவார்.
 
«لَا تُدِيمُوا النَّظَرَ إِلَى الْمَجْذُومِينَ»
 
அப்படிப்பட்டவர்களை பார்க்கும் போது, கூர்ந்து அவர்களைப் பார்க்காதீர்கள். மாறாக, அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக நீங்கள் அவர்களை கடந்து செல்லுங்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 3543.
 
மேலும், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சிரமத்தில் சிக்கியவரை சந்திக்கும் போது கூறவேண்டிய அழகிய துஆவை நமக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
 
الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
 
உன்னை அல்லாஹ் சோதித்ததில் இருந்து எனக்கு ஆஃபியத்தைக் கொடுத்தான். அவனுடைய படைப்புகளில் ஏராளமான படைப்புகளை பார்க்கிலும் அல்லாஹ் என்னை சிறப்பாக்கி வைத்தான். (4)
 
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3431, 3432.
 
இப்படியாக நீங்கள் உங்களுடைய உள்ளங்களில் துஆக்களை ஓதிக் கொண்டு அந்த இடத்தை விட்டு கடந்து செல்லுங்கள்.
 
இப்படி, நோய்வாய்ப்பட்ட மனிதருடைய உள்ளம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது, அவர் மனசஞ்சலம் பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக.
 
அவருடைய உள்ளத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியான அழகான வழிகாட்டுதலை நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு காட்டிச் சென்றிருக்கிறார்கள்.
 
அதுபோன்றுதான், குறிப்பாக குழந்தைகளுடைய விஷயத்தில் அவர்களுடைய உள்ளங்கள் காயப்படுத்தாமல் நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இன்று, இந்த விஷயம் எத்தனையோ தந்தைமார்களுக்கு புரிவதில்லை. தங்களுடைய வேலைப்பளு, தொழில் சூழ்நிலைகள், பொருளாதார நெருக்கடிகள், இவற்றையெல்லாம் கொட்டுவதற்கு வடிகாலாக தங்களது குடும்பத்தை ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
 
சிலர், மனைவியை ஆக்கி வைத்திருக்கிறார்கள். சிலர், பிள்ளைகளை ஆக்கி வைத்திருக்கிறார்கள். 
 
இன்னும் சில இடங்களில் பார்த்தால் விருப்பத்தையெல்லாம் வெளியில் காட்டிவிட்டு வெறுப்பை காட்டுவதற்கு என்றே தங்கள் மனைவிகளை வைத்திருக்கிறார்கள்.
 
நட்பை எல்லாம் வெளியில் காட்டுவதற்காகவும் கோபத்தை எல்லாம் தன் பிள்ளைகளிடம் காட்டுவதற்காகவும் வைத்திருக்கிறார்கள்.
 
இப்படி, ஒருவரின் குடும்ப சூழ்நிலை இருக்குமானால் வாழ்க்கையில் இதை விட துர்ப்பாக்கியமான நிலைமை வேறு ஒன்றும் இருக்காது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்ப பழக்க வழக்கத்தைப் பாருங்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் அவர்கள் தொழுகையில் ஸுஜூதில் இருந்தார்கள். நபி அவர்களுடைய பேரக்குழந்தை அவர்களுடைய முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டது.
 
ஏற்கனவே, தூதர் அவர்களின் சுஜூத் கொஞ்சம் நீளமாகத் தான் இருக்கும். இப்பொழுதோ ரொம்ப ரொம்ப நீளமாக இருக்கிறது.
 
கடைசி வரிசையில் தொழுது கொண்டிருந்த தோழர்கள் சிலர் தூதர் சுஜூதில் தான் இருக்கிறார்களா? அல்லது நம்மை விட்டு எழுந்து சென்று விட்டார்களா? என்று சந்தேகம் ஏற்பட்டு, தங்களது தலையைத் தூக்கிப் பார்க்கும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது.
 
அவர் அவ்வாறு தலையைத் தூக்கிப் பார்க்கும் பொழுது, இமாமுடைய இடத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதம் இருப்பதை பார்க்கிறார்கள். 
 
பிறகும் சிறிது நேரம் ஸுஜூதிலேயே கழிக்கிறார்கள். அப்பொழுதும் தூதர் ஸுஜுதிலேயே இருக்கிறார்கள். இவ்வாறாக தொழுகை முடிந்ததும் அந்த சஹாபி நேராக தூதர் அவர்களிடம் சென்று, யாரசூலல்லாஹ்! என்றுமே இல்லாத அளவிற்கு இன்று அதிக நேரம் ஸுஜூதில் செலவு செய்து இருக்கிறீர்களே? என்று கேட்டார்கள்.
 
அதற்கு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழகிய பதிலை பாருங்கள்.
 
நீங்கள் பயந்து விடாதீர்கள்! எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதாக. நான் சுஜூதில் இருந்த பொழுது என்னுடைய மகன் என் மீது சவாரி செய்து கொண்டிருந்தான். அவனுடைய ஆசை பூர்த்தியாவதற்குள் அவசரப்படுத்தி அவனை கீழே இறக்கிவிட எனது மனம் விரும்பவில்லை. எனவேதான் அவனாகவே தனது ஆசை தீர்ந்து முடிந்து இறங்கும் வரை நான் ஸுஜூதிலேயே இருந்தேன். (5)
 
அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 1141.
 
ஒரு குழந்தையின் மனம் கூட நோகாமல், அதுவும் தான் தொழுகையில் இருந்த நிலையில் கூட, தனக்குப் பின்னால் மக்களுடைய கூட்டம் தொழுது கொண்டிருக்கும் நிலையிலும்கூட, குழந்தையுடைய உள்ளத்தை உடைக்காமல் இருந்தார்கள்.
 
ஆனால், இன்றோ தந்தைமார்கள் நேரத்திற்கு நேரம் நிமிடத்திற்கு நிமிடம் தனது குழந்தைகளுடைய மனதை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
இவர்களுடைய செய்கைக்கும் இஸ்லாத்தின் போதனைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது?
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இன்னொரு சம்பவத்தை பாருங்கள்.
 
தனது மனைவிமார்களோடு பிரச்சினை ஏற்பட்டபோது அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنْبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ
 
(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி "இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" எனக் கேட்டார். அதற்கு அவர் "(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 66 : 3)
 
நபி தனது மனைவி மார்களிடம்  தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொல்லி விடவில்லை. தெரிந்ததில் சிலதை சொல்லி பலதை  மறைத்துவிட்டார்கள்.
 
அவர்களுடைய மனம் கஷ்டப்பட்டுவிடக்கூடாது; அவர்களுடைய மனம் வேதனைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.
 
ஆகவே, நம்முடைய நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் இதுபோன்றுதான் மிகவும் உயர்வானதாக இருக்க வேண்டும். மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
 
அற்பர்களைப் போல வீணர்களைப் போல பிறருடைய உள்ளங்களை காயப்படுத்துவது சக மனிதர்களுடைய உள்ளுணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவர்களுடைய மனதை நோகடிப்பது என்பது ஒரு சிறந்த முஸ்லிமின் உயரிய பண்பு கிடையாது.
 
பிறருடைய உணர்வுகளை மதிப்பது என்ற குணத்தை நம்முடைய முஸ்லிம் சமுதாயம் பிறரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு மிகவும் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்.
 
பேண வேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு இது. இதை நமது மார்க்கம் அழகிய முறையில் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எனவே இந்த நல்ல பண்பை உணர்ந்து, இதை நமது வாழ்க்கையில் பின்பற்றி, அல்லாஹ்விடத்தில் உயர்ந்த முஃமின்களுடைய தரத்தில் நம்மையும் ஆக்குவானாக!
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அவனுக்கு பிடித்தமான சிறந்த நற்குணங்களை வழங்குவானாக!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலையும் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளையும் பின்பற்றக் கூடிய மக்களாக நல்ல முஃமின்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ يَعْقُوبَ الْعَدْلُ، ثَنَا السَّرِيُّ بْنُ خُزَيْمَةَ، ثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنِي أَبِي، ثَنَا مَعْبَدُ بْنُ خَالِدٍ الْأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: دَخَلَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَصْحَابُهُ وَضَنَّ كُلُّ رَجُلٍ بِمَجْلِسِهِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رِدَاءَهُ فَأَلْقَاهُ إِلَيْهِ فَتَلَقَّاهُ بِنَحْرِهِ وَوَجْهِهِ فَقَبَّلَهُ وَوَضَعَهُ عَلَى عَيْنَيْهِ وَقَالَ: أَكْرَمَكَ اللَّهُ كَمَا أَكْرَمْتَنِي، ثُمَّ وَضَعَهُ عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَإِذَا أَتَاهُ كَرِيمُ قَوْمٍ فَلْيُكْرِمْهُ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ بِهَذِهِ السِّيَاقَةِ " (المستدرك على الصحيحين للحاكم- 7791) [التعليق - من تلخيص الذهبي] 7791 - سكت عنه الذهبي في التلخيص
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ امْرَأَةً جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ، فِيهَا حَاشِيَتُهَا»، أَتَدْرُونَ مَا البُرْدَةُ؟ قَالُوا: الشَّمْلَةُ، قَالَ: نَعَمْ، قَالَتْ: نَسَجْتُهَا بِيَدِي فَجِئْتُ لِأَكْسُوَكَهَا، «فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ»، فَحَسَّنَهَا فُلاَنٌ، فَقَالَ: اكْسُنِيهَا، مَا أَحْسَنَهَا، قَالَ القَوْمُ: مَا أَحْسَنْتَ، لَبِسَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ، وَعَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ، قَالَ: إِنِّي وَاللَّهِ، مَا سَأَلْتُهُ لِأَلْبَسَهُ، إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي، قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ (صحيح البخاري- 1277)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ - وَهُوَ عَمُّ إِسْحَاقَ -، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ، فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَهْ مَهْ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُزْرِمُوهُ دَعُوهُ» فَتَرَكُوهُ حَتَّى بَالَ، ثُمَّ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاهُ فَقَالَ لَهُ: «إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ» أَوْ كَمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَأَمَرَ رَجُلًا مِنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ (صحيح مسلم - 285)
 
குறிப்பு 4)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، مَوْلَى آلِ الزُّبَيْرِ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ رَأَى صَاحِبَ بَلَاءٍ، فَقَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا، إِلَّا عُوفِيَ مِنْ ذَلِكَ البَلَاءِ كَائِنًا مَا كَانَ مَا عَاشَ "،: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ " وَعَمْرُو بْنُ دِينَارٍ قَهْرَمَانِ آلِ الزُّبَيْرِ هُوَ: شَيْخٌ بَصْرِيٌّ، وَلَيْسَ هُوَ بِالْقَوِيِّ فِي الحَدِيثِ، وَقَدْ تَفَرَّدَ بِأَحَادِيثَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ " وَقَدْ رُوِيَ عَنْ أَبِي جَعْفَرٍ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، أَنَّهُ قَالَ: إِذَا رَأَى صَاحِبَ بَلَاءٍ يَتَعَوَّذُ، يَقُولُ ذَلِكَ فِي نَفْسِهِ، وَلَا يُسْمِعُ صَاحِبَ الْبَلَاءِ (سنن الترمذي- 3431) [حكم الألباني] : حسن
 
குறிப்பு 5)
 
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ الْبَصْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ أَبِيهِ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِحْدَى صَلَاتَيِ الْعِشَاءِ وَهُوَ حَامِلٌ حَسَنًا أَوْ حُسَيْنًا، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَهُ، ثُمَّ كَبَّرَ لِلصَّلَاةِ فَصَلَّى فَسَجَدَ بَيْنَ ظَهْرَانَيْ صَلَاتِهِ سَجْدَةً أَطَالَهَا، قَالَ أَبِي: فَرَفَعْتُ رَأْسِي وَإِذَا الصَّبِيُّ عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ سَاجِدٌ فَرَجَعْتُ إِلَى سُجُودِي، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ قَالَ النَّاسُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ سَجَدْتَ بَيْنَ ظَهْرَانَيْ صَلَاتِكَ سَجْدَةً أَطَلْتَهَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ قَدْ حَدَثَ أَمْرٌ أَوْ أَنَّهُ يُوحَى إِلَيْكَ، قَالَ: «كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ وَلَكِنَّ ابْنِي ارْتَحَلَنِي فَكَرِهْتُ أَنْ أُعَجِّلَهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ» (سنن النسائي- 1141)  [حكم الألباني] صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/