அழு! | Tamil Bayan - 555
بسم الله الرحمن الرّحيم
அழு!
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீனை போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் மீதும், அந்த தூதரின் நேசத்திற்குரிய குடும்பத்தினர், தோழர்கள் மீதும் ஸலாமும், சலவாத்தும் கூறியவனாக,வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கின்றார்கள் என்று சாட்சி கூறியவனாகவும்,
எனக்கும், உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே அல்லாஹ்வின் மன்னிப்பையும், அன்பையும் வேண்டியவனாக,அல்லாஹ் விரும்புகின்ற நற்குணங்களை வேண்டியவனாக,அல்லாஹ் வெறுக்கின்ற எல்லா கெட்ட குணங்களிலிருந்தும், கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட நம்பிக்கைகளில் இருந்தும் பாதுகாப்பு தேடியவனாக,இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய அச்சத்தால் அழக்கூடிய கண்களையும், அல்லாஹ்வுடைய பயத்தால் நடுங்கக்கூடிய உள்ளங்களையும், அல்லாஹ்வின் அச்சத்தால் நன்மையையை விரைந்து செய்யக்கூடிய உடல் ஆரோக்கியத்தையும், எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் சுபஹானஹு வதஆலா தந்தருள்வானாக! ஆமீன்.
கண்ணியத்திற்குரியவர்களே! சுபஹானஹு வதஆலா தனது திருமறையில் தனது நபியை பார்த்து கேட்கின்றான்,
وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ
நபியே நீங்கள் மக்களை பயப்படுகிறீர்களா?அல்லாஹ் தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். (அல்குர்ஆன் 33 : 37)
முதலாவதாக நீங்கள் யாரை பயப்படவேண்டுமென்றால் அல்லாஹ்வைத் தான்.
பயம், அச்சம், நடுக்கம்என்ற அந்த தன்மை, இது ஈமானோடு இருக்கவேண்டிய ஒரு அடிப்படை பண்பு.
ஈமான் ஒருவருடைய உள்ளத்தில் இருக்கிறதென்றால், அதற்குரிய அடையாளத்தில் ஒன்று அல்லாஹ்வுடைய பயம்அவருடைய உள்ளத்தில் இருக்கும்.
எந்த அளவு ரப்புல் ஆலமீன் உயர்த்தி சொல்கிறான் என்று பாருங்கள்; சூரத்துல் பகரா உடைய தொடக்க வசனத்திலே கூறுகிறான்.
ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ (2) الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறையச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்.
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
மேலும், நபியே!) அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உமக்கு முன் (சென்ற நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.(அல்குர்ஆன் 2 : 2-4)
சகோதரர்களே! ரப்புல் ஆலமீன் உடைய இந்த கூற்றின் கருத்து என்னவென்றால். ஈமான் என்பது தக்வா.தக்வா என்பது ஈமான்.
தக்வாவின் அடையாளங்களை சொல்லும்பொழுது, ஈமானை சொல்கின்றான். ஈமானின் அடையாளங்களை அல்லாஹ் சொல்லும் பொழுது, தக்வாவை சொல்கின்றான், என்றால் இரண்டும் பிரிக்க முடியாத ஒன்று என்று நாம் அறிய முடிகிறது.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
நாம் இன்று எப்படி விளங்கி வைத்திருக்கிறோம் என்றால், உள்ளத்திலே நம்பிக்கை கொண்டோம் என்று வாயால் சொல்வதை மட்டுமே ஈமானாக விளங்கிக் கொண்டு, அல்லாஹ்வின் அன்பு, அல்லாஹ்வின் அச்சம், அல்லாஹ்வுடைய பயத்தால் நடுங்குவது, இதையெல்லாம் ஏதோஒரு தூரமான விஷயம், இதெல்லாம் இருந்தால் பரவாயில்லை, இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற ஒரு மனப்பான்மையில் நாம் வாழ்வதைப் போன்று தெரிகிறது. அல்லாஹ் மன்னிப்பானாக.
அன்பு சகோதரர்களே! இந்த அல்லாஹ்வுடைய அச்சம், அந்த அச்சத்திற்கு அடையாளம் ஒன்று இருக்கிறது. அல்லாஹ் உடைய பயத்திற்கு அடையாளம் இருக்கிறது.
என்னுடைய உள்ளத்தில் தக்வா இருக்கிறது என்று யாரும் எளிதாக சொல்லிவிட முடியாது, ரப்புல் ஆலமீனுடைய மார்க்கத்தைப் பொறுத்தவரை,
هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் சொல்லக்கூடிய கூற்றுக்கு நீங்கள் வாதிடக்கூடிய வாதத்திற்கு ஆதாரத்தை கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன் 2:111)
எந்த ஒன்றையும் ரப்புல் ஆலமீன் ஆதாரமில்லாமல் ஏற்றுக்கொள்ள மாட்டான். வெறும் வாய் பேச்சு என்பது இந்த மார்க்கத்தில் இருக்க முடியாது.
சொல் இருக்கவேண்டும், சொல்லைத் தொடர்ந்து செயல் இருக்கவேண்டும். சொல்லும், செயலும் நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தின் மீது அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட உயர்ந்த இந்த தரத்தை தான், உயர்ந்த ஒரு பண்பை தான், ரப்புல் ஆலமீன் நமக்கு கற்றுத் தந்திருக்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கின்றார்கள்.
எனவே நம்முடைய உள்ளத்திலே அல்லாஹ்வுடைய பயம் அதற்குخشية-ஹஷ்யத் அல்லது خوف-ஹவ்ஃப் அல்லது رهبة-ரஹ்பத் என்று சொல்லப்படும். அல்லாஹ் கூறுகின்றான்.
وَإِيَّايَ فَارْهَبُونِ
என்னையே பயந்து நடுங்குங்கள். (அல்குர்ஆன் 2 : 40)
فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ
மக்களை பயப்படாதீர்கள்.என்னை பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5 : 44)
فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.(அல்குர்ஆன் 3 : 175)
இப்படி தக்வாவிற்கு பல வார்த்தைகள் உள்ளன. அதுபோன்று خشوع-ஹுஷூஃ என்ற வார்த்தையும் உள்ளது.
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (அல்குர்ஆன் 23 : 1-2)
இப்படி எந்த ஒரு வார்த்தையாக இருந்தாலும்,அடியான்அல்லாஹ்வுடைய நினைப்பு வரும் பொழுது அல்லாஹ்வைப் பற்றிப் பேசும்பொழுது,
إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். (அல்குர்ஆன் 8:2)
அந்த பயத்திற்கு இன்னொரு வார்த்தை வஜ்ல்.
இப்படிப் பல வார்த்தைகைகளைக் கொண்டு அல்லாஹ் தஆலா தன்னுடைய பயத்தை அடியார்களுக்கு கற்றுக் கொடுக்கின்றான்.
பயம் இருக்கிறது என்பதற்குரிய மிகப்பெரிய அடையாளம்தான் நம்முடைய கண்கள் அல்லாஹ்வின் அச்சத்தால் அழக்கூக்கூடிய கண்களாக இருக்க வேண்டும்.
கண்களில் அழுகை இல்லாமல் உள்ளத்தில் பயம் இருக்கிறது என்று ஒருவர் கூறினால் அவர் பொய் சொல்கிறார்.
வாழ்க்கையில்தனிமையில்துஆ கேட்கும் பொழுது, அல்லாஹ்வை வணங்கும் பொழுது, அல்லாஹ்வை நினைக்கும் பொழுது ஒரு அடியானுடைய உள்ளத்திலே ஒரு பயம் ஏற்பட்டு அவனுடைய கண்கள் கலங்கி, சில கண்ணீர் துளி சொட்டுதலைக்கூட அந்த கண்கள் சொரியவில்லை என்றால், அவனுடைய உள்ளத்தில் பயம் இருக்கிறது என்று அவன் கூறினால், அவன் பொய் சொல்கிறான்.
அவனுடைய உள்ளம் காய்ந்து விட்டது, பயமில்லாத உள்ளமாக இருக்கிறது என்று பொருள்.
ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள்;
فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ أُولَئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ
எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 39 : 22)
அல்லாஹ்வுடைய நினைவால் மென்மையாகாத பயப்படாத அழுகை வராத அந்த மனிதர்களுக்கு கேடு உண்டாகட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!இந்த அழுகை என்பது அச்சத்தின் மிகப்பெரிய அடையாளம்.
கல்பு மென்மையாக இருந்து அல்லாஹ்வுடைய அச்சம் அந்த உள்ளத்திலே இருந்தால் அந்த அச்சம் தான் ஹலாலை செய்யத்தூண்டும்;ஹராமில் இருந்து நம்மை பாதுகாக்கும்;அல்லாஹ்வுடைய கட்டளைகளை செய்யத்தூண்டும்;அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டும் நம்மை தடுத்துக் கொண்டிருக்கும்.
அது இல்லை என்றால் அவ்வளவுதான்.கட்டளைகளில் அலட்சியம்; தடுக்கப்பட்ட பாவங்களிலே துணிவு; அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!இதே நிலமை ஒருவனுக்கு நீடிக்குமானால்,
فَأَمَّا مَنْ طَغَى (37) وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا (38) فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى
எவன் வரம்பு மீறினானோ,
(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான். (அல்குர்ஆன் 79 : 37-39)
எவ்வளவு கடுமையான எச்சரிக்கை பாருங்கள். இந்த அழுகையை பற்றியும் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்;
சூரத்துன் நஜ்மிலே
وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى
அல்லாஹ்தான் சிரிக்கவும் வைக்கின்றான், அவன்தான் அழுகவும் வைக்கின்றான். (அல்குர்ஆன் 53 : 43)
சிரிப்பதற்குரிய காரணங்களையும், அழுவதற்குரிய காரணங்களையும் அல்லாஹ்தான் ஏற்படுத்துகின்றான்.
சகோதரர்களே! இந்த அழுகை என்பது ஒரு மனிதனுடைய இயற்கையான ஒன்று, உள்ளம் மென்மையானவர்களுடைய ஒரு பண்பு என்பதாக நாம் பார்க்கின்றோம்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய நிகழ்வை இமாம் புகாரி முஸ்லிம் பதிவு செய்கிறார்கள், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவருடைய மகனார் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸல்லாம் அவர்கள் மரணித்த பொழுது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண் கலங்கினார்கள், அழுதார்கள்.
அதுபோன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகளுடைய ஒரு மகன் இறந்த பொழுது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கண் கலங்கினார்கள்.
அப்பொழுது சில தோழர்கள் கேட்டார்கள்;அல்லாஹ்வுடைய தூதரே நீங்களுமா கண்கலங்குகிறீர்கள் என்று, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
إِنَّ اللَّهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ العَيْنِ، وَلاَ بِحُزْنِ القَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا - وَأَشَارَ إِلَى لِسَانِهِ
கண்கள் சிந்துகின்ற கண்ணீருக்கும் அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான். உள்ளத்தில் இருக்கக்கூடிய கவலைக்கும் அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான். ஆனால் அல்லாஹ் வேதனை செய்வது இந்த நாவினால் தான். இந்த நாவின் காரணமாகத்தான்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1304.
அதாவது அந்த அழுகையின் போது அவன் சொல்லக்கூடிய வார்த்தைகள்.அல்லாஹ்வை ஏசினால், அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ்வுடைய விதியை குறை கூறினால், அல்லாஹ்வுடைய விதியை அவன் சலித்துக் கொண்டால் அது அவனுடைய தண்டனைக்கு காரணமாகிவிடுகிறது.
சகோதரர்களே! இந்த அழுகை என்பதைப்பற்றி யஸீத் இப்னு மைசரா ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறும் பொழுது, ஏழு வகையான அழுகைகள் இருக்கின்றன.
சிலர் மகிழ்ச்சியினாலும் அழுவார்கள்;
சிலர் கவலையினாலும் அழுவார்கள்;
திடுக்கத்தினாலும் அழுகை வரலாம்;
சிலருக்கு முகஸ்துதியுடைய அழுகையும் இருக்கும், பிறருக்கு காட்டுவதற்காக.
சிலநேரங்களில் வலியினாலும் உடலில் ஏற்படக்கூடிய காயங்கள் அல்லது உடலில் ஏற்படக்கூடிய அந்த வலியினாலும் அழுகை ஏற்படலாம்.
நன்றி உணர்வின் காரணமாகவும் ஏற்படலாம்.
அல்லாஹ்வின் மீது அச்சத்தாலும் அழுகை ஏற்படலாம்.
இப்படி ஏழு வகையான அழுகைகள் இருக்கின்றன.
இறுதியாக, அல்லாஹ்வின் அச்சத்தால் அழுகக்கூடிய அந்த அழுகை அது கடல் போன்று இருக்கக்கூடிய அந்த நரக நெருப்பையும் அணைக்கக்கூடிய ஆற்றல் பெற்றது. அல்லாஹ்வுடைய அச்சத்தால் ஒரு அடியான் சிந்தக்கூடிய அந்த ஒரு சொட்டு கண்ணீர், கடல் போன்ற நெருப்பையும் அணைத்துவிடுவதற்கு ஆற்றல் பெற்றது.
அன்பு சகோதரர்களே! அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த அழுகையை புகழ்ந்து கூறுகிறான்.
எந்த அழுகை உண்மையில் அல்லாஹ்வுடைய பயத்தால் அடியானுக்கு வருகிறதோ, அவ்வாறே அல்லாஹ்வுடைய நினைவால் வருகிறதோ,அல்லாஹ்வுடைய நிஃமத்களை எண்ணி தான் அதற்கு நன்றி செலுத்த முடியாத பலவீனமானவனாக இருப்பதை நினைத்து, அல்லது தான் செய்த பாவங்களை நினைத்து, அதற்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற பயத்தில், அல்லது பொதுவாக மறுமையினுடைய நிலைகளை நினைத்துப்பார்த்து, சொர்க்கத்தை மஹ்ஷருடைய நிலையை நினைத்துப் பார்த்து,அல்லாஹ்வுடைய கோபத்தை நினைத்துப்பார்த்து இப்படியான ஆகிரத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் அடியானுக்கு வரக்கூடிய அழுகை இருக்கிறதே இந்த அழுகையை அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஅவனுடைய அல்குர்ஆனிலே புகழ்ந்து கூறுகிறான்.
அவனுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தகைய சிறப்பை நமக்கு விளக்கிக் கூறியிருக்கிறார்கள்.
ஸூரத்துத் தூர் உடைய அந்த வசனத்தை பாருங்கள், ரப்பு கூறுகிறான்;
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலே அவர்கள் இன்பமாக இருக்கும் பொழுது அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்;அவர்கள் சொல்வார்கள்;
قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ
‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே இருந்தோம். (அல்குர்ஆன் 52 : 26)
فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ
ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான். (அல்குர்ஆன் 52 : 27)
إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ
இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 52 : 28)
அன்பு சகோதரர்களே! இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்;
اشفاق-இஷ்பாக் இதுவும் பயத்தை குறிக்கக்கூடிய ஒரு வார்த்தை. முஷ்ஃபிக்கீன்நாங்கள் பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தோம்.
ஒரு மனிதனை போலீஸ் பிடிக்க வருகிறது;அல்லது அந்த ஒரு மனிதனை அநியாயக்காரர்கள் துரத்தி வந்து கொண்டிருக்கிறார்கள் அவனை கொல்வதற்காக அல்லது அவனை தண்டிப்பதற்காக. அந்த நேரத்தில் மனிதன் அழுவானா? சிரிப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!
இப்படி எந்த நேரத்தில் மலக்குல் மவ்த் வருவார்?எந்த நிலையில் வருவார்?நான் நாளை மறுமையில் எந்த நிலையில் அல்லாஹ்விடத்தில் கொண்டு செல்லப்படுவேன்? இந்த பயம் இருக்க வேண்டும்.
இந்த இடத்திலே இன்னொரு விஷயத்தைக் கவனியுங்கள் அந்த நல்லவர்கள் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது நாங்கள் குடும்பத்தைப் பற்றி பயந்து கொண்டிருந்தோம் என்று கூறுவார்கள்.
என்ன அர்த்தம்? கணவன் மனைவியிடத்திலே, பெற்றோர் பிள்ளைகளிடத்தில், பிள்ளைகள் பெற்றோர்களிடத்திலே, குடும்பத்திலே அவர்கள் அமர்ந்து அல்லாஹ்வை பற்றி பேசி அவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டும்.
அல்லாஹ்வுக்கு பயப்படுவது ஒரு மனிதனுடைய தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல. கணவன் மனைவியிடத்தில் பேசவேண்டும். மனைவி கணவனுக்கு சொர்க்கத்தை பற்றி நரகத்தை பற்றி நினைவூட்ட வேண்டும். இருவரும் அல்லாஹ்வின் அச்சத்தால் அழ வேண்டும். அதுபோன்று பிள்ளைகள்.
நம்முடைய குடும்பங்களின் நிலைகளை நினைத்துப்பாருங்கள். குடும்பங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். குடும்பமாக நாம் ஒன்று சேர்ந்தாலே, அங்கே கேலி, கிண்டல், சிரிப்பு, விளையாட்டுகள், வீணான பேச்சுக்கள், இதிலும் எல்லை தாண்டி ஹராமினால் ஒன்று சேரக்கூடிய குடும்பங்களும் இருக்கின்றார்கள்.
குடும்பமாக லீவு நாளிலே ஒன்று சேர்ந்துவிட்டால், ஒரு சினிமாவை போடுங்கள் பார்க்கலாம், ஒரு பாட்டை போடுங்கள் கேட்கலாம்.
அல்லாஹு தஆலா, சொர்க்கவாசிகள், நல்லவர்களின் அடையாளமாக சொல்கிறான்; அவர்கள் குடும்பமாக இருந்து பயந்து அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி அழுதுகொண்டிருந்தார்கள்.
நபித்தோழர்கள் உடைய நிலை அப்படித்தான், சஹாபாக்களின் நிலையும் அப்படித்தான், தங்களுடைய குடும்பத்தாருக்கு மத்தியிலே, பொது இடத்தில் எப்படி அல்லாஹ்வைப் பற்றி பேசுவார்களோ, குடும்பத்திலும் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி பேசி, அல்லாஹ்வின் நினைவால் அழுவதற்கென்று நேரத்தை வைத்திருப்பார்கள்.
அதற்க்கு இப்படியும் அர்த்தமல்ல, குடும்பத்திற்குள் சென்றுவிட்டால் 24மணி நேரமும் அழுகை என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவிமார்களுடன் விளையாடி இருக்கிறார்கள், சிரித்து பேசி இருக்கிறார்கள், அதே நேரத்தில் அல்லாஹ்வின் அச்சத்தை கொடுத்து, அல்லாஹ்வின் பயத்தால் அவர்கள் அழுவதற்கு தூண்டியும் இருக்கிறார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்;
لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ
அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத மனிதன் நரகத்தில் நுழைய மாட்டான் கறந்த பால் மடியில் மீண்டும் செல்லும் வரை.(1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1633, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அந்த அளவு அல்லாஹ்வுடைய அச்சத்தால் அழுதவர்களின் அழுகை ஒரு மனிதனை நரகத்திலிருந்து பாதுகாத்து விடுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மேலும் கூறினார்கள்;
ஏழு மனிதர்களுக்கு அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நாளை மறுமையில் அர்ஷின் நிழலை கொடுக்கின்றான். அதிலே ஒருவர்;
وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ
தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடிக்கும் மனிதன்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.
யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய ஷிஃபத்துக்களைப் பற்றி எந்த அளவுக்கு இல்ம் இருக்குமோஅந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய நினைப்பு என்பது விசாலமாக உள்ளது.
அல்லாஹ்வுடைய ஷிஃபத்துக்களைப் பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோம் யோசித்துப் பாருங்கள். அல்லாஹ்வுடைய எத்தனை ஷிஃபத்துக்களைப் பொருளோடு உணர்ந்து வைத்திருக்கிறோம்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ»
அல்லாஹ்விற்கு 99திருநாமங்கள் இருக்கின்றன. 100, ஒன்றை தவிர.யார் அவற்றை மனப்பாடம் செய்து கொள்வார்களோ,-மனப்பாடம் என்றால் யார் அதை பொருளுணர்ந்து தெளிவாக விளங்கி பதியவைத்துக் கொள்வார்களோ அவர்கள் சொர்க்கம் செல்வார்கள்.
பலருக்கு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடைய பொருள் கூட தெரியாது.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மானிர்ரஹீம் என்பதனுடைய பொருள் கூட தெரியாது.
குர்ஆனை விட்டு எவ்வளவு தூரமாக வாழ்கிறார்கள். அப்படி குர்ஆனோடு நெருங்கினாலும், வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். உள்ளே செல்வதில்லை.
அன்பு சகோதரர்களே! ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து அழக்கூடிய மனிதன் நாளை மறுமையில் அர்ஷுடைய நிழலிலே இருப்பான்.
அர்ஷுடைய நிழல் எவ்வளவு தேவை என்பது மறுமையைப் பற்றிப் படிக்கும் பொழுது தான் நமக்குத் தெரிய வரும். ஆஹிரத்தைப் பற்றி படிக்கும் போதுதான் தெரிய வரும். அந்த அர்ஷுடைய நிழல் என்பது ஒரு அடியானுக்கு எவ்வளவு தேவை என்பது.
ஏன்? அதில் செல்லாதவர்கள் எல்லாம் அந்த சூரியனுடைய வெளிச்சம் ஒரு மைல் தூரத்தில் இருக்கும், பயங்கரமான உஷ்ணம் உள்ளதாக இருக்கும்,
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21162.
கீழே இந்த பூமி மாற்றப்பட்டு இருக்கும்.
يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ
(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப்பட்டுவிடும். (அல்குர்ஆன் 14:48)
இப்பொழுது மண்ணால் இருக்கக்கூடிய இந்த பூமியின் மேற்பரப்பு அல்லாஹ் முற்றிலுமாக அழித்து விட்டு செம்பு, பித்தளைகளிலான பூமியாக இருக்கும். எப்படி உஷ்ணம் இருக்கும் நினைத்துப் பாருங்கள்.
அந்த நேரத்திலே மனிதர்களுடைய வேர்வை அவர்களுடைய கெண்டைக்கால், பிறகு முட்டுக்கால், பிறகு இடுப்பு, பிறகு கழுத்து இப்படியாக வேர்வைகளில் மூழ்கி கொண்டிருப்பார்கள். (3)
முஸ்னது அஹ்மது என் 21162
ஹதீசிலே வருகிறது ஒரு கப்பல் அந்த வேர்வையில் செலுத்தப்படுமேயானால் சென்று விடும் என்பதாக. (4)
புகாரி : 6532, ஹாகிம் எண் : 8944; இப்னுமாஜா எண் : 4315; ஷர்ஹுஸ் ஸுன்னா எண் :4450
அந்த நேரத்தில் அர்ஷுடைய நிழலில் இருக்கக்கூடியவர்கள் மட்டும்தான் இந்த அதாபிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.அந்த அர்ஷுடைய நிழல் கிடைக்கக்கூடிய ஒருவர் தான் தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அழுதவர்.
மேலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்;
" عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ اللَّهِ "
இரண்டு கண்கள், நரக நெருப்பு அவற்றை தீண்டாது. ஒன்று அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத கண்கள், இரண்டாவது அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வுடைய அடியார்களை பாதுகாத்துக்கொண்டிருந்த கண்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1639, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
மேலும் சொன்னார்கள்;
" لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ، قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ، وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ "
அல்லாஹ்விற்கு இரண்டு சொட்டுகள் விட, இரண்டு அடிகளை விட விருப்பமானது எதுவும் கிடையாது.
இரண்டு சொட்டுகள் என்ன? முதலாவது, அல்லாஹ்வுடைய பயத்தால் கண்களில் இருந்து சொட்டிய கண்ணீர் சொட்டு.இரண்டாவது, அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஜாஹித் கொல்லப்படும் போது அவனுடைய உடலில் சொட்டப்படக்கூடிய அந்த இரத்தத்தின் சொட்டு. இந்த இரண்டு சொட்டுகள் இதைவிட அல்லாஹ்விற்கு விருப்பமானவை எதுவும் கிடையாது.
மேலும் சொன்னார்கள்; இரண்டு அடிகள்; ஒன்று அல்லாஹ்வுடைய பாதையிலே முஜாஹித் எடுத்து வைக்கக்கூடிய காலடி எட்டு, இரண்டாவது,அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளில் அந்த ஃபர்ளுகளில் ஒரு ஃபர்ளை செய்வதற்காக அடியான் தன்னுடைய பாதத்தில் இருந்து எடுத்து வைத்து செல்லக்கூடிய அந்த காலடி எட்டு.
இந்த இரண்டு எட்டுகளை விட அல்லாஹ்விற்கு விருப்பமான எட்டுகள் இல்லை, இரண்டு காலடிகளை விட அல்லாஹ்விற்கு விருப்பமான காலடிகள் இல்லை.
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1669, தரம் : ஹசன் (அல்பானி)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய பயம் என்பது, அந்த பயத்தால் அழுகை என்பது ஈமானுக்கு தேவையான மிக மிக முக்கியமான ஒன்று.
பல உபரியான வணக்கங்களை விட இந்த அழுகை என்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுவதைப் பாருங்கள். அதாவது சஹாபாக்கள் இடத்திலே அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது என்பது எவ்வளவு முக்கியமான ஒரு அமலாக பார்க்கப்பட்டது என்பதற்கு அடையாளம், சொல்லுகிறார்கள்,
(لأن أدمع من خشية الله أحب إلي من أن أتصدق بألف دينار)
(دمع-தம்ஃ என்று சொன்னால் ஒரு சில சொட்டுகளை வடிப்பது,
ஒன்று بكاء-புகா, அதற்குப் பிறகு فاضت عيناه
இப்படியான அழுகையின் வகைகள் இருக்கின்றன.இன்னொன்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பது.
தம்ஃ என்று சொன்னால் இந்த பயம் வரும் பொழுது திடுக்கம் வரும் பொழுது நம்மை அறியாமல் கண்ணில் இருந்து தானாக வழிந்து ஓடக்கூடிய அந்த சொட்டு)
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா மேலும் சொல்கிறார்கள்; அல்லாஹ்வின் பயத்தால் நான் கண்ணீர் சிந்துவது, ஆயிரம் தீனார்களை சதக்கா செய்வதை விட எனக்கு மிகவும் விருப்பமானது.
கஃபுல் அஹ்பார் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் தாபியீன்களில் மிகப்பெரியவர், அவர்கள் சொல்கிறார்கள்;
لأن أبكى من خشية الله فتسيل دموعي على وجنتي أحب إلى من أن أتصدق بوزني ذهباً
நான் அல்லாஹ்வின் பயத்தால் அழுது என்னுடைய கன்னத்தில் கண்ணீர் துளிகள் ஓடுவது எனக்கு எவ்வளவு விருப்பமானது என்றால் என்னை முழுமையாக தராசுத் தட்டில் வைத்து நிறுத்து அதற்கு சமமான தங்கத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதைவிட, அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது எனக்கு மிக விருப்பமானது.
சகோதரர்களே! இந்த அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது என்பது இந்த அடியானுக்கு அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய ஒரு நெருக்கமான பாசத்தை உணர்த்துகிறது. இரண்டாவது, அல்லாஹ்வின் அந்த வல்லமையின் மீது அல்லாஹ்வுடைய அந்த ஜலாலியத்தின் மீது அடியானுக்கு இருக்கக்கூடிய ஆழமான பயத்தை உணர்த்துகிறது. ஈமானுடைய ஒரு மிகப்பெரிய அடையாளமாக இது இருக்கிறது.
மலக்குகளின் அழுகை :
மலக்குமார்களை பற்றி நாம் ஹதீஸ்களிலே படித்துப் பார்க்கும் பொழுது, பல ஹதீஸ்களை பார்க்கிறோம். அல்லாஹ்வின் அச்சத்தால் அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த கவலையைப் பாருங்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் இடத்திலே கேட்கிறார்கள்;இந்த ஹதீதை இமாம் அஹ்மது பதிவு செய்கிறார்கள்;
ஜிப்ரீலே நான்மீகாயிலை பார்த்த பொழுதெல்லாம் அவர் எப்பொழுதும் கவலையிலே இருக்கிறாரே, சிரித்த முகத்துடன் நான் அவரைப் பார்த்ததே இல்லையே?!
ما ضحك ميكائيل منذ خلقت النار
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கு பதில் சொன்னார்கள்; நரகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து மீகாயில் சிரிக்கவே இல்லை.நரகம் படைக்கப்பட்டதிலிருந்து மீகாயில் உடைய சிரிப்பு சென்றுவிட்டது. (5)
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது எண் : 13343.
மலக்குகள் யார்? அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர்கள். அல்லாஹ்விற்கு பாவம் செய்யாதவர்கள்.
لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் பாவிகளை வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்.(அல்குர்ஆன் 66:6)
அந்த நரகத்தை பார்த்ததற்கு பிறகு, எங்கே நானும் இந்த தண்டனைக்கு ஆளாகி விடுவேனோ என்ற பயம் அவருடைய சிரிப்பை எடுத்து விட்டது என்றால், யாரைப் பார்த்து அல்லாஹுத்தஆலா நரகத்தை பயந்து கொள்ளுங்கள்! நரகத்தை பயந்து கொள்ளுங்கள்! என்று கூறுகின்றானோ அந்த மனிதராகிய நாம் இன்று எந்த அளவு அல்லாஹ்வை மறந்து, அல்லாஹ்வுடைய அச்சத்தை மறந்து, இந்த உலக வாழ்க்கையை சிரிப்பிலும், விளையாட்டிலும், வீண் வேடிக்கைகளிலும், வீணான கேளிக்கைகளிலும் கழித்துக் கொண்டிருக்கிறோம்?
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், இமாம் தப்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்;
ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறியதாக,
«مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِالْمَلَإِ الْأَعْلَى، وَجِبْرِيلُ كَالْحِلْسِ الْبَالِي مِنْ خَشْيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
நான் இஸ்ராவுடைய அந்த இரவிலே உயர்ந்த வானவர்களின் கூட்டத்தாரை கடந்து செல்லும்போது, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள், ஒரு இடம் வந்தவுடன் அங்கே நின்று விடுகிறார்கள்.
அந்த நேரத்தில் ஜிப்ரீலை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். அந்த இடத்தில் அவருடைய பிரம்மாண்டமான அந்த உருவம் அப்படியே கூனி குறுகி சுருங்கி தரையிலே பல நாட்களாக விரிக்கப்பட்டு தேய்ந்து பழையதாகி போய் தரையோடு தரையாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு விரிப்பை போன்று அவர் ஆகி விட்டார்.அல்லாஹ்வுடைய பயத்தால் அவர் அப்படியே கூனி குறுகி விட்டார்.
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஃஜம் அல்அவ்ஸத் தப்ரானி,எண் : 4679, தரம் : சஹீஹ் (அல்பானி, ஸுயூதி)
அன்பான சகோதரர்களே! நபிமார்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்
أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا
(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள். (அல்குர்ஆன் 19 : 58)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு மஸ்வூத் அவர்களிடம் குர்ஆனை ஓதுங்கள் என்று கூறினார்கள்.அதற்கு இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் உங்கள் மீது இறக்கப்பட்டிருக்கநான் உங்களுக்கு ஓதி காட்டவா? நபியவர்கள் சொன்னார்கள்;ஓதுங்கள். பிறரிடமிருந்து கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சூரத்து நிஸாவை ஓதினார்கள்;
فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدً
நபியே! அந்த காட்சியை நினைத்துப் பாருங்கள், ஒவ்வொரு உம்மத்திலும் ஒரு சாட்சியாளரை கொண்டு வருவோம், அவர்களுக்கெல்லாம் சாட்சியாக உம்மை கொண்டு வருவோம் என்ற வசனத்தை (அல்குர்ஆன் 4 : 41)ஓதும் பொழுது நபியவர்கள் இப்னு மஸ்ஊதிடம்கொஞ்சம் நிறுத்துங்கள் கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொன்னார்கள்.
இப்னு மஸ்ஊத் அவர்கள் ஓதுவதை நிறுத்திவிட்டு நபியை பார்த்தார்கள்.
فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ
அவர்களுடைய கண்களில் இருந்து அப்படியே கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
நூல் : புகாரி, எண் : 5050.
இமாம் இப்னு பத்தா ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்;
ஏன் நபியவர்களுடைய கண்களில் இருந்து அவ்வளவு கண்ணீர் வந்தது? மறுமையின் திடுக்கங்களை நினைத்து பார்த்திருப்பார்கள்;அல்லாஹ் தன்னுடைய உம்மத்திற்கும், மக்களுக்கும் தன்னை சாட்சியாளராக கொண்டு வருவானே!என்பதை நினைத்து பார்த்திருப்பார்கள்.
மக்களெல்லாம் சிபாரிசுக்காக தன்னிடம் ஓடி வருவார்களே!என்பதை எல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு அவ்வளவு பெரிய அழுகையை கொடுத்தது.
அப்துல்லாஹ் இப்னு ஷகீல் ரழியல்லாஹூ அன்ஹுஅவர்கள் ஒரு சம்பவத்தை சொல்கிறார்கள்.
ஒருமுறை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழும்போது நான் வந்தேன். அவர்கள் அப்போது அழுதுகொண்டிருந்தார்கள். தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள்.அடுப்பில் ஒரு பாத்திரம் கொதிக்கும் போது எப்படி சத்தம் வருமோஅது போன்ற ஒரு சத்தம் அவருடைய நெஞ்சில் இருந்து வந்து கொண்டிருந்தது. (7)
முஸ்னது அஹ்மது, எண் : 15877; நசாயி எண் : 1214, தரம் : சஹீஹ்.
அன்பிற்குரியவர்களே! இப்படி பல சம்பவங்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுடைய வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம்.
ஒரு நாள் இரவு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களோடு இருந்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்ஆயிஷாவே என்னை விடு, நான் அல்லாஹ்வை வணங்க செல்ல வேண்டும். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் எனது அருகில் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு எது பிடிக்குமோ அது எனக்கும் விருப்பம் என்று சொன்னவுடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எழுந்து உளூச் செய்து விட்டு தொழ ஆரம்பித்தார்கள். அழ ஆரம்பித்தார்கள், அழுதார்கள்அழுதார்கள் அவர்களுடைய தாடி நனைந்து நெஞ்சும் நனைந்து அப்படியே அவர்கள் தொழுது கொண்டிருந்த இடமும் நனைந்துவிட்டது. இப்படி அழுது கொண்டிருக்கும் பொழுது சுபஹுடைய நேரம் வந்துவிட்டது.
பிலால் அவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை பார்த்தவுடன், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்து இருக்க நீங்கள் இப்படி அழுகிறீர்களே? என்று சொன்னவுடன் நபியவர்கள் சொன்னார்கள்;அல்லாஹ்விற்கு நன்றி உள்ள அடியானாக நான் இருக்க வேண்டாமா?இன்று இரவு அல்லாஹ் எனக்கு ஒரு வசனத்தை இறக்கினான், அதை சிந்திக்காதவர்களுக்கு நாசம் உண்டாகட்டுமாக! என்று கூறினார்கள். (8)
நூல் : இப்னு ஹிப்பான் :2386, தரம் : சஹீஹ்.
அன்பு சகோதரர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை தங்களுடைய மகளார் ஒருவரை அடக்கம் செய்யும் பொழுது, கப்ருக்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். யார்இன்று இரவு தன்னுடைய மனைவியோடு சேர வில்லையோ அவர் என்னுடைய மகளை அடக்கம் செய்வதற்கு கப்ரில் இறங்கட்டும். அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறங்குகிறார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், தங்களது மகளை கொடுத்தார்கள். அவர்கள் அடக்கம் செய்கிறார்கள். அந்த நேரத்திலே அறிவிக்கக் கூடிய சஹாபி அனஸ் சொல்கிறார்கள்;
فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது.(9)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1285.
நினைத்துப் பாருங்கள் சகோதரர்களே! இன்று நம்மில் பலருடைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? தங்களுடைய தாயை, தந்தையை, இரத்த உறவை அடக்கம் செய்யும்போது கூட அங்கே அவர்களுக்கு அழுகை வருவதில்லை. அங்கு அவர்களுக்கு உள்ளம் நடுங்குவது இல்லை. கப்ரில் அடக்கம் செய்கிறோம், இன்று இவர், நாளை நான், என்ற ஒரு உணர்வு இருப்பதில்லையே! எங்கு பார்த்தாலும் வெட்டிப்பேச்சுக்கள்.
அன்பு சகோதரர்களே! ஒரு உண்மையைச் சொல்கிறேன். இதே சென்னை நகரில்ஒரு மையத்தை அடக்கம் செய்வதற்காக அங்கு குழி ஏற்பாடு செய்யப்பட்டு அடக்கம் செய்வதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. வந்திருப்பவர்களில் சிலர் சினிமாக்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பல கூட்டத்தார்கள் இன்னும் வெட்டி பேச்சுகளை பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே ஒருவர் பயான் செய்கிறார், அதைக்கூட கவனிக்காமல் இருக்கிறார்கள் என்றால், உள்ளங்கள் எந்த அளவுக்கு செத்துவிட்டது என்பதை நினைத்துப் பாருங்கள். இப்படி பல சம்பவங்களை நாம் பார்க்கின்றோம்.
ரசூலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையின் போது அழுததை நாம் பார்க்கிறோம்.
இரவுத் தொழுகையில், குர்ஆனுடைய வசனங்களை ஓதும் போது அழுததை நாம் பார்க்கிறோம்.(10)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபுதாவூது,எண் : 1194,தரம் : சஹீஹ் (அல்பானி)
அன்பு சகோதரர்களே! இந்த அழுகை என்பது மிக முக்கியமானது. குர்ஆனை ஓதும் போது அழுக வேண்டும். அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கும் போது அழுக வேண்டும்.சுஜூதில் அழுக வேண்டும். தனிமையிலே இருக்கும்பொழுது, அல்லாஹ்வுடைய நிஃமத்களை எண்ணி அழவேண்டும். நாம் செய்த பாவங்களை நினைத்து நாம் அழ வேண்டும். அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை கேட்டு நாம் அழவேண்டும். நரகத்திலிருந்து பாதுகாவல் தேடி அழ வேண்டும்.
எந்த அளவு அழுகையை கொண்டு இந்த உள்ளத்தை நனைத்து, நாம் பசுமையாக வைத்துக்கொள்வோமோ, கண்டிப்பாக அல்லாஹ்வுடைய குர்ஆன், அத்தகைய உள்ளங்களில் தான் பலன் ஏற்படுத்தும். அத்தகைய உள்ளங்களில் தான் அல்லாஹ்வுடைய குர்ஆன், நபியுடைய ஹதீஸ்கள் நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.
அவர்கள் தான் அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களை பேணுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வுடைய அன்புக்காக ஏங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து பயப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலாவிடத்திலேநாம் துஆ கேட்க வேண்டும்.
அல்லாஹு தஆலா நமக்கும் அத்தகைய உள்ளத்தை தருவானாக! அத்தகைய கண்களை தருவானாக!
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்அல்லாஹ்வின் அச்சத்தால் அழாத கண்களிலிருந்து பாதுகாவல் தேடினார்கள். யா அல்லாஹ்! பலன் தராத கல்வியை விட்டும், அழாத கண்களை விட்டும், நான் உன்னிடத்திலே பாதுகாவல் தேடுகிறேன்! என்று பாதுகாவல் தேடினார்கள்.
நூல் : ஃபத்ஹுல் பாரி
அப்படி என்றால்அழுகாமல் இருப்பது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்! ஒரு மனிதருடைய ஆன்மா கெட்டு விட்டது என்பதற்குரிய அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹு தஆலா எனக்கும்உங்களுக்கும் ஈமானுடைய பண்புகளை, குணங்களை, ஷிஃபாத்துகளை தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ المَسْعُودِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ مَوْلَى أَبِي طَلْحَةَ مَدَنِيٌّ (سنن الترمذي-1633) حكم الألباني] : صحيح
குறிப்பு 2)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ"(صحيح البخاري-660)
குறிப்பு 3)
حَدَّثَنِي عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَعْرَقُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ حَتَّى يَذْهَبَ عَرَقُهُمْ فِي الأَرْضِ سَبْعِينَ ذِرَاعًا، وَيُلْجِمُهُمْ حَتَّى يَبْلُغَ آذَانَهُمْ»(صحيح البخاري6532 -)
குறிப்பு 4)
يُرْسَلُ البكاءُ على أهلِ النارِ ، فيَبْكُونَ حتى تنقطِعَ الدموعُ ، ثُمَّ يبكونَ الدَّمَ ، حتى يصيرَ في وجوهِهِم كهيئَةَ الأخدودِ ، لو أرسلَتْ فيه السفنُ لجرَتْ.الراوي: أنس بن مالك | المحدث: الألباني | المصدر: صحيح الجامع الصفحة أو الرقم: 8083خلاصة حكم المحدث: حسن التخريج: أخرجه ابن ماجه (4324)
குறிப்பு 5)
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا ابْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ الْأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ حُمَيْدَ بْنَ عُبَيْدٍ، مَوْلَى بَنِي الْمُعَلَّى يَقُولُ: سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ يُحَدِّثُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِجِبْرِيلَ: «مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكًا قَطُّ؟ قَالَ مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ»(مسند أحمد13343 -)
தரம் : இமாம் அல்பானி இந்த ஹதீஸை சில இடங்களிலயீஃப் என்றும் இன்னும் சில இடங்களில் ஹசன் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் ஸுயூதி ஹசன் என்று கூறியுள்ளார்கள்.
குறிப்பு 6)
حَدَّثَنَا أَبُو زُرْعَةَ قَالَ: نَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِالْمَلَإِ الْأَعْلَى، وَجِبْرِيلُ كَالْحِلْسِ الْبَالِي مِنْ خَشْيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ»المعجم الأوسط4679 - )
குறிப்பு 7)
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ قَالَ: «انْتَهَيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي وَلِصَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ»(مسند أحمد16317 -)
குறிப்பு 8)
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ النَّخَعِيِّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، قَالَ: دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، عَلَى عَائِشَةَ فَقَالَتْ لِعُبَيْدِ بْنِ عُمَيْرٍ: قَدْ آنَ لَكَ أَنْ تَزُورَنَا، فقَالَ: أَقُولُ يَا أُمَّهْ كَمَا قَالَ الْأَوَّلُ: زُرْ غِبًّا تَزْدَدْ حُبًّا، قَالَ: فَقَالَتْ: دَعُونَا مِنْ رَطَانَتِكُمْ هَذِهِ، قَالَ ابْنُ عُمَيْرٍ: أَخْبِرِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ [ص:387] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَسَكَتَتْ ثُمَّ قَالَتْ: لَمَّا كَانَ لَيْلَةٌ مِنَ اللَّيَالِي، قَالَ: «يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي» قُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ، وَأُحِبُّ مَا سَرَّكَ، قَالَتْ: فَقَامَ فَتَطَهَّرَ، ثُمَّ قَامَ يُصَلِّي، قَالَتْ: فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ حِجْرَهُ، قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ لِحْيَتَهُ، قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ الْأَرْضَ، فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ، فَلَمَّا رَآهُ يَبْكِي، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ تَبْكِي وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا، لَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ آيَةٌ، وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ ... }» الْآيَةَ كُلَّهَا [آل عمران: 190]. [5: 47](صحيح ابن حبان 620 -) تعليق الألباني] حسن - «الصحيحة» (68)، «التعليق الرغيب» (2/ 220).تعليق شعيب الأرنؤوط] إسناده صحيح على شرط مسلم.
குறிப்பு 9)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: شَهِدْنَا بِنْتًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عَلَى القَبْرِ، قَالَ: فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ، قَالَ: فَقَالَ: «هَلْ مِنْكُمْ رَجُلٌ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ؟» فَقَالَ أَبُو طَلْحَةَ: أَنَا، قَالَ: «فَانْزِلْ» قَالَ: فَنَزَلَ فِي قَبْرِهَا (صحيح البخاري1285)
குறிப்பு 10)
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَكَدْ يَرْكَعُ، ثُمَّ رَكَعَ، فَلَمْ يَكَدْ يَرْفَعُ، ثُمَّ رَفَعَ، فَلَمْ يَكَدْ يَسْجُدُ، ثُمَّ سَجَدَ، فَلَمْ يَكَدْ يَرْفَعُ، ثُمَّ رَفَعَ، فَلَمْ يَكَدْ يَسْجُدُ، ثُمَّ سَجَدَ، فَلَمْ يَكَدْ يَرْفَعُ، ثُمَّ رَفَعَ وَفَعَلَ فِي الرَّكْعَةِ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ نَفَخَ فِي آخِرِ سُجُودِهِ، فَقَالَ: «أُفْ أُفْ»، ثُمَّ قَالَ: «رَبِّ، أَلَمْ تَعِدْنِي أَنْ لَا تُعَذِّبَهُمْ [ص:311] وَأَنَا فِيهِمْ؟ أَلَمْ تَعِدْنِي أَنْ لَا تُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ؟» فَفَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَلَاتِهِ، وَقَدْ أَمْحَصَتِ الشَّمْسُ، وَسَاقَ الْحَدِيثَ (سنن أبي داود 1194 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/