மறுமை நெருங்கிவிட்டது! | Tamil Bayan - 537
மறுமை நெருங்கிவிட்டது
ஜுமுஆ குத்பா தலைப்பு : மறுமை நெருங்கிவிட்டது
வரிசை : 537
இடம் : மஸ்ஜிதுல் ஃபிர்தவ்ஸ், ஊட்டி
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 26-10-2018| 17-02-1440
بسم الله الرحمن الرّحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய சகோதரர்களே! நாம் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தை விட்டு நாம் தூரமாகி கொண்டே செல்கிறோம். மறுமைக்கு மிக நெருக்கமாகிக்கொண்டே செல்கிறோம்.
இந்த உலகத்தில் நம்முடைய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரம் கழிவதும் நம்மை இந்த உலகை விட்டு தூரமாக்குகிறது; மறுமைக்கு நெருக்கமாக்குகிறது.
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றை ஹதீஸுடைய அறிஞர்கள் பதிவு செய்கிறார்கள் :
இந்தஉலகத்தில்நம்முடையஒவ்வொருநாளும்ஒவ்வொருமணிநேரம்கழிவதும்நம்மைஇந்தஉலகைவிட்டுதூரமாக்குகிறது;மறுமைக்குநெருக்கமாக்குகிறது.
அலிரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய கூற்றை ஹதீஸுடைய அறிஞர்கள் பதிவு செய்கிறார்கள் :
}وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ارْتَحَلَتْ الدُّنْيَا مُدْبِرَةً وَارْتَحَلَتْ الْآخِرَةُ مُقْبِلَةً وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ فَكُونُوا مِنْ أَبْنَاءِ الْآخِرَةِ وَلَا تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا{
இந்த உலகம் பின்னோக்கி சென்றுக் கொண்டே இருக்கிறது. மறுமை நம்மை முன்னோக்கி வந்து கொண்டே இருக்கிறது.
இந்த இரண்டுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். துன்யாக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்; ஆகிரத்துக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
துன்யாவுடைய பிள்ளைகளாக இருந்து விடாதீர்கள். நீங்கள் ஆகிரத்திற்குரியவர்களாக ஆகிரத்தை தேடக்கூடியவர்களாக இருங்கள்.
நூல் : புகாரி,பாடம் : ஆசைப்படுதல்.
துன்யாவில் இதனுடைய சிற்றன்பங்களில் உங்கள் மனங்களை தொலைத்து உங்கள் தேடல்களை இந்த துன்யாவோடு சுருக்கிக்கொண்டு இந்த ஆசைகளில் மூழ்கி மறுமையை நஷ்டமாக்கிக் கொள்ளாதீர்கள் என்ற கருத்தில்அலிரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் ஆகிரத்துடைய பிள்ளைகளாக இருங்கள் துன்யாவுடைய பிள்ளைகளாக இருந்து விடாதீர்கள் என்று.
சகோதரர்களே! நம் ஒவ்வொருவருக்கும் மறுமை நெருங்கிவிட்டது என்பதாக தெரியும்.ஆனால் நாம் மறந்துவிட்ட மிகப் பெரிய காரியங்களில் மறுமையும் ஒன்று.
அந்த அளவு மறதி நம்மை இன்று சூழ்ந்துள்ளது. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! இன்று நம்மில்பலருக்கு மஸ்ஜிதுக்குள் வந்த பிறகு கூட மறுமையின் நியாபகம் வருவதில்லை.
தொழுகையில் நின்ற பிறகு கூட அவர்களுக்கு மறுமையின் நினைவு வருவதில்லை.
எந்த ஒருஅடியான் அல்லாஹ்விற்கு முன்னால் தொழுவதற்கு நிற்கின்றானோ அவன் அல்லாஹ்வை பற்றி சொர்க்க நரகங்களை பற்றி தான் சிந்திக்க வேண்டும்..
துன்யாவுடைய எந்த ஒரு விஷயங்களையும் காரியங்களையும் சிந்திக்கக்கூடாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:
யார்ஒருவர்அழகானமுறையில்உளூசெய்து,இரண்டுரக்அத்கள்தொழுவாரோஅதில்வீணான எண்ணங்களை அவர் கொண்டு வராமல் இருந்தால் அவருடைய முன்சென்ற எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். (1)
அறிவிப்பாளர் : உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 155, 159
இந்த தொழுகையில்கூட இன்று பலர் மறுமையை மறந்துதான் தொழுகிறார்கள்.
தொழுகிறார்கள், ஆனால் தொழுகையில் எதை நினைக்க வேண்டுமோ அதை நினைக்காமல், தொழுகையில் என்ன அச்சம் வரவேண்டுமோ, அது இல்லாமல் தொழுகிறார்கள்.
நாம் தொழுகையில் ஓதக்கூடிய ஒவ்வொரு வசனமும் மறுமையின் நினைவை நமக்கு அதிகப்படுத்தக்கூடிய வசனங்கள். இந்த துன்யாவின் மீது ஒரு பற்றற்ற நிலையை நமக்கு ஏற்படுத்தக்கூடிய வசனங்கள்.
ஒன்று, அந்த வசனங்களின் பொருள் தெரியாத காரணம். அல்லது நாம் தொழுகையில் தான் நிற்கிறோம் என்ற உணர்வில்லாமல் இன்று நிற்கின்ற காரணத்தால் ஸுஜூதில் சென்ற பின்பும் கூட துன்யாவை நினைக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். (அல்லாஹ் மன்னிப்பானாக!)
நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் :
أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ
அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக அடியான்இருப்பது ஸுஜூதில்இருக்கும்போதுதான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 744.
தக்பீர் கட்டிவிட்டால் அல்லாஹ்விடத்தில் அவன் பேச ஆரம்பித்துவிடுகிறான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (2)
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 396,500
எப்போது அடியான் தன்னுடைய முகத்தை அல்லாஹ்விற்காக மண்ணில்பதிய வைத்து விடுகிறானோ அவன் அல்லாஹ்விற்கு மிக சமீபமானவனாக ஆகிவிடுகின்றான். ஆகவே ஸுஜூதில் அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆ கேளுங்கள் என்று சொன்னார்கள்.
அந்த ஸுஜூதில் கூட நமக்கு துன்யாவுடைய தேவைகள், தாம் செய்த பாவங்கள் கூட நினைவுக்கு வரலாம்.
அடியான் எதை உள்ளத்தில் வைத்திருக்கிறானோ அது தொழுகையில் அவன் நினைவுக்கு வரும் என்பது அறிஞர்களின் கூற்று.
ஸஹாபாக்களுக்கு அவர்களது உள்ளத்தில் மறுமை இருந்தது. சொர்க்கத்தைப் பற்றிய தேடல் இருந்தது. நரகத்தைப் பற்றிய பயம் இருந்தது. எனவே அவர்களுடைய தொழுகை அழுகை நிரம்பிய தொழுகையாக, ஆகிரத்துடைய ஆசை நிரம்பிய தொழுகையாக, அல்லாஹ்விடத்தில் மறுமையை கேட்கக்கூடிய ஒரு தொழுகையாக இருந்தது.
ஆனால் இன்று நம்மில் பலர் இந்த தொழுகையை ஒரு கடமையான சடங்காக மட்டுமே பாவித்துக் கொண்டிருக்கிறாரகள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அன்பு சகோதரர்களே! மறுமையின் நினைவு, இது இந்த மார்க்கத்தின் உடைய மிகவும் முக்கியமான அடிப்படை. இதுதான் குர்ஆன் வலியுறுத்திச் சொல்லக்கூடிய அடிப்படை.
அல்லாஹ்வுடைய நம்பிக்கையை சொல்லக்கூடிய குர்ஆன், ஹதீஸ், அல்லாஹ்வுடையை நம்பிக்கையையும் சேர்த்து மறுமையையும் சொல்லிக் கொண்டே இருக்கும்.
அல்லாஹ்வின் நம்பிக்கையிலிருந்து மறுமையின் நம்பிக்கையை பிரிக்கமுடியாது.
நீங்கள் குர்ஆனை எடுத்து வாசித்துப் பாருங்கள், ஹதீஸை எடுத்து வாசித்துப் பாருங்கள்.
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டிருந்தால்.(4)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 4787, 5559, 5560.
குர்ஆனுடைய வசனங்கள் எல்லாம் இப்படிதான் அமைந்திருக்கும்.
அல்லாஹு தஆலா உலகத்தில் நபிமார்களை அனுப்பியதே இந்த மறுமையை குறித்து எச்சரிக்கை செய்வதற்காகத் தான்.
இந்த உலகத்தில் அல்லாஹு தஆலா நம்மை படைத்ததே நாம் ஆகிரத்திற்கு நன்மையை செய்து இந்த உலகத்திலிருந்து நற்பாக்கியம் பெற்ற நன்மக்களாக அல்லாஹ்விடத்தில் வரவேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த உலகம் தான் நமக்கு வாழ்க்கை என்றால் இதற்குப்பிறகு வேறு வாழ்க்கை இல்லையென்றால் இந்த உலகத்தில் அல்லாஹு தஆலா மரணத்தை படைத்திருக்கமாட்டான். இந்த உலகத்தில் யாருக்கும் அழிவைப் படைத்திருக்கமாட்டான்.
இந்த உலகம் தான் எல்லாம் என்று இருந்திருக்குமானால் இந்த உலகத்தில் அல்லாஹு தஆலா நோய்நொடிகளை வைத்திருக்கமாட்டான். வயோதிகத்தை வைத்திருக்கமாட்டான். மரணத்தை வைத்திருக்கமாட்டான்.
மறுமைதான் எல்லாம்.
وَمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! (அல்குர்ஆன் 29 : 64)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (அல்குர்ஆன் 87 : 17)
அன்பு சகோதரர்களே! அந்த மறுமைக்காகத்தான் அல்லாஹ் நம்மைப் படைத்து இருக்கிறான். எனவே தான் மரணத்தை அல்லாஹ் வைத்திருக்கிறான். அந்த மரணத்தை நினைவூட்டக் கூடிய வயோதிகத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கின்றான்.
أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ
(அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அல்குர்ஆன் 35 : 37)
குர்ஆனுடைய விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிர்கள்) கூறுகிறார்கள்:ஒரு மனிதனுடைய தலையிலோ தாடியிலோ முடி நரைக்க ஆரம்பித்து விட்டால், அதுதான் நதீர்نذيرஅவனுக்கு மரணத்துக்கு மறுமைக்குண்டான ஒரு அறிவிப்பு என்றார்கள்.
அந்த அறிவிப்பு வந்தப்பிறகும் கூட மவுத்துடைய பயமில்லாமல் ஆகிரத்துடைய தயாரிப்பு இல்லாமல் அலட்சியத்தில், வீண் விளையாட்டுகளில், வேடிக்கையில், மார்க்கத்தை புறக்கணித்த நிலையில் முஸ்லிம் ஆண்கள், பெண்களுடைய நிலை இருக்கிறது என்றால், இந்த ஆகிரத்தை, மறுமையை, மார்க்கத்தைத் தெரியாத மக்களுக்கு இவர்கள் என்ன மார்க்கத்தை இஸ்லாமை எடுத்துச் சொல்லப் போகிறார்கள்?
அல்லாஹு தஆலா அவனது வேதம் அல்குர்ஆனில் மிகக் கடுமையாக, மிக எச்சரிக்கையாக அவன் சொல்கின்ற விஷயங்களில் ஒரு பட்டியலைத் தயாரியுங்கள்.
எதைப் பற்றியெல்லாம் என் ரப்பு மிகக் கடுமையாக பேசுகிறான், கோபத்தோடு பேசுகிறான், எச்சரிக்கையாகப் பேசுகிறான் என்று ஒரு பட்டியலைத் தயாரியுங்கள்.
நீங்கள் அப்படி ஒரு பட்டியலைத் தயாரித்தால் அதன் முதல் எண்ணில் மறுமையைத்தான் நீங்கள் வைக்கமுடியும். அந்த அளவு மறுமையைக் குறித்து அல்லாஹுத்தஆலா கடுமையாக எச்சரிக்கை செய்கிறான்.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ
மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். (அல்குர்ஆன் 22 : 1)
சிந்தித்துப் பாருங்கள், பூமியில் ஒரு சிறிய அளவு பூகம்பம் ஏற்பட்டு சில நொடிப்பொழுது கட்டிடம் அசைந்தால் நாம் எல்லாம் எப்படி பயப்படுவோம்! அல்லாஹ் பாதுகாப்பானாக!
மறுமையை நினைத்துப் பாருங்கள்.
إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ (1) لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ (2) خَافِضَةٌ رَافِعَةٌ (3) إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا (4) وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا (5) فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் -அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை. அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்; (நல்லோரை) உயர்த்தி விடும். பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது. இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். (அல்குர்ஆன் 56 : 1-6)
ரப்புல் ஆலமின்,அந்த நாள் வந்ததும் பூமி குலுக்கப்படும் என்று சொல்கிறான். பெரும் மலைகளும் சிகரங்களும் பொடிப்பொடியாக மாற்றப்பட்டுவிடும். எப்பேற்ப்பட்ட பயங்கரமான நிகழ்வாக இருக்கும் யோசித்துப் பாருங்கள்.
وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -(அல்குர்ஆன் 69 : 14)
பூமியை ஒரு வானவர் கையில் எடுப்பார் அதிலுள்ள மலைகளை இன்னொருப் பக்கமாக வாரிச்சுருட்டுவார் இரண்டையும் ஒன்றோடு ஒன்று மோத விடுவார். அவ்வளவு தான்!
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். (அல்குர்ஆன் 101 : 5)
காற்றில் பறக்கக்கூடிய பஞ்சு நூல்களைப் போல அந்த மலைகள் சுக்குநூர்களாகப் பறக்க ஆரம்பித்துவிடும்.
இப்படிப்பட்ட எச்சரிக்கை நமக்கு இந்த குர்ஆனில் கொடுக்கப்பட்டும்கூட நம்முடைய நிலைமை என்ன?
ரப்புல் ஆலமீன் சொல்கிறான் :
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا (6) وَنَرَاهُ قَرِيبًا
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர். ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம். (அல்குர்ஆன் 70 : 6,7)
அன்பு சகோதரர்களே! உலகத்தை அல்லாஹ் படைத்து எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகத்தை அல்லாஹ் படைத்து அதில் ஆதமை வானத்திலிருந்து பூமியில் இறக்கி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. நம்மால் அதை மீட்டிக் கொண்டுவர முடியுமா? கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா?
நமது 60 அல்லது 70 வருட வாழ்க்கையை ஒரு பெரிய வாழ்க்கையாக நீண்ட ஒரு காலமாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே. எவ்வளவு பெரிய ஏமாற்றம் பாருங்கள்.
ஏன் நம்முடைய வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பாருங்கள். உங்கள் வயதை வாழ்க்கையில் ஒரு முறை திரும்பி பாருங்கள். இந்த உலகத்தில் நீங்கள் கழித்த நாட்களை திரும்பி பாருங்கள்.
எத்தனை நூறு நாட்களை நூறு மாதங்களை கடந்து வந்திருக்கிறீர்கள்.
அதைப்பற்றி கேட்கப்பட்டால் எப்படிப் போனதே தெரியாது என்று சொல்வீர்கள்.
சகோதரர்களே! தன்னுடைய மரணத்திற்கு ஒரு நாளை நிர்ணயிக்க முடியுமா?
அல்லாஹு தஆலா இரண்டு விதமான மறுமையை நினைவூட்டுகிறான்.
ஒன்று, இந்த உலகத்திற்கான மறுமை. அது கண்டிப்பாக உண்டு.
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ (1) وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ (2) وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ (3) وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ (4) وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ (5) وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ (6) وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது- நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-மலைகள் பெயர்க்கப்படும் போது- சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-கடல்கள் தீ மூட்டப்படும்போது-உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-(அல்குர்ஆன் 81 : 1-7)
இந்த மறுமை ஏற்படத்தான் போகிறது.அதற்கு முன்பாக நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடிய மரணம், அது நம்முடைய மறுமை. அது ஒரு சிறிய மறுமை.
ஆகவே தான் ஹதீஸில் அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.
"அல்கியாமத்துஸ்ஸுகுரா,அல்கியாமத்துல் குபுரா" ஒன்று, சிறிய மறுமை.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனது கியாமத் ஏற்பட்டுவிட்டது.
அடுத்து இந்த மொத்த உலகத்திற்கும் அல்லாஹ் கியாமத்தை வைத்திருக்கிறான்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால்,அடுத்து கப்ரில் விசாரணையை சந்திக்க வேண்டும். அவனுடைய கப்ரு ஒன்று சொர்க்கப்பூங்காவாக அல்லது நரகப்படுகுழியாக இருக்கும்.
அல்லாஹு தஆலா மறுமையை எப்படி எல்லாம் எச்சரிக்கை செய்கிறான். மறுமை என்ற பேச்சு வரும்போதே அல்லாஹு தஆலா அதை எப்படி எடுக்கிறான் என்றால்,
أَتَى أَمْرُ اللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன். (அல்குர்ஆன் 16 : 1)
அது எப்போது வருமோ தெரியவில்லை என்று நாம் நினைக்கிறோம். அதை தூரமாக காண்கிறோம்.
அல்லாஹ் சொல்கிறான் :
اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ (1) وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ
(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 54 : 1,2)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய ஹதீசை இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்.
நானும் மறுமை நாளும் இவ்விரு விரல்களைப்போன்று அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறி தனது ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (4)
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 4889.
அல்லாஹ்வின் தூதர் அனுப்பப்பட்டது மறுமையின் அடையாளங்களில் ஒன்று.
ஏன்? இதற்குப் பிறகு நபிமார்கள் வரப்போவது இல்லை. இதற்கு பிறகு ஒரு உம்மத்து இல்லை.இந்த உலகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தேதியை அல்லாஹ் முடிவு செய்துவிட்டான். அல்லாஹ்வின் தூதரை அனுப்பியதோடு இனி ஒரு ரஸுல் இல்லை.
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய பிறப்புக்கான நேரமும் வந்து அவர்களும் பிறந்து அவர்கள் நபியாக ஆவதற்கான நாளும் வந்து அவரகளும் நபியாக ஆக்கப்பட்டு அவர்களும் இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டார்கள். இனி நாம் வேறு எதை எதிர்பார்க்கிறோம்?
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மரணித்து விட்டார்கள். அந்த அடையாளம் பூர்த்தியாகி விட்டது. இனி மறுமையை நோக்கித்தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். என்னென்ன சிறிய அடையாளங்களை எல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்களோ அந்த சிறிய அடையாளங்களில் ஒன்று கூட மிச்சமில்லை. எல்லா அடையாளங்களும் வந்துவிட்டன. இனி பெரிய அடையாளங்கள்தான் வர வேண்டி இருக்கிறது.
இன்னும் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா? மறுமை வெள்ளிக்கிழமையில் தான் வரும். இந்த வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் நாமெல்லாம் மறதியில் இருக்கிறோம்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள் :
மனிதர்களைத்தவிர ஜின்களைத்தவிர அல்லாஹ்வுடைய எல்லா படைப்புகளும் பயந்து கொண்டிருக்கின்றன. இந்த வெள்ளிக்கிழமை ஆகிரத்துடைய வெள்ளிக்கிழமையாக இருக்குமோ என்று.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி,எண் : 1413.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இதுபோன்று பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டப் பிறகு அவருக்கு நடக்கக்கூடிய அந்த தண்டனையினால் அவன் கத்தக்கூடிய கதறல் சத்தம் மனிதர்களைத் தவிர ஜின்களைத்தவிர எல்லா மிருகங்களும் கேட்கின்றன. மனிதர்களுக்கு அந்த சப்தம் கேட்டுவிட்டால் அவர்கள் தங்கள் இறந்தவர்களை கப்ரில் அடக்கம் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.(6)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1252, அபூதாவூது: 4127.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மறுமையை குறித்து சொல்லும்போது, அது திடீரென வரும் என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வும் அப்படித்தான் கூறுகிறான். குர்ஆனை எடுத்து அதை வாசித்துப் பாருங்கள்.
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
(நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 7:187)
அது வரும், ஆனால் திடீரென்று தான் வரும்.
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் :
எந்த அளவு மறுமையின் நிகழ்வு மக வேகமாக இருக்குமென்றால், இரு மனிதர்கள் வியாபாரம் செய்வதற்காக ஒரு துணியை விரித்து விலை பேசிக் கொண்டிருப்பார்கள். வாங்கக்கூடியவர் அதற்கான விலையைக் கூறுவார், விற்பவர் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு மடித்து தருகிறேன் என்று மடிப்பதற்குள் ஆகிரத் வந்துவிடும்.
மேலும் சொன்னார்கள் : ஒரு மனிதன் தன்னுடைய ஆட்டிலிருந்து மாட்டிலிருந்து ஒட்டகத்திலிருந்து குடிப்பதற்காக பாலைக் கறப்பான். அதைக் குடித்திருக்க மாட்டான். அதற்குள் மறுமை வந்துவிடும்.
ஒருவன் தன் கால்நடைகளுக்கு நீர் புகட்டுவதற்காக நீர் தொட்டியை சரிசெய்வான். சரிசெய்து முடித்து அந்த கால்நடைகளுக்கு தண்ணீரைக் கொடுப்பதற்குள் மறுமை வந்துவிடும் என்பதாக. (7)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6025.
அன்பான சகோதரர்களே! இந்த இடத்தில் இரண்டு விதமான மறுமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று மனிதனுக்கு வரக்கூடிய தனிப்பட்ட மறுமை. அதாவது மரணம்.
இன்று நாம் பார்க்கிறோம்; பத்திரிக்கைகளில் படிக்கிறோம். Heart attack - நெஞ்சு வலியின் காரணமாக ஏற்படும் மரணங்கள்.
சாப்பிடுவதற்கு ஒரு கவலம் எடுத்து வைப்பதற்குள் அப்படியே படுத்துவிடுகிறார். வீட்டிற்கு வருகிறார் தன் வாகனத்தை தானே ஓட்டி வந்து நிறுத்திவிட்டு வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருக்கும்போதே அப்படியே படுத்துவிடுகிறார்.
நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு அல்லாஹு தஆலா இன்று திடீர் மரணங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறான்.
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள்: மறுமையின் அடையாளங்களில் ஒன்று, திடீர் மரணங்கள் அதிகமாகிவிடும்.
நூல் : முஃஜம் கபீர் தப்ரானி, எண் : 1132.
முந்தைய காலங்களில் நம் முன்னோர்களுடைய வாழ்க்கையை நாம் பார்க்கிறோம். கொஞ்சம் படுத்த படுக்கையில் இருப்பார்கள். நோய் நொடியில் இருப்பார்கள். தவ்பா, இஸ்திஃக்ஃபார் செய்வார்கள். உறவினர்களை அழைத்து அவர்களோடு சமரசம் செய்து கொள்வார்கள். எல்லோரிடத்திலும் நல்ல முறையாக பேசி உறவுகளில் ஏற்பட்ட அந்த விரிசல்களை எல்லாம் சரி செய்து கொண்டு அவர்களுக்கு அந்த நோய்களை அல்லாஹ் கஃப்பாராவாக ஆக்கிவைப்பான்.
அப்படியே படுத்த படுக்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மரணிப்பார்கள். அது அவர்களுக்கு பெரிய ரஹ்மத்.
பார்ப்பவர்களாகிய கவனிப்பவர்களாகிய நமக்கு வேண்டுமானால் சில சமயங்களில் சிரமமாக தோன்றலாம்.
ஆனால் அப்படி அவர்கள் அந்த மரணம் படுக்கையில் சிரமம் படும்போது அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு மறுமைக்கான தரஜாத்துக்களை பூர்த்தி செய்கிறான்.
ஆனால், இன்று எத்தனை பேருக்கு வாகனத்தில் செல்லும்போது மரணம். விமானங்களில் செல்லும்போது மரணம். இன்னும் எத்தனை வகையான திடீர் மரணங்கள். இன்னும் ஒரு விஷயத்தை சொல்வதாக இருந்தால், இன்று நம்மில் பலருக்கு தன்னுடைய உறவுகளை பார்க்க முடியாத வகையில் உறவுகளிடததில் பேச முடியாத நிலையில் மரணம் வருகிறதென்றால் அது மிகையான வார்த்தையல்ல.
கொஞ்சம் காசு பணம் செல்வம் இருந்தால் நோய் நொடி என்றாலே மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள்.
அங்கே சென்றவுடன் கணவனை மனைவியிடமிருந்து தகப்பனை பிள்ளையிடமிருந்து பிரித்து ஒரு கைதியைப் போன்ற அவசர சிகிச்சை பிரிவில் அடைத்து விடுகிறார்கள்.
மனைவி விரும்பிய நேரத்தில் அவரை பார்க்க முடியாது; பிள்ளைகள் பார்க்க முடியாது; அவர்கள் நினைத்த நேரத்தில் தான் பார்க்க முடியும்.
மரண நேரத்தில் தன் தகப்பனுக்கு ஒரு கலிமாவை நினைவூட்டுவதற்குக்கூட ஒரு பெற்ற பிள்ளையால் முடியாது.
இறந்தப்பிறகு செய்தி சொல்வார்கள், உங்கள் தகப்பனார் இறந்துவிட்டார்கள் என்று. பணம் செலுத்திவிட்டு பிரேதத்தை எடுத்துச் செல்லுங்கள் என்பதாக.
ஏன்? இந்த வாழ்க்கையின் மீதான பேராசை!
அதற்காக மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மரணத்தின் அறிகுறிகள் நன்றாக தெரிகிறது.
ஆனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என் தகப்பனாரை காப்பாற்றுங்கள் என்பதாக சொல்கிறார்கள்.
அவர் காப்பாற்றுவதற்கு அந்த மருத்துவர் என்ன அல்லாஹ்வா? உயிரை யாரால் காப்பாற்ற முடியும்? அல்லாஹ்வால்தான் காப்பாற்ற முடியும்.
அல்லாஹு தஆலா யூதர்களுக்கு கூறினான் :
وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன்2:96)
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை விடவா இந்த பூமியில் வாழ்ந்து சாதனைகளை செய்யக்கூடிய ஒரு மனிதன் இருக்க முடியும்!? அல்லாஹ்வுடைய தூதரைப் பற்றி சொன்னார்கள். தூதருடைய மார்க்கத்தைப் பற்றி சொன்னார்கள்.இந்த அபூபக்ர் உயிரோடு இருக்கின்ற வரை இந்த மார்க்கத்தில் யாரும் எந்தவிதமான குறையும் ஏற்படுத்த முடியாது என்பதாக.
அவர்களுக்கும் மவ்த் வருகின்றது. 62 வயதை தாண்டிவிட்டார்கள். அந்த நேரத்தில் அவர்களும் மரணம் படுக்கையில் படுக்கிறார்கள். அத்தனை தோழர்களும் வருகிறார்கள். உங்களுக்கு நாங்கள் மருத்துவரை அழைத்து வருகிறோம் என்று சொன்னார்கள்.
அந்த மருத்துவன் தான் எனக்கு இந்த நோயை கொடுத்திருக்கிறான். அவனே சுகமளிப்பான். அல்லாஹ்வையும் அவனது நபியையும் சந்திப்பதை விரும்புகிறேன் என்று சொன்னார்கள்.
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள் :
அல்லாஹ்வை சந்திப்பதை ஒரு அடியான் விரும்பினால் அல்லாஹ்வும் அவனை சந்திப்பதை விரும்புகிறான். அல்லாஹ்வை சந்திப்பதை ஒரு அடியான் வெறுத்தால் அல்லாஹ்வும் அவனை சந்திப்பதை வெறுக்கிறான்.
இந்த ஹதீஸை கேட்டவுடன் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்களுடைய மனைவி ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹாஅவர்கள் ஆடிப்போய் விடுகிறார்கள்.
அன்புக் கணவனாரே! நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன், எங்களில் எல்லோருக்கும் மரணம் என்றால் கொஞ்சம் கசப்பாகத்தானே இருக்கிறது. எங்களில் எல்லோரும் மரணத்தை வெறுப்பவராகத்தானே இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் விளக்கம் கூறினார்கள்: ஆயிஷா! அப்படியல்ல அர்த்தம். மரணம் பிடிக்காமல் இருப்பது அல்ல அர்த்தம்.
ஒரு மனிதனுக்கு மரணத்தருவாய் வந்துவிடும்போது ஆகிரத்துடைய பயணம் நெருங்கி விடும்போது அதற்குரிய அறிகுறிகள் தென்பட்டு விடும்போது அந்த நேரத்தில் ஒரு மனிதன் மரணத்தை வெறுக்காமல் அல்ஹம்துலில்லாஹ் நான் அல்லாஹ்வை சந்திக்கப் போகிறேன். நான் அல்லாஹ்வுடைய தூதரை சந்திக்கப் போகிறேன். சொர்க்கத்துக்குப் போவேன் இன்ஷா அல்லாஹ் என்ற நம்பிக்கையோடு மலர்ந்த உள்ளத்தோடு அவன் வரவேற்றால் இப்படிப்பட்ட அடியாரை சந்திப்பதற்கு அல்லாஹ்வும் ஆர்வத்தோடு இருப்பான். (8)
அறிவிப்பாளர் : உபாதா இப்னு சாமித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6026.
(யாரால் முடியும் இந்த காரியம்? யாரிடத்தில் ஈமான் இருக்குமோ, யாரிடத்தில் அமல்கள் இருக்குமோ, யாரிடத்தில் குர்ஆன் இருக்குமோ, யாரிடத்தில் திக்ரு துஆக்கள் இருக்குமோ, யார் ஷிர்க்கை விட்டு பித்அத்தை விட்டு பாவங்களை விட்டு விலகி இருப்பார்களோ அவர்களால் தான் இது முடியும்.)
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள் : இன்னொரு மனிதன் மரணப்படுக்கையில் இருக்கும்போது அறிகுறிகள் தெரியும்போது பயப்படுகிறான். அவனுடைய உள்ளமெல்லாம் அவன் விட்டுச் செல்லக்கூடிய சொத்து முகத்தில் இருக்கிறது. காசு பணத்தில் இருக்கிறது. பங்களாக்களில் இருக்கிறது ஆடம்பர வாழ்க்கையில் இருக்கிறது. நன்றாக தெரியும் தனது ஏட்டில் பாவங்களை தவிர வேறு எதுவுமில்லை என்பதாக.
இந்த நிலையில் அவனுக்கு மரணம் வரும்போது அவன் சொல்வான் :
وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)
وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63:11)
அந்த நேரத்தில் மரணம் அவனுக்கு வெறுப்பாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் சந்திப்பை அல்லாஹ்வும் வெறுப்பான்.
அன்பான சகோதரர்களே! உலகத்தின் தேவைகளில் உலக அலுவல்களில் எதை வேண்டுமானாலும் மறக்கலாம். அதனால் நமக்கு ஒரு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடப் போவது கிடையாது.
அப்படி ஏற்பட்டாலும் கூட அந்த நஷ்டம் மறுமையை மறப்பதை விட ஒரு பெரிய நஷ்டம் அல்ல.
மறுமையை மறப்பது, மார்க்கத்தை விட்டு தூரமாக வாழ்வது, பாவங்களோடு நெருக்கமாக வாழ்வது, இபாதத்துகளை விட்டு தூரமாக வாழ்வது, ஃபர்ளான கடமைகளை பாழாக்கி வாழ்வது எவ்வளவு பயங்கரமான ஒன்று என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஆகவே, நாம் எப்போதும் மறுமையை குறித்து அச்ச உணர்வோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள் சொல்லிக்கொடுத்த துஆக்களை ஓதி வரவேண்டும்.
நம்முடைய குடும்பத்தார்களுக்கு பிள்ளைகளுக்கு நாம் எச்சரிக்கை செய்ய வேண்டிய காரியங்களில் மிகப் பெரிய காரியம் மறுமையை குறித்து தான்.
அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனுக்கு இணை வைக்காதீர்கள்; மார்க்கத்தோடு வாழுங்கள்; மார்க்கத்தை விட்டு விலகி விடாதீர்கள்; அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும் கண்ணியப்படுத்த கூடியவர்களாக இருங்கள் என்ற இந்த உபதேசம் தான் நமது தலைமுறையை பாதுகாக்குமே தவிர அரசியலோ அரசியல் சட்டங்களோ இன்னும் மக்கள் எதையெல்லாம் பாதுகாப்பாக நினைக்கிறார்களோ அவை பாதுகாக்காது. அவை அனைத்தும் வீண் தான்.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொண்டால் அவர்களை பாதுகாக்கத் கூடிய பொறுப்பை அல்லாஹ் எடுத்துக் கொள்வான்.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தோடு நெருங்கி வாழ்வோமாக! அல்லாஹ்வின் தீனை நாமும் புரிந்து கற்று நம் சமுதாய மக்களுக்கு தீனை கற்றுக்கொடுத்து மறுமையை நினைத்து வாழக்கூடிய ஒரு சிறந்த சமுதாயமாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ عَنْ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلَاثًا ثُمَّ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا وَقَالَ مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ (صحيح البخاري 159 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ حَدَّثَنَا قَتَادَةُ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي الصَّلَاةِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ فَلَا يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلَا عَنْ يَمِينِهِ وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ (صحيح البخاري 396 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ عَنْ زَائِدَةَ عَنْ مَيْسَرَةَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِي جَارَهُ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا (صحيح البخاري 4787 -)
குறிப்பு 4)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ أَبُو حَازِمٍ سَمِعْتُهُ مِنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَذِهِ مِنْ هَذِهِ أَوْ كَهَاتَيْنِ وَقَرَنَ بَيْنَ السَّبَّابَةِ وَالْوُسْطَى (صحيح البخاري 4889 -)
குறிப்பு 5)
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا بَكْرٌ يَعْنِي ابْنَ مُضَرَ عَنْ ابْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَتَيْتُ الطُّورَ فَوَجَدْتُ ثَمَّ كَعْبًا فَمَكَثْتُ أَنَا وَهُوَ يَوْمًا أُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُحَدِّثُنِي عَنْ التَّوْرَاةِ فَقُلْتُ لَهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُهْبِطَ وَفِيهِ تِيبَ عَلَيْهِ وَفِيهِ قُبِضَ وَفِيهِ تَقُومُ السَّاعَةُ مَا عَلَى الْأَرْضِ مِنْ دَابَّةٍ إِلَّا وَهِيَ تُصْبِحُ يَوْمَ الْجُمُعَةِ مُصِيخَةً حَتَّى تَطْلُعَ الشَّمْسُ شَفَقًا مِنْ السَّاعَةِ إِلَّا ابْنَ آدَمَ وَفِيهِ سَاعَةٌ لَا يُصَادِفُهَا مُؤْمِنٌ وَهُوَ فِي الصَّلَاةِ يَسْأَلُ اللَّهَ فِيهَا شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ فَقَالَ كَعْبٌ ذَلِكَ يَوْمٌ فِي كُلِّ سَنَةٍ فَقُلْتُ بَلْ هِيَ فِي كُلِّ جُمُعَةٍ فَقَرَأَ كَعْبٌ التَّوْرَاةَ ثُمَّ قَالَ صَدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ فِي كُلِّ جُمُعَةٍ (سنن النسائي 1413 -)
குறிப்பு 6)
حَدَّثَنَا عَيَّاشٌ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولَانِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ فَيُقَالُ انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنْ النَّارِ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنْ الْجَنَّةِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَرَاهُمَا جَمِيعًا وَأَمَّا الْكَافِرُ أَوْ الْمُنَافِقُ فَيَقُولُ لَا أَدْرِي كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ فَيُقَالُ لَا دَرَيْتَ وَلَا تَلَيْتَ ثُمَّ يُضْرَبُ بِمِطْرَقَةٍ مِنْ حَدِيدٍ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ إِلَّا الثَّقَلَيْنِ (صحيح البخاري 1252 -)
குறிப்பு 7)
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ فَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ فَذَلِكَ حِينَ {لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا} وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلَانِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا فَلَا يَتَبَايَعَانِهِ وَلَا يَطْوِيَانِهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلَا يَطْعَمُهُ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يَلِيطُ حَوْضَهُ فَلَا يَسْقِي فِيهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أَحَدُكُمْ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلَا يَطْعَمُهَا (صحيح البخاري 6025 -)
குறிப்பு 8)
حَدَّثَنَا حَجَّاجٌ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ قَالَتْ عَائِشَةُ أَوْ بَعْضُ أَزْوَاجِهِ إِنَّا لَنَكْرَهُ الْمَوْتَ قَالَ لَيْسَ ذَاكِ وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا حَضَرَهُ الْمَوْتُ بُشِّرَ بِرِضْوَانِ اللَّهِ وَكَرَامَتِهِ فَلَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ فَأَحَبَّ لِقَاءَ اللَّهِ وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَإِنَّ الْكَافِرَ إِذَا حُضِرَ بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَعُقُوبَتِهِ فَلَيْسَ شَيْءٌ أَكْرَهَ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ كَرِهَ لِقَاءَ اللَّهِ وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ (صحيح البخاري 6026 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/