HOME      Khutba      பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நேரங்கள் | Tamil Bayan - 653   
 

பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நேரங்கள் | Tamil Bayan - 653

           

பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நேரங்கள் | Tamil Bayan - 653


بسم الله الرحمن الرّحيم

பாவமன்னிப்புத் தேடுவதற்குரிய நேரங்கள்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹ் சுப்ஹானஹு வதஅலாபுகழுக்கும், நம்முடைய அனைத்து விதமான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியானவன்.அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணைதுணை யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய ஸலவாத்தும், கருணையும் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார், மற்றும் தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இந்த குத்பாவின் தொடக்கமாக எனக்கும், உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, நல்ல அமல்களை அதிகம் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்தவனாக, நாம் செய்த சிறிய பெரிய பாவங்களிலிருந்து தவ்பா இஸ்திக்ஃபார் செய்து அல்லாஹ்விடத்தில் திரும்புவோம் என்று எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாகஆரம்பம் செய்கின்றேன்.

தொடர்ந்து சில வாரங்களாக, அல்லாஹ்விடத்தில் அடியான் எப்படி பணிந்து, பயந்து தனது பாவங்களுக்காக, குற்றங்களுக்காக, குறைகளுக்காக வருந்தி இஸ்திக்ஃபார்-பாவமன்னிப்பு தேட வேண்டும்? பாவமன்னிப்பு தேடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? இவற்றையெல்லாம் நாம் பார்த்தோம்.

அதனுடைய தொடரிலே பாவமன்னிப்பு தேடுவதற்கு சில விஷேசமான நேரங்கள் இருக்கின்றன.

اوقات الاستغفار"அவ்காத்துல் இஸ்திக்ஃபார்" எந்தெந்த நேரங்களில் குறிப்பாக பாவமன்னிப்பு தேடுவதால், அந்த பாவமன்னிப்பு தேடுதல் அல்லாஹ்விடத்திலே ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்என்பதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் இன்றைய ஜும்ஆவிலே நாம் அறிய இருக்கின்றோம்.

பொதுவாகவே வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் இஸ்திக்ஃபார் அதிகம் செய்து கொண்டு இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியது போன்று,

«طُوبَى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا»

நாளை மறுமையில் எந்த அடியார்களுடைய ஏடுகளிலே பாவமன்னிப்பு அதிகமாக எழுதப்பட்டிருக்கிறதோஅவர்களுக்கு நற்செய்தி உண்டாகட்டும்என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3818, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இருந்தாலும் குறிப்பிட்ட சில நேரங்களை குர்ஆனிலும், ஹதீஸிலும்நாம் பார்க்கின்றோம்.

அதிலே குறிப்பாக, முதலாவதாக ஒரு பாவம் அல்லது ஒரு குற்றம் நிகழ்ந்துவிட்ட பிறகு அந்த குற்றத்திற்காக, பாவத்திற்காக உடனடியாக அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு தேடுதல். நம் புறத்திலிருந்து நம் கண்களால்,செவிகளால், கைகளால், உடல் உறுப்புகளால் இப்படியாக நம் புறத்திலிருந்து ஒரு தவறு, ஒரு பாவம், ஒரு மாறுபாடு,அல்லாஹ்வின் விஷயத்திலோ, அடியார்களுடைய ஹக்குகளின் விஷயத்திலோ நிகழ்ந்துவிட்ட பிறகுஉடனடியாக அல்லாஹ்விடத்திலே திரும்பிவிடுவது.

யா அல்லாஹ்!நான் இன்ன தவறை செய்துவிட்டேன்;இத்தகைய குற்றத்தை செய்துவிட்டேன்; என்னுடைய நஃப்ஸுக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன். யா அல்லாஹ் உன்னை மறந்து உன்னுடைய தண்டனையை மறந்து இத்தகைய பெரும்பாவத்தை அல்லது இந்த சிறிய பாவத்தை செய்து விட்டேன். நீ என்னை மன்னிக்கவில்லை என்றால் நான் நஷ்டவாளியாக ஆகிவிடுவேன். என்னை மன்னித்துவிடு என்னை தண்டித்து விடாதே. என்னுடைய ஏட்டிலிருந்து அந்த பாவத்தை அழித்துவிடு, மறைத்துவிடு.என்று அல்லாஹ்விடத்திலே ஓடோடி வந்து மன்னிப்பு கேட்டு விடுவது.

இது குறித்து நாம் பார்க்கின்றோம், "ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸல்லம்" அவர்களை உதாரணமாக அல்லாஹ் நமக்கு சொல்கின்றான். நம்முடைய தாய் ஹவ்வாவை அல்லாஹ் உதாரணமாக சொல்கின்றான். எப்போது அந்த மரத்திலிருந்து அவர்கள் சாப்பிட்டு அவர்களுடைய அவ்ரத் வெளிபட்டதோ,உடனே அவர்கள் அல்லாஹ்விடத்திலே திரும்பிவிட்டார்கள்.

அல்லாஹ் கூறினான் ;

أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ

அது சமயம் இறைவன் ‘‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான். (அல்குர்ஆன் 7 : 22)

قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.(அல்குர்ஆன் 7 : 23)

என்று அல்லாஹ்விடத்திலே, மன்றாடினார்கள்.அல்லாஹு தஆலா அவர்களை மன்னித்து விட்டான்.

மூஸா அலைஹிஸ்ஸலாத்து வஸல்லம் தன்னுடைய இனத்தவருக்கு உதவி செய்ய சென்று, தன்னுடைய எதிரி இனத்தை சேர்ந்தவரை அவர்கள் தள்ளிவிடும் போது, கை அடிபட்டு விடுகின்றது, விழுந்தவன் இறந்து விடுகின்றான். அவர்களுக்கு அங்கு நோக்கம் கொல்ல வேண்டுமென்றல்ல. தொந்தரவு தரக்கூடியவனை விளக்கிவிடுவது, அவனை விரட்டிவிடுவது, ஆனால்? அடித்த வேகத்திலே அவன் விழுந்துவிட்டான். விழுந்தவன் இறந்து விட்டான்.

அல்லாஹு அக்பர்!ஒரு உயிரை கொல்வது எவ்வளவு பெரிய பாவம்? அநியாயமாக ஒரு உயிரைக் கொல்வது அல்லாஹ்விடத்திலே மிகப்பெரிய பாவம்.

மறுமையை நம்பாதவர்கள், சொர்க்க நரகத்தை நம்பாதவர்கள், நரக தண்டனையை நம்பாதவர்கள் வேண்டுமானால், கொடுக்கல் வாங்கல்களுக்காக, இன்ன பிற கோபதாபங்களுக்காக, மனித உயிர்களை சர்வசாதாரணமாக கொல்லலாம். அது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமினுக்கு அப்படி இருக்க முடியாது.

مَا كَانَ لِمُؤْمِنٍ أَنْ يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً

தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல. (அல்குர்ஆன் 4 : 92)

மேலும் அல்லாஹ் கூறினான்;

وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். (அல்குர்ஆன் 4:93)

மூஸா அலைஹிஸ்ஸலாத்து வஸல்லம் அவர்கள் பயந்துவிட்டார்கள்.

قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

மேலும், ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என் குற்றத்தை மன்னிப்பாயாக!'' என்று அவர் பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை செய்பவன். (அல்குர்ஆன் 28:16)

அங்கே மூஸா அலைஹி வஸல்லம்செய்த தவறை எண்ணி துடியாய் துடித்து போனார்கள்.

கையிலே ஒரு நெருப்பு காயம் ஏற்படுகின்றது, அல்லது வலி மிகுந்த வேதனை ஏற்படுகின்றது என்றால் எப்படி துடிப்போம், இது உடலுக்கு ஏற்படுகின்ற வலி.உண்மையில் ஆன்மாவை புரிந்தவர்களுக்கு,சொர்க்கநரகம் புரிந்தவர்களுக்கு, தெரியும் பாவம் செய்வதால் இந்த ரூஹுஎப்படி வேதனைப்படும் என்று, பாவம் செய்வதால் இந்த கல்பு எப்படி வேதனைப்படும் என்று.

அதனால் தான் ஆதம், ஹவ்வா வஸ்ஸலாத்து வஸல்லம் அவர்கள் துடியாய் துடித்தார்கள். அழுதுகொண்டே இருந்தார்கள்.

ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்; ஆதம் (அலை) அழ அழ அவர்களை சுற்றி புற்பூண்டுகள் முளைத்துக் கொண்டே இருந்தன.

குற்றம் நிகழ்ந்தவுடன் அல்லாஹ்விடத்தில் ஓடோடி வருவது.

யூனுஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸல்லம்கோபித்துக்கொண்டு சென்றார்கள். நடக்க வேண்டியது நடந்தது. உடனே புரிந்து கொண்டார்கள்;அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் நாம் ஒரு காரியத்தை செய்துவிட்டோம்' ஒரு நபியாக இருந்து கொண்டு இப்படி நடந்திருக்க கூடாது. அழகிய முறையிலே அல்லாஹ்வை அழைத்தார்கள்;

أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் 21 : 87)

அல்லாஹு தஆலா அவரையும் மன்னித்தான்.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இக்கட்டான நேரத்திலே சொன்னார்கள்;அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டது. பரிசுத்தமான நமது அன்னையார் மீது, நபியின் பரிசுத்தமான அந்த மனைவியின் மீது,முனாஃபிக்குகள் அவர்கள் தவறாக நடந்துவிட்டார்கள் என்று பழிசுமத்தினார்கள்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு இது மிகப்பெரிய ஒரு ஆதாரம். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விடத்தில் வந்தார்கள்.

وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ

ஆயிஷா உண்மையை சொல்லுங்கள். நீங்கள் ஏதாவது ஒரு தவறு செய்திருந்தால், மனிதனென்ற அடிப்படையிலே நீங்கள் ஏதாவதொரு தவறை நாடியிருந்தாலோ, செய்திருந்தாலோ, அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டு திரும்பிவிடுங்கள்.

நூல் : புகாரி, எண் : 4690

ஏனென்றால் பாவத்திலிருந்து மீண்டுவிடுவது, திரும்பிவிடுவதால் அல்லாஹ் அடியானை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றான்.

இந்த ஹதீஸிலிருந்தும் அறிஞர்கள் நமக்கு கூறக்கூடிய உபதேசம் என்ன?

ஒரு குற்றம் நிகழ்ந்தவுடன் காலதாமதம் செய்யாமல்உடனே அந்த பாவத்திற்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவது.

இன்று நாம் நம் மவ்த்தை மிக தூரமாக கருதுகின்றோம். ஒவ்வொருவரும் தனக்கு ஒரு நீண்ட வாழ்க்கை இருக்கும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

மரணத்தைப் பொறுத்த வரை ஆகிரத்தை பொறுத்த வரை, அல்லாஹ்வின் சந்திப்பைப் பொறுத்தவரை, நமக்கு நம்முடைய மார்க்கம் சொல்லக்கூடிய அறிவுரை என்ன? காலையிலிருக்கும் போது மாலையை எதிர்பார்க்கக் கூடாது.

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸிற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

துன்யாவிலே நீ ஒரு வழிப்போக்கனை போல் இரு, ஒரு முஸாஃபிரைப் போன்று இரு, என்று கூறும் போது அந்த ஹதீஸிற்கு தன்னுடைய மாணவருக்கு விளக்கம் தருகின்றார்கள்;

«إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ»

"நீ காலையிலிருக்கும் போது மாலையை எதிர்பார்த்து இருக்காதே."

"மாலையிலிருக்கும் போது காலையை எதிர்பார்த்து இருக்காதே."

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6416.

என்ன அர்த்தம் அதற்கு? அல்லாஹ்வை சந்திப்பதற்குண்டான தயாரிப்புகளை செய்து கொண்டு, மவ்துக்குண்டான தயாரிப்புகளை செய்து கொண்டு ஆயத்தமாக இரு.

மவ்துக்குண்டான தயாரிப்புகள் என்ன? "லாயிலாஹா இல்லல்லாஹ்" என்று ஈமானை புதுப்பிப்பது. அஸ்தஃபிருல்லாஹ் என்று அல்லாஹ்விடத்திலே தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டிருப்பது.

அடியார்களுடைய ஹக்குகள் நம்மிடத்திலே இருக்குமானால், அதற்குரிய வசதி நம்மிடத்திலே இருந்தால் உடனே அதை நிறைவேற்றி விடுவது, நீங்கள் நாளைக்கு ஒருவருக்கு நூறு ரூபாய் தர வேண்டும். நாளைக்கு தரவேண்டிய அந்த நூறு ரூபாய், இன்று மதியமே உங்களிடத்தில் வந்துவிட்டால் அதை இன்றே சென்று கொடுத்துவிட்டு வந்து விடுங்கள். நாளை வரட்டும் என்று எதிர்பார்த்து இருக்காதீர்கள், வாரிசுகளை சொல்ல முடியாது.

அடுத்தது, அப்படி அந்த ரூபாய் வரவில்லை என்றால்வஸிய்யத் எழுதி வைக்க வேண்டும்.

நான் இன்னாருடைய மகன் இன்னார், இந்த விலாசத்தில் இருப்பவருக்கு, இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும். என்னுடைய சொத்திலிருந்து அதை முதலிலே நிறைவேற்ற வேண்டும் என்று வஸிய்யத் எழுதியிருக்க வேண்டும்.

இப்படியாக, ஒவ்வொரு நேரத்திலும் மவ்துக்கு தயாராக இருப்பது. ஆகவே தான் பாவம் நிகழ்ந்தவுடனே, தவறு நிகழ்ந்தவுடனே, அடுத்த நேரத்தை எதிர்பார்க்கக் கூடாது. ஏன்?

1. திடீரென்று மரணித்துவிட்டால், தவ்பா இஸ்திஃக்ஃபார் இல்லாத மரணமாகும்.

2. நேரம் ஆக ஆக ஒன்று அந்த செய்த பாவத்தை நாம் மறந்துவிடலாம், இல்லையென்றால் நம்மை அழிவிலே தள்ள வேண்டும் என்று இருக்கின்ற நம்முடைய தீய நஃப்ஸுஇன்னொரு முறை நம்மை அந்த பாவத்தின் பக்கம் அழைத்துச் செல்லும்.

அல்லது அந்த பாவத்தினுடைய பயங்கரத்தை, கடுமையை நமது உள்ளத்திலிருந்து போக்கி அந்த பாவத்தை லேசாக நமக்கு காண்பிக்கும்.

பரவாயில்லை. சாதாரணமானது தான். நீ பலவீனமானவன் தான் என்று நஃப்ஸு நமக்கு ஆசை வார்த்தையைக் கூறும். நம்மை ஏமாற்றி மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் இழுத்துச் செல்லலாம். உடனே நாம் தவ்பா இஸ்திக்ஃபார் செய்துவிட்டால், நம்முடைய ஈமானுடைய ஒளி பிரகாசமாகிடும். அந்த பாவத்தின் விபரீதத்தைப் புரிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஅலா ஸூரா ஆல இம்ரானிலும் ஸூரா நிஸாவிலும் சொல்லக்கூடிய இரண்டு வசனங்களைப் பாருங்கள்.

ஸூரா ஆல இம்ரானிலே 135-வது வசனம் அல்லாஹ் தக்வா உள்ளவர்களின் அடையாளங்களை சொல்கின்றான்;

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (அல்குர்ஆன் 3 : 135)

அரபியிலே فஎன்ற ஒரு எழுத்திருக்கின்றது. وஎன்ற ஒரு எழுத்து, ثُمَّஎன்ற ஒரு எழுத்து.

இந்த فஎன்ற எழுத்து எங்கே பயன்படுத்தப்படும் என்றால்ஒரு செயலுக்கும் இன்னொரு செயலுக்கும் இடையில் வந்தால்முந்தைய செயல் நடந்தவுடன் இந்த செயல் நடக்கும் என்பதைக் குறிப்பதற்காக. அல்லாஹ் எப்படி சொல்கின்றான்?

فَاسْتَغْفَرُوا  -உடனே அவர்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்.(அல்குர்ஆன் 3:135)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்;

وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا

எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.(அல்குர்ஆன் 4:110)

இந்த இடத்தில் ثُمَّஎன்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றான், இது எப்போது? மார்க்க இல்ம் இல்லாத போது நாம் செய்தவை, ஹராம் என்று தெரியாத போது செய்தவை, அல்லாஹ்வின் சட்டங்களை வியாபாரத்திலே, தொழில்துறையிலே, உறவுகளிலே ஹராம் என்று தெரியாத போது செய்தவை, பிறகு ஹராம் என்று தெரிய வருகின்றது.

நாம் ஒரு காலத்திலே அல்லாஹ்வின் பயம் குறைந்த நேரத்திலே செய்த பாவங்கள், நமக்கு இப்போது நினைவு வருகின்றது. நம்முடைய தொழுகை இபாதத்துகள் கூட கூட நம்முடைய பழைய பாவங்கள் நினைவுக்கு வருகின்றன. அறியாமை காலத்திலே இன்னன்ன காரியங்களை செய்தோமென்று.

இப்போது இவன் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேட்டாலும் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், கருணை உடையவனாகவும்அவன் பெற்றுக்கொள்வான்.

எப்படி இருந்தாலும் சரி, அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேட்டு விட்டால் கண்டிப்பாக அல்லாஹ் மன்னிப்பான்.

இமாம் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்; அல்லாஹ்விடத்தில் நாம் பாவமன்னிப்பு கேட்கக்கூடிய மிக முக்கியமான நேரங்களிலே ஒன்று, வணக்க வழிபாடுகள் செய்ததற்கு பிறகு.

இதுவரை நாம் பார்த்தது பாவங்கள் நிகழ்ந்த பிறகு பாவமன்னிப்பு தேடவேண்டிய நேரங்கள்.இப்போது வரும் நேரங்கள் நன்மைகள் செய்ததற்கு பிறகு, இபாதத்துகள் செய்த பிறகு, ஏன் தெரியுமா?

இதைத்தான் இப்னு இமாம் இப்னு கையிம் (ரஹ்)அவர்கள் சொல்கின்றார்கள்;

யார் அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் திழைத்திருக்கின்றார்களோ? அதிலே தங்களுடைய உள்ளங்களை பறி கொடுத்து இருக்கின்றார்களோ? உள்ளங்கள் சுத்தமாக இருக்கின்றதோ அவர்கள், வணக்க வழிபாடுகளுக்கு பிறகு மிக அதிகமாக இஸ்திஃக்ஃபார் தேடுவார்கள். இபாதத்துகளுக்கு பிறகு அதிகம் இஸ்திஃக்ஃபார் தேடுவார்கள், ஏன் தெரியுமா?

அவர்களுக்கு தெரியும்;நாம் இந்த வணக்க வழிபாடுகளில் எவ்வளவு குறைகள் செய்திருக்கின்றோம் என்று.

இரண்டு ரக்அத் தொழுகை, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்கின்றார்கள்?

«مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

"யார் ஒளு செய்துவிட்டு அழகிய முறையிலே ஒளு செய்துவிட்டு இரண்டு ரக்அத் தொழுவார்களோ,

(எப்படி தொழ வேண்டும்?இந்த உள்ளத்திலே வஸ்வஸா இல்லாமல், உலகத்தை நினைக்காமல், ஓதுவதை மட்டும் மறுமையை மட்டும் நினைத்து இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டால்)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; அவருடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது.

அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 164.

வாழ்க்கையில் இந்த மாதிரி இரண்டு ரக்அத்களுக்கு நாம் முயற்சி செய்தால் அல்லாஹு அக்பர்! நம் மறுமை எவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்படி தான் ஒவ்வொரு தொழுகையும் தொழ வேண்டும்.

ஆனால் நம்முடைய நிலைமை எப்படி இருக்கின்றது? சில அறிஞர்கள் சொல்வார்கள்;இந்த முஸீபத் என்னவென்றால் தக்பீர் கட்டியவுடன் தான் எல்லாமே நியாபகம் வருகின்றது.

அல்லாஹ் பாதுகாப்பானாக! தக்பீர் கட்டினால் தான் மறந்தது எல்லாம் நியாபகம் வருகின்றது. அந்த அளவிற்கு அல்லாஹ்வுடைய நினைவை விட்டு இந்த உள்ளம் வெறுமையில் இருக்கின்றது.

இப்படியாக வணக்க வழிபாடுகள் செய்யும் போது எந்த அளவு அல்லாஹ்வுடைய கண்ணியம், அல்லாஹ்வுடைய மதிப்பு, அல்லாஹ்வின் வல்லமை, அல்லாஹ்வின் உயர்வு, அல்லாஹ்வின் பரிசுத்தத்திற்கு ஏற்ப அவனுக்கு முன்னால் பணிந்து, பயந்து, அடங்கி அவனை மட்டுமே நினைத்தவனாக, அவனை மட்டுமே நினைத்து உருகியவராக, நாம் அந்த வணக்க வழிபாடுகளை செய்ய வேண்டும்.

அப்படி என்னால் செய்ய முடியவில்லையே? சஹாபாக்களுக்கும், நமக்கும், ரஸூல் (ஸல்) அவர்களுக்கும், நமக்கும் இடையிலே என்ன வித்தியாசம்?

நின்றால் கால் வலிக்கத்தான் செய்யும்,வலிக்காமல் இருக்குமா? கண்டிப்பாக வலிக்கத்தான் செய்யும். ஆனால் அவர்களுக்கு அந்த வலி, எவ்வளவு வலித்ததோ வலிக்க வலிக்க அவர்களுக்கு அந்த வலியே இன்பமாக இருந்தது. நமக்கு கொஞ்சம் வலி வந்தவுடனேயேவலிக்குது வேண்டாம் என்று இபாதத்தை விட்டு ஓடிவிடுவோம்.

அவர்களும் மனிதர்கள் தானே?

யாருக்கு வலிக்காது? துன்யாவில் சிரமப்பட்டாலும் அதிலும் வலி இருக்கின்றது, கலைப்பு இருக்கின்றது. மறுமைக்காக உழைத்து கஷ்டப்பட்டாலும் அதிலும் வலி இருக்கின்றது, கஷ்டம் இருக்கின்றது, கலைப்பு இருக்கின்றது.

ஆனால் நாம் உலகத்துக்காக கஷ்டத்தில் ஏற்படக்கூடிய வலி சிரமம், அனைத்தையும் தாங்கிக்கொள்வோம்.

தீன் என்று வந்துவிட்டால் எல்லா சவுகரியத்தோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் அப்படிப்பட்ட தீன் வேண்டாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து ஹதீஸிலே வருகின்றது.

இமாம் முஸ்லிம் (ரஹ்)பதிவு செய்கின்றார்கள்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையிலிருந்து ஸலாம் கொடுக்கின்ற வரை, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்என்று ஸலாம் சொல்லி விட்டாலே அடுத்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாவிலிருந்து வரக்கூடிய வார்த்தை' அஸ்தக்ஃபிருல்லாஹ்! அஸ்தக்ஃபிருல்லாஹ்! அஸ்தக்ஃபிருல்லாஹ்! "அல்லாஹ்விடத்தில் நான் மன்னிப்பு தேடுகின்றேன்" என்று மூன்று முறை கூறுவார்கள். (1)

அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 591.

ஏன்தொழுதுவிட்டு இஸ்திஃபார்? அறிஞர்கள் விளக்கம் சொல்கின்றார்கள்; இந்த தொழுகையில் எத்தனை குறைகள் இருக்குமோ? எந்த அளவிற்கு பணிந்து பயந்து, அல்லாஹ்விற்கு முன்னால் நிற்க வேண்டுமோ? மறுமையை நினைத்திருக்க வேண்டுமோ? கண்டிப்பாக அதில் தவறு நிகழ்ந்திருக்கலாம், என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சப்பட்டார்கள் என்றால்அவர்கள் பயந்தார்கள் என்றால்சாதாரண மனிதர்களாகிய நாம் எந்த அளவு பயந்தாக வேண்டும்?!

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?

இப்படி நாம் பயப்பட பயப்பட தான், இன்னும் நாம் இந்த இஸ்திக்ஃபாரை செய்ய செய்ய செய்ய தான், அடுத்தடுத்த தொழுகை அல்லாஹ்விடத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழுகையாக அமையும். அப்படி இல்லாமல் அலட்சியம் செய்து கொண்டே இருந்தால்மேலும் மேலும் குறைகள் உள்ள இபாதத்துகள் தான் நம்மிடத்திலே இருக்கும்.

அதுபோன்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மஜ்லிஸிலே, அல்லாஹ்வைப் பற்றி பேசினால் கூட, அந்த மஜ்லிஸ் முடியும் போது இஸ்திக்ஃபார் செய்வார்கள்.

எந்த அளவு அல்லாஹ்வை போற்ற வேண்டுமோ, புகழ வேண்டுமோ, துதிக்க வேண்டுமோ அவனுடைய கண்ணியத்திற்கு தகுந்தார் போல் அவனை உயர்த்தி பேச வேண்டுமோ?  அதிலே குறை செய்திருக்கலாம்.

எனவே மஜ்லீஸ் முடியும் போது இஸ்திக்ஃபார்.

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3433, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அல்லாஹு தஆலா ஹஜ்ஜுடைய வணக்க வழிபாட்டிற்கு பிறகு இஸ்திக்ஃபாரை சொல்கின்றான்.

ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (‘முஸ்தலிபா' என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (‘மினா'வுக்குத்) திரும்பி விடுங்கள். மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 2:199)

அரஃபாவிலேயிருந்து முஸ்தலிஃபாவிற்கு வந்தால் இஸ்திக்ஃபார், முஸ்தலிஃபாவிலிருந்து மினா வந்தால் இஸ்திக்ஃபார், அங்கே ஒவ்வொரு ஜம்ராத்திலே கல்லெறிந்த பிறகு இஸ்திக்ஃபார், இப்படியாக இபாதத்துகளிலே குறிப்பாக ஹஜ்ஜுடைய இபாதத்துகளிலே, அந்த குறிப்பான அமல்கள் முடிந்ததற்குப் பிறகு இஸ்திக்ஃபாரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு உணர்த்துகின்றான்.

அது போன்று, நம்முடைய தொழுகையிலே இஸ்திக்ஃபார் இருக்கின்றது. தொழுகையிலே தக்பீர் கட்டிய பிறகு ஓத வேண்டிய இஸ்திக்ஃபார்;(2)

"اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ "

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 744.

சுஜூதிலே நாம் ஓத வேண்டிய இஸ்திக்ஃபார்;

« اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ، وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ»

பொருள்: இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதையும் பெரியதையும்,ஆரம்பமாகச் செய்ததையும் இறுதியாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 483.

இப்படியாக தொழுகையில் நீண்ட இஸ்திக்ஃபார், தக்பீர் கட்டியதிலிருந்து ருக்கூவிலே, சுஜூதிலே, இரண்டு ஸஜ்தாவிற்கு இடையிலே.

இரண்டு ஸஜ்தாவிற்கு இடையிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வார்கள்;

اللَّهُمَّ اغْفِرْ لِي

"என் ரப்பே என்னை மன்னித்துவிடு, என் ரப்பே என்னை மன்னித்துவிடு"

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 284, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இப்படியாக தொழுகையிலே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கின்ற இஸ்திக்ஃபாருடைய வாக்கியங்களை மனனம் செய்து, தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கின்ற வரை, ஸலாம் கொடுத்த பிறகும் இஸ்திக்ஃபார் இருக்கின்றது.

இந்த நேரங்களை எல்லாம் நாம் பயன்படுத்தி இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும்.

அதே போன்று ஸஹருடைய நேரம், சுப்ஹு தொழுகைக்கு முன்பாக இரவினுடைய  மூன்றாவது பகுதி.

ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்;

وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ

(இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.(அல்குர்ஆன் 3:17)

وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

அவர்கள் விடியற்காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 51 : 18)

அதுபோன்று சூரிய, சந்திர கிரகணம் ஏற்படும் போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்;

«فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ»

 

"நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைப் பார்த்தால் அல்லாஹ்வுடைய திக்ருகளுக்கு விரைந்து வாருங்கள். அல்லாஹ்விடத்திலே துஆ செய்ய விரைந்து வாருங்கள். அல்லாஹ்விடத்திலே பாவமன்னிப்பு தேட விரைந்து வாருங்கள்.(3)

அறிவிப்பாளர் : அபூ மூசா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1059.

அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம் பலவீனம் என்ன தெரியுமா? இந்த மாற்றார்களைப் பார்த்துப் பார்த்து கெட்டுப் போன மக்களாக இருக்கின்றோம். சூரிய சந்திர கிரகணம் வந்தால் பயப்பட வேண்டும், தொழ வேண்டும், அப்படி தொழுது முடித்து விட்டால் அந்த இடத்திலேயே கிரகணம் முடியும் வரை இடத்தை விட்டு எழாமல் திக்ரு, இஸ்திக்ஃபார், துஆவில் இருக்க வேண்டும்.

இன்று மக்கள் நான் அதை வைத்து பார்க்கின்றேன்; இதை வைத்து பார்க்கின்றேன்; என்று அதைப் பார்ப்பதற்கு ஓடுகின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, அவர்களுடைய தோழர்களோ அப்படி செய்ததில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் என்ன சொன்னார்கள்?

"சூரிய, சந்திர கிரகணம் ஏற்படும் போது விரைந்து ஓடோடி பயந்து வாருங்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கிரகணம் முடிந்தது என்று தெளிவாகும் வரை, தெரிகின்ற வரை அந்த இடத்தை விட்டு அவர்கள் வரமாட்டார்கள். தொழுகையிலே இருந்து கொண்டிருப்பார்கள் அல்லது இஸ்திக்ஃபாரிலே.

அறிவிப்பாளர் : அபூ மூசா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1059.

பாவமன்னிப்பு தேடுவதற்குரிய அடுத்த இரண்டு இடங்கள்; இரவிலே நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று விழிப்பு வருகின்றது. அந்த நேரத்திலே இஸ்திக்ஃபார் செய்வது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

"யார் இரவிலே தூக்கத்திலிருந்து விழிக்கின்றாரோ அவர்

اللَّهُمَّ اغْفِرْ لِي

 "அல்லாஹ் என்னை மன்னித்துவிடு" என்று  கூறினால். அல்லது வேறு எந்த துஆவைக் கூறினாலும் சரி அவருக்கு அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. (4)

அறிவிப்பாளர் : உபாதா இப்னு சாமித் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1154.

ஏதேனும் ஒரு காரணத்திற்காக தூக்கத்திலிருந்து விழிப்பு வருகின்றது.அந்த நேரத்திலே, அல்லாஹ்வை நினைத்து விட்டார், தூக்கம் என்பது ஓர் மவ்த்.அதிலிருந்து அவருக்கு கண் திறந்தவுடனே, அவருக்கு நினைப்பு வருவது அவரது ரப்பென்றால், சுப்ஹானல்லாஹ்!

அங்கு அவருடைய முஹப்பத் எப்படி இருக்கும்? அதற்காகவே, அல்லாஹ் கூறினான் "அல்லாஹ் மஃஹ்ஃபிர்லீ" என்று அவன் கூறினால், அல்லது ஏதாவது துஆ கேட்டால்அவருக்கு அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.

அடுத்ததாக தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுந்திருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் தஹ்ஜத் தொழுகைக்காக எழுந்தால் விஷேசமாக பாவமன்னிப்பு கேட்பார்கள்.

«اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»

பொருள்: இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.(5)

அறிவிப்பாளர் : அபூ மூஸா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6398.

அல்லாஹ்வின் நல் அடியார்களே! இப்படியாக இஸ்திக்ஃபாருடைய நேரங்களை தெரிந்து, அல்லாஹ்விடத்திலே குறிப்பாக இந்த நேரங்களில் இஸ்திக்ஃபார் தேட வேண்டும். அதுபோன்று எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடத்திலே இஸ்திக்ஃபார் தேடிக்கொண்டிருப்போமாக.

அல்லாஹ் சுப்ஹானஹு தஅலா நம் அனைவருடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ்வுடைய அருளுக்கும் அன்பிற்கும் உரியவர்களிடத்தில் வைப்பானாக.

நம்முடைய பெற்றோர்களின் பாவங்களை மன்னிப்பானாக.முஸ்லிமான நம் மூதாதயர்களுடைய பாவங்களை மன்னிப்பானாக.நாளை மறுமையிலே அல்லாஹு தஆலா அவன் ஏற்றுக்கொண்ட பொருந்திக் கொண்ட, அவன் மகிழ்ச்சியுற்ற நல்லவர்களின் கூட்டத்திலே என்னையும், உங்களையும் நம் தாய், தந்தையையும், குடும்பத்தார்களையும், பிள்ளைகளையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ أَبِي عَمَّارٍ، اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ: «اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ» قَالَ الْوَلِيدُ: فَقُلْتُ لِلْأَوْزَاعِيِّ: " كَيْفَ الْاسْتِغْفَارُ؟ قَالَ: تَقُولُ: أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ"(صحيح مسلم -(591

குறிப்பு 2)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ القَعْقَاعِ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ إِسْكَاتَةً - قَالَ أَحْسِبُهُ قَالَ: هُنَيَّةً - فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالقِرَاءَةِ مَا تَقُولُ؟ قَالَ: " أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ(صحيح البخاري 744 - )"

குறிப்பு 3)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا، يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ، فَأَتَى المَسْجِدَ، فَصَلَّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ رَأَيْتُهُ قَطُّ يَفْعَلُهُ، وَقَالَ: «هَذِهِ الآيَاتُ الَّتِي يُرْسِلُ اللَّهُ، لاَ تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنْ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ، فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ» )صحيح البخاري (1059 -

குறிப்பு 4)

حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا الوَلِيدُ هُوَ ابْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ: حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ، فَقَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، الحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي، أَوْ دَعَا، اسْتُجِيبَ لَهُ، فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلاَتُهُ )صحيح البخاري (1154 -  "

குறிப்பு 5)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي [ص:85] وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، وَحَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ )صحيح البخاري (6398 -

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/