HOME      Khutba      அல்லாஹ்வை விரும்புவோம்!! | Tamil Bayan - 587   
 

அல்லாஹ்வை விரும்புவோம்!! | Tamil Bayan - 587

           

அல்லாஹ்வை விரும்புவோம்!! | Tamil Bayan - 587


بسم الله الرّحمن الرّحيم

அல்லாஹ்வை விரும்புவோம்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

 

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ் உடைய தூதரின் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை வேண்டியவனாக, மறுமையில் மகத்தான வெற்றியை வேண்டியவனாக, சொர்க்க வாழ்க்கையை வேண்டியவனாக அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அருளையும் வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் மீது தவக்குல், ஆதரவு வைத்து அல்லாஹ்வை நேசித்து, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக்கூடிய நன் மக்களில் என்னையும் உங்களையும் அல்லாஹு தஆலா ஆக்கியருள்வானாக!ஆமீன்.

அல்லாஹு தஆலா சிலரை பழித்துப் பேசுகிறான்;இழிவாக பேசுகிறான்;அவர்களுடைய செயலை கடுமையாக கண்டித்து பேசுகிறான்;ரப்பு கூ றுகிறான்;

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வை நேசிப்பார்கள். (அல்குர்ஆன் 2:165)

மக்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற இந்த அல்லாஹு தஆலா உடைய கூற்றின் தொனி கோபத்தை வெளிப்படுத்தக்கூடியதாகும். அவருடைய கூற்று அவர்களிடம் இருக்கக்கூடிய தீய செயலை,கெட்ட பண்பை எச்சரிக்கும் விதமாக இருக்கிறது.

வசனத்தின் கருத்து : மக்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்கள் சில இணைகளை, சில தெய்வங்களை, சில கடவுள்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.அந்த இணைகளை அவர்கள் நேசிக்கிறார்கள். அல்லாஹ்வை நேசிப்பது போன்று.

எத்தகைய எச்சரிக்கையை அல்லாஹ் கூறுகின்றான். இந்த நேசம், முஹப்பத் -அன்பு என்பது ஒரு அடியான் வணக்கத்தின் அடிப்படையிலும் சரி, அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து இயற்கையாக விரும்பக்கூடிய அந்த அன்பும் சரி, அது முதலாவதாக தன்னை படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும்.

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.(அல்குர்ஆன் 95 : 4)

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ

ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம்.(அல்குர்ஆன்17 : 70)

يَاأَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ (6) الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (7) فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ

மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?

அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.

அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.(அல்குர்ஆன் 82 : 6-8)

இவ்வளவு அழகான உயர்ந்த மனித படைப்பு,அழகான தோற்றத்தைக் கொடுத்த அந்த அல்லாஹ்வின் மீது அடியானுடைய அன்பு முழுமையாக, நிகரற்றதாக இருக்க வேண்டும்.

அன்பு சகோதரர்களே! கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் சிலை வணங்கக்கூடிய இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைத் தவிர்த்து இன்னபிற கடவுள்களை வணங்கக்கூடிய அந்த இணைவைப்பாளர்கள் தங்கள் தெய்வங்களை நேசிப்பதை மட்டும் அல்லாஹ் இந்த இடத்தில் எச்சரிக்கவில்லை.

அவர்களை கூறி, இந்த இடத்தில் எச்சரிக்கை பொதுவாகக் கூறப்படுகிறது. யாரெல்லாம் அல்லாஹ்வை நேசிப்பதை விட்டுவிட்டு அல்லாஹ்வை தேடுவதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பக்கம் ஆர்வம்கொள்வதை விட்டுவிட்டு அற்ப உலக வஸ்துகளின்மீது ஆசை வைக்கின்றார்களோ அதை தேடுகின்றார்களோ அதற்கு முக்கியத்துவம் தருகின்றார்களோ அல்லாஹ்வை மறந்து விடுகின்றார்களோ அல்லது அல்லாஹ்வின் அன்பில் குறைஉள்ளவர்களாக ஆகி விடுகின்றார்களோ அவர்கள் எல்லோருக்கும் இந்த எச்சரிக்கை பொதுவானது.

உண்மையான முஃமின்கள் எப்படி இருப்பார்கள்?

وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட அந்த உயர்ந்த முஃமின்கள் அல்லாஹ்வை அதிகம் நேசிப்பார்கள். அல்லாஹ்வை விட நேசமான ஒன்று இந்த உலகத்தில் அவர்களுக்கு இருக்காது.(அல்குர்ஆன் 2:165)

அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருக்கும் ஆசை ஆர்வத்திற்கு ஈடாக இந்த உலகத்தில் அவர்களிடத்தில் எதுவும் இருக்காது.

இதே கருத்தை இன்னுமொரு விதமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்;

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து விலகினால் அவன் ஒரு கூட்டத்தை கொண்டு வருவான். அல்லாஹ் அந்த சமுதாயத்தை நேசிப்பான். அல்லாஹ் உடைய அன்பு அவர்கள்மீது இருக்கும். அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பார்கள். (அல்குர்ஆன் 5:54)

இந்த மாயிதா உடைய 54 வது வசனம் அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வின் மீது ஆர்வம் கொள்வது,அல்லாஹ்வை தேடுவது, வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வின் அன்பை ருசிப்பது, இதை நமக்கு மிக அழுத்தமாக நமக்கு கூறுகின்றது.

யார் இந்த மார்க்கத்தை பேணவில்லையோ, இந்த மார்க்கத்திற்காக உடல் பொருள் உயிரை தியாகம் செய்ய வில்லையோ, இந்த மார்க்கத்தினுடைய மகத்துவமும் கண்ணியமும் யாரிடம் இல்லையோ, அல்லாஹ் தஆலா அவர்களை இந்த மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்கள் என்று சொல்கின்றான்.

அப்படி அவர்கள் புறக்கணிப்பதற்கு காரணம்? அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு இல்லை. அல்லாஹ்வுடைய மகத்துவம் கண்ணியம் அல்லாஹ்வின் மீது. ஆசை அவர்களுக்கு இல்லை.

அவர்களுக்கு அல்லாஹ் மீது கண்ணியமும் அல்லாஹ்வின் மீது ஆசையும் அல்லாஹ்வின் மீது அன்பும் இருக்குமேயானால் அல்லாஹ் நேசிக்கக்கூடிய அந்த அமல்களை அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள். அல்லாஹ்வை வெறுக்கக்கூடிய பாவங்களை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

ஒருவனுக்கு அல்லாஹ் பிடிக்கிறது என்றால் அல்லாஹ்வின் மீது அவனுக்கு அன்பு இருக்கிறது என்றால் அல்லாஹ் விரும்பக் கூடிய ஒரு நல்ல அமலை அவனால் எப்படி விட முடியும்?

ஒரு முஃமின் அல்லாஹ்வை நேசிப்பது அவனுடைய ஈமானுடைய ஒரு பகுதி. ஈமான் உடைய ஏழு ஷர்த்துகளில் ஒன்று, முஹப்பத்துல்லா -அல்லாஹ்வின் மீது அன்பு, ஆசை, தேடுதல், ஆர்வம், பேராசை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பு வேறு எந்த வஸ்துவின் மீதும் இருக்கக்கூடாது என்று சொல்கின்றான்.

ஒருவன் ஈமான் உள்ளவன் என்று சொல்கின்றான் அவனுக்கு அல்லாஹ்வின் மீது அன்பு இருக்கிறது என்று சொல்கின்றான் என்றால், அல்லாஹ் விரும்பக்கூடிய அமலை அவன் விட்டான் என்றால் அவன், தான் அல்லாஹ்வை நேசிக்கிறேன் என்று சொல்வதில் பொய்யனாக இருக்கிறான்.

யாருக்கு அல்லாஹ்விடத்தில் விருப்பம் இருக்குமோ அல்லாஹ் விரும்புகின்ற ஒவ்வொன்றையும் அவர்களும் விரும்புவார்கள். அது தனக்கோ உலக மக்களுக்கோ எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் சரி. அல்லாஹ் ஒன்றை வெறுக்கிறான் என்றால் அதை இவர்களும் வெறுப்பார்கள். அதை அவர்களுக்கு எவ்வளவு தான் நெருக்கமான ஒன்றாக இருந்தாலும் சரி.

அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்;நீங்கள் என்னுடைய மார்க்கத்தை விட்டு விலகினால் நான் ஒரு கூட்டத்தைக் கொண்டு வருவேன்.அவர்கள் எப்படி பட்டவர்கள் என்றால் நானும் அவர்களை நேசிப்பேன். அவர்களும் என்னை நேசிப்பார்கள்.

இங்கு அல்லாஹ் என்ன சொல்ல விருப்புகின்றான் என்றால், அல்லாஹ் சுபஹானஹு தஆலா உடைய அன்புக்காக இந்த உலகத்தை துச்சமாக பார்ப்பார்கள். இந்த உலகம் அவர்களுடைய பார்வையில் எந்தவித மதிப்பையும் வைத்திருக்காது. இந்த உலகம் அவன் உடைய பார்வையில் எந்தவித கண்ணியத்தையும் வைத்து இருக்காது. அல்லாஹ்விற்கு பிடிக்காத ஒவ்வொன்றும் அல்லாஹ் வெறுக்கக்கூடிய ஒவ்வொன்றும் இவர்களுடைய பார்வையில் மதிப்பற்றதாக கேவலமானதாக இருக்கும்.

இதை தான் அல்லாஹ் சொல்லுகின்றான்; நீங்கள் மார்க்கத்தை விட்டு விலகினால் நான் ஒரு கூட்டத்தை கொண்டு வருவேன். அவர்களை நானும் நேசிப்பேன். அவர்களும் என்னை நேசிப்பார்கள்.

என்னுடைய அன்பு அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும். என்னுடைய அன்பிற்காக ஏங்குவார்கள். ஒவ்வொரு அமலையும் என்னுடைய அன்பிற்காக செய்வார்கள். ஒவ்வொரு அமலையும் என் மீதுள்ள பாசத்தால் செய்வார்கள்.

அன்பு சகோதரர்களே! இன்று நாமும் தொழுகின்றோம். நம்முடைய தொழுகையில் உயிர் இருக்கின்றதா? என்றால் நம்முடைய உள்ளத்தில் எந்த அளவு அல்லாஹ்வின் மீது அன்பு இருக்குமோ அந்த அளவு நம்முடைய தொழுகையிலும் உயிர் இருக்கும்.

இன்று நம்மால் தொழுகையில் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. ருகூஃ செய்ய முடியவில்லை. நீண்டநேரம் சுஜூத் செய்ய முடியவில்லை. ஏன்? அல்லாஹ்வுடைய அன்பு அந்த அளவு குறைவாக இருக்கிறது. எந்த அளவு அல்லாஹ்வுடைய அன்பு ஒரு அடியானுடைய உள்ளத்தில் கூடிக்கொண்டே போகுமோ அந்த அடியான் அல்லாஹ்விற்கு முன் நிற்பதில் இன்பம் காண்பான்.

அல்லாஹு தஆலா நபித்தோழர்களின் தன்மைகளைப் பற்றி சொல்கிறான்;

تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا

குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 48 : 29)

அல்லாஹு தஆலா தன்னுடைய நபியிடத்தில் புகழ்ந்து பேசுகிறான். நோன்பு வைப்பதிலே அவர்களுக்கு ஈடுபாடு இருக்கும் அந்த நோம்பிலே பசித்திருப்பதிலே அவர்களுக்கு ஈடுபாடு இருக்கும்.

அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்வதில் அவர்களுக்கு ஆசை இருக்கும். தன்னிடத்தில் இருப்பதைவிட பிறருக்கு கொடுப்பதில் அவர்கள் மகிழ்வாக கருதுவார்கள்.காரணம் இவை அனைத்தும் எனது ரப்புக்கு பிடித்தமானவை என்பதால்.

அன்பு சகோதரர்களே! அபுத்தஹ்தா (ரலி) அவர்களுடைய சம்பவத்தை பார்ப்போம். அல்லாஹ் சுபஹானஹு  தஆலா சூரா அல்ஹதீதில் வசனம் இறக்கினான்;

مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ

எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கிறாரோ அவருக்கு, அதை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கிறான். மேலும் அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு.(அல்குர்ஆன் 57 : 11)

அல்லாஹ்விற்கு யாராவது அழகிய கடன் கொடுப்பவர் இருக்கிறாரா? இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அழகிய கடன் என்றால் அது ஏழைகளுக்கு மறுமையை நாம் எதிர்பார்த்து கொடுக்கக்கூடிய தர்மத்திற்கு சொல்லப்படும். கடன் . கொடுத்துவிட்டு வாங்குவதற்கு பெயர் அழகிய கடன் அல்ல. அழகிய கடன் என்று குர்ஆனும் ஹதீஸும் எதை சொல்கின்றது என்றால் மறுமையை எதிர்பார்த்து ஏழைகளுக்கு செய்யக்கூடிய தர்மத்தை சொல்கிறது.

அல்லாஹு தஆலா இந்த வசனத்தில் கேட்க்கின்றான் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் இருக்கிறாரா? அதாவது ஏழைக்கு யார் மறுமையை எதிர்பார்த்து தர்மம் செய்கிறாரோ சதகாவாக கொடுத்து விடுகிறாறோ அவருக்குத் தேவையான செல்வத்தை இன்று நாம் தர்மம் செய்யக்கூடிய இந்த தர்மம் இதில் வருமா என்றால் இது ஒரு சாதாரண சதகாவாக இருக்கும். அதற்கும் அல்லாஹ்விடத்தில் நன்மை உண்டு.

فَلْيَتَّقِيَنَّ أَحَدُكُمُ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

ஓரு பேரிச்சம் பழத்தின் பகுதியை தர்மம் செய்தாவது நரக நெருப்பிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல் )அவர்கள் சொல்கிறார்கள்.

அறிவிப்பாளர்: அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி, எண்: 1413.

உங்களிடத்தில் ஒரே ஒரு பேரித்தம் பழம் இருக்கிறது என்றால் அதில் ஒரு பாதியையாவது அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டிய உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும்.

யார் இடத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்ப அவர்கள் தர்மம் செய்ய வேண்டும்.லட்சம் வைத்திருப்பவன் சில சில்லரைகளை தர்மம் செய்வானேயானால் அங்கே ஒரு கேள்வி இருக்கிறது. கோடி வைத்திருப்பவன் சில பத்துகளை மட்டும் தர்மம் செய்துவிட்டு அவன் மிச்சத்தை சுருக்கி கொள்வானேயானால் அங்கே ஒரு கேள்வி இருக்கிறது.

அல்லாஹு தஆலா முஃமின்கள் பற்றி அப்படி சொல்லவில்லை.

وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ (24) لِلسَّائِلِ وَالْمَحْرُومِ

அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு. அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்).(அல்குர்ஆன் 70 : 24-25)

அல்லாஹ் நேசிக்கின்ற அந்தக் கூட்டம் யார் என்றால் தாங்கள் சம்பாதிக்கின்ற செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை ஒதுக்கி விடுவார்கள். கேட்டு வருபவர்களுக்கும் கேட்டு வராமல் ஏழைகள் என்று அடையாளம் காணப்படாமல் இருப்பவர்களுக்கும் தேடிச்சென்று கொடுக்கவேண்டும்.

அவர்களுக்காக ஒரு தொகையை ஒதுக்கி விடுவார்கள் என்று அல்லாஹ் சொல்கின்றானே அது சில்லறை காசுகளை அல்ல. சில பத்துகளை குறிக்காது. நம்மிடத்தில் அவருடைய தேவையை நிறைவேற்றுவதற்கான ஆயிரங்கள் இருக்குமேயானால் அது நம்முடைய இன்றைய அவசியத் தேவையை விட அதிகமாக இருக்குமேயானால் அதை கொடுத்து அவருடைய கடனை அடைப்பது; அதைக் கொடுத்து அவருடைய வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வது; அதை கொடுத்து அவரை தன்னிறைவு ஆக்குவது; இதை அல்லாஹ் சொல்கின்றான்.

இந்த வசனம் இறங்குகின்றது. அபூ தஹ்தா ஓடோடி வருகிறார். அல்லாஹ்வின் தூதரே! இந்த ஸஹாபி உஹதில் கலந்து கொண்டு ஸஹீதானவர்.

عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: لَمَّا نَزَلَتْ {مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللهَ قَرْضًا حَسَنًا} [البقرة: 245] ، قَالَ أَبُو الدَّحْدَاحِ: يَا رَسُولَ اللهِ إِنَّ اللهَ يُرِيدُ مِنَّا الْقَرْضَ، قَالَ: «نَعَمْ يَا أَبَا الدَّحْدَاحِ» ، قَالَ: أَرِنِي يَدَكَ، فَنَاوَلَهُ يَدَهُ، فَقَالَ: إِنِّي قَدْ أَقْرَضْتُ رَبِّي حَائِطِي، وَفِي حَائِطِي سِتَّمِائَةٍ نَخْلَةٍ، ثُمَّ جَاءَ إِلَى الْحَائِطِ فَنَادَى يَا أُمَّ الدَّحْدَاحِ، وَهِيَ فِي الْحَائِطِ فَقَالَتْ: لَبَّيْكَ فَقَالَ: اخْرُجِي فَقَدْ أَقْرَضْتُهُ رَبِّي (المعجم الكبير للطبراني764 - )

அல்லாஹ்வின் தூதரே! ரப்புல் ஆலமீன் இப்படி ஒரு வசனம் இறக்கி இருக்கிறான்; ஓதிக்காட்டுகிறார்; அல்லாஹ் நம்மிடமிருந்து கடனை எதிர்ப்பார்க்கிறானா? நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்; ஆம் அபுதஹ்தா. அதற்கு அவர் உங்களுடைய கையை எனக்கு காட்டுங்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுடைய தூதர் கையை காட்டுகிறார்கள்.உடனே அந்த கையின் மீது கை வைத்து சொன்னார்கள்; நான் என்னுடைய ரப்புக்கு என்னுடைய பேரிச்சம்பழ தோட்டத்தை கடனாக கொடுத்து விட்டேன்.

அபூத்தஹ்தாவின் பேரிச்சம்பழ தோட்டம் எவ்வளவு விசாலமான பெரிய தோட்டம் என்றால் 600பேரீத்தம்பழம் மரங்கள் கொண்டது. அந்த தோட்டத்தை அபு தஹ்தா அல்லாஹ்வுடைய தூதர் இடத்திலேயே சதகாவாக கொடுத்து விடுகின்றார்கள். என்னுடைய ரப்புக்கு இதை நான் கடனாகக் கொடுத்து விட்டேன்.

அந்தத் தோட்டத்தில் தான் அபுத்தஹ்தா வசிக்கின்றார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் வசிக்கின்றனர். அபுத்தஹ்தா நேரடியாக வருகிறார். தோட்டத்திற்கு உள்ளே செல்லவில்லை. தோட்டத்திற்கு வெளியே நின்றுகொண்டு, என் மனைவியே!தோட்டத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள். என் பிள்ளைகளே!தோட்டத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று சொல்கிறார். என்னுடைய இந்தத் தோட்டத்தை நான் ரப்புக்கு கடனாகக் கொடுத்து விட்டேன்.

தன்னுடைய கணவர் செய்த இந்த இந்த தர்மத்திற்கு வாழ்த்துக் கூறிய வர்களாகவும் உம்முத்தஹ்தா தன்னுடைய மனைவி தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியே வருகிறார்.

அறிவிப்பாளர் : அபூ மஸ்வூத் (ரலி), நூல் : முஃஜம் கபீர் தப்ரானி, எண் 764

கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய தர்மத்தை சர்வ சாதாரணமாக எந்த விதமான ஒரு அலட்டலும் இல்லாமல், எந்த விதமான பகட்டும் இல்லாமல், யாருக்கும் தெரியாமல் ரசூலுல்லாஹ்விடத்தில் வந்து கொடுத்துவிட்டு செல்கிறார் என்றால் இவருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பு எவ்வளவு ஆழமாக உள்ளது?!

அல்லாஹ்வுடைய தேசத்திற்காக இவர் செய்த தியாகம் எவ்வளவு பெரியது?! நான் நேசிக்க கூடிய அல்லாஹ்வை விட இந்த தோட்டம் எனக்கு பெரியது அல்ல. இந்தத் தோட்டத்தை தர்மம் செய்வதால் அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்கிறது என்றால் அந்த அல்லாஹ்வுடைய அன்பு நான் கொடுக்கக்கூடிய இந்தத் தோட்டத்தை விட மிகப் பெரியது. நான் செய்யக் கூடிய இந்த தர்மத்தை விட இதனால் அல்லாஹ் எனக்கு கொடுக்கக்கூடிய அன்பு அது மிகப் பெரியது. எனவே அந்த அன்பிற்காக நேசத்திற்காக நான் இதை கொடுப்பதே சாதாரணமானது.

என்ற அந்த ஈமானிய யகீன் அந்த முஹப்பத்தின் உண்மை யதார்த்தம் அவருக்கு வந்தது என்றால் அவர் அல்லாஹ்வை அவர் நேசித்தது, அல்லாஹ்வுக்கு பிடித்த அந்த அமலை அவர் நேசித்தது தான் காரணம்.

எந்த அமல் அல்லாஹ்விற்கு பிடிக்கும் அல்லாஹ்வின் அன்பை நமக்கு தேடித்தரும் அந்த அமலை செய்தார்கள் என்றால் அதற்கு அல்லாஹ்வின் மீது உள்ள அவர்களுடைய அன்பு காரணம்.

ஹதீஸ்களை எடுத்து வாசித்துப் பாருங்கள். ஒவ்வொரு ஸஹாபியும் ரசூல் (ஸல்) அவர்களிடம் சென்று தன்னுடைய உலக வறுமையை முறையிட்டதாகவோ,பசி பட்டினி பஞ்சத்தை முறையிட்டதாகவோ அல்லது உலகத் தேவைகளுக்கு எந்தெந்த கஷ்டங்களுக்கு என்ன தீர்வு என்பதை கேட்டதாகவோ அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களிடத்தில் சொன்னதில்லை.

நபி (ஸல்) அவர்கள் இடத்தில் கேட்ட கேள்விகளை நாம் தொகுத்து பார்த்தோம் என்றால் அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வுடைய தூதரிடம் வந்து கேட்பார்கள்;

دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ

அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் எனக்கு அல்லாஹ் நேசிக்கக் கூடிய அமலை சொல்லிக் தாருங்கள் என்று.

அவர்கள் விசாரித்த அந்த தொனியைப் பாருங்கள். யா ரசூலல்லாஹ் எந்த அமல் அல்லாஹ்விற்கு பிடிக்குமோ அதை எனக்குச் சொல்லித் தாருங்கள்.

அறிவிப்பாளர்: சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண்: 4102, தரம் : சஹீஹ் (அல்பானி)

அன்பு சகோதரர்களே!மனிதர்களுடைய இயற்கை என்னவென்றால், ஒருவர் மீது நாம் அன்பு வைத்தால் உங்களுக்கு என்ன பிடிக்கும் அதை நான் வாங்கித்தருகிறேன் என்று சொல்வோம்.ஒரு குழந்தையின் மீது அன்பு வைத்து கொஞ்ச ஆரம்பித்தால் உனக்கு என்ன பிடிக்கும் உனக்கு நான் வாங்கி தருகிறேன் என்று சொல்வோம்.

அதுபோன்று நண்பனை நேசித்தால் அவனுக்கு பிடித்தமானதை வாங்கித் தருவோம். நம்முடைய தாய் தந்தையை நேசித்தால் அவர்களுக்கு விருப்பமானதை அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி அதைச் சாதாரணமாக பார்ப்போம் தாய் தந்தையின் அன்புக்கு முன்னால்.

இப்படி தான் நேசிக்கும் ஒருவர் எதை விரும்புகிராரோ, அவர்கள் விரும்புவதை வாங்கித் தருவது உலகத்தின் வழக்கம். இதை உலக மக்கள், மக்களுக்காக வைத்துக்கொண்டார்கள்.

ஆனால் நபியின் தோழர்கள், யார் தங்களை அல்லாஹ்விற்காக விட்டு விட்டார்களோ அவர்கள் இதை அல்லாஹ்வோடு வைத்துக் கொண்டார்கள். அல்லாஹ்விற்கு எது பிடிக்கும்? என்னுடைய ரப்பு எதை நேசிக்கிறான்? என் ரப்பை திருப்திப்படுத்தக்கூடிய அமல் எது? நான் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வுடைய தூதரே! எனக்கு சொல்லிக் காட்டுங்கள் எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கேட்பார்கள்.

(தஃப்ஸீர் தபரி:4/248)

சுஹைப் ரூமி (ரலி) அவர்களை எதிரிகள் எல்லாம் சுற்றிக் கொண்டார்கள். முஷ்ரிக்குகள் கேட்டார்கள்; வறுமையில், ஏழ்மையில் ஒரு ஃபக்கீராக வந்து செல்வத்தையெல்லாம் சம்பாதித்துக் கொண்டு இப்போது மக்காவை விட்டு ஓடி சென்று முஹம்மது நபியை சேர்ந்து விடுவாயா? அதற்கு அவர் சொல்கிறார்; அப்படி என்றால் உங்களுக்கு என்னுடைய செல்வம் தான் வேண்டுமா?

இதோ இன்ன வீட்டில் என்னுடைய செல்வம் இருக்கிறது; இன்ன வீட்டில் என்னுடைய கஜானா இருக்கிறது; இன்ன இடத்தில் என்னுடைய அடிமைப் பெண்கள் இருக்கின்றார்கள்; உரிமை விட்டு வருகிறேன்; எல்லாவற்றையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்; என்னை எனது தூதர் இடத்தில் ஹிஜ்ரத் செய்து செல்வதற்கு,எனது ரப்பின் பக்கம் செல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்.

அவ்வளவு கோடிக்கணக்கான சொத்தையும் அந்த முஷ்ரிகளுக்கு சர்வசாதாரணமாக விட்டுவிட்டு, தன்னுடைய உயிரை மட்டும் பெற்றுக்கொண்டு நபி இடத்தில் வருகிறார். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) மஸ்ஜிதின் நபவிலே வீற்றிருக்கிறார்கள். சுஹைப் வருவதை பார்த்து அவருடைய முகம் புன் முகமாக இலக ஆரம்பித்துவிடுகிறது. சுஹைப் வருகிறார். நீங்கள் செய்த வியாபாரம் மிக பரக்கத்தான, வெற்றியான வியாபாரம். அல்லாஹ் உங்களை புகழ்ந்து வசனம் இறக்கி இருக்கின்றான்.

وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

மக்களில் சிலர் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக தன்னுடைய செல்வங்களை எல்லாம் விற்றுவிட்டு தன்னுடைய ஆன்மாவை மட்டும் வாங்கிக்கொண்டு அல்லாஹ்வை நோக்கி வந்து விடுகிறார்கள்.(அல்குர்ஆன் 2:207) (2)

நூல் : தப்ரானி, எண் : 7308.

அல்லாஹ்வின் அன்பு என்பது மிகப்பெரிய ஒரு நிஃமத். ஈமானுக்கு வலு சேர்க்க கூடிய ஒன்று. ஆகவே தான் சஹாபாக்கள் ஒவ்வொரு தடவையும் ரசூல் (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ் நேசிக்க கூடிய செயலை கேட்டு தெரிந்து கொண்டே இருந்தார்கள். அல்லாஹ் வெறுக்கக் கூடிய செயல்களை கேட்டு தெரிந்துக் கொண்டு அதிலிருந்து விலகிக்கொண்டே இருந்தார்கள்.இது ஒரு ஈமானிய கல்பினுடைய உயிர் ஆகும்.

கண்ணியத்திற்குரிய தோழர்கள், அவர்களுடைய மாணவர்கள், அவர்கள் மாணவர்களுடைய வரலாற்றை நாம் பார்க்கிறோம். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளிலிருந்தும் அல்லாஹ்வுடைய அன்பும் நேசமும் எப்படி வெளியானது.

அபூத்தர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் அக்பர்! எனக்கு மவுத் ரொம்ப பிடிக்கும்.

-இன்று சிலருக்கு மவுத் பிடிக்கிறது. துன்யா உடைய கஷ்டத்திலிருந்து விடுதலைக்காக. இன்னும் சிலர் கடன் பிரச்சனை ஏற்பட்டு விட்டால் செத்து தொலைய மாட்டோமா. இப்படியாக இந்த துன்யா உடைய சிரமங்களை சந்திப்பதற்கு தவக்குல் இல்லாமல், யகீன் இல்லாமல், தஹ்தீதை நம்பாமல் நம்மில் பலர் மவுத்தை வெறுப்பாக விரும்புபவர்கள் இருக்கிறார்கள்-

ஆனால் அபூதர்தா உடைய கூற்றைப் பாருங்கள்; நான் மவுத்தை விரும்புகிறேன். ஏன் தெரியுமா? என்னுடைய ரப்பின் மீது உள்ள ஆசையால். என்னுடைய ரப்பை சந்திக்க வேண்டும் என்ற ஆவலால்.

காரணம் என்ன? அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

وَأَنَّكُمْ لَنْ تَرَوْنَ رَبَّكُمْ حَتَّى تَمُوتُوا

நீங்கள் உங்களுடைய ரப்பை சந்திக்க முடியாது பார்க்க முடியாது நீங்கள் மரணிக்கின்ற வரை என்றார்கள். (3)

அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாமித், நூல் : இப்னு மாஜா எண் :4077, முஸ்னது அஹமது எண் 22764.

அன்பு சகோதரர்களே! அபூதர்தா சொல்கின்றார்;என்னுடைய ரப்பை சந்திக்க வேண்டும் என்னுடைய ரப்பின் மீது உள்ள ஆசையால் நான் மவுத்தை நேசிக்கின்றேன்.

அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவருடைய மனைவி உம்மு தர்தா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய மாணவர் அப்துல்லாஹ் இப்னு ஜக்கரியா சொல்கின்றார் ஸஹாபாக்கள் இடத்தில் பயிற்சி பெற்ற அந்த தாயிபீன்களுடைய கூற்றைப் பாருங்கள்; நான் எந்த பாவமும் செய்யாமல் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டே 100ஆண்டுகள் வாழ்வதற்கும் அல்லது இப்போது இந்த தருணத்தில் என் உயிர் கைப்பற்றப்படுவதற்க்கும் இப்படி இரண்டு வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டால்

நான் உடனே நீ இந்த நாளில் இந்த நேரத்தில் உயிர் கைப்பற்றப்படுவதை தான் விரும்புவேன். அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால், அல்லாஹ்வுடைய ரசூலை சந்திக்க வேண்டும் என்ற ஆசையினால், நல்ல அடியார்களோடு போய் சேர வேண்டும் என்ற ஆசையினால்.

அன்பு சகோதரர்களே! சும்மா வார்த்தைக்கு என்று நாமும் பல விஷயங்களைப் பேசி விடலாம். பேசக்கூடிய பேச்சு அதை செயல் மூலம் உண்மைப்படுத்த வேண்டும். அவருடைய குணங்கள் பண்புகள் அவருடைய வாழ்க்கை உண்மைப்படுத்தவேண்டும் பேசுவதில் தத்துவங்களை பேச முடியும். ஆனால் செயலோடு ஒத்து இருக்கக்கூடிய பேச்சில் தான் அல்லாஹ் நிஃமத்தை வைத்திருக்கிறான். நேர்வழியை வைத்திருக்கிறான்.

அதுபோன்று தபவு தாபியீன்களில் ஹிஜ்ரி 258–ல் வஃபாத் ஆன யஹ்யப்புனு முஆத் (ரஹ்) சொல்கிறார்கள்;ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய அன்பில் திழைத்து விட்டால் அவன் இந்த உலகத்தில் இருந்து செல்லும்போது அவருடைய இரண்டு ஆசைகளை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.

-நம்மிடத்தில் துன்யாவில் உனக்கு என்ன நிறைவேறாத ஆசை என்று கேட்டால், நாம் என்ன சொல்வோம்? நாம் வாங்க வேண்டுமென்ற வீட்டைப்பற்றி சொல்வோமா! அல்லது கற்பனை செய்து வைத்திருந்த காரை சொல்வோமா! அல்லது இன்னும் எத்தனையோ உலக வஸ்துக்களை எண்ணிக்கொண்டுபோவோமா!

அன்பு சகோதரர்களே! அவர்களை பாருங்கள் முஃமின்களுடைய அடையாளங்களைச் சொல்லி காட்டுகின்றார்கள்.

ஒரு முஃமின் அல்லாஹ்வை அறிந்தவனாக, அல்லாஹ்வை நேசித்தவனாக இந்த உலகத்தில் இருந்து செல்லும் போது இரண்டு விஷயங்களில் அவனுடைய ஆசை குறைவாகத்தான் இருக்கும்.

ஒன்று, தன்னுடைய செயலை நினைத்து வருந்தி தன்மீது அவன் அழுத அழுகை, தனக்காக அல்லாஹ்வுடைய நன்றியில் நான் குறை செய்து விட்டேனே! இவ்வளவு பாவங்களை செய்து விட்டேனே! என்று தன்னைப்பற்றி அல்லாஹ்விற்கு முன்னால் அவன் அழுத அழுகை.

இந்த அழுகை உடைய பாக்கியம் யாருக்கு கொடுக்கப்பட்டதோ அவர்களுக்குத்தான் தெரியும். அல்லாஹ்விற்கு முன்னால் அழுவதில் என்ன இன்பம் இருக்கிறது என்பது. அழுகை என்பது ஒரு இபாதத். அல்லாஹ்விற்காக தொழுகையில், துஆக்களில், தனிமையில், திக்ருசெய்து, துஆ கேட்டு, முனாஜாத் செய்,து இஸ்திஃபார் செய்து, தவ்பா செய்து, அல்லாஹ்வுடைய நிஃமத்துகளை அல்லாஹ்விற்கு முன்னால் கூறி, தன்னுடைய குறைகளை குற்றங்களை பாவங்களை அல்லாஹ்விற்கு முன்னால் ஒப்புக்கொண்டு அந்த மறுமையின் அச்சத்தால் அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கின்ற அந்த விசாரணையினால் அச்சத்தால் அழுவது என்பது அவ்வளவு ஒரு இன்பமானது.

அல்லாஹ் உடைய தூதர் நபி ((ஸல்) அவர்கள் இந்த அழுகையைப் பற்றி நிறைய சொல்கிறார்கள். முஃமின்கள் உடைய அடையாளமாக குர்ஆன் கூறுகிறது.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்களின் மீது அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விட்டான்.(4)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதி, எண் :1639, தரம் : ஸஹீஹ். (அல்பானி)

தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அவனுடைய அன்பால் அழுதவர்கள் எல்லாம் நாளை மஹ்ஷரில் அர்ஷுடைய நிழலில் இருப்பார்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.(5)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி, எண்: 660,1423.

இதைத்தான் யஹ்யா இப்னு முஆத் கூறுகின்றார்கள்; ஒரு மூஃமின் இந்த துன்யாவில் இருந்து போகும் போது நான் இன்னும் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுது இருக்க வேண்டுமே! நான் இன்னும் அல்லாஹ்வின் அன்பால் அழுது இருக்க வேண்டுமே! நான் இன்னும் எனது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடி அழுது இருக்கவேண்டுமே! அழ வேண்டிய அளவு அழவில்லையே! என்ற வருத்தத்தில் செல்வான்.

இரண்டாவது, தன்னுடைய ரப்பின் மீது உண்டான அந்த ஷவ்க் –ஆர்வம், ஆசை எவ்வளவு ஆசையை வைத்தாலும் அல்லாஹ்வின் மீது நாம் வைக்க வேண்டிய அந்த ஆசை என்பது மிகமிக நம்முடைய உள்ளத்தில் குறைவாகத்தான் இருக்கிறது. இன்னும் அவன் மீது ஆசை வைக்க வேண்டுமே!

துன்யா உடைய வஸ்துக்களில் எந்த ஒன்றையாவது யாராவது விரும்பி விட்டால், சாதாரண பொருளாக இருக்கட்டும். அல்லது சாதாரண ஒரு செல்வமாக இருக்கட்டும். அல்லது அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றாக இருக்கட்டும். அதை அடைவதற்கு அதன் மீது அவருக்கு அன்பு ஏற்பட்டு விட்டால், அது எனக்கு தேவை அது எனக்கு இருக்க வேண்டும் என்பதை அவன் முடிவு செய்து விட்டால், அதை அடையாத வரை அவன் நிம்மதியாக இருக்க மாட்டான்.

அன்பு சகோதரர்களே! யார் அல்லாஹ்வை அடைந்து கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்வை தவறவிட மாட்டார்கள். அல்லாஹ்வை அடைவதற்கு ஒரு மனிதனுக்கு உள்ளத்தில் ஆசை வந்து விட்டால், நான் அல்லாஹ்வை அடைந்து விட்டேன் நான் அல்லாஹ்வின் அன்பை பெற்று விட்டேன் என்று எப்போது சொல்ல முடியும்?

الخاتمة بالخير-ஹாத்திமா பில்ஹைர் -கலிமாவோடு தவ்பாவோடு அவர்களுடைய வாழ்க்கை முடிந்து இருக்க வேண்டும். நாளை கப்ரில் வைக்கப்படும் பொழுது அவருடைய கப்ர் விசாலமாக சொர்க்க பூங்காவாக ஆக்கப்பட்டால் அல்ஹம்துலில்லாஹ்!

என்னுடைய ரப்பை நான் அடைந்து கொண்டேன் என்று முடிவு செய்து விடலாம். இந்த உலகத்தில் வாழுகின்ற வரை நம்மில் ஒவ்வொருவரும் ஃபித்னாவால் -குழப்பங்களால் சூழப்பட்டு இருக்கிறோம். எந்த குழப்பத்தால் நம்முடைய ஈமான் பறி போகுமோ, நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பு குறையுமோ, நம்முடைய ஈமானை இழப்போமோ அதை ஒவ்வொருவரும் பயந்து கொண்டிருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

அல்லாஹ்டைய அன்பு ஒருவனிடத்தில் இருக்குமேயானால் இந்த உலகம் அனைத்தையும் அற்பமாக கருதுவான். எதை இழந்தாலும் அதைப் பற்றி அவனுக்கு கவலை இருக்காது.

காரணம் என்ன? இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியது போன்று நான் என்னுடைய ரப்பை நோக்கி சென்று கொண்டே இருப்பேன்.

وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ

நான் என்னுடைய ரப்பை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறேன் (அல்குர்ஆன் 37:99)

இதைத்தான் ரசூல் (ஸல்) அவர்கள் தாயிபிஃல் அவ்வளவு பெரிய கஷ்டத்திற்கு பிறகு அவ்வளவு பெரிய துன்பத்திற்கு பிறகு எந்த ஒரு நபியும் இப்படிப்பட்ட துன்பத்தை சந்தித்திருக்க முடியாது. அந்தத் துன்பத்திற்கு பிறகு அல்லாஹ்விடத்தில் பணிவோடும் பயத்தோடும் ஆசையோடும் ஆதரவோடும் சொன்னார்கள்;

என் இறைவா! உன்னுடைய கோபம் என் மீது இல்லை என்றால் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருந்தாலும் நான் உன்னுடைய ஆஃபியத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

அல்லாஹ்விடத்தில் அன்பு இருக்கிறது என்று -இஷ்க்கென்று -ஆஷிக் என்று சொல்லிக்கொண்டு திரிவதில்லை உண்மையான அன்பு. அமல்களில் இருக்கவேண்டும்; அமல்களைத் தேடிச்செல்ல வேண்டும்; அமல்களில் ஆர்வத்தோடு செல்ல வேண்டும். அந்த அமல்களை கொண்டுதான் அல்லாஹ்வுடைய அன்பை அடைய முடியும்.  அல்லாஹ்வுடைய அந்த பாசத்தை அடையமுடியும்.

யார் அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாக அல்லாஹ்வைத் தேடுகின்றார்களோ அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் சுபஹானஹு தஆலா நிம்மதியால் ஒளியால் நிரப்பிவிடுவான்.

அத்தகைய ஒளிபெற்ற அமைதி பெற்ற உள்ளங்களை அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்முடைய உள்ளங்களில் ஆக்கி அருள்வானாக நம்முடைய குறைகளை பாவங்களை மன்னித்து இந்த துணியா உடைய அற்ப விஷயங்களில் நம்முடைய உள்ளங்களை பறிகொடுப்பதில் இருந்தும், இந்த உலக மோகங்களில் மூழ்கி மறுமையை மறப்பதில் இருந்தும் அல்லாஹ் சுபஹானஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்புகள் :

குறிப்பு 1).

حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ: حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَمْرٍو الْقُرَشِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّكَ النَّاسُ»سنن ابن ماجه 4102 -)-حكم الألباني]صحيح

குறிப்பு 2).

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ شَبِيبٍ الْأَصْبَهَانِيُّ، ثنا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ، ثنا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ زَبَالَةَ الْمَخْزُومِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ زِيَادِ بْنِ صَيْفِيِّ بْنِ صُهَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ صُهَيْبٍ، أَنَّ الْمُشْرِكِينَ لَمَّا أَطَافُوا بِرَسُولِ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، فَأَقْبَلُوا عَلَى الْغَارِ، وَأَدْبَرُوا قَالَ: وَا صُهَيْبَاهُ، وَلَا صُهَيْبَ لِي، فَلَمَّا أَرَادَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمِ الْخُرُوجَ بَعَثَ أَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا إِلَى صُهَيْبٍ، فَوَجَدَهُ يُصَلِّي، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ لِلنَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ: وَجَدْتُهُ يُصَلِّي، فَكَرِهْتُ أَنْ أَقْطَعَ عَلَيْهِ صَلَاتَهُ. قَالَ: «أَصَبْتَ» ، وَخَرَجَا مِنْ لَيْلَتِهِمَا، فَلَمَّا أَصْبَحَ خَرَجَ حَتَّى أَتَى أُمَّ رُومَانَ زَوْجَةَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، فَقَالَتْ: أَلَا أَرَاكَ هَهُنَا، وَقَدْ خَرَجَ أَخَوَاكَ، وَوَضَعَا لَكَ شَيْئًا مِنْ زَادِهِمَا. قَالَ صُهَيْبٌ: فَخَرَجْتُ حَتَّى دَخَلْتُ عَلَى زَوْجَتِي أُمِّ عُمَرَ، فَأَخَذْتُ سَيْفِي وَجُعْبَتِي وَقَوْسِي حَتَّى أَقْدَمَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَأَجِدُهُ وَأَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ جَالِسَيْنِ، فَلَمَّا رَآنِي أَبُو بَكْرٍ قَامَ إِلَيَّ فَبَشَّرَنِي بِالْآيَةِ الَّتِي نَزَلَتْ فِيَّ، وَأَخَذَ بِيَدِي فَلُمْتُهُ بَعْضَ اللَّائِمَةِ فَاعْتَذَرَ، وَرَبَّحَنِي رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، فَقَالَ: «رَبِحَ الْبَيْعُ أَبَا يَحْيَى»( المعجم الكبير للطبراني7308 -)

குறிப்பு 3).

حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، وَيَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ، قَالَا: حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَمْرِو بْنِ الْأَسْوَدِ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ أَنَّهُ حَدَّثَهُمْ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنِّي قَدْ حَدَّثْتُكُمْ عَنِ الدَّجَّالِ حَتَّى خَشِيتُ أَنْ لَا تَعْقِلُوا. إِنَّ مَسِيحَ الدَّجَّالِ رَجُلٌ قَصِيرٌ أَفْحَجُ، جَعْدٌ أَعْوَرُ، مَطْمُوسُ الْعَيْنِ لَيْسَ بِنَاتِئَةٍ وَلَا حَجْرَاءَ، فَإِنْ أَلْبَسَ عَلَيْكُمْ، قَالَ يَزِيدُ: رَبَّكُمْ، فَاعْلَمُوا [ص:424] أَنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، وَأَنَّكُمْ لَنْ تَرَوْنَ رَبَّكُمْ حَتَّى تَمُوتُوا " قَالَ يَزِيدُ: «تَرَوْا رَبَّكُمْ حَتَّى تَمُوتُوا» (مسند أحمد مخرجا 22764)

குறிப்பு 4).

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ رُزَيْقٍ أَبُو شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَطَاءٌ الخُرَاسَانِيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ اللَّهِ ": وَفِي البَاب عَنْ عُثْمَانَ، وَأَبِي رَيْحَانَةَ. وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شُعَيْبِ بْنِ رُزَيْقٍ (سنن الترمذي 1639)  [حكم الألباني] : صحيح

குறிப்பு 5).

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ"(صحيح البخاري 660 -)

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/