HOME      Lecture      அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை | Tamil Bayan - 001   
 

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை | Tamil Bayan - 001

           

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை | Tamil Bayan - 001


بسم الله الرحمن الرّحيم
 
அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை!
 
إِنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ 
 
பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً 
 
وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا 
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا 
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! தாய்மார்களே! இந்த ஊருடைய முஸ்லிம் ஜமாத்தார்களே! அல்லாஹு தஆலா உங்களுடைய வருகையை ஏற்றுக் கொள்வானாக!
 
உங்களுக்கும் எனக்கும் இந்த சத்திய மார்க்கத்தை ஏற்று நடந்து அவனுடைய வெற்றியை, அன்பை, அருளை, சொர்க்கத்தை அடைவதற்கு அந்த அல்லாஹ் உதவி செய்வானாக.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்றைய தலைப்பைப் பற்றி உங்களுக்கு சகோதரர் கூறினார்.
 
அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை.
 
ஸுப்ஹானல்லாஹ்! அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா பரிசுத்தமானவன். மிக உயர்ந்தவன்; கண்ணியத்திற்குரியவன். 
 
அந்த அல்லாஹ்வை நாம் சரியான முறையில் அறிந்து கொண்டால், இன்னும் அவனுடைய தன்மைகளை, வல்லமைகளை, கண்ணியத்தை, உயர்வை, அவனுடைய மகத்துவத்தை, சரியான முறையிலே நாம் புரிந்து கொண்டால் அல்லாஹ் என்று சொல்லப்படும்போது, நாம் அல்லாஹ்வை நினைக்கும்போது, அவனுடைய அருளை நினைக்கும்போது, அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நினைக்கும்போது, அல்லாஹ் நமக்கு செய்திருகின்ற அருள்களை எண்ணிப்பார்க்கும்போது நம்முடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடும்; நம்முடைய உள்ளங்களெல்லாம் நடுங்கிவிடும்.
 
அல்லாஹ்வுடைய வல்லமையையும், அல்லாஹ்வுடைய ஆற்றலையும் நினைக்கும்போது நம்முடைய உள்ளங்கள் பயந்து நடுநடுங்கி விடும்.
 
அல்லாஹு தஆலா முஃமின்களுடைய அடையாளங்களைப் பற்றி சொல்கிறான்.
 
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (2) الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ (4)
 
பொருள்: உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு. (அல்குர்ஆன் 8 : 2- 4)
 
சூரா அல் அன்பால் உடைய 2,3,4 ஆகிய வசனங்களிலே நம்பிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வர்ணிக்கும்போது
 
إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ
 
அவர்களுக்கு முன் அல்லாஹ்வைப் பற்றி பேசப்பட்டால், அல்லாஹ் யார் என்று அவர்களுக்கு விவரிக்கப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும் என்று சொல்கிறான்.
 
அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது முஃமின்களுடைய உள்ளத்திலே பாசமும், பயமும் கலந்த, அச்சமும் ஆசையும் கலந்த, ஆதரவும் பயமும் கலந்த அந்த நடுக்கம் ஏற்படும்.
 
நடுக்கம் என்பது எப்படி?
 
அல்லாஹ்வின் மீது பாசத்துடனே, அல்லாஹ்வின் மீது பயத்துடனே, அல்லாஹ்வின் மீது அன்புடனே, அச்சத்துடனே கலந்த நடுக்கம்.
 
அல்லாஹ்வுடைய தூதர்  மறுமை நாளில் அர்ஷின் நிழலில் இருக்கின்ற ஏழு கூட்டத்தார்கள் பற்றி சொன்னார்கள். 1
 
நாளை மறுமை நாளிலே, அல்லாஹு தஆலா சூரியனை ஒரு மைல் தூரத்தில் வைத்திருப்பான். 2
 
இந்த பூமியை வேறு பூமியாக அல்லாஹ் மாற்றி இருப்பான். 3
 
அந்த நேரத்தில், அந்த கடுமையான வெயில் நேரத்தில் அல்லாஹு தஆலா தன்னுடைய அர்ஷுடைய நிலையிலே ஏழு பிரிவினர்களுக்கு அங்கே தங்குவதற்கு, இளைப்பாறுவதற்கு, ஓய்வு எடுப்பதற்கு அனுமதி கொடுப்பான்.
 
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى في ظِلِّهِ يَومَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ:
 
ஸப்அதுன் யுளில்லுஹுமுல்லாஹு ஃபீ ளில்லிஹி யவ்ம லா ளில்ல இல்லா ளில்லுஹு
 
அவுடைய நிழலைத் தவிர எந்த நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் ஏழு கூட்டத்தாருக்கு அல்லாஹ் நிழல் கொடுப்பான். 1
 
அந்த ஏழு கூட்டத்தில் ஏதாவது ஒரு கூட்டத்தில் அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.
 
அன்புக்குரியவர்களே அந்த ஏழு கூட்டத்திலே ஒரு கூட்டத்தார் அவர்களுடைய தன்மையைப் பற்றி தூதர் அவர்கள் சொன்னார்கள்.
 
அவர்கள் யார் தெரியுமா?
 
ورَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ.
 
அல்லாஹ்வை ஒருவர் தனிமையில் நினைவுகூர்ந்தால் அதன் காரணமாக அவருடைய கண்கள் கண்ணீரை சிந்திவிடும்.
 
அல்லாஹ்வை தனிமையிலே நினைத்த காரணத்தால், அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் நினைத்த காரணத்தால் அந்த அழுகை!
 
அல்லாஹ் தனக்கு செய்திருக்கக்கூடிய அருள் ஒரு பக்கம், அதற்கு நன்றி செலுத்தாமல் வாழக்கூடிய தன்னுடைய வாழ்க்கை ஒரு பக்கம், இதையெல்லாம் நினைத்ததால் அந்த அழுகை! 
 
மறுமையில் அல்லாஹ்விடத்தில் செல்லும் போது, அல்லாஹ்வை திருப்திப் படுத்த சரியான அமல் என்னிடத்தில் இருக்கிறதா என்று சிந்தித்த காரணத்தால் அந்த அழுகை!
 
அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் நினைத்த காரணத்தால் அந்த அழுகை!
 
எத்தனையோ நேரங்களில் நான் பாவம் செய்தபோது, நான் குற்றம் செய்தபோது, நான் அநியாயம் செய்தபோது, நான் தவறுகள் செய்தபோது அந்த நேரத்தில் என்னுடைய இறைவன், என்னுடைய அல்லாஹ் என்னை தண்டிக்காமல் என் மீது கருணை காட்டி விட்டான் அல்லவா!
 
நான் சிரமத்தில் இருந்தபோது அவன் எனக்கு உதவி செய்தான் அல்லவா! எனக்கு பசித்தபோது அவன் எனக்கு உணவளித்தான் அல்லவா!
 
நான் தாகித்து இருந்தபோது எனக்கு தண்ணீர் கொடுத்தான் அல்லவா!  எனக்கு உடை இல்லாமல் இருந்த எனக்கு உடை கொடுத்தான் அல்லவா! வீடு இல்லாமல் இருந்த எனக்கு வீட்டை கொடுத்தான் அல்லவா! மனைவி இல்லாமல் இருந்த எனக்கு மனைவியை கொடுத்தான் அல்லவா!
 
இப்படி அல்லாஹ் எனக்கு நிஃமத்துகளை செய்திருக்க நான் அல்லாஹ்விற்கு உரிய முறையில் நன்றி செலுத்த வில்லையே, அவனை உரிய முறையில் வணங்கவில்லையே என்று நினைக்கும்பொழுது அல்லாஹ்வுடைய அன்பால், அல்லாஹ்வுடைய அச்சத்தால் அழுகின்றான் அல்லவா அந்த அழுகையின் காரணமாக அவர் அர்ஷின் நிழலில் இருப்பார். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இப்படி அழுதவர் நாளை மறுமையில் அர்ஷுடைய நிலையில் இருப்பார். 1
 
யாருக்கு அர்ஷுடைய நிழல் கிடைத்ததோ இன்ஷா அல்லாஹ் அவர் சொர்க்கம் செல்வார். அவர் சிராத் பாலத்தை கடந்து விடுவார். அவருடைய அமல்கள் நிறுக்கப்படும்போது, அவருடைய அமல்களுடைய தட்டு கனத்து விடும். மறுமையிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையால் கவுசர் தடாகத்திலே அந்தத் தூய மதுரமான தண்ணீரை அவர் குடிப்பார். 
 
மேலும் சொன்னார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இரண்டு கண்களின் மீது ரப்புல் ஆலமீன் நரகத்தை தடை செய்துவிட்டான். நரகம் ஹராம் ஆக்கப்பட்டுவிட்டது. 4
 
இரண்டு கண்கள் என்றால் என்ன? அந்த கண்களை உடையவர்கள். இரண்டு கண்களை உடையவர்கள் மீது நரகத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தடுத்து விட்டான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்! இந்த பண்புகளை வாழ்க்கையில் கடைபிடித்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் இந்த தன்மையை அடைவதற்கு முயற்சி செய்து பாருங்கள். எதை எதையோ அடைவதற்காக, எத்தனையோ ஆசைக்காக வேண்டி இரவை பகலாக்குகிறோம். பகலை இரவாக ஆக்குகின்றோம். எத்தனையோ பல சிரமங்களை எல்லாம் தாங்கிக் கொள்கிறோமே!
 
நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய நேசராக ஆகுவதற்கு, அல்லாஹ்வுடைய அன்பராக ஆகுவதற்கு அல்லாஹ்விடத்தில் சொர்க்கம் கிடைப்பதற்கு, நரக நெருப்பு நம் மீது தடை செய்யப்படுவதற்கு உண்டான தன்மைகளை நம்முடைய ஹபீப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லித் தருகிறார்கள்.
 
அது என்ன தெரியுமா?
 
عَينانِ لا تمَسَّهما النَّارُ : عينٌ بكت من خشيةِ اللهِ ، وعينٌ باتت تحرسُ في سبيل اللهِ
 
இரண்டு கண்களை நரகம தீண்டாது. அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண். அல்லாஹ்வின் பாதையில் முஸ்லிம்களை பாதுகாக்க விழித்திருந்த கண். 4
 
وعينٌ باتت تحرسُ في سبيل اللهِ
 
அல்லாஹ்வுடைய பாதையில் முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக விழித்திருந்த கண். அல்லாஹ்வின் பாதையில் முஸ்லிம்களின் உயிரை, பொருளை, உடமைகளை பாதுகாப்பதற்காக விழித்திருந்த கண். அந்த கண்ணுடையவர் மீது அல்லாஹ் நரகத்தை தடை செய்துவிடுவான்.
 
இன்னொருவர்,
 
عينٌ بكت من خشيةِ اللهِ
 
அல்லாஹ்வுடைய அச்சத்தால் அழுதகண். இதன் மீதும் ரப்புல் ஆலமீன் நரகத்தை தடை செய்து விடுவான். 
 
அன்பிற்குரியவர்களே! இன்று அல்லாஹ் என்றால் யார் என்று அறியாத காரணத்தால், அல்லாஹ் உடைய வல்லமையை, அவனுடைய ஆற்றலை, அவனுடைய சக்தியை, அவனுடைய தன்மைகளை புரிந்து கொள்ளாத காரணத்தால்தான் நாம் அல்லாஹ்வுடன் நெருங்காதவர்களாக இருக்கின்றோம். அல்லாஹ்வை விட்டு தூரமாகி கொண்டு இருக்கின்றோம்.
 
யாராக இருக்கட்டும், எல்லோரும் அல்லாஹ்வை அறியாதவர்களாகத்தான் இருக்கின்றோம். தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லக்கூடிய இந்த சமுதாயமாக இருக்கட்டும். அல்லது இஸ்லாமை வெளியில் இருந்து பார்க்கக்கூடிய சமுதாயமாக இருக்கட்டும்.
 
சில மாற்றுமத மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ் என்பவன் முஸ்லிம்களுக்குரிய கடவுள் என்பதாக.
 
இல்லை, அன்பிற்குரியவர்களே!
 
கடவுள் ஒருவன் தான்! இறைவன் ஒருவன் தான்!
 
யார் உங்களுக்கு கடவுளோ, இறைவனோ அதே இறைவன்தான் எங்களுக்கும் கடவுள். எங்களுடைய கடவுள்தான் உங்களுடைய கடவுள். கடவுள் இரண்டல்ல, மூன்று அல்ல, நான்கல்ல, ஒரே கடவுள் தான்.
 
வானத்தை படைத்தவன், சூரியனை படைத்தவன், பூமியைப் படைத்தவன் ஒரே இறைவன்தான். அந்த ஒரே இறைவனைதான் அல்லாஹ் என்ற பெயரால் அழைக்கின்றோம்.
 
அரபியில் அந்த ஒரே இறைவனுக்கு அழகிய முறையில் மாற்று பெயரை கூற முடியாமல், அதிலே இருமையை காணமுடியாமல், அதில் ஆண்பால் பெண்பால் என பிரித்துக் காண முடியாமல் அந்த இறைவன் தனக்கென்று வைத்துக் கொண்ட பெயர்தான் அல்லாஹ்.
 
அதனால்தான் நாம் அல்லாஹ் என்றும் சொல்கின்றோம், இறைவன் என்றும் சொல்கின்றோம், அளவற்ற அருளாளன் என்றும் சொல்கின்றோம், படைப்பாளன் என்றும் சொல்கின்றோம், இரட்சகன் என்றும் சொல்கின்றோம், ஆண்டவன் என்றும் சொல்கின்றோம். ஆனால் அவன் தனக்கு வைக்காத பெயர்களை நாம் அவனுக்கு கூற மாட்டோம்.
 
அன்பிற்குரியவர்களே! அந்த அல்லாஹ்வை எப்போது நாம் அறிந்து கொள்கிறோமோ, அது போன்று நம்முடைய மாற்று மத மக்களும் எப்போது அல்லாஹ்வை அறிந்து கொள்கிறார்களோ அவனுக்கு இணை கற்பிக்க மாட்டார்கள். அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, அந்த படைத்த இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, அந்த படைத்த இறைவனுக்கு முன் பணிய வைக்க வேண்டிய இந்த நெற்றியை அவனைத் தவிர வேறு யாருக்கும் முன் வைக்க மாட்டார்கள். 
 
அவனிடத்தில் ஏந்த வேண்டிய இந்த கைகளை அவனைத் தவிர எந்த படைப்பிடத்திலும், அது உயிருள்ள படைப்பாக இருக்கட்டும், அல்லது இறந்த படைப்பாக இருக்கட்டும், யாருக்கு முன்பும் ஏந்த மாட்டார்கள்.
 
அந்த அல்லாஹ்வை புரியாத காரணத்தால்தான், அந்த அல்லாஹ்வுடைய வல்லமையை விளங்கிக் கொள்ளாத காரணத்தால் தான், அந்த படைத்த இறைவனுடைய ஆற்றலை விளங்கிக் கொள்ளாத காரணத்தால்தான், இன்று இவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது. அல்லாஹ்வை விட்டும் அடியான் தூரமாகி கொண்டே செல்கிறான். அல்லாஹ்வை அறியாத காரணத்தால் அவனுடைய சட்டங்களை பாழ்படுத்திக் கொண்டு இருக்கின்றான். அல்லாஹ்வை அறியாத காரணத்தால் அவன் தடை செய்த காரியங்களை செய்து கொண்டிருக்கின்றான்.
 
ஒரு அரசாங்கத்தை பற்றித் தெரிந்தவர், அந்த அரசாங்கத்துடைய வலிமையை பற்றித் தெரிந்தவர் அந்த அரசாங்கத்திற்கு மாறு செய்ய மாட்டார்.
 
எப்போது ஒருவர் அரசாங்கத்தை அறியவில்லையோ, அந்த அரசாங்கத்திடம் இருக்கக் கூடிய ஆற்றலை அறியவில்லையோ அவர் அந்த அரசாங்கத்தின் கட்டளையை பேணுவது கிடையாது. அந்த அரசாங்கத்திற்கு மாறு செய்கிறார். மாறு செய்த காரணத்தால், கட்டளைகளை மீறிய காரணத்தால், தடைகளை செய்த காரணத்தால் அவர் எப்படி தண்டிக்கப்படுவார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
 
அன்பிற்குரியவர்களே! இந்த அரசாங்கங்கள் எல்லாம் அழிந்து விடக்கூடிய அரசாங்கங்கள். இந்த அரசாங்கங்களை முடிவு செய்யக்கூடியவன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். அவன் யாரை நாடுகிறானோ இன்று ஆட்சியில் அமர வைப்பான். அவன் யாரை நாடுகிறானோ ஆட்சியில் இருந்து எடுத்து விடுவான். உள்ளே இருப்பவர்களை வெளியே கொண்டு வருவான். வெளியே இருப்பவர்களை உள்ளே கொண்டு வருவான். உயரத்தில் இருப்பவர்களை கீழே கொண்டு வருவான். கீழே இருப்பவர்களை உயரத்தில் கொண்டு வருவான். இவ்வாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நடத்திக் கொண்டிருக்கிறான். 5
 
அவன் சொல்கிறான் தன்னைப் பற்றி நான் செய்கிறேன் என்பதாக.
 
தன்னுடைய வல்லமையைக் கொண்டு அவன் நடத்திக் கொண்டிருக்கிறான். இந்த மனிதன் நாடுவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவனது முயற்சி ஒரு பக்கம். ஆனால் அவனது முயற்சி நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அகிலத்தின் இறைவன் அல்லாஹ் நாடவேண்டும். அவன் நாடாமல் எதுவும் நடக்காது. எத்தனையோ மக்கள் முயற்சி செய்கிறார்கள், போராடுகிறார்கள், தங்களுடைய திறமைகளை செலவழிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைப்பது கிடையாது. ஏனெனில், அல்லாஹ் நாடவில்லை. எத்தனையோ மக்கள் ஒரு சில இலகுவான முயற்சிகளை செய்கிறார்கள். அவர்கள் அடைந்து கொள்கிறார்கள். காரணம், அல்லாஹ் அவர்களுக்கு நாடிவிட்டான்.
 
அன்பிற்குரியவர்களே! அந்த அல்லாஹ் எப்படிப்பட்டவன் தெரியுமா? அந்த அல்லாஹ்வுடைய வல்லமையை புரிந்தால் இன்று மக்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பாழ்படுத்த மாட்டார்கள். அல்லாஹ் தடுத்த பாவங்களை செய்ய மாட்டார்கள். சர்வசாதாரணமாக இன்று அல்லாஹுடைய கட்டளைகள் மீறப்படுகின்றன. வட்டி வாங்குகிறார்கள். ஜினா -விபச்சாரம் செய்கிறார்கள். தவறான முறையில் பொருள் சம்பாதிக்கிறார்கள். நிறுவையில் குறைவு செய்கிறார்கள். அளவையில் குறைவு செய்கிறார்கள். பலவீனமான ஏழை மக்களின் மீது அநியாயம் செய்கிறார்கள், அட்டூழியங்கள் செய்கிறார்கள். பிறருடைய சொத்துக்களை சூறையாடி கொள்கிறார்கள். பிறருடைய சொத்துக்களுக்கு ஆசைப்படுகிறார்கள். உறவுகளை முறித்து வாழ்கிறார்கள். சகோதர சகோதரிகள் உடன் சண்டை போடுகிறார்கள். அற்ப காசுக்காக தாயிடத்தில் சண்டை செய்கிறான்.
 
தந்தை இடத்திலேயே சண்டை செய்கிறான். உலக செல்வத்திற்காக வேண்டி உறவுகள் மீது அநியாயம் செய்வதை பார்க்கின்றோம்.
 
அன்றாட நாளிதழ்களில் நாம் இது போன்ற செய்திகளை படிக்கின்றோம்.
 
அற்ப காசுக்காக, பணத்துக்காக, சொத்துக்காக, ஒரு பிள்ளை தன்னுடைய தந்தையைக் கொலை செய்கிறான். ஒரு பிள்ளை தன்னுடைய தாயை கொலை செய்கிறான். அல்லது தந்தை தனது மகனை கொலை செய்கிறான். அல்லது சகோதரன் சகோதரனை கொலை செய்கிறான். எப்படிப்பட்ட பயங்கரமான, மோசமான நிலைமை பாருங்கள்.
 
இன்று உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? அல்லாஹ்வுடைய கட்டளைகளைப் பாழ்படுத்திய காரணத்தால், அவனுடைய கட்டளைகளை மீறிய காரணத்தால் அவனுடைய கோபத்தை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
 
மக்கள் நினைக்கிறார்கள் சுனாமி வருவதும், புயல் வருவதும், வெள்ளம் வருவதும், மழை வருவதும் இவையெல்லாம் ஒரு இயற்கை கோளாறு என்பதாக. இல்லை, அன்பிற்குரியவர்களே! இயற்கை கோளாறுகள் அல்ல. இந்த இயற்கையைப் படைத்த இறைவனுடைய கோபத்தின் காரணமாக அவனுடைய சோதனையாக வரக்கூடியது இவை.
 
எப்போது மக்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறுகிறார்களோ அல்லாஹ் அவனுடைய வல்லமையை காட்டுகிறான். 
 
இதுதான் உண்மை! புரிந்து கொள்ளுங்கள்!
 
இந்த பூமி அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. வானம் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேகம் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. காற்று அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. மழை அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. சூரியன் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. சந்திரன் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவன் எதை எப்போது எப்படி வேண்டுமானாலும் மாற்றுவதற்கு பேராற்றலுடையவன்.
 
فَعَّالٌ لِمَا يُرِيدُ
 
அல்லாஹ் சொல்கின்றான் நான் நாடியதை செய்து முடிப்பவன். (அல்குர்ஆன் 85 : 16)
 
என்னை மிகைப்பதற்கு உங்களில் யார் இருக்கிறார்கள். மிகப்பெரிய வல்லரசு என்று சொல்கிறார்களே, தங்களிடத்தில் இருக்கக்கூடிய ஆயுதங்களை கொண்டு உலகத்தை மிரட்டுகிறார்களே, பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்களே, தங்களது நாட்டுக்கு வந்த அழிவுகளை அவர்களால் தடுக்க முடிந்ததா? அடை மழையை தடுக்க முடிந்ததா? வெள்ளத்தைத் தடுக்க முடிந்ததா? புயலை தடுக்க முடிந்ததா? பூகம்பத்தைத்தான் தடுக்க முடிந்ததா? யோசித்துப்பாருங்கள்! முடியாது!
 
அன்பிற்குரியவர்களே. காரணம் என்ன? இவையெல்லாம் அல்லாஹுடைய படைப்பு. அல்லாஹுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவை.
 
அல்லாஹ் சொல்கின்றான். வேண்டுமென்றால் குர்ஆனை படித்து பாருங்கள். திறந்து படித்துப் பாருங்கள். உங்களையும் கேட்டுக்கொள்கிறேன். எனது மாற்று மத மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் சொல்கின்றான்.
 
சூரா அல் அஃராஃப் உடைய 97, 98, 99 வசனத்தைப் படித்துப் பாருங்கள்!
 
அல்லாஹ் கேட்கிறான்.
 
أَفَأَمِنَ أَهْلُ الْقُرَى أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا وَهُمْ نَائِمُونَ (97) أَوَأَمِنَ أَهْلُ الْقُرَى أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ (98)
 
أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ (99)
 
பொருள்: (நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா? அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7 : 97-99)
 
அல்லாஹ் கேட்கிறான், ஊர் மக்கள் எல்லாம் என்னை பயமற்று இருக்கிறார்களா? என்னுடைய அச்சமில்லாமல் இருக்கிறார்களா? அவர்கள் இரவில் தூங்கும் போது அவர்களுக்கு வேதனை வரலாம். அவர்கள் இரவில் தூங்கும் போதும் அவர்களுக்கு வேதனை வரலாம். இந்தியாவின் வடமாநிலங்களில் வந்த பூகம்பங்களை நினைத்துப் பாருங்கள். வடமாநிலங்களில் வந்த மழை வெள்ளத்தை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் கேட்கின்றான் அவர்கள் பகலிலே விளையாடி கொண்டிருக்கும் பொழுதும் நம்முடைய வேதனை அவர்களிடம் வராது என்று அச்சமற்று இருக்கிறார்களா? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எப்படி வேண்டுமானாலும் இறக்க சக்தி பெற்றவன்.
 
أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ (16) أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ (17)
 
பொருள்: வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம். அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின், எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (அல்குர்ஆன் 67 : 16,17)
 
வானத்திலுள்ள உங்களுடைய இறைவனை பயமற்று இருக்கிறீர்களா? அவன் நாடினால் உங்கள் மீது கல் மழையை இறக்குவான். அல்லது பூமியிலிருந்து உங்களை அப்படியே இழுத்துக் கொள்வான். எத்தனை வகையான வேதனைகளை அவன் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவன்!
 
وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِيَ إِلَّا ذِكْرَى لِلْبَشَرِ (31)
 
பொருள்: (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள்.  (அல்குர்ஆன் 74 : 31)
 
உமது இறைவனின் பட்டாளங்களை அவனைத்தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். காரணம் என்ன? கடல் அவனுடைய படைப்பு. சூரியன் அவனுடைய படைப்பு. எல்லாம் அவனுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன. மனிதனை தவிர எந்த படைப்பும் படைத்த இறைவனாகிய அந்த அல்லாஹ்விற்கு மாறு செய்வது கிடையாது. மனிதனைத் தவிர எந்த படைப்பும் படைத்தவனாகிய அந்த இறைவனை தவிர வேறு ஒருவனை வணங்குவது கிடையாது. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மாடு இன்னொரு மாட்டை வணங்கியதாக? ஒரு ஆடு இன்னொரு ஆட்டை வணங்கியதாக? ஒரு கோழி இன்னொரு கோழியை வணங்கியதாக? ஒரு புறா இன்னொரு புறாவை வணங்கியதாக? ஒரு யானை இன்னொரு யானையை வணங்கியதாக? ஏன், அந்தப் படைப்புகள் எல்லாம் தன்னை படைத்த இறைவனை சரியாக அறிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதன் தனக்கு பகுத்தறிவு, மிகப்பெரிய திறமை, அறிவு, ஆற்றல் இருக்கிறது என்று சொல்பவன் அந்த படைத்த இறைவனை மறந்து விட்டு, அந்த படைத்த இறைவனுக்கு வணக்க வழிபாடுகளை செய்யாமல், படைக்கப்பட்ட படைப்புகளை நம்பி அவற்றுக்கு வழிபாடுகள் செய்கிறான் அல்லவா?
 
எப்படிப்பட்ட மோசமான நிலைமை பாருங்கள்! தன்னை அறியாமையில் தள்ளி கொள்கின்றான். தன்னை கண்ணியக் குறைவிலே தள்ளி கொள்கின்றான். தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்கின்றான். யார் அல்லாஹ்வைத் தவிர, அந்த ஏக இறைவனைத் தவிர, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் யார் அந்த ஏக இறைவனைத் தவிர, அந்த அல்லாஹ்வைத் தவிர, அந்த ஒரே கடவுளைத் தவிர, அந்த ஒரே பேரரசனை தவிர பிறருக்கு வழிபாடுகள், வணக்கங்கள் செய்கிறார்களோ அவர்கள் தங்களைத் தாங்களே கேவலப் படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களை தாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள். தங்களுடைய சுயமரியாதையை இழக்கின்றார்கள்.
 
இதை யாரும் விரும்புவார்களா?
 
ஒரு மனிதன் தன்னைக் கேவலப்படுத்திக் கொள்வதை, தன்னை இழிவுபடுத்திக் கொள்வதை, தன்னுடைய சுயமரியாதையை இழப்பதை விரும்புவானா? ஆம் விரும்புகிறார்கள். அவர்கள் யார்?
 
யார் அந்த இறைவனை விட்டுவிட்டு படைப்புகளை வணங்குகிறார்களோ அவர்கள்விரும்புகிறார்கள்.
 
அந்தப் படைப்பு எப்படி இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகளை வணங்குபவர் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்கிறார். தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார். தன்னைத்தானே இறைவனுடைய கோபத்திற்கு ஆளாக்கி கொள்கின்றார்.
 
அன்பிற்குரியவர்களே! அந்த இறைவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய ஆற்றல் என்ன? அவன் யார்? என்று சிந்தித்துப் பார்த்திருக்கிருக்கிறோமா? அவனுடைய வல்லமை, அவன் எங்கே இருக்கிறான்? அவன் எப்படி இருக்கிறான்? அவனுடைய தன்மைகள் என்ன? அவனுடைய பண்புகள் என்ன? அவனுக்கும் நமக்கும் இருக்கும் உறவு என்ன? அவன் நம் மீது வைத்திருக்கும் அன்பு என்ன? நாம் அவன் மீது வைக்க வேண்டிய அன்பு என்ன? அவன் நமக்கு கொடுத்தவை என்ன? நாம் அவனுக்கு செய்ய வேண்டியவை என்ன?
 
சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
 
இன்று மக்களுக்கு இறைவன் என்றால் யார் என்று கேள்வி கேட்டால் தெரியாது. எதைப் பற்றியெல்லாமோ கேள்வி கேட்டால் சொல்வார்கள். பெரிய அறிவாளி என்று சொல்வார்கள். சிந்தனைவாதி என்று சொல்வார்கள். சீர்திருத்தவாதி என்று சொல்வார்கள். ஆனால், அல்லாஹ்வைப் பற்றிய அறிவு, மறுமையைப் பற்றிய அறிவு, அவர்களுக்கு முற்றிலும் பூஜ்ஜியம் தான். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
 
ஆனால், ஒரு சிறிய முஸ்லிம் குழந்தையைக் கேட்டால் அந்த குழந்தை சொல்லும் அல்லாஹ் என்றால் யார் என்பதாக. யாருக்கு வணக்க வழிபாடுகள் செய்ய வேண்டும், இறைவன் யார் என்று கேட்டால் எங்களுடைய முஸ்லிம் குழந்தை சொல்லும்.
 
காரணம் என்ன தெரியுமா? இறைவனுடைய புத்தகத்தை படிக்கின்ற காரணத்தால், குர்ஆனை படிக்கின்ற காரணத்தால், இறைவனால் இறக்கப்பட்ட இந்த அற்புத வேதத்தை படிக்கும் காரணத்தால் அந்த குழுந்தை பதில் கூறுகிறது.
 
அன்பிற்குரிய மாற்றுமத மக்களே! நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள். இந்த குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வேதம் அல்ல. இந்த குர்ஆன் சொல்கிறது.
 
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ (27)
 
பொருள்: இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 81 : 27) 
 
உலக மக்களுக்கு அறிவுரையாக தவிர வேறு ஒன்றாக இந்த குர்ஆன் இல்லை என்பதாக. இந்த குர்ஆனில் இறைவன் அழைக்கின்றான்.
 
يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ (57)
 
பொருள்: 10 : 57. மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும் உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதும், (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியும், இறை அருளும் வந்துள்ளன. (அல்குர்ஆன் 10 : 57)
 
يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكُمْ وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا (174)
 
பொருள்: மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சியாளர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். (அவருடன்) மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 4 : 174)
 
قُلْ يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِوَكِيلٍ (108)
 
பொருள்: : (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை. (அல்குர்ஆன் 10 : 108)
 
மக்களே என்று அழைக்கிறான். முஸ்லிம்களே என்று அழைக்கவில்லை. இந்தியர்களே என்று அழைக்கவில்லை. அமெரிக்கர்களே என்று அழைக்கவில்லை. மக்களே! நீங்கள் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருக்கட்டும். எந்த மொழியைப் பேசுபவர்களாக இருக்கட்டும். எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கட்டும். மக்களே! உங்கள் அனைவருக்கும் உங்கள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு உபதேசம் வந்திருக்கிறது. உங்களுடைய உள்ளத்திலுள்ள நோயை குணப்படுத்தக் கூடிய மருந்து வந்திருக்கிறது. இந்த குர்ஆனைத் தவிர வேறொன்றை கொண்டு யாராலும் சீர்பட முடியாது. சீர்படுத்தவும் முடியாது.
 
அந்த குர்ஆனிலே அல்லாஹ் சொல்கின்றான் அந்த இறைவன் யார்? அந்த இறைவனுடைய வல்லமை என்ன? படித்து பார்த்தீர்களா அல்குர்ஆனுடைய 112 வது அத்தியாயத்அதை.
 
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4)
 
பொருள்: (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான். (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை. (அல்குர்ஆன் 112 : 1 – 4) 
 
இறைவனாக இருக்க வேண்டுமா? அல்லாஹ் சொல்கின்றான். இந்த நான்கு தன்மைகள் யாரிடத்தில் இருக்கிறதோ அவன் தான் இறைவனாக இருப்பதற்கு தகுதியானவன். இந்த நான்கு தன்மைகளை உடையவன்தான் உங்களைப் படைத்தவன். இந்த நான்கு தன்மைகளை உடையவன்தான் இந்த வானம், பூமி, சூரியன், சந்திரனை படைத்தவன்.
 
யார் அவன்? நபியிடத்தில் கேட்டார்கள் மக்கத்து மக்கள். மக்கா நகர மக்கள் நபியிடத்திலே கேட்டார்கள். மக்கா நகர மக்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? ரஸூல் அவர்கள் அனுப்பப்பட்ட காலத்திலே சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சிலைகள் என்றால் என்ன? அவர்களாக கற்பனையாக செதுக்கி கொண்ட சிலைகள் அல்ல. தங்களுடைய முன்னோர்களுடைய சிலைகளை, தங்களுடன் வாழ்ந்து மரணித்த நல்லோர்களுடைய சிலைகளை அவர்கள் வணங்கிக் கொண்டு வந்தார்கள். அந்த மக்கள் சொன்னார்கள் நபியிடம் வந்து, நபியே எங்களுடைய கடவுள்களை கல்லால் செய்கிறோம், எங்களுடைய கடவுள்களை தங்கத்தால் செய்கிறோம், எங்களுடைய கடவுள்களை வெள்ளியால் செய்கிறோம், எங்களுடைய கடவுள்களை செம்பால் பித்தளையால் செய்கின்றோம். முஹம்மதே உன்னுடைய கடவுள் எதனால் செய்யப்பட்டவன்?
 
என்ன வார்த்தை பார்த்தீர்களா? என்னை கேள்வி பார்த்தீர்களா? உன்னுடைய கடவுள் எதனால் செய்யப்பட்டவன்? எங்களுடைய கடவுளை நாங்கள் கல்லால், களிமண்ணால், தங்கத்தால், வெள்ளியால், ஈயத்தால், பித்தளையால் செய்து கொண்டிருக்கிறோம். இந்த உலோகத்தால் செய்து கொள்கிறோம். முஹம்மதே! நீ வணங்கக்கூடிய கடவுள் எதனால் செய்யப்பட்டவன்? அவனுடைய உலோகம் என்ன? என்று கேட்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய அந்த ஆற்றலைப் பற்றி, அவனது உள்ளமையை பற்றி கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேல் இருந்து, அவன் உயர்ந்து இருக்கக்கூடிய அர்ஷின் மேல் இருந்து பதிலை இறக்கி வைத்தான்.
 
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
 
நபியே சொல்லுங்கள்! அந்த அல்லாஹ் ஒருவன். احد ஒருவன். அந்த இறைவன், அந்த ஒப்பற்றவன், அந்த பேரரசன் احد ஒருவன் தான்.
 
இது இறைவன் யார் என்பதற்கு முதல் அடிப்படை.
 
இன்று மக்கள் யாரை எல்லாம் கடவுள், இறைவன் என்று வணங்குகிறார்களோ இந்த முதல் அடிப்படையிலேயே விழுந்து விடுவார்கள். ஏன்? அவர்கள் கற்பனை செய்யக் கூடிய அந்த தெய்வங்கள் எல்லாம், அவர்கள் கற்பனை செய்யக் கூடிய அந்த கடவுள்கள் எல்லாம் ஒன்றல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பல கடவுள்கள். இவர் ஒருவரை எடுத்து வந்தால் இன்னொருவர் அதை விட பெரிய உருவத்தை எடுத்து வருவார். அவர் அதை விட பெரிய உருவத்தை எடுத்து வருவார். அவை ஒன்றல்ல ஒன்றுக்கு மேற்பட்டவை.
 
எனவே அங்கேயே இவைகள் எல்லாம் கடவுள் தன்மையை இழந்து விடுகின்றன.
 
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
 
அல்லாஹ் ஒருவன் தான் احد. அவன் இருவரல்ல, அவன் மூவர் அல்ல.
 
اللَّهُ الصَّمَدُ
 
இரண்டாவது தன்மை அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அஸ்ஸமது அல் காமில் அஸ் ஸய்யிதுல் காமில்!
 
அவன் முழுமையான ஒரு தலைவன். அவனுக்கு எந்த தேவையும் கிடையாது. அவனால் படைக்கப்பட்ட அனைத்தும் எப்போதும், எல்லா நேரத்திலும் அவனுடைய தேவை உடையவையாகவே இருக்கின்றன.
 
இது யாருடைய ஆற்றல்? இது அல்லாஹ்வுடைய ஆற்றல் மட்டுமே! அல்லாஹ்வுக்கு யாருடைய தேவையும் கிடையாது. அவன் வானத்தைப் படைத்தான். வானத்தினுடைய தேவை அவனுக்கு கிடையாது. சூரியனை படைத்தான் சூரியனின் தேவை அவனுக்கு கிடையாது. சந்திரனை படைத்தான் சந்திரனின் தேவை அவனுக்குக் கிடையாது. மனிதனை படைத்தான் மனிதனின் தேவை அவனுக்கு கிடையாது. மிருகங்களை படைத்தான், காற்றை படைத்தான், நெருப்பை படைத்தான், நீரை படைத்தான், இந்த அண்ட சராசரங்களை அனைத்தையும் படைத்தான். இவற்றின் தேவை அவனுக்கு அணுவளவும் கிடையாது.
 
இவற்றை எல்லாம் எதற்காக படைத்தான்? சொல்கின்றான் இறைவன்:
 
هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (29)
 
பொருள்:  அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து அதை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும், (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 29)
 
மனிதனே இவை அனைத்தையும் உனக்காக படைத்தேன். உன்னுடைய நன்மைக்காக உன்னுடைய பலனுக்காக படைத்தேன். சூரியனைக்கொண்டு மனிதன் பலன் பெறுகிறான். சந்திரனைக் கொண்டு மனிதன் பலன் பெறுகிறான். காற்றைக் கொண்டு மனிதன் நன்மை பெறுகிறான். மிருகங்களை கொண்டு மனிதனுக்கு நன்மை, கடலை கொண்டு மனிதனுக்கு நன்மை, மழையைக் கொண்டு மனிதனுக்கு நன்மை, இந்த பூமியை கொண்டு மனிதனுக்கு நன்மை. இந்த மனிதனை கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இந்த மனிதனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எல்லா படைப்புகளையும் படைத்தேன் என்பதாக அந்த இறைவன் தன்னுடைய புத்தகம் அல்குர்ஆனிலே சொல்லிக்காட்டுகிறான்.
 
அவனுக்கு இந்த படைப்புகளின் பக்கம் அணு அளவும், ஒரு சிறு அளவும் தேவை கிடையாது, எப்போதும் தேவை கிடையாது, எந்த வகையிலும் தேவை கிடையாது.
 
الصَّمَدُ அஸ்ஸமது
 
அவனது இரண்டாவது தன்மையை பாருங்கள். இதில் ஏதாவது அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படக்கூடிய பொய்யான தெய்வங்களிடம் இருக்கின்றதா?
 
இந்த தன்மைகளில் அவனுக்கு யாரும் கூட்டாக இருக்க முடியுமா? யார் ஆக இருக்கட்டும், யாரும் அல்லாஹ்விற்கு கூட்டாக சமமாக ஆக முடியாது.
 
இன்று தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுடைய நேசர்களை வணங்குகிறார்கள்.
 
ஷாஹுல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை பலர் வணங்குகிறார்கள். அல்லது, அப்துல் காதர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை பலர் வணங்குகிறார்கள். முயீனுத்தீன் ஷிஸ்தீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை பலர் வணங்குகிறார்கள். இன்னும், பிற மத மக்களிடம் ஊருக்கு ஊர் குலதெய்வங்கள் இருப்பது போல் இவர்களுக்கும் ஊருக்கு ஊர் தர்காகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே யோசித்துப் பாருங்கள்! இந்த இறைநேசர்களுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்கிறார்கள். இவர்களுக்கு சுஜூது செய்கிறார்களே! இவர்களுக்கு நேர்ச்சை செய்கிறார்களே! இவர்களிடத்தில் கையேந்துகிறார்களே! அல்லது இவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கையேந்துகிறார்கள். இந்த நேசர்களுக்காக அறுத்துப் பலியிடுகிறார்களே! இவர்கள் அடங்கி இருக்கக்கூடிய இடங்களிலே வணக்க வழிபாடுகள் செய்கிறார்களே!
 
இவர்களுக்கு சமது என்ற இறைத் தன்மை இருக்கிறதா??
 
அல்லாஹுஸ் ஸமது - அவன்தான் தேவையற்றவன். அந்த அல்லாஹ்வுடைய தேவை எல்லோருக்கும் இருக்கிறது.
 
இவர்கள் யாரை வணங்குகிறார்களோ, யாருக்கு வணக்க வழிபாடுகள் செய்கிறார்களோ அவர்களும் அந்த அல்லாஹ்விடத்தில்தான் தேவை உள்ளவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுடைய கருணையின் பக்கம், அல்லாஹ்வின் அன்பின் பக்கம், அல்லாஹ்வுடைய رزق ரிஸ்கின் பக்கம், அல்லாஹ்வுடைய உதவியின் பக்கம் தேவையுடையவர்களாக இருந்தார்கள்.
 
 இவர்களில் யாரும் தங்களுடைய லாப நஷ்டத்தை இவர்கள் சொந்தமாக தேடிக்கொள்ள முடியாது.
 
அல்லாஹ் நபிக்கு சொல்கிறான்.
 
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ (107)
 
பொருள்: அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 10 : 107)
 
அன்பிற்குரியவர்களே! இந்த உலகத்திலே அல்லாஹ்விடத்தில் கண்ணியத்திற்குரிய ஒருவர், ஏனையவர்களை விட அல்லாஹ்விடத்தில் உயர்வுக்கும், சிறப்பிற்கும் உரிய ஒருவர் இருப்பார் என்று சொன்னால் அவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும்தான். அந்த நபியின் வாயால் அல்லாஹ் சொல்ல வைக்கின்றான். நபியே நீங்கள் உங்களைப் பற்றி இந்த மக்களுக்கு சொல்லுங்கள். எனவேதான், அன்பிற்குரியவர்களே! என் மாற்றுமத மக்களே! உங்களுக்கும் சொல்லிக்கொள்கிறோம். நாங்கள் இறைத்தூதர்களை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்கிறோமே தவிர, இறைத்தூதர்களை வணங்கவில்லை. முஸ்லிம்கள் அல்லாஹ்வை, படைத்த இறைவனை மட்டுமே வணங்குகிறார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்கவில்லை. அவ்வாறே இறைத்தூதர்களில் வேறு யாரையும் முஸ்லிம்கள் வணங்கவில்லை.
 
சிலர் எண்ணிக் கொள்கிறார்கள், முஹம்மத் அவர்களும் ஒரு கடவுள்தான் என்று. 
 
முஹம்மது அவர்கள் இறைவனுடைய தூதர். அல்லாஹ் சொல்கின்றான் முஹம்மதே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களைப் பற்றி நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். 
 
قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ (188)
 
பொருள்: (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.''  (அல்குர்ஆன் 7 : 188)
 
நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி அறிவு எனக்கு இருக்கும் என்றால், நான் எனக்கு நன்மைகளாகவே சேகரித்து இருப்பேன். என்னை எந்த தீமையும் தீண்டி இருக்காது. எனக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது என்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லும்படி அல்லாஹ் சொல்கின்றான்.
 
நீங்கள் இறைவன் அல்ல. இறைவனால் படைக்கப்பட்டவர் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள். நாளை என்ன நடக்கப் போகிறது என்பது உங்களுக்கு தெரியாது என்று நீங்கள் சொல்லுங்கள்! உங்களுக்கு அப்படி தெரிந்திந்தால் எனக்கு எப்போதும் வாழ்க்கையில் நன்மையே ஏற்பட்டிருக்கும், எனக்கு எந்த தீமையும் ஏற்பட்டிருக்காது என்பதாக மக்களுக்கு சொல்லுங்கள்.
 
மேலும் சொல்கின்றான், நபியே உங்களுக்கு உங்களுடைய இறைவன் ஒரு நன்மையை கொடுக்க நாடினால், உங்களுக்கு உங்களுடைய இறைவன் ஒரு நன்மையை கொடுக்க நாடினால் அதை யாரால் தடுக்க முடியும்? உங்கள் இறைவன் ஒரு தீமையை கொடுக்க நாடினால் அந்த தீமையை அவனைத் தவிர வேறு யாரும் தடுக்க முடியாது.
 
இவ்வாறு, நபிக்கும் சொல்கின்றான். ரசூலுக்கும் செல்கின்றான்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமே அப்படி என்று சொன்னால் இந்த அவுலியாக்கள் எல்லாம், இந்த இறை நேசர்கள் எல்லாம் எம்மாத்திரம்? தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் அல்லாஹ்வின் உதவியின் பக்கம் தேவை உள்ளவர்களாக இருந்த இவர்கள் எப்படி நம்முடைய தேவைகளை நிறைவேற்ற முடியும்? இவர்கள் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்? இவர்கள் எப்படி நம்முடைய தேவைக்கு உதவியாளர்களாக மாறமுடியும் என்று யோசித்துப்பாருங்கள்!!
 
அன்பிற்குரியவர்களே! அதி முடியவே முடியாது.
 
அல்லாஹுஸ் ஸமது!
 
நாம் வணங்க வேண்டியது யார்? நாம் வழிபாடுகள் செய்ய வேண்டியது யாருக்கு? அந்த மகிமைக்குரிய, எந்தத் தேவையும் மற்ற அந்த இறைவனைத்தான் நாம் வணங்க வேண்டும்.
 
அல்லாஹ்வை வணங்குவதற்கு நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டியது கிடையாது. அல்லாஹ்வை வணங்குவதற்கு எந்த செலவும் செய்ய வேண்டியது கிடையாது. நீங்கள் அதை பார்க்கிறீர்கள் அல்லவா?
 
தர்காக்களுக்கு போகக் கூடிய மக்களை பார்த்தும் சொல்கின்றேன். அல்லாஹ் அல்லாத வேறு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கூடிய மக்களைப் பார்த்தும் சொல்கின்றேன். பள்ளிக்கு செல்ல கூடிய ஒரு முஸ்லிம் அவனுக்கு பொருள் செலவு கிடையாது. அவனுக்கு காசு பணம் தேவையில்லை. சுத்தம் செய்துகொண்டு அங்கே செல்கின்றான். எல்லா மக்களிடமும் சரிசமமாக செல்கின்றான். நானும் ஒரு மனிதன் எனக்கு இந்த சமுதாயத்தில் கண்ணியம் இருக்கிறது. இந்த சமுதாயத்தில் சம உரிமை, பொறுப்பு, அந்தஸ்து இருப்பதாக உணர்ந்து, தோளோடு தோள் சேர்த்து, யாருக்கும் முன்பாகவு கூனிக்குறுகி, பயந்து, யார் என்ன சொல்வார், நான் எங்கே நிற்பது, எனது வரிசை எங்கே என்று எந்த பயமும் இல்லாமல் தலை நிமிர்ந்து செல்கின்றான் அல்லாஹ்வை வணங்க செல்பவன்.
 
முஸ்லிம் சகோதரர்களுடனே சேர்ந்து அவனும் அங்கே நிற்கின்றான். அந்த இறைவனை வணங்குகிறான். அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன், அந்த இறைவன் மிகப்பெரியவன், இந்த படைப்புகள் எல்லாம் மிகச் சிறியது, வானம், பூமி, சூரியன், சந்திரன், காற்று, மழை, மனிதன், மிருகம் இவை அனைத்தும் மிக சிறியது, அற்பமானது, அல்லாஹு அக்பர், என்னை படைத்த இறைவன் மிகப்பெரியவன். என்னுடைய எஜமானன் பெரியவன் அல்ல, என்னுடைய கடை பெரியதல்ல, எனது அரசாங்கம் பெரியதல்ல, என்னுடைய ஆட்சி பெரியதல்ல, என்னுடைய ஆற்றல், என்னுடைய சக்தி, என்னுடைய அறிவு, என்னிடத்தில் இருக்கக்கூடிய எதுவும் நானும் பெரியவனல்ல. அல்லாஹ் மட்டுமே பெரியவன் என்று கூறி நிமர்ந்து நிற்கின்றான்.
 
என்னை படைத்த இறைவன்தான் பெரியவன். அல்லாஹ் அக்பர் அவன்தான் மிகப்பெரியவன் என்று சொல்லும் பொழுது அந்த முஸ்லிமுடைய உள்ளத்திலே ஏற்படக்கூடிய அந்த ஈமானிய நம்பிக்கையை பாருங்கள். இந்த வார்த்தையை சொல்லிப் பாருங்கள் ஒரு முறை. இந்த உணர்வோடு, இந்த வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
 
சுப்ஹானல்லாஹ்!!
ஒருமுறை உச்சரிக்கும் பொழுது, எவ்வளவு நிதானமாக, நிம்மதியாக, அந்த இறைவனை தொழுது, அந்த தொழுகையில் எந்த இடைத்தரகர்களும் இல்லாமல், யாருடைய பரிந்துரையும் இல்லாமல் ஒரு முஸ்லிம் தொழுகிறான் பாருங்கள்!
 
அங்கே அந்த தேவை கிடையாது. யாரும் அங்கு வந்து குறுக்கே நிற்பது கிடையாது. நேரடியாக,
 
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (2) الرَّحْمَنِ الرَّحِيمِ (3) مَالِكِ يَوْمِ الدِّينِ (4)
 
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6)
 
என்று கூறி இறைவனை துதிக்கின்றான். இறைவா உன்னை புகழ்ந்தேன். நீ அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையவன். நாளை மறுமை நாளிலே தீர்ப்பு கொடுக்கப்படும் அந்த நாளுக்கு நீயே சொந்தக்காரன். நீயே அதிபதி. இறைவா நான் உன்னை வணங்குகிறேன். இறைவா நான் உன்னிடத்திலே உதவி தேடுகிறேன். எனக்கு நீ வழிகாட்டு.
 
அன்பிற்குரியவர்களே! என் சமுதாய மக்களே! சிந்தித்துப் பாருங்கள்! யாருடைய வசீலாவால் இங்கே நீங்கள் கேட்கிறீர்கள்? யாருடைய பொருட்டால் நீங்கள் இங்கே கேட்கிறீர்கள்? ஷாகுல் ஹமீது அவர்களை முன்வைத்தா? அப்துல் காதர் ஜெய்லானி அவர்களை முன்வைத்தா? உங்களுடைய தொழுகை வேறு, உங்களுடைய வாழ்க்கை வேறா? உங்களுடைய ரப்பை நீங்கள் எப்படி புகழ்ந்தீர்கள்.?
 
உங்களுடைய வணக்க வழிபாடுகளை சொல்லி, அந்த ரப்பிடத்திலே உதவியை கேட்ட உங்களால் இறந்துவிட்டவர்களுக்கு  முன்பாக நின்று கொண்டு எப்படி உங்கள் தேவையை உங்களால் சொல்ல முடிகிறது? பாதுஷா எனக்கு உதவி செய்யுங்கள்! பாதுஷா என்னை ரட்சித்துக் கொள்ளுங்கள்! பாதுஷா உங்களிடத்திலே நான் வந்துவிட்டேன்! என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?
 
தொழுகையில் நீங்கள் யாரை தொழுதீர்கள்? அல்லாஹு அக்பர் என்று சொன்னீர்களா? அல்லது ஷாகுல் ஹமீது அக்பர் என்று சொன்னீர்களா? அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னீர்களா அல்லது அல்ஹம்து லிஷாஹுல் ஹமீது என்று சொன்னீர்களா? இய்யாக நஃபுது என்று அல்லாஹ்வை சொன்னீர்களா அல்லது சாகுல்ஹமீது ரஹ்மத்துல்லாஹி அவர்களை சொன்னீர்களா?
 
يَاأَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ (15)
 
பொருள்: மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ  முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான். (அல்குர்ஆன் 35 : 15)
 
சிந்தித்துப் பார்க்கவேண்டாமா? நம்மை அவனுடனே அவன் நெருக்கம் ஆக்குகின்றான். மனிதனே யாருடைய தேவையும் எனக்கு கிடையாது. யாரும் எனக்கு பூஜை போட வேண்டிய அவசியம் கிடையாது. எனக்கு நேர்ச்சை சமர்ப்பிக்க வேண்டிய தேவை  கிடையாது. அது எனக்கு அவசியம் கிடையாது. எனக்கு காசு பணம் வேண்டியது கிடையாது. பூ தேவை கிடையாது. தேங்காய் தேவை கிடையாது. பழம் தேவை கிடையாது. எதுவுமே தேவையில்லை. நேராக வா! உன்னுடைய சுத்தமான உள்ளத்தை கொண்டு, சுத்தமான உன்னுடைய நாவை கொண்டு, சுத்தமான உன்னுடைய இறைநம்பிக்கை கொண்டு என்னை ஒரு வார்த்தை புகழ்ந்து விடு போதும். இதுதான் அடியானுக்கு அல்லாஹ் கூறுவது.
 
ஏன் அவனுக்கு சாப்பாடு தேவையா, அவனுக்கு தப்ரூக் தேவையா, அவனுக்கு நாஷ்டா தேவையா. அவனுக்கு எதுவும் தேவை கிடையாது.
 
அல்லாஹ் சொல்கின்றான்;
 
مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ ‏
 
பொருள்: ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்கே தவிர நான் வேறு எதற்கும் படைக்கவில்லை. நான் அவர்களிடம் உணவை கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்று நான் நாடவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் எல்லோருக்கும் உன்வாளிப்ப்வன், வலிமை உள்ளவன், மிக்க உறுதியானவன் ஆவான். (அல்குர்ஆன் 51 : 56-58)
 
அல்லாஹ்வுடைய கூற்றின் பொருள் என்ன?
 
மக்களே! உங்களை நான் என்னை வணங்குவதற்காக படைத்தேன். உங்களிடத்திலே நான் சாப்பாட்டை கேட்கவில்லை. உங்களிடத்திலே நான் உணவை கேட்கவில்லை. உங்களிடத்தில் அது எனக்கு தேவையில்லை. உங்களுக்கு நான் உணவளிக்கிறேன். எப்படிச் சொல்கிறான் உங்களுக்கு நான் உணவளிக்கிறேன். என்னுடைய உணவைக் கொண்டு நீங்கள் வாழ்கிறீர்கள். என்னுடைய தண்ணீரைக் குடித்து, உங்களது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்கிறீர்கள். நான் உங்களுக்கு உணவளிப்பவன். உங்களுடைய உணவு எனக்கு தேவை கிடையாது. ஆகவேதான், அல்லாஹ்வைத் தவிர, அந்த ஏக இறைவனைத் தவிர, மக்கள் எங்கெல்லாம், எந்த இடத்தில் எல்லாம், எந்த எந்த மதத்தில் எல்லாம் படைப்பினங்களை வணங்கி வழிபாடு செய்கிறார்களோ அங்கே அவர்கள் உணவுகளை சுமந்து செல்வதை பார்க்கிறோம்.
 
பார்க்கிறீர்களா இல்லையா? தர்காக்களுக்கு செல்லும்போது பூந்தி வாங்கிக்கொண்டு செல்கிறார்களே! பழம் வாங்கிக்கொண்டு செல்கிறார்களே! பூ வாங்கிக்கொண்டு செல்கிறார்களே! போர்வையை வாங்கிக்கொண்டு செல்கிறார்களே! ஏன்? ஏன்? அங்கு அவர்கள் அல்லாஹ்வை வணங்கவில்லை. படைப்புகளை வணங்குகின்ற காரணத்தால் இவற்றை எல்லாம் வாங்கிகொண்டு செல்கிறார்கள்.  அல்லாஹ் சொல்கின்றான்: அவனக்கு எந்த தேவையும் இல்லை என்று.
 
எனவேதான் பள்ளிக்கு செல்லக்கூடிய முஸ்லிம் free hand, nothing anything, ஒன்றுமே அவன் கையில் இல்லை. நேராக செல்ல வேண்டியதுதான். தொழுது விட்டு வரும்போது அந்த இறைவனிடத்திலே கேட்டு விட்டு வருகிறான். இன்று பாருங்கள், இறைவன் இவனுக்கு உணவு கொடுக்கின்றான். ஆனால், இவன் யாரை வணங்க போகிறானோ, யாரிடத்தில் தேவையைக் கேட்க போகிறானோ, அவர்களுக்கு இவன் உணவு கொண்டு செல்கின்றான். தேங்காய் எடுத்துச் செல்கின்றான். வாழைப்பழம் எடுத்து செல்கின்றான். பூந்தி எடுத்து செல்கின்றான். இன்னும், எத்தனை எத்தனை விதமான பொருட்களை எல்லாம் எடுத்து செல்கின்றான். இவன் அவர்களுக்கு அங்கே உணவுகளை மற்றும் பொருள்களை கொடுக்கின்றான். ஆனால், அவர்களிடம் நீங்கள் எனக்கு கருணை காட்டுங்கள், எனக்கு வியாபாரத்தை நல்லபடியாக ஆக்குங்கள், என்னை நீங்கள் ரடசித்துக் கொள்ளுங்கள், எனது சிரமத்தை தீருங்கள் என்று பிரார்த்தனை செய்கிறான். அவர்களிடம் தேவைகளை கேட்கிறான்.
 
இன்னும் எந்த அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது தெரியுமா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்த சமூகத்தினுடைய ஈமானை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் காப்பாற்ற வேண்டும்.
 
ஒவ்வொரு தேவைக்கு என்று தர்காக்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். இன்ன தேவைக்கு இன்ன தர்கா, இன்ன தேவைக்கு இன்ன தர்கா என்று  விசேஷ விசேஷமாக வைத்திருக்கிறார்கள். எப்படி மாற்று மத மக்கள் இடத்தில் இருக்குமோ அதுபோன்று விசேஷ விசேஷமாக வைத்திருக்கிறார்கள்.
 
இந்த தர்காவில் போய் இப்படி செய்தால் நமக்கு பிள்ளை கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
 
சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன்.
 
என்ன நிலைமை ஆகிவிட்டது? எங்கே ரப்பு? யார் இறைவன்? எங்கே யாரை வணங்குகிறார்கள்? யாரை நம்புகிறார்கள்? யாரை அல்லாஹ் என்று சொல்கிறார்கள்? யாரை ரப்பு என்று சொல்கிறார்கள்?
 
பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம், நம்முடைய முஸ்லிம் பெண்களும் சரி, அல்லது நம்முடைய முஸ்லிம் முதியவர்களும் சரி, அல்லாஹ் என்று சொல்வதற்கு பதிலாக எழுந்திருக்கும் பொழுது அவர்கள் உட்காரும் பொழுது, அவர்கள் பேசும் பொழுது, அவர்களுக்கு ஏதாவது ஒன்று நடக்கும் பொழுது, யாரசூலல்லாஹ் என்று சொல்வார்கள் இன்னும் சிலர், யா முஹ்யித்தீன் என்று சொல்வார்கள்.
 
இந்த சமுதாயத்திற்கு என்ன ஆகிவிட்டது? ஏன் இப்படிப்பட்ட வழிகேடு?
 
இந்த சமுதாயம் யாரை நம்பி இருக்கிறார்கள்? யாரை அல்லாஹ் என்று சொல்லி அழைக்கிறார்கள்?
 
இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?
 
அந்த அல்லாஹ் என்றால் யார்? தர்காக்களில் அடங்கி இருக்கும் இவர்கள் யார்?
 
இவர்கள் படைக்கப்பட்ட படைப்புகள். இவர்கள் அல்லாஹ்வாக ஆகுவதற்கு தகுதியற்றவர்கள் என்பதை அவர்கள் புரியாத காரணத்தால், இவர்களுடைய உண்மை நிலைமையை அவர்கள் அறிந்து கொள்ளாத காரணத்தால் ஏற்பட்டதுதான் அந்த வழிகேடு. 
 
அன்பிற்குரியவர்களே! ஆகவேதான் அல்லாஹ் சொல்கின்றான். அந்த அல்லாஹ்வை நீ அறிய வேண்டுமா? அந்த இறைவனை நீ புரிய வேண்டுமா?
 
அல்லாஹுஸ் ஸமது.
 
அந்த இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை. அவனைத் தவிர யாரை எல்லாம் நீங்கள் அழைக்கிறீர்களோ, யாரை எல்லாம் நீங்கள் நம்புகிறீர்களோ அவர்கள் தேவையுடையவர்கள். அவர்கள் பலவீனமானவர்கள். யோசித்துப் பாருங்கள் அன்பிற்குரியவர்களே! இதைவிட ஒரு பலவீனம் இருக்குமா? இறைநேசர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் தூங்கினார்கள் இல்லையா? அவர்கள் சாப்பிட்டார்களா இல்லையா? அவர்களுக்கு நோய் நொடிகள் வந்ததா இல்லையா? அவர்கள் பலவீனம் அடைந்தார்களா இல்லையா? இறுதியாக அவர்களுக்கு மரணம் வந்ததா இல்லையா? அவர்கள் குளிப்பாட்டபட்டார்களா இல்லையா?.அவர்கள் கழுவப்பட்டார்களா இல்லையா? அவர்களை நாலு பேர் சந்தூக்கிலே வைத்து தூக்கினார்களா இல்லையா? அவர்களை கபுரிலே வைத்து புதைத்தார்களா இல்லையா? அவர்களுக்கு ஜனாசா தொழுகை நடத்தப்பட்டதா இல்லையா?.. சிந்தித்துப் பாருங்கள்! இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்பு என்பதற்கும், இவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதற்கும் இதை விட வேறு என்ன ஆதாரத்தை நீங்கள் தேடுகின்றீர்கள்?.
 
சூரா அல் ஜின் அல்லாஹுத்தஆலா நபிக்கு செல்கின்றான். 
 
قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا (21) قُلْ إِنِّي لَنْ يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا (22)
 
பொருள்: நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை செய்யவோ, தீமை செய்யவோ ஒரு சிறிதும் சக்தியற்றவன்'' என்றும் கூறுவீராக! ‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 21, 22)
 
மக்களே உங்களுக்கு எந்த லாபத்தையும் நஷ்டத்தையும் கொடுப்பதற்கு எனக்கு சக்தியில்லை என்று நீங்கள் உங்களைப்பற்றி அறிவித்து விடுங்கள்.
 
யார் சொல்வது? நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சொல்லச் சொல்கின்றான்.
 
قُلْ لَا أَقُولُ لَك قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ
 
إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ (50)
 
பொருள்: (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக. (அல்குர்ஆன்  6 : 50)
 
நபியே! நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அல்லாஹ்வுடைய கஜானா என்னிடத்திலே கிடையாது. அல்லாஹ்வுடைய கஜானா என்னிடத்திலே கிடையாது. என்னிடத்தில் மறைவான ஞானம் இல்லை. நான் ஒரு மலக்கு என்பதாகவும் உங்களுக்கு சொல்லவில்லை. 
 
இன்று மக்கள் என்ன சொல்கிறார்கள்? அல்லாஹ்வுடைய கஜானா அவுலியாக்களிடத்தில் இருக்காது. ஆனால், அவுலியாக்களிடத்திலே அணுகாமல், கேட்காமல் அல்லாஹ்விடத்தில் கேட்க முடியாது; அல்லாஹ்விடத்தில் நாம் எதையும் பெற முடியாது என்று சொல்கிறார்கள்.
 
எந்த அவுலியாவைக் கேட்டு அல்லாஹ் இந்த வானத்தைப் படைத்தான்?
 
எந்த அவுலியாவை கேட்டு அல்லாஹ் சூரியனை படைத்தான்?
 
எந்த அவுலியாயாவை கேட்டு அல்லாஹ் உங்களையும் என்னையும் படைத்தான்?
 
யாரை கேட்டு அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் உணவு பிச்சை போடுகிறான்? இந்த உயிரை கொடுத்திருக்கிறான்?
 
என் சமுதாய மக்களே சிந்தித்துப் பாருங்கள்! நம்மைப் படைத்ததிலே இந்த அவ்லியாக்கள் அல்லாஹ்வுடன் கூட்டா?
 
அல்லாஹ்விடம் சிபாரிசு செய்தார்களா? நாம் படைக்கப்பட்டதிலே இந்த அவுலியாக்கள் அல்லாஹ்விடத்திலே சிபாரிசு செய்தார்களா? நாம் படைக்கப்பட்டதில் எப்படி இவர்கள் அல்லாஹ்விடத்திலே சிபாரிசு செய்யவில்லயோ, நாம் படைக்கப்பட்டதனுடைய அறிவு இந்த அவ்லியாக்களுக்கு இல்லையோ, அது போன்றுதான் நாம் கேட்ககூடிய பிரார்த்தனைகளை செவிமடுக்ககூடிய அறிவு இந்த அவ்லியாக்களுக்கு அல்லாஹ் கொடுக்கவில்லை. அந்த அறிவை அல்லாஹு ரப்புல் ஆலமீன், ஏக இறைவன் தன்னுடைய கையில் வைத்து இருக்கின்றான். தன்னுடைய தன்மையிலே வைத்திருக்கின்றான். இன்று மக்கள் இதை  புரிந்துகொள்ளவில்லை.
 
எப்படிப்பட்ட குழப்பத்தில் இருக்கிறான் மனிதன்.
 
ஒரு நபிக்கே இஇல்லாத தன்மையை ஒரு சாதாரண அடியாருக்கு இவர்கள் ஏற்படுத்துகிறார்களே!?
 
அல்லாஹ்வுடைய வல்லமையை விளங்கிக் கொள்ளாத காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள்.
 
அடுத்து சொல்கின்றான். அல்லாஹ் யார் தெரியுமா?. அவனுடைய உயர்வு என்ன தெரியுமா?
 
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3)
 
பொருள்: அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை. (அல்குர்ஆன் 112 : 3)
 
இறைவன் யார்? இறைவன் யார்? அவன் தகப்பனும் இல்லை. அவன் குழந்தையும் இல்லை. அவன் பிதாவும் இல்லை. அவன் புத்திரனும் இல்லை. அவனுக்கு தந்தையும் இல்லை. மகனும் இல்லை. இப்படிப்பட்டவன்தான் இறைவன்.
 
இறைவனுக்கு தந்தை இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்தால், நீங்கள் கதை கட்டினால் என்ன நிலைமை ஆகும் தெரியுமா? மனிதன் தனக்குக் கொடுக்கப்பட்ட அறிவைக்கொண்டு சிந்திக்காத காரணத்தால் இறைவனுக்கு தந்தை இருக்கிறது என்று சொல்கின்றான். அல்லது இறைவனுக்கு மகன் இருக்கிறது என்று சொல்கின்றான். இறைவன் சொல்கிறான், எனக்கு தந்தையும் இல்லை, எனக்கு மகனும் இல்லை, நான் நான்தான்.
 
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4) ‏
 
பொருள்: அவனுக்கு நிகராக யாரும் எதுவும்  இல்லை. (அகுர்ஆன் 12 :2) 
 
அவன் தன்னைப் பற்றி எனக்கு நிகராக யாருமில்லை எதுவும் இல்லை என்று கூறிகிறான்.
 
لميلد
 
அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை.
 

ولميولد

 
அவன் யாருக்கும் பிறந்தவனும் கிடையாது.
 
இன்று மக்கள் கற்பனை செய்யக் கூடிய பொய்யான கடவுள்களை எல்லாம் நீங்கள் எடுத்துக் கொண்டால் ஒன்று அவர்கள் தந்தையாக இருப்பார்கள், அல்லது பிள்ளையாக இருப்பார்கள். எப்பொழுது தந்தை, பிள்ளை என்று வந்து விடுகிறதோ அங்கே அழிவு வந்துவிடுகிறது. அங்கே ஒருவரை விட ஒருவர் பெரியவர் என்று வந்துவிடுகிறது. பெரியவர், சிறியவர் என்று வந்துவிட்டால் மிகைக்கப்படுபவர், மிகைப்பவர் என்று வந்துவிட்டால் அங்கே கடவுள் தன்மை எல்லாம் அழிந்து போய்விடுகிறது. 
 
ஆகவேதான் இறைவன் தன்னுடைய ஒப்பற்ற தன்மையைப் பற்றி விளக்கி சொல்கின்றான்.
 
لميلد ولميولد 
 
நான் யாரையும் பெற்றெடுக்கவில்லை. நான் யாருக்கும் பிறந்தவனும் இல்லை.
 
அல்லாஹ்வுக்கு, அந்த இறைவனுக்கு அந்த தேவை கிடையாது. இதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
 
எதற்கு குழந்தை தேவை?
 
தன்னுடைய வயோதிக காலத்திலே தனக்கு கஞ்சி ஊற்றுவதற்காக, தனக்கு உதவி செய்வதற்காக, தனது சொத்துக்களை நிர்வகிப்பதற்காக, தனது ஆட்சி அதிகாரத்தை கவனிப்பதற்காக பிள்ளை தேவை.அப்படிதானே?
 
இல்லை என்று சொன்னால் இன்று யாரும் பிள்ளையை விரும்பமாட்டார்கள். அதுபோன்று அந்த இறைவனுக்கு இந்த தேவைகள் இருக்கின்றனவா? அவனுக்கு பலவீனம் இருக்கிறதா? அவனுக்கு இயலாமை இருக்கிறதா? அவனுக்கு வயோதிகம் இருக்கிறதா? அவனுக்கு மறதி இருக்கிறதா? அவனுக்கு மரணம் இருக்கிறதா?
 
அவனது இந்த குறைகள் எதுவும் இல்லை.
 
وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ وَكَفَى بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا (58)
 
பொருள்: மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீர் நம்புவீராக. அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து வருவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்.) (அல்குர்ஆன் 25 : 58)
 
அவனுக்கு மரணம் என்பதே கிடையாது. ஆகவேதான் மக்கள் யாரை எல்லாம் பொய்யாக கடவுள், இறைவன் என்று கற்பனை செய்தார்களோ அவர்களுக்கு எல்லாம் அங்கே மரணத்தை இந்த மக்களாக முடிவு செய்தார்கள்.
 
அல்லாஹ் சொல்கின்றான்: நான் எப்போதும் உயிருடன் இருக்கக் கூடியவன். எனக்கு எந்த மரணமும் இல்லை. மரணத்தை உனக்கு நான் கொடுக்கிறேன். எனக்கு மரணம் கிடையாது என்று.
 

وَلَمْيَكُنْلَّهكُفُوًااَحَدٌ

 
அவனுக்கு நிகராக எதுவுமே கிடையாது.
 
சொல்லுங்கள் பார்க்கலாம்! அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக் கூடிய இந்த அவ்லியாக்களுக்கு இந்த தன்மை இருக்கிறதா? அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை இந்த இறை நேசர்களுக்கு செய்கிறீர்களே! இவர்களுக்கு இந்த தன்மை இருக்கிறதா? இவர்கள் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள் ஆயிற்றே! இவர்களுக்கு நிகராக மற்றவர்கள் இருந்தார்களே! இப்படி இருக்கும்போது இவர்களை எப்படி வணங்கலாம்? இப்படி இருக்கும்போது இவர்கள் இடத்தில் எப்படி நாம் நம்முடைய பிரார்த்தனையை கேட்கலாம்.? இவர்களுக்கு என்ன தெரியும்? இவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் இவர்களுடைய முதுகுக்கு பின்பு இருந்தது அவர்களுக்கு தெரியாது. நாளை என்ன நடக்கும் என்பது இவர்களுக்குத் தெரியாது. தன்னுடைய வயோதிகத்தில் எனக்கு என்ன நிலைமை ஆகும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இத்தகைய பலவீனமான அறிவுடையவர்களாக இந்த மனிதனை அல்லாஹ் படைத்திருக்கிறான்.
 
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான், சூரா அல்லுஃமான் 31வது அத்தியாயத்தின் கடைசி வசனங்களிலே.
 
إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (34) 
 
பொருள்: நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான். (அல்குர்ஆன் 31 : 34)
 
அல்லாஹ்விடத்தில்தான் மறுமை எப்போது வரும், இந்த உலகம் எப்போது அழியும் என்ற அறிவு இருக்கிறது. அல்லாஹ் அவனுடைய அறிவைக்கொண்டு மழையை இறக்குகிறான். மக்களெல்லாம் அறிவாளிகளெல்லாம் ஆராய்ச்சியாளர்களெல்லாம் ஒன்று சேர்த்து சொல்வார்கள், இன்று வானம் வெளிச்சமாக இருக்கிறது, மேக மூட்டங்கள் இல்லை, மழை பொழியாது என்பதாக. 
 
ஆனால், திடீரென்று மழை பொழியும்.
 
எங்கிருந்து மழை வருகிறது? யார் கொண்டு வருகிறான்.?
 
அல்லாஹ் கேட்கிறான்:
 
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68) أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ (69) لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ (70) 
 
பொருள்: நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் பொழிய வைக்கிறீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (அல்குர்ஆன் 56 : 70)
 
நீங்கள் குடிக்கக்கூடிய தண்ணீரை பார்த்தீர்களா? இந்தத் தண்ணீரை யார் உங்களுக்கு கொடுத்தது? மேகத்திலிருந்து இந்த தண்ணீரை, இந்த மழையை உங்களுக்கு பொழிய வைத்தது யார்? இது யாருடைய கையில் இருக்கிறது? அல்லாஹ்வுடைய கையில் இருக்கிறது.
 

وَيَعْلَمُمَافِىالْاَرْحَامِ‌

 
அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான்.
 
ஆம். தாயினுடைய வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தை எப்படி பிறக்கும், எப்போது பிறக்கும், எந்த நேரத்தில் பிறக்கும், இந்த குழந்தை நல்லவனாக மாறுவானா, கெட்டவனாக மாறுவானா, இவனுடைய விதி என்ன, என்பது யாருக்கு தெரியும்? அல்லாஹ்வுக்கு மட்டும் தெரியும். தாய்க்குத் தெரியாது. தந்தைக்கு தெரியாது.
மருத்துவருக்கு தெரியாது. எந்த ஜோஸியருக்கும் தெரியாது. எந்த குறிசொல்பவனுக்கும் தெரியாது. அல்லாஹ் ஒருவனுக்கு தான் தெரியும். 
 

وَيَعْلَمُمَافِىالْاَرْحَامِ‌.

அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான்.
 
அதுமட்டுமா?

وَمَاتَدْرِىْنَفْسٌمَّاذَاتَكْسِبُغَدًا‌

எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார்.
 
நீ நாளை என்ன செய்வாய் என்பது உனக்குத் தெரியாது. நம்மில் யாருக்கும் தெரியாது நாளை என்ன செய்வோம் என்பது. எத்தனையோ பட்டியல்களை வைத்திருப்போம், எத்தனையோ வேலைகளை நாம் பட்டியல் இடுவோம். இன்று அங்கே செல்ல வேண்டும், நாளை அங்கே செல்ல வேண்டும், இவரை சந்திக்க வேண்டும், இதை வாங்க வேண்டும், இதை விற்க வேண்டும், இவரை பார்க்க வேண்டும், இப்படி எத்தனையோ வேலைகளை நாம் அடுக்கிக்கொண்டே செல்வோம். அல்லாஹ்வுக்குத் தெரியும் நாளை இவருக்கு என்ன நடக்கும் என்பதாக.
 
எத்தனையோ இவர் கற்பனைகளைக் கொண்டு இன்று இரவு தூக்கத்தை கழிக்கிறார். ஆனால் தூங்கி எழும் பொழுது இவர் இவராக எழுவது கிடையாது. இவரை ஒருவர் எழுப்ப வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விடுவார். நாளை இவர் தானாக நடக்க மாட்டார். இவரை ஒருவர் தூக்கி கொண்டு செல்ல வேண்டும். இவருடைய கண் இருக்கும் ஆனால், அந்தக் கண் பார்க்காது. இவருக்கு அதே கை இருக்கும். ஆனால், அந்தக் கையை கொண்டு பிடிக்க முடியாது. இவருக்கு அதே கால் இருக்கும் ஆனால், அந்த காலை கொண்டு அவரால் நடக்க முடியாது.
 

وَمَاتَدْرِىْنَفْسٌمَّاذَاتَكْسِبُغَدًا‌

 
எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார்.
 
அடுத்து,
 
 وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ
 
எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார்.
 
அன்பிற்குரியவர்களே! எங்கே யார் மரணிப்பார் என்பது யாருக்குமே தெரியாது. ஆகவேதான், இந்த மார்க்கத்திலே யாரிடத்திலும் போய் ஆசி வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. யாரிடத்தில் ஆசி வாங்க வேண்டும்? அல்லாஹ்விடத்தில் தான் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அந்த இறைவனுக்குத்தான் தெரியும் நம்முடைய விதி.
 
இன்று பார்க்கிறோம்! பல மக்கள் எப்படி மாற்று மத மக்கள் சாமியார்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறார்களோ, அது போன்று ஷேக்மார்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குவதற்கு சில முஸ்லிம் மக்கள் செல்கின்றார்கள். இன்று ஆசீர்வாதம் கொடுத்தவர்கள் நாளை சிறைச்சாலைக்கு செல்கிறார்கள். பலரை பல்லாண்டுகள் வாழ்வாய் என்று ஆசிர்வாதம் கொடுத்தார்கள். யாருக்கெல்லாம் இவர்கள் ஆசீர்வாதம் கொடுத்தார்களோ பல்லாண்டுகள் நிரந்தரமாக வாழவும், பல்லாண்டுகள் நிரந்தரமாக ஆட்சியதிகாரம் உனக்குத்தான் என்று. இவர்கள் சொன்னவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
 
ஆசீர்வாதம் கொடுத்தவருக்கு தன்னுடைய விதியை நிர்ணயிக்க முடியவில்லை. தன்னுடைய விதியைப் பற்றிய அறிவு கிடையாது. ஆனால் இன்று இந்த உண்மையை தெரிந்த முஸ்லிம் சமுதாயத்தில் பல யாரை நம்புகிறார்கள். அல்லாஹ்வை நம்புவதற்கு பதிலாக ஷேக்மார்களை நம்புகிறார்கள். என்னுடைய ஷேக் மேல எனக்கு நம்பிக்கை இருக்கிறது, என்னுடைய ஷேக்கால் எனக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வைக்கிறார்கள்.  அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.
 
இந்த ஷேக், முரீது என்று சொல்கிறார்களே! இவர்கள் கூறுகிறார்கள்: என்னுடைய ஷேக்குடைய பழக்கத்தால்தான் எனக்கு எல்லாமே கிடைத்தது. என் கஷ்டம் எல்லாம் போய்விட்டது. என்னுடைய வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. எனக்கு வெளிநாட்டு வாய்ப்புகள், வெளிநாட்டு தொழில் வசதிகள் எல்லாம் என்னுடைய ஷேக்கால் கிடைத்தது என்பதாக. 
 
சுப்ஹானல்லாஹ். அந்த ஷேக்கிற்கு தன்னையே இரட்சித்துக் கொள்ள முடியாது. தன்னுடைய பலவீனத்தை போக்க முடியாது தன்னுடைய நோயை போக்க முடியாது. இவர் போன் பண்ணுவார் ஷேக்குக்கு. அப்போது ஷேக் சொல்வார் எனக்கு கொஞ்சம் சர்க்கரை வியாதி இருக்கிறது. அங்கிருந்து மருந்து சாமான்களை வாங்கிக்கொண்டு வா என்று. அவரால் தன்னுடைய நோயை குணப்படுத்திக் கொள்ள முடியாது. தன்னுடைய மரணத்தை தெரிந்து கொள்ள முடியாது. தன்னுடைய நன்மை தீமையை தானாகவே அறிந்து கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்களுக்கு ஆசீர்வதிக்கிறார்கள். 
 
என்னே மடமை!
 
எங்கே இந்த மார்க்கம் சென்று கொண்டிருக்கிறது? இந்த மார்க்கத்தை பின்பற்றக் கூடிய மக்கள் எந்த அறிவிலே சென்றுகொண்டிருக்கிறார்கள்? அல்லாஹ் ஒருவனுக்கு தான் தெரியும், யார் எங்கே மரணிப்பார்கள்; யாருக்கு எங்கே மரணம் என்பதை. அல்லாஹ் உடைய அறிவு அவ்வளவு விசாலமான அறிவு. அல்லாஹ் எத்தகைய மகத்துவமிக்கவன் தெரியுமா? அவனுடைய அறிவை அவனுடைய அந்த இல்மு, அவனுடைய அந்த ஞானம் எப்படிப்பட்டது தெரியுமா?
 
அல்லாஹ் சொல்கின்றான் 13 வது அத்தியாயத்தில் 8 லிருந்து 10 வரை உள்ள வசனங்களில்..
 
اللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنْثَى وَمَا تَغِيضُ الْأَرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ (8) عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ (9) سَوَاءٌ مِنْكُمْ مَنْ أَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهِ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِاللَّيْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ (10
 
பொருள்: ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன. (இது மட்டுமா! எல்லா) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன். உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதை பகிரங்கமாகக் கூறினாலும் (அவனுக்கு இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அனைத்தும் அவனுக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.) (அல்குர்ஆன் 13 : 8-10)
 
 அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்கின்றான். தன்னுடைய உயர்வை, தன்னுடைய இல்மைப் பற்றி சொல்கின்றான்.
 
அல்லாஹ், அவன் எத்தகையவன் தெரியுமா.?
 
ஒவ்வொரு பெண்ணும் தனது வயிற்றிலே தனது கற்ப பையிலே எதை சுமக்கிறார் என்பதை அவன் அறிந்து வைத்திருக்கிறான். கர்ப்பப்பையில் குறைவதையும், அது அதிகமாவதையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான். பெண்களுக்கு ஏற்படக் கூடிய உதிரப்போக்குகள், அவர்களுக்கு எப்பொழுது குழந்தை தரிக்கும்? எப்பொழுது கர்ப்பப்பையில் குழந்தை தரிப்பான்? எப்பொழுது அவன் பிறப்பான்? என்பதை அந்த இறைவன் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றான்.
 

اَللّٰهُيَعْلَمُمَاتَحْمِلُكُلُّاُنْثٰى

 
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
 
அல்லாஹ் சொல்கின்றான்.
 
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ 
 
ஒவ்வொன்றிலும் அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன.
 
ஒவ்வொன்றும் அவனிடத்திலே ஓர் அளவு நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கிறது. எல்லாவற்றையும் நிர்ணயித்து, கணக்கிட்டு வைத்திருக்கிறான். சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வுடைய இல்மு எப்படிப்பட்டது? ஒவ்வொன்றுக்கும் அவன் அளவு நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றான்.
 
எத்தனையோ மாட மாளிகைகள், எத்தனையோ மரங்கள், எத்தனையோ செடி கொடிகள், எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ மிருகங்கள், எத்தனையோ பறவைகள், எத்தனையோ மீன்கள், இன்னும் எத்தனை, எத்தனை, எத்தனையோ கோடிக்கணக்கான ஜீவராசிகள்.
 
இவை அனைத்தும் என்னிடத்திலே கணக்கிடப்பட்டு இருக்கின்றன.
 
இன்று ஆட்சி செய்யக்கூடிய அரசாங்கத்திற்கு புள்ளி விபரமாக துல்லியமாகச் சொல்ல முடியாது. எங்களுடைய நாட்டில் இத்தனை குடிமக்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அவர்களால் சொல்ல முடியாது.
 
இன்று கணக்கெடுப்பார்கள். அடுத்த நிமிடங்களில், உதாரணத்திற்கு இன்று இரவு கணக்கெடுத்து முடித்தார்கள். அடுத்த நிமிடத்தில் எத்தனை மக்கள் உயிர் இழந்துவிடுறார்கள்? எத்தனை பிள்ளைகள் பிறக்கிறார்கள் தெரியுமா என்று எந்த அரசாங்கத்திற்காவது? யாருக்காவது தெரியுமா? யாருக்கு தெரியும்? அந்த ரப்புல் ஆலமீனுக்கு தெரியும். எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன. எத்தனை பேர் இறக்கிறார்கள். யாருக்கு என்ன நடக்கிறது என்ற எல்லா விபரமும் அளவிட்டு அவன் வைத்திருக்கிறான்.
 
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ (73)
 
பொருள்: மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 6 : 73)
 
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ (9)
 
(இது மட்டுமா! எல்லா) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன். (அல்குர்ஆன் 13 : 9)
 
உங்களுக்கு மறைந்ததும் அவனுக்கு தெரியும். உங்களுக்கு வெளிப்படையானதும் அவனுக்கு தெரியும். அவனுக்கு எதுவும் மறைந்தது கிடையாது.
 
الكبير
 
அல் கபீர் - அவன் மிகப்பெரியவன்
 
المتعال
 
அல் முதஆல் -அவன் மிக உயர்ந்தவன்.
 
நீங்கள் ரகசியமாக பேசினாலும், அல்லது வெளிப்படையாக பேசினாலும், நீங்கள் இரவில் மறைந்து சென்றாலும் அல்லது பகலிலே வெளிப்படையாகச் சென்றாலும் அவனுக்கு தெரியும்
 
அல்லாஹு அக்பர்.
 
ஆனால், என் அன்பிற்குரிய முஸ்லிம் சமுதாய மக்களே! இந்த பேச்சை தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய இந்த ஊர் மக்களே! இன்று முஸ்லிம்களில் பலர் அவ்லியாக்களுக்கு அல்லாஹ்வுடைய இந்த தன்மையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷேக்மார்களுக்கு இந்த தன்மையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
 
எங்களுடைய அவ்லியாக்களுக்கு எல்லாம் தெரியும். நாங்கள் எங்கிருந்து கூப்பிட்டாலும் அவர்களுக்கு தெரியும். எப்படி அழைத்தாலும் அவர்களுக்கு தெரியும். அவர்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
இப்போது நான் அவர்களிடம் கேட்கிறேன்: நீங்கள் யாரை அல்லாஹ் என்று சொல்கிறீர்கள்? இவர்களை (தர்காக்களில் அடங்கி இருக்கும் அவ்லியாக்களை) மனிதர்கள் என்று சொல்கிறீர்களா? அல்லது அல்லாஹ் என்று சொல்கிறீர்களா? 
 
நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் அவர்களை அவுலியாக்கள் -அல்லாஹ்வுடைய நேசர்கள் என்றுதான் சொல்கிறோம் என்று. 
 
அப்படி என்றால் அல்லாஹ் சொல்கின்றான், நீங்கள் சொல்லக்கூடிய இந்த தன்மைகள் எல்லாம் தனக்குதான் சொந்தமானது, எனக்குத்தான் மறைவானவை தெரியும் என்பதாக. ஆனால், இன்று இந்த குர்ஆனை அறியாத காரணத்தால் அல்லாஹுடைய அந்த தனித்தன்மையைப் புரியாத காரணத்தால் படைப்பினங்களுக்கு இது போன்ற கதைகளை கட்டுகிறார்கள்.
 
அல்லாஹ் சொல்கின்றான் ஆறாவது அத்தியாயம் 59, 60 ஆவது வசனம்
 
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا 
 
وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ (59) 
 
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன் 6 : 59)
 
لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ
 
அவனைத் தவிர வேறு யாருக்கும் அந்த மறைவான விஷயங்கள் தெரியாது. அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
 
அன்பிற்குரியவர்களே! இது முஸ்லிம்களுடைய அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத். குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றிய சஹாபாக்களுடைய, தாபியீன்களுடைய, இமாம்களுடைய கொள்கை. மறைவான இல்மு, மறைவான ஞானம் அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு இருக்கிறது என்று ஒருவன் கூறினால் அவன் குர்ஆனை நிராகரித்தவன். அவன் அல்லாஹ்வை நிராகரித்தவன் ஆவான்.
 
தன்னை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு, குர் ஆனுக்கு முரணாக, ஹதீஸுக்கு முரணாக ஸஹாபாக்களுக்கு முரணாக, இமாம்களுக்கு முரணாக இவர்கள் சொல்கிறார்கள். எங்களுடைய அவுலியாக்களுக்கும் அது தெரியும் என்பதாக. எங்களுடைய ஷேக்மார்களுக்கும் அது தெரியும் என்பதாக. யாரை இவர்கள் மறுக்கிறார்கள்? அல்லாஹ்வை மறுக்கிறார்கள். யாருடைய வாக்கை இவர்கள் பொய்யாக்குகிறார்கள்? அல்லாஹ்வுடைய வாக்கைப் பொய்யாக்குகிறார்கள்.
 
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ
 
அல்லாஹ் சொல்கின்றான்: மறைவானவற்றின் சாவிகள் என்னிடம் தான் இருக்கின்றது. அவனைத்தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 6 : 59)
 
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ 
 
அவனிடம் தான் இருக்கிறது. கைபுடைய சாவிகள். (அல்குர்ஆன் 6 : 59)
 
لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ
 
அவனைத் தவிர வேறு யாரும் அதை அறிந்து கொள்ள முடியாது. (அல்குர்ஆன் 6 : 59)
 
அவனுடைய இல்மு எப்படிப்பட்ட இல்மு தெரியுமா? அவனுடைய அறிவு எப்படிப்பட்ட அறிவு தெரியுமா? அன்பிற்குரியவர்களே! நம்முடைய அறிவு, நம்முடைய காலுக்கு கீழ் என்ன இருக்கிறது என்பதை கூட நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சரியா, இல்லையா? நமது சட்டைக்குள் என்ன இருக்கிறது என்பதை கூட நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நம்முடைய உடலில் எத்தனை முடிகள் இருக்கின்றன என்பதை கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. நம்முடைய தலையில் உள்ள ரோமங்களை தெரிந்து கொள்ள முடியாது. நம்முடைய உடலில் என்ன அங்க அசைவுகள் ஏற்படுகின்றன? எனக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதைக் கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பலவீனமான அறிவுடையவர்கள்தான் நாமும் மற்ற படைப்புகளும். ஆனால் அல்லாஹ்வுடைய அறிவு எப்படிப்பட்டது தெரியுமா அல்லாஹ் சொல்கிறான்.
 
 وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ 
 
நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 6 : 59)
 
இந்த பூமியின் மேற்பரப்பிலே, தரையிலே, கடலிலே என்ன இருக்கிறதோ, இவை அனைத்தும் அல்லாஹ்வுக்குத் தெரியும். இந்த உலகத்தில், பூமியிலே ஒன்று தரை அல்லது கடல். தரையில் என்ன இருக்கிறது? கடலில் என்ன இருக்கிறது இவை எல்லாம் யாருக்கு தெரியும்.? அல்லாஹ்விற்கு தெரியும். எப்படி தெரியும்? எந்த அளவுக்கு தெரியும்? ஏதோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஏதோ கடலில் மீன்கள் இருக்கிறது.. ஏதோ பறவைகள் இருக்கிறது. அப்படியா? இல்லை.
 
அன்பிற்குரியவர்களே! எத்தனை மனிதர்கள், எத்தனை பறவைகள், எத்தனை மிருகங்கள், எத்தனை எறும்புகள், எத்தனை கிருமிகள், எத்தனை ஜீவராசிகள் இவை அனைத்தையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான். ஒவ்வொன்றையும் துல்லியமாக கணக்கிட்டு வைத்திருக்கிறான் அவன் சொல்கிறான்.
 
وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا 
 
وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ (59) 
 
அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன் 6 : 59)
 
وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا 
 
وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ (59) 
 
காற்று வீசும்போது மரத்தில் இருந்து ஒரு இலை விழுகிறதல்லவா? இந்த இலை கூட அந்த இறைவனுடைய அறிவின் படிதான் விழுகிறது. அல்லாஹ் அரியாமல் ஓர் இலை இந்த உலகத்திலே விழுவது கிடையாது என்று சொன்னால் அந்த ஏக இறைவனுடைய அறிவைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். ‏
 
நீங்கள் விவசாய நிலத்தில் விதைக்கக் கூடிய வித்துகள் எத்தனை என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான். ஒரு விவசாயி கையில் விதையை அள்ளித் தூவுகிறார் அல்லவா, அவருக்குத் தெரியாது எத்தனை விதைகளை அவர் தூவினார் என்பதாக. அல்லாஹ்விற்கு தெரியும் இவன் எடுத்த மாத்திரத்தில் இவனுடைய கையில் எத்தனை விதைகள் இருக்கின்றன. இந்த விதைகளில் எத்தனை விதைகள் செடிகளாக, தாவரங்களாக முளைக்கும் என்பதை அவன் அறிந்து வைத்திருக்கின்றான்.
 
وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ (59) 
 
 பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன் 6 : 59)
 
هُوَ الَّذِي يَتَوَفَّاكُم بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰ أَجَلٌ مُّسَمًّى ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ 
 
பொருள்: 6 : 60. (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன் 6 : 60)
 
உங்களை இரவிலே தூக்கத்தை கொடுத்து மரணிக்க வைப்பவன் அவன்தான். நீங்கள் பகலில் எதை செய்கிறீர்கள் என்பதை அறிந்தவன் அவன்தான். எப்படிப்பட்ட அறிவாற்றல் பாருங்கள் அல்லாஹ்வுடைய அறிவு. அல்லாஹ்வுடைய ஞானம் அவ்வளவு முழுமையானது.
 
அல்லாஹ் சொல்கின்றான் சூரா லுக்மான் 31 வது அத்தியாயத்தில்:
 
அல்லாஹ்வுடைய இல்மை, அல்லாஹ்வுடைய அந்த ஞானத்தை, நீங்கள் அறிய விரும்பினால் அவனுடைய ஞானத்தின் விசாலத்தை நீங்கள் அறிய விரும்பினால் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِن شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِن بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
 
பொருள்: பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான். (அல்குர்ஆன் 31 : 27)
 
அல்லாஹ்வுடைய இல்மை, அறிவை நீங்கள் எழுத நினைத்தால் இந்த பூமியிலுள்ள எல்லா மரங்களையும் எழுதுகோல்களாக மாற்றி, இந்த கடல்களை எல்லாம் மைகளாக மாற்றி நீங்கள் எழுத நினைத்தாலும், ஏழு கடல்களும் மைகளாக மாற்றப்பட்டாலும், அனைத்தும் தீர்ந்துவிடும். ஆனால், அல்லாஹ்வுடைய இல்மு தீராது.
 
அல்லாஹ்வுடைய இல்மு அவ்வளவு விசாலமானது. ஏழு கடல்களை மையாக மாற்றி, பூமியில் உள்ள மரங்களை எல்லாம் எழுதுகோல்கள் ஆக மாற்றி எழுதினாலும் கூட அல்லாஹ்வுடைய இல்மை எழுதி முடிக்க முடியாது என்றால் அவனுடைய இல்மு எவ்வளவு விசாலமானது என்பதை யோசித்துப் பாருங்கள்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருடைய வல்லமை பற்றி சொல்கின்றான். தொடர்ந்து சொல்கின்றான் 31 வது அத்தியாயத்தில் 27 இல் இருந்து அவன் சொல்லிக் கொண்டே வருகிறான். ஏறக்குறைய ஐந்து ஆறு வசனங்களிலே அவன் சொல்கிறான்.
 
مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ إِلَّا كَنَفْسٍ وَاحِدَةٍ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (28) ‌أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي إِلَى أَجَلٍ مُسَمًّى وَأَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (29) ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ (30) أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَتِ اللَّهِ لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (31) وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ (32)
 
பொருள்: மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான். (நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கிறான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? இவற்றில் ஒவ்வொன்றும் (அவற்றுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். இவையனைத்தும் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்'' என்பதற்கும் அத்தாட்சிகளாக இருக்கின்றன. அல்லாஹ்வுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீர் கவனிக்கவில்லையா? பொறுமையுடன் (சிரமங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 31 : 28-32)
 
இத்துணை கோடான கோடி மனிதர்களை படைத்து இருக்கிறான் அல்லவா? இதற்கெல்லாம் அவன் ரொம்ப சிரமம் எடுத்தானா? அவன் கஷ்டப்பட்டானா? அவன் சொல்கிறான். ஒரு உயிரை படைப்பதும் கோடானகோடி உயிரைகளை படைப்பதும் எனக்கு ஒன்றுதான். அது போன்று அந்த உயிர்களுக்கு மரணத்தை கொடுத்து மீண்டும் எழுப்புவதும் எனக்கு சமம்தான்.
 
ஒருவரை படைத்து மரணத்தை கொடுத்து மீண்டும் எழுப்புவது எப்படியோ அப்படித்தான் ஆதமில் இருந்து கடைசி மனிதர் வரை படைத்து அவர்களுக்கு மரணத்தை கொடுத்து அவர்களை மீண்டும் எழுப்புவது.
 
அவன் கேட்கிறான், நபியே நீங்கள் பார்க்கவில்லையா? இரவை சுருக்கிப் பகலை பெரிதாக்குகின்றான். பகலை சுருக்கி இரவை பெரிதாக்குகின்றான். சூரியனை சந்திரனை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும் ஒரு கால அளவை, நிர்ணயிக்கப்பட்ட ஒரு அளவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடிய அனைத்தையும் நன்கு அறிகிறான். அந்த அல்லாஹ்விற்கு இந்த தன்மைகள் ஏன்? அதற்கு அவன் காரணம் கூறுகிறான் கேளுங்கள்!
 
ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ (30)
 
பொருள்: இவையனைத்தும் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்'' என்பதற்கும் அத்தாட்சிகளாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 31 -30)
 
அவனை தவிர மக்கள் யாரை வணங்குகிறார்களோ, யாரிடத்திலே பிரார்த்தனை செய்கிறார்களோ, அவை அனைத்தும் பொய்யானவை.
 
அவன்தான் மிக உயர்ந்தவன், மிகப்பெரியவன்.
 
நீங்கள் பார்க்கவில்லையா கப்பலை? கடலிலே உங்களுக்காக அல்லாஹ்வுடைய நிஃமத்துகளை சுமந்து செல்கின்றன. அல்லாஹ் தன்னுடைய வல்லமையை சொல்லிக் காட்டுகின்றான். பெரும் ஆழ்கடலிலே, மனிதர்களுக்குத் தேவையான உணவுகளை எல்லாம் சுமந்து கொண்டு அந்த கப்பல் வருகிறது அல்லவா. இது யாருடைய உதவி? இது யாருடைய நிஃமத்? அல்லாஹ்வுடைய நிஃமத்.
 
அல்லாஹ் சுமக்க வைத்தான். நீங்கள் போடக்கூடிய சிறிய கல், ஒரு 50 கிராம் கல் அந்த கடலிலே மூழ்கி விடுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான டன்களை சுமந்துகொண்டு அந்த கப்பல் மிதந்து வருகிறது.
 
وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ (24) فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (25) 
 
பொருள்: கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (அல்குர்ஆன் 55 : 24, 25)
 
அல்லாஹ் கேட்கிறான்: மலைகளைப் போன்ற கப்பல்களை கடல்களில் பார்க்கிறீர்களே! அந்த கப்பலை கடலில் மிதக்க வைத்தவன் யார்?
 
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ (19)
 
பொருள்: இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 67 : 19)
 
அல்லாஹ் கேட்கின்றான். ஆகாயத்திலே பறவைகளை மிதக்க வைத்தவன் யார்? அந்த பறவைகளை தனது இறக்கைகளை சுருக்கிக் கொள்கின்றன. விரிக்கின்றன.
 
‌அளவற்ற அருளாளன் அந்த அல்லாஹ்வைத் தவிர அந்த பறவைகளை ஆகாயத்தில் வேறு யாரும் பறக்க வைக்க வில்லை. வேறு யாரும் மிதக்க வைக்க வில்லை. சுப்ஹானல்லாஹ். சிந்திக்க வேண்டாமா! இப்படிப்பட்ட வல்லமையுள்ள அந்த இறைவனை விட்டுவிட்டு படைக்கப்பட்டு, பிறகு, இறந்து விட்ட இறைநேசர்களை, அடியார்களை, அல்லாஹ்வுடைய படைப்புகளை மக்கள் வணங்குகிறார்களே!!
 
சொல்கின்றான் அல்லாஹ்: நீங்கள் என்னைத் தவிர யாரை அழைத்தாலும் அது பொய்யான அழைப்பு. அந்த அழைப்புக்கு அங்கே பதில் கிடைக்காது என்று.
 
لَهُ دَعْوَةُ الْحَقِّ وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُمْ بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ (14)
 
பொருள்: நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ அவர்களுக்கு, அவை எதையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதை அவன் தன் கையால் அள்ளிக் குடிக்கும் வரை அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 13 : 14) 
 
சூரா அர்ரஃதிலே அல்லாஹ் சொல்கின்றான். பதிமூன்றாவது அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கின்றான். மக்களே! உங்களுக்கு நான் ஒரு உதாரணம் சொல்லட்டுமா? என்ன உதாரணம் தெரியுமா? நீங்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு வேறு யாரிடமாவது சென்று பிரார்த்தனை செய்தால், துஆ கேட்டால் அதற்கு உதாரணம் என்ன தெரியுமா? அதற்கு உதாரணம் என்ன தெரியுமா? கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டு, தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டு தண்ணீரே! எனது வாய்க்கு வந்து விடு! தண்ணீரே எனது வாய்க்கு வந்துவிடு என்று அள்ளி குடிக்காமல் கூவிக் கொண்டிருக்கின்றான் அல்லவா. தண்ணீரே வாய்க்கு வந்துவிடு என்று, தண்ணீரே வாய்க்கு வா என்று ஒருவன் கூவிக் கொண்டிருந்தால் அந்த தண்ணீர் அவனுடைய வாய்க்கு வருமா? அல்லாஹ் சொல்கின்றான் ஒருக்காலும் வராது. அப்படித்தான் என்னை விட்டுவிட்டு, என்னிடத்திலே கேட்பதை விட்டுவிட்டு வேறு யார் இடத்தில் நீங்கள் கேட்டாலும் சரி உங்களுடைய பிரார்த்தனைகள் வழிகேட்டிலேயே தவிர வேறு ஒன்றிலும் கிடையாது அல்லாஹ் சொல்கின்றான்.
 
அன்பிற்குரிய முஸ்லிம் சமுதாயமே! குர்ஆனை எடுத்து படித்து பாருங்கள். அல்லாஹ் உதாரணத்தைச் சொல்லி விளக்குகின்றான். அய்யாமுல் ஜாஹிலிய்யாவிலே இருந்த மக்களை பார்த்து சொல்கின்றான். இன்றும் கூட யார் அல்லாஹ்வை விட்டுவிட்டு பொய்யான தெய்வங்களை வணங்குகிறார்களோ. அவர்கள் கூட கஷ்டமான காலங்கள் வரும்போது, சிரமமான நேரங்கள் வரும்போது, அந்த நேரத்தில் அவர்கள் ஆண்டவா! இறைவா! கடவுளே! ரட்சகனே! என்னை காப்பாற்று! என்று சொல்கிறார்கள்.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். கடலிலே நீங்கள் பயணம் செய்யும் போது காற்று உங்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் பேராபத்திற்கு ஆளாகி விட்டால் அந்த நேரத்திலே அந்த ஏக இறைவன் ஒருவனைத் தானே நீங்கள் அழைக்கிறீர்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட உண்மையை நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். அந்த இறைவன் உங்களை காப்பாற்றியதற்கு பிறகு, அந்த இறைவன் உங்களை பாதுகாத்ததற்குப் பிறகு, நீங்கள் அவனை விட்டுவிட்டு நீங்கள் வேறு ஒருவரிடம் செல்கிறீர்களே? ஆனால் இன்று இந்த முஸ்லிம் சமுதாயத்தில் மக்கள் இப்படிப்பட்ட உயர்ந்த ஈமானை இழந்து விட்டு எத்தகைய நிலைமையில் இருக்கிறார்கள் தெரியுமா? கஷ்ட நேரத்தில் கூட அல்லாஹ்வை அழைப்பதற்கு பதிலாக யா முஹ்யித்தீன்! என்று அழைக்கிறார்கள். பாதுஷாவை தேடி வருகிறார்கள். அய்யாமுல் ஜாஹிலியாவிலே வாழ்ந்த முஷ்ரிக்குகள் இன்றைய காலத்தில் வாழக்கூடிய முஷ்ரிக்குகளை விட பரவாயில்லை.
 
இன்றைய காலத்தில் வாழக்கூடிய சிலை வணங்கிகள் கூட தங்களுக்கு கஷ்டம் ஏற்பட்டு விட்டால், சிரமம் ஏற்பட்டு விட்டால், பிரச்சனை ஏற்பட்டு விட்டால் கடவுளே! இறைவனே! என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறிய இந்த முஸ்லிம், ஐங்காலத் தொழுகையை தொழக்கூடிய முஸ்லிம், தொழுகைக்கு பிறகு ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனா வகினா அதாபன்னார் என்று சொல்லக்கூடிய முஸ்லிம், கஷ்ட நேரத்தில் யாரை அழைக்கிறான்? யா கவுஸ்! யா அப்துல்காதர்! யாஹாஜா கரீப் நவாஸ்! என்று அழைக்கிறானே!!! இவர்களின் எங்கே ஈமான் சென்றுவிட்டது? எங்கே இறைநம்பிக்கை என்று யோசித்து பார்க்க வேண்டாமா?
 
அல்லாஹ் சொல்கின்றான்: மக்களே உங்களுடைய இந்த தவறான காரியங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு இல்லாமல் இருக்கிறது என்று நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா?
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا
 
 إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ (33)
 
31 : 33. மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப்பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். (அல்ல்குர்ஆன் 31 : 33) 
 
அந்த மறுமை நாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். அங்கு ஆட்சியாளர் இருக்க மாட்டார். அதிகாரி இருக்க மாட்டார். அங்கே படை பலன்கள் இருக்காது. ஆம். இருக்கும் யாருடைய ஆட்சி? அல்லாஹ்வுடைய ஆட்சி. ஆம், இருப்பார்கள். யாருடைய அதிகாரிகள்? அல்லாஹ்வுடைய அதிகாரிகள். வானவர்கள் இருப்பார்கள். மக்களுக்கு ஆட்சியதிகாரம் இருக்காது. இந்த உலகத்தை ஆண்டவன் இந்த உலகத்தில் பேராட்சி செய்தவனெல்லாம் அடிமையாக, கூனி குறுகி, ஆடை இல்லாமல், வெறும் காலுடனே, எப்படிப் படைக்கப்பட்டானோ அது போன்று அவன் வருவான். அந்த நாளில் ஒரு தந்தை தனது மகனுக்கு உதவி செய்ய முடியாது. ஒரு மகன் தனது தந்தைக்கு உதவி செய்ய முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானது. உங்களை உலக வாழ்க்கை ஏமாற்றிவிட வேண்டாம்
 
ஏமாற்றக் கூடிய ஷைத்தான் உங்களை ஏமாற்றத்திலே ஆழ்த்தி விடவேண்டாம். இவ்வளவு தெளிவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு வர்ணிக்கின்றான். அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய வல்லமையைப் பற்றி, அல்லாஹ்வுடைய ஆற்றலை பற்றி, அவன் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். இத்தகைய அல்லாஹ்வை வணங்குவதற்குதான் நாம் உங்களை அழைக்கிறோம். இத்தகைய அல்லாஹ்விற்கு ஸுஜூது செய்வதற்குதான் நாம் உங்களை அழைக்கிறோம். இத்தகைய அல்லாஹ்விடத்தில் நம்முடைய பிரார்த்தனைகளை தூய்மையாக ஆக்குவதற்குத்தான் நாம் உங்களை அழைக்கிறோம். அல்லாஹ்வுடைய வல்லமையே நீங்கள் பார்த்தீர்கள்.
 
எப்படிப்பட்ட வல்லமை உடையவன்? அவனுடைய ஆட்சி அதிகாரம், அவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது தெரியுமா? அவன் சொல்லிக் காட்டுகின்றான். சூரா யாசீனை எடுத்து படித்துப் பாருங்கள். எது எதற்கோ யாசீனை ஓதிக்கொண்டிருக்கிறீர்களே! அந்த யாசீனிலே என்ன சொல்லப்படுகிறது தெரியுமா?
 
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ (82) فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ (83)  ‏
 
பொருள்: அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது. சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 36 : 82, 83) 
 
அவன் ஒன்றை படைக்க நாடினால் அல்லது ஒன்றை அழிக்க நாடினால் குன் என்று தான் சொல்லுவான். அது ஆகி விடும். சொல்லுகின்றான் அந்த இறைவன். மிகத் தூய்மையானவன். யாரிடத்திலே எல்லா பொருட்களின் ஆட்சியும் முழுமையாக இருக்கிறதோ அவனிடத்தில்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
 
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا (111) 
 
பொருள்: (நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக! (அல்குர்ஆன் 17 : 111)
 
சூரா பனீ இஸ்ராயீல் 17வது அத்தியாயம் 111 வது வசனம். நபியே நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் புகழுங்கள் அந்த அல்லாஹ்வை. புகழ் அனைத்தும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கு தான். 
 
لَمْ يَتَّخِذْ وَلَدًا
 
அவனுக்கு குழந்தை இல்லை. அவன் யாரையும் குழந்தையாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு கூட்டு கிடையாது. அவனுக்குத் துணை யாரும் கிடையாது. தனது ஆட்சியை அவன் யாருக்கும் பங்கு வைத்து கொடுக்கவில்லை.
 
 وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ
 
அவன் பலவீனமடைந்து, அவன் இயலாமையிலாகி யாரையும் தனது நண்பனாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆம் அல்லாஹ் மனிதர்களிலே நல்லோர்களை தனது நண்பர்களாக ஆக்கி இருக்கிறான். எதனால்? அன்பின் காரணமாக ஆக்கி இருக்கிறானே தவிர, தனக்கு பலவீனம் ஏற்பட்டுவிட்டது, இவருடைய உதவி தனக்கு தேவை என்பதற்காக அல்ல.
 
وَكَبِّرْهُ تَكْبِيرًا
 
அவனை மகிமைப்படுத்துங்கள். அவனை கண்ணியப்படுத்துங்கள். சுப்ஹானல்லாஹ். 
 
அல்லாஹ் சொல்கின்றான் மனிதனுக்கு செல்கின்றான். இதே 17 வது அத்தியாயத்தில் 44 45ஆவது வசனத்தில்
 
سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا (43) تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ 
 
وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (44)
 
பொருள்: அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுகின்ற கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன். ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 43, 44)
 
ஏழு வானங்கள் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன. அவ்லியாக்களை அல்ல. ஏழு வானங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்கின்றன. அவ்லியாக்களிடத்திலே கிடையாது.
 
وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ
 
இந்த பூமியில் உள்ள எல்லோரும் இவற்றை படைத்த அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றார்கள். அல்லாஹ்வைத் துதித்து போற்றி அல்லாஹ்விடத்தில் தங்களுடைய தேவைகளை கேட்கிறார்கள். ஆனால், இந்த மனுஷன் மட்டும் அல்லாஹ்வை விட்டுவிட்டு, அல்லாஹ்வை மறந்துவிட்டு, படைக்கப்பட்ட படைப்பிடத்திலே கேட்கிறார்கள். சிலர், அவ்லியாக்களிடத்திலே செல்கிறார்கள். சிலர் சமாதிகளிடத்திலே செல்கிறார்கள். சிலர் உருவங்களிடத்தில் செல்கிறார்கள். இப்படி எத்தனையோ வழிகளாக தங்களை கூறு போட்டுக்கொண்டார்கள். அல்லாஹ் சொல்கின்றான்..
 
وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ
 
உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா படைப்புகளும் அந்த அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து துதிக்கின்றன. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ். அல்லாஹ் சொல்கின்றான்:
 
وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ
 
ஆனால், மனிதனே அவை என்னை எப்படி தஸ்பீஹ் செய்கின்றன, துதிக்கின்றன என்று உனக்குத் தெரியாது.
 
நம்முடைய இல்மு, நம்முடைய அறிவு அவ்வளவு குறுகியது. நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய அசைவுகளைக் கூட, சப்தங்களை கூட நம்மால் அறிந்து கொள்ள முடியாது, புரிந்து கொள்ள முடியாது. அவ்வளவு பலவீனமான படைப்பு நாம்.
 
நாம் எப்படி இந்த படைப்பினங்கள் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன என்பதை அறிந்துகொள்ளமுடியும்? அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா சொல்லிக் காட்டுகின்றான். தன்னுடைய வல்லமையை சொல்லிக் காட்டுகின்றான். தான் எப்படிப்பட்ட இறைவன் என்பதை சொல்லிக் காட்டுகின்றான்.
 
எடுத்து படித்துப் பாருங்கள் சூரா அந்நம்ல் 27 வது அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். ஏறக்குறைய 59 லிருந்து 66 வரை உள்ள வசனங்கள். எப்படிப்பட்ட தன்மையை, புகழ்ச்சியை தன்னுடைய உயர்வை, தன்னுடைய கண்ணியத்தை அவன் சொல்லுகிறான் பாருங்கள்.
 
قُلِ الْحَمْدُ لِلَّهِ وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى آللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ (59) أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ لَكُمْ مِنَ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَنْ تُنْبِتُوا شَجَرَهَا أَإِلَهٌ مَعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ (60) أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَهٌ مَعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ (61) أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ (62) أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ (63) أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (64) قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ (65) بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ بَلْ هُمْ فِي شَكٍّ مِنْهَا بَلْ هُمْ مِنْهَا عَمُونَ (66)
 
பொருள்: நபியே நீங்கள் சொல்லுங்கள் புகழெல்லாம் அல்லாஹ்விற்கே! புகழெல்லாமல் அந்த ஒரே இறைவனுக்கே. புகழெல்லாம் அந்த ஒரே கடவுளுக்கே. அந்த அல்லாஹ்வை வணங்கி, அந்த ஒரே இறைவனை வணங்கி அவனுடைய நல்லவர்களாக யார் மாறி விட்டார்களோ. அவன் யாரை தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அத்தகைய தன்னுடைய அடியார்களின் மீது அவன் சாந்தியை சமாதானத்தை கண்ணியத்தை இறக்குகின்றான். அல்லாஹ் கேட்கின்றான். இன்னும் கேட்கச் செல்கின்றான்.
 
آللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ
 
நபியே நீங்கள் கேளுங்கள்: அந்த ஒரே இறைவன், ஒப்பற்ற அந்த நாயன் அல்லாஹ் சிறந்தவனா? அல்லது நீங்கள் வணக்க வழிபாடுகள் செய்கிறீர்கள் அல்லவா உங்களுடைய சிலைகளோ, உங்களுடைய சமாதிகளோ அல்லது நீங்கள் யாரை மதித்து அவர்களை வழிபாடு செய்கிறீர்களோ அவர்கள் சிறந்தவர்களா?
 
آللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ
 
அல்லாஹ் சிறந்தவனா இவர்கள் இணைவக்கின்ற தெய்வங்கள் சிறந்தவர்களா?
 
அல்லாஹ் கேட்கிறான்: இறைவன் சிறந்தவனா, இவர்கள் சிறந்தவர்களா? 
 
أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ لَكُمْ مِنَ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَنْ تُنْبِتُوا شَجَرَهَا أَإِلَهٌ مَعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ (60)
 
அல்லாஹ் கேட்கிறான். வானங்களை படைத்தது யார்? பூமியை படைத்தது யார்? உங்களுக்காக வானத்திலிருந்து, மேகத்திலிருந்து மழை இறக்கியது யார்? அந்த மழையின் மூலமாக செழிமையான தோட்டங்களை, தாவரவர்க்கங்களை உருவாக்கியது யார்?
 
مَا كَانَ لَكُمْ أَنْ تُنْبِتُوا شَجَرَهَا 
 
அந்த மரங்களை அந்த செடிகளை அந்த தாவர வர்க்கங்களை உங்களால் முளைப்பிக்க முடியுமா? மனிதனுக்கு ஆற்றல் இருக்கிறதா? மனிதனுக்கு சக்தி இருக்கிறதா? ஒரு சிறிய செடியை படைப்பதற்கு, ஒரு சிறிய செடி உருவாக்குவதற்கு? யார் படைப்பது? அந்த இறைவன் படைக்கிறான்.
 
அல்லாஹ் கேட்கின்றான்:
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
வானத்தை படைத்தது நான். பூமியைப் படைத்தது நான். உனக்கு மழையை இறக்குவது நான். இந்த மழையின் மூலமாக நீ சாப்பிடுவதற்கு உண்டான தாவரங்களை, உணவுகளை உனக்கு பூமியிலிருந்து முளைப்பித்து கொடுப்பது நான். இப்படி இருக்க.
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
என்னை விட்டுவிட்டு வேறு ஒருவருக்கு வழிபாடா? என்னை விட்டுவிட்டு வேறு ஒருவருக்கு பூஜையா? 
 
மக்கள் என்ன செய்கிறார்கள்? ஆற்றை வணங்குகிறார்கள். அதில் தண்ணீர் ஓடுகிறது அல்லவா. கடலை வணங்குகிறார்கள். மேகத்தை வணங்குகிறார்கள். இந்த பூமியை வணங்குகிறார்கள். வானத்தை வணங்குகிறார்கள். சூரியனை வணங்குகிறார்கள். மனிதனை வணங்குகிறார்கள். இறந்தவரை வணங்குகிறார்கள். உயிராக உள்ளவரை வணங்குகிறார்கள். பறவையை வணங்குகிறார்கள். மிருகத்தை வணங்குகிறார்கள். தான் யார் என்பதை அறியாத வாயற்ற, உயிரற்ற ஜீவராசிகளை வணங்கிறார்கள்.
 
அல்லாஹ் கேட்கிறான்.
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
அல்லாஹ்வுடன், அந்த ஏக இறைவனுடன் இவையெல்லாம் வணக்க வழிபாடுகள் செய்யப்படுவதற்கு தகுதியானவையா? மனிதனே! நீ சிந்தித்துப் பார்க்கக் கூடாதா?
 
வானத்தைப் படைத்தது நான் என்று சொல்கின்றான். பூமியை படைத்தது அந்த இறைவன் என்று சொல்கின்றான். சூரியனைப் படைத்ததது அந்த இறைவன் என்று சொல்கின்றான். உனக்கு உணவளிக்க இந்த தாவர வர்க்கங்களை படைத்தது அந்த இறைவன் என்று சொல்கின்றான். அப்படி இருக்க அந்த இறைவனை விட்டுவிட்டு இன்னொருவருக்கா வழிபாடு? இன்னொருவருக்கு முன்பா நீ தலை குனிகிறாய்? இன்னொருவருக்கு முன்பா நீ தலை சாய்க்கிறாய்? இன்னொருவர் மீதா உனது நம்பிக்கையை வைக்கிறாய்? அல்லாஹ் அல்லாத மற்றவர் மீதா உனது பாரத்தை சுமத்துகின்றாய்? அல்லாஹ் அல்லாத மற்றவர் முன்பா உனது அச்சத்தை வெளிப்படுத்துகிறாய்? உனது ஆதரவை வெளிப்படுத்துகிறாய்?
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
நீங்கள் எப்படி அணியாயம் செய்கிறீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட மகத்தான அநீதி செய்கிறீர்கள்? தந்தை உயிருடன் இருக்க, தனது பெற்ற தந்தை உயிருடன் இருக்க, அந்த தந்தையை விட்டுவிட்டு பிள்ளை இன்னொருவர் இடத்திலே சென்று, அந்தத் தந்தையிடத்திலிருந்து எல்லா விஷயத்தையும், எல்லாத் தேவைகளையும் அனுபவித்துக் கொண்டு இன்னொருவரிடத்தில் சென்று அத்தா!அப்பா! தந்தையே! என்று சொன்னால் அந்த தந்தை எவ்வளவு வேதனைப்படுவார்? அந்த தந்தையுடைய கோபம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் யோசித்துப்பாருங்கள்.
 
அந்த உயிருள்ள இறைவன், அந்த ஒப்பற்ற ஏக இறைவன் உயிருடன் இருக்கிறான். அவன் இறந்துவிடவில்லை. அவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவன் நம்மை மறந்து விடவில்லை. அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். நம்மை அவன் அலட்சியப் படுத்தவில்லை. அந்த இறைவனுடைய அருட்கொடைகளை எல்லாம் நாம் அனுபவித்துக் கொண்டு, அவன் படைத்த உணவை, அவன் நமக்கு கொடுத்த உணவை, அவன் நமக்கு கொடுத்த இந்த கண்ணியத்தை எல்லாம் அனுபவித்துக்கொண்டு, பிறகு, அல்லாஹ்வைத் தவிர, அந்த ஏக இறைவனை தவிர வேறு ஒரு படைப்பிற்கு மனிதன் வழிபாடுகளை செய்யும்போது அந்த இறைவன் என்ன சொல்கின்றான் தெரியுமா?
 
بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ
 
மனிதனே நீ மிகப்பெரிய நன்றி கெட்டவனாக இருக்கிறாய். நீ மிகப் பெரிய அநீதி செய்கிறாயே! அக்கிரமம் செய்கிறாயே, அக்கிரமத்திலேயே, அநீதியிலேயே, அழிச்சாட்டியத்திலேயே மிகப்பெரிய அக்கிரமும், அழிச்சாட்டியம் என்ன தெரியுமா.? வணக்க வழிபாடுகளை பிரார்த்தனைகளை, நம்பிக்கைகளை, அல்லாஹ்வைத் தவிர, அந்த ஏக இறைவனைத் தவிர, படைப்பினங்களுக்கு செய்கிறார்கள் அல்லவா மனிதர்கள் அதுதான் மிகப்பெரிய அநியாயம்.
 
இந்த அநியாயத்தின் காரணமாகத்தான் இந்த உலகத்தில் உள்ள மக்களை அல்லாஹ் சோதித்துக் கொண்டிருக்கிறான். இந்த காற்றை கொண்டு, இந்த மழையைக் கொண்டு, இந்த நிலநடுக்கங்களை, கொண்டு நோய் நொடிகளை கொண்டு, அச்சத்தை கொண்டு, இறைவன் மக்களுக்கு சோதனையைக் கொடுத்து கொண்டிருக்கிறானே அதற்கு காரணம் என்ன? மனிதன் செய்யக்கூடிய இந்த பயங்கரமான அநியாயத்தின் காரணமாக. அழிச்சாட்டியத்தின் காரணமாக. இந்தப் பெரிய பாவத்தின் காரணமாக.
 
அல்லாஹ் கேட்கின்றான்.
 

اَمَّنْجَعَلَالْاَرْضَقَرَارًاوَّجَعَلَخِلٰلَهَاۤاَنْهٰرًاوَّجَعَلَلَهَارَوَاسِىَوَجَعَلَبَيْنَالْبَحْرَيْنِحَاجِزًاءَاِلٰـهٌمَّعَاللّٰهِبَلْاَكْثَرُهُمْلَايَعْلَمُوْنَ

 
அல்லாஹ் கேட்கின்றான். உங்களுடைய இந்த பூமியை உறுதியாக நிற்க வைத்தவன் யார்? எல்லாருக்கும் தெரியும் பூமி உருண்டையாய் இருக்கிறது என்று. இந்த பூமியை நீங்கள் வசிக்கும் இடமாக உங்களுக்கு மாற்றியவன் யார்? தடுப்பை ஏற்படுத்தி இருக்கிறான். கடலுடைய தண்ணீர் இந்த பூமிக்குள் வராமல் அவன் ஒரு தடுப்பை ஏற்படுத்தி இருக்கிறான். சில சமயங்களில் அந்த தடுப்பை எடுத்தும் காட்டுகின்றான். இந்த பூமி ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு, குலுங்காமல் இருப்பதற்கு இந்த பூமியின் மீது அவன் மலைகளை பெரிய சிகரங்களை ஏற்படுத்தியிருக்கிறான். சில சமயங்களிலே அந்த மலைக்கு கட்டளையிட்டு அது தனது பிடியை தளர்த்த கூறி நடுக்கத்தை ஏற்படுத்தியும் காட்டுகின்றான்.
 

وَّجَعَلَلَهَارَوَاسِىَ

 
பூமியினுடைய இந்த பக்கத்திலும் கடல், இந்த பக்கத்திலும் கடல். இரண்டு கடலும் ஒன்றாக சேர்ந்து இந்த மனிதனை அழித்து விடாமல் தடையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். அல்லாஹ் கேட்கின்றான்:
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
இதை வேறு யாராவது செய்தார்களா? நான்தானே செய்தேன். என்னை விட்டுவிட்டு நீ வணக்க வழிபாடுகள் செய்வதற்கு இன்னொருவரை தேடுகிறாயா?
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 

بَلْاَكْثَرُهُمْلَايَعْلَمُوْنَ‏

 
நீங்கள் ஏன் இதை அறிந்து கொள்வது கிடையாது? நீங்கள் ஏன் இதை சிந்திப்பது கிடையாது? இந்த பூமியை யார் இப்படி ஆக்கியது? இந்த பூமியிலே கடலை படைத்தது யார்? இந்த பூமியிலே மலையை படைத்தது யார்? இந்த பூமிக்கு இந்த தன்மையை கொடுத்தது யார்? எல்லோரும் என்ன சொல்வோம்? எல்லாரும் என்ன பதில் சொல்வோம்? இறைவன் என்று சொல்வோம். கடவுள் என்று சொல்வோம். ஆண்டவன், அந்த தெய்வம் என்று சொல்வோம். ஆனால் அந்த தெய்வத்தை விட்டுவிட்டு, அந்த ஆண்டவனை விட்டுவிட்டு, படைப்பினங்களுக்கு வழிபாடுகள் செய்கிறார்களே! படைப்பினங்களை நம்புகிறார்களே! படைப்பினங்களுக்கு நேர்ச்சை செய்கிறார்களே!! இறைவன் சொல்கிறான்.
 

بَلْاَكْثَرُهُمْلَايَعْلَمُوْنَ‏

 
மக்களில் அதிகமானவர்கள் அறிவில்லாத முட்டாள்களாகதான் இருக்கிறார்கள். அடுத்து கேட்கிறான். 
 
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ (62)
 
கஷ்டத்திலே நீங்கள் சிக்கித் தவிக்கும்போது, பிரச்சனையில் நீங்கள் உழன்று கொண்டிருக்கும்போது, உங்களுக்கு சோதனைகள் ஏற்பட்டு, ஆபத்து ஏற்பட்டு, நீங்கள் திகைத்து நிற்கும்போது, இறைவா! ஆண்டவனே! கடவுளே! என்னை காப்பாற்று! என்று கூறும் பொழுது, அந்த கஷ்டத்தில் இருக்கக்கூடிய, அந்த சிரமத்தில் இருக்கக்கூடியவனுக்கு பதில் கொடுப்பது யார்? பதில் அல்லாஹ் கொடுப்பான். ஆனால், இன்று என்ன தெரியுமா? கேவலமான நிலைமை!! இந்த முஸ்லிம் சமுதாயம், குர்ஆனை பெற்ற சமுதாயம் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஷாகுல் ஹமீது நாயகம் பதில் சொல்வார்கள், கவுஸ் நாயகம் பதில் தருவார்கள் என்று சொலிறார்கள்.
 
கப்பல் வந்து கொண்டிருந்ததாம், கூக்குரலிட்டார்களாம், இங்கிருந்து கண்ணாடி சென்று அந்த கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றியதாம். 
 
யா ரப்பனா. யார் அல்லாஹ்? யார் இறைவன்? அல்லாஹ் கேட்கிறான்.
 

اَمَّنْيُّجِيْبُالْمُضْطَرَّاِذَادَعَاهُوَيَكْشِفُالسُّوْءَ

 
நீ கஷ்டத்தில் இருக்கும்போது உனக்கு உதவி செய்பவன் நான் என்று சொல்கிறான். வேறு யாரும் கிடையாது. எந்த சிலையும் கிடையாது. எந்த அவ்லியாவும் கிடையாது. எந்த தனிமனிதனும் கிடையாது. கஷ்டத்தில் இருக்கக்கூடிய மனிதன் அவன் யாராக இருந்தாலும் சரி. இறைவனை ஏற்றுக் கொண்டவனாக இருக்கட்டும், இறைவனுக்கு வழிபாடுகள் செய்பவனாக இருக்கட்டும், அல்லது இறைவனே இல்லை என்று மறுக்கக்கூடிய நாத்திகனாக இருக்கட்டும். அவனுக்கும் பிரச்சனை என்று சொன்னால் உதவி செய்பவன் அந்த இறைவன்தான். இந்த உலகத்திலே அவன் அப்படித்தான் தனது கருணையை பொதுவாக்கி விட்டான். இந்த உலகத்திலே அவன் தன்னை வணங்குபவர்கள், தன்னை வணங்காதவர்கள், தன்னுடைய சொல்படி நடப்பவர்கள், அல்லது தனக்கு மாறு செய்பவர்கள் என்று பிரிப்பது கிடையாது. இந்த உலகத்தில் அவன் தனது கருணையை, அருளைப் பொதுவாக்கிவிட்டான்.
 
அவன் கேட்கிறான்: கஷ்டத்தில் இருக்கும்போது உனக்கு பதில் அளிப்பவன் யார்? ஒருவர் இறந்ததற்குப் பிறகு அடுத்து உங்களை வாரிசாக ஆக்குகின்றானே, இந்த பூமியில் உங்களை அடுத்தடுத்து தலைமுறையாக உருவாக்குகின்றானே, இந்த பூமியில் உங்களை கலீஃபாவாக பிரதிநிதியாக ஆக்குகின்றானே, அவன் யார்? அவன் யார்? சாகுல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களா? அப்துல் காதர் ஜீலானியா? ஹாஜா முஹைனுதீன் சிஷ்தியா? முத்துப்பேட்டை வாப்பாவா யார்? ஏர்வாடியில் அடங்கி இருக்கும் சையது இப்ராஹீம் ஷாவா? யார் உங்களை தாயின் வயிற்றில் படைப்பவன்? உங்களுக்கு மரணத்தை கொடுப்பவன் யார்?  உங்களுக்கு சந்ததிகளை கொடுப்பவன் யார்? 
 

اَمَّنْيُّجِيْبُالْمُضْطَرَّاِذَادَعَاهُوَيَكْشِفُالسُّوْءَ

 
கஷ்டத்தில் சிக்கி துடிப்பவன் அவன் கூக்குரலிட்டு அழைக்கும் போது, எனக்கு உதவி செய்பவர் யாரும் இல்லையா என்று அவன் இறைஞ்சும் போது அவனுக்கு உதவி செய்பவன் யார்? அவனுக்கு கை கொடுப்பவன் யார்? அல்லாஹ் கேட்கின்றான்:
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
இவற்றையெல்லாம் அந்த ரப்பு, அந்த இறைவன்தான் செய்கின்றான் என்று மனிதன் ஒப்புக் கொள்கிறான். ஆனால், அவனை விட்டுவிட்டு இன்னொருத்தரை வணங்குகிறான்.
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
அந்த வழிபாடுகளை, அந்த நம்பிக்கையை, அந்தப் பிரார்த்தனையை, அவன் மீது நீ வைப்பதற்கு பதிலாக ஒரு கல்லின் மீது, ஒரு மண்ணின் மீது, ஒரு மரத்தின் மீது, ஒரு மனிதனின் மீது, ஒரு மிருகத்தின் மீது, ஒரு சமாதியின் மீது, ஒரு தர்காவின் மீது நீ வைக்கிறாயே!!
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ
 
நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவது, நீங்கள் நல்லுபதேசம் பெறுவது வெகு சொற்பம் தான். சிந்தித்துப்பாருங்கள்! இவ்வளவு வசனங்களை அந்த இறைவன் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். அந்த இறைவன் நமக்கு ஓதி காட்டுகின்றான். எப்படிப்பட்ட தனது பேராற்றலை அவன் சொல்லிக் காட்டுகின்றான். இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் நான் செய்கின்றேன்.
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
என்னை விட்டுவிட்டு வழிபாடுகள் செய்வதற்கு நீ வேறு ஒருவரை தேடுகிறாயா? என்னை விட்டுவிட்டு வழிபாடுகளை செய்வதற்கு நீ வேறு ஒருவரை தேடுகிறாயா? உன்னை படைத்ததது நான். உனக்கு உணவளித்தது நான். உனது கஷ்டத்தில் உனக்கு உதவி செய்தது நான். குழந்தையாக இருந்தபோது உனக்கு தாயின் மடியிலே பாலை ஏற்படுத்தியது நான். நீ தாயின் வயிற்றில் இருந்தபோது உனக்கு உணவு கொடுத்தது நான். உன்னை தாயின் வயிற்றில் இருந்து வெளியேற்றியது நான். உன்னுடைய தேவைகளில் உனக்கு உதவி செய்தது நான். இப்படி நான் உனக்கு எல்லாவற்றையும் செய்து இருக்கும்போது என்னுடன் இன்னொரு கடவுளை ஏற்படுத்துகிறாயா?
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
இவற்றையெல்லாம் அல்லாஹ் செய்கின்றான். ஆனால் நேர்ச்சைகள் யாருக்கு? அவ்லியாக்களுக்கு. அறுத்து பலியிடுவது யாருக்கு? அவ்லியாக்களுக்கு. நம்பிக்கை யாரின் மீது? அவ்லியாக்கள் மீது. அல்லாஹ் கேட்கிறான்:
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளா? அல்லாஹ்வுடன் வேறு ஒரு இறைவனா? அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வமா?
 

قَلِيْلًامَّاتَذَكَّرُوْنَ‏

 
நீங்கள் வெகு சொற்பமாகத்தான் உபதேசம் பெறுகிறீர்கள். அடுத்து கேட்கிறான்:
 
أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ (63) 
 
நீங்கள் கடலிலே பயணம் செய்யும்போது, அல்லது தரையிலேயே பயணம் செய்யும்போது, அந்த இருள்களிலே நீங்கள் சிக்கும்போது உங்களுக்கு வழிகாட்ட கூடியவன் யார்? உங்களுக்கு பாதையை அமைத்துத் தந்தவன் யார்? இந்த பாதை, இன்று நாம் ஒரு ரோடாக போட்டிருக்கிறோம் அல்லவா? இந்த பாதையை நமக்கு அமைத்துத் தந்தவன் யார்.? மனிதனாக ஏற்படுத்தி கொண்டதா? இல்லை. அவன் அமைத்து தந்த பாதையில் மனிதன் தனக்கு ஒரு வழியை அவன் போட்டுக்கொண்டான்.
 
அவன் மலையிலே பாதையை ஏற்படுத்தினான்; தரையிலே பாதையை ஏற்படுத்தினான்; கடலிலே பாதையை ஏற்படுத்தினான்; ஆகாயத்திலே பாதையை ஏற்படுத்தினான்.
 
இந்தப் பாதைகளை ஏற்படுத்தியவன் யார்? இந்தப் பாதைகளை ஏற்படுத்தியவன் யார்? நீங்கள் நினைக்கலாம், கப்பல் தானாக போய்க்கொண்டே இருக்கிறது என்று. ஃப்லைட் ஆகாயத்தில் போய்க்கொண்டே இருக்கின்றது என்று.
 
இல்லை அன்பிற்குரியவர்களே! ஒரு கணக்கை வைத்து அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இறைவன் படைத்த அந்த நட்சத்திரத்தின், அந்தத் திசையின் கணக்கை கொண்டு அவர்கள் தங்களுடைய ஊரை அறிந்து அதற்கு ஏற்ப அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி சென்றால்தான் அவர்கள் சென்று சேர முடியும். அல்லாஹ் கேட்கின்றான்: மனிதனே! இந்த அறிவை உனக்கு கொடுத்தவன் யார்? இந்த அறிவை, இந்த சிந்தனையை உனக்கு கொடுத்தவன் யார்? உனக்கு வழிகாட்டியவன் யார்? மேலும் கேட்கின்றான்:
 
وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ
 
மழை இறங்குவதற்கு முன்பாக, அனது கருணை என்னும் மழை வருவதற்கு முன்பாக குளிர்ந்த காற்றை அனுப்புகிறான் அல்லவா. நாம் சொல்கிறோமா இல்லையா? ரொம்ப குளிர்ச்சியாக காற்று இருக்கிறது. மழை வரும் போல இருக்கிறது. அல்லாஹ் கேட்கின்றான். மழையாகிய தனது கருணை வருவதற்கு முன்பாக குளிர்ந்த காற்றைச் நற்செய்தி சொல்வதாக அனுப்பக்கூடியவன் யார்?
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
இவற்றையெல்லாம் நான் செய்கின்றேன். இவற்றை எல்லாம் நான்தான் செய்கிறேன் என்று நீ ஒப்புக் கொள்கிறாய்!
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
ஆனால், வழிபாடுகள் செய்வதற்கு இன்னொரு கடவுளா? வழிபாடு செய்வதற்கு இன்னொரு தெய்வமா? அவ்லியாவா?  விக்ரகமா?
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
அல்லாஹ் சொல்கின்றான்.
 
تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ
 
நீங்கள் இணை வைக்கக்கூடிய, எனக்கு சமமாக ஆக்ககூடிய அனைத்தையும் விட்டு நான் மிக உயர்ந்தவன். என்னுடைய வழிபாடுகளை என் அல்லாத யாருக்கு நீங்கள் செய்கிறீர்களோ அவர்கள் அனைவரையும் விட்டு நான் மிக உயர்நதவன்.
 
تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ
 
அல்லாஹ்வைத் தவிர மக்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்களில் யாருக்கும் இந்த சக்திகளில் எதுவும் கிடையாது. அடுத்து கேட்கின்றான்:
 
أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (64)
 
உன்னை ஆரம்பமாக படைத்தது யார்? உனக்கு மரணத்தை கொடுத்தது மீண்டும் உயிர்பிப்பது யார்.?
 
وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ
 
வானத்திலிருந்து பூமியிலிருந்து உனக்கு உணவளிப்பவன் யார்?
 
மழையை அல்லாஹ் இரறக்குகின்றான். அது பூமியின் மீது பெய்கிறது. தாவரங்கள் உற்பத்தியாகிறது. செடி கொடிகள் வளர்கின்றன. கால்நடைகளும் சாப்பிடுகின்றன. மனிதன் தாவரங்களை சாப்பிடுகிறான். அந்த தாவரங்களை சாப்பிடக்கூடிய கால்நடைகளையும் அவன் தனக்கு உணவாக உட்கொள்கின்றான். அல்லாஹ் கேட்கின்றான்: வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?
 
وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வமா? அல்லாஹ்வை விட்டுவிட்டு வேறு ஒருவருக்கு வழிபாடா? அல்லாஹ்வை தவிர்த்து இன்னொருவருக்கா வழிபாடு? அல்லாஹ்வைத் தவிர்த்து இன்னொருவருடத்திலா நேர்ச்சை? அல்லாஹ்வைத் தவிர்த்து இன்னொருவர் மீதா நம்பிக்கை? யார் மீது வைத்தாலும் சரி. நீங்கள் ஒரு சிலையின் மீது நம்பிக்கை வைத்தாலும் சரி, அல்லது ஒரு கபுரின் மீது நம்பிக்கை வைத்தாலும் சரி, அல்லது அல்லாஹ்வைத் தவிர யாரின் மீது நம்பிக்கை வைத்தாலும் சரி, அது அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடிய காரியம் ஆகும்.
 
أَإِلَهٌ مَعَ اللَّهِ
 
அல்லாஹ் கடைசியாக கேட்கின்றான்:
 
قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ 
 
நீங்கள் செய்வதும் சொல்வதும் உண்மை என்றால், அல்லாஹ்வை தவிர்த்து இந்த அவ்லியாக்களையும் வணங்கலாம் என்று சொன்னால், அல்லது அல்லாஹ்வை தவிர்த்து இந்த சிலைகளை வணங்குவது உண்மை என்று சொன்னால், அல்லாஹ்வை தவிர்த்து மனிதர்களை வணங்குவது உண்மை என்று சொன்னால்,
 
قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ 
 
நீங்கள் உண்மையாளர்கள் என்று சொன்னால், நீங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். சாகுல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அவர்களை வணங்குவது உண்மை என்று சொன்னால், அவர்களை வணங்கினால் பலன் கிடைக்கும் என்று சொன்னால், நீங்கள் ஆதாரத்தை கொண்டு வாருங்கள். அல்லாஹ் சொல்லி இருக்கின்றானா? இறைவன் அதற்கு ஆதாரத்தை இறக்கி இருக்கிறானா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதாரத்தை சொல்லியிருக்கிறார்களா? அல்லாஹ் ஆதாரத்தை சொல்லியிருக்கிறானா அல்லது அல்லாஹ் தனது தூதரின் மூலம் வழி காட்டி இருக்கின்றானா?
 
قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ 
 
இது யாருடைய அழைப்பு? இது யாரெல்லாம் அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு வழிபாடுகளை செய்கிறார்களோ அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொன்னாலும் சரி, அல்லது முஸ்லீம்கள் என்று சொல்லவில்லை என்றாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, எந்த சமூகத்தவராக இருந்தாலும் சரி அவர்களை நோக்கி அந்த ஏக இறைவன், யாரை படைத்தவன் பரிபாலிப்பவன், இறைவன் என்பதாக ஏற்றுக் கொண்டோமோ அந்த இறைவன் கேட்கிறான்: என்னை தவிர பிறரை இனி வணங்குவதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய்?
 
قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ 
 
உன்னுடைய ஆதாரத்தைக் கொண்டு வா பார்ப்போம். உன்னுடைய ஆதாரத்தைக் கொண்டு வா. நீ வணங்குகின்ற இவர்கள் ஏதாவது படைத்தார்களா? நீ யாரிடம் சென்று நேர்ச்சை செய்கிறாயோ அவர்கள் எதை படைத்தார்கள்?
 
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ (191)
 
பொருள்: ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான். (அல்குர்ஆன்  7 : 191)
 
அல்லாஹ் கேட்கின்றான்: நான் படைத்தது மாதிரி வேறு ஏதாவது இவர்கள் படைத்து வைத்திருக்கிறார்களா? ஏழாவது அத்தியாயத்தில் 191 வசனத்தில் அல்லாஹ் கேட்கின்றான். நீங்கள் இப்படி செய்கிறீர்களே, ஷிர்க் செய்கிறீர்களே, வழிபாடுகளை பிறருக்கு செய்கிறீர்களே, என் மேல நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக அவுலியாக்கள் மூலமாக ஆகும் என்று நம்புகிறீர்களே, அவுலியாக்கள் நாடினால் அல்லாஹ்விடம் நமக்கு வாங்கி கொடுத்துவிடுவார்கள் என்று நம்புகிறீர்களே! இந்த சிலைகள் மூலமாக கிடைக்கும், இப்படியெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களே!!
 
மக்களே அல்லாஹ் உங்களிடம் கேட்கின்றான்:
 
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ (191)
 
எதையுமே இவர்கள் படைக்கவில்லை. இவர்களோ படைக்கப்பட்டவர்கள். இப்படி இருக்க இதை எப்படி எனக்கு நீங்கள் சமமாக ஆக்குகிறீர்கள்? இந்த சிலைகளுக்கு, அல்லது சமாதிகளுக்கு எப்படி வழிபாடுகள் செய்கிறீர்கள்?
 
وَاتَّخَذُوا مِنْ دُونِهِ آلِهَةً لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنْفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَاةً وَلَا نُشُورًا (3)
 
பொருள்: (இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவையோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. எதையும் அவை படைக்கவில்லை. எவ்வித நன்மையையும் தீமையையும் தங்களுக்கு செய்து கொள்ள அவை சக்தியற்றவை. உயிர்ப்பிக்கவோ, மரணிக்க வைக்கவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ அவை சக்திபெற மாட்டா. (அல்குர்ஆன் 25 : 3)
 
அல்லாஹ்வைத் தவிர்த்து இவர்கள் யாருக்கெல்லாம் வழிபாடுகள் செய்கிறார்களோ. அவர்கள் எதையும் படைக்கவில்லை. மாறாக அவர்களோ படைக்கப்பட்டவர்கள். 
 
وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ (20) أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ (21) إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ
 
பொருள்: (நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (தெய்வமென) அழைக்கிறார்களோ அவற்றால் எதையும் படைக்க முடியாது. அவை (அவனால்) படைக்கப்பட்டவையாகும். (அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியா. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்?) உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான்.  (அல்குர்ஆன் 16 : 20-22)
 
அல்லாஹ்வைத் தவிர எந்த இறைநேசர்களை இவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள்
 
لَا يَخْلُقُونَ شَيْئًا 
 
அவர்கள் இதுநாள் வரை எதையும் படைத்தது கிடையாது.
 

وَّهُمْيُخْلَقُوْنَ‏

 
அவர்களுமோ படைக்கப்பட்ட படைப்புகள்.
 
இன்னும் அல்லாஹ் எவ்வளவோ உதாரணங்களை தனது வேதத்தில் தெளிவாக எடுத்து சொல்கின்றான்.
 
22 அத்தியாயத்தினுடைய 73 வது வசனத்தில் அல்லாஹ் சொல்கின்றான்:
 
يَاأَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ 
 
وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ (73) مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ (74) 
 
பொருள்: மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே! அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்.  (அல்குர்ஆன் 22 : 73, 74)
 
அல்லாஹ்வைத் தவிர்த்து, அந்த ஏக இறைவனைத் தவிர்த்து யாரை எல்லாம் நீங்கள் வணங்குகிறீர்களோ, அவர்கள் சாகுல் ஹமீது ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆக இருக்கட்டும், அப்துல் காதர் ஜீலானியாக இருக்கட்டும், அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்த்தி ஆக இருக்கட்டும். அல்லது தமிழ்நாட்டில் உள்ள எந்த அவ்லியாவாக இருக்கட்டும். அல்லது வடநாட்டிலுள்ள அவ்லியாவாக இருக்கட்டும், அல்லது எந்த அவ்லியாவாக இருக்கட்டும், இன்னும் அதேபோல் மற்றவர்கள் அல்லாஹ்வைத் தவிர யாரையெல்லாம் வணங்குகிறார்களோ, அவர்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக ஒரு மைதானத்தில் ஒன்றுகூடி வந்ததற்கு பிறகு அவர்கள் எல்லாரிடமும் நீங்கள் சொல்லுங்கள், நீங்கலன் எல்லோரும் செர்ந்து ஓர் ஈயை படைத்துக் காட்டுங்கள்!
 
இறைவன் சவால் விடுகிறான். உங்களுடைய இறைவன் உங்களுக்கு சவால் விடுகிறான். உங்களை சோதித்துப் பார்க்கச் சொல்கிறான். உங்களுடைய அறிவுக்கு அவன் சோதனை தருகிறான். நீ சிந்தித்துப்பார்! சிந்திக்கக் கூடிய மனிதனே! பகுத்தறி உள்ளவனே! தன்மானமுள்ளவனே! சுய மரியாதை உள்ளவனே! சிந்தித்து செயல்பட கூடியவனே! சிந்தித்துப்பார்! என்னைத்தவிர யாரை நீ வணங்குகிறாயோ, அது சாகுல் ஹமீது ஆக இருந்தாலும் சரி, அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, எல்லாத்தையும் கூட்டிக்கொண்டு வந்து எல்லாரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். யாரும் தனியாக வேண்டாம். எல்லாரும் ஒன்றாக சேர்ந்து ஒரு ஈ ஒரு ஈயை படைத்து காட்டச் சொல்லுங்கள்.
 
அல்லாஹ் அக்பர்!!.
 
அல்லாஹ் அடுத்து என்ன தெரியுமா சொன்னான்.
 
விடுங்கள். ஒரு ஈயைப் படைப்பது இருக்கட்டும். தங்கள் பூஜை செய்வதற்கு வைக்கிறார்கள் அல்லவா அந்த சாப்பாடு, லட்டு, பூந்தி, கேசரி, வாழைப்பழம், அல்வா, அந்த உணவுகளில் இருந்து ஒரு சிலதை, ஒரு பருக்கையை, அந்த ஈ எடுத்துச் சென்றாலும் அதை கூட ஓவர்க்ளால் தடுக்க முடியாது.
 
தனக்கு முன்னுள்ள உணவின் மீது ஈ உட்கார்ந்தால் மனிதன் அதை தட்டிவிடுகிறான். ஆனால் அவன் வணக்குகின்ற கடவுள் அது தனக்கு முன்னர் வைக்கப்பட்டுள்ள உணவின் மீது ஈ உட்காருவதை தடுக்க முடியாமல் இருக்கின்றன.!! அந்தோ என்னே பலவீனம்!! 
 
وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ
 
அந்த ஈ அவர்களுடைய உணவுகளிலிருந்து ஒன்றை எடுத்துச் சென்றால் தன்னுடைய உணவாயிற்றே, அந்த ஈயை விரட்ட வேண்டாமா?  ஒரு சின்ன பையன் கூட தன்னுடைய சாப்பாட்டில் ஈ உட்கார்ந்தால் தட்டிவிடுவான். தட்டி விடுவானா விட மாட்டானா?
 
நீங்கள் தெய்வம் என்று சொல்கிறீர்களே, கடவுள் என்று சொல்கிறீர்களே, எங்கள் இரட்சகன் என்று சொல்கிறீர்களே, உங்களுடைய வழிபாடுகளை அவற்றுக்கு செய்கிறீர்களே, எங்களுடைய நன்மை தீமைகளை இவர்கள் கணக்கிடுகிறார்கள் என்று சொல்கிறீர்களே, எங்களுடைய தேவைகளை இவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களே, இவர்களுடைய அருளால் நாங்கள் வாழ்கிறோம் என்று சொல்கிறீர்களே, ஆனால் இவர்களுடைய நிலைமை என்ன? ஒரு ஈயைப் படைக்க முடியாது. ச்சீ ச்சீ, ஈயைப் படைப்பது இருக்கட்டும். அந்த ஈ அவற்றின் உணவிலிருந்து ஒன்றை எடுத்துச் சென்றால் அதை கூட அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியாதே!! அப்படிப்பட்டவர்களையா பகுத்தறிவுள்ள மனிதர்களே நீங்கள் வணங்குகிறீர்கள்? இதைவிட கேவலம் வேறு எதுவாக இருக்க முடியும்.
 
ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ 
 
நீயும் புத்தியில் பலவீனமானவன். நீ யாரை வணங்குகிறாயோ அதுவும் பலவீனமானது. 
 
இதை விட பெரிய ஒரு அத்தாட்சி தேவையா? அல்லாஹ்வுடைய வல்லமைக்கு, அந்த ஏக இறைவன் ஒருவன்தான் வணங்க தகுதியானவன் என்பதற்கு இதைவிட ஒரு ஆதாரம் தேவையா? அல்லாஹ் சொல்கின்றான்.
 
وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ (21)
 
பொருள்: (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியா. (அல்குர்ஆன் 16 : 21) இவர்கள் இறந்ததற்கு பிறகு எப்போது இவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பது இவர்களுக்கும் தெரியாது. இவர்கள் வணங்குகின்ற அவ்லியாக்க்ளுக்கும் தெரியாது. அல்லது சிலைகளுக்கும் தெரியாது.
 
இந்தளவு பலவீனமான அறிவுள்ள மனிதன் அல்லாஹ்விடம் தர்க்கம் செய்கின்றான். ராப்பிடத்திலே வாதிடுகிறான். அல்லாஹ் சொல்கின்றான்:
 
بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ بَلْ هُمْ فِي شَكٍّ مِنْهَا بَلْ هُمْ مِنْهَا عَمُونَ (66)
 
பொருள்: எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? அவர்கள் (அறிந்திருந்தும்) அதைப் புரியாத குருடர்களாகி விட்டனர். (அல்குர்ஆன் 27 : 66)
 
மறுமையைப் பற்றி, மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையை பற்றி இவர்களுடைய அறிவு ஒரு சூனியமாகத்தான் இருக்கிறது. 
 
மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கையா? அது என்ன? கேள்வி கணக்கா? விசாரணையா? என்று இறை மறுப்பாளர்கள் கேள்விகேட்கிறார்கள்.
 
மாற்றார்கள்தான் ஒரு காலத்தில் அப்படி சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனாக், இன்று முஸ்லிம்களில் கூட சிலர் இப்படிச் சொல்கிறார்கள். 
 
பாத்துக்கலாம், இப்ப இருக்கிற வரைக்கும் சம்பாரிச்சுப்போம், ஹராமாவது ஹலாலாவது, அடுத்தவன் வீட்டு சொத்தாவது, பக்கத்து வீட்டு சொத்தாவது, அமுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமுக்கு. எல்லாம் பார்த்துக்கலாம்!
 
லா ஹவ்ல அலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: பிறருடைய சொத்தை அபகரிப்பவன், நாளை மறுமை நாளிலே ஏழு பூமியிலிருந்து அந்த அளவு நிலத்தை கழுத்தில் தொங்கவிடப்பட்டவனாக வருவான். 7
 
எப்படிங்க.? ஒரு ஜான் நிலத்தை, தனது சகோதரனின் நிலத்தை அபகரித்துக் கொண்டால் நாளைக்கு மறுமையிலே ஏழு பூமியிலிருந்து அந்த நிலத்தின் அளவு வளையமாக மாற்றப்பட்டு அவனது கழுத்தில் போடப்பட்டு இழுத்து கொண்டுவரப்படுவான்.
 
சம்பாதிக்கிறது எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்றா நீ நினைக்கிறாய் மனிதனே!
 
அல்லாஹ் சொல்கின்றான்:
 
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4) 
 
பொருள்: அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? (அல்குர்ஆன் 83 : 4, 5)  
 
யார் வியாபாரம் செய்யும் பொழுதோ, மக்களுக்கு அளந்து கொடுக்கும் பொழுதோ, அல்லது மக்களுக்கு நிறுத்து கொடுக்கும் பொழுதோ குறைவு செய்கிறார்களோ, மோசடி செய்கிறார்களோ அப்படிப்பட்ட வியாபாரிகளுக்கு நாசம்தான். அவன் தொழுகையாளியாக இருக்கட்டும், ஹஜ்ஜுக்கு சென்றவராக இருக்கட்டும். அவன் யாராக இருக்கட்டும் அவனுக்கு நாசம்தான். 
 
இஸ்லாம் இறை நம்பிக்கையை மட்டும் போதிக்கவில்லை. மனிதனுக்கு வாழ்க்கையிலே ஒழுக்கத்தை போதிக்கிறது. மனிதனுக்கு வாழ்க்கையில் நீதத்தை போதிக்கிறது. மனிதனுக்கு வாழ்க்கையிலே கட்டுப்பாட்டை விதிக்கிறது.
 
எப்படிப்பட்ட ஒழுக்க சீர்கேடுகள் இன்று அந்த இறைவனையும் மறுமையையும் நம்பாத காரணத்தால். அந்த அல்லாஹ்வை நம்பாத காரணத்தால் சமுதாயம் இன்றைக்கு எப்படி ஆகிவிட்டது?
 
விபச்சாரம் பெருகிவிட்டது. கேவலம்!! தனது சகோதரிக்கு விரும்பாததை, தன்னுடைய தாய்க்கு விரும்பாததை, தன்னுடைய மகளுக்கு விரும்பாததை இன்று இன்னொரு பெண்ணுடன் செய்கின்றான். பார்க்கிறோமா இல்லையா?
 
பள்ளிக்கூடத்தில் படிக்க கூடிய மாணவிகளின் கற்புக்கு அங்கே பாதுகாப்பு கிடையாது. பணியிடங்களில் வேலை செய்யக்கூடிய அப்பாவி பெண்களுக்கு அவர்களுடைய கற்ப்புக்கு அங்கு பாதுகாப்பு கிடையாது. சமுதாயம் எப்படி இழிநிலைக்கு போய் விட்டது பாருங்கள்!
 
ஒரு பெண் தனிமையிலே சென்றுவிட்டால், அந்த பெண்ணை பாதுகாப்பதற்கு அங்கே யாரும் இல்லை என்றால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடலாம் என்று இருந்தால் அவளை பார்க்கின்ற மனிதன் மிருகமாக மாறிவிடுகிறான். பார்க்கிறோமா இல்லையா?
 
தமிழ்நாட்டினுடைய தலைப்புச்செய்திகள் என்ன? உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. என்னை விட அதிகமாக நீங்கள் நியுஸ் பேப்பர் படிப்பவர்கள். புத்தகம் படிப்பவர்கள். நான் எப்போதாவது படிக்கிறவன். எடுத்துப் பாருங்கள் என்ன நடக்கிறது என்று? பள்ளிக்கூடத்துக்குப் போகும் அப்பாவி சிறுமிகள் பதிமூன்று பதினான்கு வயது சிறுமிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். கண்டம், துண்டமாக வெட்டி எறிய படுகிறார்கள். அல்லாஹ்வுடைய கோபம் வருமா வராதா? அந்த ரப்பு கோபப்படுவானா இல்லையா? அவன் காஃபிரா, முஸ்லிமா என்று இறைவன் பார்க்க மாட்டான். பாதிக்கப்பட்டவன் அவன் ஒரு கூக்குரல் இட்டால் அவனுடைய அழைப்பை அந்த இறைவன் செவிமடுப்பான். இதை அவன் தன் மீது சத்தியமாக ஆக்கிக் கொண்டான். 8
 
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அப்பாவி மக்களை எப்படி நடத்துகிறார்கள்? அநியாயத்தை இறைவன் பொறுத்துக் கொள்ள மாட்டான். அநியாயம் செய்பவன் முஸ்லிமாக அல்லது காபிராக இருந்தாலும் சரி! அநீதி இழைக்கப்பட்டவனின் சார்பாக அந்த இறைவன் நிச்சயமாக ஒரு நேரத்திலே பழி தீர்த்தே ஆவான். 
 
மனிதன் கற்பனையில் இருக்கின்றான்: தான் என்ன வேணாலும் செய்யலாம், எப்படி வேணாலும் செய்யலாம், எத்தனை கொலை வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை பேருடைய கற்ப்பை வேண்டுமானாலும் சூரையாடலாம்.
 
ஒருவனை கொலை செய்வது உலக மக்களை கொலை செய்வது போன்று. ஒரு உயிரைப் பாதுகாப்பது உலக மக்களை பாதுகாப்பது போன்று என்று அல்லாஹ் சொல்கின்றான், படைத்த இறைவன் சொல்கிறான். 9
 
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
 
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ إِنَّهُ كَانَ مَنْصُورًا (33)
 
பொருள்: (எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.) (அல்குர்ஆன்  17 : 33)
 
அல்லாஹ் கண்ணியப்படுத்திய, பாதுகாத்த உயிரை நீங்கள் அநியாயமாக கொலை செய்யாதீர்கள். ஆகவேதான் சொல்கின்றோம். யார் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு தீவிரவாதத்தில், பயங்கரவாதத்தில்  ஈடுபடுகிறார்களோ, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றார்களோ, பொதுமக்களை அச்சுறுத்துகிறார்களோ, அநியாயமாக பொதுமக்களை கொல்கின்றார்களோ, அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. அவர்கள் இஸ்லாமிய வழிகாட்டலின் படி செயல்படுபவர்கள் அல்ல. அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லை. அவர்களுக்கும் இந்த மார்க்கத்திற்கும் இந்த சமுதாயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் நாளை மறுமையில் நரகத்தில்தான் தங்குவார்கள்.
 
நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்! கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நிம்மதியாக, பாதுகாப்போடு ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்க கூடிய சூழ்நிலையிலே. ஒப்பந்தம் செய்து கொண்டு, நிம்மதியாக, ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலே, ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுகிறவனாக இருக்கட்டும், ஜகாத் கொடுத்தவனாக இருக்கட்டும், ஹஜ் செய்தவனாக இருக்கட்டும், தினமும் காசுகளை நன்மையான காரியத்தில் அள்ளி இறைப்பவனாக இருக்கட்டும், நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை கட்டியவனாக இருக்கட்டும், இப்படிப்பட்ட ஒரு முஸ்லிம் அன்னிய மதத்தைச் சார்ந்த ஒருவர் ஒரே நாட்டில் பாதுகாப்போடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் அவர் இவருடைய உறவினர் யாரையும் கொல்லாமல் இருக்க, அப்படி கொன்றால் கூட அரசாங்கம் தான் பழிதீர்க்க வேண்டும், சட்டத்தை இவர் கையில் எடுக்க அனுமதி கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு காஃபிரை, முஸ்லிம் அல்லாதவரை கொன்றுவிட்டால் அவன் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
 
 யார் ஒப்பந்தம் செய்து வாழும்போது பிற மதத்தவரை கொல்லுகின்றானோ, அவன் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது. எப்படிப்பட்ட மார்க்கம் பாருங்கள்! உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உயிர்கள் கண்ணியப்படுத்த படவேண்டும். ஆனால், இன்று எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு ஐம்பது ரூபாய்க்கு கொலை நடக்கிறது. ஒரு அற்ப ஆசைக்காக கொலை நடக்கின்றது. எத்தனை விதமான கொலைகள். எத்தனை விதமான கற்பழிப்புகள். இவற்றுக்கெல்லாம் அல்லாஹ்வுடைய சாபம் இறங்குமா இறங்காதா?
 
இவையெல்லாம் நடப்பதற்கு என்ன காரணம்?
 
அந்த ஏக இறைவன் அல்லாஹ்வை அறியாத காரணத்தால், நமக்கு மறுமையிலே ஒரு தீர்ப்பு நாள் இருக்கிறது, அங்கே நம்முடைய செயல்களுக்கு தக்க கூலி கொடுக்கப்படும் என்பதை நம்பாத காரணத்தால்.
 
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8) 
 
பொருள்: ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99 : 7, 8)
 
வட்டி வாங்குபவன், விபச்சாரம் செய்பவன், வரதட்சனை வாங்க கூடியவன், அநீதி இழைக்கக் கூடியவன், பொய் பேசக்கூடியவன், மோசடி செய்யக் கூடியவன், துரோகம் செய்யக் கூடியவன், உறவுகளைத் துண்டித்து வாழக் கூடியவன் இவர்களுக்கெல்லாம் அல்லாஹ் சொல்கின்றான்.
 
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8) 
 
பொருள்: ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99 : 7, 8)
 
அணு அளவு எவ்வளவு? அணு அளவு நீங்கள் நன்மையை செய்தாலும் அதையும் மறுமையிலே பார்த்துக் கொள்வீர்கள். அணு அளவு நீங்கள் தீமை செய்தாலும் அதனுடைய தண்டனையை மறுமையிலே நீங்கள் அனுபவிப்பீர்கள். நூறு கொலை செய்துவிடலாம். இந்த உலகத்தில் சட்டத்தில் இருந்து தப்பித்துவிடலாம். கொலையை செய்யவில்லை என்று சாதித்து பிடலாம். ஆனால், மறுமையில் அல்லாஹ்வின் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. அந்த ரப்புடைய பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது.
 
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ (41)
 
பொருள்: குற்றவாளிகள், அவர்களின் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், பாதங்களையும் பிடிக்கப்(பட்டு பின்னர், நரகத்தில் தூக்கி எறியப்)படும். (அல்குர்ஆன் 55 : 41)
 
உச்சி முடிகளையும் உள்ளங்கால்களையும் பிடித்து நரக நெருப்பில் வீசி எறியா சொல்வான் அந்த ரப்புல் ஆலமீன்.
 
இன்று தலைவராக இருக்கலாம். இன்று தளபதியாக இருக்கலாம். இன்ற அரசனாக இருக்கலாம். அதிகாரியாக இருக்கலாம். கோட்டு சூட்டு போட்டு இன்று மிடுக்காக நடக்கலாம். ஆனால், நாளை மறுமையில் ரப்புல் ஆலமீன் உடைய சந்நிதானத்திலே அவனுடைய முன்னிலையிலேயே!!
 
 அல்லாஹு அக்பர்.
 
நீ வரும்பொழுதே உனது நெற்றியிலேயே எழுதப்பட்டிருக்கும் குற்றவாளி என்பதாக, கொலைகாரன் என்பதாக, விபச்சாரி என்பதாக, பிறர் சொத்துக்கு மோசடி செய்தவன், அநியாயம் செய்தவன், அட்டூழியம் செய்தவன் என்பதாக.
 
நெற்றியில் எழுதப்பட்டு வருவான். கையிலே ஒரு கொடி கொடுக்கப்பட்டிருக்கும் நான் ஒரு மோசடிக்காரன் என்பதாக. 11
 
 சுபஹானல்லாஹ்!! அல்லாஹ் பாநம்மை துகாக்க வேண்டும். 
 
அல்லாஹ் சொல்கின்றான்:
 
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69).
 
பொருள்: ஆகவே ‘‘பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போன்று இருந்த) குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கவனித்துப் பாருங்கள்'' (என்று நபியே!) கூறுவீராக. (அல்குர்ஆன்  27 : 69)‏
 
இந்தப் பாவிகளின் முடிவு எப்படியானது என்பதாக அவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!
 
وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ (70) 
 
பொருள்: (நபியே!) அவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றியும் நீர் மனமொடிந்து விடாதீர். (அல்குர்ஆன் 27 : 70)
 
இவர்கள் செய்யக்கூடிய சூழ்ச்சியால் நீங்கள் மன நெருக்கடிக்கு ஆளாகாதீர்கள். அல்லாஹ் இவ்வாறு யாருக்கு செல்கின்றான்? நபிக்கு செல்கின்றான்.
 
அந்த நபியின் பணியைச் செய்யக் கூடிய உங்களுக்கும் எனக்கும் இதை சொல்கின்றான்.
 
அவர்கள் என்ன சூழ்ச்சி செய்கிறார்கள் பார்த்தீர்களா? எப்படிப்பட்ட சூழ்ச்சி, ஏகத்துவப் பிரச்சாரம் நடக்கக்கூடாது என்று சூழ்ச்சி.
 
அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைக்க வேண்டும் என்று அழைப்பு நடக்க கூடாது என்று சூழ்ச்சி செய்கிறார்கள்.
 
இவ்வளவு நேரம் பயான் சொன்னோமே என்ன சொன்னோம்?
 
இறைவனை வணங்க வேண்டும். அல்லாஹ்வை வணங்குவோம். உங்களுடைய கடவுள், எங்களுடைய கடவுள், உங்களுடைய இறைவன், என்னுடைய இறைவன் அந்த அல்லாஹ்வை வழிபட்டு அவனுடைய அன்பை அடைவோம். அல்லாஹ்வுடைய படைப்பினங்களுக்கு என்ன கண்ணியமோ அதை கொடுப்போம். இதை தவிர வேறு வார்த்தைகளை நாம் உபயோகித்தோமா? இதைத்தவிர வேறு எதையாவது சொன்னோமா?
 
அன்பிற்குரியவர்களே! இந்த அழைப்பை பிடிக்காதமனிதர்களுடையா உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அல்லாஹ் குர்ஆனிலே சூரா ஸுஃரூஃபில் கூறுகின்றான்:
 
وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ (45)
 
பொருள்: அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்கள்) கூறப்பட்டாலோ, அவர்கள் சந்தோஷப்படுகின்றனர். (அல்குர்ஆன் 39 : 45)
 
அல்லாஹ்விற்கு வழிபாடு செய்யாதவர்கள் அல்லாஹ்வை வணங்காத மக்களுடைய நிலைமை என்ன தெரியுமா? இறைவன் ஒருவன்தான், அவனை மட்டுமே வணங்க வேண்டும், அவன்தான் எல்லாவற்றையும் மிகைத்தவன் என்று சொல்லப்பட்டால் அவர்களுடைய முகங்கள் எல்லாம் கறுத்து விடுகின்றன. அல்லாஹ்வுடன் சேர்த்து அவ்லியாக்களும் சொல்லப்பட்டால், அல்லாஹ்விற்கு அதிகாரம் இருக்கிறது, அவ்லியாக்களுக்கு அதிகாரம் இருக்கிறது, அல்லாஹ்வாலும் செய்ய முடியும், அவ்லியாவாலும் செய்யமுடியும், அல்லாஹ்விடமும் கேட்கலாம், அவ்லியாவிடமும் கேட்கலாம் என்று சொல்லப்பட்டால்‏ நம்ம ஆளுங்க இவரு, இவரு சுன்னத் ஜமாஅத்துங்க என்று ரொம்ப சந்தோஷமாகி விடுகிறார்கள் இவர்கள்.
 
அல்லாஹ் சொல்கின்றான்: ரப்பு மட்டும் அழைக்கப்பட்டால் இவர்கள் வெறுப்படைகிறார்கள். ரப்பை விட்டுவிட்டு பிறர் அழைக்கப்பட்டால் சந்தோஷம் அடைகிறார்கள். இன்றைக்கும் அதே நிலைமைதான். இதே இடத்திலே சாகுல் அமீது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய சிறப்புகளைப் பற்றி பேசுவோம், அவர்களுடைய மௌலூது ஓதுவோம் என்று சொன்னால் இந்த ஊரில் உள்ள எல்லாருடைய வீட்டு வாசல்களும் திறக்கப்பட்டு விடும். எவ்வளவு வேண்டுமானாலும் காசு வாங்கிக்கொள்ளுங்கள்! எவ்வளவு வேண்டுமானாலும் சந்தா வாங்கிக்கொள்ளுங்கள்!
 
ஆனால், இன்று நாம் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வை பற்றி சொல்கின்றோம் எந்த கூலியும் கேட்காமல், எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்.  அல்லாஹு அக்பர்!
 
அல்லாஹ்வை அழைப்பதற்காக கூட்டம் நடத்த முடியவில்லை. அங்கே நடத்தக்கூடாது. இத்தனை மணிக்கு மேல் நடத்தக்கூடாது. அத்தனை மணிக்கு மேல் நடத்தக்கூடாது. பல தடைகள்
 
இப்படி சோதனைகள் இறைத் தூதர்களுக்கும் ஏற்பட்டுள்ளன.
 
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அடைவதற்கு, அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்கு ரொம்ப லேசான வழி இருக்கிறது. காசு தேவையில்லை. பொருள் தேவை இல்லை. பெரிய சிரமம் தேவையில்லை. இரண்டு ரக்அத் தொழுது உங்களுடைய பிரச்சினைகளை அல்லாஹ்விடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
 
இன்று அதை விட்டதனால், அது தெரியாததால், அல்லது அதை தெரிந்து இருந்தும் ஷைத்தானால் அது மறக்கடிக்கப்பட்ட காரணத்தால் எத்தனை விதமான ஃபாத்திகாக்கள் மக்களிடம் தோன்றிவிட்டன. 
 
இந்த சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய மாதங்களை அவற்றின் அரபு பெயர்களைக் கொண்டு சொன்னால் தெரியாது. ரபியுல் அவ்வல் மாதம், ரபிவுல் ஆகிர், ஜுமாதுல் ஊலா என்று அரபுப் பெயர்களை கொண்டு சொன்னால் தெரியாது. எப்படி தெரியுமா சொல்லணும்? இது ரசூல்லாஹ் மவ்லிது மாதம், இது அப்துல் காதர் ஜீலானி மவ்லிது மாசம், இது சாகுல் அமீது மவ்லிது மாசம். இது மொய்தீன் ஆண்டவர் மவ்லிது மாசம். இப்படி சொன்னால்தான் பலருக்கு என்ன மாதம் என்று தெரியும்.
 
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!!
 
சமுதாய மக்களே! சிந்தித்து பார்க்க வேண்டாமா? அல்லாஹ்வை வணங்குவதற்காக கொடுக்கப்பட்ட வாழ்நாளை, அல்லாஹ்வைத் துதிப்பதற்காக கொடுக்கப்பட்ட வாழ்நாளை, அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து சுஜூது செய்து, சிரம் பணிந்து ருகூஉ செய்து, அவனுடைய குர்ஆனை ஓதி, அவனுக்காக நேர்ச்சை செய்து, அவனுக்காக அறுத்து பலியிட்டு, அவனுடைய அன்பை அடைவதற்காக கொடுக்கப்பட்ட இந்த மாதங்களையும், அவனுடைய அன்பை அடைவதற்காக கொடுக்கப்பட்ட இந்த காலங்களையும் யாருக்கு நீங்கள் பங்கிட்டு கொடுக்கிறீர்கள்?
 
உங்களுக்கும் மக்காவிலே வாழ்ந்த முஷிரிக்குளுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? இப்படித்தான் பங்கு போடுவார்கள் அவர்களும்.
 
சிந்தித்து பாருங்கள் சமுதாய மக்களே!
 
நமக்கு மத்தியிலுள்ள ஒற்றுமையை நிலைநிறுத்துவோம். அல்லாஹ்வுடைய புத்தகத்தின் பக்கம் வருவோம். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையின் பக்கம் வருவோம். சஹாபாக்களின் வழிமுறையின் பக்கம் வருவோம். நமக்கு நல்வழி காட்டிய அந்த சஹாபாக்கள் உடைய மாணவர்கள் தாபியீன்கள் மற்றும் இமாம்கள் உடைய பாதைக்கு பக்கம் வருவோம்.
 
சிந்தித்து பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்! எந்த இமாம்கள் தர்கா வழிபாட்டை ஆதரித்திருக்கிறார்கள்?
 
எந்த இமாம்கள் அவ்லியாக்களுக்கு வழிபாடு செய்வதற்கு உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்?
 
எந்த இமாம்கள் உங்களுக்கு பூரியான் ஃபாத்திஹா வை கற்றுக் கொடுத்தார்கள்?
 
எந்த இமாம்கள் உங்களுக்கு சுபஹான மௌலூதை கற்றுக்கொடுத்தார்கள்?
 
முஹ்யித்தீன் மௌலித்தை கற்றுக்கொடுத்தார்கள்?
 
ஷாகுல் ஹமீது மவ்லிதை எந்த இமாம்கள் உங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்?
 
இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அவர்கள் கற்றுக்கொடுத்தார்களா? அல்லது மாலிக் ரஹ்மத்துல்லாஹி அவர்களா? அல்லது இந்த ஊர்வாசிகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களே அவர்கள் உங்கள் கற்றுக்கொடுத்தார்களா?
 
அல்லது இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அவரகள்தான் கற்றுக்கொடுத்தார்களா? எங்கிருந்து இது வந்தது? யார் இதை கற்றுக் கொடுத்தார்கள்? ஏன் நீங்கள் இதை சிந்திப்பது கிடையாது? குர்ஆனில் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாளிலே செய்திருக்கிறார்களா? அவர்களுடையடைய சஹாபாக்கள் செய்திருக்கிறார்களா? சஹாபாக்கள் ஒருநாள்கூட ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கபுருக்கு சென்று ரசூலுல்லாஹ்! எங்களை இரட்சித்து கொள்ளுங்கள்! அல்லாஹ்விடத்தில் கேட்டு எங்களுக்கு வாங்கி தாங்க! உங்களை நம்பி வந்து விட்டோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்று சொன்னது கிடையாது.
 
ரசூலுல்லாஹ்வை விடவா நீங்கள் கூறும் இந்த அவ்லியாக்கள் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த தரத்தை பெற்றுவிட்டார்கள்?
 
அல்லாஹ் தனக்கு ஏஜண்டுகளாக, குட்டி கடவுள்களாக உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டானா? புரியவில்லையே!! 
 
எங்கிருந்து இந்த அனாச்சாரங்கள் உருவாகின? யார் இவற்றை ஆரம்பித்தார்கள்.? 
 
இந்த சமுதாயத்தின் உடைய முன்னோர்களான சஹாபாக்கள், தாபியீன்கள் இன்னும் அவர்களுடைய மாணவர்களிடத்தில் இந்த சடங்குகளுக்கு அனாச்சாரங்களுக்கு ஆதாரம் இருக்கின்றதா?
 
சிந்தித்துப் பாருங்கள் என் சமுதாய மக்களே! என் அன்பிற்குரியவர்களே! என் சகோதரர்களே! என் சகோதரிகளே! என் தாய்மார்களே! அந்த வணக்கத்திற்குரிய வல்லமைமிக்க அந்த இறைவன் சொல்கிறான்: என்னிடத்தில் கேளுங்கள். நான் உங்களுக்கு தருகிறேன் என்பதாக.
 
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
 
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (அல்குர்ஆன் 40 : 60)
 
கேட்டு நான் கொடுத்து எவ்வளவு கொடுத்தாலும் சரி அவனுடைய கஜானா குறையாது.
 
அவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது தெரியுமா?
 
அல்லாஹ் சொல்கின்றான் ஹதீஸ் குத்ஸி. இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள். அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.  12
 
يا عِبَادِي لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا في صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فأعْطَيْتُ كُلَّ إنْسَانٍ مَسْأَلَتَهُ، ما نَقَصَ ذلكَ ممَّا عِندِي إلَّا كما يَنْقُصُ المِخْيَطُ إذَا أُدْخِلَ البَحْرَ 
 
அல்லாஹ் சொல்கின்றான் என்னுடைய அடியார்களே! என்னுடைய அடியார்களே! உங்களுடைய முன்னோர்களிலிருந்து பின்னோர் வரை, உங்களுடைய மனிதர்களிலிருந்து ஜின்கள் வரை, எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரே மைதானத்தில் ஒன்று கூடி என்னிடத்திலே அவர்களுடைய தேவைகளை எல்லாம் தங்கு தடையில்லாமல் அவர்களுடைய ஆசை தீர எல்லாவற்றையும் என்னிடத்திலே கேட்டுவிட்டு. அவர்கள் கேட்டதையெல்லாம் நான் அவர்களுக்கு கொடுத்துவிடுகிறேன். அப்படி கொடுத்து விட்டாலும் என்னிடத்தில் இருக்கக்கூடிய கஜானாவில் என்ன குறைவு ஏற்படும் தெரியுமா? ஓர் ஊசியை ஒரு கடலில் நுழைக்கப்பட்டால் அந்த ஊசியின் முனை கடல் நீரிலிருந்து எவ்வளவு குறைக்குமோ அவ்வளவு தான். ஏதாவது குறைக்குமா? கடல் நீரிலிருந்து ஊசியின் நுனி ஒரு அளவை குறைக்குமா?
 
சிந்தனையாளர்களே! சொல்லுங்கள். குறைக்காது. அல்லாஹ் சொல்கின்றான். அப்படித்தான் அவனுடைய கஜானாவின் விசாலம். அப்படிப்பட்ட தயாளமிக்க அந்த இறைவன் தன்னை புகழ்ந்து கேளுங்கள் என்று கூறுகின்றான்.
 
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا 
 
பொருள்: அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள் (-அவனிடம் துஆ கேளுங்கள்). (அல்குர்ஆன் 7 : 180)
 
அல்லாஹ்வின் அழகிய பெயர்களைச் சொல்லி அவனிடத்திலே கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான்.
 
உங்களுக்கு செல்வம் தேவையா يا مغني يا غني يا وهاب செல்வத்தை கொடுப்பவனே எனக்கு செல்வத்தைக் கொடு.
 
قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (35)
 
சுலைமான் அலைஹிவஸல்லம் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். யாவஹ்ஹாப்! வாரி வாரி வழங்கக்கூடியவனே எனக்கு ஒரு ஆட்சியை கொடு என்பதாக. அல்லாஹ் அவர்களுக்கு ஆட்சியை கொடுத்தான். நபி சுலைமான் அலைஹிஸலாம் அவ்லியாக்களிடத்தில் கேட்கவில்லை. 13
 
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (83) فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ 
 
وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ (84)
 
நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். யா அல்லாஹ் கஷ்டத்திற்கு ஆளாகி விட்டேன். அன்த அர்ஹமுர் ராஹிமீன். கருணையாளர்களுக்கு எல்லாம் கருணையாளனே! எனக்கு நிவாரணத்தை கொடு. அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் எந்த அவுலியாக்கள் இடத்திலும் சொல்லவில்லை. 14
 
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87)
 
 فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ (88)
 
நபி யூனுஸ் அலைஹிஸ்ஸல்லம் மீன் வயிற்றிலே மாட்டிக்கொண்டார்கள். என்ன செய்தார்கள்? லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக இன்னி குன்து மினல்லாளிமீன். சுபஹானல்லாஹ்! யா அல்லாஹ்! நான் தப்பு செய்துவிட்டேன். எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்னை மன்னித்துவிடு என்று கேட்டார்கள். அல்லாஹ் மீன் வயிற்றிலிருந்த அவர்களைப் பாதுகாத்தான். 15
 
وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ (89) فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ
 
 إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ (90) (سورة الأنبياء)
 
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يَامَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (37)  هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (38) فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِنَ الصَّالِحِينَ (39) (سورة آل عمران)
 
ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் குழந்தை இல்லாமல் இருந்தார்கள். மர்யமை பார்க்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உணவு தருகிறான். எங்கிருந்து உணவு வருகிறது? மரியம் இடத்திலே கேட்கிறார்கள். நான் உனக்கு உணவைக் கொண்டு வருவதற்கு முன்பாக இந்த உணவை உனக்கு யார் கொடுத்தார்கள். மர்யம் அலைஹிவஸ்ஸலாம் சொல்கிறார்கள் அல்லாஹ் கொடுத்தான் என்று. 
 
இந்த உணவு யார் கொடுத்தது? அல்லாஹ் கொடுத்தது. அப்பொழுது ஸகரிய்யா நபி துஆ செய்கிறார்கள். 
 
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
 
இறைவா எனக்கு ஒரு குழந்தையைக் கொடு! அல்லாஹ் ஒரு குழந்தையை கொடுத்தான். நபி யஹ்யா அலை அவர்களை. 16
 
நபிமார்கள் யாரிடம் கேட்டார்கள் குழந்தையை. குழந்தையை அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
 
முஸ்லிம் சமுதாயமே! இவ்வாறு குர்ஆன் நமக்கு சொல்கிறது. ஆனால் நீங்கள் யாரிடம் குழந்தையை கேட்கிறீர்கள்? அவ்லியாக்களிடத்திலே குழந்தையை கேட்கிறீர்கள். நபி சுலைமான் அலைஹிஸ் ஸலாம் அல்லாஹ்விடத்திலே ஆட்சியை கேட்டார்கள். நீங்கள் ஆட்சி அதிகாரத்தை, கண்ணியத்தை செல்வத்தை, அவ்லியாக்களிடத்திலே கேட்கிறீர்கள். நபி அய்யூப் அலைஹிஸ் ஸலாம் தனது நோய்களை அல்லாஹ்விடத்திலே நீக்க கூறினார்கள். நீங்கள் அவுலியாக்கள் இடத்திலே நீக்க கூறுகிறீர்கள். நபி யூனுஸ் தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை அல்லாஹ்விடத்தில் கூறுகிறார்கள். நீங்கள் யாரிடத்தில் செல்கிறீர்கள்? அவ்லியாக்களிடத்தில் செல்கிறீர்கள். நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரிடத்திலேதனது தேவையை கேட்டார்கள். அல்லாஹ்விடம் கேட்டார்கள். அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், கஷ்டப்படுத்தப்பட்டார்கள், சிரமப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் யாரிடத்தில் முறையிட்டார்கள். அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.
 
யாஅல்லாஹ் பலவீனமானவர்களின் இறைவனே! அன்த ரப்பீ. நீதான் என்னுடைய இறைவன். உன்னிடத்தில் நான் கேட்கிறேன்.
 
நமக்கு யாருங்க ரப்பு? யாரு ரப்பு? அல்லாஹ்!
 
யாரிடத்தில் கேட்க வேண்டும்?
 
அந்த அல்லாஹ்விடத்தில்.
 
யாரிடத்தில் பிரார்த்திக்க வேண்டும்?
 
அந்த அல்லாஹ்விடத்தில்.
 
அவன் சொல்கின்றான்: 
 
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
 
பொருள்: எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். (அல்குர்ஆன் 65 : 3)
 
நீ அல்லாஹ்வை நம்பினால் அந்த அல்லாஹ் உனக்கு போதுமானவன்.
 
أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ
 
பொருள்: தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (அல்குர்ஆன்39 : 36) 
 
அல்லாஹ் உனக்கு போதுமானவனாக இல்லையா? அல்லாஹ் போதுமானவனாக இல்லையா?
 
يَاصَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39)
 
பொருள்: சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா? (அல்குர்ஆன் 12 : 39)
 
எத்தனை குட்டி குட்டி அவ்லியாக்கள்!? இவர்கள் சிறந்தவர்களா? அல்லது ஒரே அல்லாஹ் சிறந்தவனா? அடக்கி ஆளக்கூடிய அந்த ஓர் இறைவன் சிறந்தவனா எத்தனை பேரிடம் போகிறார்கள்?
 
நாகூர்ல சரியா வரவில்லையா ஏர்வாடிக்கு போகிறார்கள். அங்கேயும் சரியா வரவில்லையா, train book பண்ணி நேராக அஜ்மீருக்கு போ. அப்படியும் சரியா வரலையா டெல்லிக்கு போ! இப்படி சுற்றிக் கொண்டே அலைகிறார்கள்.
 
அல்லாஹ் கேட்கிறான்: ஒரே அல்லாஹ்விடத்தில் வந்துவிடு! எல்லாமே உனக்கு தீர்ந்துவிடும்.
 
அந்த அல்லாஹ் ஒருவன் போதுமானவன். நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு, நம்முடைய கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு.
 
அன்பிற்குரியவர்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்குத் தெளிவான மார்க்கத்தை கொடுத்திருக்கின்றான். இந்த தெளிவான மார்க்கத்திற்கு பிறகு வழிகேட்டை நாம் விலைக்கு வாங்க வேண்டாம். இந்த கல்விக்குப் பிறகு நாம் அறியாமையை விலைக்கு வாங்க வேண்டாம். சொர்க்கத்தை அல்லாஹ் நமக்கு கொடுக்க காத்திருக்க, அந்த சொர்கத்தை விட்டுவிட்டு நரகத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.
 
அல்லாஹ் அவனுடைய அன்பை அவனுடைய வழிபாடுகளின் மூலம் கொடுக்க காத்துக்கொண்டிருக்க, அந்த அன்பை விட்டு விட்டு அவனுக்கு இணைவைத்து அவனுடைய கோபத்தை நாம் விலைக்கு வாங்க வேண்டாம்.
 
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!
 
அன்பிற்குரியவர்களே! மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்! சிந்திக்க சொல்லுங்கள்!
 
இந்தக் குர்ஆனைப் படியுங்கள்!
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலை படியுங்கள்!
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு நேர்வழி காட்டுவானாக!
 
என்னுடைய வார்த்தையில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அல்லாஹ் மன்னிப்பானாக!
 
நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள்!
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறியிருக்க கூடிய நல்ல விஷயங்களை ஏற்று நடப்போமாக!
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி இருக்கக்கூடிய நேரான வழியில் நடப்போமாக!
 
அந்த நேரான வழியில் நடந்து அல்லாஹ்விடத்திலே அன்பை பெற்ற உத்தம ஸஹாபாக்கள், நல்லோர்கள், மற்றும் இறைநேசர்களுடைய பாதையிலே சென்று அந்த அல்லாஹ்வுடைய அன்பை நாம் அடைவோமாக!
 
யா அல்லாஹ்! உன்னுடைய அச்சத்தை நீ எங்களுக்கு தா! உன்னுடைய பயத்தை எங்களுக்கு நீ தா! பாவத்திலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்! சொர்க்கத்தை அடைய நல்ல அமல்களை எங்களுக்குத் தா! நரக நெருப்பிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உண்டான இறையச்சத்தை தா! அல்லாஹ்வே! ஈமானை எங்களுக்கு சரிப்படுத்து. எங்களுடைய ஒழுக்கத்தை நீ சீர்படுத்து. எங்களுடைய இறைநம்பிக்கை நீ சீர்படுத்து. எங்களுடைய இம்மை மறுமையை பிரச்சினைகளை நீ சரிப்படுத்து. எங்களுக்கு பாதுகாப்பு கொடு. எங்களுடைய உயிர் பொருளுக்கு, எங்கள் உடமைகளுக்கு நீ பாதுகாப்பை கொடு. எங்களுக்கு மத்தியில் சுமுகமான, ஒற்றுமையான, அன்பான, ஒழுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்து!
 
யா அல்லாஹ் உன்னிடத்தில் நாங்கள் வேண்டுகின்றோம்.
 
أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هوالغفور الرحيم
 
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
 
 
 
குறிப்புகள்
 
குறிப்பு 1).
 
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى في ظِلِّهِ يَومَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إمَامٌ عَدْلٌ، وشَابٌّ نَشَأَ في عِبَادَةِ اللَّهِ، ورَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، ورَجُلَانِ تَحَابَّا في اللَّهِ، اجْتَمعا عليه وتَفَرَّقَا عليه، ورَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وجَمَالٍ فَقالَ: إنِّي أَخَافُ اللَّهَ، ورَجُلٌ تَصَدَّقَ بصَدَقَةٍ فأخْفَاهَا حتَّى لا تَعْلَمَ شِمَالُهُ ما تُنْفِقُ يَمِينُهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 1423 | خلاصة حكم المحدث : [صحيح] | التخريج :أخرجه البخاري (1423) واللفظ له، ومسلم (1031) |
 
குறிப்பு 2).
 
تَدنو الشَّمسُ يومَ القيامةِ على قَدْرِ مِيلٍ، ويُزادُ في حَرِّها كذا وكذا، يَغلي منها الهامُ كما تَغلي القُدورُ، يَعرَقونَ فيها على قَدْرِ خَطاياهم؛ منهم مَن يَبلُغُ إلى كَعبَيه، ومنهم مَن يَبلُغُ إلى ساقَيه، ومنهم مَن يَبلُغُ إلى وَسَطِه، ومنهم مَن يُلجِمُه العَرَقُ. الراوي : أبو أمامة الباهلي | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج المسند | الصفحة أو الرقم : 22186 | خلاصة حكم المحدث : إسناده قوي | التخريج :أخرجه أحمد (22186) واللفظ له، والطبراني (8/222) (7779)، وابن عساكر في ((تاريخ دمشق)) (49/102)
 
குறிப்பு 3).
 
عن عبدِ اللهِ بنِ مسعودٍ في قولِهِ تعالى :  يَوْمَ تُبَدَّلُ الأَرْضُ غَيْرَ الأَرْضِ  الآية  (سورة إبراهيم الآية 48) قال : تُبدلُ الأرضُ أرضًا كأنَّها فضةٌ لم يُسفكْ فيها دمٌ حرامٌ ولم يُعملْ عليْها خطيئةٌ. الراوي: عمرو بن ميمون | المحدث: ابن حجر العسقلاني | المصدر:  فتح الباري لابن حجر الصفحة أو الرقم:  11/383 خلاصة حكم المحدث: رجاله رجال الصحيح ، وهو موقوف؛ [و] من وجه آخر مرفوعا
 
من موقع الألوكة
 
قال الله - تعالى -: ﴿ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَوَاتُ ﴾ [إبراهيم: 48]، هذه الآية تدلُّ على أن الأرض والسموات تتبدَّل يوم القيامة، ولكن كيف تتبدَّل؟ هل تتبدَّل صفاتها؟ أم هل تتبدل عينُها؟ هناك قولانِ لأهل العلم: الأول: أنه تتبدَّل صفاتها، فتسوَّى المرتفعات، وتُنسَف الجبال، وتُمَد الأرض، وهو مَرْوِي عن عبدالله بن عباس، وعبدالله بن عمر. الثاني: أنه تتبدَّل عينها؛ أي: حقيقتها، أي: تُزَال بالكلية، وهو مَرْوِي عن عبدالله بن مسعود، وأبي هريرة، وأبي بن كعب، وأنس بن مالك، وعلي بن أبي طالب، وسعيد بن جبير، وغيرهم، وهو الراجح الظاهر من الأدلة؛ فعن ثوبان، قال: كنت قائمًا عند رسول الله - صلى الله عليه وسلم - فجاءه حبرٌ من أحبار اليهود، فقال: السلام عليك... وذكر الحديث، وفيه: فقال اليهودي: أين يكونُ الناس يوم تبدَّل الأرض غير الأرض والسموات؟ فقال رسول الله - صلى الله عليه وسلم -: ((هم في الظلمة دون الجسر كما في صحيح مسلم 315)). قال القرطبي: "فهذه الأحاديث تنصُّ على أن السموات والأرض تبدَّل وتزال، ويخلق الله أرضًا أخرى، ويكون الناس عليها بعد كونهم على الجسر"كما في تفسير القرطبي (9/311 - 312). قلت: وأما ما روي عن ابن عباس وعبدالله بن عمر، فهذا أمر غيبي، ومعلوم أنهما كانا يأخذان عن أهل الكتاب؛ فحديثهما لا يأخذ حكم الرفع، والله أعلم.
 
• وإلى أي شيء تتبدل الأرض؟ فيه أقوال، منها: 1- أنها تتبدَّل إلى أرض بيضاء، وهو قول ابن مسعود. 2- أنها تتبدَّل إلى نار، وهو قول أبي بن كعب.3- أنها تتبدَّل إلى فضة، وهو قول أنس بن مالك.4- أنها تتبدَّل إلى خبزة بيضاء يأكل المؤمن من تحت قدميه، وهو قول أبي هريرة، وسعيد بن جبير، وهو الأقرب للصواب، والله أعلم؛ وذلك لما ورد عن أبي سعيد الخدري قال: قال النبي - صلى الله عليه وسلم -: ((تكون الأرض يومَ القيامة خبزةً واحدةً، يتكفؤها الجبَّار بيده، كما يكفأ أحدكم خبزته في السفر، نزلاً لأهل الجنة))، فأتى رجل من اليهود، فقال: بارك الرحمن عليك يا أبا القاسم، ألا أخبرك بنزلِ أهل الجنة يوم القيامة؟ قال: ((بلى))، قال: تكون الأرض خبزةً واحدةً - كما قال النبي - صلى الله عليه وسلم - فنظر النبي - صلى الله عليه وسلم - إلينا - ثم ضحك حتى بدتْ نواجذه كما في صحيح البخاري (6520)، وصحيح مسلم (2792)
 
குறிப்பு 4).
 
عينانِ لا تُصيبهما النَّارُ : عينٌ بكت من خشية اللهِ ، و عينٌ باتت تحرسُ في سبيلِ اللهِ. الراوي: عبدالله بن عباس | المحدث: الألباني | المصدر:  صحيح الجامع الصفحة أو الرقم:  4112 خلاصة حكم المحدث: صحيح
 
عَينانِ لا تمَسَّهما النَّارُ : عينٌ بكت من خشيةِ اللهِ ، وعينٌ باتت تحرسُ في سبيل اللهِ الراوي : عبدالله بن عباس | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 1639 | خلاصة حكم المحدث : حسن | 
 
حُرِّمَ على عَيْنَيْنِ أنْ تَنالُهُما النارُ : عينٍ بَكَتْ من خَشْيَةِ اللهِ ، وعينٍ باتَتْ تَحْرُسُ الإسلامَ أَهْلهُ مِنَ الكُفْرِ . الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترغيب | الصفحة أو الرقم : 1233 | خلاصة حكم المحدث : صحيح لغيره | التخريج :أخرجه البخاري في ((التاريخ الكبير)) (9/50)، والحاكم (2431) واللفظ لهما، وعبد بن حميد في ((مسنده)) (1445) مطولاً 
 
குறிப்பு 5). 
 
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ  بِيَدِكَ الْخَيْرُ  إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26) سورة آل عمران
 
குறிப்பு 6).
 
قُلِ الْحَمْدُ لِلَّهِ وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى آللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ (59) أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ لَكُمْ مِنَ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَنْ تُنْبِتُوا شَجَرَهَا أَإِلَهٌ مَعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ (60) أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَهٌ مَعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ (61) أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ (62) أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ (63) أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (64) قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ (65) بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ بَلْ هُمْ فِي شَكٍّ مِنْهَا بَلْ هُمْ مِنْهَا عَمُونَ (66)
 
குறிப்பு 7).
 
مَنِ اقْتَطَعَ شِبْرًا مِنَ الأرْضِ ظُلْمًا، طَوَّقَهُ اللَّهُ إِيَّاهُ يَومَ القِيَامَةِ مِن سَبْعِ أَرَضِينَ. الراوي : سعيد بن زيد | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1610 | خلاصة حكم المحدث : [صحيح]
 
குறிப்பு 8).
 
- ثلاثةٌ لا تُرَدُّ دعوتُهم: الصَّائمُ حتَّى يُفطِرَ والإمامُ العَدلُ ودعوةُ المظلومِ. الراوي: أبو هريرة | المحدث: ابن حبان | المصدر:  صحيح ابن حبان |الصفحة أو الرقم:  3428 | خلاصة حكم المحدث: أخرجه في صحيحه
 
 ثلاثةٌ لا تُرَدُّ دعوتُهم الإمامُ العادلُ والصَّائمُ حتَّى يُفطِرَ ودعوةُ المظلومِ تُحمَلُ على الغمامِ وتُفتَحُ لها أبوابُ السَّماءِ ويقولُ الرَّبُّ وعزَّتي لأنصرُنَّك ولو بعد حينٍ الراوي : أبو هريرة | المحدث : الذهبي | المصدر : المهذب | الصفحة أو الرقم : 3/1272 | خلاصة حكم المحدث : عن سعد وهو ثقة ورواه أبو جعفر عن أبي هريرة ولم يذكر الصائم | التخريج :أخرجه الترمذي (2526)، وابن ماجه (1752)، وأحمد (8030) واللفظ له.
 
குறிப்பு 9). 
 
مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
 
பொருள்: இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' (அல்குர்ஆன் 5 : 32)
 
குறிப்பு 10). 
 
ألا من ظلم معاهدًا أو انتقصه أو كلفه فوق طاقتِه أو أخذ منه شيئًا بغيرِ طيبِ نفسٍ فأنا حجيجُه يوم القيامةِ وأشار رسولُ اللهِ صلى اللهُ عليهِ وسلَّمَ بأصبعِه إلى صدرِه ألا من قتل معاهدًا له ذمةُ اللهِ وذمةُ رسولِه حرم اللهُ عليه ريحَ الجنةِ وإن ريحَها لتوجدُ من مسيرةِ سبعين خريفًا. الراوي: - | المحدث: السخاوي | المصدر:  الأجوبة المرضية | الصفحة أو الرقم:  2/436 | خلاصة حكم المحدث: إسناده جيد
 
مَن قَتَلَ مُعاهَدًا لَمْ يَرِحْ رائِحَةَ الجَنَّةِ، وإنَّ رِيحَها تُوجَدُ مِن مَسِيرَةِ أرْبَعِينَ عامًا. الراوي : عبدالله بن عمرو | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 3166 | خلاصة حكم المحدث :  صحيح
 
குறிப்பு 11).
 
لِكُلِّ غادِرٍ لِواءٌ يَومَ القِيامَةِ، يُرْفَعُ له بقَدْرِ غَدْرِهِ، ألا ولا غادِرَ أعْظَمُ غَدْرًا مِن أمِيرِ عامَّةٍ. الراوي : أبو سعيد الخدري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1738 | خلاصة حكم المحدث :  صحيح
 
 
குறிப்பு : 12). 
 
عَنِ النبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فِيما رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أنَّهُ قالَ: يا عِبَادِي إنِّي حَرَّمْتُ الظُّلْمَ علَى نَفْسِي، وَجَعَلْتُهُ بيْنَكُمْ مُحَرَّمًا، فلا تَظَالَمُوا، يا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إلَّا مَن هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ، إلَّا مَن أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يا عِبَادِي كُلُّكُمْ عَارٍ، إلَّا مَن كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يا عِبَادِي إنَّكُمْ تُخْطِئُونَ باللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يا عِبَادِي إنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي، فَتَنْفَعُونِي، يا عِبَادِي لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا علَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنكُمْ، ما زَادَ ذلكَ في مُلْكِي شيئًا، يا عِبَادِي لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا علَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، ما نَقَصَ ذلكَ مِن مُلْكِي شيئًا، يا عِبَادِي لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا في صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فأعْطَيْتُ كُلَّ إنْسَانٍ مَسْأَلَتَهُ، ما نَقَصَ ذلكَ ممَّا عِندِي إلَّا كما يَنْقُصُ المِخْيَطُ إذَا أُدْخِلَ البَحْرَ، يا عِبَادِي إنَّما هي أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إيَّاهَا، فمَن وَجَدَ خَيْرًا، فَلْيَحْمَدِ اللَّهَ وَمَن وَجَدَ غيرَ ذلكَ، فلا يَلُومَنَّ إلَّا نَفْسَهُ.وفي روايةٍ: إنِّي حَرَّمْتُ علَى نَفْسِي الظُّلْمَ وعلَى عِبَادِي، فلا تَظَالَمُوا. الراوي : أبو ذر الغفاري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2577 | خلاصة حكم المحدث :  صحيح
 
குறிப்பு 13)
 
قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (35)
 
பொருள்: ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 38 : 35) 
 
குறிப்பு 14).
 
ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21 : 83)
 
குறிப்பு 15). 
 
(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.
 
நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம். (அல்குர்ஆன் 21 : 87, 88)
 
குறிப்பு: 16
 
ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டுவிடாதே! நீயோ வாரிசாகக்கூடியவர்களில் மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில், நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள். (அல்குர்ஆன் 21 : 89, 90)
 
ஆகவே, அவருடைய இறைவன் அதை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதை வளரச் செய்து அதை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு ‘‘மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)'' என்று கேட்பார். அதற்கவள் ‘‘இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகிறது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கிறான்'' என்று கூறுவாள். (அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து ‘‘என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவன்'' என்று கூறினார். ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3 : 37-39)
 
குறிப்பு 17).
 
اللَّهُمَّ إليكَ أشْكو ضَعفَ قُوَّتي وقِلةَ حيلَتي وهَواني على الناسِ يا أرحَمَ الراحِمينَ، أنتَ أرحَمُ الراحِمينَ، وأنتَ ربُّ المُستَضعَفينَ، إلى مَن تَكِلُني إلى عَدُوٍّ يَتَجَهَّمُني يَلْقاني بالغِلْظةِ والوَجهِ الكَريهِ، أمْ إلى صَديقٍ قَريبٍ مَلَّكْتَه أمْري، إنْ لم يكُنْ بكَ غَضَبٌ عليَّ فلا أُبالي، غيرَ أنَّ عافيتَكَ أوسَعُ لي، أعوذُ بنورِ وَجْهِكَ الذي أضاءَتْ له السمَواتُ، وأشرَقَتْ له الظلُماتُ، وصلَحَ عليه أمرُ الدُّنيا والآخِرةِ أنْ يَنزِلَ بي غضَبُكَ، أو يَحِلَّ بي سَخَطُكَ، ولكَ العُتْبى حتى تَرْضى، ولا حَولَ ولا قُوةَ إلَّا بكَ. الراوي : عبدالله بن جعفر | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج زاد المعاد | الصفحة أو الرقم : 1/96 | خلاصة حكم المحدث : رجاله ثقات إلا أن فيه تدليس ابن إسحاق
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/