HOME      Lecture      இஸ்லாம் கூறும் சமூக நல்லொழுக்கம் | Tamil Bayan - 007   
 

இஸ்லாம் கூறும் சமூக நல்லொழுக்கம் | Tamil Bayan - 007

           

இஸ்லாம் கூறும் சமூக நல்லொழுக்கம் | Tamil Bayan - 007


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
இஸ்லாம் கூறும் சமூக நல்லொழுக்கம்
 
இஸ்லாம் கூறும் சமூக நல்லொழுக்கங்கள் என்ற தலைப்பிலே அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு பின்பற்ற கூறியிருக்கும் உயர்ந்த நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் பற்றிப் பேச இருக்கின்றோம். பேசும் நற்பண்புகளை பற்றியும், ஒழுக்கங்களைப் பற்றியும் நாம் கவனத்துடன் கேட்டு அதை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக! நல்லருள் வழங்குவானாக! நம்முடைய குணங்களை அல்லாஹ் சீர்படுத்துவாயாக! 
 
அன்பிற்குரியவர்களே! இந்த சமுதாயத்திலே பல விஷயங்களைப்பற்றி, புரட்சி, எழுச்சி, ஒரு மறுமலர்ச்சி ஏற்படுவதை பார்க்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். வரவேற்கத்தக்கது. வரவேற்கிறோம். இஸ்லாம் எந்த அளவிற்கு கொள்கைகள், வணக்க வழிபாடுகள், இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறதோ, அதே அளவிற்கு அதைவிட எவ்வித குறையும் இல்லாமல் தங்களது ஒழுக்கங்களை, பண்புகளைச் சீர்படுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்களுக்கு வலியுறுத்திக் கூறுகின்றது. ஒருவருடைய தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், இன்னும் கொள்கை சீராகி விட்டால், சரியாகி விட்டால் மட்டும் அவர் நாளை மறுமையிலே முழுமையான வெற்றியை அடைந்து கொள்ள முடியாது. மாறாக இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கிய அம்சமான நல்லொழுக்கத்தை பற்றியும் தெரிந்து, அந்த நல்லொழுக்கத்தை தனது வாழ்க்கையில் முழுமையாகக் கடைபிடித்து வந்தால் தான் அல்லாஹ்விடத்திலே நாளை மறுமையில் உண்மையான வெற்றியை அடைய முடியும். 
 
ஒரு முஸ்லிம் அவன் எந்த சமூகத்திற்கு மத்தியில் வாழ்ந்தாலும் சரி, அவன் உலகத்தில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவர்களுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் சரி, எந்த நிறத்தை சேர்ந்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் சரி, இஸ்லாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் நற்பண்புகளை கொண்டு அவர் மக்களிலே தனித்து காணப்படவேண்டும். இஸ்லாம் ஒரு முஸ்லிமிடத்திலே என்ன எதிர்பார்க்கிறது என்று சொன்னால், இஸ்லாமிய ஒழுக்கங்களை, பண்புகளை பின்பற்றி மக்களுக்கு மத்தியிலே தனித்து காணப்படவேண்டும். ஒரு முஸ்லிம் பற்றி அடையாளம் கூறும் போது அவருடைய ஒழுக்கங்கள் அங்கே மின்ன வேண்டும். அவருடைய ஒழுக்கங்களை பற்றி அங்கே மக்கள் திருப்திக்கொள்ள வேண்டும். இது ஒரு முஸ்லிமுடைய இயற்கை பண்பாக இஸ்லாம் அமைத்திருக்கிறது. 
 
ஒழுக்கமற்றவன், குணமற்றவன், நற்பண்புகள் அற்றவனாக ஒரு முஸ்லிமை கற்பனை செய்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நற்பண்புகளை குர்ஆனும், ஹதீசும் நமக்கு போதிக்கின்றன. கற்றுத் தேர்ந்தவர், ஒரு குர்ஆனின் மீது ஈடுபாடு உள்ளவர், குர்ஆனை தனது வாழ்க்கையின் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நபிமொழிகளை படித்து, பின்பற்றியவர், இந்த இஸ்லாமிய ஒழுக்கங்களை தனது வாழ்க்கையிலே எந்த நிலைமையில், எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சரி உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். எப்படி தொழுகைக்கு நற்கூலி இருக்கின்றதோ, நோன்பிற்கு நற்கூலி இருக்கின்றதோ, இறைவழிபாடுகளுக்கு நற்கூலியை அல்லாஹ் வைத்திருப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறான்.
 
அன்பிற்குரியவர்களே! அதே அளவிற்கு நற்பண்புகளுக்கும் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். நற்குணங்களுக்கு அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். தொழுகைக்கு நன்மை இருப்பது போன்று, அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைப்பது போன்று, நற்குணத்தால், நல்லொழுக்கங்களால், சிறந்த பண்புகளால் அல்லாஹ்விடத்திலே நாம் நற்கூலிகளை பெற்றுக்கொள்கிறோம். எப்படி இறை வழிபாட்டிலே ஒரு மனிதன் குறைவு செய்யும் போது, இறை வழிபாட்டிலே ஒரு மனிதன் அலட்சியம் செய்யும் போது, அவன் அல்லாஹ்விடத்திலே தண்டனைக்கு ஆளாகிறானோ, அல்லாஹ்வுடைய பழிப்புக்கு நாளை மறுமையிலே நஷ்டத்திற்கு ஆளாகிறானோ அது போன்றுதான் இந்த நற்குணத்திலும் அவன் குறைவு செய்யும்போது தண்டனைக்கு ஆளாகிறான். அல்லாஹ்வுடைய பழிப்புக்கு ஆளாகிறான். மறுமையிலே முழுமையான வெற்றியை அவன் அடைய முடியாது. 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒரு முஸ்லிமை எப்படி மார்க்கத்தில், இந்த சமூகத்தில் ஒழுக்கம் நிறைந்தவனாக ஆக்க வேண்டும் என்பதற்கு அவர்களுடைய முழு வாழ்க்கையிலும் கவனம் செலுத்தினார்கள். எங்கே தொழுகைக்கு ஆர்வமூட்டினார்களோ, எங்கே நோன்புக்கு ஆர்வமூட்டினார்களோ, ஹஜ்ஜுக்கு ஆர்வமூட்டினார்களோ, அதே இடங்களில், அதே சமயங்களில், நல்லொழுக்கங்களையும் அங்கே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டினார்கள். 
 
அவர்கள் ஆர்வமூட்டியது மட்டுமல்ல. அல்லாஹு அக்பர். மிகச்சிறந்த அழைப்பாளரான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் இந்த மார்க்கத்தில் முதலாவதாக தாங்கள் அந்த நற்குணங்களை பேணி வாழ்ந்தார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நற்குண புரட்சி அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து ஆரம்பமானது. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி கொள்கையில் புரட்சி ஏற்படுத்தினார்களோ, மனிதர்களுடைய சிந்தனைகளிலே புரட்சி ஏற்படுத்தினார்களோ, அதுபோன்று ஒழுக்கத்தில் புரட்சி ஏற்படுத்தினார்கள். சொன்னார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
 
عن أبى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق
 
சமூகமே நான் அனுப்பப்பட்டது எதற்காக தெரியுமா? நற்பண்புகளை முழுமை படுத்துவதற்காக, உயர்ந்த பண்புகளை முழுமை படுத்துவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன். தாங்கள் இறை தூதராக அனுப்பப்பட்ட நோக்கங்களிலே ஒன்று இந்த நற்குணங்களை சீர்படுத்துவது, செம்மைப் படுத்துவது, முழுமை படுத்துவது என்பதாக சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: பைஹகீ: 192/10.
 
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பத்து  ஆண்டுகள் பணிவிடை செய்தவர்கள். எத்தனை ஆண்டுகள்? பத்து ஆண்டுகள். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவிற்கு வருகிறார்கள். கண்ணியத்திற்குரிய உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா தங்களது பத்து வயதுடைய அனஸை அழைத்து வருகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது மகன். உங்களுக்கு பணிவிடையாளனாக எனது மகனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலிருந்து மதீனா ஹிஜ்ரத் செய்து வருவதை அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவரது தாயாரும் பல இரவுகளாக பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இரவு நேரங்களில் உம்மு சுலைம் அவர்கள், இஸ்லாத்தில் தான் தெரிந்ததை தன்னுடைய மகன் அனஸுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து தாங்கள் அறிந்து வைத்திருந்த நற்பண்புகளை, சிறப்புகளை தங்களது மகன் அனஸுக்கு சொல்லித்தருகிறார்கள். பத்து வயது முழுமையடைகிறது. ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குபா வந்துவிட்டார்கள். அடுத்து மதினாவிற்கு நுழைந்து விட்டார்கள் என்ற செய்தி தெரிந்த உடனே உம்மு சுலைம் ரலி அவர்களும், அனஸ் ரலி அவர்களும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் வருகிறார்கள். உம்மு சுலைம் சொல்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது எங்களுடைய அன்பு, இதோ அதற்குரிய அடையாளம். என்னுடைய பத்து வயது நிரம்பிய இந்த குழந்தை அனஸை நீங்கள் உங்களுக்கு பணிவிடையாளராக ஏற்றுக்கொள்ளுங்கள். 
 
அதற்கு பிறகு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள். அந்த பத்து ஆண்டுகளும் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்த நேரத்திலும் பிரியாமல் பணிவிடை செய்கிறார்கள். 
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் குறிப்பிடுகிறார்கள். எப்படி? பேனாவையும், பேப்பரையும் வைத்து அல்ல. தங்களது வாழ்க்கையிலே. பத்து வயது நிரம்பிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹு தஆலா முதிர்ந்த அனுபவத்தை, அறிவு வளர்ச்சியை, கல்வி ஞானத்தை, ஒழுக்க மாண்பை தருகிறான். யாரின் காரணமாக? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த தோழமையின் காரணமாக. அந்த சுஹுபத்தின் காரணமாக அனஸ் ரலி சொல்கிறார்கள்.
 
عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குணங்களில் பண்புகளில் மிக சிறந்த தரத்தில் இருந்தார்கள். மக்களிலே அவர்களை விட அழகிய பண்புடையவர்களை பார்க்க முடியாது. எல்லா மக்களிளும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பண்பு தனித்து தென்படும். அழகிய குணம் உடையவர்களாக இருந்தார்கள். எப்படி? இதை அவர்கள் ஒரு வாதமாக சொல்லவில்லை. ரசூல் ஸல் அவர்களுடைய செயலைப் பற்றி சொல்லுகிறார்கள்.
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5735
 
خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ وَاللَّهِ مَا قَالَ لِي أُفًّا قَطُّ وَلَا قَالَ لِي لِشَيْءٍ لِمَ فَعَلْتَ كَذَا وَهَلَّا فَعَلْتَ كَذَا
 
பத்து ஆண்டுகள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நான்  பணிவிடை செய்திருக்கிறேன்.எந்த ஒரு தருணத்திலும் என்னை அலட்சியப் படுத்தியது கிடையாது. என்னை ச்சீ என்று சொன்னது கிடையாது. என்னை அதட்டியது கிடையாது. 
 
நூல்: முஸ்லிம் எண்: 4269
 
அல்லாஹுஅக்பர் எப்படிப்பட்ட பண்பு பாருங்கள்? எப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை இருந்திருக்க வேண்டும்?
 
என்னை அதட்டியது கிடையாது. என்னை ச்சீ என்று சொன்னது கிடையாது. குழந்தை ஏதாவது செய்ய சொல்லி இருந்ததை செய்யாமல் இருந்திருக்கலாம். செய்யவேண்டாம் என்று சொல்லியிருந்ததை செய்திருக்கலாம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நேரத்திலும் கூட, ஏன் இதை செய்தாய் என்று என்னிடத்தில் கேட்டது கிடையாது. அவர்கள் விரும்பாத ஒன்றை நான் செய்திருந்தாலும் ஏன் இதை செய்து விட்டாய் என்று அதட்டியது கிடையாது. அவர்கள் செய்யச் சொல்லி நான் செய்யாமல் விட்டதைப் பார்த்து நீ இதை செய்து இருக்க வேண்டுமே, ஏன் இதை செய்யவில்லை என்றும் என்னை பழித்தது கிடையாது. 
 
எப்படிப்பட்ட ஒழுக்கம் பாருங்கள். அல்லாஹ் தஆலா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழு மனித சமுதாயத்திற்கும், அனைத்து மனித சமுதாயத்திற்கும் நல்லொழுக்கத்தின் பிரதிபலிப்பாக அடையாளமாக அல்லாஹ் ஆக்கினான். புகழ்ந்து சொல்கின்றான்.
 
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
 
நபியே! நிச்சயமாக நீங்கள் மிக மகத்தான நற்குணம் உடையவராக இருக்கிறீர். (அல்குர்ஆன் 68 : 4)
 
உறுதியிட்டு அல்லாஹ் சொல்கின்றான். அரபி அறியாதவர்கள் வேண்டுமானால் இந்த வசனங்களை புரிவதிலே குளறுபடிகள் செய்யலாம். வ இன்னக ல அலா குலுக்கின் அளீம். இப்படி சொல்லியிருக்கலாம் அன்த அலா குலுக்கின் அளீம் 
 
திட்டவட்டமாக நபியே நீர் உறுதியிட்டு சொல்லுங்கள். நற்பண்புகளில் தான் இருக்கிறேன். உங்களிடத்திலே நற்பண்புகளை தவிர வேறு எதுவும் கிடையாது. ஒருவரைப் பார்த்து நீங்கள் நல்ல குணத்தில் இருக்கிறீர் என்று சாதாரணமாகச் சொன்னால் நல்ல குணம் மிகைத்து காணப்படுகிறது. சில தவறான குணங்களும் இருக்கலாம் என்று அங்கே ஒரு கருத்து நிலவலாம். இதற்கு மாறாக நிச்சயமாக திட்டவட்டமாக உறுதியாக நற்குணத்திலே இருக்கிறீர்கள். உங்களிடம் நற்குணம் தான் இருக்கிறது என்று சொன்னால், அங்கே வேறு எந்த கெட்ட பண்புகளுக்கோ, தீய குணங்களுக்கோ, அறவே இடமில்லை. இதைத்தான் அல்லாஹ் சொல்கின்றான். தனது நபிக்கு பயன்படுத்துகின்றான். ஏன்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அப்படி அல்லாஹ்வால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டார்கள்.
 
எனது இறைவன் எனக்கு ஒழுக்கம் கற்பித்து கொடுத்தான். மிக அழகிய முறையிலே ஒழுக்கம் கற்பித்து கொடுத்தான். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களுக்கு எந்த சமயத்தில் உபதேசம் செய்தாலும் சரி, சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் இந்த நற்குணத்தை அடிப்படையாக வைத்தே சமூக உபதேசம் செய்தார்கள்.
 
மக்களிலே எப்பொழுது இந்த குறை பார்க்கிறார்களோ உடனடியாக அதை திருத்த முயற்சி செய்வார்கள். இன்று மக்கள் சிறந்தவர்கள் என்றால் சிறந்தவர்கள் என்பதற்காக இலக்கணத்தை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறந்தவருக்கு இலக்கணம் சொல்கிறார்கள்.
 
عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا
 
உங்களில் யார் குணத்தால் மிக அழகானவரோ, யாருடைய குணம் மிக அழகாக இருக்கிறதோ அவர்தான் உங்களில் சிறந்தவர்கள் என்று.
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு,நூல்: புகாரி, எண்:3295 
 
சிறப்பிற்கு என்ன? இஸ்லாம் என்ன சொல்கின்றது? தொழுகை, நோன்பு மட்டுமல்ல. அவற்றை கடைப்பிடிப்பதால் மட்டுமல்ல. நல்லொழுக்கங்களை உயர்ந்த பண்புடையவர்களாக உங்களை மாற்றுங்கள். அதைக் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய சான்றை பெற முடியும். நற்குணம் உடையவர்கள் சிறந்தவர்கள் என்று ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 
 
அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்க வேண்டுமா? ரசூலுடைய அன்பு கிடைக்க வேண்டுமா? நாளை மறுமையில் சொர்க்கத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு வஸல்லம் அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமா? ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். நற் பண்புகளை கடைபிடியுங்கள்.
 
سنن الترمذي - (7 / 309)
 
1941 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ وَالْمُتَفَيْهِقُونَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ فَمَا الْمُتَفَيْهِقُونَ قَالَ الْمُتَكَبِّرُونَ
 
யோசித்துப் பாருங்கள். இதைவிட மிகப் பெரிய அந்தஸ்து வேண்டுமா? பதவி நமக்கு வேண்டுமா? இரண்டு பதவிகள். 
 
1. அல்லாஹ்வுடைய தூதருடைய அன்பு. 
 
2.  நாளை மறுமையில் சொர்க்கத்தில் அவர்களுக்கு அருகாமையிலே இருக்கலாம்.       இந்த உலகத்திலே அவர்கள் வாழ்ந்த காலமும், நாம் வாழ்ந்த காலமும் அவற்றுக்கு இடையே நீண்ட இடைவெளி இருக்கலாம். ஆனால் நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த சொல்லின் படி நாம் அமல் நடந்தால், நமது குணங்களைச் சீர்படுத்திக்கொண்டால், செம்மைப்படுத்திக் கொண்டால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்த முறைப்படி நாம் அமைத்துக் கொண்டால், என்ன சான்றை சொல்கிறார்கள்? என்ன நற்செய்தியை சொல்கிறார்கள்? அல்லாஹு அக்பர்.
 
 
அன்பிற்குரியவர்களே! மதிப்பை விளங்காதவர்களாக இருக்கிறோம். தூதருடைய அன்பு கிடைத்தால் என்ன கிடைக்கும் என்ற அருமை தெரியாதவர்களாக இருக்கிறோம். ஒரு முதல் மந்திரிக்கோ, ஒரு அமைச்சருக்கோ, ஒரு எம்.எல்.ஏ.வுக்கோ நெருக்கமானால் என்ன கிடைக்கும் என்று மக்களுக்கு தெரியும். அதனால் அதற்காக இரவை பகலாக, பகலை இரவாக ஆக்குகிறார்கள். அல்லாஹு அக்பர். யார் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய அன்பு கிடைத்தால் அல்லாஹ்வுடைய அன்பு உறுதியானது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருப்தி கொண்டால் அல்லாஹ் திருப்தி கொள்வான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்புக்காக தோழர்கள் தங்களது உயிர்களைக் கொடுத்தார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.
 
குபைப் சொல்லுகிறார். மக்காவிலே படுகொலை செய்யப்படும்போது, அபூ சுஃப்யான் ஒரு வார்த்தை எதிர்பார்க்கிறார். குபைப் ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிடு. இந்த இடத்திலே முஹம்மது நிறுத்தப்படுவதை நான் விரும்புகிறேன். முடியாது. அது நடக்க முடியாது. ஆனால் நான் அதை விரும்புகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லிவிடு. உம்மை விடுதலை செய்து விடுகிறோம். குபைப் கைது செய்யப்பட்டு, மக்காவிலே காஃபிர்களால் படுகொலை செய்யப்படுவதற்காக ஹரமுக்கு வெளியிலே கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார். குறைஷிகள் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். 
 
குபைப் ஒரு திசையிலே, குறைஷிகள் ஒரு திசையிலே. அனைவருடைய கைகளிலும் அம்புகளும், ஈட்டிகளும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றன. குபைபின் உடலை துளைத்தெடுப்பதற்கு. இரண்டு ரக்அத் நிம்மதியாக தொழுதுவிட்டு வானத்தை நோக்குகிறார். அபூ சுஃப்யான் சொல்கிறார். குபைபே ஒரு வார்த்தை சொல்லிவிடு. குபைப் என்ன சொன்னார் தெரியுமா? 
 
அல்லாஹு அக்பர். அபூ சுஃப்யான், குறைஷிகளே கேட்டு கொள்ளுங்கள். நான் இந்த இடத்திலே அம்புகளால் துளைக்கப்பட்டு, எனது ஹபீப் முஹம்மது அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டில் இருக்கும் போது, ஒரு முள் அவர்களுடைய காலை தைப்பதை கூட என்னால் சகித்துக் கொள்ள முடியாது. யா அல்லாஹ் எனது சலாமை ஹபீபுக்கு எத்தி வை. எனது ஹபீபுக்கு எடுத்துச் சொல். அதே நேரத்திலே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அர்ஷின் அதிபதி குபைபுடைய ஸலாமை தூதர் நபி மதினாவில் இருக்க அவர்களுக்கு சொல்லுகின்றான். நபியே! ரசூலே! உமது தோழர் குபைப் படுகொலை செய்யப்படுகிறார். உமக்கு சலாம் சொல்கிறார் என்பதாக. சிந்தித்துப் பாருங்கள். எந்த தகுதி இது? இப்படிப்பட்ட தகுதி எதனால் கிடைத்தது? தூதரை நேசித்ததால். தூதர் மீது அன்பு வைத்ததால்.
 
مَا أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا
 
عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي
 
وَذَلِكَ فِي ذَاتِ الْإِلَهِ وَإِنْ يَشَأْ
 
يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ
 
நான் எங்கு கொலை செய்யப்பட்டால் என்ன? அல்லாஹ்வுடைய பாதையிலே கொலை செய்யப்படுகிறேன். (1)
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி, எண்: 2818  
 
அன்பு தோழர்களே! அல்லாஹ்வுடைய தூதருடைய அன்பு கிடைக்க வேண்டுமா? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
 
உங்களில் எனக்கு மிக விருப்பமானவர் மிக நேசத்திற்குரியவர் நாளை மறுமையில் எனக்கு மிக அருகாமையில் இருப்பவர்கள் யார் தெரியுமா. அஹாஸினகும் அஹ்லாகா. உங்களில் மிகச் சிறந்த குணம் உடையவர்கள் மிகச்சிறந்த ஒழுக்கங்களை நற்பண்புகளை உடையவர்கள். நற்பண்புகளை கடைப்பிடிப்பதற்கு, ஒழுக்கங்களைப் பேணுவதற்கு இதைவிட ஒரு சிறப்பு வேண்டுமா? இதை விட ஒரு சான்று வேண்டுமா? இதற்கு எதிராக ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படியும் எச்சரிக்கை செய்தார்கள்.
 
وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ وَالْمُتَفَيْهِقُونَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ فَمَا الْمُتَفَيْهِقُونَ قَالَ الْمُتَكَبِّرُونَ
 
நாளை மறுமையில் எனக்கு மிக வெறுப்பானவர் எனது கோபத்திற்குரியவர். என்னை விட்டு வெகு தூரம் உள்ளவர் யார் தெரியுமா? யார் உங்களிடையே வீண் பேச்சில் ஈடுபடுகிறாரோ, கெட்ட குணம் உடையவராக இருக்கிறாரோ, பெருமை உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தான். சிலரைப் பார்க்கலாம்.
 
மக்களை கவர வேண்டும் என்பதற்காக தங்களது பேச்சுக்களை அமைத்து பேசுவார்கள். அவர்களையும் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பட்டியலில் குறிப்பிடுகிறார்கள். சஹாபாக்கள் இருந்தவரை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டு, ஒழுக்கத்திற்கு உதாரணம் காட்டுவதற்கு தகுந்த சமுதாயமாக உருவாக்கினார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். சஹாபாக்களுக்கு மத்தியில் எல்லா நேரங்களிலும் இந்த நற்குணங்களை கடைப்பிடித்து சஹாபாக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களிடத்திலிருந்து ஒழுக்கத்தை படித்த சஹாபாக்கள் மற்ற சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஒழுக்கத்தை, குணத்தை, நற்பண்பை கடைபிடிப்பதிலே எப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நேரமாக இருந்தாலும் சரி அந்த நேரத்தில் எல்லாம் பொறுமை காத்து ஒழுக்கத்தின் நற்குணத்தை நிலைநாட்டினார்கள்.
 
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு மிகச்சிறந்த சம்பவம் பற்றி சொல்லி காண்பிக்கிறார்கள். ஒருமுறை மஸ்ஜிதுன் நபவியில் அதான் சொல்லப்பட்டு இகாமத் சொல்லப்படுகிறது. நபியவர்கள் தொழ வைப்பதற்காக அங்கே முஸல்லாவிற்கு வந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் ஒரு கிராமவாசி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சட்டையைப் பின்பக்கமாக பிடித்துக் கொள்கிறார். தொழுகைக்கு முன்பாக அவருடைய சில தேவைகளை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். தொழுகை நேரம் வந்தவுடன் தொழுது முடித்த பிறகு அவருடைய தேவையை நிறைவேற்றலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த உதவியை ஒதுக்கிவிட்டு, தொழுகைக்கு வந்து விட்டார்கள். 
 
இந்த கிராமவாசி ஏதோ சிந்தனையில் இருந்து விட்டு ஞாபகம் வந்தவுடன் திடீரென்று வருகிறார். அங்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டு விட்டது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஃப்ஃபுக்கு முன்னர் சென்று விடுகிறார்கள் தொழ வைப்பதற்காக. எந்த அளவுக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுடைய கைகள் எட்டும் அளவிற்கு, மக்களுடைய முறையீடுகள் எட்டும் அளவிற்கு, மக்களுடைய குரல் அளவிற்கு அவர்களுக்கு அருகாமையில் இருந்தார்கள்.
 
தங்களுக்கு என்று பாதுகாவலர்களையோ, தங்களை சந்திப்பதற்காக வேண்டி வரக்கூடிய மக்களை தடுத்து நிறுத்துவதற்காக வேண்டியோ யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு ஏழை குடிமகனுடைய முறையீட்டுக்கு மிக அருகாமையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள். அந்த அஃராபி, ஸஃப்ஃபை பிடித்துக் கொண்டு வருகிறார். பின் பக்கத்தில் இருந்து சட்டையைப் பிடித்துக் கொள்கிறார். அல்லாஹ்வுடைய தூதரே! இன்னும் கொஞ்சம் நேரம் தான் பாக்கி இருக்கிறது. எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி, அதையும் செய்து விட்டு அதற்கு அப்புறமாக தொழ வைத்துக்கொள்ளுங்கள். எப்படிப்பட்ட சூழ்நிலை பாருங்கள்! இகாமத் சொல்லப்பட்டு விட்டது. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தக்பீர் கட்டுவதற்கு தான் தாமதம். சட்டையைப் பிடித்துக் கொள்கிறார். அல்லாஹ்வின் தூதரே,
 
قال الألباني في " السلسلة الصحيحة " 5 / 129 :
 
أخرجه البخاري في " الأدب المفرد " ( 278 ) و في " التاريخ " ( 2 / 2 / 211 )
 
عن سحامة بن عبد الرحمن بن الأصم قال : سمعت أنس بن مالك يقول " ( فذكره )
 
" و جاءه أعرابي فأخذ بثوبه فقال : إنما بقي من حاجتي يسيرة ، و أخاف أنساها .
 
فقام معه حتى فرغ من حاجته ، ثم أقبل فصلى "
 
இன்னும் கொஞ்சம் தான் நீங்கள் எனக்கு செய்ய வேண்டிய உதவி. அதை முடித்து விடுங்கள். அதற்கு பிறகு தொழ வையுங்கள். நான் மறந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். ஏதோ சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகவோ, அல்லது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டுப் பெறுவதற்காக வேண்டியோ வந்திருக்கிறார். சொல்கிறார். அல்லாஹ்வுடைய தூதரே எனக்கு பயமாக இருக்கிறது. தொழுகைக்குள் நான் என்னுடைய அந்த தேவையை மறந்து விடுவேனோ என்று. எனக்கு இப்போது நிறைவேற்றுங்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், அப்படியே விட்டுவிட்டு, அவருடைய தேவையை முடித்துவிட்டு பிறகு வந்து தொழுகை நடத்துகிறார்கள். 
 
எப்படிப்பட்ட பண்பு. இன்று நமக்கு ஓய்வு இருந்தாலும், நேரம் இருந்தாலும் நம்முடைய அலட்சியத்தால், நம்முடைய சோம்பேறித்தனத்தால் எத்தனை ஏழைகளுடைய உதவியை தள்ளிப் போடுகிறோம் பாருங்கள். நமக்கு முடியும். நமக்கு நேரம் இருக்கிறது. வசதி இருக்கிறது. ஆனால் இதெல்லாம் நாம் இறங்கிப்போய் செய்தால் நம்முடைய கண்ணியம் என்ன ஆவது? அஸ்தஃபிருல்லாஹல் அளீம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட கண்ணியமானவர் யார் இருக்கமுடியும்? சொல்லுகின்றார்கள். 
 
சஹாபாக்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு எளிமையானவர்கள் என்று சொன்னால், அடிமைப் பெண்கள் வீடுகளிலே வேலை செய்யக்கூடிய கைதிகளாக வந்து அடிமையாக்கப்பட்ட பெண்கள் அல்லாஹ்வுடைய தூதர் வஸல்லம் அவர்களிடத்தில் வருவார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு இந்த இடத்திலே ஒரு உதவி இருக்கிறது. நீங்கள் தான் செய்தாக வேண்டும். வாருங்கள் என்று அழைத்துச் செல்வார்கள். அவர்களுடைய அந்த உதவியை செய்து முடித்துவிட்டு வரும் அளவிற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு பின்னால் சென்று விடுவார்கள். அல்லாஹு அக்பர்.
 
அன்பு சகோதரர்களே! காரணம் என்ன? இந்த நற்குணம் என்பது உலக வாழ்க்கையில் மட்டுமல்ல. இதனுடைய பிரதிபலிப்பு நாளை மறுமையில் தெரியும். இந்த நற்குணத்தை கடைபிடிப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் சாதாரணமானதல்ல. நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொல்லுகின்றார்கள். நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? தொழுகையும், நோன்பும், ஜக்காத்தும் மட்டும் போதுமானதல்ல.
 
 حديث أبي الدرداء أن النبي ﷺ قال: ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن الخلق، وإن الله يُبغض الفاحش البذيء، رواه الترمذي وقال: حديث حسن صحيح.
 
அல்லாஹ் அக்பர். அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். நாளை மறுமையில் ஒரு அடியானின் நன்மையின் தட்டை தக்கவைப்பது நற்குணத்தை போன்று வேறு எதுவும் இருக்க முடியாது.ஒரு முஃமினுடைய நன்மையின் தட்டை கணக்க வைக்கக்கூடிய அந்த ஆற்றல் நற்குணத்தில் இருப்பது போன்று வேறு எந்த அமலுக்கும் கிடையாது. அல்லாஹ் கூறுகின்றான். யார் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறாரோ, அல்ஃபாயிஸ் தீய குணம் உடையவராக இருக்கிறாரோ, மானக்கேடான விஷயங்களில், அசிங்கங்களில் ஈடுபடுகிறார்களோ, அல்பதீ தீய வார்த்தைகளை பேசுகிறார்களோ, கெட்ட வார்த்தைகளை பேசுகிறார்களோ, அவர்களை அல்லாஹ் வெறுக்கின்றான்.
 
அறிவிப்பாளர்: அபுத் தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 
 
நாளை மறுமையில் தராசினுடைய தட்டிலே முஃமினுடைய நல்ல அமல்கள் வைக்கப்படும்போது, சிறந்த குணத்தை போன்று அதிக கனமுள்ள ஒரு அமல் இருக்க முடியாது.
 
இன்று காபிர்களுடைய சூழ்நிலையில், மாற்றார்களுடைய சூழ்நிலையிலே வாழக்கூடிய முஸ்லிம்கள் அல்லது ஒழுக்க மற்றவர்களுக்கு மத்தியிலே வாழக்கூடிய மக்கள், அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து சிறந்தவர்களாகவும் உருவாக்குவதற்கு பதிலாக கலாச்சார பண்புகளை இவர்கள் உருவாக்கி விடுகிறார்கள். ஏனென்றால் நாங்கள் வாழக் கூடிய இடம் அப்படித் தானே பேசி பழகிவிட்டோம்.
 
அன்பிற்குரியவர்களே! இல்லை. இஸ்லாம் பழக்கங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லுகிறது. உங்களுடைய கொள்கைகளை மாற்றினால் மட்டும் போதாது. உங்களுடைய பண்புகளையும், இஸ்லாமிய பண்புகளாக மாற்றுங்கள். உங்களுடைய ஒழுக்கங்களையும் இஸ்லாமிய ஒழுக்கங்களாக மாற்றுங்கள். இஸ்லாமிற்கு என்று தனி ஒழுக்கம் இருக்கிறது. தனிக் கொள்கை எப்படி இருக்கின்றதோ அது போன்று தனி ஒழுக்கம் இருக்கின்றது. தனிப் பண்புகள் இருக்கிறது. அவர்கள் எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பழக வேண்டும்? என்பதற்கான இலக்கணம் இருக்கின்றன. அல்லாஹ் சொல்கின்றான்
 
وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ
 
நபியே! என் அடியாருக்கு சொல்லுங்கள். பேச்சில் மிக அழகியதையே பேச வேண்டும் என்று சொல்லுங்கள். (அல்குர்ஆன்: 17 : 53) 
 
இன்று பார்க்கிறோம். கெட்ட வார்த்தைகளை, எப்படிப்பட்ட அலட்சியமான வார்த்தைகளை, அசிங்கப்படுத்தும்படியான வார்த்தைகளை, உள்ளங்களை காயப்படுத்தும்படியான வார்த்தைகளை, மனதை நோகடிக்கும் வார்த்தைகளை முஸ்லிம்கள் தங்களுக்குள் பேசுகிறார்கள். அது பெற்றோர் பிள்ளைகளிடம் பேசினாலும் சரி, பிள்ளைகள் பெற்றோர்களிடம் பேசினாலும் சரி, கணவன் மனைவியிடம் பேசினாலும் சரி, மனைவி கணவனிடம் பேசினாலும் சரி, சகோதரன் சகோதரியிடம் பேசினாலும் சரி, நண்பர் நண்பரிடம் பேசினாலும் சரி, குற்றம் குற்றம் தான். அல்லாஹ் சபிக்கிறான்; கோபிக்கிறான்; யார் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களோ அவர்களை. நிறைய பேர்களை பார்க்கலாம். 
 
தொழுகையாளிகள், தொப்பி போட்டவர்கள், தாடி வைத்தவர்கள், தங்களை ஒழுக்கசாலிகள் என்று சொன்னவர்கள், ஹஜ்ஜுகளை முடித்தவர்கள், பள்ளிகளுக்கு முத்தவல்லிகளாக இருப்பவர்கள், சமூக இடத்தில் முக்கியஸ்தர் என்று போற்றப்படுபவர்கள் அவர்கள் தங்கள் காலங்களில் படித்த சக தோழர்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்தால் எப்படி பள்ளிக்கூடத்தில் கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருந்தார்களோ அப்படி பேசிக்கொள்வார்கள். பழைய நினைவுகள் என்று சொல்வார்கள். முடியாது 
 
சகோதரர்களே! பேசுவதற்கு அனுமதி இல்லை. ஒரு முஸ்லிமுடைய நாவிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தூய கலிமாவை பேசிய இந்த நாவில் இருந்து கெட்ட வார்த்தையை பேசுவதற்கு, தீய வார்த்தையை பேசுவதற்கு, அசிங்கமான சொல்லை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை. ஒரு தட்டில் ஒரு பக்கத்தில் சோறை வைத்து இன்னொரு பக்கத்தில் அசுத்தத்தை வைத்தால் சாப்பிட விரும்புவோமா? அல்லது ஒரு தட்டை அசுத்தத்திற்கு பயன்படுத்திய பிறகு அந்த தட்டில் ஒரு சுத்தமான உணவை வைத்தால் சாப்பிட மனசு வருமா? சொல்லுங்கள்.
 
இந்த நாவைக்கொண்டு இஸ்லாமிய தூய ஏகத்துவ கலிமாவை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்கிறோம். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொல்கின்றோம். சுபஹானல்லாஹ் என்று சொல்கிறோம். அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்கிறோம். அல்லாஹ்வை புகழ்கிறோமே அந்த நாவை அசிங்கப்படுத்தலாமா? அல்லாஹு அக்பர். யோசித்துப் பாருங்கள். இன்று சர்வசாதாரணமாக பள்ளியை விட்டு வெளியில் வரும்போது கெட்ட வார்த்தை பேசப்படுவதைப் பார்க்கிறோம். 
 
தீய வார்த்தை பேசப்படுவதை பார்க்கிறோம். உள்ளங்களை காயப்படுத்தும் வார்த்தைகள் பேசுவதை பார்க்கிறோம். அசிங்கமான வார்த்தைகள் கொச்சையான வார்த்தைகள் பேசப்படுவதை பார்க்கிறோம். அனுமதி இல்லை இஸ்லாத்திலே. அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் கோபிக்கின்றான்.
 
தீய வார்த்தைகள் அசிங்கமான வார்த்தைகள், கொச்சையான வார்த்தைகள் பேசுபவர்களை அல்லாஹ் சபிக்கிறான். அல்லாஹ் கோபப்படுகிறான். அல்லாஹ் வெறுக்கின்றான். 
 
மறுமையிலே நம்முடைய தராசினுடைய தட்டை கணக்க வைக்கக்கூடிய மிகச் சிறந்த அமல் என்ன? நற்குணம். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் உயர்த்துகிறார்கள். நற்குணத்தினுடைய தரத்தை உயர்த்துகிறார்கள். நீங்கள் எண்ணிக் கொள்ளாதீர்கள். இரவில் நீண்ட நேரம் நின்று தொழுவதோ, பெரும் தான தர்மங்களை செய்வதோ உங்களுடைய இறைநம்பிக்கையை முழுமைப்படுத்தி விடும் என்று. அது ஒரு பகுதி. உங்களுடைய இறை நம்பிக்கை முழுமை படுத்துவதற்கு உயர்ந்த தரத்தை நீங்கள் அடைவதற்கு அது ஒரு பகுதி. ஆனால் அதே சமயத்திலே அனைத்தையும் மறந்து விடாதீர்கள்.
 
سنن أبي داود - (12 / 292)
 
4062 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
 
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا
 
இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர் யார் தெரியுமா? யார் மிக சிறந்த குணம் உடையவராக இருக்கிறாரோ அவர்தான். இறைநம்பிக்கை முஃமீன்களிலே ஈமானால் இறை நம்பிக்கையால் முழுமை பெற்றவர்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத் எண்: 4062  
 
அவர்களிடத்தில் எந்த குறையும் இல்லை என்று. எப்பொழுது அல்லாஹ் சொல்லுவான் என்று சொன்னால் அவருடைய குணம் மிக அழகிய குணமாக இருந்தால், அவருடைய பண்பு மிக அழகிய பண்பாக இருந்தால். 
 
عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « إن الله ليبلغ العبد بحسن خلقه درجة الصوم والصلاة 
 
عَنْ عَائِشَةَ رَحِمَهَا اللَّهُ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ
 
மேலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;
 
நிச்சயமாக ஒரு இறைநம்பிக்கையாளர் தன்னுடைய நற்குனத்தால் பகலில் நோன்பு நோற்றவருடைய அந்தஸ்தையும் இரவில் நின்று வணங்கியவருடைய அந்தஸ்தையும் அடைகிறார்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், ஹாகிம் எண்: 147, 4165
 
இந்த நற்குணத்தால் நீங்கள் நாளை மறுமையிலே தொழுகை, அதிகமாக தொழுதால் அதிகமாக நோன்பு வைத்தால் என்ன அந்தஸ்தை அடைந்து கொள்ளலாமோ அந்த அந்தஸ்தை உங்களுடைய நற்குணத்தால் அறிந்து கொள்ளலாம். 
 
அல்லாஹ் அக்பர். எப்படிப்பட்ட நற்செய்தி பாருங்கள்? ரசூல் ஸல் சொன்னார்கள். நிச்சயமாக அடியான் தனது நற்குணத்தால் தொழுகை நோன்பினால் கிடைக்கும் அந்தஸ்துகளை பெற்றுக் கொள்கிறான். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு சமயத்திலும் இந்த நற்குணத்தைப் பற்றி தான் தங்களுடைய தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள். எல்லா சமயத்திலும் நற்குணத்திற்கென்று தனி ஒரு பகுதியை வைத்திருந்தார்கள். முக்கியத்துவம் கொடுத்தார்கள். அபூதர் ரலி அவர்களுக்கு ரசூல் ஸல் அவர்கள் எப்படி உபதேசம் செய்கிறார்கள் பாருங்கள்.
 
عن أنس قال : لقي رسول الله صلى الله عليه وسلم أبا ذر ، فقال : « يا أبا ذر ، ألا أدلك على خصلتين (1) هما أخف على الظهر ، وأثقل في الميزان من غيرهما ؟ » قال : بلى ، يا رسول الله قال : « عليك بحسن الخلق ، وطول الصمت ، فوالذي نفس محمد بيده ما عمل الخلائق عملا أحب إلى الله منهما » « لم يرو هذين الحديثين عن ثابت إلا بشار بن الحكم »
 
அபூதரே உனக்கு மிக உயர்ந்த இரண்டு பண்புகளை நான் சொல்லித் தரட்டுமா?
அபூதர் இரண்டு பண்புகளை சொல்லித்தருகிறேன். இந்த பண்புகள் கடைபிடிக்க மிக இலகுவானது தான். சிரமம் என்று எண்ணாதே. ஆனால் நாளை மறுமையிலே உனது அமல்கள் நிறுக்கப்படும்போது, உனது நல்லமல்களுடைய தட்டை கணக்க வைக்க மிக தகுதியானது அது போன்று ஒன்று இருக்காது. அது;
 
1. நற்குணம் 
 
2. நீண்ட நேரம் மவ்னமாக இருத்தல் 
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, எண்: 7304
 
அல்லாஹு அக்பர். எப்படிப்பட்ட உபதேசம் பாருங்கள். தங்களுடைய தோழர் அபூதரை அழைத்து அபூதரே! கேட்கிறார்கள். ஆர்வமூட்டுகிறார்கள். முதலிலே ஆர்வம் வேண்டும். மார்க்கத்தினுடைய ஆர்வம், தேட்டம் வர வேண்டும். இன்று நம்மிடத்தில் என்ன மார்க்க அறிவு இருக்கிறது? ஆனால் மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. அறிவு இருக்கிறது. குதர்க்கம் செய்வார்கள்? தர்க்கம் செய்வார்கள். போட்டி போடுவார்கள். இதைக் கொண்டு யாரும் நன்மையிலே முன்னேற முடியாது?
 
சகோதரர்களே! மார்க்கத்தை பின்பற்ற வேண்டும். அல்லாஹ்விற்கு அடிபணிய வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்குங்கள். மார்க்கத்தின் மீது பற்றை உண்டாக்குங்கள். எவ்வளவு நாம் விதண்டாவாதம் செய்வோமோ, குதர்க்கம் செய்வோமோ அந்த அளவிற்கு நம்முடைய உள்ளம் வறண்டு கொண்டு செல்லும்.உள்ளம் வறட்சியில் இருக்கும். ரசூல் ஸல் அவர்கள் தர்க்கம் செய்வதைக் கற்றுக் கொடுக்கவில்லை. தர்க்கம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். 
 
நீங்கள் உண்மையாளராக இருந்தால், தர்க்கத்தை விட்டால் உங்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்திலே நடு மத்தியிலே ஒரு மாளிகையை கட்டித் தருவான். அப்படி தர்க்கம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால் கூட அல்லாஹ் சொல்கின்றான்.
 
وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ
 
மிக அழகிய முறையில் தர்க்கம் செய்யுங்கள். அசிங்கமான வார்த்தைகளை, உள்ளங்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். ஏசாதீர்கள். திட்டாதீர்கள். (அல்குர்ஆன்: 29 : 46) 
 
ஒரு முஸ்லிமுடைய பண்பாக இருக்க முடியாது. முஸ்லிம் சபிப்பவனாக இருக்க மாட்டான். ஒரு முஸ்லிம் ஏசுபவனாக இருக்க மாட்டான். ஒரு முஸ்லிம் உள்ளத்தை காயப்படுத்துபவனாக இருக்க மாட்டான். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நிர்பந்தங்களிலே கிறிஸ்தவர்களுடன் தர்க்கம் செய்தார்கள். அல்லாஹ் இறக்கிய வசனங்களைக் கொண்டு அவர்களிடத்திலே வாதம் செய்தார்களே தவிர, அவர்களை ஏசவில்லை. அவர்களை திட்டவில்லை. அல்லாஹு அக்பர். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதருக்கு சொல்கிறார்கள். 
 
அபூதரே! இரண்டு குணங்களை உனக்கு சொல்லுகிறேன். நீ சுமப்பதற்கு அது மிக இலகுவானது. அதாவது உன்னால் பின்பற்ற முடியும். நீ முயற்சி செய்தால் அதை நீ கடைப்பிடிக்க முடியும். அதற்கென்று நான் இதை செய்ய முடியும் என்று நீ ஒரு சின்ன முயற்சி செய்தால் போதுமானது. உன்னால் செய்ய முடியும். ஆனால் நீ இலகுவானது என்பதால் இதனுடைய நன்மையும் சாதாரணமானது என்று நினைக்காதே. அந்த இரண்டு குணங்களை விட மற்ற என்னென்ன அமல்கள் இருக்குமோ, அவை அனைத்தையும் விட இந்த இரண்டு குணங்கள் நாளை மறுமையில் தட்டுகளை கனக்க வைக்கும்.
 
அபூதர் கேட்கிறார். பலா யாரசூலல்லாஹ், நாமாக இருந்தால் என்ன கேட்டிருப்போம்? ரசூல்லாஹ் சம்பாதிக்க ஏதாவது வழியை சொல்லுங்கள். ஏதாவது காசு பணத்தை பெருக்க வழியை சொல்லுங்கள். உங்கள் மார்க்கத்தைப் பற்றியோ, மறுமையைப் பற்றியோ, சொர்க்கத்தை பற்றியோ, அதைப்பற்றி எல்லாம் ஒரு உணர்வு இருந்தால் தானே. செத்த உணர்வுகளாக உள்ளங்களை கொண்டவர்களாக இருக்கிறோம். 
 
வணக்க வழிபாடுகளில் மோசடி. தொழிலில் மட்டுமல்ல அல்லாஹ்வை வழிபடுவதிலே மோசடி. நற்பண்புகளில் மோசடி. இப்படி மொத்த மோசடியின் உருவமாக முஸ்லிம்களில் பலர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட உடனே அபூதர் சொல்கிறார்கள். பலா யாரசூலுல்லாஹ். சொல்லி தரட்டுமா என கேட்கிறார்கள். சொல்லித்தாருங்கள் யாரசூலல்லாஹ். நபி ஸல் அவர்கள் சொன்னார்கள். 
 
1) அபூதர் அழகிய குணத்தை பிடித்துக் கொள். நற்குணத்திலே உறுதியாக இரு.
2) அதிகமான நேரம் அமைதியாக இரு. 
 
ஒரு மனிதனை அலங்கரிக்க கூடிய அழகிய நற்பண்புகள் இந்த இரண்டை போன்று வேறு எதுவும் கிடையாது. ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த வார்த்தை எவ்வளவு அழகாக ஆழமாக அமைந்து இருக்கிறது பாருங்கள். அபூதர் நற்குணத்தைப் பற்றிப் பிடித்துக் கொள். நீண்ட நேரம் அமைதியாக இரு. வீணாண பேச்சுகளைப் பேசாதே. 
 
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم قال : « إن من حسن إسلام المرء تركه مالا يعنيه » لم يرو هذا الحديث عن الزهري عن أبي سلمة إلا عبد الرزاق بن عمر ، وقرة بن عبد الرحمن
 
நல்ல முஸ்லிம் என்பதற்கு அடையாளம் என்ன? தேவையற்றதில் ஈடுபடமாட்டார். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்:தப்ராணி, எண்: 366   
 
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறீர்களா? நல்லதை பேசுங்கள். இல்லை யென்றால் வாய்மூடி இருங்கள். 
 
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
 
இன்னைக்கு நிலைமை என்ன ஆச்சு? பள்ளியை விட்டு வெளியே வரும்போது ஃபித்னா ஆரம்பமாகும். அல்லாஹ் அக்பர். எப்படிப்பட்ட குணங்களை இழந்தவர்களாக நமது சமுதாயம் இருக்கிறது பாருங்கள். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள்? வாய் மூடி இருங்கள். தேவையற்றதை பேசாதீர்கள்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி, எண்: 5559 
 
أَلَا أُخْبِرُكَ بِمَلَاكِ ذَلِكَ كُلِّهِ قُلْتُ بَلَى يَا نَبِيَّ اللَّهِ فَأَخَذَ بِلِسَانِهِ قَالَ كُفَّ عَلَيْكَ هَذَا فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ
 
முஆத் கேட்கிறார்கள், அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே நற்குணத்தைத் பற்றி கேட்கும்போது, கடைசியாக ரசூல் ஸல் சொன்னார்கள். முஆத் இவை அனைத்திற்கும் மொத்தமான ஒன்றை ஒரே வார்த்தையில் சொல்லி தரட்டுமா? முஆத் சொன்னார்கள் அல்லாஹ்வின் தூதரே சொல்லித்தாருங்கள். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நாக்கை பிடித்து காட்டினார்கள். முஆத் இந்த நாக்கை பாதுகாத்துக் கொள். முஆத் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்த நாவினால் நாங்கள் தண்டிக்கப்படுவோமா மறுமை நாளிலே. ரசூல் ஸல் சொன்னார்கள். முஆத் மக்களை முகம் குப்புற நரகத்தில் தள்ளக்கூடியது இந்த நாவைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும் அல்லாஹு அக்பர். (1)
 
நூல்: திர்மிதி, எண்:2541
 
அபூதர் இரண்டு நற்குணங்களை கடைப்பிடித்து கொள். நீண்ட நேரம் அமைதியாக இருந்து பழகிக்கொள். ஒரு மனிதரை அலங்கரிக்க கூடிய நற்பண்புகள் இந்த இரண்டை விட வேறு எதுவும் இருக்க முடியாது.
 
அடுத்து வாழ்த்து சொல்கிறார்கள். நற்பண்புகளைப் பற்றி உண்டான உயர்வை சொல்லுகின்றார்கள். 
 
عَنْ رَافِعِ بْنِ مَكِيثٍ وَكَانَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُسْنُ الْخُلُقِ نَمَاءٌ وَسُوءُ الْخُلُقِ شُؤْمٌ وَالْبِرُّ زِيَادَةٌ فِي الْعُمُرِ وَالصَّدَقَةُ تَمْنَعُ مِيتَةَ السَّوْءِ
 
நற்குணங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கக்கூடிய அருள் வளங்கள். கெட்ட குணம் அமைவது இது ஒரு துர்பாக்கியமாகும். பெற்றோருக்கு, உறவினருக்கு நன்மை செய்யுங்கள். உங்களது வாழ்க்கையை அல்லாஹ் அதிகரிப்பான். அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர், அநாதைகளுக்கு தர்மம் செய்யுங்கள். உங்களுடைய கெட்ட மவுத்தை அதன் மூலம் அல்லாஹ் தடுத்து விடுவான். 
 
அறிவிப்பாளர்: ராபி ரழியல்லாஹு அன்ஹு, நூல்:அஹ்மத், எண்: 15499  
 
அன்பு சகோதரர்களே! இந்த நற்பண்பிற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலே அதற்கென்று ஒரு கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை சீர் படுத்திக் கொள்வதற்கு, ஒரு தனி நேரத்தை ஒதுக்கி இன்றைய நாளிலே என்னென்ன குணங்கள் என்னிடத்திலே இருந்து வெளிப்பட்டது, மக்களிடத்திலே எப்படி பேசினேன், பழகினேன், பார்த்தேன், வைத்தேன், இவை அனைத்தையும் நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 
 
எதற்கு முன்பு? நாளை மறுமையில் அல்லாஹ் நம்மை பரிசோதிப்பதற்கு முன்பாக. நாளை மறுமையில் அல்லாஹ் நம்மை விசாரிப்பதற்கு முன்பாக. அல்லாஹ்விடத்தில் மன்றாட வேண்டும். இன்று நாம் அழுகிறோம் அல்லவா? நம்முடைய உணவுக்காக, வேலைக்காக, படிப்புக்காக. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுதார்கள்.
 
யா அல்லாஹ்! எனக்கு நல்ல பண்பை கொடு என்பதாக. அல்லாஹ் புகழ்கிறான். நபியே நீர் மகத்தான நற்குணத்தின் தான் இருக்கிறீர்கள் என்பதாக. இந்த இடத்தில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மன்றாடுகிறார்கள். 
 
عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي
 
யாஅல்லாஹ்! எனது படைப்பை அழகாக்கி, எனது முகத்தை அழகுபடுத்தினாயே. எனது உருவத்தை அழகுபடுத்தினாயே எனது குணத்தையும் அழகுபடுத்து. 
 
அறிவிப்பாளர்: இப்னு மசூத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்:அஹ்மத், எண்: 3632   
 
தொழுகையில் தக்பீர் கட்டியதற்கு பின் பாருங்கள். எவ்வளவு முக்கியமான நேரம் அந்த நேரம். எவ்வளவு புனிதமான இடம் அந்த இடம். அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டிய நேரம். அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு தகுதியான அந்த நேரத்தில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த துஆக்களில் ஒன்று என்ன தெரியுமா?
 
وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ 
 
யா அல்லாஹ்! குணங்களில் மிக சிறந்த குணத்திற்கு எனக்கு நீ வழிகாட்டு. உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு அந்த நற்குணங்களுக்கு வழிகாட்ட முடியாது. ய அல்லாஹ்! கெட்ட குணங்களை என்னை விட்டும் தூரமாக்கு. என்னை விட்டு அகற்றிவிடு. உன்னைத் தவிர வேறு யாரும் கெட்ட குணங்களை என்னை விட்டு அகற்ற முடியாது. (2)
 
அறிவிப்பாளர்: அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல்:முஸ்லிம், எண்: 1290   
 
அன்பு சகோதரர்களே! வாழ்க்கையிலே இந்த நற்பண்புகளை செயல்படுத்துவதற்காக, செம்மை படுத்துவதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்விடம் அதற்காக துஆ கேட்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வுகளில் ரசூல் ஸல் அவர்கள் என்னென்ன நற்பண்புகளை நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம். அல்லாஹ்தஆலா நம் அனைவருக்கும் அமல் செய்வதற்கு தவ்ஃபீக் வழங்குவானாக.
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الصَّنْعَانِيُّ عَنْ مَعْمَرٍ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ وَيُبَاعِدُنِي عَنْ النَّارِ قَالَ لَقَدْ سَأَلْتَنِي عَنْ عَظِيمٍ وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكْ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصُومُ رَمَضَانَ وَتَحُجُّ الْبَيْتَ ثُمَّ قَالَ أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ الصَّوْمُ جُنَّةٌ وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ قَالَ ثُمَّ تَلَا{تَتَجَافَى جُنُوبُهُمْ عَنْ الْمَضَاجِعِ حَتَّى بَلَغَ يَعْمَلُونَ }ثُمَّ قَالَ أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ كُلِّهِ وَعَمُودِهِ وَذِرْوَةِ سَنَامِهِ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ رَأْسُ الْأَمْرِ الْإِسْلَامُ وَعَمُودُهُ الصَّلَاةُ وَذِرْوَةُ سَنَامِهِ الْجِهَادُ ثُمَّ قَالَ أَلَا أُخْبِرُكَ بِمَلَاكِ ذَلِكَ كُلِّهِ قُلْتُ بَلَى يَا نَبِيَّ اللَّهِ فَأَخَذَ بِلِسَانِهِ قَالَ كُفَّ عَلَيْكَ هَذَا فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ (سنن الترمذي- 2541)
 
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا يُوسُفُ الْمَاجِشُونُ حَدَّثَنِي أَبِي عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ قَالَ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنْ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ وَإِذَا رَكَعَ قَالَ اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَإِذَا رَفَعَ قَالَ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَإِذَا سَجَدَ قَالَ اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ثُمَّ يَكُونُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
 
و حَدَّثَنَاه زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ح و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا أَبُو النَّضْرِ قَالَا حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ الْأَعْرَجِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ ثُمَّ قَالَ وَجَّهْتُ وَجْهِي وَقَالَ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ وَقَالَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَقَالَ وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُوَرَهُ وَقَالَ وَإِذَا سَلَّمَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ إِلَى آخِرِ الْحَدِيثِ وَلَمْ يَقُلْ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ  (صحيح مسلم -1290)
 
 (1) مص - خياركم (2) مص - أو صافح - (*)
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/