சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 1 | Tamil Bayan- 736
சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 1
தலைப்பு : சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 1
வரிசை : 736
இடம் : அரேபியன் கார்டன்ஸ், கல்பாக்கம்- 20- 08- 22
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : H/ 22/01/1444 | 20/08/22
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
திப்பிற்குரிய பெரியோர்களே சகோதரர்களே அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அல்லாஹ்வின் அருளால் அல்லாஹ்வுடைய தீனை கற்பதற்காக அல்லாஹ்வுடைய தீனை அறிந்து கொள்வதற்காக இந்த இடத்திலே நாம் ஒன்று கூடி இருக்கிறோம் அல்லாஹ் சுப்ஹான ஹுத்தஆலா நம்முடைய இந்த அமர்வில் சத்தியத்தை பேசுவதற்கும் கேட்பதற்கும் தெளிவாக அல்லாஹ்வின் மார்க்கத்தை புரிந்து கொள்வதற்கும் நமக்கு அறிவு ஞானத்தையும் விளக்கத்தையும் நல்ல சிந்தனையையும் நல்ல புரிதலையும் நல்ல அறிவையும் நேர்வழியும் தந்துருவானாக! ஆமீன்
நம்முடைய கொள்கைகள் நம்முடைய சிந்தனைகள் நம்முடைய ஒழுக்கங்கள் நம்முடைய நடவடிக்கைகள் நம்முடைய பேச்சுகள் அனைத்திலும் வழிகேடுகள் அல்லாஹ்விற்கு பிடிக்காத கெட்டவைகள் நிகழ்வதிலிருந்து அல்லாஹுத்தஆலா என்னையும் உங்களையும் நமது சமுதாய மக்கள் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
இந்த தர்பியாவுடைய முதல் அமர்விலே சுன்னாவைப் பற்றியும் பித்அத்தை பற்றியும் சில அடிப்படை விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் நாம் தெரிந்து கொள்வோம். இதை ஒரு முன்னுரையோடு நாம் இன்ஷா அல்லாஹ் கொண்டு போவோம் . அதாவது அன்பான சகோதரர்களே அல்லாஹ் சுபஹானஹூதஆலா அவனுடைய கண்ணியமிக்க வேதம் சூரா அல் முஃமினுன் 115 ஆவது வசனத்திலே குறிப்பிடுகிறான்.
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ
உங்களை வீணாக எந்த நோக்கமும் இல்லாமல் நாம் படைத்திருக்கிறோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா? நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்று நீங்கள் எண்ணி இருக்கிறீர்களா ! இது அல்லாஹ்வுடைய ஒரு எச்சரிக்கை.(அல்குர்ஆன் 23 : 115)
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ
நம்முடைய நம்பிக்கை என்ன இந்த உலகத்தில் நாம் ஒரு கொள்கைக்காக ஒரு லட்சியத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் நாம் அல்லாஹ்விடத்தில் திரும்ப ஒன்று சேர்க்கப்படுவோம் அல்லாஹ் நம்மிடத்தில் கேள்வி கேட்பான் இது நம்முடைய நம்பிக்கை அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்மை எதற்காக படைத்திருக்கிறான் என்று சூரா அத்தாரியாத் 56 வது வசனம் அல்லாஹுத்தஆலா சொல்கிறான்
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
நிச்சயமாக நாம் மனிதர்களையும் ஜின்களையும் அவர்கள் என்னை அறிந்து வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 : 56)
இந்த உலகத்தில் நாம் வீணாகபடைக்கப் படவில்லை மாறாக அவனை வணங்குவதற்கு படைக்கப்பட்டோம் . அல்லாஹ்வை வணங்குவதற்காக நம்முடைய வாழ்க்கையின் லட்சியம் நாம் என்ன தொழில் செய்தாலும் சரி, என்ன வேலை செய்தாலும் சரி, இந்த உலகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, அரசராக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி செல்வந்தனாக ஏழையாக யாராக இருந்தாலும் சரி, என்னுடைய லட்சியம் என்னுடைய நோக்கம் நான் படைக்கப்பட்டதுனுடைய குறிக்கோள் நான் என்னுடைய ரப்பை வணங்க வேண்டும்.
என்னுடைய வாழ்நாள் அல்லாஹ்வை வணங்குவதில் கழிய வேண்டும் அதை மையமாக வைத்து தான் அதை நடு புள்ளியாக வைத்து தான் என்னுடைய வாழ்க்கை இயங்கும் அதை சுற்றி தான் என்னுடைய வாழ்க்கை இயங்கும் அதை விட்டு என்னால் அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா சூரா அந்நஹல் அதனுடைய 36 ஆவது வசனத்திலே சொல்கிறான் இந்த அல்லாஹ்வை வணங்குவதைப் பற்றிய இந்த அடிப்படையை விளக்கும் பொழுது
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ
அல்லாஹ் சொல்கிறான் எல்லா மக்களுக்கும் இந்த உலகத்தில் எல்லா மக்களுக்கும் நாம் ரசூலை திட்டமாக அனுப்பி இருக்கிறோம் தூதரை அனுப்பி இருக்கிறோம்.(அல்குர்ஆன் 16 : 36)
நேரடியாக அந்த தூதர் வந்திருப்பார் அல்லது அந்த தூதருடைய தூதர்கள் செல்வார்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேரடியாக அனுப்பப்பட்ட தூதர் வந்திருப்பார் அல்லது அந்த தூதர் மூலமாக வரக்கூடிய அனுப்பப்படக்கூடிய தூதர்கள் அழைப்பார்கள் அங்கே சென்று இருப்பார்கள் எதற்காக வேண்டி அல்லாஹ் சொல்கிறான்.
اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ
நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்.
தாகூத்தை விட்டு விலகுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் தாகூத்தை விட்டு விலகுங்கள் அதாவது அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படக்கூடிய ஒவ்வொன்றும் தாகூத்தாகும். அந்த வணங்கப்படக்கூடிய அந்த மனிதரோ அல்லது அந்த வணங்கப்படக்கூடிய ஷைத்தானோ தனக்கு வணக்க வழிபாடு செய்யப்படுவதை ஏற்றுக்கொண்ட நிலையில் இருக்கும்பொழுது. அப்போது இந்த ஒரு விளக்கத்தை சேர்த்து புரியும் போது தான் இப்போ இன்று மக்களில் சில பேரு நபிமார்களை வணங்குகிறார்கள்.
சில பேரு நல்லவர்கள் இறைநேசர்களை வணங்குகிறார்கள் அப்போது அந்த நபிமார்களும் இறை நேசர்களும் தாகூத் என்ற பெயரில் வருவாங்களா? வரமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தாங்கள் வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அங்கீகரிக்கவில்லை அப்போது ஒருவருடையகாலில் போய் ஒருவர் விழும்போது அப்போது அந்த மனிதர் உடனே அதை தடுக்கணும் என் காலில் விழாதீர்கள் கையெடுத்து கும்பிடும் போது என்னை கும்பிடாதீர்கள் என்று தடுக்க வேண்டும்
அப்படி தடுக்காமல் அதை அவர் வரவேற்கிறார், விரும்புகிறார் என்றால் அவரும் தாகூத் சைத்தானில் வந்துவிடுவார். அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்மை படைத்ததே அவனை வணங்குவதற்காக தான் இந்த விஷயத்தை நமக்கு கற்றுக் கொடுப்பதற்காக நினைவூட்டுவதற்காக அல்லாஹுத்தஆலா தொடர்ந்து தூதர்களை அனுப்பி கொண்டே இருந்தான்.
ولقد بعثنا في كل امه رسولا عن اعبدوا الله وجدتني بالطاغوت
அப்போ நபிமார்களுடைய நோக்கம் என்னவென்றால் மக்களை அல்லாஹ்வை வணங்குவதின் பக்கம் அழைப்பது அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும்! என்று அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது, எந்த வழி நேரான வழி அல்லாஹ்விற்கு பிடித்தமான வழி, எந்த வழியில் வணக்கவழிபாடுகளை செய்தால் அல்லாஹுத்தஆலா அதை இபாதத்தாக ஏற்றுக் கொண்டு அதற்கு சொர்க்கத்தை கூலியாக தருவான்.
என்பதை மக்களுக்கு கற்றுக் கொடுப்பது யாருடைய பணி! நபிமார்களுடைய பணி இறுதியாக அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உலக மக்களுக்கெல்லாம் நபியாக ரசூலாக அனுப்பினான் அவரை பின்பற்றுவது தான் நம்முடைய இம்மை மறுமையின் வெற்றிக்கு வழியாக அல்லாஹ் ஆக்கினான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு வேறு நபி வருவாங்களா? அறவே வரவே முடியாது. அல்லாஹ் சூரா அஃராப் உடைய 158வது வசனத்திலே அல்லாஹுத்தஆலா தனது நபிக்கு சொல்கிறான்.
قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَه مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
நபியே நீங்கள் உங்களைப் பற்றி மக்களுக்கு சொல்லுங்கள் மக்களே நான் உங்கள் எல்லோருக்கும் அல்லாஹ்வுடைய ரசூலாக இருக்கிறேன். (அல்குர்ஆன் 7 : 158)
அவர்கள் அரபு மக்களுக்கு மத்தியிலே அரபி வம்சத்திலே அவர்கள் பிறந்திருந்தாலும் அவர்கள் உலக மக்களுக்கெல்லாம் அனுப்பப்பட்ட நபியாக இருக்கிறார்கள்.
அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எல்லா மக்களுக்கும் ஆதாரமாக எல்லா மக்களுக்கும் சாட்சியாக ஆக்கி அனுப்பி வைத்திருக்கிறான் . ஆகவே அல்லாஹ்வை வணங்குவதற்கு நமக்கு இப்போ ஒரு வழிகாட்டி இருக்கிறார்கள்.
என்றால் அல்லாஹ்வின் பக்கம் நம்மை சேர்ப்பதற்கு உரிய நாம் சென்று சேர்வதற்குரிய ஒரு பாதை நமக்கு இருக்கிறது, என்றால் அது யாருடைய பாதையாக இருக்க முடியும் அது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய பாதை தான் அல்லாஹ்வை ஈமான் கொள்வது அல்லாஹ்வுடைய ரசூலை ஈமான் கொள்வது அல்லாஹ்வுடைய ரசூல் காட்டி தந்த பாதையில் செல்வதாகும்,
அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையில் உண்டான எல்லா தொடர்புகளையும் உறவுகளையும் ரசூலுல்லா காட்டித் தந்த வழிமுறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஈமானாக இருக்கட்டும், இஸ்லாமாக இருக்கட்டும், நற்குணங்களாக இருக்கட்டும், குடும்ப வாழ்க்கை வணக்கவளிபாடுகள் கொடுக்கல் வாங்கல் இப்படி அல்லாஹ்விற்கும் நமக்கும் உண்டான ஒவ்வொரு தொடர்பையும் யாருடைய பாதையில் கொண்டு வந்து அமைக்க வேண்டும்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதையில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதை என்று வரும் பொழுது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்ட குர்ஆனும் அந்த குர்ஆனுக்கு விளக்கமாக அவர்கள் கூறிய சொல்லும் அவர்கள் செய்த செயலும் வந்துவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பதியின்போது ஹதீஸும் சுன்னாவும் சேர்ந்து வந்துவிடும் அப்ப ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் மட்டும்தான் இன்றைக்கு நமக்கு ஒரு வழியாக இருக்கிறார்கள்.
எதற்கு நாம் சொர்க்கம் செல்வதற்கு எதற்கு நாம் அல்லாஹ்வின் பக்கம் சென்று சேருவதற்கு முந்திய நபிமார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிறகு வந்த நபிமார்கள் யாராக இருக்கட்டும் எல்லா நபிமார்களுடைய காலமும் முடிவடைந்தது விட்டது.
எல்லா நபிமார்களும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்கள் தான் ரசூல்மார்கள் தான் வேதங்கள் கொடுக்கப்பட்டது ஆனால் எல்லாமே முடிவடைந்து விட்டது அந்த நபிமார்களுடைய போதனைகள் அந்த நபிமார்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களில் நமக்கு எது தேவையோ அதை அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி மூலமாகவும் குர்ஆனின் மூலமாகவும் நமக்கு மீதம் வைத்துவிட்டான்.
இனி நாம் எந்த வேதத்தையும் தேடக்கூடாது இனி முன்சென்ற நபிமார்கள் ஏதாவது சொல்லி இருக்காங்களா, செய்து இருக்காங்களா, அவர்களுடைய உபதேசங்கள் எங்கேயாவது இருக்கிறதா என்று தேடி அலையத் தேவையில்லை.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை படித்துவிட்டால் முந்தைய நபிமார்களுடைய கூற்றுக்களை எல்லாம் நம்ம படிச்சது குர்ஆனை படித்துவிட்டோம்னா முந்தைய வேதங்களில் உள்ள அல்லாஹ்வுடைய சட்ட திட்டங்கள் அல்லாஹ்வுடைய போதனைகள் எல்லாமே இதில் வந்த்துவிட்டது.
நமக்கு இந்த இரண்டுமே நிறைவானது யாரு ரசூலுல்லாஹ் வை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் சரி முந்தைய சமுதாயத்தின் உடைய எத்தகைய பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் சரி முந்தைய வேதத்தை கரைத்து குடித்து எப்படித்தான் அதில் பின்பற்ற கூடியவராக இருந்தாலும் சரி அல்லாஹ் நரகத்தில் போட்டு விடுவான் அதுல எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு முக்கியமான ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம்ல அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கக்கூடிய ஹதீஸ்.
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ اَ يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الأُمَّةِ يَهُودِيٌّ وَلاَ نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِه إِلاَّ كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ
முகமது உடைய உயிர் யாருடைய கரத்தில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக ,இந்த உம்மத்தில் இருக்கக்கூடிய யஹூதியோ நஸ்ராணியோ யாராக இருக்கட்டும் என்னை பற்றி அவர் தெரிந்து கொண்டதற்கு பிறகு என்னைப் பற்றி அவர் கேள்விப்பட்டதற்கு பிறகு ,பிறகு என்னை நம்பிக்கை கொள்ளாமல் அவர் இறந்து விடுவாரேயானால், அவர் நரகவாசிகளில் தான் இருப்பார்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் எண் : 153
அவர் நரகவாசிகளில் தான் இருப்பார். இது ரொம்ப முக்கியமான விஷயம் இந்த எம்மதமும் சம்மதம் எல்லா மதத்திலேயும் நல்லது இருக்குது அவர்களும் சரிதான் இவர்களும் சரி தான் இந்த மாதிரியான பொய்யான சமரசமமில்லாமல் இஸ்லாதில் இங்க வலி இல்ல இதுதான் சத்தியம் நம்ம மற்றவர்களை போய் தொந்தரவு பண்ண மாட்டோம் நிர்பந்திக்க மாட்டோம் அது வேற விஷயம் ஆனா சத்தியம் எது என்று கேட்டால் என்ன சொல்வது இதுதான் சத்தியம் இஸ்லாம் தான் சத்தியம்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்க கடைசி நபியாக இருந்தார்கள் அதுதான் சத்தியம் அதை நம்ம மறைக்கிறதுக்கு நமக்கு எந்த விதமான அனுமதியும் இல்லை.
அல்லாஹ் சுபஹானஹூதஆலா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். என்று குர்ஆனில் குறைந்தது 30 இடங்களுக்கு மேலாக நமக்கு வலியுறுத்தி சொல்கிறான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் கீழ்படிந்து கட்டுப்பட்டு إطاعة கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று 30 இடங்களுக்கு மேல் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நமக்கு வலியுறுத்தி சொல்கிறான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்வதை அவர்களுடைய கட்டளைக்கோ சொல்லுக்கோ செயலுக்கோ மாறு செய்வதை அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கை செய்கிறான். ஒரு ஹதீஸில் பாருங்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்
அப்ப இதெல்லாம் நீங்க படிக்கும் பொழுது நம்முடைய இன்றைய பிரச்சனைக்கு உண்டான தீர்வு என்ன நம்ம ஏன் இப்படி இழிவானவர்களாக ஒரு பலவீனமானவர்களாக அல்லது பயந்தவர்களாக கோழைகளாக மாறி இருக்கின்றோம் என்பதற்கு உண்டான விடை எல்லாம் உங்களுக்கு இதுல வந்துகிட்டே இருக்கும் ஹதீஸ்ல வருது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் இமாம் அஹ்மத் முஸ்னது அஹ்மதுல இதை பதிவு செய்றாங்க ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
بُعِثْتُ بَيْنَ يَدَيِ السَّاعَةِ بِالسَّيْفِ حَتَّى يُعْبَدَ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي، وَجُعِلَ الذِّلَّةُ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 5115, 5667
நான் வாளை கொண்டு அனுப்பப்பட்டு இருக்கிறேன் மறுமைக்கு முன்பாக அல்லாஹ் ஒருவனே வணங்கப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வுக்கு எந்த இணை துணை இல்லை என்னுடைய ரிஸ்க் என்னுடைய ஈட்டிக்கு கீழ் என்னுடைய ரிஸுக்கு ஆக்கப்பட்டிருக்கிறது என்னுடைய கட்டளைக்கு மாறு செய்பவர்கள் மீது இழிவும் சிறுமையும் விதிக்கப்பட்டுவிட்டது.
அப்போ ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்தை மீறி யாரெல்லாம் நடப்பார்களோ ! அவர்களுடைய சுன்னத்தை மீறுவார்களோ! அந்த சமுதாய மக்கள் மீது இழிவும் சிறுமையும் தில்லத் என்று சொன்னால் மத்தவங்கள பாத்தா பணிந்து விடுவது சிறுமை என்று சொன்னால் சமுதாய மக்களுக்கு மத்தியிலே மதிக்கப்படாமல் இருப்பது.
இது யாரு மீது ஆக்கப்பட்டுவிட்டது யார் ரசூலுல்லாஹ் உடைய கட்டளையை மீறுவார்களோ இது ரொம்ப தெளிவான தீர்ப்பாகும் . ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் சில பேரு சொல்லுவாவார்கள் நமக்கு படித்துவிட்டால் கண்ணியம் வந்துவிடும், நம்ம பதவியில இருந்தா கண்ணியம் வந்துவிடும், நமக்கு ஆட்சி கிடைத்தால் கண்ணியம் வந்துவிடும். இஸ்லாமை பொறுத்த வரைக்கும்.
குர்ஆனுடைய தெளிவான விளக்கம் ஹதீஸ்னுடைய தெளிவான விளக்கம் சஹாபாக்களுடைய தெளிவான நிலைபாடு நமக்கு கண்ணியம் இஸ்லாமை வைத்து தான் நமக்கு கண்ணியம் நம்மை நம்முடைய வணக்கவளிபாடுகளை நம்முடைய குணத்தாலும் நம்முடைய அடையாளத்தாலும் நம்மை முஸ்லிமாக வெளிப்படுத்தி அதை நடைமுறைப்படுத்துவதைக் கொண்டுதான் நமக்கு கண்ணியம் தலைநிமிர்வாகும்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு பாலஸ்தீனத்தை முதல் முறையாக ஸஹாபாக்கள் வெற்றி கொண்ட பைத்துல் முகத்தஸ் உடைய சாவியை வாங்குவதற்காக வேண்டி செல்கிறார்கள் அப்பொழுது அடிமை சிறுதுதூரமும் உமர் ரலியல்லாஹு அன்ஹு சிறுது தூரமும் ஒட்டகத்தை இப்படியாக ஒரு மைல் தூரம் மாறி மாறி இழுதுவருவர்கள் ஏனென்றால் பைத்துல்மால் உடைய ஒட்டகத்தை தேவைக்கு அதிகமாக எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு கலீபா தன்னுடைய ஒட்டகத்துல மாறி மாறி வந்துகிட்டு இருந்தார்கள். மதினாவிலிருந்து பாலஸ்தீன்வறை இவ்வாறாக வந்தார்கள்.
சுபஹானல்லாஹ் அப்போ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி அறிந்த விசையமாக இருக்கிறது. ஒரு சாதாரணமானவர்கள் அதிகம் அல்லாஹ்வை அஞ்சகூடியவர்கள் அவருடைய ஆடை ரொம்ப எளிமையான ஆடையா இருந்துச்சு அப்பொழுது அந்த பாலஸ்தீனத்துக்கு உள்ளே வரும் பொழுது அங்கு உள்ள கமாண்டர்
கூறினார் அபூ உபைதா சொல்றாரு கலீபா இங்க உள்ள மக்கள் எல்லாம் ரொம்ப அழகை எதிர்பார்க்கக் கூடியவர்கள் ரொம்ப ஆடம்பரத்தை எதிர்பார்க்கக் கூடியவர்கள் பகட்டான ஆடைகளை எதிர்பார்க்கக் கூடியவர்கள் நீங்க இவ்வளவு எளிமையான சாதாரணமான உடையில வரீங்களே ஏன்னா ஓட்டு போடப்பட்ட ஆடை உமர் ரலியல்லாஹு அன்ஹு மிம்பரில் குத்பா ஓதுனாலே 14 ஓட்டை இருக்கும் ஒட்டு போடப்பட்ட ஓட்டை அந்த அளவுக்கு இதெல்லாம் பார்க்க மாட்டார்கள்
அல்லாஹ்வுடைய கண்ணியத்தை கொண்டு கண்ணியத்தை தேடியவர்கள் , தக்வாவை கொண்டு கண்ணியத்தை தேடியவர்கள் அனால்நம்முடையநிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்ன செய்வோம்தக்குவாவை விட்டுட்டு ஆடையை நம்ம பந்தா நம்ம வஸ்து நம்ம வீடு கண்ணியதுகுரியவர்களை
அபொழுது அபு உபைதா வந்து சொல்லும் பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு இப்படி பார்த்து முறைச்சாங்க அபூ உபைதா இந்த வார்த்தையை வேறு யாராவது சொல்லி இருந்தா அவர் முதுகு பழுத்திருக்கும் சாட்டையால நீங்கள் அந்த வார்த்தையை சொல்றீங்க அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க
ان الله اعزنا بالاسلام الله
அல்லாஹ் நம்மை இஸ்லாமை கொண்டு கண்ணியப்படுத்தினான் எதைக்கொண்டு இஸ்லாமிய கொண்டு கண்ணியப்படுத்தினான் யார் அல்லாஹ் கண்ணியப்படுத்தியதை அல்லாமல் வேறு ஒரு வழியிலே கண்ணியத்தை தேடுவானோ அல்லாஹ் அவனை இழிவு படுத்தி விடுவான்
فمن ابتغى العزه بغير ما اعز الله اذله الله
அப்ப இப்படித்தான் இருந்துச்சு எப்போ முஸ்லிம்களை இஸ்லாத்தை கொண்டு கண்ணியத்தை அடைந்தார்களோ அல்லாஹுத்தஆலா அவர்களை கண்ணியமாக வைத்திருந்தான் மற்றவர்கள் மாதிரி இஸ்லாமை விட்டுவிட்டு உலக வஸ்துக்களின் பின்னால் சென்று கண்ணியத்தை மதிப்பை தேடினார்களோ அல்லாஹுத்தஆலா அந்த சாக்கடையில ஒரு சாக்கடையாக விட்டுட்டான் அல்லாஹ் பாதுகாக்கணும்
விஷயத்துக்கு வாங்க அப்ப அல்லாஹ் சுபஹானஹூதஆலா இவங்களுக்கு ذபுரிந்திருக்கும் நான் சொல்லக்கூடிய அப்படியே விஷயங்களை நீங்க கோர்வை செய்து கொண்டே வந்தீங்கன்னா உங்களுக்கு புரியும் என்ன புரியும் நம்முடைய ஆகிரத்துல நமக்கு கிடைக்க கூடிய சொர்க்கமும் சரி புரியுதா துன்னியாவில நமக்கு கிடைக்கக்கூடிய கண்ணியமும் சரி ஜன்னத்தும் சரி இஸ்ஸத்தும் சரி எதைக் கொண்டு கிடைக்கும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கீழ்படிவதைக் கொண்டு அவர்களை பின்பற்றுவதை கொண்டு ஜென்னத்தும் தவறி போயிடும் இஸ்ஸத்தும் தவறி போயிடும் ஜன்னத்னா என்னா சொர்க்கம் இஸ்ஸத்துனா என்ன கண்ணியம் இந்த இரண்டுமே தவறி போயிடும் எப்போ ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்தால் அல்லாஹ் பாதுகாப்பானாக இப்போ பாருங்க சூரா அன் நிஷா 80 ஆவது வசனம் அல்லாஹுத்தஆலா சொல்கிறான்
مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ
எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் புறக்கணித்தார்களோ அவர்களின் செயல்களை கவனிப்பவராக(வும் அவர்களை விசாரிப்பவராகவும்) நாம் உம்மை அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)
யார் இந்த தூதருக்கு கீழ் படிந்து கட்டுப்பட்டு அவரை பின்பற்றி நடப்பாரோ யார் இந்த தூதருக்கு கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு பின்பற்றி நடப்பாரோ இதாஅத்ல- எல்லாம் வந்துடும் அவர் உட்காருனா
உட்காருவோம் அவர் எந்திரினா எந்திரிப்போம் அவர் தூங்கினால் தூங்கிடுவோம் அவர் இதை சாப்பிடுனா சாப்பிடுவோம் இதை சாப்பிடாத நா சாப்பிட மாட்டோம் அவரு இவங்களை கல்யாணம் முடிக்கலாம் நா கல்யாணம் முடிப்போம் இந்த பெண் உனக்கு ஹலால் இல்லை என்றால் ஹலால் இல்லை இல்லையா எல்லாமே சரி இதுதான் உன் டிரஸ்னா இதுதான் உன் டிரஸ் இப்படித்தான் இருக்கணும்னா இப்படித்தான் இருக்கணும்.
எல்லாமே நமக்கு அதாவது நகம் வெட்றதுல இருந்து புரியுதா இல்லையா மீசையை எப்படி வைக்கணும் என்றதிலிருந்து நம்முடைய உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் நம்முடைய ஸ்டைலுக்கு யார் நமக்கு ஹீரோங்க அல்லாஹு அக்பர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகைக்கும் நமக்கு அவங்கதான் ஹீரோ இல்லையா தொழுகையில ரசூலுல்லாஹ் தொழுகைக்கு வெளியே வேற ஆளா தொழுகையில ரசூலுல்லாஹ் தொழுகைக்கு வெளியில வெஸ்டனா அமெரிக்கனா என்னங்க சொல்ல மாட்டேங்கறீங்க நமக்கு எல்லா இடத்திலும் ரசூல்லாஹ் தான்
My hero always my rasul Allah hi sallallahu alaihi wasallam
எல்லாமே அவருடைய சிரிப்பு எங்களுக்கு அழகு அவருடைய பேச்சு அழகு அவருடைய நடை உடை எல்லாமே எங்களுக்கு அவரைவிட பெஸ்ட் எக்ஸாம்பிள் யாருமே கிடையாது அவர் என்ன நமக்கு சொல்லித் தரல நம்ம இன்னொருத்தன் கிட்ட போய் படிக்கிறதுக்கு சொல்லுங்க எப்படி ஒக்காரனும் எப்படி சாப்பிடணும் அந்த சாப்பிட்ட தட்டை எப்படி சுத்தம் பண்ணனும் உலகத்துல அறிவியல் எல்லாம் பிறக்கிறதுக்கு முன்னாடியே சாப்பாட்டுக்கு முன்னாடி கை கழுவிட்டு சாப்பிடு என்று நமக்கு சொல்லிட்டு போயிட்டாங்க.
இன்னைக்கு தான் அறிவியல்ல சாப்பிடறதுக்கு முன்னாடி கை கழுவிட்டு சாப்பிடுங்க கிருமி இருக்கும் அழுக்கு இருக்கும் என்கிறான் நமக்கு எப்போ சொல்லிட்டு போய்ட்டாங்க ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 1400 வருஷத்துக்கு முன்னாடியே சாப்பாடு முன்னாடி கை கழுவும் சாப்பிட்ட உடனே கை கழுவுங்க வாய் கொப்புளிங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க என்ன தீனுங்க இது? நமக்கு சயின்ஸ்சும் தீன்ல இருக்கு எதுல இருக்கு நமக்கு தனியா போய் சயின்ஸ் வந்து இந்த போன கண்டுபிடிக்கிறதுக்கும்,
இந்த டேபிளை கண்டுபிடிக்கிறதுக்கும் இந்த மைக்கை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஏசியை கண்டுபிடிப்பதற்கும் நமக்கு சயின்ஸ் வேணும் ஹெல்தியா மனுஷனா வாழ்றதுக்கு நமக்கு சயின்ஸ் தேவையில்லை ஏன் எல்லாத்தையும் நமக்கு மார்க்கத்திலேயே கற்றுக் கொடுத்துட்டு போய்ட்டாங்க ஒன்னுக்கு இருக்கணும்னா இப்படி இரி இங்க உட்கார்ந்து இப்படி இரி இல்லையா கழுவு அதை உலகத்துல சிறுநீர் கழித்ததற்கு,
பிறகு சுத்தம் செய்யணும்னு சொல்லிக் கொடுத்து அந்த சிறுநீர் உறுப்பை வந்து வலது கையால பிடிக்காத அதனுடைய சொட்டு உன்னுடைய உடம்பில் பட்டிட வேண்டாம் இப்படி யாருங்க சைன் சொல்லிக் கொடுத்திருக்கா சொல்லுங்க பாக்கலாம் புரியலையா நான் கேட்கிறது சுபஹானல்லாஹ் திகைத்து போய் நிக்கனுங்க நம்ம குழந்தை பிறக்கிறது மனைவியோட சேர்வதில் இருந்து எல்லாமே நமக்கு,
We have in our Rasool sallallahu alaihi wasallam
இல்லையா எல்லாம் கிளீனா உலகப் பொருள்கள் எல்லாம் இந்த ஏசி ஃபேன் லைட்டு இதுக்கு வேணா நமக்கு சயின்ஸ் தேவை மனுஷனா வாழறதுக்கும் புத்திசாலியா வாழ்வதற்கும் ஆரோக்கியமாக வாழறதுக்கும் நமக்கு யாரு சொல்லிட்டு போயிட்டா இத சாப்பிடு இத சாப்பிடாத இவ்வளவு சாப்பிடு இதுக்கு மேல சாப்பிடாத எல்லா கிளீனா நமக்கு ரெக்கார்ட் பண்ணி கொடுத்துட்டு போயிட்டாங்க எப்படி புரியல எல்லாம் ரெக்கார்டர் எல்லாம் நமக்கு அவங்கள பார்க்கிற மாதிரி நமக்கு எல்லாமே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
in the authentic books
நமக்கு எங்கேயும் போய் கன்ப்யூஸ் ஆக வேண்டிய கிடையாது எங்கேயும் போய் ஸ்டக் ஆகி நிக்க வேண்டிய வேலையே கிடையாது அப்போ அல்லாஹ் என்ன சொல்றான் இந்த ரஸூலுக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடந்து விட்டால் இவர் பேச்சை கேட்டு விட்டாள் இவரை பின்பற்றி விட்டால்,
நீ அல்லாஹ்வை பின்பற்றி விட்டாய் முடிஞ்சிருச்சு அல்லாஹ் என்ன சொன்னான்னு தெரியனுமா நீ அல்லாஹ் பின்னாடி போகணுமா அல்லாஹ் சொல்றத கேட்கணுமா அல்லாஹ்வுடைய கட்டளை என்னன்னு தெரியுமா இந்த ரசூல் பின்னாடி வா முடிஞ்சிருச்சு
مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ
எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் புறக்கணித்தார்களோ அவர்களின் செயல்களை கவனிப்பவராக(வும் அவர்களை விசாரிப்பவராகவும்) நாம் உம்மை அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)
அப்ப அதனால தான் நம்ம அடிக்கடி சொல்லுவோம் ஸஹிஹான ஹதீஸ்ல சந்தேகம் கொள்ளக்கூடாது சஹிஹான ஹதீஸ்கள்ல ஸஹீஹான சுன்னத்துகள்ல நம்ம என்ன செய்யக்கூடாது அப்படி சந்தேகப்பட்டால் அது அல்லாஹ் மேல சந்தேகப்படறதா ஆகிடும் சஹிஹான ஹதீஸ்ல ரசூலுல்லாஹி எதிர்த்து பேசினால் அது யாரை எதிர்த்த மாதிரி ஆயிடும் அல்லாஹ்வை எதிர்க்கிறதா ஆயிடும் புரியுதுங்களா அதே போல சூரா அன்நிஷால 13 ,14 ரொம்ப முக்கியமான வசனம் அல்லாஹ் சொல்கிறான்:
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ
சில சட்டங்களை எல்லாம் அல்லாஹ் சொல்லிட்டு இது அல்லாஹ்வுடைய பௌண்டரி இது அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகள்
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَه
யார் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கீழ்படிவாரோ
يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا
அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் யார் கட்டுப்பட்டுறாங்களோ புரியுதுங்களா அல்லாஹ்வுடைய ரசூலுடைய பேச்சை யார் கேட்டு விடுகிறார்களோ அல்லாஹ் சொல்றான் அவங்களை சொர்க்கத்தில் கொண்டு போய் வைப்பேன்கிறான் அவங்களை கொண்டுட்டு போய் அல்லாஹ் எங்க வச்சுருவான் சொர்க்கத்தில் கொண்டுட்டு போய் வச்சிருவான் அவங்க பாதை மிஸ்ஸே ஆக மாட்டாங்க ஏன்னா அவங்களை சொர்க்கத்தில கொண்டுபோய் சேர்க்கிறத யாரு பொறுப்பு ஏற்றுக்கிட்டா யாரு அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா பொறுப்பு ஏற்று விட்டான்,
நீங்க கண்ண மூடிக்க வேண்டியது தான் ரசூலுல்லாஹ் பின்னாடி போகும்போது மத்தவங்க பின்னாடி போகும்போது கண்ணை திறந்து விடனும் இவ சரியா சொல்றானா தப்பா சொல்றான்னு குர்ஆன்ல கொண்டுட்டு வந்து ஹதீஸில் கொண்டுட்டு வந்து செக் பண்ணிக்கணும் இப்போ சில கிறுக்கனுங்க வந்து இருக்கானுங்க ரசூலுல்லா பின்னாடி போகும் போது கண்ணை மூடக்கூடாது நம்ம ரசூலுல்லாஹ் கிட்டயும் கேள்வி கேட்கணும் என்கிறார்கள் ரசூல்லாஹ் கிட்ட கேள்வி கேட்டா முடிஞ்சு போச்சு ரசூல்லா கிட்ட ரசூல் அல்லா இதை எப்படி செய்யணும் இதை எப்படி செய்யக்கூடாது விளக்கம் சொல்லுங்கள் என்று தான் கேட்கணும்,
நீங்க சொன்னது சரியானு கேட்கலாமா நீங்க சொன்னது வந்து இது எப்படி சரியில்லையே அப்படின்னு ஆட்சியபனை பண்ணலாமா முட்டாள் அறிவாளி மேலே ஆட்சேபனை பண்ண மாதிரி ஆகிடும் புரியுதா இல்லையா விஷயத்துக்கு வாங்க அப்ப அல்லாஹ் சொல்றான் நீங்க அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டுடா உங்கள கொண்டுட்டு போய் சொர்க்கத்தில் சேர்க்கிறது யாருடைய பொறுப்பு அல்லாஹ்வுடைய பொறுப்பு அது மட்டுமல்ல அங்க உங்களை பர்மனன்ட்டா உங்களுக்கு சிட்டிசன்ஷிப் குடுத்துருவேன் என்கிறான்,
எப்படி அமெரிக்கா சிட்டிசன்ஷிப்புகள் எல்லாம் ஆசைப்படாதீர்கள் சில பேர் ஆசைப்படுறாங்க அமெரிக்காவில் போய் சிட்டிசன் லண்டன்ல போய் சிட்டிசன் டேய் என்னடா எங்க போனாலும் மவுத் டா இல்லையாங்க சொல்லுங்க எங்க போனாலும் மவுத் எங்க வாழ்ந்தாலும் ஹலாலா வாழ ஆசைப்படுங்கள் எங்க வாழ்ந்தாலும் ஹலால் கடன்காரனா வாழக்கூடாது இல்லையா மற்றவனுக்கு கடன்காரனா வாழக்கூடாது ஏமாத்துனவன வாழக்கூடாது பொய்யான வாழக்கூடாது நீங்க குடிசைல இருந்தாலும் சரி நீங்க வந்து ஒரு வேலை ஒரு நாளைக்கு சாப்பிட்டாலும் சரி ரெண்டு வேளை பட்டினி கிடந்தாலும் சரி
You are the king in Akira
நாளைக்கு மறுமையில் நீங்க கிங்கா வாழலாம் இங்க கடன்காரனாய் ஏமாற்று காரண பொய்யான வாழ்ந்தா நீங்க இங்க சிங்கா வாழ்ந்தாலும் சரி மறுமையில போயி நரகத்தில் போய் சாகணும் புரியுதா இல்லையா அதனால என்னைக்குமே உலகத்துடைய லட்சுரி லைப்க்கு உலகத்துல பகத்தான வாழ்க்கைக்கு நம்ம தவறான வழியில் ஆசைப்படக்கூடாது கஷ்டப்படுறீங்க வியாபாரம் செய்றீங்க உழைக்கிறீங்க அல்லாஹ் உங்களுக்கு ஜகாத் கொடுக்குறீங்க சதக்கா கொடுக்குறீங்க அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை கூட்டிகிட்டு இருக்கான் அல்ஹம்துலில்லாஹ் உங்க வாழ்க்கையில் வசதி வருகிறது அல்ஹம்துலில்லாஹ் ஆனால் வசதியான வாழ்க்கைக்காக வேண்டிو
தவறான பாதையை தேர்ந்தெடுக்கலாமா பொய்யை தேர்ந்தெடுக்கலாமா இன்னொரு ஒருத்தனை ஏமாற்ற தேர்ந்தெடுக்கலாமா ஏன்னா நமக்கு வந்து ரியல் லக்சூரிலைப் எங்க இருக்குங்க என்ன சொல்ல மாட்டேங்கிறீங்க ஆகிரத்துல இருக்கு சொர்க்கத்துல இருக்கு ஆகிரத்துல எங்க இருக்கு ரியல் லக்சரி லைஃப் சொர்க்கத்தில் இருக்கு நம்முடைய ரியல் சிட்டிசன்ஷிப் எங்க வேணும் நமக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தில் வேண்டும் அங்க சிட்டிசன்ஷிப் கிடைக்கணும் புரியுதா இல்லையா அதற்கு என்ன வேணும் என்கிறான் அல்லாஹுத்தஆலா இரண்டு சர்டிபிகேட் கொண்டு வா என்கிறான் அதற்கு பிஏ எம்பிஏ இன்ஜினியரிங் பிடெக்கு
اطاع الله اطاع الرسول
எனக்கு கட்டுப்படி என்னுடைய ரசூலுக்கு கட்டுப்படு இந்த ரெண்டு குவாலிட்டி போதும் புரியுதா இல்லையா உனக்கு சொர்க்கம் லெக்சரி லைஃப் அதுல பர்மனெண்ட் சிட்டிசன் சிப் உன்னை யாருமே அங்க இருந்து போக சொல்ல மாட்டாங்கன்னு சொல்றான் அல்லாஹுத்தஆலா சுபஹானல்லாஹ் அதை நினைச்சுக்கிட்டே வாழ்ந்துவிடலாம் தம்பி இல்லையா அல்லாஹ் அக்பர் சொர்க்கத்தை நினைச்சா உலக ஆசையே வராது நமக்கு நம்ம அதை நினைக்காத நால தான் இந்த மிஸ்கின்கள்ட்ட உள்ள இந்த பிச்சைக்கார விஷயத்தை ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஏங்கி ஏங்கி அதிலேயே போயிடுது லைஃப் அல்லாஹ் பாதுகாக்கணும் அடுத்து அல்லாஹுத்தஆலா ஒரு எச்சரிக்கை செய்கிறான் அது என்ன எச்சரிக்கை
وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَه وَيَتَعَدَّ حُدُوْدَه يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَه عَذَابٌ مُّهِيْنٌ
இன்னும், எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, அவனுடைய சட்டங்களை மீறுவாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதில் (அவர்) நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவருக்கு உண்டு. (அல்குர்ஆன் 4:14)
இது வந்து அன் நிஸாவுல 14 முந்தி சொன்னது 13 என்ன சொல்றான் அல்லாஹுத்தஆலா இரண்டு எச்சரிக்கை சொல்றான் இங்க பாருங்க நீங்க எனக்கு மாறு செய்தீர்களேயானால் அதுக்கப்புறம் நான் அனுப்பி இந்த தூதருக்கு மாறாக நீங்கள் நடந்தால் அல்லாஹ் அக்பர் நான் அனுப்பிய இந்த தூதருக்கு மாறாக நடந்தால் சொல்லிட்டு என்னுடைய கட்டளைகளையோ,
இந்த தூதருடைய கட்டளைகளையோ நீங்கள் மீறினால் அவங்களுடைய சட்டத்தை நீங்கள் மீறினால் யார் அப்படி மீறுகிறார்களோ அவர்களை நரகத்தில் நுழைத்து விடுவேன் அவர்களை நரகத்தில் நிரந்தரம் ஆக்கி விடுவேன் அவர்களை இழிவு படுத்தும் வேதனை அங்கே அவர்களுக்கு உண்டு
அல்லாஹ் பாதுகாக்கணும் நம்மை அப்ப இந்த விஷயம் நமக்கு தெளிவாக சொல்லப்பட்டு விட்டது நமக்கு ஆகிரத்துல ஜென்மத்தும் துன்யாவுல இஸ்ஸத்தும் எதை கொண்டு இருக்கிறது அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கீழ்படிவதை கொண்டு இருக்கிறது இதுல இன்னொரு ஹதீசையும் நம்ம சேர்த்து பார்ப்போம் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்ய அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்
كلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ
என்னுடைய உம்மத்து எல்லாருமே சொர்க்கத்துக்கு போவாங்க
إِلاَّ مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ " مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى
மறுப்பவரை தவிர அப்படி என்கிறார்கள் அப்போ சஹாபாக்கள் கேக்குறாங்க யா ரசூலுல்லாஹ் மறுப்பவர் யார் ரசூலுல்லாஹ் இருக்க முடியும் யாரும் மறுக்க போரார்கள் என்று ரசூலுல்லா சொன்னார்கள் யார் எனக்கு கீழ்ப்படிந்து நடப்பாரோ அவர் சொர்க்கம் செல்வார் யார் எனக்கு மாறு செய்வாரோ அவர் மறுத்தவர் ஆகிவிடுவார் அல்லாஹ் பாதுகாக்கணும்,
அப்பா ரசூலுல்லை ரசூல் இல்லை என்று மறுத்தா தான் அவர் வந்து நரகத்துக்குப் போவார் என்று இல்லை ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்தை மீறி யார் செயல்பட்டாலும் சரி அவர் மேல நரகத்துடைய அந்த எச்சரிக்கை வந்துவிடும் அல்லாஹ் பாதுகாக்கணும் சரிங்களா அடுத்தது பாருங்க நம்ம ஏற்கனவே உங்களுக்கு சொன்னோம் ஏறக்குறைய 30 வசனங்கள் அல்லாஹ் தனக்கு கீழ் படிவதோடு சேர்த்து ரசூலுக்கு கீழ்படுவதை கட்டளையிட்டு சொல்கிறான்,
அப்ப சில பேரு சொல்றாங்களே நீங்க ஒரு விஷயத்தை சொன்னீங்கன்னா இது குர்ஆன்ல இருக்கான்னு கேட்பாங்க இல்ல ஹதீஸ்ல இருக்குன்னா ஹதீஸ் தான ஒன்னும் பிரச்சனை இல்ல பாத்துக்கலாம் அப்படிம்பாங்க என்னங்கன்னு கேட்டா குர்ஆன் னா நேரடியா ரொம்ப வலியுறுத்தப்பட்டதுங்க ஹதீஸ் என்றால் அது பரவாயில்ல அது வந்து ஒன்னும் பிரச்சனை இல்ல என்ன பிரச்சனை இல்ல அது ரொம்ப டூ ஈசியா எடுத்துப்பாங்க,
அத விடலாம் ஹதீஸ்ல சில பேரு சொல்லுவாங்க ஹதீஸ்ல நிறைய குழப்பம் இருக்குங்க குழப்பம் உன் மண்டையில தான் இருக்கு குழப்பம் யார் மண்டையில இருக்கு உன்னுடைய மண்டையில தான் இருக்கு நீ புரியுறதுல தான் இருக்கு ஹதீஸ் தெளிவா இருக்கு சஹிஹான என்று பிரிக்கப்பட்டு அது தெளிவா இருக்கு உன்னுடைய நப்ஸில் தான் வழிகேடு இருக்கு சந்தேகம் எங்க இருக்கு உன்னுடைய அறிவுல உன்னுடைய புரிதல்ல இருக்கு புரியுதா இப்படி பிரிச்சு பார்க்கிறது நமக்கு அனுமதி இல்ல ஒரு சில வசனங்களை நம்ம தெரிந்து கொண்டு அடுத்து இன்னும்,
கொஞ்சம் உள்ளார தேடுவோம் அப்ப இது ரொம்ப முக்கியமான விஷயம் கீழ்ப்படிதல் என்பதுல அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் நம்ப கீழ்ப்படியனும் குர்ஆன்ல இருந்தா தான் அதை ரொம்ப கரெக்டா ஏத்துப்போம் ஹதீஸில இருந்தா நம்ம வந்து பாத்துக்கலாம் எப்ப வேணா பாத்துக்கலாம் எப்படி வேணா பாத்துக்கலாம் அதைவிட எல்லாம் வைக்கலாம் அந்த மாதிரியான பாகுபாடு காட்டக்கூடாது அதுதான் நம்ம சுன்னத்துக்கு கொடுக்கக்கூடிய அந்த அந்தஸ்து இப்ப பாருங்க சூரத்துல் ஹஸ்ரு ஏழாவது வசனம் அல்லாஹுத்தஆலா சொல்கிறான்
وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا
இன்னும், தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை உறுதியாக பற்றிப் பிடியுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ அதை விட்டும் விலகிவிடுங்கள். (அல்குர்ஆன் 59 : 7)
இதுக்கு முன்னாடி ஒரு சம்பவம் ஒன்னு சொல்றேன் அப்துல்லா இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவங்க வந்து ஒரு ஹதீஸ் சொல்றாங்க அல்லாஹுத்தஆலா இந்த சவரி முடி கட்டுவாங்களே பெண்களுக்கு முடி கம்மியா இருந்துச்சுன்னா எக்ஸ்ட்ரா முடி வாங்கி கட்டிப்பாங்களே அதை மாதிரி கட்டக்கூடிய பெண்கள் அதற்கு முடி செய்து கொடுக்கக் கூடிய பெண்கள் இவர்களை சபிப்பானாக அப்படின்னு சொல்றாங்க அப்ப அந்த சபையில ஒரு பெண் உட்கார்ந்து பயான் கேட்டுட்டு இருக்காங்க என்ன இப்னு மஸ்ஊத் நான் குர்ஆனை,
ஸ்டார்டிங்ல இருந்து கடைசி வரை படிச்சிருக்கேன் அப்படி எல்லாம் ஒரு ஆயத்தே இல்லையே பாத்தீங்களா எவ்வளவு அறிவாளியா இருந்து இருப்பாப்ல ஃபுல்லா குர்ஆனை மனப்பாடம் பண்ணி அதுல இருக்கு இல்ல என்கிற அளவுக்கு தெரிஞ்சுக்கிற அளவுக்கு இருந்திருக்காங்க அப்ப அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் சொல்றாங்க நீ படிச்ச குரான்ல இல்ல நான் படிச்ச குரான்ல இருக்குன்னு சொல்லி இருக்காங்க இருக்குன்னு சொல்லி இருக்காங்க குர்ஆனில அந்தப் பெண்மணி திரும்ப கேக்குறாங்க இல்லை அப்படி ஒரு ஆயத்து உண்மையிலேயே,m
அப்படி ஒரு ஆயத்து கிடையாது உண்மையிலேயே அப்படி ஆயத்து இல்ல இப்னு மஸ்ஊத் என்ன சொல்றாங்க இது வந்து ஹதீஸ்ல இருக்கு எது எடுமுடி கட்டக் கூடியவர்களையும் கட்டிக் கொடுக்கக் கூடிய பெண்ணையும் அல்லாஹ் சபிப்பானாக என்று இப்ப அல்லாஹ் சபிப்பானாக என்று சொல்லும்போது அந்த பெண்மணி என்ன நினைச்சுக்கிட்டாங்க,
குர்ஆன்ல இருக்குன்னு நினைச்சிக்கிட்டாங்க அப்ப குர்ஆன்ல இல்லைன்னு சொல்றாங்க அப்ப இவங்க என்ன சொல்றாங்க குர்ஆன்ல இருக்குங்குறாங்க அந்த பெண்மணிக்கு ஆச்சரியமா போச்சு என்ன சொல்றீங்க காட்டுங்கறாங்க அப்ப அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு சூரத்துல் ஹசருடைய இந்த ஏழாவது வசனத்தை ஓதி காட்டுறாங்க இப்ப கவனிங்க இந்த ஏழாவது அல்லாஹ் என்ன சொல்றான்னு
وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ
ரசூல் உங்களுக்கு எதை கொடுத்தாரோ ரசூல் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை பிடித்துக் கொள்ளுங்கள்
وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا
ரசூல் உங்களை எதை விட்டு தடுத்தாரோ அதை விட்டு விலகி விடுங்கள் குர்ஆனில இருக்குல்ல இருக்குல இது ரசூல் தான் தடுத்தாங்க இந்த மாதிரி முடி கட்டுதலிருந்து ரசூல் தான் சபிச்சாங்க அப்ப ரசூல் சபித்தது யார் சபித்த மாதிரி அல்லாஹ் சபித்த மாதிரி ரசூல் தான் சொன்னாங்க அல்லாஹ் சபித்தானு சொல்லிட்டு அப்புறம் ரசூல் சொன்னா அது எதுல இருக்குற மாதிரி,
குர்ஆன்ல இருக்கிற மாதிரி புரியுதுங்களா அப்ப இந்த வசனம் நமக்கு நேரடியா என்ன விஷயத்தை உறுதி செய்கிறது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக் கொடுத்த சுன்னாவை மீறி நாம் நடக்க முடியாது அவர்கள் தடுத்த விஷயங்களை நாம் எந்த ஒரு அறிவைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது அதைப்போல பாருங்க சூரா ஆல இம்ரானுடைய 132 வது வசனம் அல்லாஹ் சொல்கிறான்
وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்விற்கும், (அவனுடைய) தூதருக்கும் (மார்க்க சட்டங்கள் எல்லாவற்றிலும்) கீழ்ப்படியுங்கள். (அல்குர்ஆன் 3:132)
நீங்கள் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கீழ் படிந்து விடுங்கள் நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து விடுங்கள் நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள் இப்ப இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா சேர்த்துட்டான் எப்படி சேர்த்துட்டான் கீழ்ப்படிதல் என்பது ஒரு கட்டளை யாருக்கு கீழ்ப்படிய வேண்டும் இரண்டு பேரையும் ஒன்னா சேர்த்துட்டான்,
அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கீழ்படியுங்கள் அப்ப இந்த கீழ்படிதலை பிரிச்சு பாக்கலாமா பிரித்து பார்க்க கூடாது நபி ஒன்ன சொல்லிட்டாங்கனா இதற்கு குர்ஆனிலும் ஆதாரம் இருக்கான்னு கேட்கக் கூடாது இப்போ இப்படி தொழுங்கன்னு ரசூலுல்லாஹ் சொல்லி இருக்காங்க முடிஞ்சு போச்சு தொழு வேண்டியது தான் இப்படி குர்ஆன்ல இருக்கான்னு கேட்கக் கூடாது இப்படி ஜகாத் கொடுங்கன்னு ரசூலுல்லாஹ் சொல்லிட்டாங்க இப்படி குர்ஆன்ல இருக்கான்னு கேக்க கூடாது இப்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிய ஒன்றை அந்த ஹதீஸோடு அதை நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர அப்படி குர்ஆனிலே இருக்கா என்று கேட்கக் கூடாது அல்லாஹ் பாதுகாக்கணும்
وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்விற்கும், (அவனுடைய) தூதருக்கும் (மார்க்க சட்டங்கள் எல்லாவற்றிலும்) கீழ்ப்படியுங்கள். (அல்குர்ஆன் 3:132)
அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள் அடுத்து பாருங்க சூரத்துல் அன்ஃபால் உடைய 24 ஆவது வசனம் எப்படி அல்லாஹ் சொல்றான் முஃமின்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு பதில் கொடுங்கள்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும், (அவனுடைய) தூதருக்கும் - அவர் உங்களுக்கு (உயர்வான) வாழ்க்கையை தரக்கூடியதன் பக்கம் உங்களை அழைத்தால் - பதிலளியுங்கள் (உடனே கீழ்ப்படிந்து நடங்கள்!). (அல்குர்ஆன் 8 : 24)
உங்களுக்கு ஹயாத்தை கொடுக்க கூடிய உங்களுக்கு வாழ்க்கையை கொடுக்கக் கூடிய ஒரு காரியத்தின் பக்கம் ரசூல் உங்களை அழைக்கும் பொழுது அவருடைய அந்த அழைப்புக்கு நீங்கள் பதில் கொடுங்கள்
ரசூல் நமக்கு எதெல்லாம் சொல்லித்தரர்களோ அது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு கண்ணியமான வாழ்க்கை கொடுப்பதற்காக தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுக்கக் கூடிய தீன்ல நமக்கு நெருக்கடியான ஒன்றோ கஷ்டமான ஒன்றோ சிரமமான ஒன்றோ இழிவான ஒன்றோ அறவே இருக்காது
இன்னும் ரெண்டு ஆயத்து உங்களுக்கு சொல்றேன் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நீங்க குர்ஆனை சிந்தித்து படிங்க ஆராய்ச்சியோட படிக்கணும் இந்த ரசூலுக்கு கீழ்படிகிறத அல்லாஹுத்தஆலா குர்ஆன்ல அதை ஒவ்வொரு இடத்திலும் அதனுடைய தரஜாவை கூட்டிட்டே போவான் ரசூலுக்கு கீழ்படியக்கூடிய அந்த ஹுக்கும் ரசூலுக்கு ஏன் கீழ்ப்படியனும் ரசூலுக்கு கீழ் படிவதுடைய அவசியம் என்ன அவர்களுடைய பேச்சை ஏன் நான் கேட்கணும்,
இதனுடைய அந்த ஸ்டேட்டஸ் இருக்கு பாருங்க இது அல்லாஹுத்தஆலா குர்ஆன்ல நீங்க சிந்திச்சு படிச்சு பாத்தீங்கன்னா அதுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் இருக்கு பாருங்க அது எப்படி இருக்கும் சொல்லுங்க ஹய் படுத்துகிட்டே போவான் அத ரொம்ப உயர்த்திக்கிட்டே போவான் இப்போ இந்த வசனத்தில் பாருங்ககள்.
لْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 31)
இந்த வசனத்தில் இந்த ஸ்டேட்டஸ அல்லாஹுத்தஆலா எப்படி உயர்த்திட்டான்னு சொன்னா உங்களை நான் விரும்ப வேண்டும் உங்கள் மீது நான் அன்பு வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை முதல்ல சொல்லுங்க விரும்புவீர்களா விரும்ப மாட்டீங்களா அல்லாஹ் அக்பர் அல்லாஹ்வுடைய,
முஹப்பது அல்லாஹ்வுடைய விலாயத்து அல்லாஹ்வுடைய நேசம் அல்லாஹ்வுடைய நெருக்கம் உங்களுக்கு கிடைக்கணும்னு ஆசை இருந்தா நீங்க இந்த ரசூல் பின்னாடி வாங்கன்னுட்டான் இந்த ரசூல் பேச்சை கேளுங்கன்னுடான் இந்த ரஸூல ஃபாலோ பண்ணுங்கன்னு சொல்லிட்டான் அல்லாஹுத்தஆலா இதுக்கு மேல நம்ம என்னங்க யோசிக்க முடியும் சொல்லுங்க எவ்வளவு அழுத்தமான வசனம் இது பாருங்க அல்லாஹ் சொல்றான்:
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ
நபியே நீங்கள் சொல்லுங்கள் முஃமின்களை பார்த்து முஃமின்களே நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் அப்ப அல்லாவை நீங்கள் நேசிக்கும் பொழுது யா அல்லாஹ் நான் உன்னை நேசிக்கிறேன் உன்னுடைய முஹபத் எனக்கு கிடைக்கணும் யா அல்லாஹ் நான் உன்னை வணங்குகிறேன் உன்னுடைய நெருக்கம் விலாயத்தை எனக்கு கிடைக்கணும் நீ என்னை உன்னுடைய நேசன் நான்,
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், - அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10 : 62)
அல்லாஹ்வுடைய நண்பர்கள் மீது பயமில்லை அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் அந்த நண்பர்கள்ல நீங்கள் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டால் புரியுதா அல்லாஹ் சொல்றான் ஒன்னும் இல்ல அதுக்கு நீங்க என்ன செய்ங்க
فَاتَّبِعُوْنِىْ
நபியே நீங்க சொல்லுங்க உங்களை பின்பற்ற வேண்டும் என்று அப்படி பின்பற்றினால்,
يُحْبِبْكُمُ اللّٰهُ
அல்லாஹ் உங்களை தன்னுடைய நேசனாக ஆக்கிக் கொள்வான்.
وَيَغْفِرْ لَـكُمْ
உங்கள மொத்தமா அல்லாஹ் மன்னித்து விடுவான் உங்களை அல்லாஹ் என்ன சிறு பாவங்கள் அது இது இருந்துச்சோ எல்லாத்தையும் அல்லாஹுத்தஆலா இந்த சுன்னத்தை பின்பற்றக் கூடிய பரக்கத்துனால அல்லாஹ் எல்லா பாவத்தையும் அல்லாஹ் மன்னிச்சிடுவான் சுப்ஹானல்லாஹ் அப்போ ரசூலை பின்பற்றுவதில் எந்த அளவுக்கு அல்லாஹ் அதனுடைய தகுதியை உயர்த்தி விட்டான்,
சொல்லுங்க அல்லாஹ்வுடைய முஹபத்துக்கு அதுதான் அடையாளம் அல்லாஹ்வுடைய முஹபத்து கிடைக்கிறதுக்கு அதுதான் வழி புரிஞ்சிச்சா கவனிங்க அடுத்து பாருங்க இந்த ஒரு வசனம் இப்போ இதுக்கு ஆப்போசிட் பின்பற்றுவதற்கு ஆப்போசிட் எல்லாத்துக்குமே ஒரு வினை இருந்தால் எதிர் வினை இருக்குமா இல்லையா அப்போ பின்பற்றுதல் அப்போ அதுக்கு ஆப்போசிட் என்ன மாறு செய்தல் கீழ்ப்படிதல்,
அதற்கு ஆப்போசிட் என்ன முரண்படுதல் அப்போ அதை அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா கடுமையா எச்சரிக்கை செய்து விட்டான் புரியுதா வெறும் பின்பற்றுங்கள் பின்பற்றுங்கள் என்று சொல்லிட்டு போல பின்பற்றவில்லை என்றால் மாறு செய்தால் என்ன தண்டனை என்ன எச்சரிக்கை என்ன வார்னிங் அதையும் அல்லாஹ் சொல்லிட்டான் சூரா அன்னூர் 63வது வசனம் அல்லாஹ் சொல்றான்
لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا قَدْ يَعْلَمُ اللَّهُ الَّذِينَ يَتَسَلَّلُونَ مِنْكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதர் (உங்களுக்கு எதிராக) பிரார்த்திப்பதை உங்களில் சிலர் சிலருக்கு (எதிராக) பிரார்த்திப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய பிரார்த்தனை கண்டிப்பாக நிகழ்ந்துவிடும்.) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை திட்டமாக அல்லாஹ் நன்கறிவான். ஆக, அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைந்துவிடுவதை; அல்லது, வலி தரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைந்துவிடுவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும். (அல்குர்ஆன் 24 : 63)
யார் ரசூலுடைய கட்டளைக்கு ரசூல் உடைய போதனைக்கு மாறாக நடக்கின்றார்களோ அவர்கள் பயந்து கொள்ளட்டும் எச்சரிக்கையாக இருக்கட்டும் குழப்பம் அவர்களுக்கு வரும் என்று கடுமையான வேதனை அவர்களுக்கு வரும் என்று அப்போ இப்ப இஸ்லாம் அகமது பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இந்த ஆயத்துக்கு விளக்கம் சொல்லும் பொழுது சொல்றாங்க குர்ஆன்ல நீங்க குழப்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைو
தேடினா ஃபித்துனா இருக்கில்ல ஃபித்துனானா என்ன அர்த்தம் குழப்பம் குழப்பம் என்ற வார்த்தைக்கு குர்ஆன்ல நீங்க அர்த்தத்தை தேடினால் ஷிர்க்குடைய அர்த்தத்தில் அது பயன்படுத்தப்படும் குழப்பங்குற வார்த்தை எதற்கு பயன்படுத்தப்படுது ஷிர்குடைய அர்த்தத்தில பயன்படுத்தப்படுது அப்ப யாரு சுன்னத்தை மீறி போறாங்களோ பித்அத் செய்றாங்களோ அவங்க எங்க போய்டுவாங்க சொல்லுங்க யாரெல்லாம் சுன்னத்தை,
மீறி அவர்கள் இபாதத்துல போறாங்களோ அவர்கள் சடங்குகளை செய்கிறார்களோ அவர்கள் சுன்னத்தை மீறிய கலாச்சாரத்தை உருவாக்குகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக கண்டிப்பாக கண்டிப்பாக ஷிர்க்கிலே விழுந்து முஷிறிக்காகத்தான் மாறுவார்கள் இந்த தர்கா வழிபாடை எடுத்துக்கோங்க மீளாது மௌலூது இது எல்லாம் டோட்டலி கபுர் ஸியாரத்து எல்லாமே கொண்டு போய் நிறுத்தி பாருங்க எல்லாமே எதனால வந்துச்சு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன அந்த சுன்னத்தை மீறினதால ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்ப என்ன சொன்னாங்க கபூரை ஸியாரத் செய்யுங்கள் என்று சொன்னார்கள் இருக்கா இல்லையா ஹதீஸ் எப்படி ஸியாரத்து செய்யணும் போய் சலாம் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அப்புறம் என்ன செய்யணும், அவங்களுக்காக பாவ மன்னிப்பு தேடுங்கன்னு சொன்னாங்க முடிஞ்சா அப்புறம் என்ன செய்யணும், அங்க நின்னு மறுமையை நினைச்சு பாருங்க ன்னு சொன்னாங்க அப்புறம் என்ன செய்யணும், திரும்பி வந்துடுங்கன்னுனாக முடிஞ்சா இல்லையா இவன் என்ன செஞ்சான் அங்க போய்கிட்டு அங்க போனா எனக்கு பரக்கதுனா அங்க போனா மனசு நிம்மதினா பள்ளிவாசல்ல பொழுது துவா கேளுங்கன்னு அல்லாஹ் சொன்னா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
இவன் சொன்னா அங்க போய் நின்னு துவா கேட்டால் எனக்கு கபூல் ஆகும்னு அல்லாஹ்விடத்திலே தொழுகையைக் கொண்டு சிபாரிசு தேடு என்று அல்லாஹ் சொன்னான் அல்லாஹ்விடத்தில் இபாதத்தை கொண்டு சிபாரிசு தேடு என்று அல்லாஹ் சொன்னான் இவர் என்ன சொன்னாரு அவுலியா கிட்ட போய் சிபாரிசு தேடுவேன் என்றார் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த சிபாரிசு தேட சொன்னாங்க உங்களுடைய ஈமானை கொண்டு சிபாரிசு தேடுங்கள் என்று சொன்னார்கள் அல்லாஹ்வுடைய அழகிய,
பெயர்களைக் கொண்டு வசீலா தேடுங்கன்னு சொன்னாங்க இவர் போய் இறந்து போன அவுலியா கிட்ட போயி அவ்லியா உங்க பரக்கத்தால அல்லாஹ் கிட்ட வாங்கி கொடுங்க உங்க தயவால வாங்கி கொடுங்க அல்லாஹ் அவுலியா கிட்ட வந்து இருக்கேன் அவுலியா தயவால எனக்கு கொடுத்துவிடு என்று முடிஞ்சு போச்சா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னாங்க ஒருத்தர் இறந்துட்டா அவரை அடக்கம் பண்ணுங்க அந்த மண்ணை ஒரு ஒட்டகத்துடைய திமில் அளவு மட்டும் உயர்த்துங்க அங்க பெயர் வைக்காதீங்க பலகை வைக்காதீங்க அதை செங்கல் போட்டு சுண்ணாம்பு போட்டு அதை பக்காவா ஆக்காதீங்க,
என்று சொன்னார்கள் பெயர் பழக வைக்காதீங்க என்றாங்க பக்காவா ஆக்காதீங்க என்றார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த விளக்கு எரிக்காதீங்க என்றார்கள் அதற்கு மேலே கூடாரங்கள் கட்டாதீர்கள் என்றார்கள் எல்லாத்தையும் செஞ்சாங்களா ஷிருக்குல போய் விழுந்தார்களா கடைசில கோவிலா ஆக்கிட்டாங்களா இல்லையா அப்போ சுன்னத்தை மீறினால் கண்டிப்பா என்ன நடக்கும் அங்க ஷிர்க்கு நடக்கும் மௌலூது ஓதுறாங்க ரசூலுல்லாஹ் பெயர்ல முஹபத்துல ஓதுறோம்,
சரிப்பா எங்களுக்கும் அந்த முஹப்பத் வேணும்பா யாரு வேணாம்னா உண்மையிலே முகபத் இல்லனா சொர்க்கத்துக்கே போக முடியாது அதற்கு என்ன செய்யணும் சுன்னத் தொழு சுன்னத்தான நோன்பு வை மௌலது ஓதனும் பித்அத்தா இல்லையா ரசூல் சொல்லாததா இல்லையா என் பெயரில் மவுளது ஓதுங்க முகத்துல என்று எங்கேயாவது ஹதீஸ் இருக்கா இல்ல ரசூலுல்லாஹ் உடைய புகழை தானே பாடுறோம் ரசூலுல்லாஹ் உடைய புகழை,
பாடுவதற்கு அல்லாஹ்வுடைய தூதர் என்ன வழி காட்டுனாங்க என்னை வரம்பு மீறி புகழாதீர்கள் என்று சொன்னார்களே சேர்த்து என்னை வரம்பு மீறி புகழாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்களே அப்போ சஹாபாக்கள் எப்படி ரசூலுல்லாஹ்வை புகழ்ந்தார்கள் என்று பாருங்கள் தாபியீன்கள் எப்படி ரசூலுல்லாவை புகழ்ந்தார்கள் என்று பாருங்கள் அதை விட்டுட்டு ஷிர்க்கான வாசகங்களைக் கொண்டு ரசூல்லாவை நீங்க புகழ்வீங்கன்னு சொன்னா அதை ஓதி ஒரு இபாதத்தா ஆக்கிக் கொள்வீர்கள் என்று சொன்னா அப்படி எங்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்துல ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புகழப்பட்டார்களா?
இல்லையா புகழப்பட்டார்கள் அவர்களை புகழ்ந்து கவிதைகள் பாடினார்களா இல்லையா எப்போ பிரச்சாரமும் அப்பா செஞ்சாங்க அதை ஒரு தனி இபாதத்தா உட்கார்ந்து செய்யல சரி அப்படிப்பட்ட கவிதைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு அதை எல்லாரும் சேர்ந்து என் பிறந்த நாளில பங்க்ஷனா செய்யுங்க அதுதான் என் முஹபத்துக்கு அடையாளம் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க அப்ப நீங்க பாருங்க,
எந்த ஒன்றிலும் சுன்னத்துக்கு மாற்றமா போனால் கண்டிப்பா அங்க எதுல வந்து விழுகும் ஷிர்க்குல வந்து விழுகும் அல்லாஹ் பாதுகாக்கணும் அப்போ சுன்னத் என்பது தவ்ஹீதுக்கு வழியாக இருக்கிறது பித்அத் என்பது ஷிர்க்கிற்கு வழியாக இருக்கிறது சுன்னத் எதற்கு வழி தவ்ஹீத் அல்லாஹ் ஒருவனை மட்டும் கலப்பற்ற முறையில் வணங்குவதற்கு உண்டான பரிசுத்தமான வலி பித்அத் என்பது ஷிர்க் அது ஒரு சிலை வழிபாட்டுக்கு அது ஒரு உருவ வழிபாட்டுக்கு அது ஒரு அல்லாஹ் அல்லாதவரை வழிபடுவதற்கு உண்டான வழியாக ஆகிவிடும் அல்லாஹ் பாதுகாக்கணும் இன்ஷா அல்லாஹ் ஒரு சிறிய பிரேக் எடுத்துக்குவோம்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/