முன்மாதிரி முஸ்லிம் பெண்மணியின் தன்மைகள் | Tamil Bayan - 692
முன்மாதிரி முஸ்லிம் பெண்மனியின் தன்மைகள்
தலைப்பு : முன்மாதிரி முஸ்லிம் பெண்மனியின் தன்மைகள்.
வரிசை : 692
இடம் : தாருஸ்ஸலாம் பெண்கள் மதரஸா, மகாராஜபுரம்
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -06-02-22 | 05-07-1443
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய உலமாக்களே! சமூக மக்களே! அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வுடைய அருளால், இந்த மார்க்க நிகழ்ச்சியில் உங்களை சந்தித்து, அல்லாஹ்வைப் பற்றியும், அல்லாஹ்வுடைய தீனை பற்றியும், மறுமையைப் பற்றியும், சில நல்ல விஷயங்களை பரிமாறிக் கொள்வதற்கு, அல்லாஹுதஆலா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ்!
உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது. கலந்து கொள்ளக் கூடிய ஒவ்வொருவருக்கும், அவர் பேசக் கூடியவராக இருந்தாலும் சரி, பேச்சை கேட்பவராக இருந்தாலும் சரி, மிகவும் பயனுள்ளது அவசியமானது.
காரணம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக அன்பு சகோதரிகளே! நம்முடைய இறை நம்பிக்கை ஈமான் அதிகமாகிறது, நம்முடைய தக்வா அதிகமாகிறது, நம்மைப்பற்றி நாம் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு, ஒரு தூண்டுதலாக, ஒரு உறுத்தலாக அது இருக்கிறது.
நாம் தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், தெரிந்த விஷயங்களை நினைவு படுத்திக் கொள்வதற்கும், மார்க்கத்தில் நம் இடத்தில் இருக்கின்ற பலவீனத்தை உணர்வதற்கும், நம்மிடத்தில் இருக்கின்ற குறைகளை சரி செய்து கொள்வதற்கும், இது போன்ற மார்க்க உபதேச நிகழ்ச்சிகளிலே, கலந்து கொள்வது,
அன்பு சகோதரிகளே! மிக முக்கியமான ஒன்று. மிக அவசியமான ஒன்று. அல்லாஹ் விரும்பக்கூடிய சபை இந்த சபை என்பதை மறந்து விடாதீர்கள். அல்லாஹுதஆலா நேசிக்கக் கூடிய. அல்லாஹுதஆலாவின் விசேஷமான அருளும், அன்பும், மன்னிப்பும் கிடைக்கக் கூடிய சபை இப்பொழுது நாம் இருக்கக்கூடிய இந்த கண்ணியமான கல்வி சபை.
இதற்கு சமமாக, ஈடாக, உலகத்திலுள்ள எந்த செல்வமும், எந்த பதவியும், சமமாக ஈடாக ஆகவே முடியாது. அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா இதுபோன்ற சபைகளில், கலந்து பொறுமையாக இருக்க வேண்டும் என்று, தனது நபிக்கு கட்டளையிட்டிருக்கிறான்.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
மேலும், தங்கள் இறைவனை அவனுடைய முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் (அவனை தொழுது) பிரார்த்திப்பவர்களுடன் உம்மை தடுத்து (அமர) வைப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்பியவராக அவர்களை விட்டு உம் இரு கண்களும் அகன்றிட வேண்டாம். இன்னும், எவனுடைய உள்ளத்தை நம் நினைவை மறந்ததாக ஆக்கிவிட்டோமோ அவனுக்குக் கீழ்ப்படிந்து விடாதீர்! அவன் தனது (கெட்ட) விருப்பத்தையே பின்பற்றினான். மேலும், அவனுடைய காரியம் எல்லை மீறியதாக (நாசமடைந்ததாக) ஆகிவிட்டது. (அல்குர்ஆன் 18 : 28)
சகோதரிகளே! அல்லாஹுதஆலா கூறுகிறான்: நம்முடைய நபியைப் பார்த்து (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்). நபியே! நீங்கள், உங்களை அடக்குங்கள், உங்களை கட்டுப்படுத்துங்கள். எந்த மக்கள் அல்லாஹ்வை காலையில் மாலையில் பிரார்த்தனை செய்கிறார்களோ, அல்லாஹ்வை வணங்குகிறார்களோ, அல்லாஹ்விடத்தில் துவா கேட்கிறார்களோ, அந்த மக்களோடு அமர்வதிலே. அவர்களோடு பழகுவதிலே. நீங்கள் உங்களை அடக்கி வையுங்கள். கட்டுப்படுத்தி வையுங்கள். அவர்களை விட்டு உங்கள் பார்வைகள் அங்குமிங்கும் திரும்பி விட வேண்டாம். உலக வாழ்க்கையின் மீது ஆசை ஏற்பட்டு, உங்களுடைய பார்வை திரும்பி விட வேண்டாம் என்று.
நம்முடைய நபி (ஸல்) கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்ட, அல்லாஹ்வுடைய தக்வா நிறைவாக கொடுக்கப்பட்ட, டாபிக் இந்த கட்டளை என்றான்.
சகோதரிகளே ஈமானில் பலவீனமாக இருக்கின்ற, தக்வாவிலே பலவீனமாக இருக்கின்ற, நம் போன்றவர்களுக்கு இந்த சபை எவ்வளவு முக்கியம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அன்பு சகோதரிகளே இன்று நம்முடைய உள்ளங்கள், ஈமானுடைய அந்த விஷயத்தில், தக்வாவுடைய இறையச்சத்தின் விஷயத்திலே, காய்ந்துப் போயிருக்கின்றன. அந்த ஈமானிய உணர்வுகளை நம்முடைய உள்ளங்களிலே, வற்றிப் போய் இருக்கின்றன.
அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா சொல்லக்கூடிய அளவுகோலை கொண்டு நம்முடைய ஈமானை நாம் பரிசோதனை செய்து பார்த்தால், நாம் கண்ணீரால் அல்ல ரத்தத்தால் அழக்கூடிய அந்த நிலையில் தான் இருப்போம். அல்லாஹுதஆலா சொல்கிறான்.
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்கள். (அல்குர்ஆன் 8 : 2)
முஃமின்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்ட மூஃமின்கள் யார் என்றால், அவர்களுக்கு முன்னால் அல்லாஹ்வைப் பற்றி பேசப்பட்டால். அல்லாஹ்வுடைய வல்லமையைப் பற்றி, அல்லாஹ் உடைய அந்த உயர்வைப் பற்றி, அல்லாஹ்வுடைய மகத்துவத்தைப் பற்றி, கண்ணியத்தைப் பற்றி, பேசப்பட்டால், அந்த முஃமீன்களுடைய உள்ளங்கள் நடுங்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
وَجِلَتْ قُلُوْبُهُمْ
பயம் கலந்த, அல்லாஹ்வின் மீது பாசம் கலந்த அந்த கண்ணியத்தோடு, அவனுடைய அந்த மதிப்பு, மரியாதையோடு கலந்த, நடுக்கம் உள்ளத்திலே ஏற்பட வேண்டும். என்று அல்லாஹ் சொல்கிறான்.
அவர்களுக்கு முன்னால், குர்ஆனுடைய வசனங்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஓதப்படும் போது, அந்த வசனங்களுக்கு ஏற்ப, அவர்களுடைய ஈமான் இறை நம்பிக்கை, அதிகரிக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்து இருப்பார்கள்.
அல்லாஹ்வை விட்டு தங்களுடைய கவனத்தை, தங்களுடைய சிந்தனையை, நம்பிக்கையை ஒரு போதும் அவர்கள் வேறொரு பக்கம் திருப்பி விட மாட்டார்கள். இத்தகையத் தன்மை இறைநம்பிக்கையாளர்கள் மூஃமின்கள் உடைய தன்மை என்று அல்லாஹ் சொல்கிறான். அன்பு சகோதரிகளே கொஞ்சம் சுய பரிசோதனை செய்து பார்ப்போம். இத்தகைய இறை நம்பிக்கை நம்மிடத்தில் இருக்கிறதா. இந்த இறை நம்பிக்கை உடைய முஃமீன்களாக நாம் இருக்கிறோமா?
ஒன்று இருக்கிறது நாம் நம்முடைய விருப்பபடி வாழ்வது. இன்னொன்று அல்லாஹ்வினுடைய விருப்பப்படி வாழ்வது. கவனமாக கவனியுங்கள். ஒரு வாழ்க்கை எப்படிப்பட்டது. நாம் விரும்பியபடி வாழ்வது, நமக்கு எதை பிடிக்கிறதோ அதை செய்வது, எதை பார்க்க பிடிக்கிறதோ அதை பார்ப்பது. எதைக் கேட்க பிடிக்கிறதோ அதை கேட்பது. எங்கே செல்ல விரும்புகிறோமோ, அங்கே செல்வது. இது ஒரு வாழ்க்கை.
சகோதரிகளே! இன்னொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கை அல்லாஹ்வுக்காக வாழக்கூடிய வாழ்க்கை. முஃமீன்களுடைய வாழ்க்கை. மறுமையை நம்பிக்கை கொண்டவர்கள் உடைய வாழ்க்கை. சொர்க்கத்தை நம்பிக்கை கொண்டவர்களுடைய வாழ்க்கை. மறுமையின் விசாரணையை நம்பிக்கை கொண்ட வாழ்க்கை. அல்லாஹ் சொல்கிறான் அல்லவா!
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
(நபியே) கூறுவீராக: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (-நீங்கள் வணங்குவதற்கு தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை பயப்படுவாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! இன்னும், தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!” (அல்குர்ஆன் 18 : 110)
யார் தன்னுடைய இறைவனுக்கு முன்னால் நின்று, தன்னுடைய ரப்புக்கு முன்னால் நின்று. அவனை நாளை மறுமையில் சந்திக்க வேண்டும். அவனுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ற பயம் உள்ளவனாக இருக்கிறானோ, அவன் நல்ல அமல்களை செய்யட்டும். தனது ரப்புக்கு இணை வைக்க வேண்டாம் என்று அல்லாஹ் வழிகாட்டுகிறான் அல்லவா. அந்த பயம் உள்ளவர்கள் மறுமையின் பயம் உள்ளவர்களின் வாழ்க்கை.
ஆஹிரத்தின் உடைய அந்த பயத்தோடு வாழக்கூடிய மூஃமின்களுடைய வாழ்க்கை. சகோதரிகளே இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். நம்மில் அதிகமானவர்களுக்கு, இந்த உலகத்திலே நாம் ஏன் வாழ்கிறோம், என்று வாழ்க்கையின் நோக்கமே தெரியாமல் இருக்கிறார்கள். எதற்காக வாழ்கிறோம். இந்த உலகம் நமக்கு எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் உடைய லட்சியம் என்ன. என்று நம்மிடத்தில் கேட்கப்பட்டால், பதில் தெரியாதவர்களாக நம்மிலே பலர் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இதே கேள்வி நம்முடைய முந்தைய ஸஹாபாக்களை கேட்டு, அவர்களது காலத்தில் உள்ள மக்களை பார்த்து கேட்கப்பட்டால், அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள். இங்கே இன்னொரு விஷயத்தையும் புரியவேண்டும் சகோதரிகளே!
சொல்வது வேறு, செயலிலே இருப்பது வேறு, சொல்வது தான் செயலில் இருக்கிறதா? இலகுவாக நாம் சொல்லிவிடலாம். ஆனால், அந்தச் சொல்லுக்கு ஏற்ப, நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோமா, அந்தச் சொல்லுக்கு ஏற்ப, நம்முடைய வாழ்க்கையை மாற்றி இருக்கிறோமா. நம்முடைய ஈமான் நம்முடைய வாழ்க்கையை மாற்றி இருக்கிறதா. நம்முடைய கலிமா நம்முடைய வாழ்க்கையை மாற்றி இருக்கிறதா. மாப் ஓதக்கூடிய குர்ஆன் நம்முடைய வாழ்க்கையை மாற்றியதா. நாம் படிக்கக்கூடிய ஹதீஸ் நம்முடைய வாழ்க்கையை மாற்றியதா.
நாம் அன்றாடம் கேட்கக்கூடிய ஸஹாபிய பெண்களின் வாழ்க்கை வரலாறு. நம்முடைய வாழ்க்கையை மாற்றி இருக்கிறதா. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நான் மூடிய மாற்றங்கள் எல்லாம் அன்றாடம் படுகிறோம் அல்லவா பத்திரிகைகளிலே, அவற்றைப் பார்த்து தான் நம்முடைய வாழ்க்கை மாறி இருக்கிறது.
நம்முடைய காலத்தில் யார் அல்லாஹ்வை மறந்தவர்களாக, உலக மோகத்தில் மூழ்கி, உலகம் தான் வாழ்க்கை, செல்வம் தான் வாழ்க்கை, பணம் தான் வாழ்க்கை, ஆடம்பரம் தான் வாழ்க்கை என்று, இந்த உலக வாழ்க்கையில் மூழ்கி இருக்கிறார்கள் அல்லவா.
அவர்களைப் பற்றி அன்றாடம் நாம் படிக்கக் கூடிய செய்திகள். அவர்களைப்பற்றி நாம் கேட்கக்கூடிய அந்த நிகழ்வுகள். அவர்களுடைய வாழ்க்கை. அந்த கலாச்சாரங்கள். நம்மை பாதித்து, நம்மை மயக்கி, நம்மையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அந்த நரகப் படுகுழியில் தள்ளி இருக்கிறது சகோதரர்களே.
ஈமானுடைய ஒரு சகோதரன். ஈமானுடைய ஒரு சகோதரி கிடைப்பது. இப்பொழுது மிக அரிதாக இருக்கிறது. சிலர் கேட்கலாம் என்ன சொல்கிறீர்கள். பள்ளிவாசலில் தொழுகையாளிகள் இல்லையா. அவர்களுக்கு ஈமான் இல்லையா. ஹிஜாப் அணிந்த பெண்கள் இல்லையா. அவர்கள் ஈமான் உள்ளவர்கள் இல்லையா என்று.
சகோதரிகளே! தொழுகை ஈமான் தான். ஈமானுடைய அடையாளம்தான். ஹிஜாப் ஈமான் தான். ஈமானுடைய அடையாளம்தான். ஆனால் இதன் மூலமாக நமது உள்ளத்திலே, நமது கல்பில் ஏற்படக்கூடிய, அந்த ஈமானிய தன்மை. ஈமானிய உறுதி. ஈமானிய மாற்றம். சகோதரிகளே அதுதான் மிக முக்கியமானது.
அதோடு நம்முடைய தொழுகை இருக்க வேண்டும். அதோடு நம்முடைய தாடி இருக்க வேண்டும். அதோடு நம்முடைய ஹிஜாப் இருக்க வேண்டும். அந்த உள்ளத்தில் இருக்கக்கூடிய மாற்றமில்லாமல். இந்த தாடி இருக்குமேயானால், இந்த உடை இருக்குமேயானால், இந்த வெளிப்படையான இந்த அமல்கள் இருக்குமேயானால், அல்லாஹ்விடத்திலே அது எந்தவிதமான நன்மையும் தராது. அது மறுமையுடைய அமல்கள் ஆக ஆகாது.
நீங்கள் கேட்கலாம் எப்படி அது. நீங்கள் குர்ஆனை படித்து இருக்கலாம். எந்த தொழுகையைக் குறித்து அல்லாஹுதஆலா. தொழுகை வெற்றிக்கான காரணம் என்று சொல்கிறானோ, அதே அல்குர்ஆனிலே
அல்லாஹுதஆலா. தொழ கூடியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறான்.
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1, 2)
நம்முடைய ரப்பு சொல்கிறான் முஃமின்கள் வெற்றி அடைந்தார்கள். யார் அவர்கள். அந்த ஈமான் அவர்களது உள்ளத்திலே, உறுதியாக, சுத்தமாக, சரியாக இருக்கிறது என்பதன் அடையாளத்திலே. அவர்கள் தொழுவார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. அவர்கள் தங்களுடைய தொழுகையிலே, உள்ளச்சம் உடையவர்களாக, பயபக்தி உடையவர்களாக, அல்லாஹ்வை பயந்தவர்களாக, நடுங்கியவர்களாக நிற்ப்பார்கள். என்று அல்லாஹ் சொல்கிறான்.
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ
தொழ கூடிய மூஃமின்கள் வெற்றி அடைந்து விட்டார்கள். என்று அல்லாஹ் சொல்லவில்லை. எப்படி சொல்கிறான். தங்களது தொழுகையில், நாம் என்ன ஓதுகிறோமோ, அந்த நினைவோடு தொழுவது. நாம் யாரை தொழுகையில் நினைக்கிறோமோ திக்ருகளை கொண்டு, அந்த ரப்பு உடைய நினைவு நாவில், வாசிப்புகளாக, வாசகங்களாக, உச்சரிப்புகளாக மட்டுமில்லாமல், உள்ளத்திலே அந்த நினைவு ஏற்படுவது. நாவு அல்லாஹ்வுடைய திக்ருகளின் வாசகங்களை சொல்கிறது. سبحان ربي العظيم ,سبحان ربي الأعلى என்று சொல்லும்போது, இந்த நாவு அல்லாஹ்வை நினைக்கிறது.
இந்த நாவோடு சேர்ந்து, கல்பும் நம்முடைய உள்ளமும், அல்லாஹ்வை நினைக்கும் போது, பிறகு அந்த நினைத்தலோடு சேர்ந்து, அல்லாஹ்வுடைய அந்த மஃஹ்ரிஃபத். அல்லாஹ்வுடைய அறிவு, ரப்பை பற்றிய அறிவு, ரப்பு உடைய கண்ணியத்தை பற்றிய அறிவு, சேர்ந்து உள்ளத்திலே அன்பும் பாசமும் கலந்த பயத்தை ஏற்படுத்துவது.
இது ஹுஷூஹு சகோதரிகளே. எப்படி பயமும் இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் என்ன இருக்க வேண்டும். பாசம் ரப்புடைய அன்பும் இருக்க வேண்டும். பயம் மட்டும் இருந்தால் போதாது. அன்பு மட்டும் இருந்தால் போதாது. அன்பும் பாசமும் கலந்து இருக்க வேண்டும். அல்லாஹுதஆலா சொல்கிறான் தங்களுடைய நபிமார்களைப் பற்றி.
فَاسْتَجَبْنَا لَه وَوَهَبْنَا لَه يَحْيٰى وَاَصْلَحْنَا لَه زَوْجَه اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 21 : 90)
ஹுஷூ உடைய விளக்கத்தை நபிமார்களின் வாழ்க்கையில் இருந்து அல்லாஹ் சொல்கிறான். நபிமார்கள் தொழும்போது ஆசையோடு தொழுவார்கள். தொழுகை என்ற நேரம் வந்தவுடன், உள்ளத்திலே ஆசை வர வேண்டும். நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கான, சொர்க்கத்தை வாங்குவதற்கு நேரம் வந்துவிட்டது. என்ற ஆசை வர வேண்டும்.
சகோதரிகளே! என்று நம்மில் எத்தனை பேருக்கு இந்த ஆசை. தொழுகை உடைய நேரத்தை நாம் இப்படி அழுகுகிறோமா. எத்தனையோ மதரசாக்களில் படித்த, மாணவ மாணவிகளை பார்க்கிறோம். கவலையான வருத்தத்திற்குரிய ஒரு செய்தி. அல்லாஹுதஆலா கூறுகிறான் அல்லவா.? நயவஞ்சகர்கள் உடைய அடையாளமாக,
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا
நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள் (என்று நினைக்கிறார்கள்). அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன் ஆவான். இன்னும், அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; இன்னும், குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூரமாட்டார்கள். (அல்குர்ஆன் 4 : 142)
அவர்கள் தொழுகைக்கு அழைக்கப்பட்டால், தொழுகைக்கு என்று தயாராவதற்கு, மாற்றலாக, சோம்பேறிகளாக, அலட்சியத்தோடு அவர்கள் தொழுகைக்கு செல்வார்கள்.
தொழுகைக்கு செல்ல மாட்டார்கள் என்று நயவஞ்சகர்களை அல்லாஹ் சொல்லவில்லை. எப்படி சொல்கிறான். சோம்பேறித்தனத்தோடு தொழுகைக்கு செல்வார்கள். மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகைக்கு செல்வார்கள். என்று அல்லாஹ் சொல்கிறான். இன்று பலருடைய நிலை அப்படித்தான்.
சகோதரிகளே! ஈமானுடைய அடையாளங்களில் ஒன்று. தொழுகை நேரத்தில் எதிர்பார்த்து இருப்பது. தொழுகையின் நேரத்தை ஆசையோடு ஆவலோடு எதிர்பார்த்து இருப்பது.
இன்று பல விஷயங்களை நாம் ஆழமாக சிந்தித்து புரிய வேண்டும். இன்று முஸ்லிம் சமுதாயத்தை உடைய சீர்கேடுகளில், குறிப்பாக பெண்கள் இடத்திலே, ஏற்பட்ட சீர்கேடுகளை எல்லாம் ஒரு பக்கம் எழுதி, அதன் அடிப்படையை காரணமாக சிந்திப்போமே யானால், தொழுகையில் அவர்கள் செய்த அலட்சியம்.
ஒவ்வொரு நாளும் அந்த அலட்சியம் அதிகரித்து அதிகரித்து, கேன்சர் நோயை போல, அது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பொழுது, கடைசியில் அந்த மனிதரை முழுமையாக கொன்றுவிடும். அப்படித்தான் இந்த அலட்சியமானது நமது முஸ்லிம் சமுதாயத்திலே கூடிக்கூடி கடைசியிலே அவர்களது உள்ளத்தில் ஈமானை முற்றிலுமாக அகற்றி விட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
சகோதரிகளே! அல்லாஹுதஆலா தொழுகையாளிகளைப் பற்றி சொல்லும் பொழுது, இரண்டு விதமான தொழுகையாளிகளை அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். தொழுகை அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட ஒரே இபாதத். ஒரே வணக்கம். அதில் ஓதப்படுகிற எல்லா விஷயங்களும் ஒரே மாதிரியான விஷயங்கள்தான். ஆனால் அதை நிறைவேற்ற கூடியவர்களை கவனித்து.
அதை நிறைவேற்றக்கூடிய மக்களைக் கவனித்து, ஒரு கூட்டத்துக்கு அந்தத் தொழுகை வெற்றியின் காரணமாக, அல்லாஹ்வுடைய அன்புக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்புக்கு அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு காரணமாக ஆகிவிட்டது. அதே தொழுகை. ஒரு பட்டதெல்லாம் அதையே தான். அதில் செய்யப்பட்ட திக்ருகள் எல்லாம் அதே தான். ஆனால் அதே தொழுகை.
சகோதரிகளே! இன்னொரு கூட்டத்தார்களுக்கு, அல்லாஹ்வுடைய கோபத்திற்கு, அல்லாஹ்வுடைய சாபத்திற்கு, நரகத்திற்கு காரணமாக ஆகிவிட்டது. அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் பாருங்கள்.
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 107 : 5)
இது எந்த தொழுகை. எந்த தொழுகையிலே. அந்த தொழுகையாளிகள் அலட்சியத்தோடு. மறதியோடு இருக்கிறார்களோ, அதனுடைய நேரம் வந்ததற்குப் பிறகும் கூட, தொழுகையின் பக்கம் செல்ல வேண்டும். ரப்புக்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற. ஈமானிய உணர்வு இல்லாமல் இருக்கிறார்களோ, அத்தகைய தொழுகையாளிகளை குறித்து, அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
தொழுகையின் உடைய நேரம் வந்தது வந்தது. அந்த நேரத்தை அவர்கள் கடத்திக் கொண்டே இருந்தார்கள். இன்னும் சிறிது நேரம் கழித்து தொழுவோம். இன்னும் சிறிது நேரம் கழித்து என்று. கடைசியிலே அந்த தொழுகை நேரம் முடிவதற்கு வந்தவுடனே,
அவசர அவசரமாக ஒதுவை செய்தார்கள். அதை பூரணமாக செய்யவில்லை. பிறகு அவசர அவசரமாக தொழுதார்கள். அதிலே நிலையில் சரியாக நிற்கவில்லை. ருக்குவை சரியாக செய்யவில்லை. சுஜூதை சரியாக செய்யவில்லை. அத்தகைய தொழுகையாளிகள் குறித்து அல்லாஹ் சொல்கிறான்.
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ
அந்தத் தொழுகையாளிகளுக்கு فَوَيْلٌ என்ற கேடு. நரகம் உண்டாகட்டுமாக.
وَيْلٌ
பற்றி அறிஞர்கள் பல விளக்கங்களை சொல்லுகின்றார்கள். ஒன்று நாசம் கேடு அழிவு என்ற விளக்கத்தை சொல்லக்கூடிய, முஃபஸ்ஸிர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் وَيْلٌ என்பது நரகத்தின் உடைய ஒரு பெரிய பள்ளத்தாக்குகள். அந்த பள்ளத்தாக்கிலே நரகவாதிகள் உடைய, உடம்பில் இருந்து வரக்கூடிய, சீல் சலங்கள் எல்லாம், அவர்கள் உடம்பில் இருந்து வடியக்கூடிய ரத்தங்கள் எல்லாம், அந்தப் பள்ளத்தாக்கில் ஓன்றுகூடும்.
அது கொதிக்க வைக்கப்படும். அதனுடைய துர்நாற்றம் கொதித்த அதனுடைய வேகம் எப்படி என்றால், நரகத்தினுடைய மற்ற பகுதிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடும். யா அல்லாஹ் அந்த இடமாக எங்களை ஆக்கிவிடாதே. அந்த அளவு கடுமையான வேதனை தண்டனை நிறைந்த ஒரு இடம்தான் அந்த வழிகெட்ட இடம்.
சகோதரிகளே! அந்த இடத்தை அந்த கலங்கத்தின் அந்த பகுதி, யாருக்கு என்று அல்லாஹ் சொல்கின்றான்.
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ
தொழுகையை அலட்சியம் செய்து, அதனுடைய நேரத்தை வீணடிக்க கூடிய, அந்தத் தொழுகையை வீணடிக்க கூடிய, தொழுகையாளிகளுக்கு அந்த இடம் என்று அல்லாஹ் சொல்கிறான். சகோதரிகளே! இப்பொழுது நம்மை கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்ப்போம். அல்லாஹ் சொல்கிறானே!
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْن
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ
(அல்குர்ஆன் 23 : 1, 2)
தொழுகையில் உள்ளச்சத்தோடு இருந்து வெற்றி பெற்றார்கள். மூஃமின்கள் என்று. அந்த மூஃமின்களிலே இருக்கிறோமா? அல்லது, அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
இன்னொரு பக்கம் நயவஞ்சகர்களை பற்றி அல்லாஹ் சொல்கிறானே. அவர்கள் தொழுவார்கள். ஆனால் தொழுகைக்கு அலட்சியத்தோடு வருவார்கள். சோம்பேறிகளாக தொழுகைக்கு வருவார்கள். வெறுப்போடு தொழுகையில் நிற்பார்கள்.
அல்லாஹ்வை அவர்கள் நாவால் திக்ரு செய்வார்கள். அவர்கள் உள்ளம் அல்லாஹ்வை திக்ரு செய்யாது. அதுமட்டுமல்ல அந்த தொழுகையில் மறதியாளர்கள் ஆக இருப்பார்கள். என்று அல்லாஹ் சொல்கிறானே. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்தப் பட்டியலிலே நாம் இருக்கிறோமா.
ஆகவேதான் சகோதரிகளே! நான் உங்களுக்குச் சொன்னேன். வாழ்க்கை இரண்டு விதமான வாழ்க்கை. ஒரு வாழ்க்கை எத்தகைய வாழ்க்கை. நாம் விரும்பக்கூடிய வாழ்க்கை. மனிதன் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளக்கூடிய வாழ்க்கை.
இன்னொரு வாழ்க்கை எத்தகைய வாழ்க்கை. அல்லாஹ்வின் விருப்பத்திற்கு ஏற்ப, நம்மைப் படைத்த ரப்புடைய விருப்பத்திற்கு ஏற்ப, நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வது.
என் அன்பு சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம். இஸ்லாமிய சமுதாயம். இன்று உங்களுடைய தேவை உள்ளதாக இருக்கிறது. உங்களின் சீர்திருத்தத்தின் பக்கம், உங்களின் நன்மையின் பக்கம், உங்களுடைய நல் ஒழுக்கத்தின் பக்கம், உங்களுடைய தக்வாவின் பக்கம், உங்களுடைய வணக்க வழிபாட்டின் பக்கம், உங்களின் நற்குணங்களின் பக்கம், உங்களுடைய பேணுதல், உங்களுடைய தொழுகை. உங்களுடைய இறையச்சம் உங்களின் நம்பிக்கையின் பக்கம், தேவை உள்ள சமுதாயமாக இன்று இஸ்லாமிய சமுதாயம் இருக்கிறது என்பதை. மறந்துவிடாதீர்கள்.
உங்களில் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்கள். உங்களில் ஏற்படக்கூடிய அந்த ஈமானிய புரட்சி. ஈமானின் முன்னேற்றம், தக்வாவின் முன்னேற்றம். நல்லொழுக்கத்தின் உடைய நல்ல மாற்றங்கள். உங்கள் இடத்தில் ஏற்படக்கூடிய அந்த மார்க்கப்பற்று. இது இன்று நம்முடைய சமுதாயத்தை. இன்ஷா அல்லாஹ்!
நம்முடைய சமுதாயத்தை அல்லாஹ்வுடைய கோபத்தில் இருந்து பாதுகாக்க கூடியதாக இருக்கிறது. இந்த சமுதாயத்தை அழிவிலிருந்து, எதிரிகளுடைய ஆதிக்கத்திலிருந்து, அல்லாஹ்வுடைய சாபத்திலிருந்து, இந்த சமுதாயம் மாற்றார் கண்முன்னால். வீழ்ச்சி அடைவதில் இருந்து, பாதுகாக்க கூடியதாக இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
யாரும் இப்படி நினைத்துவிட வேண்டாம். என்னுடைய தொழுகையால், என்னுடைய நல்ல மாற்றத்தால், என்னுடைய தக்வாவினால், என்னுடைய இபாதத்தினால், என்ன மாற்றம் ஏற்படப் போகிறது. என்று யாரும் தயவு செய்து நீங்கள் நினைத்து விடாதீர்கள்.
உங்களுடைய ஒவ்வொரு நல்ல மாற்றமும், உங்களிடம் ஏற்படக்கூடிய அந்த ஒவ்வொரு நல்லொழுக்கத்தின் முன்னேற்றமும் ஈமானிய இபாதத் உடைய இறையச்சத்தின் உடைய, நற்குணத்தின் உடைய ஒவ்வொரு நல்ல மாற்றமும், இந்த சமுதாயத்தை அல்லாஹ்வுடைய கோபத்தில் இருந்தும், மறுமை உடைய தண்டனையில் இருந்தும், உலகத்தினுடைய அழிவிலிருந்து பாதுகாக்க கூடியது. என்பதை மறந்து விடாதீர்கள்.
அதேசமயம் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டும். உங்களிலே ஏற்படக்கூடிய, கெட்ட மாற்றங்கள். ஒழுக்கக் கேடுகள். சமூக சீர்கேடுகள். இது அல்லாஹ்வுடைய கோபத்தை இந்த சமுதாயத்திற்கு தந்துவிடும்.
இம்மையிலும் சரிய மறுமையிலும் சரி, உங்களில் ஏற்படக்கூடிய மார்க்கப்பலவீனம். ஈமானுடைய பின்னடைவு, உங்களிலே ஏற்படக்கூடிய தக்வாவின் குறைவு. இந்த சமுதாயத்தை சீரழித்து விடும். இந்த சமுதாயத்தை கேவலப் படுத்தி விடும். அவமானப் படுத்தி விடும். இந்த சமுதாயத்தின் உடையார் கண்ணியத்தை அடியோடு புதைத்து விடும்.
உங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். உங்களுடைய நன்மை, உங்களுடைய ஒழுக்கம், உங்களுடைய ஈமான், உங்களுடைய தக்வா, உங்களுடைய இபாதத், இந்த சமுதாயத்தின் வெற்றிக்கு காரணமாக அமையப் போகிறது. உங்களுடைய வெற்றிக்கு மட்டுமல்ல. இந்த சமுதாயத்தின் வெற்றிக்கும், கண்ணியத்திற்கும், சகோதரிகளே! அல்லாஹ் பாதுகாப்பானாக!
உங்களில் ஒரு கெட்டது ஏற்பட்டு விட்டால், உங்களில் ஒழுக்கக்கேடு நிகழ்ந்துவிட்டால், குணத்தில், ஈமானில், மார்க்கப்பற்றிலே. உங்களிடத்திலே சீரழிவு ஏற்பட்டுவிட்டால், அந்த சீரழிவு உங்களோடு மட்டும் நின்று விடாது. உங்களது குடும்பத்தோடு முடிந்து விடாது. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அது ஒரு சாபக்கேடாக மாறிவிடும். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
சகோதரிகளே! இரண்டு வாழ்க்கையை சொல்லி, ஒன்று அல்லாஹ்வுக்காக வாழ்வது. அல்லாஹ் கூறக்கூடிய வாழ்க்கை வாழ்வது. என்னுடைய ரப்பு என்னுடைய ரப்பு ரப்பி ரப்பி என்று சொல்லுகிறோம் அல்லவா! அல்லாஹ் சொல்கிறானே!
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ
இன்னும், உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால்) பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 5 : 2)
உங்கள் ரப்பின் பக்கம் திரும்பி, அவனை முன்னோக்கி வாழுங்கள் என்று. அதென்ன ரப்பை முன்னோக்கி வாழ்வது. ரப்பின் பக்கம் திரும்பி வாழ்வது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டு சொல்கிறார்கள்.
நான் அழைப்பது அல்லாஹ்வின் பக்கம் தான். நான் திரும்பி இருப்பதும் அல்லாஹ்வின் பக்கம் தான். யாராவது யோசித்திருக்கிறோமா. அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது என்றால் என்ன.
இப்பொழுது ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. ஒரு மஸ்ஜித் இருக்கிறது. ஒரு வீடு இருக்கிறது. நீ எங்கே செல்கிறாய். நான் என் வீட்டை நோக்கி செல்கிறேன். நான் எனது பள்ளிக் கூடத்தை நோக்கி செல்கிறேன். நான் எனது கடையை நோக்கி செல்கிறேன். சகோதரிகளே! அல்லாஹ்வை நோக்கிச் செல்லக் கூடியவர்கள் எங்கே. இந்த வாழ்க்கை.
ஒரு நபி இருந்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹுதஆலா. நம்முடைய நபிக்கு ஒரு முன் உதாரணமாக ஆக்கினான். அந்த நபியின் உடைய கொள்கையை, முகமது நபியே நீங்கள் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான். அந்த நபி யார் தெரியுமா?
ஒரு நபிக்கு அல்லாஹுதஆலா சிறப்பு பெயரும் கொடுத்தான். ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் ஒரு சிறப்புப் பெயர் கொடுத்திருக்கிறான். அந்த நபிக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு பெயர். ஹலீலுல்லாஹ் அல்லாஹ்வுடைய நண்பர் என்று. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அந்த இப்ராஹீம் நபி மேலே அல்லாஹ் ரொம்ப பாசம் வைத்திருந்தான். ரொம்ப பிரியம் வைத்திருந்தான் அல்லாஹுதஆலா. அந்த இப்ராஹிம் நபி. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நான் எதை செய்தாலும் அல்லாஹ்வுக்காக என்னுடைய ரப்பு ரப்பு ரப்பு. வேறு எதுவுமே வாழ்க்கையில் இருக்கக்கூடாது. என்ன செய்தார்கள் தெரியுமா. அவர்கள் சொல்கிறார்கள் பாருங்கள்.
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ
இன்னும், அவர் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.” (அல்குர்ஆன் 37 : 99)
நான் எனது இறைவன் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு வழி காட்டுவான்.
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ
எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே! பிறகு, நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 29 : 57)
ஒவ்வொரு நஃப்ஸும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்.
ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ
பிறகு நம்மிடம் தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அது வேற கண்டிப்பா மவுத் ஆகிவிட்டால் நீங்கள் அங்கே தான் செல்ல வேண்டும். கட்டாயம் அது. அது கட்டாயமான செல்லுதல். இன்னொன்று இருக்கிறது.
அந்த கட்டாயமான திருப்புதல். கட்டாயமான செல்லுதல் . வருவதற்கு முன்னால் நம்முடைய விருப்பத்தோடு அல்லாஹ்வின் பக்கம் இப்பொழுது இருந்தே அல்லாஹ்வின் பக்கம் செல்ல ஆரம்பித்து விடுதல்.
اِنِّىْ ذَاهِبٌ اِلٰى رَبِّىْ سَيَهْدِيْنِ
இப்ராஹீம் அலை அவர்கள் சொல்லியது போல, நம்முடைய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அல்லவா!
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ
இன்னும், உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால்) பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39 : 54)
உங்களுடைய ரப்பின் பக்கம் திரும்பி செல்லுங்கள். அவனை நோக்கி நீங்கள் செல்லுங்கள். அவனுக்கு முன்னால் பணிந்து நீங்கள் செல்லுங்கள் என்று, அந்தச் செல்லுதல் சகோதரிகளே. அது என்ன தெரியுமா வாழ்க்கையை அப்படியே மாற்றி விடுவது.
எப்படி மாற்றுவது. என்னுடைய ரப்பு எனக்கு எதை கட்டளையிட்டு இருக்கிறானோ, அந்தக் கட்டளை தான் என்னுடைய வாழ்க்கையிலே இருக்கும். நமக்கு தடுத்துக் கொள்வது. எதை? என்னுடைய ரப்பு எதை எனக்கு தடுத்து விட்டானோ, அதை தன்மீது தடுத்துக் கொள்வது. என்னுடைய ரப்பு எனக்கு எதை ஹலால் ஆக்கினானோ, அதுதான் எனக்கு ஹலால்.
இந்த நஃப்ஸ் இருக்கிறதே! இது எப்படி என்று சொன்னால், இதற்கு அல்லாஹுதஆலா ஒரு தன்மையை கொடுத்திருக்கிறான். தீமையை தூண்டுவது. கெட்டதை அலங்கரித்து காட்டுவது. கெட்டதின் பக்கம் நம்மை அழைப்பது. அந்தக் கெட்டதின் மீதான ஆசையை உள்ளத்திலே போடுவது.
பிறகு, அந்த ஆசையை வளர்ப்பது. பிறகு அந்த ஆசையை நெருப்பாய் பற்றி வைப்பது. பிறகு மொத்தமாக அந்த ஆசையில் அப்படியே அழிந்து விடுவது. ஒரு நபியைப் பற்றி அல்லாஹுதஆலா ஒரு சூராவில் முழுமையாக, முழு விவரத்தோடு சொல்கிறான். சூரா ஆரம்பித்ததிலிருந்து, கடைசிவரை. அந்த நபி யார் தெரியுமா? யூசுப் அலைஹிஸ்ஸலாம் அந்த யூசுப் அலை இருக்கிறார்களே. அவர்கள் சொல்கிறார்கள் பாருங்கள்.
وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ
“நான், என் ஆன்மா தூய்மையானது என கூற மாட்டேன், என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” (என்று யூஸுஃப் கூறினார்). (அல்குர்ஆன் 12 : 53)
நான் எனது ஆன்மாவை எனது நஃப்ஸை. நானே பீத்திக் கொள்ள மாட்டேன். அது சுத்தமானது என்று பெருமை பேச மாட்டேன்.
اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ
நிச்சயமாக, இந்த நஃப்ஸ் தீமையை தான் அதிகம் தூண்டக்கூடியது. கெட்டதை தூண்டுமாம் அதிகமாக. கெட்டது பக்கம் அழைக்கும்
اِلَّا مَا رَحِمَ رَبِّىْ
என்னுடைய ரப்பு பாதுகாப்பதை தவிர, எனது ரப்பு கருணை காட்டிய அந்த நஃப்ஸை தவிர, சகோதரிகளே! இந்த நஃப்ஸ் அப்படிப்பட்ட நஃப்ஸ். இந்த நஃப்ஸை நாம் கட்டாயப்படுத்தி., தீமையில் இருந்து இழுத்து வரவேண்டும். பாவத்திலிருந்து இழுத்து வரவேண்டும்.
அல்லாஹ்வுக்கு பிடிக்காத, சிறிய, பெரிய ஒவ்வொரு தொழுகையிலும் இருந்து, ஒவ்வொரு செயல்களிலிருந்து, ஒவ்வொரு குணத்திலிருந்து, இந்த நஃப்ஸை நாம் பிடுங்கி இழுத்து வரவேண்டும். பிறகு அல்லாஹ்வின் பக்கம் இந்த நஃப்ஸை முன்னோக்க வேண்டும்.
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
“வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் நிச்சயமாக நான் ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடையவனாக (அல்லாஹ்வின் பக்கம்) என் முகத்தை திருப்பிவிட்டேன். இன்னும், நான் இணைவைப்பவர்களில் இல்லை.’’ (என்று கூறினார்) (அல்குர்ஆன் 6 : 79)
இந்த நஃப்ஸை துன்யாவில் இருந்து பிடுங்கி, துன்யாவின் பக்கத்தில் இருந்து திருப்பி, யாரை நோக்கி முன்னோக்க வைப்பது. அல்லாஹ்வை நோக்கி முன்னோக்கி வைப்பது. அல்லாஹ்வை நோக்கி வைப்பது,
இப்போது எனக்கு முன் யார் இருக்கிறார் எனது ரப்பு இருக்கிறான். எனக்கு மேலே யார் இருக்கிறார். என்னுடைய ரப்பு இருக்கிறான். என்னை யார் பார்க்கிறார் என்னுடைய ரப்பு பார்க்கிறான். யாரும் என்னைப் பார்க்கவில்லை என்று எண்ணிவிட வேண்டாம். என்னுடைய ரப்பு என்னை பார்க்கிறான் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
சகோதரிகளே! இந்த ஈமானிய அந்த மாற்றம், உங்களிலே வரவேண்டும். ஒரு முஃமினான பெண் அந்த இறை நம்பிக்கையுடைய மூஃமினான பெண் இடத்திலே, இருக்க வேண்டிய இந்த முதல் அடிப்படை ஈமானிய மாற்றம். நம்முடைய வாழ்க்கை யாருக்காக, அல்லாஹ்வுக்காக என்று முடிவு செய்தல். நம்முடைய வாழ்க்கை யாருக்காக அல்லாஹ்வுக்காக.
தன்னுடைய ஒவ்வொரு காரியங்களையும், அந்தக் காரியத்தில் அல்லாஹுவை முன்னோக்கியவனாக தன்னை மாற்றிக் கொள்ளுதல். அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவனாக தன்னை மாற்றிக் கொள்ளுதல். என்னுடைய ரப்புக்கு பிடித்தது மட்டும் தான் என்னுடைய வாழ்க்கை. யாரிடத்தில் பழகுவதாக இருந்தாலும் சரி. எதை பேசுவதாக இருந்தாலும் சரி. எதை செய்வதாக இருந்தாலும் சரி. எதை சொல்வதாக இருந்தாலும் சரி. எனக்கு என்னுடைய ரப்பு அனுமதி கொடுத்து இருக்கிறான். என்னுடைய ரப்புக்கு இந்த விஷயம் என்னிலே இருப்பது பிடிக்குமா.
சகோதரிகளே! இந்த ஒரு கொள்கை உறுதி. இந்தத் தேடல் இன்ஷா அல்லாஹ் உங்களில் ஏற்பட்டு விடுமேயானால், நீங்கள் தான் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த முஸ்லிமான பெண்கள். முன்மாதிரி முஸ்லிமான பெண்கள். அல்லாஹ் விரும்பக்கூடிய முஃமினான பெண்கள். எந்த முஃமினான பெண்களுக்கு, அல்லாஹுதஆலா சொர்க்கத்தை வாக்களிக்கிறானோ,
وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا
இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள் ஆண்களோ அல்லது பெண்களோ அவர்கள்தான் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், ஒரு (பேரீத்தங் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4 : 124)
எந்த முஃமினான ஆண்கள். எந்த முஃமினான பெண்கள். ஈமானோடு அமல்களை செய்வார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் பிரவேசிக்க படுவார்கள், அவர்களுக்கு எள்ளளவும் அநீதி இழைக்கக் படாது என்று, சொர்க்கப் பெண்மணிகள் ஆக, மறுமையின் உடைய வெற்றி பெண்மணிகள் ஆக, யாரை அல்லாஹ் சொல்கிறானோ அந்த பெண்களுடைய, அந்தக் கொள்கை இருக்கிறதே ஈமானாக இருக்கும்.
அல்லாஹுதஆலா முஃமினான அந்த முஸ்லிமான சொர்க்கத் உடைய பெண்களைப் பற்றி அல் குர்ஆனிலே ஒரு வர்ணனை சொல்கிறான். முப்பத்தி மூன்றாவது அத்தியாயத்தில் உடைய, முப்பத்தி ஐந்தாவது வசனம். எழுதி வைத்துக் கொண்டு,
வீட்டிலே சென்று ஒரு முறை எடுத்து படித்து பார்த்து, தொடர்ந்து வாழ்க்கையிலே அந்த வசனத்தை கொண்டு இன்ஷா அல்லாஹ்! நீங்கள் உங்களையும் நான் என்னையும் சுயபரிசோதனை செய்து கொண்டே இருப்போம் சகோதரிகளே! அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த அடிப்படைகள் என்ன.
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், (மார்க்க சட்டங்களுக்கு) கீழ்ப்படிந்து நடக்கும் ஆண்கள், கீழ்ப்படிந்து நடக்கும் பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கிற ஆண்கள், தர்மம் செய்கிற பெண்கள், நோன்பாளியான ஆண்கள்,
நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற ஆண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற ஆண்கள், நினைவு கூர்கின்ற பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 35)
அல்லாஹ்விற்கு பணிந்த முஸ்லிமான ஆண்கள். முஸ்லிமான பெண்கள். என்று அல்லாஹ் சொல்கிறான். முதலாவது என்ன. நம்மிடத்தில் இஸ்லாம் வரவேண்டும். இஸ்லாம் என்றால் என்ன. அதுதான் கலிமா சொல்லி விட்டோமே, முடிந்துவிட்டதா இஸ்லாம்.
சகோதரிகளே! இஸ்லாம் என்பது என்ன. அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு முற்றிலுமாக தன்னை பணிய வைப்பது. அது இஸ்லாம் சகோதரிகளே! அல்லாஹுதஆலா இப்ராஹீம் நபி அலை. அவர்களை வாழ்க்கையிலே கொண்டு வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் இப்ராஹீம் நபியை முன்னாடி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹுதஆலா இப்ராஹீம் நபியைப் பார்த்து சொன்னான்.
إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ
(இப்ராஹீமை நோக்கி) அவருடைய இறைவன், “நீ எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி)விடு!” என்று அவருக்குக் கூறியபோது, அவர் கூறினார்: “அகிலத்தார்களின் இறைவனுக்கு நான் பணிந்து (முஸ்லிமாகி) விட்டேன்.” (அல்குர்ஆன் 2 :131)
இப்ராஹீமே எனக்கு பணிந்து நடங்கள். எனக்கு கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு நடங்கள் என்று. உடனே இப்ராஹீம் சொன்னார். அகிலங்களின் இறைவனுக்கு நான் என்னை பணிய வைத்து விட்டேன் என்று. நம்மை முற்றிலுமாக ரப்புக்கு பணிய வைத்தல். அல்லாஹ்வுடைய கட்டளை இங்கு வந்து விட்டால், அவ்வளவு தான்.
சகோதரிகளே! முக்கியமான ஒரு விஷயம். நம்மிடத்தில் இஸ்லாம் இருக்கிறதா இல்லையா என்பதற்குரிய அடிப்படை அதில் ஒன்று என்ன. அல்லாஹ்வுடைய கட்டளை என்று குர்ஆனுடைய வாசகங்களோ, ஹதீஸ் உடைய வாசகங்களோ சொல்லப்பட்டால், நாங்கள் அதைக் கேட்போம். அதற்கு கட்டுப்பட்டு நடப்போம். என்று சொல்லக்கூடிய பக்குவம். அந்த மன உறுதி நமக்கு வேண்டும். செயல் வடிவமாக,
இப்பொழுது எப்படி இருக்கிறது நிலைமை. மார்க்க சட்டம் சொன்னால். எங்களுக்குத் தெரியும் சட்டம் நீங்கள் அமைதியாக செல்லுங்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ஆண்களிலும் சரி, பெண்களும் சரி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கொண்டு உபதேசம் செய்யப்பட்டால், அங்கே பலர் இடத்திலே புறக்கணிப்பை பார்க்கிறோம்.
ஏற்றுக்கொள்கிற தன்மையைப் பார்க்க முடியவில்லை. அங்கீகரிக்கக்கூடிய தன்மையைப் பார்க்க முடியவில்லை. அலட்சியம் செய்யக் கூடிய தன்மையைப் பார்க்கிறோம். எப்படி நாம் அங்கே முஸ்லிம் என்று சொல்வது.
முஸ்லிமுடைய அடையாளம் இருக்கலாம். முஸ்லிமுடைய பெயர் இருக்கலாம். இஸ்லாம் எங்கே இருக்கிறது. இஸ்லாம் என்பது அல்லாஹ்வுடைய சட்டத்திற்குப் பணிவதிலே இருக்கிறது. அல்லாஹுதஆலா கட்டளையிறக்குகிறான் குர்ஆனிலே,
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ
நபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும் கூறுவீராக, அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்வார்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 59)
நபியே உங்களுடைய மனைவிமார்களுக்கு, உங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு, முஃமினுடைய பெண்களுக்கு நீங்கள் சொல்லுங்கள் அவர்கள் தங்களுடைய ஹிஜாபை போர்த்தி கொள்ளட்டும். அவர்கள் தங்களது ஆடைகளுக்கு மேலாக பர்தா போட்டுக் கொள்ளட்டும். என்று நீங்கள் சொல்லுங்கள். அப்படி என்று அல்லாஹ் வசனத்தை இறக்குகிறான்.
ரஸூல் (ஸல்) இந்த வசனத்தை தொழுகையில் ஓதுகிறார்கள். தன்னுடைய ஸஹாபாக்களுக்கு சொல்கிறார்கள் இப்படி வசனம் இறக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லி, இதைக் கேட்டுவிட்டு ஆண்கள், வீடுகளுக்கு திரும்ப செல்கிறார்கள். கடைத் தெருக்களிலும், தங்களுடைய வீடுகளின் தெருக்களில் செல்லும் பொழுது, இந்த வசனத்தை ஓதியவர்களாக,
இந்த மாதிரி ஹிஜாப் உடைய சட்டம் இறக்கப்பட்டு விட்டது. என்று சொல்லியவர்களாக திரும்பச் சொல்கிறார்கள் அவ்வளவுதான். இதைக் கேட்க கேட்க அந்தக் கடைத் தெருவில் இருந்த பெண்மணிகள். தங்களுடைய தேவைகளுக்காக வெளியே சென்ற பெண்கள். தங்களுடைய வீட்டை நோக்கி ஓடுகிறார்கள். தங்களுடைய இல்லங்களை நோக்கி திரும்ப ஓடுகிறார்கள்.
ஓடியவர்கள் வீட்டில் இருந்த போர்வைகளை, இரண்டாக கிழித்து விட்டு, அதில் ஒரு பகுதியை கொண்டு, தங்களை முழுமையாக மறைப்பவர்களாக, அவர்கள் தங்களது தேவைகளுக்கு வெளியே செல்கிறார்கள்.
இந்த காட்சியை பார்த்துவிட்டு ஆயிஷா ரலி அன்ஹா சொல்கிறார்கள். அன்சாரி பெண்களைப் போன்று அல்லாஹ்வுடைய சட்டத்தை கடைப்பிடித்து நடக்கக்கூடிய, மூஃமினான பெண்களை நான் பார்த்ததில்லை.
எப்படி இருக்க வேண்டும் இஸ்லாம் என்பது. குர்ஆன் இப்படி சொல்கிறது. ஹதீஸ் இப்படிச் சொல்கிறது என்று வழிகாட்டினால். உடனே கீழ்ப்படிதல் ஆக இருக்க வேண்டும்.
إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
அவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் நம்பிக்கையாளர்கள் அழைக்கப்பட்டால் அப்போது அந்த நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர். (அல்குர்ஆன் 24 : 51)
முஃமின்களே அல்லாஹ்வின் பக்கம். அல்லாஹ்வுடைய தூதரின் பக்கம். அவர்கள் உங்களுக்கு கீழ் படிக்க கூறி அழைக்கப்பட்டால். அவர்கள் சொல்வார்கள். நாங்கள் கேட்போம். கீழ்ப்படிவோம். என்று. சகோதரிகளே, இத்தகைய இஸ்லாம் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.
وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ
ஈமானுடைய ஆண்கள், பெண்கள். அந்த ஈமான் எப்படி இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய மறுமையின் மீது, சொர்க்கத்தின் மீது, நரகத்தின் மீது, அந்த ஈமான். ரஸூலுல்லாஹி (ஸல்) சொன்னார்கள் அல்லவா ஜிப்ரில் கேட்டபோது.
قَالَ: «أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
அல்லாஹ்வை நீ பார்ப்பதுபோல் வணங்கு. நீ பார்க்க வில்லை என்றால், அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான். என்பதை நினைவில் வைத்துக்கொள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 50 குறிப்பு 1
சகோதரிகளே! இந்த பயம் நம்முடைய உள்ளத்திலே இருப்பது. இதன் உண்மையான இது தான் ஸஹாபாக்கள் இடத்திலே இருந்த ஈமான். அல்லாஹ் நபிமார்கள் மூலமாக நமக்கு சொல்லிக்கொடுத்த ஈமான். இத்தகைய முஃமினான ஆண்கள். முஃமினான பெண்கள்.
அன்பு சகோதரிகளே! அல்லாஹுதஆலா உயர்ந்த, சிறந்த அந்த மூஃமினான பெண்களுடைய, அந்த நன்மையை சொல்லிக் கொண்டு வரும் பொழுது, முதலாவதாக இஸ்லாமை குறிப்பிட்டான். இரண்டாவதாக ஈமான் இறைநம்பிக்கை. அந்த இறைநம்பிக்கை பசுமையாக இருக்க வேண்டும். அந்த இறை நம்பிக்கை வாடி விடக்கூடாது. காய்ந்து விடக்கூடாது. அல்லாஹ்வுடைய தக்வாவை கொண்டு, அல்லாஹ்வுடைய பயத்தை கொண்டு, அதில் நீர் ஊற்றப்பட்டு, எப்பொழுதும் பசுமையாக இருக்க வேண்டும்.
وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ
அல்லாஹ்வுக்கு பணிந்து நடக்க கூடிய மூஃமினான பெண்கள். பணிந்து விடுதல். இந்தப் பணிதல் குனூத். இது உயர்ந்த ஒரு தன்மை.
அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா ஒரு அடியானை உயர்த்த வேண்டும் என்றால், அவனுக்கு கொடுக்கக்கூடிய உயர்ந்த ஒரு நற்குணம் தான் . இந்த குனூத் என்ற பணிதல். குறிப்பாக முஃமினான ஆண்களிடத்தில் பெண்கள் இடத்திலே, இந்தத் தன்மையை அல்லாஹுதஆலா எதிர்பார்க்கிறான்.
சரி பணிதல் என்றால் எப்படி பணிதல். அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்து விடுதல். அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு முன்னால் பணிந்து விடுதல். சில நேரங்களில் சில சட்டங்கள். நமக்கு கடுமையாக, சிரமமாக, வலி மிக்கதாக, அல்லது செலவு உடையதாக இருக்கும்.
ஜக்காத் நமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்காக இரண்டரை சதவீதம் அல்லாஹ்வுக்காக கொடுக்க வேண்டும். நஃப்ஸ் கருமி தனத்தை ஏவ கூடியது. கஞ்சத்தனத்தை தூண்டக்கூடியது. அது போன்று நம்முடைய குணங்கள்.
பெருமையாக இருப்பது. விட்டுக் கொடுக்காமல் இருப்பது. என்னை எல்லோரும் மதிக்க வேண்டுமென்ற அந்த பெருமை, ஆணவத்தோடு இருப்பது. இதுவெல்லாம் நஃப்ஸ் இடத்திலே இருக்கக்கூடிய குணங்கள்.
அல்லாஹ்வுடைய சட்டம் என்ன சொல்கிறது. விட்டுக்கொடு நீ மன்னித்துவிடு, நீ பணிவாக நட என்று. இப்படியாக அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முன்னால், அல்லாஹ்வுடைய சட்டங்கள் நமக்கு எதை உணர்த்துகிறதோ, அது நம்முடைய தொழுகையில் நம்முடைய வணக்க வழிபாட்டில், நமது நற்பண்புகளிலே, உடனே அந்த சட்டத்திற்கு பணிந்து விடுதல்.
وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ
இந்தப் பணிவு இருக்குமேயானால், கணவன் மனைவி உடைய வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடும். பெற்றோர் பிள்ளைகள் குடும்பத்தில் உள்ள எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி.
அன்பு சகோதரிகளே! தாய்மார்களே.! அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த குனூத் அல்லாஹ்விற்கு பணிந்து விடுதல். அல்லாஹ்வுடைய கட்டளைக்கு பணிந்து விடுதல். பணிவை ஏற்றுக்கொள்ளுதல். இந்த ஒரு குழந்தையின் மூலமாக, இன்ஷா அல்லாஹ் அந்தப் பிரச்சினையை நாம் சமாளிக்கலாம், தீர்த்துவிடலாம், அடுத்ததாக அல்லாஹ் சொல்கிறான்.
وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ
உண்மை பேசுதல். உண்மையாக நடத்தல் உண்மையாக நடக்கக்கூடிய ஆண்கள் பெண்கள். மூஃமினான ஆண்கள் பெண்கள்.
ஒரு முஃமினான பெண்ணை பொருத்தவரை, எந்த விதத்திலும் சரி. அவர் தன்னுடைய வாழ்க்கையில், பொய்யை கலந்து விடக்கூடாது. தன்னுடைய ரப்புக்கு உண்மையாக இருக்க வேண்டும். தன்னுடைய கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தன்னுடைய ஒழுக்கத்தில் உண்மையாக இருக்க வேண்டும். தன்னுடைய மார்க்கத்திலே உண்மையாக இருக்க வேண்டும்.
ரஸூலுல்லாஹி (ஸல்) பெண்கள் இடத்திலே ஒப்பந்தம் வாங்கும்பொழுது, குறிப்பாக அல்லாஹுதஆலா இந்தப் பெண்கள் இடத்திலே இப்படி ஒப்பந்தம் வாங்குங்கள்.
يَاأَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
நபியே! நம்பிக்கைக் கொண்ட (முஃமினான) பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள்; திருட மாட்டார்கள்: விபச்சாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள்; தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள்; (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறமாட்டார்கள்;)
நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் சத்திய வாக்குப் பிரமாணம் செய்பவர்களாக உம்மிடம் வந்தால் நீங்கள் அவர்களிடம் சத்திய வாக்குப் பிரமாணம் வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 60 : 12)
அவர்கள் இட்டுக் கட்டி, பொய்யைப் புனைந்து சொல்ல மாட்டார்கள் என்று, அவர்களிடம் ஒப்பந்தம் வாங்குங்கள் என்று, அல்லாஹுதஆலா நம்முடைய நபிக்கு கட்டளையிட்டான். சகோதரிகளே! ஒரு பெண்ணிடத்தில் பொய் வந்து விடுமேயானால், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
ஒரு பெண்ணிடத்தில் பொய் என்ற கெட்ட குணம் வந்து விடுமேயானால், அவளை ரப்புக்கு முன்னாலும் அவமானப்படுத்தி விடும். அவளுடைய சமுதாயத்தில் அவளை அவமானப் படுத்தி விடும். அவளுடைய குடும்ப வாழ்க்கையே நாசமாகி விடும்.
முஃமினான பெண்களுக்கு அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த உயர்ந்த நற்குணங்களிலே ஒரு முக்கியமான பொறுப்பாக எதை கூறுகின்றான்.
وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا
உண்மை நன்மைக்கு வழி காட்டுகிறது. நன்மை சொர்க்கத்திற்கு வழி காட்டுகிறது. பொய் பாவத்திற்கு வழிகாட்டுகிறது. பாவம் நரகத்திற்கு வழிகாட்டுகிறது. ஆகவே, வாழ்க்கையிலே ஒரு உறுதி வேண்டும். நான் இந்த நேரத்தில் இருந்து பொய் சொல்ல மாட்டேன். இதுவரை நான் சொன்னதற்கு அல்லாஹ்விடத்தில் வருந்தி பாவமன்னிப்பு கேட்டு செல்கிறேன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6094
சகோதரிகளே உண்மையாளர்களுக்கு எல்லாம் அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை வைத்திருக்கிறான். ஈமான் உள்ளவர்கள் என்பதிலே. உண்மையாளர்கள் என்றுதான் அல்லாஹுதஆலா வர்ணிக்கிறான்.
وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ
பொறுமை சகிப்புத்தன்மை உறுதி இருக்க வேண்டும். மூன்று வகையான பொறுமை. ஒன்று என்ன அல்லாஹ்வுடைய மார்க்க கடமைகளை, சட்டங்களைப் பின்பற்றி நடப்பதிலே. இந்த நஃப்ஸ்க்கு கஷ்டமாக இருக்கும் தொழுவதற்கு, அந்த நஃப்ஸை கொண்டு வந்து தொழுகையில் நிறுத்துவது. ஒவ்வொரு வணக்கமும் நஃப்ஸுக்கு கஷ்டம்தான்.
ஆனால், அதில் பொறுமையாக இருந்து, அந்த நஃப்ஸை அந்த வணக்கத்திலே பழக்கப்படுத்துவது. இரவுத் தொழுகையிலே, குர்ஆன் ஓதுவதிலே, நீண்ட நேரம் திக்ரு செய்வதிலே, உண்மை பேசுவதிலே, நற்குணங்களிலே, பிறருக்கு உதவி செய்வதிலே, பிறருக்குப் பணிவிடை செய்வதிலே, இப்படியாக அல்லாஹ்வுக்கு விருப்பமான, அல்லாஹ் கட்டளையிட்ட, அல்லாஹ் ஏற்றுக் கொண்ட, அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்த, ஒவ்வொரு நல் அமலிலும். தன்னுடைய நஃப்ஸை உறுதியாக்கி வைப்பது. ஒரு பொறுமை.
இரண்டாவது பொறுமை இருக்கிறது. அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகி இருப்பது. நஃப்ஸ் அந்தப் பாவத்தின் பக்கம் நம்மை அழைக்கும். நம்முடைய நண்பர்கள் தோழர்கள் அழைப்பார்கள். அந்த நஃப்ஸை அந்தப் பாவத்திலிருந்து அடக்கி, பாவத்திலிருந்து பாதுகாத்து உறுதியாக்குவது,
மூன்றாவது ஒரு பொறுமை இருக்கிறது. சோதனைகளிலே பொறுமையாக இருப்பது. நம்முடைய உறவினர்கள் இறக்கலாம். நம்முடைய பெற்றோர். நம்முடைய கணவர். நம்முடைய நண்பர். நாம் நேசிக்க கூறியவர். மரணங்கள் ஏற்படலாம். இழப்புகள் ஏற்படலாம். அப்பொழுது அந்த இழப்புகளிலே பொறுமையாக இருப்பது.
இத்தகைய மூன்று வகையான பொறுமை. சகோதரிகளே வாழ்க்கையில் நமக்கு அவசியம். இது ஒரு முஃமினுடைய ஆண்-பெண் குணமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ
உள்ளச்சம் உடைய முஃமினான ஆண்கள் உள்ளச்சம் உடைய முஃமினான பெண்கள். இதன் விளக்கத்தை முதலில் பயானுடைய ஆரம்பத்தில் பார்த்தோம்.
உள்ளத்திலே அல்லாஹ்வுடைய அன்பும். அல்லாஹ்வுடைய பயமும், அல்லாஹ்வுடைய ஷிஃபத்துகளை, தன்மைகளை அறிந்து, அந்த உள்ளத்திலே ஏற்படக்கூடிய அச்ச உணர்வு அதுதான் ஹுஷூ.
فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 21 : 90)
நபிமார்கள் என்னை ஆசையோடு பயத்தோடு, அழைத்து உள்ளத்திலே தொழுகையில் இருப்பார்கள் என்று சொல்லுகிறான் அல்லவா. அதுதான் அந்த உள்ளச்சம். அது நமக்கு ரொம்ப அவசியம்.
وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ
தர்மம் கொடுக்கக்கூடிய ஆண்கள் தர்மம் கொடுக்கக்கூடிய பெண்கள். என் அன்பு சகோதரிகளே நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி. அல்லாஹ் உங்களை செல்வந்தனாக ஆக்குவானாக. ஹலாலான செல்வங்களை கொடுப்பானாக. எந்த ஒரு இக்கட்டான வறுமை நிலையில் இருந்தாலும் கூட, தன்னால் முடிந்த அளவு. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்வதைப்போல.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ أَحَدٌ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "، قَالَ الأَعْمَشُ: وَحَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، مِثْلَهُ، وَزَادَ فِيهِ: «وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ
ஒரே ஒரு பேரீத்தம் பழம் வீதம் இருந்தாலும், அதன் ஒரு பகுதியை பிரித்து அதை தருமம் கொடுத்தாலும் கூட நரக நெருப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று, அந்த அடிப்படையிலே தன்னால் முடிந்ததை, தங்களுடைய உறவுகளுக்கு ரத்த உறவுகளுக்கு, அண்டை வீட்டார் களுக்கு ஏழைகளுக்கு என்று, தர்மம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அறிவிப்பாளர் : அதி இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7512
அல்லாஹ்வுக்கு மிகப் பிடித்தமான குணம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும். நம்முடைய முசிபத் போக்க படுவதற்கு, அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாம் அடைவதற்கு, அல்லாஹ்விற்கு மிக விருப்பமான அமல் தரமும் செய்வது. இது ஒரு மூஃமினானவர்களிடத்தில் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ
அதிகமாக நோன்பு வைக்கக் கூடிய, ஆண்கள். அதிகமாக நோன்பு வைக்கக் கூடிய பெண்கள். ரமலான் மாதத்தில் நோன்பு ஃபர்ள். அதற்குப் பிறகு ஷவ்வால் உடைய ஆறு நோன்புகள். அதற்குப் பிறகு ஒவ்வொரு மாதத்திலும் திங்கட்கிழமை வியாழக்கிழமை நோன்பு வைப்பது. பிறகு மாதத்தின் அய்யாமு 13 14 15 நோன்பு வைப்பது. இப்படியாக நஃபிலான நோன்புகளை, அதிகமாக நோற்பது.
ஒரு முஃமினான பெண்களில் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். முகரம் உடைய பத்தாவது நோன்பு. அதன்பிறகு அரஃபாவுடைய நோன்பு இருக்கிறது.
சில பித்அத்தான நோன்பு இருக்கிறது. அதை பயந்து கொள்ள வேண்டும். அந்த நோன்புகளை வைக்கக்கூடாது. மக்களால் பித்அத்தாக ஏற்படுத்திக்கொண்ட அந்த தவறான நோன்புகள். மெஹராஜ் நோன்பு என்று சொல்வார்கள் அப்படி கிடையாது. ஷபே பராஅத் நோன்பு என்று சொல்வார்கள். அப்படிக் கிடையாது. சுன்னத்தான நோன்புகளை வைக்கவேண்டும்.
இன்றைக்கு மக்கள் என்ன செய்கிறார்கள். சுன்னத்தான நோன்புகளை அலட்சியம் செய்து விட்டார்கள். திங்கட்கிழமை வியாழக்கிழமை மாதத்தில் மூன்று நாள் வைக்கக்கூடிய, மிக மிக முக்கியமான சுன்னத்தான நோன்புகள். மறக்கப்பட்டு விட்டன. கை விடப்பட்டு விட்டன. புறக்கணிக்கப்பட்டு விட்டன. சமுதாயத்தில் ஆர்வம் காட்டப்படுவதில்லை.
ஆனால், எந்த நோன்புக்கு முக்கியம். இல்லாத நோன்பு. பராஅத் நோன்பு. அதேபோல மிஹ்ராஜ் இரவு நோன்பு. புரியுதுங்களா. பித்அத்தான நோன்புகளை விட்டு விலக வேண்டும். சுன்னத்தான நோன்புகளை பற்றிப் பிடிக்க வேண்டும்.
وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ
ரொம்ப ரொம்ப முக்கியமானது. தன்னுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்வது. தன்னுடைய ஒழுக்கத்தை பாதுகாத்துக் கொள்வது. ஹராமிலே தன்னுடைய ஆசையை தீர்ப்பதில் இருந்து அல்லாஹ்வை பயந்து கொள்வது. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
6474 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، سَمِعَ أَبَا حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ
யார் தன்னுடைய இரண்டு உதடுகளுக்கு இடையில் உள்ளவை, தொடைகளுக்கு இடையில் உள்ளவையையும் பாது காத்துக் கொள்வேன் என்று, எனக்கு பொறுப்பு கொடுப்பாரோ, உத்தரவு கொடுப்பாரோ, நான் அவருக்கு சொர்க்கத்தில் உடைய உத்தரவாதம் வாங்கித் தருகிறேன்.
அறிவிப்பாளர் : ஸஹ்லு இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6474
சகோதரிகளே நம்முடைய மார்க்கத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. ஆண்களுக்கும் சரி. பெண்களுக்கும் சரி. ஹலாலை தவிர, தன்னுடைய ஆசையை வேறொரு ஹராமிலே தீர்த்துக் கொள்ளக் கூடாது. நரகத்தின் படுகுழியில் அவனை தள்ளி விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இன்று இந்த செல்போன் கலாச்சாரங்களால், சமுதாயம் சீர் கெட்டு இருக்கக்கூடிய, இந்த மோசமான காலகட்டத்தில், சகோதரிகளே, இந்த கற்பைப் பாதுகாத்துக் கொள்வது குறிப்பாக, வெளியிலே புழங்கக்கூடிய ஆண்கள் பெண்கள். பள்ளிக்கூடங்களுக்கு கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய ஆண்கள் பெண்கள். அதுபோன்று வேலையிடங்களில் இருக்கக்கூடிய ஆண்கள் பெண்கள். மிகமிக அல்லாஹ்வை பயப்படவேண்டிய, மிக முக்கியமான கட்டளை சகோதரிகளே!
இந்த ஒழுக்கம் என்பது. எப்படி தொழுகை ஒரு முஃமினுக்கு முக்கியமோ. எப்படி ஒரு நோன்பு முக்கியமோ. அதுபோன்று அந்த ஒழுக்கத்தை அல்லாஹ்வுக்காக பாதுகாப்பது. ஒரு மூஃமின் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹுதஆலா குர்ஆனுடைய ஒரு வசனங்கள் அல்ல. பல வசனங்களில் மூஃமினுடைய இந்த ஒழுகத்தைப் பற்றி சொல்லுகின்றான். அடுத்தது அல்லாஹ் கூறுகின்றான்.
وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யக்கூடிய ஆண்கள் பெண்கள். எல்லா நேரங்களிலும் திக்ர்கள் செய்வது. காலை மாலை திக்ர்கள். தொழுகையில் திக்ருகள். அதுபோன்று தூக்கத்திற்கு முன்னால் உள்ள திக்ருகள். அதுபோல மற்ற நேரங்களிலே அல்லாஹ்வை திக்ரு செய்தவண்ணம் ஆகவே நம்முடைய வேலைகளை செய்வது. இப்படியாக அல்லாஹ்வின் நினைவில் இருப்பது.
இத்தகைய குணங்கள் ஒரு முன்மாதிரியான முஃமின்களுக்கு. முன்மாதிரியான முஃமினான பெண்களுடைய குணம் என்று, சகோதரிகளே அல்லாஹுதஆலா வர்ணிக்கிறான்.
அத்தகைய குணங்களைக் கொண்டு, நானும் என்னை அலங்கரித்து கொள்வதோடு, உங்களையும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்று, இந்த இடத்திலே இன்று உறுதியாக வசியத்தாக, சொல்கிறேன். இந்த நற்குணங்களை உங்களுடைய வாழ்க்கையிலே பேணுங்கள். அல்லாஹ் உங்களது வாழ்க்கையை பரக்கத் செய்வானாக.
இந்த நற்குணங்களை ஒவ்வொரு நற் குணமாக, அதை நீங்கள் கற்று அதிலே முன்னேற்றமாக, அல்லாஹ்விடத்தில் உறுதி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையை செழிப்பாக்குவான்.
அதுபோன்று மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வது. ஆர்வத்தோடு ஆசையோடு இந்த தீனை படிப்பது. பிறகு இந்தப் படித்த தீனை அமலிலே கொண்டு வருவது. பிறகு இந்த தீனை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்வது. நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது. என்ற உயர்ந்த பணியை சகோதரிகளே நீங்கள் செய்யுங்கள்.
அல்லாஹு சுபஹானஹுவதஆலால்லா. உங்களுக்கு இம்மை உடைய வெற்றியையும், உயர்வான வாழ்க்கையையும், சிறப்பான வாழ்க்கையையும், நீங்கள் விரும்பக்கூடிய கண்ணியமான வாழ்க்கையையும், அல்லாஹ் தருவான். மறுமையின் சிறந்த சொர்க்கத்தின் உடைய வாழ்க்கையை அல்லாஹ் தருவதற்கு போதுமானவன்.
அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா இதுவரை நான் கூறிய இந்த உரையிலே, எனக்கும் உங்களுக்கும், அருள் புரிவானாக. நல்ல விஷயங்களைக் கொண்டு, கூறி எடுத்து செயல்பட்டு, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைய கூடிய மூஃமினான ஆண்களிலே. முஃமினான பெண்களிலே, அல்லாஹுதஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்பு 1)
صحيح البخاري (1/ 19)
50 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: «الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ». قَالَ: مَا الإِسْلاَمُ؟ قَالَ: " الإِسْلاَمُ: أَنْ تَعْبُدَ اللَّهَ، وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ". قَالَ: مَا الإِحْسَانُ؟ قَالَ: «أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ»، قَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: " مَا المَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ البُهْمُ فِي البُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ " ثُمَّ تَلاَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ} [لقمان: 34] الآيَةَ، ثُمَّ أَدْبَرَ فَقَالَ: «رُدُّوهُ» فَلَمْ يَرَوْا شَيْئًا، فَقَالَ: «هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/