வழிகேட்டில் இருந்து பாதுகாக்கும் நேர்வழி!!! | Tamil Bayan - 695
வழிகேட்டிலிருந்து பாதுகாக்கும் நேர்வழி
தலைப்பு : வழிகேட்டிலிருந்து பாதுகாக்கும் நேர்வழி
வரிசை : 695
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -12-12-2021 | 04-05-1443
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய மார்க்க மூத்த அறிஞர்களே, அன்புக்குரிய சகோதரர்களே, சமுதாய தலைவர்களே, பெரியோர்களே, அன்பிற்கும் பாசத்திற்கும், உரிய தாய்மார்களே, சகோதரிகளே, உங்களை எல்லாம் இந்த சிறப்பான நாளில் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் வரவேற்றவனாக, இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
நீண்ட நேரம் பேச வேண்டிய இந்த தலைப்பை மிகச் சுருக்கமான நேரத்திலே நாம் இன்ஷா அல்லாஹ் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம். அல்லாஹ்வின் அடியார்களே! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹு சுப்ஹானஹூவதஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இந்த மார்க்கம் இன்னத்தீன இனனல்லாஹி இஸ்லாம். அல்லாஹ் ஏற்றுக்கொண்ட மார்க்கம்.
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)தை மார்க்கமாக எவர் (பின்பற்ற) விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார். (அல்குர்ஆன் 3 : 85)
இதைத் தவிர எந்த மார்க்கத்தையும், எந்த கொள்கையையும், அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்ள மாட்டான். வணக்க வழிபாடுகள், கொள்கைகள், சிந்தனைகள், வாழ்க்கை முறை எல்லாம் இஸ்லாம் என்ற அல்லாஹ் இறக்கிய எல்லாம் இந்த மார்க்கத்தின் படி இருக்க வேண்டும்.
சகோதரர்களே! அல்லாஹுதஆலா இந்த மார்க்கத்தை குர்ஆனின் மூலமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலமாக நிறைவு செய்தான். இந்த மார்க்கம் மனிதர்களின் அறிவுக்கு விடப்பட்ட மார்க்கம் அல்ல. மனிதர்களின் வளமைக்கு ஏற்ப்ப விடப்பட்ட மார்க்கம் அல்ல. மனிதனின் அறிவை, வளமையை, பழக்கவழக்கத்தை, சிந்தனைகளை சீர் செய்வதற்காக, அல்லாஹ் வேதத்தை இறக்கி, அந்த வேதத்தை செயலோடு போதிப்பதற்காக நபியை அனுப்பி, அந்த நபிக்கு இந்த மார்க்கத்தை புரிய வைத்தான். அந்த நபிக்கு இந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்து எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது. இதை அங்கீகரிக்க வேண்டும். எதை மறுக்க வேண்டும். என்பதை எல்லாம் அல்லாஹுததஆலா கற்றுக் கொடுத்தான்.
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدٰى
இன்னும், அவன் உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான். (அல் குர்ஆன் 93 : 7)
وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ طَائِفَةٌ مِنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا
(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக (உள்ளத்தில்) உறுதியாக நாடியிருப்பார்கள். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். இன்னும், நீர் அறிந்திருக்காதவற்றை உமக்குக் கற்பித்(து கொடுத்)தான். இன்னும், உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது. (அல் குர்ஆன் 4 :113)
கண்ணியத்திற்க்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த தீனை நிலை நிறுத்துவதற்காக, இந்த தீனை முழுமைபடுத்துவதற்காக, ஏதாவது உழைத்தார்கள். கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள், மக்களுக்கு போதித்துக் கொண்டே இருந்தார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ فِطْرٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: تَرَكْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا طَائِرٌ يُقَلِّبُ جَنَاحَيْهِ فِي الْهَوَاءِ، إِلَّا وَهُوَ يُذَكِّرُنَا مِنْهُ عِلْمًا، قَالَ: فَقَالَ: صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ، ويُبَاعِدُ مِنَ النَّارِ، إِلَّا وَقَدْ بُيِّنَ لَكُمْ
அபுதர் ரலியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய ஆசிரியர் குர்ஆனையும், சுன்னாவையும் தங்களுக்கு கற்றுக் கொடுத்த, நிகரற்ற அந்த ஆசிரியரை பற்றி சொல்கிறார் தூஃபியா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
மார்க்கத்தை மட்டும் அல்ல, இன்னும் எதெல்லாம் எங்களுக்கு தேவையோ, உதாரணத்துக்கு சொன்னார்கள். வானத்தில் தங்களது இரண்டு இறக்கைகளை அடித்து பார்க்கக்கூடிய ஒரு பறவை அதில் இருந்தும் எங்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்து தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஜம் கபீர் தர்பானி, அஸ்ஸஹீஹா, எண் : 1647, 2866
அல்லாஹ்வின் அடியார்களே! மார்க்கம் என்பது என்ன? அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகள், அல்லாஹ்வுடைய ஏவல் விளக்கல்களை ஏற்றுப் பின்பற்றி, மதித்து நடந்து அதற்கு ஏற்ப. இதுதான் உண்மையான தக்வா, தக்குவா என்பது ஆடையில் மட்டுமல்ல, சடங்குகளில் அல்ல, அல்லாஹுதஆலா சொல்கிறான்:
ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும். (அல் குர்ஆன் 22 : 32 )
யார் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ, அது உள்ளத்தினுடைய தக்குவாவிலிருந்து வெளிப்படகூடியது. அல்லாஹ்வுடைய அடையாளங்கள் என்ன? அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்கள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா, அவர்கள் எதை கற்றுக் கொடுத்தார்கள்.
எப்படி நமக்கு வணக்க வழிபாடுகள் போதித்தார்கள், என்ன நம்பிக்கைகளை போதித்தார்கள், அதை அப்படியே பின்பற்றுவது அதை சிந்திப்பதற்கு புரிவதற்கு அறிவை கொடுக்கப்பட்டதே தவிர, அதை மாற்றமாக ஒன்றை உருவாக்கதற்கு அல்ல.
அந்த சுன்னாவை விளங்குவதற்காக நமக்கு அறிவு கொடுக்கப்பட்டதே தவிர அதில் குதர்க்கம் செய்வதற்காக அல்ல. அதில் நஃப்ஸ் விரும்பியதை ஏற்றுக் கொண்டு அதில் நஃப்ஸூ விரும்பாததை புறக்கணிப்பதற்காக அல்ல.
சகோதரர்களே! எத்தனை குழப்பமான காலங்கள் வந்தாலும், எத்தனை முரண்பாடுகள், எத்தனை கருத்து வேற்றுமைகள் வந்தாலும், அல்லாஹுவின் தீன் நமக்கு மத்தியிலே தெளிவாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் குழப்ப வேண்டிய அவசியம் இல்லை, எப்போது? அவன் அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றி பிடித்துக் கொண்டால்.
وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
இன்னும், நீங்களோ உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட, உங்களுடன் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார். (அல் குர்ஆன் 3 : 101)
அல்லாஹ்வை பற்றிப் பிடித்துக் கொண்டவர் கண்டிப்பாக நேரான பாதைக்கு வழி காட்டப்படுவார். அல்லாஹ்வை பற்றி பிடிப்பது என்றால் என்ன? அல்லாஹ்வுடைய தீன் அல்லாஹ்வுடைய வேதம். பிறகு அல்லாஹ் சொல்கிறான்:
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் விலகிச் சென்றால் அவர் மீது கடமையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதுதான் (-மார்க்கத்தை எடுத்துச் சொல்வதுதான்). உங்கள் மீது கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்டதுதான் (-தூதருக்கு கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்). இன்னும், நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர் வழிப் பெறுவீர்கள். இன்னும், தூதர் மீது கடமை இல்லை, (மார்க்கத்தை) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர. (அல் குர்ஆன் 24 : 54)
நீங்கள் ரஸுலுக்கு கீழ்படிந்து விட்டால், உங்களுக்கு கண்டிப்பாக ஹிதாயத், ஒரு விஷயத்தில் நமக்கு குழப்பமா அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்க்க வேண்டும், இதிலே இரண்டு விதமான கருத்துக்களா கூடும், கூடாது என்ற, கருத்தா செய்யலாம் செய்யக்கூடாது என்ற கருத்தா,
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள். அல்லாஹ் கேரண்டி எடுத்துக் கொண்டான் பொறுப்பேற்றுக் கொண்டான். யார் அல்லாஹ்வைப் பற்றிப் பிடிப்பார்களோ, யார் ரஸூலுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்களோ, அவர்களுக்கு கண்டிப்பாக நேர் வழி உண்டு.
சகோதரர்களே! ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பற்றி பிடிக்கும் போது சிலர் அதை தஃவீல் செய்து கொள்கையிலேயே பித்அதுகள் உண்டாக்குவார்கள். அதை தஃவீல் செய்து வணக்க வழிபாடுகளில் பித்அதுகள் செய்வார்கள்,
அதை தஃவீல் செய்து அல்லாஹ்வுடைய சிஃபாத்துகளிலே அவர்கள் தவறானதை போதிப்பார்கள், இப்படியான வழிகேடுகள் வரும் ஆனால், ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சிறந்த வழிகாட்டல்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ» قَالَ إِبْرَاهِيمُ: «وَكَانُوا يَضْرِبُونَنَا عَلَى الشَّهَادَةِ، وَالعَهْدِ
தலைமுறையில் சிறந்தவர்கள் எனது தலைமுறை ஸஹாபாக்கள் என்று சொன்னார்களே, பிறகு அதற்கு அடுத்து வந்தவர்கள் என்று சொன்னார்களே, ஸஹாபாக்களுடைய மாணவர்கள் தாபீயீன் அந்த மாணவர்களின் அடுத்து வந்த மாணவர்கள் தபவுத் தாபீயீன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2652
இவர்கள் மார்க்கத்தை எப்படி புரிந்தார்கள், இவர்கள் இந்த வசனத்திற்கு இப்படி விளக்கம் சொல்லியிருக்கிறார்களா? இந்த அமளை இந்த ஆயத்தில் இருந்து இந்த ஹதீஸிலிருந்து எடுத்ததாக சொல்கிறார்களே! அப்படி என்றால் ஸஹாபாக்கள் இடைய இந்த அமல் இருந்ததா, இந்த கொள்கையை இந்த வசனத்திலிருந்து எடுத்ததாக சொல்கிறார்களே! ஸஹாபாக்களுடைய அந்த கொள்கை இருந்ததா. என்று பார்த்தால். இந்த வசனத்துக்கு நீ புரிந்தது சரியா இல்லையா என்பது தெளிவாகிவிடும்.
சகோதரர்களே சிலர் ஸஹாபாக்களை பற்றி பேசும் போது அவர்களுடைய உள்ளங்கள் எல்லாம் சுருங்கி விடுகிறது, அவர்களுடைய முகங்கள் எல்லாம் சுருங்கி விடுகிறது காரணம் என்ன? ஸஹாபாக்களை விட்டு இந்த உம்மத்தை, முற்றிலுமாக இந்த தொடர்பை அறுத்தால் தான் அவர்களுடைய மன இச்சைகளை, அவர்களுடைய வழிகேடுகளை புகுத்தி அவர்கள் வெற்றி காண முடியும்.
ஆகவே, தான் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி பேசினால் ஃபாருக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி பேசினால் எல்லாம் அவர்களுக்கு உற்சாகமே வராது. ஸஹாபாக்களை பற்றி அவர்களுடைய அமல்களைப் பற்றி அவர்களுடைய அறிவைப் பற்றி அவர்களுடைய கூற்றுக்களை பற்றி பேசினால் அப்படியே ஏதோ ஜட பொருளாக இருப்பார்கள்.
ஆனால், அவர்கள் நம்புகின்ற தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கப்பட்டால் அப்படியே சுறுசுறுப்பாகி விடுவார்கள். முகங்கள் எல்லாம் மலர்ந்து விடும். அவர்களது உள்ளங்கள் எல்லாம் அப்படியே பூரித்துவிடும்.
சகோதரர்களே! ஸஹாபாக்களுடைய இல்மையை விட சிறந்த ஒரு இல்மை ஒரு மனிதன் பிற அறிஞர்களிடமிருந்து கொண்டு வர முடியுமா என்றால், கண்டிப்பாக கொண்டு வர முடியாது. காரணம் என்ன? ஸஹாபாக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தவர்கள். ரஸூலல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வஹீ அல்லாஹ்வுடைய வஹீ அந்த ஸஹாபாக்களுக்கு இல்மையை கொடுத்தது. அவர்கள் அறிஞர்கள் என்று அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
இந்த நபி வருவதற்கு முன்னால் வழிகேட்டில் இருந்தார்கள். இந்த நபியால் அவர்கள் போதிக்கப்பட்டதற்கு பிறகு, அவர்கள் கற்பித்துக் கொடுக்கப்பட்டதற்கு பிறகு, அவர்களை விட சிறந்த சிந்தனையாளர்களை அறிஞர்களை ஒழுக்க சீலர்களை ஆசிரியர்களை இந்த சமுதாயத்திலே உலக வரலாறு பார்த்திருக்க முடியாது.
அல்லாஹ்வின் அடியார்களே! ரஸூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தீனை அப்படியே கற்றுக்கொண்டு, அதை செயல்படுத்தியவர்கள் தான் ஸஹாபாக்கள். ஆகவே, தான் இந்த சமுதாயத்தில் ஸஹாபாக்களை விட்டு பிரிந்து யாரெல்லாம் இந்த தீனை தேடினார்களோ, அவர்களது கூட்டங்கள் அவர்களது சிந்தனைகள் அவர்கள் உருவாக்கிய அத்தனையும் பித்அதுகளாகவும், வழிக்கேடுகளாகவும், வழிகெட்ட சிந்தனைகளாகவும், வழி கெட்ட அமல்களாகவும், அப்படியே நிரம்பி போய் விட்டன.
ரஸூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை எப்படி உருவாக்கினார்கள் என்றால் தன்னுடைய கட்டளைகளை மீறாதவர்களாக, குர்ஆனுடைய வசனத்தை மீறாதவர்களா, சுன்னத்தை முழுமையாக பற்றிப்பிடிக்கக் கூடிய உண்மை மூஃமின்களாக, முஸ்லிம்களாக, உருவாக்கி சென்றார்கள். அப்படிப்பட்ட பக்குவத்தை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு உருவாக்கி கொடுத்தார்கள்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவைப் பற்றி ஸஹாபாக்களுடைய அறிவிப்பை பாருங்கள். ரஸூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக சொல்கிறார்கள்.
அன்பிற்குரியர்களே! இந்த சுன்னத்தைக் கொண்டு மனிதன் திருப்தி அடைய வேண்டும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறத்திலிருந்து நமக்கு ஒரு ஹதீஸ் வந்தால் அமலுக்கும் தக்குவாவுக்கும் இபாபத்திற்கு அல்லாஹ்வை நெருங்குவதற்கும் அது நமக்கு போதுமானது அது நமக்கு சாதாரண அமலாக இருந்தாலும் சரி பார்வைக்கு.
பித்அதுக்கள் பகட்டாக இருக்கும். அலங்காரமாக இருக்கும் கவர்ச்சியாக இருக்கும் இன்னும் அது பெரிய ஒரு தக்குவாவை கொடுப்பதைப் போன்ற ஒரு தோற்றமாக இருக்கும். ஆனால், உண்மையில் அப்படி அல்ல. உண்மையான தக்குவாவை. இபாதத்தை அல்லாஹ்வுடைய நெருக்கத்தை கொடுக்கக் கூடியது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா மட்டும்தான்.
அல்லாஹுதஆலா நபியை அனுப்பியது நமக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்காகத்தான், அல்லாஹ்வின் பக்கம் நமக்கு நெருக்கமாக்கி வைக்கக் கூடிய அமல்களை கற்றுக் கொடுப்பதற்கு தான், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
روى الطبراني بإسناد صحيح عن النبي أنه قال: ما تركت شيئاً يقربكم إلى الله إلا وأمرتكم به، وما تركت شيئاً يبعدكم عن الله إلا وقد نهيتكم عنه
எவ்வளவு அழகான வழிகாட்டுதல் பாருங்கள், உங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கம் ஆக்கி வைக்கக்கூடிய எந்த ஒன்றையும் உங்களுக்கு நான் ஏவாமல் விடவில்லை. உங்களை அல்லாஹ்வை விட்டு தூரமாக்கக்கூடிய எதையும் உங்களுக்கு நான் தடுக்காமல் விடவில்லை.
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ராணி, எண் : 1647, அஸ்ஸஹிஹா எண் : 2866
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நமக்கு காட்டி கொடுத்தார்கள், அல்லாஹ்வுடைய வெறுப்பு கோபம் எதில் இருக்கிறது என்பதை நமக்கு அறிவித்து அதிலிருந்து நம்மை தடுத்தார்கள், ஆகவே, தான் அல்லாஹு சுப்ஹானஹூவதஆலா சில வழிகேடல்கள் காலப்போக்கிலே எப்படி உருவானாலும் சரி, அவர்களுக்கெல்லாம் மறுப்பை குர்ஆனிலே வைத்தான், அதற்குரிய அடிப்படை வசனங்களை குர்ஆனிலேயே அல்லாஹு வைத்தான்.
சிலர் சொல்வார்கள், ஒன்று குர்ஆனிலே இருக்கும்போது ஹதீஸிலே ஏன் தேட வேண்டும்.என்று. என்பதால் ஹிகிரா காலங்கள் என்று ஒரு குரூப் இருக்கும் இவர்களுடைய வாதம் என்ன குர்ஆனிலே ஒன்று தெளிவாக இருக்கும் போது ஹதீஸை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஹதீஸுக்கு எப்போது போக வேண்டுமென்றால், குர்ஆனில் இல்லை என்றால் தான் போக வேண்டும். என்ன அழகான நிபந்தனை பாருங்கள். சகோதரர்களே. எவ்வளவு பெரிய வழிகேடு பாருங்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும்.
சொன்னார்கள் ஸஹாபாக்கள் எல்லாம் ஒட்டககாலத்திலே வாழ்ந்தவர்கள், அவர்களுக்கு நவீன அறிவியலைப் பற்றி என்ன தெரியும், இன்றைய வழிகெட்ட தவ்ஹீத் ஜமாத் போன்ற குறுப்புகளைப் போல ஸஹாபாக்களை பற்றி பேசினாலே அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அபு குரைராவுக்கு என்ன தெரியும்? அலிக்கு என்ன தெரியும்? என்று ரளியல்லாஹு அன்ஹுவா அவ்வளவு இளக்காரமாக பேசுவார்கள். தங்களுடைய அறிஞர் அத்தனை கல்வியையும் கரைத்து குடித்தவரைப் போன்று பேசுவார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் எவ்வளவு தான் கல்வி கற்றாலும் சரி. நீங்கள் எவ்வளவு தான் அழகிய தத்துவங்களை ஞானங்களை எவ்வளவு தெளிவாக பேசினாலும் சரி. அல்லாஹ் முஸ்லிமாகியமுஃமின்களாகிய எங்களுக்கு கொடுத்த கட்டளை என்ன தெரியுமா? சூரத்து நிஷாவனுடைய 115 வது வசனத்திலே சொல்கிறான் பாருங்கள்.
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
இன்னும், எவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பிய வழியிலேயே நாம் திருப்பிவிடுவோம். இன்னும், அவரை நரகத்தில் எரிப்போம். அது கெட்ட மீளுமிடமாகும். (அல்குர்ஆன் 4 : 115)
முஃமினே உனக்கு நேர் வழி ரஸூலுல்லாஹ் புறத்திலிருந்து தான் வந்தது. அவரை விட்டு விலகாதே, யார் மூலமாக வந்தது, நேர்வழி ரஸூலுல்லாஹ் புறத்தில் இருந்து வந்தது, நமக்கு நேர் வழி வந்தது, கிரேக்க தத்துவ ஞானிகள் மூலமாக வரவில்லை, அமெரிக்கா விஞ்ஞானிகள் மூலமாக வரவில்லை, ஹிதாயத்து நமக்கு வந்தது. ரஸூலுல்லாஹ்வின் புறமாக வந்தது எனவே, முஃமினே அவரை வீட்டு விலகாதே.
அடுத்து என்ன சொல்கிறார் பாதை யாருடைய பாதை அந்த ரஸூலை பார்த்து அந்த ரஸூலிடம் மார்க்கத்தை படித்து அவர் எப்படி தொழுதாரோ அப்படி தொழுது, அவர் எப்படி நோன்பு வைத்தார் அப்படி நோன்பு வைத்து அவர் எப்படி ஆட்சி செய்தாரோ அப்படி ஆட்சி செய்து நான் யாரை மூஃமின்கள் ஏற்றுக் கொண்டேனோ அவர்கள் பாதை அல்லாது இன்னொரு பாதையிலே நீ சொல்லாதே
وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ
யார் அல்லாஹ்வுடைய தூதருக்கு மாற்றமாக நடப்பாரோ அவருக்கு நேர்வழி தெளிவானதற்கு பிறகு யார் மூஃமின்கள் உடைய பாதை அல்லாத பாதையில் பயணிப்பாரோ அல்லாஹ் சொல்கிறான். அவர் எப்படி திரும்பினாரோ, அப்படியே நாம் திருப்பி விடுவோம்.
சகோதரர்களே! வழிகேடு எதில் இருக்கிறது, சுன்னா ஒன்று தெளிவானதற்கு பிறகு அதை விடுவதிலே இருக்கிறது. பித்அதுக்கள் சிந்தனை ரீதியாக, கொள்கை ரீதியாக, அமல் ரீதியாக எங்கே உருவாகிறது. ஸஹாபாக்கள் இதை செய்யவில்லை என்று தெரிந்ததற்கு பிறகும் அதை செய்வோம் என்று சொல்வது. மீலாது செய்தார்களா, செய்தார்களா மவுலிது கொண்டாடினார்களா இத்தனை சடங்குகளில் அல்லாஹ்வுடைய பெயர்களால் அல்லாஹ்வை நெருங்குகிறோம் என்ற ஒரு தத்துவத்தை கொண்டவன்.
சகோதரர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய தோழர்களை விடவா அல்லாஹ்வுடைய நெருக்கத்தை தேடிய ஒரு கூட்டம் உருவாகி விட முடியும். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் ஒவ்வொன்றிலும் அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ்வுடைய பொருத்தமுள்ள அமலை எங்களுக்கு சொல்லித் தாருங்கள். அல்லாஹ் விரும்பக்கூடிய அமலை எங்களுக்கு சொல்லித்தாருங்கள். என்று ரஸூலுல்லாஹ்விடத்திலே கேட்டு கேட்டு அமல்களை கற்றார்களே. அவர்கள் செய்யாத அமலா நமக்கு சொர்க்கத்தை தேடி தரும். அல்லாஹ் சொன்னான்.
யார் ரஸூலுக்கு மாற்றமாக நடப்பாரோ மூஃமின்கள் சென்ற பாதை அல்லாத பாதையிலே செல்வாரோ ரப்பு சொல்கிறான். அவர் எப்படி திரும்பினாரோ அப்படியே திருப்பி விடுவோம். அது மட்டுமல்ல இங்க இல்ல வழிகேடு இதோடு முடிந்து விடாது. மறுமை நரகத்திலே அவரை பொசுக்குவோம். நமது அமல்சொர்க்கத்தை தேடி தராது.
எதுவரை அந்த அமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப நபியின் சுன்னாவுக்கு ஏற்ப இருக்காதோ, அந்த அமலுக்கு மட்டும் தான் அல்லாஹ் கூலி தருவான். எந்த அமலை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இபாதத்தாக கற்றுக் கொடுத்தார்களோ, அந்த அமலுக்கு தான் சொர்க்கம்கூலியாக கிடைக்கும். இமாம் இப்னு கசீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அழகான ஒரு விளக்கத்தை சொல்கிறார்கள்.
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ عَامِلَةٌ نَاصِبَةٌ تَصْلَى نَارًا حَامِيَةً
(நபியே! மனிதர்களை தனது திடுக்கத்தால்) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா? (நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும். (அவை தண்டனையை) அனுபவிக்கும்; (தண்டனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது நன்மையென கருதி பாவங்களை செய்தன; அவற்றில் உறுதியாக இருந்தன; அவற்றைச் செய்வதில் களைப்படைந்தன.) (அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும். (அல் குர் ஆன் 88 : 1, 2, 3, 4(
சொல்கிறார்கள் இப்னு கசீர் ரஹிமஹுல்லாஹ் பயப்பட வேண்டும் சகோதரர்களே! இன்று ஒரு கூட்டம் இரவெல்லாம் உட்கார்ந்துகொண்டு திக்ரு செய்கிறோம். என்று மக்களை அழைக்கிறார்கள். என்ன திக்ரு செய்கிறார்கள். சுபஹானல்லாவா அல்ஹம்துலில்லாஹ் லாயிலாஹ இல்லல்லாஹ் லா ஹவ்வள வலாகுவதத்த இல்லாஹ் பில்லாஹ் இல்லை இதெல்லாம் ஒன்றுமில்லை கூஹ் "கூஹ் ஹிலல்லாஹ் ஹிலல்லாஹ் அல்லாஹு அல்லாஹு கதறுகிறார்கள் திடீரென்று குதிக்கிறார்கள். திடீரென்று பறக்கிறார்கள். என்னடா திக்ரு இவ்வளவு அழகாக சொன்னார்கள் பாருங்கள்.
وإنما هي عامة في كل مَن عبَد الله على غير طريقة مرضية يحسب أنه مصيب فيها ، وأن عمله مقبول ؛ وهو مخطئ وعمله مردود ، كما قال تعالى ( وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ . عَامِلَةٌ نَاصِبَةٌ . تَصْلَى نَارًا حَامِيَةً ) الغاشية/ 2 – 4
இந்த வசனம் இந்த வசனத்தின் பொருள் என்ன நாளை மறுமையிலே சில முகங்கள் கேவலமாகிவிடும். அவர்கள் கேவலப்பட்டு விடுவார்கள். யார் அவர்கள் தெரியுமா, உலகத்திலே அமல் செய்து அமல் செய்து கலைத்தவர்கள். இபாபத்து செய்து கலைத்தவர்கள். இவர்கள் நரகத்திலே கொதிக்க கூடிய நரக நெருப்பிலே நுழைந்து அங்கே பொசுங்குவார்கள். எரிவார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
சகோதரர்களே! இந்த வசனம் யார் குறித்து இறக்கப்பட்டது தெரியுமா? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இந்த மார்க்கம் ஹிதாயத்து வந்ததற்க்கு பிறகு இதை ஏற்றுக் கொள்ளாமல் துறவரத்திலே நசராக்கள் உடைய பாதிரிகளைப் போல யூத பாதிரிகளை போல அவர்கள் இந்த இஸ்லாமிர்க்குள் நுலையாமல் தங்களுடைய அந்த முந்திய மதங்களின் கொள்கைகளைக் கொண்டு துறவரத்திலும் தங்களை வருத்திக் கொள்வதிலும் இபாதத்து செய்து அல்லாஹ்வை அடையாளம் என்று நினைத்தார்கள் அல்லவா. அவர்களைக் குறித்து இந்த வசனத்தை இறக்கினான்.
உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு நசராக்கள் உடைய ஒரு பாதிரியை பார்த்த பொழுது. வணக்க வழிபாட்டிலே திரைக்கு முதுமை அடைந்த அவரைப் பார்த்தபோது இந்த வசனத்தை ஓதினார்கள்
இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் சுட்டிக்காட்டி சொல்கிறார்கள் ஒரு மனிதன் ஒரு அமலை செய்கிறான் தான் சரியாகத்தான் செய்கிறோம் எண்ணுகிறான். தன்னுடைய அமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எண்ணுகிறான். ஆனால், அவனோ தவறிழைத்தவனாக இருக்கிறான். அவனுடைய அமல் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அல்லாஹ்வின் அடியார்களே! ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:
قال : " لا يقبل الله لصاحب بدعة صوما ، ولا صلاة ، ولا حجة ، ولا عمرة ، حتى يدعها
சுன்னா மட்டும்தான் நமக்கு மார்க்கம் சகோதரர்களே சொல்கிறார்கள் பாருங்கள். ஒரு பித்அத்வாதி மார்க்கத்தில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் சொல்லாத ஒன்றை மார்க்கமாக்கி யார் செய்கிறாரோ, அவருடைய தொழுகையை ஏற்றுக் கொள்ளப்படாது. நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது. ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படாது. அவர் அந்த பித்அத்தை விடுகிறவரை.
ஒரு பித்அத் அதனுடைய தீங்கு அதனுடைய ஆபத்து என்பது அதோடு முடிவடைந்து விடக்கூடியதல்ல. அவனுடைய மற்ற வணக்க வழிபாடுகளிலும் அதனுடைய அந்தப் பிரச்சினை ஆரம்பமாகும். இமாம் முஹம்மது ரஹீ யார் ஒரு பித்அத்வாதியை கண்ணியப்படுத்துவாரோ, இஸ்லாமை தகர்ப்பதற்க்கு அவர் உதவி செய்துவிட்டார்.
وقال أبو إسحاق الهمداني و هشام بن عروة و الفضيل بن عياض : " من وقَّر صاحب بدعة فقد أعان على هدم الإسلام ".
இப்படி அல்லாஹ்வின் அடியார்களே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுக் கொடுத்த இந்த மார்க்கத்தை கற்க வேண்டும். சுன்னா எதுவென்று கற்க வேண்டும். அந்த அடிப்படைகளோடு கற்று, அதற்கு விளக்கமாக ஸஹாபாக்கள் தாபீயீன்கள் என்ன சொன்னார்கள் என்பதை புரிந்து அதை இன்று மக்களுக்கு மத்தியிலே பரப்ப வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறோம்.
உண்மையான தவ்ஹீதின் பக்கமும், உண்மையான சுன்னாவின் பக்கமும், திரும்பும் போது தான் கண்டிப்பாக அல்லாஹ்வினுடைய உதவி அல்லாஹ்வுடைய வாக்குறுதி நமக்கு உண்மையாகும். அல்லாஹுதஆலா நமக்கு மீண்டும் கண்ணியத்தை, மீண்டும் உயர்வை, மதிப்பை கொடுப்பான். எந்த பித்அத்துகளும் சரி வேறு எந்த ஒரு இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் புதிதாக உருவாக்கப்படக்கூடிய எதுவும் சரி அது நமக்கு கண்ணியத்தை கொடுக்காது. மேலும் மேலும் நம்மை பலவீனப்படுத்தத்தான் செய்யும்.
அல்லாஹு சுப்ஹானஹூவதஆலா நம்மை பாதுகாப்பானாக. இன்று சிறப்பான மஸ்ஜிதுகளில் கலந்து இருக்கக்கூடிய, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹு சுபஹானஹூதஆலா மேலும் அறிஞர்களின் கூற்றின் மூலமாக நல்ல கல்வியை பெற்று. அதில் செயல்பட்டு, அதை பிற மக்களுக்கும் எடுத்துக் சொல்லக்கூடிய நற் பாக்கியத்தை தருவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/