ஸலஃபுகள் என்றால் யார் அமர்வு 1 | Tamil Bayan - 698
ஸலஃபுகள் என்றால் யார் அமர்வு 1
தலைப்பு : ஸலஃபுகள் என்றால் யார் அமர்வு 1
வரிசை : 698
இடம் : விஸ்டம் மையம், கோயம்புத்தூர்
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -27-02-2022 | 28-07-1443
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்கும் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே, உங்களுக்கு முன்னால் அல்லாஹுதஆலாவைப் போற்றி புகழ்ந்தும். அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக. உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே, நல்ல இல்மை நல்ல அமலை, இம்மை மறுமையின் வெற்றியை வேண்டிவனாக! இந்த வகுப்பை ஆரம்பம் செய்கிறேன்.
இந்த வகுப்பிலே அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா. நமக்கு நல்ல இல்மை தந்தருள்வானாக. அல்லாஹ்விற்கு எந்த பாதை பொருத்தமான பாதையோ, எந்தப் பாதை அல்லாஹ்விடத்தில் உண்மையான பாதையோ, எந்தப் பாதையில் சென்றால் அல்லாஹ் நம்மை பொருந்தி கொள்வானோ, எந்தப் பாதையில் சென்றால் நாளை மறுமையிலே அல்லாஹுதஆலா நம்மை நபிமார்களோடு,
சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானோ, அந்த நல்ல பாதையில் அல்லாஹுதஆலா இந்த வகுப்பிலே நமக்கு காட்டித் தர வேண்டும். அதன்படி அல்லாஹுதஆலா நாம் நடப்பதற்கு, நமக்கு இலகுவாக்கி தர வேண்டும். என்று, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே துஆ செய்து கொள்கிறேன் ஆமீன்!
சகோதரரே! சகோதரிகளே! நம்முடைய இன்றைய வகுப்பின் தலைப்பு ஸலஃபுகளைப் பற்றி. பொதுவாக இன்று வாலிபர்களுக்கு மத்தியிலே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நம்மிலே நயவஞ்சகத்தை உள்ளத்திலே கலந்து விட்ட ஒரு கூட்டம், முஸ்லிம்களின் இந்த விழிப்புணர்வை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாலிபர்கள் இடத்தில் ஏற்பட்ட அந்த நல்ல விழிப்புணர்வை, தவறான தங்களது நோக்கங்களுக்காக, அந்த வாலிபர்களை வழி கெடுப்பதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். கல்வி இல்லாத வாலிபர்களும், மார்க்கத்தின் அடிப்படையை சரியாக கற்காத வாலிபர்களும், அவர்களுடைய அந்த அளக்கழிக்கப்பட்ட வார்த்தை ஜாலங்களிலே, மயங்கி அந்த வழிகேட்டிலே சென்று விடுகிறார்கள்.
ஆகவே, தான் மார்க்கத்தை தெரிந்திருப்பது என்பது வேறு. மார்க்கத்தை கற்பது என்பது வேறு. முஸ்லிம் அல்லாத பலர் கூட மார்க்கத்தை தெரிந்திருப்பார்கள். ஆனால், மார்க்கத்தை கற்பது என்பது, குர்ஆனிலிருந்து, ஹதீஸிலிருந்து, ஆதாரப்பூர்வமான நூல்களில் இருந்து, அவற்றைக் கற்ற ஆசிரியரோடு சேர்ந்து, படிப்பது இருக்கிறதே அதுதான் மார்க்கத்தை கற்பது.
ஆகவே, தெரிவதற்கும் கற்பதற்கும் இடையிலே வித்தியாசம் இருக்கிறது. தெரிந்தவர்கள் எல்லாம் நேர்வழி பெற்று விட முடியாது. நேர்வழி பெற்றவர்கள் பெறக்கூடியவர்கள் யார் என்றால், கல்வியை கற்க கூடியவர்கள் தான். ஆகவே, தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கல்வியை கற்பவர்களுக்காக துஆ செய்தார்கள்.
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا وَحَفِظَهَا وَبَلَّغَهَا، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2658
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الجَنَّةِ
கல்வியை கற்க கூடியவர்களுக்கு சுப செய்தி நற்செய்தி கூறினார்கள். யார் கல்வியை தேடி ஒரு பாதையிலே புறப்படுவாரோ, சொர்க்கத்தின் பாதையை எளிதாக்கி விடுகிறான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2646
ஆகவே சகோதரர்களே! இந்த கல்வியினுடைய வகுப்பை அல்லாஹுதஆலா நமக்கு மிக பயனுள்ளதாக ஆக்கித் தர வேண்டும். சமகாலத்திலே நாம் சந்திக்கின்ற குழப்பங்கள் எல்லாம், ஒரு தெளிவாக இந்த வகுப்பை அல்லாஹ் நமக்கு ஆக்கி தரவேண்டும். அல்லாஹ்விடத்தில் துஆ செய்து இந்த வகுப்பை ஆரம்பிக்கிறேன்.
முதலாவதாக இந்த வகுப்பினுடைய தலைப்பை ஒட்டி ஸலஃபுகள் என்றால் யார்? பொதுவாக இந்த வார்த்தை பிரபலமாக அறியப்பட்டிருந்தாலும், இதனுடைய உண்மையான அர்த்தத்தை பொருளை, நான் தெரியாமல் தான் நம்மிலே பலர் இருக்கிறார்கள்.
அரபி மொழியை பொறுத்தவரை, ஸலஃப் என்றால், நமக்கு முன்னால் சென்றவர்களை குறிக்கும். ஸலஃப் என்றால் நமக்கு முன் சென்ற நம்முடைய உறவினர்கள், நம்முடைய ரத்த பந்தங்கள் குறிப்பாக. அதுபோன்று காலத்தால் நமக்கு முன் சென்றவர்களையும் ஸலஃப் என்ற வார்த்தை குறிக்கும்.
ஆனால், மார்க்கத்தில் ஸலஃப் என்று சொல்லப்பட்டால் மார்க்க வழக்கிலே ஸலஃப் என்று சொல்லப்பட்டால், அறிஞர்கள் இடத்திலே, மூன்று விதமான கருத்துக்கள் இருக்கின்றன. ஒரு கருத்து ஸலஃப் என்ற அந்த பதம் ஸஹாபாக்களை மட்டும் குறிக்கும். இரண்டாவது கருத்து ஸஹாபாக்களையும் தாபியீன்களையும் குறிக்கும். அதாவது ஸஹாபாக்களையும் ஸஹாபாக்களிடத்திலே கல்வி படித்தவர்களையும் குறிக்கும். மூன்றாவது கருத்து ஸஹாபாக்களையும் குறிக்கும் தாபியீன்களையும் குறிக்கும், தபவுத்தாபியீன்கள். ஸஹாபாக்களிடத்தில் கல்வி படித்தவர்களிடம் கல்வி படித்த, மார்க்க அறிஞர்களையும் குறிக்கும்.
இப்படி மூன்று விதமான கருத்தை ஸலஃப் என்ற இந்த பதத்திற்கு அறிஞர்கள் சொல்வதைப் பார்க்கிறோம். அதை எப்படி இருந்தாலும் இந்த ஸலஃப் என்ற பதத்தில் எல்லா பதத்திலே ஒரு கூட்டம் தவறிவிடாமல் வருவார்கள். யார் அவர்கள்? ஸஹாபாக்கள்.
முதல் விளக்கம் ஸலஃப் என்றாலே யாரை குறிக்கிறது. ஸஹாபாக்கள், இரண்டாவது விளக்கம் ஸஹாபாக்கள் + தாபியீன் அதிலும் ஸஹாபாக்கள் வந்து விடுகிறார்கள். மூன்றாவது விளக்கம் ஸஹாபா + தாபியீன் + தபஅ தாபியீன் இதிலும் இந்த விளக்கத்திலும் யார் வந்து விடுகிறார்கள் ? ஸஹாபாக்கள் வந்து விடுகிறார்கள்.
ஆக ஸலஃப் என்ற இந்த அடிப்படை ஸஹாபாக்களை சுற்றி சுற்றி வரக்கூடிய ஒன்று. ஸஹாபாக்களை விட்டு, இந்த உம்மத்தை பிரிக்காமல், இந்த உம்மத்தை சஸஹாபாக்களோடு இணைப்பது. இதுதான் ஸலஃப் உடைய அடிப்படை.
இப்பொழுது நீங்கள் விளங்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்ன? ஸஹாபாக்கள் என்று யாரை சொல்கிறோம். இந்த வார்த்தையிலும் சிலருக்கு அறிவின்மை இருக்கின்ற காரணத்தால், ஹதீஸ்களில் வரக்கூடிய சில அறிவிப்புகளை ஸஹாபாக்களின் மீது உண்மையான ஸஹாபாக்களின் மீது பொருத்தி, நம்முடைய அப்பாவி இளைஞர்களுக்கு முன்னால், ஸஹாபாக்களை தவறாக சித்தரித்து விடுகிறார்கள்.
இப்பொழுது பாருங்கள் ஸஹாபா. ஸாஹிப் உடைய பன்மை அஸ்ஹாப், ஸஹாபா, ஸஹப், இந்த மூன்று பதங்களுடனே இந்த மூன்றுமே ஹதீஸ்களிலே, இஸ்லாமிய வரலாறுகளிலே பயன்படுத்தப்படும் நபியின் உடைய தோழர்களுக்காக. ஸாஹிப் என்பது ஒருமை. அதனுடைய பண்பு என்ன? அஸ்ஹாப், ஸஹாபா ஸஹ்புன்.
சரி நபியின் உடைய ஒரு தோழரை மட்டும் குறிக்கும் பொழுது, ஸாஹிப் ரஸூலுல்லாஹ் என்றும் சொல்லப்படும். ஸஹாபியுர் ரஸூல் என்றும் சொல்லப்படும். ஸஹாபா என்ற பதத்தில் இருந்து எடுத்து ஸஹாபியுர் ரஸூல் என்றும் சொல்லப்படும்.
நாம் ஸஹாபா என்றால் யாரை கூறுகிறோம்? யார் மக்காவிலே இஸ்லாமை ஏற்றார்களோ, யார் மதினாவில் இஸ்லாமை ஏற்றார்களோ, யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஹிஜிரத்திலே பங்கு கொண்டார்களோ, மக்காவிலே இஸ்லாமை ஏற்று முஹாஜிர்களாக வந்தார்களோ, மதினாவில் இஸ்லாமை ஏற்று நபிக்கும் முஹாஜிர்களுக்கும் உதவிகள் செய்தார்களோ, அன்சாரிகள் என்று அழைக்கிறோம் அல்லவா.
பிறகு பத்ரு, உஹது, ஹந்தக், ஹுனைன், கைபர், தபூக், பைஅத்துல் ரித்வான், என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய பயணங்களில் போர்களில் சமாதான ஒப்பந்தங்களில். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு மஸ்ஜிதிலே, தொழுகையிலே, அவர்களுடைய கல்வி வகுப்பிலே, யார் கலந்து கொண்டார்களோ, இஸ்லாமிலேயே அவர்களுடைய மரணம் நிகழ்ந்ததோ, அவர்களை நாம் அஸ்ஹாபுர் ரஸூல். ஸஹாபத்துல் ரஸூல். நபியின் தோழர்கள் ஸஹாபாக்கள். ஸலஃபுகள் என்று கூறுகிறோம்.
இதை இன்னும் கொஞ்சம் சுருக்குவோமேயானால், யார் ஒருவர் ரஸூலுல்லாஹ்வை பார்த்து, இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, ரஸூலுல்லாஹ்வை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து, இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஸ்லிமாகவே மரணித்தாரோ, அவர்கள் ஸஹாபியுர் ரஸூல். நபியின் தோழர் என்றும் ஸலஃப் என்றும் நாம் கூறுகிறோம்.
ஆகவே யார், நன்றாக கவனியுங்கள். இதுதான் ரொம்ப முக்கியமானது. இதை தெரியாதனால் தான் மக்களை சீக்கிரம் குழப்பி விடுவார்கள். சில ஹதீஸ்களை வைத்து. அது என்ன? யார் ரஸூலுல்லாஹ் உடைய காலத்து முஸ்லிமானார்கள். நன்றாக கவனியுங்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்தில் இஸ்லாமை ஏற்றார்கள்.
ஆனால், ரஸூலுல்லாஹ்வோடு நட்பை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கூட்டமாக வந்து ரஸூலுல்லாஹ்வை தூரத்தில் பார்த்து கூட இருப்பார்கள். ஆனால், நபியின் உடைய சபைக்கு வந்து நபியினுடைய நட்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணத்திற்கு பிறகு, அவர்கள் மார்க்கத்தை விட்டு விலகி விட்டார்கள். அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலே, இத்தகைய அந்த மார்க்கத்தை விட்டு வெளியேறுதல் நிகழ்ந்தது. அவர்களோடு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களோடு இருந்த ஸஹாபாக்களும் ஜிகாது செய்தார்கள்.
ஜிகாத் செய்து அவர்களில் பலரை திருத்தினார்கள். பலர் அந்த போரிலேயே கொல்லப்பட்டார்கள். அந்த வழிகெட்ட கூட்டம் இருக்கிறதே, அவர்கள் மூன்று வகை. ஒரு கூட்டம் யார்? நபி இறந்துவிட்டால் இந்த மார்க்கம் இருக்காது. என்று தங்களுடைய இணை வைப்பிலேயே திரும்பியவர்கள்.
இன்னொரு கூட்டம் ரஸூலுல்லாஹ் உடைய மரணத்திற்குப் பிறகு, அரபுகளில் இருந்த சில தலைவர்களை உதாரணமாக முஸைலாமாவை போன்று, அஸ்வத்துல் அனசியைப் போன்று, அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டு, அந்த பொய் நபிகளோடு சேர்ந்து கொண்டவர்கள். மூன்றாவது கூட்டம் ஜகாத் கொடுக்க மாட்டோம். என்று விலகிப்போனவர்கள்.
இப்படியாக மூன்று விதமான கூட்டம் இருந்தார்கள். இந்த மூன்று கூட்டங்களில் இருந்த யாரையும், நாம் ஸஹாபியோடு சொல்ல மாட்டோம். இவர் ரஸூலுல்லாஹ் காலத்தில் முஸ்லிமாக இருந்தாலும் சரி. ஏன் அவர்கள் நபியுடைய காலத்தில் இஸ்லாத்தில் இருந்தார்கள். நபியோடும் நபியுடைய தோழர்களோடும் நட்பு வைக்காமல், அவர்கள் விலகிச் சென்று நபியுடைய மரணத்திற்கு பிறகு, ஒரு கூட்டம் மொத்தமாக இஸ்லாமை விட்டு வெளியேறினார்கள்.
ஒரு கூட்டம் பொய்களை நபி என்று ஏற்றுக் கொண்டு விலகிச் சென்றார்கள். ஒரு கூட்டம் ஜகாத் தர மறுத்து வெளியேறினார்கள். இந்த மூன்று வகையான கூட்டத்தார்களிடமும் ஜிகாத் செய்தது யார்? ஸஹாபாக்கள். அபூபக்கரும் அவர்களுடைய தோழர்களும்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தோழர்கள். யார் நபியோடு பத்ரிலே கலந்து கொண்டார்களோ, உஹதிலே கலந்து கொண்டார்களோ, பைஅத்துல் ரித்வானிலே கலந்து கொண்டார்களோ, கந்தக்லே, கைபரிலே, தபூக்கிலே,புக்தாவிலே கலந்து கொண்டார்களோ, அந்த தோழர்கள்தான். என்ன செய்தார்கள்? இந்த மூன்று முர்தத் கூட்டத்திலே ஜிகாத் செய்து, அவர்களை திருத்தினார்கள், திருந்தாதவர்களை சட்டப்படி கொலை செய்தார்கள். மார்க்கத்தை நிலை நாட்டினார்கள்.
இப்பொழுது நாம் ஸஹாபா என்று சொன்னால், அதை யாரை மட்டும் தான் எடுத்துக் கொள்ளும். ஈமானோடு மரணித்த இவர்களைத்தான் எடுத்துக் கொள்ளுமே தவிர, இந்த வழிகெட்ட மூன்று கூட்டத்தில் யாரையுமே எடுத்துக் கொள்ளாது.
ஏன் இந்த விஷயத்தை உங்களுக்கு முன்னுரையாக சொல்கிறேன் என்றால், நீங்கள் ஸஹாபா ஸலஃப் என்று சொல்லும் பொழுது, உடனே உங்களிடம் கொண்டுவருவார்கள் அதான் தெரியாதா ஸஹாபாக்கள். ரஸூலுல்லாஹ் இறந்த உடனே முர்தத் ஆகிவிட்டார்களே. அதான் ஜகாத் கொடுக்க மாட்டேன் என்று சொன்னார்களே. இத பாருங்க ஹதீஸ் வருகிறது பாருங்கள்.
وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ الصَّفَّارُ، حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْعَزِيزِ بْنَ صُهَيْبٍ، يُحَدِّثُ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَيَرِدَنَّ عَلَيَّ الْحَوْضَ رِجَالٌ مِمَّنْ صَاحَبَنِي، حَتَّى إِذَا رَأَيْتُهُمْ وَرُفِعُوا إِلَيَّ اخْتُلِجُوا دُونِي، فَلَأَقُولَنَّ: أَيْ رَبِّ أُصَيْحَابِي، أُصَيْحَابِي، فَلَيُقَالَنَّ لِي: إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ
ரஸூலுல்லாஹ் ஹவுதுல் கவ்ஸர் என்று. தடாகத்தில் இருக்கும் பொழுது, அஸ்ஹாபி அஸ்ஹாபி என்று சொல்வார்கள். அப்பொழுது மலக்குகள் விரட்டியடிப்பார்கள். அப்பொழுது நான் சொல்வேன் என் தோழர்கள் என் தோழர்கள் என்று சொல்வேன். அப்பொழுது மலக்குகள் சொல்வார்கள்.
இவர்களெல்லாம் உங்களுடைய மரணத்திற்கு பிறகு, மார்க்கத்தில் என்ன புதுமை செய்தார்கள் என்பது நபியே உங்களுக்கு தெரியாது. என்று மலக்குகள் சொன்னவுடனே போங்க போங்க தூர போயிருங்க என்று சொல்வார்கள். அப்பொழுது மலக்குகள் அவர்களை எல்லாம் நரகத்தில் அடித்துச் செல்வார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், புகாரி, எண் : 2304, 2860 6575, 6576
அப்போ ஸஹாபாக்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள் பார்த்தீர்களா? இப்ப எப்படி ஸஹாபாக்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி, உங்களை வாய் அடைக்க வைப்பார்கள்.
நன்றாக கவனியுங்கள் அந்த ஹதீஸிலே ஸஹாபி என்றோ, முஸ்ஹாப் என்றோ, அஸ்ஹாபி என்றோ. எந்த வழக்கத்தின்படி சொல்லப்பட்டதல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு, ஸஹாபாக்கள் என்றால் யாரை முஸ்லிம்கள் அடையாளப் படுத்தினார்களோ, அந்த வழக்கத்தின்படி சொல்லப்பட்டது அல்ல.
மாறாக, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த ஹதீஸிலே அஸ்ஹாபி என்று சொன்னதோ அரபி வார்த்தையினுடைய அந்த வார்த்தையின் பொருள்படி. அரபு மொழியில் அஸ்ஹாப் என்றால் என்ன? என்னோடு இருந்தவர்கள்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கிற வரைக்கும் அவர்கள் அவர்களோடு இருந்தார்கள். அரபி மொழியின் உடைய அந்த வார்த்தையின் பொருள்படி. நபி (ஸல்) சொன்னது சரி. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணத்திற்கு பிறகு என்ன நடந்தது என்பது யாருக்கு தெரியாது?
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெரியாது. இவர்களெல்லாம் என்னுடைய காலத்தில் முஸ்லிம்களானவர்கள் தானே. என்னை பார்த்தவர்கள் தானே. அப்பொழுது இவர்கள் எல்லாம் என்னுடைய தோழர்கள் தானே. என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏங்குகிறார்கள்.
அப்பொழுது ஹதீஸிலே அங்க சொல்லப்பட்ட அஸ்ஹாபி என்பது வேறு. இப்பொழுது நாம் செல்லக்கூடிய அஸ்ஹாபு ரஸூல், ஸஹாபத்துல் ரஸூல் என்பது வேறு. இதை எப்படி ஒப்பிட்டு புரிய வேண்டும் என்பதை சொல்கிறேன் பாருங்கள். இமாம் என்று ஒரு வார்த்தை. இப்போது இமாம் என்று சொன்னால் உங்கள் மனதில் யார் வருவார்?
பள்ளிவாசலில் தொழுக வைப்பவர் வருவார். அரபி மொழி படி இமாம் என்றால் யார்? மக்களை வழி நடத்தக்கூடிய எல்லோருமே இமாம். அது அரசியலில் வழிநடத்தினாலும் ஆட்சியில் வழி நடத்தினாலும். சமுதாயத்தில் வழி நடத்தினாலும் வணக்க வழிபாட்டில் வழி நடத்தினாலும் எல்லாருமே இமாம்.
குர்ஆன் ஹதீஸில் இமாம் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறதே, அது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் பொதுவான அரபி மொழியின் படி. வழி நடத்தக்கூடிய வழி காட்டக்கூடிய வழிகாட்டி. இப்பொழுது இமாம் என்ற வார்த்தையை எப்படி கையாளிக்கிறோம் நாம். பொதுவான ஒரு அர்த்தத்திற்கு இருந்த வார்த்தை எடுத்து, ஒரு குறிப்பிட்ட ஒரு தலைவருக்கு மட்டும் வைத்து விட்டோம்.
இன்னும் ஈசியாக புரிய வேண்டுமென்றால், ரஸூல் என்றால் யார்? ரஸூல் என்றால் அரபி மொழி படி தூதர். ஒரு மன்னருக்கு தூதராக இருந்தாலும் சரி. ஒரு பிசினஸ் சென்டருக்கு தூதராக இருந்தாலும் சரி. ஒரு நாட்டுக்கு தூதராக இருந்தாலும் சரி.
ஆனால், இந்த ரஸூல் என்ற வார்த்தையை, குர்ஆனில் அல்லாஹுதஆலா பொதுவாகவும் பயன்படுத்தி இருக்கிறான். குறிப்பாக யாருக்கு பயன்படுத்துகிறான்? தான் மனிதரில் இருந்து யாரை தூதராக ஆக்குகிறானோ அவர்களுக்கு பயன்படுத்துகிறான்.
அதேபோல் மலக்குகளுக்கும் அதை பயன்படுத்துகிறான். ஒரு வார்த்தை மொழியை கவனித்து பொதுவாக இருக்கலாம். அதை பழக்கப்படுத்தும் போது, வழக்கத்தில் கொண்டு வரும் போது, அது குறி பார்க்கலாம். இது ஒரு நீண்ட விளக்கமானது.
அப்பொழுது இந்த விளக்கத்தை நாம் புரிந்து கொண்டோமே ஆனால். பெரும்பாலான குழப்பங்கள் நீங்கிவிடும். ஸஹாபாக்களை பற்றி அவர்களை தவறாக மக்களுக்கு மத்தியிலே சித்தரித்துக் காட்டும் பொழுது, எந்த ஹதீஸுகளை கொண்டு வருவார்கள்.
இந்த ஹவ்தூர் ஹவுஸ் உடைய ஹதீஸ்களை கொண்டு வருவார்கள் அல்லவா. இதுவெல்லாம் எந்த அடிப்படையில் சொல்லப்பட்டது. பொதுவாக அரபு மொழியினுடைய அர்த்தத்தின்படி சொல்லப்பட்டதை வைத்து. ஸஹாபாக்களை டேமேஜ் செய்ய அவர்கள் கருதுவார்கள். ஸஹாபாக்களின் நல் மதிப்பை உள்ளத்தில் இருந்து எடுக்க விரும்புவார்கள். முயற்சிப்பார்கள்.
ஆகவே தயவு செய்து இந்த தெளிவுக்கு வந்து விடுங்கள். நாம் ஸலஃப் என்று யாரைச் சொல்கிறோம் என்றால், ஸஹாபாக்கள் என்று யாரை சொல்லுகிறோம் என்றால், யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வோடு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, கல்வி படித்து தோழமையில் இருந்து ஹிஜ்ரத் செய்து ஜிகாத்தில் கலந்து, நுஸ்ரத்தில் கலந்து, இஸ்லாமிலேயே இறந்தார்களோ. இந்த மார்க்கத்திலேயே இறந்தார்களோ, அத்தகைய நன்மக்களை பற்றி தான் நான் சொல்கிறோம்.
அவர்களைப் பற்றி தான் குர்ஆன் நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களில் புகழ்கிறது. மூஃமின்கள். மூஃமின்கள். மூஃமின்கள் என்று அல்லாஹுதஆலா வர்ணித்து பேசக் கூடியவர்கள் எல்லாம் யார் இந்த முதல் கூட்டத்தில் உள்ளவர்கள். பிரிந்து போன வழி கெட்டவர்கள் அந்த மூன்று கூட்டத்தினர் அல்ல.
நீங்கள் வரலாற்றை நன்கு படித்துப் பார்ப்பீர்களேயானால். உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திற்குப் பிறகுதான், ஃபித்னா இந்த மார்க்கத்திலே குழப்பம் என்பதும், முஸ்லிம்களுக்கு மத்தியிலே குழப்பங்களும் பிரிவினைகளும் உண்டாகின்றன. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்படுகின்ற வரை, எந்த குழப்பமும் அங்கே இல்லை. எந்தவிதமான பிரிவுகளும் அங்கே உருவாக்கப்படவில்லை.
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டதற்கு பிறகுதான், இந்த குழப்பங்கள் அங்கே உருவாகின்றன. அப்படி உருவாகும் பொழுது வழிகெட்ட கூட்டங்களாக நீங்கள் வரலாறுகளிலே பலக் கூட்டங்களை நீங்கள் படிக்கலாம்.
ஹாரிஜியா என்று ஒரு கூட்டம், பிறகு கதறியா, விதியை மறுக்கக் கூடியவர்கள். பிறகு ஜபிரியா எல்லாம் விதி தான் மனிதருக்கு என்று எந்தவிதமான சுய ஒரு உரிமையும் இல்லை. சுய செயலும் இல்லை. என்று எல்லாவற்றையும் விதியின் மீது சுமத்த கூடியவர்கள்.
முர்ஜியா ஒரு மனிதன் அல்லாஹ்வை மட்டும் அறிந்தால் போதும், அவன் சொர்க்கம் சென்று விடுவான். அமல்கள் ஏதும் அவனிடத்தில் இல்லை என்றாலும் கூட. லாஇலாஹ இல்லல்லாஹ்வை வாயினால் சொல்லாமல் இருந்தாலும் கூட. அமலே தேவை இல்லை என்று ஒரு கூட்டம். பிறகு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மையமாக வைத்து,
அவர்களை அல்லாஹ்வுடைய ஸ்தானத்திலே உயர்த்தி அல்லது, நபிக்கு மேலாக உயர்த்தி, பிறகு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய குடும்பத்தார்களை மையமாக வைத்து அவர்களை அல்லாஹ்வுடைய ஸ்தானத்தில் உயர்த்தி, அல்லது நபிக்கு மேலாக உயர்த்தி, இப்படியாக வழிகெட்ட ஷியா ராஃபியா என்ற கூட்டம். இப்படி போய்க்கொண்டே இருக்கிறது என்ன சொல்கிறோம் சுருக்கமாக.
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! நபி (ஸல்) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தோழமையில் இருந்த ஸஹாபாக்கள் நபி தோழர்களில், ஒருவர் கூட இந்த வழிகெட்ட கூட்டங்களில் இருக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ் புரிகிறதா.
ஹாரிஜியா என்ற ஒரு கூட்டம் சென்றதல்லவா அதில் ஏதாவது ஒரு நபித்தோழர் இருந்தாரா? முஅர்தஜிலா சென்றாரே முஃதஜிலா என்றால் தற்க கலையை அடிப்படையாக வைத்து, இறை இயலை பேசக் கூடியவர்கள் அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளை நிர்ணயம் செய்பவர்கள். முர்ஜியா கதறியா ஜபரியா நஹ்மியா அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளையே மறுக்கக் கூடியவர்கள்.
இப்படி தோன்றிய எந்த ஒரு வழிகெட்ட கூட்டமாகவும் இருக்கட்டும். அவர்கள் யாருக்கும் ஒரு ஸாஹாபி கூட உஸ்தாதா இல்லை. எந்த ஒரு ஸஹாபியும் அந்த கூட்டத்தில் இல்லை. மார்க்கத்தை அவர்கள் ஸஹாபாக்களிடமிருந்து படித்திருக்கவில்லை.
ஸஹாபாக்களுடைய தோழமையை நட்பை அவர்கள் எடுக்கவில்லை தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் தன் சுய விருப்பத்தோடு மார்க்கத்தை தெரிந்து கொண்டு, தங்களுடைய சுய புத்திகளுக்கு ஏற்ப, அவர்கள் மார்க்கங்களை சிந்தித்து தத்துவங்கள் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டவர்கள். பிறகு அதற்கு ஏற்ப குர்ஆன் ஹதீஸை வளைத்தவர்கள். வித்தியாசம் புரிகிறதா இல்லையா.
ஆகவே தான் அல்ஹம்துலில்லாஹ் . நம்முடைய உலமாக்கள் ஏன் ஸஹாபாக்களை முன் வைக்க வேண்டும். ஏன் புரிதலின் அடிப்படையிலே நாம் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால். ஸஹாபாக்கள் யாரும் வழிகெட்ட கூட்டத்தில் சேரவில்லை. வழி கெட்ட கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் ஸஹாபாக்களுடைய நட்பில் இருந்து மார்க்கத்தை படித்தவர்கள் இல்லை. ஸஹாபாக்களை தங்களுடைய ஆசிரியர்களாக எடுத்துக் கொண்டவர்கள் இல்லை.
ஒரு சின்ன சம்பவம் சொல்கிறேன் உங்களுக்கு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஸஹாபாக்களில், பல ஸஹாபாக்கள் இடத்தில் கல்வி படித்த மூத்த தாபியீன் அல்ஹஸருல் பஸரி என்பவர். அதற்கு முன் இன்னொரு விஷயத்தை சொல்கிறேன். மக்களில் எப்போதுமே மூன்று வகையான தரம் இருக்கும். இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஸஹாபாக்களிலும் மூன்று வகையான ஸஹாபாக்கள் இருப்பார்கள்.
ஒன்று அகாபீர் ஸஹாபா ஸஹாபாக்களில் மூத்தவர்கள். இரண்டாவது அவுஸாதூர் ஸஹாபா, ஸஹாபாக்களில் நடுநிலை ஆனவர்கள். நடுவ வயது உடையவர்கள். மூன்றாவது யார்? அஸாகிர் ஸஹாபா சிறிய ஸஹாபாக்கள்.
எப்படி பிரிக்கிறார்கள் யார் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அந்த காலத்திலே நபித்துவத்தினுடைய ஆரம்ப காலத்திலேயே பிறந்து, அல்லது அதற்கு முன்னாடி பிறந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நுபுவத்து வந்த உடனே, இஸ்லாமை ஏற்றார்களோ இவர்களெல்லாம் எதிலே வந்து விடுகிறார்கள். மூத்த ஸஹாபாக்களில் வந்து விடுவார்கள்.
பிறகு நபி (ஸல்) மதீனா வந்தவுடன் பிறந்தார்கள் பாருங்கள், அல்லது ஹிஜ்ரத்துக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு பிறந்தார்கள். ரஸூலுல்லாஹ் இறக்கும் பொழுது அவர்களுக்கு 15 வயது 10 வயது இருக்கும் பாருங்கள். இவர்களெல்லாம் ஸஹாபாக்கள் உடைய வாலிபர்களில் வருவார்கள்.
அடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இறப்புக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு பிறந்தார்கள் பாருங்கள். பிறந்து ரஸூலுல்லாஹ்வை சின்ன வயதில் பார்த்தார்கள் பாருங்கள், அவர்களும் யார் தான் சின்ன ஸஹாபாக்கள். ஸஹாபாக்களில் சின்ன ஸஹாபாக்கள்.
அதேபோல் தான் தாபியீன்களிலும் மூத்த தாபியீன் என்றால் யாரை சொல்லப்படும் என்றால், பெரும்பாலான ஸஹாபாக்கள் உயிரோடு இருக்கும்போது, அவர்களுடைய காலத்திலேயே இஸ்லாமை ஏற்று, அவர்களின் பலரிடத்திலே கல்வியைத் தேடி, பல ஸஹாபாக்களுடைய கல்வியை தன்னிலே எடுத்துக் கொண்டு, மார்க்கத்திற்காக பணி செய்த வயது மூத்தவர்களை, மூத்த தாபியீன் என்று சொல்லப்படும்.
அந்த வரிசையில் வருபவர்கள் தான் யார்? ஹஸன் பஸரி முஹம்மது இப்னு ஸீரின் பிறகு அபூ ஹுரைராவுடைய மாணவர் ஸாலிஹ் இதுபோல் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார் மூத்த தாபியீன்கள் என்று சொல்லப்படும்.
இப்பொழுது ஹஸன் பஸரி ரஹிமத்துல்லாஹி அலைஹி இடத்தில், ஒரு வழிகெட்ட கூட்டத்தை சேர்ந்த ஒருவர் வருகிறார். வாருங்கள் நான் உங்களிடத்தில் விவாதம் செய்ய விரும்புகிறேன் என்று. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் அல்லவா நான் அதற்கு மாற்றமான கருத்து சொல்கிறேன். நீங்கள் சொல்வது தப்பு. வாருங்கள் நாம் விவாதம் பண்ணுவோம், நிரூபிப்போம்.
இப்போ நீங்களாக இருந்தால் என்ன சொல்வீர்கள். இப்போது இமாம் ஹஸன் பஸரிக்கு நீங்கள் ஒன்றை சொல்ல விரும்புவீர்கள். என்ன விஷயம் சொல்ல விரும்புவீர்கள். விவாதத்திற்கு செல்லுங்கள் அப்பொழுதுதானே சத்தியம் என்ன என்பது தெரியும்.
நீங்கள் சத்தியவாதி என்று சொல்கிறீர்கள் அல்லவா அப்பொழுது விவாதம் செய்யுங்கள். அப்போ தானே நாங்கள் பொதுமக்களும் பார்ப்போம். நீங்கள் விவாதம் செய்வதை பார்த்து, நாங்கள் முடிவு செய்வோம்.
தப்பு தப்பு இமாம் சொன்னார்கள்: சகோதரரே!, என்னுடைய மார்க்கம் எனக்குத் தவறவில்லை. நான் இந்த மார்க்கத்தை யாரிடம் இருந்து படித்தேனோ, அவர்கள் எனக்கு இந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்தார்கள். உன்னுடைய மார்க்கம் உனக்கு தவறு இருந்தால், அந்த மார்க்கத்தை நீ தேடி செல். அந்த மார்க்கத்தை நீ தேடி கற்றுக்கொள்.
நான் என்னுடைய மார்க்கத்தை யாரிடம் தேட வேண்டுமோ கற்க வேண்டுமோ கற்றுக்கொண்டு அறிந்து கொண்டேன். நான் உன்னிடத்தில் விவாதம் செய்ய விரும்பவில்லை. இதற்கு முன்பே நான் சொல்லிவிட்டேன். நான் விவாதத்தில் தோற்று விட்டேன் என்று. நான் உன்னிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை. வேண்டுமென்றால் நான் இதையும் சேர்த்து சொல்கிறேன். நீ தான் வெற்றி பெற்றாய் என்று வைத்துக்கொள். நான் தோற்றேன் என்று வைத்துக்கொள்.
நான் என்ன கேட்கிறேன். விவாதத்தில் தோற்றத்தினால் அல்லாஹ் நரகத்தில் தூக்கி வீசுவானா? விவாதத்தில் தோற்றத்தினால் ஒருவரை அல்லாஹ் வழி கெடுக்க செய்வானா? அப்பொழுது இப்போ எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள். விவாதத்தில் வாய் அடைத்த வரை, வழிகேடு என்று முடிவு செய்ய முடியுமா.
அல்லாஹ்விடத்தில் வழிகேடர் யாரு நேர்வழி பெற்றவர் யார்? அதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லி விட்டான். அதை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளங்கிவிட்டார்கள். அதைக் கற்றுக் கொண்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை தேடி சென்று மார்க்கத்தில் எது நேர்வழி என்று தெரிந்து கொள்ளுங்கள். விவாதம் செய்து நேர்வழியை தேடாதீர்கள்.
அப்படி தேடுனதுனால தான் காலம் காலமாக ஒரு கூட்டம் வழி கெட்டு கொண்டிருக்கிறது. நம்ம காலத்திலும் கூட்டம் வழி கெட்டுக் கொண்டிருக்கிறது. எதற்காக சொல்ல வந்தேன் இதை என்று சொன்னால், இங்கே ஹஸன் பஸரி ரொம்ப தெளிவாக இருந்தார்.
தான் ஸஹாபாக்கள் இடத்திலிருந்து எதைக் கற்றாரோ, அது தனக்கு போதுமானது. இப்பொழுது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு. யாரிடம் கல்வி படித்தார்கள். உமருல் ஃபாரூக் யார் இடத்தில் கல்வி படித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில். இப்பொழுது ஒருவர். ஒரு கற்பனையில் வைத்துக் கொள்ளுங்கள். கிரேக்கிலிருந்து வருகிறார் அபூபக்கரிடம்.
அபூபக்கரே! உங்களுக்கு தெரியாத விஷயம் நிறைய எனக்கு தெரியும். நீங்களும் அல்லாஹ்வைப் பற்றி சொல்லுங்கள். நானும் அல்லாஹ்வைப் பற்றி சொல்கிறேன். நான் எவ்வளவு தெளிவான ஆதாரத்தோடு சொல்கிறேன் பாருங்கள். நான் சொல்வதை நீங்கள் புரியுங்கள் என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அப்படியா சரிப்பா சொல்லுப்பா அப்படி என்று சொல்வார்களா? என்ன சொல்வார்கள்? ஏன்டா நீ கிரேக்க நாட்டில் இருந்து வந்துவிட்டு, யூனான்ல இருந்து தத்துவத்தை படிச்சு வந்துட்டு, நீ எங்க போய் கல்வியை படித்து விட்டு வந்து விட்டு. ரஸூலுல்லாவிடம் படித்த என்ன போய்.
நீ அல்லாஹுவை பற்றி சொல்லி தாரேன்.ரஸூலை பற்றி சொல்லித் தாரேன். மறுமையை பற்றி சொல்லிதாரேன். என்று சொல்கிறாயே உனக்கா இந்த கல்வி கொடுக்கப்பட்டது. இப்பொழுது அபூபக்கர் அலி அல்லாஹ் அந்த பக்கம் செல்வாரா சொல்லுங்கள் பார்க்கலாம். உமர் போவார்களா உஸ்மான் போவாங்களா. அது எந்த ஒரு ஸஹாபியாவது போவாரா. இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் ஏன் ஹஸன் பஸரி என்று.
ஏன் போக வேண்டும் நாம் ஏன் காது கொடுத்து கேட்க வேண்டும். நாம் எதைக் கேட்டு விட்டோம், குர்ஆனையும் ஹதீஸையும் ரஹீயையும் கேட்டு விட்டோம். இப்பொழுது ஏன் மனிதர்கள் உருவாக்கிய தத்துவங்களை கேட்க வேண்டும். மனிதர்கள் உருவாக்கிய சித்தாந்தங்களை ஏன் கேட்க வேண்டும்.
அதுல நேர்வழி இருக்குமே ஆனால், அதை போய் தேடுங்கள் என்று அல்லாஹ் ஒரு வார்த்தையில் சொல்லி முடித்திருப்பானே. அந்த சிந்தனை நேர் வழி காட்டும் என்றால், அல்லாஹுதஆலா அந்த பக்கம் சாட்டி இருப்பானே. அல்லது அந்தக் கூட்டத்தில் இருப்பவர்களுக்கு அல்லாஹ் வஹீ இறக்கியிருப்பானே. இறக்கவில்லையே அல்லாஹுதஆலா.
ஆகவே ஸஹாபாக்கள் என்பவர்களை நாம் ஏன் சுற்றிவர வேண்டும் என்றால், அவர்களை ஏன் அடிப்படையாக வைக்க வேண்டும் என்றால். இதுதான் காரணம். அவர்களுடைய சிந்தனையில் அறிவில் வஹியை தவிர எதுவும் இல்லை.
இன்று யாரெல்லாம் வஹீ தான் ஆதாரம் வஹீ தான் ஆதாரம் என்று சொல்கிறார்களோ, நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பக்கா கேடிகள் கயவர்கள் கள்ளர்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். கடுமையாக பேசுகிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்.
வஹீ தான் ஆதாரம் என்று சொல்லிவிட்டு, ஆனால், மனதில் நிய்யத் வைத்திருப்பது என்ன? வஹீயவே நாங்க சொல்ற மாதிரி நீங்க புரியணும். நாங்கள் ஏற்றுக் கொண்ட வஹீ. வஹிக்கு நாங்கள் விளக்கம் சொல்வது மாதிரி.
ஆகவே, ஸஹாபாக்களை தாபியீன்களை, தபஅக் தாபியீன்களை நாம் ஸலஃப் என்று கூறுகிறோம். காரணம் என்னவென்றால் மார்க்கத்தை தீனை, குர்ஆனிலிருந்து ஹதீஸிலிருந்து கற்றவர்கள். அதில் எதையும் கலக்காதவர்கள். வழிகேட்டை அதிலே கலக்காதவர்கள்.
ஆகவேதான், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திற்கு முன்னர் எந்த நிலைமையில் மார்க்கம் இருந்ததோ, அந்த வழியில் அப்படியே வரக்கூடிய அந்த தலைமுறை ஸஹாபாக்கள் தாபியீன்கள் தபவுத் தாபியீன்கள் இவர்களைத்தான் ஸலஃப் என்று நாம் கூறுகிறோம்.
மார்க்கத்தை அவர்கள் புரிந்த அடிப்படையிலே புரிய வேண்டும் என்று கூறுகிறோம். இப்பொழுது உங்களுக்கு இன்ஷா அல்லாஹ் சில முக்கியமான குறிப்புகளை நாம் சொல்லுவோம் கொஞ்சம் கவனமாக கவனியுங்கள்.
பத்து விஷயங்களை நாம் பார்ப்போம். ஏன் ஸஹாபாக்கள், இவர்களது புரிதல்களை நாம் அடிப்படையாக மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லா கவனித்து பாருங்கள். மார்க்க ஆதாரம் என்பது குர்ஆன் சுன்னா தான்.
இப்பொழுது நாம் ஸஹாபாக்களை ஏற்க வேண்டும் என்று சொல்லும் பொழுது, அவங்க உங்களுக்கு என்ன சொல்வாங்க இத பாருங்க தக்லீதுலிருந்து உங்களை பாதுகாத்துக் கொண்டு வந்தா திரும்ப போய் ஸஹாபாக்களை தக்லீது பண்ண வைக்கிறாங்க. தாபியீன்களை தக்லீது பண்ண வைக்கிறாங்க.
நாம் ஸஹாபாக்களை அவர்கள் சொன்ன இந்த அர்த்தத்தில் தக்லீது செய்யவில்லை. தக்லீது செய்கிறோம் ஆனால் எந்த அர்த்தத்தில். மார்க்கத்தை புரிவதில் அவர்களுடைய புரிதலை ஏற்றுக் கொள்கிறோம். நம்ம தக்லீது எதையெல்லாம் செய்கிறோம்.
அல்லாஹ்வை அல்லாஹ்வுடைய ரஸூலை சுன்னாவை தான், நாம் தக்லீது செய்கிறோம். ஆகவே தான் ஒரு ஸஹாபி இடம் இருந்து, ஹதீஸுக்கு மாறான ஏதாவது ஒரு நிகழ்வு நமக்கு அறிய வருமேயானால், நாம் என்ன செல்கிறோம். ஹதீஸை ஏற்றுக் கொள்கிறோமே தவிர, எதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை, அந்த ஸஹாபியுடைய செயல்களை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. புரிகிறதா இல்லையா.
நாம் அவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுப்படி ஸஹாபாக்களை தக்லிது செய்திருந்தால் என்ன செய்திருப்போம்? அந்தத் தவறுகளை அந்த ஸஹாபியை பின்பற்றி இருப்போம். அவரை நாம் பின்பற்றவில்லை.
இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நடந்த நிகழ்வுகள். இன்று இந்த தவ்ஹீத் கூட்டம் ஹாபாக்களை எப்படி பழிக்கிறார்களோ, எப்படி மாட்டமாக்க செய்கிறார்களோ, அவர்களுக்கு இடையிலே அடிக்கடி சண்டை வரும். சண்டே வரும். கலவரம் வரும். அடிச்சுக்குவாங்க.
இப்ப ஏன் இப்படி சண்டை போடுறீங்க. ஒற்றுமையா இருங்க. அப்படி சொன்னா அவங்க சொல்லுவாங்க. ஸஹாபாக்களே சண்டை போட்டு இருக்காங்க என்று. நாம சொல்றோம்.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
(இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். அல்குர்ஆன் 9 : 100(
ஸஹாபாக்கள் உடைய நல்லதிலே அவர்கள் பின்பற்றுவதில்லை. அந்த நல்லது அவர்கள் முன்மாதிரியா எடுத்துக் கொள்ளாமல், சண்டை போடும்போது, கலவரம் பண்ணும் போது, தங்களுக்குள் பிரச்சனையை ஏற்படும் போது, அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் நடந்த சண்டையை சொல்வார்கள்.
அவர்களுடைய குருட்டு புத்தியும் அவர்களுடைய குறுகிய புத்தியும் புரிகிறதா. மக்கள் கேட்கும் பொழுது அவன் ஸஹாபாக்களே சண்டை போட்டுக் கொள்ளும் பொழுது, நாம் எல்லாம் எப்படி. நம்ம தொழுகையில பாரு. ஜிஹாதுல பாரு. ஹிஜ்ரத்துல பாரு. குர்ஆன்ல பாரு இபாதத்துல ஹாபாக்களை பாரு என்றால் பார்க்கக்கூடாதாம். சண்டைல பார்த்துக் கொள்ளலாமா. என்னடா தீன் இது.
ஸஹாபாக்களின் புரிதலை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம் என்றால், இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஸஹாபாக்கள் ஸஹாபாக்களாக ஆகுறதுக்கு முன்னாடி, அவர்கள் மனிதர்களாகவே இருக்கவில்லை சரியா. அல்லாஹ் எப்படி சொல்கிறான்?
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள். இந்த வசனத்துடைய ஆரம்ப பகுதி என்ன சொல்கிறது.
هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِه وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
இந்த ஆயத்துடைய முதல் பகுதி ஸஹாபாக்களுக்கு சர்டிபிகேட் கொடுத்து விடுகிறது. ஸஹாபாக்களுக்கு நபி அவர்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுத்து விட்டார், குர்ஆனை ஓதி காண்பித்து விட்டார். அவர்களை பரிசுத்தப்படுத்தி விட்டார். ஆகவே ஸஹாபாக்கள் என்பவர்கள்.
ஸஹாபாக்கள் அவர்களுடைய வாழ்க்கை சுத்தமான வாழ்க்கையாக இருந்தது. அவர்கள் கல்வி ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் உண்மையான இஹ்லாஸ் உடையவர்களாக இருந்தார்கள்.
நீங்கள் நேரடியாக ஒரு கூட்டத்திற்கு அல்லாஹ்வுடைய வேதம் சான்று அளிக்கிறது என்றால், சஹாபாக்களுக்கு அல்லாஹ் சான்று அளிக்கிறான். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர எதையும் நாடவில்லை. அல்லாஹ் என் முகத்தை தவிர எதையும் தேடவில்லை என்று சொல்லிவிட்டு. எங்கேயாவது போர் என்றால் அந்த கூட்டம் கனிமத்தை பார்த்து கூட விலகி வந்தால், உடனே அல்லாஹ் கண்டித்து விட்டு,
وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ
(நம்பிக்கையாளர்களே! உஹுத் போரில்) நீங்கள் அவனுடைய அனுமதியுடன் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை வெட்டி வீழ்த்தியபோது அல்லாஹ் தன் வாக்கை உங்களுக்கு திட்டவட்டமாக உண்மையாக்கினான். இறுதியாக, நீங்கள் கோழையாகி, (தூதருடைய) கட்டளையில் தர்க்கித்து, நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் (தூதருக்கு) மாறுசெய்தபோது (அல்லாஹ் தன் உதவியை நிறுத்தினான்).
(மலைக் குன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த) உங்களில் உலக (செல்வ)த்தை நாடி (நபியின் கட்டளையை மீறி மலையிலிருந்து கீழே இறங்கி)யவரும் உண்டு. இன்னும், உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடிய (நபியின் கட்டளைப்படி அங்கேயே இருந்து வீர மரணம் அடைந்த)வரும் உண்டு. பிறகு உங்களைச் சோதிப்பதற்காக (தோற்கடிக்கப்பட இருந்த) அவர்களை விட்டும் உங்களை திருப்பினான். (இன்னும் உங்கள் தவறுக்குப் பின்னர்) திட்டவட்டமாக அவன் உங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ், நம்பிக்கையாளர்கள் மீது (எப்போதும் விசேஷமான) அருளுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 152)
உங்களிலே துன்யாவை விரும்பக்கூடிய கூட்டங்களும் இருக்கிறார்களா. கூடாது மறுமையை விரும்புங்கள்.
وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ
மறுமையை விரும்பக்கூடிய கூட்டங்கள் இருக்கிறது. அவர்களைப் போல் நீங்கள் ஆகுங்கள் என்று, அல்லாஹுதஆலா அவர்களுக்கு வழிகாட்டி திருத்துகிறான். ஸஹாபாக்களிலே ஒருவர் தவறு செய்து விட்டால் என்றால், உடனே அல்லாஹ் அவரை திருத்துகிறான். உஹது போரிலே ஒரு கூட்டம் ஜிஹாது செய்யலாமா வேண்டாமா திரும்பிப் போவதிலே இருந்தார்கள். அல்லாஹ் உடனே ஆயத்து இறக்கி அவர்களை கண்டித்தான். திருத்தினான்.
إِنَّ الَّذِينَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ
இரு கூட்டங்கள் (உஹுதில்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் (போரிலிருந்து) விலகினார்களோ, (அவர்கள் நிராகரிப்பினால் விலகவில்லை. மாறாக) அவர்களை ஷைத்தான் சறுகச் செய்ததெல்லாம் அவர்கள் செய்த சில (தவறான) செயல்களின் காரணமாகத்தான். திட்டவட்டமாக அல்லாஹ் அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா சகிப்பாளன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 155)
சைத்தான் அவர்களை வழி கெடுத்துவிட்டான். அவர்கள் செய்த சில தவறினால். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அவர்களுக்கு நேர்வழி காட்டினான் சொல்லி. ஸஹாபாக்களை இப்படி அல்லாஹ், தவறு நடக்க நடக்க கரெக்ட் பண்ணி கரெக்ட் பண்ணி அவர்களை திருப்பி அப்படியே நபியுடைய தோழமைக்கு பசுமையா பரிசுத்தமா வைத்திருந்தான். ஹுனைன் போர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள்.
لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ
அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் போரிலும் அல்லாஹ் உங்களுக்கு திட்டவட்டமாக உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. இன்னும், பூமி - அது விசாலமாக இருந்தும் உங்களுக்கு நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பி (ஓடி)னீர்கள். (அல்குர்ஆன் 9 : 25)
ஹுனைன் போரிலே ஆஹா நம்ம இன்றைக்கு நம்ம நிறைய இருக்கிறோம். ஒரு கை பார்த்து விடலாம் அப்படி என்று பெருமிதம் பட்டார்கள். அல்லாஹ் நிறுத்தி விட்டான் உதவியை. அடி சரியான அடி விழுந்தது. அப்படியே தெறித்து போய் விட்டார்கள். திகைத்துப் போயிட்டார்கள்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சில தோழர்களும் நின்று கொண்டு, என் பக்கம் வாருங்கள் அல்லாஹ்வின் அடியார்களே, என் பக்கம் வாருங்கள் என்று அழைக்கிறார்கள். அப்போதுதான் ஸஹாபாக்களுக்கு புரிகிறது. நாம் நபியோடு இருக்கிறோம். சாதாரணமாக யுத்தம் அல்ல இது ஜிகாத். உடனே தவ்பா செய்கிறார்கள். அல்லாஹ்வுடைய உதவி திரும்ப வருகிறது. திரும்ப எல்லாரும் ஒன்று சேர்கிறார்கள் பார்த்தீர்களா.
நடந்த உடனேயே அல்லாஹுதஆலா அங்கே படிப்பினையை கொடுத்து, பாடத்தை கொடுத்து, அவர்களை சுத்தப்படுத்தி கிளியர் படுத்தி, கொண்டு வந்து நபியோடு சேர்த்து விடுகிறான்.
ஆகவே தான் ஸஹாபாக்களை நாம் என்ன சொல்கிறோம். அவர்கள் உள்ளத்தால் பரிசுத்தப்படுத்தப் பட்டவர்கள். அப்படி என்றால் அவர்கள் தவறு செய்திருக்க மாட்டார்களா? மனிதர்கள் என்றால் தவறு செய்வார்கள்.
இந்த வார்த்தையை நாம் சொல்வதற்கும் இந்த வழிகெட்ட தவ்ஹீத் ஜமாத் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா. நான் சொல்வோம் மனிதர்கள் என்றால் தவறு செய்யக் கூடியவர்கள். ஆகவே அவர்களுடைய தவறை அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன். நல்லது செய்தால் அல்லாஹ் பாவத்தை மன்னிப்பேன் என்கிறான். ஸஹாபாக்கள் செய்யாத நல்லதை, நீங்களோ நானோ என்ன செய்து விட்டோம். அவங்கள மன்னிக்க மாட்டானா.
அந்தத் தவறை நீங்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்கிறோம். அந்தத் தவறை வைத்து அவர்களை நீங்கள் விமர்சனம் செய்யாதீர்கள் என்று சொல்கிறோம். அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் என்று சொல்லிய காரணத்தினால்.
அவர்கள் என்ன சொல்வார்கள் மனிதர்கள் என்றால் தப்பு செய்ய மாட்டார்களா, என்று அந்தத் தப்பை சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி. அந்த தப்பை விளம்பரப்படுத்தி விளம்பரப்படுத்தி அந்த ஸஹாபாக்களை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள்.
இவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் சொன்ன ஆயிரம் செய்திகளை, அந்த ஸஹாபாக்கள் உடைய வாழ்க்கையில் நடந்த லட்சக்கணக்கான நல்ல செய்திகளை பற்றி உயர்வாக பேசி நல்ல மதிப்பை கொண்டு வர மாட்டார்கள். வித்தியாசம் புரியுதா இல்லையா.
நாம சொல்கிறோம்! ஸஹாபாக்களில் சில பேர் தப்பு செய்திருக்கிறார்கள். குடித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. திருடினார்கள் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஜினா செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அந்த ஜினாவையா ஃபாலோ பண்ண சொல்லுது உன்ன. வித்தியாசம் தெரிகிறதா இல்லையா.
அப்பொழுது ஸஹாபாக்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் என்றால், அவர்கள் மனிதர்கள் தான். ஆனால் நம்மிலேயே மார்க்கத்தை பின்பற்றுவதற்கும் எடுத்துச் சொல்வதற்கும். அவர்கள் பக்குவப்படுத்தப் பட்டவர்கள். நம்மை விட மார்க்கத்தை புரிவதிலே ஆழமான கல்வி உடையவர்கள்.
ஒரே ஒரு கேள்வி. இந்த மார்க்கம் இறுதி மார்க்கமா இல்லை அதற்கு பின்னாடி ஒரு மார்க்கம் இருக்கிறதா? இறுதி மார்க்கம். அதனாலதானே பெஸ்டான ரஸூலை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் அந்த நபியை ரிஸர்வ்ல வைத்திருந்து, அல்லாஹ் நினைத்திருந்தால் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முதல் நபியாக அனுப்பி இருக்க முடியாதா. சொல்லுங்க மூஸா நபியுடைய இடத்துல வைத்திருக்க முடியாதா,
பெஸ்ட் நபிய கடைசி உம்மத்திற்காக அல்லாஹுதஆலா ரிசர்வ் செய்து வைத்திருந்தானா இல்லையா! குர்ஆன் அல்லாஹ் சொல்றான்:
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ
அல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! (அவர்களை நோக்கி) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்கு எப்போது கொடுத்தாலும், (அதற்கு) பிறகு, உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு (இறுதி) தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; இன்னும், நிச்சயமாக அவருக்கு நீங்கள் உதவவேண்டும்.
(இதனை) நீங்கள் ஏற்கிறீர்களா? இதன் மீது என் உறுதியான உடன்படிக்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?’’ என்று அல்லாஹ் (அந்த தூதர்களிடம்) கூறினான். அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்கிறோம்” எனக் கூறினார்கள். “ஆகவே, (இதற்கு) நீங்களும் சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்’’ என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 3 : 81)
நபிமார்களே! உங்களிடத்தில் நாம் ஒப்பந்தம் எடுத்தேன். நீங்கள் இருக்கும் பொழுது ஒரு நபி வருவாரேயானால், அவரை நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவரை நீங்கள் ஈமான் கொள்ள வேண்டும். அவரை நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். உதவ வேண்டும்.
அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. என்னுடைய ஒப்பந்தத்தை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா. இப்படி அல்லாஹ் கேட்டு இருக்கிறான் ஒவ்வொரு நபியிடமும். எப்படி அல்லாஹு சுப்ஹானஹூவதஆலா நபியை ரிசர்வ் செய்து வைத்து, கடைசி உம்மத்திற்காக அல்லாஹ் அனுப்பினான்.
அப்ப கியாமத் நாள் வரை இனி ஒரு நபி வரப் போவதில்லை. இது வேற ஒரு ஷரியத் வரப்போவதில்லை. அப்பொழுது பெஸ்டான நபியை அல்லாஹு சுப்ஹானஹூவதஆலா இந்த உம்மத்திற்காக அனுப்புவதற்கு, தயார் செய்து வைத்து. ரிசர்வ் செய்து வைத்து அந்த நபியை அல்லாஹ் அனுப்புகிறான்.
அப்படி அனுப்பும் பொழுது அந்த நபிக்கு, அவர் சொல்வது எல்லாம் கரெக்டாக புரிந்து விளங்கி, அமல்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு இந்த மார்க்கத்தை எடுத்து சொல்ல கூடிய, அறிவில அஹ்லாக்கில, உள்ளத்துல ஆன்மா பரிசுத்ததுல. பெஸ்ட்டான ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அந்த நபிக்கு உருவாக்கிக் கொடுக்கணுமா, அல்லது, அரைகுறையான சமுதாயத்தை உருவாக்கி கொடுத்தா அது நிறைவேறுமா. பெஸ்ட்டான சமுதாயத்தை உருவாக்கி கொடுத்தால் தான் அந்த பிஃசத்துடைய நோக்கமே பூர்த்தியாகும்.
அப்படி இல்லை என்று சொன்னால். நீங்கள் அல்லாஹ்வுடைய இல்மில் அல்லாஹ்வுடைய தேர்வில் குறை சொல்கிறீர்கள். இப்பொழுது சகோதரர் கேள்வி கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெஸ்ட் என்று சொல்லும் பொழுது, நபிமார்களுக்கு மத்தியிலே வித்தியாசப்படுத்தினதாக சொல்லி.
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
தூதரும் நம்பிக்கையாளர்களும் தமது இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டார்கள். (அவர்கள்) எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்கள். இன்னும், அவர்கள் கூறினார்கள்: “அவனுடைய தூதர்களில் யார் ஒருவருக்கு மத்தியிலும் பிரிவினை காட்டமாட்டோம். இன்னும், நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் உன் மன்னிப்பை வேண்டுகிறோம். உன் பக்கமே (எங்கள்) மீளுமிடம் இருக்கிறது.” ( அல்குர்ஆன் 2 : 285)
நபிமார்களுக்கு இடையிலே நாம் பிரிவினை காட்ட மாட்டோம் என்று சொல்வது. ஒருவரை ஏற்றுக்கொண்டு ஒருவரை மறுப்பது. யூதர்கள் கிறிஸ்தவர்கள் செய்வது போல் ஒருவரை நம்பிக்கை கொண்டு ஒருவரை மறுப்பது. இது என்னவென்றால்.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ
அத்தூதர்கள் - அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். (அல்குர்ஆன் 2 : 253)
ஒரு நபியை விட இன்னொரு நபியை அல்லாஹ் மேன்மைப்படுத்தி இருக்கிறான்.
مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ
சில நபிமார்கள் இடத்திலே அல்லாஹுதஆலா பேசியிருக்கிறான். (அல்குர்ஆன் 2 : 253)
அதாவது நாம் ஜபூரை கொடுத்திருக்கிறோம் என்று. இது வந்து சிறப்பு. சிறப்புல நபிமார்களுக்கு இடையில ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அங்கே பிரிவினை என்பது எது? ஒருவரை நம்பிக்கை கொள்வது இன்னொருவரை நிராகரிப்பது. இரண்டாவதாக ஸஹாபாக்கள் இருக்கிறார்களே. அவர்கள் மார்க்கத்தை ரஸூலுல்லாஹ்விடம் இருந்து தோழமையில் கற்றுக் கொண்டு,
அவர்களோடு பயணத்திலே உள்ளூரிலே கலந்து ஜிஹாதிலே கலந்து சமாதானத்தில் கலந்து, எல்லா சூழ்நிலைகளிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு வாழ்ந்து, நபி (ஸல்) அவருடைய மார்க்கத்தை அறிந்தவர்கள். அடுத்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த சமுதாயம் இவர்கள். அல்லாஹுதஆலா குர்ஆனில்
قُلِ الْحَمْدُ لِلَّهِ وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى آللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ
(நபியே!) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்(களாகிய உம்மீதும் உமது தோழர்)கள் மீதும் ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா? (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா? அல்லது, அவனல்லாத படைப்புகளை வணங்குவது சிறந்ததா?)” (அல்குர்ஆன் 27 : 59)
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள். அல்லாஹ் தேர்ந்தெடுத்த அடியார்கள் மீது அல்லாஹ்வுடைய ஸலாம் உண்டாகட்டும் என்று. அல்லாஹ் இந்த இடத்திலே கூறுவது யாரை என்றால், ஸஹாபாக்களை.
عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى
அல்லாஹ் தேர்ந்தெடுத்த அடியார்களை. நபிமார்கள் மீது அல்லாஹ் ஸலாம் அது இன்னொரு இடத்தில் சொல்கிறான்.
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ
கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன். இறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக! (அல்குர்ஆன் 37 : 180, 181)
அதேபோல் அல்லாஹுதஆலா ஸஹாபாக்கள் மீது ஸலாம் சொல்கிறான்.
وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى
ஆகவே எந்த கூட்டத்தை அல்லாஹ் தேர்ந்தெடுத்தானோ. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அவர்களை நாம் முன்மாதிரியாக எடுக்கவில்லை என்றால், பின்னால் வந்தவர்களையா நாம் முன்மாதிரியாக ஆக்க முடியும்?
அதேபோல் ஹதீஸ்களிலும் சரி பல குர்ஆன் வசனங்களிலும், அல்லாஹு சுப்ஹானஹூவதஆலா ஸஹாபாக்களை தஸ்கியா செய்து இருக்கிறான். தஸ்கியா என்றால் ஒருவரை நல்லவர் என்று சான்று கொடுப்பது. ஒருவரை நல்லவர் என்று அடையாளப்படுத்துவது.
இந்த தஸ்கியா ஸஹாபாக்களுக்கு யார் மூலம் கிடைக்கப்பெற்றது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்றது. பிறகு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறத்திலிருந்து கிடைக்கப்பெற்றது.
அடுத்து ஐந்தாவதாக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை பின்பற்றுங்கள். அவர்களுடைய வழியிலே நீங்கள் செல்லுங்கள் என்று, நமக்கு கட்டளையும் கொடுத்திருக்கிறார்கள்.
அடுத்ததாக நாம் ஏற்கனவே முன்பு சற்று விரிவாக சொன்னதைப் போன்று, ஸஹாபாக்களில் யாரும் இந்த தீனிலே பித்அத் செய்யவில்லை. இதிலேயும் இன்று இருக்கக்கூடிய வழிகெட்ட தவ்ஹீத் ஜமாதும் நாமும் வித்தியாசப்படுகிறோம்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்கள் என்று. நம்ம என்ன சொல்கிறோம். ஸஹாபாக்கள் பித்அத் செய்யவில்லை என்று. அவர்கள் சில விஷயங்களை உங்களுக்கு முன்னால் வைப்பார்கள்.
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு இன்னொரு வாக்கை கொண்டு வரலையா என்று சொல்லி. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு மினாவில் நான்கு ரகாஅத் தொழ வைக்கவில்லையா.
உமர் ரலியல்லாஹூ அன்ஹு ஒரே மஸ்ஜிதில் சொன்ன மூன்று தலாக்கை ஒரு தலாக்காக ஏற்றுக் கொள்ளாமல் அதை மூன்று தலாக்காக சட்டம் ஏற்றவில்லையா. அப்பொழுது அவர்கள் எல்லாம் பித்அத் செய்தார்களா இல்லையா. பாவம் ஒரு பாமரனிடம் இதை சொன்ன உடனே ஆமாம். பித்அத் தான் பண்ணிவிட்டார்.
அடுத்தது இந்த சூஃரா குப்ரா நதீஜா என்று இருக்கும். மன்தீக் படிச்சவங்களுக்கு தெரியும். எப்படி பித்அத் செய்தவர் நரகத்தில் செல்வார். உமர் பித்அத் செய்தார். அடுத்த ரிசல்ட் என்ன? பித்அத் செய்தவர் நரகத்தில் செல்வார். உஸ்மான் இரண்டாவது ஒரு பாதையை ஏற்படுத்தினார். அடுத்து என்ன ரிசல்ட்?
அனேகமா 2008 செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன். அத்தவ்ஹீத் பத்திரிகையில் பாருங்கள். அப்படியே இருக்கும். ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்கள் என்று சொல்லி ஹெட்லைன் போட்டு அதுல இந்த சம்பவங்களை எல்லாம் எடுத்து எழுதிவிட்டு, கடைசில எல்லா பித்அத்தும் வழிகேடு. எல்லா வழிகேடுகளும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
கொஞ்சமாவது ஈமானுடைய கடுகளவு பயம் இருந்ததனா. இந்த மாதிரி எழுத மனசு வருமா உங்களுக்கு. சொல்ல மனசு வருமா? மத்தவங்கள பத்தி கொஞ்சம் தள்ளி வையுங்க. உமர் ரலியல்லாஹு அன்ஹு சொர்க்கவாசி என்பது குர்ஆனிலிருந்தும்.
பெருவாரியான ஸஹாபாக்கள் தாபியீன்கள் அறிவிக்கக் கூடியதிலிருந்தும். உறுதியான ஒரு விஷயமா இல்லையா. அதேபோல உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு. உதாரணம் சொன்னீர்கள் இந்த இரண்டு பேரையா சொல்வீர்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ قَالَ: " بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ فَقُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ فَقَالُوا: لِعُمَرَ بْنِ الخَطَّابِ فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا، فَبَكَى عُمَرُ وَقَالَ: أَعَلَيْكَ أَغَارُ يَا رَسُولَ اللَّهِ
நபி (ஸல்) மிஃராஜிலே சொர்க்கத்துல அந்த மாளிகையை பார்த்துவிட்டு, இவ்வளவு அழகா இருக்கே என்று சொல்லி. அந்த மாளிகைக்குள்ளே போகலாமா என்று ஆசைப்பட்டு விட்டு. பக்கத்துல ஜிப்ரில் இடத்துல இவ்வளவு அழகான மாளிகையாக இருக்கிறது ஜிப்ரீலே, நான் போகலாம் என்று ஆசைப்படுகிறேன் இது யாருக்குரியது. குரைஷி வாலிபருக்கு உள்ளது என்று சொல்ல. அது தானாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டு, அது யாராக இருக்குமோ என்று கேட்க. ஜிப்ரில் சொல்கிறார் அது உமருக்குரியது ரலியல்லாஹு அன்ஹு.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3242
அந்த ஸஹாபிக்கு போய் பித்அத்து என்று பட்டம் கொடுத்து, கடைசியில் எல்லா பித்அத்தும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று முடிக்கிறீங்க உனக்கு கொஞ்சமாவது பயம் வேண்டாம். யாரைப் பார்த்து திரும்பத் திரும்பத் திரும்ப நான் ஈமான் கொண்டேன். அபூபக்கர் ஈமான் கொண்டார்.
உமர் ஈமான் கொண்டார். நான் சொல்கிறேன் அபூபக்கர் இதை ஒப்புக்கொண்டார். உமர் இதை நம்புகிறார். நான் சொல்கிறேன். நான் இதை ஏற்றுக் கொள்கிறேன் அபுபக்கர் ஏற்றுக் கொள்கிறார் உமர் இதை ஏற்றுக் கொள்கிறார். என்று ஒவ்வொரு தடவையும் தன்னுடைய ஈமானோடு சேர்த்து சேர்த்து அபூபக்கரையும் உமரையும் ரலியல்லாஹு அன்ஹுமா வாழ் நாளெல்லாம் ரஸூலுல்லாஹ் சொல்லிக் கொண்டிருந்தார்களே. அந்த ஸஹாபியை கொண்டு போய் நிறுத்துறியா பித்அத்தில்.
இப்பொழுது வாருங்கள் நாம் நேரடியாக பதிலுக்கு போவோம். நாம் ஸலஃபிகள். நம்மை யாரும் மினாவின் நான்கு ரக்அத் தொழுவதில்லை. அதேபோல இரண்டாவது ஆதாரம் ஜும்ஆவில். நம்ம யாரும் இரண்டாவது அதான் கொடுக்கவில்லை. கொடுக்கலாமா வேண்டாமா அது தனி விஷயம். இதை தனியா வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு மூன்று தலாக்கை ஒரே மஸ்ஜிதில் மூன்று தலாக்காக ஆக்கியதும். உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு மினாவில் நான்கு ரக்அத் தொழ வைத்ததும். மதினாவில் ஜும்மா அன்று ஒன்றுக்கு இன்னொரு பாங்கை அதிக படுத்தியதும், இது பித்அத்தில் சேருமா அல்லது இஸ்திஜாவில் சேருமா. இதுதான் வித்தியாசம்.
நீங்க மார்க்கத்துல ஒன்றை கண்டுபிடித்து தப்பு செய்துவிட்டால், மார்க்கத்தில் ஆராய்ச்சி செய்யலாம். ஆராய்ச்சி செஞ்சு சரியா செஞ்சுட்டா ரெண்டு நன்மை. தப்பா செய்துவிட்டால் ஒரு நன்மை இருக்கு என்று உங்களுக்கு நியாயப்படுத்தி கொள்கிறீர்கள்.
அங்க ஒரு ஸஹாபி ஜிஹாத் செய்தால், ஜிஹாத் செய்கிறார். ஒரு ஹதீஸை சொல்லும்பொழுது அந்த ஹதீஸை அவர் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அவர் இந்த அர்த்தத்தில் புரிந்து கொள்கிறார். அந்த அடிப்படையிலே அவர் புரிந்து கொண்ட ஹதீஸின்படி, முக்யீம் நான்கு ரக்அத் தொழ வேண்டும். இப்பொழுது நான் மக்காவில் கல்யாணம் பண்ணிக் கொண்டேன். முக்யீமா இருக்கிறன் அதனால நான் ரக்அத் தொழ வைக்கிறேன் என்று சொல்கிறார். யாரு உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு.
அதேபோல நபி (ஸல்) உடைய காலத்துல அதான் என்பது வெறும் தொழுகைக்கு மட்டும் சொல்லப்பட்டது அல்ல. மக்களை உணர்த்துவதற்காக பல நேரங்களில் சொல்லப்பட்டிருக்கு. ஜிஹாதுக்காக சொல்லப்பட்டிருக்கு. ஸஹருடைய நேரம் முடிவதற்காக சொல்லப்பட்டிருக்கு.
மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும் சொல்லப்பட்டிருக்கு. அந்த அடிப்படையில் மதினா பெருசாக ஆகிவிட்டதால், மக்கள் ஜும்ஆவிற்கு முன்கூட்டியே வர வேண்டும் என்பதற்காக அதான் செய்வதற்கு, ஒரு அதானை சொல்ல சொன்னேன் என்று சொல்கிறார். அப்பொழுது இது எதில் இருந்து வருகிறது இஜ்திஹாதில் இருந்து வருகிறதே தவிர, இது பித்அத்தில் வரக்கூடியது அல்ல.
அப்பொழுது இஜ்திஹாத் செய்யக் கூடியவர். இஜ்திஹாத் செய்து அவர் சரியானதை அடைந்தால் இரண்டு நன்மை. அவர் தவறிழைத்து விட்டால் ஒரு நன்மை. இந்த இஜ்திஹாத் சரியா தப்பா என்று முடிவு செய்ய முடியாது எந்த இடம் ஆஹிரத்து.
குர்ஆன் ஹதீஸ்க்கு நேர் எதிரா மாற்றமாக இஜ்திஹாத் செய்ய முடியாது. அது டோட்டலா வழிகேட்டில் கொண்டு போய் சேர்த்து விடும். ஸஹாபாக்களுடைய இஜ்திஹாதை அதில் கொண்டு போய் சேர்க்க முடியுமா. உங்களுடைய இஜ்திஹாதை குர்ஆனுக்கு உட்பட்டது என்று சொல்கிறீர்கள். ஸஹாபாக்கள் உடைய இஜ்திஹாதை வெளியில் போனது என்று பழிசுமத்துகிறீர்கள்.
அதனால, இந்த விஷயத்துல நம்ம தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளத்தை சுத்த படுத்துக்கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ். அடுத்து அடுத்த அமர்வில் தொடர்வோம். இன்ஷா அல்லாஹ்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/