HOME      Lecture      வாழ்க்கையை ஒளிமயமாக்கும் மார்க்கக் கல்வி | Tamil Bayan - 703   
 

வாழ்க்கையை ஒளிமயமாக்கும் மார்க்கக் கல்வி | Tamil Bayan - 703

           

வாழ்க்கையை ஒளிமயமாக்கும் மார்க்கக் கல்வி | Tamil Bayan - 703


வாழ்க்கை ஒளிமயமாக்கும் மார்க்க கல்வி 
 
தலைப்பு : வாழ்க்கை ஒளிமயமாக்கும் மார்க்க கல்வி 
 
வரிசை : 703
 
இடம் : பட்டர் ஃப்லை மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆவடி  
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 20-03-2022 | 17-08-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய, கண்ணித்திற்குரிய, இந்த கல்வி நிறுவனத்தின் ஆசிரியைகளே, நிர்வாகிகளே இங்கே படிக்கின்ற மாணவசெல்வங்களே, இங்கே வருகை தந்திருக்கின்ற பெற்றோர்களே, அல்லாஹுத்தஆலா  உங்களுடைய வருகையின் அவனுடைய அருளையும், அன்பையும், அவனுடைய கருணையும் உங்களுக்கு தருவானாக! என்று அல்லாஹ்விடத்திலே உங்களுக்கும், எனக்கும் வேண்டியவனாக!  இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
மிகுந்த சிரமத்திற்கிடையிலே நீண்ட நேரமாக மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து பயன்பெற்று வருகிறீர்கள். பொதுவாக சில பள்ளிக்கூடங்களிலே மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சிகள் என்றால் கேளிக்கைகள், விளையாட்டுகள், ஆடல், பாடல் என்ற நிகழ்வுகள் எல்லாம் இருக்கும். மக்களை சிரிக்க வைப்பதற்காக  பல விதமான கேளிக்கையான, விசித்திரமான கேளிக்கைகளை  செய்து கொண்டிருப்பார்கள்.
 
மதிப்பிற்குரிய! பெற்றோர்களே, விருந்தினர்களே, எந்தக் கல்லூரியும் மறுமைக்காகவும், எந்தக் கல்லூரி மக்களுக்கு மத்தியிலே  இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும், பாடுபடுகிறதோ, உழைக்கிறதோ  நிச்சயமாக அந்த கல்விக்கூடங்களில் அந்தக் கல்வி நிறுவனங்களில் அதுபோன்ற கேளிக்கைகளை, வீண் விளையாட்டுகளை, ஆடல் ,பாடல், இசைகளை நீங்கள் ஒருபோதும் கேட்க முடியாது.
 
இங்கே நீங்கள் கேட்பது எதுவாக இருக்கும் என்றால் உங்களுடைய உள்ளங்களை பரிசுத்தமாகக்கூடிய, உங்களுடைய சிந்தனைகளை தூய்மையாக்க கூடிய, உங்களுடைய ஒழுக்கங்களை பாதுகாக்க கூடிய, நேர்மையான, அழகிய ஒழுக்கமான  சிந்தனைகளை, அறிவுகளை, ஞானங்களை, வளர்க்கக்கூடிய  நல்ல சமய சமூக நிகழ்ச்சிகளை தான் நீங்கள் கேட்க முடியும் அப்படித்தான் அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து காலையிலிருந்து நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே கேட்ட விஷயங்கள் உங்கள் உள்ளங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியதா?
 
அல்லாஹுத்தஆலா இந்த இல்மை   குர்ஆனுடைய நபி உடைய ஹதீஸாகிய இந்த இல்மை ஒளி என்று கூறுகிறான். குர்ஆன் என்பது என்ன ? ஒளி
 
يَاأَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ, يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكُمْ وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا
 
வேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும், பலவற்றை விட்டுவிடுவார்., அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் உங்களிடம் வந்துவிட்டது. மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து (தெளிவான) ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. இன்னும், தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு நாம் இறக்கினோம். (அல்குர்ஆன் 5:15 ,4 : 174)
 
அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு ஒளி வந்திருக்கிறது,  பிரகாசம் இன்னும் தெளிவான வேதம் வந்திருக்கிறது, உங்களுக்கு நாம் தெளிவான வெளிச்சமான ஒளியை இறக்கி வைத்திருக்கிறோம். இதை அல்லாஹ் சொல்கிறான்? குர்ஆனை சொல்கிறான். 
 
குர்ஆனை புத்தகமாக வீட்டில் இருப்பது ஒளியல்ல குர்ஆனை வாங்கி புத்தகமாக வீட்டில் அலமாரியில் வைத்திருக்கிறீர்களே  அதுவா ஒளி? இல்லை  அதை ஓதுவது, அதை படிப்பது, சிந்திப்பது, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, அதுதான் ஒளி. 
 
குர்ஆன் நம்முடைய வாழ்க்கையை ஒளிமயமாக்கிவிடும், நம்முடைய நபியுடைய ஹதீஸ்கள், அவர்களுடைய வழிகாட்டுதல்கள், அவற்றை நாம் கற்பது, படிப்பது, அவற்றை நம் வாழ்க்கையில் கொண்டு வருவது, நம்முடைய வாழ்க்கையை ஒளிமயமாக்கிவிடும்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருள்களில் இருந்த மக்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதற்காக அனுப்பப்பட்டார்கள்? 
 
இருள்களில் இருந்த மக்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருவதற்காக,  கண்டதை எல்லாம் வணங்கிக் கொண்டிருந்த மக்கள் ஓர் இறைவனை வணங்குவதற்காக, அதன் பக்கம் அழைப்பதற்காக, அனுப்பப்பட்டார்கள்.
 
மக்களுடைய நம்பிக்கைகளை சரி செய்வதற்காக, அவர்களுடைய ஆன்மீக பார்வைகளை சரி செய்வதற்காக, அவர்களுடைய சமூக கலாச்சாரத்தை சரி செய்வதற்காக, அவர்களுடைய குடும்ப உறவுகளை சரி செய்வதற்காக, இந்த குர்ஆனும் இறக்கப்பட்டது, அதற்காக சிறந்த இறுதி நபியும் நமக்காக அனுப்பப்பட்டார்கள்.
 
என் அன்பு சகோதரிகளே! இன்று முஸ்லிம் சமுதாயம் குர்ஆனை விட்டும் நபியின் உடைய போதனையை விட்டும்  அவர்கள் தூரமாக இருக்கின்ற காரணத்தால்,  அவர்கள் குடும்ப வாழ்க்கையிலே சோதனை, அவர்களுடைய பொருளாதார வாழ்க்கையிலே சோதனை, அவர்களுடைய சமூக வாழ்க்கையிலே குழப்பம், அவர்களுடைய அரசியல் வாழ்க்கையிலே தவறான அணுகுமுறைகள், இப்படியாக அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ஒரு பெரும்பான்மையான மக்கள் வழி கேட்டிலே இருப்பதை பார்க்கிறோம்.
 
அல்லாஹ் பாதுகாத்த சிலரை தவிர, அந்த சிலரில் அல்லாஹுத்தஆலா என்னையும், உங்களையும் ஆக்கி வைப்பானாக! ஒரு சம்பவத்தை கண்டிப்பாக நான் சொல்ல வேண்டும், நேற்று இது போன்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாங்கள் சென்னை நகரத்திற்குள் சென்று கொண்டிருந்தோம். அங்கே மவுண்ட் ரோட்டிலே மக்கா மஸ்ஜித் என்று ஒரு பள்ளிவாசல் இருக்கிறது.
 
அந்தப் பள்ளிவாசலுக்கு பக்கத்திலே  தர்கா என்ற பெயரில் ஒரு கோவில் இருக்கிறது,  சிலை வணக்க வழிபாட்டாளர்கள், தங்களது கோவில்களிலே  அவர்கள் சடங்குகளை, சம்பிரதாயங்களை, கலாச்சாரங்களை, மூட நம்பிக்கைகளை, செய்கிறார்கள் என்றால் அவர்கள் அறியாதவர்கள் அவர்களுக்கு தெரியாது.
 
இங்கு நூற்றுக்கணக்கில் இல்லை ஆயிரக்கணக்கிலே புர்கா போட்ட பெண்கள், பலநூறு முஸ்லிமான ஆண்கள் தொப்பியோடு, தாடியோடு அந்த தர்காவிலே பூஜை செய்வதற்காக வந்திருந்தார்கள். அப்படி தான் சொல்ல வேண்டும்.
 
அந்த தர்காவிலே பூஜை செய்வதற்காக வந்திருந்தார்கள், வழிபாடு செய்வதற்காக வந்திருந்தார்கள் குர்ஆன் கொடுக்கப்பட்ட சமுதாயம், நபி அனுப்பப்பட்ட சமுதாயம் எத்தகைய மடத்தனமான, முட்டாள்தனமான,  மூட்டிகை கொள்கையிலே இருக்கிறார்கள்.
 
عن عائشةَ رضِيَ اللهُ عنها قالتْ: كان رسولُ الله صلَّى الله عليه وسلَّمَ يُجاوِر في العَشْر الأواخِر من رمضانَ، ويقول: تَحرُّوا ليلةَ القَدْر في العَشْر الأواخِر من رمضانَ  
 
பராஆத் இரவு என்று ஒன்றை கொண்டாடுவதை வழிகேடு பராஆத் இரவு என்று ஒரு வழிகேடு இல்லை இல்லாத நம்பிக்கை லைலத்துல் கத்ர் தான் இருக்கிறது, அதுவும் அல்லாஹ்விற்கு தான் தெரியும் ரமலான் உடைய இறுதி பத்திலே லைலத்துல் கத்ரை தேட வேண்டும்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 2020, 1169
 
இந்த பராஆத் இரவு என்று ஒன்று ஏற்பாடு செய்து கொண்டு, இட்டுக்கட்டி கொண்டு ஒரு லைலத்துல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாம் இது குர்ஆனில் உள்ளது, அதோட சேர்த்து அவங்க கட்ற கதையை பாருங்க ஒரு லைலத்துல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்தது ஒரு பராஆத் இரவு ஆயிரம் லைலத்துல் கதிரை விட சிறந்தது ஒரு லைலத்துல் கத்ர் ஆயிரம் மாதங்கள் சிறந்தது.
 
இது நீங்களும் நானும் கேட்டது நம்பிக்கை கொண்டது அடுத்து எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஷபே பராஆத் ஆயிரம் லைலத்துல் கதிரை விட சிறந்தது  அப்போது மக்கள் ஏமாறு வாங்கலா, ஏமாற மாட்டாங்களா? மயங்கு வாங்கலா, மயங்க மாட்டாங்களா? அப்பாவி தெரியாது அவர்களுக்கு ஆதாரம் கேட்க முடியுமா? 
 
பள்ளிவாசல்களிலே அதைக் கொண்டாடுவதை தப்பு என்று இருக்கும் பொழுது தர்காவில் போய் அங்கு போய் பள்ளிவாசல்களில் விசேஷமாக விளக்கு ஏற்றி  வழிபாடு செய்வதே பித்ஆத் ஆக இருக்கும் பொழுது,  தர்காவில் போய் அங்கே வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள், இறந்து போன ஒரு மனிதருடைய கப்ரிலே போய் அவருடைய புதைகுழியில் நின்று கொண்டு அங்கே வழிபாடு செய்கிறார்கள், ஆட்டம் போடுகிறார்கள், பாடுகிறார்கள், அந்த கப்ரிலே முட்டி மோதுகிறார்கள்.
 
இது ஏன்? யோசித்துப் பார்க்கவில்லையா நீங்கள், குர்ஆனை அவர்கள் திறக்கவில்லை, குர்ஆனை அவர்கள் படிக்கவில்லை, அதை உணரவில்லை அல்லாஹ்வுடைய வேதம் புத்தகமாக அவர்களது வீட்டிலே இருக்கிறது, அல்லாஹ்வுடைய வேதம்,
 
எல்லோர் வீட்டிலும் குர்ஆன் இருக்கிறதா இல்லையா? முஸ்லிம்கள் வீட்டில் ஆனால், படிக்கப்படாத புத்தகமாக இருக்கிறது. ஆனால், கற்றுக் கொள்ளப்படாத கல்வியாக இருக்கிறது. ஆனால், உணரப்படாத உபதேசமாக இருக்கிறது.
 
புரிந்ததா இல்லையா? அதனால தான் எந்த சஹாபாக்களை குர்ஆன் மாற்றியதோ,  எந்த நபி தோழர்களை குர்ஆன் தவ்ஹீதுனுடைய கொடியை ஏந்தியவர்களாக, ஈமானுடைய கொடியை ஏந்தியவர்களாக, உண்மையான முஃமின்களாக,  உருவாக்கியதோ அந்தக் குர்ஆன் இருக்கிறது ஆனால் அந்தக் குர்ஆனிலிருந்து நாம் தூரமாக இருக்கிறோம்.
 
இன்று நமது சமுதாயத்திலே மருத்துவக் கல்வி எம்பிபிஎஸ் படித்த பெண்கள் இருக்கிறார்கள், இன்ஜினியரிங் படித்த பெண்கள் இருக்கிறார்கள், பெரிய, பெரிய கல்லூரிகளிலே, பெரிய, பெரிய பல்கலைக்கழகங்களிலே, பேராசிரியையாக இருக்கக்கூடிய பெண்கள் இருக்கிறார்கள்.
 
ஆனால், என் அன்பு சகோதரிகளே! பெற்றோர்களே நமக்கு நம்முடைய சமுதாயத்திற்கு குர்ஆனைத் திறந்து, அதனுடைய தவ்ஹீதை கற்றுக் கொடுக்கக்கூடிய பெண்கள் இல்லை, நம்முடைய சமுதாயத்திற்கு குர்ஆனை திறந்து அல்லாஹ்வுடைய அச்சத்தை, அல்லாஹ்வுடைய பயத்தை, அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, நேர்வழியை கற்றுக் கொடுத்து, மூடநம்பிக்கைகளிலிருந்து, மவுட்டிக கொள்கைகளிலிருந்து, மடத்தனமான சடங்குகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்கக்கூடிய லட்சிய பெண்மணிகள் இல்லை.     
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்து ஸஹாபிய பெண்மணிகள் எல்லாம் தியாகங்கள் செய்தார்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள், அல்லாஹ்வுடைய தீனுக்காக இழந்தார்கள் இந்த உலக வாழ்க்கையை,  அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக, இந்த குர்ஆனுக்காக, அத்தனை வசதிகளையும், ஆடம்பரமான வாழ்க்கைகளையும், உலக ஆசைகளையும், அவர்கள் துறந்தார்கள்.
 
ஆனால், நாம் எப்படி நம்முடைய உலக வாழ்க்கையில் எந்த வசதிகளையும் இந்த தீனுக்காக தியாகம் செய்வதற்கு தயாராக இல்லை, பலருக்கு என்ன பயம் என்றால் என்னுடைய மகளை மார்க்கக் கல்வி படிக்க அனுப்பினால் நான் யாருக்கு கட்டிக் கொடுக்க முடியும்.
 
அடுத்து என்னுடைய மகளை மார்க்க கல்வி படிக்க அனுப்பினால், இந்தப் பெண்ணுக்கு இந்த மகளுக்கு, எங்கே வேலை கிடைக்கும், அப்படியே வேலை கிடைத்தால், என்ன சம்பளம் கிடைக்கும். காசு இருந்தால் தானே, அதிகமாக சம்பளம் இருந்தால் தானே, நம்மளால வசதியா வாழ முடியும். 
 
ஒரு காலத்திலேயே ஆண் பிள்ளைகளை மதரஸாகளுக்கு அனுப்பாமல் தயங்கிக் கொண்டிருந்தார்கள் காரணம் ஆலிம் ஆகிவிட்டால் பொருளாதாரம் அங்கே நமக்கு கிடைக்காது, மார்க்க கல்வி என்பது ஏழைகளுடைய கல்வி என்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், மொத்தமாக உலக வசதிகளை மட்டுமே முஸ்லிம்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்,  சகோதரிகளே!  அந்த உலக வசதிகள் இப்போது கிடைத்து விட்டது உலக வசதி முஸ்லிம்களுக்கு கிடைத்து விட்டது.
 
ஆனால் எத்தனை நெருக்கடியில் இப்போது வருகிறோம் தெரியுமா? அல்லாஹ்வுடைய கோபம் இறங்கியதால்  இன்று உலக சமுதாயத்திற்கு மத்தியிலே  நாம் வெறுக்கப்பட்டவர்களாக, அன்னியர் பட்டவர்களாக, அவர்களால் பகைமைக்கு ஆளானவர்களாக இருக்கிறோம்.
 
தீனை விட்டு, கடைசியிலே துன்யாவும் போக கூடிய நிலைமையிலே  இன்று முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது. நீங்கள் சிந்திக்க வேண்டும், உணர வேண்டும் உங்களுடைய வருங்கால சந்ததிகளுக்காக நீங்கள் எதையும் செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
 
அல்லாஹ்வுடைய தீனை இந்த வாழ்க்கையில் கொண்டு வரவில்லை என்றால் உங்களுடைய பிள்ளைகளை அல்லாஹ்வுடைய தீனுக்காக  உருவாக்கவில்லை என்றால் இந்த குர்ஆனுடைய பிரச்சாரத்தை, நபியினுடைய ஹதீஸின் பிரச்சாரத்தை, ஏகத்துவத்தின் பிரச்சாரத்தை, ஈமானிய பிரச்சாரத்தை நீங்கள் மீண்டும் கையில் எடுக்க வில்லை என்றால்? அடுத்து வரக்கூடிய சமுதாயம் அவர்கள் பெயரால் முஸ்லிம்களாக இருப்பார்கள். கலாச்சாரத்தால், கொள்கையால், சிந்தனைகளால், அவர்கள் சிலை வணங்குகளாக மாறிவிடுவார்கள். கொள்கை கெட்டவர்களாக மாறிவிடுவார்கள், 
 
அன்பு சகோதரிகளே! உலகத்தில் எத்தனை மாறுபட்ட சமுதாயங்கள் இருந்தாலும் அந்த சமுதாய மக்களோடு இணங்கி வாழ்வதிலே அவர்களோடு ஒற்றுமையோடு வாழ்வதிலே இஸ்லாமை விட வேறு ஒரு அழகிய வாழ்க்கை முறை இருக்க முடியாது, உண்மையான ஒரு முஸ்லிமை விட அதற்கு ஒரு முன்மாதிரி இருக்க முடியாது. 
 
ஆனால், இணங்கி வாழ்வது என்பது வேறு, ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு, அந்த சமுதாயத்தோடு அவர்களின் கொள்கைகளோடு, இணைந்து விடுவது என்பது வேறு.  அவற்றிலே கலங்கி விடுவது என்பது வேறு, உங்களுடைய அண்டை வீட்டார் முஸ்லிமல்லாதவர் அவரோடு ஒற்றுமையாக வாழுங்கள் உங்கள் வீட்டில் உள்ள உணவை அவர்களுக்கு கொடுத்து வாழுங்கள்,
 
அவர்களுக்கு ஒரு சிரமம் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்களுக்கு தேவை என்றால் நீங்கள் உங்கள் உதவிகளை அவர்களுக்கு கொடுங்கள் அவர்களிலே நோயாளிகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவத்தை செய்யுங்கள் அவர்களில் பசித்தவர்கள் இருந்தால்
 
அவர்களுக்கு நீங்கள் உணவளியுங்கள் இது வேறு இது அல்லாஹ் செய்ய சொல்லிய கடமை இது அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்ட மார்க்கம் ஆனால், இதையெல்லாம் நீங்கள் செய்கின்றீர்கள் என்ற பெயரிலே  அவர்கள் சிலை வழிபாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது, அவர்களுடைய இணைவைத்தல் கலாச்சாரத்திலே இணங்கி போய்விட முடியாது,
 
قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ  لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ  وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ  وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ  لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
 
(நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை. இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை. உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும். (அல்குர்ஆன் 109 : 1, 2, 3, 4, 5, 6)
 
அல்லாஹ்வை வணங்காத அவர்களே நீங்கள் வணங்குவது வேறு நாங்கள் வணங்குவது வேறு நீங்கள் வணங்கக்கூடியவற்றின் நான் வணங்க மாட்டேன் நான் வணங்கக் கூடிய இறைவனை நீங்கள் வணங்கவில்லை, உங்களது வழிபாடு உங்களுக்கு எங்களது வழிபாடு எங்களுக்கு. இந்த வழிபாட்டிலே எங்களை நீங்கள் தடுக்காதீர்கள் உங்களது வழிபாட்டிலே எங்களை கட்டாயப்படுத்தாதீர்கள். 
 
நாங்கள் இறைவனை வணங்குவதிலே கடவுளை வணங்குவதிலே நாங்கள் இறைவனை படைத்தவனை வணங்குவதிலே எங்களை தடுக்காதீர்கள் உங்களுடைய சிலை வழிபாட்டிலே எங்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
 
இதுதான் இஸ்லாம் சொல்கிறது இதுல என்ன தப்பு இருக்கிறது வேற்றுமையில் ஒற்றுமை காணுவோம் என்பது இது எதுவல்ல அவர்கள் சிலை வணங்குவதற்கு நீங்கள் துணை போவதல்ல இதை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் மார்க்கத்தை கற்கவில்லை என்றால், இந்த மார்க்கத்தை உணரவில்லை என்றால், ஒரு காலத்தில் மாற்றார்களாக கரைந்து விடுவீர்கள் காணாமல் போய்விடுவீர்கள்.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! இந்த கல்வி, இந்த இஸ்லாம், இந்த குர்ஆன் நம்மை அறியாமையில் இருந்து பாதுகாப்பது இல்லையா இந்த குர்ஆன் மடமையிலிருந்து, மோட்டிக கொள்கையிலிருந்து, வழிகேட்டிலிருந்து, எல்லாவிதமான கேவலத்திலிருந்து,
 
எல்லாவிதமான அசிங்கத்திலிருந்து எல்லாவிதமான நெருக்கடியான, சிரமமான சடங்குகளில், இருந்து நம்மை விடுவித்து பாதுகாத்து  வாழ்க்கையின் வெளிச்சத்திற்கு, விசாலமான வாழ்க்கைக்கு, அறிவுப்பூர்வமான வாழ்க்கைக்கு, ஒழுக்கமான வாழ்க்கைக்கு இந்த இஸ்லாம், இந்த குர்ஆன், இந்த ஹதீஸ் நமக்கு வழிகாட்டி இருக்கிறது.
 
உலகத்தில் சேலன்ஜ் பண்ணலாம் இஸ்லாம்ல சொல்லி இருக்க ஒரு சட்டம் மனித சமுதாயத்திற்கு கேடானது ஒருத்தர் இந்த உலகத்தில் இருந்தது நிரூபித்து காட்டட்டும் இஸ்லாமிய வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன் முடியுமா அப்படி முடியாது.
 
ஏன்?  படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட மார்க்கம் படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட சட்டம் இது இந்த மார்க்கத்திலே ஒழுக்கத்தை தவிர  எதுவும் இல்லை, அறிவை தவிர எதுவுமில்லை, ஞானத்தை தவிர எதுவுமே இல்லை. 
 
இதிலே பாதுகாப்பு இருக்கிறது,  பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, சமூகத்திற்கான பாதுகாப்பு, சமுதாயத்திற்கான பாதுகாப்பு, அறிவுக்கு பாதுகாப்பு, நம்முடைய உடைமைகளுக்கு பாதுகாப்பு எல்லா வகையிலும் நமக்கு பாதுகாப்பு இருக்கிறது.
 
அன்பு சகோதரிகளே! உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் இங்கே அனுப்பி இருக்கிறீர்கள் என்றால்  சரியான தேர்வை செய்திருக்கிறீர்கள். இன்ஷா அல்லாஹ்! உங்களுடைய வாழ்க்கைக்கு இந்த பிள்ளைகள் மிகப்பெரிய சொத்து என்பதை மறந்து விடாதீர்கள். 
 
ஒருவேளை உங்களுக்கு உலகத்தை சம்பாதித்து கொடுப்பதிலே உலக செல்வத்தை சேகரித்துக் கொடுப்பதிலே இவர்கள் திறமை அற்றவர்களாக இருக்கலாம் அதற்கான வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்,
 
ஆனால், உங்களுக்கான மறுமைக்கான சேமிப்பு என்பதை மறந்து விடாதீர்கள் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு சொர்க்கத்தை தேடித் தருவதற்கான மிகப்பெரிய வாய்ப்புகள் என்பதை மறந்து விடாதீர்கள். 
 
அதுபோன்று என் அன்பிற்குரிய மாணவிகளே! இந்த கல்வியை படித்துக் கொண்டிருக்கின்ற மாணவிகளே! கல்வியை படிக்க வந்திருக்கின்ற மாணவிகளே உங்களுக்கு நான் சொல்கிறேன். இஸ்லாமை வாழ்க்கையின் லட்சியமாக ஆக்குங்கள் இஸ்லாமை வாழ்க்கையின் குறிக்கோளாக ஆக்குங்கள் அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுப்பான்.
 
الرَّحْمَنُ  عَلَّمَ الْقُرْآنَ  خَلَقَ الْإِنْسَانَ  عَلَّمَهُ الْبَيَانَ
 
பேரருளாளன் (-பெரும் கருணையும் இறக்கமும் உடையோன்),  குர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்; மனிதனைப் படைத்தான்.  அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான். (அல்குர்ஆன் 55 : 1, 2, 3, 4)
 
அல்லாஹுத்தஆலா உங்களுக்கு மார்க்கத்தை, விளக்கத்தை, கல்வி ஞானத்தை, கற்றுக் கொடுப்பான். அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: 
 
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
 
அல்லாஹ், தனது அடியார்களில் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடுகிற) அவருக்கு (அதை) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 29 : 62)
 
நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அல்லாஹுத்தஆலா விசாலமாக கொடுப்பான் நாடியவர்களுக்கு அல்லாஹ் சுருக்கி கொடுப்பான். ஏழைகள் நம்மில் மட்டும்தான் இருக்கிறார்களா? அவர்களில் இல்லையா? கஷ்டப்படக் கூடியவர்கள், சிரமப்படக் கூடியவர்கள், வறுமையில் இருப்பவர்கள், பசியிலே, பட்டினியிலே வாழ்வாதார நெருக்கடியிலே இருப்பவர்கள், நம்மில் மட்டும் தான் இருக்கிறார்களா? அவர்களிலே இல்லையா?
 
كُلًّا نُمِدُّ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا
 
(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்து உதவுவோம். மேலும், உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை. (அல்குர்ஆன் 17 : 20)
 
அல்லாஹ் சொல்கிறான்: மூஃமின்களுக்கும் செல்வத்தை கொடுப்போம், மூஃமின் அல்லாதவர்களுக்கும் செல்வதை கொடுப்போம் உலகத்திலே உன்னுடைய இறைவனுடைய செல்வம் யாருக்கும் தடுக்கப்பட்டது அல்ல, ஏழையாக்குவது அல்லாஹ் செல்வந்தன் ஆக்குவது அல்லாஹ் உலக வாழ்க்கை ஒரு சோதனையாகும்.
 
என் அன்பு சகோதரிகளே! செல்வத்திற்காக காசுக்காக பணத்திற்காக இந்த கல்வியை ஆக்காதீர்கள் காசுக்காக, பணத்திற்காக வசதிக்காக இந்த கல்வியை தேடாதீர்கள், இந்த கல்விக்கு அனுப்பாதீர்கள் அல்லாஹ்வுக்காக, மறுமைக்காக, சமுதாய சீர்திருத்தத்திற்காக, சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காக, இந்த சமுதாயம் இந்த கல்வியை கொண்டு தான் ஓங்கும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, நீங்கள் உங்களது பிள்ளைகளை இங்கே படிக்க வையுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியை கொடுப்பான்.
 
இந்த கல்வியின் மூலமாக அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது சமுதாயத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் நல்ல வெற்றியை, உயர்வை கண்ணியத்தை தருவானாக! என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக இந்த உரையை நிறைவு செய்கிறேன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/