HOME      Lecture      அல்குர்ஆன் போதிக்கும் கல்வியே சிறந்த கல்வி | Tamil Bayan - 704   
 

அல்குர்ஆன் போதிக்கும் கல்வியே சிறந்த கல்வி | Tamil Bayan - 704

           

அல்குர்ஆன் போதிக்கும் கல்வியே சிறந்த கல்வி | Tamil Bayan - 704


அல்குர்ஆன் போதிக்கும் கல்வியே சிறந்தகல்வி
 
தலைப்பு : அல்குர்ஆன் போதிக்கும் கல்வியே சிறந்தகல்வி
 
வரிசை : 704
 
இடம் : அல் ஃபித்ரா ஸ்கூல் ஆவடி 
 
உரை  : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 19-03-2022 | 16-08-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! இந்த அல் பித்ரா பள்ளிக்கூடத்தில் தங்களது பிள்ளைகளை சேர்த்து பயன் பெறச்செய்து இருக்கின்ற தாய்மார்களே! தந்தைமார்களே! பெற் றோர்களே! அல்லாஹ்வுடைய அருளும், அல்லாஹ்வுடைய அன்பும், அல்லாஹ்வுடைய கருணையும் உங்கள் மீது என் றென்றும் நிலவட்டுமாக! அல்லா ஹுத்தஆலா உங்களையும், உங்களது பிள்ளைகளையும், உங்களது வருங்கால சந்ததிகள் அனைவரையும் பொருந்தி கொள்வானாக...!
 
‌குர்ஆன் என்றால் என்ன? குர்ஆன் என்றால் இஸ்லாமுடைய வேதம். இந்த வேதத்தை எந்த வானவர்கள் கொண்டு வந்தார்கள்? ஜிப்ரீல் அலைஹிவஸ்ஸலாம் கொண்டு வந்தார்கள். எப்படி எழுத்து வடிவத்தில், புத்தக வடிவத்தில் கொண்டு வந்தார்களா? எத்தனை ஆண்டுகள் ஆகின? 
 
இந்த குர்ஆன் ஆரம்பமாக இறங்கியதிலிருந்து, இந்த குர்ஆன் நிறை வடைவதற்கு, இந்த குர்ஆன் உடைய வஹீ முதன்முதலாக மக்காவில் இறங்கியதா? மதினாவில் இறங்கியதா? குர்ஆனுடைய முதல் வஹி எங்கே இறங்கியது? மதினாவில். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த குர்ஆன் இறக்கும்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு எத்தனை வயது, எந்த இடத்தில் இருந்தார்கள்? இந்தக் குர்ஆன் இதுதான் நமது வாழ்க்கை. இந்தக் குர்ஆனுக்காகவே வாழ வேண்டும், இந்த குர்ஆனை புரிய வேண்டும்,
 
இந்த குர்ஆனை மனப்பாடம் செய்ய வேண்டும்.இந்த குர்ஆனை ஆழ மாக மிக ஆழமாக நம்பவேண்டும். இந்த குர்ஆனை உலக மக்க ளுக்கு கொண்டு போய் சேர்ப் பதை வாழ்க்கையின் லட்சியமாக ஆக்க வேண்டும். இந்தக் குர்ஆனை இப்படி யார் அணுகி னார்களோ, அவர்களுக்கு இந்த குர்ஆன் உள்ளத்தினுடைய வசந்த மாக இருக்கும்.
 
நம்முடைய உள்ளத் தினுடைய வசந்தமாக இருக்கும். நம்முடைய கவலைகளை எல்லாம் போக்கக்கூடிய மிகப்பெரிய மருந்தாக அல்லாஹ் ஆக்கி விடுவான். இந்த குர்ஆனை கொண்டு, இந்த உலகத்தில் அல்லாஹுத்தஆலா கண்ணியம் கொடுப்பான். நாளை மறுமையில் சொர்க்கத்துடைய உயர்ந்த பதவிகளிலே அல்லா ஹுத்தஆலா தங்க வைப்பான்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் ரொம்ப பணிந்து பயந்து ஆசையோடு, ஆர்வத்தோடு கேட்ட துஆ.  உடைய பொதுவான துஆக்கள் மிகச் சுருக்கமாக இருக்கும். இந்த துஆ சிறிது நீளமாக இருக்கும். எப்பொழுதுமே சுருக்கமாக துஆ செய்கிற ரசூலுல்லாஹி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம். மௌலூது ஓதுறது, மீளாது செய்தது எல்லாம் முஹப்பத் கிடையாது.  
 
ரசூலுல்லாஹ் உடைய பெயரைச் சொன்னால் ஸலவாத்து சொல்ல வேண்டும். அதுதான் முஹப்பத். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைவிட ரசூலுல்லாஹ்வின் மேல் அன்பு வைத்தவர்கள் யாராவது இருப்பார்களா? அடுத்து உமர், உஸ்மான், அலி அப்படியே 1,24,000 சஹாபாக்கள். யாராவது ஒரு சஹாபி மௌலூது ஓதியிருக்கிறாரா? 
 
யாராவது ஒரு சஹாபி மீளாது கொண்டாடியிருக்கிறார்களா? கொண்டாடியதில்லை. ரசூலுல்லாஹ் பெயர் சொன்னால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி அன்போடு சொல்லணும். 
 
1297 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ
 
பத்து தடவை அல்லாஹ் ரஹ்மத்தை இறக்கி விடுவான். பத்து பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். பத்து தரஜாவை அல்லாஹ் உயர்த்தி விடுவான். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயி, எண் : 1297
 
எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எல்லா துஆக்களும் எப்படி இருக்கும்? சொர்க்கமாக இருக்கும். ஆனால், குர்ஆனைப் பற்றி குர்ஆனுக்காக ஒரு துஆ செய்தார்கள். அந்த துஆ எப்படி இருக்கு? நீளமாக இருக்கும். 
 
3712 - حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْجُهَنِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا أَصَابَ أَحَدًا قَطُّ هَمٌّ وَلَا حَزَنٌ، فَقَالَ: اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ [ص:247]، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي، إِلَّا أَذْهَبَ اللَّهُ هَمَّهُ وَحُزْنَهُ، وَأَبْدَلَهُ مَكَانَهُ فَرَحًا "، قَالَ: فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَعَلَّمُهَا؟ فَقَالَ: بَلَى، يَنْبَغِي لِمَنْ سَمِعَهَا أَنْ يَتَعَلَّمَهَا
 
என்ன சொல்கிறார்கள்? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வே! நான் உன்னு டைய அடிமையாக இருக்கிறேன். நான் உன்னுடைய அடிமையின் மகனாக இருக்கிறேன்.நான் உன்னுடைய அடிமைப் பெண்ணுடைய மகனாக இருக்கிறேன். 
 
என்னுடைய நெற்றியின் முடி உனது கையிலே இருக்கிறது. நீ எதை தீர்ப்பளிக்கிறாயோ, முடிவு செய்கிறாயோ, அந்த தீர்ப்பு கண்டிப்பாக என் விஷயத்திலே நிறைவேறி விடும். உன்னுடைய விதி எல்லாம் நீதமானது தான் என்று, அல்லாஹ்வை புகழ்கிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 3712 
 
உங்களுக்கு ஒரு காரியமாக வேண்டும் என்றால் அல்லாஹ் ஒருவன் தான் உதவி செய்ய வேண்டும்.
 
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ
 
அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும்போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது, அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் 27 : 62)
 
சிரமத்தில் சிக்கி துடிதுடிப் பவர் அழைத்தால் அவருக்கு பதில் அளிக்கக் கூடியவன் யார்? அல்லாஹ். அவனுடைய சிரமத்தை நீக்கக் கூடியவன் யார்? அல்லாஹ். எந்த அவுலியாவாலும் பண்ண முடியாது . ஏனென்றால் அவர்கள் மௌத்தாயிட்டாங்க. திரும்பி வர முடியாது. மௌத் ஆகாதவன் யார்? அல்லாஹ் ஒருவன் தான். ரப்பு ஒருவன் தான்.
 
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
 
அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன், (தன்னில்) நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) (அல்குர்ஆன் 2 : 255)
 
அவன் உயிரோடு இருக்கிறான். நம்மை நிர்வகித்துக் கொண்டிருக்கிறான். முஸ்லிம்களின் பாதி பேருக்கு அல்லாஹ் ஆண்டவனாக இல்லை. யார் ஆண்டவராக இருக்கிறார்? அப்துல்காதர் ஜிலானி ஆண்டவராக இருக்கிறார். அப்துல் காதர் ஜிலானிக்கு பெயர் என்ன சொல்வார்கள்? ஆண்டவர் அப்துல் காதர் ஜிலானி. உலகத்தை எல்லாம் ரட்சிக்கக் கூடியவர். குர்ஆனை படித்திருந்தால் இப்படி செய்வார்களா?
 
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
 
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்குர்ஆன்1 : 5)
 
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம். அப்புறம் எதுக்கு அவுலியா.
 
يٰصَاحِبَىِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَيْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ
 
என் சிறைத் தோழர்களே! (பலவீனமான) பலதரப்பட்ட தெய்வங்கள் மேலானவர்களா? அல்லது, (நிகரற்ற) ஒரே ஒருவனான (அனைவரையும்) அடக்கி ஆளுபவனான அல்லாஹ் மேலானவனா? (அல்குர்ஆன்12 : 39)
 
ஒருو ஒரு தேவைக்கு என்று ஒரு ஒரு கடவுளை ஒரு ஒரு ரட்சகரை ஏற்படுத்திக் கொண்டீர்களே அவர்கள் சிறந்தவர்களா? அடக்கி ஆளக்கூடிய ஒருவனாகிய அல்லாஹ் சிறந்தவனா? ஒரு காரியம் அல்லாஹ்விடத்தில் ஆக வேண்டும் என்றால், நாம் அல்லாஹ்வை ரொம்ப புகழ வேண்டும்.
 
 5220 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஹதீஸில் சொல்லுகிறார்கள். இமாம் புகாரி அறிவிக்கிறார். அல்லாஹ்விற்கு அவனை புகழ் வது ரொம்ப பிடிக்கும். புகழ் பிடிக்கின்ற ஒருவர் அல்லாஹ் வைவிட வேறு யாரும் இருக்க முடியாது. 
 
நீங்கள் எவ்வளவு அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு அதற்கு அப்புறம் உங்கள் தேவையை சுருக்கமாக யா அல்லாஹ்! இது வேணும் கொடுனு கேளுங்கள்? உடனே கொடுத்துடுவான். அதை விட்டு விட்டுஅல்லாஹ் அத கொடு இதை கொடு என்று கேட்டுவிட்டு அல்லாஹ்வை புகழாமல் எழுந்திருச்சு போனால் அல்லாஹ்விடம் கேட்கிற மரி யாதை இல்லாதவன்.
 
ரப்புவிடம் கேட்கக்கூடிய மரியாதை தெரியாதவன், அல்லாஹுத் தஆலா அந்த துஆவை ஏறெடுத்து பார்க்க மாட்டான். யா அல்லாஹ்!யா ரப்பே! நபிமார்களுடைய துஆ எல்லாம் எப்படி இருக்கும். ரப்பி, என் இறைவா! என்னை படைத் தவனே! அப்படின்னு அல்லாஹ்வை அழைத்து அழைத்து தான் கேட்பார்கள். 
 
யா அல்லாஹ்! நான் உன்னுடைய அடிமை. நான் உன்னுடைய அடிமையின் மகன். உன்னுடைய அடிமை பெண்ணின் மகன். எனது நெற்றி முடி உனது கையிலே இருக்கிறது. நீ தீர்ப் பளித்ததெல்லாம் என் விஷயத்திலே நிறைவேறி விடும். எனக்கு நீ என்ன விதித்தாயோ அது நீதமானது.யா அல்லாஹ்!உன்னை புகழ்வதற்கு நீ ஒரு பெயரை விசேஷமாக வைத்துக் கொண்டாய் அல்லவா அந்தப் பெயரை கூறி அந்தப் பெயரு டைய பொருட்டால் உன்னிடத்தில் கேட்கிறேன். 
 
அல்லாஹ்விடத்தில் யார் பொருட்டால் கேட்க வேண்டும். அல்லாஹ்வுடைய பெயரின் பொருட்டால் கேட்க வேண்டும்.யா அல்லாஹ்! நீ ரஹ்மான் எனக்கு ரஹ்மத்தை கொடு!நீ ரஹீம் எனக்கு ரஹ்மத்தை கொடு! நீ கரீம் எனக்கு செல்வத்தை கொடு! எந்த அவுலியாவின் பொருட்டாலும் கேட்கக் கூடாது. ரசலுல்லாஹ்வின் பொருட்டால் கேட்கலாமா? யாருடைய துஆ பொருட்டாலும் கேட்கக்கூடாது. அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய பொருட்டால் மட்டுமே கேட்க வேண்டும். 
 
அதற்குப் பிறகு நீங்கள் எந்த நல்ல அமலை அல்லாஹ்விற்காக செய்தீர்களோ, அந்த நல்ல அமலை அல்லாஹ் விடத்தில் சொல்லி கேட்க வேண்டும். யா அல்லாஹ்! நான் உன் அடிமை. சலவாத்து சொன்னேன் என்னுடைய பாவங்களை மன்னித்துவிடு. அப்படி கேட்கலாம். 
 
யா அல்லாஹ்! நான் உன்னுடைய குர்ஆனை ஓதினேன் என்னுடைய பாவங்களை மன்னித்துவிடு. யா அல்லாஹ்! நான் தொழுதேன் என்னுடைய பாவத்தை மன்னித்து விடு. யா அல்லாஹ்! நான் ஹஜ் செய்தேன் என்னுடைய பாவத்தை மன்னித்துவிடு. என்னுடைய பெற்றோருடைய பாவத்தை மன்னித்து விடு. யார் பொருட்டாலும் கேட்கக் கூடாது.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மத்துக்காக துஆ கேட்டார்கள். அல்லாஹ் கண்டிப்பாக கபூல் செய்வான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. நமக்காக துஆ கேட்டார்கள். நாம் அவர்களுக்காக துஆ கேட்டோம். அது அல்லாஹ் விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அவர்களை சொல்லி, அவர்களின் துஆவை சொல்லி அல்லாஹ்விடத்தில் கேட்கலாம் என்றால் கேட்க முடியாது.
 
ரசூலுல்லாஹ் யார் பொருட்டால் கேட்கிறார்கள்? அல்லாஹ்வே! உன்னுடைய பெயரின் பொருட்டால்கேட்கிறேன் யா அல்லாஹ்! அந்த விசேஷமான பெயரை நீ உனக்கு வைத்திருக்கிறாய். அப்படி உனக்கு வச்ச அந்த பெயரை உன்னுடைய அடியார்களில் ஒருத்தருக்கு நீ கற்றுக் கொடுத்திருக்கிறாய். 
 
அல்லது, உன் வேதத்திலே அதை நீ இறக்கி இருக்கிறாய் அல்லது, உனக்காக விசேஷமான அந்த பெயரை நீ மறைத்து வைத்திருக் கிறாய் அந்தப் பெயரின் பொருட்டால் நான் கேட்கிறேன்.  நீ இறக்கிய இந்த குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாக ஆக்கு. 
 
என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியாக, சந்தோஷமாக ஆக்கு. என்னுடைய கவலைகளை எல்லாம் போக்கக் கூடியதாக ஆக்கிவிடு. என் நெஞ்சி னுடைய ஒளியாக ஆக்கிவிடு. என்னுடைய கவலைகளை போக்கக் கூடிய தாக ஆக்கு. இந்த குர்ஆனுக்காக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கேட்ட துஆவாகும். 
 
என் அன்பு பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை அல்ஹம்துலில்லாஹ்! இந்த சிறு வயதில் இந்த துஆவுடைய பாக்கியத்தை அதை ஓதுவதற்கும், அதனுடைய மொழியை கற்பதற்கும், அதனுடைய கல்வியை கற்பதற்கும் இந்தப் பள்ளிக்கூடம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நீங்கள் முதலில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். 
 
இரண்டாவது இந்த கல்வியின் மூலமாக அவர்கள் என்ன கற்கிறார்களோ அதை நீங்களும் அவர்களோடு சேர்ந்து அதை கற்க கூடியவர்களாக, அதை புரியக்கூடியவர்களாக, அதை வாழ்க்கையில் அமல் செய்யக் கூடியவர்களாக மாற வேண்டும்.
 
என் அன்பு பெற்றோர்களே! நம்முடைய சமுதாயத் தினுடைய இழிநிலைக்கு காரணம் இந்த குர்ஆனை விட்டு நாம் தூரமாக இருப்பது இந்த நாட்டில் நாம் அனுபவிக்க கூடிய எல்லா துன்பங்களுக்கும், நாம் தூங்கும் போது எழுப்பி கேட்டாலும் இது தான் பதில் சொல்வேன். 
 
குர் ஆனை இந்த உம்மத் புறக்கணித் தார்கள். இந்த குர்ஆனுடைய கல்வியை இந்த மார்க்கத்தின் உடைய மகத்துவத்தை அறியா மல் இந்த மார்க்கத்தை கற்பதை அவர்கள் தூரம் ஆக்கினார்கள். புறக்கணித்தார்கள்.இதை விட்டு விலகினார்கள்.வாழ்க்கை உலகத் தில் சம்பாதிக்க வேண்டும் என்று உலக கல்வியிலே மோகம் கொண்டு அதிலே மூழ்கினார்கள்.
 
அல்லாஹுத்தஆலா கை விட்டு விட்டான். இவர்கள் குர் ஆனை கைவிட்டார்கள்.அல்லாஹ் இவர் களை கைவிட்டு விட்டான். இவர் கள் குர்ஆனை மறந்தார்கள். எனவே அல்லாஹுத்தஆலா இவர்களை மறந்து விட்டான். இவர்களுடைய துஆக்களை அல்லாஹுத்தஆலா மறந்து விட்டான்.
 
இவர்களுக்காக மக்கா வில் துஆ கேட்டாலும் மதினாவில் துஆ கேட்டாலும் இந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. காரணம் என்ன?இவர்கள் அல்லாஹ்வுடைய குர்ஆனை புறக் கணித்து விட்டார்கள். மறந்தார்கள்.
 
وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا
 
இன்னும், (மறுமையில் நமது) தூதர் கூறுவார்: “என் இறைவா! நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்ட ஒரு பொருளாக எடுத்துக்கொண்டனர்.” (அல்குர்ஆன் 25 : 30)
 
நாளைக்கு மறுமையிலே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்திலே முறையிடுவார்கள். யா அல்லாஹ்! என்னுடைய சமுதாயம் குர்ஆனை விட்டு விட்டது.குர்ஆனை புறக் கணித்து விட்டது. குர்ஆனை மறந்து விட்டது. அல்லாஹ் பாதுகாக்கணும்! 
 
சகோதரர்களே! சகோ தரிகளே நம்முடைய வீடுகளில் குர்ஆன் எங்ஙனம் ஓதப்படுகிறது. குர்ஆன் ஓதப்படாத இடத்தை கபூர்ஸ்தான்களாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். வீட்டில் குர்ஆன் ஓத மாட்டேங்குறான் கபூர் ஸ்தானில் குர்ஆன் ஓதிக்கிட்டு இருக்காங்க. 
 
வீட்டில் குர்ஆன் ஓதுங்கள் என்று ரசூலுல்லாஹ் சொன்னார்கள். இவர் எங்கே போய் ஓதுகிறார். கபூர்ஸ்தானில் போய் ஓதுகிறார்.அதுவும் இவருக்கு ஓத தெரியல. வாட கைக்கு ஆள் கூட்டிட்டு போறார்.
 
தன் அத்தா அம்மாவுக்கு அவருக்கு கூட ஓதத் தெரிய வில்லை. குர் ஆன் ஓதினால் யாருக்காவது போய் சேருமா யாருக்கும் சேராது. குர்ஆன் ஓதினால் உங்களுக்குத் தான் சேரும். நீங்கள் குர்ஆன் ஓதிவிட்டு, அல்லாஹ்விடத்தில் துஆ கேளுங்கள்.எப்படி கேட்கணும். 
 
யா அல்லாஹ்! நான் உன்னுடைய வேதத்தை ஓதினேன் நீ ஏற்றுக்கொள். என்னுடைய பாவத் தை, என்னுடைய பெற்றோருடைய பாவத்தை, என்னுடைய உறவுகள் உடைய பாவத்தை மன்னித்து விடு இப்படித்தான் கேட்கணும். யா அல்லாஹ்! நான் குர்ஆன் ஓதினேன். இந்த நன்மை எல்லாம் யாருக்கு? உங்களுக்கு. அந்த நன்மையை செய்து விட்டு துஆ கேளுங்கள் என்று சொன்னால் உன்னுடைய நன்மையை கொண்டு போய் மற்றவர்களுக்கு கொடு என்றா சொல்வீர்கள். இந்த உலகத்தில் குர்ஆன் ஓதிவிட்டு நன்மையை அவருக்கு கொடு என்று சொல்கிறீர்களா இல்லையா? 
 
நாளைக்கு மஹ்சரில் வந்து நிற்பீர்கள். கேள்வி கேட்கக் கூடிய அந்த விசாரணை நாளில் அங்க உங்கள் கணவர் எனக்கு ஒரு ஐந்து நன்மை குறைவாக இருக்கிறது எனக்கு கொஞ்சம் கொடுமா என்று கேட்டால் கொடுப் பீர்களா? உங்கள் அம்மா, உங்கள் அத்தா, உங்கள் பிள்ளை அம்மா எனக்கு கொஞ்சம் நன்மை shortage ஆகுது என்று சொன்னால் கொடுப்பீர்களா அங்கே translate பண்ண வேண்டியது தானே? மார்க்கத்தை தொழிலாக வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள். 
 
 30022 - حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «الْبَيْتُ الَّذِي لَا يُقْرَأُ فِيهِ الْقُرْآنُ كَمَثَلِ الْبَيْتِ الْخَرِبِ الَّذِي لَا عَامِرَ لَهُ
 
அல்லாஹ் பாதுகாக்கணும்! கபுர்ஸ்தானில் குர் ஆன் ஓதாதே என்று சொன்னார்கள், சலாம் சொல்லிவிட்டு வர வேண்டும். சலாம் சொல்லிவிட்டு யா அல்லாஹ்! அவர்களுடைய பாவங்களை என்னுடைய பாவங்களை மன்னித்துவிடு. அல்லாஹ் நான் திரும்ப அந்த இடத்துக்கு தான் போகணும் அப்படின்னு மௌத்தை நினைத்து விட்டு வந்து விட வேண்டும். அங்கேபோய் யாசின் அல்குர்ஆன் அப்படிங்குறாங்க. வீட்டில் குர்ஆன் ஓத வேண்டும் குர்ஆன் எப்படி ஓதுவது
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸன்னாஃப் இப்னு அபி ஷைபா, எண் : 30022
 
அங்கேபோய் யாசின் அல்குர்ஆன் அப்படிங்குறாங்க. வீட்டில் குர்ஆன் ஓத வேண்டும் குர்ஆன் எப்படி ஓதுவது,
 
اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا
 
அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!(அல்குர்ஆன் 73 : 4)
 
اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَه حَقَّ تِلَاوَتِه اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِه‌ وَمَنْ يَّكْفُرْ بِه فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
 
(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓது(வதுடன் அதன் பிரகாரம் அவர்கள் செயல்படவும் செய்)கிறார்கள். அவர்கள்தான் அதை (உண்மையாக) நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2 : 121)
 
குர்ஆனை அதை எப்படி ஓத வேண்டுமோ அப்படி ஓத வேண்டும். யார் சொல்கிறான்? பயத்தோட ஓதணும். குர்ஆன் ஓதிக்கிட்டு இருக்கிறது, அப்படியே ஃபோனை பார்த்து கிட்டு இருக்கிறது. அங்க பாக்குறது இங்க பார்க்கிறது கொட்டாவி விடுறது no use. ஓதுறாரு ஹத்தம் பண்றாரு ஹத்தம் பண்றாரு அதில் என்ன சொல்லியிருக்கிறான், அல்ஹம்து சூராவில் அதுவா no use.
 
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த வேதத்தை இறைவன் என்னிடத்திலே பேசியிருக்கிறான். என்னுடைய நேர்வழிக்காக இந்த வேதத்தை கொடுத்திருக்கிறான் என்று அதனுடைய பொருளை நீங்கள் கற்க வேண்டும். ஒவ்வொரு நாளைக்கும் நீங்கள் ஓதக்கூடிய  அந்த குர்ஆன் சூராக்களில் இருந்து, அதுவும் குர்ஆனை பங்கு போடாதீர்கள். 
 
மன்ஜில் என்று ஒரு புக் இருக்கும். அதெல்லாம் ஓதக் கூடாது. குர்ஆனை பிரித்து வைத்துக் கொள்வது, யாசின், வாக்கியா, அர்ரஹ்மான், தபாரக் அப்படின்னு பத்து சூரா வைத்துக் கொள்வது அதோடு முடிந்தது. அப்படியெல்லாம் செய்யக்கூடாது, முழு குர்ஆன் தான் வைத்திருக்க வேண்டும்.
 
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لَاحِبِهَا حَتَّى غُفِرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த ஸஹீ ஹான ஹதீஸில் சொன்னார்களோ அந்த குறிப்பிட்ட சூராக்கள் வெள்ளிக்கிழமை கஃப் சூரா ஓதணும் இரவில் தபாரக்கல்லதி ஓதணும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 3392
 
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لَاحِبِهَا حَتَّى غُفِرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ
 
இது வழமையாக செய்ய வேண்டும். காலையில் யாசின் மாலையில் யாசின் அதுக் கப்புறம் வாக்கியா இதெல்லாம் ஷாஹிஹான ஹதீஸ் கிடையாது. குர்ஆனை ஆரம்பத்தில் இருந்து ஓதிகிட்டே இருக்கணும். ஒரு கட்டம் முடிந்தவுடன் திரும்ப ஓத ஆரம்பிக்கணும். ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்வாது கண்டிப்பாக ஓதனும். வரிசையாக ஓதிகிட்டே இருக்கணும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3786
 
அப்படி வரிசையாக ஓதும்போது அதை ஓத ஓத அப்படியே ஒரு பகுதியை அதே போல தர்ஜுமா, உங்களுக்கு எது பிடிக்குமோ தமிழா இங்கிலீஷா மலையாளம் ஏதோ அதை திரும்ப அப்படியே படித்துக் கொண்டே வரவேண்டும்.
 
குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கையோடு நோட் வைத்திருக்க வேண்டும். அல்லாஹுத்தஆலா ஷிர்க் செய்யக் கூடாது என்று எந்த சூராவில் சொல்கிறான் என்று எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியணும். அல்லாஹ் உண்மையை பற்றி என்ன சொல்கிறான். புறம் பேசக்கூடாது என்று எங்கே சொல்கிறான். 
 
படிக்கும் போது சூரா பெயர் போட்டு, அத்தியாயம் பெயர் போட்டு,வசன எண் போட்டு எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குர்ஆனில் பக்கத்தில் நீங்கள் பென்சிலால் மார்க் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பெயர்தான் குர்ஆன் ஓதுவது. நமக்கெல்லாம் குர்ஆன் புரியுமா என்று சில பேர் உங்களை ஏமாற்றுவார்கள். நாம் அறிவாளி கிடையாது.ஆனால் குர்ஆனை படித்தால் அறிவாளி ஆகிவிடலாம். எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் குர்ஆனை படித்துவிட்டால் அல்லாஹ் கற்றுக் கொடுத்து விடுவான். நாம் முட்டாள் ஆனால், குர்ஆனை படித்து விட்டால் அல்லாஹ் நம்மை பெரிய புத்திசாலியாக ஆக்கி விடுவான். 
 
நாம் விளக்க மற்றவர்கள். புரிதலற்றவர்கள். குர்ஆனை படித்து விட்டால் அல்லாஹ் விளக்கத்தை கொடுத்து விடுவான். நாம் ஞானமற்றவர்கள் குர்ஆனை படித்து விட்டால் அல்லாஹ் ஞானத்தை கொடுத்து விடுவான்.
 
يس وَالْقُرْآنِ الْحَكِيمِ
 
யா ஸீன். ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 36 : 1, 2)
 
تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِۙ
 
இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும். ‏(அல்குர்ஆன் 31 : 2)
 
நான் ஞானமிக்க வேதத்தின் உடைய வசனங்கள். குர்ஆனை ஓத ஓத ஞானத்தின் கதவுகள் அல்லாஹ் உங்களுக்கு திறந்து கொடுப்பான்.
 
يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌
 
அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு அறிவு ஞானத்தை தருகிறான். எவர் அறிவு ஞானம் தரப்படுகிறாரோ திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். நிறைவான அறிவுடையவர்கள் தவிர (யாரும்) உபதேசம் பெறமாட்டார். (அல்குர்ஆன் 2 : 269)
 
குர்ஆனை ஓத ஓத உங்கள் உள்ளத்தின் அறிவை சிந்தனையில் தெளிவை கொடுத்து அல்லாஹ் புரிய வைத்துக் கொண்டு இருப்பான். சில பேர் பயமுறுத்துவார்கள். குர்ஆனை தொடாத உனக்கு புரியாது என்று சில பேர் வீடு வீடாக சென்று பள்ளிவாசலுக்கு வாங்க என்று சொல்வார் கள்.பள்ளிவாசலில் குர்ஆன் படிக்கிறார்கள். ஹதீஸ் படிக்கிறார்கள் என்று சொல்வார்கள். 
 
ஆனால், ஹதீஸையும் குர்ஆனையும் தொடவே மாட்டார்கள்.குர்ஆன் தர்ஜுமா உங்கள் கையில் இருப்பதை பார்த்தால் படிக்காதீர்கள் வழிகெட்டு போய் விடுவீர்கள் என்று வாங்கி கொள்வார்கள். அவர்கள் ஒரு புக் வைத்திருக்கிறார்கள். கதையாலும் கட்டுக் கதையாலும், அதை படிக்கச் சொல்வார்கள். படிக்கிறதுக்காக அல்லாஹ் எதை இறக்கி இருக்கிறான்?
 
وَاتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ
 
(நபியே! ஒவ்வொரு நாளும்) உம் இறைவனின் வேதத்தில் உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை ஓதுவீராக! (அதன்படி செயல்படுவீராக!) அவனுடைய வாக்கியங்களை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும், அவனையன்றி அடைக்கலம் பெறுமிடத்தை காணவே மாட்டீர். (அல்குர்ஆன்18 : 27)
 
நபியே நான் வேதத்தை இறக்கி இருக்கிறேன் அதை படி என்று அல்லாஹ் சொல்கிறான் அது வேண்டாமா ஹஜ்ரத் எழுதின புக்கை படிக்க வேண்டுமா. குர்ஆனின் மொத்தமாக(எத்தனை வசனம் இருக்கு? எத்தனை சூரா இருக்கு? 116 மாஷா அல்லாஹ்)
 
வெறும் சட்டங்கள் சம்பந்தப்பட்ட வசனங்கள் அதாவது அதை ஒரு ஆலிம் இடத்தில் தான் கற்றுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட வசனங்கள் 500 வசனங்கள் தான். மொத்தம் 6600 வசனங்களில் ஒரு ஆசிரியரின் துணையுடன் ஆழ மாக கற்றுக் கொள்ளக்கூடிய வசனங்கள் 500. 
 
அது போக பாக்கி 6100 வசனங்கள் இருக்கிறது இது எல்லாமே பொதுவான வசனங்கள் தான் யார் படித்தாலும் விளக்கம் கிடைக்கும். அல்லாஹ்வைப் பற்றி சொர்க்கத்தை பற்றி நரகத் தைப் பற்றி மறுமையைப் பற்றி மஹ்ஷரை பற்றி இந்த உலகத்தைப் பற்றி நம்மைப் பற்றி முன்னாடி வாழ்ந்த சமுதாயத்தை பற்றி இப்படியான அந்தக் காலங்களை அல்லாஹ் சொல்லி இருக்கிறான்.
 
சட்டம் சம்பந்தப்பட்ட வசனங்களில் நம்முடைய அறிவைக் கொண்டு நாம் விளையாடக் கூடாது. அதை படிக்கணும் மற்ற படி பொதுவான வசனங்களை நீங்கள் படித்தாலே புரிந்து கொள்ளலாம். எங்க புரியவில்லை யோ அங்க அது சம்பந்தமான விளக்கத்தை கேட்கணும். 
 
பெற்றோர்களே! எதை நாம் நம்முடைய முன்னோர்கள் பயந்து கொண்டிருந்தோமோ அத்தகைய ஆபத்து மிக நெருக்கமாக நம்மை நெருங்கி வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்களை அளிப்பதற்காக அவர்களுடைய அடையாளங்களை அழிப்பதற்காக அவர்களுடைய இருப்பை அழிப்பதற்காக இந்த தீய சக்திகள் தீட்டக்கூடிய திட்டங்கள் நாளுக்கு நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன வளர்ந்து கொண்டிருக்கின்றன. 
 
அதிலே அவர்கள் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள், நாம் எதிர் கொள்வதற்கு அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! ஆயுதங்களால் முடியாது. அல்லாஹ்வு டைய உதவியால் மட்டுமே முடியும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் திரும்பினால் மட்டுமே முடியும். நம்முடைய பிள்ளைகளை உண்மையான முஸ்லிம்களாக குர்ஆனால் ஹதீஸால் வார்த்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களாக மாற்ற வேண்டும். 
 
அவர்களுடைய கல்வியை குர்ஆனுடைய அடிப்படையோடு சேர்த்து கல்வியாக ஆக்க வேண்டும். அவர்களுக்கு முதலாவதாக அல்லாஹ்வை பற்றிய, மறுமையைப் பற்றிய, சொர்க்கத்தை பற்றிய, ஹலால் ஹராமை பற்றிய, இறையச்சத்தை பற்றிய கல்வி அவர்களுடைய உள்ளத்திலே முதலாவதாகசெல்ல வேண்டும். அதோடு சேர்த்து உலகத்தில் சமாளிக்கக்கூடிய கல்வியையும் சேர்த்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
 
இது போன்ற பள்ளிக்கூடங்களுக்கு நீங்கள் உங்களது பிள்ளைகளை சேர்த்தது மட்டு மல்ல. உங்களது பொருளாதாரத் தால் உயர வேண்டும். நம்முடைய முஹல்லாக்களில் இது போன்ற பள்ளிக்கூடங்கள் இருந்தால் அவர்களுக்கு இடம் தேவை என்றால் நான் என்னுடைய இடத்தை வக்ஃபு செய்கிறேன் என்று முன் வர வேண்டும்.
 
நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுவது மட்டுமல்ல. நீங்கள் வசதி உள்ளவர்களாக இருந்தால் இந்த பள்ளிக் கூடத்திலே முஸ்லிம் பிள்ளைகள் முஸ்லிம் பெற்றோர்கள் யாராவது தங்களுடைய பிள்ளைகளை படிக்க அழைத்து வந்தால் அவர்களிடத்திலே உங்களுக்கு பீஸ் கட்டுவதற்கான வசதி இல்லை என்றால் என்னால் முடிந்த இந்த 10,000 வைத்துக் கொள்ளுங்கள். 
 
அவர்களுக்கு நீங்கள் இதன் மூலமாக fees discount கொடுங்கள் என்று சொல்ல வேண்டும்.அப்படி செய் தால் நீங்கள் சமுதாய அக்கறை உள்ளவர்கள். இந்த மார்க்கத்தின் மீது அக்கறை உள்ளவர்கள். இந்த உம்மத்தின் மீது அக்கறை உள்ளவர்கள். அல்லாஹ் உங்களையும் பாதுகாப்பான். வரக்கூடிய வளரக்கூடிய உங்கள்தலைமுறையையும் பாதுகாப்பான். 
 
இன்று ஆடம்பர மாக அனாவசியமாக திருமணங் களிலே, ஆடம்பரமான வீடுகளை கட்டுவதிலே, ஆடம்பரமான வாகனங்களிலே, ஆடம்பரமான ஆடைகளிலே, இந்த முஸ்லிம் சமுதாயம் லட்சங்களை, கோடி களை அழிக்கின்றார்கள். ஆனால் கல்விக்காக அந்த லட்சங்களை கோடிகளை செலவழிப்பதில்லை. குறிப்பாக பெண்கள் நீங்கள் இருக்கிறீர்கள்.
 
உங்களுக்கு சொல்கிறேன் இங்க மட்டுமல்ல உலகத்தில் அதிலே குறிப்பாக இந்தியாவில் நம்முடைய முன்னோர்கள், முகலாய மன்னர்கள்,அதற்கு முன்னால் வாழ்ந்த முஸ்லிம் மன்னர்கள் பிறகு நவாபுகள் இவர்களுடைய மனைவிமார்கள், இவர்களுடைய குடும்பத்தில் உள்ள பெண்களுடைய வஹ்ஃபு இன்று நாம் தொழுது கொண்டி ருக்ககூடிய மஸ்ஜிதுகளும் நாம் நம்முடைய மையத்தை அடக்கம் செய்யக் கூடிய கபுர்களும் என்பதை மறந்து விடாதீர்கள். 
 
உங்களை மாதிரி பெண்களுடைய தர்மம் இந்த மார்க்கத்தை பாதுகாத்தது. இந்த உம்மத்தை பாதுகாத்தது. இந்த மார்க்கத்தை வளர்ச்சி அடைய செய்தது. அதனால் உங்களுடைய நகை நட்டுகளின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த ஆர்வத்தை விட பிரியத்தை விட ஆடம்பர வாழ்க்கையின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய மோகத்தை விட என்னுடைய மார்க்கம், என்னுடைய தலைமுறை, என்னுடைய சமுதாயம், இந்த கல்வியால் சீர்பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்யக் கூடிய தியாகம் மிக மிக முக்கியம். 
 
இந்த கல்விக்காக நீங்கள் செலவழிக் கக்கூடிய செலவழிப்பிலே கஞ்சத் தனத்தை காட்டி விடாதீர்கள். சொத்தை எல்லாம் அழித்து செல்வத்தை எல்லாம் அழித்து என்பிள்ளையை ஒருஹாஃபிளாக ஒரு முஃமினான முஸ்லிமான ஒரு கல்விமானாக உருவாக்கினால் அது தான் எனக்கு மறுமையில், எனது பிள்ளைகளுக்கு மறுமையில் இந்த உலகத்திலும், நன்மையை நற்பாக்கியத்தை  வெற்றியைத் தேடித் தரக்கூடியது என்ற ஈமானிய நம்பிக்கை வையுங்கள். 
 
காசு எப்ப  வேண்டு மானாலும் சம்பாத்தித்து  விடலாம். வசதி எப்போ வேணாலும் வந்துடும். ஆனால் கல்வி அப்படி கிடையாது. ஆகவே அன்பிற்குரியவர்களே! இதை நினைவில் வையுங்கள். தியாகம் செய்யுங்கள். தியாகத்தை கொண்டுதான் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். உங்களது மார்க்கம் பாதுகாக்கப்படும். தியாகம் செய்யுங்கள். அர்ப்பணிப்பு செய்யுங்கள்.உங்களது நேரத்தை, உங்களது வாழ்க்கையை, உங்களது பொருளாதாரத்தை, உங்களது செல்வத்தை இந்த மார்க்கத் திற்காக இந்த தீனுக்காக நீங்கள் தியாகம் செய்யுங்கள். தியாகம் செய்யுங்கள். அர்ப்பணிப்பு செய்யுங்கள் நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள். அல்லாஹ்விடத்திலே உங்களை பாதுகாக்க கூடிய உங்களுக்கு உதவக் கூடியவர்களை அல்லாஹ் பாதுகாப்பான். 
 
உங்களது சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாப்பான். நமக்கு நம்முடைய மார்க்கத்தை இந்த நாட்டிலே அல்லாஹ் பாதுகாத்து பதப்படுத்தி வலுப்படுத்தி அதிலே உறுதியை ஏற்படுத்தித் தருவான். இல்லையென்றால் அல்லாஹ் கைவிட்டு விட்டால் வேறு யாரும் நமக்கு உதவ முடியாது.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். இன்னும், உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான். (அல்குர்ஆன் 47 : 7).
 
அல்லாஹ்விற்கு நீங்கள் உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான். وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏ உங்களுடைய பாவங்களை அல்லாஹ் உறுதிப்படுத்துவான். அல்லாஹ்விற்கு என்னங்க உதவி பெரிய பள்ளிவாசலை கட்டி விட்டால் உதவியா அன்புசகோதரிகளே! பள்ளிவாசல் என்பது, மார்க்க கல்விக்காக பள்ளிவாசல் இன்று முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்கள் ஐந்து நேர தொழுகைக்காக தொழப்பட்டு விட்டு கோடிக்கணக்கான ரூபாய் களால் கட்டப்பட்டபள்ளிவாசல்கள் அப்படியே வீணாககிடக்கின்றது. 
 
கல்வியை மஸ்ஜிதோடு சேர்க்க வேண்டும்.மஸ்ஜிதைகல்வியோடு சேர்க்க வேண்டும். அங்கிருந்து உருவாக வேண்டும்.இதில் கேரளா முன்மாதிரி நமக்கு. பிள்ளைகள் எட்டாம் வகுப்பு வரைக்கும் பள்ளிவாசலை சுற்றியே படித்து விடுவார்கள். சொல்லக்கூடிய அடிப்படை கருத்து இதுதான் சகோதரர்களே! நமக்கு பொருளாதாரக் கல்வி இந்த உலக கல்வி தேவை எதோடு தேவை? மார்க்கத்தோடு தேவை.
 
குர்ஆன் உடைய கல்வியோடு தேவை. ஹதீஸ் உடைய கல்வியோடு தேவை. அல்லாஹ்வை அறிந்து கொள்வ தோடு நமக்கு இந்த கல்விதேவை. நபியை அறிந்து கொள்வதோடு நமக்கு இந்த கல்வி தேவை. அல்லாஹ்வை அறியாமல் நபியை அறியாமல் நீங்கள் என்ன படித் தாலும் சரி அல்லாஹ் கண்ணியத்தை கொடுக்க மாட்டான். ஆகவே தியாகம் செய்யுங்கள். உருவாகுங்கள். உருவாக்குங்கள். அல்லாஹ்வுடைய பாதுகாவல் நிச்சயமாக கிடைக்கும். 
 
அல்லா ஹுத்தஆலா நம்மை பலப்படுத்து வானாக! உறுதிப்படுத்துவானாக! நமக்குத் தேவையான இந்த கல்வி நிறுவனத்துக்கு தேவை யான இதுபோன்று எங்கெல்லாம் அல்லாஹ்வுடைய தீனுக்காக மார்க்கத்திற்காக கல்வி நிறுவ னங்கள் உருவாகின்றனவோ அந்த எல்லா கல்வி நிறுவனங் களுக்காகவும் அல்லாஹுத் தஆலா உதவி செய்வானாக! 
 
அருள் செய்வானாக! பாதுகாப்பானாக! அதற்கு உதவக்கூடிய நல்லவர்களை தியாகிகளை அல்லாஹ் உருவாக்குவானாக! நம்முடைய பிள்ளைகளுக்கு ஈமானையும் இஸ்லாமையும் பாதுகாத்துக் கொடுப்பானாக! குர்ஆனை மனனம் செய்ய ஒரு ஹதீஸை மனனம் செய்ய அல்லாஹ்வுடைய தீனுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க கூடிய சந்ததிகளாக நம்முடைய சந்ததிகளை அல்லாஹ் ஆக்கி அருள்வானாக! ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/