இதயத்தை இறை அச்சத்தால் நிரப்பும் இனிய ரமழான் | Tamil Bayan - 706
இதயத்தை இறையச்சத்தால் நிரப்பும் இனிய ரமளான்
தலைப்பு : இதயத்தை இறையச்சத்தால் நிரப்பும் இனிய ரமளான்
வரிசை : 706
இடம் : மஸ்ஜிதுத் ஆஜம், வேலூர்
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 25-03-2022 | 22-08-1443
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! சகோதரிகளே! உங்கள் முன்னால் அல்லாஹுதஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய இறுதி இறைத்தூதர் முஹம்மது அவர்கள் மீதும் அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார், மேலும் தோழர்கள், மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், அன்பையும், அருளையும், சொர்க்கத்தையும், வேண்டியவனாக! இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுத்தஆலா நமக்கு இந்த உலக வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுக்கவில்லை நமக்கு அல்லாஹுத்தஆலா மறுமையை தேர்ந்தெடுத்திருக்கிறான். நாம் நிரந்தரமாக தங்குவதற்காக, அளவில்லாத, எல்லை இல்லாத, முடிவில்லாத இன்பத்தை, சுகத்தை, மகிழ்ச்சியை, அனுபவிப்பதற்காக சொர்க்கத்தை அல்லாஹுத்தஆலா நமக்காக தேர்ந்தெடுத்து தயார்படுத்தி அலங்கரித்து வைத்திருக்கிறான். இந்த உலக வாழ்க்கை நமக்கு ஏன் கொடுக்கப்பட்டது?
وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 : 56)
நான் ஜின் வர்க்கத்தையும் மனிதவர்க்கத்தையும் அவர்கள் என்னை வணங்குவதற்காக தவிர படைக்கவில்லை இங்கே அல்லாஹ்வை வணங்க வேண்டும், இங்கே அல்லாஹ்வை நாம் திருப்தி படுத்த வேண்டும், அல்லாஹ்வுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும், அல்லாஹ் தடுத்த ஹராம்மாக்கிய சிறிய பெரிய ஒவ்வொரு பாவத்திலிருந்தும் விலகி இருக்க வேண்டும்,
அல்லாஹ்வை முன்னோக்கி சொர்க்கத்தை ஆசை வைத்து நரகத்தை பயந்து வாழ வேண்டும், உண்மையான இன்பத்தை மறுமையில் அனுபவிக்க வேண்டும், இங்கே அமல் இன்று இங்கே நமக்கு அமல், இங்கே அல்லாஹுத்தஆலா எந்த கேள்வியும் கேட்க மாட்டான், அல்லாஹுத்தஆலா உங்களை கரம் பிடித்து தடுக்க மாட்டான், நீ தர்காவிற்கு போறியா போய் தொல, நீ கோயிலுக்கு போறியா போ, நீ எங்க போறியோ உன்னுடைய செயலுக்கு நீ பொறுப்பு, وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ நீ செய்யக்கூடிய சிறிய பெரிய ஒவ்வொரு செயலும் உனக்கு எழுதப்படும்.
சகோதரர்களே! நம்ம நினைக்கிறோம் நம்ம ரொம்ப சுதந்திரமா இருக்கலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று. இல்லை
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், கண்காணிப்பாளர், பிரசன்னமாகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) அவனிடம் இருந்தே தவிர. (அல்குர்ஆன் 50 : 18)
மனிதனே நீ பேசினால் கூட அந்த பேச்சை கவனித்து கேட்டு என்ன பேசுகிறாய் என்று எழுதக்கூடிய வானவர்கள் உன்னோடு இருக்கிறார்கள்.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ كِرَامًا كَٰتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். (அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.) (அல்குர்ஆன் 82 : 10, 11, 12)
உங்களோடு உங்கள் செயல்களை பதிவு செய்யக்கூடிய வானவர்கள் கண்ணியமான வானவர்கள் இருக்கிறார்கள். நம்மோடு நம்முடைய அமலை பதிவு செய்யக்கூடிய வானவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எதை செய்தாலும் அதை அறிந்து அவர்கள் எழுதிக் கொள்கிறார்கள்.
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள். இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள். (அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள். இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை. இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது? பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?(அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்! (அல்குர்ஆன் 82 : 13, 14, 15, 16, 17, 18, 19)
அல்லாஹ் சொல்கிறான்: அங்கே நல்லவர்கள் நியஃமத்தில் இருப்பார்கள். இங்கே அல்லாஹ்விற்காக வாழ்ந்தவர்கள் எப்படி? இங்கே அல்லாஹ் ரப்புக்காக வாழ்ந்தவர்கள்.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!” (அல்குர்ஆன் 41 : 30)
கடையை திறந்தாலும் பிஸ்மில்லாஹ். செல்வம் கிடைத்தாலும் அல்ஹம்துலில்லாஹ். லாபம் கிடைத்தாலும் அல்ஹம்துலில்லாஹ். எதுவும் கிடைக்கலையா அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் நமக்கு எதை நாடினானோ அதுதான் நமக்கு கிடைக்கும்.
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (எதுவும்) எங்களுக்கு அறவே ஏற்படாது. அவன்தான் எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)க்கவும். (அல்குர்ஆன் 9 : 51)
அவனுடைய நம்பிக்கை பிற மக்களைப் போல கடவுள் என்று இறைவன் ஒன்று ஒருவனை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை பிறர் மீது வைப்பவர்கள் அல்ல. எந்த தர்காவிலும் நம்முடைய நன்மை தீமை இல்லை. அல்லாஹ்விடத்தில் நம்முடைய நன்மை தீமை இருக்கிறது. இறந்து போன எந்த இறை நேசரும் நமக்கு பிள்ளையை கொடுக்க முடியாது.
நமக்கு சுகத்தை கொடுக்க முடியாது, நமக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க முடியாது. வாழ்வாதாரத்தை நமக்கு கொடுப்பவன் அல்லாஹ். தாயின் வயிற்றிலே நமக்கு உணவளித்தவன். தாயின் வயிற்றில் நாம் இருக்கும்போது நமக்கு உணவளித்தவன், அவன் தான் இப்போதும் நமக்கு உணவளிக்கிறான். யாருடைய தயவிலும் அவன் நமக்கு உணவளிப்பதில்லை. அல்லாஹ் அவனுடைய தயவிலே நமக்கு உணவளிக்கிறான்.
என்னை படைத்தது உங்களைப் படைத்தது ஒவ்வொரு படைப்பையும் அல்லாஹ் அவனுடைய கருணையால் அவனுடைய அன்பால் அவனுடைய பிரியத்தால் அவன் படைக்கிறான் பரிபாலிக்கிறான்.
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ
இன்னும், (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாளராக இருப்பதற்காகவும் (சிறந்த, நீதமான) நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தமது குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார் என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் (தொழுகையில் முன்னோக்குபவராக) இருந்த (பைத்துல் முகத்தஸ் ஆகிய முதல்) கிப்லாவை (விட்டு உம்மை திருப்பியதை) நாம் ஆக்கவில்லை. (அல்குர்ஆன் 2 : 143)
அல்லாஹ் எவர்களை நேர்வழி நடத்தினானோ அவர்கள் மீதே தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே (-பாரமாகவே) இருந்தது. உங்கள் நம்பிக்கையை (-முன்னர் நீங்கள் தொழுத தொழுகைகளை) அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன். (அல்குர்ஆன் 2 : 143)
அல்லாஹுத்தஆலா மக்கள் எல்லோரும் மீதும் எல்லா மக்கள் மீதும் கருணையுள்ளவனாக, அன்புடையவனாக, பாசம் உள்ளவனாக, இருக்கிறான். முஃமின்கள் மீது விசேஷமான பாசம் உள்ளவனாக இருக்கிறான். அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு யாருடைய வஸீலாவும் தேவையில்லை அல்லாஹ்வுடைய வஸீலா போதும்.
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
அல்லாஹ்விற்கே உரியன மிக அழகிய பெயர்கள். ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7 : 180)
ரஹ்மானே! எங்கள் மீது செய்வாயாக. ரஹீமே! எங்கள் மீது கருணை காட்டுவாயாக! யா ரஸாக்! எங்களுக்கு உணவளிப்பாயாக. அல்லாஹ்விடத்திலே அல்லாஹ்வை புகழ்ந்து கேள் அல்லாஹ்விடத்திலே அல்லாஹ்வை புகழ்ந்து, அல்லாஹ்வின் பெயர்களை சொல்லி, அல்லாஹ்வை துதித்து, அல்லாஹ்வை கண்ணியப்படுத்தி, ரப்பி! ரப்பி! ரப்பி! என் இறைவா! என் இறைவா! என்று அவனிடத்திலே மன்றாடி கேள். நீ அவனுக்காக என்ன செய்தாயோ அந்த அமலை சொல்லி கேள்.
رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
“எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார் என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)” (அல்குர்ஆன் 3 : 193)
யா அல்லாஹ்! நாங்கள் ஈமான் கொண்டோம் எங்களை மன்னிப்பாயாக. இப்படி சொல்லாதே, யா அல்லாஹ் அந்த அவுலியா பொருட்டால் என்னை மன்னிப்பாயா என சொல்லாதே. எந்த அவ்லியாவையும் கேட்டு அல்லாஹ் நமக்கு ஈமானை கொடுக்கவில்லை. எந்த அவ்லியாவின் பொருட்டால் அல்லாஹ் நமக்கு இஸ்லாமை கொடுக்கவில்லை.
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
இன்னும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நீக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். “இவற்றை அடைய எங்களுக்கு நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் (அனைத்தும்) உரியது. இன்னும், அல்லாஹ் எங்களை நேர்வழி நடத்தி இருக்கவில்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக உண்மையை கொண்டுவந்தார்கள்” என்று (அவர்கள்) கூறுவார்கள். இன்னும், “நீங்கள் செய்து கொண்டிருந்த அமல்களுக்கு பகரமாக நீங்கள் வாரிசுகளாக ஆக்கப்பட்ட சொர்க்கம் இதுதான்” என்று (நற்செய்தி கூறப்பட்டு அவர்கள்) அழைக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7 : 43)
ஹிதாயத் அல்லாஹ் கொடுத்தான், அல்லாஹ்வுடைய அருளால் அல்லாஹ் கொடுத்தான் யாருடைய பொருட்டாலும் அல்ல.
4388 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ أَهْلُ اليَمَنِ، هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَأَلْيَنُ قُلُوبًا، الإِيمَانُ يَمَانٍ وَالحِكْمَةُ يَمَانِيَةٌ، وَالفَخْرُ وَالخُيَلاَءُ فِي أَصْحَابِ الإِبِلِ، وَالسَّكِينَةُ وَالوَقَارُ فِي أَهْلِ الغَنَمِ»، وَقَالَ: غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ [ص:174]، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
யமன் நாட்டு மக்கள் வந்தார்கள், ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் இடத்தில் அலி ரலி அவர்கள் சென்று தவ்பா செய்து அவர்கள் இஸ்லாமை ஏற்று கூட்டம் கூட்டமாக வந்தார்கள். யாருக்கு முன்னால் ரசூலுல்லாஹ் ஸல் அவர்களுக்கு முன்னால் சொன்னார்கள்: பாருங்கள் அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டினான். எங்களுக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வை புகழ்கிறோம்.
நீங்கள் எங்களுக்கு நேர் வழி காட்ட வில்லை. அல்லாஹ் எங்களுக்கு காட்டு எங்களை உங்களிடத்திலே அழைத்து வந்தான். ரசூலுல்லாஹ் ஸல் சொன்னார்கள் நீங்கள் உண்மை சொன்னீர்கள். எமன் நாட்டு காரர்களின் ஈமான் உறுதியானது அவர்களுடைய ஞானம் உண்மையானது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4388
சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா இங்கு வருவோம் இந்த உலகத்திலேயே அமல். இந்த உலகத்திலேயே அமல். நாளை மறுமையிலே கூலி. வாழ்க்கை எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது ஆகிரத்திலே,
3797 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ: جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَحْفِرُ الخَنْدَقَ، وَنَنْقُلُ التُّرَابَ عَلَى أَكْتَادِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ، فَاغْفِرْ لِلْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ
இந்த துணியா நீங்க இதுல சொந்தக்காரரா மன்னராகிக்குங்க இந்தியாவிற்கே மன்னர் ஆகிக்கோங்க. என்னத்த கிழிச்சுட போறோம்? என்னத்த அள்ளிக்க போறேன்? என்னத்த சாப்பிட முடியும்? எவ்வளவு பெரிய இடத்துல தூங்க முடியும்?
அறிவிப்பாளர் : ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 3797
மன்னர் ஹாரூன் ருஷீது ரஹ்மத்துல்லாஹி அலைஹி வந்தார் பஃலூரை பார்த்தார். பஃலூல் எனக்கு கொஞ்சம் உபதேசம் செய்யுங்க என்றார். கேட்டாங்க பஃலூரில் பெரிய பெரிய கோட்டையை காட்டி. இதெல்லாம் என்ன எங்க டாடி கட்டின கோட்டை என்றார். அப்படியா இப்ப அவங்க? எல்லாம் எங்கே இருக்காங்க? அவங்க எல்லாம் கபருக்கு போயிட்டாங்கன்னு சொல்லி. இப்போ நீங்க எங்க இருக்கீங்க?
நான் அந்த கோட்டையில் இருக்கேன். நீங்க எங்க போவீங்க? கப்ருக்கு போவேன். படிப்பினை வரவில்லையா உனக்கு? பயம் வரவில்லையா? இதுதான் கேட்டார். அதோட மன்னர் ஹாரூன் அதோட விட்டு விட்டு வீட்டுக்கு போய் விட்டார். போனவர் 3 நாள் அழுதுட்டே இருந்தார்.
சகோதரர்களே! வாழ்க்கை நமது உண்மையான வாழ்க்கை எங்கே இருக்கிறது? எங்கே இருக்கிறது? ஆகிரத்திலே இருக்கிறது. ரசூலுல்லாஹ் ஸல் சொன்னார்கள் வாழ்க்கை என்பது ஆகிரத்துடைய வாழ்க்கை தான். வாழ்க்கை என்பது ஆகிரத்துடைய வாழ்க்கை. துணியாவுடைய வாழ்க்கை வாழ்க்கையே இல்லை.
அல்லாஹுத்தஆலா ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டான், நீங்கள் எல்லாம் ஜிஹாதுக்கு போங்க நீங்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாக்கு போங்க என சொல்லி. அப்போ சில பேர் இப்பவே போகணுமா? இப்பவே போகணுமா? கொஞ்சம் லேட்டா போனா என்ன? நம்ம யோசிக்கிறோம் இல்ல? அதான் சொன்னேன் உடனே பள்ளிக்கு வரவங்க எத்தனை பேர்? அதான் சொன்ன உடனே பள்ளிக்கு வரவங்க எத்தனை பேர்? அதான் எதற்கு சொல்கிறார்கள்? எதற்கு சொல்கிறார்கள்? பள்ளிக்கு வாங்க என சொல்றாங்க.
நம்ம என்ன செய்றோம்? அதான் சொன்னா உடனே டயத்தை பார்க்கிறோம். இன்னும் 15 நிமிஷம் இருக்கு 20 நிமிஷம் இருக்கிங்கிறோம். ஜும்மாவுடைய நிலைமையும் அப்படி ஆகிப்போச்சு. இப்படி இருந்தா ஏன் அல்லாஹுத்தஆலா எதிரி அனுப்பி இவனுங்கள சாத்துங்கடா. நான் பள்ளிக்கு கூப்பிட்டது பிறகும்,
إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّه
நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! இன்னும், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகிறவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். (அல்குர்ஆன் 6 : 9)
அதான் சொல்லியாச்சு வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போ என அல்லாஹ் சொல்றான். இவன் கடையில உட்கார்ந்து வியாபாரம் பாத்துட்டு இருக்கான். யோசித்துப் பாருங்க. இன்றைக்கு அதான் சொல்லப்பட்ட உடன் முஸ்லிம்கள் எல்லோரும் மஸ்ஜிதுக்கு வந்து விட்டால் எவ்வளவு பெரிய வெற்றி அல்லாஹ் கொடுப்பான்?
இன்றைக்கு நிலைமை இப்படி மோசமா போயிருச்சுனா புரிஞ்சுக்கோங்க. முஸ்லிம் போய் பள்ளிவாசலுக்கு ஐந்து நேர தொழுகைக்கு கூப்பிட வேண்டிய அளவுக்கு கேவலமா போயிடுச்சு நிலைமை.
இந்த உஸ்தாது என்ன சொல்றாங்கன்னா இந்த முஸ்லிம் போய் பள்ளிவாசலுக்கு ஐந்து வேளை தொழுகைக்கு கூப்பிடலாமா? ஜாய்ஸா ஜாய்ஸ் இல்லையா? நபி ஸல் மஸ்ஜிது நபவில எதை செய்தார்களோ அதை தான் நம்ம செய்யணும். சொல்லுங்க.
ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ، ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ
நபி ஸல் மஸ்ஜிது நபவில எதை செய்தார்களோ அதை தான் நம்ம செய்யணும். நபி ஸல் மஸ்ஜிது நபவில என்ன செய்தார்கள்? தொழலைனா வீட்டை எறித்து விடுவேன் என சொன்னார்கள். மஸ்ஜிதுக்கு நீ வரவில்லை என சொன்னா ஆண்கள் பள்ளிவாசலுக்கு வரலைனா நான் என்ன செஞ்சுருவேன் வீட்டை எரிச்சிடுவேன். அதுதான் நான் முடிவு பண்ணி இருக்கேன். ஆனா அங்க பெண்களும் சிறுவர்களும் இருப்பதால் நான் அதை செய்யவில்லை என என்கிறார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 651 குறிப்பு 1
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «العَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ
இல்லையென்றால் நான் அதை செய்திருப்பேன் அப்புறம் என்ன சொன்னார்கள். ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் யார் ஒருவன் தொழுகையை ஃபர்ளான தொழுகையை விட்டு விட்டால் அவன் காஃபிர் ஆகிவிட்டான். முடிஞ்சு கதை.
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2621
134 - (82) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ جَرِيرٍ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، قَالَ: سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ
என்ன ஆச்சு? கதை முடிஞ்சு. உனக்கும் குஃப்ர் ,ஷிர்க் நீ எங்க இருக்கு இங்க இருக்கு குஃப்ர், இங்கே இருக்க ஷிர்க். நான் பேசுறது புரியுதா? எல்லாருக்கும்? தமிழ் விளங்குதா? கவனிக்கிரீங்களா? சொன்னார்கள்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்தப் பார் நீ இங்கே. ஷிர்க்கு இங்கே இருக்கு. குஃப்ர் இங்கே இருக்கு. உனக்கும் இந்த குஃப்ருக்கும் ஷிர்க்கும் இடையிலே தொழுகையை விடுறது தான். நீ தொழுகையை விட்டால் நீ இங்கே போய் ஜாயிண்ட் ஆயிடுவ என்றார். தொழுகையை விட்டால் எங்கே போய் ஜாயின்ட் ஆயிடுவீங்க? குஃப்ரு ஷிர்குல.
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 134
ஒவ்வொரு மஸ்ஜிதுலையும் நீங்க உங்க மஸ்ஜிது உங்களுக்கு சொந்தமானது, இதுல உள்ள சட்டம் நீங்க அல்லாஹ்வின் சட்டத்தின்படி வைக்கக்கூடிய சட்டம். இதில் அரசாங்கம் வந்து கேள்வி கேட்க முடியாது. இந்த மஸ்ஜிதுல தொழுகையை விட்டவர் இந்த மஸ்ஜிதுடைய உறுப்பினராக இருக்க முடியாது. அவருக்கு நாங்க இங்கே நிக்காஹ் செய்ய மாட்டோம். அவர் இறந்து போயிட்டாருனா அவருக்கு இங்கே ஜனாஸா தொழுகை கிடையாது.
அப்படின்னு சட்டத்தை கொண்டு வாங்க. இதுதான் 4 மத்ஹப் ஃபிக்குல இருக்கு. என்ன இருக்கு? அஹ்லுல் சுன்னத்துல ஜமாத்துனுடைய 4 மத்ஹப் உடைய ஃபிக்குகளை என்ன இருக்கு? 3 இமாம்கள் அப்புறம் 1 இமாம். இந்த ஒரு இமாம் இருக்காருல்ல இமாம் அபூ ஹனிஃபா ரஹ் அவர்கள் சொல்ற சட்டம் தான் ரொம்பவே லேசான சட்டம்.
மற்ற 3 பேர் என்ன சொல்றாங்க? இமாம் மாலிக், இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல், இமாம் முஹம்மத் பின் இத்ரீஸ் அல் ஷாஃபிஈ இந்த 3 பேர் என்ன சொல்றாங்கன்னா? தொழுகையை விட்டவர் அவன் முர்தத் ஆகிட்டான். இஸ்லாமை விட்டு வெளியே போயிட்டான். அவனுக்கு சொல்லுங்க தொழுங்கனு சொல்லி. இல்லை என்றால், முஸ்லிம் மன்னர் இடத்தில் ஆட்சியாளர்களும் சொல்லட்டும். அவர் ஜெயில்ல போடுவாரு. 3 நாள் டைம் தருவாரு. இல்லைனா முர்த்ததாக கணக்கில் எடுத்து அவரை சிறைசேதம் செய்திடுவாரு. இப்போ இமாம் அபூ ஹனிஃபாவிடம் வருவோம்.
அபூ ஹனீஃபா என்ன சொல்றாங்கன்னா? அவன அடிச்சிட்டே இருங்க. அவனை அடிச்சுட்டே இருங்க. ஒன்னு அவன் தோழனும் இல்லனா அவன் அடி வாங்கியே சாகனும். இதுதான் சட்டத்திலேயே ரொம்ப லேசான சட்டம். யோசிச்சு பாருங்க. நம்முடைய முஸ்லிமுடைய நிலைமையை நெனச்சு பாருங்க. அப்படி ஒருத்தர் இறந்துட்டார்னா தொழுகை இல்லாதவர் இறந்துட்டார்.
என்ன செய்வது? 4 மத்ஹப்புடைய ஃபத்துவா என்ன? என்றால் அவருக்கு ஜனாஸா கிடையாது. அவரை குளிப்பாட்டக் கூடாது. அவருக்கு கஃபன் போடக்கூடாது. பழைய துணில சுருட்டி ஊருக்கு கடைசில இருக்குற குப்பை மேட்டுல கொண்டு போய் போட்டு வந்துடனும் இதுதான் சட்டம். அல்லாஹு அக்பர். சரி விஷயத்துக்கு வாங்க.
எதுக்கு சொல்ல வந்த அப்போ அல்லாஹுத்தஆலா ஸஹாபாக்கள் மேல ஜிஹாதை கடமையாக்கினான். அப்போ என்ன நினைத்தார்கள்? எல்லாரும் இல்லை சில பேர். கொஞ்சம் லேட்டாக கடமையாக்கினால் என்ன? இவ்வளவு சீக்கிரமாக அல்லாஹ் கடமையை கடமையாக்கிட்டானே? கொஞ்சம் நமக்கு அவகாசம் கிடைத்தால் இப்போதான் மதினாவிற்கு வந்திருக்கிறோம். ஒரு வீடு கட்டி இருக்கலாமே? கொஞ்சம் நம்முடைய தோட்டத்தில், கடை தெருவில் வியாபாரம் செய்து கொஞ்சம் ரெடி பண்ணி இருக்கலாமே?
மக்காவில் 13 வருஷம் அடி வாங்கிட்டு வந்திருக்கோம். இப்போதான் கொஞ்சம் நிம்மதி கிடைச்சிருக்கு அப்படின்னு சொல்லி கொஞ்சம் சில பேர். அல்லாஹ் கேட்டான்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ إِلَّا تَنْفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது? உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்! மறுமையை பார்க்கிலும் உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தி அடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதாகவே தவிர இல்லை!
(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அவன் உங்களை தண்டிப்பான்; இன்னும், உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை (தனது தீனுக்காக) மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 9 : 38, 39)
முஃமின்களே! அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள் என்று சொல்லப்பட்டால் பூமியின் மீது அப்படியே சாய்ந்து கவ்வி பிடித்துக் கொள்கிறீரோ நீங்கள்? உலக வாழ்க்கை உங்களுக்கு பிரியமாகிவிட்டதோ? எப்படி கேட்டான் அல்லாஹுத்தஆலா? உலக வாழ்க்கை உங்களுக்கு ரொம்ப பிரியமாகிவிட்டதோ? ரொம்ப உலகத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டீர்களோ? புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பக்கூடிய இது உலக வாழ்க்கை, நீங்கள் ஆசைப்படக்கூடிய இந்த உலக வாழ்க்கை நீங்கள் மோகம் கொள்ளக்கூடிய, இந்த உலக வாழ்க்கை எந்த உலக வாழ்க்கை வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் புறப்படுவதிலிருந்து நீங்கள் அலட்சியம் செய்கிறீர்களோ, துனியாவை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்களோ, அது மறுமையில் ஒன்றுமே கிடையாது அற்ப சுகம்.
அல்லாஹு அக்பர் அடுத்து அல்லாஹ் சொல்றதை பாருங்க நீங்கள் என்னுடைய பாதையில் புறப்படவில்லை என்றால் கடுமையான வலி தரக்கூடிய தண்டனையால் அல்லாஹ் உங்களை தண்டிப்பான். வேறு ஒரு கூட்டத்தை அல்லாஹ் கொண்டு வருவான்.
சகோதரர்களே! நினைத்துப் பார்க்கணும். அல்லாஹுத்தஆலா நமக்கு சொர்க்கத்தை வைத்திருக்கிறான். துனியாவை வைத்திருக்கவில்லை. துனியாவில் இங்கே வேலை செய்ய வந்தோம். இங்கே உழைக்க வந்தோம். அல்லாஹ்வை திருப்தி படுத்த வந்தோம். தீனை வாழ்க்கையில் கொண்டு வருவதற்காக இங்கே வந்திருக்கிறோம்.
அதற்கு அல்லாஹுத்தஆலா நமக்கு ஏற்பாடு செய்கிறான். என்ன அவனுக்கு தெரியும் நம்ம யாரு நம்மை எப்படிப்பட்டவர்கள். கொஞ்சம் ஞாபக மறதி இருக்கும். கொஞ்சம் அலட்சியம் இருக்கும். கொஞ்சம் நம்மிடத்தில் ஏதாவது குறைகள் இருக்கும். அல்லாஹுத்தஆலா அவன் ரஹ்மான் அல்லவா? ரஹீம் அல்லவா? அர்ரஹீமுர்ரஹீம். அல்லாஹ் யார்? அர்ஹமூர் ரஹீம் கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன். எல்லையற்ற கருணையாளன்.
وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ قَالَ عَذَابِي أُصِيبُ بِهِ مَنْ أَشَاءُ وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ
“இன்னும், இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பினோம்” (அல்லாஹ்) கூறினான்: “என் தண்டனை அதன் மூலம் நான் நாடியவர்களை பிடிப்பேன். இன்னும், என் கருணை ஒவ்வொரு பொருளுக்கும் விசாலமாக இருக்கிறது. ஆக, எவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுகிறார்களோ; இன்னும், ஸகாத்தைக் கொடுப்பார்களோ; இன்னும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கு அதை விதிப்பேன்.” (அல்குர்ஆன் 7 : 156)
அல்லாஹ் சொல்கிறான், என்னுடைய கருணை எல்லாவற்றையும் வியாபித்திருக்கிறது. என் கருணைக்கு வெளியில் எதுவும் கிடையாது. முடியாது என்று எதுவும் முடியாது. அல்லாஹ்வுடைய ரஹ்மத் இல்லாமல் எதுவுமே முடியாது. அல்லாஹ் கருணை காட்டினால் மட்டும்தான்.
5673 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ المَوْتَ: إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ
ஒரு சமயம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: யாருக்குமே இங்கே சொர்க்கத்திற்கு போக முடியாது. அல்லாஹ்வின் கருணை இருந்தாலே. தவிர உங்களில் யாரும் உங்களுடைய அமலால் சுவர்க்கத்திற்கு போகவே முடியாது. அல்லாஹ்வுடைய அருள் இருந்தாலே தவிர. சஹாபாக்கள் டக்குனு கேட்டாங்க. அப்போ நீங்களுமா? என சொல்லி. புகாரி 5673, 6463, 6467 நான் ஆரம்பத்தில் சொன்னேன் பாருங்க எல்லாமே அல்லாஹ்வுடைய அருள்.
அல்லாஹ்வைத்தான் புகழும். நம்முடைய உசுரு நம்முடைய அக்காபிர் நம்முடைய உலமா எல்லாரையும் நாம நேசிக்கணும். அவங்களுக்கு ஹிக்மத் பண்ணனும். ஆனா அவங்க பரக்கத்தால் தான் எனக்கு கிடைத்தது என சொன்னால் அது ஷிர்க்கு. யாருடைய பரக்கத்தால் கிடைத்தது? அல்லாஹ்வுடைய பரக்கத்தால் கிடைத்தது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சொல்றோமா? அல்லாஹ்வுடைய பரக்கத். யாருக்கும் பரக்கத் கிடையாது அல்லாஹ் கொடுக்கிற பரக்கத் நேரடியா அல்லாஹ் கிட்ட இருந்து தான்.
تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
எ(ந்த இறை)வனுடைய கரத்தில் (எல்லாப் படைப்புகளின்) ஆட்சி இருக்கிறதோ அவன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான். (அல்குர்ஆன் 67 : 1)
அல்லாஹ் யாருடைய கையில் வானங்கள் பூமியின் ஆட்சி இருக்கிறதோ அவன் பரக்கத் உடையவன். எங்கேயுமே நீங்க ஹதீஸ் கிதாபை எடுத்து பாருங்க. வரலாறு கிதாபை எடுத்து பாருங்க. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை பார்த்து நல்லா இருக்கீங்களா என கேட்டப, ஒரு ஸஹாபியாவது ரசூலுல்லாஹ் உங்கள் துஆ பரக்கத்துல நல்லா இருக்கேன் என சொல்ல வந்ததை பார்க்கலாமா இருக்கா? அல்லாஹ்வுடைய அருளால் அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வை தான் புகழ்ந்தார்கள் தவிர வேறு யாரை எப்படி புகழ முடியும்? அல்லாஹ் ஒருவன் தான் புகழுக்கு தகுதியானவன். சரி விஷயத்துக்கு வாங்க. அப்போ ஸஹாபாக்கள் எதை கேட்டார்கள் நீங்களுமா ரசூலுல்லாஹ்? என கேட்டார்கள்.
5673 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ المَوْتَ: إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ
புகாரி 5673, 6463, 6467 அல்லாஹு அக்பர். ரசூலுல்லாஹுடைய அமல் எப்பேர்பட்ட அமல். ரமலான் வரப்போகுது.
2106 - أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
ரசூலுல்லாஹ் எப்படி அமல் செய்வாங்க தெரியுமா ரமலான்ல? சுபஹானல்லாஹ்! ரமலான் வருவதற்கு முன்னாடியே ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் மக்களே தயார்படுத்த ஆரம்பிச்சுடுவாங்க. ரமலான் வரப்போகிறது. பரக்கத்தான மாதம் வரப்போகிறது பரக்கத்தான மாதம் என்றால்? சமோசா திங்குற மாசம் இல்ல. கஞ்சி குடிக்கிற மாசம் இல்ல. 3 வேளைக்கும் பதிலாக 4 வேளை 6 வேலை சாப்பிடற மாதம் இல்லை. எது பரக்கத்? அமல். எது பரக்கத்? அமல் பரக்கத். நம்முடைய அமலில் பரக்கத் இருக்கிறது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயி, எண் : 2106
சாப்பிடுவதில் பரக்கத் இல்லை. இபாதத்தில் தொழுகையில் பரக்கத் இருக்கு. குர்ஆன் ஓதுவதை பரக்கத் இருக்கு. அல்லாஹ்வுடைய திக்ரில் பரக்கத் இருக்கு. சொல்லுவாங்க நபி ஸல் அவர்கள். ரமலான் வரப்போகிறது. சொர்க்கத்துடைய வாசல்கள் திறக்கப்பட போகின்றன. சுவர்க்கம் உங்களுக்காக அலங்கரிக்கப்பட போகிறது. நரகத்தின் வாசல்களை அல்லாஹ் பூட்டப் போகிறான். உங்களுக்காக ஷைத்தான்களை அல்லாஹ் விளங்கிட போகிறான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயி, எண் : 2106
682 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ [ص:58] مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ " وَفِي البَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَابْنِ مَسْعُودٍ، وَسَلْمَانَ
ஓ நல்லதே விரும்பக் கூடியவர்களே! வாருங்கள் வாருங்கள் வாருங்கள் வாருங்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 682
நம்ம ஆள் இருக்கானே. ரொம்ப உஷார் பார்ட்டி. யாரு நம்ம ஆளு நம்ம ஆளுன்னா யாரு? வேஷம் போடுறது. எப்படி இந்த நாடகங்களுக்கு வேஷம் போடுவாங்க பார்த்தீர்களா. அந்த மாதிரி வேஷம். எப்படின்னா முதல் வேஷம். ஒரு கூட்டம் கரெக்டா வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு வந்துருவாங்க.
வெள்ளிக்கிழமை நல்ல கவனிச்சுக்க. அல்லாஹ்விடத்தில் சாட்சியாக்கிறேன். யா அல்லாஹ் நான் வந்தேன் இந்த மக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் சொல்லி தந்த செய்தியை நான் சொல்லிட்டேன். இவங்க கிட்ட நீங்க கேட்டுக்கோங்க அல்லாஹ் கிட்ட சொல்லிடுவேன்.
சரியா? வெள்ளிக்கிழமை வந்த உடனே பள்ளிவாசலுக்கு வந்துருவாரு. எந்த தொழுகைக்கு வந்துருவாரு? ஜும்மா தொழுகைக்கு வந்துருவாரு. இப்போ நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். ஒரு முஸ்லிம் சுபுஹு தொழுகல. புரிஞ்சுக்கோங்க நீங்க சிந்திக்கணும். உங்க குடும்பத்துல எத்தனை பேர் இருக்காங்க இந்த மாதிரி?
நீங்க யோசிக்கணும். அவர்களை இன்று இரவே நீங்க கேள்வி கேட்கணும். இங்கிருந்து நேரா நீங்க உங்க வீட்டுக்கு போக கூடாது. உங்களுடைய உறவுகள் வீட்டிற்கு போகணும். இந்த மாதிரி உஸ்தாது சொன்னாங்க. என்ன சொல்றீங்க நீங்க எனக்கு கேட்கணும். அப்போதான் இந்த பயானை நீங்கள் கேட்டீங்க இல்லன்னா தேவையே இல்லைன்னு இதோட முடிச்சுட்டு போயிட்டே இருக்கலாம்.
சுபுஹு தொழுகல. வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு வந்தவர் சொல்லுங்க சுபுஹு தொழுகைல. ஜும்மா தொழுதிட்டாரு. அன்றைக்கு அசருக்கும் வர மாட்டாரு வரல. இப்படி ஒரு தொழுகையை ரசூலுல்லாஹ் ஸல் கற்றுக் கொடுத்தாங்களா கற்றுக் கொடுத்ததாக நீங்க எனக்கு குர்ஆனில் இருந்து ஹதீஸிலிருந்து காட்டுங்க. ஒரு முஸ்லிம் சுபுஹு தொழுகை. அசுரும் தொழுக மாட்டார் மகரித் தொழுகை மாட்டார். வாரத்தில் ஒரு நாள் ஜும்மா வந்து தொழுதுட்டு போயிருவாரு.
இவருடைய ஜும்மா தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகத்தில் எந்த மத்ஹபை சேர்ந்தவராக இருக்கக்கூடும். எந்த சேர்ந்தவராக இருக்கக்கூடும் ஜாயிஸ்னு ஒரு ஃபத்வா கொடுத்ததாக கொண்டு வாங்க. சுபுஹு தொழுகைல. அசரும் தொழுக மாட்டாரு. ஜும்ஆ மட்டும் வந்த தொழுதுட்டு போவாரு. இவருடைய தொழுகை மக்பூல் அப்படின்னு சொல்லுங்க பாக்கலாம். அப்படி ஒரு தொழுகை குர்ஆனில் இருக்கா ஹதீஸ்ல இருக்கா இருக்கா? இஸ்லாமில் இல்லை. எங்கே இல்லை? இஸ்லாமில் இல்லை.
ஜும்ஆ தொழுகை யாருக்கு? ஜும்ஆ தொழுகை யாருக? யாரு சுபுஹு தொழுதாரோ அவனுக்கு ஜும்ஆ தொழுகை. யார் அசர் தொழுகை போறானோ அவனுக்கு ஜும்ஆ தொழுகை. எதையுமே தொழுகாதவனுக்கு ஜும்ஆ தொழுகை எங்கிருந்து வந்தது? எங்கே இருந்து வந்தது? அடுத்து வேஷம் பெருநாள் வந்துரும்.
அப்போ ஒரு கூட்டம். வருஷத்துல பள்ளிவாசலை எட்டி பார்க்கவே இல்லை. இப்படி எட்டிப் பார்த்தால்தான் ஜும்ஆவிற்கு மட்டுமே எட்டிப் பார்த்தாரு, ரமலான்ல 5 வேளை தொழுகையில் எதையுமே தொழுகல. இவருக்கு பெருநாள் தொழுகை எங்கே இருக்கும் சொல்லுங்க பார்க்கலாம்? யாருக்கு பெருநாள் தொழுகை? யாருக்கு ஈகை தொழுகை? யார் ரமலான்ல நோன்பு வச்சாரோ, யாரு ரமலானில் 5 வேளை தொழுகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை. இல்லையா?
அப்படி இல்லாத ஒரு பெருநாள் தொழுகையை இஸ்லாம் ல இருக்குதுன்னு நீங்க நிரூபிங்க பார்க்கலாம். பெருநாள் தொழுகை இரண்டு 1 வாஜிப், 2 சுன்னா முஅக்கரா. ஆனா கருத்து இரண்டிற்கு ஒன்றுதான். வார்த்தைதான் வேற வேற. வாஜிப் சுன்னா முஅக்கரா. ஃபஜ்ர் தொழுகை என்ன? சுன்னத்தா? வாஜிபா? ஃபர்ளு அய்ன். ஃபஜர் தொழுகை ஃபர்ளு அய்ன். ஃபஜர் தொழுகைக்கு வரல ஃபர்ளு அய்ன விட்டுட்டாரு. சுன்னா முஅக்கராவிற்கு வந்து உட்கார்ந்து இருக்காரு. சொல்லுங்க பார்க்கலாம்?
யாரை ஏமாத்துறார் இவரு? தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார். யாரை ஏமாற்றிக் கொள்கிறார்? தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார். சகோதரர்களே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்எப்படி அமல் செய்வாங்க? ரமலான் வந்துட்டா அவ்வளவுதான்.
பகலில் நோன்பு வைப்பது, குர்ஆன் ஓதுவது, இராத்திரியில் தொழுகையில் ஈடுபடுவது. கொஞ்ச நேரம் தூங்குவாங்க. அல்லாஹ்வோட கட்டளைக்காக தூங்குவாங்க. அப்படியே கடைசி 10 வந்துவிட்டால் வீட்டில் ஒருத்தரையும் தூங்க விடமாட்டாங்க. வீட்டில் ஒருத்தரை தூங்க விட மாட்டாங்க. தானும் மனைவியின் பக்கம் போக மாட்டாங்க. கிட்டயே நெருங்க மாட்டாங்க. வீட்டை விட்டுட்டு பள்ளிவாசலுக்கு ஓடி வந்துருவாங்க.
இஃதிக்காஃப்ல இருந்துருவாங்க. லைலத்துல் கதிரை தேடுவாங்க. ரமலானுடைய கடைசி 10 ஆயிஷா ரலி சொல்கிறார்கள், ரமலானுடைய கடைசி பத்து வந்துட்டால் முழு இரவையும் ரசூல் ஸல் அவர்கள்ஜ உயிர்ப்பித்து விடுவார்கள்.
2024 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَه
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி , முஸ்லிம், எண் : 2024, 1975
தொழுவாங்க தொழுவாங்க தொழுவாங்க தொழுதுட்டே இருப்பாங்க. அல்லாஹ்விடத்திலே துஆ செய்து கொண்டே இருப்பார்கள். குர்ஆனை ஓதுவாங்க ஓதுவாங்க ஓதுவாங்க. சஹாபாக்களுக்கு தொழுக வைப்பாங்க. ஸஹர் செய்வதற்கு டைம் கிடைகாது. அவங்க ஸஹர் என்ன? ஒரு லிட்டர் பால், 3- 4 பேரிச்சம்பழம் அவ்வளவுதான் அவங்க ஸஹர். சகோதரர்களை எதற்கு சொல்ல வரேன் என்றால்
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5673, 6463, 6467
அப்போ ஸஹாபாக்கள் கேட்டாங்க ரசூலுல்லாஹ் ஸல் அவர்களிடத்திலே அல்லாஹ்வுடைய தூதரே அமலால் சொர்க்கம் செல்ல முடியாதுஎன சொன்னால் நீங்களுமா? என்று கேட்டார்கள். அப்போ சொன்னாங்க நானும். அல்லாஹ் தன்னுடைய கருணையால் என்னை போர்த்திக் கொண்டாலே தவிர. அவனுடைய அன்பால் கருணையால் என்னை அணைத்துக் கொண்டாலே தவிர.
மாணவர்களே, அல்லாஹ்வுடைய அடியார்களே, சகோதரர்களே, தாய்மார்களே, ரமலான் வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில தினங்கள் தான் இப்போ ஏன் நம்ம அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்யணும்? நான் சொன்னேன் பாருங்க அல்லாஹ் நம்ம மேல கருணையாளன். ஏன் அத சொன்னேன் தெரியுமா? அல்லாஹுத்தஆலா நம்மை மன்னித்து நம்மை சுத்தப்படுத்தி நம்மை சொர்க்கத்திற்குரியவர்களாக அவனுடைய மன்னிப்பிற்கு அன்பிற்குரியவர்களாக ஆக்குவதற்காக அல்லாஹ் தொழுகையை கொடுத்தான். நோன்பை கொடுத்தான்.
இந்த ரமலானை கொடுத்தான். ரமலான் எதற்கு பள்ளிவாசல் டெக்கரேஷன் பண்றதுக்கு கிடையாது. பள்ளிவாசலை டெக்கரேஷன் பண்றதுக்கு கிடையாது. கஞ்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக கிடையாது. ரமலான் எதற்கு? பெருநாளைக்கு வேண்டி சொல்லி டிரஸ் வாங்குவதற்காக கிடையாது. கடை தெருவில் கடை போடுவதற்காக வேண்டி கிடையாது. ரமலான் எதற்கு? பகலிலே நோன்பு வைப்பதற்கு இரவிலே இபாதத் செய்வதற்கு ரமலான் எதற்கு?
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது - உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று. (அல்குர்ஆன் 2 : 183)
உங்களிடத்திலே தக்வா வருவதற்காக இந்த நோன்பை கடமையாக்குகிறேன் என அல்லாஹ் சொல்ற். எதற்காக வேண்டி? என்ன வரணும்? தக்வா எங்க வரணும் இந்த கல்பில் வரணும் பயம் வரணும் ஷிர்க்கு அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் அதை விட்டு விலகுதல் முதல் தக்வா. எதை விட்டு விலகனும்? எதை விட்டு? ஷிர்க்கு இணை வைத்தல் பயப்படணும். இப்ராஹிம் நபி துஆ செய்தார்கள்:
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ
அந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு நடுவரையும், அவளின் உறவினரில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் (கணவன் மனைவி இருவருக்குமிடையில் இணக்கம் ஏற்படுத்தி சேர்த்துவைத்து சீர்திருத்தம் செய்வதை) நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் (நடுவர்களின் பேச்சின் மூலம்) அல்லாஹ் ஒற்றுமையை(யும் இணக்கத்தையும்) ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 35)
இறைவா என்னை எனது பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரமாக்கு பாதுகாப்பு என சொல்லி. இன்னைக்கு பாதி முஸ்லிம்களை பார்த்தால் தர்கா என்னும் கோயிலை போய் இருக்காங்க. தர்கா என்றால் என்ன? தமிழில் கோயில். ஃபார்ஸில சொன்னா என்ன? தர்கா. அங்கே உட்கார வச்சிருக்காங்க, நிக்க வச்சுருக்காங்க. இங்க படுக்க வச்சிருக்காங்க. அல்லாஹுத்தஆலா சொல்கிறான் மஸ்ஜிதை செழிப்பாக்குங்கள்.
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ
(அந்த விளக்கு) இறை இல்லங்களில் எரிக்கப்படுகிறது. அவை உயர்த்தி கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமினான ஆண்கள்) அவனை துதித்து தொழுகிறார்கள். (அல்குர்ஆன் 24 : 36)
மஸ்ஜிதுகள் உயர்வாக கட்டப்பட வேண்டும் என அல்லாஹ் சொல்கிறான். மஸ்ஜிதுகளில் திகிரு நடக்கணும் என அல்லாஹ் சொல்கிறான். இவன் தர்காவில் கப்ரை உயரமாக கட்டிட்டு உட்கார்ந்திருக்கான். அங்கே போய் திக்கு செய்துட்டு இருக்கான். அல்லாஹ்வுடைய பள்ளிக்கு வா நிம்மதிய தருகிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான். இவன் சொல்றான் தர்காவிற்கு போன தான் நிம்மதி கிடைக்குமா. அல்லாஹ் சொல்கிறான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
நம்பிக்கையாளர்களே! பொறுமை இன்னும் தொழுகையின் மூலம் உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2 : 153)
என்னிடத்திலே கேள் பொறுமையாக இரு நான் உனக்கு தருகிறேன் என்று சொல்கிறான். அவன் சொல்கிறான் அவ்லியா எனக்கு தருவான் என சொல்கிறான். அல்லாஹ் சொல்றான்:
وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُ
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (முதலில் வெளிப்படையாக) நம்பிக்கை கொண்டனர், (ஆனால்) பிறகு, (உள்ளுக்குள்) நிராகரித்தனர். ஆகவே, அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரை இடப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (தங்களுக்குரிய சீர்திருத்தத்தை, நன்மையை) புரிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 65 : 3)
அல்லாஹ்வை நம்பு அல்லாஹ் உனக்கு போதுமானவன்.
أَلَيْسَ ٱللَّهُ بِكَافٍ عَبْدَهُ
அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (-அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகிறார்கள். யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. (அல்குர்ஆன் 39 : 36)
என்னுடைய அடியானுக்கு நான் போதுமானவனாக இல்லையா?
أَلَّا تَتَّخِذُوا۟ مِن دُونِى وَكِيلًا
இன்னும், மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். மேலும், “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்கள் தேவைகளுக்கு நீங்கள் பிரார்த்திக்கின்ற) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டக் கூடியதாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம். (அல்குர்ஆன் 17 : 2)
என்னை தவிர வேர யாரையும் நீங்கள் பொறுப்பாளர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள் என்கிறான்.
وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (எதுவும்) எங்களுக்கு அறவே ஏற்படாது. அவன்தான் எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)க்கவும். (அல்குர்ஆன் 9 : 51)
நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால் என்னை மட்டும் நம்புங்கள் என சொல்றான். இவன் சொல்றான் அல்லாஹ் ஒன்னும் செய்ய முடியாது. அல்லாஹ் லேட்டா செய்வான். அவ்லியா சீக்கிரமா செய்துடுவாருங்கிறான். அவ்லியா சீக்கிரமா செய்வார்களாம். அல்லாஹ் லேட்டா அனுப்புவானாம். அவ்லியா சீக்கிரமா அனுப்புவானாம்.
எந்த அவ்லியாவுக்கும் அல்லாஹ் அந்த சக்திய கொடுத்தான்? எந்த ஷேக்குக்கு அல்லாஹ் அந்த சக்தியை கொடுத்தான்? சகோதரர்களே! தக்வா நம்ம நினைச்சுட்டோம் தக்வானா. பெரிய தலப்பாக கட்டிகிட்டா தக்வானு சொல்லி. தக்வா அதுவா? ஷிர்க்கில் இருந்து விலகி இருக்க வேண்டும். குஃப்ரிலிருந்து விலக வேண்டும். பித்அத்திலிருந்து விலக வேண்டும். அமல்களை செய்ய வேண்டும்.
என்ன செய்யணும்? அமல் அமல் அமல். 5 நேர தொழுக. குர்ஆன் ஓதுவது. திக்ரு செய்வது இஸ்திக்ஃபார் செய்வது. ஸதகா செய்வது. அண்டை வீட்டாருக்கு உணவு கொடுப்பது. ஏழைக்கு உணவு கொடுப்பது. யதீம்களுக்கு உணவு கொடுப்பது. எல்லா மக்களுக்கும் நல்லது செய்வது. இது தக்வா. அல்லாஹ்வுடைய தீனை அல்லாஹ் சொன்னது போல வாழ்க்கையில கொண்டுவருவது தக்வா.
நம்மால் இருக்கானே அவனுக்கு இஷ்டமானது எல்லாம் வச்சுக்குவான். வலீமா கொடுக்கணும். அது தெரியும் குர்பானி. அது தெரியும். இது வயிற்றுக்கு தேவையானது எல்லாம் தீன்ல வச்சுப்பான். புரியுதா உங்களுக்கு? எதுல கஷ்டப்பட்டு அமலில் வரணுமோ.. அஸ்தஃபிருல்லாஹ். அன்பானவர்களே! நேரம் குறைவா இருக்கு ஷேக் அடித்து பேசணும் புரிந்து கொள்ளுங்கள். இந்த துன்யாவில் நாம அமல் செய்வதற்கு வந்திருக்கோம். ஆகிரத்துல இன்ஷா அல்லாஹ்!
وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِىٓ أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
“நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.” (அல்குர்ஆன் 41 : 31)
அங்க நமக்கு அல்லாஹ் கொடுக்க இருக்கிறான். அந்த அமலுக்கான ஒரு மாசமா அல்லாஹ் கொடுத்திருக்கிறான். இப்போ இருந்தே இன்ஷா அல்லாஹ் ரெடி ஆகுவோம். அல்லாஹ்விடத்திலே தவ்பா செய்வோம். இஸ்திகஃபார் செய்வோம். நம்ம மக்கள் முஃமின்கள் எல்லாருக்கும் சொல்லி இந்த ரமளானல இருந்து அதற்கான உழைப்பை செய்து மக்களை மஸ்ஜிதுகளோடு இணைத்து, குர்ஆனோடு இணைத்து, ஹதீஸ்களோடு இணைத்து, ஈமானோடு அமலோடு இணைத்து,
ஒரு சமுதாயத்தை சுத்தமாக உருவாக்குவோம். அல்லாஹ் கண்டிப்பா நமக்கு வெற்றியை கொடுப்பான். அல்லாஹ் சுப்ஹானவதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய ஈமானை, யகீமை, இக்லாஸை, தக்வாவை தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்பு 1)
صحيح مسلم (1/ 451)
252 - (651) حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَعْمَشُ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، وَاللَّفْظُ لَهُمَا، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ، وَصَلَاةُ الْفَجْرِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ، فَتُقَامَ، ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ، ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/