HOME      Lecture      கிலாஃபத் - ஆட்சி அமைத்தல் இஸ்லாமின் பார்வையில் | Tamil Bayan - 707   
 

கிலாஃபத் - ஆட்சி அமைத்தல் இஸ்லாமின் பார்வையில் | Tamil Bayan - 707

           

கிலாஃபத் - ஆட்சி அமைத்தல் இஸ்லாமின் பார்வையில் | Tamil Bayan - 707


கிலாபத்  ஆட்சி அமைத்தல் இஸ்லாமின் பார்வையில்

தலைப்பு : கிலாபத்  ஆட்சி அமைத்தல் இஸ்லாமின் பார்வையில்

வரிசை : 707

இடம் : ஹைடெக் மஹால் இராயப்பேட்டை

உரை  : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : -20-03-2022 | 17-08-1443

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்களே! அன்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வுடைய அருளால் முக்கியமான ஒரு சட்டத்தை குறித்து தெளிவு பெறுவதற்காக இந்த இடத்திலே நாம் எல்லாம் ஒன்று கூடி இருக்கின்றோம்.

அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தில் அல்லாஹு தஆலா நேர்வழிக்கு ஒரு நிபந்தனை வைத்திருக்கின்றான், நேர்வழி பெறுவதற்கு ஒரு நிபந்தனையை அல்லாஹு தஆலா வைத்திருக்கின்றான்.  உங்களுக்கு எந்த ஒரு விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டாலும், எது குறித்து உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டாலும், தடுமாற்றம் ஏற்பட்டாலும், உங்களுக்கு அது விஷயத்திலே தெளிவான மார்க்க சட்டம் வேண்டும் என்றாள் அல்லாஹு தஆலா கூறுகின்றான்:

قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ

(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் விலகிச் சென்றால் அவர் மீது கடமையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதுதான் (-மார்க்கத்தை எடுத்துச் சொல்வதுதான்). (அல்குர்ஆன் 24 : 54)

உங்கள் மீது கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்டதுதான் (-தூதருக்கு கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்). இன்னும், நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர் வழிப் பெறுவீர்கள். இன்னும், தூதர் மீது கடமை இல்லை, (மார்க்கத்தை) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர. (அல்குர்ஆன் 24 : 54)

சூரா நூருடைய வசனம். நீங்கள் இந்த நபிக்கு கட்டுப்பட்டால், கீழ் படிந்து நடந்தால், நீங்கள் இந்த நபிக்கு கீழ் படிந்து நடந்தால்,  அவனை நீங்கள் பின்பற்றி விட்டால், நீங்கள் நேர்வழி பெற்று விடுவீர்கள். எவ்வளவு அழகான ஒரு தீர்வை அல்லாஹ் சொல்லுகின்றான்.

என் சகோதர சகோதரிகளே! உலகத்திலே எங்கெல்லாம் இயக்கங்கள் அமைப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றனவோ, அந்த இயக்கங்கள் அமைப்புகள் அவர்களுடைய அடிப்படைகளை நாம் முதலாவதாக பார்க்க வேண்டும்.

அதாவது எனக்கு இஸ்லாம் வேண்டும் என்று யார் கொள்கையில் இருப்பாரோ,எனக்கு சொர்க்கம் வேண்டும்,நான் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும்,அல்லாஹ்வுடைய பொருத்தம் எனக்கு வேண்டும். நான் நாளை மறுமையிலே அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும் பொழுது, அல்லாஹ் என்னை  பொருந்தி கொள்ள வேண்டும்.

என்ற அந்த தூய மன நோக்கம்,அந்த தூய எண்ணத்தோடு யார் இருப்பார்களோ, அவர்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அல்லாஹ்விற்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற பயம்,இவர்களுக்கு கண்டிப்பாக அல்லாஹு தஆலா ஒரு நேர்வழி வைத்திருக்கின்றான், அவர்களுக்கு அல்லாஹு தஆலா கண்டிப்பாக ஒரு நேர் வழியை காட்டுவான். அவர்களை நேர் வழியிலே நடத்துவான்.

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَاقَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

இன்னும், மூஸா தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் மக்களே! எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்? நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்பதை திட்டமாக நீங்கள் அறிவீர்கள்.” அவர்கள் (நேர்வழியில் இருந்து) விலகி வழிகேட்டில் சென்றபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை (நேர்வழியில் இருந்து) திருப்பி வழிகேட்டில் விட்டுவிட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் 61: 5)

யார் தங்களுடைய உள்ளங்களை கோணலாக்கிக் கொண்டார்களோ, யார் கோணலான வழியிலே சென்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களையும் கோணலாக்கி விடுவான்.

இந்த இயக்கங்கள், அமைப்புகள், இவர்களுடைய சட்டங்கள், அந்த இயக்கத்துடைய அடிப்படைகளை,  எங்கேயாவது எடுத்துப் பார்த்தால், அதை உருவாக்கியவர்கள், ஆரம்பித்தவர்கள் உடைய சிந்தனைகள், அவர்களுடைய சிந்தனை உள்ளத்தில் உதித்த அந்த அடிப்படைகளாக எழுதி வைத்திருப்பார்கள்.

அதில் எங்கேயாவது ஒரு இடத்திலே, இது விஷயத்திலே நமக்கு இடையிலே கருத்து வேற்றுமை ஏற்பட்டால், குர்ஆனும் ஹதீஸும் தீர்ப்பளிக்கும்.இந்த விஷயத்திலே எங்கேயாவது நமக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டால், குர்ஆனும் ஹதீஸும்  முடிவு செய்யும். காட்ட முடியுமா? ஹிஸ்னு தஹ்ரீம் இயக்கமாக இருக்கட்டும்.

அல்இக்வானு முஸ்லிம் உடைய இயக்கமாக இருக்கட்டும், அல்லது Maududi உடைய இயக்கமாக இருக்கட்டும். எந்த இயக்கத்திலாவது  நம்முடைய அடிப்படை. நம்முடைய அடிப்படை, நம்முடைய அடிப்படை இத்ததுல் ரசூல் என்று ஒரு எழுத்து எழுதப்பட்டிருக்குமா?

இகாமதுத்தீன் என்று சொல்வார்கள், இங்கே தீன் என்றால் என்ன?  என்று அவர்களிடத்திலே கேட்டால், அவர்கள் சில குறிகளை எழுதி வைத்திருப்பார்கள். மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், பிரிந்து விடாதீர்கள், மார்க்கத்தை நிலை நிறுத்த வாருங்கள், பிரிந்து விடாதீர்கள் என்று சொல்வார்கள்.

எந்த மார்க்கத்தை நிலை நிறுத்த விரும்புகின்றீர்கள்? யாரை பிரிந்து போனவர்கள் என்று சொல்கின்றீர்கள்?  ஒற்றுமையாக இருப்பவர்கள் யார்? கூட்டமாக பிரிவாக பிரிந்து சென்றவர்கள் யார்?  தங்களுடைய அந்த ஸ்தாபத் தலைவரை ஏற்றுக் கொண்டால் எல்லோரும் பிரிந்து செல்வது.

நீங்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற சொல்லியிருந்தாலும் சரி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்., Shahada வை சொன்னவர்கள், தொழுகையை நிலை நிறுத்தக்கூடிய முஸ்லிம்கள், இவர்கள் எல்லோருமே. நல்லா கவனிங்க. யாரெல்லாம் அவர்களுடைய இயக்கத்தில் சேரவில்லையோ! அவர்கள் எல்லோருமே பிரிந்து போனவர்கள்.

நீங்கள் பிரிந்து போய் நாலு பேர் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டு அந்த நாலு பேருக்கு பின்னால் உம்மத்தை வர சொல்கின்றீர்களே? பிரிவின் பக்கம் அழைக்கின்றீர்களா? தீனின் பக்கம் அழைக்கின்றீர்களா?

சகோதரர்களே! இதை ஆரம்பத்திலே தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நமக்கு தெளிவை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸிலிருந்து சுன்னாவில் இருந்து தான் பெற முடியும்.அது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சொல் சார்ந்த சுன்னாவாக இருக்கட்டும். அவர்களுடைய செயல் சார்ந்த சுன்னாவாக இருக்கட்டும். அவர்களுடைய தக்ரீர் என்ற அங்கீகரமான சுன்னாவாக இருக்கட்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார். நுபுவ்வத் நபித்துவத்தினுடைய நோக்கம் என்ன? நபித்துவத்தினுடைய நோக்கம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா விசாலத்தை கொடுத்தான்.

அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்களுடைய வரலாறுகளை திரும்பத் திரும்பத் திரும்ப அல்லாஹு தஆலா இந்த குர்ஆனிலே இறக்கி அருளினாலே, அந்த நபிமார்களை,

وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ  وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ  وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ  وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ  ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ  أُولَئِكَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَإِنْ يَكْفُرْ بِهَا هَؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَيْسُوا بِهَا بِكَافِرِينَ أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ هُوَ إِلَّا ذِكْرَى لِلْعَالَمِينَ

இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி நடத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி நடத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம். (அல்குர்ஆன் 6 : 84)

இன்னும், ஸகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரும் நல்லோரில் உள்ளவர்களே. (அல்குர்ஆன் 6 : 85)

இன்னும், இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரையும் அகிலத்தார்களை விட மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன் 6 : 86)

இன்னும், இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (நாம் விரும்பிய பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை (நபித்துவத்திற்காக) தேர்ந்தெடுத்தோம். இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம். (அல்குர்ஆன் 6 : 87)

இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி நடத்துகிறான். இன்னும், அவர்கள் (-மேற்கூறப்பட்ட நபிமார்கள்) இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6 : 88)

இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்தால் அவற்றை நிராகரிப்பவர்களாக இருக்காத ஒரு சமுதாயத்தை (நாம் கொண்டுவருவோம். அவர்களை) அவற்றுக்கு பொறுப்பாளர்களாக ஆக்கி விடுவோம். (அல்குர்ஆன் 6 : 89)

(நபியே!) அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை நேர்வழி நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே - அதையே நீர் பின்பற்றுவீராக. “இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். இ(ந்த வேதமான)து இல்லை, அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே தவிர’’ என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 6 : 90)

நபியே! இதோ இப்ராஹிம் மை பாருங்கள். இதோ இஸ்மாயில் பாருங்கள்,இஸ்ஹாக்கை பாருங்கள்,யாகூபை பாருங்கள். யூசுப்பை பாருங்கள். யூனுஸை பாருங்கள். தாவுதை பாருங்கள்,சுலைமானை பாருங்கள். அல்யஸஃஉ வை பாருங்கள்,துல்கிஃப்லுவை பாருங்கள்,அய்யூபை பாருங்கள் என்று நபிமார்களின் ஒரு பெரிய பட்டியலை அல்லாஹு தஆலா சொல்லிக் கொண்டு வந்து.

இவர்களை அல்லாஹு தஆலா நேர் வழி படுத்தினான்,இவர்களை அல்லாஹு தஆலா நேர்வழியில் நடத்தினான்,எனவே நபியே! அவர்களுடைய நேர்வழியை நீங்கள்  பின்பற்றுவீராக! 

புரிகிறதா?  அல்லாஹு தஆலா நபிமார்களுடைய பட்டியலை சொல்லிக் கொண்டு வந்து, சூரத்துல் லஹபுடைய வசனம். இந்த நபிமார்களுடைய ஹிதாயதை.  நபியே! நீங்கள் இவர்களை நேரில் வழியில் தான். இவர்களுடைய நேர்வழியை நீங்கள் பின்பற்றுங்கள்.

என்ன நேர்வழி? நபிமார்களுடைய வரலாறுகள். எந்தெந்த சூராக்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன? எடுத்துப் பாருங்கள்,முதலாவதாக சூரத்துல் அஃராஃபில் இருந்து ஆரம்பித்து.

பிறகு யூனுஸ், பிறகு ஹூத், பிறகு கஸஸ் பிறகு அன்பியா, பிறகு சூரத்து ஷுஃரா இப்படியாக விரிவாக, சுருக்கமாக, சொல்லப்பட்ட இந்த சூராக்கள் எல்லாம், நீங்கள் ஒரு முறை படித்துப் பாருங்கள். இங்குஇடையிலே ஒரு விஷயத்தை சொல்கிறேன், தயவுசெய்து, தயவுசெய்து. இந்த காது இருக்கிறதல்லவா? அல்லாஹு தஆலா சொல்கின்றான்:

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

இன்னும், உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதே! (அதைச் செய்யாதே). நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை எல்லாம் அவற்றைப் பற்றி விசாரிக்கப்படுபவையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 1736)

உங்களுடைய செவி, உங்களுடைய அறிவு, உங்களுடைய பார்வை, இது குறித்து மறுமையிலே விசாரணை கேள்வி கேட்கப்படும், யார் பேசினாலும் நாம் கேட்கலாம் என்று எண்ணி விடாதீர்கள் வீணான பேச்சுக்கள் பேசினால் ஓடி விலக வேண்டும் என்று அல்லாஹ் சொல்லுகின்றான்:

وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை கேலி செய்வதில்) மூழ்குபவர்களைக் கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவு வந்த பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர். (அல்குர்ஆன் 668)

நபியே! யார் நம்முடைய வசனங்களில் மூழ்கி அதிலே விளையாடுகின்றார்களோ,  குதர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களோட சபையிலே நீங்கள் அமராதீர்கள். அவர்கள் வேறு பேச்சை ஆரம்பிக்கின்ற வரை அந்த  இடத்திலே நீங்கள் இருக்காதீர்கள் அப்படி இருந்தால், நீங்களும் அவர்களைப் போல் ஆகி விடுவீர்கள்.

ஒரு வழிகெட்ட கூட்டம்,வழி கேட்டை பற்றி பேசுகின்றார்கள். ஏன் வழி கெட்ட கூட்டம்?  நல்லா கவனியுங்கள், நன்றாக கவனியுங்கள்! சில விஷயங்களை  பிடித்துக் கொள்ளும் மைண்டுக்கு இந்த தனியாக, ரகசியமாக ஒருவர் மீட்டிங் போட்டால், முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரு வழிகெட்ட கூட்டத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

எப்படி? தனியா ரகசியமாக வாருங்கள். நாம் தனியாக கூடி உட்கார்ந்து பேசுவோம் நாம் அமர்ந்து கூடி தனியாக பேசுவோம் என்று. அட அறிவாளிகளா! மார்க்கத்திலே தனியாக பேசுவதற்கு என்ன இருக்கிறது? மனைவி இடத்திலே சேர்வதை தவிர வேறு எதுவும் கிடையாது.

முடிந்துவிட்டது அதுதான் நீ தனியாக மறைவாக செய்ய வேண்டியது. அல்லது டூ பாத்ரூம் ஒன் பாத்ரூம் போறதாக இருந்தால். இதைத் தவிர தீனிலே இருக்கிறதா? எனக்கு  தெரியாது.

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ

ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்படுவதை மிகத் தெளிவாக பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக. (அல்குர்ஆன் 1594)

நபியே! உங்களுக்கு ஏவப்பட்டதை போட்டு உடையுங்கள் என்கின்றான் அல்லாஹ். நபியே! உங்களுக்கு ஏவப்பட்ட மார்க்கத்தை தெளிவாக நீங்கள் எடுத்து விளக்கி விடுங்கள்.

هَذَا بَلَاغٌ لِلنَّاسِ وَلِيُنْذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ

இ(வ்வேதமான)து, மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; இன்னும், அவன்தான் வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; இன்னும், நிறைவான அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு அவன் இறக்கினான்). (அல்குர்ஆன் 1452)

இது மக்களுக்கு பகிரமாகமாக சொல்லப்படவேண்டிய மார்க்கம்இதன் மூலமாக மக்கள் எச்சரிக்கப்படுவதற்காக இறக்கப்பட்ட மார்க்கம்மே தவிர, மூன்று நான்கு பேர் தனியாக அமர்ந்து மீட்டிங் போடுவதற்கு இது தாருந்நத்வா இல்லை.

தாருந்நத்வா என்றால் தெரியுமா? அதிகபட்சம் உங்களுக்கு தெரியும். தாருந்நத்வா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொள்வதற்காக குரைஷிகள் போட்ட ஒரு மீட்டிங்.

சகோதரர்களே! சத்தியம் என்பது, அது தெளிவானது,  அது பகிரங்கமானது,அதிலே ஒளிவு மறைவு கிடையாது. விஷயத்திற்கு வரலாம். இந்தக் காதை பாதுகாக்க வேண்டும். இந்த காதை யாருக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்று. அதற்குத்தான் சொன்னேன், தனியாக கூட்டம் போட்டால் புரிந்து கொள்ளுங்கள்.

தனியாக கூட்டம் போட்டால் புரிந்து கொள்ளுங்கள். விஷயத்திற்கு வருவோம். இடையிலே இன்னொரு விஷயத்தை சொல்கின்றேன். இங்க என்ன பிரச்சனை?  நாம் சத்தியத்தை சொல்வோம். உண்மையை சொல்வோம். ஆதாரத்துடன் ஹதீஸ் கிதாபிலே சொல்வோம். சந்தேகத்திலேயே இருப்போம், நம்ப மாட்டார்கள்.

அவர்களுக்கு திருப்தி ஏற்படாது ஆனால், இதே வழிகெட்ட கூட்டம் திருச்சி  சொல்வார்கள்,  மறைத்து சொல்வார்கள். பாதியை சொல்வார்கள். பாதியை விட்டு விடுவார்கள். கித்தாபுலே இல்லாததை சொல்வார்கள். ஆதாரமே இருக்காது. ஆதாரத்தை சேர்த்து பிணைந்து சொல்வார்கள். அப்படியே கேட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.

அப்படியே கேட்டுவிட்டு வந்து விடுவார்கள். அந்த மஜ்லிஸில் யாரும் உங்கள் ஆதாரத்தை காட்டுங்கள். உங்கள் புத்தகத்தை எடுத்து படித்துக் காட்டுங்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

புரிகிறதா உங்களுக்கு?  இன்றைக்கு தமிழ்நாட்டில் பரவி இருக்கக்கூடிய வழிகேடர்களில் முக்கியமாக இந்த பிஜேபி சார்ந்த கூட்டமாக இருக்கட்டும், அல்லது, இக்வானி சார்ந்த கூட்டமா இருக்கட்டும்,  அல்லது, இப்பொழுது வேகமாக மக்களை வழி கெடுத்தும் அந்த கொள்கையை பரப்பிக் கொண்டிருக்க கூடிய இந்த ஹிஸ்புத் தஹ்ரீர்  கூட்டமாக இருக்கட்டும்,  எங்கயுமே அங்கு சந்தித்து வந்தவர்கள்.

அங்கு  கலந்து வந்தவர்கள் இடம் சொல்வார்கள். இந்த ஆதாரம் சொன்னார்கள். அந்த ஆதாரம் சொன்னார்கள். நீ எதையாவது எடுத்து அதை பார்த்தீர்களா?  இல்லை சொன்னார்கள் அவர்கள். இல்லை அவங்க சொன்னார்கள், அவர்கள் சொன்னதெல்லாம் நம்பி விட்டார்கள்.

 இப்பொழுது  நாம் விளக்கம் கொடுக்கும்பொழுது இந்த ஆயத்தில் இருக்கு, இந்த ஹதீஸில் இருக்கு, என்று சொன்னால்  என் nafs லே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்?ஏன்? அந்தக் கல்பிலே அவர்கள் சந்தேகத்தை புகுத்தி விட்டார்கள்.

சந்தேகத்தால் அந்த கல்பை நிரப்பி விட்டார்கள். எனவே இப்பொழுது சத்தியம் வரும்பொழுது, அதை ஏற்றுக் கொள்ள அங்கே மனம் வரவில்லை. ஆகவே தான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சரி விஷயத்துக்கு வரலாம். அப்பொழுது அந்த சூராக்கள் எல்லாம் சொன்னோம் அல்லவா? அந்த சூராக்களை இன்று இரவு சென்று படித்துப் பார்.  ஏதாவது ஒரு சூராவை படித்துப் பாருங்கள்! அல்லாஹு தஆலா அத்தனை நபிமார்களை பற்றி சொல்லுகின்றானே, அந்த நபிமார்களுடைய ஒவ்வொரு நபியும் எப்படி பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்?

وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَاقَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ

இன்னும், ‘மத்யன்’ (வாசிகளு)க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. இன்னும், அளவையிலும் நிறுவையிலும் (பொருள்களை) குறைக்காதீர்கள். நிச்சயமாக நான், நல்லதொரு வசதியில் உங்களை காண்கிறேன். நிச்சயமாக நான், சூழ்ந்து விடக்கூடிய ஒரு நாளின் தண்டனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.”(அல்குர்ஆன் 1184)

என் சமுதாயமே! அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்,அவனையன்றி உங்களுக்கு வேறு மபூதில்லை, உஸ்தாத் பஷீர் பேசினார்கள் இங்கே இலாஹ் என்பதற்கு மபூத் அர்த்தம் என்பதை நபிமார்களுடைய அவர்களுடைய அழைப்புகளில் வாசகத்தில் முதல் அந்த தொடர்ச்சி அந்த முதல் வாக்கியம் உணர்த்துகிறது.

எங்கெல்லாம் நபிமார்களை பற்றி வருகிறதோ, இதைப் தவிர வேறு ஒரு  வசனம் இருந்தால் அதை எடுத்துக்காட்டி விடவும். அதற்குப் பிறகு, எனக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள். எப்படி கட்டுப்படுவது?  அல்லாஹ்வை வணங்குவது.

நான் காட்டக்கூடிய வழிமுறைப்படி. நபிக்கு நாம் ஏன் itaat செய்கிறோம்? அல்லாஹ்வை நாம் எப்படி வணங்க வேண்டும் என்று அறிய மாட்டோம். ஆகவே நமக்கு ஒரு நபி தேவை. அந்த நபி, அந்த ரசூல் நமக்கு காண்பித்துக் கொடுப்பார். அப்படி நாம் அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’(அல்குர்ஆன் 331)

உங்களுக்கு உங்களுடைய வணக்க வழிபாடுகள் மூலமாக, நல்ல கவனியுங்கள். உங்களுக்கு. உங்களுடைய வணக்க வழிபாடுகள் மூலமாக, அல்லாஹ் உடைய அன்பு கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நபியே! சொல்ல சொல்கின்றான் அல்லாஹு தஆலா. என்னை பின்பற்றுங்கள்.

அதாவது என்னை பின்பற்றி இபாதத் செய்யுங்கள்,என்னை பின்பற்றி வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நான் காட்டித் தருவது போன்று அல்லாஹ்வை வணங்குங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான். உங்களது பாவங்களை உங்களுக்கு அல்லாஹ் மன்னித்து விடுவான்.

சகோதரர்களே!  இந்த கிலாஃபத் என்ற  சிந்தனை, இதை மார்க்கத்திற்குள் வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கின்றார்களே, முதலாவது. இந்த மார்க்கத்தின் அடிப்படையை முற்றிலுமாக மறந்து விட்டார்கள். அல்லது முற்றிலுமாக புறக்கணித்து விட்டார்கள். அதை தெரியாதது போல் அவர்கள் நடிக்கின்றார்கள்.

இப்படி ஒரு அடிப்படை இருப்பதையே தெரியாதது போல் அவர்கள் ஒரு நடிப்பு நடிக்கின்றார்கள். கிலாஃபத் என்பது என்ன? ஆட்சி என்று சொல்லுங்கள். ஒரு அதிகாரம் என்று சொல்லுங்கள். அது ஒரு அரசாங்கம் என்று சொல்லுங்கள். நம்முடைய பொறுப்பு. நமக்கு அல்லாஹ் கொடுத்த பொறுப்பு. குர்ஆனிலே ஹதீஸிலே உங்கள் மீது ஆட்சியை ஏற்படுத்துவது. கட்டாய கடமை. நல்ல கவனியுங்கள்! உங்கள் மீது நீ ஆட்சியை ஏற்படுத்துவது, உங்கள் மீது கட்டாய கடமை. என்று ஏதாவது ஒரு ஆயத்து ஒரு ஹதீஸ் இருக்கிறதா?

مَنْ خَلَعَ يَدًا مِنْ طَاعَةٍ، لَقِيَ اللهَ يَوْمَ الْقِيَامَةِ لَا حُجَّةَ لَهُ، وَمَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ، مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً

சரி. இப்பொழுது ஒரு கேள்வி வரும். ஹதீஸ் இருக்கின்றதே. என்ன ஹதீஸ் இருக்கு? யாருடைய கழுத்தில் பைஅத் இல்லையோ,  யாருடைய கழுத்திலே பைஅத் இல்லையோ, அவருடைய மரணம்  ஜாஹிலியா உடைய மரணம். அவருடைய மரணம்  ஜாஹிலியா உடைய மரணம்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1851

நல்லா கவனியுங்கள்!  அல்லாஹ்வும் ரஸூலும் அவர்களுடைய அந்த வழிகாட்டுதலில் முரண்பாடு என்பது இருக்கவே இருக்காது. அல்லாஹு தஆலா நமக்கு சொல்லக்கூடிய ஒவ்வொரு சட்டத்திலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய,ஒவ்வொரு ஹதீஸிலும் சட்டத்திலும் அதனுடைய நுட்பத்தை புரிய வேண்டும்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை - அவனை அஞ்சவேண்டிய உண்மையான முறையில் - அஞ்சுங்கள். இன்னும், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தே தவிர இறந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 3102)

ஒரு உதாரணம் சொல்கின்றேன்!அல்லாஹு தஆலா சொல்கின்றான். நீங்கள் மரணிக்கும் பொழுது முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்காதீர்கள். சரியா? நீங்கள் மரணிக்கும் பொழுது முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள். என்று அல்லாஹ் இப்படி சொல்லுகின்றான்.

ஏன் அல்லாஹ் இப்படி சொல்லவில்லை? பிறக்கும் பொழுது, நீங்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுது, நீங்கள் வாலிபர்களாக இருக்கும் பொழுது, கவனியுங்கள். தாய் தந்தையை தேர்ந்தெடுப்பது நம்முடைய அதிகாரத்திலே இருக்கிறதா? நம்முடைய அதிகாரத்தில் இல்லை.

எங்கே? எந்த வீட்டில் வாழ்வது? வளர்வது? நம்முடைய அதிகாரத்திலே இல்லை. எனவே அது குறித்து அல்லாஹ் நம் மீது கேள்வி கணக்கை விசாரணையை வைக்கவில்லை. நாம் பிறந்து, வாழ்ந்து  வளரும் பொழுது சத்தியத்தை தேடு,அந்த மார்க்கத்தை தேடு. அதை புரிந்து, அதன்படி வாழ அந்த நிலையில் நீ மரணத்தை எய்துவாயாக. அதேபோலத்தான்.

நீங்கள் கிலாபத் சம்பந்தமாக, இமாமத்து சம்பந்தமாக, பைஅத் சம்பந்தமாக வந்திருக்கக்கூடிய அந்த ஹதீஸை அப்படியே எடுத்துக் கொண்டு வந்தீர்கள் என்றால், அந்த ஹதீஸிலிருந்து  நாம் எடுக்கக்கூடிய அந்த படிப்பினை என்னவென்றால், முஸ்லிம்களுக்கு என்று ஒரு இமாம் அமைந்து விடுவாரையானால்  அவருக்கு  பையத் கொடுப்போம். 

புரிகிறதா இல்லையா?இமாமை நீங்கள் உருவாக்குங்கள் என்பது இல்லை. இமாம் ஒருவர் ஏற்பட்டால், உங்களுக்கு ஒரு ஆட்சியாளர் ஏற்பட்டு விட்டால், அவரை விட்டு நீங்கள் விலகாதீர்கள். அவருக்கு முஸ்லிம்கள் பையத்து செய்து கொடுத்துவிட்டால், நீங்கள் தனித்து செல்லாதீர்கள். யார் தனித்து செல்வானோ, அவன் நரகத்தில் தனித்து செல்லுவான்.

وَمَنْ شَذَّ شَذَّ إِلَى النَّارِ

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2167குறிப்பு 1)

இந்த ஆட்சி அதிகாரம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹு தஆலா ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இது அல்லாஹ்வுடைய செயல்.இதிலே எத்தனை, எத்தகைய முயற்சிகள் செய்தாலும் சரி. இது நம்முடைய முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. நம்முடைய முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அல்லாஹு தஆலா உடைய கூற்றை பாருங்கள்.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26) تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு நீ ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து நீ ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவர்களை நீ கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவர்களை நீ இழிவுபடுத்துகிறாய்; நன்மை எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 326)

நபியே! நீங்கள் சொல்லுங்கள். ஆட்சி எனக்கெல்லாம். எல்லா ஆட்சிக்கும் உரிமையாளனே! எல்லா ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம். (இந்த ஆட்சியை நீ நாடியவருக்கு கொடுக்கின்றாய்.)(நாடியவரிடமிருந்து ஆட்சியை)நீ பிடுங்கி விடுகின்றாய். பறித்து விடுகின்றாய்,நம்முடைய கையில் கிடையாது.

நீங்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்தாலும், யாருடைய கையில் ஆட்சி செய்ய வேண்டும், அல்லாஹ்வுடைய நாட்டமோ, அல்லாஹ்வுடைய நாட்டம் தான் முக்கியம். இப்பொழுது இந்த நபிமார்களுடைய வரலாறை பார்த்தோம்.  அடுத்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கை விற்கு வாருங்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கையை பொருத்தவரைக்கும், இந்த இயக்க வாதிகள் எப்படி அதை சித்தரிப்பார்கள் என்றால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மதினா வாழ்க்கையை எடுத்துக் கூறி, இது எல்லாமே ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்காக அவர்கள் செய்து ஏற்பாடு.

இது எந்த அளவுக்கு என்றால் தொழுகை இருக்கிறது அல்லவா? நாம் தொழக்கூடிய தொழுகை. இந்த தொழுகையிலே, இந்த இபாதத்தே எதற்கென்றால்? ஜிஹாத்திற்கு ட்ரெய்னிங்காக வேண்டிதான்.

தொழுகை மூலமாக உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது எப்படி நீங்கள் ஜிஹாது செய்ய வேண்டும் என்று. எத்தகைய தவறான தத்துவத்தை அவர்கள் மக்களுடைய சிந்தனையிலே புகுத்துகிறார்கள் பாருங்கள். 

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மதினா வாழ்க்கையை,  எடுத்துக் கூறி,அதில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த அந்த சீர்திருத்தங்களை எல்லாம் அரசாங்கத்தை நிறுவுவதாக, அரசாங்கத்தை நோக்கிய,

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பணி இருந்ததாகவே அவர்கள் அந்த தங்களுடைய சித்தாந்தங்களை வாலிபர்கள் உடைய உள்ளங்களில் மற்றும் கல்வியில் குறைவாக இருப்பவர்களுடைய உள்ளங்களிலே பதிய வைத்துக் கொண்டே இருப்பார்கள். 

இந்த இடத்திலே ஒரு சின்ன விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். (ஆட்சியை அடிப்படையாக வைத்து தான் மார்க்கம் என்று இருந்திருந்தால்) எங்கேயாவது ஒரு இடத்திலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பையாத் வாங்கும் பொழுது, என்னுடைய ஆட்சிக்கு பைஅத் கொடுங்கள் என்று கேட்டிருப்பார்களா இல்லையா? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சஹாபாக்கள் கொடுத்த அத்தனை பைஅத்தும் பாருங்கள்.

 7199 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الوَلِيدِ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي المَنْشَطِ وَالمَكْرَهِ، وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ أَوْ نَقُولَ بِالحَقِّ حَيْثُمَا كُنَّا، لاَ نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لاَئِمٍ

அல்லாஹ்வை வணங்குவது. அல்லாஹ்வுடைய நபிக்கு கீழ்படிவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்று நடப்பது. இப்படியாக மார்க்கத்திற்கான பை அத்தாகவே இருக்கும்.

எங்கயுமே தன்னை ஒரு அரசனாகவோ, தன்னை ஒரு அதிகாரியாகவோ, ஆட்சியாளராகவோ, முன்னுறுத்தி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பைஅத் வாங்கினார்களா  என்றால் அறவே வாங்கவில்லை. 

அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7199

ஆட்சியைத்தான் மக்களுக்காக முன் நிறுத்த வேண்டும். முஸ்லிம்கள் ஆட்சியின் அடிப்படையில் தான் வாழ வேண்டும். எங்கிருந்தாலும் ஆட்சி அடிப்படையில் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்பதை போதிப்பது தான் ரசூலுல்லாவுடைய மதீனா வாழ்க்கையின் நோக்கமாக  இருந்திருந்தால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை தெளிவாக சொல்லி இருப்பார்கள், மறைமுகமாக சொல்லி இருப்பார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! எங்கேயுமே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அது குறித்து சொல்லவில்லை. சரி இன்னொரு விஷயத்தை பாருங்கள். இந்த ஆட்சிக்கும் நுபுவத்திற்கும். அதற்கு முன்னாடி இன்னொரு விஷயத்துக்கு வருவோம். இஸ்லாம் என்பது நுபுவத் இல்லாமல் ரிசாலத்து இல்லாமல் முடியுமா? மார்க்கம் என்பது நுபுவத்து இல்லாமல் ரிஸாலத் இல்லாமல் முடியுமா? முடியாது.

நமக்கு எல்லாமே நுபுவத்தில் இருந்து தான் வர வேண்டும். எல்லாமே நமக்கு Risalah மூலமாகவே கிடைக்கும்.அப்பொழுது. இந்த நுபுவத்து அசல் அல்ல. ஆட்சி தான் அசல் என்று இருக்குமேயானால், அங்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய அந்த நுபுவத்துடைய  அடிப்படையே அங்கே தகர்க்கப்பட்டிருக்கும்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :7(இந்த ஹதீஸை அதன் மூலம் பார்க்க வேண்டும்)

எப்படி சொல்கின்றீர்கள்? நீங்கள் படித்திருக்கிறீர்கள். ஸஹீஹுல் புகாரியில். ஹதீஸுல் ஹிர்கல் என்றோ அல்லது ஹதீஸுல் அபீ சுபியான் என்றோ பிரபலமான ஒரு பெரிய ஹதீஸ்.  ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிர்கல் மன்னனுக்கு கடிதம் எழுதுகிறார்கள். அந்த கடிதம் போய் சேரும் பொழுது, அங்கே, பயண அந்த வியாபாரக் கூட்டத்தில் அபு சுஃப்யான் வந்திருக்கிறார்.

அப்பொழுது அந்த ஹிர்கல் மன்னர் அந்த கடிதத்தை வைத்துக்கொண்டு, தன்னை நபி என்று சொல்லக்கூடிய, அந்த முகமதுடைய குடும்பத்தார், அவருடைய வம்சத்தை சேர்ந்த அரேபியர்கள் யாராவது இருக்கின்றார்களா தேடி வாருங்கள் என்று சொல்லும் பொழுது, அவருடைய காவலாளிகள் அபு சுபியானுடைய அந்த வியாபார கூட்டத்தை பிடிக்கின்றார்கள். அழைத்து வரப்படுகிறார்கள்.

அபுசுபியானும் அவருடைய அந்த வியாபார கூட்டமும்,  அப்பொழுது ஹிர்கல் மன்னன் என்ன கேட்கின்றார்? உங்களிலேயே இந்த நபி என்று சொல்லக்கூடிய மனிதருக்கு உறவால் நெருக்கமானவர் யார் என்று? அப்பொழுது அபுசுபியான் சுட்டிக்காட்டப்படுகின்றார். அபுசுபியான் நான் என்று முன் வருகிறார்.

அங்கே அந்த ஹிர்கல் மன்னர் கேட்கக்கூடிய கேள்வியை பாருங்கள். ஒவ்வொரு கேள்வியாக கேட்டு வரும் பொழுது, இவருடைய குடும்பத்திலே, இவருடைய குடும்பத்திலே யாராவது மன்னர்கள் சென்றிருக்கின்றார்களா? இவருடைய குடும்பத்திலே யாராவது மன்னர்கள் சென்றிருக்கின்றார்களா? அப்பொழுது அங்கே அபுசுஃபியான் பதில் சொல்கின்றார். இல்லை.

இப்படியாக பல கேள்விகளை கேட்டுவிட்டு, இறுதியாக தான் ஒவ்வொரு கேள்வியையும் ஏன் கேட்டேன் என்று அந்த ஹிர்கல் மன்னரே  அவரே விளக்கம் தருகின்றார், நான் கேட்டேன். இவருடைய  மூதாதைகள் யாராவது ஆட்சியாளர்களாக மன்னராக இருந்திருக்கின்றார்களா என்று நீங்கள் இல்லை என்று பதில் சொன்னீர்கள்.

ஆம் ஆட்சியாளராக சிலர் சென்றிருக்கின்றார்கள், மன்னராக சிலர் சென்றிருக்கின்றார்கள் என்று நீ சொல்லியிருப்பாயானால், நான் சொல்லியிருப்பேன். தன்னுடைய மூதாதைகள் உடைய ஆட்சிக்காக வேண்டி இவர் தன்னை இப்படி நபியாக சொல்கின்றார் என்று.

கொஞ்சம் தெளிவாக புரிந்து பாருங்கள். அதாவது எப்படி என்றால், இமாம் இப்னு தைமிய்யா சொல்வார்கள் ரஹீமஹுல்லாஹ்!ஃபிர்அவ்ன் கூட அல்லாஹ்வை அறிந்திருந்தான் நான் வானத்தில் சென்று பார்க்க வேண்டும் என்று. ஃபிர்அவ்ன் கூட அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்பதை அறிந்திருந்தார்கள்.

இன்றைய முஷ்ரிக்குகளோ அதைவிட மோசமாக இருக்கிறார்கள். அல்லாஹ் தூனிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான் எல்லா இடத்திலும் இருப்பான் என்று  சொல்கின்றார்கள்.ஃபிர்அவ்ன் கூட அல்லாஹ்வை தேடும்பொழுது என்ன சொன்னான்.

قَالَ فِرْعَوْنُ يَاهَامَانُ ابْنِ لِي صَرْحًا لَعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ  أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا وَكَذَلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوءُ عَمَلِهِ وَصُدَّ عَنِ السَّبِيلِ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِي تَبَابٍ

ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! எனக்காக ஒரு (பெரிய, உயரமான) கோபுரத்தைக் கட்டு. நான் அந்த வாசல்களுக்கு சென்றடைய வேண்டும்.” “(அதாவது,) வானங்களின் வாசல்களுக்கு (நான் சென்றடைய வேண்டும்). அப்படி ஏறிவிட்டால் நான் மூஸாவின் கடவுளை எட்டிப்பார்த்துவிடுவேன். (அல்குர்ஆன் 40 : 36, 37)

இன்னும், நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன்.” இவ்வாறுதான், ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. இன்னும், அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை. (அல்குர்ஆன் 40 : 36, 37)

ஹா மானே! உயர்ந்த கோபுரத்தை நீ கட்டு அதன் மேலே ஏறி சென்று நான் மூஸா உடைய கடவுளை பார்க்க வேண்டும் என்று. அதேபோலத்தான் ஹிர்கல். நுபுவத் என்பது வேறு, ஆட்சி என்பது வேறு, என்பதை புரிந்து வைத்திருந்தான்.

அந்த ஒரு அடிப்படை புரிதல் கூட, மார்க்கம் என்பது வேறு ஆட்சி என்பது வேறு. ஆட்சியோடு மார்க்கம் சேரலாம். ஆனால்.மார்க்கம் என்பது ஆட்சியோடு தான் சேர்ந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஆட்சியோடு மார்க்கம் சேரலாம்.

அல்ஹம்துலில்லாஹ்! அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் மார்க்கம் என்பதே, இஸ்லாம் என்பதே, முஸ்லிம்கள் என்பவர்களே ஆட்சியோடு தான் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களாகத்தான் இருக்க வேண்டும். அரசாங்கமாக தான் இருக்க வேண்டும். அரசாங்கத்தை நடத்த கூடியவர்களாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. இதுதான் அடிப்படை  சகோதரர்களே!

நபிமார்களுடைய வரலாறுகள். அதைப் புரிந்து கொண்ட ஒரு காஃபிர். ஒரு நஸ்ரானி மன்னன். எவ்வளவு தெளிவாகச் சொல்கின்றான். இவர் இவருடைய மூதாதைகளிலேயே யாராவது மன்னர் இருந்திருப்பார்களேயானால் நான் சொல்லியிருப்பேன் அந்த ஆட்சிக்காக வேண்டி இவர் இப்போது வேடம் போடுகிறார்கள் என்று. ஆகவே சகோதரர்களே! இந்த தெளிவு நமக்கு கிடைக்க வேண்டும்.

என்ன? அரசாங்கத்தோடு மார்க்கம் சேரலாம். ஆட்சியாளர் மார்க்கத்தில் சேருவார். மார்க்கப்படி ஆட்சி செய்ய வேண்டும். ஆட்சியாளர் மார்க்கத்தில் சேர வேண்டும். மார்க்கத்தின் படி ஆட்சி செய்ய வேண்டும்.

மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் மக்களுக்கு மார்க்கத்தை பின்பற்றி நடப்பதற்கு அவர் துணை நிற்க வேண்டும் தூண்ட வேண்டும். ஆனால். இதற்கு என்ன அர்த்தம் அல்ல. ஆட்சி இல்லாத இஸ்லாமை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆட்சி இல்லாத முஸ்லிம்கள் முஸ்லிம்களே அல்ல.

அவருடைய வாழ்க்கை வீணானது. அவர்களுடைய வழிபாடு வீணானது. அவர்களுடைய கொள்கை பயனற்றது. என்று ஒருவர் சொல்வார்களே யானால் அவனை விட கடன் கெடுத்த முட்டாள் மார்க்கத்தை, குரானை, ஹதீஸை புரியாத வைகேடன் யாரும் இருக்க முடியாது.

அடுத்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். அல்லாஹு தஆலா நபிமார்களை தேர்ந்தெடுத்தான். நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.  அப்படி தேர்ந்தெடுக்கும் பொழுது, அல்லாஹ் நாடினால்.

அல்லாஹ் நாடியிருந்தால் மன்னர்களிலேயே நபிமார்களை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கலாம் இல்லையா? நல்லா கவனியுங்கள். ஆட்சியாள்தான் மக்களை தவ்ஹீதின் பக்கம் அழைக்க முடியும் என்று இருந்தால், அரசாங்கம் இருந்தால் தான் இஸ்லாம் என்று இருக்கும் என்றால்,

அரசாங்கம் இருந்தால் தான் இஸ்லாம் என்று இருக்குமானால் அல்லாஹு தஆலா இந்த உலகத்தின் நியதியை அப்படியே மாற்று இருப்பான். ஆட்சியாளர்களில் இருந்தே நபிமார்கள் எல்லோரையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்து இருப்பான்.

அப்படி அல்லாஹு தஆலா ஆக்கவில்லை ஆட்சியோடு நுபுவத்து சேரலாம். ஆனால்,நுபுவத்திற்கு ஆட்சி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சுலைமானுக்கும் தாவூத் விற்கும் ஆட்சி இருந்தது.

அதோடு நுபுவத்தும் சேர்ந்தது.  மற்ற நபிமார்கள் நூஹ் இருந்தார்கள். அதற்குப் பிறகு இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் இமாமுல்  அன்பியா. அபுல் அன்பியா. நமது நபிக்கே அவர்களை பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் சட்டம்  விடுகின்றானே, அவரே ஒரு Muhajjir நாடோடியாக இருந்தார்.

فَآمَنَ لَهُ لُوطٌ وَقَالَ إِنِّي مُهَاجِرٌ إِلَى رَبِّي إِنَّهُ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

ஆக, அவரை லூத் நம்பிக்கை கொண்டார். இன்னும், (-இப்ராஹீம்) கூறினார்: நிச்சயமாக நான் (என் ஊரை விட்டு) வெளியேறி என் இறைவனின் பக்கம் (அவன் எனக்கு கட்டளையிட்டபடி ஷாம் தேசம் நோக்கி) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். (அல்குர்ஆன் 29 : 26)

எப்படி இருந்தார்? நான் எனது ரப்பின் பக்கம் செல்லக்கூடிய ஒரு நாடோடி, முஜாஹிர் வீடு அற்றவன். எனக்கு எந்த நாதியும் இல்லை. அல்லாஹ்வை தவிர.  அவருடைய ஊரைத் துறந்தார்கள் இல்லையா?

தனது மனைவி, தனது குழந்தைகளை தவிர இந்த பூமியில் அவருக்கு எந்த சொந்தமும் இல்லை எந்த அதிகாரமும் இல்லை. ஆகவே நுபுவ தில்லாமல் இஸ்லாம் இல்லை. இஸ்லாம் இல்லாமல் நுபுவத் இல்லை. அந்த  நபிமார்கள் ஆட்சியாளர்களாக அனுப்பப்படவில்லை.

அவர்கள் முடங்கி கிடக்கவில்லை. ஆட்சியை ஏற்படுத்துவோம். பிறகு இஸ்லாமை சொல்வோம். ஆட்சியை ஏற்படுத்துவோம் பிறகு மக்களுக்கு தொழுகையை சொல்வோம். ஆட்சியை ஏற்படுத்துவோம் பிறகு  நன்மையை ஏவுவோம்,

தீமையை தடுப்போம் என்றெல்லாம் அவர்கள் எங்கும் முடங்கி கிடக்கவில்லை. தாஃவாவை செய்து கொண்டே இருந்தார்கள். இன்று. தாஃவா செய்வதிலே சோம்பேரிகளாக இருக்கக்கூடியவர்கள். உலக ஆதாயத்தை,

செல்வத்தை, ஆட்சி அதிகாரத்தை தேடுகின்ற சில அரசியல்வாதிகளால் உருவாக்க படக்கூடியது தான், இந்த அரசியல் சார்ந்த, ஆட்சி சார்ந்த, இயக்கங்கள் எல்லாம் அது சார்ந்த அமைப்புகள் எல்லாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து சகோதரர்களே! அல்லாஹு தஆலா இந்த தீனை பொருத்தவரை, நீங்கள். நீங்களும் நானும் உண்மையாக இந்த மார்க்கத்தை நம்புகிறோம் என்றால், ஒருபோதும் நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது. அல்லாஹு தஆலா நமக்கு வாக்களித்து இருக்கின்றான்.

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ

அவன், தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான், - எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அதை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே! (அல்குர்ஆன் 9 : 33)

அல்லாஹு தஆலா இந்த தீனை மேலோக வைப்பான். இந்த தீனை,இது அல்லாஹ்வுடைய வாக்கு. அல்லாஹ் கண்டிப்பாக பூர்த்தி செய்வான். நாம் பொறுமையாக இருக்கின்றோமா?

وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقِ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا

உமக்கு முன்னர் தூதர்களில் எவரையும் நாம் அனுப்பவில்லை, நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாக, கடை வீதிகளில் உலாவுபவர்களாக இருந்தே தவிர. இன்னும், உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கினோம். நீங்கள் பொறு(மையாக இரு)ப்பீர்களா? மேலும், உமது இறைவன் உற்று நோக்குபவனாக (அனைத்தையும் கூர்ந்து பார்ப்பவனாக) இருக்கிறான். (ஆகவே அவனது பார்வையை விட்டு எதுவும் தவறி விடாது.) (அல்குர்ஆன் 2520)

நீங்கள் பொறுமையாளர்களாக  இருப்பீர்களா? அல்லாஹு தஆலா நமக்கு வாக்களிக்கின்றான். நாம் என்ன செய்ய வேண்டும்? நான் ஆரம்பத்தில் சொன்னது மனிதன். இன்று அந்த இயக்கங்களுடைய வழிகேடு என்ன? எதை அல்லாஹ்  நமது பொறுப்பில்  விட்டானோ, அதை பாழாக்கி விட்டார்கள்.

எதை அல்லாஹ் நமக்கு பொறுப்பில் விட்டானோ, அதை பழக்கி விட்டார்கள். எதை அல்லாஹு தஆலா தன்னுடைய பொறுப்பில் வைத்திருக்கின்றானோ, அதிலே இவர்கள் கை வைக்க பார்க்கிறார்கள். அதிலே இவர்கள் அதிகாரம் செலுத்த பார்க்கின்றார்கள். அல்லாஹ் சொல்லுகின்றான். (40:08-40:12) இந்த இடத்திலே மின்கும் என்ற வார்த்தை குர்ஆனில் பல இடங்களில் வரும். மூமின்களை பார்த்து அல்லாஹ் சொல்லுவான்.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) ஆட்சியாளர்களாக ஆக்கியது போன்று இப்பூமியில் அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், அவர்களுக்காக அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். (அல்குர்ஆன் 2455)

அவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை அவர்களுக்கு மாற்றித்தருவான். அவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள். (அல்குர்ஆன் 2455)

ஏன் என்று சொன்னால்,  அந்த இடத்திலே நீங்கள் முஃமின்களாக இருந்தால் தான் என்ற அந்த அழுத்தத்தை அல்லாஹ் சொல்லுகின்றான். உங்களில் மூமினானவர்களுக்கு.அதாவது நீங்கள் உண்மையான மூமின்களாக இருக்கும் பொழுது நல்ல அமல்களை செய்தவர்களாக இருக்கும் பொழுது.

இந்த பூமியிலே அல்லாஹு தஆலா உங்களுக்கு அதிகாரத்தை, ஆட்சியை அல்லாஹ் வழங்குவான். இதற்கு முன்னாலும் அல்லாஹு தஆலா ஆட்சி அதிகாரத்தை வழங்கிருக்கின்றான். இஸ்ரவேலர்களிலே பலருக்கு அல்லாஹு தஆலா ஆட்சி அதிகாரத்தை கொடுத்தான். பலருக்கு அல்லாஹ் கொடுக்கவில்லை.  குர்ஆனைபடித்து பாருங்கள். அல்லாஹ் சொல்லுகின்றான்.

அவர்களுக்கு அவர்களுடைய தீனை நாம் சிறப்பித்துக் கொடுப்போம். எந்த தீனை அல்லாஹ் பொருந்தி கொண்டானோ, பிறகு அவர்களுடைய பயங்களை போக்கி, அவர்களுக்கு நிம்மதி, பாதுகாப்பை, கொடுப்போம். இப்படி சொல்லக்கூடிய அல்லாஹ். (இந்த வசனத்துடைய இறுதி பகுதியை) (2) முதல் பகுதியோடு சம்பந்தபடுத்துகின்றான் பாருங்கள். யாரோடு? ஈமான் கொண்டவர்கள்,

நன்மையை செய்தவர்களுக்கு அல்லாஹ் சொல்லுகின்றான் அல்லவா? அதோடு  சம்மதப்படுத்துகின்றான் அந்த மூமின்கள் யார் என்றால் அவர்கள் என்னை இபாதத்து செய்வார்கள். என்னை வணங்கிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ் இங்கு சொல்லவில்லை. ஆட்சி அதிகாரத்திற்காக வேண்டி, ரகசியமும் மாநாடும் நடத்திக் கொண்டிருப்பார்கள் என்று.

கிலாபத்துக்காக வேண்டி, கூட்டம் போட்டு கொண்டிருப்பார்கள். கட்சிகளை ஆரம்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. என்ன செய்வார்கள்? என்னை வணங்குவார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் ஒரு அறிவிப்பு.

சகோதரர்களே! பயான் ஆரம்பிப்பதற்கு முன்பதாக பேசிக் கொண்டிருந்தோம்.  இப்படி ஹதீஸ் இருக்கிறதா என்று கேட்கின்றார்கள். எந்த ஹதீஸை சொல்ல வேண்டுமோ அதை சொல்லப்படுவது கிடையாது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

130 - (2948) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُعَلَّى بْنِ زِيَادٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنِ الْمُعَلَّى بْنِ زِيَادٍ، رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ، رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ

(ஃபித்னா உடைய காலத்தில்) ஃபித்னா உடைய குழப்பமான காலத்திலே, ஒருவர் இபாதத்திலே வணக்க வழிபாடுலே ஈடுபடுவது அவர் என் பக்கம் ஹிஜ்ரத் செய்வதற்கு சாமானது என்று.

அறிவிப்பாளர் : மஃகில் இப்னு யஸார் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2948

3958 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنِ الْمُشَعَّثِ بْنِ طَرِيفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ أَنْتَ يَا أَبَا ذَرٍّ وَمَوْتًا يُصِيبُ النَّاسَ حَتَّى يُقَوَّمَ الْبَيْتُ بِالْوَصِيفِ؟» - يَعْنِي الْقَبْرَ - قُلْتُ: مَا خَارَ اللَّهُ لِي وَرَسُولُهُ - أَوْ قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ - قَالَ: «تَصَبَّرْ» قَالَ: «كَيْفَ أَنْتَ، وَجُوعًا يُصِيبُ النَّاسَ، حَتَّى تَأْتِيَ مَسْجِدَكَ فَلَا تَسْتَطِيعَ أَنْ تَرْجِعَ إِلَى فِرَاشِكَ، وَلَا تَسْتَطِيعَ أَنْ تَقُومَ مِنْ فِرَاشِكَ إِلَى مَسْجِدِكَ؟» قَالَ: قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ - أَوْ مَا خَارَ اللَّهُ لِي وَرَسُولُهُ - قَالَ: «عَلَيْكَ بِالْعِفَّةِ» ثُمَّ قَالَ: «كَيْفَ أَنْتَ، وَقَتْلًا يُصِيبُ النَّاسَ حَتَّى تُغْرَقَ حِجَارَةُ الزَّيْتِ بِالدَّمِ؟» قُلْتُ: مَا خَارَ اللَّهُ لِي وَرَسُولُهُ، قَالَ: «الْحَقْ بِمَنْ أَنْتَ مِنْهُ» ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَلَا آخُذُ بِسَيْفِي، فَأَضْرِبَ بِهِ مَنْ فَعَلَ ذَلِكَ، قَالَ: «شَارَكْتَ الْقَوْمَ إِذًا، وَلَكِنِ ادْخُلْ بَيْتَكَ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَإِنْ دُخِلَ بَيْتِي؟ قَالَ: «إِنْ خَشِيتَ أَنْ يَبْهَرَكَ شُعَاعُ السَّيْفِ، فَأَلْقِ طَرَفَ رِدَائِكَ عَلَى وَجْهِكَ، فَيَبُوءَ بِإِثْمِهِ وَإِثْمِكَ، فَيَكُونَ مِنْ أَصْحَابِ النَّارِ»

ஃபித்னாவிலே குழப்ப காலங்களில், இபாதத்திலே ஈடுபடுவது, வணக்க வழிபாட்டிலே ஈடுபடுவது, என்னிடத்திலே என்னை நோக்கி ஒருவர் வருவதற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு சமமானது என்று ஏன் சொன்னார்கள்?  ரசூலுல்லாஹ்விடத்திலே சென்றுவிட்டால், அவர்களின் சுன்னாவின் பக்கம் சென்று விட்டால் அதைவிட நமக்கு பாதுகாப்பு இல்லை.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். ஃபித்னா உடைய காலத்திலே, குழப்பமான காலத்திலே, உங்களது வீட்டுக்குள் இருந்தே,  வீட்டினுடைய கதவை  பூட்டி விடுங்கள்.  வீட்டிலும் ஒரு அரை இருக்குமேயானால், வீட்டிலும் உங்களுக்கு ஒரு ரூம் இருந்தால், அந்த ரூமுக்குள்ளே போய்விடுங்கள் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, அபூ தாவூது, எண் : 3958, 3735 குறிப்பு 2)

இந்த ஹதீஸ் எல்லாம்  சொல்லப்படாது. தனி நபருடைய இஸ்லா, குடும்பத்தினுடைய இஸ்லா. சமுதாயத்திற்கு நன்மையை ஏவுவது. அதற்காகவே அனுப்பப்பட்ட சமுதாயம். அதெல்லாம் இங்கு சொல்லப்படாது.

எது நம்முடைய அதிகாரத்தில் கொடுக்கப்படவில்லையோ,அதை மண்டையில் ஏற்றுக்கொண்டு வாலிபர்களை மூளை சலவை செய்து அவர்களை வீணாக்குவது. அல்லாஹ் சொல்லுகின்றான்.

يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

அவர்கள் என்னை வணங்குவார்கள். எனக்கு இதை வைக்க மாட்டார்கள். இதற்குப் பிறகு யார் நன்றி கெட்ட தனமாக நடப்பார்களோ, அவர்கள் தான் மிகப்பெரிய பாவிகள். மேலும் அல்லாஹ் சொல்லுகின்றான். அந்த கிலாஃபத் வருகின்ற வரை நான் உங்களுக்கு அதிகாரத்தை ஆட்சியை கொடுக்கின்ற வரை, தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஜகாத்தை கொடுத்து வாருங்கள். ரசூலுக்கு  கீழ்படிந்து நடந்து வாருங்கள். அல்லாஹ்வுடைய கருணை உங்கள் மீது இறங்கும்.

ஆகவே அன்பிற்குரிய சகோதரர்களே! எது சொல்லப்பட்டாலும். அதனுடைய ஆதாரத்தை கேளுங்கள். அந்த ஆதாரத்தை நீங்கள் தேடுங்கள். பாருங்கள். படித்து பாருங்கள். அதைக் குறித்த விளக்கங்களை நீங்கள் கேட்டு அறிந்து  கொள்ளுங்கள். மற்ற பல விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து அறிஞர்கள் தங்களுடைய உரையில் கொடுப்பார்கள்.

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கும் ஆனால் இன்ஷா அல்லாஹ் கேள்வி பதில் உடைய அந்த நேரத்திலே கேட்டு தெளிவு பெறுங்கள். அல்லாஹ் சுபஹானஹு தஆலா எனக்கு உங்களுக்கும் நமது மார்க்கத்தினுடைய தெளிவையும், நேர்வழியும் தந்து அருள்வானாக! குழப்பங்கள வழிகேடுகளிலிருந்து இருந்து நம்மை பாதுகாத்து கொள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்பு 1)

سنن الترمذي ت شاكر(4/ 466)

2167 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا المُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ المَدَنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ لَا يَجْمَعُ أُمَّتِي - أَوْ قَالَ: أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَى ضَلَالَةٍ، وَيَدُ اللَّهِ مَعَ الجَمَاعَةِ، وَمَنْ شَذَّ شَذَّ إِلَى النَّارِ ": هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَسُلَيْمَانُ المَدَنِيُّ هُوَ عِنْدِي سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ، وَقَدْ رَوَى عَنْهُ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، وَأَبُو عَامِرٍ العَقَدِيُّ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ العِلْمِ،: [ص:467] وَتَفْسِيرُ الجَمَاعَةِ عِنْدَ أَهْلِ العِلْمِ هُمْ أَهْلُ الفِقْهِ وَالعِلْمِ وَالحَدِيثِ، وسَمِعْت الجَارُودَ بْنَ مُعَاذٍ يَقُولُ: سَمِعْتُ عَلِيَّ بْنَ الحَسَنِ، يَقُولُ: سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ المُبَارَكِ: مَنِ الجَمَاعَةُ؟ فَقَالَ: أَبُو بَكْرٍ وَعُمَرُ، قِيلَ لَهُ: قَدْ مَاتَ أَبُو بَكْرٍ وَعُمَرُ، قَالَ: فُلَانٌ وَفُلَانٌ، قِيلَ لَهُ: قَدْ مَاتَ فُلَانٌ وَفُلَانٌ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ: أَبُو حَمْزَةَ السُّكَّرِيُّ جَمَاعَةٌ: وَأَبُو حَمْزَةَ هُوَ مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ وَكَانَ شَيْخًا صَالِحًا، وَإِنَّمَا قَالَ هَذَا فِي حَيَاتِهِ عِنْدَنَا

குறிப்பு 2)

سنن ابن ماجه(2/ 1308)

3958 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنِ الْمُشَعَّثِ بْنِ طَرِيفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ أَنْتَ يَا أَبَا ذَرٍّ وَمَوْتًا يُصِيبُ النَّاسَ حَتَّى يُقَوَّمَ الْبَيْتُ بِالْوَصِيفِ؟» - يَعْنِي الْقَبْرَ - قُلْتُ: مَا خَارَ اللَّهُ لِي وَرَسُولُهُ - أَوْ قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ - قَالَ: «تَصَبَّرْ» قَالَ: «كَيْفَ أَنْتَ، وَجُوعًا يُصِيبُ النَّاسَ، حَتَّى تَأْتِيَ مَسْجِدَكَ فَلَا تَسْتَطِيعَ أَنْ تَرْجِعَ إِلَى فِرَاشِكَ، وَلَا تَسْتَطِيعَ أَنْ تَقُومَ مِنْ فِرَاشِكَ إِلَى مَسْجِدِكَ؟» قَالَ: قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ - أَوْ مَا خَارَ اللَّهُ لِي وَرَسُولُهُ - قَالَ: «عَلَيْكَ بِالْعِفَّةِ» ثُمَّ قَالَ: «كَيْفَ أَنْتَ، وَقَتْلًا يُصِيبُ النَّاسَ حَتَّى تُغْرَقَ حِجَارَةُ الزَّيْتِ بِالدَّمِ؟» قُلْتُ: مَا خَارَ اللَّهُ لِي وَرَسُولُهُ، قَالَ: «الْحَقْ بِمَنْ أَنْتَ مِنْهُ» ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَلَا آخُذُ بِسَيْفِي، فَأَضْرِبَ بِهِ مَنْ فَعَلَ ذَلِكَ، قَالَ: «شَارَكْتَ الْقَوْمَ إِذًا، وَلَكِنِ ادْخُلْ بَيْتَكَ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَإِنْ دُخِلَ بَيْتِي؟ قَالَ: «إِنْ خَشِيتَ أَنْ يَبْهَرَكَ شُعَاعُ السَّيْفِ، فَأَلْقِ طَرَفَ رِدَائِكَ عَلَى وَجْهِكَ، فَيَبُوءَ بِإِثْمِهِ وَإِثْمِكَ، فَيَكُونَ مِنْ أَصْحَابِ النَّارِ

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/