HOME      Lecture      ரமழானில் இறை மறை ஓதுதலும் இரவு வணக்கமும் | Tamil Bayan - 710   
 

ரமழானில் இறை மறை ஓதுதலும் இரவு வணக்கமும் | Tamil Bayan - 710

           

ரமழானில் இறை மறை ஓதுதலும் இரவு வணக்கமும் | Tamil Bayan - 710


ரமழானில் இறைமறை ஓதுதலும் இரவு வணக்கமும்
 
தலைப்பு : ரமழானில் இறைமறை ஓதுதலும் இரவு வணக்கமும்
 
வரிசை : 710
 
இடம் : மஸ்ஜிது நிஸ்வா, சின்ன நீலாங்கரை சென்னை  
 
உரை  : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -02-04-2022 | 01-09-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! தாய்மார்களே! இந்த முகலாவாசிகளே! அல்லாஹ்வுடைய அருளால் ஒரு சிறப்பான சந்தர்ப்பத்தில் உங்களை சந்திப்பதற்கு உண்டான வாய்ப்பை அல்லாஹுத்தஆலா ஏற்படுத்தி கொடுத்தான்.  அல்ஹம்துலில்லாஹ்! ரமலானுடைய மாதத்தில் முதல் அந்தத் தொடக்க நாள் உடைய அந்தப் பகுதியிலே நாம் இருக்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ்! 
 
சகோதரர்களே!  இந்த ரமழான் என்பது என்ன? நாம் எப்படி இந்த ரமழானை புரிந்து வைத்திருக்கிறோம். நம்முடைய முன்னோர் ஸலஃப் ஸாலிஹின் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், ஸாலிஹின் அவர்கள் இந்த ரமலானை எப்படி புரிந்து வைத்திருந்தார்கள், விளங்கி வைத்திருந்தார்கள், எதற்காக பயன்படுத்தினார்கள் சகோதரர்களே! இந்த சிறிய நினைவூட்டலைதான் இன்ஷா அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த அமர்விலே கொடுக்க விரும்புகிறேன்.
 
முதலாவதாக நம்முடைய சிந்தனையிலிருந்து  ஒரு விஷயத்தை நாம் வெளியாக்க வேண்டும் அது என்ன விஷயம் என்றால்? இந்த ரமழான் என்பது இஃப்தார் பார்ட்டிக்காக, ஸகர் பார்ட்டிக்காக, பெருநாள் டிரஸ் எடுப்பதற்காக, கொண்டாடுவதற்காக உள்ள மாதம் அல்ல, ரமழான் என்பது இது கொண்டாடுவதற்காக உள்ள மாதம் அல்ல,
 
அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ள மாதம் அல்லாஹ்வுடைய நெருக்கத்தை அதிகப்படுத்துவதற்காக உள்ள மாதம் நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையிலே ஏற்பட்ட அந்த தூரம், அந்த இடைவெளி அதை போக்குவதற்காக உள்ள மாதம், அது எப்படி அல்லாஹ்விற்கும் நமக்கும் உண்டான இடைவெளியை போக்குவது அல்லாஹுத்தஆலா ஏழு வானங்களுக்கு மேல் அர்ஷுக்கு மேல் உயர்ந்திருக்கிறான்.
 
الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى
 
ரஹ்மான், அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்டான். (அல்குர்ஆன் 20 : 5)
 
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
 
நிச்சயமாக உங்கள் (காரியங்கள் அனைத்தையும் சீர்ப்படுத்துபவனும், உங்களை நிர்வகிப்பவனுமாகிய உங்கள்) இறைவன் அல்லாஹ்தான் (-எல்லாப் படைப்புகளும் உண்மையில் வணங்குவதற்கு தகுதியானவன்.) அவன்தான் வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (இவை எல்லாம் அவனுக்கு) பணிந்தவையாக இருக்கும் நிலையில் தனது கட்டளையினால் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது (-பின் தொடர்கிறது). அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். (அல்குர்ஆன் 7 : 54)
 
சகோதரர்களே! நம்முடைய அல்லாஹுத்தஆலா  தன்னுடைய பரிசுத்த தன்மையால், தன்னுடைய பரிசுத்தமான உள்ளமையால் ஏழு வானங்களுக்கு மேல் தன்னுடைய அர்ஷின் மேல் அவன் உயர்ந்திருப்பதோடு அவனுக்கென்று விசேஷமாக, அவனுக்காகவே அவனை திருப்தி படுத்துவதற்காகவே, அவனை மகிழ்விப்பதற்காகவே, அவனுடைய வணக்க வழிப்பாட்டுகளுக்காகவே அவனுக்காகவே தன்னை அர்ப்பணிக்க கூடிய அந்த நல்ல அடியார்களோடு இருக்கிறான்.
 
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
 
நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான். (அல்குர்ஆன் 16 : 128)
 
அல்லாஹுத்தஆலா தக்வா உள்ளவரோடு இருக்கிறான். அல்லாஹுத்தஆலா இஹ்ஸான், இக்லாஸ் மனத்தூய்மை உள்ளவரோடு இருக்கிறான. பிறருக்கு எப்போதும் உதவி, ஒத்தாசை, உபகாரம், செய்ய வேண்டும் என்று பிறர் நலனை பேணுகிறார்களே பிறருக்காக தன்னுடைய செல்வத்தை, பொருளை அர்ப்பணிக்கிறார்களே அவர்களோடு அல்லாஹ் இருக்கிறான். 
 
அல்லாஹ்வுடைய விசேஷமான அந்த உடன் இருத்தல் அவர்கள் மீது அல்லாஹுத்தஆலா தன்னுடைய விசேஷமான அருளை இறக்குகிறான், தன்னுடைய விசேஷமான அன்பை தருகிறான், அவர்கள் மீது அல்லாஹுத்தஆலா முஹபத் அன்பு வைக்கிறான். 
 
தக்வா யாருடைய அந்த உள்ளத்திலே தக்வா இறையச்சம் தக்குவா என்றால் இறையச்சம் என்று சொல்வார்கள் இறையச்சம் மட்டுமல்ல, பயம் மட்டுமல்ல, அல்லாஹ்வுடைய அன்பு அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகுதல்  அது பெரிய தக்வா ஸஃப் அவ்வல்ல தொழுகிறது பெரிய விஷயம் தான் அதைவிட பெரிய விஷயம் என்ன தெரியுமா?
 
பொய் சொல்லாமல் இருப்பது, பிறரை ஏமாற்றாமல் இருப்பது, மோசடி செய்யாமல் இருப்பது, கடனை திருப்பிக் கொடுப்பது, வாக்கை நிறைவேற்றுவது, கொடுக்கல் வாங்கலில் சரியாக இருப்பது, எத்தனையோ முஸலிகள், ஹராமை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள், ஹராமை விட்டு விலகாமல் இபாதத்துகளிலே பிரயோஜனம் இருக்காது.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! செய்யக்கூடிய இபாதத்துகளின் நன்மைகளை  இந்த ஹராமான உணவு இருக்கிறதே அது போக்கிக் கொண்டே இருக்கும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரொம்ப பயந்தார்கள். எதைக் குறித்து ஹராமை குறித்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடினார்கள்.
 
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ: «اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ
 
யா! அல்லாஹ் எனக்கு உன்னுடைய அச்சத்தை கொடு எந்த அளவு எனக்கு கொடு உனக்கு மாறு செய்வதிலிருந்து அந்த அச்சம் என்னை தடுக்க வேண்டும், அந்த பயம் என்னை தடுக்க வேண்டும். ஹராமை பார்ப்பதிலிருந்து, ஹராமை கேட்பதில் இருந்து, ஹராமை சாப்பிடுவதில் இருந்து, ஹராமை பேசுவதில் இருந்து அந்த பயம் என்னை தடுக்க வேண்டும். 
 
அந்த பயத்தை எனக்கு கொடு அல்லாஹ் அல்லாஹ்விடத்தில் துஆ செய்தார்கள் அதற்குப் பிறகும் துஆ செய்தார்கள் உன்னுடைய சொர்க்கத்தில் சேர்க்க கூடிய நல்ல அமலைக் கொடு முதலாவது எதற்கு துஆ கேட்டார்கள் பாவத்தை விட்டு விலகுவதற்கு துஆ கேட்டார்கள். அதற்குப் பிறகு அமலுக்கு துஆ கேட்டார்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3502 குறிப்பு 1
 
 4/1468وعَن ابنِ مسْعُودٍ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقُولُ: اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னொரு துஆ செய்தார்கள் யா! அல்லாஹ் நேர்வழியை கொடு, ஹிதாயத்தை கொடு, தக்வாவை கொடு, பேணுதலான வாழ்க்கையை கொடு, ஒழுக்கமான ஹராமை விட்டு, தவிர்த்திருக்க  கூடிய வாழ்க்கை எனக்கு கொடு, அதற்குப் பிறகு நிறைவான செல்வத்தை கொடு என்று கேட்டார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1468
 
இன்று நாம் காசு வேணும் காசு வேணும், பணம் வேணும், பணம் வேணும் யா! அல்லாஹ் என்னை பணக்காரனா ஆக்கிவிடு என்று சொல்கிறோம்  அல்லாஹ் பார்த்தான் பணக்காரனாதான ஆகணும் கேட்ட தொலைஞ்சு போ ஹலாலான செல்வத்தை கொடு எப்படி கேக்கணும், 
 
யா! அல்லாஹ் ஹலாலான செல்வத்தை கொடு, உன்னுடைய பரக்கத் உள்ள செல்வதை கொடு, உன்னுடைய அருள் உள்ள செல்வத்தை கொடு அல்லாஹ்வுடைய நெருக்கத்திற்காக கொடுக்கப்பட்ட மார்க்கம் எவ்வளவு ஃபாஸ்ட்டா இந்த மாசத்தினுடைய  முதல் இரவிலேயே தவ்பா செய்து நம்மை சுத்தப்படுத்தி, 
 
யா! அல்லாஹ் நான் உன்னை நெருங்குவதற்கு ஆசைப்படுகிறேன் எனக்கு இந்த ரமழானை லேசாக்கி கொடு இன்று அல்லாஹ்விடத்திலே வந்து விட வேண்டும் அப்படி வருவதற்காக தான் இந்த ரமழான் கொடுக்கப்பட்டதே தவிர, எதற்காக அல்ல,    
 
இஃப்தாரை பற்றி சிந்திப்பதற்காக அல்ல, ஸகரை பற்றி சிந்திப்பதற்காக அல்ல, டிரஸ் எடுத்துக் கொண்டாடுவதற்காக அல்ல சகோதரர்களே நாம் எல்லாம் இன்று சடங்கே இல்லாத மார்க்கத்தை சம்பிரதாயங்களே இல்லாத இந்த ஷரியத்தை சடங்குகளின் மார்க்கமாக ஆகிவிட்டோம்,
 
சம்பிரதாயங்களின் மார்க்கமாக ஆக்கிவிட்டோம் இந்த தீன் தீன் ஒரு இபாதா, தீன் ஒரு தக்வா. தக்வா உடைய மார்க்கம், இது இபாதத்துக்காக உள்ள மார்க்கம் இது   ஒவ்வொன்றும் உன்னுடைய ரப்போடு உன்னை நெருக்கமாக வேண்டும், 
 
உன்னுடைய உள்ளத்தை சுத்தப்படுத்த வேண்டும் உன்னுடைய ஈமானை அதிகரிக்க செய்ய வேண்டும் உன்னுடைய சிந்தனையை சரி செய்ய வேண்டும். அதற்காக அல்லாஹ் நமக்கு இந்த இபாதத்துகளை அதிகப்படுத்த சொல்கிறான் அதற்கு கொடுக்கப்பட்டது தான் இந்த ரமழானுடைய மார்க்கம் விசேஷமாக,
 
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
 
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும். இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்) (அல்குர்ஆன் 2 : 185)
 
குர்ஆன் இறக்கப்பட்ட கண்ணியமான மாதம்  அல்லாஹ் எப்படி புகழ்ந்து சொல்கிறான் பாருங்கள் தன்னுடைய கலாம் அல்லாஹுத்தஆலா நான்கு வேதங்களை இறக்கினான், நூற்றுகணக்கான ஸுஹுஃபகளை இறக்கினான், அவற்றிலே சிறந்தது அல்லாஹ் உடைய கலாம் குர்ஆன்  இந்த குர்ஆன் மீது அல்லாஹுத்தஆலா   அவ்வளவு பிரியத்தோடு சத்தியம் செய்கிறான் எத்தனை சத்தியங்கள் இந்த குர்ஆனின் மீது,
 
يٰسٓ  وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ
 
‏யா ஸீன். ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 36 : 1, 2)
 
حم  وَالْكِتَابِ الْمُبِينِ
 
ஹா மீம். தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 44 : 1, 2)
 
قٓ  وَالْقُرْاٰنِ الْمَجِيْدِ‏
 
காஃப். கீர்த்திமிக்க குர்ஆன் மீது சத்தியமாக! (முஹம்மது அவர்கள், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர்தான்). (அல்குர்ஆன் 50 : 1)
 
மகத்துவம் மிக்க, கண்ணியம் மிக்க, கீர்த்தி மிக்க, புகழ் மிக்க குர்ஆன் மீது சத்தியமாக அல்லாஹ்வுக்கு ஒரு விஷயம் பிடித்தால் தான் அதன் மீது அல்லாஹ் திரும்ப திரும்ப சத்தியம் செய்தான், ஒரு விஷயத்தினுடைய கண்ணியத்தை, மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தால் அதன் மீது அல்லாஹ் சத்தியம் செய்வான்,
 
குர்ஆனுடைய மகத்துவத்தை, குர்ஆனுடைய கண்ணியத்தை, குர்ஆன் உடைய புனிதத்தை, குர்ஆன் உடைய உயர்வை நம்முடைய உள்ளத்திலே நிறுத்த வேண்டும் என்பதற்காக இத்தனை சத்தியங்களை அல்லாஹ் செய்கிறான்.
 
சகோதரர்களே! இந்தக் குர்ஆன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 23 ஆண்டு காலங்களிலே கொடுக்கப்பட்டு, இறக்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டது எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் தெரியுமா ? 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  இந்த குர்ஆனை ஜிப்ரீலிடம் இருந்து வாங்குவதிலே, பெற்றுக் கொள்வதிலே பிறகு இந்த குர்ஆனை தொழுகையில் ஓதுவதில் மூலமாக பிறகு கல்காக்களிலே  இந்த குர்ஆனை சகாபாக்களுக்கு மனப்பாடம் செய்து கொடுக்க வைப்பதற்காக,
 
பிறகு,  குர்ஆன் எழுதக்கூடிய அந்த எழுத்தாளர்களை அழைத்து அவர்களை எழுத வைத்து பாதுகாப்பதற்காக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பட்ட சிரமம், எடுத்த முயற்சி  சாதாரணமானதல்ல.
 
இன்று நமக்கு புத்தகத்தின் வடிவிலே இவ்வளவு இலகுவாக கிடைத்து விடுகிறது கிடைத்துக் கொண்டிருக்கிறது போனிலே வந்துவிட்டது நூற்றுக்கணக்கான அப்ளிகேஷன் இதனுடைய அருமை தெரியாமல் இருக்கிறோம்.
 
ஒன்றை எப்போதுமே இலகுவாக, சவுகரியமாக ஈஸியா கிடைத்தால்  அதனுடைய அருமை தெரியாது ஒன்று சிரமத்தோடு கிடைக்கும்போது அதனுடைய அருமை தெரியும். ஸஹாபாக்களுக்கு, தாபியீன்களுக்கு இந்தக் குர்ஆன் பல சிரமங்களுக்கு பிறகு கிடைத்தது, 
 
பல தியாகங்களுக்கு பிறகு கிடைத்தது ஆகவே, அந்த குர்ஆன் அவர்களை மாற்றியது, அப்படியே தலைகீழாக மாற்றியது, அவர்களுடைய குணங்களை மாற்றியது, அவர்களுடைய பொருளாதாரத்தை மாற்றியது, அவர்களுடைய குடும்ப வாழ்க்கையை மாற்றியது, சமூக வாழ்க்கையை மாற்றியது, அவர்களது அரசியல் வாழ்க்கையை மாற்றியது,
 
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மோத்திக நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடந்தவர்களை ஏக இறைவனான அல்லாஹ்வை பரிசுத்தமான முறையிலே வணங்குவதற்கு கொண்டு வந்து நிறுத்தியது இந்த குர்ஆன். 
 
இன்பத்தோடு இந்த குர்ஆனை ஓதினார்கள் இதிலே ஒரு சுவையை கண்டார்கள் இன்று அல்லாஹ்வை மறந்தவர்கள், உலக வாழ்க்கையிலே மூழ்கியவர்கள், அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்கள், எப்படி இசையிலே நடனங்களில் ஆடல் பாடல்களிலே தங்களுடைய உள்ளங்களை விற்றுவிட்டு, தங்களுடைய மனதை பறிகொடுத்து அதிலே மூழ்கிக் கிடக்கிறார்களோ!
 
சகோதரர்களே! சகோதரிகளே! ஸஹாபாக்கள் குர்ஆனிலே மூழ்கிக் கிடந்தார்கள், ஸஹாபாக்கள் இந்த குர்ஆனோடு வாழ்ந்தார்கள், அவர்களது பகல் நேரங்களில் உலகத் தேவைகளுக்கான உழைப்பு என்றால் அல்லது அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத்,போர் என்றால் அவர்களுடைய இரவு நேரங்கள் குர்ஆனோடு கழிந்தன,
 
இந்த ரமலான் மாதம் வந்துவிட்டதே குறிப்பாக இந்த ரமலானிலே ஸஹாபாக்கள் எப்படி குர்ஆனோடு வாழ்ந்தார்கள் என்பதை நாம் குறிப்பாக பார்க்க வேண்டிய தருணம் இது முதலாவதாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எடுத்துக் கொள்வோம், 
 
நமக்கு அழகிய முன்மாதிரி அவர்கள்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபி என்று, நம்முடைய ரசூல் என்று பெருமை பேசுவதிலே, மார் தட்டுவதிலே, பிரயோஜனம் இல்லை அவர்களுடைய உண்மையான சுன்னத்தை கற்றுக்கொள்ளவில்லை என்றால்  அவர்களுடைய வழிமுறையை அறிந்து புரிந்து அதை வாழ்க்கையில் பின்பற்றவில்லை என்றால்,
 
யூதர்களும் தான் தன்னுடைய நபிமார்களை கொண்டு பெருமை அடித்தார்கள் அல்லாஹுத்தஆலா அவர்களை எல்லாம் சபித்தான். ஏன் சபித்தான்? நபிமார்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக அவர்கள் நடந்ததால்,
 
தவ்ஹீதை போதிக்க வந்த நபிமார்களை அல்லாஹ்வுடைய பிள்ளைகளாக ஆக்கினார்கள், அல்லாஹ்வுடைய குழந்தைகளாக ஆக்கினார்கள், அவர்களுடைய கபூர்களை சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்யப்படும் இடமாக வழிபாடு செய்யப்படும் இடமாக மாற்றினார்கள் அல்லாஹ் அவர்களை சபித்தான். 
 
1330 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ هِلاَلٍ هُوَ الوَزَّانُ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: «لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا»، قَالَتْ: وَلَوْلاَ ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا
 
யூதர்களை கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக தங்களுடைய நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை அவர்கள் மஸ்ஜித்களாக மாற்றினார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1330
 
சகோதரர்களே! நபிமார்களுடைய கபூருக்கு பக்கத்திலே போய் அல்லாஹ்வை வணங்குவதற்கே அல்லாஹ்வுடைய சாபம் இறங்கட்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபித்தார்கள் என்றால்,
 
இன்று தங்களை முஸ்லிம் என்று சொல்லுகின்ற பலர் அந்தக் கப்ரையே வணங்குகிறார்களே எப்படி இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்? கப்ருக்கு பக்கத்திலே அல்லாஹ்வை வணங்கினார்கள் அல்லாஹ்விடத்திலே துஆ செய்தார்கள் அதையே சாபத்திற்குரிய ஒரு அமலாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
 
இன்று சில முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்? கப்ரையே வணங்குகிறார்கள் அதற்கே சுஜூது செய்கிறார்கள், அங்கே தவாப் செய்கிறார்கள். எந்த ஷரியத்தை பின்பற்றுகிறார்களோ? யாரை இவர்கள் நபியாக நம்புகிறார்களோ? அந்த கப்ரை தொட்டு தடவுகிறார்கள் அந்த கப்ராளி இடத்திலே எங்களை காப்பாற்றுங்கள் எங்களது தேவைகளை நிறைவேற்றுங்கள் என்று சொல்கிறார்கள். யோசித்துப் பார்க்க வேண்டும். 
 
 4998 - حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً، فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي العَامِ الَّذِي قُبِضَ فِيهِ، وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا، فَاعْتَكَفَ عِشْرِينَ فِي العَامِ الَّذِي قُبِضَ فِيهِ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமழான் மாதத்தை குர்ஆனுக்காக விசேஷமாக ஆக்கினார்கள் எப்படி ஆக்கினார்கள்? ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்  எப்போதும் வஹியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொண்டு வருவார்கள், ரமழான் மாதம் வந்துவிட்டால் புதிய வஹிக்காக மட்டும் அவர்கள் இறங்க  மாட்டார்கள், பழைய வஹியை ரிவைஸ் செய்வதற்காக,  
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4998
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து அதைக் கேட்டு திருத்தி கொடுப்பதற்காக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஓத வைத்து தான் கேட்பதற்காக தான் ஓதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்பதற்காக விசேஷமாக ரமழானுடைய இரவிலே இறங்கி விடுவார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4998
 
குர்ஆனுடைய ஆசிரியர் மூஅல்லிமுல் குரான் ஜிப்ரில் யார்? ஜிப்ரீல் அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம்  யார்? மூஅல்லிமுல் குரான் மூஅல்லிமுர் ரஸூல்  ரஸூலுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தவர்,
 
وَالنَّجْمِ إِذَا هَوَى ,مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى ,وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى ,إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى ,عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ,ذُو مِرَّةٍ فَاسْتَوَى
 
‏(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது, உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.) 
 
இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்.  இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. (பலவிதமான) ஆற்றல்களால் கடும் பலசாலி(யான ஜிப்ரீல்) அவருக்கு இதை கற்பித்தார்.  அவர் (வலிமையும்) அழகிய தோற்றமு(ம் உ)டையவர். ஆக, அவர் (நபியை நேருக்கு நேர்) சமமாக சந்தித்தார். (அல்குர்ஆன் 53 : 1,2, 3, 4, 5, 6)
 
அல்லாஹுத்தாலா ஜிப்ரிலை புகழும் போது அவ்வளவு பிரியத்தோடு புகழ்வான். ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹுத்தஆலா ரொம்ப பிரியத்தோடு புகழ்வான் நீங்கள் பாருங்கள் அழகானவர் என்று  அல்லாஹ் வர்ணிக்கிறான் யாரை? 
 
ஜிப்ரீல் (அலை) அழகானவர், வலிமை மிக்கவர், ஆற்றல் மிக்கவர் இந்த குர்ஆனை ஜிப்ரீல் அழகானவர் வலிமை மிக்கவர் ரசூலுல்லாஹ்விற்கு கற்றுக் கொடுத்தார். அதைப்போல சூரத் தக்வீருடைய வசனம் அல்லாஹ் எப்படி சொல்கிறான்?
 
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ,ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ ,مُطَاعٍ ثَمَّ أَمِينٍ
 
நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரீல்) உடைய கூற்றாகும் (-அவர் மூலம் இறக்கப்பட்ட இறை வேதமாகும்). (அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர். அங்கு (வானவர்களின்) கீழ்ப்படிதலுக்கு உரியவர், (அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர். (அத்தகைய வானவத் தூதர் ஜிப்ரீல் வாயிலாக இறக்கப்பட்ட கூற்றாகும் இந்த குர்ஆன்.) (அல்குர்ஆன் 81 : 19, 20, 21)
 
இந்தக் குர்ஆன் கண்ணியம்மான தூதர் மூலமாக இறக்கப்படக்கூடிய வார்த்தை இது யாரைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறான் ஜிப்ரில், கண்ணியமான ரசூல் ஜிப்ரீல் அவரிடம் கொடுக்கப்பட்டு கண்ணியமான தூதருக்கு  சேர்ப்பிக்கப்படக்கூடிய வாக்கியம் இது
 
ذِىْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ‏ அவர் வலிமை மிக்கவர் அர்ஷுடைய இறைவன் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் எல்லா மலக்குகளுக்கும் தலைவர் நம்பிக்கைக்குறியவர் என்று அல்லாஹுத்தஆலா புகழ்கிறான்.
 
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ ,فَمَنْ شَاءَ ذَكَرَهُ ,فِي صُحُفٍ مُكَرَّمَةٍ ,مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ ,بِأَيْدِي سَفَرَةٍ ,كِرَامٍ بَرَرَةٍ
 
அவ்வாறல்ல! நிச்சயமாக இ(ந்த அத்தியாயமான)து ஓர் அறிவுரை ஆகும். ஆகவே, யார் (நேர்வழி பெற) நாடுகிறாரோ (அவர்) இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்.  (இந்த வேதம்) கண்ணியமான ஏடுகளில், உயர்வான, தூய்மையான ஏடுகளில் இருக்கிறது.  அது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணியவான்கள், நல்லவர்கள். (அல்குர்ஆன் 80 : 11,12. 13 , 14, 15, 16)
 
குர்ஆனை அந்த அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய விசேஷமான அந்த புத்தகத்திலிருந்து அதை எடுத்து சுமந்து கொண்டிருப்பதற்காக  வானவர்களை அல்லாஹ் வைத்திருக்கிறான். அல்லாஹ் சொல்கிறான் கண்ணியமான மலக்குகளுடைய கையிலே இருக்கிறது, கண்ணியமான மலக்குகளுடைய கையிலே இந்த வேதம் இருக்கிறது. (அல்குர்ஆன் 80 : 11,12. 13 , 14, 15, 16)
 
பரிசுத்தமானது அது உயர்வானது அது அன்பு சகோதரர்களே! எவ்வளவு அலட்சியம் நமக்கு இந்த குர்ஆனோடு எவ்வளவு ஒரு புறக்கணிப்பு அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் , எவ்வளவு தூரம் இந்த குர்ஆனோடு இந்த குர்ஆனில் இருந்து நாம் இருக்கிறோம். 
 
1400 ஆண்டுகள் ஆகிவிட்டன இன்னும் இந்த உம்மத் இந்த குர்ஆனை நான் சொல்வது இந்த உம்மத்தில் உள்ள நூத்துக்கு நூறு இந்த குர்ஆனை இந்த உம்மத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சரியாக ஓதத் தெரியாத மக்களாக இருக்கிறார்கள். அல்ஹம்து சூராவில் நூறு தப்பு இருக்கும் இருக்கிறது,
 
ஏழு ஆயத்து அல்ஹம்து ع  வராதவர்கள் ض வராதவர்கள் இப்படி உச்சரிப்பில் பார்த்தால் தப்புக்கு மேல தப்பு சரி அதற்கு அப்புறம் ஷிஃபத் தஜ்வீத் சட்டம் வந்தால் தொலைஞ்சு போச்சு மொத்தமா சரி அப்புறம் தாண்டி  ஓதுறது புரியுதா? ஓதுறது புரிஞ்சிருந்தா இந்த உம்மத்துல இன்னைக்கு ஷிர்க்கும், பித்அத்தும் வந்திருக்குமா? இங்கே
 
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏
 
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்குர்ஆன் 1 : 5)
 
ஓதிவிட்டு பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே தர்கா என்ற பேரிலே கோவிலை கட்டிக்கிட்டு அங்கே போய் துஆ கேட்டுட்டு நிற்பார்களா? செய்வாங்களா இங்க என்ன சொல்றாங்க ?
 
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏
 
ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹசனா என்று இங்கே துஆ செய்தார்கள் அப்புறம் என்ன அங்கே போய் துஆ செய்யறாங்க எந்த துஆ பவர்ஃபுல் எந்த துஆ சரி எந்த துஆ தப்பு ரெண்டுத்துல ஒன்னு தான் சரியா இருக்கும் உன்னை இங்க செஞ்சது சரியா இருக்கும் இல்ல அங்க செஞ்சது சரியா இருக்கும் ஏன்னா இஸ்லாமே என்ன ? லாயிலாஹ இல்லல்லாஹ்,
 
اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا  اِنَّ هٰذَا لَشَىْءٌ عُجَابٌ‏
 
(இன்னும் அவர்கள் கூறினார்கள்:) “இவர் தெய்வங்களை (எல்லாம்) ஒரே ஒரு தெய்வமாக மாற்றிவிட்டாரா? நிச்சயமாக இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.” (அல்குர்ஆன் 38 : 5)
 
குரைஷிகள் உடைய பிரச்சனையே என்ன? எல்லா கடவுளையும் எப்படி ஒரே கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும்? எல்லா கடவுளையும் விட்டுட்டு ஒரே கடவுளை வணங்குன்னு சொல்றியே அதுதான் பிரச்சனை வணங்குவது தான் பிரச்சனை ரப்புங்கறதுல அல்லாஹ்ங்கறதுல எந்த ஒரு கருத்து வேற்றுமையும் கிடையாது.
 
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ
 
(நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று? அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை (-வணங்குபவை)ப் பற்றி நீங்கள் அறிவியுங்கள்! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை (என்னை விட்டு) நீக்கிவிடக்கூடியவையா? அல்லது, அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை (என்னை விட்டும்) தடுத்துவிடக்கூடியவையா?” (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவும்.” (அல்குர்ஆன் 39 : 38)
 
வானங்களைப் படைத்தவன் யார் பூமியை படைத்தவன் யார் என்று கேட்டால் அல்லாஹ் என்று நான் சொல்வார்கள் உணவளிப்பவன் யார் என்று கேட்டால்,
 
قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ
 
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு யார் உணவளிக்கிறான்? அல்லது, (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வான்? இன்னும், இறந்ததிலிருந்து உயிருள்ளதையும்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் உற்பத்தி செய்கிறான்? இன்னும், எல்லா காரியங்களையும் யார் திட்டமிட்டு நிர்வகிக்கிறான்?” ஆக, (அதற்கு பதிலில்), “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, நீர் கூறுவீராக: “ஆகவே, நீங்கள் அந்த அல்லாஹ்வை அஞ்சவேண்டாமா?” (அல்குர்ஆன் 10 : 31)
 
யார் செவிக்கு, பார்வைக்கு, உங்களுடைய அறிவுக்கு உரிமையாளர் யார் என்று கேட்டால் அல்லாஹ் என்று தான் சொல்வார்கள் அதுல பிரச்சினை கிடையாது. இன்றைக்கு இருக்கிற முஷ்ரிக்குக்கும் கடவுள் எத்தனை பேர்ன்னு கேட்டா எத்தனை பேர் சொல்லுவாங்க ஒருத்தன் தான்பா பிரச்சினை எதுல இபாதத்துல,
 
قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ
 
(நபியே) கூறுவீராக! ஆக, அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாதவர்களையா நான் வணங்க வேண்டும் என்று எனக்கு நீங்கள் ஏவுகிறீர்கள்? (அல்குர்ஆன் 39 : 64)
 
அறியாதவர்களை அல்லாஹ் அல்லாத ஒருவனை  நான் வணங்க வேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்கிறீர்களா பிரச்சனை இபாதத்திலே,
 
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ,مِنْ شَرِّ مَا خَلَقَ ,وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
 
(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மக்களின் அரசன்,மக்களின் வணக்கத்திற்குரியவன், (அல்குர்ஆன் 114:1, 2, 3)
 
ரப்பு  அல்லாஹ் அடுத்து இலா‌ஹும் அல்லாஹ் தான் முடிவுக்கு வந்தா தான் நீ முஸ்லிம் இல்லனா முஷிரிக் எப்படி ரப்பு அல்லாஹ் என்று ஏற்றுக் கொண்டதால் முஸ்லிமாக முடியுமா? முடியாது இந்த துனியாவுக்கு ஒரே அல்லாஹ் தான் ஏற்றுக்கொண்டால் முஸ்லிமாக முடியுமா? முடியாது அடுத்து எங்கே வரணும்,
 
قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنْذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ
 
(நபியே!) கூறுவீராக: “எந்த பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “(சாட்சியால் மிகப் பெரியவன்) அல்லாஹ்தான்! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன் ஆவான். இன்னும், இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது யாருக்கு சென்றடைகிறதோ அவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான் அதற்கு) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவன் எல்லாம் வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே ஓர் இறைவன்தான். (பலர் அல்ல.) இன்னும், நிச்சயமாக நான் நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகியவன் ஆவேன்.” (அல்குர்ஆன் 6 : 19)
 
அல்லாஹ் உடன் வணங்கப்படும் இன்னொரு கடவுள்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் சாட்சி சொல்வீர்களா? நபியே! நீங்கள் சொல்லுங்கள் நான் சாட்சி சொல்ல மாட்டேன் என்று, ரசூல் உடைய அர்த்தம் என்ன? நபியுடைய அர்த்தம் என்ன?
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 31)
 
நீங்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று எதை செய்தாலும் இந்த நபி காட்டி தந்த முறையில் தான் செய்ய வேண்டும் அதுதான் இபாதத் இஸ்லாமுக்கு மற்ற மதங்களுக்கும் இடையிலே உள்ள வித்தியாசம் என்ன? நாம் எதை செய்தாலும் குர்ஆனில் இருக்கிறதா , நபி வழிகாட்டி இருக்கிறார்களா, ஸஹாபாக்கள் செய்தார்களா, நபியுடைய சமுதாயம் செய்ததா, என்று ஆதாரத்தோடு அறிந்து செய்வோம்.
 
وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
 
இன்னும், “யார் யூதர்களாக, அல்லது கிறித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர (எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார்” என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” (அல்குர்ஆன் 2 : 111)
 
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்  ஆதாரத்தை கொண்டு வாருங்கள் நம்முடைய தீன்  இது ஆதாரத்துடைய மார்க்கம் இது அல்லாஹுத்தஆலா நூற்றுக்கணக்கான வசனங்களில் ஷிர்கை படிக்கும் பொழுது ஷிர்கை பற்றி, இணை வைத்தல் பற்றி முஷ்ரிக்குகளை பற்றி அல்லாஹ் குறை சொல்லும் பொழுதே எப்படி சொல்கிறான்? என்ன அடிப்படை அல்லாஹ் சொல்கிறான்.
 
إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنْفُسُ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمُ الْهُدَى
 
இவை எல்லாம் (வெறும்) பெயர்களாகவே தவிர (உண்மை) இல்லை. இந்த பெயர்களை நீங்களும் உங்கள் மூதாதைகளும் (இந்த சிலைகளுக்கு) சூட்டினீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு ஆதாரம் எதையும் இறக்கவில்லை. வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புவதையும் தவிர இவர்கள் (உண்மையான ஆதாரத்தை) பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து (வணங்கத் தகுதியானவன் யார் என்பதை விவரிக்கும்) நேர்வழி திட்டவட்டமாக வந்திருக்கிறது. (அல்குர்ஆன் 53 : 23)
 
நீங்கள் வணங்குவதற்கு அல்லாஹ் ஆதாரம் இறக்கி இருக்கிறானா காட்டுங்கள் பார்க்கலாம் இன்றைக்கு சகோதரர்களே! இந்த தீன் எப்படி ஆயிப்போச்சு? இந்த தீன் என்ன ஆயிடுச்சி? யார் என்ன சொன்னாலும் அது மார்க்கம் யார் எதை சொன்னாலும் அது மார்க்கம் எப்படி செஞ்சாலும் அல்லாஹ் அதை ஏற்றுப்பான். நான் இதை செய்றது தப்பா  கேள்வி கேட்டா நான் தொழுதது தப்பா, நான் திக்ரு செஞ்ச தப்பா, நான் ஸலவாத்து ஓதினால் தப்பா, 
 
நான் இதை செஞ்சா தப்பா தப்பு சரி என்பது நீயும் நானும் முடிவு செய்வதல்ல ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்ய சொன்னா அது சரி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்ய சொன்னது சரி எதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யவில்லையோ அதை செய்வது தவறு. எதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்ய சொன்னார்களோ அதை செய்றது இபாதத் எதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்ய சொல்லவில்லையோ அதை செய்வது பித்அத்,
 
حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ, مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا، فَهُوَ رَدٌّ
 
ஏன் தக்பீர் இப்படி கட்றோம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி கட்ட சொன்னாங்க. ஏன் சூரா ஃபாத்திஹாவை ஒவ்வொரு ரக்ஆத்திலும் ஓதுகிறோம் ரசூலுல்லாஹ் ஓத சொன்னாங்க ருக்கூவில் போய் இந்த இந்த திக்ரை தான் செய்யணும் சுபஹான ரப்பில் ஆலிம் ருக்கூல்ல தான் செய்யணும் அதை சுஜூத்ல செய்யக்கூடாது சுஜூதுல சுபஹான் ரப்பில் ஆல அதுதான் ஓதுறோம் அதை  ருக்கூவில் ஓதக்கூடாது ஏன்? 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மது, புகாரி, எண் : 2547, 2697
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படித்தான் கற்றுக் கொடுத்தார்கள். ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுப்பதற்காகவே வந்தார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாம் கற்றுக் கொடுக்கப்பட்டவர்கள் நாம் யார் கற்றுக் கொடுக்கப்பட்டவர்கள் நம்முடைய ஆசிரியர் யார்?
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மீறி நாம் எதுவும் செய்ய முடியாது. செய்தால் அல்லாஹ்  ஒத்துக்க மாட்டான். செஞ்சா ரப்பு ஒத்துக்க மாட்டான் நீ என்னை திருப்தி படுத்தனுமா என் நபிக்கு பின்னாடி வா
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ,قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 31)
 
என் நபி செய்வதை போல் செஞ்சா நான் உன்மேல் அன்பு வைக்கிறேன் முஹபத் வைக்கிறேன்னு சொல்கிறான். (arabi name) பெரிய இமாம் தாபீயின் அமீருல் முஃமினின் ஃபில் ஹதீஸ் அதாவது ஹதீஸ் கலையின் உடைய மலை மலைகள் எல்லாம் அவரை அமீர் என்று சொல்வார்கள் ஹதீஸ்களை அப்படிப்பட்ட இமாம் அவங்க என்ன தெரியுமா சொல்றாங்க உன் தலையை சொரியறதா இருந்தா கூட ஒரு ஆதாரம் இருக்குனா அந்த ஆதாரத்தை தெரிஞ்சுக்கிட்டு தலையை சொறி சுன்னத்தின் அடிப்படையில் செய் என்றார்கள்,
 
தலைய சொரியரத்துக்கு கூட ஒரு சுன்னத் இருக்குமேயானால் அதைத் தெரிந்து கொண்டு செய் என்கிறார்கள் அல்லாஹு அக்பர் இன்றைக்கு பார்த்தால் தொழுகை ஒரு பக்கம் போய்கிட்டு இருக்கு, நோன்பு ஒரு பக்கம் போய்கிட்டு இருக்கு, ஜகாத் ஒரு பக்கம் போய்கிட்டு இருக்கு, ஹஜ் ஒரு பக்கம் போய்கிட்டு இருக்கு சின்ன உதாரணத்தை பாருங்கள். 
 
 21312 - حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ الْحِمْصِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا عَجَّلُوا الْإِفْطَارَ، وَأَخَّرُوا السُّحُورَ
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள். ஸகரை பிற்படுத்துங்கள் என்று சொன்னார்கள் எந்த அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸகரை செய்வார்கள் அந்த வெளிச்சம் வானத்திலிருந்து ஒன்னு நீட்டா வரக்கூடிய வெளிச்சம் அப்பல்லாம் சாப்பிடலாம் அடுத்து அகலமா வரக்கூடிய வெளிச்சம் அதுவரைக்கும் சாப்பிடலாம்,
 
அப்பதான் அதான் சொல்லப்படும் நம்ம ஆட்கள் ஏற்கனவே வக்து அதானை 25 நிமிடத்திற்கு முன்னாடி போட்டுட்டாங்க அதனுடைய வக்தே அதுக்கு 35,40 நிமிஷத்துக்கு முன்னாடி ஸஹர் முடிவுன்னு போட்டுட்டான் என்னையா நியாயம் இது, அநியாயம் இல்ல, அக்கிரம்மில்ல அல்லாஹ்வுடைய தீனை எல்லை மீறுதல் இல்ல,
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21312
 
576 - حَدَّثَنَا حَسَنُ بْنُ صَبَّاحٍ [ص:120]، سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَزَيْدَ بْنَ ثَابِتٍ: «تَسَحَّرَا فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا، قَامَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى»، قُلْنَا لِأَنَسٍ: كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلاَةِ؟ قَالَ: «قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً
 
கேட்கப்பட்டது! ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  சுபுஹு தொழுகைக்கு தொழுகை நடத்துனதுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹர் செஞ்சதுக்கும் எவ்வளவு இடைவெளி நேரம் இருந்துச்சு அப்போ இந்த வாட்ச் கிடையாது, மணி கிடையாது கால் மணிநேரம், அரை மணி நேரம், முக்கா மணி நேரம் சொல்ல முடியாது. 
 
எவ்வளவு நேரம் இருந்துச்சுன்னு கேக்குறாங்க. அப்ப என்ன தெரியுமா பதில் சொன்னாங்க நாற்பதிலிருந்து 50 ஆயத்து ஓதுர வரைக்கும் எவ்வளவு நேரம் ரசூலுல்லாஹ் ஸகரை முடித்துவிட்டு சுபுஹுக்கு தொழுவதற்கு இடையில் எவ்வளவு ஆயத்து ஓதலாம் 40 ஆயத்து தபாரக்கல்லதி சூரா எவ்வளவு நேரம் ஆகும் ? அஞ்சு நிமிஷம் ரொம்பவும் பொறுமையா ஓதுனா ஒரு ஏழு எட்டு நிமிஷம் அவ்வளவு தான்,
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 576
 
1698 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ، عَجِّلُوا الْفِطْرَ؛ فَإِنَّ الْيَهُودَ يُؤَخِّرُونَ
 
இன்னைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே ஸகரை பண்ணிட்டு என்ன ஸகர் இது சரி இஃப்தார் நோன்பு திறப்பது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் நோன்பை திறப்பதை தீவிர படுத்துங்கள் சீக்கிரமா திறங்கன்னு சொன்னாங்க அப்படி வெளிச்சம் இருந்துகிட்டே இருக்கும் ஸஹாபாக்கள் நோன்பு திறந்திடுவாங்க, 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா  இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1698
 
முடிஞ்சு போச்சு அவ்வளவுதான் மஹ்ரிப் வந்துருச்சு அப்படி சூரியன் மறைந்து விட்டால் முடிஞ்சு போச்சு இங்கே மஹ்ரிப் வக்த் போட்டு இருக்கிறதே சூரியன் பூமிக்கு உள்ளார கீழே போனதுக்கப்புறம் தான் அதுக்கு அப்புறம் பத்து நிமிஷம் பேணுதலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியாத பேணுதல், அவர்கள் இடத்தில் இல்லாத பேணுதல் உன்னிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் நீ பொய்யன்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா  இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1698
 
இமாம் முத்தக்கீம் யார்? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேணுதல், இறையச்சம் அதனுடைய உச்சமே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் அவங்க சீக்கிரமா நோன்பு திறங்கன்னாங்க இவன் 15 நிமிஷம் கழிச்சு நோன்பு திறந்து உட்கார்ந்துட்டு இருப்பான் கேட்டா பேணுதல் கன்ஃபார்மா ஒத்துக்குவேன் பேசாம இஷாவுக்கு நோன்பு திறந்திடு மொத்தமா இஷாவுக்கு நோன்பு திறந்திருந்திடுங்க ரொம்ப கன்ஃபார்ம் டபுள் கன்ஃபார்ம் ஆயிடும். 
 
சொன்னார்கள்: ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் ஸகரை பிற்படுத்துங்கள் இஃப்தாரை சீக்கிரம் படுத்துங்கள் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் அவங்க அப்படி லேட் ஆக்குவாங்க.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா  இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1698
 
 21312 - حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ الْحِمْصِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا عَجَّلُوا الْإِفْطَارَ، وَأَخَّرُوا السُّحُورَ
 
இன்னும் சொன்னார்கள்: ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனது உம்மத்திலே நன்மைகள் இருக்கும் ஸகரை லேட் ஆக்கி தாமதப்படுத்தி இஃப்தாரை சீக்கிரம் படுத்தினால் இன்னைக்கு ஏன் உம்மத்து இந்த சைத்தானுங்க கையால் அடி வாங்கிட்டு இருக்கு ரசூலுல்லாஹ் சொன்னாங்க என் உம்மத்து நன்மையில் இருக்கும் எப்ப ஸகரை தாமதப்படுத்தி இஃப்தாரை துரிதப்படுத்தினால் என் உம்மத்து நன்மையில் இருக்கும்னு சொன்னாங்க.
 
அறிவிப்பாளர் : அபூ தர்  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 21312
 
இப்ப நாம ஏன் அடிவாங்குறோம்னு புரிஞ்சுகிட்டோம். எல்லாமே ஒரு காரணமா இருக்கும் ஒவ்வொரு சுன்னத்துக்கு மாறு செய்யும் போது அது ஒரு முஸிபத்துக்கு காரணமா இருக்கும். உஹதுல்ல அப்படித்தான் நடந்துச்சு இல்லையா ஒரு கட்டளைக்கு மாறு செய்ததால் அத்தனை பேரும் ஷஹிதானர்கள் 70 பேரு ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்துக்கு மாறு செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَه وَيَتَعَدَّ حُدُوْدَه يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا
 
இன்னும், எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, அவனுடைய சட்டங்களை மீறுவாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதில் (அவர்) நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவருக்கு உண்டு. (அல்குர்ஆன் 4 : 14)
 
யார் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் மாறு செய்வார்களோ அவர்கள் வகுத்த கோட்டை அவர்கள் காட்டிய வழியில் மீறுவார்களோ அல்லாஹ் அவர்களை நரகத்தில் புகுத்துவான். இந்த ரமலான் மாதம் என்பது. இது குர்ஆனுடைய மாதம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன செய்வார்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களோடு இந்த குர்ஆனை பகிர்ந்து கொள்வார்கள். 
 
ஒவ்வொரு இரவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த ஆண்டு வரை இறங்கிய குர்ஆனை அவர்கள் மனனம் செய்து வைத்திருந்தார்கள் அல்லவா அதை ஜிப்ரீலுக்கு ஓதி காட்டுவார்கள் ஜிப்ரீல் அதைக் கேட்பார்கள் கேட்டு சரி படுத்துவாங்க. குர்ஆன் பாதுகாக்கப்பட்டது இதற்குப் பெயர் முதாரசா முஆரழா),
 
4998 - حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً، فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي العَامِ الَّذِي قُبِضَ فِيهِ، وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا، فَاعْتَكَفَ عِشْرِينَ فِي العَامِ الَّذِي قُبِضَ فِيهِ  
 
குர்ஆனை ஜிப்ரலுக்கு சமர்ப்பிப்பார்கள் ஓதி காட்டுவார்கள் ஜிப்ரில் அதை கேட்பார்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த ஆண்டு வஃபாத் ஆனார்களோ அப்போது குர்ஆனை இரண்டு முறை ஹத்தம் செய்தார்கள் ஜிப்ரீல் இடத்தில் ஓதி காட்டி  உங்களுக்கு ஒரு சில அந்த தாபியீன்கள் ஸலஃப் தாபியீன்கள் அவங்களுடைய அந்த குர்ஆன் ஓதக்கூடிய சில சம்பவங்களை உங்களுக்கு சொல்லி காட்டுறேன்,
 
பாருங்க அவங்க புரிந்திருந்தாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்க்கையை இப்ப நம்மள மாதிரி கிடையாது ஒப்பிட்டு பாக்கணும் நம்ம அப்பதான் கொஞ்சமாவது நமக்கு சொரணை வரும் கொஞ்சமாவது நமக்கு புத்தி வரும் இல்லையா இப்ப ஏன் நம்ம காசு சம்பாதிக்கணும் காசு சம்பாதிக்கணும் பணம் சம்பாதிக்கணும்னு நாயா பேயா அலையுறோம் ஏன் அலைறோம்? எல்லாத்தையும் பார்க்கிறோம் எப்படி பார்க்கிறோம் ஆ! பங்களா அப்ப நமக்கு ஆசை வரும் அல்லாஹ் பார்க்காதேனு சொல்றத நம்ம பார்க்கிறோம்.
 
وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِه اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ
 
இன்னும், இ(ணைவைப்ப)வர்களில் (இவர்களைப்) போன்ற பலருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் கொடுத்த (இவ்வுலக) இன்பத்தின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். நாம் அவர்களை அதில் சோதிப்பதற்காக (கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடை (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்.(அல்குர்ஆன் 20 : 131)
 
காஃபிர்களுக்கு கொடுத்து செல்வத்தை நீ பார்க்காதடா என்று அல்லாஹுத்தஆலா  சொன்னான் அதை பார்க்கிறோம்.
 
وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ‌  تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا‌
 
மேலும், தங்கள் இறைவனை அவனுடைய முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் (அவனை தொழுது) பிரார்த்திப்பவர்களுடன் உம்மை தடுத்து (அமர) வைப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்பியவராக அவர்களை விட்டு உம் இரு கண்களும் அகன்றிட வேண்டாம். இன்னும், எவனுடைய உள்ளத்தை நம் நினைவை மறந்ததாக ஆக்கிவிட்டோமோ அவனுக்குக் கீழ்ப்படிந்து விடாதீர்! அவன் தனது (கெட்ட) விருப்பத்தையே பின்பற்றினான். மேலும், அவனுடைய காரியம் எல்லை மீறியதாக (நாசமடைந்ததாக) ஆகிவிட்டது. (அல்குர்ஆன் 18 : 28)
 
நபிக்கு அல்லாஹ் சொல்கிறான் இந்த காஃபிர்களுக்கு கொடுத்த உலக அலங்காரத்தை நீங்க பாக்காதீங்கன்னு சொன்னா, அல்லாஹ் பார்க்காதன்னு சொன்னத பைனா கோளார் வச்சு பாத்துட்டு உக்காந்துட்டு இருக்கோம். நின்னு பார்த்துட்டு உக்காந்துட்டு இருக்கோம் இல்லையா அல்லாஹ் பாருன்னு சொன்னத பார்க்க மாட்டேங்கிறோம். அல்லாஹ் நபிமார்களை பாருங்க,
 
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ‌ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ
 
(நபியே!) அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை நேர்வழி நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே - அதையே நீர் பின்பற்றுவீராக. “இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். இ(ந்த வேதமான)து இல்லை, அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே தவிர’’ என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 6 : 90)
 
நபிமார்களுடைய வழியில் போங்க
 
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
 
‏(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து! (அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர். (அல்குர்ஆன் 1 : 6, 7)
 
யூதர்கள் பின்னாடி போய்டாதீங்க, இந்த நசராணிகள் பின்னாடி போயிடாதீங்க, இந்த பாவிகள் பின்னாடி போய்டாதீங்க,
 
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ‏
 
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌  وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ‏
 
ذٰ لِكَ الْـفَضْلُ مِنَ اللّٰهِ‌  وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا‏
 
எவர்கள் அல்லாஹ்விற்கும், தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், சத்தியவான்கள், (போரில்) உயிர் நீத்த தியாகிகள், நல்லவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில் சொர்க்க பூங்காக்களில்) இருப்பார்கள். இவர்கள் அழகிய தோழர்கள் ஆவார்கள். இந்த அருள் (உங்களுக்கு) அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டதாகும். (அனைத்தையும்) நன்கறிந்தவனாக அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் : 4 : 69, 70)
 
இந்த பாருங்க நபிமார்களே! இந்த பாருங்க ஸஹாபாக்களே  ஸித்திக்க பாருங்க, இந்த பாரு மற்றங்க ஸஹிது உமர், உஸ்மான  பாருங்க இந்த பாருங்க அலியை பாருங்க, இந்த பாருங்க, இப்னு மஸ்வூத‌ பாருங்க, உபையை பாருங்க, 
 
கஅப் பாருங்க அப்டின்னு ஸ‌ஹாபாக்களை அல்லாஹ் பாக்க சொன்னா இவர் எதை பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் நான்கு பெரிய மார்க்க அறிஞர்களில்  இமாம்களில் ஒருத்தர் இமாம் மாலிக்கு இப்னு அனஸ் மதினாவின் உடைய இமாம் என்று பெயர் பெற்றவர் அவங்க என்ன செய்வாங்க ரமலான் மாதம் வந்துவிட்டால் ஹதிஸ்  பாடம் நடத்துவதை நிறுத்தி விடுவார்கள். 
 
நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க குர்ஆனை கையில் எடுத்து ஓத ஆரம்பித்து விடுவார்கள்   வேறு எந்த வேலையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த த்ராவிஹ் பிறகு பயான் வைத்துவிட்டு பயான் ஒரு மணி நேரம் த்ராவிஹ் முக்கா மணி நேரம்.த்ராவிஹ் இரண்டு மணி நேரம் தொழுங்கள் பயான் ஒரு பத்து நிமிடம் வைத்துக் கொள்ளுங்கள்,
 
ஒரு தர்பியத்துக்கு த்ராவிஹ் 1 1/2 மணி நேரம் வையுங்கள் பயான் ஒரு ஐந்து நிமிடம் 10 நிமிடம் உற்சாகத்திற்கு இன்றைக்கு த்ராவிஹ் எப்படி ஆகிவிட்டது அந்த காலத்தில் இமாம்கள் சொல்வார்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் என்று சென்னையில் இருந்து ஒரு ட்ரெயின் போகும் டெல்லிக்கு நிக்கவே நிற்காது மொத்தம் ஏழு ஸ்டாப் தான்  அதுக்கு அப்புறம் ரெண்டு ஸ்டாப் போகிற ட்ரெயின்லா உண்டு, 
 
அந்த மாதிரி கடகடவென்று ஓதுகிற இமாமுக்கும் பாதி புரியாது கேட்கிற முஸல்லிக்கு மொத்தமாக புரியாது. என்னங்க திலாவத்து இப்படியா ஓதினார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ? இப்படியா ஸஹாபாக்கள் ஓதினார்கள்? இது திலாவத்தா? குர்ஆன் எப்படி ஓத வேண்டும்
 
وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ‏
 
அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 4)
 
குர்ஆனை நிறுத்தி  நிறுத்தி ஓத வேண்டும் வக்ஃப் தர்த்தில்னா என்னன்னு அறிவது எப்போ ரலியல்லாஹு அன்ஹு இடத்தில் கேட்கப்படுகிறது வக்ஃபை அறிந்து ஓதுவது தர்த்தில் என்று சொன்னார்கள் அல்ஹம்தில் ஆரம்பித்தால் கடைசியில வலதாலின்ல போய் முடிக்கிறது,
 
வேணா அதுக்கு நீங்க பேசாம அப்துல்லாஹ் இப்னு முபாரக் மிகப்பெரிய முஹதிஸ் தபீதாபீயின்களில் மிகப்பெரிய கல்விமான் அவர்கள் பெயரை சொன்னாலே அழுது விடுவார்கள். உலமாக்களில் அப்படிப்பட்டவர்கள் குர்ஆனை புரியாமல் ஓதுவதற்கு வெறும்
 
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ‏
 
பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது, (அல்குர்ஆன் 99 : 1)
 
அந்த ஒரு சூராவை திரும்பத் திரும்ப ஓது அது எனக்கு பிரியமானது நீங்கள் இப்போது ஓதுவதை போல கடகடவென்று புரியாமல் ஓதுவதை விட குர்ஆன் ஓதினால் அதைக் கேட்பவர்கள் மனப்பாடமாக வேண்டும். அதைக் கேட்பவர்களின் உள்ளச்சம் அங்கே அதிகமாக வேண்டும்.
 
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَه خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌
 
இந்த குர்ஆனை நாம் ஒரு மலையின் மீது இறக்கி இருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் முற்றிலும் பணிந்ததாகவும் பிளந்து விடக்கூடியதாகவும் அதை நீர் கண்டிருப்பீர். இந்த உதாரணங்கள், இவற்றை மக்களுக்கு நாம் விவரிக்கிறோம், அவர்கள் சிந்திப்பதற்காக. (அல்குர்ஆன் 59 : 21)
 
அல்லாஹ் சொன்னான்    குர்ஆனை நாம் மலையின் மீது இறக்கி இருந்தால் நபியே! மலையை நீங்கள் பார்ப்பீர்கள் எப்படி என்றால் பயந்து இருக்கும் அந்த மலை அச்சத்தால் வெடித்து தெரித்திருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். ஒரு மலை நம்ம மனுஷன் பரிதாப பட்ட மாதிரி, பாவப்பட்ட மாதிரி, எந்த உணர்வும் இல்லை அழுகணும் தக்வா வரணும் ஈமான் அதிகரிக்கணும்,
 
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
 
நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்கள். (அல்குர்ஆன் 8 : 2)
 
குர்ஆன் ஓதினால் ஈமான் அதிகரிக்கும்  என்கிறான் நீங்க சொல்லுங்கள் மனதில் கையை தொட்டு த்ராவிஹ் முடிக்கும் போது என் ஈமான் 100 வந்தது என்று ரொம்ப பேருக்கு சில இமாம்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஓடிவிட்டார்கள் என்றால்
 
புடிக்க மாட்டேங்குது அமைதியா ஓதிட்டா நாலு பேரு நாலு திசையில இமாம்சாவை சந்திக்கிறார்கள் இமாம்சா கொஞ்சம் சீக்கிரம் படியுங்கள் கொஞ்சம் சீக்கிரம் முடியுங்கள் எதுக்கு சாவவா போற, உனக்கு என்ன மௌத்தா வரப்போகுது, இங்கே பள்ளியில் தர்காவின் இமாம்கள் இமாம் மாலிக்ல ஸஹாபாக்கள் எப்படி குர்ஆன் ஓதினார்கள் என்று அவர் ஓதினார் என்றால் ஓதிக் கொண்டே இருப்பார் உபை இப்னு கஆப் அந்த பக்கம் பெண்களுக்கு தனியா ஜமாத் வைக்க சொல்லிவிட்டார். அவ்வளவு கூட்டம் உமர்,
 
ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவங்களுக்கு தனி ஒரு இமாம் இந்த பக்கம் மஸ்ஜித் நபவியில் உபை இப்னு கஆப் ஓதினார்கள் என்றால் அந்த சஹாபாக்கள் வயதானவர்கள் கையில் அஸ்ஸா வைத்திருப்பார்கள் அந்த அஸ்ஸாவில் கொஞ்சம் சாய்ந்து கொள்வார்கள் அந்த அளவுக்கு கால் வலிக்கிற அளவுக்கு நின்னார்கள் நம்ம எப்படி தெரியுமா அந்த பக்கம் கணக்கில் டக்கு டக்கு என்று ஓதிக்  போய்க்கொண்டே இருப்பார்கள் அங்கே எப்படி நின்றால் நின்று கொண்டே இருப்பார்கள்.
 
ருக்கூவில் போனால் அப்படியே இருப்பார்கள் சுஜுதில் போனால் சுஜுதில் அப்படியே இருப்பார்கள். துஆ‌, திக்ரு  சொல்கிறார்கள்:
 
فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ
 
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூது, இப்னு மாஜா, எண் : 1375, 1327 குறிப்பு 2 
 
ஸஹருக்கு நேரம் கிடைப்பது சந்தேகம்தான் அப்படித்தான், அவர்களுடைய இரவு பொழுது நம் எல்லோரும் கரெக்டாக டைம் இந்த வாட்ச் டைம் வந்துச்சோ இல்லையோ! அத முதல்ல அப்ளை பண்ணது இபாதத்தில் தான் மற்றதுக்கு எல்லாம் அப்படி கிடையாது,
 
கல்யாணத்திற்கு போறீங்க டைம் பார்த்து  போயிடுவீங்களா? டைம் பார்த்து உடனே வந்துடுவீங்களா சாப்பிட்டுவிட்டு வேறொரு வீட்டில் நிகழ்ச்சி இருக்கிறது ரெஸ்டாரண்ட் போகிறீர்கள் பத்து நிமிடத்தில் சாப்பிட்டு வந்து விடுவோம் என்று வந்து விடுவீர்களா? அங்கே போனால் மட்டும் எவ்ளோ நேரம் ஆனாலும் தெரிய மாட்டேங்குது, 
 
ஒரு பீச் போறீங்க, பார்க் போறீங்க என்ன நியாயம் பண்றீங்க அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுக்கு வந்தா மட்டும் கரெக்ட்டா பத்து மணினா பத்து மணி ஒரு நாள் இமாம் லேட் ஆகிவிட்டார் என்றால் ஏன் இமாம் டைம் அதிகம் ஆயிடுச்சு இல்ல இப்படியே இவங்களை மிரட்டி மிரட்டி கடைசியில் அவர்களை மாற்றி விட்டார்கள். நாலு பேர் நாலு மாதிரி சொன்னா என்னங்க செய்வார் அவரு.
 
அவரும் பார்த்தாரு என்னடா செய்வது சரி ஓது இப்படி என்று அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி முஹம்மது இஸ்மாயில் ரஹிமஹுல்லாஹ் ரமலான் மாதத்தில் பகலில் ஒவ்வொரு நாளும் ஒரு குர்ஆனை ஹத்தம் செய்து விடுவார்கள்.
 
த்ராவிஹ் தொழுதுட்டு அதற்குப் பிறகு எவ்ரி 3 நைட் ஒரு ஹத்தமா பண்ணுவாங்க எவ்ரிடே ஒவ்வொரு பகலில் ஒரு ஹத்தம்மா அதற்குப் பிறகு இரவில் த்ராவிஹ் தொழுது முடித்த உடனே குர்ஆன் எடுத்து உட்கார்ந்து அதுல 3 நைட்ஸ்ல ஒரு ஹத்தம்,
 
நம்ம இருப்போமே இந்த முக்கா மணி நேரம் த்ராவிஹ் தொழுதுட்டு அந்த டீக்கடையில நின்னுட்டு முக்கா மணி நேரம் அதுக்கு தான் நமக்கு நேரம் அப்புறம் இடியாப்பம் சாப்பிடுவதற்கு மிச்சம் மீதி ஸ்வீட் சாப்பிடுவதற்கு மிச்சம் மீதி போண்டா சாப்பிடுவதில் டைம் முடிஞ்சு போச்சு அப்புறம் வேற கதை இதுல வேற சீரியல் அந்த பழக்கம் இருந்துச்சுன்னா முடிஞிச்சி கதை அரபு நாடுகளில் முஸிபத் என்ன தெரியுமா?
 
ரமலானுக்கு என்று எக்ஸ்ட்ரா நீயூ சீரியல் வரும் ராத்திரி ஃபுல்லா இஃப்தாரில் இருந்து ஆரம்பித்து சுபுஹு வரைக்கும் எங்கே பார்த்தாலும் ரோட்டில் நடக்க முடியாது ஒரே சீரியல் விளம்பரமாக தான் இருக்கும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
சைத்தான் எப்படி கெடுக்கிறான் பாருங்கள் ரமழான் சீரியலா அந்த காலத்தில் நாங்க எல்லாம் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது எங்க ஊர் சைடுல பெருநாளை முன்னிட்டு சினிமாவுக்கு விமர்சனம் போவாங்க பெருநாளுக்கு சிறப்பு காட்சியா அப்போது நம்ம கெட்டு போயிருக்கனால தானே நம்மளை புரிஞ்சுகிட்டு அவன் செய்கிறான்,
 
நம்ம ஒழுங்கா இருந்தா அப்படி செய்வானா? சைது இப்னு ஜுபைர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவர் இரண்டு இரவில் ஒரு ஹத்தமா பண்ணி விடுவார்கள். தொழுவதற்கு தனியா  அதேபோல் வலித் இப்னு அப்துல் மலிக் ஒரு மன்னர்  ஒவ்வொரு மூன்று இரவில் ஒரு ஹத்தமா ரமலானில் 17 தடவை குர்ஆனை ஹத்தமா செய்து விடுவார்கள். தாபியீன்களில் குர்ஆன் விரிவுரையாளர்களில் முன்னோடிகளில ஒருத்தர் பொதுவா இவர்களுடைய வழக்கம் என்னவென்றால் செவன் டேஸ்ல ஒரு ஹத்தம்மா செய்வார்கள்.
 
மற்ற மாதங்களில் ரமலான் வந்துவிட்டால் 3 டேஸ்ல ஒரு ஹத்தமா செய்வார்கள் கடைசி பத்து வந்து விட்டால் எவ்ரி நைட் ஒரு ஹத்தமா செய்வார்கள் நம்ம இன்னும் இஃப்தார் பார்ட்டி ஸகர் பார்ட்டில தான் உட்கார்ந்திருக்கிறோம். இந்த சாப்பாட்டை குறைக்க மாட்டோமோ, அதிலிருந்து நம்முடைய கவனத்தை திருப்ப மாட்டமோ, இபாதத்துடைய கவனம் வராது,
 
ரமலான் கொஞ்சமா சாப்பிடுவதற்கு நம்ம ஆள் என்ன பண்றான் என்றால் நேரத்தை தான் சேஞ்ச் பண்ணானே தவிர சாப்பாட்டுடைய டைமை கூட்டி விட்டான். ஸஹரில் மூன்று வக்து சேர்த்து சாப்பிட்டு விட்டான். டிபன் லஞ்ச் ஈவினிங் ஒரு சின்ன ஒரு ஸ்நாக்ஸ் அதை சேர்த்து ஸஹரில் முடிஞ்சு போச்சா  அதுக்கப்புறம் இஃப்தாரில் என்ன செய்தான் உட்கார்ந்த உடனே ஸகரில் என்ன செய்தான் என்றால் மூன்று வேளை  நான் பசியாக இருக்க போகிறேன் என்று சாப்பிட்டான்,
 
இப்போ என்ன செய்தான் இஃப்தாரில் உட்கார்ந்து கொண்டு மூன்று வேளை நான் பசியாக இருந்தேன் என்று இப்போ இஃப்தார் சாப்பிடுறா அப்புறம் என்ன செஞ்சான்னு சொன்னா இஃப்தார் முடிச்சிட்டு மஹரிப் முடித்துவிட்டு த்ராவிஹ் முடிச்சுட்டு அப்போ ஒரு தஸ்தர் த்ராவிஹ் தாக்கத்தா தொழனுமா போய் ஆறு ஜுஸ்வு ஓதி தொழுற மாதிரி அல்லாஹ்வுக்கு ரசூல் ஸல்லல்லாஹ்வுக்கு சொன்ன மாதிரி
 
يَاأَيُّهَا الْمُزَّمِّلُ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
 
போர்வை போர்த்தியவரே! (வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!)  அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!) அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! ‏(அல்குர்ஆன் 73 : 1,2, 3, 4)
 
إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
 
நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.” அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். (அல்குர்ஆன் 73 : 20)
 
நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) (அல்குர்ஆன் 73 : 20)
 
ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 73 : 20)
 
ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! (அல்குர்ஆன் 73 : 20)
 
உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 73 : 20)
 
ரசூலுல்லாஹ் ஸஹாபாக்கள் எல்லாம் இரவில் 2,3 இரவு மஹரிப்பில் இருந்து சுபுஹு வரைக்கும் அதுல 2 பகுதி வணங்குவாங்களாம் அல்லது மஹரிபில் இருந்து ஸகர் வரைக்கும் ரெண்டு பகுதியில் அதில் ஒரு பகுதியாக வணங்குவாங்களாம் இல்ல அத மூணு பகுதி ஆக்கி ஒரு பகுதி வணங்குவாங்களாம்.
 
அப்படி தொழுதாங்க அப்படியே இப்ப தொழுகுறா அப்படியே அப்ப நம்ம தொழுகிறோம். இப்ப த்ராவிஹ் தாக்கத் பண்றாங்க த்ராவிஹ் ரொம்ப தெம்பா தொழுவனுமா அதுக்கு ஒரு தஸ்தர் அதுக்கு அப்புறமா த்ராவிஹ் முடிச்சுட்டு வந்த உடனே,
 
பத்ர் போருக்கு உஹது போருக்கு போயிட்டு வந்த மாதிரி த்ராவிஹ் தொழுதுட்டு வந்து  டையர்டா இருக்கு பசியா இருக்கு இன்னொரு தஸ்தர் முடிஞ்சு போச்சு. நான் சொல்வது நடக்குதா இல்லையா என்று சொல்லுங்கள். நம்ம வீட்டுப் பெண்களுக்கு மொத்தமா ரமலான் என்று சொன்னால் அந்த அடுப்படியில் நிற்கிறது தான் வேலை,
 
இதற்கு அல்லாஹ் ரமலானை இறக்கினான் வக்கின் இப்னு ஜலால் இவங்க என்ன செய்வாங்க ஒவ்வொரு இரவும் ரமலானில் ஒவ்வொரு இரவிலும் ஒரு ஹத்தமா பிளஸ் பத்து ஜுஸுவு. இமாம் ஷாஃபி ரஹீமஹுல்லாஹ். நாம அவங்கள பத்தி சொல்லும்போது நாம துவா செய்யனும் அவங்களுக்காக, அல்லாஹ் ரஹ்மத்தை நம்ம மேலே இறக்குவான்.
 
அவர்கள் சொல்கிறார்கள். இமாம் ஷாஃபி. ரமலான் மட்டும் ஸ்பெஷலா அறுபது முறை, 60 ஹத்தமா பண்ணுவாங்க. யோசிச்சு பாருங்க. எப்படி அல்லாஹ் அவங்க டைம்ல பரக்கத் செஞ்சிருக்கான். எந்த அளவு அவங்களுக்கு குர்ஆன்ல பிராக்டீஸ் இருந்துச்சு. குர்ஆன்ல ஈடுபாடு இருந்துச்சு. நம்ம ஓதுற மாதிரி இழுத்து ஓதுனா முடிஞ்சு போச்சு. பழக்கம் ஓதி ஓதி அந்தப் பழக்கம்.
 
அதேபோல இந்த ரமலானுடைய மாதத்தில். அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்யணும். ஏழைகளுக்கு இல்லாதவங்களுக்கு உறவுகளுக்கு. அள்ளி அள்ளிக் கொடுப்பது. நமக்கு இல்லை என்றாலும், நம்முடைய தேவையை சுருக்கி கொண்டு, 
 
அவர்களுக்கு கொடுப்பது. குறிப்பாக என்ன சொல்றாங்கன்னா, இபாதத்துல மக்கள அதிகமாக ஈடுபடுத்துவதற்கு, அவர்களுக்கு இது சதக்கா இந்த ஹதியா இந்த தர்மம் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.
 
ஏன்? இந்த ரமலான்ல அவங்களுக்கு கொடுக்கும் பொழுது, அவங்க இந்த ரமலான்ல இபாதத்தில் ஈடுபடுறதுக்கு லேசா இருக்கும். இல்லையென்றால் திரும்பவும் போய் இந்த துன்யாவில் நேரத்தை வீணாக வேண்டி இருக்கும்.
 
 4997 – حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ، وَأَجْوَدُ مَا يَكُونُ فِي شَهْرِ رَمَضَانَ، لِأَنَّ جِبْرِيلَ كَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ فِي شَهْرِ رَمَضَانَ، حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா சொல்கிறார்கள். ரஸூலுல்லாஹ் (ஸல்) உடைய தர்மத்தின் உடைய வேகத்தை சொல்கிறார்கள். நபி (ஸல்) ரமலான் மாதத்தை தர்மத்தை எப்படி கொடுப்பார்கள் என்றால், வேகமாக வீசக்கூடிய காற்றை போல்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4997
 
ஆகவே அன்பானவர்களே! அல்ஹம்துலில்லாஹ் ரமலான் உடைய முதல் இரவு ஆரம்பமாகிவிட்டது. இப்போது இருந்தே நம்முடைய சிந்தனையை. இந்த இபாதத்துக்காக இந்த வணக்கத்திற்காக மாற்றுவோமாக. இந்த ரமலான் இபாதத்துக்கான மாதம் இது. தின்பதற்காகவோ திண்டுக்களிப்பதற்காகவோ அல்லது வாழ்க்கையை தூங்கிக் கழிப்பதற்காகவோ இல்லை ஒரு மாதம் இல்லை.
 
அல்லாஹுதஆலா இபாதத்துக்காக கொடுத்த மார்க்கம். நம்முடைய முன்னோர்களின் வரலாறு கேட்டு தெரிந்தோ, ரமலானோடு நம்முடைய தொடர்பை புதுப்பிப்பதற்காக, அதிகப்‌ படுத்துவதற்காக, சரியாக ஓதுவதற்காக, இந்த குர்ஆனுடைய கல்வியை புரிந்து சிந்தித்து. அதற்குரிய வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்குரிய ஒரு பாலமாக இந்த ரமலானுடைய மாதத்தை ஆக்கிக் கொள்வோமாக.
 
வீணான பாவமான ஒவ்வொரு காரியத்தையும் விட்டும் விலகி, நம்முடைய ரமலானை பாதுகாப்போமாக. கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைகளுக்காக பாவங்களுக்காக, அல்லாஹ்விடத்திலே தவ்பா இஸ்திக்ஃபார் செய்வோமாக.
 
அல்லாஹுதஆலா இந்த ரமலானை உங்களுக்கும் எனக்கும் சிறப்பான ரமலானாக, அல்லாஹ்வுடைய ரஹ்மத்துகளும் பரக்கத்துகளும் நிறைந்த ஒரு ரமலானாக, அல்லாஹ்வுடைய முஹபத் கிடைக்கப்பட்ட ஒரு ரமலானாக, ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
سنن الترمذي ت شاكر (5/ 528)
 
3502 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ: «اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ اليَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا».: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ
 
குறிப்பு 2)
 
سنن أبي داود (2/ 50)
 
1375 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنَ الشَّهْرِ حَتَّى بَقِيَ سَبْعٌ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، فَلَمَّا كَانَتِ السَّادِسَةُ لَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا كَانَتِ الْخَامِسَةُ قَامَ بِنَا حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا قِيَامَ هَذِهِ اللَّيْلَةِ، قَالَ: فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، قَالَ: فَلَمَّا كَانَتِ الرَّابِعَةُ لَمْ يَقُمْ، فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ جَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ وَالنَّاسَ، فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قَالَ: قُلْتُ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ، ثُمَّ لَمْ يَقُمْ بِقِيَّةَ الشَّهْرِ
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/