HOME      Lecture      ரமழானும் இரவுத் தொழுகையும் | Tamil Bayan - 712   
 

ரமழானும் இரவுத் தொழுகையும் | Tamil Bayan - 712

           

ரமழானும் இரவுத் தொழுகையும் | Tamil Bayan - 712


ரமலானும் இரவு தொழுகையும்
 
தலைப்பு : ரமலானும் இரவு தொழுகையும்
 
வரிசை : 712
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
உரை  : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 07-04-2022 | 06-09-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அன்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும், அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமையில் வெற்றி வேண்டியவனாக, நல் பாக்கியங்களை வேண்டியவனாக, அல்லாஹ்வுடைய அன்பையும், விசேஷமான மன்னிப்பையும் வேண்டியவனாக, இந்த சிறிய அமர்வை ஆரம்பம் செய்கின்றேன்.
 
அன்பு சகோதரர்களே! ரமலானுடைய மாதம் கிடைக்க பெற்று, சில தினங்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இன்னும், சில தினங்கள் நமக்கு மிச்சம் இருக்கின்றன. இந்த கழிந்த சில தினங்களில், யார் இந்த ரமலானை பயன்படுத்திக் கொண்டார்களோ, கண்டிப்பாக அவர்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள். 
 
எஞ்சி இருக்க கூடிய, சில நாட்களில் நம்மிலே எத்தனை பேர் உயிரோடு இருப்போமா? எத்தனை பேர் அல்லாஹ்வை சந்திப்பதற்கு அவர்களுக்கு  விதியில் எழுதப் பட்டிருக்கிறதோ, அல்லாஹ் மிக அறிந்தவன். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக நீண்ட ஒரு எதிர்பார்ப்போடு இந்த ரமலானை எப்பொழுதும் அவர்கள் அடைவார்கள்.
 
ரமலானை குறித்து, அதனுடைய சிறப்புகளை தங்களது தோழர்களுக்கு எடுத்துக் கூறி, அந்த ரமலானை எதிர்பார்த்து இருப்பதிலேயே ஆர்வத்தை ஏற்படுத்துவார்கள். பொதுவாகவே, வாழ்க்கையே வணக்கமாக, இபாதத்தாக, ஆக்கிக் கொண்டவர்கள் தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயமும். 
 
நாம் இப்போது, வாழ்க்கையில் ஒரு குறுகிய சிறிய பகுதியாக  இபாதத்தை ஆக்கி இருக்கிறோம். ஆனால், அவர்களோ, வாழ்க்கையே இபாதத்தாக ஆகி இருந்தார்கள். தொழுகை, நஃபிலான நோன்புகள், குர்ஆன் அதிகமாக ஓதுவது, திக்ருகள் அதிகமாக செய்வது, தான தர்மங்கள் செய்வது, மார்க்க கல்வியை தொடர்ந்து படிப்பது, படித்த மார்க்க கல்வியை, பிற மக்களுக்கு தொடர்ந்து இறுதி மூச்சு வரை எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கற்றுக் கொடுப்பது, அல்லாஹ்வுடைய பாதையிலே ஜிஹாதுக்கு செல்வது, இப்படியாக வாழ்க்கையை அப்படியே வணக்கமாக மாற்றி இருந்தார்கள்.
 
அப்படி இருந்தவர்கள், இபாதத்துக்காக உள்ள, இந்த ரமலானை அடையப் பெற்றால், இன்னும் எப்படி இந்த ரமலானை பயன்படுத்தி இருப்பார்கள்? ஒரு வியாபாரி, எப்பொழுதுமே காலையில் 7 : 00 மணிக்கு கடையை திறப்பாரு. கடைசி கஸ்டமர் வரும் வரைக்கும் முழு உற்சாகத்துடன் வியாபாரத்தில் ஈடுபடுவார் என்று இருக்கும் பொழுது, அந்த வியாபாரிக்கு சீசன் வந்தால் அவருடைய ஆர்வம் அவருடைய உற்சாகம் எப்படி இருக்கும்?
 
யோசித்துப் பாருங்கள். எப்பொழுதுமே. காலையில் 7:00 மணிக்கு கடையை திறந்து, கஸ்டமரை எதிர்பார்த்து கொண்டிருப்பவர், கஸ்டமருக்கு சுறுசுறுப்பாக பணிவிடை செய்பவருக்கு, ஒரு சீசன் வந்து விட்டால், அவருடைய உற்சாகத்தை சொல்லவா வேண்டும்.  வியாபாரத்தில் அவர் காட்டக்கூடிய அந்த முனைப்பை எந்த அளவிற்கு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
 
சகோதரர்களே! எப்படி நாம் துனியாவில் இருந்தோமோ, இருக்கிறோமோ, சஹாபாக்கள் அப்படியே இபாதத்தில் இருந்தார்கள். ஆகிறத்துடைய விஷயத்தில் இருந்தார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்கள் ஒரு தர்கீப் ஒரு ஆர்வத்தை அவர்கள் ஊட்டி விட்டார்கள் என்றால், இன்று நம்மை போன்று ஸஹாபாக்கள் இல்லை. அதை உடனடியாக முந்திக்கொண்டு நான் செய்ய வேண்டும் என்பதிலே போட்டி போடுபவர்களாக  இருந்தார்கள்.
 
4046 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا؟ قَالَ: «فِي الجَنَّةِ فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ
 
அனேகமாக உஹது போராக இருக்கும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். இப்போது யார் கொல்லப்படுவார்களோ, அவர் ஷஹீது. அல்லாஹ்வுடைய பாதையிலே அவர் ஷஹீது. அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று சொன்னார்கள். மதியம் வரை போரிலே ஈடுபட்டு கடும் பசியோடு இருந்த ஒரு  தோழர், கையில் சில பேரீத்தம் பழங்களை வைத்து, அந்தச் சின்ன இடைவெளியிலே, அனேகமாக இரண்டு மூன்று பேரித்தம் பழங்கள் இருந்து  இருக்கும். அதை சாப்பிட ஆரம்பித்தார். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து இந்த செய்தி கிடைக்கிறது. இப்போது போரிலே கொல்லப்படுபவர் ஷஹீது என்று. கையில் இருந்த அந்த பேரித்தம் பழங்களை அப்படியே எரிந்து விட்டு, அவர் போர்க்களத்திலே, போர் மைதானத்திலே நுழைந்தார். ஷஹீத் ஆகின்ற வரை போரிட்டுக் கொண்டே இருந்தார்.
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4046
 
இப்படி உயிரையே அல்லாஹ்வின் பாதையிலே துச்சமாக மதித்தவர்களுக்கு, மற்ற விஷயங்களைப் பற்றி என்ன சொல்வது? எந்த ஒரு தர்க்கிப் ஆர்வத்தையும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்று விட்டால், அதில் நான் தான் முந்தியவனாக இருக்க வேண்டும் என்று போட்டி போடுகின்ற வழக்கம் சஹாபாக்கள் இடத்தில் இருந்து வந்தது. 
 
அப்படி இருக்கும் பொழுது, 
 
مَن صَامَ رَمَضَانَ، إيمَانًا واحْتِسَابًا، غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ
 
யார் ரமலானில் நோன்பு வைப்பார்களோ ஈமானோடு, இஹ்திஸாபுடன், அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னிப்பான், யார் ரமலானுடைய இரவிலே நின்று வணங்குவார்களோ, ஈமானோடு இஹ்திஸாபுடன் அவர்களது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37, 38
 
என்ற இத்தகைய நற்செய்தியை சஹாபாக்கள் கேட்டதற்கு பிறகு, அவர்கள் இந்த ரமலானில் அலட்சியம் செய்து இருப்பார்களா? இன்று நம்மில் பலர் அலட்சியம் செய்வது போன்று. ஊர் சுற்றுவது போன்று, விளையாடுவது போன்று, இன்னும் நேரங்களை கழிப்பது. சிலர் இடத்திலே, நேரம் கொட்டிக்கிடக்கிறது. அதை எப்படி கழிப்பது என்று தெரியாமல் வெட்டியாக கழித்து கொண்டிருக்கின்றார்கள். 
 
அல்லாஹ் பாதுகாப்பானாக!  யார் இவர்கள்? இவர்கள் இந்த  உலகத்தினுடைய ஒவ்வொரு நொடியும், மறுமை சொர்க்கத்திற்கான விலை, கிரையம் என்பதை மறந்தவர்கள். அறியாதவர்கள். இந்த உலகத்தினுடைய ஒவ்வொரு நேரமும், மறுமைக்கான, ஆகிரத்திற்கான,  சொர்க்கத்திற்கான, கிரையம் என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு, அவர்களுக்கு அமலுக்கு நேரம் போதாது. இபாதத்திற்கு அவர்களுக்கு நேரம் போதாது.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுருக்கமாக ஒரு அந்த இபாதத்துடைய பட்டியலை பார்த்தால், பகலிலே ரமலானுடைய நோன்பு. பிறகு தேவையான  அளவு சிறிய ஓய்வு, தான தர்மங்கள், இப்படியாக அவர்களுடைய பகல். மக்களுக்கு இல்மை கற்றுக் கொடுப்பது. ஜிப்ரயீல் அலைஹி ஸலாத்துவஸலாம் அவர்களுடைய வருகை. அவர்களோடு குரானை பரிமாறிக் கொள்வதும். 
 
இவர்கள் ஓத ஜிப்ரயீல் கேட்க, பிறகு ஜிப்ரயீல் ஓத, இவர்கள் கேட்க என்று அந்த ஆண்டு வரை குர்ஆனிலே எவ்வளவு இறக்கப்பட்டு இருந்ததோ, அதை அனைத்தையும் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களோடு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவூர் செய்து கொள்வார்கள். 
 
அதற்குப் பிறகு, மக்ரிபுடைய  நேரம் வந்துவிட்டால், இன்று நாம் எப்படி இந்த இரவை கழிக்கிறோமோ அப்படி கழிந்தது அல்ல. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய  இரவும் ஸஹாபாக்களுடைய இரவும். நம்முடைய இஃப்தார் உடைய நேரம் நம்முடைய தொழுகை நேரத்தை விட அதிகம். 
 
அந்த இப்தர்கான ஏற்பாடுடைய நேரம் நம்முடைய கியாமுல்லைல் உடைய நேரத்தை விட அதிகம். பிறகு அந்தச் சின்ன இபாதத்திற்கு பிறகு  ஓய்வு என்று நாம் எடுப்பது. பிறகு ஸஹருக்கு ஏற்பாடு. இப்படியாக பார்த்தோமேயானால் ஒரு பெயரளவிற்கு சில இபாதத்துகளை நம்முடைய வாழ்க்கையிலே ஒட்டி வைத்துக் கொண்டு அந்த இரவையும் பெரும்பாலும் வீணடிக்கின்ற ஒரு பழக்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த இரவோ சஹாபாக்கள் உடைய இரவோ  அப்படி கழியக்கூடியது அல்ல. மக்ரிபுடைய தொழுகை. பிறகு அதற்குப் பிறகு, ஈடுபாடு. குர்ஆன் ஓதுவது. பிறகு இஷா உடைய  தொழுகை. அதன் பிறகு இரவு வணக்கத்திலே  ஈடுபடுவது. 
 
924 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ ذَاتَ لَيْلَةٍ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي المَسْجِدِ، فَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ، فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ، فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ، فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ المَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ المَسْجِدُ عَنْ أَهْلِهِ حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، لَكِنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ، فَتَعْجِزُوا عَنْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: تَابَعَهُ يُونُسُ
 
அதாவது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமலானுடைய இரவு தொழுகையை ஆரம்பித்தபோது, இதற்கான ஆர்வத்தை ஊட்டி. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதிலே வந்து தொழுகின்றார்கள். சஹாபாக்கள் சேர்ந்து கொள்கிறார்கள். சேர்ந்து கொள்கிறார்கள். சேர்ந்து கொள்கிறார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 924, 1129 
 
யார் தொழ வைக்கின்றார்கள்?  ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். கொஞ்சம் கொஞ்சமாக சஹாபாக்கள் சேர்கின்றார்கள். அன்று இரவு அப்படியே கழிகிறது. அடுத்த நாள் இரவு பார்த்தால், சுபஹானல்லாஹ்! எங்கிருந்தோ எல்லாம் தோழர்கள் ஒன்று கூடி விட்டார்கள். மஸ்ஜிதிலே இடம் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழ வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் விட்டார்கள். ஸஹருக்காக வேண்டி, துஆ விற்காக வேண்டி, அவர்கள் இரவுத் தொழுகை முடித்துக் கொண்டு, கொஞ்ச நேரம் அவர்கள் கொடுத்தார்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 924, 1129 
 
சஹாபாக்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! மீதி இருக்க கூடிய இந்த கொஞ்ச நேரத்திலும்  எங்களுக்கு நீங்கள் தொழ வைத்திருக்கலாம் அல்லவா?  எப்படி நமக்கும் அவர்களுக்கும் அப்படியே நேர் எதிர்மறையாக இருக்கிறது. எதிர்ப்புறமாக இருக்கிறது. நாம் என்ன சொல்கின்றோம்? கொஞ்ச நேரம் தொழவைத்து ரெஸ்ட் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 924, 1129 
 
எப்படி? கொஞ்ச நேரம் தொழுததற்கு ரெஸ்ட். ஒரு மணி நேரம், ஒன்றரை மணி தொழுதற்கு நமக்கு  ஐந்து மணி நேரம், 10 மணி நேரம் ரெஸ்ட் தேவைப்படுகிறது. அவர்கள் 5 மணி நேரம் 6 மணி நேரம் தொழுதுவிட்டு ஸஹருக்கான கொஞ்சம் இடைவெளியை கொடுத்துவிட்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திரும்புகின்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! மீதி இருக்கக்கூடிய இந்த இரவின் கொஞ்சம் பகுதியிலும் எங்களுக்கு நபில் தொழுது வைத்திருக்கலாமே என்ற சஹபாக்கள் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 924, 1129 
 
அடுத்த மூன்றாவது நாளும் இன்னும் கூட்டம் அதிகமாகிவிட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  பயந்துவிட்டார்கள். இவர்கள் மீது இந்த இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு விடுமோ என்று. ஸஹாபாக்கள் hujart விற்கு வெளியிலே இருந்து கொண்டு, அவர்கள் பல வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணர்த்தி பார்க்கிறார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 924, 1129 
 
நாங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். எனக்கு தெரியும் நீங்கள் ஒன்று கூடி இருப்பது. ஆனால் உங்கள் மீது இந்த தொழுகை ஃபர்ளாக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தால் நான் விட்டு விடுகின்றேன் என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 924, 1129 
 
அதற்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறப்பு ஏற்படுகிறது. பிறகு அபூபக்கர்  ரதியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலம் அந்தப் போரிலேயே குழப்பத்திலேயே முடிந்து விடுகிறது. மக்கள் தனித்தனியாக இமாமை பின்பற்றி தொழுது கொண்டிருந்தார்கள்.
 
2010 -  وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ القَارِيِّ، أَنَّهُ قَالَ: خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى المَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ، يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلاَتِهِ الرَّهْطُ، فَقَالَ عُمَرُ: «إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلاَءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ، لَكَانَ أَمْثَلَ» ثُمَّ عَزَمَ، فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ، ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ قَارِئِهِمْ، قَالَ عُمَرُ: «نِعْمَ البِدْعَةُ هَذِهِ، وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنَ الَّتِي يَقُومُونَ» يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ
 
உமருல் ஃபாருக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரமலான் உடைய  இரவிலே இஷாவுக்கு பிறகு வரும்போது பார்த்தால், அங்கே குர்ஆன் ஓதத் தெரிந்த ஒருவர், தொழ வைக்க அவருக்கு பின்னால் இருவர் மூவர் தொழ, ஒருவருக்கு பின்னால் நான்கு ஐந்து பேர் தொழ, 
 
இப்படியாக மஸ்ஜிதிலே பல ஜமாத்துகள் நடந்து கொண்டிருந்தன. உமர் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த எல்லோரையும் ஒன்று சேர்த்து, ஒரு ஜமாத்தாக அவர்கள் மஸ்ஜிதிலே தொழ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். உபை இப்னு கபாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆண்களுக்காகவும், தமீமுத்தார ரலியல்லாஹு அன்ஹு அவர்களைபெண்களுக்காகவும், தொழ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு அப்துல் காரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1327
 
அந்த இரண்டு இமாம்களும் மக்களுக்கு எப்படி தொழ வைத்தார்கள்? ஏறக்குறைய சூரத்துல் பகராவுடைய அளவிற்கு ஒவ்வொரு இரவும் நிறுத்தி நிதானமாக ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய அந்த தொழுகை இரவிலே ஆரம்பமாகி இரவினுடைய  பிற்பகுதி வரை செல்லக்கூடியதாக இருந்தது. வயதானவர்கள் தங்களுடைய  அசாவின் மீது சாய்ந்து கொண்டு அந்த தொழுகையை நிறைவேற்றுவார்கள்  என்று இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்கின்றார்கள்.
 
சகோதரர்களே! இது பொதுவாக அந்த சஹாபாக்களை இரவு வணக்க வழிபாடாக இருந்தது. மேலும் பல அறிவிப்புகளை பார்க்கின்றோம். 
 
»، قَالَ: فَلَمَّا كَانَتِ الرَّابِعَةُ لَمْ يَقُمْ، فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ جَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ وَالنَّاسَ، فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قَالَ: قُلْتُ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ، ثُمَّ لَمْ يَقُمْ بِقِيَّةَ الشَّهْرِ
 
சஹர் உடைய நேரம் கிடைக்குமா? சஹருடைய நேரம் கிடைக்குமா? ஸஹர் செய்வதற்கு வாய்ப்பு இருக்குமா? என்று பயப்பட கூடிய அளவிற்கு அந்த சஹாபாக்கள் உடைய இரவு வணக்க வழிபாட்டில் ஈடுபாடு இருந்தது. 
 
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவுத், இப்னு மாஜா, எண் : 1375, 1327 குறிப்பு 1
 
பொதுவாக ரமலானுடைய மாதம் வந்து விட்டால், ஸலஃபுகளுடைய வணக்க வழிபாடுகள் எப்படி இருந்தது என்பதைத்தான் இன்ஷா அல்லா நாம் இந்த அமர்விலே கொஞ்சம் விரிவாக பார்க்க  இருக்கின்றோம். இந்த ரமலான் உடைய மாதம், விசேஷமாக. தொழுகைக்காகவும் குர்ஆன் ஓதுவதற்காகவும், திக்குரு  செய்வதற்காகவும், sadaqah தான தர்மங்கள் செய்வதற்காகவும், ஒதுக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட மாதம். 
 
ரமலானுடைய மாதம் குறிப்பாக. மற்ற எல்லா வணக்க வழிபாடுகளுக்கும், இந்த மார்க்கத்திலே ஒரு பங்கு இருந்தாலும் குறிப்பாக. பகலிலே நோன்பு. குர்ஆன் ஓதுவது. இரவிலே இரவுத் தொழுகை. குர்ஆன் ஓதுவது. அதுபோன்று தான தர்மங்கள். இது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ரமலானில் ஒரு தனித்துவமான அமலாக இருந்தது. சஹாபாக்களுடைய தனித்துவமான அமலாக இருந்தது. 
 
ஒரு விஷயத்தை நாம் இங்கே புரிய வேண்டும். அதாவது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமதாணை பற்றி குறிப்பிடும் போது, அவர்களுடைய அந்த வழமை. ஒன்று. ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களோடு அவர்கள் அந்த குரானை ஓதி சரிபார்த்தது. அதற்கு பிறகு இரவு தொழுகையிலே அந்த குரானை அவர்கள் தொடர்ந்து ஓதியது. எவ்வளவு அதிகம் ஓத முடியுமோ அந்த அளவுக்கு அதிகம் ஓதியது.
 
அதுபோன்று அல்லாஹ் சுபஹானஹூவ தஆலா, இந்த ரமலான் மாதத்தோடு தொடர்பு படுத்தி இந்த குர்ஆனை நமக்கு சொல்லும் பொழுது. 
 
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
 
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும்.
 
இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்)! (அல்குர்ஆன் 2 : 185)
 
ரமலான் உடைய மாதம் எத்தகையது என்றால், இதில் தான் அல்குர் ஆன் இறக்கப்பட்டது.  நேர்வழி காட்டக்கூடிய, நேர்வழியின் தெளிவான ஆதாரங்களாக இருக்கக்கூடிய, அசத்தியத்தில் இருந்து சத்தியத்தை  பிரித்தறிவிக்ககூடிய, இந்த குர்ஆன். இந்த ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது.
 
இன்று அல்லாஹு தஆலா, இந்த ரமலானை சிறப்பிப்பதிலிருந்து, குர்ஆனுக்கும் ரமலானுக்கும் விசேஷமாக ஒரு தொடர்பு இருக்கிறது. பிறகு இந்த குர்ஆன் குறிப்பாக இறக்கப்பட்ட இரவை. அல்லாஹு தஆலா ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு மாதமாக ஆக்கி இருப்பதிலிருந்தும், குர்ஆனுக்கும் இந்த மாதத்திற்கும் ஒரு விசேஷமான தொடர்பு இருக்கிறது. 
 
ஆகவே ஒன்று. குர்ஆனை அதனுடைய அரபி வாசகங்களை தொடர்ந்து அதிகமதிகம் ஓதுவது. அந்த குர்ஆனை சிந்திப்பது. அதிலிருந்து படிப்பினை பாடங்கள் பெறுவது என்பது ரமலானுடைய மிக விசேஷமான ஒரு அமலாகும்.
 
ஒரு முஸ்லிம். வாழ்க்கையுடைய எல்லா பகுதியையும் இந்த அமலோடு அவன்  தொடர்பில் இருக்க வேண்டும். குறிப்பாக. குறிப்பாக, இந்த ரமலான் மாதத்திலே, அவன் இந்த குர்ஆனை தன்னால் முடிந்த அளவுக்கு. இத்தனை கத்தமா? இத்தனை முறை நான் இந்த குர்ஆனை முடிப்பேன் என்று தனக்குத்தானே ஒரு வைரியாகத்தை, ஒரு முடிவை, ஏற்படுத்திக் கொண்டு, அந்த அடிப்படையிலே தொடர்ந்து ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஓதி முடிப்பது. திரும்ப ஆரம்பத்திலிருந்து  இறுதிவரை ஓதி முடிப்பது. என்ற ஒரு வழக்கத்தை கண்டிப்பாக நாம் ஏற்படுத்த வேண்டும். 
 
இது சஹாபாக்கள் உடைய தாபியீன்களுடைய, தபத்தாபியீன்கள் இமாம்கள் உடைய வழமையாக இருந்தது. இப்பொழுது பாருங்கள். அதாவது அறிஞர்களில். மிகப்பெரிய அறிஞர். இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றி அவருடைய வாழ்க்கை குறிப்புலே அவர்களுடைய மாணவர்கள் எழுதுகின்றார்கள். தொடர்ந்து. அவர்கள் உடைய வாழ்க்கையே மஸ்ஜித் நபவிலே கல்வி கற்றுக் கொடுப்பதாக இருந்தது. ஏறக்குறைய 22, 23 வயது வரை, சிறு  பிராயத்தில் இருந்து கல்வியை தேடுவதி லே ஈடுபட்டிருந்த இமாம் மாலிக் ரஹீமஹுல்லாஹ் அவர்கள். அவர்களுடைய ஆசிரியர் இப்போது நீ கல்வி படித்துக் கொடுக்கலாம் என்று சொன்னதிலிருந்து அவர்களுடைய இறுதி வாழ்க்கை வரை மஸ்ஜிதுன் நபவியிலே அவர்கள் தொடர்ந்து ஹதீஸ் பாடங்களை அல்லாஹ்விற்காக முஸ்லிம்களுக்கு நடத்திக் கொண்டிருந்தார்கள். 
 
இந்த ரமலான் மாதம் வந்துவிட்டால், இந்த ரமலான் மாதம் வந்து விட்டால், ஹதீஸ் படித்துக் கொடுக்கக்கூடிய தன்னுடைய பணியை நிறுத்திவிட்டு இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் உடைய வழக்கம் எப்படி இருந்தது? குர்ஆனுடைய பிரதியை கையில் எடுத்து, குர்ஆன் உடைய பிரதியை கையில் எடுத்து, அதை பார்த்து ஓதுவதிலே முழுமையாக ஈடுபட்டு விடுவார்கள்.
 
ஸுஃப்யான் யுஸவ்விர் (ரஹிமஹுல்லாஹ்) இவர்கள் யார்? இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ், அவர்களுக்கு முந்தி உள்ளவர்கள். அதாவது முஹத்திஸ்களுக்கெல்லாம் முஹத்திஸ். அமீருல் முஃமினின் ஃபில் ஹதீஸ் என்று சொல்லப்படும். மிகப்பெரிய ஒரு அறிஞர். மற்ற எல்லா வணக்கங்களையும் விட்டுவிட்டு, முழுமையாக குர்ஆன் ஓதுவதிலே அவர்கள் ஈடுபட்டு விடுவார்கள்.
 
இந்த அளவு நம்முடைய ஸலஃபுகள். இந்த குர்ஆனோடு  நேரடியாக அதை பார்த்த ஓதுவதிலே அவர்கள் அந்த நேரங்களை கழித்து வந்தார்கள். இதில் எந்த அளவிற்கு அவர்கள் போட்டி போட்டார்கள். இப்பொழுது நம்மிலே சில பேருக்கு, ஏன் என்றால் அந்த பழக்கம் இல்லை. பத்து அடி கூட எந்திரிச்சி நடக்கக் முடியாத ஒருவரை  ஓட்டப் பந்தயத்திலே ஓடவிட்டால் என்ன ஆகும்?  சொல்லுங்கள் பார்க்கலாம். பழக்கம் வேண்டும் அல்லவா? எதற்குமே ஒரு பயிற்சி வேண்டும். 
 
எதற்குமே வாழ்க்கையிலே தொடர்ந்து ஒரு தன்னை இடுபடுத்தி அந்த வழக்கமும் பழக்கமும் ஏற்படுத்தியிருந்தால் தான் அதிலே அவரால் செய்ய முடியும். இப்பொழுது நம்பில் சில பேருக்கு, மணிக்கணாக பேச சொல்லுங்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள். மணிக்கணக்காக அரட்டை அடிங்க என்று சொன்னால். அதற்கும் தயார். 
 
எல்லாவற்றிற்கும் தயார். கையில் கொஞ்சம் குர்ஆனை கொடுத்து, ஒரு இரண்டு பக்கத்தை ஓத சொல்லுங்கள் என்றால்.கழுத்து வலி, கண்ணு வலி, முதுகு வலி, குறுக்கு வலியிலிருந்து அதற்குப் பிறகு எல்லாவற்றையும் சமாளித்து ஓத ஆரம்பித்து விட்டால், அந்த ஒரு பக்கத்தை  முடிப்பதற்குள் 10 நிமிஷம் ஆய்டும் அதிலும் 10 தப்பு இருக்கும். அஸ்தஃபிருல்லாஹல் அளீம். இந்த அளவு தான் நம்முடைய மக்களுடைய குர்ஆன் ஓதக்கூடிய நிலை இருக்கிறது என்றால், இவர்கள் ரமலானில் எப்படி குர்ஆனிலே போட்டி போட முடியும்?
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ். இவர்கள் என்ன செய்வார்கள்? பகலில் மட்டும். எப்படி? பகலில் மட்டுமே, ஒரு நாளைக்கு. ரமலானில் ஒரு கத்தம் செய்வார்கள். எப்படி செய்வார்கள்? பகலில். இரவிலே மக்களுக்கு தொழ வைப்பார்கள். 
 
இரவிலே மக்களுக்கு தொழ வைப்பார்கள். அது தனியாக. அது ஒரு தர்தீப். குர்ஆன் ஓதுவது போய்க்கொண்டிருக்கும். அதற்குப் பிறகு மக்களுக்கு தொழ வைத்ததற்கு பிறகு,  திரும்ப கையிலே குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பித்து விடுவார்கள். ரமதான் உடைய ஒவ்வொரு மூன்று இரவிலும் ஒரு கத்தமை தனியாக செய்து விடுவார்கள்.
 
எதற்கு? இந்த விஷயத்தை சொல்ல வருகின்றோம். நம்முடைய சலஃபுகள் எப்படி புரிந்து இருந்தார்கள். குர்ஆன். ரமதானில் குர்ஆன் ஓதுவது என்றால் எப்படி புரிந்து வைத்திருந்தார்கள்? நம்மை போலவா? எடுத்து கொஞ்ச நேரம் இப்படியே பார்க்க வேண்டியது. 
 
மேலோட்டமாக இரண்டு பக்கத்தை ஓதி முடிக்க வேண்டியது. அப்பா! பத்ரு போருக்கு போய்விட்டு வந்த மாதிரி. தூக்கி வைத்து விட்டு அல்லாஹ்! அதுவும் கடைசியில் மிச்சம் மீதி இருந்து, கடைசியில் தள்ளிக் கொண்டு போய், ஒரு கத்தமை பண்ணி விட்டோம் என்று சொல்வதற்குள் சுபஹானல்லாஹ்! இங்கே எப்படி போய்க்கொண்டே இருக்கிறது? பகலில் மட்டுமே. எவ்ரிடே! ஒவ்வொரு நாளும் ஒரு கத்தம். 
 
புரிகிறதா இல்லையா? அதுபோக. இரவில் மக்களுக்கு தொழ வைப்பது தனி. தொழ வைத்து முடித்துவிட்டு எல்லோரையும் அனுப்பியதற்கு பிறகு,  தனியாக உட்கார்ந்து அவர்கள் ஓதுவதில், ஒவ்வொரு மூன்று நாளைக்கு, ஒரு கத்தமா முடிப்பவர்களாக இருந்தார்கள். அப்பொழுது கணக்கு செய்து பார்த்தால் எத்தனை கத்தம் வரும்? அதுல ஒரு பத்து வந்துவிட்டது. பிறகு ரமலானில் இது ஒரு 30.  முப்பதும் பத்தும் 40. பிறகு தராவீஹ்லே ஓதுவது அது தனி. சுபஹானல்லாஹ்!
 
ஸயீத் இப்னு ஜுபைர் தாபியீன்களிலே ஒருவர். இமாம் இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்  ரளியல்லாஹு அன்ஹுமா உடைய மாணவர். இவர்கள் எப்படி என்றால். ஒவ்வொரு இரண்டு இரவிலும் ஒரு கத்தம் செய்து விடுவார்கள். 
 
அடுத்து பாருங்கள். இவர்களெல்லாம இமாம்கள். மார்க்க அறிஞர்கள். மன்னர்கள் எப்படி இருந்தார்கள்? நாம் சொல்கிறோம் அல்லவா?  இமாம்களுக்கு, ஆலிம்களுக்கு, வெட்டியாக வேலையில்லாமல் இருக்கின்றார்கள். அதனால சும்மா ஓதிக் கொண்டே இருந்தார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது. எப்படி? நாம் எப்படி விளங்கி கொண்டிருக்கின்றோம் என்றால், ஆலிம்சா எல்லாம் நேர்ந்து விட்டவர்கள் மார்க்கத்திற்கு. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எல்லாவற்றையும். 
 
நமக்கு எவ்வளவு வேலை இருக்கிறது? நாம் எல்லாம் சாதாரண ஆளா என்று. மன்னர் வலீத் இப்னு அப்துல் மலிக். இவர் மன்னராக இருக்கின்ற நிலையில். ஒவ்வொரு மூன்று நாட்களிலும், ஒரு குர்ஆன் கத்தம் செய்யும் வழக்கம் உள்ளவராக இருந்தார். ரமலான் மாதத்தில் பொதுவாக. வாழ்க்கையிலேயே, ஒவ்வொரு மூன்று நாளும். ரமலான் மாதம்  வந்துவிட்டால், ரமலானிலே, குறைந்தது 17 முறை குரானை கத்தம் செய்யும் வழக்கம் உள்ளவராக இருந்தார். மன்னராக இருக்கக்கூடியவர்.
 
அப்பொழுது யார் அதிலே ஈடுபடுவார்களோ, யார் அதிலே ஈடுபடுவார்களோ, ஆர்வம் காட்டுவார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் லேசாக்கி விடுவான். அது தான் மேட்டர். அதுதான் விஷயம். அல்லாஹ் எப்படி சொல்லுகின்றான்? 
 
وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالنَّهَارِ إِذَا تَجَلَّى وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى
 
இரவின் மீது சத்தியமாக, அது மூடும்போது! பகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும்போது! ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது. ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ, இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ, அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம். (அல்குர்ஆன் 92 : 1, 2, 3. 4. 5. 6. 7)
 
சொர்க்கத்தின் பாதையை தக்வா உள்ளவர்களுக்கு நாம் லேசாக்கி கொடுப்போம். இபாதத் இருக்கிறதே, அல்லாஹ் லேசாக்கினால் தான் நமக்கும் லேசாகும் அல்லாஹ் லேசாக்கி கொடுக்க வேண்டும் நமக்கு அதை அல்லாஹ் நமக்கு வசப்படுத்தி கொடுக்க வேண்டும். 
 
அதிலே நமக்கு அல்லாஹு தஆலா இன்பத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்காக வேண்டி விசேஷமாக நாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். சும்மா இல்லை. காசுக்காக துஆ செய்கிறோம். இல்லையா? பணத்திற்காக துஆ செய்கிறோம் இல்லையா? உடல் ஆரோக்கியத்திற்காக துஆ செய்கிறோம் அல்லவா? இபாதத்திற்கு ஏன் துஆ செய்வதில்லை? யா அல்லாஹ்! நான் பெரிய வணக்கசாலியாக ஆக வேண்டும். 
 
கேட்கின்றோமா? யா அல்லாஹ்! என்னை பெரிய பணக்காரனாக ஆகிவிடு என்று கேட்கின்றோமா?  யா அல்லாஹ் இந்த ஊரிலே நான் தான் அதிக தர்மம் கொடுப்பவனாக இருக்க வேண்டும் என்று துஆ கேட்கின்றோமா? பயம். பணம் கையை விட்டு போய்விட்டால், நான் சொல்கிறது புரிகிறதா?
 
யா அல்லாஹ்! என்னை பெரிய வணக்கசாலியாக ஆக்கு. அதிகமாக நின்று தொழக் கூடியவனாக ஆக்கு.  துஆ கேட்கின்றோமா? இவர்களுக்கு பயம். கேட்டுவிட்டால் அதிகமாக கஷ்டப்பட வேண்டுமே! கை வலிக்குமே! கால் வலிக்குமே!, என்ற இவனுக்கே பயம். அதனால் கேட்பதில்லை.
 
1522 حَدَّثَنَا عُبَيْدُ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنْ الصُّنَابِحِيّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: " أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ "، وَأَوْصَى بِذَلِكَ مُعَاذٌ الصُّنَابِحِيَّ، وَأَوْصَى بِهِ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ
 
நபிமார்கள் எப்படி கேட்டார்கள்? எப்படி கேட்க சொன்னார்கள்? முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. அவர்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கையைப் பிடித்து கொண்டார்கள். கையை பிடித்துக் கொண்டார்கள். முஆதே! உன்னை எனக்கு ரொம்ப பிடித்தது முஆதே! என்றார்கள். சுபஹானல்லாஹ்! எப்படி இருக்கும் அவர்களுக்கு. 
 
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவுது, எண் : 1522
 
அவர்கள் சொர்க்கத்தை நேராக பார்த்தது போல் இருக்கும் அல்லவா? அல்லாஹு அக்பர்! என்ன இது. சுபஹானல்லாஹ்! கையைப் பிடித்துக் கொண்டு முஆதே! உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, அல்லாஹ்வுக்காக எனக்கு பிடித்துள்ளது. நான் உனக்கு ஒரு து ஆவை கற்றுக் கொடுக்கின்றேன் என்றார்கள். என்ன துஆவை கற்றுக் கொடுத்தார்கள், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 
 
யா அல்லாஹ்! உன்னை நினைவு கூறுவதற்கு, உனக்கு நன்றி செலுத்துவதற்கு, அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கு, நீ எனக்கு உதவி செய். அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். யா அல்லாஹ்! நான் இரவெல்லாம்  தொழுகனும் அதற்கு எனக்கு லேசாகி வை. யா அல்லாஹ்! நானும் குரானை சரளமாக அழகாக தெளிவாக ஓத வேண்டும் அதை எனக்கு லேசாக்கி கொடு. யா அல்லாஹ்! நான் அதிகமாக தர்மம் கொடுக்க வேண்டும் எனக்கு அது லேசாக்கி கொடு. 
 
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவுது, எண் : 1522
 
நாம் இன்னும் அமல்களை நேசிப்பவர்களாக மாறி இருக்கிறோமா? சொல்லுங்கள் பார்க்கலாம். இபாதத்தை நேசிப்பவர்களாக நாம் மாறி இருக்கிறோமா? இபாதத்தை செய்பவர்களாக மாறி இருக்கிறோம். இபாதத்தை நேசத்தோடு செய்பவர்களாக, நேசித்து செய்பவர்களாக, அந்த இபாதத்தில் ஈடுபாட்டை உணர்ந்து, ருசியை  உணர்ந்து செய்பவர்களாக மாறி இருக்கிறோமா? அப்படி மாறி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.
 
உஸ்மான் கனீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி வருகிறது. சொல்கிறார்கள், உங்களுடைய உள்ளம் சுத்தமாக இருந்திருக்குமேயானால், உங்களுடைய உள்ளங்கள் குர்ஆன் விஷயத்திலே, உங்களுடைய உள்ளங்கள் குர்ஆன் விஷயத்திலே, அது ஒருபோதும்  நிரம்பி இருக்காது. 
 
அதாவது எப்படி என்று சொன்னால், நாம் இன்றைக்கு ஒரு ஜூஸ் ஓதுவிட்டால், அதை ஓதி விட்டால் அப்பாடா! உங்களுடைய உள்ளம் சுத்தமாக இருந்திருக்குமேயானால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றார்கள், ஒதிக்கொண்டே இருப்போம். ஓதிக்  கொண்டே இருப்போம.
 
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஒரு முறை ஹஜ்ஜுக்கு வந்திருக்கின்றார்கள், அவருடைய  மகனாரும் வந்திருக்கின்றார்கள், இஷா முடித்துவிட்டு மகனார் மகாமே இப்ராஹிம் பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார்கள், பின்னால் இருந்து வந்து கையை வைக்கின்றார்கள், மகனார் திரும்பி பார்க்கின்றார்கள், அத்தான் நின்று கொண்டிருக்கின்றார்கள். 
 
யார்? உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்திலே மகனே! கொஞ்சம் தள்ளிக் கொள். மகா இப்ராஹிம் பக்கத்தில் தான் தோழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். தக்பீர் கட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஆரம்பித்து, போய்க்கொண்டே இருக்கிறது, போய்க்கொண்டே இருக்கிறது, போய்க்கொண்டே இருக்கிறது, போய்க் கொண்டிருக்கிறது. 
 
கடைசியில் பஜர் உடைய அதானுக்கு கொஞ்சம் நேரத்திற்கு முன்னால் குல் அவூது பிரப்பின்னாஸ் இல் முடித்துவிட்டு ஒரு ரக்காத்தில் சலாம் கொடுத்தார்கள். அதுவரைக்கும் மகனாரும் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். அத்தான் ஓதுவதை கேட்டுக்கொண்டு கேட்கிறார்கள்? தந்தை ஏ! அமீருல் முஃமினே! ஒரு ரக்அத் தானே  தொழுதீர்கள்? வித்ரு தொழுதேன் என்றார்கள். எப்படி ஈடுபாடு அவர்களுக்கு குர்ஆனில் பாருங்கள். எந்த அளவிற்கு அவர்களுக்கு அந்த குர்ஆனிலே அப்படியே ஒன்றிணைந்து இருப்பார்கள். இதைப்போல் நிறைய சம்பவங்கள் இருக்கிறது. 
 
இமாம் ஷாஃபி, ஈ ரஹிமஹுல்லாஹ். அவர்களுடைய வழக்கத்தை கேட்டீர்கள் என்றால் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ரமலான் மாதத்தில் 60 முறை குர்ஆனை கத்தம் செய்து விடுவார்கள். எத்தனை முறை? பகலில் ஒன்று இரவில் ஒன்று. பகலில் ஒன்று. இரவில் ஒன்று. பொதுவாக அவர்களுடைய வழக்கம் எப்படி என்று சொன்னால் அதாவது.
 
அதாவது மற்ற ரமலான் அல்லாத மாதங்களில் அவர்கள் ஒரு மாதத்திற்கு கதம் செய்தால், ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் அவர்கள் காலையில் ஒன்று இரவிலும் ஒன்று கத்தமா செய்யும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். அதேபோல பல தாபியீன்கள் உடைய வரலாறுகளை பார்க்கும் பொழுது,
 
சில பேருக்கு சந்தேகம் வரும். அதாவது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று நாளைக்கு குள்ளாக குர்ஆன் ஓதுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்களே! நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஸஹீஹ் புகாரி உடைய அறிவிப்பு. 
 
5052 - حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: أَنْكَحَنِي أَبِي امْرَأَةً ذَاتَ حَسَبٍ، فَكَانَ يَتَعَاهَدُ كَنَّتَهُ، فَيَسْأَلُهَا عَنْ بَعْلِهَا، فَتَقُولُ: نِعْمَ الرَّجُلُ مِنْ رَجُلٍ لَمْ يَطَأْ لَنَا فِرَاشًا، وَلَمْ يُفَتِّشْ لَنَا كَنَفًا مُنْذُ أَتَيْنَاهُ، فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَيْهِ ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «القَنِي بِهِ»، فَلَقِيتُهُ بَعْدُ، فَقَالَ: «كَيْفَ تَصُومُ؟» قَالَ: كُلَّ يَوْمٍ، قَالَ: «وَكَيْفَ تَخْتِمُ؟»، قَالَ: كُلَّ لَيْلَةٍ، قَالَ: «صُمْ فِي كُلِّ شَهْرٍ ثَلاَثَةً، وَاقْرَإِ القُرْآنَ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: قُلْتُ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الجُمُعَةِ»، قُلْتُ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «أَفْطِرْ يَوْمَيْنِ وَصُمْ يَوْمًا» قَالَ: قُلْتُ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ أَفْضَلَ الصَّوْمِ صَوْمَ دَاوُدَ صِيَامَ يَوْمٍ وَإِفْطَارَ يَوْمٍ، وَاقْرَأْ فِي كُلِّ سَبْعِ لَيَالٍ مَرَّةً» فَلَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَاكَ أَنِّي كَبِرْتُ وَضَعُفْتُ، فَكَانَ يَقْرَأُ عَلَى بَعْضِ أَهْلِهِ السُّبْعَ مِنَ القُرْآنِ بِالنَّهَارِ، وَالَّذِي يَقْرَؤُهُ يَعْرِضُهُ مِنَ النَّهَارِ، لِيَكُونَ أَخَفَّ عَلَيْهِ بِاللَّيْلِ، وَإِذَا أَرَادَ أَنْ يَتَقَوَّى أَفْطَرَ أَيَّامًا وَأَحْصَى، وَصَامَ مِثْلَهُنَّ كَرَاهِيَةَ أَنْ يَتْرُكَ شَيْئًا، فَارَقَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ "، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " وَقَالَ بَعْضُهُمْ: فِي ثَلاَثٍ وَفِي خَمْسٍ وَأَكْثَرُهُمْ عَلَى سَبْعٍ "
 
அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரதியல்லாஹு அன்ஹும்மா. அவர்கள். இதெல்லாம் நாம் படிப்பினை பெற வேண்டும். இன்று மக்களுக்கு இந்த மாதிரி வரலாறுகளை, இந்த மாதிரி சம்பவங்களை எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, வேறு என்னன்னமோ சஹாபாக்களை பற்றி  பேசப்பட்டு கொண்டிருக்கிறோம். 
 
இங்கே பாருங்கள், இது எல்லாமே புகாரியில் தான் இருக்கிறது, அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே ஷெடியூல் கேட்கிறார்கள். எப்படி? இபாதத்திற்கு எனக்கு ஒரு தர்தீப் சொல்லிக் கொடுங்கள் என்று. சுபஹானல்லாஹ்! எப்படி இருந்திருப்பார்கள் பாருங்கள். 
 
நான் நோன்பு வைக்க வேண்டும் ரசூலுல்லா. வாழ்நாள் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும். வேண்டாம். ஒவ்வொன்றாக குறைத்து விட்டு கடைசியில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
 
நீங்கள் அப்படித்தான் வைக்க வேண்டும் என்று நினைத்தால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வைத்தது போல் வையுங்கள். ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் நோன்பை விட்டு விடுங்கள். எப்படி சொல்வார்கள் என்று சொன்னால், நமக்கும் சஹாபாக்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால், நம்மை இபாதத்திலே  பின்னால் இருந்த தள்ள வேண்டி இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அப்துல்லா இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5052 குறிப்பு 2
 
எப்படி? கொஞ்சம் இபாதத்திற்காவது நீ போய் விடு என்று சொல்லி பின்னாடி இருந்து நம்மை இபாதத்திற்கு என்ன செய்ய வேண்டி இருக்கிறது? தள்ள வேண்டி இருக்கிறது. ஒரு இரண்டு ரக்ஆது தொழுவதற்கு பிடித்து தள்ள வேண்டி இருக்கிறது. 
 
அங்கு எப்படி என்றால்? நீங்கள் செய்த இபாதத்திற்கு அதையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று பின்னால் தள்ள வேண்டி இருந்தது. எப்படி? இவ்வளவு இபாதத்து செய்கின்றீர்கள். இவ்வளவு வேண்டாம். உங்களை சிரமப்படுத்தி கொள்ள வேண்டாம் என்று சொல்லி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொஞ்சம் உங்களை ரிலாக்ஸ் செய்யுங்கள் கொஞ்சம் relax செய்யுங்கள் என்று அவர்களுடைய இபாதத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துனியாவின் பக்கம் திரும்பவதற்கு முயற்சித்தார்கள்.
 
நம்மள என்ன செய்ய வேண்டி இருக்கிறது? புல்டோஸர் வைத்து கட்டி இழுத்தால் கூட இந்த பக்கம் வரமாட்டோம் போலிருக்கிறது. இரண்டு மூன்று சம்பவத்தை இடையில் பார்த்து விடுவோம். ஏனென்றால் புரிந்து கொள்ள வேண்டும். சஹாபாக்கள் சஹாபாக்கள் என்றால், சும்மா. ஏன் அல்லாஹு தஆலா அவர்கள் மீது, அவ்வளவு மஹபத் வைத்திருந்தான்? ஏன் சஹாபாக்களை பார்த்து அல்லாஹ் சொல்லுகின்றான். 
 
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
 
முஹம்மது (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். (அல்குர்ஆன் 48 : 29)
 
அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்னும், இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (அல்குர்ஆன் 48 : 29)
 
(இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்). நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த அவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்தான். (அல்குர்ஆன் 48 : 29)
 
நபியே! நீங்கள் அவர்களை பார்க்கும்போது எல்லாம் அவர்கள்  சுஜூதிலே இருப்பார்கள். ருகூவிலே இருப்பார்கள். அவர்களது குறிக்கோளெல்லாம் அல்லாஹ்வுடைய பொருத்தமாக இருக்கும். அல்லாஹ்வுடைய அருளைத் தேடுவதாக இருக்கும் என்று சொல்லி, ரப்பு அவர்களைப் பற்றி தன்னுடைய நபிக்கு இவ்வளவு புகழ்ந்து சொல்லுகின்றான் என்றால்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லா இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5052 குறிப்பு 2
 
அடுத்து அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்ப கேட்கின்றார்கள்? அடுத்தடுத்து அப்படியே கேட்டுக்கொண்டே வந்து, யா! ரஸூலல்லாஹ்! குர்ஆன் ஓத வேண்டும். அப்பொழுது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள். 
 
ஒரு மாதத்திற்கு ஒரு கத்தம்  செய்யுங்கள் என்று. ஒரு மாதத்தில். இன்றைக்கு நாம் ஒரு வருடத்திற்கு ஒரு கத்தம் செய்யவதற்கு கஷ்டப்படுகின்றோம். ஒரு மாதத்திற்கு ஒரு கத்தம் செய்யுங்கள். யா! ரசூலுல்லாஹ் அது ரொம்ப கம்மியாக இருக்கிறது என்றார்கள்.
 
யாரசூலல்லாஹ்! அது ரொம்ப கம்மியாக இருக்கிறது. எனக்கு தாகத் அதிகமாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுங்கள் என்றார்கள். சரி வாரத்திற்கு ஒரு கத்தம் செய்யுங்கள் என்றார்கள். யா! ரசூலுல்லாஹ் வாரத்திற்கு ஒரு கத்தமாவா? ரொம்ப கொஞ்சமாக இருக்கிறது. இன்னும் எனக்கு கொஞ்சம் அதிகப்படுத்துங்கள் என்றார்கள். 
 
சரி மூன்று நாளைக்கு ஒரு கத்தம் செய்யுங்கள் என்றார்கள். யா!ரசூலுல்லா அதுவும் மிகவும் கொஞ்சம் ரசூலுல்லாஹ் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துங்கள் என்றார்கள். அப்பொழுது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். மூன்று நாளைக்குள்ளாக குர்ஆனை ஓதினால் அதை நீங்கள் விளங்கி ஓத முடியாது என்று விளக்கம் கூறினார்கள்.
 
அப்பொழுது இந்த இடத்தில் சஹாபாக்கள் தாபியீன்கள் இப்படி ரமலானில் ஓதி இருக்கின்றார்களே என்று சொன்னால், அந்த மூன்று நாளைக்கும் குறைவாக குர்ஆனை ஓதக்கூடாது. அதை தடுத்தது வந்து, பொதுவான காலங்களில். புரிகிறதா? ரமலான் மாதத்தில் இபாதத்திற்காக உள்ள மாதங்களில் அதிகமான நேரங்களில் நாம் இபாதத்திற்கு கொடுக்க வேண்டிய மாசத்திலே அது நீக்கப்பட்ட விதிவிலக்கு அளிக்கப்பட்ட ஒன்று.
 
அதனால்தான் சஹாபாக்கள், தாபியீன்கள் ரமலானில் அந்த ஹதீஸ் படி அமல் செய்கின்ற மற்றபடி அமல்களில் ஆர்வமூட்டிய அந்த ஹதீஸ்ன் படி அதிகம் அதிகம் குர்ஆன் ஓதுவதிலே அவர்கள் ஈடுபட்டார்கள். வித்தியாசம் புரிந்ததா இல்லையா? இப்பொழுது பாருங்கள். அந்த சஹாபாக்கள் உடைய அந்த அமலை பற்றி இடையில சொல்லும் பொழுது சொன்னேன். எப்படி அவர்கள் இபாதத்திலே முழுமையாக ஈடுபட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். 
 
1968 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو العُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: مَا شَأْنُكِ؟ قَالَتْ: أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا، فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَ: كُلْ؟ قَالَ: فَإِنِّي صَائِمٌ، قَالَ: مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، قَالَ: فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ، قَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ: نَمْ، فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ: سَلْمَانُ قُمِ الآنَ، فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ: إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ سَلْمَانُ»
 
ஸல்மான் ஃபார்ஸீ ரலியல்லாஹு அன்ஹு. அபூதர்தா  ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வருகின்றார்கள். வந்த பிறகு இரண்டு பேரும் சம்பவம் நடக்கிறது. காலையில் வந்து பார்த்தால், அவர்களுடைய மனைவி  உணவு செய்து வைத்திருந்தார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு அமர்க்கின்றார்கள். அபுதர் ஒரு வேலையா போய்விட்டு வந்தார்.
 
நல்லபடியாக சாப்பிடுங்கள் விருந்தாளியே! என்று சொல்லும் பொழுது, நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? என்று கேட்டால், நீங்கள் சாப்பிடுங்கள்.நான் நோன்பு வைத்துள்ளேன். நீங்கள் என்னுடன் சாப்பிட்டால் தான் நானும் சாப்பிடுவேன். வேறு வழியே தெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், இது என்ன வித்தியாசம். இரண்டு பேரும் சகோதரர்களாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஆக்கப்பட்டார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ சுஹைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1968 குறிப்பு 3
 
சரி என்று வலுக்கட்டாயமாக நஃபில் நோன்பை விட்டுவிட்டு சல்மானுடன் சாப்பிட அமர்ந்தார்கள். எல்லாம் சாப்பிட்டு முடிந்த பிறகு மகரிப் தொழுகையும் இஷாவும் தொழுத பிறகு கடைசியில் படுக்கைக்கு வரும் பொழுது, அபுதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹு அக்பர் என்று தம்பீர் கட்ட இருந்தார்கள். சல்மான் அவர்கள் பிடித்து இழுத்து படு என்றார்கள். இது என்னடா வம்பா இருக்கிறது? என்று சல்மான் படுக்கின்றார்கள். படுத்து சிறிது நேரத்தில் திரும்பவும் எழுந்து அல்லாஹு அக்பர் என்று தம்பி கட்டப் போகின்றார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ சுஹைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1968 குறிப்பு 3
 
சல்மான் ரலியல்லாஹு அன்ஹு திரும்பவும் பிடித்து அவரை படுக்க வைக்கின்றார்கள். இப்படி நடந்து கொண்டிருக்கிறது இரவு முழுவதும் இரண்டு பேருக்கும்.  கடைசியில் இரவினுடைய பிற்பகுதி வந்தவுடன் சல்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்திருச்சு இப்பொழுது நீங்கள் தொழுங்கள் நானும் தொழுகின்றேன் என்று சொல்லி இருவரும் தொழுகின்றார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ சுஹைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1968 குறிப்பு 3
 
அபுதர்தா அவருக்கு சரியான கோபம். நோன்பு போய்விட்டது. இரவில் இவ்வளவு நேரம் இபாதத்து போய்விட்டது. கம்ப்ளைன்ட் எடுத்து கொண்டு நேராக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஜ்லிஸ் விற்கு சென்றால்,  இரண்டு பேரிடமிருந்து கம்ப்ளைன்ட் கேட்டு விட்டு. சல்மான் சொன்னது சரி. என்று சொல்லிவிட்டு அபுதர்தாவிற்கு விசேஷமாக அறிவுரை சொல்கின்றார்கள். 
 
அபுதர்தா! உங்களுடைய உடலுக்கு உங்கள் மேல் உரிமை இருக்கிறது. உங்கள் மனைவிக்கு உரிமை இருக்கு. உங்களை சந்திக்க வர விருந்தாளிக்கு உங்க மேல உரிமை இருக்கிறது. உங்கள் கண்ணுக்கு உங்க மேல உரிமை இருக்கிறது. என்று அவர்களுக்கு அந்த இபாதத்தை லேசாகி கொடுக்கின்றார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ சுஹைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1968 குறிப்பு 3
 
எதற்கு இந்த விஷயத்தை சொல்ல வருகின்றோம்? எந்த அளவுக்கு அவர்கள் அந்த இபாதத்திலே ருசிக்கொண்டு தன்னை முழுமையாக அதுல ஈடுபடுத்தி இருந்தார்கள். இன்றைக்கு நமக்கு அதிலிருந்து ஒரு சிறு துளியாய் செய்வது கூட சிரமமாக இருக்கிறது. 
 
1150 - حَدَّثَنَا [ص:54] أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ، فَقَالَ: «مَا هَذَا الحَبْلُ؟» قَالُوا: هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ حُلُّوهُ لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ
 
இப்பொழுது ரமலான் மாதத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவிமார்களில் இதுவும் ஸஹீஹுல் புகார் உடைய அறிவிப்பு. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலுக்கு வந்து பார்த்தால்,  பள்ளிவாசல் உடைய இரண்டு தூணிலும் கயிறு  கட்டப்பட்டிருக்கிறது. 
 
பள்ளிவாசலினுடைய இங்கிருந்து அந்தப் பக்கத்து வரைக்கும் கயிறு கட்டி இருக்கிறது. எதற்கு கயிறு கட்டி இருப்பார்கள்?  பள்ளிவாசலில் கயிறு. அப்பொழுது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கின்றார்கள். இந்த  கயிறு எதற்காக என்று? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய மனைவிமார்களில் ஒருத்தர் பதில் கூறுகின்றார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. யா! ரசூலல்லாஹ்! இந்த கயிறா? உங்கள் மனைவி ஸைனப் உடைய வேலை என்கிறார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள்?
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1150
 
இரவில் வந்து விட்டால் அவர்கள் இரவுத் தொழுகைக்கு வந்து விடுகின்றார்கள். இரவு தொழுகைக்கு வந்து என்ன செய்வார்கள்? அந்த கயிறு விற்குள் கையை விட்டுக் கொள்கிறார்கள். தக்பீர் கட்டிக் கொள்கிறார்கள். எதற்காக வேண்டி? தூங்கி கீழே விழாமல் இருப்பதற்காக. சுபஹானல்லாஹ்!  நம்மை பாருங்கள். நினைத்துப் பார்க்க வேண்டும். தூங்கி கீழ விழாமல் இருப்பதற்காக வேண்டி இபாதத்திலே அவ்வளவு நேரம் நிற்பதற்காக ஒரு சப்போர்ட் விற்கு கயிறு கட்டிக் கொண்டார்கள். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கயிற்றை அவிழ்த்து தூக்கி போடுங்கள் என்றார்கள். பிறகு சொன்னார்கள். உங்களிலே ஒருவருக்கு எவ்வளவு உற்சாகம் இருக்குமோ, அந்த அளவு அவர் தொழுது கொள்ளட்டும். அவருக்கு தூக்கம் மிகைக்குமே ஆனால் அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். பிறகு அவர்  விழித்தால் அவர் தொழுது கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
 
மற்ற விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னால், இந்த இடத்தில் ஒரு நிலைப்பாடு பாருங்கள். நம்மையும் அவர்களையும் கம்பேர் செய்து பார்த்துக்கொள்வோம். அதாவது அவர்கள் எந்த அளவை இபாதத்திலே மூழ்கினார்கள். 
 
அதிலே ஆர்வம் காட்டினார்கள் என்றால், அதிலே தங்களையே அப்படியே வருத்திக் கொள்ளும்படி அழித்துக் கொள்ளும்படி, அப்பொழுது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இல்லை. இந்த அளவுக்கு நீங்களே வருத்தாதீர்கள். உங்களை அழித்து கொள்ளாதீர்கள். உங்களுடைய  உடம்புக்கு ஹக் இருக்கிறது. தூக்கமும் உங்களுக்கு தேவை என்று கூறி அவர்களுக்கு லேசாக்கி கொடுத்தார்கள்.
 
இன்று நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது என்றால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்த அந்தக் குறைந்தபட்ச அளவு கூட சரியாக செய்ய முடியாத ஒரு பலவீனமான நிலையில் நாம் இருந்து கொண்டு, ஆசை வைப்பது மட்டும் எதை ஆசை வைத்தோம்? அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்ததை, ஆசை வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை குறை சொல்லும் கூட்டம் கூட நம்மில் இருக்கிறோம்.
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்த இபாதத்திலே இது சும்மா நமக்கு கிடைக்காது. இபாதத் என்பது சாதாரணமாக நமக்கு கிடைத்து விடாது. இதற்கு நம்முடைய உள்ளத்திலே அந்த தேடல் இருக்க வேண்டும். அதற்கான ஆசை இருக்க வேண்டும். அதற்கான துஆ இருக்க வேண்டும். இந்த  இரவு தொழுகையை பொறுத்த வரைக்கும், 
 
81 - (2820) حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا صَلَّى قَامَ حَتَّى تَفَطَّرَ رِجْلَاهُ، قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللهِ أَتَصْنَعُ هَذَا، وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَقَالَ: «يَا عَائِشَةُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஈடுபாடு ஏற்கனவே நான் சொன்னது போல ரமலான் அல்லாத மாதங்களிலேயே, அதாவது எந்த அளவு இருந்தது என்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மாதங்கள் வீங்கிவிடும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதங்கள் வீங்கி, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களிடம் கேட்பார்கள்? அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் ஆயிற்றே! ஏன் நீங்கள் உங்களை வருத்திக் கொள்கின்றீர்கள்?  அதற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன பதில் என்ன? நான் அல்லாஹ்விற்கு நன்றி உள்ள அடியானாக ஆக வேண்டாமா?
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் எண் : 81
 
طه  مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَى
 
தா ஹா. (நபியே!) நாம் இந்த குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது இறக்கவில்லை, (அல்குர்ஆன் 20 : 1, 2)
 
அல்லாஹு தஆலா சூரா தாஹாவிலே இந்த முதல் வசனம் சொல்கின்றான் பாருங்கள். நபியே! நீங்கள் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் இறக்கவில்லை. என்ன சிரமபட்டார்கள்? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையிலே அந்த அளவு நின்று  நின்று நின்று அதிக நேரம் இந்த குர்ஆனை ஓதுவதால் அவருடைய கால்கள் வீங்கி அவர்கள் தொடர்ந்து அழுதார்கள். அவர்களுடைய உடல் பலவீன அடையக்கூடிய நிலை ஏற்பட்டது. அல்லாஹு தஆலா சொன்னான். இப்படி நீங்கள் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை இறக்கவில்லை என்று.
 
எதற்கு சொல்ல வருகின்றோம்? இந்த சம்பவம் ஆக இருக்கட்டும. அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் சம்பவமாக இருக்கட்டும், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சம்பவமாக இருக்கட்டும்.  அதாவது அவர்களுடைய அமல், 
 
அவர்களுடைய இபாதத் எந்த அளவு இருந்தது என்றால், அதை கொஞ்சம் குறைத்து உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தது.
 
இன்று நம்முடைய இபாதத். நம்முடைய வணக்க வழிபாடுகள். எந்த அளவு இருக்கின்றன? அதாவது. இவ்வளவு அற்பமான அளவை செய்து கொண்டு, நாம் என்ன எண்ணத்தில் இருக்கின்றோம்? நாம் தான் ரொம்ப பர்ஃபெக்டாக செய்கின்றோம். நாம ரொம்ப அதிகமாக அமல் செய்கிறோம் என்று. சரி. அடுத்ததாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த இரவுத் தொழுகைக்குப் பிறகு, தான தர்மங்கள். 
 
ரமலான் மாதத்தில் அதிகமாக அல்லாஹ் வினாலோ அதுபோன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலமாக நமக்கு ஆர்வமூட்டப்பட்ட ஒரு அமல். தான தர்மங்கள். அது ஜதாத்தாக இருக்கட்டும், சதக்காவாக இருக்கட்டும், மற்றும் உபரியான தர்மங்களாக இருக்கட்டும்.
 
807 - حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
 
எவ்வளவு அழகாக சொன்னார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். யார் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க வைப்பாரா? அவருடைய நோன்பினுடைய அதே போன்று கூலி அவருக்கு கொடுக்கப்படும். 
 
அறிவிப்பாளர் : ஸைது இப்னு காலித் அல் ஜுஹ்னி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி எண் : 807
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதுல எந்த அளவிற்கு இருந்தார்கள்? பொதுவாகவே. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்கு என்று எதுவும் அவர்கள் சேமித்து வைக்க மாட்டார்கள். 
 
சரி அவர்கள் தான் அப்படி என்றால், அவருடைய மனைவிமார்களும் அப்படித்தான். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கனிமத்துகள் வர ஆரம்பித்ததற்கு பிறகு, ஒரு வருடத்திற்கு உண்டான உணவு தானியங்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கு பங்கு வைத்து அனுப்பி வைத்து விடுவார்கள்.
 
எப்படி? ஒரு  வருடத்திற்கு தேவையான அடிப்படை உணவு. அது கோதுமையோ, என்னமோ, அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். சரி. இப்படி இருக்கின்ற நிலையில், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா உடைய இரண்டு ஹதீஸை கேளுங்கள். 
 
 3798 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ: مَا مَعَنَا إِلَّا المَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا»، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ: أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي، فَقَالَ: هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً، فَهَيَّأَتْ طَعَامَهَا، وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ، أَوْ عَجِبَ، مِنْ فَعَالِكُمَا» فَأَنْزَلَ اللَّهُ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ المُفْلِحُونَ} [الحشر: 9]
 
இதே சஹீஹுல்  புகாரி உடைய அறிவிப்பு. ஒன்று. எங்களுக்கு விருந்தாளி வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மஸ்ஜித் விற்கு. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மனைவிடத்திலும் ஆள் அனுப்புகின்றார்கள். 
 
ஏதாவது உண்ணுவதற்கு இருக்கிறதா என்று?  ஒவ்வொரு மனைவியிடத்திலிருந்தும் பதில் வருகிறது. உங்களை சத்திய மார்க்கத்தை கொண்டு அனுப்பி அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீட்டில் தண்ணீரை தவிர வேறு உணவே இல்லை என்று. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3798 குறிப்பு 4
 
2567 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ: ابْنَ أُخْتِي «إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ، ثُمَّ الهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ»، فَقُلْتُ يَا خَالَةُ: مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ: " الأَسْوَدَانِ: التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا "
 
ஒரு பக்கம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தர்மம். இன்னொரு பக்கம் மனைவிமார்களுடைய தர்மம். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்லுகின்றார்கள். நாங்கள் பிறையை பார்த்தோம், பிறகு பிறையை பார்த்தோம், பிறகு பிறையை பார்த்தோம், வீட்டில் நெருப்பு எரிக்கப்படவில்லை. 
 
உணவுக்காக வேண்டி சமைப்பதற்கு உண்டான வேலையே இல்லை. அப்பொழுது அவர்களிடத்தில் இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கின்றார்கள்? அன்னையே! நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? இரண்டு மாதமாக சமைக்காமல் நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? என்று கேட்டால், பதில் சொல்கிறார்கள் நாங்கள் தண்ணீரையும் பேரித்தம் பழத்தையும் சாப்பிட்டு தான், நாங்கள் இரண்டு மாதத்தை ஓட்டினோம் என்றார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா , நூல் : புகாரி, எண் : 2567, 6459 குறிப்பு 5
 
எதற்கு சொல்ல வருகின்றோம் என்றால், ரமலான் அல்லாத மாதத்திலேயே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தர்மம் இப்படி இருந்தது என்றால், ரமலான் அல்லாத மாதங்களிலேயே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தர்மம் இப்படி இருந்தது என்றால், தர்மத்திற்குரிய மாதம் ரமலான் வந்துவிட்டால், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தர்மம் எப்படி இருக்கும் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்.
 
4997 - حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ، وَأَجْوَدُ مَا يَكُونُ فِي شَهْرِ رَمَضَانَ، لِأَنَّ جِبْرِيلَ كَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ فِي شَهْرِ رَمَضَانَ، حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரைந்து வீசக்கூடிய காற்றாய் விட, செல்வத்தை அதிகமாக தர்மம் கொடுப்பவர்களாக இருந்தார்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4997 குறிப்பு 6
 
சகோதரர்களே! இங்கே ஒரு விசேஷமான நுணுக்கத்தை நாம் புரிய வேண்டும். 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً ذَلِكَ خَيْرٌ لَكُمْ وَأَطْهَرُ فَإِنْ لَمْ تَجِدُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் (ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். (அல்குர்ஆன் 58 : 12)
 
நீங்கள் உங்களுடைய, நபியோடு நீங்கள் பேசுவதற்கு முன்னால், தர்மத்தை நீங்கள் முற்படுத்துங்கள் என்று அல்லாஹ் சொல்லுகின்றான். இன்னும், பல இடங்களில் இபாதத்தோடு இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கும்.என்னவென்றால், நாம் செய்யக்கூடிய இபாதத்துக்கள். நாம் செய்யக்கூடிய இபாதத்துக்கள் அதில் உள்ள குறைகள் தவறுகள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்விடம் அந்த இபாதத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிகவும் துணையாக இருக்கும் இந்த தர்மங்கள்.
 
அதனால் தான் உடல் சார்ந்த இபாதத்துக்கள் எங்கெல்லாம் இருக்குமோ, அதோட சேர்த்து கலந்து அல்லது அதனுடைய முடிவில் இந்த பொருள் சார்ந்த தர்மம் என்ற வணக்க வழிபாடும் நம்முடைய மார்க்கத்தில் ஒரு அடிப்படையாக இருக்கும். 30 நாள், ஒரு மாதம், நாம் ரமலானில் நோன்பு வைக்கின்றோம். இதனுடைய சிறப்பான முடிவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதை ஆக்கினார்கள்? ஸதக்கதுல் ஃபித்ர்.
 
1827 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ، وَأَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْخَوْلَانِيُّ، عَنْ سَيَّارِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الصَّدَفِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، فَمَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ
 
இந்த ஸதக்கதுல் ஃபித்ரை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும் பொழுது, இது நோன்பாளியை நோன்பு சுத்தப்படுத்தக் கூடியதாக, அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உண்டான ஒரு காரணமாக அமைகிறது. அதே போல ஹஜ் உடைய வணக்கத்திற்குப் போகிறோம். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, அபூ தாவூது,  எண் : 1827, 1609
 
அந்த ஹஜ் உடைய வணக்கத்தில் நமக்கு ஏதாவது ஒரு சிறிய பெரிய குறைகள் ஏற்பட்டு விட்டால், அங்கேயே நாம் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது? ஃபித்யா கொடுங்கள் ஃபித்யா கொடுங்கள். இதை எல்லாமே எதில் வருகிறது? பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகள். நாம் செய்யக்கூடிய உடல் சார்ந்த வழக்கப்பாடுகள் உடன் சேர்ந்து, பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளிலும் சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். 
 
அப்பொழுது அந்த அடிப்படையில் இந்த ரமதான் உடைய இந்த நோன்பிலே அதிகமாக நாம் செய்ய வேண்டிய அமல்களிலே முக்கியமான ஒரு அமல் என்ன? தர்மங்கள். யாருக்கு எந்த அளவுக்கு முடியுமோ, அப்பொழுது தர்மம் என்றால், நாம் பெரிதாக. அதாவது. என்ன சொல்வது. நிறைய லட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. 
 
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنْفِقُوا خَيْرًا لِأَنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
 
ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் ஆன்மாக்களின் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது ஆன்மாக்களின் (அல்குர்ஆன் 64 : (16
 
யாருக்கு எவ்வளவு முடியுமோ? உங்களால் முடிந்த அளவு. அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கு எந்த அளவு முடியுமோ? சில பத்துகளையோ எவ்வளவு முடியுமோ அந்த அளவு நாம் ஏழைகளுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு குறிப்பாக நோன்பாளிகளுக்கு இந்த  நோன்பை அவர்களுக்கு லேசாக்கி கொடுக்க கூடிய விதத்திலே நாம் இந்த தர்மத்தை அதிகப்படுத்துவதில், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு அமல், நம்முடைய நோன்பு அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிக நெருக்கமான ஒரு அமலாகும்.
 
நம்முடைய. அதாவது ஸஹாபாக்கள் உடைய வாழ்க்கை வரலாறுகளை பார்க்கின்றோம். பல சஹாபாக்கள். ஏழைகள் இல்லாமல் அவர்கள் நோன்பு திறக்க மாட்டார்கள். குறிப்பாக அப்துல்லா இப்னு உமர் ரலியல்லாஹு anhu அவர்களைப் பற்றி வருகிறது. மிஷ்கின்களோடு, யதீம்களோடு தான் வீட்டிற்கு வருவார்கள். 
 
பொதுவாகவே வாழ்நாளில் அதிகமாக நோன்பு வைக்கக் கூடியவர்கள். அவர்களுடைய மனைவிமார்கள் என்ன செய்வார்கள் என்றால், இவர்களை எப்படியாவது கொஞ்சம் நல்லாதாக சாப்பிடட்டுமே என்று சொல்லிவிட்டு இவர்களுக்காக வேண்டி ஏதாவது செய்து வைத்திருப்பார்கள். 
 
எப்பொழுது பார்த்தாலும் வரும்போது மிஷின்களோட ஏழைகளோடு வருவார்கள். சில நேரங்களில், குடும்பத்தார்கள் கோபித்துக் கொண்டு உங்களுக்கு என்று கஷ்டப்பட்டு செய்து வைத்தோம். நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்று சொல்லி கோபப்பட்டால், எதையுமே சாப்பிடாமல்  அந்த மிஸ்கின்களுடன் போய்விடுவார்கள்.
 
அந்த அளவிற்கு. அதாவது இதை எதற்காக சொல்லுகின்றேன் என்றால், அப்போ அந்த மனைவிமார்களுக்கு தர்மம் என்றால் பிடிக்காது என்று இல்லை. அப்படியல்ல. அதாவது வயதானவர்கள். இரவு இபாதத் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் கூட, தனக்குள்ள அந்த விசேஷமான உணவை யாரோடு பகிர்ந்து சாப்பிட ஆசைப்பட்டார்கள்? ஏழைகளோட மிஸ்கின்களோடு அவர்கள் பகிர்ந்து சாப்பிட ஆசைப்பட்டார்கள். 
 
அப்பொழுது நம்மால் முடிந்த அளவிற்கு நம்முடைய அண்டை வீட்டார்களுக்கு கொடுப்பது, நமது நண்பர்களுக்கு கொடுப்பது, தேவை உள்ளவர்களுக்கு கொடுப்பது. இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது.
 
அதாவது, நம்மிடத்தில் யாசிக்காமல் இருப்பார்கள். ஆனால் தேவை உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களை அறிந்து கொடுப்பது இருக்கிறதே, இது மிகவும் ஏற்றமான அமல் ஆகும். அல்ஹம்துலில்லாஹ்! இன்னும் நிறைய, விஷயங்கள் இருக்கின்றனர். 
 
இன்ஷா அல்லாஹ் பிறகு பார்க்கலாம். அதாவது. நோக்கம் இதுதான். அதாவது இந்த ரமலானுடைய மாதம் என்பது  இபாதத்திற்காக உள்ள மாதம். அதிலே குறிப்பாக  இரவு தொழுகை, குர்ஆன் ஓதுவது, தான தர்மங்கள் செய்வது. இதுதான் நம்முடைய முன்னோர்களுடைய வணக்க வழிபாடுகளாக இருந்தன. இந்த வணக்க வழிபாடுகளிலே அவர்கள் போட்டி போடக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்த வணக்க வழிபாடுகளை செய்து அவர்கள் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பையும், கருணையும், ஆதரவையும் வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 
 
2026 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ [ص:48] رَضِيَ اللَّهُ عَنْهَا، - زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ»
 
இந்த இபாதத்தினுடைய ஆர்வத்தின் வெளிப்பாடாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பாக லைலத்துல் கதர் இரவை தேடுவதற்காக ரமலானுடைய கடைசி பத்திலே அவர்கள் இஃதிகாப் இருந்தது. 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி , எண் : 2026
 
பிறகு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, இந்த லைலத்துல் கதரை நான் அடைய பெற்றால், அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன செய்ய வேண்டும்? என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே கேட்க போது,  
 
3513 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ كَهْمَسِ بْنِ الحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: " قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي ". هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பதில் கூறினார்கள். இந்த து ஆவை நீ அதிகமாக ஓது என்று. ஆகவே நாமம் அல்ஹம்துலில்லாஹ் இந்த ரமதானை அடைய பெற்றிருக்கின்றோம். எப்படி நம்முடைய  ஸலஃபுகள், முன்னோர்கள் இந்த ரமதானை பயன்படுத்திக் கொண்டார்களோ, அதுபோன்று அவருடைய வழியில் இந்த ரமதானை பயன்படுத்துவதற்கு அல்லாஹ்விடத்திலே அதிகம் நாம் வேண்ட வேண்டும். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3513
 
முயற்சி செய்ய வேண்டும். கண்டிப்பாக யார் அல்லாஹ்விடத்தில் வேண்டுகின்றார்களோ, கேட்கின்றார்களோ, பிறகு முயற்சி செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹு தஆலா லேசாக்கி கொடுப்பான். அல்லாஹ் சுபஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் இபாதத்துகளை இலகுவாக்கி தருவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
سنن أبي داود (2/ 50)
 
 1375 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنَ الشَّهْرِ حَتَّى بَقِيَ سَبْعٌ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، فَلَمَّا كَانَتِ السَّادِسَةُ لَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا كَانَتِ الْخَامِسَةُ قَامَ بِنَا حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا قِيَامَ هَذِهِ اللَّيْلَةِ، قَالَ: فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، قَالَ: فَلَمَّا كَانَتِ الرَّابِعَةُ لَمْ يَقُمْ، فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ جَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ وَالنَّاسَ، فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قَالَ: قُلْتُ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ، ثُمَّ لَمْ يَقُمْ بِقِيَّةَ الشَّهْرِ
 
குறிப்பு 2)
 
 5052 - حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: أَنْكَحَنِي أَبِي امْرَأَةً ذَاتَ حَسَبٍ، فَكَانَ يَتَعَاهَدُ كَنَّتَهُ، فَيَسْأَلُهَا عَنْ بَعْلِهَا، فَتَقُولُ: نِعْمَ الرَّجُلُ مِنْ رَجُلٍ لَمْ يَطَأْ لَنَا فِرَاشًا، وَلَمْ يُفَتِّشْ لَنَا كَنَفًا مُنْذُ أَتَيْنَاهُ، فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَيْهِ ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «القَنِي بِهِ»، فَلَقِيتُهُ بَعْدُ، فَقَالَ: «كَيْفَ تَصُومُ؟» قَالَ: كُلَّ يَوْمٍ، قَالَ: «وَكَيْفَ تَخْتِمُ؟»، قَالَ: كُلَّ لَيْلَةٍ، قَالَ: «صُمْ فِي كُلِّ شَهْرٍ ثَلاَثَةً، وَاقْرَإِ القُرْآنَ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: قُلْتُ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الجُمُعَةِ»، قُلْتُ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «أَفْطِرْ يَوْمَيْنِ وَصُمْ يَوْمًا» قَالَ: قُلْتُ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ أَفْضَلَ الصَّوْمِ صَوْمَ دَاوُدَ صِيَامَ يَوْمٍ وَإِفْطَارَ يَوْمٍ، وَاقْرَأْ فِي كُلِّ سَبْعِ لَيَالٍ مَرَّةً» فَلَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَاكَ أَنِّي كَبِرْتُ وَضَعُفْتُ، فَكَانَ يَقْرَأُ عَلَى بَعْضِ أَهْلِهِ السُّبْعَ مِنَ القُرْآنِ بِالنَّهَارِ، وَالَّذِي يَقْرَؤُهُ يَعْرِضُهُ مِنَ النَّهَارِ، لِيَكُونَ أَخَفَّ عَلَيْهِ بِاللَّيْلِ، وَإِذَا أَرَادَ أَنْ يَتَقَوَّى أَفْطَرَ أَيَّامًا وَأَحْصَى، وَصَامَ مِثْلَهُنَّ كَرَاهِيَةَ أَنْ يَتْرُكَ شَيْئًا، فَارَقَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ "، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " وَقَالَ بَعْضُهُمْ: فِي ثَلاَثٍ وَفِي خَمْسٍ وَأَكْثَرُهُمْ عَلَى سَبْعٍ "
 
குறிப்பு 3)
 
 1968 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو العُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: مَا شَأْنُكِ؟ قَالَتْ: أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا، فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَ: كُلْ؟ قَالَ: فَإِنِّي صَائِمٌ، قَالَ: مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، قَالَ: فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ، قَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ: نَمْ، فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ: سَلْمَانُ قُمِ الآنَ، فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ: إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ سَلْمَانُ
 
குறிப்பு 4)
 
 3798 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ: مَا مَعَنَا إِلَّا المَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا»، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ: أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي، فَقَالَ: هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً، فَهَيَّأَتْ طَعَامَهَا، وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ، أَوْ عَجِبَ، مِنْ فَعَالِكُمَا» فَأَنْزَلَ اللَّهُ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ المُفْلِحُونَ} [الحشر: 9]
 
குறிப்பு 5)
 
  2567  حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ: ابْنَ أُخْتِي «إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ، ثُمَّ الهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ»، فَقُلْتُ يَا خَالَةُ: مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ: " الأَسْوَدَانِ: التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا
 
குறிப்பு 6)
 
 "4997 حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ، وَأَجْوَدُ مَا يَكُونُ فِي شَهْرِ رَمَضَانَ، لِأَنَّ جِبْرِيلَ كَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ فِي شَهْرِ رَمَضَانَ، حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/