அல்குர்ஆன் போற்றும் சான்றோர் | Tamil Bayan - 715
அல்குர்ஆன் போற்றும் சான்றோர்
தலைப்பு : அல்குர்ஆன் போற்றும் சான்றோர்
வரிசை : 715
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -27-03-2022 | 24-08-1443
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்கும் கண்ணியத்திற்கு உரிய, இந்த அல் பாக்கியான் ஸாலிஹான் மதரஸாவின் ஆசிரியர்களே! சமுதாய முக்கியஸ்தர்களே! பெரியோர்களே! என் அன்பிற்குரிய மாணவ மாணவிகளே! தாய்மார்களே! சகோதரிகளே! உண்மையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலே மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியை ஒரு சந்தோஷத்தை நான் அடைகிறேன்.
அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்றுக் கொடுக்கப்படுகின்ற இந்த பாடசாலைகளில் படிக்கின்ற மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, சில வார்த்தைகளை சொல்வதற்காக, இங்கே அழைக்கப்பட்டபோது எனக்கும் கல்வி கற்கக் கூடிய அந்த பாக்கியம் இன்னொரு முறை ஏற்பட வேண்டுமே!
அப்படிப்பட்ட ஒரு நற்பாக்கியம் வாழ்க்கையில் திரும்ப திரும்ப கிடைக்க வேண்டுமே என்ற ஆசையோடு நமது உஸ்தாது அவர்கள் என்னை அழைத்த போது உடனே அல்ஹம்துலில்லாஹ்! அதற்கு வரக்கூடிய அந்த உற்சாகத்தை அந்த வாய்ப்பை அல்லாஹ் சுபஹானஹுவதஆலா ஏற்படுத்திக் கொடுத்தான்.
என் அன்பிற்குரிய, பெரியோர்களே! தாய்மார்களே! சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் இதனுடைய கண்ணியத்தை, மகத்துவத்தை, புனிதத்தை, சிறப்பை நாம் உணர்வோமேயானால், புரிந்து கொள்வோமேயானால், இதிலிருந்து வேறொன்றின் பக்கம் நம்முடைய கவனம் திரும்பி இருக்காது.
அல்குர்ஆன் இது அல்லாஹ்வுடைய கலாம் ரப்புல் ஆலமீன் நம்மை படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹுத்தஆலா பேசிய பேச்சாகும்.
نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ ,عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ ,بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ
நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார். ,உமது உள்ளத்தில் (இது இறக்கப்பட்டது), நீர் (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஆகவேண்டும் என்பதற்காக., தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டது). (அல்குர்ஆன் : 26 : 193, 194, 195)
அல்லாஹுத்தஆலா ஜிப்ரலுக்கு கொடுத்து ஜிப்ரில் ( அலைஹி வஸல்லம் ) ரசூலுல்லாஹ் உடைய உள்ளத்திலே இதை இறக்கி வைத்தார்கள். இன்று அல்லாஹுத்தஆலா நமக்கு இந்த குர்ஆனை இலகுவாக்கி வைத்திருக்கவில்லை என்றால், நம்மால் இதை ஓதிருக்க முடியாது.
إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
நிச்சயமாக நாம் உம்மீது மிக கனமான (சட்டங்களை உடைய) வேதத்தை இறக்குவோம். (அல்குர்ஆன் 73 : 5)
மிக வலிமையான, மிக பலமான, மிக பாரமான வேதத்தை நபியே! உம் மீது இறக்குகிறோம் என்று சொல்லக்கூடிய அல்லாஹுத்தஆலா நம்மைப் போன்ற பலவீனர்களுக்காக,
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா? (அல்குர்ஆன் 54 : 17)
இந்தக் குர்ஆனை சிந்திப்பதற்கு, உணர்வதற்கு, புரிவதற்கு படிப்பதற்கு, மனப்பாடம் செய்வதற்கு நாம் மிக இலகுவாக ஆக்கி வைத்திருக்கிறோம். இதைக் கொண்டு படிப்பினைப் பெறக்கூடியவர்கள் இருக்கிறீர்களா? இதைக் கொண்டு உபதேசம் பெறக்கூடியவர்கள் இருக்கிறீர்களா? என்று அல்லாஹுத்தஆலா கேட்கிறான். அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆன் இது ஒரு பாக்கியமான வேதம்.
كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ
இது, அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய அருள் நிறைந்த) ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் (இதன் மூலம்) நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம். (அல்குர்ஆன் 38 : 29)
இதனுடைய பரக்கத் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட, அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனுடைய விசேஷமான, அபிவிருத்திகள், அருட்கொடைகள், இறக்கப்பட்ட அருட் கொடைகளால் நிறைந்த வேதம் இது.
قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا ,يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدً
(நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய தண்டனையை (அது உடனே இறங்கட்டும் என்று) கேட்பவர் கேட்டார். ,நிராகரிப்பாளர்களுக்கு (அந்த தண்டனை நிகழும்). அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன் 70 : 1, 2)
இது ஒரு ஆச்சரியமான வேதம் அலி ரலியல்லாஹு அன்ஹு சொல்லுவார்கள் لا تنقضي عجائبُه : குர்ஆனுடைய ஆச்சரியங்கள் முடிவடைந்து விடாது.
கூற்று : ரழியல்லாஹு அன்ஹு , நூல் : தர்உத்தஆருழ், எண் : 5/268
சகோதரர்களே! சகோதரிகளே! இன்று சிலர் குர்ஆனை நீங்கள் சுயமாக படிக்காதீர்கள் அது உங்களுக்கு புரியாது, குர்ஆனை புரிவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள், அவர்களால் தான் குர்ஆனை புரிய முடியும் என்று குர்ஆனுடைய அரபி வாசகத்தை ஓதுவதோடு நிறுத்திக்கொண்டு பொதுமக்களை குர்ஆனில் இருந்து தூரமாக்க முயற்சிக்கிறார்கள் படித்தால் புரியாது என்று சொல்கிறார்கள்.
அதை விளங்கிக் கொள்ள முடியாது என்று சொல்கிறார்கள். அல்லாஹ்வின் அடியார்களே! புரிந்து கொள்ளுங்கள் சொல்லுங்கள் அவர்களிடத்திலே ஆம் நமக்கு எதுவும் தெரியாது குர்ஆனை படித்தால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
நாம் உண்மையில் முட்டாள்கள் தான் குர்ஆனை படித்தால் அல்லாஹ் நம்மை அறிவாளியாக ஆக்குவான் நமக்கு ஞானம் இல்லை, நமக்கு தெளிவான சிந்தனை இல்லை, குர்ஆனை படித்தால் இந்த குர்ஆன் மூலமாக தெளிவான சிந்தனையை, தெளிவான அறிவை நல்ல புத்தியை, ஒழுக்கத்தை, கல்வியை, ஞானத்தை அல்லாஹ் கொடுப்பான்.இந்த குர்ஆன்
يس ,وَالْقُرْآنِ الْحَكِيمِ
இந்த குர்ஆன் யா ஸீன். ,ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக! ஞானமிக்க வேதம் இது (அல்குர்ஆன் 36 : 1, 2)
الر تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَقُرْآنٍ مُبِينٍ
அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்களுடைய; இன்னும், தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும். (அல்குர்ஆன் 15 : 1)
தெளிவான வாசகங்கள் உடைய வேதம் இது. இதைப் படிப்பதால் அறிவு வரும் அரபு உலக மக்கள் அவர்கள் என்ன தெரிந்து வைத்திருந்தார்கள்? கவிதை பாடுவதை தவிர, வேட்டையாடுவதை தவிர, சூறை ஆடுவதை தவிர, கொள்ளை அடிப்பதை தவிர, பொழுது போக்குவதை தவிர, களியாட்டங்களை தவிர வேறொன்றும் அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லைز
ஆனால், குர்ஆன் இறக்கப்பட்ட போது அந்த குர்ஆன் அவர்கள் மீது உழைப்பு செய்யும்போது அந்தக் குர்ஆனை கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த அரபு மக்கள் மீது உழைப்பு செய்த போது அவர்கள் ஞானவான்களாக, உண்மையாளர்களாக, சிறந்த கல்விமான்களாக, ஞானத்தின் ஊற்றுகளாக விளங்கினார்கள்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
ஆம் சகோதர, சகோதரிகளே! குர்ஆனை நெருங்குவதற்கு முன் உலக சமுதாயம் வழிகேட்டிலே இருந்தது அரபு மக்கள் அறியாமையிலே இருந்தார்கள், ஜாஹிலியத்திலே இருந்தார்கள். குர்ஆன் இறக்கப்பட்ட போது அந்த குர்ஆனை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த அரபு மக்களுக்கு ஓதிய போது,
அதை அவர்கள் உள்வாங்கிய போது, அதை அவர்கள் புரிந்த போது, அதை அவர்கள் மனப்பாடம் செய்தபோது, அதை ஆழ்ந்து சிந்தித்தபோது அவர்களை அல்லாஹுத்தஆலா நபியின் தோழர்களாக, கல்வியில் சிறந்தவர்களாக நாமெல்லாம் பின்பற்றுவதற்கு தகுந்தவர்களாக நாம் அல்ல உலக மக்கள் எல்லாம் எல்லா வகையிலும் பின்பற்றுவதற்கு தகுந்த முன்னோடிகளாக அல்லாஹ் ஆக்கினான்.
கண்ணியத்திற்குரியவர்களே! அத்தகைய குர்ஆன் இன்று நம்மிடத்திலே இருக்கிறது குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் இப்போது நம்மை நோக்கி சில இடங்களில் வர இருக்கிறது. குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாம் ஆகிய இது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி இறை தூதருக்காக அல்லாஹுத்தஆலா தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அந்த வேதம் நம் உடைய நபியின் மீது இறக்கப்பட்டது. நபிமார்களிலேயே சிறந்த நபியாக நபிமார்களிலே இமாமாக ஆக்கப்பட்டார்கள்.
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான். (அல்குர்ஆன் 3 : 110)
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த குர்ஆன் நமக்கு கொடுக்கப்பட்டதால் இந்த குர்ஆன் நமக்கு வழங்கப்பட்டதால் மனித சமுதாயத்திலேயே சிறந்த சமுதாயமாக நாம் ஆக்கப்பட்டோம். இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்திலே இறக்கப்பட்டதால், இந்த ரமலான் மாதம் நான்கு புனித மாதங்களில் உள்ள ஒரு மாதம் அல்ல ஆனால், இந்த ரமலான் மாதத்தை அல்லாஹுத்தஆலா குர்ஆனுக்காக தேர்ந்தெடுத்த காரணத்தால்,
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும்.
இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்)! (அல்குர்ஆன் 2 : 185)
ரமலான் மாதம் குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் யாருக்காக இந்த குர்ஆனை இறக்கப்பட்டது மக்களை நேர்வழிப்படுத்த மக்களுக்கான நேர்வழிக்காட்டியாக இந்த குர்ஆன் இறக்கப்பட்டது. நேர்வழியினுடைய அத்தனை அத்தாட்சிகளும் இந்த குர்ஆனிலே இருக்கிறது பகுத்தறிவு பேச வேண்டுமா ? குர்ஆனிலே பகுத்தறிவு இருக்கிறது நேர்வழி வேண்டுமா? நல்ல சிந்தனை வேண்டுமா ? நல்ல தத்துவங்கள் வேண்டுமா? எல்லாம் இந்த குர்ஆனிலே இருக்கிறது.
சகோதரர்களே! சிலர் எண்ணிக் கொள்ளலாம் மஸ்ஜிதிலே தொழுகையிலே ஓதப்படுவதற்காக மட்டும் இறக்கப்பட்ட வேதம் என்று இல்லை தொழுகையிலே ஓதப்படுவது இது இந்த குர்ஆனுடைய ஒரு பகுதி, அல்லாஹ்வை வணங்குவதற்காக அல்லாஹ்வுடைய கலாமை தொழுகையில் ஓத வேண்டும் என்பது அல்லாஹ் உடைய கட்டளை.
அதுவும் அந்த தொழுகையிலே ஓதும் போது புரிந்து பாருங்கள் சகோதரர்களே! இன்று நாம் ஓதுவது வேறு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிய விதம் வேறு , நாம் ஓதிய விதம் வேறு, ஸஹாபாக்கள் ஓதிய விதம் வேறு.
இன்று ஓதக்கூடிய பல ஆலிம்களுக்கே, பல இமாம்களுக்கே, ஓதக்கூடிய வசனத்தின் சிந்தனை இருக்காது, ஓதக்கூடிய வசனத்தின் பொருளை உணர மாட்டார்கள், எங்கே நிறுத்த வேண்டும் என்பது கூட தெரியாது, குர்ஆனுடைய வாக்கியங்களை மனப்பாடம் செய்து இருப்பார்கள், அதனுடைய பொருளை, அதனுடைய கருத்தை உள்வாங்கி இருப்பார்களா, உணர்ந்து இருப்பார்களா, புரிந்திருப்பார்களா, என்றால் இருக்காது. ஆனால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய குர்ஆன் இருக்கிறதே!
يَاأَيُّهَا الْمُزَّمِّلُ ,قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا ,نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا ,أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
போர்வை போர்த்தியவரே!, (வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!), அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!), அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 1,2, 3, 4)
இரவு காலங்களில் நபியே! முழு இரவல்ல பாதி இரவு அல்லது, இரவினுடைய மூன்றில் இரண்டு பகுதி அல்லது நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், பிரயாணத்தில் இருந்தால், அசதியில் இருந்தால், அப்போது கூட இரவில் 3 ல் ஒரு பகுதி அல்லாஹ்வுக்கு முன்னால் உங்களை படைத்த ரப்புக்கு முன்னால் நீங்கள் எழுந்து நின்று வணங்க வேண்டும்.
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا
இன்னும், இரவில் (கொஞ்சம்) உறங்கி எழுந்து அதை (-குர்ஆனை) ஓதி தொழுவீராக! இது உமக்கு (மட்டும்) உபரியா(ன கடமையா)கும். (மறுமையில்) மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட இடத்தில் உம்மை உம் இறைவன் எழுப்பக் கூடும். (அல்குர்ஆன் 17 : 79
நீங்கள் இரவுத் தொழுகையை நிறைவேற்றுவது உங்களது ரப்புக்காக உங்கள் மீது விசேஷ கடமை என்று அல்லாஹுத்தஆலா நபியின் மீது கடமையாக்கினான் தொழுகையை எதற்கு கடமையாக்கினான் தெரியுமா? இந்த குர்ஆனை சிந்திப்பதற்காகவே நீங்கள் தொழுகையில் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுங்கள்.
ஏன் சகோதரர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் குர்ஆனை அறிந்து ஓதினார்கள், புரிந்து ஓதினார்கள், உணர்வோடு ஓதினார்கள், இன்று நாம் செத்த உள்ளங்களோடு செத்துப்போன உள்ளங்களோடு குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறோம்.
அறிவும் இல்லை என்ன சொல்லப்படுகிறது? என்னை பார்த்து ரப்பு என்ன பேசுகிறான்? எந்த சிந்தனையும் இல்லை அதனுடைய உணர்வு உள்ளச்சம் அதுவும் இல்லை. எல்லா வகையிலும் உள்ளம் செத்துப்போனவர்களாக குர்ஆனோடு நாம் இருக்கிறோம்.
873 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ [ص:231] عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ، قَالَ: قُمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَقَامَ فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ، لَا يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ فَسَأَلَ، وَلَا يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ فَتَعَوَّذَ، قَالَ: ثُمَّ رَكَعَ بِقَدْرِ قِيَامِهِ، يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ»، ثُمَّ سَجَدَ بِقَدْرِ قِيَامِهِ، ثُمَّ قَالَ فِي سُجُودِهِ مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَامَ فَقَرَأَ بِآلِ عِمْرَانَ، ثُمَّ قَرَأَ سُورَةً سُورَةً
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவு தொழுகையை ஸஹாபாக்கள் அறிவிக்கிறார்கள். எப்படி தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனை ஓதுவார்கள். நிறுத்தி ஓதுவார்கள் ஒவ்வொரு ஆயத்தையும் அதன் முடிவிலே நிறுத்துவார்கள். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். ரஹ்மானிர்ரஹீம் ஒவ்வொரு ஆயத்தையும் நிறுத்துவார்கள்.
பிறகு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கத்தின் உடைய வசனம் வந்தால் நின்று அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை கேட்டுக் கொண்டே இருப்பார்கள், நரகத்தினுடைய வசனம் வந்தால் அங்கே நின்று ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்விடத்தில் நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டே இருப்பார்கள், ரஹ்மத்துடைய வசனங்கள் வந்தால் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை கேட்பார்கள். அல்லாஹ்வுடைய அதாபுடைய வசனங்கள் வந்தால் அந்த அதாபிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்.
அறிவிப்பாளர் : அவ்ஃப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அபூ தாவூது, எண் : 873
இதுதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவு தொழுகை. தொழுகையில் குர்ஆன் ஓதிய முறை, சிந்திப்பதற்காகவே தொழுகையில் குர்ஆனை ஓதிக் கொண்டே இருப்பார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத்தஆலா
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
ஆக, குர்ஆனை அவர்கள் ஆழமாக ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4 : 82)
குர்ஆனை இவர்களால் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? என்று அல்லாஹ் கேட்கிறானே? இது தொழுகைக்கு வெளியில் அல்ல தொழுகைக்குள் குர்ஆனை சிந்திப்பதையும் உள்ளடக்கும் முதலாவதாக அதைத்தான் எடுத்துக்கொள்ளும்.
قام النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ بآيةٍ حتى أصبحَ يُرددُها والآيةُ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
எப்படி பாருங்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் இரவு தொழுகிறார்கள் பகராவை முடித்தார்கள் , பிறகு நிஸாவை முடித்தார்கள், ஆல இம்ரானை முடித்தார்கள் மாயிதாவுக்கு வருகிறார்கள் மாயிதாவினுடைய இறுதியிலே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு வசனத்தை ஓதுகிறார்கள் எந்த வசனம் அல்லாஹுத்தஆலா நாளை மறுமை நாளிலே ஈஸா ( அலை) அவர்களை எல்லா அடியார்களுக்கும் முன்பாக நிறுத்தி வைத்து கேள்வி கேட்பான்,
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : இப்னு மாஜா, எண் : 1118
وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி) கூறும் அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்.” (அல்குர்ஆன் 5 : 116)
ஈஸாவே உன்னையும், உன்னுடைய தாயையும் அல்லாஹ்வை தவிர்த்து இரண்டு கடவுளாக எடுத்துக்கொள்ளும்படி நீங்கள் மக்களிடத்திலே கூறினீர்களா என்று ஈஸா (அலை) சொல்வார்கள்.
مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
“நீ எனக்கு ஏவியதை, அதாவது, என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதைத் தவிர (என்னை வணங்கும்படி) அவர்களுக்கு நான் கூறவில்லை. இன்னும், நான் அவர்களுடன் இருந்த வரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். ஆக, நீ என்னைக் கைப்பற்றியபோது (-என்னை நீ வானத்தில் உயர்த்திவிட்டபோது) நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.” (அல்குர்ஆன் 5 : 117)
அல்லாஹ்வே நீ என்ன ஏவிநாயோ அல்லாஹ்வை வணங்குங்கள் என்று அதைத்தான் நான் இந்த மக்களிடத்திலே கூறினேன் என்னை கடவுளாக எடுத்துக் கொள்ளும்படியோ, எனது தாயை கடவுளாக எடுத்துக் கொள்ளும் படியோ நான் ஒரு போதும் கூறியதில்லை.
எப்படியாக கூறிவிட்டு அடுத்து ஈஸா (அலை) அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்தவராக, பயந்தவராக, நடுங்கியவராக சொல்வார்கள்.
إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
“அவர்களை நீ தண்டித்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.” (அல்குர்ஆன் 5 : 118)
அல்லா இந்த அடியார்களை நீ வேதனை செய்வாயானால், இந்த அடியார்களை நீ தண்டிப்பயானால் அவர்கள் உனது அடியார்கள் அவர்கள் உன்னுடைய அடிமைகள் நீ எப்படி வேண்டுமானாலும் அவர்களோடு நடந்து கொள்ளலாம்.
நீ அவர்களை மன்னிப்பாயானால் நீ மிகைத்தவன் உன்னை யார் கேள்வி கேட்க முடியும் நீ மகா ஞானவான் யாரை மன்னிக்க வேண்டும் யாரை தண்டிக்க வேண்டும் என்பதை நீ அறிந்தவன் என்று அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து விடுவார்கள்.
அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவுத் தொழுகையை அறிவிக்கின்ற நம்முடைய அன்னை கூறுகிறார்:
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : இப்னு மாஜா, எண் : 1118
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏறக்குறைய அறிவிப்பில் இருந்து பார்த்தால் நடு இரவிலே இந்த வசனத்தை ஆரம்பித்தவர்கள் பிலால் சுபுஹுக்கு அறிவிப்பு செய்கின்றவரை இதய வசனத்தை அழுது அழுது அழுது ஓதிக்கொண்டே இருந்தார்கள். யோசித்துப் பாருங்கள் இது குர்ஆனை ஓதக்கூடிய முறை தொழுகையில் குர்ஆனை ஓதக்கூடிய முறை,
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்;
இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.” அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான்.
ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான்.
ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 73 : 4, 20)
அல்லாஹ் சொல்கிறான் தொழுகையில் குர்ஆனை ஓதுங்கள். அன்பு சகோதரர்களே! குறிப்பாக குர்ஆனை மனனம் செய்த என்னுடைய சகோதரர் ஹாஃபில்களுக்கும், ஹாஃபிதாகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் குறிப்பாக அவர்களுக்கான உரையாக இருந்தாலும் சில விஷயங்களை எனக்கும் எல்லா மக்களுக்கும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அன்பு சகோதரர்களே! குர்ஆனை மனப்பாடம் செய்வது எவ்வளவு பெரிய ஒரு அமலோ, எவ்வளவு பெரிய ஒரு நற்காரியமோ , அந்த குர்ஆனை வருஷத்திற்கு ஒரு மாதத்திற்கு மட்டும் உள்ள குர்ஆனாக ஆக்கி விடாதீர்கள் என் சமுதாய மக்களே சகோதரர்களே! சகோதரிகளே! வெறும் ரமலானுக்காக மட்டும் ஆக்கி விடாதீர்கள்.
ரமலான் குர்ஆனுக்காக உள்ள விசேஷமான மாதம் அதிலே குர்ஆன் ஓதுவதை பன்மடங்காக்குங்கள், இரட்டிப்பாக்குங்கள் அதுதான் அல்லாஹ்வுடைய கட்டளையை தவிர, குர்ஆனை திறப்பதற்கு ரமலான் மட்டும் தான் என்று தவறாக புரிந்து விடாதீர்கள்.குர்ஆனை திறப்பதற்கு ரமலான் மட்டும் தான் என்று விளங்கிவிடாதீர்கள். ரமலானிலே குர்ஆனை அதிகப்படுத்த வேண்டும் ,ஓதுவதை அதிகப்படுத்த வேண்டும் குர்ஆனுடைய ஈடுபாட்டை அதிகப்படுத்த வேண்டுமே தவிர, ரமலானுக்காக மட்டும் இறக்கப்பட்ட வேதம் அல்ல அல்குர் ஆன். ரமலானில் இறக்கப்பட்டது எதற்காக?
முழு வாழ்க்கைக்காக, அன்றாட வாழ்க்கைக்காக, ஒவ்வொரு தொழுகையிலும் நீண்ட, நீண்ட ரக்ஆத்துகள் ஓதி தொழுவதற்காக, புரிந்து ஓதுவதற்காக, சிந்தித்து ஓதுவதற்காக, விளங்கி ஓதுவதற்காக, அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனை மனப்பாடம் செய்ய பாக்கியம் கொடுத்த நீங்கள் குர்ஆனோடு வாழ வேண்டும்.
குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள் ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும் அவர்கள் உண்மையில் குர்ஆனை மனப்பாடம் செய்தார்கள் என்பதை அறிய வேண்டும் என்றால் அவர்களுடைய இரவுகளில் இருந்துதான் அறிய வேண்டும்.
குர்ஆனை மனம் செய்துவிட்டு அதை இரவு காலங்களில் தொழுகையில் ஓதாமல் தூங்குவது இது ஒரு சாபக்கேடு உள்ளம் இறுகி விட்டது என்பதற்கான அடையாளமாகும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை எப்படி உருவாக்கினார்கள்? ஸஹாபாக்கள் தாபியீன்களை எப்படி உருவாக்கினார்கள்?
ஒரு முக்கியமான சம்பவத்தை இந்த இடத்தில் கண்டிப்பாக கூறி ஆக வேண்டும். நான் இப்போது சொன்னேன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொடர்பு என்பது
إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا
நிச்சயமாக இரவு (நேர) வணக்கம் அதுதான் மிகவும் வலுவான தாக்கமுடையதும் அறிவுரையால் (அறிவுரையின் மூலம் படிப்பினை பெறுவதற்கு) மிகத் தெளிவானதும் (-மிகப் பொருத்தமானதும்) ஆகும். (அல்குர்ஆன் 73 : 6)
என் அன்பு சகோதரர்களே! சமுதாய மக்கள் இரவு நேரம் என்பது டிவி பார்ப்பதற்காக உள்ள நேரமல்ல, பேஸ்புக்கை நோண்டுவதற்கான உள்ள நேரம் அல்ல, whatsappகளிலே சாட் செய்வதற்கான உள்ள நேரமல்ல, வீணான காரியங்களில் பொழுதை போக்குவதற்கான உள்ள நேரமல்ல பகலை உங்களுடைய தொழிலுக்காக கொடுத்தீர்கள், உங்களுடைய வியாபாரத்திற்காக, ஹலாலான ரிஸ்க்குகாக கொடுத்தீர்கள்.
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த இரவை அல்லாஹ்வுக்காக கொடுங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக கொடுங்கள் உங்களுடைய ஓய்வு போக மிச்ச நேரங்களை அல்லாஹ்விற்கு முன்னால் தொழுவதற்காக, அல்லாஹ்விற்கு முன்னால் துஆ செய்வதற்காக, அல்லாஹ்விடத்தில் பேசுவதற்காக அல்லாஹ்வுடைய கலாமை படித்து அல்லாஹ்விடத்தில் உரையாடுவதற்காக கொடுங்கள்.
ஸஹாபாக்கள் உடைய அந்த வாழ்க்கை இப்படித்தான் இருந்தது முக்கியமான ஒரு நிகழ்வை பாருங்கள். தாபியீன்களிலே அபுல் ஆலியா என்று மிகப்பெரிய ஒரு குர்ஆன் விரிவுரையாளர் ஹதீஸ் கலை அறிஞர்.
இவர் யார் தெரியுமா? ஈராக் ஈரான் மீது ஸஹாபாக்கள் போர் தொடுத்த போது அடிமையாக கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு நபர் அபுல் ஆலியா என்பவர் கைதியாக வந்தவர் கைதிகளிலே ஒருவராக இருந்தவர் அந்த காலத்திலே எப்படி இஸ்லாம் பரவியது தெரியுமா?
ஒரு பக்கம் சில காரணங்களுக்காக போர் நடந்தது அந்தப் போரிலே கைது செய்யப்பட்டு வந்த ஒவ்வொருவரும் ஸஹாபாக்களுடைய குடும்பங்களுக்கு பிரித்து தரப்படும் போது ஓர் ஆண்டு கூட பூர்த்தி ஆகி இருக்காது அந்த கைதிகள் எல்லாம் முஸ்லிம்களாக மாறியிருப்பார்.
எந்தவிதமான வலுக்கட்டாயம் நிர்பந்தம் இல்லாமல் ஸஹாபாக்களுடைய அமலை பார்த்து, ஸஹாபாக்களுடைய ஒழுக்கங்களை பார்த்து, அவர்களுடைய அன்பை, பரிவை, கருணையை, அந்த உண்மையை, நீதத்தை, நேர்மையை, பார்த்து இந்த கைதிகள் எல்லாம் அடிமைகள் எல்லாம் முஸ்லிம்களாக மாறிவிடுவார்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி.
அபூல் ஆலியா சொல்கிறார் நானும் கைதிகளிலே ஒருவராக இருந்தேன் நபி தோழர்களின் சில குடும்பத்தார்களுக்கு நாங்கள் உரிமையாக்கப்பட்டோம் சில காலங்களிலேயே இஸ்லாம் எங்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிட்டது நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம். இஸ்லாத்தை ஏற்ற உடனேயே நாங்கள் குர்ஆனை கற்றோம் பிறகு என்ன செய்தார்கள்,
அன்பு சகோதரர்களே! நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும். அல்லாஹ் நமக்கு கொடுத்த நேரத்தை வாழ்க்கையை வசதியை அறிவை எப்படி வீணடித்துக் கொண்டிருக்கிறோம் இங்கே பாருங்கள். அடிமைகளாக்கப்பட்டு கைதிகளாக்கப்பட்டு வந்த ஒரு கூட்டம் இவர்கள் இந்த இஸ்லாமை இந்த தீனை புரிந்த போது இவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது பாருங்கள்.
சொல்கிறார் அபூல் ஆலியா ரஹிமஹுல்லாஹ் நானும் என்னோடு இருந்த வாலிப கூட்டமும் குர்ஆனை கற்றவுடன் நானும் என்னுடைய வாலிப தோழர்களும் ஒவ்வொரு இரவிலும் ஒரு குர்ஆனை முழுமையாக ஓதக்கூடிய வழக்கமுள்ளவர்களாக இருந்தோம் பகலிலே எஜமானர்களுக்கு வேலை செய்துவிட்டு இரவெல்லாம் ஒரு குர்ஆனை முடிக்க வேண்டும் என்று விழி திறந்த காரணத்தால் எங்களுக்கு பகலிலே வேலை செய்வது ரொம்ப சிரமமாக இருந்தது.
பிறகு என்ன செய்தோம் ஒவ்வொரு இரவிலும் ஒரு ஹத்தமா என்பதை இரண்டு இரவிற்கு ஒரு ஹத்தமா என்று ஆக்கிக் கொண்டோம். ஒரு பக்கம் எங்களுக்கு சிரமமாக இருந்தது ஒவ்வொரு இரவிலும் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனை இரண்டு இரவிலே முடிக்கிறோம் என்பதாக,
இன்னொரு பக்கம் இரவிலே விழித்திருக்கிறோம் என்ற காரணத்தால் பகலிலே எஜமானர்களுக்கு வேலை செய்வதிலே அசதி ஏற்படுகின்றது என்ற கவலையும் பிறகு அதை மூன்று இரவாக மாற்றினார்கள் அப்படியும் அந்த இறைவனுடைய காலங்களில் ஓய்வுகள் குறைவு பிறகு பகலிலே கடுமையான வேலை அபூல் ஆலியா சொல்லுகின்றார்.
நாங்கள் என்ன செய்வது இது ஒரு நாள் சம்பவம் அல்ல ஒரு நாளுடைய வேலை அல்ல ஒவ்வொரு நாளும் இதே வழக்கம் பிறகு நாங்கள் எங்களுக்கு மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுக்கின்ற ஸஹாபாக்களை சந்தித்தோம் அவர்களிடத்திலே கூறினோம் இரவு காலங்களில் குர்ஆனை ஓதிக்கொண்டு பகல் காலங்களிலே எங்களுடைய எஜமானர்களுக்கு வேலை செய்வது எங்களுக்கு சிரமமாக இருக்கிறதே!
நாங்கள் குர்ஆனை எப்படி ஓத வேண்டும்? எப்படி ஹத்தமா செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது நபி தோழர்கள் சொன்னார்கள் வாரத்திற்கு ஒரு ஹத்தமா செய்யுங்கள் போதும் என்று. வாரத்திற்கு ஒருமுறை குர்ஆனை ஓதி ஹத்தமா செய்யுங்கள் போதும் என்று சொன்னார்கள்.
சொல்லுகிறார்கள் அபூல் ஆலியா ரஹிமஹுல்லாஹ் எங்களுக்கு அந்த ஸஹாபாக்கள் கொடுத்த தீர்ப்பு ரொம்ப இலகுவாக இருந்தது வாரத்திற்கு ஒரு ஹத்தமாவும் செய்தோம் பகலிலே எஜமானர்களுக்கு எந்த குறையும் இன்றி பணிவிடையும் செய்தோம் என்று ஒரு வாரத்திற்கு ஒரு முறை குர்ஆன் ஹத்தாமாவை முடிக்கக்கூடிய பழக்கம்.
அன்பு சகோதரர்களே! இன்று தவ்ஹீத் உடைய பேச்சுக்கள் , சுன்னா உடைய பேச்சுக்கள் என்னென்னமோ பேசுவார்கள் குர்ஆனோடு அவர்களுடைய தொடர்பு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள் அந்த தொடர்புதான் அவன் பேசக்கூடிய தவ்ஹீத் உண்மையா பொய்யா என்பதை நிரூபிக்கும்.
ஹதீஸ்களை பேசுவார்கள் ஆனால் மனப்பாடம் செய்ய மாட்டார்கள் குர்ஆனை பேசுவார்கள் ஆனால் குர்ஆனை மனப்பாடம் செய்து அதிலே ஈடுபாடு கொண்டு ஓத மாட்டார்கள் சொல்வார்கள் இப்போது தவ்ஹீதெல்லாம் நவீன தவ்ஹீதுகளாக மாறி கொண்டு இருக்கின்றன.
ரசூலுல்லாஹ் உடைய காலத்து தவ்ஹீத் இல்லை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்துடைய சுன்னா இல்லை சிலர் சொல்கிறார்கள். தவ்ஹீத்வாதிகள் என்ற பெயரிலே அதெல்லாம் அரபி எல்லாம் ஒன்னும் அவசியம் கிடையாதுங்க சும்மா தர்ஜுமாவ பார்த்தா போதும் அதை புரிஞ்சுகிட்டா போதும் அரபில ரெகுலரா ஓதவேண்டும் என்று அவசியம் கிடையாது.
அன்பு சகோதரர்களே! முர்தத் ஆகக்கூடியவன் நான் அல்லாஹ்வுடைய தீனை வெறுக்கக்கூடிய குர்ஆனுடைய கலாம் அரபியை வெறுக்கக்கூடிய ஒருவன் தான் இப்படி சொல்வானே தவிர, உள்ளத்திலே அல்லாஹ்வின் கலாமின் மீது தெளிவான அரபி மொழியிலே அல்லாஹ் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறானே அந்த அரபி மொழியின் மீது யாருடைய உள்ளத்தில் நயவஞ்சகத்தின் வெறுப்பு இருக்குமோ அவன் தான் இதை உச்சரிப்பான் ஒரு மூஃமினால் இப்படி உச்சரிக்கவே முடியாது.
சகோதரர்களே! அபைல் ஆலியா ரஹீமஹுல்லாஹ் வரலாறுக்கு திரும்ப வாருங்கள் என்ன செய்கிறார்கள் வாரம் ஒரு முறை இரவிலே குர்ஆன் ஹத்தமா முடிகிறது. வாரத்திற்கு ஒரு முறை பகலிலே பணிவிடை இதோடு சேர்த்து இந்த பக்கம் ஹதீஸ் உடைய கல்வி, கிராத் உடைய கல்வி, தப்ஸீர் உடைய கல்வி என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
பிறகு இவர்கள் விற்கப்பட்டு, விற்கப்பட்டு பனூன் தமீம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த பெண்மணிக்கு அடிமையாக செல்கிறார்கள். அந்தப் பெண்மணி இவருடைய மார்க்க கல்வியின் அந்த பெண்மணி உண்மையிலேயே ஸஹாபாக்களுடைய, தாபியீன்களுடைய பெண்மணியை பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம்.
சுபஹானல்லாஹ்! அந்தப் பெண்மணி இந்த வாலிபர் உடைய ஈடுபாட்டை பார்க்கிறார்கள். இரவில் குர்ஆன் ஓதுகிறார் பகலில் வேலை செய்கிறார் கொஞ்ச நேரம் கிடைச்சுட்டா ஹதீஸை எடுத்து வைத்து மனப்பாடம் பண்றாரு அங்க எங்கெல்லாம் முஹதிஸிகள் பாடம் நடத்துகிறார்களோ அங்கெல்லாம் போய் பாடம் கேட்கிறார்.
ஒருநாள் என்ன செய்றாங்க அவர்கிட்ட சொல்லவே இல்ல ஒரு ஜும்மா தொழுகைக்கு போகிறார் பின்னாடி இந்த பெண்மணியும் போறாங்க மஸ்ஜிதில் ஜும்மா தொழுகைக்கு வேண்டி உள்ளே போனவுடன் அவர் பின்னாடியே அந்த பெண்மணியும் பனு தமீம் உடைய பெண்மணியும் உள்ளார போயிட்டு முஸ்லிம்களுடைய சமுதாயமே நீங்கள் சாட்சியாக இருங்கள் இவர் என்னுடைய அடிமை அல்லாஹ்வுக்காக இவரை உரிமை செய்து விட்டேன்.
அல்லாஹ்வுக்காக இவரை உரிமை செய்து விட்டேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் சொல்லக்கூடிய அந்த வார்த்தையை கவனியுங்கள். அல்லாஹ்வே நான் இவரை என்னுடைய மறுமைக்கான சொத்தாக உன்னிடத்தில் சேமித்து வைக்க விரும்புகிறேன் அல்லாஹ் ஏற்றுக் கொள்வாயாக என்று துஆ செய்கிறார்கள்.
சகோதரர்களே! அந்த உரிமையிடப்பட்ட அபூல் ஆலியா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவரை தேடிச்சென்று கல்வி பெறுகிறார், அலியை தேடிச்சென்று கல்வி பெறுகிறார், இப்னு அப்பாஸை தேடிச்சென்று கல்வி பெறுகிறார், உபை இப்னு கஆபை தேடிச் சென்று கல்வி பெறுகிறார், இறுதியில் தாபியீன்களிலே ஸஹாபாக்களுக்கு பிறகு குர்ஆனுடைய கல்வி அபூல் ஆலியாவை தவிர, சையீது இப்னு ஜுபைரை தவிர,
வேறு யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு கல்வி ஞானத்தில் உயர்ந்து விளங்குகிறார் ஒரு அடிமை அல்லாஹ்வுடைய குர்ஆனுக்கு அவர் கொடுத்த அர்ப்பணிப்பு இஸ்லாமிய உலகிலே மக்காவிலிருந்து, மதினாவில் இருந்து, ஈராக் உடைய பஸரா, கூஃபாவிலிருந்து யமனிலிருந்து எல்லா இடங்களிலிருந்தும் மாணவர்கள் இவர்களை தேடி வருகிறார்கள்.
நீங்கள் ஹதீஸ் நூல்களை எடுத்து படித்தால் தப்ஸீர் நூல்களை எடுத்து படித்தால் அபூல் ஆலியா உடைய பெயரை நீங்கள் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டே இருக்கலாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆளுநராக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு பஸராவிலே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அபூல் ஆலியா அங்கே வருகிறார் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அங்கே தன்னுடைய அந்த தர்பாரிலே அந்த ஆட்சி கட்டிலிலே அமர்ந்து மக்களுக்கு முன்னால் தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறார்கள் அபூல் ஆலியா வந்தவுடன் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா ரசூலுல்லாஹ் உடைய ஒன்றுவிட்ட சகோதரர் இந்த உம்மத்துடைய தர்ஜுமானுல் குர்ஆன் யாருக்காக ரசூலுல்லாஹ்,
2397 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا زُهَيْرٌ أَبُو خَيْثَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَضَعَ يَدَهُ عَلَى كَتِفِي - أَوْ عَلَى مَنْكِبِي، شَكَّ سَعِيدٌ - ثُمَّ قَالَ: «اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ، وَعَلِّمْهُ التَّأْوِيلَ»
செய்தார்களோ யா! அல்லாஹ் இந்த சிறுவருக்கு குர்ஆனுடைய விளக்கத்தை கொடுப்பாயாக என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்தார்கள் இப்னு அப்பாஸுக்கு,
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அஹ்மத், எண் : 2397
அவர்களுடைய வரலாறு ஒரு தனி வரலாறு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு தன்னுடைய அந்த கட்டிலிலே அபூல் ஆலியாவை மேலே அழைத்து வந்து தன்னுடைய வலது பக்கத்திலே உட்கார வைக்கிறார்கள். சில குரைஷிகள் பேசி கொள்கிறார்கள் இப்னு அப்பாஸுக்கு என்ன ஏற்பட்டது? ஒரு அடிமையை அரச தர்பாரிலே தன்னுடைய இருக்கையிலே வலது பக்கத்திலே இப்படி நெருக்கமாக உட்கார வைக்கிறாரே என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா சொன்னார்கள்.
ஆம், கல்வி அப்படித்தான் கல்வி சிறந்தவர்களை மேலும் சிறப்பாக்கும். கல்வியை கொண்டு அல்லாஹ் கண்ணியத்தை கொடுப்பான். கல்வியைக் கொண்டு அல்லாஹுத்தஆலா அடிமைகளையும் அரசர்களுடைய கட்டிலிலே உட்கார வைப்பான்.
உமர் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ் செய்ய வருகிறார்கள் மக்கா உடைய கவர்னர் ஹலிஃபா அமீருல் முஃமினின் அவர்களை வரவேற்பதற்காக ஓடோடிப் போய் விடுகிறார்கள். நானும் உங்களோடு ஹஜ்ஜிலே கலந்து கொள்வேன் என்பதாக உமர் ரலியல்லாஹு அன்ஹு கேட்கிறார்கள்.
அப்படி யார் என்றால் நீ யாரை பிரதிநிதியாக உன்னுடைய நாயிபாக அசிஸ்டெண்டாக ஆக்கிவிட்டு வந்திருக்கிறாய் என்று கேட்டபோது இப்னு அப்ஸா என்ற ஒரு பெயரை சொல்கிறார் அதாவது ஒரு அடிமையின் பெயரை.
உமர் அவர்கள் கேட்கிறார்கள் என்ன மக்காவினுடைய குரைஷி தலைவர்களுக்கு ஒரு அடிமை தலைவராக்கி விட்டு வந்து விட்டாயே! என்று கேட்கும் போது அதற்கு உமர் இடத்தில் கல்வி படித்த அந்த கவர்னர் சொல்கிறார் உமரே! அவர் அடிமைதான். ஆனால், அவர் குர்ஆனை கற்றவர் என்று சொல்கிறார்.
உடனே உமர் அவர்கள் சொன்னார்கள் ஆம் ஆம் அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனை கொண்டு ஒரு கூட்டத்தை உயர்த்துவான் யார் அந்த குர்ஆனை நம்பிக்கை கொண்டார்களோ அதன்படி வாழ்ந்தார்களோ, அதற்காகவே வாழ்ந்தார்களோ, இன்னும் ஒரு கூட்டத்தை அல்லாஹ் குர்ஆனை கொண்டு கேவலப்படுத்துவான் யார் தெரியுமா? யார் அதை நம்பிக்கை கொள்ளவில்லையோ , யார் அதை புறக்கணித்தார்களோ, அதை விட்டு விலகினார்களோ, அதை மறந்தார்களோ!
அன்பு சகோதரர்களே! அபூல் ஆலியாவினுடைய வரலாறு நமக்கு எல்லாம் மிகப்பெரிய ஒரு படிப்பினை பாடம் ஒரு அடிமையாக இருந்தவர் ஸஹாபாக்கள் இடத்திலே கண்ணியம் பெற்று தாபியீன்கள் இடத்திலே கண்ணியம் பெற்று இனி மறுமை நாள் வரை வரக்கூடிய எல்லா முஸ்லிம்களுக்கும் கிராத்தை அறிவித்தவர், ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸுக்கு விளக்கம் கொடுத்தவர் , குர்ஆனுடைய தப்சீரை கொடுத்தவர் என்ற ஒரு சிறப்பை பெறுகிறார் என்றால் எதன் மூலமாக?
இந்த குர்ஆனின் மூலமாக இந்த குர்ஆனை தன்னோடு அனைத்துக் கொண்டதால் ஒரு அடிமையை கல்வியிலே முஸ்லிம்களுடைய தலைவராக மாற்றினால் என்றால் இன்று நாம் ஏன் இந்த இடிநிலையிலே இருக்கிறோம். ஏன் இந்த வீழ்ச்சியிலே இருக்கிறோம் சகோதரர்களே! சிந்தித்துப் பார்க்க வேண்டும். குர்ஆன் புரியாது என்று ஒதுக்கி விடாதீர்கள் நாம் புரியாதவர்கள் தான் புரியுதலில் அறிவில், சிந்தனையில்,
ஞானத்தில் குறைந்தவர்கள் தான். குர்ஆனை படிக்க, படிக்க அதை திறந்து சிந்திக்க, சிந்திக்க அதனுடைய உள்ளச்சத்தால் அந்த குர்ஆனுடைய அர்த்தங்களை புரிந்து அழ அழ அல்லாஹுத்தஆலா நமக்கு ஞானத்தின் வாசலை திறந்து கொடுப்பான், அறிவின் வாசல்களை அல்லாஹ் தெரிந்து கொடுப்பான்.
சகோதரர்களே! அந்த குர்ஆன் சிலரை போற்றுகிறது சிலரை உயர்த்துகிறது அத்தகையவர் யார் தெரியுமா? குர்ஆனை கற்பது மட்டுமல்ல, அல்லது, சடங்காக மாற்றி உண்மையில் அப்படி அல்ல சிலர் இருக்கிறார்கள்.
சடங்காக மாற்றி சடங்காக தொழுகையில் மட்டும் அதை அர்த்தம் புரியாமல் ஓதுவதற்குரிய சில மந்தனங்களைப் போன்று மாற்றி இருக்கிறார்களே, அப்படி இருக்கக் கூடாது, அப்படி ஆகக் கூடாது அல்லாஹ்வுடைய வேதம் சிலரை புகழ்கிறது அவர்கள் யார் தெரியுமா?
நபிமார்களை புகழ்கிறது அந்த நபிமார்களை புகழ்ந்து அந்த நபிமார்களை ஏன் புகழ்கிறான் அல்லாஹுத்தஆலா என்பதை குர்ஆன் நமக்கு உணர்த்துகிறது. அந்த ஸிஃபத்துகள் அந்த தன்மைகள் குர்ஆனை மனப்பாடம் செய்த ஒவ்வொரு ஹாஃபில்களிடத்திலும் ஒவ்வொரு ஹாஃபிதாவிடத்திலும் வரவேண்டும் புரிந்து கொள்ளுங்கள் தொழுகையில் குர்ஆனை ஓதி தொழ வைத்துவிட்டு சம்பளம் வாங்குவதற்காக வேதமல்ல இந்த குர்ஆன்.
அல்லது, சிறு பிள்ளைகளுக்கு வெறும் அதனுடைய அர்த்தத்தை ஓதி கொடுத்துவிட்டு தொழில் செய்வதற்காக உள்ள வேதமாக இந்த குர்ஆனை ஆக்கி விடக்கூடாது. தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாமா வாங்க கூடாதா? வாங்கலாம் ஆனால், நிய்யத் என்னவாக இருக்க வேண்டும் ஓதி கொடுப்பதற்கு, ஓதுவதற்கு அல்ல ஓதுவதற்கு வாங்குவது ஹராம் ஒரு வீட்டில் போய் ஃபாத்தியா ஓதிவிட்டு காசு கேட்டால் ஹராம் பிள்ளைகளுக்கு ஓதி கொடுத்துவிட்டு ஊதியம் கேட்பது ஹலால் இரண்டுக்கும் இடையிலே வித்தியாசம் இருக்கிறது.
இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அதாவது இந்த குர்ஆனுடைய தூதுத்துவம் இந்த குர்ஆன் என்ன சிந்தனையை, என்ன மாற்றத்தை நம்மிடத்திலே கொண்டு வர விரும்புகிறது. இந்தக் குர்ஆன் நம்மை எப்படி உருவாக்க விரும்புகிறது அது இங்க முக்கியம் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் பாருங்கள்,
الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّهَ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا
அவர்கள் (-அந்தத் தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை -சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; இன்னும் அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். (அடியார்கள் அனைவரையும்) விசாரிப்பவனாக அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 33 : 39)
என் அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! குர்ஆனை மனனம் செய்தவர்களே, அல்லாஹுத்தஆலா உங்களுக்காகவும் எனக்காகவும் சொல்வதைப் போன்று இந்த வசனம் இருக்கிறது பாருங்கள். நபிமார்களை அல்லாஹ் சொல்கிறான் யார் இந்த குர்ஆனை சுமந்தார்களோ! அவர்கள் நபிமார்களுடைய வாரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹுத்தஆலா சொல்கிறான் இந்த அல்லாஹ்வுடைய இந்த கலாமை சுமந்தவர்கள் அல்லாஹ்வுடைய வஹியைப் பெற்ற நபிமார்கள் இருக்கிறார்களே அல்லாஹ்விடம் இருந்து வந்த செய்திகளை மக்களுக்கு எடுத்து சொல்வார்கள்.
குர்ஆனை மனப்பாடம் செய்துவிட்டு தூங்குவதற்காக உள்ள வேதம் அல்ல அதற்காக நீங்கள் மனப்பாடம் செய்யவில்லை அதற்காக உங்களுக்கு மனப்பாடம் செய்து கொடுக்கவில்லை இதிலே நீங்கள் படித்த செய்தியை,
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர! (அல்குர்ஆன் 81 : 27)
உலக மக்களுக்கெல்லாம் இது ஒரு அறிவுரை இது ஒரு உபதேசம் என்று அல்லாஹ் சொல்கிறானே அவர்களுக்கு நீங்கள் குர்ஆனை எடுத்துச் சொல்வதற்காக இந்த குர்ஆன் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறது.
என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? எத்தகைய மனப்பான்மை உள்ளவர்களாக எத்தகைய வீரமுள்ளவர்களாக, துணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லாஹ் சொல்கிறான், ஏன் என்று சொன்னால் சிலர் என்ன எண்ணியிருக்கிறார்கள் தெரியுமா? அதாவது மதரசாவில் படிக்கிறதுனா ஏதோ ஏழைகள் போய் படிக்கிறது, இல்லாதவங்க போய் படிக்கிறது, கஷ்டப்படுறவங்க போய் படிக்கிறது, சொல்லிட்டு அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
எனக்கு சொல்வதற்கே பயமாக இருக்கிறது இப்படிப்பட்ட ஒரு எண்ணம் நம்மிடத்தில் இருந்ததே நம் மீது அல்லாஹ்வுடைய சாபம் இறங்கியதற்கு ஒரு காரணமாக இருக்குமோ எதிரிகள் நம் மீது சாட்டப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று பயப்படக்கூடிய ஒரு பயம் நம்மிடத்தில் இருக்கிறது.
அல்லாஹ் பாதுகாப்பானாக ஏனென்றால் அல்லாஹ்வுடைய தண்டனை இருக்கிறதே நம்மிலே தப்பு ஒருவர் செய்தாலும் அடி மொத்த பேருக்கும் சேர்த்துவிழும்.
66 - (2586) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ، وَتَرَاحُمِهِمْ، وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
அதனால் தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் மூஃமின்கள் ஒரே உடலை போன்று என்று சொல்கிறார்கள் உனைன் போரிலே எல்லா ஸஹாபாக்களும் சேர்ந்தா சொன்னாங்க,
அறிவிப்பாளர் : நுஃ மான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 2586
لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ
அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் போரிலும் அல்லாஹ் உங்களுக்கு திட்டவட்டமாக உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. இன்னும், பூமி - அது விசாலமாக இருந்தும் உங்களுக்கு நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பி (ஓடி)னீர்கள். (அல்குர்ஆன் 9 : 25)
இவ்வளவு எண்ணிக்கை இருக்கும் போது நாம் தோற்பமா என்று ஒரு சில பேர் சொன்னார்கள் ஆனால் சோதனை மொத்த பேருக்கும் வந்தது. அடுத்தது குர்ஆன் ஓதக்கூடிய குர்ஆன் கற்றுக் கொள்ளக்கூடிய மாணவ மாணவிகள் உங்களுக்கு எப்போதும்.
அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என்னிடத்திலே பொருளாதாரக் கல்வி இல்லையே வாழ்க்கையிலே நான் எப்படி முன்னேறுவேன் எனக்கு அங்கீகாரம் கிடைக்குமா? தொழ வைப்பதைத் தவிர ஓதி கொடுப்பதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணி விடாதீர்கள் அல்லாஹ்வுடைய கலாமை மனப்பாடம் செய்த உங்களை அல்லாஹ்வுடைய குர்ஆனை தன்னோடு நெஞ்சோடு அனைத்துக் கொண்ட உங்களை அல்லாஹ் கைவிட்டு விடுவானா!
அல்லாஹ்வை நிராகரிக்கின்ற, அல்லாஹ்வை பொய்ப்பிக்கின்ற அல்லாஹ்வுடைய வேதத்தை பொய்ப்பிக்கின்ற அவர்களுக்கெல்லாம் ரிஸ்க் கொடுக்கின்ற அல்லாஹுத்தஆலா அல்லாஹ்வுடைய வேதத்தை நம்பிக்கை கொண்டு அதை மனப்பாடம் செய்து அதை உள்ளத்திலே அணைத்துக் கொண்ட உங்களை அல்லாஹ் கைவிட்டு விடுவானா, ஏன் அதை மனப்பாடம் செய்தீர்கள் அதை புரியவில்லை அதனால் உங்களுக்கு இப்படி எண்ணம் வரலாம்,
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
இன்னும், அவர் நினைத்துப் பார்க்காத விதத்திலிருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தி இருக்கிறான். (அல்குர்ஆன் 65 : 3)
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
எந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருந்தே தவிர. (உலகத்தில்) அவை தங்குமிடத்தையும், (அவை இறந்த பிறகு) அவை அடக்கம் செய்யப்படும் இடத்தையும் அவன் நன்கறிவான். எல்லாம் தெளிவான பதிவேட்டில் (முன்பே பதிவுசெய்யப்பட்டு) உள்ளன. (அல்குர்ஆன் 11 : 6)
وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
எத்தனையோ கால்நடைகள் தனது உணவை சுமப்பதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். இன்னும், அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 29 : 60)
இந்த வசனங்கள் உங்களுக்கு நினைவூட்ட வில்லையா? இந்த வசனங்கள் உங்களை உணர்த்தவில்லையா? அல்லாஹ் கேட்கிறான் மனிதனை எத்தனை கால்நடைகளை பார்க்கிறாய் அவை தன்னுடைய முதுகில் உணவை சுமக்கின்றனவா? இல்லையே அதற்கு உணவு அளிக்கக்கூடிய அல்லாஹ் உனக்கும் உணவளிப்பான் இந்த பூமியிலே உயிரோடு இருக்கக் கூடிய எந்த உயிரினமாக இருந்தாலும் சரி அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் எப்படி கைவிட்டு விடுவான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். இன்னும், உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான். (அல்குர்ஆன் 47 : 7)
நீ அல்லாஹ்வுக்கு உதவ வரும்போது அல்லாஹ் உன்னுடைய உதவிக்கு வருவான். அல்லாஹ்வுடைய கலாமை நீ மனப்பாடம் செய்யும்போது அல்லாஹ் உன்னை பசியோடு, பட்டினியோடு விட்டு விடுவானா? அங்கே நம்மிடத்திலே அமல் குறைவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சகோதரர்களே! சகோதரிகளே! இந்த தாழ்வு மனப்பான்மை இருக்க கூடாது அல்லாஹ் என்னை இரட்சிப்பான் நீ! இஹ்லாஸோடு இரு, அல்லாஹ்வுக்காக இரு சம்பளத்துக்காக ஓதி கொடுக்காதே, சம்பளத்துக்காக இமாமத் செய்யாதே, இமாமத் செய் அல்லாஹ்வுக்காக செய், இமாமத் செய் என்னுடைய நபியின் உம்மத்தை சீர் செய்வதற்காக,
என்னுடைய மார்க்கப் பணியை செய்வதற்காக, அவர்கள் உன்னை கண்ணியப்படுத்தினால் அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்துவான் அவர்கள் உன்னை கேவலப்படுத்தினால் அல்லாஹ் அவர்களை கேவலப்படுத்த போதுமானவன். அல்லாஹ் உன்னை விட்டு விடமாட்டான் மக்களிடத்திலே நீ கண்ணியத்தை எதிர்பார்க்காதே , மக்களிடத்திலே நீ பொருளாதார உதவி எதிர்பார்க்காதே, மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும் மக்கள் என்னை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்காதே,
என்னுடைய ரப்புக்காக நான் செய்கிறேன் என்னுடைய இறைவனின் திருப்திக்காக நான் செய்கிறேன் என்று அல்லாஹ்வுக்காக, ரப்புக்காக, ரப்புக்காக ரப்பியல்லாஹ் ரப்பியல்லாஹ் என்னுடைய ரப்புக்காக என்ற செய் அல்லாஹ் உன்னை கண்ணியப்படுத்துவான்.
அல்லாஹ் உன்னை உயர்த்துவான் ஒருமுறை ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் மிகப்பெரிய ஃபக்கீர் ஒண்ணுமே கிடையாது அவர் மௌத்தா போகும்போது அவர் வீட்டில் இருந்தது பெட்ஷீட் போடப்படாத ஒரு கயித்துக் கட்டில் தான் அவர் மேலே உள்ள அவர் போட்டிருந்த டிரஸ் மட்டும் தான் ஆனால் அல்லாஹ் அவருக்கு கொடுத்த கண்ணியம் என்ன தெரியுமா? பனு உமையாவிலே எத்தனை மன்னர்கள் வந்தாலும் சரி ஹஸன் பஸரி என்று சொல்லிவிட்டால் நடுங்கிடுவார்கள்
ஒரு முறை அவர்கள் பஸராவிலிருந்து கூஃபா உடைய மஸ்ஜிதிற்கு உபதேசம் செய்ய வருகிறார்கள் என்ற செய்தி தான் அவ்வளவுதான் கூஃபா கூஃபாவை சுற்றியுள்ள அத்தனை தாலுகாக்கள் எல்லா இடத்தில் இருந்தும் கூஃபாவுடைய கவர்னரிலிருந்து எல்லா அதிகாரிகளும் சிறிய அதிகாரிகளிலிருந்து பெரிய அதிகாரிகள் எல்லோரும் அழைக்காமலே கூஃபா உடைய ஜாமியா மஸ்ஜித்திற்கு வந்து விட்டார்கள்.
ஹஸன் பஸரி வருகிறார் ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகள் எல்லாம் கிடையாது சாதாரணமான ஆடைகள் அவர் கூஃபாவுடைய ஜாமியா மஸ்ஜிதிலே காலை வைக்கிறார் அந்த சபையை சுற்றி முன்னிலையிலே அந்த கவர்னரிலிருந்து பெரிய அதிகாரிகள் அப்படியே சுற்றி அதிகாரிகள் கீழே உட்காரிலிருந்து இருந்தவர்கள் அப்படியே எல்லோரும் எழுந்து நின்று விட்டார்கள் யாரும் எழ சொல்லவில்லை அவர்கள் அறியாமலே எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள்.
இமாம் அவர்கள் தலை குனிந்தவர்களாக ஸலாம் கூறிவிட்டு அந்த மஸ்ஜிது என்னுடைய மிம்பரை நோக்கி வருகிறார்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது கூஃபாவுடைய கவர்னர் சொல்கிறார் இதுதான் கண்ணியம். நாமோ மக்களை கோலைக் கொண்டு மிரட்டி கண்ணியப்படுத்த வைக்கிறோம் அல்லாஹ் அவனுடைய வேதத்தால் மார்க்கத்தால் இந்த ஏழைக்கு கொடுத்த கண்ணியத்தை பாருங்கள் கவர்னரிலிருந்து, மந்திரியிலிருந்து எல்லோரும் அவருக்காக எழுந்து நிற்க்கிறார்கள்.
மன்னர் ஹாரூன் ரஷீத் ரஹிமஹுல்லாஹ் அவருடைய அந்த அரண்மனையிலே திடீரென்று அவர் பயந்து வருகிறார் என்ன என்று கேட்டால் தெருவில் பயங்கரமான சத்தம் மனைவி கூப்பிட்டு என்னம்மா சத்தம் கேட்கிறார் மனைவி சொல்றாங்க மன்னரே ஒன்னும் பெரிய ஆபத்து இல்லை பயந்து விடாதீர்கள் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹி அலைஹி தன்னுடைய மாணவர்களோடு போய்க் கொண்டிருக்கும் போது தும்பி விட்டு அல்ஹம்துலில்லாஹ் சொன்னார்கள் அதற்கு மக்கள் யர்ஹமஹுல்லாஹ் என்று சொன்னதுதான் சப்தம்.
மன்னர் ஹாரூன் ரஷீத் தன்னுடைய அரண்மனையில் இருந்து ஓடி வந்து பார்க்கிறார் சுபஹானல்லாஹ் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹி அலைஹி நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்களை சுற்றி அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் சொன்னார் மன்னர் ஹாரூன் ரஷீத் அவரும் பெரிய ஆலிம், மிகப்பெரிய நீதிவான், மிகப்பெரிய மன்னர் உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பிறகு மிகப்பெரிய இஸ்லாமிய பேரரசை கட்டி எழுப்பிய பெரிய மன்னர் சொல்கிறார்.
இதல்லவா! கண்ணியம் மன்னர்களின் ஆட்சி எங்கே இருக்கிறது இங்கே ஆட்சியைப் பாருங்கள் ஆகவே அன்பிற்குரியவர்களே! அல்லாஹுத்தஆலா உங்களுக்கு சொல்கிறான்
وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّهَ
அல்லாஹ்வை பயப்படுங்கள் அல்லாஹ்வைத் தவிர யாரையும் பயப்படாதீர்கள். சத்தியத்தை சொல்வதிலே, மார்க்கத்தை எடுத்து சொல்வதிலே, ஹராமை ஹராம் என்று சொல்வதிலே நீங்கள் யாரையும் பயப்படாதீர்கள் அல்லாஹ்வைத் தவிர, கேள்வி கேட்பதற்கு விசாரிப்பதற்கு அல்லாஹ் போதுமானவன் என் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! சொல்லக்கூடிய நோக்கம் இதுதான்.
குர்ஆனை கண்ணியப்படுத்தினால் அல்லாஹ் நம்மை கண்ணியப்படுத்துவான் குர்ஆனுக்காக நாம் வாழ்ந்தால் அதைக் கற்றால், அதை புரிந்தால், அல்லாஹ் நமக்கு அறிவை இந்த உலகத்தின் பாக்கியங்களையும் நமக்கு கொடுப்பான். மறுமையின் பாக்கியங்களையும் கொடுப்பான் குர்ஆனை கற்றுக் கொண்ட சுமந்து கொண்ட என் அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! நீங்கள் எப்படி மனப்பாடம் செய்தீர்களோ?
அந்த மனப்பாடத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள் பிறகு அதை புரிவதற்காக அதன் தப்ஸீர்களை விளக்கங்களை அறிவதற்காக உங்களது வாழ்க்கையில் நேரத்தை கொடுங்கள் இந்த கல்விக்காக வாழுங்கள் பிறகு. கற்றதை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய பொறுப்பு உங்கள் மீது இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹு சுபஹானஹுவதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய கிதாபுக்காக அல்லாஹ்வுடைய இந்த குர்ஆனை கற்று மனப்பாடம் செய்து அதை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அந்த நற்பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/