HOME      Lecture      ஷிர்க் - இணைவைத்தால் மாபெரும் தீமை | Tamil Bayan - 716   
 

ஷிர்க் - இணைவைத்தால் மாபெரும் தீமை | Tamil Bayan - 716

           

ஷிர்க் - இணைவைத்தால் மாபெரும் தீமை | Tamil Bayan - 716


ஷிர்க்-இணை வைத்தல் மாபெரும் தீமை 
 
தலைப்பு : ஷிர்க்-இணை வைத்தல் மாபெரும் தீமை 
 
வரிசை : 716
 
இடம் : JAQH சமூக நீதி பொதுக் கூட்டம் கோட்டார், நாகர்கோவில் 
 
உரை  : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -18-03-2022 | 15-08-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய மார்க்க அறிஞர்களே! சமுதாய பெருமக்களே! அன்பிற்குரிய  சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொள்வானாக! இதில் பேசப்பட்ட ஒவ்வொரு நல்ல கருத்தையும் மனதில் பதிய வைத்து அதன்படி செயல்படுவதற்கும், அதை பிற மக்களுக்கு அழகிய முறையில் எடுத்துச் சொல்வதற்கு எனக்கும், உங்களுக்கும் அல்லாஹு தஆலா அருள் புரிவானாக ஆமீன்.
 
சத்தியத்திற்கு துணை போகக் கூடியவர்களாக, அசத்தியத்தை எதிர்க்கக் கூடியவர்களாக, அல்லாஹ்வின் மார்க்கத்தை நீதத்தை நேர்மையை, உண்மையை, நிலை நாட்ட கூடியவர்களாக, என்னையும், உங்களையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக ஆமீன். 
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமுதாயமாகிய நாம் பல விதமான சோதனைகளை, இன்னல்களை, சிரமங்களை, எல்லா நாடுகளிலும் சந்தித்து வருகின்றோம். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்களை போல, கல்வி இருந்தும், செல்வம் இருந்தும், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர், பொருள், அனைத்தையும் தியாகம் செய்திருந்தும் கூட இந்த நாட்டிலே, இந்த சமூகத்திலே அநீதி இழைக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். 
 
ஒவ்வொரு விஷயத்தையும் முஸ்லிம்களாகிய நாம் முதலாவதாக மார்க்க கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். குர்ஆன் என்ன வழி காட்டுகின்றது? நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு என்ன வழி காட்டுகிறார்கள்? ஏனென்றால் குர்ஆனை விட அழகிய தீர்வை, அழகிய வழிகாட்டலை வேறு எதுவும், யாரும் நமக்கு கொடுக்க முடியாது.
 
 எல்லா பிரச்சனைகளுக்குமான தெளிவான விளக்கத்தை கொடுப்பதற்குதான் அல்லாஹுத்தஆலா வேதத்தை இறக்கினான். இது நமது நம்பிக்கை மட்டுமல்ல, குர்ஆனை யாரு எடுத்து படிப்பார்களோ அவர்கள் உணர்வார்கள். குர்ஆனை திறக்கும்போது, மனதை திறந்து வைத்து கொண்டு படிப்பவர்கள் கண்டிப்பாக அந்த குர்ஆனை வேதமாகவும், அந்த குர்ஆன் இறக்கப்பட்ட நபரை தூதராகவும் ஏற்றுத்தான் ஆவார். மக்கள் அதை படிக்காமல் தங்களது உள்ளங்களை பூட்டி  வைத்திருக்கின்றார்கள்.
 
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
 
ஆக, அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டாமா? அவர்களது உள்ளங்கள் மீது பூட்டுகளா போடப்பட்டுள்ளன? (அல்குர்ஆன் 47 : 24)
 
ஏன் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? சிலர் வேதத்தை திறந்தாலே அல்லது, வேதத்தை செவியுற்றாளே அல்லது, வேதத்தை படித்தாலே அவர்களை தண்டியுங்கள் என்று சொல்லும் போது, உலகத்திலே ஒரு வேதம் இருக்கின்றது என்றால் இந்த வேதத்தை திறங்கள், படியுங்கள், சிந்தியுங்கள் இதில் முரண்பாடு இருந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விடக்கூடியது இந்த குர்ஆன்.
 
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
 
ஆக, குர்ஆனை அவர்கள் ஆழமாக ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4 : 82)
 
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். ஆகவே, சகோதரர்களே! நமது மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலை நாம் கண்டிப்பாக முன்வைக்க வேண்டும்.  
 
இன்று சிலர் அரசியலில் பின்தங்கி இருப்பதால் அல்லது, கல்வியில் பின்தங்கி இருப்பதால் அல்லது, மெய்னாரிட்டி என்று காரணம் கூறி இப்படியாக பல காரணங்களை விளக்குவார்கள் குழப்பங்களுக்கு பிரச்சனைகளுக்கு சோதனைகளுக்கு.
 
அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒரு முஸ்லிம் எப்போது அல்லாஹ்வின் மார்க்கத்தை மீறுகிறானோ, அல்லாஹ்வின் மார்க்கத்தை புறக்கணிக்கிறானோ, அல்லாஹ்வுடைய தீனில் விளையாடுகிறானோ கண்டிப்பாக  அந்த முஸ்லிமுக்கு, அந்த  முஸ்லிம் இருக்கக்கூடிய அந்த சமுதாயத்திற்கு அல்லாஹு உடைய சோதனை நிச்சயம்.
 
அல்லாஹ் அவர்களை தன்னுடைய பக்கம் திருப்புவதற்காக, மார்க்கத்தின் பக்கம் திரும்புவதற்காக சோதித்தே தீருவான், இந்த சோதனையிலும் நமக்கு ஒரு நன்மை இருக்கும். நாம் நம்முடைய மார்க்கத்தின் பக்கம் திரும்புவதற்காக. அல்லாஹ்வின் அடியார்களே! இஸ்லாம் ஈமான் என்றால், அதனுடைய அடிப்படையே ஏகத்துவக் கொள்கை ஓர் இறையை மட்டும் வணங்குதல். படைத்த இறைவனை மட்டும் வணங்குதல்.
 
பிரபஞ்சங்களை படைத்து, பரிபாலிக்கின்ற அந்த பரிசுத்தமான கடவுள் ஒருவனை மட்டும் அவனுக்கு இணை கற்பிக்காமல், அவனுடைய வணக்க வழிபாடுகளை, அவனுக்கு தகுதியான தன்மைகளை, அவன் அல்லாத யாருக்கும் செய்யாமல் வணங்குதல், நம்பிக்கை கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல்.
 
இதுதான் இஸ்லாம் சகோதரர்களே! இது தான் ஈமான். ஈமான் என்பது வேறு, இணை வைத்தல் என்பது வேறு, இஸ்லாம் என்பது வேறு, இறை நிராகரிப்பு என்பது வேறு. அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தின் அடிப்படை ஓர் இறையை வணங்குவது. இவ்வளவு அழகாக அல்லாஹ்அதை நமக்கு சொல்கிறான். நமக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கு எல்லாம் அல்லாஹ் சொல்கிறான்.
 
يَاأَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
 
மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள். (அல்குர்ஆன் 2 : 21)
 
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். மக்களே! மக்களே என்று அழைக்கிறான். ஒரு நாட்டு மக்களை அல்ல ஒரு சமூகத்தை அல்ல
 
உலக மக்களே! உங்களுடைய கடவுளை வணங்குங்கள். உங்களுடைய கடவுள் யார் தெரியுமா? நீங்கள் கற்பனை செய்து கொண்டவர் அல்ல. உங்களைப் படைத்த கடவுளை. உன்னுடைய மனசாட்சி யாரை சொல்கிறதோ என்னை படைத்தவன் என்று அந்தக் கடவுளை. உங்களை மட்டுமல்ல
 
உங்களுடைய தாய், தந்தையை உங்களுடைய முன்னோர்களை, உங்களுடைய பாட்டன், பூட்டன், முப்பாட்டன்களை, மனித சமுதாயத்தை, படைத்த கடவுளை வணங்குங்கள் அப்பொழுதுதான் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக,  பரிசுத்தமானவர்களாக நீங்கள் ஆக முடியும்.
 
படைத்த இறைவனை ஒரே அந்த மனத்தூய்மையோடு கலப்பற்ற முறையில் வணங்கும் பொழுது தான் உண்மையான பரிசுத்தம், உண்மையான அந்த பயபக்தி, அந்த உண்மையான மனத் தூய்மை மனிதனுக்குள் ஏற்பட முடியும்.
 
யார் அந்த இறைவனோடு இணை கற்பிக்கின்றார்களோ, அவருடைய படைப்புகளை சமமாக்கி விடுகின்றார்களோ,   அந்த ஏக இறைவனுக்கு செய்யபடகூடிய வணக்க வழிபாடுகளை அவன் அல்லாதவர்களுக்கு செய்து விடுகிறார்களோ!
 
அன்பு சகோதரர்களே! எப்பொழுது அவர்கள் இறைவனுக்கு மோசடி செய்தார்களோ, படைத்த இறைவனுக்கு துரோகம் செய்தார்களோ, அவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருந்தார்களோ, அவனுக்கே மாறு செய்தார்களோ அவர்கள் கண்டிப்பாக தங்களுக்கும், தங்கள் சமுதாயத்திற்கும் கெடுதல் செய்வார்கள். அவர்கள் உண்மையான ஆன்மா பரிசுத்தத்தை அடைய முடியாது.
 
பல இடங்களில் நீங்கள் பத்திரிகைகளில் பார்க்கலாம்,தொடர்ந்து படிக்கலாம், அவற்றையெல்லாம் இங்கு சொல்லி கொள்வதற்கு நேரமில்லை என்னைவிட உங்களுக்கு அதிகமாக தெரியும்.
 
ஏன் அந்த குழப்பம்? ஏன் அப்படிப்பட்ட அசிங்கங்கள் அந்த இறைவழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன? சமூகக் கொடுமைகள், மனித சமுதாயம் அங்கீகரிக்காத அவலங்கள்,
 
இறைவழிபாடுகள் நடக்கக்கூடிய இடங்களில் நடக்கின்றன? காரணம் என்ன? அங்கே  இறைவழிபாடுகள் நடப்பதில்லை. அங்கு நடப்பது இணை வழிபாடு அதன் காரணமாகதான் அவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆன்மீகம் என்ற பெயரால்.
 
சகோதரர்களே! இந்த பரிசுத்தமான இறை வணக்கத்தை,பரிசுத்தமான முறையிலே செய்ய வேண்டும் என்பது நமக்கு அல்லாஹுகொடுத்த கட்டளை.
 
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
 
அவர்கள் வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர ஏவப்படவில்லை. இன்னும், இதுதான் நேரான (நீதியான, சரியான சட்டங்களுடைய) மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98 : 5) 
 
அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.
 
நம்முடைய சமுதாயத்தின் நிலையை பாருங்கள். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பிக்கை கொண்ட இந்த சமுதாயமா? இன்று அல்லாஹ் அல்லாத ஒருவரை வணங்கிக் கொண்டிருக்கிறது.
 
பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மையான ஏக இறைவனின் பக்கம் அழைக்க வேண்டிய இந்த சமுதாயம் அந்த இறைவனை, அந்த ரட்சகனை, அந்த பரிபாலிக்க கூடிய உண்மையான அந்த இறைவனை வணங்குவதை விட்டுவிட்டு இன்று தர்காக்கள் என்ற பெயரிலே மகான்கள் அடங்கி இருக்கக்கூடிய கப்ருகள், என்ற பெயரிலே இன்னொரு இறைவழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய மார்க்கத்தில், அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்ட இந்த மார்க்கத்தில், அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க வழிபாடு செய்யப்படுமானால் அல்லாஹ் எவ்வளவு கோபப்படுவான்? என்று யோசித்துப் பாருங்கள்.
 
பாவங்கள் பல வகையாக இருக்கின்றன, அதிலே இணைவைத்தல் என்ற பாவம், இணை கற்பித்தல் என்ற அந்த குற்றம், அல்லாஹ்வுக்குசெய்ய வேண்டிய, செய்யப்பட வேண்டிய வணக்க வழிபாடுகளை, அல்லாஹ் அல்லாத ஒரு மனிதனுக்கு, படைக்கப்பட்ட ஒரு படைப்புக்கு, யாருடைய வாழ்வும் யாருடைய மரணமும், அந்த படைப்பின் கையில் இல்லையோ அந்த அற்பமான படைப்புக்கு செய்யப்படுவது அல்லாஹ்விடத்திலே பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், குற்றங்களிலேயே மிகப்பெரிய குற்றம்.
 
இன்று சிலருக்கு புரிவதில்லை. பொய் பேசுவதை, புறம் பேசுவதை, மது அருந்துவதை, இன்னும் எத்தனையோ பல பாவங்களை, பாவமாகவும் அருவருப்பாகவும், குற்றமாக பார்க்கின்றார்கள். பார்க்கப்பட வேண்டும். 
 
ஒரு முஸ்லிம் இடத்திலே மது குடி என்றால்? மதுவா ஹராம் தடுக்கப்பட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு விளங்கி வைத்திருக்கிறான். பன்றி இறைச்சியை சாப்பிடுவாயா? என்று கேட்டால் ஒருபோதும் அதனை சாப்பிட மாட்டேன், அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவான்.
 
ஆனால், சர்வ சாதாரணமாக தர்காக்கள் என்ற பெயரில் இருக்கக்கூடிய, இணை வழிபாட்டு தளங்களுக்குச் சென்று, அங்கே இருக்கக்கூடிய, அடக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடிய, அந்த இறை நேசர்கள் இடத்திலே நம்பிக்கை வைப்பான்.
 
இங்கே வந்ததால் என்னுடைய காரியம் நிறைவேறியது, இங்கே வந்ததால் எனக்கு மன அமைதி கிடைத்தது, இவரிடத்தில் சொன்னதால் என்னுடைய தேவைகள் நிறைவேறியது, என்றெல்லாம் நம்புகிறானே அந்த அடக்கஸ்தலத்தை சுற்றி வருகிறானே, அங்கே நேர்ச்சை செய்கிறானே, 
 
அங்கே இரவிலே தங்கி, தனக்கு கனவிலே அவுலியா வந்து சிகிச்சை செய்வார். நோயை குணப்படுத்துவார், பிள்ளையை தருவார், என்றெல்லாம் நம்புகிறார்களே. இஸ்லாமிய மார்க்கத்தில் இத்தகைய ஒரு மவுட்டிக கொள்கையா? இஸ்லாத்தில் இப்படி ஒரு மூடத்தனமான நம்பிக்கையா? உலகத்தில் மூடத்தனத்தில், அறியாமையில், வழிகேட்டில் இருந்த உலக மக்களை எல்லாம் நேர்வழியின் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக, இறக்கப்பட்ட இந்த குர்ஆன் கொடுக்கப்பட்ட சமுதாயம், 
 
உலக மக்களை வழிகேடுகள், மூடத்தனம் என்ற அத்தனை அறியாமையில் இருந்து அவர்களை வெளியேற்றிக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்ட முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றக்கூடிய இந்தக் காலத்து முஸ்லிம்கள் எத்தகைய அறியாமை  காலத்தில் இருக்கின்றார்கள்? குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்தை பாருங்கள்.
 
الر كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
 
அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!). (அல்குர்ஆன் 14 : 1)
 
நபியே உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன? மக்களை இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வர வேண்டும். மூடநம்பிக்கையை, அறியாமையை அல்லாஹுத்தஆலா இருளுக்கு ஒப்பாக்கிச் சொல்கிறான். இஸ்லாம் என்ற அந்த தூய கொள்கையை ஒளிக்கு, பிரகாசத்திற்கு அல்லாஹ் ஒப்பாக்கி கூறுகிறான். இந்தக் குர்ஆன் இறக்கப்பட்டது.
 
اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
 
அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் உதவியாளன் ஆவான். இருள்களிலிருந்து ஒளியை நோக்கி அவன் அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும், நிராகரிப்பவர்களோ அவர்களின் உதவியாளர்கள் ஷைத்தான்கள் ஆவார்கள். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் (எல்லோரும்) நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2 : 257)
 
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
 
அல்லாஹ் அவனை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேசனாக இருக்கின்றான். இந்த குர்ஆனின் மூலமாக அவர்களை அறியாமையில் இருந்து, அறியாமை எனும் இருள்களில் இருந்து, வெளியேற்றி நேர்வழி பக்கம் கொண்டு வருகிறான்.
 
அன்பு சகோதரர்களே! இஹ்லாஷ் ஒரு இபாதத். வணக்க வழிபாடுகளை, கலப்பற்ற முறையில் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது. அல்லாஹ் என்றால் இங்கு மற்ற மார்க்க சகோதரர்கள் இருந்தார்களேயானால் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஏதோ பாய்கள் பள்ளிவாசலில் வைத்து கும்பிட கூடிய கடவுள் என்பதாக. அல்லாஹ் என்பவன் யார்?
 
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ مَا مِنْ شَفِيعٍ إِلَّا مِنْ بَعْدِ إِذْنِهِ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ فَاعْبُدُوهُ أَفَلَا تَذَكَّرُونَ
 
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன், வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவனாகிய அல்லாஹ்தான். பிறகு, (அவன்) ‘அர்ஷ்’ மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். (உலகத்தில் நடக்கின்ற) காரியங்களை அவன் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். அவனுடைய அனுமதிக்கு பின்னரே தவிர பரிந்துரைப்பவர் எவரும் இல்லை. அத்தகைய அல்லாஹ்தான் உங்கள் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். ஆக, நீங்கள் (இந்த வேதத்தின் மூலம்) நல்லுபதேசம் பெறமாட்டீர்களா? (அல்குர்ஆன் 10 : 3)
 
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
 
அல்லாஹ் என்பவன் யார்? அவன் சொல்கிறான் தன்னை பற்றி, அல்லாஹ் என்பவன் வேறு யாருமல்ல. இந்த வானங்களை படைத்தானே, பூமியைப் படைத்தானே, இந்த வானங்களுக்கு மேல் உள்ள மிகப்பெரிய அர்ஸ் என்ற கட்டிலிலே உயர்ந்திருக்கின்றானே அவன் தான் அல்லாஹ். உங்களது கடவுள் தான் அல்லாஹ். அந்த கடவுளை வணங்குங்கள். கடவுளை வணங்க சொல்லக்கூடிய மார்க்கம் இஸ்லாம். கடவுள் கூறுகிறான்.
 
إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
 
நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20 : 14) 
 
நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. உலகத்திலே எந்த ஒரு வேதத்திலாவது உங்களால் நிரூபிக்க முடியுமா கடவுள் பேசுகிறான் என்று? குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் பேசுகிறான். நான் கடவுள், நான் வானத்தைப் படைத்தேன், நான் பூமியை படைத்தேன், நான் உன்னை படைத்தேன், உனது தந்தையை படைத்தேன், நீ சாப்பிடக்கூடிய உணவை நான்  கொடுக்கிறேன்.
 
يٰۤاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَالِـقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
 
மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கிற படைப்பாளன் அல்லாஹ்வை அன்றி யாரும் உண்டா? அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனை விட்டு) திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன் 35 : 3)
 
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
 
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
 
ஆக, நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்! (அல்குர்ஆன் 56 : 68)
 
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
 
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
 
கார்மேகத்தில் இருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது, நாம் (அதை மேகத்தில் இருந்து) இறக்கக் கூடியவர்களா? (அல்குர்ஆன் 56 : 69)
 
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
 
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
 
நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். ஆக, (இந்த மாபெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றிசெலுத்த வேண்டாமா? (அல்குர்ஆன் 56 : 70)
 
நாம் நாடினால், அதை  உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? சகோதரர்களே!  நாம் ஆதாரத்துடன் கூறலாம். நம்மை படைத்த இறைவனிடத்திலே ஆதாரம் இருக்கிறது. அந்த இறைவன் கூறுகிறான் என்னை வணங்குங்கள். இன்று முஸ்லிம்களிலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. மற்றவர்களைப் பற்றி கூறவில்லை
 
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
 
உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும். (அல்குர்ஆன் 109 : 6)
 
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். வாருங்கள் என்று அழைப்போம். அழைக்காமல் இருக்க மாட்டோம். அழைப்பு பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டே இருங்கள். அழைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நிர்பந்தமும் கிடையாது.
 
لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
 
இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்ப்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மௌட்டீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும்  மிகத் தெளிவாகிவிட்டன.) ஆக, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார். அறவே, அ(ந்)த (வளையத்தி)ற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 256)
 
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
 
இந்த மார்க்கத்திலே பிறரை மதமாற்றம்கட்டாயமாக செய்ய வேண்டும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நமக்கு அந்த சட்டம் தேவை இல்லை. வலுக்கட்டாய மதமாற்றம் என்ற  சட்டம் நமக்கு பொருந்தாது. நாம் அப்படி செய்ய மாட்டோம், செய்யக்கூடாது என்று நமக்கு நம் இறைவன் சொல்லித் தருகிறான்.
 
لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
 
உன்னுடைய மார்க்கத்தில் யாரையும் நீ திணிக்காதீர், கட்டாயப்படுத்தாதீர். (அல்குர்ஆன் 2 : 256)
 
அதே நேரத்தில் என்னோடு பிறந்த,வளர்ந்த, படித்த, என் சமூக சகோதரர் நாளை நரகத்திற்கு செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அவன் அறியாமை சங்கிலியிலே சிக்கி சிரமப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியாது. அழகிய முறையில் அவனுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பேன். 
 
ஒன்று எனக்கு மரணம் வரவேண்டும். அல்லது, அவனுக்கு மரணம் வரவேண்டும் அல்லது அவன் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் இணைந்து இறைவனின் அருளை பெற வேண்டும். அதுவரை இந்த தாவா பணியை எந்த முஸ்லிமும் நிறுத்தக்கூடாது. நிறுத்த முடியாது நிறுத்தினால் குற்றவாளி?
 
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
 
(நபியே!) கூறுவீராக: “(அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது,) இதுதான் என் பாதையாகும். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்தவர்களாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.” (அல்குர்ஆன் 12 : 108)
 
(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.
 
நபியை பின்பற்றக் கூடியவர்கள் என்றால் மௌலத் ஓதுவதிலேஇல்லை அன்பானவர்களே! கத்தம் பாத்திஹா ஓதுவதிலே இல்லை, அன்பானவர்களே! தர்காக்களை சுற்றுவதிலே இல்லை,சடங்கு சம்பிரதாயம் செய்வதிலே இல்லை. நபியை பின்பற்றுகிறீர்கள்?என்றால் அந்த நபி எப்படி உலக மக்களை எல்லாம் நேர்வழியின் பக்கம் அழைத்தார்களோ, அதன்படி அழைப்பவர்தான் நபியை பின்பற்றியவர்.
 
قُلْ يَاأَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
 
(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், (நீங்கள் நேர்வழி பெறுவதற்காக) அல்லாஹ்வையும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்பவரான, எழுதப் படிக்கத் தெரியாதவரான, நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவரைப் பின்பற்றுங்கள்! (அல்குர்ஆன் 7 : 158)
 
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், 
 
எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள். மக்களே! உலக மக்களே! யாருக்கெல்லாம் வானம், பூமியின் ஆட்சி சொந்தமாக இருக்கிறது என்று நம்புகிறீர்களோ அந்த இறைவன் என்னை உங்களுக்காக தூதராக அனுப்பி இருக்கிறான் என்று
 
குர்ஆனையும், இந்த நபியையும் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்த குர்ஆனும், நபியும் எந்த அல்லாஹ்வின் பக்கம், இறைவனின் பக்கம் அழைத்தார்களோ, அந்த இறைவனின் பக்கம் அழைத்துக் கொண்டு தானும் வணங்கி கொண்டு, அந்த இறைவனை வணங்குவதின் பக்கம் தினமும் அழைத்துக் கொண்டிருப்பவன் தான் முஸ்லிம்.வெறும் தொழுபவன் அல்ல, தானும் தொழுவான் தொழுவதின் பக்கம் மக்களை அழைப்பான். என்னுடைய இறைவன் அல்லாஹு என்று கூறுவான்
 
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
 
(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, நீங்கள் அவனை வணங்குங்கள். இது நேரான வழியாகும்.’’ (அல்குர்ஆன் 3 : 51)
 
நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும். என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ் என்று கூறி மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க கூடியவன் தான் முஃமின்.
 
அன்பு சகோதரர்களே! இந்த இஸ்லாமிய மார்க்கத்திலே இந்த தர்கா வணக்கங்கள், கபூர் வணக்கங்கள் எப்படி வந்தன? இன்று மஸ்ஜிதுகள் பாழாகிக் கொண்டிருக்கின்றன. வியாழக்கிழமை வந்துவிட்டால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலர் அந்த தர்காக்கள் என்ற, அந்த சடங்குகள் நடக்கின்ற, இணை கற்பிப்புகள் நடக்கின்ற, அந்த ஸ்தலங்களுக்குச் சென்று அவர்கள் எப்படி அங்கே மோகம் கொண்டவர்களாக, நம்பிக்கை கொண்டவர்களாக அங்கே வழிபாடு செய்கிறார்கள் பாருங்கள். 
 
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் இருக்கின்றதே நமக்கு தவறு, குற்றம், பாவம் இவற்றை மட்டும் தடுக்கவில்லை. இவற்றுக்கு எதுவெல்லாம் வழியாக இருக்கின்றதோ அதையும் சேர்த்து அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு தடுத்து விடுகிறது.
 
என்ன கூறுகிறார்கள்? இந்த ஷிர்க்கான வழிபாடு தர்ஹா வழிபாடு என்பது இது மிகப்பெரிய ஒரு ஷிர்க்கான வழிபாடு என்பதை என் சமூக மக்களே! புரிந்து கொள்ளுங்கள். கபூர் வழிபாடு என்பது இது அல்லாஹ்விற்கு செய்யப்படக்கூடிய மிகப்பெரிய இணைவைப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 
நீங்கள் சொல்லக்கூடிய லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற தூய கலிமாவுக்கு முற்றிலும் முரணானது. உங்களுடைய கலிமாவை,ஈமானை, இஸ்லாமை இது வீணாக்கி விடும். ஏன் தெரியுமா? லாயிலாஹ இல்லல்லாஹ் உடைய அர்த்தம் என்ன? 
 
உண்மையில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர, உண்மையில் வணக்க வழிபாடுகள் செய்யப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லைஇது லாயிலாஹ இல்லல்லாஹ் உடைய அர்த்தம். 
 
வணக்க வழிபாடுகள் என்றால் என்ன? எப்படி சரியான கருத்தை அந்த தர்கா வழிபாட்டாளர்களும், அந்த தர்கா வழிபாட்டை நியாயப்படுத்தக் கூடிய சில மௌலவிகளும் எப்படி மக்களுக்கு தவறாக போதிக்கிறார்கள் என்று பாருங்கள். வழிபாடு என்றால் அல்லாஹ் ஒருவனை வணங்குவது மட்டும் தான் வழிபாடு. 
 
நாம் அந்த தர்காக்களுக்கு சென்று அங்கே சிரம் பணிவதோ, அந்த தர்காவை சுற்றி வருவதோ, அந்த தர்கா இடங்களை தொட்டு முத்தமிடுவதோ ஒரு மரியாதை தான். அவர் ஒரு இறை நேசர். நாங்கள் ஒரு மரியாதை செய்கிறோம். 
 
இப்படி இந்த இறை நேசர்களுக்கு மரியாதை செய்வதால் எங்களை அல்லாஹ் திருப்தி கொள்வான் என்று நம்புகிறோம். இந்த இறை நேசர்களை நாடி செல்வதால் அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். இது அவர்கள் முன்வைக்கக்கூடிய வாதம். இன்னும் என்ன கூறுகிறார்கள்? வணக்க வழிபாடு என்றால், உதாரணமாக தொழுகையை எடுத்துக் கொள்ளுங்கள். 
 
உலு செய்ய வேண்டும், கிப்லாவை முன்னோக்க வேண்டும், தக்பீர் கட்ட வேண்டும், அப்படி செய்யக்கூடிய சுஜூது தான் வழிபாடு. நாம் தர்காக்களில் செய்யக்கூடிய சுஜூது அப்படி இல்லை. கிப்லாவையே முன்னோக்கவில்லை, உளூ செய்ய வேண்டும் என்றா கூறுகிறோம்,  தக்பீர் கட்டவில்லை அப்படி இருக்கும்போது தர்காக்களிலே அவ்லியாக்கள் மகான்கள் அவர்களுக்கு நாம் செய்வது ஒரு மரியாதை.
 
எப்படி அதற்கு உதாரணம் எங்கிருந்து குர்ஆனிலிருந்து யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு யாகூப் நபி ஸலாம் அவர்கள் சிரம் பணியவில்லையா? யூசுப் நபி அவர்களின் மற்ற சகோதரர்கள் சிரம் பணியவில்லையா? அப்படித்தான் நாங்களும் சிரம் பணிந்து மரியாதை செய்கிறோம். 
 
இதைத் தொடர்ந்து அடுத்த நம்பிக்கைகள் அவுலியாக்களின் மீது, இந்த தர்காவிலே அடக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடியவர்கள் மீது, நம்பிக்கை எப்படி எல்லாம் நம்பிக்கை உங்கள் வீட்டிலே யாருக்காவது நோயா? அங்கே சென்றால் ககுணமாகிவிடும்.
 
 உங்கள் வீட்டிலே யாருக்காவது குழந்தைகள் இல்லையா? அங்கே சென்றால் உங்களுக்கு பிள்ளை பிறக்கும். உங்கள் வீட்டிலே யாராவது படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறாரா? அங்கே சென்றால் உங்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் வீட்டிலே கணவன் மனைவி சண்டை சச்சரவிலே இருக்கிறார்களா? 
 
அங்கே சென்றால் கணவன் மனைவிக்கு இடையிலே இணக்கமான உறவு ஏற்பட்டுவிடும். உங்கள் வீட்டிலே யாராவது வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டேன் வேலை வராமல் இருக்கிறார்களா அல்லது ஏஜண்டால் ஏமாற்றப்பட்டாரா? அங்கே சென்றாள் அவுலியா தீர்த்து வைத்து விடுவார். 
 
அதற்குப் பிறகு அப்படி தீர்த்து வைப்பதற்காக செய்யப்படக்கூடிய, சடங்குகள் அதற்காக அவர்கள் செய்யக்கூடிய நேர்ச்சைகள் அதுவும் வினோதத்திலே வினோதம், கற்பனைக்கு எட்டாதவை, சொல்வதற்கு அசிங்கமானவை. அத்தகைய அந்த செயல்களை எல்லாம் செய்துவிட்டு நம்பிக்கை வைக்கிறார்கள் இந்த அவுலியா குணப்படுத்துவார். 
 
அதனுடன் நின்று விடுவார்களா? இந்த அவ்லியாவிடமிருந்து குணமாவதோ, பதிலோ, கனவோ அல்லது தீர்வு தாமதமாகி விட்டால் அடுத்து இன்னொரு அவ்லியாவை தேடி சென்று விடுவார், எப்படி பிறர் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறிக்கொண்டே இருப்பார்களோ அவர்கள் நம்பிக்கை மாறுமோ அதுபோன்ற இவர்களின் நிலை ஒரு தர்காவிலிருந்து இன்னொரு தர்கா.
 
மாநிலங்களுக்கு ஒரு தர்கா, எப்படி மாநிலங்களுக்கு ஒரு தர்கா மாநிலங்களில் உள்ள ஜில்லாவிற்கு ஒரு தர்கா, ஜில்லாக்களில் உள்ள தாலுகாவிற்கு ஒரு தர்கா, பிறகு மொத்த இந்தியாவில் ஒரு தர்கா, பிறகு மொத்த உலகத்திற்கும் ஒரு தர்கா. 
 
தமிழ்நாட்டில் அளவில் நாகூர் தர்கா, தேசிய அளவில் அஜ்மீர் தர்கா, பிறகு சர்வதேச அளவில் அப்துல் காதர் ஜெய்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது. மொய்தின் மௌலத் என்று ஒரு மௌலத் ஓதுவார்கள். அதற்கு அர்த்தத்தை கூறிவிட்டு, ஒரு வீட்டில் ஓதினால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் ஓதுகின்ற மௌலவிகளுக்கு சாப்பாடு கொடுக்க மாட்டார்கள். அடி விழும் அவர்களுக்கு. அவ்வளவு மோசமான வார்த்தைகள், கவிதைகள் கருத்துக்கள்,அந்த மொய்தீன் மௌலதில் இருக்கின்றது. 
 
இந்த மாதிரி தர்காக்களை வகைப்படுத்தி வைத்துள்ளனர். எந்த அளவிற்கு என்றால் இங்கு இருந்து ஒரு கூட்டம், வடநாட்டில் இருந்து ஒரு கூட்டம், ஸ்ரீலங்காவில் இருந்து ஒரு கூட்டம், ஹஜ்ஜுக்கு செல்வதை லேசாக நினைப்பார்கள், உம்ரா செல்வதை மிகவும் லேசாக நிற்பார்கள், அவர்களுக்கு பெருமை எல்லாம் நாங்கள் பக்தாத் ஷரீப் ரவுல்லா அப்துல் காதர் ஜெய்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மஹ்மூது ரஹ்மானி மவ்சுக்கு சமாதானி அவர்களுடைய தரிசனத்தை ஜியாரத் செய்து வந்தோம், அப்படி என்று கூறும் பொழுது அவர்களுக்கு வரக்கூடிய ஆன்மீக பரவசத்தில் குதித்து விடுவார்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த மார்க்கம் பாவத்தை ,குற்றத்தை மட்டும் தடுக்கவில்லை குற்றத்திற்கான வழிகளை தடுக்கிறது .இந்த மார்க்கம் இருக்கிறதே தெளிவான தீர்வு, எந்த தீர்வாள் பிரச்சனை ஏற்படாதோ அல்லது, ஏற்பட்ட பிரச்சனைக்கு தெளிவான அச்சுறுத்தக்கூடிய, தண்டனையாக இருக்குமோ, குற்றம் செய்பவன் அந்த தண்டனையை பார்த்து நடுநடுங்குவானோ, 
 
குற்றம் செய்யலாம் என்ற எண்ணத்தில் உள்ளவன் அந்த குற்றத்தின் பக்கம் இனி நெருங்கவே மாட்டேன் என்ற அச்சப்படுவானோ, பாதிக்கப்பட்டவன், அநியாயம் செய்யப்பட்டவன், என் மீது இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு மீதம் கிடைத்தது என்று திருப்தி படுவானோ அத்தகைய தீர்வை உலகத்திலேயே இஸ்லாமால் மட்டும்தான் கொடுக்க முடியும். குர்ஆனால்மட்டும் தான் கொடுக்க முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மட்டும்தான் கொடுக்க முடியும்.
 
விபச்சாரம் ஒரு பெண்ணை பலவந்தமாக, மானபங்கப்படுத்தி அவளை அடைவது. இருவரும் திருப்தியுடன் செய்தால் அதுவும் விபச்சாரம் தான். திருமணம் அல்லாத உனக்கு இறைவன் திருமணம் என்ற அந்த அனுமதிக்கப்பட்ட உறவை கொடுத்திருக்கிறான் அல்லவா, அந்த உறவு அல்லாத வேறு வகையில் உன்னுடைய மன இச்சையை நீ தீர்த்தால் அது விபச்சாரம்.
 
நிர்பந்திக்கப்பட்டவர், அச்சுறுத்தலால் பலவந்தப்படுத்தப்பட்டவர், அவர் மன்னிக்கப்பட்டவர். உலகத்தில் மார்க்க சட்டத்திலும் மன்னிக்கப்பட்டவர். மறுமையிலும் மன்னிக்கப்பட்டவர். யார் திருப்தியோடு செய்தார்களோ, இருவரும் இணைந்து இருவருமே இறைவனுடைய பார்வையில் உலக சட்டத்திலும், மறுமை சட்டத்திலும் குற்றவாளிகள்.
 
இஸ்லாம் என்ன கூறுகிறது? ஒருவன் திருமணமாகாத நிலையில் ஒரு ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்தால் நூறு கசையடி கொடுங்கள். அதுவும் சிறைச்சாலையில் மறைத்து வைத்து அல்ல மக்கள் எல்லாம் பார்க்கின்ற பொது இடத்தில் வைத்து அந்த தண்டனையை நிறைவேற்றுங்கள். 
 
கூறுங்கள் பார்க்கலாம் நான் என்ன கூறுகிறேன்? என்றால் இஸ்லாம் என்றால் பிடிக்காது. முஸ்லிம் என்றால் பிடிக்காது. நாங்கள் எல்லாம் வேண்டாம் ஆனால் எப்பொழுதெல்லாம் பெண்கள் மீது அத்துமீறப்படுகிறதோ அப்பொழுது மட்டும் முஸ்லிம் நாட்டு சட்டம் இங்கு வேண்டும். 
 
எப்பொழுதெல்லாம் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுகிறதோ, இது போன்ற கொடுமையான முறையில் அவர் கண்ணியத்தோடு விளையாடப்படுகிறதோ, அப்பொழுது கண்ணியத்தை, மானத்தை, மரியாதையை விலை பேசக்கூடிய ஒரு நடிகை கூட என்ன கூறுகிறாள் முஸ்லிம் நாட்டுடைய சட்டம் இங்கு வந்தால் தான் பெண்களை பாதுகாக்க முடியும் என்று கூறுகிறாள்.என் அன்பு சகோதரியே! முஸ்லிம் நாட்டு சட்டம் வந்தால் இங்கே உனது மானம் மரியாதை மட்டுமல்ல, நீ இந்த சட்டத்தை நம்பிக்கை கொண்டால், நாளை நரக நெருப்பில் அந்த கொடிய வேதனையிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய். 
 
6325 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ ابْنِ الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ النَّاسِ وَهُوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ يُرِيدُ نَفْسَهُ فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ فَأَعْرَضَ عَنْهُ فَجَاءَ لِشِقِّ وَجْهِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي أَعْرَضَ عَنْهُ فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبِكَ جُنُونٌ قَالَ لَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَحْصَنْتَ قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ
 
அதற்காகத்தான் உங்களை நாங்கள் இந்த இஸ்லாத்திற்கு அழைக்கிறோம். இது திருமணமாகாதவன் விபச்சாரம் செய்தால் இந்த தண்டனை. அடுத்து கல்யாணம் ஆனவர் விபச்சாரம் செய்து விட்டால் என்ன தண்டனை என்றால்? அவனை மக்கள் முன்னால் வைத்து கல் எரிந்து கொள்ள வேண்டும். இங்கு என்ன விசித்திரம் என்றால் அதாவது விபச்சாரம் அனுமதிக்கப்பட்டது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 6325
 
விருப்பத்துடன் கள்ள உறவு வைப்பது அனுமதிக்கப்பட்டது. ஆனால் கொலை நடந்து விட்டால் மட்டும் உடனே அங்கே எல்லா சட்டங்களும் வந்து விடுகின்றன. ஆகவே தான் இறைவன் என்ன கூறுகிறான்? எங்கே விபச்சாரம் நடக்குமோ அங்கே கொலை நடக்கும். 
 
விபச்சாரம் எந்த சமூகத்தில் பெருகிவிடுமோ விபச்சாரம் பரவலாகிவிடுமோ அங்கே கொலை என்பது  கண்டிப்பாக  அடுத்து நடக்க கூடிய ஒன்று. எனக்கு தெரிந்த நிறைய காவல்துறை அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள்? அடிக்கடி பத்திரிகைகள் பேப்பர்களில் நீங்கள் பார்ப்பீர்கள் கள்ள உறவு கள்ள காதல் என்று. எங்கே அந்தக் கள்ள காதல் கள்ள உறவு வருகிறதோ?அடுத்த நாளோ அடுத்த மாதமோ அடுத்த வருடமோ கண்டிப்பாக அங்கே ஒரு கொலை இரு கொலை மூன்று கொலை அல்லது குடும்பமே கொலையில் தான் போய் முடியும். 
 
இஸ்லாம் என்ன கூறுகிறது? ஒரு மனிதன் திருமணம் அல்லாத வேறொரு வழியிலே அவன் தனது இச்சையை தேடினால் அவனை கல்லெறிந்து கொன்று விடுங்கள். இல்லை என்றால் இதனுடன் அவன் நிறுத்த மாட்டான். இன்று நமது நாட்டிலேயே இவ்வளவு ராணுவம் இருக்கிறது, காவல்துறை, உளவுத்துறை இருக்கிறது. 
 
ஆனால், நமது சமுதாய சிறுமிகள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுவதை, தடுக்க முடியவில்லை அவர்களை மீட்க முடிவதில்லை. இந்த நாட்டின் பெரு நகரங்களிலே 13 வயதிற்கு மேற்பட்ட அந்த சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கிலே இந்த பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு விற்கப்படுகின்றார்கள். 
 
யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் நமது பிள்ளைகளை பாதுகாப்பதே கேள்விக்குறியாக இருக்கிறது வடநாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு குறைந்தது 75 ஆயிரம் சிறுமிகள் கடத்தப்படுகின்றார்கள். 75 ஆயிரம் சிறுமிகள் பாம்பேக்காக வேண்டியும் கல்கத்தாவுக்காக வேண்டியும் கடத்தப்படுகிறார்கள் பாலியல் தொழிலிலே தள்ளப்படுவதற்காக. 
 
இப்பொழுது யோசித்து பாருங்கள் .இந்த தண்டனைகளை கொடுத்தால் யாராவது சிறுமிகளை தீண்டுவார்களா? உறவு வைக்க நினைப்பானா? அடுத்து இந்த ஹிஜாப் இருக்கிறதே இஸ்லாம் என்ன கூறுகிறது? விபச்சாரம் செய்தால் உன்னை ஒருவன் தொட்டால் உன்னை ஒருவன் தள்ளி மானபங்கபடுத்தினால் இவ்வளவு பெரிய தண்டனை என்று கூறுகிறது அல்லவா? 
 
அதே நேரத்தில் இஸ்லாம் கவனியுங்கள் உன்னை நீ பாதுகாத்துக் கொள்வதோடு அந்நிய ஆண் உன்னை பார்க்கும் போது மீண்டும் அவன் உன் பக்கம் தனது பார்வையை திருப்பாமல் இருக்க உனது ஆடையால் உன்னை மறைத்து கொள். 
 
எப்பொழுது ஒருமுறைக்கு இருமுறை திரும்ப பார்க்கிறானோ, பிறகு கூர்ந்து பார்ப்பானோ, அதிலும் பெண்மையின் உறுப்பை கூர்ந்து பார்ப்பானோ, அவனை அறியாமல் அவனுக்குள் இருக்கின்ற மிருகம் வெளிப்பட்டுவிடும். இதுதான் இயற்கை. எனக்கு இப்பொழுது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. 
 
சில ஆண்டுகளுக்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் இருந்து, ஒரு அமைச்சர் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டுக்காக வந்தவர், ஏர்போட்டிலே இருந்த இரண்டு டாக்ஸி டிரைவர்கள் பஞ்சாப்காரர்கள் அந்தப் பெண் மந்திரி இறங்குவதையும் அவர் செல்வதையும் பார்த்து விட்டார்கள். 
 
அவரது ஆடையை பார்த்த உடனே அவர்களுக்கு அவர்களுடைய எண்ணத்திலே சைத்தான் விளையாடுகிறான், இரண்டு நாட்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அந்தப் பெண் மந்திரியை தொடர்ந்து, எங்கே செல்கிறாள், எங்கே தங்குகிறாள், மாநாடு எங்கே நடக்கிறது, எப்போது உள்ளே செல்கிறாள் என்பதை கவனித்திருந்து கடைசியிலே அவளை கடத்திக் கொண்டு போய் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து முடித்து விட்டார்கள். 
 
அப்பொழுதுதான் சொன்னார்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஒரு தீர்வு இருக்கிறது என்றால் அது தூக்கு தண்டனை என்று. அன்பு சகோதரர்களே! இங்கே பெண்ணுக்கு இஸ்லாம் கூறுகிறது உன்னை நீ போர்த்திக் கொண்டு செல். 
 
உன்னுடைய அபயங்களை நீ மறைத்துக் கொண்டு செல், ஏன்? நீ பாதுகாக்கப்படுவதற்காக. உன்னை பார்க்கும் பொழுது அன்னிய ஆண் அவனுடைய இச்சையை தூண்டப்படாமல் இருக்க வேண்டும். இதுதான் சகோதரர்களே! மார்க்கம் இஸ்லாம் நமக்கு என்ன கொடுத்திருக்கிறது என்றால் பாதுகாப்பை கொடுத்திருக்கிறது.
 
கண்ணியத்தின் பாதுகாப்பு, மான மரியாதை பாதுகாப்பு, செல்வத்தின் பாதுகாப்பு, நம்முடைய உழைப்பின் பாதுகாப்பு, எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு. அதிலே மிகப்பெரிய பாதுகாப்பு அல்லாஹ்வின் கோபத்திலிருந்து மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு. மீண்டும் தலைப்புக்கு செல்வோம். இந்த தர்காக்கள் இந்த நம்பிக்கைகள் எப்படி வந்தன? ஏன் இவர்கள் இந்த தர்காக்கள் மீது இப்பேற்பட்ட நம்பிக்கை? இப்படிப்பட்ட நம்பிக்கை என்றால் அல்லாஹ் கூறுகிறான் அல்லவா!
 
وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ
 
மக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 2 : 165)
 
மக்களிலே சிலர் இருக்கிறார்கள் அல்லாஹ்வை விட்டு விட்டார்கள். அல்லாஹ்  அல்லாதவர்களை எடுத்துக் கொண்டு, அவர்களை எப்படி நேசிக்கிறார்கள் என்றால், படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை  நேசிக்க வேண்டியது போன்று  அவர்களை நேசிக்கிறார்கள். அல்லாஹ் கூறுகிறான் நம்பிக்கையாளர்கள் முஃமின்கள் இருக்கிறார்களே இவர்கள் அல்லாஹ்வை மட்டுமே நேசிப்பார்கள். எப்படி என்றால்? அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
 
وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
 
அல்லாஹ் ஒருவன் மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (அதை வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் நினைவு கூரப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். (அல்குர்ஆன் 39 : 45)
 
மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
 
இந்த தர்காக்கள் மீது நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி பேசுங்கள், அல்லாஹ்வுடைய வல்லமையைப் பற்றி பேசுங்கள், அல்லாஹ்வுடைய சக்தியை பற்றி இருக்கக்கூடிய குர்ஆன் வசனத்தை ஓதுங்கள், ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள், சூரத்துல் இஹ்லாஷ் ஓதி விளக்கம் சொல்லுங்கள்   அப்படியே தூங்கிக் கொண்டே இருப்பார்கள். 
 
எந்தவிதமான ஆரவாரமும், உணர்வும் அவர்களிடம் இருந்து வெளிப்படாது. அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று என்று அல்லாஹ்வுடைய பெயர் கூறினால் அவர்கள் கல்லை போன்று அப்படியே இருப்பார்கள். அதே நேரத்திலே ஷேக் மகான் அப்துல் காதர் ஜெய்லானி மஹிஷுக்கு ரஹ்மானி மெகபூபின் சமதாணி  என்று கூறியவுடன் அப்படி பொங்கி எழுந்து விடுவார்கள் அவர்கள்.ஒரு நேரத்தில் பயான் நடந்து கொண்டிருந்த பொழுது மழை பெய்ததாம் எங்கே என்றால் பக்தாத்தில் அப்துல் காதர் ஜெய்லானி அவர் பயான் செய்யும் பொழுது மழை பெய்ததாம்.
 
அவர் வானத்தைப் பார்த்து அல்லாஹ் நான் மக்கள் அனைவரையும் அழைத்து பயான் செய்யும்பொழுது நீ மழையை இறக்கி எல்லாரையும் விரட்டுகிறாயா? என்று மழையே நின்று விடு என்று கூறினார்களாம் மழை அப்படியே நின்று விட்டதாம். 
 
கூட்டத்தில் இருப்பவரை தவிர மற்ற இடங்களில் எல்லாம் பெய்கிறதாம் என்று கூறியவுடன் அவர்கள் மீனை தரையில் போட்டால் துடிப்பது போன்று துடிப்பார்கள் பாருங்கள் அந்த அளவிற்கு துடிப்பார்கள். பாருங்கள் நாகூரில் அவுலியா 40 நாட்கள் இருந்துவிட்டு கடற்கரையில் உட்கார்ந்து  சேவிங் செய்து இருந்தாராம். நாம் அவர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. அவர்கள்
 
تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَا كَسَبْتُمْ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ
 
அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்(அல்குர்ஆன் 2 : 134)
 
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். நான் என்ன கூறுகிறோம்? 
 
அவர்களின் பெயரால் நீ செய்யக்கூடிய மடத்தனத்தை, முட்டாள் தனத்தை, அவர்களின் பெயரால் நீ கட்டுகின்ற பொய்யான கற்பனை கதையை நாம் தவறு என்று சொல்கிறோம். அதனை நம்பி உன்னுடைய ஈமானை நீ பாழாக்காதே, உன்னுடைய மார்க்கத்தை வீணாக்காதே, இந்த சந்ததிகளை சமுதாயத்தை இணைவைப்பில் தள்ளாதே என்று கூறுகிறோம். 
 
அவுலியா வந்து சேவிங் செய்து கொண்டிருந்தாராம் கண்ணாடியில். கடைசியில் பார்த்தால் எத்தனையோ கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கப்பல் ஓட்டை விழுந்து அப்படியே கடலில் மூழ்குமாறு இருந்ததை அவுலியா பார்த்தாராம். 
 
அப்படியே கண்ணாடியை தூக்கிப் போட்டாராம் தூக்கி போட்ட உடன் அந்த கண்ணாடி அப்படியே சென்று அந்தக் கப்பலின் அடியில் சென்று ஓட்டை அடைத்ததாம் கப்பல் அப்படியே பலமாகிவிட்டதாம், பிறகு கரைக்கு வந்து விட்டதாம். அதனால் தான் நாகூர் சென்றால் அங்கு கடல் இருக்கும் அருகில் அங்கே ஒரு குட்டி தர்கா இருக்கும் அங்கு சென்று ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு மண் கிடைக்கும். மயில் இறகின் விளக்கமாற்றால் ஒரு அடியும்கொடுத்து, ஒரு மண் கொடுப்பார்கள். 
 
அதற்கு சில்லடி தர்கா என்று பெயர். சகோதரர்களே! நினைத்துப் பாருங்கள். அற்பத்தனமான, முட்டாள்தனமான, இத்தகைய நம்பிக்கைகளையா ஒரு ஏகத்துவ கொள்கை உடைய, அறிவின் வெளிச்சத்தினுடைய, இந்த மார்க்கத்திலே ஒருவன் நம்ப முடியும். அல்லாஹ் உடைய நபி இப்ராஹிம் அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. நான் என்ன கேட்கிறேன்? என்றால் இப்ராஹிம் நபியை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் நமக்கு கூறினானா? இல்லையா?
 
إِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَى الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ وَإِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ
 
பிறகு, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கின்ற நிலையில் இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக என்று உமக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை. (அல்குர்ஆன் 16 : 123)
 
இப்ராஹிம் நபி அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களுடைய பாட்டன், முப்பாட்டன்கள் இருக்கக்கூடிய அந்த நபிமார்கள், இறைநேசர்களுடைய இல்லங்களை தேடிப் போய் 46:33 அங்கே சென்று தவாப் செய்தார்களா? அல்லாஹ்விடம் கேட்டார்கள். 
 
என்னை படைத்தவனே! எனக்கு குழந்தையை கொடு. அல்லாஹ் கூறுகிறான் அவருக்கு நாம் குழந்தையை கொடுத்தோம். குழந்தையை கொடுக்கக்கூடிய சக்தி யாருக்கு இருக்கிறது? உன்னை படைத்த இறைவனுக்கு மட்டுமே இருக்கிறது. எந்த மருந்துக்கும் இல்லை. மருந்து என்பது சில நோய்களை குணப்படுத்தலாம். குழந்தையை கொடுப்பவன் அல்லாஹ். 
 
என் அன்பு சகோதரர்களே! தர்காக்களுக்கு சென்று குழந்தைகளை தேடக்கூடியவர்களே, நோய் நிவாரணங்களை தேடக்கூடியவர்களே, அவர்களால் அருள் கிடைக்கும் என்று நம்ப கூடியவர்களே ஏன் நீங்கள் குர்ஆனை படித்து உணர்வதில்லை? 
 
ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குழந்தை இல்லை. அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் இப்ராஹிம் நபியுடைய வாரிசில யாகூப் நபி உடைய வாரிசில இஸ்ரவேலர்களுடைய மிகப்பெரிய நபியாகிய நபியுடைய வாரிசுகளில் உள்ளவர் தான். எங்கையாவது கப்ரில் போய் உட்கார்ந்தாரா? எங்கேயாவது தர்காவில் போய் அமர்ந்தாரா? எங்கேயாவது நபிமார்களுடைய கப்ரில் போய் அமர்ந்து இஃதிகாஃப் இருந்தாரா? 
 
அவர்களுடன் தொடர்பு கொண்டு எனக்கு அல்லாஹ்விடம் பிள்ளையை வாங்கி தாருங்கள் என்று கூறினாரா? எங்கேயாவது மண்ணள்ளி சாப்பிட்டாரா? எங்க ஊரில் சென்னையில் ஸ்டான்லி என்ற மருத்துவமனை இடம் இருக்கிறது. 
 
அங்குஉள்ள ஒரு தர்கா உள்ளது.  அங்கு யார் போவார் என்றால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் போக வேண்டும். ஆனால், அங்கு  உள்ள தர்காவில் குழந்தை இல்லாதவர்கள் அனைவரும் போவார்கள். சொல்றதுக்கே, சில விஷயங்கள் கேவலமாக இருக்கிறது. வெட்கமாக இருக்கிறது. 
 
அங்கே விளக்கு எரிப்பார்கள். அந்த விளக்கை எடுத்து ரொம்ப அசிங்கமாக தான் இருக்கு சொல்றதுக்கே அந்த விளக்கை எடுத்து ஒரு பெண் தன்னுடைய பெண்ணுறுப்பில் தடவினால் குழந்தை பிறந்துவிடுமாம். அஸ்தஃபிருல்லாஹ் அளீம் ஒரு முஸ்லிம், ஒரு இறை நம்பிக்கையாளன் நம்பக்கூடிய ஒரு நம்பிக்கை எவ்வளவு கேவலமாக செயல்? இன்று வரை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கின்றார்
 
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
 
அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்தார். “என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்’’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 3 : 38) 
 
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! படைத்த இறைவன் ஒருவனை மலடகாக்குவதும், மலடனை பிள்ளை பெறக்கூடிய பாக்கியம் உள்ளவனாக ஆக்குவதும் இறைவனுடைய செயல். அவன் நாடினால் எதையும் செய்வான் அவனிடத்தில் மட்டுமே கேளுங்கள் என்று கூறுகிறோம். 
 
இதில் என்ன தவறு இருக்கிறது? எது அறிவு? உன்னை படைத்தவன் இடத்திலே நீ கேட்பதா?யாருக்கும் எந்த சக்தியும் இல்லையோ முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவா இந்த உலகத்தில்  ஒரு அவுலியா இருக்கிறார்? ஒரு ஞானி இருக்கிறார்?ஒரு மகான் இருக்கிறார்? அல்லாஹுத்தஆலா முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி என்ன கூறுகிறான் நமக்கு
 
قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا
 
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களுக்கு கெடுதிக்கோ (-உங்களை விட்டும் அதை அகற்றுவதற்கும்) நல்லதுக்கோ (-உங்களுக்கு அதை செய்து தருவதற்கோ) சக்தி பெறமாட்டேன். (அல்குர்ஆன் 72 : 21)
 
கூறுவீராக: நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.
 
قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ
 
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எந்த ஒரு பலனுக்கும் (அதை எனக்கு தேடுவதற்கு) இன்னும், எந்த ஒரு கெடுதிக்கும் (அதை என்னை விட்டு அகற்றுவதற்கு) நான் உரிமை பெறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மையை அதிகம் பெற்றிருப்பேன்; இன்னும், தீங்குகள் ஏதும் எனக்கு ஏற்பட்டிருக்காது. (பாவிகளை) எச்சரிப்பவராகவும் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நற்செய்தி கூறுபவராகவுமே தவிர நான் இல்லை.” (அல்குர்ஆன் 7 : 188)
 
(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.
 
எனக்கு மறைவான ஞானம் இருக்குமேயானால் என் அன்பானவர்களே! எந்த ஜோசியக்காரனுக்கும் மறைவானது தெரியாது. எந்த குறிபார்ப்பவனுக்கும் மறைவானது தெரியாது. எந்த மகானுக்கும் நாளை நடக்கக்கூடிய மறைவான செய்தி தெரியாது. அப்படி தெரியும் என்று சொன்னால் அவன் பொய் கூறுகிறான். உங்களை ஏமாற்றுகிறான். உங்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்க கூடியவன், உங்களுக்கு நாளை என்ன நடக்கும் என்பதை முடிவு செய்யக்கூடியவன் உங்களை படைத்த இறைவன் மட்டுமே. அதை அறிந்தவன் அவன் மட்டுமே.
 
إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
 
நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான் மறுமையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்ற) அறிவு இருக்கிறது. அவன்தான் மழையை இறக்குகிறான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகிறான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 31 : 34)
 
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
 
எந்த ஆன்மாவும் நாளை நமக்கு என்ன நடக்கும் என்று அதற்கு தெரியாது, எந்த ஆன்மாவுக்கும் தெரியாது நாளைஅது எங்கே மரணிக்கும் என்பதை முகமது நபிக்கு அல்லாஹ் கூறுகிறான்மறைவான அறிவு எனக்கு இருந்தால் எனக்கு எந்த தீமையும் ஏற்பட்டு இருக்காது. எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காதே. 
 
நான் நன்மைகளை அதிகமாக எனக்கு தேடி இருப்பேனே. அன்பு சகோதரர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நமக்கு நன்மை, தீமை செய்ய முடியாது என்று இருக்க நம்மை பிரச்சனையிலிருந்து பாதுகாக்க முடியாது படைத்த இறைவனைத் தவிர என்று இருக்க, இறந்து போன ஒரு மனிதர் இடத்திலே சென்று எப்படி  ஒரு முஃமின், ஒரு இறை நம்பிக்கையாளன்  என்று சொல்லக்கூடியவன்.
 
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
 
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்குர்ஆன் 1 : 5)
 
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
 
உன்னிடத்திலே உதவி தேடுகிறேன், உன்னையே வணங்குகிறேன் என்று ஒவ்வொரு தொழுகையிலும் ஏகத்துவத்தை சொல்லக்கூடிய ஒரு நம்பிக்கையாளன் எப்படி அங்கே சென்று நம்பிக்கை வைப்பான்? அய்யூப் நபி யார் அவர்கள் ஏறக்குறைய 18 ஆண்டுகள் நோயினால் கஷ்டப்பட்டவர்கள் யாரிடத்திலே கேட்கிறார்கள்? படிக்கிறீர்களா இல்லையா,
 
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
 
இன்னும், ஐயூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, “நிச்சயமாக நான் (உனது அடிமை,) எனக்கு நோய் ஏற்பட்டது. நீயோ கருணையாளர்களில் மகா கருணையாளன்! (ஆகவே, எனக்கு சுகமளிப்பாயாக!”) (அல்குர்ஆன் 21 : 83)
 
இறைவா! எனக்கு நோய்  ஏற்பட்டுவிட்டது. நீ  கருணையாளனுக்கு  எல்லாம் மகாகருணையாளன் எனக்கு இந்த நோயிலிருந்து ஷிபா நற்குணத்தை தருவாயாக, நிவாரணத்தை தருவாயாக. சகோதரர்களே! அய்யூப் நபியை குணப்படுத்திய அல்லாஹ், ஜகரிய்யா நபிக்கு குழந்தையை கொடுத்த அல்லாஹ், 
 
இப்ராஹீம் நபிக்கு குழந்தையை கொடுத்த அல்லாஹ், யூனுஸ் நபியை மீன் வயிற்றில் இருந்து வெளியேற்றிய அல்லாஹ், முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி செய்த அல்லாஹ், அந்த வானத்தை படைத்தவன், அந்த பிரபஞ்சத்தை படைத்தவன் சொல்கிறான்:
 
هُوَ الْحَيُّ لَا إِلَهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
 
அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். (வணங்கத்தகுதியான) இறைவன் அவனைத் தவிர அறவே இல்லை. ஆகவே, மார்க்கத்தை (-வழிபாடுகளை) அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியது. (அல்குர்ஆன் 40 : 65)
 
அவன் என்றும் உயிரோடு இருக்கிறான் அவன் என்ன இறந்தா போய்விட்டான். அவனை நீங்கள் அழையுங்கள் என்று உயிரோடு இருப்பவனை அழையுங்கள் என்ற அந்த இறைவன் சொல்ல, இறந்து போனவர்களை, மக்கிப்போனவர்களை, கப்ரு குழியில் அடக்கம் செய்யப்பட்டவர்களை,
 
நம்பிக்கை கொண்டிருக்கிறார்களே இஸ்லாம் என்ற பெயரிலே, மார்க்கம் என்ற பெயரிலே, சுன்னத் ஜமாத் என்ற பெயரிலே எவ்வளவு பெரிய அநியாயம் என்று பாருங்கள். ஆகவே தான் உலகத்தில் எத்தனையோ பெரிய பாவங்கள் இருக்கின்றன.
 
எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இறைவன் ஒரு குற்றத்தை, ஒரு பாவத்தை, மிகப்பெரிய அநியாயம். அநியாயத்திலேயே மிகப்பெரிய அநியாயம்,கொடூரத்திலேயே மிகப்பெரிய கொடூரம் என்று கூறுகிறான் என்றால்,
 
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
 
இன்னும், லுக்மான் தனது மகனாருக்கு - அவர் அவருக்கு உபதேசித்தவராக - கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும். (அல்குர்ஆன் 31 : 13)
 
இணை வைத்தல் அல்லாஹ்விற்கு செய்யப்படக்கூடிய வணக்க வழிபாடுகளை, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்தல்,அது நீ வானவர்களுக்கு செய்தாலும் சரி, ஒரு  இறை தூதருக்கு செய்தாலும் சரி, இறைநேசருக்கு செய்தாலும் சரி, மரத்திற்கு செய்தாலும் சரி, மனிதருக்கு செய்தாலும் சரி,
 
எதற்கு செய்தாலும் சரி வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமானவை. அவற்றை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்வது ஏக இறைவனைத் தவிர மற்றவருக்கு செய்வது அது இணை வைத்தல், மிகப்பெரிய அநியாயம். 
 
சகோதரர்களே! இந்த வழிபாடுகள் என்பது பற்றி அவர்கள் விளக்கம் சொல்வார்களே அதற்கு உண்டான மறுப்பை நீங்கள் புரிய வேண்டும். வழிபாடு என்பதற்கு உளூ செய்ய வேண்டும், கிப்லாவை முன்னோக்க வேண்டும்,
 
நிய்யத் இருக்க வேண்டும்  என்பதெல்லாம் இது ஒரு குறிப்பிட்ட வணக்க வழிபாடுகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனையை தவிர வணக்க வழிபாடுகள் என்றால் ஒருவனுக்கு முன்னால் எல்லை மீறிய உச்சகட்ட பணிவு அந்த பணிவை வெளிப்படுத்துவது இதுதான் வணக்கம்,
 
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ: المَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسْجِدِ الأَقْصَى 
 
சகோதரர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறினார்கள்? நீங்கள் புனிதத்தை நாடி,  நன்மையை நாடி, வணக்க வழிபாட்டை நாடி,மன அமைதியை நாடி, ஒரு பயணம் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு மூன்று மஸ்ஜிதுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒன்று அல் மஸ்ஜிதில் ஹராம், இரண்டாவது அல் மஸ்ஜிதுல் நபவி, மூன்றாவது பைத்துல் முகத்தஸ் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, முஸ்லிம், எண் : 1189, 1387
 
இதைத் தவிர நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்றால்உங்கள் வீடு, அல்லது பர்ளான கடமையாக இருந்தால் உங்கள் முஹல்லாவில் உள்ள பள்ளிவாசல். இதைத்தவிர இன்னொரு இடத்திற்கு நீங்கள் பயணம் செய்து புனிதத்தை தேடி, நன்மையை தேடி, மன அமைதியை தேடி நீங்கள் பயணம் செய்யக்கூடாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்கள் கபுர்களை கடந்து செல்லும்போது அல்லது உங்கள் முஹல்லாவில் உள்ள கபூர்ஸ்தானங்களை நீங்கள் ஸியாரத் செய்யுங்கள். 
 
1569 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زُورُوا الْقُبُورَ؛ فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْآخِرَةَ
 
அதாவது நீங்கள் அங்கு போகும்போது அந்த மையத்துகழை நீங்கள் சந்தியுங்கள். அவர்களுக்கு நீங்கள் சலாம் கூறுங்கள். அவங்களுக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள். அங்கே நின்று கொண்டு நானும் இவ்வாறு தான் மரணித்து உங்களை வந்து அடைவேன் என்று உங்களுடைய மரணத்தை, உங்களுடைய மறுமையை நீ நினைவு கூர்ந்து விட்டு வாருங்கள் என்று நமக்கு நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டினார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : இப்னு மாஜா, முஸ்லிம், எண் : 1569, 974 
 
இதை விட்டுவிட்டு கப்ருக்கு செல்வதால் உங்களுக்கு குணம் கிடைப்பது, கப்ருக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும், கப்ருக்குஎன்பதே சென்றால் பரீட்சையில் பாஸ் ஆகலாம் கப்ருக்கு சென்றால் பிள்ளைகளுக்கு அங்க போய் இருந்தால் மன அமைதி கிடைக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்எங்கே கூறியிருக்கிறார்கள்? எங்கே இந்த மார்க்கம் சொல்லி இருக்கிறது? என்ன செய்தார்கள் அவுலியாக்கள் மகான் என்ற பெயரிலே முதலில் கப்ருகளை உயர்த்தி கட்டினார்கள். 
 
93 - (969) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ، قَالَ: قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ
 
அல்லாஹ்வுடைய தூதர் பிற கப்ருகளோடு மற்ற கபுர்களை சமமாக்குங்கள். பெரியவர், தாழ்ந்தவர், அறிந்தவர்,அறியாதவர், படித்தவர், படிக்காதவர், சமுதாயத்திலே உயர்ந்தவர், சமுதாயத்திலே தாழ்ந்தவர், அல்லது பெரிய மகான் சாதாரண மனிதன் என்றெல்லாம் இல்லாமல் எல்லாருடைய மண்ணறைகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 
 
அறிவிப்பாளர் : ஃபளாலா இப்னு உபைத், அலி ரழியல்லாஹு அன்ஹு , நூல் : எண் : 968, 969
 
அன்பு சகோதரர்களே! சமூக நீதியை வாழும்போது மட்டுமல்ல வாழ்ந்த பிறகும் கூட ஒரு நாட்டினுடைய தலைவனும் சரி, ஒரு மதத்தினுடைய தலைவனும் சரி, சாதாரண ஒரு மனிதனும் சரி எல்லாருடைய மண்ணரையும் சமமாக ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது அல்லாஹ்வுடைய மார்க்கம். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கபூர் அவர்களை விடவா இந்த பூமியில் சிறந்தவர்கள் இருக்கின்றார்கள்? அவர்களுடைய கபூரை அன்னை ஆயிஷா கூறுகிறார்கள் மண்ணோடு மண்ணாக அதிலிருந்து ஒட்டகத்தினுடைய திமிழ் அளவு உயர்த்தப்பட்டு மண்களால் தான் அந்த கபூர் இருந்தது என்று. 
 
நீங்கள் பார்க்கலாம் சவுதி அரேபியாவில் மன்னர் இறந்து விட்டால் அங்கே விடுமுறையும் கிடையாது, கொடி பாதிக்கம்பலங்களிலும் இறங்காது, எந்த பிரச்சனையும் கிடையாது, இந்த நாட்டில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய விதி அவர் இறந்து விட்டார். 
 
நாம் என்ன தவறு செய்தோம்? நம் கடை என்ன தவறு செய்தது? நாம் தெரு என்ன தவறு செய்தது? கடையை மூடு இல்லை என்றால் கல்லை விட்டு அடிப்பேன். யாரும் நடமாடக்கூடாது. இப்படி அவர் இறந்ததற்கு கவலைகளில் இவ்வாறு செய்கிறார்களாம்.
 
பக்கத்து மாநிலத்தில் ஒரு பழைய காலத்து நடிகர் இறந்து விட்டார் அவர் இறந்த அன்றைய நாளில் கடையை மூட சொல்லி சமூக கலவரங்கள் செய்து பல கோடி ரூபாய் அன்று நஷ்டம் அரசாங்கம் எளிமையாக கூறிவிட்டது அது அவர் மேல் உள்ள கவலையில் அவருடைய தொண்டர்கள் செய்தது இதையெல்லாம் குற்றமாக எடுக்க முடியாது. 
 
எத்தனை வீடுகள்? எத்தனை கடைகள் வீணாக்கப்பட்டன? எத்தனை மனிதர்களுடைய கை, கால் மண்டை உடைந்தது? முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகத்தின் மக்களுடைய தலைவர் ஒரு பெரிய சமுதாயத்தின் தலைவர் இறந்து விடுகிறார் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை. 
 
3667 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَاتَ وَأَبُو بَكْرٍ بِالسُّنْحِ، - قَالَ: إِسْمَاعِيلُ يَعْنِي بِالعَالِيَةِ - فَقَامَ عُمَرُ يَقُولُ: وَاللَّهِ مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: وَقَالَ عُمَرُ: وَاللَّهِ مَا كَانَ يَقَعُ فِي نَفْسِي إِلَّا ذَاكَ، وَلَيَبْعَثَنَّهُ اللَّهُ، فَلَيَقْطَعَنَّ أَيْدِيَ رِجَالٍ وَأَرْجُلَهُمْ، فَجَاءَ أَبُو بَكْرٍ " فَكَشَفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:7] فَقَبَّلَهُ، قَالَ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، طِبْتَ حَيًّا وَمَيِّتًا، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُذِيقُكَ اللَّهُ المَوْتَتَيْنِ أَبَدًا، ثُمَّ خَرَجَ فَقَالَ: أَيُّهَا الحَالِفُ عَلَى رِسْلِكَ، فَلَمَّا تَكَلَّمَ أَبُو بَكْرٍ جَلَسَ عُمَرُ،
 
எந்தவிதமான சப்தமும் இல்லை, கலவரம் ஒரு பக்கம் இருக்கட்டும், சப்தமே இல்லை.யார் வந்தாலும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் நாங்கள் அல்லாஹ்விற்கு சொந்தமானவர்கள் அல்லாஹ்விடத்தில் திரும்பப் போகிறோம். அபூபக்கர் வருகிறார் முகமது நபியின் தோழர் முகமது எங்களுக்கு இறைவன் அல்ல இறைவனுடைய தூதர் வாழ்ந்தார், இறந்துவிட்டார். 
 
யார் முஹம்மதை வணங்கினார்களோ அவருக்கு முகமது இறந்துவிட்டார். யார் அல்லாஹ்வை வணங்குகிறார்களோ அல்லாஹ் என்றும் உயிரோடு இருப்பவன் மரணிக்காதவன் என்று மக்களுக்கு அழகிய உபதேசத்தை செய்தார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : இப்னு மாஜா, முஸ்லிம், எண் : 1569, 974 
 
அன்பு சகோதரர்களே! விஷயத்திற்கு வாருங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறினார்கள்? கப்ருக்கு செல்லாதீர்கள். எங்கேயாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்கு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருக்கு துவா செய்ய வேண்டும் அங்கே போய்  அப்படியென்று எங்கேயாவது ஒரு சஹாபாக்கள் வந்திருக்கிறார்களா? யோசித்துப் பாருங்கள் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்று சொல்லி, 
 
மக்காவிலுள்ள சஹாபாக்கள் மதினாவிற்கோ, மதினாவில் உள்ள சஹாபாக்கள் மக்காவிற்கோ அல்லது, மதினாவில் இருந்து பல இடங்களுக்கு சென்று தங்கினார்களே இன்றைய சாம் இன்னும் மற்ற நாடுகளில் அங்கிருந்த சஹாபாக்கள் எங்கையாவது நபி அவர்களுடைய கப்ருக்கு ஜியாரத்துக்கு வருகிறோம் என்று வந்திருக்கிறார்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கபூர் ஸியாரத் செய்யப்படாத ஒன்று.அது எப்பொழுது ஸியாரத் செய்யப்படும் மஸ்ஜிது நபவிக்கு யாரும் வந்தால் அங்கே அவர் தொழுதுவிட்டு, 
 
அதுவும் வரும்பொழுது மஸ்ஜிது நபவிக்கு வருகிறேன் என்ற எண்ணத்தோடு வந்து, தொழுதுவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய இரண்டு தோழர்களுக்கும் சலாம் கூறிவிட்டு சென்றுவிடுவார் அவ்வளவுதான். அதற்குமேல் நபியே அதை எனக்கு கொடுங்கள் என்றெல்லாம் அவர் செய்தால் நபியின் போதனைக்கு மாறு செய்து விட்டார். 
 
அன்பு சகோதரர்களே! அங்கே தான் பிரச்சனை உருவாகிறது, அந்த மகான்கள் இறங்கிய இடம் என்று அங்கே தேடி செல்கின்றார்களே அங்கிருக்கிறது குழப்பம். இவ்வளவு தூரம் செல்கிறார்களே பிறகு என்ன செய்வது வெறும் சலாம் கூறிவிட்டு வர முடியுமா? இப்ப ஊரில் உள்ள இடமாக இருந்தால் போனாக சலாம் சொன்னார்கள் என வந்து விடலாம். 
 
இவர் இங்கிருந்து போய்விட்டார் நாகூருக்கு, இங்க இருந்து போய்விட்டார் ஏர்வாடிக்கு, இங்கிருந்து போய்விட்டார் கோவளத்திற்கு, அஜ்மீருக்கு, என்ன செய்வது கொஞ்ச நேரம் இருக்க வேண்டும், தங்கனும் இங்கே தான் பிரச்சனை. அங்கே சென்றவுடன் ஒரு விதமான பக்தி, ஒரு விதமான அழுகை, இப்பொழுது சைத்தான் பின்னால் இருந்து வருகிறான்.
 
நம்பிக்கையை கொடுக்கின்றான்.அவனுக்கு அப்படியே ஒரு மன அமைதியை ஏற்படும் மாதிரி, அங்கே அவர் கேட்கிறார் எல்லாமே அல்லாஹ் உடைய விதியினால் நடக்கிறது. அல்லாஹுத்தஆலா ஒரு நேரத்தை நிர்ணயிக்கிறான் இப்பொழுது இவனுக்கு இது நடக்கும் என்று சொல்லி அங்கே சென்று வந்தவுடன் அல்லாஹ்வுடைய விதிப்படி அடுத்து நடக்கிறது. ஆனால் அஜ்மீருக்கு சென்று வந்ததால் இது நடக்கிறது, நான் நாகூருக்கு போனேன் அதனால் நடந்தது. 
 
நடத்துவது யார் உயிரோடு இருக்கக் கூடிய அல்லாஹுத்தஆலா. யாரல்ல இறந்து போய் அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய அந்த அவுலியா அல்ல. ஆகவே தான் அல்லாஹ் கூறுகிறான் அவனை நீங்கள் அவன் உயிரோடு இருக்கிறான்,அவனை  தவிர வணங்கப்படக் கூடியவன் யாரும் இல்லை. நேர்ச்சை அவனுக்கு, பயமும் அவனுக்கே, எல்லாம் அவனுக்கே, ஆதரவும் அவனுக்கே, துவாவும் அவனுக்கு, எல்லா நம்பிக்கைகளும் அவனுக்கு அவனை நீங்கள் அழையுங்கள் அவன் உங்களுக்கு பதில் அளிப்பான்.
 
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
 
இன்னும், என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன்” (எனக் கூறுவீராக!). ஆக, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளி(த்து கீழ்ப்படிந்து நட)ப்பார்களாக! இன்னும், அவர்கள் என்னையே நம்பிக்கை கொள்வார்களாக! (அல்குர்ஆன் 2 : 186)
 
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக.
 
أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَا أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَا أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَا أَمْ لَهُمْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا قُلِ ادْعُوا شُرَكَاءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنْظِرُونِ
 
நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்றே (அல்லாஹ்வின்) அடிமைகள் ஆவார்கள். (நீங்கள் கேட்டதை அவர்கள் உங்களுக்கு கொடுப்பார்கள் என்ற உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்களும் உங்களுக்குப் பதிலளிக்கட்டும் (பார்க்கலாம்)! (அல்குர்ஆன் 7 : 194)
 
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
 
என்னைத் தவிர நீங்கள் யாரை அழைத்தாலும் அவர்களும் உங்களைப்போல என்னுடைய அடியார் தான். உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எந்த தீமையையும் தடுக்க முடியாது.ஆகவே அன்பிற்குரியவர்களே! நான் ஆரம்பத்தில் சொன்ன அந்த சொன்ன செய்தியை நினைவில் வையுங்கள். இன்றைய சமுதாயத்தில் அப்படியே கரைபடிந்து இருக்கக்கூடிய இந்த ஷிர்குகளும், அனாச்சாரங்களும் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் உடைய மிகப்பெரிய சாபக்கேடு. 
 
நம்முடைய சோதனை காண மிகப்பெரிய காரணம். இதிலிருந்து தவ்பா செய்து எப்பொழுது இந்த சமுதாயம் குர்ஆன் சுன்னாவிலே ஒற்றுமை அடைந்து, தவ்ஹீதிலே ஒற்றுமை அடைந்து, இந்த தவ்ஹீதை நிலை நிறுத்துமோ, அல்லாஹுத்தஆலா கண்ணியமான வாழ்க்கையை, உயர்வான வாழ்க்கையை, சிறப்பான வாழ்க்கையை இந்த உலகத்திலும் கொடுப்பான், மறுமையிலும் அல்லாஹுத்தஆலா கொடுப்பான்! அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் தவ்ஹீதில் நிலை நிறுத்துவானாக ஷிர்கில் இருந்தும் பிதஹத்தில் இருந்தும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/