HOME      Lecture      உனது கடமையும் பொறுப்பும் என்ன? | Tamil Bayan - 719   
 

உனது கடமையும் பொறுப்பும் என்ன? | Tamil Bayan - 719

           

உனது கடமையும் பொறுப்பும் என்ன? | Tamil Bayan - 719


உனது கடமையும் பொறுப்பும் என்ன?
 
தலைப்பு : உனது கடமையும் பொறுப்பும் என்ன?
 
வரிசை : 719
 
இடம் : ஆசியா வ மர்யம் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி அடியக்கமங்கலம், திருவாரூர்
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 30-05-2022 | 28-10-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்களே! இந்த ஊருடைய முக்கியஸ்தர்களே! ஜமாத்தார்களே! இந்த ஆசியா மரியம் கல்லூரி நடத்திக் கொண்டிருக்க கூடிய பொறுப்பாளர்களே! இந்த கல்லூரியில் பயின்ற பயின்று கொண்டிருக்க கூடிய  மாணவிகளே! உங்கள் அனைவருக்கும் அல்லாஹுவிடத்தில் துஆ செய்தவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கின்றேன். 
 
அல்லாஹு தஆலா உங்களுக்கும், எனக்கும் அல்லாஹுவுடைய வேதத்தை நம்பிக்கை கொண்டது போன்று, அதை கற்று அமல் செய்யக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்பிக்கை கொண்டது போன்று, அவர்களுடைய சுன்னாவை கற்று, அதன்படி செயல்பட்டு பிற மக்களுக்கும் அதை எடுத்துச் சொல்லக்கூடிய அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.
 
என் அன்பு சகோதரிகளே! இந்த உலக வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என்ன? நமக்கு அல்லாஹுத்தஆலா கொடுத்த கடமை என்ன? நாம் எதற்காக இந்த உலக வாழ்க்கையில் படைக்கப்பட்டிருக்கின்றோம்? இந்த இஸ்லாமிய மார்க்கம் இதன் மூலமாக நாம் பெற்றிருக்கக் கூடிய சிறப்பு, உயர்வு, கண்ணியம் இவற்றையெல்லாம் அடைந்திருக்கின்ற நாம் என்ன கடமையை உணர்ந்து இருக்கின்றோம்? என்ன பணியை நாம் செய்ய வேண்டும் என்று இந்த உலகத்தில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம்?
 
அன்பு சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கத்தின் உடைய அடிப்படையே மறுமை வாழ்க்கையை முன் வைத்து தான். நபிமார்கள் அனுப்பப்பட்டதே மக்களை உலக ஆசையில் இருந்து விடுவித்து, உலக இன்பங்களில் மூழ்கி, தங்களது வாழ்க்கை நோக்கத்தை பாழாக்கி விடுவதில் இருந்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த லட்சியத்தை வீணாக்கி விடுவதில் இருந்து அவர்களை காப்பாற்றி, மறுமைக்கு கொண்டு செல்வது மறுமையுடைய நிரந்தரமான இன்பத்திற்கு அவர்களை அழைப்பது.
 
அன்பு சகோதரிகளே! இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் உடைய அடிப்படை. அல்லாஹு தஆலாவை நாம் வணங்க வேண்டும், அல்லாஹுவிற்கு நாம் இணை வைக்கக் கூடாது, அல்லாஹு நமக்கு ஒரு மார்க்கத்தை கொடுத்திருக்கிறான், அந்த மார்க்கம் மனிதர்களால் மனித சிந்தனைகளால் உருவாக்கப்பட்டது அல்ல.
 
மாறாக, அல்லாஹுவால் இறக்கப்பட்ட மார்க்கம், அல்லாஹுவால் கொடுக்கப்பட்ட மார்க்கம், இந்த மார்க்கத்தின் படி நாம் நடந்தால், நமக்கு அல்லாஹுத்தஆலா சொர்க்கத்தை வைத்திருக்கிறான். அங்கே உயர்ந்த இன்பங்களை அல்லாஹுத்தஆலா வைத்திருக்கிறான், அல்லாஹுவுடைய பொருத்தத்தை வைத்திருக்கிறான், அந்த சொர்க்கத்திற்காகத்தான் நாம் படைக்கப்பட்டு இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறோம்.
 
இங்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை, இங்கு நமக்கு கொடுக்கப்பட்ட கடமை, அந்த சொர்க்கத்திற்கான அமல்களை நாம் செய்ய வேண்டும். அந்த சொர்க்கத்தின் பக்கம் அல்லாஹுவுடைய அடியார்களை அழைக்க வேண்டும்.
 
அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! இதுதான் இந்த வாழ்க்கையினுடைய லட்சியம், இதுதான் இந்த வாழ்க்கையினுடைய நோக்கம், சொர்க்கம், மறுமை நம் கண்ணுக்கு முன் இல்லை என்றால் அந்த மறுமை நம் கண்ணுக்கு முன் இல்லை என்றால், மறுமை என்ற அந்த தேடல், மறுமை என்ற அந்த இலட்சியம் இல்லை என்றால், 
 
அன்பானவர்களே! இந்த உலக வாழ்க்கை நம்மை அப்படியே இதன் இன்பங்களிலே மூழ்கடித்து நம்மை அழித்து நாசமாக்கிவிடும். இந்த உலகத்திலே மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்து விடுவான்? எவ்வளவு செல்வத்தை அவனால் சேர்த்து விட முடியும்? எவ்வளவு வசதிகளை அவனால் தேடிக்கொள்ள முடியும்? கண்டிப்பாக ஒருநாள் மரணம் அவனை சந்தித்தே தீரும்.
 
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
 
ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே. இன்னும், உங்கள் கூலிகளை நீங்கள் முழுமையாக கொடுக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆக, எவர் (நரக) நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவாரோ, (அவர்) திட்டமாக வெற்றி பெற்றார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் 3 : 185)
 
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும், அல்லாஹுத்தஆலா நமக்கு எவ்வாறு நினைவூட்டுகிறான்? பாருங்கள் மனிதனே! ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும். பிறகு என்ன மரணித்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதா? என்றால் சகோதரிகளே! மரணத்திற்குப் பின்பு தான் உண்மையே ஆரம்பமாக போகிறது.
 
மரணத்திற்குப் பிறகுதான் பிரச்சனையே இருக்கிறது  மரணத்திற்கு பிறகு தான் வாழ்க்கையே இருக்கிறது. அங்கே தான் எல்லாம், இந்த உலகத்தில் எதுவும் இல்லை. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய இன்பங்கள் எல்லாம் ஏமாற்றக்கூடியது.
 
يَاأَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
 
மக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட (அல்குர்ஆன் 35 : 5)
 
ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹுவை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். அற்பமான உலக வாழ்க்கை இன்பங்கள் தான் நீங்கள் எதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களோ!
 
يَاأَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ  ,الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ  ,فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ  ,كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ ,كِرَامًا كَاتِبِينَ  ,يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ  ,إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ  ,وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ ,يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ 
 
,وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ  ,وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ  ,ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ,يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
 
மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? ,அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.
 
,எந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான். ,அவ்வாறல்ல! மாறாக, (நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவதையும்) கூலி கொடுக்கப்படுவதை(யும்) பொய்ப்பிக்கிறீர்கள். ,நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். ,(அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள். ,நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள்.
 
(பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.) ,நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள். ,இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள். ,(அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள். ,இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை.
 
 ,இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது? ,பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? ,(அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்! (அல்குர்ஆன் 82 : 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19,)
 
மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
 
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். 
 
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். 
 
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும்  நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹுவுக்கே. அல்லாஹுத்தஆலா அந்த மறுமைக்கு நம்மை அப்படியே கொண்டு செல்கின்றான். மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையை நம் கண்ணிற்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறான்.
 
அன்பு சகோதரர்களே! இந்த உலகத்திலே மக்கள் பல படித்தரங்களிலே அழைக்கப்படலாம். பல கோத்திரங்களிலே அவர்கள் அறியப்படலாம். அவர்களுடைய படிப்பின் சான்றிதழை கொண்டு அவர்கள் பல புனைப் பெயர்கள், பட்ட பெயர்களை கொண்டு அவர்கள் போற்றப்படலாம். ஆனால் நாளை மறுமை என்று வந்துவிட்டால் அல்லாஹுவிற்கு முன்னால் அடியார்கள் நிறுத்தப்படும் பொழுது, அல்லாஹுத்தஆலா அடியார்களை இரண்டு கூட்டங்களாக தான் பிரிப்பான்.
 
اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍ‏
 
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 82 : 13)
 
நல்லவர்கள் அனைவரும் வந்து விடுங்கள். உங்களுக்கு அருளுடைய, இன்பம் உடைய சொர்க்கம் இருக்கிறது. அங்கே நீங்கள் நுழையப் போகிறீர்கள்.யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏழையாக இருக்கலாம், படிக்காதவராக இருக்கலாம், கஷ்டப்படக் கூடியவராக கண் தெரியாதவராக இந்த உலகத்தில் மக்கள் யாரையெல்லாம் விரட்டினார்களோ, யாரையெல்லாம் மக்கள் புறக்கணித்தார்களோ,
 
وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ  هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ‏
 
மிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. இன்னும், “நீங்கள் (சொர்க்கம் செல்வீர்கள் என்று) வாக்களிக்கப்பட்டு கொண்டிருந்த உங்கள் (மகிழ்ச்சியான) நாள் இதுதான்” (என்று கூறி) வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள். (அல்குர்ஆன் 21 : 103)
 
மலக்குகள் அவர்களைச் சந்தித்து: உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான் என்று கூறுவார்கள். அந்த மக்களை மலக்குகள் வரவேற்க காத்துக் கொண்டிருப்பார்கள். இன்று உஸ்தாத் அவர்கள்  கூறினார்கள் அல்லவா! 
 
மார்க்க கல்வி என்றால் மட்டமாக, அற்பமாக, லேசாக, சாதாரண பார்வையில் பார்க்கிறார்களே! அந்த அறிஞர்களை, மார்க்க கல்வி கற்றவர்களை, அந்த கல்விக்காக உழைத்தவர்களை, அந்த கல்வியை பரப்பியவர்களை அன்பு சகோதரிகளே! இந்த கல்வி உங்களுக்கு அல்லாஹுத்தஆலா கண்ணியத்தை கொடுப்பதற்காக கொடுத்த கல்வி. சகோதரி பயானிலே அந்த வசனத்தை ஓதினார்கள்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
 
நம்பிக்கையாளர்களே! (உங்கள் சபைகளுக்குள் நுழைந்த உங்கள் சகோதரர்களுக்காக) “சபைகளில் (கொஞ்சம்) இடம் கொடுங்கள்!” என்று உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு (இடத்தில்) விசாலத்தை ஏற்படுத்துவான். இன்னும், (சபைகளில் இருந்து) நீங்கள் புறப்படுங்கள் என்று கூறப்பட்டால் நீங்கள் புறப்பட்டு விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல தகுதிகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 58 : 11)
 
ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹு பதவிகளை உயர்த்துவான். முஃமின்களுக்கு மட்டும்தான்  மறுமை. சொர்க்க வாழ்க்கை அல்லாஹுவை நம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு மட்டும்தான். 
 
1 - كُنْتُ رِدْفَ رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ علَى حِمارٍ، يُقالُ له: عُفَيْرٌ، قالَ: فقالَ: يا مُعاذُ، تَدْرِي ما حَقُّ اللهِ علَى العِبادِ؟ وما حَقُّ العِبادِ علَى اللهِ؟ قالَ: قُلتُ: اللَّهُ ورَسولُهُ أعْلَمُ، قالَ: فإنَّ حَقَّ اللهِ علَى العِبادِ أنْ يَعْبُدُوا اللَّهَ، ولا يُشْرِكُوا به شيئًا، وحَقَّ العِبادِ علَى اللهِ عزَّ وجلَّ أنْ لا يُعَذِّبَ مَن لا يُشْرِكُ به شيئًا، قالَ: قُلتُ: يا رَسولَ اللهِ، أفَلا أُبَشِّرُ النَّاسَ، قالَ: لا تُبَشِّرْهُمْ فَيَتَّكِلُوا.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே முஆத்கேட்கிறார். யா ரசூலுல்லாஹ்! அல்லாஹுவுடைய கடமை என்னஅடியார்களுக்கு? அடியார்கள் உடைய கடமை என்னஅல்லாஹுவிற்கு? நபியவர்கள் கூறுகிறார்கள் யார் அல்லாஹுவை வணங்குகிறார்களோ, அல்லாஹுவிற்கு இணை வைக்கவில்லையோ, அவனை அல்லாஹு சொர்க்கத்தில் நுழைவிப்பான். 
 
யார் அல்லாஹுவிற்கு இணை வைத்தானோ, அல்லாஹுவிற்கு செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளை, அல்லாஹுவின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை, அல்லாஹுவிற்கு செய்ய வேண்டிய மரியாதையை, அல்லாஹு அல்லாத ஒருவனுக்கு முன் செய்வானோ அவன் அல்லாஹ்விற்கு இணை வைத்து விட்டான். 
 
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 30 
 
யார் இணைவைப்பார்களோ! அல்லாஹு அவர்களை அல்லாஹ் நரகத்தில் புகுத்தியே தீருவான். அடியார்கள் மீது கடமை என்ன? அவர்கள் அல்லாஹுவை வணங்க வேண்டும், அல்லாஹுவிற்கு இணை வைக்கக் கூடாது. அல்லாஹுவுடைய கடமை என்ன? தன்னை வணங்கியவர்களை அல்லாஹு சொர்க்கத்தில் கண்டிப்பாக சேர்ப்பான்,
 
தனக்கு இணை வைத்தவர்களை அல்லாஹு தஆலா நரகத்தில் தள்ளியே தீருவான். சிலருக்கு ஷிர்க் என்றால் தெரிவதில்லை திருடுவதை, பொய் பேசுவதை, விபச்சாரம் செய்வதை பெரும்பாவம் அவமானமே என்று பார்க்கிறார்கள். உண்மையில் அதுவும் ஒரு அவமானம் தான் பெரும்பாவம் தான் அந்த பெரும்பாவத்தை கூட அல்லாஹு தஆலா மன்னிப்பான். இணை வைப்பதை அல்லாஹு மன்னிக்க மாட்டான்.
 
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا
 
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார். (அல்குர்ஆன் 4 : 116)
 
நிச்சயமாக அல்லாஹு தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத பாவத்தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; .
 
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَابَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ
 
“நிச்சயமாக அல்லாஹ் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: “இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான். இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை. (அல்குர்ஆன் 5 : 72)
 
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ! அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். நான் உங்களுக்கு ஒரு வார்த்தை கூறினேன் யாராக இருந்தாலும் சரி என்று அல்லாஹு தஆலா கூறுகிறான் பாருங்கள் சூரா ஜுமர் 39 : 65
 
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.” (அல்குர்ஆன் 39 : 65)
 
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம் நன்மைகள் யாவும் அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள் என்பதுவேயாகும்.
 
யாரைப் பார்த்து கூறுகிறான்? அல்லாஹு தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து ஏகத்துவத்தை மக்களுக்கு மத்தியிலே பரப்புவதற்காக, அல்லாஹு ஒருவனை மட்டுமே வணங்கி அந்த ஒருவனை வணங்குவதின் பக்கம் மக்களை அழைப்பதற்காக, அனுப்பப்பட்ட இறுதி இறை தூதர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நபியை பார்த்து அல்லாஹ் பேசுகிறான்.
 
முகமதே! உமக்கும் வஹியில் திட்டவட்டமாக கூறப்பட்டது. உமக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் வஹியில் கூறப்பட்டிருக்கிறது. என்ன செய்தி தெரியுமா? நீ இணை வைத்தால் யாரைப் பார்த்து கூறுகிறான் தன்னுடைய நபியை பார்த்து தவ்ஹீதுடைய இமாமை பார்த்து அல்லாஹு கூறுகிறான் முகமதே நீ இணை வைத்தால் உன்னுடைய அமல்கள் எல்லாம் நாசமாகிவிடும். 
 
உன்னுடைய இரவு வணக்கங்கள் உன்னுடைய தவ்ஹீத் உன்னுடைய இபாதத் உன்னுடைய அழுகை உன்னுடைய துஆ எல்லாம் நாசமாகிவிடும்  நிரந்தர நஷ்டவாளிகளிலே நீ ஆகிவிடுவாய் அன்பானவர்களே! நினைத்துப் பாருங்கள் நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தின் உடைய இந்த நிலையை பற்றி உங்களுக்கு கவலை வரவில்லை, உங்களுக்கு வேதனை வரவில்லை. அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகள் கட்டப்படுவது போன்று,
 
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ
 
(அந்த விளக்கு) இறை இல்லங்களில் எரிக்கப்படுகிறது. அவை உயர்த்தி கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமினான ஆண்கள்) அவனை துதித்து தொழுகிறார்கள். (அல்குர்ஆன் 24 : 36)
 
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமென்றும் அவற்றின் கண்ணியம் உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹு கட்டளையிடுகிறான். இன்றைய முஸ்லிம் சமுதாயம் தர்காக்களை உயர்வாக கட்டிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே வணக்க வழிபாடு செய்ய வேண்டும் என்று அல்லாஹு கட்டளையிட, இன்றைய முஸ்லிம் சமுதாயம் தர்காக்களிலே சென்று வணக்க வழிபாடுகள் செய்து கொண்டிருக்கிறது.
 
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
 
இன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர. (அல்குர்ஆன் 2 : 45)
 
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; என்று அல்லாஹு கட்டளை இட,
 
اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ
 
இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 40 : 60)
 
என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன்.
 
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ
 
அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும்போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் 27 : 62)
 
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
 
சிரமத்தில் சிக்கித் தவிப்பவர்கள் அவனை அழைத்தால், அந்த அழைப்புக்கு என்னை தவிர யாரால் பதில் கொடுக்க முடியும் என்று அல்லாஹ் கேட்கிறான்? இன்றைய சமுதாயம் இறந்தவர்களிடம் சென்று துவா கேட்கிறது. அல்லாஹு என்ன இறந்தா விட்டான்? அல்லாஹு எப்படி கேட்கிறான்?
 
هُوَ الْحَيُّ لَا إِلَهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
 
அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். (வணங்கத்தகுதியான) இறைவன் அவனைத் தவிர அறவே இல்லை. ஆகவே, மார்க்கத்தை (-வழிபாடுகளை) அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியது. (அல்குர்ஆன் 40 : 65)
 
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; மறுமையில்  இரண்டு கூட்டமே உள்ளது.
 
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
 
நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 82 : 13)
 
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். நல்லவர்கள் மாடமாளிகையில் இருப்பார்கள். சாதாரணமான வாழ்க்கை அல்ல அன்பு சகோதரர்களே! சொர்க்க இன்பத்தை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அல்லாஹுவின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
 
3250 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
 
சொர்க்கத்திலே ஒரு சாட்டையின் அளவிடம் உங்களுக்கு உலகம், உலகத்தை விட சிறந்தது.
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது  ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 3250
 
 2785 أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ ، عَنْ سَعْدَانَ الْجُهَنِيِّ ، عَنْ أَبِي مُجَاهِدٍ ، حَدَّثَنَا أَبُو مُدِلَّةَ ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ، يَقُولُ : قُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ، الْجَنَّةُ مَا بِنَاؤُهَا ؟ قَالَ : لَبِنَةٌ مِنْ ذَهَبٍ وَلَبِنَةٌ مِنْ فِضَّةٍ ، مِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ ، وَحَصْبَاؤُهَا الْيَاقُوتُ وَاللُّؤْلُؤُ ، وَتُرَابُهَا الزَّعْفَرَانُ ، مَنْ يَدْخُلْهَا يَخْلُدْ فِيهَا يَنْعَمُ لَا يَبْؤُسُ ، لَا يَفْنَى شَبَابُهُمْ ، وَلَا تَبْلَى ثِيَابُهُمْ
 
அங்கே மாட மாளிகைகள், தங்கத்திலான வீடுகள், வெள்ளி செங்கல்களால் செய்யப்பட்ட வீடுகள், உங்களுடைய இல்லங்களை சுற்றி ஓடக்கூடிய ஆறுகள்சூரா தஹ்ர், சூரா வாகிஆ, சூரா முதஃப்ஃபிஃபீன்  படித்துப் பாருங்கள் சொர்க்க இன்பங்கள் மீது ஆசை கொள்ளுங்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா  ரழியல்லாஹு அன்ஹு , நூல் : தாரமி, எண் : 2785 குறிப்பு 1
 
خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
 
அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும். (அல்குர்ஆன் 83 : 26)
 
அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். சொர்க்கத்தின் மீது ஆசை வையுங்கள் என்று அல்லாஹு கூறுகிறான். அடுத்த இரண்டாவது கூட்டம் யார் என்றால்,
 
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ ,يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ ,وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
 
இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள். (அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள். ,இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை. (அல்குர்ஆன் 82 : 14, 15, 16)
 
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். பாவிகள் நரகத்திற்கு தான் செல்வார்கள். எப்படி பிரித்தான் பாருங்கள் அல்லாஹுத்தஆலா இரண்டு கூட்டங்களாக பிரித்தான். மூன்றாவது ஒரு கூட்டம் இல்லை. 
 
நல்லவர்கள், பாவிகள் அந்த பாவிகள் எங்கே செல்வார்கள் நரக நெருப்பிலே செல்வார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள் மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
 
يَامَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ ,فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ,يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِنْ نَارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ ,فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
 
ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் ஓரங்களில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது., ஆக, (ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?, நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். ஆக, நீங்கள் (அவனை) பழிவாங்க முடியாது. (நீங்கள் உங்களை பாதுகாக்கவும் முடியாது.), ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 55 : 33, 35, 36)
 
மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
 
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
 
பாவிகளை அல்லாஹுத்தஆலா அடையாளம் பிரித்து விடுவான் இங்கே கலந்திருக்கலாம்  23:06 ஒரே வீட்டிலே தொழக்கூடியவனும் இருக்கலாம். தொழாதவனும் இருக்கலாம். தொழக்கூடிய கணவன், தொழுகை இல்லாத மனைவி, தொழக்கூடிய மனைவி, தொழுகை இல்லாத கணவன் ஏனென்றால் இந்த விஷயத்தை அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 
 
இன்றைய சமுதாயத்தில் இஸ்லாத்தை இரண்டுவாயாக பிரித்துள்ளார்கள். ஒரு இஸ்லாம் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிக் கொடுத்த இஸ்லாம். எந்த இஸ்லாமை சஹாபாக்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் போதித்தார்களோ, எந்த இஸ்லாத்தை நபியவர்களிடமிருந்து சஹாபாக்கள் கற்றுக் கொண்டார்களோ, அந்த பரிசுத்தமான இஸ்லாம்
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாமில் முழுமையாக நுழையுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான். (அல்குர்ஆன் 2 : 208)
 
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
 
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
 
நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் (‘இதுதான் உண்மையான வேதம்’ என்ற) அறிவு அவர்களுக்கு வந்த பின்னரே தவிர (இதில்) மாறுபடவில்லை. ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரை) விசாரிப்பதில் மிக விரைவானவன். (அல்குர்ஆன் 3 : 19)
 
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹுவிடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். எந்த இஸ்லாத்தின் பக்கம் குர்ஆன் அழைக்கிறதோ, எந்த இஸ்லாத்தின் பக்கம் அல்லாஹுவின் தூதருடைய சுன்னா அழைக்கிறதோ, எந்த இஸ்லாமை கொண்டு சஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். 
 
அவர்களும் அல்லாஹுவை பொருந்திக் கொண்டார்கள் என்ற சான்றிதழை வாங்கினார்களோ அந்த இஸ்லாம். இது ஒரு இஸ்லாம். இன்னொரு இஸ்லாம், நாமே உருவாக்கிய இஸ்லாம்.  அது என்னவென்றால், உறங்கிக் கொண்டிருந்தால் அதான் சொல்லும் வேளையில் எழுந்து உட்கார்ந்து இருத்தல் தலையில் ஒரு துண்டை வைத்துக் கொள்ளுதல் அவ்வளவுதான் முடித்துக் கொள்ளுதல் நபியவர்கள் கூறிய இஸ்லாம் என்ன அதான் கூறினால் பள்ளியை நோக்கி செல்ல வேண்டும்.
 
இப்பொழுது இருக்கக்கூடிய இஸ்லாம் என்ன எழுந்து உட்காருதல். பள்ளிக்கு செல்வதில்லை, ஐவேளை தொழுகைகளை தொழுவதில்லை. ஆனால், ஜும்மா தொழுகையை மட்டும் தொழுவார்கள். இப்படி ஒரு இஸ்லாத்தை நபியவர்கள் கற்றுக் கொடுக்கவில்லையே? 
 
இப்படி ஒரு மார்க்கத்தை நபியவர்கள் கற்றுக் கொடுக்கவில்லையே? இதுதான் இரண்டு இஸ்லாம் ஒன்று அல்லாஹுவும் அல்லாஹ்வுடைய தூதரும் கற்றுக் கொடுத்த இஸ்லாம். மக்கள் உருவாக்கி வைத்த இஸ்லாம் சடங்குகளோடு சம்பிரதாயங்களோடு அநாச்சாரங்களோடு, 
 
அன்பானவர்களே! இது என்ன உங்களுடைய வீட்டுச் சொத்தா இந்த மார்க்கம்? இந்த மார்க்கம் அல்லாஹ்வுடைய சொத்து இது அல்லாஹ்வுடைய மார்க்கம் அல்லாஹ்வுடைய தீன் அல்லாஹ் அந்த தீனை கற்றுக் கொடுப்பதற்காக நபியை வானத்திலிருந்து வஹீ கொண்டு அனுப்பினான். 
 
2697 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ» رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ المَخْرَمِيُّ، وَعَبْدُ الوَاحِدِ بْنُ أَبِي عَوْنٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ
 
நம்முடைய இந்த கட்டளையிலே எங்களுடைய இந்த உரிமையிலே அதிலே யார் அதில் இல்லாததை நாங்கள் கட்டளை இடாததை உள்ளே கொண்டு வருவாரோ அது மறுக்கப்பட வேண்டியது.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2697
 
இன்றைய சமுதாயத்தில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னத்துகள் அந்நியமாக பார்க்கப்படுகின்றது. பிதஹத்துகள், அனாச்சாரங்கள் நேசிக்கப்படுகின்றன. அன்பானவர்களே! எந்த இஸ்லாமை அல்லாஹுவும், அல்லாஹ்வுடைய தூதரும் போதித்தார்களோ அதிலே தான் வெற்றி இருக்கிறது,
 
அல்லாஹ் கூறுகிறான்: அல்லா பிரித்தானே இரண்டு கூட்டம் யார் அவர்கள் நல்லவர்கள் பாவிகள் அல்லாஹ் கூறுகிறான்: எங்கே தப்பிப்பார்கள்
 
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ  ,وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
 
(அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள். ,இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை. (அல்குர்ஆன் 82 :15,16)
 
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். கூலிகொடுக்கப்படக்கூடிய நாள் என்றால் என்ன? நன்றாக கவனியுங்கள் இந்த يَوْمَ الدِّيْنِ‏  என்ற வார்த்தை அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மானிர்ஹிம் மாலிகி யௌமித்தீன் ஓதுகிறோமா இல்லையா ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஓதுகிறோம். 
 
அதை என்றாவது சிந்தித்துள்ளோமா சதாரணமா அது ஒருவர் வேலை பார்க்கும் இடத்தில் அவர் முழுமையாக கண்காணிக்கப்படுகிறார் அவருடைய வேலை எல்லாம் அங்கே குறிப்பெடுக்கப்படுகிறது என்ன வேலை செய்தார் எவ்வளவு வீணடித்தார் இந்த மனிதரை அந்த நிறுவனத்துடைய உரிமையாளர் தனியாக அழைத்து உன்னை நான் விசாரிக்க போகிறேன்.
 
உன்னுடைய ஒவ்வொரு செயலை குறித்து நான் உன்னிடத்தில் கேள்வி கேட்பேன் என்று அந்த உரிமையாளர் கூறினால் அந்தப் பணியாளருக்கு எவ்வளவு பயம் நடுக்கம் திடுக்கம் எவ்வளவு அச்சம் இருக்கும் யோசித்து பாருங்கள் அதுவும் இந்த அற்பமான உலகத்திலே அன்பான அன்பானவர்களே!
 
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
 
இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (அல்குர்ஆன் 82 : 17)
 
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
 
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ
 
இன்னும், (அவர்கள் செய்த) சிறியவை, பெரியவை (என) எல்லா (செயல்களு)ம் (அதில்) எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.) (அல்குர்ஆன் 54 : 53)
 
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
 
وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا
 
இன்னும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய செயல்களை (நாம் பதிவு செய்கின்ற ஓர் பதிவேட்டை) அவனுடைய கழுத்தில் இணைத்தோம். இன்னும், அவனுக்கு மறுமை நாளில் (அதை) ஒரு புத்தகமாக வெளிப்படுத்துவோம். அதை அவன் (தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக சந்திப்பான். (அல்குர்ஆன் 17 : 13)
 
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
 
اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
 
“உன் (அமல்கள் எழுதப்பட்ட) புத்தகத்தை நீ படி! இன்று உன்னை விசாரிக்க நீயே போதுமானவன். (அல்குர்ஆன் 17 : 14)
 
நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப்  (என்று அப்போது நாம் கூறுவோம்). முடியாமல் எழுதப்பட்ட இந்த பதிவேட்டை நீயே படித்துப் பார் உன்னையே நீ விசாரித்துக்கொள் நீ சொர்க்கவாசியா நீ சொர்க்கம் செல்வதற்கு தகுதியானவனா நீ நரகத்துக்கு தகுதியானவனா என்று நீயே முடிவு செய் மனிதன் அழுவான் பாருங்கள்.
 
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَاوَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
 
இன்னும், (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (மக்கள் முன்) வைக்கப்படும். ஆக, குற்றவாளிகளோ அ(ந்த புத்தகத்)தில் உள்ளவற்றினால் பயந்தவர்களாக இருப்பதைப் பார்ப்பீர். இன்னும், எங்கள் நாசமே! இந்த புத்தகத்திற்கு என்ன? (குற்றங்களில்) சிறியதையும் பெரியதையும் அவற்றைக் கணக்கிட்டே தவிர (-அவற்றைப் பதிவு செய்து வைக்காமல்) அது விடவில்லையே! எனக் கூறுவார்கள். அவர்கள் செய்ததை (எல்லாம் அவர்கள் தங்கள் கண்களுக்கு) முன்னால் காண்பார்கள். இன்னும், உம் இறைவன் (யார்) ஒருவருக்கும் (அவரின் நன்மையை குறைத்தோ, பாவத்தை கூட்டியோ) தீங்கிழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18 : 49)
 
இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே! என்று கூறுவார்கள்; 
 
இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால், உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். விசாரணை நாளில் கண்ணுக்கு முன்  அமல்கள் அனைத்தும் அங்கே கொண்டு வரப்படும். சில மனிதர்கள் அங்கேயும் பொய் சொல்ல முயற்சி செய்வார்கள். அல்லாஹு கூறுவான் பொய்யனே!
 
الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
 
இன்று நாம் அவர்களின் வாய்கள் மீது முத்திரையிடுவோம். இன்னும், அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும். (அல்குர்ஆன் 36 : 65)
 
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். அல்லாஹு கூறுகிறான்:
 
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ,ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ,يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
 
இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது?, பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?, (அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்! (அல்குர்ஆன் 82 : 17, 18, 19)
 
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹுவுக்கே.
 
அன்பானவர்களே! இப்ராஹீமே அழுது கொண்டிருக்கக் கூடிய அந்த நாளில், நூஹ் நபி அவர்கள் முதல் தூதர் அவர்கள் அழுது கொண்டிருக்கக் கூடிய அந்த நாளில், அல்லாஹு யாரை தன்னுடைய கரத்தால் மனித குலத்திற்கெல்லாம் தந்தையாக படைத்தானோ! அந்த ஆதமே அழுது கொண்டிருக்கக் கூடிய அந்த நாளில், யாருக்கு அல்லாஹ் தௌராத்தை கொடுத்து தன்னுடைய விசேஷமான நண்பராக தன்னுடைய பேச்சுக்கு தேர்ந்தெடுத்தானோ அந்த மூசாவே அங்கே அழுது கொண்டிருக்கும் பொழுது, யாரை அல்லாஹு வானத்திற்கு உயர்த்தினானோ அந்த ஈசாவே அங்கு அழுது கொண்டிருக்கும் பொழுது, இந்த அவுலியாக்கள் எங்கிருந்து வருவார்கள் என்று யோசித்துப் பாருங்கள். 
 
அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை விட்டு விட்டார்களே அல்லாஹ்வின் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய அளவிற்கு அப்துல்காதர் ஜெய்லானிக்கு அதிகாரம் இருக்கிறது என்று நம்பக்கூடிய அளவிற்கு குப்ரினுடைய உச்சத்திற்கு சென்றிருக்கிறார்களே! யோசித்துப் பாருங்கள். 
 
நமக்கு கொடுக்கப்பட்ட கடமை என்ன? நமக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன? நமக்கு கொடுக்கப்பட்ட குறிக்கோள் என்ன? மனிதனே!  இந்த உலகில் நீ வந்திருக்கிறாய். நீ மறுமைக்கான அமல்களை செய்து கொண்டு வா. உன்னுடைய மறுமையை இங்கே உருவாக்கிக் கொண்டு வா. அது போன்று உலக மக்களை எல்லாம் மறுமையின்பக்கம் அழை, அல்லாஹ்வின் பக்கம் அழை,  சொர்க்கத்தில் பக்கம் அழை.
 
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
 
இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான். (அல்குர்ஆன் 2 : 221)
 
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;
 
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்;
 
(நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
 
وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
 
ஈடேற்றத்தின் இல்ல(மாகிய சொர்க்க)த்தின் பக்கம் அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். இன்னும் அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான். (அல்குர்ஆன் 10 : 25)
 
மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான். சொர்க்கத்தின் பக்கம் அல்லாஹ் அழைக்கின்றான். சொர்க்கத்திற்காகத்தான் நாம் படைக்கப்பட்டோம். சொர்க்கத்திற்காக அமல் செய்வதும், சொர்க்கத்தின் பக்கம் உலக மக்களை எல்லாம் அழைப்பது நமக்கு கொடுக்கப்பட்ட கடமை.
 
நபியவர்கள் மரணிக்கும் வேளையில் தனது மனைவிமார்களுக்கு எதை விட்டு சென்றார்கள். இரண்டே இரண்டு துணிதான். ஒரு அடிமை இருந்தார்கள். அவரை உரிமை விட்டு விட்டார்கள். இருந்த செல்வத்தை சதக்கா செய்துவிட்டார். குடிசை வீடு நினைத்து பார்க்க வேண்டாமா? நபி அவர்களுடைய வாழ்க்கையை இன்றைய சமுதாயத்தில்.
 
என் அன்பு சகோதரிகளே! அல்லாஹ்விற்கு பயந்து கூறுங்கள் நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் தனியாக கடை வைக்கும் அளவிற்கு ஆடை கொடுத்துள்ளான். ஒரு வருடம் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு உணவு கொடுத்துள்ளானா இல்லையா? ஆனாலும் நன்றி கெட்டவர்களாக இருக்கின்றோமே பத்தாது பத்தாது என்ற அந்த நன்றி கெட்ட தனத்துடைய அந்த சைத்தான் நம் மீது சிந்தனைகளே ஆக்கிரமித்திருக்கிறானே.
 
3798 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ: مَا مَعَنَا إِلَّا المَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا»، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ: أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي، فَقَالَ: هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً، فَهَيَّأَتْ طَعَامَهَا، وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ، أَوْ عَجِبَ، مِنْ فَعَالِكُمَا» فَأَنْزَلَ اللَّهُ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ المُفْلِحُونَ} [الحشر: 9]
 
புஹாரி உடைய அறிவிப்பு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் இடத்திலே விருந்தாளி வருகின்றார்கள். இரவு நேரம் இஷா நேரம் அவரும் பட்டினி ரசூலுல்லாவும் பட்டினி இருக்கின்ற சஹாபாக்களும் பட்டினி. நாம் பட்டினி இருக்கலாம் விருந்தாளி பட்டினி இருக்கலாமா?  என்று எண்ணி நபியவர்கள்,
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 3798  குறிப்பு 2
 
ஆயிஷா ரலியல்லாஹு வீட்டுக்கு செல்கின்றார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் ஆயிஷா ஏதாவது சாப்பாடு இருக்கின்றதா? அல்லாஹ்வின் தூதரே! உங்களின் சத்திய மார்க்கத்தை கொடுத்து அனுப்பிய இறைவன் மீது சத்தியமாக! தண்ணீரை தவிர வீட்டில் எதுவும் இல்லை. ஹப்சாவிடம் அனுப்புகிறார்கள் அவங்களும் அதே பதிலை சொல்கிறார்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 3798 
 
ஒன்பது மனைவிமார்கள் 9 பேரும் இதே பதிலே சொல்கிறார்கள். இரவில் அல்லாஹூவுடைய  தூதர் வீட்டிலே ரசூலுல்லாஹ் மனைவிமார்களுடைய வீட்டிலே தண்ணீர் தவிர வேறு எந்த சாப்பாடு இல்லை.
 
இன்றைய தினம் நமக்கு ஒரு ஒரு நேரத்திலும் பல வகையான உணவை சாப்பிடுகின்றோம். உணவை சாப்பிட்டு விட்டு மிச்சம் வைப்பது நாம் சாப்பிட்டதை விட அதிகம் இல்லையா? அல்ஹம்துலில்லாஹ் என்று மனதார சொல்கின்றோமா? நாவால் சொல்கின்றவர்கள் இருக்கின்றார்கள். மனதார சொல்கின்றவர்கள் இருக்கின்றார்களா?
 
அல்லாஹுவை இறைவன் என்று விளங்கி புரிந்து அழுது, யா அல்லாஹ்! இந்த உணவை நீ கொடுத்தாயே எத்தனையோ பேர் பசியால் பட்டினியால் சிரமப்பட்டு, சிக்கலிலே, துன்பத்திலே, இருக்கும் பொழுது எனக்கு உணவளித்தாயே என்று அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தகூடிய அந்த உள்ளங்கள் எங்கே? நம்முடைய அமல்கள் தான் நம்முடைய  மறுமைக்கு வரும். அந்த அமல்கள்காகத்தான் நம்முடைய இந்த உலக வாழ்க்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 
அகபா ஒப்பந்தம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையை, அந்தப் பாதை அப்படியே முற்றிலுமாக மாற்றிய ஒப்பந்தம். வாழ்வா சாவா இனி இந்த இஸ்லாம் உயிர் பெற்று எழுமா? இல்லை இதோடு இஸ்லாம் நின்று விடுமா என்று ஒரு பெரிய போர். ஒரு பெரிய சவால். அப்பொழுது தான் அன்சாரிகள் வந்தார்கள். 
 
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் எல்லாம் எங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்கின்றோம். மதினாவில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். மக்காவில் நீங்கள் அடி வாங்கிக் கொண்டு பசியும், பட்டினியுடனும், இந்த காபிர்களின் ஏச்சுகளுடன் நீங்கள் ஏன் இப்படி வாழ வேண்டும்? அல்லாஹ் உடைய தூதரே நாங்கள் வந்திருக்கிறோம். எங்களோடு கிளம்பி வந்து விடுங்கள் மதினாவிற்கு. நாங்கள் உங்களை பாதுகாப்போம். 
 
உலகமே எங்களை எதிர்த்தாலும் சரி உங்களை நாங்கள் விட மாட்டோம். இந்த தீனை நாங்கள் பாதுகாப்போம்.  அல்லாஹ் உடைய தீனுக்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக நாம் என்ன செய்தோம்? இந்த தீனுக்காக நாம் என்ன செய்தோம்? அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
 
மற்றவர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். மதினாவாசிகளே! கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பாருங்கள்.நீங்கள் இவரை அழைத்து சென்றால், பெரிய பிரச்சனை அரபுகள் எல்லாம் உங்களை அழிக்க வந்து விடுவார்கள். உங்களை நாசமாக்க வந்து விடுவார்கள். அதற்குப்பிறகு பயந்து  நீங்கள் விட்டு இவரை விட்டு சென்றால், 
 
உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனை பெரிய வேதனையாகிவிடும். ஒரு நபியை நம்பிக்கை கொடுத்து வாக்கு கொடுத்துஅழைத்து சென்று அதற்குப் பிறகு அந்த வாக்கை முறித்து விட்டால் அது பெரிய சோதனையாகிவிடும். அதனால் நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.
 
அந்த மதினா வாசிகள் எல்லாம் ரசூல்லாவிடம் கேட்கின்றார்கள்.  நபியே நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்கள் மனைவிகள் விதவை ஆகிறார். எங்கள் பிள்ளைகள் அனாதையாகின்றனர். எல்லாம் சென்ற பின் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என
 
அல்லாஹுவின் தூதரிடம்  கேட்கின்றார்கள். இதனால எங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்று கேட்கின்றார்கள்.நபி அவர்கள் ஒரே பதில் சொன்னார்கள் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும். அந்த 83 பேரும் அப்படியே பாய்ந்து சென்று பையத்து கொடுக்கின்றார்கள் பாருங்கள், ரசூலுல்லாஹ்விற்கு. அதுதான் நமக்கு உரியது.
 
ஆகவே அன்பானவர்களே! அந்த சொர்க்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றோம். அந்த சொர்க்கத்திற்காக நாம் அமல்கள் செய்ய வேண்டும்.அந்த சொர்க்கத்தின் பக்கம் உலக மக்களை அழைக்க வேண்டும். 
 
அதற்கு தவ்ஹீத் உடைய அழைப்பு அல்லாஹ்வுடைய தீனை நாம் நம்முடைய வாழ்க்கையில் பரிபூரணமாக்கி, பிற மக்களுக்கும் அந்த பரிபூரணமான தீனின் பக்கம் அழைக்க வேண்டும். அந்த கடமையை நாம் புரிவோமாக. அல்லாஹ் சுப்ஹானஹுவதஆலா உங்களுக்கும்,எனக்கும் நேரான மார்க்கத்தை முறையாக பின்பற்றி வெற்றியடைய கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்பு 1)
 
2785 أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ ، عَنْ سَعْدَانَ الْجُهَنِيِّ ، عَنْ أَبِي مُجَاهِدٍ ، حَدَّثَنَا أَبُو مُدِلَّةَ ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ، يَقُولُ : قُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ، الْجَنَّةُ مَا بِنَاؤُهَا ؟ قَالَ : لَبِنَةٌ مِنْ ذَهَبٍ وَلَبِنَةٌ مِنْ فِضَّةٍ ، مِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ ، وَحَصْبَاؤُهَا الْيَاقُوتُ وَاللُّؤْلُؤُ ، وَتُرَابُهَا الزَّعْفَرَانُ ، مَنْ يَدْخُلْهَا يَخْلُدْ فِيهَا يَنْعَمُ لَا يَبْؤُسُ ، لَا يَفْنَى شَبَابُهُمْ ، وَلَا تَبْلَى ثِيَابُهُمْ
 
குறிப்பு 2)
 
3798 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ: مَا مَعَنَا إِلَّا المَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا»، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ: أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي، فَقَالَ: هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً، فَهَيَّأَتْ طَعَامَهَا، وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ، أَوْ عَجِبَ، مِنْ فَعَالِكُمَا» فَأَنْزَلَ اللَّهُ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ المُفْلِحُونَ} [الحشر: 9]
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/