HOME      Lecture      முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் -அகிலம் போற்றும் இறைத்தூதர் | Tamil Bayan - 722   
 

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் -அகிலம் போற்றும் இறைத்தூதர் | Tamil Bayan - 722

           

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் -அகிலம் போற்றும் இறைத்தூதர் | Tamil Bayan - 722


முஹம்மத் ஸல் அகிலம் போற்றும் இறைத்தூதர்
 
 
தலைப்பு : முஹம்மத் ஸல் அகிலம் போற்றும் இறைத்தூதர்
 
வரிசை : 722
 
இடம் : அஹ்லே ஹதீஸ் ரஹ்மானியா, ஆலந்தூர் 
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 19-06-2022 | 19-11-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! சகோதரர்களே! சகோதரிகளே! நேற்றிலிருந்து தொடர்ந்து அல்லாஹ்வுடைய மார்க்கத் துடைய கல்வியை, நல்ல பல செய்திகளை குர்ஆன், ஹதீஸ் உடைய வெளிச்சத்திலே தொடர்ந்து அறிஞர்களின் வாயிலாக கேட்டு வருகிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! நாம் கேட்பது நமது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
 
الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ
 
அவர்கள் உண்மையான பேச்சுகளை செவியுறுவார்கள். பின்னர், அவற்றில் மிக அழகானதை பின்பற்றுவார்கள். அவர்கள், எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டினான். இன்னும் அவர்கள்தான் அறிவாளிகள். (அல்குர்ஆன் 39 : 18)
 
அல்லாஹுத்தஆலா சொல்கிறான். நம்பிக்கையாளர்கள், மூஃமின்கள் அவர்களுடைய கல்வி ஞானத்தை, அவர்களுடைய நற்குணத்தை சொல்லும் போது அவர்கள் இந்த குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பார்கள். அதில் உள்ள அழகிய சட்டங்களை அவர்கள் பின்பற்றுவார்கள்.
 
ஆகவே, அன்பு சகோதரர்களே! இத்திபா கீழ்ப்படிதலும், கட்டுப்படுதலும், பின்பற்றுதலும் இல்லாமல் இந்த மார்க்கத்தை வெறும் கேட்பதற்கு மட்டும் வைத்துக் கொள்வோமையானால், அதைக் கொண்டு எந்த பலனும் இல்லை.
 
அல்லாஹுத் தஆலா என்னையும், உங்களையும் அல்லாஹ்வின் உபதேசங்களை கேட்கக் கூடியவர்களாகவும், அதன்படி செயல்படக் கூடியவர் களாகவும், ஆக்கி அருள்வானாக! நம்முடைய இந்த அமர் உடைய தலைப்பு உங்களுக்‌ கெல்லாம் தெரியும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். யாரைப் பற்றி பேசுவதால் அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறானோ,
 
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
 
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! இன்னும் ஸலாம் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33 : 56)
 
நிச்சயமாக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய வானவர்களும் நபியின் மீது வாழ்த்து சொல் கிறார்கள். நபியை உயர்த்தி சிறப்பித்து பேசுகிறார்கள். மூமின்களே நீங்களும் அந்த நபிக்கு வாழ்த்து சொல்லுங்கள். அந்த நபியை உயர்வாக பேசுங்கள். அவருக்கு சலாம் சொல்லுங்கள். இப்படி ஒரு கட்டளை இந்த குர்ஆனிலே தான் இருக்கிறது. மற்ற கட்டளைகள் எல்லாம் மூமின்களே நீங்கள் இதை செய்யுங்கள். இதை செய்யுங்கள்.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
 
நம்பிக்கையாளர்களே! (தொழுகையில்) குனியுங்கள்! இன்னும், சிரம்பணியுங்கள்! இன்னும், உங்கள் இறைவனை வணங்குங்கள்! இன்னும், நன்மை செய்யுங்கள்! நீங்கள் (அவற்றின் மூலம்) வெற்றி அடைவதற்காக. (அல்குர்ஆன் 22 : 77)
 
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
 
இன்னும், யார் பொறுமையாக இருப்பாரோ, மன்னிப்பாரோ நிச்சயமாக அ(வரின் இந்த செயலான)து மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 2 : 43)
 
பல கட்டளைகள் இருக்கும் போது எந்த ஒரு கட்டளையை அல்லாஹுத்தஆலா நம் மீது கடமை யாக்கும் போது, முஃமின்களே! நானும் எனது நபியை வாழ்த்துகிறேன். என்னுடைய மலக்குகளும் வாழ்த்துகிறார்கள். ஆகவே, அந்த நபியை நீங்களும் வாழ்த்துங்கள். அந்த நபிக்காக என்னிடத்திலே நீங்கள் துஆ கேளுங்கள். அவர்கள் மீது நீங்கள் சலாம் சொல்லுங்கள். என்று ஒரே ஒரு கட்டளை இந்த கட்டளைதான்.
 
சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா மிகப்பரிசுத்த மானவன், மிகப்பெரியவன், அந்த ரப்புல் ஆலமீன் அந்த அர்ஷுடைய அதிபதிக்கு இந்த உலகத்திலேயே அவன் படைத்த படைப்புகளிலே வானத்திற்கு மேலும் சரி வானத்திற்கு கீழும் சரி அவன் படைத்த படைப்புகளிலேயே எல்லாப் படைப்புகளிலும் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள், சொர்க்கத் -தில் உள்ள படைப்புகள், சொர்க்கத்திற்கு வெளியே உள்ள படைப்புகள் எல்லா படைப்புகளிலும் அல்லாஹ்விற்கு மிக விருப்ப மானவர். அல்லாஹ்விடத்திலே தகுதியால் கண்ணியத்தால் மிகச் சிறந்தவர். எந்த நிபந்தனையும் இல்லாமல் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மட்டுமே. அவர் மனித இனத்தை சேர்ந்தவராக இருக் கலாம். 
 
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
 
(நபியே) கூறுவீராக: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (-நீங்கள் வணங்குவதற்கு தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை பயப்படுவாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! இன்னும், தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!”. (அல்குர்ஆன் 18 : 110)
 
நான் ஒரு மனிதன் தான், நான் ஒரு மனிதன் தான். டிக்ளர் செய்தார்கள். நான் ஒரு உங்களைப் போன்ற ஒரு மனிதர் தான், சாப்பிட்டார்கள், குடித்தார்கள், திருமணம் முடித்தார்கள், பிறந்தார்கள் இறந்தார்கள். ஆனால், அல்லாஹ்விடத்திலே ரப்பிடத்திலே, இந்த பிரபஞ்சத்தின் இறைவனிடத்திலே அவர்களை விட சிறந்தவர் யாருமில்லை. அவர்களை சிறப்பிப்பதற்காகவே அல்லாஹுத்தஆலா இறுதியாக அனுப்பினான்.
 
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
 
முஹம்மது உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 40)
 
அவர் உங்களில் எந்த ஆடவருக்கும் தந்தை அல்ல என்றாலும், அவர் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார். நபிமார்களுக் கெல்லாம் முத்திரையாக இறுதியானவராக இருக்கிறார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்தப் பெயரை சொல்லும் போது அல்குர்ஆனிலே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள்.
 
அல்லாஹுத்தஆலா படர்க்கையாகத் தான் சொல்லுவான். ரசூலுல் லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயரை நேரடியாக முஹம்மத் அஹமத் என்று சொல்வதாக இருந்தால் அல்லாஹுத்தஆலா எப்படி சொல்வான். அவர்களை மூன்றாமவராக ஆக்கி படர்க்கை யாக ஆக்கி முஹம்மது ரசூலுல் லாஹ் முஹம்மத் அல்லாஹ் வுடைய தூதர்
 
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ
 
முஹம்மது ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் (வந்து) சென்றுவிட்டார்கள். அவர் இறந்தால்; அல்லது, கொல்லப்பட்டால் நீங்கள் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான் (அல்குர்ஆன் 3 : 144)
 
அவர் இறந்து விட்டாரோ, அவர் கொல்லப்பட்டாலோ நீங்கள் மார்க்கத்தை விட்டு விலகி விடுவீர்களா!
 
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
 
முஹம்மது (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். (அல்குர்ஆன் 48 : 29)
 
இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்னும், இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்). நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த அவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்தான். (அல்குர்ஆன் 48 : 29)
 
முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதர் அவரோடு இருப்பவர்கள் அல்லாஹ்வை நிராகரிக்க கூடிய காஃபிர்கள் இடத்திலே, கடுமையாக இருப்பார்கள். இப்படியாக முஹம்மத், அஹமத் என்ற பெயர் வருகிறது அங்கே அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா கண்ணியத்தின் அடிப்படையிலே, நாம் அவர்களோடு எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு கற்றுக் கொடுக்கும் விதமாக அவற்றை அவரை மூன்றாம் அவராக வைத்து, படர்க்கையிலே வைத்து அப்படித்தான் அல்லா ஹுத்தஆலா சொல்லுவான்.
 
நபியை முன்னோக்கி நபியிடத்தில் நேரடியாக பேசவேண்டும் என்றால் ரப்புல் ஆலமீன் அந்த நபியின் மீது உண்டான கண்ணியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த நபியை ரசூலாக தேர்ந்தெடுத்த, நபியாக தேர்ந்தெடுத்த, ரசூலுல்லாஹ்வை நபியாக ரசூலாக அனுப்பிய அல்லாஹ்விடத்திலே பிரபஞ் சத்தைப் படைத்த அந்த ரப்புல் ஆலமின் இடத்திலே அந்த நபி யின் உடைய கண்ணியம் எந்த அளவு உயர்ந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாக பெயரைக் கொண்டு அழைக்காமல்,  
 
يَاأَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
நபியே! உமது மனைவிகளின் பொருத்தத்தை நாடியவராக, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் (உமக்கு) விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 66 : 1)
 
يَاأَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا آمَنَّا بِأَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوبُهُمْ وَمِنَ الَّذِينَ هَادُوا سَمَّاعُونَ لِلْكَذِبِ سَمَّاعُونَ لِقَوْمٍ آخَرِينَ لَمْ يَأْتُوكَ يُحَرِّفُونَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهِ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ وَإِنْ لَمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوا وَمَنْ يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَنْ تَمْلِكَ لَهُ مِنَ اللَّهِ شَيْئًا أُولَئِكَ الَّذِينَ لَمْ يُرِدِ اللَّهُ أَنْ يُطَهِّرَ قُلُوبَهُمْ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ,يَاأَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ ,يَاأَيُّهَا الْمُزَّمِّلُ , يَاأَيُّهَا الْمُدَّثِّرُ 
 
தூதரே! எவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்களுடைய வாய்களால் கூறி, அவர்களுடைய உள்ளங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களிலிருந்தும்; இன்னும், யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில் விரைந்து செல்பவர்கள் உமக்குக் கவலையூட்டவேண்டாம். அவர்கள் பொய்யிற்கே அதிகம் செவி சாய்க்கிறார்கள். (இதுவரை) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்கே அதிகம் செவி சாய்க்கிறார்கள்.
 
(பொய்யையும் பிற மக்களின் ஆதாரமற்ற பேச்சுகளையும் அவர்கள் நம்புகிறார்கள். இன்னும், இறை)வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) மாற்றுகிறார்கள். “உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இது கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்னும், உங்களுக்கு அது கொடுக்கப்படவில்லையெனில் (விலகி) எச்சரிக்கையாக இருங்கள்’’ என்றும் கூறுகிறார்கள். 
 
அல்லாஹ் எவரை சோதிக்க நாடினானோ அவருக்கு அல்லாஹ்விடம் அறவே (நன்மை) ஏதும் (செய்ய) நீர் உரிமை பெறமாட்டீர். அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய உள்ளங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்லை. இன்னும், அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு; இன்னும், அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு., 
 
தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை நீர் எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்., போர்வை போர்த்தியவரே!, (அல்குர்ஆன் 5 : 41, 67, 73 : 1, 74 : 1)
 
இப்படித்தான் அல்லாஹுத் தஆலா அவர்களுடைய அந்த புனைப்பெயரைக் கொண்டு அவர்களுடைய தகுதியைக் கொண்டு அல்லாஹுத்தஆலா அழைக்கிறான். அவர்களை புகழ்வதற்காகவே பல வசனங்களை அல்லாஹ் இறக்கி இருக் கிறான். குர்ஆன் யாருடைய கலாம்? அல்லாஹ்வுடைய கலாம். அல்லாஹ் தன்னை புகழ்வதற்காக, தன்னை தன்அடியார்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக இறக்கினான் குர்ஆனை
 
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ,الرَّحْمَنِ الرَّحِيمِ ,مَالِكِ يَوْمِ الدِّينِ , الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا , تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا
 
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! (அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!, தன் அடியார் (முஹம்மது நபி) மீது வேதத்தை இறக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரியன. 
 
இன்னும், அ(ந்த வேதத்)தில் அவன் ஒரு குறையையும் ஆக்கவில்லை., தனது அடியார் மீது - அவர் அகிலத்தார்களை எச்சரிப்பவராக இருப்பதற்காக - பிரித்தறிவிக்கும் வேதத்தை இறக்கிய (இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். (அல்குர்ஆன் 1 : 2, 3, 4, 18 : 1, 25 : 1)
 
இப்படியாக குர்ஆனை நீங்கள் எடுத்துப் பாருங்கள். அல்லாஹுத் தஆலா, படைத்த இறைவன் தன்னுடைய கலாமின் மூலமாக தனது அடியார்களுக்கு தான் யார் என்பதை, தனது வல்லமை என்ன தனது உயர்வு என்ன? கண்ணியம் என்ன என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறான்.
 
குர்ஆன் என்பது அல்லாஹ்வை படைத்த அல்லாஹ்வை அவனுடைய அடியார்கள் அறிந்து கொள்வதற்காக உள்ள புத்தகம். அல்லாஹ்வை நாம் அறிந்து கொள்வதனுடைய ஒரு பகுதி தான், ரசூலுல்லாஹ்வை அறிவது. அல்லாஹ்வை நாம் புகழ்வதனுடைய ஒரு பகுதி தான், ரசூலுல்லாஹ்வை புகழ்வது. அல்லாஹ்விற்கு நாம் கீழ்படிந்து நடப்பதனுடைய ஒரு பகுதி தான், அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்ப்படிந்து நடப்பது.
 
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
 
எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் புறக்கணித்தார்களோ அவர்களின் செயல்களை கவனிப்பவராக(வும் அவர்களை விசாரிப்பவராகவும்) நாம் உம்மை அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)
 
ரசூலுக்கு கீழ்படிந்தவர் தான் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தவர்.
 
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا
 
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் தொந்தரவு தருகிறார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும், இழிவுபடுத்துகிற தண்டனையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான். (அல்குர்ஆன் 33 : 57)
 
சில நயவஞ்சகர்கள், சில காஃபிர்கள் ரசூலுல்லாஹ்வை ஏசினார்கள். சில யூதர்கள் ரசூலுல்லாஹ்வை கண்ணியக் குறைவாக பேசினார்கள். அல்லாஹுத்தஆலா அப்போது வசனம் எப்படி இருக்கிறான்? யார் அல்லாஹ்விற்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும் மன வேதனை தருகிறார்களோ, அங்கு மனவேதனை கொடுக்கப் பட்டது யாருக்கு? கண்ணிய குறைவாக பேசப்பட்டது யார் ? இகழப்பட்டது யார்? ஆனால், அல்லாஹுத்தஆலா சொல்வதென்ன? யார் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் இகழ்கிறார்களோ! அவர்களை அல்லாஹுத்தஆலா இந்த உலகத் திலும் சபிப்பான். மறுமையிலும் சபிப்பான்.
 
அன்பு சகோதரர்களே! இந்த ஒரு வசனத்தில் இருந்து ஆரம்பம் செய்வோம். அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா நம்முடைய அந்த நபியின் பெயரை சொல்லும் போதெல்லாம் அவர்களை படர்க்கையாக வைத்து அவ்வளவு கண்ணியத் தோடு சொல்கிறான்.
 
அவர்களிடத் திலே நேரடியாக பேசுவதாக இருந்தால்,அவர்களுக்கு அவன் கொடுத்த தகுதியை, அந்த கண்ணியத்தை, அந்த post, அந்த grade, அந்த உயர்ந்த ஸ்தானத்தை முன் வைத்து அல்லாஹுத்தஆலா அவர்களை அழைத்து அவர்களை புகழ்கிறான். அவனை புகழ் வதற்காக இறக்கப்பட்ட இந்த குர்ஆனிலே, காரணம் நபியை புகழ்வது என்பது அல்லாஹ்வை புகழ்வதைச் சேர்ந்ததாகும். அல்லாஹுத்தஆலா சொல்கிறான். 
 
يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا ,وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُمْ مِنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا
 
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்.) (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது.” (அல்குர்ஆன் 33 : 45, 46, 47)
 
இவ்வளவு ஒரு அன்போடு பாசத் தோடு அல்லாஹ் அழைக்கிறான். நபியே! நாம் உங்களை அனுப்பி இருக்கிறோம். ரசூல் என்பவர்கள் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் அல்ல.
 
وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَنْ نُؤْمِنَ حَتَّى نُؤْتَى مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِنْدَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ
 
இன்னும், அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று எங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற வரை (நாங்கள் அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது (-யாரை நபியாக - தூதராக ஆக்குவது) என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) சிறுமையும் கடுமையான தண்டனையும் வந்தடையும். (அல்குர்ஆன் 6 : 124)
 
தூதுத்துவத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ் அறிந்தவன். இந்த மக்கா உடைய காஃபீர்கள் இருக் கின்றார்களே! அந்த சிலை வணங்கிகள் மிக ஒரு தர்க்கம் செய்வதிலும், விதண்டாவாதம் செய்வதிலும் எல்லை மீறியவர்கள்.
 
وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ
 
இன்னும், “இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள (வசதி படைத்த) ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 43 : 31)
 
மக்காவிலும் தாயிஃப் நகரத்தில் இருக்கக்கூடிய பெரிய செல்வந்தருக்கு பெரிய தலைவருக்கு இந்த குர்ஆன் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? ஒரு எத்தீமுக்கு, ஒரு ஃபக்கீர், ஒரு ஏழைக்கு இந்த குர்ஆன் இறக்கப்பட்டதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இகழ்ந்தார்கள். அல்லாஹுத்தஆலா பதில் கொடுத்தான்.
 
وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَنْ نُؤْمِنَ حَتَّى نُؤْتَى مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِنْدَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ
 
இன்னும், அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று எங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற வரை (நாங்கள் அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது (-யாரை நபியாக - தூதராக ஆக்குவது) என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) சிறுமையும் கடுமையான தண்டனையும் வந்தடையும்.(அல்குர்ஆன் 6 : 124)
 
தன்னுடைய தூதுத்துவத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை, அல்லாஹ் அறிந்தவன். சகோதரர்களை! ரசூல் நபி என்பது மனிதர்களாக தேடிக் கொள்ளக் கூடிய பதவி அல்ல. தகுதி அல்ல. யார் கொடுக்கக்கூடிய பதவி? யார் கொடுக்கக்கூடிய தகுதி? அல்லாஹ் கொடுக்கக் கூடியது. குர்ஆனில் ஒரு வசனம் அல்ல நீங்கள் தேடிப் பாருங்கள்
 
تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ ,إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
 
இவை, அல்லாஹ்வுடைய (கண்ணியமான குர்ஆன்) வசனங்களாகும். இவற்றை உமக்கு உண்மையுடன் நாம் ஓதிக் காண்பிக்கிறோம். இன்னும் நிச்சயமாக நீர் (நாம் அனுப்பிய) தூதர்களில் உள்ளவர்தான். நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 2 : 252, 36 : 3)
 
நபியே! சத்தியமாக நீங்கள் நபிமார்களில் ஒருவர் திரும்பத் திரும்ப அல்லாஹ் சொல்லிக் கொண்டே இருப்பான். 
 
يس ,وَالْقُرْآنِ الْحَكِيمِ ,إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ ,عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
 
யா ஸீன்., ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக!, நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர்., நேரான பாதையின் மீது இருக்கிறீர். (அல்குர்ஆன் 36 : 1, 2, 3, 4)
 
நபியே! அல்லாஹ் வின் மீது சத்தியமாக, ஞானமிக்க வேதத்தின் மீது சத்தியமாக நீங்கள் நேரான பாதையில் இருக்கக்கூடியவர். நான் அனுப்பிய தூதர் நீங்கள்.
 
يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا
 
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். (அல்குர்ஆன் 33 : 45)
 
அல்லாஹுத்தஆலா தன்னுடைய நபியை எப்படி உயர்த்துகிறான். என்னுடைய சாட்சி நீங்கள். எந்த தகுதிக்கு அல்லாஹ் கொண்டு செல்கிறான். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தன்னுடைய தான் ரப்பு தான் இலாஹி என்பதற்கு இந்த படைப்புகளுக்கு மத்தியிலே சாட்சி சொல்லக் கூடியவராக ரசூலுல்லாஹ்வை அனுப்புகிறான்.
 
ஏனென்றால் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு இந்த தவ்ஹீதை சொல்லிக் கொடுக்க வில்லை என்றால் இந்தகுர்ஆனை அவர்கள் போதித்திருக்கவில்லை என்றால், நாம் அல்லாஹ்வை அறிந்திருக்க மாட்டோம்.      
 
نَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا
 
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். (அல்குர்ஆன் 33 : 45)
 
நபியே உங்கள் சாட்சியாளராக, மிகப்பெரிய சாட்சியாளர். அல்லாஹ்விற்கு அடுத்ததாக
 
قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنْذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ
 
(நபியே!) கூறுவீராக: “எந்த பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “(சாட்சியால் மிகப் பெரியவன்) அல்லாஹ்தான்! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன் ஆவான். இன்னும், இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது யாருக்கு சென்றடைகிறதோ அவரையும் நான் எச்சரிப்பதற்காக.
 
நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான் அதற்கு) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவன் எல்லாம் வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே ஓர் இறைவன்தான். (பலர் அல்ல.) இன்னும், நிச்சயமாக நான் நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகியவன் ஆவேன்.” (அல்குர்ஆன் 6 : 19)
 
சாட்சிகளின் மிகப்பெரிய சாட்சி அல்லாஹ்வுடைய சாட்சி.
 
شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
 
நீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: “நிச்சயமாக அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை’’ என்று. இன்னும், வானவர்களும் கல்விமான்களும் இதற்கு சாட்சி கூறுகிறார்கள். மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அல்குர்ஆன் 3 : 18)
 
அல்லாஹ் சாட்சி சொல்கிறான். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று, மலக்குகள் சாட்சி சொல்கிறார்கள், அறிஞர் கள்,இல்ம் உள்ளவர்கள் சாட்சி சொல்கிறார்கள், அன்பானவர் களே!அந்த இல்ம்உள்ளவர்களிலே முதலாவதாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
لَـتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰى‌ قُلْ لَّاۤ اَشْهَدُ‌
 
(அல்குர்ஆன் 6 :19)
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அல்லாஹ் கேட்கச் சொல்கிறான். நபியே! நீங்கள் கேளுங்கள் அல்லாஹ்வுடன் வணங்கப் படுகின்ற வேறு கடவுள்கள் இருக்கின்றார்களா? என்று நீங்கள் சாட்சி சொல்கிறீர்களா நபி நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் நான் அதற்கு சாட்சி சொல்ல மாட்டேன்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வை தனது அடியார்களுக்கு இதற்கு முன்னால் எத்தனை இறைத் தூதர்கள் வந்தார்கள். அந்த இறை தூதர்களை பார்க்கிறோம். அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு அல்லாஹ்வை அழகிய முறையிலே காண்பித்துக் கொடுத்தவர்கள்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹுவை பற்றி அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ, என்ன கண்ணியத்தை அவர்களது உள்ளத்திலே கொண்டு வரவேண்டுமோ, அல்லாஹ்வைப் பற்றிய என்ன ஞானத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமோ, அதை அழகிய முறையிலே அதை கற்றுக் கொடுத்தவர் தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
 
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
 
இதெல்லாம் அல்லாஹ்வுடைய புகழ்ச்சி, அல்லாஹ் புகழ்கிறான், நாம் அப்படியே கடந்து போய்க் கொண்டு இருக்கிறோம். இந்த வசனங்களை எல்லாம் கேட்கும் போது செய்திகள் என்ன சகோதரர்களே! வெறும் செய்திகள் அல்ல. இதெல்லாம் தன்னுடைய நேசரை தன்னுடைய ஹலீலை அல்லாஹுத்தஆலா புகழக்கூடிய வார்த்தைகள்.
 
அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
 
فَإِنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا
 
எப்படி இப்ராஹீமை அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக, நேசராக எடுத்துக் கொண்டானோ, அது போன்று அல்லாஹ் என்னை ஹலீலாக உற்ற நண்பனாக எடுத்துக் கொண்டான். இப்ராஹீம் ஹலீலு ல்லா, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அல்லாஹ்வுடைய ஹலீல்.
 
அறிவிப்பாளர் : ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 5032 குறிப்பு 1
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் புகழ்ந்து அவருடைய நபித்துவ பணிக்கு அல்லாஹுத்தஆலா 100 மார்க் கொடுக்கிறான். அங்கீகரிக்கப்பட்டவர்கள்
 
الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّنَ رَسُوْلًا مِّنْهُمْ
 
(அல்குர்ஆன் 62 : 2)
 
ஒரு பணியாளரை அந்தப் பணிக்கு அமர்த்தியவர் அவர் புகழ்வது, அவர் திருப்தி அடைவது, அவர் அவரைக் கொண்டு சந்தோஷப்படுவது, நான் உன்னை கொண்டு முழுமையாக சந்தோஷப்பட்டேன். திருப்தி அடைந்தேன் என்று சொல்வது, ஆகவே தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அப்திய்யத்துடைய மகாம்.
 
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
 
(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மது நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.(அல்குர்ஆன் 17 : 1)
 
அபுதாக completed அபுத் 100 சதவீதமாகும். 
 
وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا
 
இன்னும், நிச்சயமாக விஷயமாவது, அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனை வணங்குவதற்காக நின்றபோது அவர்கள் (-அரேபியர்கள்) எல்லோரும் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராக ஆகிவிட முயற்சித்தனர். (அல்குர்ஆன் 72 : 19)
 
உலகத்தில் என்னென்னமோ பதவிகள் இருக்கிறது. காசு கொடுத்து வாங்கிற பதவி இருக்கு, தன்னுடைய வேற, வேற சமூக அந்தஸ்தால் வாங்குற பதவி இருக்கு. சகோதரர்களே! இந்த எல்லாப் பதவிகளும், தகுதிகளும் அழிந்துவிடும். நாளை மறுமையில் வரும்போது,
 
مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ ,هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
 
“எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!” “எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுக்க நான் கூறிய எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டதே.” (அல்குர்ஆன் 69 : 28, 29)
 
என்று மனிதன் கைசேதப்படக் கூடிய பதவிகள் இருக்கின்றன. கைசேதப்படாத ரட்சிக்கப்படக் கூடிய அல்லாஹ்விடத்திலே வெற்றிக்கான பதவி ஒன்று இருக்கிறது. யாரை அல்லாஹ் தன்னுடைய அப்தாக ஏற்றுக் கொண்டானோ, அந்த பதவி, யாரை அல்லாஹ் தன்னுடைய அபுதாக, இவர் என்னுடைய நூற்றுக்கு நூறு வணங்கிய, எனக்கு கட்டுப்பட்ட அபுத் என்பதிலே பல அர்த்தங்கள் உள்ளன. 
 
அல்லாஹ்வை வணங்கக் கூடியவர், அல்லாஹ் விற்கு கட்டுப்படக் கூடியவர், அல்லாஹ்விற்கு பணிந்து நடப்பவர், தனது விருப்பத்தை விட தன்னுடைய மௌலா எஜமானன் அல்லாஹ்வுடைய விருப்பத்தை தேர்ந்தெடுப்பவர், இதில் கொஞ்சம் கொஞ்சம் எங்கேயாவது லட்சத்தில் ஒன்றை லட்சம் ஆக்கி அதில் ஒன்று எங்கேயாவது நமக்கு ஒட்டிக்கிட்டு இருக்கும்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எல்லாம் முழுமையாக கிடைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே தான் சஹாதாவில் சொல்லும்போது, 
 
قَالَ: «مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
 
இங்கே சையதினா வராது. மௌலானா வராது. ஷஃபிஹுனா வராது. எதுவுமே வராது. உயர்ந்த மக்காம் எல்லா மக்காமை விட அப்துஹு வரசூலுஹு முதலாவது அப்து இரண்டாவது ரசூல் அல்லாஹுத் தஆலா இந்த நபிக்கு அந்த சான்று கொடுக்கிறான்.
 
அறிவிப்பாளர் : உபாதா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 3435 குறிப்பு 2
 
 
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
 
(அல்குர்ஆன் 62 : 2)
 
நம்ம நபியினுடைய வேலையே 24 மணி நேரம் அவர்களுடைய அவசியமான ஓய்வை தவிர, ஒரு மனிதன் எடுத்துக் கொள்ளக்கூடிய கட்டாயமான தூக்கத்தை தவிர சுய தேவைகளைத் தவிர மற்ற எல்லா நேரங்களும் தன்னுடைய உம்மத்துக்காகவே செலவழித்தவர்கள். 
 
அடுத்து உம்மத்தை விட்டு பிரிந்தால் அல்லாஹ்வுடைய இபாதத். அல்லாஹ்வுடைய இபாதத்தில் இருந்து வந்தால் உம்மத்துக்கு, அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு. நம்ம 24 மணி நேரத்தில் நிமிஷக் கணக்கில் தான் அல்லாஹ்விற்கு கொடுக்கிறோம். அதேபோல நிமிஷக்கணக்கில் தான் ஏதாவது பொது சேவைக்கு கொடுக்கிறோம். மிச்சமெல்லாம் யாருக்கு செலவழிக்கிறோம்.
 
நப்சி, சௌஜி, அவ்லாதி, பைத்தி, அவ்வளவுதான். எனக்கு, என் மனைவிக்கு, என் பிள்ளைக்கு, என் குடும்பத்துக்கு, மணிக்கணக்கா, பல மணி நேரங்களாக அதிலே நிமிஷ கணக்கில் தான் யாருக்கு? கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அவருடைய இபாதத்துக்கு கொடுக்கிறோம். அவனுடைய அடியான்களை அவன் பக்கம் அழைப்பதற்கு கொடுக்கிறோம். 
 
எப்பயாவது இந்த மாதிரி ஒரு நாள் வந்து பள்ளிவாசலில் உட்கார்ந்து இருந்தாலே தவிர, இல்லையா? அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் இப்படியாவது நம்மளை கொண்டு வந்து சேர்த்தான் யா அல்லாஹ! நாளை மறுமையில் சொல்லலாம். ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து இருந்தேன். என்னுடைய பள்ளிவாசலில் ரமலான் மாதத்தில் அல்லாஹுத்தஆலா இதிகாப் கொடுத்தான். பத்து நாள் போய் இருங்க இப்பயாவது பொண்டாட்டி பிள்ளைகளை மறந்துட்டு என்னை நினைச்சு கிட்டு இருங்க. சுபஹானல்லாஹ் அப்பகூட ஃபுல்லா மறக்க சொன்னா அல்லாஹுத்தஆலா.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருக்கிறார்களே! ஒன்று அல்லாஹ்விற்கு முன்னால் நிற்பார்கள். இல்லையென்றால் அல்லாஹ்வின் அடியார்களுக்கு முன்னாள் நிற்பார்கள். அல்லாஹ்விடத்தில் துஆ செய்யும் போது கூட அல்லாஹ்வுடைய அடியார்களுக் காக தன்னுடைய உம்மத்துக்காக துஆ கேட்பார்கள். 
 
ஒருபோதும் தன்னுடைய உம்மத்தை மறக்காத தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ரசூலுல் லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதிலே தொழவைக்கிறார்கள். அந்த தொழுகையில் அல்லாஹ்விற்கும் அவர்களுக்கும் யாராவது குறுக்கே வர முடியுமா எப்பேர்பட்ட இறையச்சத்தோடு, தக்வாவோடு தொழக்கூடியவர்கள். எவ்வளவு அழகாக சொல்கிறார்கள்.
 
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ
 
நான் தொழுகையை ஆரம்பிக்கிறேன். தொழுகையை நீட்டி தொழ வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு குழந்தை அழக்கூடிய அழுகையை நான் கேட்கிறேன். அந்த குழந்தையின் தாய்க்கு ஏற்படும் வலியை நான் உணர்கிறேன்.
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 707, 868
 
எந்த அளவு அவருடைய உள்ளத்திலே கருணை, பாசம், அன்பு, இரக்கம் பிறருடைய உயர்வுகளுக்கு உண்டான அந்த சரியான மரியாதை இருக்குமேயானால் அந்த தொழுகையை அல்லாஹ் விற்காக அவர்கள் ஆரம்பித்து அதனால் கூட ஒரு குழந்தைக்கு சிரமம் ஏற்படக்கூடாது. சிரமத்தால் அழும் போது அதனுடைய தாய்க்கு சிரமம் ஏற்படக்கூடாது என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையை அழகிய முறையிலே சுருக்கி தொழ வைக்கிறார்கள்.
 
எவ்வளவு பெரிய ஒரு கருணை உள்ள, இரக்கமுள்ள, பாசமுள்ள உணர்வுள்ள நபியை நாம் கிடைக்கப் பெற்று இருக்கிறோம். அது சம்பந்தமாக இந்த ஒரு வசனத்தையும் நான் நினைவில் வைக்க வேண்டும். அல்லாஹ் புகழக்கூடிய புகழ்,
 
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
 
‏(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார். (அல்குர்ஆன் 9 :128)
 
அல்லாஹுத்தாலா நபியை புகழ்வதை கொண்டு மகிழ்ச்சி அடைகிறான். நபியை பேசுவதைக் கொண்டு அவன் சந்தோஷம் அடைகிறான் என்றால் நாம் எவ்வளவு சந்தோஷப்பட வேண்டும். நாம் எவ்வளவு நபியை பற்றி பேச வேண்டும். அவன் நபியைப் பற்றி பேசுவதிலே சந்தோஷப்படுகிறான். அவனுடைய அடியார்கள் அவனுடைய நபியைப் பற்றி பேச வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா விரும்புகிறான், சந்தோஷப் படுகிறான், அதற்கு நன்மை தருகிறான்.
 
சந்தோஷப்பட்டு நீ என்னுடைய நபியைப் பற்றி பேசும்போதெல்லாம் எனது நபியை நீ வாழ்த்தும்போது எல்லாம் உனக்கு நன்மைகளை பதிவு செய்வேன். உன்னுடைய தொழுகைக்கு உனக்கு நன்மை கொடுப்பதை போன்று, உன்னுடைய நோன்புக்கு நன்மை கொடுப்பது போன்று நீ எனது நபிக்கு வாழ்த்து சொன்னால் உனக்கு நன்மை.
 
1297 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ
 
யார் எனது நபியை ஒருமுறை வாழ்த்து வாரோ, நான் அவரை 10 முறை வாழ்த்துகிறேன்.10 விசேஷமான ரஹ்மத்துகளை அல்லாஹ் இறக்கிறான் பத்து பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். தரசாத்துகளை அல்லாஹ் உயர்த்துகிறான். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : நஸயீ எண் : 1297 
 
2457 - حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَهَبَ ثُلُثَا اللَّيْلِ قَامَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ [ص:637] اذْكُرُوا اللَّهَ اذْكُرُوا اللَّهَ جَاءَتِ الرَّاجِفَةُ تَتْبَعُهَا الرَّادِفَةُ جَاءَ المَوْتُ بِمَا فِيهِ جَاءَ المَوْتُ بِمَا فِيهِ»، قَالَ أُبَيٌّ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُكْثِرُ الصَّلَاةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلَاتِي؟ فَقَالَ: «مَا شِئْتَ». قَالَ: قُلْتُ: الرُّبُعَ، قَالَ: «مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ»، قُلْتُ: النِّصْفَ، قَالَ: «مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ»، قَالَ: قُلْتُ: فَالثُّلُثَيْنِ، قَالَ: «مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ»، قُلْتُ: أَجْعَلُ لَكَ صَلَاتِي كُلَّهَا قَالَ: «إِذًا تُكْفَى هَمَّكَ، وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ»: 
 
சஹாபிவந்தார் அவசரமாக துஆ செய்தார் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூப்பிட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வை புகழுங்கள் சுஜுது ஸலவாத் சொல்லுங்கள். துஆ கேளுங்கள். அப்புறம் சலவாத் துடைய நன்மையை சொல்கிறார்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அப்படியா அப்போ நான் சலவாத்தையே ஓதிக் கொண்டிருக்கிறேன் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அல்லாஹு அக்ஷர் நீ எவ்வளவு ஓதினாலும் உனக்கு அவ்வளவு அதிகமாக கூலி கொடுப்பதற்கு அல்லாஹ்விடத்தில் கூலி அதிகமாக இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திர்மிதி, எண் : 2457 
 
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
 
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார். (அல்குர்ஆன் 9 : 128)
 
முஃமின்களே! உங்களுக்கு ஒரு தூதர் வந்திருக்கிறார். யார் அவர்? எத்தகையவர்? உங்களுக்கு சிரமமானது அவருக்கு ரொம்ப சிரமமாக இருக்கும். உங்களுக்கு வலிப்பது, உங்களுக்கு எது கடினமாக இருக்குமோ, அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்கள் மீது பேராசை உள்ளவர். எல்லோருமே சொர்க்கத்திற்கு போய் விடணும். ரசூலுல்லாஹ் உடைய ஆசை என்ன அபூ ஜஹல் அபூலஹப் கூட சொர்க்கத்துக்கு போகணும்.
 
அந்த அளவுக்கு ஆசை இருந்தது. ரசூலுல்லாஹ்விடம் ஆசை யினால் தன்னையே அழித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு கவலைப்பட்டார்கள். கொடூர கொலைகாரன் கொடூர மகா படுபாவி அபுஜஹல் அபூலஹபை ரசூலுல்லாஹ் ஆசைப்பட்டார்கள். அவன் கூட முஸ்லிமாகிவிடணும். கவலைப்பட்டார்கள். அதற்காக வேண்டி அல்லாஹ் ஒரு ஆயத் அல்ல, பல தடவை ஆயத்துக்கள் இறக்கினான்.
 
فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا
 
ஆக, (நபியே!) அவர்கள் இந்த குர்ஆனை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக (அவர்கள் மீது) துக்கப்பட்டு (விலகி சென்ற) அவர்களுடைய (காலடி) சுவடுகள் மீதே உம் உயிரை நீர் அழித்துக் கொள்வீரோ! (அல்குர்ஆன் 18 : 6) 
 
நபியே அவர்கள் முஃமினாக இல்லை என்பதால் கவலைப்பட்டு கவலைப்பட்டு உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்வீர் களோ! உங்களையே நீங்கள் அழித்துக் கொள்வீர்களோ! இந்த அளவு அவர்கள் உள்ளத்திலே கவலை இருக்குமேயானால் தன்னுடைய இந்த மக்கள் முஃமினாக ஆகவில்லை என்பதால் இவர்கள் பட்ட அந்த கவலை அவர்களை அழித்துவிட நெருங்கி விட்டது.
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவ்வளவு பெரிய பேராசை. அப்துல்லா இபுனு உபை இப்னு சலூப் ரஹீஸுல் முனாஃபிகின், யார் இவர்? நயவஞ்சகர்கள் உடைய தலைவர் ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை அல்ல, உஹதுது போரில் ஆரம்பித்தவன் கடைசி மௌத் வரைக்கும் ரசூலுல்லாவிற்கு தொந்தரவையே தந்துகொண்டிருந்தவன். அவருடைய மவுத் அவருடைய மகனார் வருகிறார். 
 
4670 - حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ، جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ يُكَفِّنُ فِيهِ أَبَاهُ، فَأَعْطَاهُ، ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي عَلَيْهِ، وَقَدْ نَهَاكَ رَبُّكَ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ [ص:68] أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ، إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً} [التوبة: 80]، وَسَأَزِيدُهُ عَلَى السَّبْعِينَ " قَالَ: إِنَّهُ مُنَافِقٌ، قَالَ: فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84]
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 4670
 
அவர் உண்மையான முஃமின் யாரசூலல்லாஹ் என்னுடைய தந்தை இறக்கப் போகிறார். அவருக்காக பாவ மன்னிப்பு துஆ செய்யுங்கள். எவ்வளவு தொந்தரவு கொடுத்திருப்பார்கள். ரசூலுல்லாஹ் விடம், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விஷயத்திலும் சரி, மற்ற விஷயங்களிலும் சரி கொஞ்ச நஞ்ச தொந்தரவா பாருங்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனே அல்லாஹ் விடத்தில் பாவ மன்னிப்பு தேடுகிறார்கள். அல்லாஹ் சொல்லிவிட்டான். நபியே! நீங்கள் பாவமன்னிப்பு கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டான். 70 முறை கேட்டாலும் மன்னிக்க மாட்டான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 4670
 
அல்லாஹ் இப்படி சொல்லாமல் அல்லாஹ் விட்டிருந் தான் என்று சொன்னால் 70க்கு மேல் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான் என்று இருக்குமே ஆனால் நான் அப்படி கேட்டிருப் பேன் சுபஹானல்லாஹ்!. கடைசி வரைக்கும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஆசை என்னவாக இருந்தது. தனக்கு அவ்வளவு கொடுமைகள் செய்தும் கூட அல்லாஹ்வுடைய ஒரு அடியான் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும்.
 
அந்த மகனார் வருகிறார். யா ரசூலுல்லாஹ் நீங்கள் தொழுக வையுங்கள். அதற்கும் தயாராகி விட்டார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்கு கஃபன் போடணும். உங்கள் சட்டையை கழட்டி கொடுங்கள் என்று கேட்கிறார். ரசூலுல்லாஹ் அதற்கும் தயாராகி விட்டார்கள்.
 
இங்கே இரண்டு விஷயம், ஒன்று தன்னுடைய உம்மத்தில் உண்மையான முஃமின் அவருடைய மகனார் அப்துல்லாஹ் இப்னு, அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் உபை இப்னு சலூப் அந்த முஃமின் உடைய விருப்பம் தன்னுடைய தந்தைக்காக, இரண்டாவது அல்லாஹ்வுடைய அடியான் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு அவன் சொர்க்கம் செல்வதால் எனக்கு என்ன நஷ்டமாக போகிறது. நாம் எப்படி என்றால் கொஞ்சநஞ்ச கஞ்சன் அல்ல மகாகஞ்சன். அல்லாஹ் குர்ஆனில் அப்படித்தான் சொல்கிறான்
 
قُلْ لَوْ أَنْتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنْفَاقِ وَكَانَ الْإِنْسَانُ قَتُورًا
 
(நபியே!) கூறுவீராக! என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் (உங்களுக்கு) சொந்தமாக்கியவர்களாக இருந்திருந்தால், அப்போது (செல்வத்தை) தர்மம் செய்ய பயந்து (அதை) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 100)
 
அல்லாஹ்வுடைய கஜானா எல்லாம் உங்கள் கையில் இருந்தால், நீங்கள் ஒருத்தருக்கும் ஒரு பைசா கொடுத்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் எல்லாம் கஞ்ச பிசினாரிகள். நம்முடைய பெற்றோருக்காக அழுது மன்றாடி இஸ்திஃபார் கேட்கக் கூடியவர்கள் எத்தனை பேர்? நம்முடைய முஃமினான சகோதரர்கள் முஃமீனுக்காக, முஃமின்களுடைய பாவமன்னிப்புக்காக அழக் கூடியவர்கள் நம்மில் எத்தனை பேர்? எல்லா நபிமார்களும் அதற்காக அழுது இருக்கிறார்கள். நூஹ் நபியிலிருந்து
 
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
 
என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அதிகப்படுத்தாதே, அழிவைத் தவிர! (அல்குர்ஆன் 71 : 28)
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், மூசா அலைஹிஸ்ஸலாம் எல்லா நபிமார்களின் துஆ பாருங்கள் முஃமின்களுக்காக துஆ கேட்டார்கள். நபிமார்களுடைய துஆ எல்லாம் அழுகையோடு தான் இருக்கும். நம்மை மாதிரி கண்ணில் தண்ணீர் வராமல் , கல்பு ஆடாமல், உள்ளம் இறுகிப் போய் கட்டியாக போய் எல்லாம் கிடையாது. அதனால்தான் அவர்கள் துஆக்கள் எல்லாம் அங்கீகரிக்கப் படக்கூடியதாக இருந்தது. எல்லா நபிமார்களுமே தன்னுடைய உம்மத்துக்காக அவர்கள் கேட்டது தான் அதிகம்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 4670
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சட்டையவே கழட்டி கொடுத்து விட்டார்கள். இந்தச் சட்டையை கொடுப்பதால் அல்லாஹ் அவரை மன்னித்து தண்டனையிலிருந்து பாதுகாப் பான் என்றால் என்னுடைய சட்டை அதற்காக பயன்படட்டும் அவன் என்னை ஏசியவனாக இருந் தாலும் சரி, தூற்றியவனாக இருந்தாலும் சரி அப்போ எந்த அளவுக்கு விசாலமாக உங்கள் மீது பேராசை உள்ளவர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்கள் மீது பேராசை உள்ளவர்.
 
சகோதரர்களே! இப்படி அல்லாஹ் சுபஹானல்லாஹுத் தஆலா நம்முடைய நபியை புகழ்கிறான். புகழ்கிறான் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா விரும்புகிறான். அதை குர்ஆனிலே பல வசனங்களிலே அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். 
 
நம் நாம் அடியார்கள் யாரை திருப்தி படுத்த வேண்டும் அல்லாஹ்வை திருப்தி படுத்தனும். அல்லாஹுத் தஆலா என்ன விரும்பி இருக்கிறான். தன்னுடைய நபியை திருப்தி படுத்த வேண்டும் இது எந்த அடிப்படையில் இல்லை அல்லாஹ் பலவீனம் ஆகி விட்டான் என்பதற்காக அல்ல. அல்லாஹ் தேவையாகி விட்டான் என்பதற்காக அல்ல. அல்லாஹ் வின் பிரியத்தினால், அல்லாஹ் வின் அன்பின் காரணமாக, அதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். நான் ஒருத்தருக்கு இவ்வளவு பிரியமாக அவருக்காக வேண்டி எல்லாத்தையும் சரி செய்கிறேன் என்று சொன்னால் அது பலவீனத்தினால் அல்ல பிரியத்தின் காரணமாக,
 
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا
 
இன்னும், (நபியே!) கூறுவீராக! “புகழனைத்தும் அல்லாஹ்விற்குரியதே! அவன் (யாரையும் தனக்கு) குழந்தையாக எடுக்கவில்லை. மேலும், ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. இன்னும், பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் யாரும் அறவே இல்லை.” மேலும், (நபியே!) அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக! (அல்குர்ஆன் 17 : 111)
 
சூரா பணி இஸ்ராயீலுடைய கடைசி வசனம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் நபியே! அல்லாஹ்வை புகழுங்கள். அவனுக்கு யாரும் குழந்தையாக இல்லை. அவன் யாரையும் குழந்தையாக தனக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு பலவீனம் ஏற்பட்டதால் அவன் தனக்கு ஒரு நண்பனை வைத்துக் கொள்ளவில்லை. அல்லாஹ் நண்பர்களை எடுத்துக் கொண்டானே எதன் காரணமாக அல்ல பலவீனத்தினால் தனக்குத் தேவையான, இவர் எனக்கு உதவுவார் என்பதற்காக அல்ல. அன்பினால் அல்லாஹுத்தஆலா அன்பர்களை, நேசத்தினால் நேசர்களை, பிரியத்தினால் தனக்கு பிரியமானவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திருப்தி படுத்துவதற்காக சந்தோஷப்படுத்துவதற்காகவே அல்லாஹுத்தஆலா குர்ஆனிலே வசனங்களை இறக்கினான். அவர்களை புகழ்வதற்காக இந்த வசனம்பாருங்கள்.     
 
يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا ,وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا ,وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُمْ مِنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا 
 
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். ,இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்.) ,(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது.” (அல்குர்ஆன் 33 : 45, 46, 47)
 
நபியை அல்லாஹுத்தஆலா தன்னுடைய தவ்ஹீதுக்கு சாட்சியாக,وَّمُبَشِّرًا நற்செய்தியால ராக وَّنَذِيْرًا அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக, இதுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வேலை. அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய கட்டளையை கொண்டு அழைக்க கூடியவராக இன்னும் வெளிச்சம் தரக்கூடிய பிரகாசமான விளக்காக,
 
நபியே நீங்கள் நற்செய்தி சொல்லிக் கொண்டே இருங்கள். முஃமின்களுக்கு, முஃமின்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு சிறப்பான மிகப் பெரிய கூலி கிடைக்கும் என்பதற்கு, சகோதரர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கைக்கு உலகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் புதிய நபி அல்லவே முதலும் இறுதியும் அவர்களே அல்லவே
 
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ
 
(நபியே!) கூறுவீராக! “நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. இன்னும், எனக்கு என்ன செய்யப்படும், உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.”(அல்குர்ஆன் 46 : 9)
 
நான் புதிதாக நபிமார்களில் ஒருத்தராக தனியாக வந்தவர் அல்ல. அவர் களுக்கு முன்னாலும் தூதர்கள் வந்திருக்கிறார்கள். ரசூலுல் லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தூதுத்துவத்துக்கும் மற்ற நபிமார் களுடைய தூதுத்துவத்துக்கும் இடையே என்ன வித்தியாசம்? 
 
ஏன் அவர்களுடைய தூதுத்துவம் இறுதி தூதுத்துவமாக இறுதியில் ரிசாலத்தாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஆக்கினான் என்றால் அந்த அளவு அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு அந்த தகுதியை கொடுத்தான். அந்த அளவுக்கு மிக சிறப்பான உயர்ந்த ஒரு உதாரண உவமையற்ற ஒரு உவமைப்பணி. மற்ற நபிமார்கள் வந்தார்கள் என்ன செய்தார்கள்? அவர்களுடைய குடும்பத்தார்களுக்கு தாவா செய்தார்கள். 
 
அந்த தாவாவில் ஏற்பட்ட கஷ்டத்தையே அவர்களால் தாங்க முடியவில்லை யா அல்லாஹ்! இந்த கஃபாவை அழித்துவிடு என்று சொல்லி விட்டார்கள். குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களை முழுக்க நீங்கள் எடுத்து பார்த்தீர்கள் என்று சொன்னால் அந்த நபிமார்கள் ஒரு கஃபுக்காக ஒரு குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்காக அனுப்பப் பட்டார்கள். அப்படி அனுப்பப்பட்டு அவர்கள் தவ்பா செய்யும்போது ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் என்ன செய்தார்கள்.
 
فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَنْ مَعِيَ مِنَ الْمُؤْمِنِينَ
 
ஆகவே, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நீ தீர்ப்பளி! இன்னும், என்னையும் என்னுடன் இருக்கின்ற நம்பிக்கையாளர்களையும் பாதுகாத்துக்கொள்!” (அல்குர்ஆன் 26 : 118)
 
எனக்கும் என்னுடைய கஃபுக்கும் மத்தியில் நீ தீர்ப்பளித்து விடு யா அல்லாஹ்! என்று சொல்லிவிட்டார்கள்.
 
فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ
 
ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் (பலவீனமாக இருக்கிறேன்,) தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ (எனக்காக) பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 54 : 10)
 
யா! அல்லாஹ் இதற்கு மேல் என்னால் முடியாது நான் தோற்றுப் போய் விட்டேன் பழிவாங்கி விடு எனக்காக வேண்டி என்று சொல்லிவிட்டார்கள் நூஹ் அலைஹி அஸ்ஸலாத்து வஸ்ஸலாம். மூசா அலைஹி அஸ்ஸலாத்து வஸ்ஸலாம்.
 
قَالَ رَبِّ إِنِّي لَا أَمْلِكُ إِلَّا نَفْسِي وَأَخِي فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفَاسِقِينَ
 
“என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கும், என் சகோதரருக்கும் தவிர, (மற்றவர்களை கட்டாயப்படுத்த) அதிகாரம் பெறமாட்டேன். ஆகவே, பாவிகளான சமுதாயத்திற்கு மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் நீ தீர்ப்பளித்து விடு!’’ என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 5 : 25)
 
யா! அல்லாஹ் இந்த இஸ்ரவேலர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னையும் என் அண்ணனையும் தான் என்னால் காப்பாற்ற முடிந்தது. இவர்களை திருத்தவே முடியவில்லை. யா அல்லாஹ்! இவர்களை சபித்து விடு என்று சொல்லிவிட்டார்கள். 
 
அல்லாஹுத் தஆலா 40 வருடம் அந்த பரிசுத் தமான பூமியை சபித்துவிட்டு அந்தப் பக்கமே இவர்கள் நெருங்க முடியாது. எல்லா நபிமார்களும் ஏதோ ஒரு விஷயத்தில் தங்க ளுடைய கஃபுக்கு எதிராக கடைசி யாக துஆ செய்து முடித்து விட்டார்கள். 
 
கடைசி வரைக்கும் யா! அல்லாஹ் என்னுடைய கஃபை மன்னித்து விடு, என்னுடைய உம்மத்தை மன்னித்துவிடு, அவர்கள் அறியாதவர்கள். அவர்களை மன்னித்து விடு என்று அவர்களுக்காக இறுதிவரை துஆ செய்து கொண்டே இருந்தார்கள். ஏன் இந்த இடத்தில், உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களில் உள்ள பொறுமையாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். 
 
100 ஆயிரம், ஒரு லட்சம் பொறுமையாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த லட்சம் பொறுமையாளர்களிடத்தில் இருக்கக்கூடிய பொறுமை எல்லாம் சேர்த்து ஒரு பொறுமையாளரிடம் வையுங்கள். ஒரு பொறுமையாளரிடம் வைத்து கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒருவர் இருப்பாரே யானால் அவரும் அந்த தாயிஃப் நகர துன்பத்திலே பொறுமை இழந்திருப்பார். 
 
நீங்கள் ரொம்ப பொறுமையாளர் சகிப்பாளர் என்று ஒருத்தரை கற்பனை செய்ய முடிந்தால், கற்பனை செய்யுங்க அந்த மாதிரி லட்சம் பேரை கற்பனை செய்யுங்க. அந்த லட்சம் பேருடைய பொறுமை, சகிப்பை எடுத்துக் கொண்டு வந்து ஒரு மனிதரிடத்திலே பொருத்துங்க. அவரை இந்த தாயிஃபுடைய சம்பவத்திலே வைத்து கற்பனை செய்து பார்த்தீர்களேயானால், அவர் பொறுமை இழந்திருப்பார். 
 
ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உள்ளம் விசாலமானது.மன்னிக் கக் கூடிய உள்ளம் உள்ளவர்கள். விட்டுக் கொடுக்கக்கூடிய உள்ளம் உள்ளவர்கள். பெருந்தன்மையின் சிகரத்திலே அவர்கள் இருந்தார்கள். இரண்டு பேர் வந்து விட்டார்கள்.
 
3231 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ، قَالَ: " لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ العَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ، فَنَادَانِي فَقَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، فَنَادَانِي مَلَكُ الجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، فَقَالَ، ذَلِكَ فِيمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ، لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا "
 
யாருடன்? ஜிப்ரீலுடன் இரண்டு பேர் வந்துவிட்டார்கள். மலைகளின் உடைய மலக்குகள், சாதாரண மலக்குகள் கிடையாது. வந்து சலாம் சொல்லி விட்டார்கள். அல்லாஹ் சலாம் சொல்கிறான். அல்லாஹ் எங்களை அனுப்பி இருக்கிறான் உங்களுக்கு என்ன விருப்பமோ சொல்லுங்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா , நூல் : புகாரி, எண் : 3231
 
இந்த இரண்டு மலையையும் சேர்த்து வைத்து இங்கேயே இவர்களை நசுக்கி விடுகிறோம் என்று சொல்லி விட்டார்கள். ஒரு தடவை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல் லாஹ்விடம் கேட்கிறார்கள். யாரசூலல்லாஹ்! நீங்கள் கஷ்டப் பட்டீர்கள். ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் நானே பார்த் திருக்கிறேன். இந்த உஹது போரில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். பல் எல்லாம் உடைந்து விட்டது. நெத்தி யெல்லாம் உடைந்து போச்சு. ரத்தமா வழிந்தது. நீங்க மயக்க மாகி கீழே விழுந்து விட்டீர்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா , நூல் : புகாரி, எண் : 3231
 
இதைவிட கஷ்டமான ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் வந்திருக் கிறதா என்று கேட்கிறார்கள். ஏன் பார்க்கவில்லை ஆயிஷா இந்த கஃபு என்னை தாயிஃபிலே வைத்து செய்தார்களே அதை விடவா பெரிது ரசூல் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் வேண்டாம் என்று சொன்னது மட்டுமல்ல அங்கே ஒரு துஆ செய்தார்கள். 
 
ரசூல் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் மன்னித்தது மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தது மட்டுமல்ல, பெருந் தன்மையாக அதை கடந்தது மட்டுமல்ல, அல்லாஹுத்தஆலா இந்த கஃபுடைய குடும்பத்தில் இவர்களுடைய சந்ததிகளில், வாரிசுகளில் அல்லாஹ்வை ஈமான் கொள்ளக்கூடிய வசதி களை கொண்டு வருவான்
 
அப்படி என்று சொல்லி அந்த வாரிசுக்காக வேண்டி துஆ செய்தார்கள். உலகத்தில் ஒரு மனிதரைக் குறித்து விஷால மான உள்ளம் உள்ளவர், விசாலத்தை தவிர உள்ளத்தில் நெருக்கடியே இல்லை. பெருந் தன்மையை தவிர குறுகிய மனப்பான்மையே இல்லை என்று சொல்ல வேண்டும் என்றால், முதல் உதாரணம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கை எப்படி என்றால் ஒரு பக்கம், தான் பிறந்து வளர்ந்த குரைஷி வம்சத்தை சேர்ந்தவர்கள். அரபு குலத்தை சேர்ந்தவர்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பொறுத் தவரை தங்களுடைய குலத்தவர் களுக்கு மட்டும் நபியாக அனுப்பப் படவில்லை
 
قُلْ يَاأَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
 
(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், (நீங்கள் நேர்வழி பெறுவதற்காக) அல்லாஹ்வையும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்பவரான, எழுதப் படிக்கத் தெரியாதவரான, நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவரைப் பின்பற்றுங்கள்! (அல்குர்ஆன் 7 : 158)
 
மக்களே நான் உங்கள் எல்லோருக்கும் நபியாக அனுப்பப்பட்டு இருக்கிறேன். அரபுகளுக்கு மட்டுமா அனுப்பபட்டு இருந்தார்கள்? இந்த அரபுகளிலே பல வகையான அரபுகள் இருந்தார்கள். சிலை வணங்கக் கூடிய அரபிகள் இருந்தார்கள். கிறிஸ்துவ மதத்தை தழுவி விட்ட அரபிகள் இருந்தார்கள். அல்லாஹ்வே இல்லை என்று சொல்லக்கூடிய அரபிகள் இருந்தார்கள். பல கொள்கையுடைய அரபிகள் இருந்தார்கள். 
 
அது மட்டுமல்ல அந்த அரபு நாட்டை சுற்றி இரண்டு மிகப் பெரிய பேரரசு அன்றைய நாகரீக உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தவர்கள். ஒன்று இவர்களுடைய ஆட்சி பிரிவாகி கொண்டே இருக்கும் அல்லது இவர்களுடைய ஆட்சி விரிவாகிக் கொண்டு இருக்கும் யாராக இருந்தாலும் சரி இந்த இரண்டு பேருக்கும், இந்த இரண்டு பேரில் யாராவது ஒருத்தருக்கு பயந்து பணிந்து வாழ்ந்தால் தான் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் இருக்கும் என்ற நிலை இருந்தது. 
 
அரபு பாலைவனத்தில் ஒரு எத்திமாக பிறந்த ஒரு மனிதர் வியாபாரத்தை தவிர உலகத்தில் வேறு எதையுமே தெரியாத ஒரு மனிதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆடு மேய்த்தார்கள் அப்புறம் வியாபாரம் செய்தார்கள். எங்கேயாவது மன்னர்கள் இருந்திருக்கிறார்களா? மன்னருடைய மகனா! ரசூல் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம். 
 
இவர்கள் எத்தகைய சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இந்த ஆடு மேய்க்க கூடிய இடையர்கள் ஆகிய அரபுகளை மட்டுமல்ல, அவர் களுக்கு பிரச்சாரம் செய்வதல்ல, அவர்களை ஒழுங்கு படுத்துவது அல்ல, மிகப் பெரிய ரோமானிய பேரரசையும், பாரசீக பேரரசுக்கும் பாடம் எடுக்க வேண்டும்.இப்போது அவர்களை புரட்டி அவர்களுக்கு உண்மையான மனிதத்தையும், நாகரீகத்தையும், உண்மையான ஆட்சியையும் , அதிகாரத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 
அவர்களை, அவர்கள் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த பக்கம் ரோமர்கள், ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வுடைய பிள்ளைகள் என்று சொல்பவர்கள்.
 
இந்த பக்கம் பாரசீகர்கள் ஒன்று அல்லாஹ்வே இல்லை என்று மறுக்கக் கூடியவர்கள், நெருப்பை வணங்கக் கூடியவர்கள், மஜூசிகள். நன்மைக்கு ஒரு கடவுள் தீமைக்கு ஒரு கடவுள் என்று இரண்டு கடவுள் கொள்கை உள்ளவர்கள். இந்த இரண்டு பேருடைய படைபலம் என்பது சாதாரண மானதல்ல. ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடம் அல்ல. இரண்டு பேர் உடைய ஆட்சி அதிகாரங்களும் ஏறக்குறைய 1000 ஆண்டுகள் பழமையான ஆட்சி அதிகாரம். 
 
ராணுவத்தில், படிப்பில் எல்லா துறைகளிலும் அவர்கள் ஒரு முறை படுத்தப்பட்ட ஒரு பண்படுத்தப்பட்ட ஆட்சி அதிகாரங்களை கொண்டவர்கள். இப்போ ஆடு மேய்க்க கூடிய ஒரு எத்திமாக பக்கீராக இருந்தவர். மக்காவில் உட்கார்ந்து கொண்டு, ஹிறுக்கல், அமீன் ஹுஷ்ரா, மலிக் ஃபாரிஸ், மலிக் மிஷிர் நீங்கள் எல்லாம் முஸ்லீம் ஆகி விடுங்கள் இல்லை என்றால் என்னுடைய படை உங்களிடத்திலே வரும். 
 
இந்த தைரியம் யாருக்கு வரும். எந்த முறைப் படுத்தப்பட்ட ஒரு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு ராணுவமே அங்கே இல்லை. சஹாபாக்கள் எல்லாம் volunteers. அவர்களுக்கு என்ன தெரியும்? வேட்டைக்கு போய் மிருகங்களை வேட்டையாட தெரிந்தவர்கள். அதேபோல் தங்களுக்கிடையில் அப்பப்போ குலத்துக்கும் குலத்துக்கும் இடையில் சண்டை வந்துவிடும். அந்த சண்டை போட்டு பழக்கம் இருக்கு அவ்வளவுதான்.
 
இதை வைத்துக்கொண்டு இனி ரோமப்பேரரசு இருக்காது. இனி கிஸ்ராவே இருக்காது. கைசர் தொலைந்து விட்டால் இனி கைசர் கிடையாது. பாரசீகம், இனி கிஸ்ரா தொலைந்து விட்டால் இனி கிஸ்ரா கிடையாது என்று challenge பண்ணக்கூடிய அளவுக்கு அந்தப் பணியை செய்தாக வேண்டும் என்றால் எப்பேர்ப்பட்ட மனசு அவனது இருக்கும். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பயம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு பசி, எல்லா பிரச்சனைகளும் இருந்தது. எல்லா பிரச்சனைகளையும் தாண்டி எல்லா பிரச்சனைகளையும் சக்சஸ் ஆக அவர்கள் தீர்த்து, தான் இறக்கும் போது உலகத்துக்கே நீதத்தை சொல்லித் தரக்கூடிய, ஆட்சி அதிகாரத்தை நடத்துவதற்கு உண்டான வழிமுறையை சொல்லித் தரக்கூடிய, 
 
உலகமே இனி இவர்களுக்கு பணிந்தே ஆக வேண்டும் என்ற ஒரு நிலை பாட்டில் இந்த கவ்மை பார்த்து பயப்படக்கூடிய ஒரு நிலைப் பாட்டிலே ஒரு உம்மத்தை விட்டு சென்றார்கள் என்றால் அதுதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுடைய பணியினுடைய உச்சகட்டம். இது எந்த நபிக்கும் சாத்தியமாக இல்லை. மூஸா அலைஹிஸ்ஸலாம் எவ்வளவு கெஞ்சினார்கள். பாலசீகத்திற்கு போய்விடுவோம் என்று எவ்வளவோ கெஞ்சினார்கள்.
 
قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
அல்லாஹ்வை) பயப்படுகின்ற (நல்ல)வர்களில் இருந்து அல்லாஹ் அருள்புரிந்த இருவர் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாசலில் நுழையுங்கள். ஆக, அதில் நீங்கள் நுழைந்தால் (மட்டுமே போதும்) நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்!’’ என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 5 : 23)
 
இரண்டு பேர் அதில் முஃமினான நல்ல மக்கள் அவர்களும் சேர்ந்து சொன்னார்கள் வந்து விடுங்கள் போய்விடுவோம் என்று சொல்லி, பணி இஸ்ராயில் இருக்கிறதே மூசா நாம் நபியை பற்றி பேசும் போது ரசூலுல்லாஹ் உடைய அந்த சஹாபாக்களை பற்றியும் பேசியாக வேண்டும்.
 
அல்லாஹ்வைப் பற்றி பேசினால் நபியை பற்றி பேச வேண்டும். நபியைப் பற்றி பேசினால் சஹாபாக்களை பற்றியும் பேசியாக வேண்டும். ஏனென்றால் இவ்வளவு கஷ்டப் பட்டார்கள் மூஸா அலைஹிஸ் ஸலாம் அல்லாஹ்வுடைய சக்தியை நேரடியாக கண்ணுக்கு நேராக பார்த்தது மட்டு மல்ல. அதை அனுபவித்து விட்டு தான் வந்திருக்கிறார்கள் யாரு?
 
இஸ்ர வேலர்கள் கடல் பன்னிரண்டாக பிளந்து அதில் பயணம் செய்து வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வுடைய ஃபிரௌன் அழிக்கப்பட்டதை கண்ணால் பார்த்து விட்டுவந்திருக்கிறார்கள். அப்போ கூட இந்த இஸ்ரவேலர் களுக்கு நம்பிக்கை வரவில்லை. மூஸா எங்களுக்கு பயமாக இருக்கிறது. அங்கே போய் விட்டால் நாங்கள் மாட்டிப்போம். உங்கள் இறைவன் கைவிட்டு விடுவான் என்று சொல்லிவிட்டு,
 
قَالُوا يَامُوسَى إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ
 
“மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழைய மாட்டோம். ஆகவே, நீயும், உம் இறைவனும் (அங்கு) சென்று (அவர்களிடம்) போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 5 : 24)
 
அதனால் நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருக்கிறோம். இரண்டு பேர் போய் சண்டை போடுங்கள். நீயும் உன் ரப்பும் போய் சண்டை போடுங்கள். ஜெயித்து விட்டால் எங்களுக்கு செய்திசொல்லுங்கள் நாங்கள் வருகிறோம் என்றார்கள். உலகத்திலேயே சபிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் இந்த கூட்டம் தான்.
 
وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ كُلَّمَا أَوْقَدُوا نَارًا لِلْحَرْبِ أَطْفَأَهَا اللَّهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
 
“அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது’’ என்று யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் நாடியவாறு தர்மம் செய்கிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். கலகம் செய்பவர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்கமாட்டான். (அல்குர்ஆன் 5 : 64)
 
யூதர்கள் சொன்னார்கள் அல்லாஹ்வின் கரம் கட்டப் பட்டிருக்கின்றது என்று, அல்லாஹ் சொல்கிறான், எனது கரமல்ல அவர்களின் கரங்கள் தான் விளங்கிடப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வின் கரங்கள் விரிந்தே இருக்கின்றன. அவர்கள் கூறிய இந்தக் கூற்றால் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். 
 
12954 - حَدَّثَنَا عَبِيدَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ [ص:281]، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «اسْتَشَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْرَجَهُ إِلَى بَدْرٍ» ، فَأَشَارَ عَلَيْهِ أَبُو بَكْرٍ، ثُمَّ اسْتَشَارَ عُمَرَ، فَأَشَارَ عَلَيْهِ عُمَرُ، ثُمَّ اسْتَشَارَهُمْ فَقَالَ بَعْضُ الْأَنْصَارِ: إِيَّاكُمْ يُرِيدُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ، فَقَالَ قَائِلُ الْأَنْصَارِ: تَسْتَشِيرُنَا يَا نَبِيَّ اللَّهِ، إِنَّا لَا نَقُولُ لَكَ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى عَلَيْهِ السَّلَامُ: اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا، إِنَّا هَاهُنَا قَاعِدُونَ، وَلَكِنْ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَوْ ضَرَبْتَ أَكْبَادَهَا إِلَى بَرْكٍ، - قَالَ ابْنُ أَبِي عَدِيٍّ: إِلَى بَرْكِ الْغِمَادِ - لَاتَّبَعْنَاكَ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பத்ரு போருக்கு அந்த சஹாபாக்களை கேட்கிறார்கள். போருக்கு முன்னால் அபூ சுஃபியான் தப்பித்துவிட்டார். அபூ ஜஹலுவின் கூட்டம் வரப் போகிறது. இப்போ சந்திக்க வேண்டும் யாரை? எதிர்பார்த்து வந்தது வியாபாரக் கூட்டத்தை மாட்டிக்கிட்டது யார்கிட்ட அபூ ஜஹலுடைய கூட்டத்தில் சஹாபாக்களை பார்த்து கேட்கிறார்கள், 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அஹ்மத், எண் : 12954 
 
சுபஹானல்லாஹ் ஒரு ஒரு சஹாபியா பதில் சொல் கிறார்கள்.யாரசூலல்லாஹ் எங்களை என்ன நினைத்தீர்கள்? இஸ்ரவேலர்கள் மாதிரியா? அவர்கள் சொன்னார்களே மூஸாவிற்கு நீங்களும் உங்கள் இறைவனும் செல்லுங்கள் என்று உட்கார்ந்து இருப்போம் நீங்கள் சண்டை போடுங்கள் என்று சொன்னார்களே அப்படியா? அல்லாஹ்வின் தூதரே எங்களை நீங்கள் அழைத்துக் கொண்டு மனை உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே விழுந்தால் என்று சொன்னால் நாங்கள் விழுந்து விடுவோம், எங்களை அழைத்துக் கொண்டு நீங்கள் கடலில் மூழ்கி செல்லுங்கள் என்று சொன்னார்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அஹ்மத், எண் : 12954 
 
அதற்கும் நாங்கள் தயார் எங்களை நீங்கள் மக்காவிற்கு அருகில் உள்ள நக்குல் ஜிகாத்துக்கு அழைத்துச் சென்று அங்கே போரிட வேண்டும் என்று சொன்னால் நாங்கள் அங்கேயும் வந்து போரிட தயார். நீங்கள் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்துச் செல்லுங்கள். நபியே! உங்களோடு இருப்போம் என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அஹ்மத், எண் : 12954 
 
சஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவின் இந்த 13 வருட தாவா இருக்கிறதே, அந்த 13 வருட தாவாவை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், இவர்கள் எப்படி எழுச்சி பெற முடியும். இதோடு இவருடைய கதை முடிந்து விட்டது என்ற எண்ணம் ஏற்படக்கூடிய அளவிற்கு தான் இருந்தது. 
 
தனது உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓடினார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். எல்லா சஹாபாக்களையும் தன் உடைய உயிரை காப்பாற்றிக் கொண்டு மக்காவை விட்டு ஓடி விடுங்கள். அல்லாஹ்வும் வசனத்தை அப்படித்தான் இறக்கி விட்டான்.
 
يَاعِبَادِيَ الَّذِينَ آمَنُوا إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونِ
 
நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ஆகவே, என்னையே (கலப்பற்ற முறையில்) நீங்கள் வணங்குங்கள்! (அல்குர்ஆன் 29 : 56)
 
என் பூமி விசாலமாக இருக்கிறது. நீங்கள் மக்காவில் இருந்து தான் வணங்க வேண்டும் என்பதல்ல. எங்கேயாவது போய் என்னை இபாதத் பண்ணுங்கள். நாளை மறுமையில் உங்களை ஒன்று சேர்க்கிறேன் என்று சொல்லி இந்த மக்காவை விட்டு ஓடுங்கள் என்று சொன்னான் அல்லாஹுத் தஆலா.
 
சகோதரர்களே! இங்கே தான் ரசூலுல்லாஹ் வுடைய அந்த முஃமின்களுடைய தவக்குல் அடிப்படையாக பாடமாக இருக்கிறது.நினைத்து பார்த் திருப்பார்களா அந்த மக்கா விலேயே மீண்டும் வந்து ஆட்சி செய்வோம் என்று. தனக்கே ஒரு நாடு கிடைக்குமா? வீடு கிடைக் குமா? ஒரு ஊரிலே இருக்க இடம் கிடைக்குமா என்று அங்கு சென்றவர்களை அல்லாஹுத்தஆலா எப்படி தேர்ந்தெடுப்பான். 
 
சகோதரர்களே! அந்த தாவாவின் பணியினுடைய வெற்றி அதற்கு என்ன காரணம்? அல்லாஹ் சொல்லிக்காட்டு கிறான். அதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்தது நம்முடைய முஹம்மத். நம்முடைய முஹம்மத் ரசூலுல்லாஹ் என்ற இந்த பர்சனாலிட்டி. 
 
முந்தைய நபிமார் களுக்கும், ரசூலுல்லாஹ்விற்கும் இடையிலே உள்ள வித்தியாசம் என்ன? அல்லாஹுத்த ஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவன் கொடுத்திருந்த அந்த சிறப்பான நற்குணங்கள், அந்த சிறப்பான ஆளுமை, அந்த சிறப்பான உயர்ந்த அந்த இறை அச்சம் இறைவனோடும், இறை அடியார்களோடும், அவர்களுக்கு இருந்த உயர்ந்த தொடர்புகள்.
 
முதல் பகுதியை கடந்து மூன்றாவது பகுதி உலகத்தில் எந்த ஒரு பர்சனாலிட்டி எடுத் தாலும் சரி அந்த பர்சனாலிடியில் ஒன்றுதான் உருப்படியாக இருக்கும். இரண்டு ஹாஃப் ஆக இருக்கும். மூன்று குவாட்டராக இருக்கும். நான்கு ஒன்றுமே இருக்காது.
 
உலகத்தில் மிகப் பெரிய பர்ஸ்னாலிட்டியை எடுங்கள். அவரிடம் சிறந்த உயர்ந்த குணமும் அறிவோம். திறமையோ ஏதோ ஒன்றில் தான் சொல்கிற அளவு இருப்பார். அதை வைத்து தான் அவர் பிரபலமாகி இருப்பார். அவர் அவருடைய துறையில் திறமையாக இருப்பார் அவ்வளவுதான் அதற்குமே நீங்கள் பட்டியலிட்டு பார்த்தீர்கள் என்றால் எல்லாத்திலேயும் முட்டை போடணும் அல்லது, பத்து போடணும் 20 போடணும் 30 போடணும் 40 போடணும் 50 க்கு மேல் ஏறாது. அங்கே கஷ்டமாக இருக்கும். 
 
ரசூலுல்லாஹ் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற personality கொண்டு வந்தீர்கள் என்று சொன்னால் சுபஹானல்லாஹ்! அரசியல்லேயா சமூகத்திலேயா இறை தொடர்பிலேயா பொறுமையிலேயா நற்குணத்திலேயா குடும்பத்திலேயா சுயநலமற்ற உம்மத்துக்காகவே வாழ்ந்த சமுதாயத் தலைவர்கள் அடிப்படையிலேயே ஒரு மனிதன் சமூக வாதியாக ஒரு ஆன்மீக வாதியாக அவரிடத்திலே என்னென்ன நற்குணங்கள், நற்பண்புகள், உயர்ந்த தகுதிகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அந்த மனிதர் இடத்திலே 100% முழுமையாக இருந்தது என்பதை எதிரிகள் ஒப்புக் கொண்டார்கள்.
 
யார் மட்டும்அல்ல? அபூபக்கர் உமர் மட்டுமல்ல, நெருங்கி இருந்த தோழர்கள் மட்டுமல்ல, இவர் இப்படிப்பட்ட ஆளுமை உள்ளவர் என்பதை யார் ஏற்றுக் கொண்டார்கள்? எதிரிகள். உலகத்தில் நண்பர்கள் புகழலாம், உறவுகள் புகழலாம், பக்கத்து வீட்டுக்காரர்கள் புகழலாம். யாருடைய புகழ் மிகப்பெரியதாக இருக்கும், அல்லாஹ்வுடைய புகழுக்கு அடுத்து ஒரு எதிரி உங்களைப் பார்த்து அவருக்கும் எனக்கும் என்னதான் சண்டையாக இருந்தாலும் அவர் ரொம்ப யோக்கியவான்.
 
அவர் ரொம்ப நேர்மையாளன், அவர் ரொம்ப நீதவான், அவர் வாக்கு மாற மாட்டார், அவர் உண்மை பேசுவார், அவர் பொறுமையாளர், அவர் சகிப்பாளர், அவர் ஒப்பந்தத்தை மீற மாட்டார், அவர் பொய் சொல்ல மாட்டார், அவர் நியாயமானவர், அவர் நேர்மையானவர், அவர் ஒழுக்கமானவர், அப்படின்னு உலகத்தில் எதிரிகள் ஒன்று சேர்ந்து ஒரு மனிதருக்கு சாட்சி சொல்லியிருக்கிறார்கள் என்றால் வரலாற்றில் முதலும் அவர்தான் கடைசியானவரும் அவர்தான். முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்.
 
அபூ சுஃபியான் வியாபாரியாக போயிருக்கிறார் சரியான சந்தர்ப்பம் ஹிறுக்கல் மன்ன ருக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஹிறுக்கலே முஸ்லிமாகிவிடு அஸ்லிம் தஸ்லம் நீ முஸ்லிமாகி விட்டால் நீ பாதுகாக்கப்பட்டாய் நீ வெற்றியடைந்து விட்டாய் நீ மறுப்பாய் ஆனால், உன்னுடைய நிலத்தை என்னுடைய குதிரை படைகள் வந்து மிதிக்கும் என்கிறார்கள். மொத்தமே ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் பேர் இருப்பார்கள். லட்சக்கணக்கான படைகளை வைத்துக்கொண்டு அங்கே தயாரிப்போடு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அவர் இங்கிருந்து தம்கி போகுது சுபஹானல்லாஹ்!
 
அறிவிப்பாளர் : அபூ சுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 7 
 
இரண்டு மூன்று தபால் அதில் முக்கியமாக இந்த தபால். திஹ்யா கொடுத்து விட்டு வெயிட் பண்றார். மன்னர் வாங்கி வைத்துக்கொண்டு பிரிக்கவில்லை பிரித்து படிப் பதற்கு முன்னாடி ட்ரான்ஸ்லேட்டர் எல்லாம் கொண்டு வந்து வைத்துக் கொண்டார். 
 
அவர் மொழிக்கும், அரபி மொழிக்கும், எல்லாத்துக்கும் கொண்டு வந்து வைத்துக்கொண்டார். புகாரியில் படித்து பாருங்கள். அரபுகள் யாராவது வந்திருப்பாங்க. அந்த அரபுகளிலேயே அவருக்கு நெருக்கமானவரை கூட்டு வாருங்கள் பார்க்கலாம் என்கிறார் ஹிறுக்கல். அதேபோல தேடி அரபுகள் யார் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி பட்டாலம் எல்லாம் போய் தேடி கூட்டத்தை கேட்பது நீங்கள் அரபுகள் தானா இந்த முஹம்மதுக்கு ரிலேஷன் இங்கே இருக்கிறீர்களா? நான் தான் இருக்கிறேன்.
 
அறிவிப்பாளர் : அபூ சுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 7 
 
நான் தான் குளோஸ் அப்படின்னு சொல்லிட்டு வருகிறார். அபூ சுஃபியான் வந்து உட்கார்ந்து நான் கேட்கிறது எல்லாம் நீ அவர்கிட்ட சொல்லணும் அவர் எனக்கு பதில் சொல்ல ணும் புரியுதானு கேட்கிறார். அபூ சுஃபியான் யார்? சாதாரண ஆப்போசிட் இல்ல. கட்டர் ஆப்போசிட். மொத்தமா இவர்தான் வந்து ஃபண்ட் ரைஸ் பண்ணி கொடுக்கிறவர்.
 
யாருக்கு? ரசூலுல்லாஹ்வை எதிர்க்கிற அபு ஜஹல், அபூலஹப் அந்த படைகளுக்கு ஃபண்ட் பண்றவரே யாரு? அந்த மிலிட்டரிக்கு, ஆர்மிக்கு இவர் இவர்களெல்லாம் யார் என்று சொன்னால் கோத்திர குலத்தில் இருந்து தனித்துவ சண்டையில் அபூ ஜஹல் அபூலஹப் பிரிந்து போனதற்கு என்ன காரணம் பொறாமை. அபு சுஃபியான் நான் உட்கார்ந் துட்டேன். 
 
அரபுகளுடைய நல்ல பழக்கத்தையும் இங்கே வரலாற்றில் என் மீது பொய் எழுதப்பட்டு விடும் என்ற பயம் எனக்கு இல்லாமல் இருந்திருந் தால், நான் அங்கே பொய் சொல்லி இருப்பேன். அதை சொல்லிவிட்டு அவர் கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்கும் அழகா பதில் சொல்லிக்கிட்டேவரார். 
 
அறிவிப்பாளர் : அபூ சுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 7 
 
நீங்கள் அவரை எப்படி நீங்கள் கருதினீர்கள்? அப்படின்னு கேட்கும்போது எங்களில் மிகச் சிறந்தவராக நாங்கள் அவரை கருதுகிறோம் அப்படி என்கிறார். யார் சொல்கிறார்? கட்டர் எதிரி தன்னுடைய எதிரியை பற்றி ஒருத்தருடைய மஜ்லிஸிலேயே ஒரு வார்த்தை அவரா! அவர் சரி இல்லை நீங்கள் அடிச்சிருங்க அவர,
 
அப்படின்னு சொல்லி இருந்தா ஒரு யுத்தத்திற்கே அங்கே ஏற்பாடு செய்திருப்பார் அந்த நேரத்தில் அவரா! மிக சிறந்தவர், பரம்பரையால் மிகச் சிறந்தவர், உண்மையைச் சொல்லக்கூடியவர், நம்பிக்கை குறியவர், அப்படின்னு சொல்லி அவர் கேட்கக்கூடிய ஒவ்வொரு கேள்விக்கும் எது உண்மையோ, அதையே சரியான பதிலாக சொன்னாரே, 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய நபித்துவத்திற்கு அவருடைய அந்த பர்சனாலிட்டிக்கு யார் சான்று சொன்னது, எதிரிகள். அவர்களை எதிர்த்து அவர்களை அழிக்க துடித்தவர்கள் நம்முடைய ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த பர்சனாலிட்டி எப்படின்னு சொன்னா, நபி ரசூல் நுபுவன் ரிசாலத் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால், அல்லாஹுத்தஆலா இடத்திலே அல்லாஹ் தான் அதற்கு மார்க் போடக்கூடியவன். அல்லாஹ் முடிவு பண்ணி விட்டால் உங்களை விட சிறந்தவர் இங்கே யாரும் இல்லை.
 
وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ طَائِفَةٌ مِنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا
 
(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக (உள்ளத்தில்) உறுதியாக நாடியிருப்பார்கள். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். இன்னும், நீர் அறிந்திருக்காதவற்றை உமக்குக் கற்பித்(து கொடுத்)தான். இன்னும், உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 4 : 113)
 
நபியே உங்கள் மீதுதான் அல்லாஹ்வுடைய அருள் மிக மகத்தானது. அல்லாஹுத்தஆலா அதற்கு அடையாளமாக உங்களை ஹாத்தமுன் நபியாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். உங்களை அர்ஷுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூப்பிட்டு விட்டான். எல்லா சிறப்பும் குர்ஆனிலே அவருடைய கலாமிலே சிறந்த கலாம் உங்களுக்கு இறக்கி விட்டான். அதுபோக நாளை மறுமையிலே லிவாவுள் ஹம்து உங்களுக்கு தான்.
 
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا
 
இன்னும், இரவில் (கொஞ்சம்) உறங்கி எழுந்து அதை (-குர்ஆனை) ஓதி தொழுவீராக! இது உமக்கு (மட்டும்) உபரியா(ன கடமையா)கும். (மறுமையில்) மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட இடத்தில் உம்மை உம் இறைவன் எழுப்பக் கூடும். (அல்குர்ஆன் 17 : 79)
 
மக்காமில் மஹ்மூதில் நீங்கள் தான் முதலில் எழுப்பப் படுவீர்கள். உங்களுக்கு முன்னாடி யாரும் சொர்க்கத்துக்கு போக முடியாது, நீங்கள் சிபாரிசு செய்தால் தான் நான் கேள்வி கணக்கையே ஆரம்பிப்பேன் அதுவரைக்கும் எல்லாரும் நின்று தான் ஆக வேண்டும் மலக்குகளாக இருந்தாலும் சரி மனிதர்களாக இருந்தாலும் சரி எல்லாரும் நின்னு தான் ஆகணும்.
 
including யார் முதற்கண்டு நூஹ் இப்ராஹிம் மூசா ஈஷா எல்லா நபிமார்களும் முதற்கண்டு எல்லாரும் நின்னு தான் ஆகணும் நீங்கள் முதலில் சுஜூது பண்ணி என்னிடத்திலே சிபாரிசு செய்தால்தான் ரப்பே இந்த மக்களை காத்துக்கொள் இந்த மக்களை ரட்சித்துக்கொள் விசாரணையை ஆரம்பி என்று நீ சொன்னால் தான் நான் ஹிஜாபையே ஆரம்பிப்பேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
அது மட்டுமல்ல நம்பிக்கை கொண்ட மூமின்கள் நாம். நமக்கு அல்லாஹ் என்ன தெரியுமா செய்தான் ஒரே ஒரு வசனத்தை சொல்கிறான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நீங்கள் திருப்தி படுத்துவதற்கு மிகவும் தகுதியானவர்.
 
அப்போ ஒரு முஃமின் எப்படி அல்லாஹ் வுடைய பொருத்தத்தை கேட்கணும். அல்லாஹ் கிட்ட அதேபோல அல்லாஹ் விடத்திலே யாருடைய பொருத்தத்தையும் கேட்கணும். ரசூலுடைய பொருத்தத்தையும் கேட்கணும்.
 
என்னுடைய நபி என் மீது கோபப்படக்கூடாது என்று ஒரு முஃமின் அவனுடைய கவனத்தில் வைத்தவனாக இருக்க வேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அந்த நுபுவத்துடைய மக்காம் அந்த ரிசாலத்துடைய மக்காம். இந்த நபி இருக்கிறார்களே இவர்கள் தன்னுடைய உம்மத்தோட மற்ற நபிமார்களை பார்க்கும்போது, இந்த உம்மத்தோட இந்த நபி நடந்து கொண்ட அந்த நடைமுறை எந்த அளவிற்கு அல்லாஹ்விற்கு பிடித்தமாக இருந்தது. அதுக்கும் அல்லாஹ் சான்று கொடுத்து விட்டான். மற்ற நபிமார்களையும் அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான்
 
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلَ الَّذِينَ مِنْ بَعْدِهِمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ وَلَكِنِ اخْتَلَفُوا فَمِنْهُمْ مَنْ آمَنَ وَمِنْهُمْ مَنْ كَفَرَ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلُوا وَلَكِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ
 
அத்தூதர்கள் - அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் எவருடன் பேசினானோ அ(த்தகைய)வரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், (ஜிப்ரீல் என்ற) பரிசுத்த ஆத்மாவின் மூலம் அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள் கொள்கையில்) கருத்து வேறுபாடு கொண்டார்கள். ஆக, அவர்களில் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டவரும் உண்டு. இன்னும், அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (தங்களுக்குள்) சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான். (அல்குர்ஆன் 2 : 253)
 
எல்லா நபிமார்களும் தான்.சிலர் சிலரை விட நாம் மேன்மைப் படுத்தி இருக்கிறான். 
 
وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا
 
இன்னும் (பல) தூதர்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும், பல தூதர்களுக்கு வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை உமக்கு நாம் விவரிக்கவில்லை. இன்னும், மூஸாவுடன் அல்லாஹ் நேரடியாக பேசினான். (அல்குர்ஆன் 4 : 164)
 
மூஸாவிடத்திலே அல்லாஹ் பேசவும் செய்திருக்கிறான். ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் ஒரு தகுதியை கொடுத்திருக்கிறான். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரும்போது எப்படி தெரியுமா அல்லாஹ் சொல்கிறான்.
 
ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ,مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ ,وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ ,وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ ,فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ,بِأَيِّكُمُ الْمَفْتُونُ ,إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
 
நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!, (நபியே!) உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை., நிச்சயமாக உமக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு., நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்., ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள், உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று, நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து யார் வழிதவறினானோ அவனை மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 68 : 1, 2, 3, 4, 5, 6, 7)
 
நேர்வழி பெற்றவன் யார்? நம்மிலே யார் என்பதை உங்களுடைய ரப்பு அறிந்தவன். மகத்தான நற்குணத்திலே நீங்கள் இருக்கிறீர். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து அல்லாஹ் சொல்கிறான். எல்லாருமே உலகத்தில் ஒரு விஷயத்தில் நாம், டாப்பாக இருந்தால் அடுத்த விஷயத்தில் மார்க் போட முடியாத நிலை மைக்கு ஆகிவிடுகிறோம்.
 
அந்த டாப்புன்னு சொல்லப் படுவதும் கடைசி வரைக்கும் டாப்பாக இருக்குமா என்று சொன்னால், அதுவும் யோசித்துப் பார்க்க வேண்டும் இங்கே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாருங்கள்.
 
அவர்களுடைய பிறப்பிலிருந்து சமூக உறவுகளிலே மிகச் சிறந்த ஒரு பண்பாட்டை கடைபிடித்தவர்கள், மௌத்தாக போகிற வரைக்கும் அதே நற்குணத்தின் உடைய உச்சத்தில் இருந்து வாழ்ந்தார்கள். எந்த தடுமாற்றமும் அவர்களது வாழ்க்கையிலே ஏற்படவில்லை. மாற்றங்கள் சிறந்த மாற்றங்களாக மேலும், மேலும் அந்த உயர்வும் சிறப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றதே தவிர அதிலே எந்த குறையும் வரவில்லை. ஆகவே தான் அல்லாஹ் சொல்கிறான்:
 
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
 
ஆக, (நபியே!) நீர் அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானவராக ஆகிவிட்டீர். இன்னும், நீர் கடுகடுப்பானவராகவோ, உள்ளம் கடுமையானவராகவோ இருந்திருந்தால் உமது சுற்றுப்புறத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக! இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேடுவீராக! இன்னும், காரியங்களில் அவர்களுடன் ஆலோசிப்பீராக! ஆக, நீர் (ஒரு முடிவை) உறுதிசெய்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) நம்பிக்கை வை(த்து தன்னை சார்ந்து இரு)ப்பவர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 3 : 159)
 
நபியே! அல்லாஹுடைய கருணை நீங்கள் இவ்வளவு மென்மையாக இருக்கிறீர்கள்.
 
وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌
 
(அல்குர்ஆன் 3 : 159)
 
நீங்கள் கடின உள்ளம் கொண்ட வராக, நீங்கள் முரடாக இருந்தீர்களே ஆனால், மக்கள் எல்லாம் உங்களை விட்டு ஓடி இருப்பார்கள். உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்கலாம். அந்த தலைவர்களுக்காக உயிரை கொடுக்கக் கூடிய மக்கள் இருக்கலாம். ஆனால், அதற்கு பின்னால் அவர்களுக்கு ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்கு மட்டுமே தன்னுடைய தோழர்கள் உலகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அல்லாஹ்வுடைய பொருத்தம், நபியினுடைய பொருத்தம், சொர்க்கம் என்ற ஒரே எதிர்பார்ப்புக்காக வேண்டி தன்னுடைய உயிரை விடுகிறார்கள். வேறு உலக ஆதாயத்திற்காக இல்லவே இல்லை. நிறைய உதாரணங்களை சொல்லலாம். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அந்த ஆளுமை ஒரு சமூகத்திலே முதலில் உயர்ந்த மனிதராக போற்றப்பட வேண்டும் என்றால் அவருடைய நற்குணம் கரெக்டாக இருக்க வேண்டும். உலகத்தில் நீங்கள் யாரை பட்டியல் போட்டாலும் சரி இதில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தான் டாப்பிலே வைக்க முடியுது. 
 
உலகத்தில் உள்ள எல்லா தத்துவ வாதிகளும் எல்லா சிந்தனை வாதிகளும் ஒருமித்து சொன்ன ஒரே மனிதர் ரசூல் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம். அப்படி என்ன செய்தார்கள் அவர்கள் அவர்களிடத் திலே என்ன குணம் இருந்தது. 
 
ஒரு சம்பவம் பாருங்க ஜைது இப்னு சுஹனா ஒரு பெரிய கல்வி மானான யஹுதி. ரொம்ப படித்தவர். அப்துல்லாஹ் இப்னு சலாம் இருந்தார்கள் அல்லவா அவர்களை மாதிரி. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினா வந்தவுடனே, இவரை சோதனை பண்ணனும் நபியா இல்லையா? ரொம்ப பேசிக்கிட்டே இருக்கிறாரே, அப்படின்னு சுத்தி சுத்தி வாராரு அந்த ஆளு. 
 
அறிவிப்பாளர் : ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அல் முஃஜமுல் கபீர் தப்ரானி, ஹாகிம், எண் : (5 / 222), (3 / 604)
 
அப்போ ஒரு சந்தர்ப்பம் வருது ரசூலுல்லாஹ் உடைய மஜ்லிஸில் சில பேர் வருகிறார்கள். தங்களுடைய ஏழ்மையை முறையிடுகிறார்கள். ரசூலுல்லாஹ்விடத்தில் ஏதாவது உதவி கேட்கிறார்கள். அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் காசு எதுவும் இல்லை. உதவி செய்ய எதுவுமில்லை. சஹாபாக்களிடம் கேட்கிறார்கள் ஒன்றுமே இல்லை.
 
அப்போ அந்த யஹுதி பள்ளிவாசலில் இருக்கிறார். ரசூலுல்லாஹ் நான் தரட்டுமா என்று கேட்கிறார். நம்முடைய மஸ்ஜிதில் நம்முடைய ரசூலுல்லாஹ் பக்கத்தில் யஹுதி சுற்றிக்கொண்டு ரசூலுல்லாஹ் நான் தரட்டுமா என்று, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்தார்கள். சரிப்பா கொடுத்திருப்பா பொறுப்பு நான் எடுத்துக்கிறேன். சரி வாங்க என்று கூட்டிட்டு போய் கொடுத்துட்டாரு.
 
என்னைக்கு கொடுப்பீங்க நான் இன்ன தேதியில் கொடுக்கிறேன். சரி அப்படின்ட்டாரு. அந்த தேதிக்கு இரண்டு நாள் முன்னாடி வந்து, சபையில் ரசூலுல்லாஹ் உட்கார்ந்து இருக்கிறார்கள். சபையிலே முஹம்மதே வாங்குன காச கொடுக்கமாட்ட. அன்னைக்கு கொடுக்க சொன்னியே உன்னுடைய காச நிறைவேற்றமாட்ட நீயும் உன் குடும்பமும் இப்படித் தான் வாங்கிக்கிட்டு கொடுக்காமல் லேட்டாகி கொண்டே இருக்கிறது. அப்படின்னு கத்துறாரு. 
 
யார் இருந்தா மஜ்லிஸில்? உமர் இருந்தார். என்ன நடந்திருக்கும்? யஹுதிய சட்டையை பிடித்து ஒரே உலுக்கு. என்ன தைரியம் உனக்கு இருக்கு. ரசூலுல்லாவிடம் இப்படி சத்தத்தை உயர்த்தி, இப்படி கடுமையா நீ கேட்கிறாயா அப்படின்னு புடிச்சு நெருக்கி விட்டார். இந்த பக்கம் பார்க்கிறார் ரசூலுல்லாஹ்வை. ஒரு நிமிடம் தன் கண்ணை அசைத்தால் முடிந்து விடும். ரசூலுல்லாஹ் உமரே ரிலாக்ஸ்அப்படிங்கிறாங்க. அவரை விடுங்கள். அவரை விடுங்கள். அவரை விடுங்கள் என்கிறார்கள். அவ்வளவுதான் அதுக்கு மேல பேச மாட்டார்கள் சஹாபாக்கள். உடனே விட்டு விட்டார்கள்.
 
இங்க வாங்க உமரே அவரை கூட்டிட்டு போங்க இந்த அன்சாரி கிட்ட போயி அவருக்கு உண்டா னதை வாங்கி அவருக்கு கொடுத்துடுங்க. அதுக்கப்புறம் ஒரு வார்த்தை சொன்னார்கள் உமருக்கு மட்டும் கேட்கிற மாதிரி ஒன்று சொல்கிறார்கள். 
 
உமர் ரலியல்லாஹு அன்ஹு அந்த யஹுதியை கூட்டிட்டு போகிறார்கள். உமர் ரலியல்லாஹு இங்க வந்து எண்ணெயில் கடுகு பொரிந்த மாதிரி பொரிஞ்சுகிட்டே போறாங்க. கூட்டிட்டு போயிட்டு என்ன செய்ய முடியும்? ரசூலுல்லாஹ் உடைய கட்டளை ஆச்சே, மீற முடியாதே, அவர் கொடுத்த அந்த தானியத்தை வாங்கிக் கொடுத்து விட்டு கடைசியில் பத்து வசக் அளவுக்கு, பத்து வசக் என்றால், ஏறக்குறைய 10 மரக்கால் இருக்கும். அந்த காலத்தில் அந்த அளவுக்கு அதிகமாக பேரிச்சம் பழத்தை கொடுக்கிறார். 
 
அந்த யஹூதி சொல்கிறார். உமரே இதுவரைக்கும் சரி, அதிகமா 10 கொடுக்கிறாயே எதுக்கு? அப்போ உமர் சொன்னார்கள், இதோ பாருப்பா நான் உன்னை மிரட்டி னேன்ல அதுக்கு தந்தது இது. உன்னை திருப்தி படுத்துவதற்காக 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அதிகமாக கொடுத்தார்கள். அப்படின்னு சொல்லிட்டு அந்த மனிதர் அப்போதுதான் உமரை தட்டி என்னை கொஞ்சம் பார் என்கிறார். உமர் பார்த்துட்டு என்னப்பா என்கிறார். என்னை தெரியவில்லை உனக்கு அப்படின்னு கேட்கிறார். தெரியலையேப்பா. அப்போ சொன்னார். நான் தான் இப்னு சுஹனா. அப்படியா அல்ஹிப்ர் அந்த யூதர்களுடைய மிகப் பெரிய அறிஞர், அவரா நீ! ஆமா அவர்தான் நான். என்னப்பா நீ ஏம்பா இப்படி நடந்துகிட்ட அப்படின்னு சொல்லிட்டு.
 
தவணை வரதுக்கு இரண்டு நாள் முன்னாடி, தவணைஇன்னும் வரல உமர் கேட்கிறார். நீ ஏம்பா அப்படி நடந்துகிட்ட. உமரே! நான் கடன் கொடுக்க வேண்டிய அவசியமும் அந்த இடத்தில் இல்லை. கொடுத்ததற்கு பிறகு தவணை இருந்தது. இரண்டு நாள் இருந்தது. 
 
முன்னாடி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நபி மதீனாவுக்கு வந்ததிலிருந்து நான் அவரை சோதிக்க வேண்டும் என்று சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டே இருந்தேன்ஞ் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அதனாலதான் நான் இதை செய்தேன். என்னப்பா சோதிச்ச தவ்ராத்தில் சொல்லப் பட்டிருக்கிறத. 
 
இந்த நபி எப்படி என்று சொன்னால் மூடர்கள், மடையர்கள், அறிவீனர்கள், முட்டாள்கள் அவர்கள் மீது வரம்பு மீறினாலும் அது அவருக்கு சகிப்பையும், பெருந்தன்மை யையும், மன்னிப்பையும் அதிகப்படுத்தும் என்று, இந்த நபியைப் பற்றி தவ்ராதிலே எப்படி எழுதப்பட்டிருக்கிறது.
 
இந்த நபியின் மீது மூடர்கள் வரம்பு மீறினால் அதற்கு அந்த நபி என்ன ரியாக்ஷன் பண்ணுவாங்க?சகிப்புத்தன்மையை, பெருந் தன்மையை மன்னித்தலை தான் அவர் அதிகப்படுத்துவார். அவர் கள் எந்த அளவுக்கு முட்டாளாக நடக்கிறார்களோ! அந்த அளவுக்கு இவர்கள் அறிவாளியாக நடப்பார்கள். 
 
அவர்கள் எந்த அளவு திட்டுகிறார்களோ அந்த அளவு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகிய வார்த்தை சொல்வார்கள். அதை நான் சோதிக்கணும் என்று விரும்பி னேன். சோதித்து விட்டேன். அஸ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅ‌ஸ்ஹது அன்ன முஹம்மது ரசூலுல்லாஹ். 
 
அன்பானவர்களே! இன்று சீரா உடைய புத்தகங்கள் நமக்கு முன்னால் திறந்திருக்கின்றன. அந்த படிப்பினை கண்ணோட்டத் தோடு ரசூலுல்லாஹ்வை அறிந்து கொள்ளாமல் நாம் தான் இன்று குறை செய்தவர்களாக இருக்கிறோம். 
 
நாம் குறை செய்தவர்களாக மட்டுமல்ல. இந்த உலக மக்களுக்கு நம்முடைய நபியை அறிமுகப்படுத்தாத குற்றவாளிகளாகவும், இந்த நபியினுடைய உயர்வை அவர்களுடைய சிறப்பை எடுத்துச் சொல்லாத பாவிகளாகவும், நாம் இருக்கிறோம். இது மார்க்கத்தின் உடைய மிகப்பெரிய குறைபாடு என்பதை உணர்வோமாக! எவ்வளவுதான் தூற்றக்கூடியவர்கள் வந்தாலும் அவர்களுடைய கூற்றுகள் அவர்களுடைய ஏச்சுக்கள் ,பேச்சுக்கள் அனைத்தும் இந்த வரலாறிலேயே இல்லாமல் போய்விடும். அல்லாஹ்வுடைய புகழும் ரசூலுடைய புகழும் நிலைத்து நிற்கும்.
 
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ,مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ,سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ ,وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ,فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ
 
அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும்., அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.), அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்., இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).(அல்குர்ஆன் 111 : 1, 2, 3, 4)
 
குறைஷிகளிலேயே ரசூலுல்லாஹ்வை மிக அதிகமாக தூற்றியவன் அபூலஹபும் அவருடைய மனைவியையும் அல்லாஹுத்தஆலா அவர்களை பழித்தான். மறுமை நாள் வரை பழிக்கப்பட்டவர்களாக அல்லாஹ் ஆக்கிறான். யாரும் தயவு செய்து இப்படி நினைத்து விடாதீர்கள் ரசூல் அல்லாஹ் ஏசிய மனிதன் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பித்து விடுவான் என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்திலேயே நடந்த வரலாறு நிறைய இருக்கிறது.அதற்குப் பின்னாலும் வரலாறுகள் இருக்கின்றன நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். 
 
நம்முடைய இந்த சபையின் உடைய நோக்கம். நாமும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிவது சரியான ஆதாரங்களோடு அவர்களுடைய உண்மையான சீராவிலிருந்து அதை நாம் புரிந்து நம்முடைய வாழ்க்கையிலே கடைபிடித்து, பிறகு அந்த நபியைப் பற்றி இந்த உலக உம்மத்துக்கு நாம் எடுத்து சொல்வது. 
 
அதுதான் உண்மை யில் நபிக்காக நாம் செய்யக் கூடிய உண்மையான அல்லாஹ் வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த தியாகமாக இருக்கும் அல்லாஹ் சுபஹானல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் அந்த நசீபை தந்தருள்வானாக, அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் உண்மையாக நேசிக்க கூடிய அந்த உயர்ந்த உள்ளத்தையும், அவர்களுடைய நேசத்திற்காக அவர்களுடைய தீனை பின்பற்றக்கூடிய உயர்ந்த பக்குவத்தையும், அந்த தீனின் பக்கம் அழைக்கக்கூடிய உயர்ந்த தியாகத்தையும், அல்லாஹுத் தஆலா எனக்கும் உங்களுக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் தந்தருள்வானாக ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
صحيح مسلم (1/ 377)
 
23 - (532) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وَقَالَ أَبُو بَكْرٍ: - حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ النَّجْرَانِيِّ، قَالَ: حَدَّثَنِي جُنْدَبٌ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ، وَهُوَ يَقُولُ: «إِنِّي أَبْرَأُ إِلَى اللهِ أَنْ يَكُونَ لِي مِنْكُمْ خَلِيلٌ، فَإِنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ، إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ»
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/