HOME      Lecture      ரஸுலுல்லாஹ் அகிலத்திற்கான அருளும் நேர்வழியும்! | Tamil Bayan - 727   
 

ரஸுலுல்லாஹ் அகிலத்திற்கான அருளும் நேர்வழியும்! | Tamil Bayan - 727

           

ரஸுலுல்லாஹ் அகிலத்திற்கான அருளும் நேர்வழியும்! | Tamil Bayan - 727


ரசூலுல்லாஹ் அகிலத்திற்கான அருளும் நேர்வழியும்
 
தலைப்பு : ரசூலுல்லாஹ் அகிலத்திற்கான அருளும் நேர்வழியும்
 
வரிசை : 727
 
இடம் : அஹ்லே ஹதீஸ் மர்கஸ் ஜமாலியா, பெரம்பூர்
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -26-06-2022 | 25-11-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்களே! அன்பிற்கும் மரியாதைக்குரிய சமுதாய பெரியோர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வுடைய அருளால் ஒரு சிறப்பான சபையிலே நாமெல்லாம் இப்போது இருக்கிறோம். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அடிப்படையாக வைத்து அழகிய தலைப்புகளைக் கொண்டு மார்க்க அறிஞர்கள் இங்கு உங்களுக்கு ஈமானை அதிகரிக்கும்படியான அல்லாஹ்வுடைய அன்பையும், ரசூலுல்லாஹ்வுடைய அன்பையும் நமக்கு அதிகரிக்கச் செய்யும்படியான பல விஷயங்களை நம்மோடு பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! அந்த தொடரிலே நானும் உங்களோடு சில செய்திகளை, சில உணர்வுகளை உங்களோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.  எதன் மூலமாக அல்லாஹ்வுடைய அன்பும் ரசூலுல்லாஹ் உடைய அன்பும் நமக்கு அதிகமாகும் எந்த அன்பை கொண்டு அல்லாஹ்வுடைய மன்னிப்பை நாம் ஆதரவு வைக்க முடியுமோ, எந்த அன்பை கொண்டு நாளை மறுமையினுடைய வெற்றி ஆதரவு வைக்க முடியுமோ, எந்த அன்பின் பொருட்டால் நாளை மறுமையிலே இன்ஷா அல்லா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஷஃபாஅத்து கிடைக்கும் என்று நாம் ஆதரவு வைக்க முடியுமோ, அந்த அன்பை ரசூலுல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய அந்த மரியாதையை, அந்த கண்ணியத்தை நம் உள்ளங்களில் அதிகரிக்கச் செய்யும்படியான சில விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த நேரத்திலே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அல்லாஹுத்தஆலா நமக்கு அந்த நல்ல உணர்வை ஈமானிய தன்மைகளை, பண்புகளை நமக்கு இலகுவாக வழங்கி அருள்வானாக ஆமீன்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது, அவர்கள் மீது அன்பு வைப்பது, அவர்களை கண்ணியப்படுத்துவது, ரசூல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்லப்பட்டாலே! உள்ளத்திலே அன்பு வரவேண்டும், ஒரு மரியாதை வரவேண்டும், ஒரு பாசம் வர வேண்டும் அவர்கள் மீது நமக்கு ஒரு ஈடுபாடு இருப்பதை நாம் உணர வேண்டும், இது அல்லாஹ்வையும் ரசூலையும் நாம் நம்பிக்கை கொண்டோம் என்பதற்குரிய முக்கியமான அடையாளங்களில் ஒன்று. அல்லாஹுத்தஆலா கூறுகிறான் பாருங்கள்
 
الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
 
அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியாகிய இத்தூதரை பின்பற்றுவார்கள். தங்களிடமுள்ள தவ்ராத் இன்னும் இன்ஜீலில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் காண்பார்கள். அவர்களுக்கு நன்மையை அவர் ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார்; இன்னும், நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; இன்னும், கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார்; இன்னும், அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட (குர்ஆன் என்ற) ஒளியை பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன்  7 :157)
 
அல்லாஹுத்தஆலா இந்த வசனத்திலே அல் அஃரஃப் உடைய 157வது வசனத்திலே வெற்றியாளர்கள் யார் அவர்களுடைய அடையாளங்கள் என்ன? என்பதை சொல்லும்போது முதலாவதாக சொல்கிறான் அந்த நபியை ஈமான் கொண்டவர்க فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ இரண்டாவதுوَعَزَّرُوْهُ அந்த நபியை கண்ணியப்படுத்தியவர்கள் وَنَصَرُوْهُ அந்த நபிக்கு உதவியவர்கள் பிறகு அந்த நபியோடு இறக்கப்பட்ட மிகப்பெரிய ஒளியாகிய பிரகாசமாகிய குர்ஆனை பின்பற்றியவர்கள். சொல்கிறான் இவர்கள்தான் வெற்றியாளர்கள் முழுமையான நிறைவான வெற்றியாளர்கள்.
 
ரசூலின் மீது ஈமான் இருக்க வேண்டும், ரசூலின் மீது மரியாதை அன்பு மரியாதை பாசம் கலந்து ஒருவரை கண்ணியப்படுத்துவது. பயந்து அல்ல பணத்துக்காகவோ, பதவிக்காகவோ, வேற ஏதாவது மற்ற உலக ஆசைகளுக்காகவோ மக்கள் சிலர் சிலரை கண்ணியப்படுத்துவார்கள் அப்படிப்பட்ட கண்ணியம் அல்ல எந்த கண்ணியம் ஈமானின் அடிப்படையில் வருகிறதோ, எந்த கண்ணியம் உள்ளத்தினுடைய அந்த பாசத்தின் அடிப்படையில் வருகிறதோ, ஒரு உண்மையான ஒரு மகன் உண்மையான ஒரு பிள்ளை, தந்தை, தாயை கண்ணியப்படுத்துவது போல, உண்மையான ஒரு அமீரை அந்த அமீருடைய முத்தபீஆ கண்ணியப்படுத்து போல இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ரசூல் உடைய அந்த மதிப்பும் மரியாதையும் என்பது
 
சகோதரர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த கண்ணியத்திற்கு தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள. இந்த கண்ணியத்திற்கு, இந்த மரியாதைக்கு, தகுதி உள்ளவர்களாக இருந்தார்கள் நம்முடைய அதாவது நபிமார்களுடைய அந்த வரிசையிலே அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபிமார்களிலே சிறந்தவர்கள்.
 
சிறந்த உம்மத்துக்கு சிறந்த நபியை தேர்ந்தெடுத்து அவருக்கு அல்லாஹ் சுபஹானஹுதஆலா மேலும் சில சிறப்புகளை கொடுத்து கௌரவித்தான் கண்ணியப்படுத்தினான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா சான்று கொடுக்கிறான்.
 
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏
 
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68 : 4)
 
உலகத்துல முதல்ல இந்த கண்ணியம் மதித்தல் அன்பு என்பது காசு, பணம், பதவி எல்லாம் அப்புறம்தான் முதல்ல ஒருத்தர் மேல அன்பு வரணும் அவர் மேல மதிப்பு வரணும் ஒருத்தர் மேல உண்மையான நேசம் ஈடுபாடு வரவேண்டும் என்றால் அவரிடத்திலே உயர்ந்த சிறந்த நற்குணம் இருக்க வேண்டும்.
 
அப்போதுதான் அவரைப் பார்ப்பவர்கள், அவரோடு பழகக் கூடியவர்கள் அவரை அவரை உண்மையான அன்பைக் கொண்டு அன்பு வைப்பார்கள் , உண்மையான நேசத்தை கொண்டு நேசிப்பார்கள்.
 
அப்படி இல்லை என்றால் அவரிடம் இருக்கக்கூடியதின் மீது ஆசை வைத்தோ அல்லது அவரது அப்படி தண்டனையை பயந்தோ தான் அவரை நேசிப்பார்கள். அப்படி இல்லை என்றால் நேசம் என்பதும் கண்ணியப்படுத்துதல் என்பதும் உண்மையாக இருக்காது.
 
அன்பு சகோதரர்களே! இங்கே நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய அந்த கண்ணியம் அந்த மரியாதை இருக்கிறதே சஹாபாக்கள் ரசூலுல்லாவிற்கு செய்த அந்த கண்ணியம் அந்த மதிப்பு அந்த மரியாதை அந்த மகத்துவம் இருக்கிறதே, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு தகுதியானவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உயர்ந்த அந்த அழகிய குணத்தால் அல்லாஹ் சொல்கிறான்
 
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏
 
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68 : 4)
 
நபியே நீங்கள் மிக மகத்தான குணத்தின் மீது இருக்கிறீர்கள். இங்கே அறிஞர்கள் சில விளக்கங்கள்
 
وَاِنَّكَ لذو خُلُقٍ عَظِيْمٍ‏
 
என்று அல்லாஹ் சொல்லி இருக்கலாம்.
 
وإنك لصاحب خُلُقٍ عَظِيْمٍ
 
என்று சொல்லி இருக்கலாம் அல்லது ஹுலுக்கன் அலிமன் ஹசனன் என்று அல்லாஹ் சொல்லி இருக்கலாம். 
 
وإن فيك لخلقا عظيما, لخلقا حسنا
 
அப்படி எல்லாம் சொல்லாமல் அல்லாஹ்வுடைய அந்த களாம் முயீஜீஸ் என்று அல்லாஹுத்தஆலா வர்ணிக்கிறானே இதனுடைய ஞானம் என்ன என்று அறிஞர்கள் சொல்லும் போது நாமெல்லாம் எப்படி என்றால் உண்மை சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்வோம் ஆசைப்படுவோம் ஆனால் சொல்ல முடியுமா? சொல்லணும் ஆனால் மாட்டிக் கொள்வோம் இல்லையா?
 
பொறுமையா இருக்கணும் கோபமே வரக்கூடாது தான் நினைக்கிறோம் நினைக்கும் போதே கோவப்பட்டுறோம் இல்லையா? யாரையுமே திட்ட கூடாதுன்னு யோசிக்கிறோம், யாரிடமும் சண்டை போடக்கூடாதுன்னு நினைக்கிறோம் அத நெனச்சிட்டு இருக்கும் போதே பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டுறோம் புள்ளை கிட்ட சண்டை போட்டுறோம் வரவன்கிட்ட சண்டை போட்டுறோம் எல்லார்கிட்டயும் சண்டை போட்டுறோம்.
 
என்ன விஷயம் நம்ம எல்லாரும் நல்லவங்க இருக்கணும்னு ஆசைப்படறோம், நற்குணத்தை தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுகிறோம் அதை பழக்கத்தில் கொண்டு வரணும் என்று ஆசைப்படுகிறோம்.
 
ஆனால், டக்குனு மாறிவிடுகிறோம் கேக்கும் பொழுது இன்ஷா அல்லாஹ் நம்ம போயிட்டு இதே போல இருக்கணும் ஆசையோட கேப்போம் இந்த கதவுக்கு வெளியே போகும் போதே முடிஞ்சு போச்சு நம்ம கதை சகோதரர்களே! இங்கே உலகத்தில் எப்பேர்பட்ட மனிதனாக இருந்தாலும் சரி அவரிடத்தில் சில தீய மாற்றங்களும் இருக்கும்.
 
வேறுபாடு இருக்கும், சொல்லுக்கும், செயலுக்கும், இடையிலே குழப்பங்கள் இருக்கும் ஆனால், எந்த வகையிலுமே குணத்தால் ஒருவரை தவறு சொல்ல முடியாத ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி, ஒரு இமாம் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தான் அவர்களை நேசித்தவர்களும் சொல்லுவார்கள், அவர்களை எதிர்த்தவர்களும் சொல்லுவார்கள். நேசித்தவர்கள் மட்டுமல்ல அவர்களை எதிர்த்தவர்களும் என்ன விஷயம்
 
لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏
 
தன்னுடைய குணத்தை கண்ட்ரோல் செய்யக்கூடியவர்கள். தன்னுடைய குணத்தின் மீது தன்னை அடக்க கூடியவர்கள் தன்னுடைய குணத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் தன்னுடைய கோபத்தை, தன்னுடைய ஆசையை, தன்னுடைய வெறுப்பை, தன்னுடைய எல்லா விஷயங்களையும் அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கு ஏற்ப அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது. ஆகவே தான் அல்லாஹுத்தஆலா
 
لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏
 
என்ற அலாவுடைய வாசகத்தை பயன்படுத்துகிறார் என்று சில முஃபஸில்கள் விளக்கம் கூறுவதை பார்க்கிறோம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. யூதர்கள் சாட்சி சொன்னார்கள் அறியாத முட்டாள் தன்னுடைய முட்டாள் தனத்தால் அறியாமையால் முரட்டுத்தனத்தால் எவ்வளவுதான் அவன் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அது ரசூலுல்லாஹ்விற்கு மன்னிப்பையையும்,
 
பெருந்தன்மையையும், விட்டுக்கொடுத்தலையும் சகிப்பையும் அதிகப்படுத்தியதே தவிர முட்டாள்கள் உடைய இந்த நடவடிக்கையும் ரசூலுல்லாஹ்விற்கு கோபத்தையோ, அந்த முரட்டு குணத்தையோ ஏற்படுத்தவில்லை அல்லாஹ் அப்படித்தான் அவர்களை பழக்கப்படுத்தினான்.
 
خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ‏
 
(நபியே!) பெருந்தன்மையை (-மன்னிப்பை) பற்றிப் பிடிப்பீராக. இன்னும் நன்மையை ஏவுவீராக. இன்னும், அறியாதவர்களை புறக்கணிப்பீராக. (அல்குர்ஆன் 7 : 199)
 
அல்லாஹ்வுடைய தர்பியத் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு யாருடைய தர்பியத் அல்லாஹ்வுடைய தர்பியத் ஒவ்வொரு விஷயத்தையும் அல்லாஹுத்தஆலா அவர்களை அழகு படுத்திக் கொண்டே இருந்தான். 
 
சகோதரர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் ஏன் கண்ணியப்படுத்த வேண்டும் என்றால்? அவர்கள் மீது நாம் ஏன் அன்பு வைக்க வேண்டும் என்றால்? அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்த நிஃமத்துகளிலேயே பெரிய நிஃமத் அவர்கள் தான். 
 
நம்முடைய தாய் தந்தை, நம்முடைய இன்ன, பிற, உறவுகள் இப்படியாக எல்லோரையும் ஒரு பட்டியல்ல போடுங்க, அவர்கள் நமக்கு செய்த பேருபகாரங்களை எல்லாம் ஒரு பட்டியல் போடுங்க பிறகு, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக நமக்கு கிடைக்கப்பெற்ற அந்தப் பேருஉபகாரத்தை பட்டியல் போடுங்க,
 
இப்ப முடிவு செய்யுங்க யாருடைய இஹ்ஸான் , யாருடைய உபகாரம், யாருடைய அந்த அருள், யாருடைய அந்த கருணை, அந்த பாசம், உங்கள் மீது அதிகமாக இருக்கிறது என்று.
 
ரசூலுல்லாஹ்வால நமக்கு என்னங்க கிடைச்சுச்சு? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நமக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் கிடைத்தது, அவர்களால் நமக்கு சொர்க்கப்பாதை கிடைத்தது, நரகத்தை விட்டு பாதுகாப்பு கிடைத்தது, ஹிதாயத்து கிடைத்தது, யாரின் மூலமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலமாக
 
அல்லாஹுத்தஆலா உலக மக்களுடைய ஹிதாயத்திற்கு, நேர்வழிக்கு, அவர்களைத் தேர்ந்தெடுத்தான், எந்த ஹிதாயத்தின் மூலமாக படைத்தவனை அறிந்து கொண்டு அந்தப் படைத்தவனை வணங்குகிறோமோ, ஹலாலை தெரிந்து கொண்டோமோ, நம்முடைய குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை இப்படியாக எதை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்து கொண்டோமோ, அந்தப் பாதையை நமக்கு அழகிய முறையிலே காட்டிக் கொடுத்தவர்கள்.
 
யார்? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆம் எப்படி அவர்களை கண்ணியப்படுத்தாமல், அவர்களை நேசிக்காமல் இருக்க முடியும் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் பாருங்கள்.
 
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
 
நம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பியபோது. அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும், அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; இன்னும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.(அல்குர்ஆன் : 3:164)
 
அல்லாஹ் சொல்கிறான் அல்லாஹுத்தாலாவுடைய பேருபகாரம் அல்லாஹ்வுடைய பெரிய மின்னல், பெரிய அருள், மூஃமின்கள் மீது எது? அவர்களிலிருந்து ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பி அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி காண்பிக்க வைத்து அவருடைய உள்ளங்களை தஸ்கியா பரிசுத்தப்படுத்தி அவர்களுக்கு குர்ஆனையும், ஞானத்தையும் சொல்லிக் கொடுக்க வைத்தானே இதைவிட பெரிய அருள் பேருபகாரம் என்ன இருக்க முடியும். அது மட்டுமல்ல அல்லாஹுத்தஆலா நம்முடைய நபியைப் பற்றி இப்படியும் சொல்லுகிறான்.
 
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
 
(நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.(அல்குர்ஆன் : 21:107)
 
அகில உலக மக்களுக்கு எல்லாம் ஒரு கருணையாக, ஒரு ரஹமத்தாக ஒரு அல்லாஹ்வுடைய அருட்கொடையாகவே தவிர, நபியே நாம் உம்மை அனுப்பவில்லை 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய இத்தகைய ஒரு பாக்கியம் பெற்ற ஒரு தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு கிடைக்கப்பெற்ற எல்லா நிஃமத்துகளும் எந்த நிஃமத்துகளின் மூலமாக இன்று நாம் மனிதர்களாக, மூஃமின்களாக, முஸ்லிம்களாக இருக்கிறோமோ அது யார் மூலமாக நமக்கு கிடைக்கப்பெற்றது? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு வழிகாட்டியாக, அதற்கு ரசூலாக, நபியாக
 
அல்லாஹுத்தஆலா நமக்குத் தேர்ந்தெடுத்தவர்கள் தான் யார்? முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத்தஆலா எவ்வளவு அழகாக நம்முடைய நபியை புகழ்கிறான் பாருங்கள். அவன் புகழ்கிறான், அவன் கண்ணியப்படுத்துகிறான்.
 
يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا ,وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا
 
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்.) (அல்குர்ஆன் 33 : 45; 46)
 
அல்லாஹ்வுடைய புகழ் அல்லாஹ் புகழ்கிறான், அல்லாஹ் வாழ்த்துகிறான் அல்லாஹ் பெருமையை அங்கே பேசுகிறான் நபியே நீங்கள் யார்? உங்களை அனுப்பியவன் யார்? நாம் அனுப்பினோம் உங்களை நாம் உங்களை தேர்ந்தெடுத்தோம்.
 
وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ
 
இன்னும், உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், (தான் விரும்பியவர்களை நேர்வழிக்கு) தேர்ந்தெடுக்கிறான். (இணைவைக்கின்ற) அவர்களுக்கு (அல்லாஹ்வின் மீது ஆட்சேபனை செய்ய எந்த) உரிமையும் இல்லை. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிக உயர்ந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்  28 : 68)
 
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் ஹாத்தமுல் அன்பியாவாக தேர்ந்தெடுக்கிறான். ஒவ்வொரு செலெக்ஷனும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அந்த ஷிஃபத்தை கொடுக்கக் கூடியவன் அல்லாஹுத்தஆலா அல்லாஹ் கண்ணியப்படுத்தினான் எப்படி? நபியே! உங்களை சாட்சியாளராக ஆக்கி இருக்கிறோம் உலக மக்கள் எல்லோருக்கும் கடைசியில் நபிமார்கள் உட்பட யார் உட்பட? நபிமார்கள் உட்பட
 
நாளை மறுமையிலே அவர்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாட்சி கூறியதற்கு பிறகு தான் அங்கு விசாரணை ஆரம்பமாகும். வெற்றியாளர்கள் யார்? தோல்வியாளர்கள் யார்? என்று பிரிக்கப்படுவார்கள். ரஸுலுடைய சாட்சிக்கு முன்னாடி எல்லாரும் யா நப்ஸு! யா நப்ஸு என்று பயந்து கொண்டு தான் இருப்பார்கள்.!
 
وَّمُبَشِّرًا
 
(அல்குர்ஆன் 33 : 45)
 
நபியே உங்களை நற்செய்தி சொல்லக்கூடியவராக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி சொல்லக்கூறவர்களாக அனுப்பப்பட்டார்கள்.
 
وَّنَذِيْرًا ‏
 
அல்லாஹ்வை நம்பாதவர்கள் மறுமையை மறுக்கக் கூடியவர்கள் இந்த குர்ஆனை மறுக்கக் கூடியவர்களுக்கு எச்சரிக்கையாளராளாக அனுப்பப்பட்டார்கள் தெளிவான எச்சரிக்கை
 
தெளிவான எச்சரிக்கை கொடுத்தார்கள் யாரையும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயப்படவில்லை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே என்ன பெரிய ராணுவம் இருந்ததா? பெரிய பட்டாளங்கள் அதாவது ஆர்மி பல்லாண்டு காலமாக அதாவது ட்ரெயினிங் கொடுக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட ராணுவம் இருந்துச்சா ? அல்லாஹ் சொன்னான்: 
 
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَه‌ وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ‌
 
தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை நீர் எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். (அல்குர்ஆன்  5 : 67)
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குடிசையில் உட்கார்ந்து கொண்டு தன்னை சுற்றி ஆயுதம் ஏந்தி எந்த படையும் இல்லாமல் இங்கே இருந்து கொண்ட கைஸருக்கு தபால் எழுதுறாங்க கைஸரே! முஸ்லிமாய்டு இல்லனா என்னுடைய ராணுவம் அங்கே வரும் என்று சொல்லி, கிஸ்ராவே முஸ்லிமாய்டு இல்லனா என்னுடைய ராணுவம் அங்கே வரும் என்று சொல்லி, 
 
மூகவுகிஸே முஸ்லிமாய்டு இல்லனா என்னுடைய ராணுவம் அங்கே வரும் என்று சொல்லி என்ன தைரியம் சொல்லுங்கள் பார்க்கலாம் யாருக்கு வரும் அந்த தைரியம் அல்லாஹுத்தஆலா பாதுகாத்தான். ஈமான் இஸ்லாம் அந்த எக்கீம் அல்லாஹுத்தல்லா அவர்களை அப்பேற்பட்ட எச்சரிக்கையாளர்களாக ஆக்கினான் யாருக்கும் பயப்படுவதில்லை.
 
الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّهَ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا
 
அவர்கள் (-அந்தத் தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை -சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; இன்னும் அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். (அடியார்கள் அனைவரையும்) விசாரிப்பவனாக அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 33 : 39)
 
அல்லாஹ்வுடைய தூதுவத்தை எடுத்துச் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் அல்லாஹ்வை மட்டுமே பயப்படுவார்கள். அல்லாஹ்வைத் தவிர யாரையும் அந்த நபிமார்கள் அஞ்ச மாட்டார்கள் அதிலே முதலாவதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். எல்லா வழியிலும் தெளிவான யார் வந்தாலும் சரி எப்பேர்பட்ட எதிர்ப்பு வந்தாலும் சரி யோசித்துப் பாருங்கள், 313 பேரை எடுத்துக்கொண்டு ஆயிரம் கணக்கான முழு ஆயுதங்களோடு இருக்கக்கூடிய முன்னாடி போய் நிக்கணும்னா அந்த அமீருக்கு அந்த கமெண்டருக்கு அந்த தளபதிக்கு எவ்ளோ தைரியம் வேணும் யோசிச்சு பாருங்க சுபஹானல்லாஹ்
 
சகோதரர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய புகழ்ச்சியாக அல்லாஹ் சொல்கிறான். நபியே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர் நபியே! ரசூலுல்லாஹ் உடைய வேலையே அதான் தாவா தான் அழைச்சிக்கிட்டே இருந்தாங்க யாரைப் பார்த்தாலும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு அல்லாஹ்வின் அடியானை அல்லாஹ்விடம் கொண்டு போய் சேர்க்கணும் அல்லாஹ்வுடைய அடியார்களை அல்லாஹ்வை வணங்க கூடியவர்களாக , அல்லாஹ்வை சுஜூது செய்யக் கூடியவர்களாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மிகப்பெரிய அந்த நற்குணம் என்ன? அதில் முக்கியமானது என்ன தாஆவா
 
அப்ப ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய தாஆவாவின் மூலமாகத்தான் இஸ்லாம் பரவியது இன்று நான் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்றால் அந்த ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் எவ்வளவு நம்முடைய அன்பை, நேசத்தை கொடுக்க வேண்டும் அவர்களை நாம் எந்த அளவு மரியாதை செய்ய வேண்டும். 
 
சகோதரர்களே! இன்னொரு விஷயம் பாருங்கள் அல்லாஹுத்தஆலா நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழும் பொழுது இப்படி சொல்கிறான்.
 
وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
 
இவ்வாறுதான், நாம் நமது கட்டளையினால் (நம்மிடமிருந்து இந்த குர்ஆனை எல்லோருக்கும்) அருளாக (இருக்கும்படி) உமக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்திருக்கவில்லை. எனினும், நாம் இ(ந்த வேதத்)தை ஓர் ஒளியாக ஆக்கினோம். இதன் மூலம் நமது அடியார்களில் நாம் நாடுகிறவர்களுக்கு நாம் நேர்வழி காட்டுகிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறீர். (அல்குர்ஆன்  42 : 52)
 
صِرَاطِ اللَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ أَلَا إِلَى اللَّهِ تَصِيرُ الْأُمُورُ
 
அல்லாஹ்வின் பாதையின் பக்கம் (நீர் நேர்வழி காட்டுகிறீர்). வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் (எல்லாம்) திரும்புகின்றன. (அல்குர்ஆன் 42 : 53)
 
நபியே! நீங்கள் மிக நேரான பாதையில் மக்களை வழிகாட்டுகிறீர்! ரசூலை பிடிச்சிட்டா அவங்க கரத்தைப் பிடிச்சிட்டா அவங்கள முன்னாடி வச்சு பின்னாடி போயிட்ட நேரா சொர்க்கம் தான் நீங்க ரொம்ப கஷ்டப்படத் தேவையில்லை தீன்ல கஷ்டமே கிடையாது யாருங்க சொன்னது தீன்ல கஷ்டம்னு இத்திபா செஞ்சா கஷ்டம் கிடையாது இபுத்திதா செஞ்சா கஷ்டம் பின்னாடி போயிட்டே இருக்க வேண்டியது தான் நம்ம குருடர்கள் நம்ம யாரு குருடர்கள்,
 
நம்ம யாரு முட்டாள்கள் அறிவினர்கள் நமக்கு அறிவாளியான நபியை அல்லாஹ் அனுப்பிட்டான், நமக்கு கண் பார்வை உள்ள நபியை அல்லாஹ் அனுப்பிட்டான், வெளிச்சம் உள்ள நபியை அல்லாஹ் அனுப்பிட்டான் அவரும் வெளிச்சம் உள்ளவரு, அவருக்கு கொடுத்த குர்ஆனும் வெளிச்சமானது அவரும் வெளிச்சம் மிக்கவர் அவருக்கு கொடுக்கப்பட்ட குர்ஆனும் வெளிச்சம் மிக்கது அவங்க பின்னாடி போங்க அல்லாஹ் சொன்னான் போயிட வேண்டியதுதானே?
 
உனக்கு என்ன பிரச்சனை இருக்கு? எப்ப ஒரு தனி ரூட்டை போட பாக்குறியோ, அவங்க சுன்னத்தில் இருந்து விலக பாக்குறியோ, அல்லது இன்றைய நவீன பித்அத் மாதிரி நமக்கு பித்அத்னா உடனே மவுலுது ஓதுவது, கத்தம் ஓதுவது , ஃபாத்திஹா ஓதுறது தர்காக்கு போறது மட்டும் ஞாபகம் வருது சகோதரர்களே அதுவும் பித்அத்துதான்
 
அதிலே ஷிர்க் இருக்குது, குஃப்ர் இருக்குது எல்லாம் இருக்குது அதை இன்றைக்கு நம்ம மக்கள் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டாங்க. இன்னொரு பித்அத் இருக்குது நவீன பித்அத் இந்த பித்அத் ஏற்கனவே வந்து கபருல அடக்கம் செய்யப்பட்ட பித்அத் எந்த பித்அத் இந்த இரண்டாவது பித்அத்
 
இருக்கே இது வந்துச்சு அந்த காலத்துல இல்லாம இல்ல இருந்தது அதை நம்முடைய உலமாக்கள் எல்லாம் நல்ல கஃபன் பண்ணி கஃபன் பண்ணி கபூர்ல வெச்சாச்சு அதை எழுப்பிக் கொண்டு வராங்க ஹதீஸ் தான் ஆனா அதில் கொஞ்சம் கோளாறு இருக்குது. அறிவுள தான் கோளாறு, உன் மண்டைல தான் கோளாறு , உன்னுடைய கண்ணூல தான் கோளாறு, உன்னுடைய புத்தியில தான் கோளாறு , நீ புரிஞ்சுக்கிறதுல தான் கோளாறு.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து ஒரு அறியப்பட்ட ஸஹாபி அறிவிக்க பிறகு அறியப்பட்ட ஒரு தாபீயின் அறிவிக்க பிறகு அவரிடம் இருந்து அறிவிக்கப்பட்ட ஒரு தபி தாபியீன் அறிவிக்க பிறகு அவரிடம் இருந்து அறியப்பட்ட ஒரு முஹத்திஸ் அறிவிக்க பிறகு அவரிடம் இருந்து ஹதீஸ் நூல்களுடைய ஒரு இமாம் அந்த ஹதீஸை பதிவு செய்துவிட்டார் என்றால் அட அறிவாளி நீ இல்லை உலகத்தில் உள்ள அத்தனை கோடி அறிவாளிகளும் சேர்ந்து அதுல தப்பு கண்டுபிடிக்க முயற்சி பண்ணா கண்டுபிடிச்சதுலா தான் தப்பு ஹதீஸ் தப்பாவாது.
 
உங்களுடைய அறிவுகள் எல்லாம் பொய்யாக ஆகிவிடும் உங்களுடைய அறிவுகள் எல்லாம் சூனியமாக ஆகிவிடும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய ஒரு ஹதீஸ் இல்ல ஒரு ஹதீஸினுடைய ஒரு வார்த்தை கூட பொய்யாவது. அல்லாஹ் சொல்கிறான்
 
وَاِنَّكَ لَتَهْدِىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ
 
இவ்வாறுதான், நாம் நமது கட்டளையினால் (நம்மிடமிருந்து இந்த குர்ஆனை எல்லோருக்கும்) அருளாக (இருக்கும்படி) உமக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்திருக்கவில்லை. எனினும், நாம் இ(ந்த வேதத்)தை ஓர் ஒளியாக ஆக்கினோம். இதன் மூலம் நமது அடியார்களில் நாம் நாடுகிறவர்களுக்கு நாம் நேர்வழி காட்டுகிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறீர். (அல்குர்ஆன் 42 : 52)
 
நபி சொன்னது தான் صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ‏ அப்புறம் என்ன நீ சொல்ற அல்லாஹ் என்ன சொல்றான்? நபி என்ன சொன்னாங்களோ அதுதான் صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ‏ நபியே! நீங்கள் சத்தியமாக وَاِنَّكَ لَتَهْدِىْۤ நிச்சயமா நபியே! சத்தியமா நீங்கள் கை பிடிச்சு மக்களை கொண்டு போறது. ஹிதாயத்தை கொண்டு போறதுல மக்களை எங்க கொண்டு போவீங்க மக்களைاِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ‏ எந்த صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ‏ எனது அடியார்களின் இடத்தில் கேட்டார்களோ அந்த இன் பக்கம் அவர்களை அழைத்து செல்வதற்காக தான் உங்களை நபியாக அனுப்பி இருக்கிறோம். எனவே உங்கள் உம்மத்திற்கு என்ன வேலை|
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’) அல்குர்ஆன் 3:31)
 
உங்க பின்னாடி போயிட்டே இருக்க வேண்டியது தான் உங்க கிட்ட கேள்வி கேட்கக்கூடாது கேள்வி உலகத்துல யார்ட்ட நான் கேளுங்க எந்த இமாமா இருந்தாலும் கேளுங்க எந்த முஃப்திடயும் கேளுங்க எல்லா ஃபக்கிகள்கிட்டயும் கேளுங்க கேள்வி கேட்க முடியாத ஒரு மனிதர் இருக்கிறார் சொன்னால் அவங்க ரசூல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க மட்டும் தான்.
 
اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْــٴَــلُوْا رَسُوْلَـكُمْ كَمَا سُٮِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُ
 
(இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார். (அல்குர்ஆன் 2 : 108)
 
அல்லா கேட்கிறான் என்ன மூஸாவிடம் கேள்வி கேட்ட மாதிரி ஆட்சேயபனை செய்த மாதிரி இந்த நபியிடத்தில் நீங்கள் ஆட்சேயபனை கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? முடியுமா அல்லாஹ் சொல்றான் குஃப்ரை யார் எடுத்துக் கொள்வாரோ அவர் வழி கெட்டு விடுவார்யார் ஈமானுக்கு பிறகு குஃப்ரை எடுத்துக் கொண்டானோ அவன் நேரான பாதையிலிருந்து வழி கெட்டு விட்டான்.
 
நபியிடத்திலே ஏன் எதற்கு குதர்க்கமான கேள்வி கேட்பதை வழிகேடு குஃப்ர் என்று அல்லாஹ் சொல்கிறான். ஏன் உலமாக்கள் சும்மாவா ஸஹிஹான ஹதீஸ் இன்று அறியப்பட்டதை நிராகரிக்காதீங்க மறுக்காதீங்க, மறுக்காதிங்க என்று ஹதீஸ் அறிவிக்கக்கூடிய இமாம் சொல்றாருங்க. நீ யாரை கூட்டிட்டு வந்து சஹீஹான ஹதீஸில் தப்பு கண்டுபிடிக்கலாம்னுசொல்ற சொல்லு. அல்லாஹு சுபஹானஹுவதஆலா நம்முடைய ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது
 
நாம் அன்பு வைக்கிறதுக்குநம்ம முஹபத் வைக்கிறதுக்கு, கண்ணியப்படுத்துவதற்கு அவ்வளவு விஷயம் வச்சிருக்கான் யார்கிட்ட நம்முடைய நபியிடத்தில். நமக்காக கஷ்டப்பட்டவங்க உலகமே தனக்காக கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது, உலகமே தனக்காக துஆ செய்து கொண்டிருக்கும்போது, உலகமே யார் எப்படி போனா என்ன என் பிள்ளை, என் மனைவி, என் குடும்பம், என் வீடு என்னுடைய சுகம் என்று இருக்கும்போது,
 
உலகத்துல ஒரு மனிதரை அனுப்பினா உலகத்தையே சிந்திச்சார் அவர், உலக மக்களுக்காகவே வாழ்ந்தார், உலக மக்கள் நன்மைக்காகவே அவர் எப்பொழுதும் விழித்திருந்தார் , அயராது பாடுபட்டார் என்றால் அந்த ரசூலை நாம் நேசிக்காமல்அவங்க மேல அன்பு வைக்காம இந்த அன்பை கொண்டு போய் எந்த குப்பைல வைக்க போறோம் சொல்லுங்க அல்லாஹுத்தஆலா அந்த நபியுடைய கவலையை பற்றி, அந்த நபியுடைய தியாகத்தை பற்றி, அந்த நபி இந்த உம்மத்து மேல வெச்ச பாசம், அன்பு, இரக்கம், கருணை, அந்த பேராசை , அந்த ஈடுபாடை பற்றி ரப்பு புகழ்கிறான். 
 
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
 
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார். (அல்குர்ஆன் 9 : 128)
 
அல்லாஹ் சொல்கிறான்: மூஃமின்களே! உங்களுக்கு இன்னும் புத்தி வரலையா நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? உங்களுக்கு வந்த நபி சாதாரணமான நபியா? யார் அவரு நீங்க எப்படி அவருடன் இருக்கிறீங்க, எப்படி இருக்கணும், உங்க நபி எப்படிப்பட்ட நபியா உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். 
 
அவங்களோட நீங்க எப்படி நடந்துக்கணும் உங்களிடம் வந்தவர் யார் தெரியுமா? உங்களை சேர்ந்த நபி உங்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரசூல்உங்களுக்கு கஷ்டம்னா அவரால தாங்க முடியாது. இதுக்கு மேல ஒரு தலைவருக்கு என்னங்க ஒரு சிறப்ப என்ன ஒரு தகுதியை சொல்ல வேண்டும். யார் சொல்கிறார்? உள்ளத்தை அறிந்த அல்லாஹ் சாட்சி சொல்கிறான்.
 
மனிதர்கள் மனிதர்களுக்கு சொல்ல கூடிய சாட்சிகள் தப்பாக தவறாக மாற்றமாக ஆகலாம். உள்ளத்தை அறிந்த
 
يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ
 
‏ கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 40 :19)
 
رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِىْ وَمَا نُعْلِنُ
 
“எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். பூமியிலும் வானத்திலும் எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்ததாக இல்லை.” (அல்குர்ஆன் 14:38)
 
யாருக்கு யாருக்கு உள்ளத்தில் உள்ள ரகசியங்கள் தெரியுமோ? அந்த அல்லாஹ் நம்முடைய நபிக்கு சாட்சி சொல்கிறான். அந்த நபி யார் தெரியுமா உங்களுடைய சிரமத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர், உங்களுடைய கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர். 
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ
 
ஒரு மிஸ்வாக்கை எடுத்து பல்லு விளக்குங்கள் ரசூல்லாஹ் ஆசைப்பட்டார்கள் ஒவ்வொரு வக்துக்கும் ஒவ்வொரு தொழுகைக்கும் முன்னாடி செய்ய சொல்லணும் அது நமது கஷ்டமா போயிடும்ன்னு சொல்லி ரசூலுல்லாஹ் விட்டு விட்டார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7240
 
ஒரு குச்சி பத்து கிராம் 20 கிராம் சைஸ் உள்ள ஒரு குச்சியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வக்த்துக்கும் பல்லு விளக்க சொல்வதற்கு நினைத்தார்கள் அது கட்டளையாக போட நினைத்தார்கள் அப்படி கட்டளையாக போட்டுவிட்டால் என் உம்மத்தில் யாராவது அந்த கட்டளையை விட்டுவிட்டு பாவியாக போய்விடுவார்களோ, அல்லாஹ்விற்கு மாறு செய்தவர்களாக போய்விடுவார்களோ, 
 
நாளை மறுமையில் என் உம்மத்தில் ஒருத்தர் அதனால் தண்டிக்கப்பட்டு விடுவாரோ, வேண்டாம் யா அல்லாஹ் அப்படியே இருக்கட்டும். இதுக்கு மேல என்னங்க பாசம் வேணும்? என்ன நேசம் சொல்லுங்க? த்ராவீஹ் தொழுகையை கடமையாக்கி ரெகுலராக தொழுக ஆசைப்பட்டார்கள்திடீரென்று ஒரு பயம் வந்துவிட்டது.அல்லாஹ் கடமையாக்கி விட்டால் அல்லாஹ் இந்த உம்மத்தின் மேல் ஃபர்ளாக்கிட்டால் அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா பார்த்து பார்த்து யாருக்கும் எந்த சிரமத்தையும் கொடுக்கக் கூடாது. 
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ ذَاتَ لَيْلَةٍ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي المَسْجِدِ، فَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ، فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ، فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ، فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ المَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ المَسْجِدُ عَنْ أَهْلِهِ حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، لَكِنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ، فَتَعْجِزُوا عَنْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: تَابَعَهُ يُونُسُ
 
மார்க்க விஷயத்திலும் சரி, உலக விஷயங்களும் சரி, எல்லாத்துலயும் சரி ஒரு சரியான அணுகு முறையோடு சரியான ஒரு பேணுதலோடு வாழ்ந்தவர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்கள் நினைத்தார்கள் என்று சொன்னால் ராஜா மாதிரி வாழ்ந்திருக்கலாம் அந்த நேசர்கள் எப்படி இருந்தார்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவசியமான தேவைக்கு மட்டும் தான் அந்தப் பணியாளர்களை பயன்படுத்தினார்கள் தவிர,
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய வேலையை தான் செய்து கொள்வார்கள். வீட்டில் கிழிந்த துணியை தான் தைத்துக் கொள்வார்கள்அதைக் கூட மனைவியிடம் சொல்ல மாட்டார்கள். எல்லா வேலையும் செய்வதற்கு ரெடியாக இருக்கிறார்கள் தன்னுடைய செருப்பை தைத்துக் கொள்வார்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டார்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொல்லுகின்றார்கள்.
 
எங்கள் ஒருவரை போன்று எல்லா வேலையும் செய்வார்கள் தன்னுடைய ஆட்டில் தானே பால் கறந்து கொள்வார்கள் எல்லா விஷயத்திலும். அல்லாஹ் அடுத்து சொல்கிறான் பாருங்கள்
 
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
 
‏ (அல்குர்ஆன் 9 : 128)
 
உங்கள் மேல் ரொம்ப பேராசை உள்ளவர், ரொம்ப பாசம் உள்ளவர், யார்? நமக்கு அனுப்பின நபி இருக்கிறார்களே எப்படி சொல்கிறான் அல்லாஹுத்தஆலா நம்ம மேல ரொம்ப பாசம் நம்ம அத்தா நம்ம அம்மா எல்லாத்தையும் தூக்கி ஓரமா வைங்க கண்டிப்பாக நம்ம தாய் தந்தை நம்ம மேல பாசம் உள்ளவர்கள் தான். ஆனால் ரசூலுல்லாஹ்வைவிட அதிகமாக கிடையாது,
 
சேலன்ஞ்ச் பண்ணலாம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸஸல்லமுடைய பாசம் என்பது எல்லோருடைய பாசத்தையும் மிகைக்கும்படியான பாசம்
 
ஜைத் ரழியல்லாஹு அன்ஹு உடைய குடும்பத்தார் எல்லாம் வந்து விட்டார்கள் அத்தா எல்லோரும் வந்து விட்டார்கள் தெரிஞ்சு போச்சு அத்தா மகன் ரொம்ப நாளைக்கு முன்னாடி போனவரு மிஸ் ஆகிவிட்டார் கண்டுபிடிச்சாச்சு இந்தப் பிள்ளை அத்தாவுடன் போகமாட்டேன் என்கிறார்செச்சா உடன் போக மாட்டேங்குறாரு கூட ரத்த உறவுகளோடு போக மாட்டேங்குறாரு அடிமையாய் இருக்கிறது.
 
பரவாயில்லை போக மாட்டேங்கிறாரு இவரை விட நான் யாரையும் இந்த உலகத்திலே எனக்கு தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார் எப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு உயிரை கொடுத்து விடுவார்கள் அப்படியே.
 
பார்க்க - நூல் : அல்இஸாபா  எண் : 2/494, ஆசிரியர் : இமாம் இப்னு ஹஜர்
 
حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏
 
(அல்குர்ஆன் 9 : 128) 
 
மூமின்கள் மேல ரொம்ப ரவுஃபத்துடையவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவான ஒரு சம்பவம் பாருங்க எல்லாத்துக்கும் சாட்சி சும்மா ஒரு புகழப்படக்கூடிய விசயம் அல்ல குர்ஆனில் சாட்சி இருக்கிறது,
 
حَدَّثَنِي يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَلَا قَوْلَ اللهِ عَزَّ وَجَلَّ فِي إِبْرَاهِيمَ: {رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي} [إبراهيم: 36] الْآيَةَ، وَقَالَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ: {إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ} [المائدة: 118]، فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: «اللهُمَّ أُمَّتِي أُمَّتِي»، وَبَكَى، فَقَالَ اللهُ عَزَّ وَجَلَّ: «يَا جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، وَرَبُّكَ أَعْلَمُ، فَسَلْهُ مَا يُبْكِيكَ؟» فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، فَسَأَلَهُ فَأَخْبَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا قَالَ، وَهُوَ أَعْلَمُ، فَقَالَ اللهُ: " يَا جِبْرِيلُ، اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، فَقُلْ: إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ، وَلَا نَسُوءُكَ "
 
ஹதீஸில் சாட்சி இருக்கிறது, எத்தனை சம்பவங்கள் அதாவது அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு தடவை சூரா இப்ராஹிமுடைய 36 வது வசனம் ஓதுகிறார்க ‏“என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; மேலும், எவர் எனக்கு மாறு செய்தாரோ, நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.” (அல்குர்ஆன் 14 : 36) 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம் எண் : 202 
 
யா அல்லாஹ் இந்த சிலைகள் ரொம்ப பேர வழி கெடுத்து விட்டதுயார் என்னை பின்பற்றுகிறாரோ அவர்கள்தான் என்னை சேர்ந்தவர்கள். யார் எனக்கு மாறு செய்து விடுகிறார்களோ அவர்களை நீ பார்த்துக் கொள். யார் மேல பாவமன்னிப்பு செஞ்சு திருத்தணும்னு நினைக்கிறாயோ உன்னுடைய விருப்பம் யார் மேல கருணை காட்டி நேர் வழி படுத்தனும்னு விரும்புறியோ அது உன்னுடைய விருப்பம் தண்டிக்கிறாயா அதுவும் உன் விருப்பம்.
 
யா அல்லாஹ் இந்த சிலைகள் இவ்வளவு நாசம் பண்ணி விட்டது என்னை பின்பற்றுபவர்களுக்கு மட்டும்தான் சிபாரிசு செய்ய முடியும் அவர்கள் தான் என்னை சேர்ந்தவர்கள். அடுத்து ஈஸா அலைஹி வஸல்லம்அவர்களுடைய டிக்ளரேஷனை ஓதி காட்டுகிறார்கள். சூரா அல்மாய்தா உடைய 118 வது வசனம்
 
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ‌ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
 
“அவர்களை நீ தண்டித்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.” (அல்குர்ஆன் 5 : 118) 
 
அல்லாஹ்வே நீ இவர்களை எல்லாம் தூக்கி நரகத்தில் போட்டாலும் அது உன்னுடைய விருப்பம்நீ ரப்பு அவர்கள் அடியார்கள் எல்லாம் உன்னுடைய அடிமைகள் யார் உன்னை கேட்கப் போகிறார். இல்லை நீ மன்னிக்க நாடினால் மன்னிக்க நாடினால் என்றால் கியாமத்திற்கு போன பிறகு மன்னிப்பு கிடையாது,
 
இந்த துன்யாவில் இருக்கும் பொழுது அவர்களை மன்னித்து ஹிதாயத் கொடுப்பது ஹிதாயத் கொடுப்பதாக இருந்தால் நீ ஏன் இவருக்கு ஹிதாயத் கொடுத்தாய் என்று யாரும் கேட்க முடியாது கேட்க முடியுமா? அவன் யாருக்கு வேண்டாமானாலும் ஹிதாயத் கொடுப்பான். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய செச்சாவை கொன்ற அவ்வளவு பிரியமான செச்சாவை கொன்ற வக்சிக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பான் ஹிந்துக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பான் யாருக்கு வேண்டுமானாலும் அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பான்.
 
இதயத் அல்லாஹ்வுடைய கையில் இருக்கிறது. பிரியமானவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்காமல் இருக்க மாட்டான். ரசூலுல்லாஹ்விற்கு பிரியமானவர்கள் யாரு அபுதாலிப் மீது பிரியமாக இருந்தார் அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கவில்லை இது அல்லாஹ்வுடைய கையில் இருக்கிறது. இப்படி எல்லாம் சொல்லிவிட்டு மற்ற நபிமார்கள் கையை தூக்கி விட்டார்கள் அல்லாஹ்விடத்தில் இவர்கள் துஆ செய்கிறார்கள்,
 
حَدَّثَنِي يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَلَا قَوْلَ اللهِ عَزَّ وَجَلَّ فِي إِبْرَاهِيمَ: {رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي} [إبراهيم: 36] الْآيَةَ، وَقَالَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ: {إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ} [المائدة: 118]، فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: «اللهُمَّ أُمَّتِي أُمَّتِي»، وَبَكَى، فَقَالَ اللهُ عَزَّ وَجَلَّ: «يَا جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، وَرَبُّكَ أَعْلَمُ، فَسَلْهُ مَا يُبْكِيكَ؟» فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، فَسَأَلَهُ فَأَخْبَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا قَالَ، وَهُوَ أَعْلَمُ، فَقَالَ اللهُ: " يَا جِبْرِيلُ، اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، فَقُلْ: إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ، وَلَا نَسُوءُكَ "
 
பாருங்கள். யா அல்லாஹ் என் உம்மத்தை பற்றி நான் என்ன சொல்வது யா அல்லாஹ் என் உம்மத்திற்கு நான் என்ன சொல்வது? ஒவ்வொரு நபியும் அவங்க உம்மத்து கிட்ட சொல்லிட்டாங்க நான் என் உம்மத்திடம் என்ன சொல்வது யா ! அல்லாஹ் என் உம்மத்தின் விஷயத்தில் என்ன முடிவுசொல்லி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழ ஆரம்பித்து விட்டார்கள் பக்கா, பக்கா என்று சொன்னால் கண்ணில் இருந்து நன்றாக தண்ணீர் வர வேண்டும். அதில் கொஞ்சம் சத்தம் கூட இருக்கும் வெறும் தமாஆத்து என்று சொன்னால் கண்ணில் இருந்து தண்ணீர் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும்,
 
அந்த அழுக வரும் கண்டினியுவா கண்ணீர் ஓடும் அப்போ அல்லாஹ் சுப்ஹானஹுவதஆலா ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்புகிறான் நீங்க போங்க அல்லாஹ் சொல்லி அனுப்புகிறான் உங்க ரப்புக்கு தெரியும் எனக்கு தெரியும் நீங்க போங்க எனது அடியான் முஹம்மது இடத்தில் கேளுங்கள் அவரை அழ வைத்தது எது? ஏன் அழுது கொண்டிருக்கிறார் என்று கேளுங்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம் எண் : 202 
 
ஜிப்ரீல் அலை வருகிறார்கள் ரசூலுல்லாஹ்விடம் கேட்கிறார்கள் ரசூலுல்லாஹ் சொல்கிறார்கள் எல்லாம் தெரியும் அல்லாஹ்விற்குநடக்கக்கூடிய சம்பவத்தையும் அல்லாஹ்விற்கு தெரிஞ்சுக்கிட்டு இருக்கு அப்போ அல்லாஹ் சுபஹானஹுவதஆலா ஜிப்ரிடத்தில் சொன்னான் ஜிப்ரிலே நீங்க திரும்ப போங்க முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் சொல்லுங்க, 
 
முஹம்மதே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுடைய உம்மத்துடைய விஷயத்துல நான் உங்களை திருப்திப்படுத்துவேன் நான் உங்களுக்கு மன கஷ்டத்தை கொடுக்க மாட்டேன். உங்களுடைய மனசுக்கு வலிக்கிற மாதிரிஎன்னுடைய உம்மத்தில் இவ்வளவு பேர் நரகத்திற்கு போறாங்களே இவ்வளவு பேருக்கு அதாபு அப்படிப்பட்ட ஒரு தர்ம சங்கடத்தை உங்களுக்கு நான் ஏற்படுத்த மாட்டேன். அப்படின்னு என்னுடைய நபிக்கு நீங்கள் சொல்லுங்கள் கண்டிப்பா நான் உங்களை சந்தோஷப்படுத்துவேன். சொல்லுங்கள்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம் எண் : 202 
 
சகோதரர்களே! இப்படிப்பட்ட ஒரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்முடைய அன்பிற்கு, நம்முடைய நேசத்திற்கு, நம்முடைய மரியாதைக்கு, எவ்வளவு தகுதியானவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள் எல்லா நபிக்கும் அல்லாஹுத்தஆலா ஒரு விசேஷமா ஒரு துஆ அது உங்களுக்கு கண்டிப்பா நான் கபூல் செஞ்சுக்குவேன் அல்லாஹுத்தஆலா கண்டிப்பா துஆவை கபூல் செய்வான் நிறைய துஆக்களை அல்லாஹ் கபூல் செய்கிறான் துஆ கபூலாகும் என்ற எண்ணத்தில் தான் செய்யணும் துஆ அல்லாஹ் நமக்கு ஏற்றுக் கொள்வான் அல்லது,
 
இதை விட சிறந்தது அல்லாஹ் எனக்கு கொடுப்பான் அப்படி என்ன நம்பிக்கையில் தான் நமக்கு கேட்கணுமே தவிரநிராசையில் கேட்க கூடாதுநபிமார்களுடைய துஆக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.
 
அதுலையும் விசேஷமா என்ன செய்து இருந்தான் ஒவ்வொரு நபிக்கும் ஒரு ஸ்பெஷல் துஆ கண்டிப்பா இந்த துஆவை இந்த துஆவை கபூல் செஞ்சுக்கஅல்லாஹ்ன்னு சொல்லிட்டா நான் கண்டிப்பா அதை உங்களுக்கு கபூல் செஞ்சிடுவேன் சொல்லி ஒரு துஆவை விசேஷமா ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் கொடுத்திருந்தான் அதேபோல தான் எனக்கும் அந்த துஆ இருந்துச்சு ஒவ்வொரு நபியும் அந்த விசேஷமான துஆவை துன்யாவிலேயே கேட்டுட்டாங்க நானும் என்னுடைய இந்த துஆவை,
 
யா அல்லாஹ் எனக்கு மறுமையிலே என்னுடைய உம்மத்திற்கு என்னுடைய சமுதாயத்திற்கு நான் செய்யக்கூடிய பெரிய சிபாரிசாக ஆக்கிக் கொடு அந்த சஃபாஅத்து அல்லாஹ்வின் அருளால் எனக்கு கொடுக்கப்படும் இந்த உம்மத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் யார் மரணித்தார்களோ அவருக்கு என்னுடைய சஃபாஅத்து கிடைக்கும். நம்ம என்ன செஞ்சு இருக்கிறோம் சுருக்கமாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கிறது முஹபத் வைக்கிறது, அவர்களை மரியாதை செய்கிறதுதான் நமக்குன்னு குர்ஆன் ஹதீஸை பின்பற்றக்கூடிய
 
சுன்னாவை பின்பற்றக்கூடிய நமக்கு சில அடையாளம் சுன்னத்தைப் பின்பற்றுவது அந்த சுன்னத்தைப் படிக்கிறது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைற தாவாவை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது நபியைப் பற்றிய உண்மையை அந்த வாழ்க்கை வரலாறை மக்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டே இருப்பது,
 
நமக்கும் பித்அத்வாதிகளுக்கும் இடையே வித்தியாசம் மிகப்பெரிய வித்தியாசம் அவர்கள் பித்அத்திலே ரசூலுல்லாஹ்வின் அன்பை பார்க்கிறார்கள் நாம் அல்லாஹ்வுடைய தூதரின் அந்த சுன்னத்தை பரப்புவதிலே அந்த சுன்னத்தை பின்பற்றுவதிலே ரசூலுல்லாஹ் உடைய அன்பையும், ரசூலுல்லாஹ் உடைய மதிப்பையும் கண்ணியத்தையும் பார்க்க வேண்டும் நம்முடைய கல்பு இருக்கிறதே எப்போதும் அல்லாஹ்வுடைய அன்பிலும், ரசூலுல்லாஹ் உடைய அன்பிலும் அப்படியே நீதமாக பரிசுத்தமாக இருக்க வேண்டும். 
 
நம்முடைய உள்ளங்கள் காய்ந்து விடும்படி ஆக்கி விடக்கூடாது. அல்லாஹ் சுபஹானஹுவதஆலா எனக்கும் உங்களுக்கும் ரசூல்லாஹ்வுடைய முஹபத்தையும் அன்பையும் மதித்து அவருடைய மார்க்கத்தை பின்பற்றக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

 

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

 

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

 

Website: http://www.darulhuda.net/