HOME      Lecture      கல்வியே வெற்றியின் முதல்படி! | Tamil Bayan - 728   
 

கல்வியே வெற்றியின் முதல்படி! | Tamil Bayan - 728

           

கல்வியே வெற்றியின் முதல்படி! | Tamil Bayan - 728


கல்வியே வெற்றியின் முதல் படி!
 
தலைப்பு : கல்வியே வெற்றியின் முதல் படி!
 
வரிசை : 728
 
இடம் : தாருல் ஹிதாயா மதரஸா புழல் சென்னை 
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 20-06-2022 | 19-11-1443 
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரிகளே! மாணவிகளே! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்க வந்திருக்கின்ற கற்று அதன்படி தாமும் செயல்பட்டு, பிற மக்களுக்கு அல்லாஹ்வுடைய தீனை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்திருக்கக்கூடிய சகோதரிகளே! 
 
அல்லாஹ்விடத்திலே முதலாவதாக எனக்கும், உங்களுக்கும், துஆ செய்து கொள்கிறேன்! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்மை பொருந்திக் கொள்வானாக! நம்மை மன்னிப்பானாக! எந்த இல்மை அல்லாஹுத்தஆலா இறைத் தூதர்கள் மூலமாக நமக்கு கொடுத்தானோ, அந்த இல்மை நாமும் கற்று, அந்த இல்மின் மூலமாக அல்லாஹ்வையும், அவனுடைய மார்க்கத்தையும் அறிந்து, அந்தத் தக்குவாவை பெற்று, நம்முடைய வாழ்க்கையிலே கடைபிடித்து வாழ்ந்து, அல்லாஹ்வுடைய அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கு அல்லாஹுத்தஆலா எனக்கும், உங்களுக்கும் அருள் புரிவானாக ஆமீன்!
 
அன்பு சகோதரிகளே! சகோதரி ஆலிமா எஸ் எம் ஃபாத்திமா அவர்கள் இந்த அல்ஹிதாயா என்ற கல்வி மதர்சாவை ஆரம்பித்து, அதில் உங்களை எல்லாம் அழைத்து இருக்கிறார்கள். அதனை சேர்ந்து மார்க்க கல்வியை கற்க வேண்டும் என்ற ஆசையிலே நீங்கள்  வந்திருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! ஒரு சில விஷயங்களை இந்த இடத்திலே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
முதலாவதாக நீங்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கு நன்றியை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வி கற்பதற்குரிய வாய்ப்பை அல்லாஹுத்தஆலா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தான். இல்மை கற்றுக் கொள்வதற்கு உண்டான வாய்ப்பை அல்லா ஹுத்தஆலா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தான் என்று,
 
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். எப்போதும் அந்த  நன்றிக்குரிய உணர்வு உள்ளவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். காரணம் என்ன? எந்த அளவு இந்த நன்றி உணர்வு வருகிறதோ இரண்டு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். ஒன்று அல்லாஹுத் தஆலா கல்வி கற்பதற்கு உண்டான தகுதியை உங்களுக்கு அதிகப்படுத்துவான். 
 
அல்லாஹ்விற்கு நீங்கள் நன்றி செலுத்தும் போது இரண்டு பெரிய நன்மைகள் உண்டு அதிலே முதலாவது நன்மை என்ன? கல்வி கற்பதற்கு தேவையான தகுதிகளை நினைவாற்றல் ,(ஃபஹும்) புரிந்து கொள்ள கூடிய சக்தி எது கஷ்டமாக இருக்கிறதோ அதை அல்லாஹுத்தஆலா அவன் புறத்திலிருந்து அதை இலகுவாக்கி கொடுத்தல் இப்படியாக இந்த ஒரு வாய்ப்பு உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் நன்றி செலுத்தும் போதுز
 
இரண்டாவது பெரிய நன்மை என்னவென்றால் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம் கல்விக்காக வந்து சேருவார்கள். பிறகு ஒருமாதத்தில் அல்லது, சில மாதங்களில் அல்லது, சில நாட்களிலே அவர்கள் நின்று விடுவார்கள். இதை விட்டுவிட்டு வேறு ஒரு வேலையிலே அல்லது, வேறு ஒரு காரியத்திலே அவர்கள் பிஸியாகி விடுவார்கள். நின்று விடுவார்கள். சிலர் சோர்வடைந்து விடுவார்கள். போதும் இதுதான் சொல்லித் தருகிறார்கள் என்று சலிப்பு தட்டி விடுவார்கள்‌.
 
மேலோட்டமாக அவர்கள் இந்த கல்வியை பார்த்துவிட்டு தொடர் அவர்கள் அருந்தி விடுவார்கள். அல்லாஹுத்தஆலா உங்களை பாதுகாப்பான்! நீங்கள் நன்றி செலுத்தினால் கல்வி கற்கும் போது இடையில் நிற்கக்கூடிய அந்த துர்பாக்கியத்தில் இருந்து அல்லாஹுத்தஆலா உங்களைப் பாதுகாத்து, தொடர்ச்சியாக இந்த கல்வியை நீங்கள் கற்று, இந்த கல்வியிலே ஒரு தகுதியை அடைகின்ற வரை, உங்களுக்கு தேவையான உலக காரியங்களை, உங்களுடைய குடும்ப சூழ்நிலைகளை அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்கி கொடுத்துக் கொண்டே இருப்பான்.
 
இல்முக்கு அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்ததற்கு, இந்த கல்வியை கற்றுக் கொள்ள அல்லாஹ் உங்களை  அனுப்பியதற்கு, இன்று நீங்கள் மட்டுமல்ல எப்போதும் அல்ஹம்து லில்லாஹ். ஒவ்வொரு நாளும் மதரஸாவிற்கு கிளம்பும் போது அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து, அவனுடைய குர்ஆனை கற்றுக்கொள் வதற்கு, அவனுடைய நபியின் உடைய ஹதீஸை கற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் எனக்கு வாய்ப்பைக்  கொடுத்தான்.
 
அல்ஹம்துலில்லாஹ் யா! அல்லாஹ் நீ எனக்கு வாய்ப்பு கொடுத்தாய் என்று அல்லாஹ் விற்கு இன்றும், அது போன்று வரக்கூடிய ஒவ்வொரு நாளிலும் நீங்கள் நன்றி செலுத்தி கொண்டு இருக்கும் போது, இரண்டு பெரிய நிஃமத்துகள் இருக்கின்றன. நிறைய அல்லாஹ்வுடைய வெகுமதிகள் அதிலே இரண்டு நிஃமத்துகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் உங்களுக்கு கொடுப்பான்.
 
முதலாவது இந்த கல்வியை கற்றுக் கொள்வதற்கு தேவையான தகுதிகளை, அது என்ன? மனன சக்தி, புரிந்து கொள்ளக்கூடிய சக்தி இதையெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு லேசாக்கி கொடுப்பான். இரண்டாவது என்ன? தொடர்ந்து வரக்கூடிய அந்த பாக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்து இந்த கல்வியை நிறைவு செய்ய இன்ஷா அல்லாஹ் நன்றி செலுத்துவோமா அல்ஹம்துலில்லாஹ்.
 
அடுத்து சகோதரிகளே! பொதுவாக நம்முடைய சமுதாயம் குறிப்பாக மார்க்க இல்மில் மிகவும் பின் தங்கியிருப்பதை நாம் மறுக்க முடியாது. மார்க்க இல்மில், குர்ஆன் ஹதீஸ் உடைய இல்மில் நாம் பின்தங்கி இருப்பதை மறுக்க முடியாது.
 
ஒரு முஹல்லாவில் ஒரு நூறு குடும்பம் இருக்கிறார்கள் என்றால், ஒரு குடும்பத்திலே குறைந்தது ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், நீங்கள் ஒரு கணக்கு போட்டு பாருங்கள். ஒரு 10 வீட்டை டெஸ்ட் எடுத்து பாருங்க அல்ஹம்து சூராவுக்கு அர்த்தம் தெரிந்த குடும்பம் எத்தனை பேர் என்று, குல்ஹு அல்லாஹு அஹத் அந்த சூரத்துல் இகலாஸிற்கு அர்த்தம் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்று, எத்தனை பேருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் எழுத தெரியுமா என்று கேட்டு பாருங்கள். அரபியில் தான் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
 
அந்த கலிமா அரபியில் தானே இருக்கிறது. தமிழிலேயா இருக்கிறது. கலிமா எந்த மொழி கலிமா அரபியில் தானே இருக்கு. அதை எழுத தெரியுமான்னு கேளுங்க. சரி அரபியில் எழுத தெரியவில்லை. தமிழில், ஆங்கிலத்திலேயாவது சரியாةன அந்த உச்சரிப்போடு எழுத தெரியுமா? அதனுடைய பொருள் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேளுங்கள். தெளிவாக ஒவ்வொரு எழுத்துக்கும் லா இலாஹ_ இல்லா_ அல்லாஹ் இந்த நான்கு வார்த்தை இருக்கிறது.
 
இந்த நான்கு வார்த்தைக்கு தனித்தனியாக அர்த்தம் தெரியுமா என்று கேட்டுப்பாருங்கள். அப்ப நீங்கள் முடிவு பண்ணலாம் நம்முடைய மக்கள் மார்க்க கல்வியிலே எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று, விஷயத்துக்கு வாங்க. அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்.
 
இந்த நம்முடைய மார்க்கம் இஸ்லாமாக இருக்கிறது. அல்லவா, நம்முடைய தீன் அல்லாஹுத்தஆலா ஆதம் நபியிலிருந்து ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் கொடுத்த மார்க்கம். இதனுடைய தொடக்கமே கல்வியை கொண்டுதான், ஏன் இன்னும் சொல்லப்போனால் மனிதர்களுடைய தொடக்கமே இல்மை கொண்டு தான், மனிதர்களுடைய ஆரம்பமே எதைக் கொண்டுதான்? இல்மை கொண்டு தான். நீங்கள் குர்ஆன் படித்து இருப்பீர்கள். இரண்டாவது அத்தியாயத்தில் 33 வது வசனத்திலிருந்து நீங்கள் படித்துப் பாருங்கள்.
 
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً
 
இன்னும் (நபியே!) “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்” என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. (அல்குர்ஆன் 2 : 30)
 
அல்லாஹுத்தஆலா மலக்குகள் இடத்தில் பேசுகிறான். மலக்குகளே பூமியிலே நான் ஒரு கலிஃபாவை நான் ஒரு பிரதி நிதியை, வாழையடி வாழையாக ஒருவருக்கு பின் ஒருவராக தோன்றக்கூடிய ஒரு generation ஒரு மக்களை நான் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹுத் தஆலா அந்த மலக்குமார்கள் இடத்திலே பேசுகிறான். மலக்குகள் என்ன பதில் சொன்னார்கள்? மலக்குகள் சொன்னார்கள் யா அல்லாஹ்!
 
قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ
 
(அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அதில் விஷமம் செய்து, அதிகமாக இரத்தம் சிந்தக் கூடியவர்களை அதில் நீ படைக்(கப் போ)கிறாயா? நாங்களோ உன்னைப் புகழ்ந்து துதித்து வருகிறோம். இன்னும், உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்.” (அதற்கு) அவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்.” (அல்குர்ஆன் 2 : 30)
 
இந்த பூமியில் குழப்பம் செய்யக் கூடிய, இரத்தம் ஓடக் கூடியமண்ணில் மனிதர்களை படைக்கிறீர்கள். நாங்கள் உன்னை தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் உன்னை துதித்து கொண்டிருக்கிறோம். தொழுது கொண்டிருக்கிறோம். அப்படினு சொன்னார்கள். நீ எங்களை பூமிக்கு இறக்கி விடலாம்ல. நாங்க போய் நல்லவங்களா இருப்போம். நீ இந்த மனிதர்களை படைக்கப் போறியே,
 
ஏற்கனவே ஜின் இப்படித்தான் இருந்து சேட்டை செய்து கொண்டு இருக்கிறது. அந்த ஜின்னை எடுத்துவிட்டு இன்னொரு படைப்பு வேற படைப்பை அங்கே படைக்க போறேன் என்கிற, அந்த ஜின் மாதிரி அந்த படைப்பு இருந்தால் என்ன செய்வது? அதுக்கு பேசாம வணங்கிக்கிட்டு இருக்கிற எங்களையே கீழே இறக்கி விட்டால் நாங்கள் நன்றாக தொழுது வணங்கிக் கொண்டி இருப்போம். என்று அந்த வானவர்கள் சொன்னார்கள்.
 
வானவர்கள் ஏன் சொன்னார்கள்? அல்லாஹ்வுக்கு மாறுபாடு செய்வதை பிடிக்காத ஒரு படைப்பு தான் வானவர்கள். ஏனென்றால் வானவர்கள் அல்லாஹ்வை வானத்திற்கு மேலே இருந்து அல்லாஹ்வுடையகண்ணியத்தை உணர்ந்தவர்கள். அல்லாஹ் என்றால் எப்பேர் பட்டவன் என்று அல்லாஹ்வுடைய வல்லமையை புரிந்தவர்கள்.
 
அல்லாஹ்வுடைய பரிசுத்தத்தை விளங்கியவர்கள். வானவர்களுக்கு தாங்க முடிய வில்லை. இந்த பூமியிலே அல்லாஹ்வுக்கு மாறுபாடு செய்வது, பாவம் செய்வதை, அநியாயம் செய்வதை அல்லாஹ்வுடைய கட்டளையை மீறுவது வானவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் என்றால் அவர்கள் யார் என்றால் இபாதல் முக்கிரமுன் கண்ணியமானவர்கள்.
 
لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ
 
அல்லாஹ்விற்கு அவன் அவர்களுக்கு ஏவியதில் அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள். (அல்குர்ஆன் 66 : 6)
 
அல்லாஹ் கட்டளை இட்டதை மீறவே மாட்டார்கள்.
 
لَا يَسْبِقُوْنَه بِالْقَوْلِ
 
அவர்கள் பேச்சில் அவனை முந்தமாட்டார்கள். (எதிர்த்து பேச மாட்டார்கள்.) (அல்குர்ஆன் 21 : 27)
 
அல்லாஹ்வை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.
 
وَهُمْ بِاَمْرِه يَعْمَلُوْنَ‏
 
அல்லாஹ் என்ன கட்டளை கொடுக்கிறானோ அதை மட்டும் செய்வார்கள்.
 
لَا يَفْتُرُوْنَ‏
 
அவர்கள் பலவீனமடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 21 : 20)
 
அல்லாஹ்வை வணங்கு வதில் சோர்வே அடைய மாட்டார்கள். வணங்கிகிட்டே இருப்பார்கள். அவ்வளவு நல்லவர்கள். அந்த வானவர்கள் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். யா அல்லாஹ்! இப்படி ஒரு படைப்பை படைத்து விட்டால் திரும்ப அவர்கள் உனக்கு மாறு செய்வார்களே என்று, அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா, தான் படைக்கக்கூடிய ஆதமுடைய தகுதியை வானவர்களுக்கு புரிய வைப்பதற்கு என்ன செய்தான்.
 
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا
 
இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். (அல்குர்ஆன் 2 : 31)
 
: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ، وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ، وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ
 
மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆதம், வானவர்கள் அல்லாஹ் படைத்த விசேஷமான ஒளி என்ற பிரகாசத் தினால் படைக்கப் பட்டவர்கள் வானவர்கள். எதிலிருந்து படைக்கப்பட்டவர்கள்? விசேஷ மான ஒளி, ஜின்கள் நெருப்பில் இருந்து படைக்கப்பட்டவர்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2996 
 
وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ‏
 
இன்னும், (மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம். (அல்குர்ஆன் 15 : 27)
 
அதுவும் நெருப்பினுடைய ஜூவாலையிலிருந்து படைக்கப் பட்டவர்கள். அல்லாஹ் நம்மை எதிலிருந்து படைத்தான்? மண்ணிலிருந்து படைத்தான். குலைத்த களிமண்ணிலிருந்து பிசுபிசுப்பான களிமண்ணி லிருந்து அல்லாஹுத்தஆலா நம்மை படைத்தான். 
 
இப்போ compare பண்ணி பாருங்கள். ஒரு பக்கம் பிரகாசமான ஒளி இருளைப் போக்கக்கூடிய வெளிச்சம், இன்னொரு பக்கம் அதேபோல வெளிச்சம் தான், ஆனால், அது எதில் படுகிறதோ அதை சுட்டெரிக்க கூடிய எப்போதும் மேல் நோக்கி செல்லக்கூடிய ஒரு நெருப்பு. இந்த பக்கம் மண்ணு. நாம் ஒருவரை திட்டுவதாக இருந்தால் என்ன சொல்லுவோம் மண்ணாக இருக்கிறான்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2996 
 
மண்ணாங்கட்டியா இருக்கியேடா உன் மண்டைல என்னடா இருக்கு. மண்ணாங்கட்டியாடா இருக்கு என்போம். சொல்ல மாட்டோமா, சொல்லக்கூடாது. இந்த மாதிரி திட்டக்கூடாது. ஆனால், இந்த மாதிரிதான் திட்டிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் திட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். 
 
அதனால், நீங்கள் நரகத்திற்கு போய்விடுங்கள் விடுவீர்கள் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்மை கண்டிக்கிறார்கள். எச்சரிக்கை செய்கிறார்கள். அந்த களிமண்ணில் இருந்து ஆதம் படைக்கப்பட்டு இருக்கிறார்.
 
அல்லாஹ் உயிரை ஊதிவிட்டான். அல்லாஹ் என்ன செய்தான் ஒரு பக்கம் இந்த ஜின்கள். அதிலே இப்லீஸ் உட்பட எல்லோரும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னடா இது புதுசா அல்லாஹுத்தஆலா ஒரு உருவத்தை அவனே அவன் உடைய கரத்தால் செய்திருக்கிறான். அவனை உருவாக்கி இருக்கிறான். அவனை விசேஷமாக அவன் படைத்த உயிரிலிருந்து அவனே உயிர் ஊதுறான். உயிர் காலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளங் காலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் ஆகிகொண்டு இருக்கிறது.
 
இதை பார்த்துக் கொண்டிருந்த ஜின்கள் இதை மலக்குகள் பார்க்கிறார்கள். முழுசா ஆகி விட்டார். இந்த மலக்குகள் கேட்கிறார்கள் யா அல்லாஹ்! இப்படி செய்து செஞ்சிட்டியே அல்லாஹுத்தஆலா இந்த ஆதமை இந்த பூமியிலே ஹலிஃபாவாக இருப்பதற்கு தகுதி உள்ளவர் என்பதை அல்லாஹுத்தஆலா நிரூபிக்கணும். யாரிடத்தில் நிரூபிக்க வேண்டும்.
 
மலக்குமார்கள் இடத்தில் நிரூபிக்கணும். அவர்கள் கேட்டு விட்டார்கள். கேள்வி கேட்காமல் இருந்தால் தேவையில்லை. எப்படிப்பட்ட கேள்வியை கேட்டு விட்டார்கள். அதுவும்நம்மை எல்லாம் தூக்கி குப்பையில் போட்ட மாதிரி கேள்வி கேட்டு விட்டார்கள். குழப்பம் செய்யக் கூடிய ரத்தம் ஓடக்கூடிய மனிதர்‌களையா நீ போய் ஆக்கப் போகிறாய்.
 
யா அல்லாஹ்! நாங்கள் எவ்வளவு இபாதத் தாலிகள் அப்படிங்கற மாதிரி கேள்வி கேட்டார்கள். அல்லாஹுத் தஆலா என்ன செய்தாகவேண்டும் நிரூபிக்கணும். இந்த மனிதர்கள் உங்களிடத்தில் இல்லாத தகுதியைக் கொண்டவர்கள்.
 
இவர்களுக்காகவே இந்த பிரபஞ்சத்தை நான் படைத்து பரிபாலித்து கொண்டிருந்தேன். முன்பிலிருந்து இனிமேலும் மறுமை நாள் வரை அவர்கள் இந்த பிரபஞ்சத்திலே ஆட்சி செலுத்தப் போகிறார்கள். நான் படைத்த அத்தனை அருள் பாக்கியங்களையும், நிஃமத்து களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கப் போகிறார்கள்.
 
அவர்களிலிருந்து நான் தேர்ந் தெடுக்கக் கூடிய ஒரு கூட்டம் என்னோடு பேசுவார்கள். என்னுடைய கலாமை அவர்கள் மீது நீங்கள் வானத்திலிருந்து கொண்டு என்னிடத்திலே பேசுகிறீர்கள். அவர்கள் பூமியில் இருந்து கொண்டு அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கட்டி விட்டால் என்னிடத்திலே பேச ஆரம்பித்து விடுவார்கள்‌.
 
அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது அவர்களுடைய வாயிலிருந்து வரக்கூடிய வாடை என்னிடத்தில் என்னிடத்தில் கஸ்தூரியின் வாடையை விட நறுமணமானது. இப்படிப்பட்ட தகுதியுள்ள ஒரு படைப்புதான் மனிதனுடைய படைப்பு என்பதை அல்லாஹுத் தஆலா நிரூபிக்கணும். அவர்களுக்காகத்தான் நீங்கள் இதுனால் வரைபார்த்துக் கொண்டிருக்கிறீர்களே இந்த சொர்க்கம் இதுவும் படைக்கப் பட்டது.
 
எப்போ மலக்குகள் படைக்கப்பட்டார்களோ அப்பவே இதுவும் படைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு தெரிய வில்லை.என்னடா இது சொர்க்கம் யாருக்குடா என்று சொல்லிட்டு இந்த சொர்க்கத்தில் வந்து யார் இன்பமாக இருக்கப்போகிறார். இந்த சொர்க்கத்தில் வந்து யார் அல்லாஹ்வை பார்க்கப் போகிறார்கள். 
 
இந்த இந்த ஹுர் யாருக்காக, இந்த நதிகள் யாருக்காக, இந்த மாட மாளிகைகள் யாருக் காக என்று ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு. இப்போ அல்லா ஹுத்தஆலா இது எல்லாம் இந்த மனிதர்களுக்காகத்தான் அப்படின்னு அல்லாஹு ரப்புல் ஆலமீன் நிரூபிக்கணும்.இந்த உலகத்தையும் அவர்களுக்காக, மறுமையும் அவர்களுக்காக இப்படிப்பட்ட ஒரு கண்ணியமான படைப்பு என்றால் அப்படி கண்ணியமான படைப்பாக அவர்கள் ஆகுவதற்கு என்ன தகுதி? கேள்வி இருக்கா இல்லையா?
 
இந்த கஷ்டத்திலிருந்து தான் வெளியாகி அல்லாஹ்வுடைய அல்லாஹ் வுடைய மார்க்கத்திற்கு தியாகம் செய்யக்கூடிய தியாகிகளாக, அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொள்ளக்கூடிய ஆலிம்களாக, முத்தஅல்லின் மாணவர்களாக, நாம் உருவாக வேண்டும்  அல்லாஹ்வுடைய தீனுக்கு தியாகம் செய்யக்கூடிய போராளிகளாக, இந்த ஒரு நிர்பந்தத்தில் இருந்து தான் நாம் வரவேண்டும்.வேலையே இல்லாதவர்கள் எதையுமே செய்ய முடியாது.
 
சஹாபாக்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? பசி இல்லையா?குடும்பம் இல்லையா? அப்போதான் மலக்குகள் இருக்கி றார்களே, திரும்ப அங்கே போய் விட வேண்டியது தான். எல்லாம் இருக்கும். வறுமை இருக்கும். பிரச்சனை இருக்கும். கஷ்டம் இருக்கும். நெருக்கடி இருக்கும் எல்லாம் இருந்து கொண்டு அதிலிருந்த படி தன்னை விடுதலையாக்கி அல்லாஹ் வுடைய தீனிலே தன்னை ஈடுபடுத்தி,
 
அல்லாஹ்வுடைய அத்தாட்சியை பூர்த்தி செய்வது தன்னிலும் அல்லாஹ்வுடைய அடியார்களிலும், இந்த பிரபஞ்சத்திலும், அல்லாஹ் இருக்கிறான் என்பதை தானும் உணர்வது, அடியார்களுக்கு உணர்த்துவது. அல்லாஹ்வுடைய சட்டத்தை தானும் பின்பற்றுவது, அல்லாஹ்வுடைய அடியார்களையும் பின்பற்ற வைப்பது.
 
இதுதான் நம்முடைய தியாகம், இதுதான் நம்முடைய பணி, இதுதான் நம்முடைய நோக்கம், அல்லாஹ் சுபஹானல்லாஹ் என்ன செய்தான் படைத்துவிட்டு அந்த தகுதியை காட்டுவதற்கு அவர்களை தங்கம் வெள்ளியால் அப்படியே அலங்கரித்தானா, முடிவு பண்ணி வைத்திருக்கிறோம் ஒருத்தர் ரொம்ப பெரிய ஆள் என்றால் அவர்கிட்ட என்ன இருக்கும். நல்ல காசு, நிறைய பணம் இருக்கணும். பெரிய வீடு இருக்கணும். வசதியான வாகனம் இருக்கணும்.
 
காசு இன்றைக்கு முஸ்லிம்களும் அந்த மாதிரி முட்டாள்களாக இருக்கிறதுதான் பெரிய கவலையாக இருக்கு. ஒரு நகை என்று சொன்னால் அது தன்னுடைய சந்தோஷத்துக்கு அணிவது. ஒரு மனைவியாக இருந்தால் கணவனுக்காக வேண்டி, உலகத்திலே பிறர் தன்னை பார்த்து மெச்ச வேண்டும் என்பதற்காக, பிறர் என்றால் யார் வீட்டிற்கு வெளியில் உள்ளவர்கள் இன்றைக்கு கல்யாணத்தில் நடக்கக்கூடிய ஒரு நிலையை நினைத்துப் பாருங்கள்.
 
பெண்கள் வீட்டில் இருக்கும் போது நகை அணிகிறார்கள். திருமணத்திற்கு போகும் போது நகை அணிகிறார்கள். முதலில் யார் நான் கல்யாணத்திற்கு போகும் போது நகையே போடாமல் போவேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். நாங்கள் வைத்திருப்பது அதற்குத்தானே.
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஆதமை உயர்த்து வதற்காக ஆதமை சிறப்பிப் பதற்காக ஆதமை கௌரவப் படுத்துவதற்காக அல்லாஹுத் தஆலா ஆதமுக்கு கொடுத்தது தங்கத்தைஅல்ல,வெள்ளியை அல்ல, காசு பணத்தை அல்ல, ஆட்சியை அல்ல, அந்த ஏழாவது வானத்தில் வைத்துக் கொண்டு அல்லாஹுத்தஆலா ஆதமுக்கு கொடுத்தது என்னவென்றால்
 
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا
 
இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான். (அல்குர்ஆன் 2 : 31)
 
ஆதமுக்கு அல்லாஹ் இல்மை கொடுத்தான். சுபஹானல்லாஹ் ஒன்றே ஒன்று தான்கொடுத்தான்.  அல்லாஹ்வுடைய இல்ம் உங்களிடத்திலே இல்ம் இருந்து மற்றது எல்லாம் இருந்தது என்றால் அதாவது, மற்ற டிகிரி, காசு, பணம் எல்லாம் இருந்தால் எல்லாம் உருப்படும். 
 
அல்லாஹ் வுடைய இல்ம் இல்லாமல் காசு இருக்கு, பணம் இருக்கு, செல்வம் இருக்கு, வசதி இருக்கு, பங்களா இருக்கு, வீடு இருக்கு, எல்லாம் இருக்கு என்று சொன்னால் 00000. இல்ம் என்பது அதற்கு முன்னாடி போடக்கூடிய ஒரு கோடு மாதிரி நிறைய முட்டையா போட்டு வைக்கிறீங்க. அதற்கு value இருக்கிறதா, அதற்கு முன்னால் ஒரு கோடு போட்டால் இது எல்லாம் valueவாக போய்விடும். 
 
ஒரு உதாரணம் சொல்கிறேன் இந்த ஒரு கோடு இருக்குது இல்ல அதுதான் இல்ம் உங்களுடைய தகுதியை உங்களுடைய பொருளாதாரத்தை, உங்களுடைய சமூக அந்தஸ்தை, இது எல்லாத்தையும் valid ஆக்கக்கூடியது இந்த இல்ம் என்கிற கோடுதான். அது இல்லையா அல்லாஹ்விடத்தில் குப்பைதான். 
 
அல்லாஹுத்தஆலா அதுதான் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய சம்பவத்தில் நமக்கு அல்லாஹ் படிப்பினையாக வைத்திருக்கிறான். யார் யார் இருக்கிறார் வானவர்களில், அவர்தான் டாப் ஜிப்ரீல் அடுத்து யார் இருக்கா அடுத்த டாப் மீக்காயில், அடுத்த டாப் யாரு இஸ்ராஃபீல், அடுத்த டாப் யாரு மலக்குல்மூத், அடுத்து இந்த நான்கு பேருக்கு அடுத்து கோடிக்கணக்கான மலக்குகள். நம்முடைய எண்ணிக்கையில் அடங்காத மலக்குகள் அதில் ஹமலத்துள் அர்ஷ்  இருக்கிறார்கள்.
 
அதில் அர்ஷை சுமந்து கொண்டிருக்க கூடிய எட்டு வானவர்கள்.அர்ஷை எப்போதும் சுற்றிக் கொண்டிருக்க கூடிய வர்கள்.அதற்கு அப்புறம் ஒவ்வொரு வானத்திலும் இப்படியாக எல்லா வானவர்களும் இபாதத்தில் ஈமானில் எல்லாத்திலேயும் உயர்ந்து இருந்தார்கள். இப்போ அவர்களிடத்தில் இல்லாத ஒன்றை யாரிடம் கொடுக்க வேண்டும்.
 
ஆதம் கிட்ட கொடுக்கணும் அப்போதான் proof ஆகும். இது எல்லாமே இவர்கிட்ட இருக்கும் அதோடு சேர்ந்து இன்னொன்று  extra இருக்கும். இப்போ படைக்கப் போற ஆதம் கிட்ட இந்த மலக்குகளிடம் இருக்கிற இபாதத் இருக்கும். மலக்குகள் இடம் இருக்கின்ற பணிவு இருக்கும். இஃலாஸ் இருக்கும். ஈமான் இருக்கும். எல்லாம் இருக்கும் அதோடு சேர்ந்து extra ஒன்று என்ன      இருக்கும்? இல்ம் இருக்கும். அல்லாஹுத்தஆலா
 
اوَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ
 
இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான். (அல்குர்ஆன் 2 : 31)
 
அல்லாஹுத்தஆலா பல வஸ்துகளை அவற்றுடைய பெயர் களை, அவற்றைப் பற்றிய அறிவை ஆதமுக்கு கொடுத்து மலக்குகளை பார்த்து பேசினான். எல்லாம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது என்று பார்த்தீர்களே, சொல்லுங்கள் பார்க்கலாம். இதனுடைய பெயர், இதனுடைய தத்துவம் உங்களுக்கு தெரியுமா என்று சொல்லி, மலக்குகள் என்ன சொன்னார்கள்.
 
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا  اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
 
அவர்கள் கூறினார்கள்: “நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு அறவே அறிவு இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.” (அல்குர்ஆன் 2 : 32)
 
இறைவா எங்களுக்கு எதுவுமே இல்லையே, அல்லாஹ் நீ எங்க ளுக்கு கொடுத்த,எங்களுக்கு வழிகாட்டிய அந்த அளவு அறிவைத் தவிர, சிந்தித்து புரியக் கூடிய ஆற்றல் எங்களிடத்தில் இல்லையே,மலக்குகள் அல்லாஹ்வுக்கு முன்னாடி திரும்ப சரண்டர் ஆயிட்டார்கள். யா அல்லாஹ்!  لَا عِلْمَ لَنَآ அவர்கள் எங்ககிட்ட இல்மே இல்லை என்கிறார்கள். அந்த இல்லை என்று சொன்ன இல்மை யாருக்கு அல்லாஹ் கொடுத்திருந்தான். 
 
ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்.ஏன் அவர்களுக்கு புரிந்தது இவர் எவ்வளவு டாப் என்று, எவ்வளவு உயர்ந்தவர், எவ்வளவு சிறந்தவர், அல்லாஹ் விடத்திலே இவர் நெருக்கத்தை பெறுவதற்கு இவர்கிட்ட என்ன தகுதி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள். மலக்குகள் எல்லாம் பணிவாக நிற்கிறார்கள்.
 
அங்கே இன்னொரு இனம் ஒன்று ரெடியா நின்று கொண்டிருந்தது. யாரு? இப்லீஸ். அந்த ஜின்னிலே குறிப்பாக வானத்துக்கு மேலே அல்லாஹ் உயர்த்தி வைத்திருந்தான். அந்த ஜின் இப்லீஸ் அவன் ரெடியாக நிற்கிறான். கீழே உள்ள ஜின் எல்லாம் எதிர்பார்த்து கொண்டி ருக்கிறது .என்ன நடக்கப் போகிறது வானத்தில் என்று சொல்லி, அத்தா மேலே இருக்கிறார். செய்தியை வந்து சொல்லுவார் என்று சொல்லி இப்லீஷ் பார்த்துக் கொண்டிருக்கிறான். 
 
அவன் கிட்ட அந்த இல்ம் இல்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறான். பொறாமை. என்ன இருந்தது?அவன்கிட்ட பொறாமை இருந்தது. நீங்கள் நல்லவர்களாக இருந்தாலும் உங்களை கெடுப் பதற்கு பொறாமை என்று ஒன்று இருந்தால் போதும், நீங்கள் ரொம்ப பெரிய அவ்லியாவா இருப்பீங்க கெடுத்து குட்டிச் சுவராக ஆக்கணும்னா ஒன்னும் செய்ய தேவையில்லை.  சைத்தான் கொஞ்சோண்டு பொறாமையை பத்தி வச்சிட்டா போதும் அவ்வளவுதான் நாசம் ஆகிவிடும். ஒரு குடும்பத்தை பிரிக்கணும். குடும்பத்தை நாசமாக்கனும். ஒரு குடும்பத்தை அழித்து குட்டி சுவராக்கணும். என்ன தேவை? பொறாமை. 
 
ஒரு பெரிய டேம் இருக்கு, பெரிய தண்ணீர் தொட்டி இருக்கு அதுல இருந்து தண்ணி எல்லாம் வெளியாக்கணும் என்ன செய்யணும். நீங்கள் வாலி வாலியாக இறைத்து ஊற்ற வேண்டும் என்பது கிடையாது. ஒரு ஓட்டையை போட்டு விட்டால் முடிந்துவிட்டது. அதேபோல தான் இந்த பொறாமை பரக்கத்துகளை அழித்து விடும். குடும்பத்தில் உள்ள அன்பை  அழித்துவிடும். உறவுகளை வெட்டிவிடும். எல்லாவற்றையும் காலி பண்ணி விட்டு போய்விடும். கடைசியில் அதற்கு ஏதாவது மிஞ்சும்,அதுவும் மிஞ்சாது. 
 
பொறாமை எப்படின்னு சொன்னா அல்ஹசது கண்ணார் பொறாமை நெருப்பைப் போல, எப்படி ஒரு நெருப்பு ஒரு கட்டையில் பத்திக்கிச்சுன்னா அதை திங்காமல் விடாது. 
 
4903 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ يَعْنِي عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أَسِيدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ - أَوْ قَالَ: الْعُشْبَ - "
 
அது போல தான். பொறாமை அது வந்தவரை அழித்துவிடும். எப்படி நெருப்பு அது எரியும் கட்டையை அழித்து விடுகிறதோ அதேபோன்று, 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அபூதாவூது, எண் : 4903
 
அப்ப அந்த சைத்தான் பொறாமையில் wait பண்ணிட்டு இருக்கான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் இடத்திலே அல்லாஹ் சொல் கிறான்.ஆதமே நீங்கள் சொல்லுங்கள் என்று சொல்லி ஒரு 4 விஷயத்தை 5 விஷயத்தை 10 விஷயத்தை தான் அல்லாஹ் சொல்லிக் கொடுத்து இருந்தான். அல்லாஹ் கேட்ட கேள்வியே100 கேள்வி. அல்லாஹுத்தஆலா மொத்தமாக சொல்லிக் கொடுத்திருந்தான்.
 
اوَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ
 
இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான். (அல்குர்ஆன் 2 : 31)
 
சொல்லி டெஸ்ட் வைத்தது எத்தனை? ஒன்றிலிருந்து ஒன்று ஒன்றிலிருந்து ஒன்று கண்டு பிடித்துக்கொண்டு ஆராய்ந்துக் கொண்டு புரிந்து கொண்டே போனார். கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டே போனார். சுபஹானல்லாஹ் மலக்குகள் பார்த்து திகைத்து போய் நின்றார்கள். அல்லாஹ் சொன்னான் மலக்குகளிடம்,
 
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَ اَبٰى وَاسْتَكْبَرَ  وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
 
இன்னும் (நபியே!) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆக, இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் மறுத்தான். இன்னும், பெருமையடித்தான். இன்னும், நிராகரிப்பாளர்களில் அவன் ஆகிவிட்டான்.(அல்குர்ஆன் 2 : 34)
 
இப்போ மலக்குகள் ஜிப்ரீல், மீக்காயில், இஸ்ராஃபில் மலக்குல்மவ்த் ஹமலத்துல் ஆரஸா மலாய்கத்துல் முகர்ரபுன் எல்லாம் இருக்க, மலக்குகளே நீங்கள் சஜிதா செய்து விடுங்கள் என்று சொல்லிவிட்டான். மலக்குகளிடம் ஈமான் இருக்கு, இபாதத் இருக்கு, இஸ்லாம் இருக்கு, இக்லாஸ் இருக்கு ,எல்லாம் இருக்கு அது இல்லாத ஒன்று யாரிடம் இருந் தது ஆதமிடம் இருந்தது.
 
இப்போ அல்லாஹ் சுபஹானல்லாஹ் ஆதமுக்கு நீங்கள் மரியாதை நிமித்தமாக சஜிதா செய்யுங்கள் என்று சொன்னான் எதற்காக வேண்டி அந்த இல்ம் என்கிற அந்த கண்ணியம் எல்லா மலக்குகளும் என்ன செய்தார்கள்
 
فَسَجَدَ الْمَلٰۤٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ
 
ஆக, (அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள், (அல்குர்ஆன்15 : 30)
 
எல்லா மலக்குகளும் அந்த ஆதமு டைய இல்மை பார்த்து பிரமித்து அல்லாஹ்வுடைய கட்டளைக் கிணங்க சஜிதாவிலே விழுந்து விட்டார்கள். மலக்குகள் எல்லாம் சஜிதாவிலே விழுந்து விட்டார்கள். எவ்வளவு பெரிய கண்ணியம் பாருங்கள். 
 
நம்ம சமுதாயத்துக்கு விளங்குதா, காசுக்கு பின்னாடி ஓடுது, நடிப்புக்கு பின்னாடி ஓடுது, மற்ற மற்ற வஸ்துக்களுக்கு பின்னாடி ஓடுது,அல்லாஹ்வுடைய இல்மை விட்டு விட்டார்கள். படிக்கிறதை விட்டுட்டாங்க. இந்த இடத்தில் உங்களுக்கு இரண்டு விஷயம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று அல்லாஹ் நபிமார்களுக்கு கொடுத்த இல்ம்.
 
அல்லாஹ்வைப் பற்றிய மறுமையைப் பற்றிய சட்ட இல்ம். ஹதீஸ் உடைய ஹலால் ஹராமுடைய சட்ட இல்ம். ஒன்று பொதுவாக அல்லாஹ் சுபஹானல்லாஹ் இந்த உலகத்தில் படைத்திருக்கக்கூடிய அறிவியல் என்ற ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற இல்ம், இன்றைக்கு கலை பள்ளிக்கூடங்களில் சொல்லித் தருகிறார்கள். 
 
நம்ம சமுதாயம் இருக்கிறதே overall பொதுவாக எடுத்துப் பார்த்தால் இதிலேயும் கோட்டை விட்டார்கள், இதிலேயும் கோட்டை விட்டார்கள். இந்தப் படிப்பிலேயும் கோட்டை விட்டார்கள். இந்தப் படிப்பிலேயும் கோட்டை விட்டார்கள். இரண்டிலுமே அவர்கள் டாப்பாக இருந்திருக்க வேண்டும்.
 
இந்த இல்ம் என்று எடுத்துக் கொண்டால் இந்த அறிவியலுடைய இல்ம் யார் கொடுத்தது? அல்லாஹ் கொடுத்தது. ஒரு பொருளை எப்படி பயன்படுத்தி ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை எப்படி உருவாக்குவது என்ற இல்ம் இருக்கிறதே இது அல்லாஹ் நபிமார்களுக்கு கொடுத்த இல்ம்
 
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ
 
உங்களுக்காக கவச ஆடைகள் (இன்னும் ஆயுதங்கள்) செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஏனெனில், உங்கள் போரில் (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) அவை உங்களை பாதுகாக்கும். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா? (அல்குர்ஆன் 21 : 80)
 
وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَاجِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ
 
திட்டவட்டமாக தாவூதுக்கு நம் புறத்தில் இருந்து மேன்மையை(யும் பறவைகளையும்) வழங்கினோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் (அல்லாஹ்வை) துதியுங்கள். இன்னும், அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம். (அல்குர்ஆன் 34 : 10)
 
தாவூத் நபிக்கு இரும்பை எப்படி பயன்படுத்துவது என்ற அறிவை அல்லாஹ் கொடுத்தான்.‌ இரும்பை அல்லாஹ் அவர் களுக்கு உருக்க வைத்தான். அதேபோல இத்ரீஸ் அலைஹி ஸலாத்துவஸ்ஸலாம் அவர் களுக்கு துணிகளை செய்யக் கூடிய அறிவை அல்லாஹ் கொடுத்தான்.
 
சுலைமான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு உலகத்தை எப்படி ஆட்சி செய்வது ஆட்சி அதிகாரங்களை எப்படி நிர்வகிப்பது, நாட்டை எப்படி ஆளுவது, நகரங்களை எப்படி உருவாக்குவது என்ற அறிவை அல்லாஹுத்தஆலா சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான். துல்கர்னைன் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான்.  
 
தத்துவ ஞானத்தை அல்லாஹுத்தஆலா லுக்மானுக்கு கொடுத்தான். இப்படியாக பலன் தரக்கூடிய பயன் தரக்கூடிய இந்தக் கல்வியும் யார் கொடுத் ததுதான். அல்லாஹ் கொடுத்தது தான். மருத்துவ இயல் மருத்து வத்தைப் பற்றிய இல்ம் அதுவும் அல்லாஹ் கொடுத்தது. நபி மார்கள் வாயிலாக சொல்லிக் கொடுக்கப்பட்டது. 
 
ஸஹீஹுல் புகாரியில் ஆரம்பத்திலிருந்து அதில் பொருள் அடக்கத்தை பாருங்கள். அந்த பொருள் அடக்கத்தை அப்படியே பார்த்துக் கொண்டே வந்தால் முதலாவது வஹி இறங்குதல், ஈமான், மூன்றாவது பாடம் இல்ம் கல்வியை தேடுதல், அதற்குள் நிறைய விஷயம் கொண்டு வருகிறார்கள். அப்படியே போய்க் கொண்டே இருக்கும்போது தொழுகை, நோன்பு, ஜக்காத்து, ஹஜ் அப்பறம் திருமணம் அப்படியே போய்க் கொண்டே இருந்தால் கடைசியில் அத்தியாயங்கள் முடிக்கிறதுக்கு முன்னாடி அங்கே ஒரு பாடம் வைத்திருப்பார்கள்.
 
இமாமுல் புகாரி கிதாபும் மருத்துவம் சம்பந்தப்பட்ட பாடம். ரசூலுல் லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மருத்துவம் சம்பந்தமாக என்னென்ன குறிப்புகளை சொல்லி இருக்கிறார்கள். அங்கே ஹதீஸ்களை தொகுத்து மருத்துவம் சம்பந்தப்பட்ட பாடம் என்று எழுதி வைத்திருப்பார்கள். 
 
இன்றைக்கு உலகத்தில் ஆங்கில மருத்துவம் இருக்குல இந்த ஆங்கில மருத்துவம் முன்னேறி இந்த நிலைக்கு வர்றதுக்கு முன்னாடி, உலகத்தில் மருத்துவம் என்றால் மருத்துவர்கள் என்றால் அங்கே முஸ்லிம்கள் சொல்லக் கூடிய மருத்துவமாக இருந்தது. இப்ப யார்கிட்டயாவது சொன்னா நம்புற மாதிரி இருக்கா, அந்த அளவுக்கு ஆகிவிட்டோம் நம்ம நிலைமை. இவர்களுடைய மூதாதைய மூதாதையர்கள் எல்லாம் இந்த ஊரையே ஆட்சி செய்த பெரிய ஜமீன்தார் என்று சொன்னால் ரோட்ல போற ஒரு பக்கீரை பார்த்து அப்படியாப்பா இவன் எப்படி இருக்கிறானே இவன் அப்படியே பராமரிக்காமல் இதற்கு முந்திய generation முக்காவாசி அழித்தது அதற்கு அடுத்த generation அழித்தது இவன்  இந்த நிலைக்கு வந்து நிற்கிறான். 
 
உதாரணத்திற்கு பல இடங்களில் சொல்வது போல, நம்ம நிலைமை எப்படி ஆகி விட்டது? கல்வியை விட்டுவிட்டு தூரமாகி தூரமாகி கல்வியை மறந்து இந்த உலக மோகங்களில் மூழ்கி கடைசியில் எதற்கும் உருப்படாத சமுதாயமாக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்கணும். சில நல்லவர்‌ களைத் தவிர. 
 
இரண்டு இல்முமே யாரிடத்தில் இருந்து கொடுக்கப்பட்டது தான். இப்போ கணக்கு இல்லாமல் மார்க்கம்  இருக்க  முடியுமா? முடியாது. ஏன் முடியாது என்கிறீர்கள். ஆதாரம் சொல்லுங்கள். நான் சொல்கிறேன் என்று நீங்களும் ஏன் முடியாது கணக்கு மார்க்கத்துக்கு தேவை.
 
ஏன் தேவை இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தில் சொத்துரிமை என்று ஒரு பாடம் இருக்கிறது. சொத்துக் களை எப்படி பங்கு வைத்தல். உலகத்தில் எந்த மதத்திலேயும் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய சொத்து யாருக்கு என்று உலகத்தில் எந்த மதத்திலேயும் எந்த கொள்கையிலையும் யாருடைய தத்துவத் திலேயும் சொல்லப்படல. அல்லாஹ்வுடைய வேதத்தில் மட்டும்தான் அது சொல்லப் பட்டிருக்கிறது. நம்முடைய மார்க்கம் எவ்வளவு ஸ்பெஷல் மார்க்கம் பாருங்கள்.
 
உலக மதங்கள் எல்லாம் பெண்களுக்கு சொத்தே இல்லை. எந்த உரிமையும் இல்லை .கணவனின் சொத்தில் உரிமை இல்லை. தந்தையின் சொத்தில் உரிமை இல்லை. தமையனின் சொத்தில் உரிமை இல்லை என்று மறுத்த காலத்தில், பெண்ணுக்கு தந்தையின் சொத்தில் பங்கு இருக்கிறது. தாயின் சொத்திலே பங்கே இருக்கிறது.
 
கணவனின் சொத்திலே பங்கு இருக்கிறது. சகோதரருடைய சொத்திலே பங்கு இருக்கிறது. மகனுடைய சொத்திலே பங்கு இருக்கிறது. மகளுடைய சொத்தில் பங்கு இருக்கிறது. தன்னுடைய சாச்சாவின் சொத்தில் பங்கு இருக்கிறது என்று தன்னுடைய பாட்டனின் சொத்திலே பாட்டியின் சொத்திலே பங்கு இருக்கிறது.
 
என்று இவ்வளவு பெரிய பங்குகளை கொடுத்து உங்களை கௌரவித்த மார்க்கம் இஸ்லாம். இந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு தான் உலகத்தில் பெண்களே மதிக்கப்பட்டார்கள் என்றால் அதுதான் உண்மை. இன்றைக்கு வரும் போது ஒரு message படித்தேன். இந்தியாவில் சரோஜினி நாயுடு பெரிய சிந்தனையாளர் அவர்கள் சொல்கிறார்கள்.
 
மேற்கத்திய உலகம் ஐரோப்பியா உலக மெல்லாம் என்ன தத்துவங்களை கண்டுபிடித்து இப்போது பெரிய தத்துவங்களாக, பெரிய சிந்தனைகளாக, புரட்சிகளாக பேசுகிறார்களோ அந்த தத்துவங்களை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பாக முஹம்மது நபி சொல்லிய தத்துவம் என்று, அந்த பெரிய மரத்திலிருந்து வளர்ந்தகிளைகள் தானே தவிர, பழங்கள் தானே தவிர இவர்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை.
 
யார் சொல்கிறார்கள்? ஒரு non  Muslim எந்த அளவுக்கு அந்த பெண் ஹதீஸை படித்திருப் பார்கள். எந்த அளவுக்கு ஹதீஸை சிந்தித்து படித்து இருப்பார்கள். காந்தி இருக்கிறாரே அவர் எழுதுகிறார். ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கை வரலாற்றை, இரண்டாவது பகுதியை படித்துக் கொண்டிருக்கும் போது நான் அழுதேன் என்று இந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் இதோட முடியுதே இனி நான் இந்த ரசூலை பற்றி எங்கே படிப்பேன் என்று அழுகிறார்.
 
ரசூலுல்லாஹ் உடைய அந்த ஆளுமை, அவர்களிடத்திலே இருந்த நற்குணங்கள், தங்கள் தோழர்கள் மீது அவர்கள் காட்டிய அக்கறை இதுதான் இந்த மார்க்கத்தை பரப்பியதே தவிர அவருடைய அதிகாரமோ, ஆட்சியோ அல்ல. எப்படி புரிந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா. 
 
நாம இன்னும் மௌலூது ஓதுறோமா சட்டி சோறு சாப்பிட்டோமா மீலாது நபி கொண்டாடினோமா ரசூலுல்லாஹ்வின் மேல் பிரியம் என்றால், இன்றைய சமுதாயம் வைத்திருக்கக் கூடிய அடையாளம் என்ன? வீட்டில் மௌலூது ஓத மாட்டீங்களா? அல்ஹம்துலில்லாஹ்!
 
எல்லாம் அனாச்சாரங்கள், எல்லாம் பிதாஅத் ரசூலுல்லாஹ்பெயரை சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிற வேலை. ரசூலுல்லாஹ் மேல முஹப்பத் இருந்தால் திங்கட்கிழமை நோன்பு வைக்க வேண்டியது தானே, வியாழக் கிழமை நோன்பு வைக்க வேண்டி யது தானே, சொல்லுங்கள் பார்க்கலாம்.
 
ரசூலுல்லாஹி மேல் முஹப்பத் இருந்தால் குர்ஆன் மனப்பாடம் செய்ய வேண்டியது தானே, ரசூலுல்லாஹ் மேல் முஹப்பத் இருந்தால் நபில் தொழுகை அதிகமாக தொழ வேண்டியதுதானே, அதெல்லாம் செய்ய மாட்டார்கள். 
 
ரசூலுல் லாஹ் மீது முஹப்பத் இருந்தால் தர்மம் கொடுக்க வேண்டியது தானே, தினமும் தீனை ஆதரிக்க வேண்டியது தானே, அதெல்லாம் செய்ய மாட்டார்கள். செலவாகி விடும்.செலவு செய்வார்கள் எப்ப? அந்த செலவு தனக்கே திரும்பி வரணும் எப்பதான் வரும், இந்த மாதிரி கத்தம் ஃபாத்திஹா மீலாது மௌலூது ஓதினால் தான் அந்த செலவு யாருக்கு திரும்பி வரும்? அவர்களுக்கே திரும்பி வரும்.
 
மௌலூது மீலாதில் சாப்பாடு கொடுத்தால் யார் சாப்பிடுகிறார் அவர்களே தான் சாப்பிடுகிறார் கள். அதற்காக வேண்டி தான் இது எல்லாமே, அது மட்டும் இல்லாமல் போனால் நீங்க மௌலூது ஓதுங்க ஆலிம்சா உங்களுக்கு காசு கிடையாது. வீட்டில் நெய் சோறு மட்டன் பிரட்டல் கிடையாது என்று சொல்லிப் பாருங்கள். எந்த ஆலிம்ஷா வந்து உங்க வீட்டில் ஓதுகிறார் என்று சொல்லுங்கள்.
 
ஓதுவார்களா சொல்லுங்கள் பார்க்கலாம். யாரும் ஓத மாட்டார் கள். அந்த சொத்துரிமைக்கு முக்கியமாக தேவை என்ன கூட்டலில் இருந்து பெருக்கலில் இருந்து வகுத்தலில் இருந்து எல்லாம் கரெக்டாக இருந்தால் தான் சொத்தை ஒழுங்காக பங்கு வைக்க முடியும். அப்ப எந்த இல்முமே மார்க்கத்தோடு சம்பந்தப்படாமல் கிடையாது.
 
ஆடை இருக்கிறது தொழுகையினுடைய முதல் ஷர்த்தே என்ன? டிரஸ் போடுவது ஔரத்தை மறைப்பது. எல்லாமே சுற்றி சுற்றி பார்த்தீர்கள் என்று சொன்னால் மார்க்கத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். வான சாஸ்திரம் இருக்கிறது. இது மார்க்கத்தோடு சம்பந்தப்பட்ட இல்மா இல்லையா? வானசாஸ்திரம் வானத்தில் நட்சத் திரங்கள் எங்கே இருக்கிறது சூரியன் எங்கிருக்கிறது சந்திரன் எங்கே இருக்கிறது கிழக்கு எது மேற்கு எது என்பது இருக்கிறது. எதற்கு அது தேவை? இன்றைக்கு போனில் வந்திருக்கு டபக்குனு போட்டு பார்த்து விடுகிறீர்கள். 
 
அந்த காலத்துல காம்பஸ் என்று ஒரு டப்பாவை தூக்கிட்டு போவோம்.இதெல்லாம் வரதுக்கு முன்னாடி எதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும். கிப்லாவை, சூரியனை வைத்து சந்திரனை வைத்து அதுவும் இல்லை என்று சொன்னால் வானத்தில் உள்ள நட்சத்திரங் களை வைத்து அதை வைத்து தான் அதை கண்டுபிடிக்க முடியும்.
 
ஆயிரம் வருடத்திற்கு முன்னாடி 1500 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் மசூதி கட்டினார் களே, எப்படி கட்டினார்கள். அதை வைத்து தான் கட்டினார்கள்? அப்ப எந்த இல்முமே அது நம்ம தீனோடு சம்பந்தப்படாத இல்மு என்று எதுவுமே கிடையாது. சில இது இருக்குது கெட்டது செய்வதற்காக வேண்டி இருக்கிறது. அதைப் பற்றி நாம் பேசவில்லை.
 
மனிதர் களுக்கு பலன் தரக்கூடிய எல்லா இல்மும் எதோடு சம்பந்தப்பட்டது? மார்க்கத் தோடு இஸ்லாமோடு சம்பந்தப்பட்டது. அல்லாஹ்வால் மக்களுக்கு நபி வழியாக கற்பிக்கப்பட்டது.அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை எதைக் கொண்டு கண்ணியப்படுத்தி னான். உயர்த்தினான். இல்மை கொண்டு. குர்ஆனில் அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா 58 வது அத்தியாயத்தில் பதினோ ராவது வசனத்தில் சொல்கிறான் பாருங்கள்.
 
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌  وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
 
நம்பிக்கையாளர்களே! (உங்கள் சபைகளுக்குள் நுழைந்த உங்கள் சகோதரர்களுக்காக) “சபைகளில் (கொஞ்சம்) இடம் கொடுங்கள்!” என்று உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு (இடத்தில்) விசாலத்தை ஏற்படுத்துவான். இன்னும், (சபைகளில் இருந்து) நீங்கள் புறப்படுங்கள் என்று கூறப்பட்டால் நீங்கள் புறப்பட்டு விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல தகுதிகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 58 : 11)
 
அல்லாஹ் சொல்கிறான் முஃமின் களை நாம் கண்ணியத்தால் உயர்த்துவோம். மதிப்பால் உயர்த்துவோம். முஃமின்களை நாம் மதிப்பால் கண்ணியத்தால் உயர்த்துவோம்.அதற்குப் பிறகு அல்லாஹ் என்ன சொல்கிறான். وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ இல்மு கொடுக்கப் பட்டவர்களை நாம் அவர்களை விட எண்ணிலடங்காத தகுதிகளை நாம் அவர்களை உயர்த்துவோம். நீங்கள் நிறையகாசு வைத்திருக்கிறீர்கள்.
 
வைத்துக் கொள்ளுங்கள். இந்த காசை எல்லாம் நீங்கள் அல்லாஹ் வுடைய பாதையில் தர்மம் செய்தால்தான் உங்களுக்கு நன்மை. நீங்கள் நிறைய தங்கம் வைத்திருக்கிறீர்கள். இந்த தங்கத்தை எல்லாம் நிறைய ஜக்காத் கொடுத்து ஏழைகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறீர்கள். வைத்திருந்தால்தான் இந்த தங்கம் நாளை மறுமையிலே எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். பிரச்சனை இல்லாமல் இருக்கும் அவ்வளவுதான். 
 
ஒருத்தர் பெரிய பதவியில் இருந்தார். பெரிய அந்தஸ்தில் இருந்தார். பெரிய அரசாங்கத் தொழில் உத்தியோகத்தில் இருந்தால் இப்படி கற்பனை பண்ணுங்கள். இவை எல்லாமே அது வைத்து நாலு பேருக்கு ஏதாவது நல்லது செய்தால் தான் உங்களுக்கு புண்ணியம். 
 
ஆனால், இந்த இல்மை நீங்கள் வெறும் படித்துக் கொண்டாலே அல்லாஹ் விடத்தில் கண்ணியம். இதைப் படித்து விட்டாலே தெரிந்து கொண்டாலே நீ அல்லாஹ் விடத்தில் தகுதி. வேணும் என்று சொன்னவர்கள் யார்? இல்ல வேணாங்க நாங்கள் இப்படியே காவாங்கறையில் சுற்றிக் கொண்டே இருக்கிறோம் என்று சொன்னவர்கள் யார்? நீங்கள் காவாங்கரையில் தான் சுற்றிக் கொண்டிருப்பீர்கள். 
 
ஆனால், நன்றாக உங்களை வைத்து புரிந்து கொண்டிருப்பான்.  எப்ப நீங்கள் இந்த இல்மை படித்துக் கொண்டால் ஒரு ஹதீஸ் பாருங்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு அழகாக நம்முடைய சிந்தனையை சரி செய்கிறார்கள் பாருங்கள். என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
 
2322حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ قُرَّةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ ضَمْرَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرُ اللَّهِ وَمَا وَالَاهُ وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
 
 (திருமதி எண:2322) நினைவை தவிர அல்லாஹ்வுடைய நினைவுக்கு துணையாக இருப்பதை தவிர அல்லது மார்க்கத்தை கற்றுக் கொண்ட ஆலிமை தவிர மற்ற மார்க்கத்தை கற்றுக் கொள்ளக்கூடிய மாணவரை தவிர சொல்லுங்கள் பார்க்கலாம்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திருமதி, எண் : 2322
 
இப்போது சபிக்கப் பட்ட உலகத்தில் இருந்து துனியாவில் இருந்து நாம வெளி யேறுவதாக இருந்தால் இந்த நான்கே வழி தான் இருக்கிறது. திக்ரு என்றால் தொழுகை நோன்பு இதை நாமும் செய்ய வேண்டும். செய்கிறவங்களுக்கு நாம துணை போகணும். 
 
அடுத்து இல்மை கற்றுக் கொள்பவராக இருக்கணும். கற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கணும். நம்முடைய சிந்தனையில் எல்லாம் இப்ப நம்முடைய சஹாபாக்கள் காவியங்கள் இமாம்கள் இதை சரியாக புரிந்து கொண்டார்கள். 
 
அதனால் நம்முடைய சஹாபாக்களாக இருக்கட்டும். தாபியீன்கள் ஆக இருக்கட்டும். இமாம்களாக இருக்கட்டும்.  அடுத்து வந்த சமுதாயமாக இருக்கட்டும். முதலில் அவர்கள் தங்களுடைய மக்களுக்கு கொடுத்தது இல்மை தான் கொடுத்தார்கள். எதை கொடுத்தார்கள் படிக்க வைத்தார்கள். இல்மை கொடுத்தார்கள்.
 
குர்ஆன் இருக்குல கடைசியா எப்போ ஓதுனீங்க. இந்த ரமலானில், டெய்லி தொழுகையில் ஓதுகிறீர்களே அதானே? தொழுகையிலும் குர்ஆன்தான் ஓதுகிறோம். அதுபோக குர்ஆனில் முதன் முதலில் ஓதக்கூடிய அத்தியாயம் எது? குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய அத்தியாயம் எது? இக்ரா.
 
முதலில் அல்ஹம்து இரங்கல குல்ஹுவல்லாஹு இறங்கல முதலில் ஆயத்துல் குர்ஸி இரங்கல எல்லாமே மகத்தான வசனங்கள். மகத்தான சூராக்கள். முதலில் இறங்கிய வசனம் என்ன? படிங்க அல்லாஹ் இறக்கினான். 
 
அல்லாஹ் முதல் முதலில் குர்ஆன் என்ற இறுதி இறை வேதம் தூதர்களிலேயே மிக மகத்தான, தூதர்களிலேயே மிகச் சிறப்பான சமுதாயத் திலேயே மிகச்சிறந்த சமுதாயத் திற்கு அந்த தூதருக்கு இறக்கப் படுகிறது. அந்த மிகச் சிறந்த இறுதி வேதத்திலே முதல் வசனம் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் இல்லை, சூரத்துல் இகலாஸ் இல்லை, முதல் வசனம் அந்த சமுதாயத்தை நோக்கி அந்த நபியை முன் வைத்து அல்லாஹ் சொல்கிறான். நபியே படிங்க என்று. 
 
நாம் அதைத் தவிர எல்லாம்  செய்கிறோம். காலையிலிருந்து சட்டி பானையை உருட்டுறது. என்னென்ன பிளானிங் பண்றோம். நம்ம லைஃபில் இதைத் தவிர வேறு என்னமா என்ன பிளானிங் வைத்திருக்கிறோம். காலையில் டிபன் என்ன  மத்தியானம் லஞ்ச் என்ன நைட் டின்னர் என்ன திரும்ப எழுந்த உடனே காலையில் டிபன் என்ன மத்தியானம் லஞ்ச் என்ன நைட் டின்னர் என்ன வாரம் ஏழு நாளும் இதுதான் ஓடிக்கிட்டு இருக்கு, மாதம் 30 நாளும் இதுதான் ஓடிக்கிட்டு, இருக்கு வருஷம் இதுதான் ஓடிக்கிட்டு இருக்கு, சுற்றி சுற்றி அங்கேதான் வந்து நிற்போம்.
 
கிடைப்பதை சாப்பிட்டுக்கிட்டு இருப்பதை சமைத்துக் கொண்டு ஆகுமான வேலையை பார்க்கிறோமா ஆகுமான வேலையே அது தான். மொத்தமே அதுக்கு நேரத்தை கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக் கிறோம். சமைக்கிறதுக்கு நாலு மணி நேரம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் அதுக்கப்புறம் தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் திரும்ப எழுந்து சமைக் கிறதுக்கு, நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா, அதனால சாப்பிடாமலேயே இருக்க முடியுமா என்று கேட்காதீர்கள். முடியும்.
 
எப்படின்னா அளவோடு சாப்பிட்டுக்கொண்டு இருக்க முடியும். நாவுக்கு ருசியாக சாப்பிடணும் அப்படி சாப்பிடணும் இப்படி சாப்பிடணும்  சொன்னா சாப்பாட்டுக்காகவே வாழ வேண்டியதுதான். இல்லையா. உடலுடைய ஆரோக்கியத்திற்கு சாப்பிடணும் பசியை போக்குவதற்கு சாப்பிடணும் முதலில் கல்விக்கு நேரம் கொடுக்க வேண்டும்.
 
நாம் கல்வி எல்லாம் கொடுத்து  புகாரி கொடுத்து முஸ்லிம் கொடுத்து குர்ஆன் மனப்பாடம் அதெல்லாம் பண்ணி  பண்ணி எல்லாம் படித்து விட்டேன் இப்போ சாப்பிடலாம். இன்னும் குல்ஹு அல்லாஹு அஹத் சூராவுக்கே அர்த்தம்  தெரியாம இருக்கு. முஸ்லிம் ஆகி நாமெல்லாம் கலிமா சொல்லி எவ்வளவு நாளா ஆகிவிட்டது.
 
ஏதோ அல்லாஹ் புண்ணியம் பண்ணினதால நாம தப்பித்தோம் அல்லாஹ் நம்ம மேல புண்ணியம் பண்ணி முஸ்லிம் குடும்பத்தில் பிறக்க வைத்ததால் தப்பித்தோம். இல்லையென்றால் நாமெல்லாம் நேர்வழியை தானாக தேடி, தானாக குர்ஆனை தேடி, ஹதீஸை தேடி, இஸ்லாமை தேடி படித்து வருவது என்றால் சுபஹானல்லாஹ். அல்லாஹு அக்பர்.என்ன ஆயிருக்கும் நம்ம நிலைமை.
 
சகோதரிகளே! அல்லாஹுத்தஆலா தன் நபிக்கு சொன்ன அமல் நபியே இனிமே நீங்கள் படிக்க ஆரம்பித்து விடுங்கள். நபியே ரசூலல்லாஹ் விற்கு சொன்னது யாருக்கு? நபியுடைய உம்மத்துக்கு சேர்த்து அல்லாஹ் சொல்கிறான். நீங்கள் படியுங்கள் உங்கள் உம்மத்தை படிக்க வையுங்கள். நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உம்மத்துக்கு கற்றுக் கொடுங்க. ரசூலுல்லாஹ் தன்னை பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
 
إنما بُعِثْتُ مُعَلِّمًا 
 
நான் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியராக அனுப்பப்பட்டிருக் கிறேன்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அஸ்சஹீஹா, எண் : 3593 குறிப்பு 1
 
ரசூலுல்லாஹ் தன்னை அரசர் என்று சொல்லவில்லை, செல்வந்தர் என்று சொல்ல வில்லை, மந்திரி என்று சொல்ல வில்லை, கவர்னர் என்று சொல்ல வில்லை, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்கு சொல்லிக் கொண்ட பெயர் நான் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு ஆசிரியர். அந்தப் பெயர் உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா? நீங்கள் தான் முடிவு பண்ணனும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான் நபியே! 
 
الرَّحْمَنُ  ,عَلَّمَ الْقُرْآنَ ,خَلَقَ الْإِنْسَانَ ,عَلَّمَهُ الْبَيَانَ
 
பேரருளாளன் (-பெரும் கருணையும் இறக்கமும் உடையோன்), குர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்; மனிதனைப் படைத்தான். , அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான். (அல்குர்ஆன் 55 : 1, 2, 3, 4)
 
நபியே, ரஹ்மான் குர்ஆனை உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். மனிதனை அல்லாஹ் படைத்தான்.அவனுக்கு விளக்கம் ஞானத்தை அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். அறிவை அல்லாஹ் கொடுப்பான். நீங்கள் குர்ஆனை படித்தீர்கள் என்றால் குர்ஆனுடைய தத்துவத்தை அல்லாஹ் கொடுப்பான். 
 
அறிவை அல்லாஹ் திறந்து கொடுப்பான். ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸை படித்தால் ஞானத்தை அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உயர்த்து வான். உங்களுக்கு ஹலால் எது? ஹராம் எது? ஒழுக்கம் எது? பண்பாடு எது? மார்க்கம் எது? ஒரு ஒரு விஷயத்துக்கு உண்டான சட்டம் ஒழுங்கு உங்களுக்கு தெரிந்து கொண்டே இருக்கும். 
 
அறியாமை உங்களை விட்டு தூரமாகிக்கொண்டே போகும். அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைத்து கொண்டே இருக்கும். நீங்கள் இல்மை தெரிந்து கொண்டாலே அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். அதற்குப் பிறகு அதன் படி அமல் செய்ய, அதை நீங்கள் கற்றுக் கொடுக்க தகுதி கூடிக் கொண்டே போகும். 
 
நம்முடைய முன்னோர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கிய சமுதாயம் முதலில் இந்த இல்மில் இருந்து தான் அதுவும் குர்ஆன் ஹதீஸ்   இல்மிலிருந்து தான் தங்களுடைய காலைப் பொழு தையே ஆரம்பித்தார்கள். இரவு பொழுதையும் அதை கொண்டே முடித்தார்கள். 
 
தங்களுடைய சமுதாயத்தினுடைய குழந்தைகளிலிருந்து முதியவர் வரை, தங்களை அல்லாஹ்வுடைய மஸ்ஜிதோடு, இல்மோடு, மதரஸாக்களோடு, இல்மை கற்றுக் கொடுக்கக் கூடியவர்களோடு, தங்களை அவர்கள் அப்படியே இணைத்து வைத்திருந்தார்கள். பிரிக்க முடியாமல் அல்லாஹுத்தஆலா அவர்களை உலகத்துக்கே வழி காட்டக் கூடிய எழுச்சிமிக்க நேர்வழி பெற்ற பிரகாசமான ஒழுக்கமுள்ள நீதமான ஒரு சமுதாயமாக அல்லாஹுத்தஆலா அவர்களை ஆக்கி வைத்திருந்தான்.
 
சகோதரிகளே! எப்ப இந்த இல்மை விட்டு நம்ம சமுதாயம் தூரம் ஆச்சோ மொத்தமாக நாம் நாசமாகி விட்டோம். அல்லாஹ் பாதுகாக்கணும்! இன்றைக்கு சமுதாயத்தில் சீர்கேடுகள், வழிகேடுகள், சமுதாயம் செய்யக்கூடிய இன்றைய பெரும் பாவங்கள் அப்படின்னு ஒரு லிஸ்ட்டை போடுங்க. அந்த லிஸ்ட்டை போட்டு அது எல்லாத்துக்கும் மேலே எழுதினீங்கன்னா மார்க்கத்தை அறியாமை.இல்ம் இல்லை. அதனால் அல்லாஹ்வுடைய பயமும் இல்லை. அல்லாஹ் என்ன சொல்கிறான்.
 
وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ
 
மக்களிலும், ஊர்வன விலங்குகளிலும், (-பூமியின் மேல் செல்லக் கூடிய பொதுவான மிருகங்களிலும், ஆடு மாடு ஒட்டகம் குதிரை போன்ற) கால்நடைகளிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான். (அல்குர்ஆன் 35 : 28)  
 
இல்ம் இருந்தால் தான் அல்லாஹ்வுடைய பயமே வரும். அதனால் சகோதரிகளே! இன்று நாமும் நம்மை மாற்ற வேண்டு மென்றால் நம்முடைய சமுதாயத் தையும் மாற்ற வேண்டுமென்றால் அதற்கு நாம் எடுக்கக்கூடிய முதல் ஆயுதம்  இல்ம் என்ற ஆயுதம் தான். அந்த இல்மை குர்ஆன் ஹதீஸிலிருந்து படிக்க வேண்டும்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸ்களிலிருந்து, சஹாபாக்களுடைய கூற்றுகளிலிருந்து அந்த ஒரு இல்முக்காக வேண்டி தான் அல்லாஹ்வுடைய அருளால் அல்லாஹ் உங்களைத் தேர்ந் தெடுத்து இருக்கிறான்.
 
இந்த இடத்துக்கு நீங்கள் வந்திருக் கிறீர்கள். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். இங்கே என்ன பாடங்கள் உங்களுக்குகொடுக்கப் படுகிறதோ, என்ன நேரங்கள் உங்களுக்கு ஒதுக்கப்படுகிறதோ அந்தப் பாடங்களை கவனமாக படியுங்கள். 
 
நேரங்களை வீணாக் காமல் முழுமையான முறையில்  attendance கொடுத்து, அல்ஹம்து லில்லாஹ் கலந்து கொண்டு, அந்தக் கல்வியை தேடுங்கள். அடையுங்கள். நீங்களும் உங்க ளுடைய உள்ளங்களை ஒளி மயமானதாக, வாழ்க்கையை பிரகாசமாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
 
நீங்கள் சார்ந்து இருக்கக் கூடிய சமுதாயத்தையும் நேர் வழியினுடைய பிரகாசத்தைக் கொண்டு அவர்களை வெளிச்ச மாக்குங்கள். அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா உங்களுக்கு இந்த நல்ல நோக்கத்தை, நல்ல லட்சியத்தை லேசாக்கி கொடுப்பானாக, எளிதாக்கி கொடுப்பானாக. அதில் அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் செய்வானாக, உங்களுக்கு தேவையான இல்மை, ஃபஹுமை, நினைவாற்றலை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்து இந்த கல்வியிலே அல்லாஹுத் தஆலா உங்களுக்கு நிரப்பத் தையும், பரிபூரணத்தையும் தந்தருள்வானாக, பயனுள்ள கல்வியை அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
خرج رسولُ اللهِ صلى الله عليه وسلم ذات يومٍ من بعضِ حجرِه ، فدخل المسجدَ ، فإذا هو بحلقتين إحدُاهما يقرأون القرآنَ ويدعون اللهَ والأخرى يتعلَّمون ويعلِّمون فقال النبيُّ صلى الله عليه وسلم كلٌّ على خيرٍ، هؤلاء يقرأون القرآنَ ويدعون اللهَ ، فإن شاءَ أعطاهم وإن شاء منعَهم وهؤلاء يتعلَّمون ويعلِّمون، وإنما بعثتُ معلِّمًا فجلس معهم. [ انظر : " الصحيحة "رقم: 3593 ] : الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : ضعيف ابن ماجه : الصفحة أو الرقم : 44 | خلاصة حكم المحدث : ضعيف | أحاديث مشابهة | الصحيح البديل
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/