அஹ்லுஸ் ஸுன்னாஹ் யார்? | Tamil Bayan - 729
அஹ்லுஸ் ஸுன்னாஹ் யார்?
தலைப்பு : அஹ்லுஸ் ஸுன்னாஹ் யார்?
வரிசை : 729
இடம் : மதரஸா ஏ இப்ராஹிம், பம்மல்
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 24-07-2022 | 25-12-1443
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய உலமா பெருமக்களே! கண்ணியத்திற்குரிய பெரியோர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! தாய்மார்களே! குறிப்பாக கீழே இருக்கக்கூடிய சகோதரிகளும் இந்த உரையை கவனமாக கேட்டுக் கொண்டிருப்பீர்கள். அமைதி காப்பீர்கள் என்பதாக ஆதரவு வைக்கிறோம். பல மார்க்க அறிஞர்கள் உங்களுக்கு மத்தியிலே தொடர்ந்து அல்லாஹ்வின் தீனைப் பற்றி உண்மையான விஷயங்களை அஸர் தொழுகையிலிருந்து சொல்லி வந்திருக்கிறார்கள்.
நம்முடைய உஸ்தாத் பெருந்தகை நமக்கு அறிவுரை கூற உபதேசம் செய்ய இருக்கின்றார்கள். இந்த சின்ன இடைவெளியிலே முக்கியமான ஒரு அடிப்படையை பற்றி இன்ஷாஅல்லாஹ் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பொதுவாகவே இந்த ஃபித்னா என்பது எல்லா காலத்திலேயும் இருக்கக்கூடிய ஒன்று. ரொம்ப பேர் சொல்லுவார்கள். நான் ரொம்ப ஃபித்னா உடைய காலத்தில் இருக்கிறோம் என்று சொல்லி, ஃபித்னா என்பது இருந்து கொண்டே இருக்கும். ஃபித்னா இல்லாத காலம் இல்லை.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஃபித்னா இல்லையா? கலிபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலே எவ்வளவு பெரிய ஃபித்னா எவ்ளோ பெரிய குழப்பம் ஏற்பட்டது. இப்படியாக ஃபித்னா இருந்து கொண்டே இருக்கும்.
இந்த குழப்பத்தில் நமக்கு தெளிவு எப்படி ஏற்படும். இந்த குழப்பத்திலிருந்து வெளியேறுதல் மஹ்ரஜ் எப்படி நமக்கு கிடைக்கும் என்றால், அதுதான் الإعتصام بكتاب السنة குர்ஆனையும் சுன்னாவையும் على منهج الصحابة சஹாபாக்கள் எப்படி மார்க்கத்தை புரிந்தார்களோ, பின்பற்றினார் களோ, கற்றுக் கொண்டார்களோ, விளங்கிக் கொண்டார்களோ, அந்த அடிப்படையில் குர்ஆனை யும் சுன்னாவையும் பற்றி பிடிப்பது தான் குழப்பங்களில் இருந்து நாம் தப்பிப்பதற்கு உண்டான வழி. ஆயுதம் வைத்திருப்பவர் அதற்குண்டான அந்த ஆயுதத்தை பயன்படுத்து வதற்கு உண்டான திறமை உள்ள வர் எதிரியை பார்த்து பயப்படத் தேவையில்லை. அதுபோன்று தான் இப்லீஸ் உடைய சந்ததிகள், இப்லீஸ் உடைய ஏஜென்ட்கள்
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ, الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ , مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
மக்களின் வணக்கத்திற்குரியவன், வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான். (குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான். (அல்குர்ஆன் 114 : 3, 4, 5)
كَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنْسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக ஆக்கினோம். அவர்களில் சிலர் சிலருக்கு (அவர்களை) ஏமாற்றுவதற்காக அலங்காரமான சொல்லை சொல்லித் தருகிறார்கள். உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களையும் அவர்கள் பொய்யாக இட்டுக்கட்டி பேசுவதையும் விட்டுவிடுவீராக. (அல்குர்ஆன் 6 : 112)
அந்த ஜின்னுடைய சைத்தான்கள் மனித சைத்தான்களுக்கு தூண்டிக்கொண்டே இருப்பார்கள். செய்தி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நல்லவர்களுக்கு இப்படி தொந்தரவு கொடு. சத்திய மார்க்கத்திலே அதை பின்பற்றக் கூடியவர்களுக்கு இப்படி பிரச்சனையை ஏற்படுத்து. அவர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணு என்பதாக ஜின் உடைய சைத்தான்கள் மனித சைத்தான்களுக்கு தூண்டிக்கொண்டே இருப்பார்கள்.
குழப்பம் என்பது கண்டிப்பாக இருந்து கொண்டே இருக்கும் கியாம நாள் வரை அந்த குழப்பத்திலிருந்து நமக்கு தெளிவான வெளியேறுதலை (exit), எப்படி தப்பித்து வெளியேறுவது என்பதை அல்லாஹுத்தஆலா குர்ஆனிலே கொடுத்திருக்கிறான், வேதத்திலே கொடுத்திருக்கிறான்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஸுன்னாவிலே அல்லாஹ் கொடுத்திருக்கிறான். நபியின் உடைய சஹாபாக்களிலே அல்லாஹுத்தஆலா அதை நமக்கு கொடுத்திருக்கிறான். ஆகவே குழப்பத்தின் உடைய காலங்கள், ஃபித்னா உடைய காலங்கள் அந்த ஃபித்னாவை எதிர்கொள்வதற்கும், மக்களை பித்னாவிலிருந்து காப்பாற்றுவதற்கும் மக்களுக்கு ஹிதாயத் நேர்வழியை போதிப்பதற்கும் தான், அல்லாஹ் உங்களுக்கு பொறுப்பை, அந்த அறிவை கொடுத்திருக்கும் போது அந்த தகுதி, அந்த திறமை, அந்த அறிவு உள்ளவர்கள் ஃபித்னாவை பார்த்து பயப்படலாமா, ஃபித்னாவை பார்த்து குழப்பத்திற்கு ஆளாகலாமா, அவர்கள் சத்தியத்திலே பலவீனர்களாக ஆகிவிடலாமா கண்டிப்பாக ஆகக்கூடாது. எல்லா விதமான ஃபித்னாக்களும் இருக்கும் எதிரிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நபிமார்களுக்கு ஏற்பட வில்லையா?
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ
மேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 14 :13)
இந்த ஊரில் இருந்து உங்களை சத்தியமாக துரத்துவோம் இல்லையென்றால் நீங்கள் எங்கள் கொள்கைக்கு திரும்ப வந்து விடவேண்டும். யாருக்கு கொடுக்கப் பட்ட எச்சரிக்கை? யாருக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்? நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நபிமார்கள் பயந்தார்களா!
وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيْدٍۙ
இன்னும், அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் (இறுதியில்) அழிந்து விட்டனர். (அல்குர்ஆன் 14 :15)
எவ்வளவு அழிச்சாட்டியம் செய்தார்கள். எங்களுக்குத் தான் இறுதிவெற்றி. நாங்கள் தான் மிகைப்போம் என்றெல்லாம் அவர்கள் ஆடினார்கள். அழிச்சாட்டியம் செய்தார்கள். அல்லாஹ் சொல்கிறான். அநியாயக்காரன், வம்பன் அழிந்து தான் போவான். நஷ்டம் அடைந்துதான் போவான்.
تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
(இன்பங்கள் நிறைந்த சொர்க்கமாகிய) அதுதான் மறுமை இல்லமாகும். எவர்கள் பூமியில் அநியாயத்தையோ (அராஜகத்தையோ,) கெடுதியையோ விரும்பவில்லையோ அவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு. (அல்குர்ஆன் 28 : 83)
இறுதி நல்ல முடிவு இறையச்சம் உள்ளவர்களுக்கு தான். தக்குவா உள்ளவர்கள் தான் வெற்றியடைவார்கள். அல்லாஹ்வை சார்ந்து இருப்பவர்கள் தான் இந்த உலகத்திலே ஓங்குவார்கள். உயர்வார்கள்.
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
இன்னும், அவர் நினைத்துப் பார்க்காத விதத்திலிருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தி இருக்கிறான். (அல்குர்ஆன் 65 : 3)
அல்லாஹ்வை நாம் சார்ந்து விட்டால் அல்லாஹ்வுக்கு போது மானவன். அல்லாஹ் நமக்கு கை கொடுப்பான்.
أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ وَيُخَوِّفُونَكَ بِالَّذِينَ مِنْ دُونِهِ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (-அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகிறார்கள். யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. (அல்குர்ஆன் 39 : 36)
அல்லாஹ் கேட்கிறான் அடியானே! என்னுடைய அடியானே! எனக்கு சுஜூது செய்பவனே, என்னை தொழக்கூடியவனே! அல்லாஹு அக்பர் என்று சொல்லக்கூடியவனே! தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவனே உனக்கு நான் போதுமானவனாக இல்லையா!
நாம் எந்த அல்லாஹ்வை நாம் நம்புகிறோமோ வானத்தின் ஆட்சி அவனுடையது. பூமியின் ஆட்சி அவனுடையது. சூரியன், சந்திரன் எல்லா படைப்புகள், பிரபஞ்சங்கள் மீது அவனுடைய, ஆட்சி மட்டும் தான் இருக்கிறது. அத்தகைய அல்லாஹுத்தஆலா நம்மை பாதுகாக்க.
ஆகவே, எந்த ஒரு சமயத்திலும் சரி எதிரிகளைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ் நம்மை பாதுகாக்க அவர்களுடைய சூழ்ச்சியை அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்ப போதுமானவன். அவர்களுடைய குழப்பங்களை அவர்களுக்கு மத்தியிலே ஏற்படுத்தி விடுவதற்கு அல்லாஹ் போதுமானவன். நாம் உறுதி உள்ளவர்களாக அல்லாஹ்வை சரியான முறையிலே மகத்துவ கொள்கையிலே அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் மகத்துவ முறையிலே அல்லாஹு வழிபட கூடியவர்களாக இருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு வெற்றியை கொடுப்பான்.
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் துணிவு இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள்தான் உயர்ந்தவர்கள் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால். (அல்குர்ஆன் 3 :139)
நீங்கள் தான் உயர்வீர்கள். நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் தான் ஜெயிப்பீர்கள். மேலோங்குவீர்கள். எப்போது? நீங்கள் முஃமினாக இருந்தால், ஆகவே நீங்கள் பயப்பட வேண்டாம். கவலைப்பட வேண்டாம். துக்கப்பட வேண்டாம். சஞ்சலப்பட வேண்டாம். குழப்பம் அடைய வேண்டாம். தைரியம் இழக்க வேண்டாம்.
இன்னொரு வகையான குழப்பங்கள் இருக்கிறது. இன்னொரு வகையான ஃபித்னா, என்ன ஃபித்தனா அது? உண்மையோடு போய் கலந்து விடுவது. சத்தியத் தோடு அசத்தியம் கலந்துவிடுவது அசலோடு நக்லி டூப்ளிகேட் கலந்து விடுவது. அது முந்தைய காலத்தில் இருந்தது. இப்போதும் இருக்கிறது.
கொஞ்சம் கூடக் குறைய அல்லது அதனுடைய வகைகள், அதனுடைய நிறங்கள், அதனுடைய தோற்றங்கள் கொஞ்சம் மாறுபடலாமே தவிர, முந்தைய காலத்திலும் அந்த குழப்பம் இருந்தது. அது என்ன குழப்பம் சகோதரர்களே! இன்று ஒரு பெரும் கூட்டம், சிறு கூட்ட மாகிய நம்மை ஒதுக்கி வைக்கிறார்கள்.
நமக்கு ஒரு பெயர் சொல்கிறார்கள். எந்த பெயரை நாமெல்லாம் நமக்கு சொல்ல வில்லையோ முதலில் உங்களுக்கு நான் ஒரு பெயரை சொல்வதாக இருந்தால், உங்களுக்கு நான் ஒரு பட்டத்தைகொடுப்பதாக இருந்தால், அதை நீங்கள் ஏற்க வேண்டும். அதை நீங்கள் உங்களுக்கு சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.
இந்த பெயரை நாமோ நம்முடைய அறிஞர்களும் தங்களுக்கு சொல்லவில்லையோ தங்களை அப்படி அடையாளப் படுத்த வில்லையோ, அத்தகைய பெயர்களை நம் மீது அவர்கள் சுமத்துகிறார்கள். அந்த ஸ்டிக்கர்களை நமக்கு ஓட்டுகிறார்கள் அந்த பட்டப் பெயர்களைக் கொண்டு மக்களுக்கு மத்தியிலே நம்மை இழிவு படுத்த நினைக்கிறார்கள்.
3376 - أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، أَنْبَأَ بِشْرُ بْنُ مُوسَى حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، ثنا سُفْيَانُ، ثنا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ، عَنِ ابْنِ تَدْرُسَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا نَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} [المسد: 1] أَقْبَلَتِ الْعَوْرَاءُ أُمُّ جَمِيلِ بِنْتُ حَرْبٍ وَلَهَا وَلْوَلَةٌ وَفِي يَدِهَا فِهْرٌ وَهِيَ تَقُولُ: مُذَمَّمًا أَبَيْنَا وَدِينَهُ قَلَيْنَا وَأَمْرَهُ عَصَيْنَا، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ أَبُو بَكْرٍ فَلَمَّا رَآهَا أَبُو بَكْرٍ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ أَقْبَلَتْ وَأَنَا أَخَافُ أَنْ تَرَاكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا لَنْ تَرَانِي» وَقَرَأَ قُرْآنًا فَاعْتَصَمَ بِهِ كَمَا قَالَ: وَقَرَأَ {وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا} [الإسراء: 45] فَوَقَفَتْ عَلَى أَبِي بَكْرٍ وَلَمْ تَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا أَبَا بَكْرٍ، إِنِّي أُخْبِرْتُ أَنَّ صَاحِبَكَ هَجَانِي. فَقَالَ: لَا وَرَبِّ هَذَا الْبَيْتِ مَا هَجَاكِ. فَوَلَّتْ وَهِيَ تَقُولُ: قَدْ عَلِمَتْ قُرَيْشٌ أَنِّي بِنْتُ سَيِّدِهَا «هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخْرِجَاهُ
சுபஹானல்லாஹ் இது எப்படி என்றால், ஹிந்து என்ற அந்தப் பெண் இருக்கிறாளே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏசுவதற்காக அவர்கள் வரும்போது (ஹாகிம் எண் 3376) என்று சொல்வாள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்வார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஹாகிம், எண் : 3376
பார்த்தீர்களா அபூபக்கரே அல்லாஹ் என்னை எப்படி பாதுகாத்தான் நானும் முஹம்மத் அவர்கள் ஏசுவதோ முதம்மபை நம்மை ஏசுவதற்காக நமக்கு அவர்கள் என்ன பெயர்களை சொல்கிறார்களோ, ஒரு வகையில் சுபஹானல்லாஹ் அந்தப் பெயர் ஒரு அழகான பெயர். உதாரணமாக வஹாபி என்று சொல்வார்கள். என்ன சொல்வார்கள் வஹாபி என்று, என்ன விஷயம்? அல்வஹாப் என்பது அல்லாஹ்வுடைய பெயர் அல்லாஹ்வோடு நம்மை இணைக்கிறார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஹாகிம், எண் : 3376
அல்லாஹ்வைச் சேர்ந்தவர் அந்த வஹாபுக்கு நெருக்கமானவர். அல்லாஹுத்த ஆலா அவர்கள் நம்மை ஏசுவதற்காக இந்த பெயரை சொன்னார்கள். அல்லாஹுத்தஆலா அதையே நமக்கு ஒரு அழகிய அடையாளமாக ஆகிவிட்டான் பாருங்கள். இப்படி இன்னும் அவர்கள் நமக்கு என்ன பெயரை சொல்கிறார்களோ, சிலர் சொல்வார்கள் ஹைரமுகல்லிதீன்கள் என்று, ஹைரமுகல்லிதீன்கள் என்றால் முத்தபியர் ரஸுல் (நாம் நபியை பின்பற்ற கூடியவர்கள்) நாம் இத்திபா செய்யக்கூடியவர்கள்.
கண்மூடித் தனமாக பின்பற்றாதவர்கள், என்று நமக்கு அழகான பெயரை சொல்கிறார்கள் பாருங்கள். முக்கண்ணீர் என்று சொல்வார் களே அதற்கு என்ன அர்த்தம் கண்மூடித்தனமாக குருட்டுத்தனமாக பின்பற்ற மாட்டார்கள். நம்மை ஏசுவதற்காக சொல்கிறார்கள். ஆனால், அதிலே எவ்வளவு ஒரு அழகான அர்த்தத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வைத்திருக்கிறான் பாருங்கள்.
நமக்கு அவர்கள் சொல்வார்கள். இவர்கள் நான்கு மதஹப்புகளை பின்பற்ற மாட்டார்கள். இவர்கள் ஹதீஸை பின்பற்றக் கூடியவர்கள். ஹதீஸ் சுபஹானல்லாஹ் இதைவிட சிறப்பான பெயர் என்ன இருக்கிறது. இதைவிட உயர்வான, சிறப்பான பெயர் என்ன இருக்கிறது. ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸை பின்பற்றக் கூடியவர்கள் என்று அவர்கள் நமக்கு சாட்சி சொல்கிறார்கள். இது எப்படி என்றால்
قُلْ يَاأَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் (நீதமான) சமமான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்! அதாவது: அல்லாஹ்வைத் தவிர (எவரையும் நீங்களும் நாமும்) வணங்கமாட்டோம்; அவனுக்கு எதையும் (நீங்களும் நாமும்) இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வைத் தவிர நம்மில் சிலர் சிலரை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.’’ (இதுதான் அந்த நீதமான சமமான விஷயம்.) ஆக, அவர்கள் (இதை ஏற்காமல் புறக்கணித்து) விலகி சென்றால், “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி சொல்லுங்கள்!’’ என்று நீங்கள் (அவர்களிடம்) கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3 : 64)
யூதர்களைப் பார்த்து கிறிஸ்தவர்களை பார்த்து நீங்கள் நமக்கும் உங்களுக்கும் மத்தியிலே சமமான கட்டளைக்கு வந்து விடுங்கள். அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது. நம்மில் ஒருவர் மற்றவரை கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. இதற்கு நீங்கள் ஒத்து வாங்க. அப்படி நீங்கள் ஒத்து வரலையா?
فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ
நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், இதிலிருந்து விலகிச் சென்றால், நாங்கள் முஸ்லிம் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று நாம் அவர்களைப் பார்த்து சொல்கிறோமல்லவா?, இதுதான் மார்க்கத்தில் சரியான நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதற்கு, நம்மை யார் எதிர்க்கிறார்களோ! அவர்களை அல்லாஹ் சாட்சியாக ஆக்கி விட்டான். அவர்களே நமக்கு சொல்கிறார்கள் அஹ்லுல்ராயி அஹ்லுல்ஹதீஸ். நாங்கள் கருத்துக்களை பின்பற்றக் கூடியவர்கள். சிந்தனைகளை பின்பற்றக் கூடியவர்கள். இவர்கள் ஹதீஸ்களை பின்பற்றக் கூடியவர்கள் என்று,
நான் இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்கிறேன் என்றால், இந்த ஃபித்னா உடைய காலங்கள் என்று நாம் சொல்லும் போது சத்தியத்தோடு அசத்தியத்தை கலக்கிறார்கள். பாலிலே விஷத்தை கலந்தது போன்று, உணவிலே கலப்படத்தை செய்வதை போன்று, உண்மையான பரிசுத்தமான மார்க்கத்திலே அவர்கள் குழப்பத்தை உண்டு பண்ண நினைக்கிறார்கள்.
மக்களுக்கு மத்தியிலே எந்த ஒரு தூய்மையான பெயர் சஹாபாக்களுக்கு பிறகு தாபியீன்களுடைய காலத்திலிருந்து, தாபியீன்களுக்குப் பிறகு இமாம்களுடைய காலத்திலிருந்து, சத்தியவாதிகளுக்காக உண்மையானவர்களுக்காக அல்லாஹ்வையும் ரசூலையும் உண்மையாக,
ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்காக அவர்களுடைய அடையாளமாக இருந்ததோ அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல்ஜமாஆ என்ற அந்தப் பெயரை அவர்கள் தங்களுக்கு சூட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சூட்டிக் கொண்டால் அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால், அவர்களோ இந்த பெயரை தங்களுக்கு சூட்டிக் கொள்வதற்கு எந்த தகுதியும் இல்லாத நிலையில் இந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜமாஆ முன்னோடிகளான, இமாம்களான, வழிகாட்டிகளான சஹாபாக்கள் தாபியீன்கள் நல்லோர்களுடைய அக்கிதாவிற்கு அவர்களுடைய மன்ஹஜுக்கு அவர்களுடைய வணக்க வழிபாட்டு முறைகளுக்கு எல்லாவற்றுக்கும் உடன்பட்டு சென்றுவிட்டு,
எல்லாவற்றிலும் அந்த சான்றோர்க்கு மாறு செய்துவிட்டு, அந்த சான்றோர் உடைய பாதையிலிருந்து விலகி வந்துவிட்டு, இவர்கள் புதிய அனாச்சாரங்களை ஹிதாயத்துகளை உருவாக்கி கொண்டு, தங்களை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல்ஜமாத் என்று தங்களை சுன்னத்துல் ஜமாத் என்ற பெயரில் தங்களை அவர்கள் அழைத்து கொள்கிறார்கள்.
யார் உண்மையான சுன்னத்துல் ஜமாத்ஆகவேண்டி அதை கேட்கிறார்களோ, அதை கற்பிக்கிறார்களோ, அதை போதிக்கிறார்களோ அதன் பக்கம் மக்களை அழைக்கிறார்களோ அவர்களை பலபெயர் களைக் கொண்டு மக்களுக்கு மத்தியிலே இழிவுபடுத்தமுயற்சிக்கிறார்கள். எதுவுமே கடைசியில் இவர்கள் படிக்கவில்லை என்றால் கடைசியில் ஒரு பெயரைக் கொண்டு வருவார்கள்.
குஸ்தாகே ரஸுல் ரசூலை இவர்கள் அவமரியாதை செய்யக்கூடியவர்கள் என்று சுபஹானல்லாஹ் அல்லாஹ் பாதுகாப்பானாக! அஹ்லுஸ் ஸுன்னாஹ், அஹ்லுல் ஹதீஸ் உண்மையான சுன்னத்துல் ஜமாத் ஆகிய ஹதீஸை பின்பற்றக்கூடிய இந்த ஜமாஅத்தை விட, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உண்மையான முறையில், சரியான முறையில், சத்தியமான முறையில் நேசிக்க கூடிய அவர்கள் மீது அன்பு வைக்கக்கூடிய, அவர்களைப் பின்பற்றக்கூடிய, ஒரு ஜமாத் இந்த பூமியிலே இருக்கவே முடியாது.
குர்ஆனுடைய அந்த விளக்கத்தை மக்களுக்கு சொல்லாத காரணத் தால் மக்கள் அறியாமல் இருக் -கின்ற காரணத்தால், இவர்கள் தங்களுடைய போலி சரக்குகளை மக்களுக்கு மத்தியிலே ஈசியாக விற்றுவிட்டு சென்று விடுகிறார்கள். அதற்கு அடையாளம் வைத்து இருக்கிறார்கள். சுன்னத்துல் ஜமாத் என்று என்ன அடையாளம் தெரியுமா பிதாஅத்துகளை, அனாச்சாரங்களை, சடங்குகளை சுன்னத்துல் ஜமாத்துக்கு அவர்கள் அடையாளமாக வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் பாருங்கள். சுன்னத்துல் ஜமாத் உடைய மஸ்ஜித் என்றால் என்ன நான்கு மதஹப்புகளை பின்பற்றக் கூடியவர்களுக்கான மஸ்ஜித் என்று போர்டு இருக்கும். பிறகு என்ன இருக்கும் தொப்பி போடாமல் இங்கேதொழக்கூடாது. பிறகு என்ன இருக்கும் இங்கு விரலை ஆட்டக்கூடாது. பிறகு என்ன இருக்கும் வருஷத்தில் ஒரு தடவை மீலாது கொண்டாடு வார்கள். வருஷத்தில் ஒரு தடவை மௌலூது ஓதுவார்கள். தொப்பி போடுவதும் மீலாது கொண்டு கொண்டாடுவதும் மௌலூது ஓதுவதும் இது அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் விளங்கி வைத்திருக்கக் கூடிய அடிப்படையிலே, இது சுன்னத்துல் ஜமாத் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம், எத்தகைய அடை யாளம் மிகப்பெரிய அடையாளம்.
அங்கு தொப்பி போட்டுக் கொண்டிருக்கக் கூடியவர் வட்டி வாங்கியவராக இருந்தாலும் பிரச்சனை இல்லை. அவர் தினமும் காலையில் எழுந்தவுடன் தாடியை முற்றிலுமாக வலிக்கக் கூடியவராக இருந்தாலும் பிரச்சனை இல்லை. பெரும் பாவங்கள் எல்லாவற்றுடைய மொத்த இருப்பிடமாக அவர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. எதுவுமே பிரச்சினை இல்லை.
அநியாயம் செய்தாலும் பிரச்சனை இல்லை. தொப்பி போட்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஐங்கால தொழுகை தொழவில்லையா பிரச்சனை இல்லை. ஜும்மா உடைய தொழுகை இல்லையா பிரச்சனை இல்லை. குஃப்ரான கொள்கைகள், சிற்க்கான கொள்கைகள் எல்லாம் இருக்கின்றனவா பிரச்சனை இல்லை. ஆனால் நாங்கள் மௌலூது ஓதும்போது வாருங்கள் வரவில்லை என்றால் குறைந்த பட்சம் சந்தாவாது கொடுத்து விடுங்கள். மௌலூது ஓதுவதற்கு சந்தாவாது கொடுத்துடுங்க எங்க மீலாதில் கலந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு சுன்னத்துல் ஜமாத் certificate கொடுத்து விடுவோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தீர்களா! எப்படி பாமர மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள். மூடர்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இப்போது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் சுன்னா என்ற இந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு ஜமாஆ என்ற இந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு அவர்கள் என்ன ஒரு அளவுகோலை வைத்திருக்கிறார்களோ, அந்த அளவுகோலை இந்த வார்த்தையிலே நீங்கள் அளந்து பாருங்கள். மௌலூது ஓதுவதையும், மீலாது கொண்டாடுவதையும், அவர்கள் சுன்னத்துடைய இந்த ஜமாத் உடைய அடையாளமாக வைத்து இருக்கிறார்களே, இப்போது கேள்வி என்ன?
நபி(ஸல்) அவர்கள் 83 ஆண்டு காலம் நபித்துவத்திற்கு பிறகு, மக்களுக்கு மத்தியிலே தாவா செய்தார்கள். ஷரீஆவை போதித்தார்கள். எந்த ஒரு அமலிலே ஒரே ஒரு நன்மை இருந்தாலும், அந்த நன்மையை மெனக்கட்டு சிரமம் எடுத்து அதற்கு கவனம் கொடுத்து சஹாபாக்களுக்கு போதித்தார்கள். அதை சஹாபாக்கள் செய்கிறார்களா என்று கவனித்தார்கள்.
தாங்களும் அந்த அமலை அவர்களுக்கு செய்து காட்டினார்கள். இத்தகைய ரசூலுல்லாஹ் (ஸல்) 23 ஆண்டு காலங்களில் தங்களு டைய பிறந்தநாளை கொண்டாடி னார்களா? தங்களுடைய மீலாதை மௌலூதை அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடினார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம் அறவே இல்லை.
அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை இப்படிப்பட்ட ஒரு தேதியை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஹதீஸில் கூட குறிப்பிடவே இல்லை. பிறை 12 என்றோ அல்லது வேறு ஒரு தேதியையோ நான் இந்த தேதியிலே பிறந்தேன் எனக்காக நீங்கள் சந்தோசமாக விழா கொண்டாடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாடையாகவோ,
சைக்கினை யாகவோ, ஏதோ ஒரு சூசகமாகவோ கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்ல வில்லை. செய்யவில்லை என்றால் இந்த மீலாது மௌலூதை கொண்டாடுவது எப்படி? சுன்னத்துல் ஜமாத்துடைய அடையாளமாக, சுன்னத்துல் ஜமாத்துடைய அந்த சிகராக அடையாளச் சின்னமாக ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை விடவா சொல்லுங்கள் பார்ப்போம். நபியின் மீது நேசம் வைப்பவர்கள். நபியின் மீது அன்பு வைப்பவர்கள். இந்த உலகத்தில் உருவாகி விட முடியும்.
உஹது போரிலே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலடியிலே ரசூலுல்லாஹ்வை பாதுகாத்து வரக்கூடிய அம்புகளை எல்லாம் தங்களுடைய நெஞ்சங்களின் மீது, வரக்கூடிய ஈட்டிகளை எல்லாம் தங்களுடைய மேனிகளின் மீது தாங்கிக் கொண்டு 9 அன்சாரிகள் ஒருவர் பின் ஒருவராக ஷஹீதாகி விழுந்து கொண்டே இருக்கிறார்கள்.
) وحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنَ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ، فَلَمَّا رَهِقُوهُ، قَالَ: «مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ؟» - أَوْ «هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ» -، فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ، ثُمَّ رَهِقُوهُ أَيْضًا، فَقَالَ: «مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ؟ -» أَوْ «هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ» -، فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ، فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ: «مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்முடைய இந்த அன்சாரி தோழர்களுக்கு நாம் நீதம் செலுத்தவில்லையே என்று அவர்களுடைய இந்த ஷஹாதத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். இப்படி உயிரை கொடுத்து நபியை காப்பாற்றிய அந்த சஹாபாக்கள் ஒரு போரிலா! எத்தனை போரிலே எத்தனை இடங்களில் ரசூலுல்லாஹி மீது உண்டான அன்பை அந்த சஹாபாக்கள் சத்தியத்தோடு உண்மையோடு வெளிப்படுத்தி காட்டினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1789 (குறிப்பு 1)
நபிக்காக மீலாது கொண்டாடுவது அன்பின் வெளிப்பாடாக இருக்குமேயானால், நபியின் பெயரிலே புகழ்ந்த கவிதைகளை அதை ஒரு விளக்கமாக எடுத்துக்கொண்டு அதற்காக ஒரு குறிப்பிட்ட நாளை ஒதுக்கி சபையை ஏற்பாடு செய்து படிப்பது நன்மையான காரியமாக இருக்குமேயானால், கண்டிப்பாக அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அதை முதலாவதாக செய்திருப்பார்கள்.
வழி நடத்தி இருப்பார்களே! உமருல் ஃபாருக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவது வழிநடத்தி இருப்பார்களே! அபூபக்கரை விட ரசூலுல்லாஹ் மீது பிரியம் உள்ளவர்கள், அபூபக்கரை விட ரசூலுல்லாஹ் உடைய அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று அறிந்தவர். இதில் இரண்டு இருக்கிறது சகோதரர்களே! நாம் இரண்டிலும் முட்டாள்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹுத்தஆலா நமக்கு விளக்கத்தை கொடுத்தாலேதவிர, நல்ல நமக்கு கல்வியை கொடுத்தாலே தவிர, கல்வியை அல்லாஹ் எப்போது கொடுப்பான் அல்லாஹ் விளக்கத்தை எப்போது நமக்கு கொடுப்பான்? ஸஹாபாக்களை பின்பற்றினால் மட்டுமே அல்லாஹ் விளக்கத்தை கொடுப்பான். கல்வி கொடுப்பான்.
நீங்கள் சஹாபாக்களை பின்பற்றாமல், அந்தத் தோழர்கள் உடைய பாதையிலே செல்லாமல், நீங்கள் என்ன தெளிவை தேடினாலும் சரி கல்வியை தேடினாலும் சரி நீங்கள் சர்வமுட்டாளாக இருப்பீர்கள். கடைந்தெடுத்த மடையனாக இருப்பீர்கள்.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். குர்ஆனை ஹதிஸை பின்பற்றியதற்குப் பிறகு சஹாபாக்களை பின்பற்றுவது தான் அறிவு. சஹாபாக்களை பின்பற்று வதுதான் நேர்வழி. சஹாபாக்கள் உடைய வழியிலே செல்வதுதான் ஹக். அதுதான் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் பொருத்தமானது.
என்ன கேட்கிறோம் அன்பு ஒன்று இருக்கிறது. அன்புக்கான அளவு கோல் அது ஒன்று. இரண்டாவது என்ன அந்த அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும். ஒன்று என்ன அன்பு. இரண்டாவது என்ன அந்த அன்பை எப்படி வெளிப் படுத்துவது. தாயிடத்திலே தாயின் மீது உண்டான அன்பை தாய்க்குண்டான அன்பின் அடிப்படையிலே வெளிப்படுத்த வேண்டும்.
மனைவியின் மீது வைக்கக்கூடிய அன்பை தாயின் மீது வெளிப்படுத்தினால் சைத்தான் இப்லீஷாக ஆகிவிடுவான். சகோதரியின் மீது வைக்கக் கூடிய அன்பு என்பது வேறு, தாயின் மீது வைக்கக்கூடிய அன்பு என்பது வேறு, மனைவியின் மீது வைக்கக்கூடிய அன்பு என்பது வேறு, அன்பு என்பது வார்த்தை ஒன்றாக இருக்கலாம். அதனுடைய வெளிப்பாடு, அதனை வெளிப்படுத்தக்கூடிய பின்பற்றக்கூடிய அதை செயல்படுத்தக்கூடிய விதம் கண்டிப்பாக மாறும்.
இங்கே சஹாபாக்கள் யார் தெரியுமா? ரசூலுல்லாஹ் மீது உண்டான அன்பை அறிந்தவர்கள், அந்த அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள், எப்படி வெளிப்படுத்தினால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானோ, அல்லாஹ் விடத்தில் அங்கீகரிக்கப்படுமோ அதை நாளை மறுமையிலே மீசான் உடைய அஜாரத்திலே வைக்கப்படுமோ, எந்த அன்பு சொர்க்கம் செல்வதற்கு உண்டான அளவுகோலாக இருக்குமோ,
அந்த அன்பை சஹாபாக்களிடமிருந்து படிக்க வேண்டும். அப்படி படிக்காமல் ரசூலுல்லாஹ் மீது அன்புவைக்கிறேன் என்று நீங்களாக அன்பு வைக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், நீங்களாக அன்புக்கு விளக்கம் கொடுத்து, இலக்கணம் கொடுத்து அன்புக்குண்டான அடையாளங்களை கொடுத்து அன்பு என்ற பெயரிலே செய்வீர்களே ஆனால், முட்டாள்களாக ஆகிவிடுவீர்கள்.
என்ன சொல்வார்கள் ஆஷிக்கே ரசூல் எந்தப் பெயரை சஹாபாக்கள் பயன்படுத்தவில்லையோ எந்தப் பெயர் காமம் கலந்த இச்சைக்காக இருந்ததோ அந்த பெயரை எங்கே கொண்டு வந்து விட்டார்கள் ஆஷிக்கே இலாஹி ஆஷிக்கேரசூல் என்று ரசூலுல்லாஹ்விற்கு கொண்டு வருகிறார்கள்.
பிறகு அந்த அன்பை வெளிப்படுத்துவது அதற்கு முன்னோடிகள் யார்? சஹாபாக்கள். எப்படி வெளிப்படுத் தினார்கள்? ரசூலுல்லாஹ் உடைய அன்பை சுன்னாவை பின்பற்றுவதன் மூலமாக வெளிப்படுத் தினார்கள். ரசூலுல்லாஹ்வை பாதுகாப்பதை, ரசூலுல்லாஹ் உடைய சுன்னாவை பாதுகாப்பது அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பாருங்கள். ஹிஜ்ரத்திலேயே அவர்கள் வருகிறார்கள். அல்லாஹ் அக்பர்.
ரசூலுல்லாஹ் உடைய அந்த ஹிஜ்ரத்துடைய தோலமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தத்தோழன் அவரை முன்வைக்காமல் உங்களுக்கு சுன்னத்துல் ஜமாத் என்று நீங்கள் பெயர் வைத்துக் கொண்டு, அந்த அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உடைய வழிமுறைக்கு மாற்றம் செய்வது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம் என்று நினைத்துப் பாருங்கள்.
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உடைய இரண்டு நிலைப்பாடு. ஒன்று என்ன ரசூலுல்லாஹ்வை விட எனக்கு இந்த உலகத்தில் பெருசு எதுவுமே இல்லை. நானும் சரி தன்னை விட ரசூலுல்லாஹ்விற்கு முன்னுரிமை கொடுத்தவர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு எல்லா சஹாபாக்களும் கொடுத்தார்கள்.
ஆனால், அபூபக்கர் கொடுத்த மாதிரி கொடுக்க முடியாது. அதாவது அவர் GREAT. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு உடைய சில நாட்களுக்கு முன்னாடி அவர்களே இதை ஒத்துக் கொண்டார்கள். உங்களில் எல்லோரும் எனக்கு சில உபகாரங்களை உதவிகளை செய்து இருக்கிறீர்கள். கைமாறு செய்து விட்டேன். ஆனால், அபூபக்கர் செய்த உபகாரத்தை தவிர, அவர்களுக்கு அல்லாஹ் கூலி கொடுப்பான்.
3656 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلًا، لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أَخِي وَصَاحِبِي
அல்லாஹ்வைத் தவிர நான் ஒருவரை உற்ற நண்பராக எடுத்துக் கொள்ள விரும்பினால், நான் அபூபக்கரை தான் எடுத்துக் கொள்வேன். சகோதரர்களே! ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரத்தில் போகி றார்கள். கொஞ்ச நேரம் முன்னாடி ஓடுகிறார்.கொஞ்ச நேரம் பின்னாடி வந்து விடுகிறார். கொஞ்ச நேரம் முன்னாடி ஓடுகிறார். கொஞ்ச நேரம் பின்னாடி வருகிறார். ரசூலுல் லாஹ்விற்கு புரியவில்லை. நினைத்துப் பாருங்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3656
என்ன அன்பு இந்த அன்பு என்று அபூபக்கரே என்ன செய்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதரே எதிரிகள் முன்னாடி இருந்து வந்து விடுவார்களோ என்று நான் பயப்படும் போது பாதுகாக்க முன்னாள் சென்று விடுகிறேன். எதிரிகள் பின்னாடி இருந்து வந்து தாக்கி விடுவார் களோ என்று பயப்படும்போது உங்களுக்கு பின்னால் சென்று உங்களை பாதுகாக்க விரும்புகிறேன்.
அதற்கு பிறகு மக்கள் எல்லாம் அந்த குழப்பத்துடைய காலத்திலே ரசூலுல்லாஹ் உடைய மரணத்திற்கு பிறகு சுபஹானல்லாஹ். முஹம்மதே இறந்துவிட்டார். இனி இந்த மார்க்கம் என்ன ஆகப்போகிறது என்று தடுமாறிக் கொண்டிருந்தார்களே, சிலர் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று மறுத்துக் கொண்டிருந்தார்களே, சிலர் தீனை விட்டு விசுவாசதுரோகிகளாக கொண்டிருந்தார்களே, இந்த குள்ளசுஸ்சஹாபா மதினாவில் இருந்து முஹாஜிர்கள் அன்சாரிகள் அடுத்து என்ன செய்வதென்று திகைத்துக்கொண்டிருந்தார்களே, அந்த நேரத்திலே ரசூலுல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான பரிசுத்தமான அந்த அன்பு அல்லாஹ்வுடைய வேதத்தை அவர்களுக்கு நினைவூட்டியது.
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ
முஹம்மது ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் (வந்து) சென்றுவிட்டார்கள். அவர் இறந்தால்; அல்லது, கொல்லப்பட்டால் நீங்கள் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3 : 144)
அல்லாஹுத்தஆலா இந்த ஆயத்தை அபூபக்கருக்கு நினைவூட்டினானே சஹாபாக்கள் சொன்னார்கள். இப்போதுதான் இந்த வசனம் இறங்கியதைப் போன்று நாங்கள் உணர்ந்தோம் என்று எத்தகைய ஹிதாயத் உசாமா உடைய படை அனுப்புவதா? இல்லையா? என்ன செய்வது மதினாவை நோக்கி இவ்வளவு பெரிய குழப்பங்கள் ஆபத்துகள் சூழ்ந்து கொண்டதே, அங்கே அபூபக்கருடைய பின்பற்றுதலை பாருங்கள். எந்தப்படையை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்புவதற்கு தயார்படுத்தி மதினாவிற்கு வெளியிலே கொண்டு சேர்த்து விட்டார்களோ,
ஒரு காலும் அந்த படையை நான் மதினாவிலே தங்க வைக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சரி, நாங்கள் கொல்லப்பட்டு எங்களுடைய பேதங்களை ஓநாய்களும் நாய்களும் இழுத்துச் சென்றாலும் சரி, கழுகுகள் கொத்திச் சென்றாலும் சரி. இதுதான் பின்பற்றுதல் ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது அவர்களுடைய சுன்னாவை தீணை பின்பற்றுவது
முஹப்பத் என்பது உங்களுடைய விருப்பத்திற்கு எதை தேவையோ நீங்கள் கூட்டிக் கொண்டேபோவது எது தேவையில்லையோ நீங்கள் வெட்டிக் கொண்டே போவது. அதுவல்ல சுன்னா என்பது, அதுவல்ல இத்திபா என்பது.
உமறு ஃபாருக் எடுத்துப் பாருங்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமருடைய கையைப் பிடித்து இருக்கிறார்கள். ரசூலுல்லாஹ் உடைய கை சுபஹானல்லாஹ். எவ்வளவு பக்கத்திலே வெளிப்படுத்த விரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதரே
6632 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَقِيلٍ زُهْرَةُ بْنُ مَعْبَدٍ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ» فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الآنَ يَا عُمَرُ»
ரசூலுல்லாஹ் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது. ஆனால் என்னை விட அல்ல . உடனே கேட்டார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமரே அப்படியா இல்லை உமரே உன்னை விடவும் நான் உனக்கு விருப்பமாக ஆனால் தான் என்று சொன்னார்கள். உடனே அந்த இடத்தில் மாற்றிக் கொண்டார்கள் உமறு ஃபாரூக். ரஸூலல்லாஹ் என்னை விட நீங்கள் தான் எனக்கு பிரிய மானவர். சொல்லுங்கள் பார்க்கலாம்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6632
يَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ لِيُرْضُوكُمْ وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ
அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள். (அல்குர்ஆன் 9 : 62)
இப்படி ரசூலுல்லாஹ் உடைய அன்பு அன்பு அன்பு அன்பு அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்.
நீங்கள் திருப்தி படுத்த வேண்டும் என்றால், நீங்கள் சந்தோஷப் படுத்த வேண்டும் என்றால், நீங்கள் மகிழ்ச்சி படுத்தவேண்டும் என்றால், அல்லாஹ்வை மகிழ்ச்சி படுத்துங்கள். அல்லாஹ்வுடைய தூதரை மகிழ்ச்சி படுத்துங்கள்.
அவர்கள் நீங்கள் மகிழ்ச்சி படுத்து வதற்கு தகுதியானவர்கள் என்று அல்லாஹ் சொல்கின்றானே, அந்த வசனத்தை கேட்ட சஹாபாக்கள் ரசூலுல்லாஹ்வுடைய அன்புக்காக எப்படி அவர்கள் துள்ளினார்கள் தெரியுமா? எப்படி ஓடோடினார்கள் தெரியுமா? என்ன வேண்டும் ரசூலுல்லாஹ் எல்லா வற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எங்களுக்கு விட்டதை விட நீங்கள் எடுத்தது எங்களுக்கு விருப்பமானது. எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா வற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். கடைசியில் ஒரு நேரத்தில் சுபஹானல்லாஹ் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
لَمَّا أفَاءَ اللَّهُ علَى رَسولِهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ حُنَيْنٍ، قَسَمَ في النَّاسِ في المُؤَلَّفَةِ قُلُوبُهُمْ، ولَمْ يُعْطِ الأنْصَارَ شيئًا، فَكَأنَّهُمْ وجَدُوا إذْ لَمْ يُصِبْهُمْ ما أصَابَ النَّاسَ، فَخَطَبَهُمْ فَقالَ: يا مَعْشَرَ الأنْصَارِ، ألَمْ أجِدْكُمْ ضُلَّالًا فَهَدَاكُمُ اللَّهُ بي؟ وكُنْتُمْ مُتَفَرِّقِينَ فألَّفَكُمُ اللَّهُ بي؟ وعَالَةً فأغْنَاكُمُ اللَّهُ بي؟ كُلَّما قالَ شيئًا قالوا: اللَّهُ ورَسولُهُ أمَنُّ، قالَ: ما يَمْنَعُكُمْ أنْ تُجِيبُوا رَسولَ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ؟ قالَ: كُلَّما قالَ شيئًا، قالوا: اللَّهُ ورَسولُهُ أمَنُّ، قالَ: لو شِئْتُمْ قُلتُمْ: جِئْتَنَا كَذَا وكَذَا، أتَرْضَوْنَ أنْ يَذْهَبَ النَّاسُ بالشَّاةِ والبَعِيرِ، وتَذْهَبُونَ بالنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ إلى رِحَالِكُمْ؟ لَوْلَا الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأنْصَارِ، ولو سَلَكَ النَّاسُ وادِيًا وشِعْبًا، لَسَلَكْتُ وادِيَ الأنْصَارِ وشِعْبَهَا، الأنْصَارُ شِعَارٌ، والنَّاسُ دِثَارٌ، إنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أُثْرَةً، فَاصْبِرُوا حتَّى تَلْقَوْنِي علَى الحَوْضِ.
ஹுனைன் போருடைய நேரத்திலே, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கனிமத்தை எல்லாம் முகாதிரிகளுக்கு கொடுத்தார்கள். சில அன்சாரிகள் பேசிக் கொண்டார்கள் பாருங்கள். தங்களுடைய குடும்பத்தார்களுக்கு, தங்களுடைய சமூகத்தவர்களுக்காக கொடுக்கிறார்கள் என்று சொல்லி, ரசூலுல்லாஹ் ஒன்னும் பெரியதாக அதை எடுத்துக் கொள்ளவில்லை.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸைது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4330 குறிப்பு (2)
தெரியும் இவர்கள் துன்யாவாசிகள் அல்ல. உலகிற்காக வேண்டி என்னை தேர்ந்தெடுத்தவர்கள் அல்ல என்று ரசூலுல்லாஹி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் புரிந்து வைத்திருந்தார்கள். அன்சாரிகளை தனியாக கூப்பிட்டார்கள். அன்சாரிகளை மட்டும் கூட்டிட்டு வாங்க ஆனால் இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி கொடுத்தார்கள் அபூபக்கர் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா உட்காரவைத்தார்கள்.
அன்சாரி களே நான் உங்களிடத்திலே ஒன்று சொல்லப் போகிறேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லலாம். என்ன சொல்ல போகிறேன். நீங்கள் வழிகேட்டில் இருந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு வழி காட்டினான். நீங்கள் பிரிந்து இருந்தீர்கள் அல்லாஹ் என் மூலமாக உங்களை ஒன்று சேர்த்தான். என்று நான் சொல்கிறேன். நீங்கள் இதற்கு விரும்பினால் பதில் சொல்லலாம்.
யா ரசூலல்லாஹ்அல்லாஹ்வும், அல்லாஹ் வுடைய தூதரும் எங்கள் மீது உபகாரம் செய்தவர்கள். நாங்கள் என்ன பதில் சொல்வது. நீங்கள் விரும்பினால் சொல்லலாம். நீங்கள் விரட்டப்பட்டவராக பூமியிலே இருந்தீர்கள். நாங்கள் உங்களை ஆதரித்தோம்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸைது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4330 குறிப்பு (2)
நீங்கள் பொய்ப் பிக்கப்பட்டவராக இருந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மைப் படுத்தினோம். நீங்கள் கைவிடப் பட்டவர்களாக நீங்கள் இருந்தீர்கள். நாங்கள் உங்க ளுக்கு உதவி செய்தோம் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான் அழுகிறார்கள் அன்சாரிகள்.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் எங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, சொல்கிறார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்சாரிகளே அன்சாரிகளே! அன்சாரிகளே! இந்த மக்களுக்கு எல்லாம் தங்கத்தையும், வெள்ளியையும், ஒட்டகங்களையும், மாடுகளையும், ஆடுகளையும் நான் கொடுத்தேன்.
அவர்கள் எல்லாம் துன்யாவுடைய பொருள்களை எடுத்துச்செல்ல, அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் உங்களுடைய இல்லங்களுக்கு எடுத்துச் செல்கிறீர்களே, அழைத்துச்செல்கிறீர்களே அது உங்களுக்கு விருப்பமா? இல்லையா? யோசித்துப் பாருங்கள். அன்சாரிகள் அழுதார்கள். அழுதார்கள். அல்லாஹ்வுடைய ரசூலை நாங்கள் பொருந்திக் கொண்டோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
ஒரு பாதையிலே மக்கள் சென் றார்கள்.அன்சாரிகள் ஒரு பாதையிலே சென்றால் நான் அன்சாரிகள் உடைய பாதைகளில் செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் இல்லை என்றால் நான் அன்சாரி களில் ஒருவனாக மட்டும் தான் பிறந்திருப்பேன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸைது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4330 குறிப்பு (2)
மக்கள் எல்லாம் என்னுடைய மேலாடை என்றால் அன்சாரிகள் என்னுடைய உள் ளாடைகள் என்று சொன்னார்கள். அந்த அன்சாரிகள் உடைய முஹப்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் என்ன செய்தார்கள் இந்த தீனுக்காக சகோதரர்களே! முஹப்பத் என்பது என்ன? முஹப்பத் என்பது சுன்னாவை இத்திபாவை பின்பற்றுவதற்கு அந்த சுன்னாவிற்காக நம்முடைய வாழ்க்கையை கொடுப்பதற்கு அடையாளமாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
இந்த மக்கள் என்ன செய்தார்கள். எதை ரசூலுல்லாஹ் சொல்லிக் காட்ட வில்லையோ, எதை சஹாபாக்கள் செய்யவில்லையோ, அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உமர் பாரூக் பிறகு உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அலி ரலியல்லாஹு அன்ஹு இந்த நான்கு கலீபாக்கள் உடைய காலத்தில் இல்லாத, பிறகு எந்த நூற்றாண்டுகளை பற்றி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களோ!
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ» قَالَ إِبْرَاهِيمُ: «وَكَانُوا يَضْرِبُونَنَا عَلَى الشَّهَادَةِ، وَالعَهْدِ
மக்களிலே சிலர் சிறந்தவர்கள். என்னுடைய தலைமுறையினர் அடுத்து அவர்களுக்கு பின்னால் வரக்கூடியவர்கள் அடுத்து அவர்களுக்கு பின்னால் வரக்கூடியவர்கள். இந்த மூன்று சிறந்த உயர்ந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கல்வியும் ஒழுக்கமும் ஹிதாயத்தும் நிறைந்த இந்த தலைமுறையில் இல்லாத ஒன்றை இந்த தலை முறை இந்த காலத்தில் இந்த நல்லவர்களிடத்திலே இல்லாத ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு, அதை இவர்கள் சுன்னத்துடைய அடையாளமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஜமாத்துடைய அடையாளமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2652
எவ்வளவு பெரிய அநியாயம் பாருங்கள். மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். எந்த மீலாதை ரசூலுல்லாஹ் வழி காட்டவில்லையோ, எந்த மௌலுதை ரசூலுல்லாஹ் வழி காட்டவில்லையோ எதை சஹா பாக்கள் செய்யவில்லையோ, அதை இன்று சுன்னத்துல் ஜமாத் துடைய அடையாளமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த மீலாதும், இன்னொரு பக்கம் கவனியுங்கள். சும்மா கடந்து போகாதீங்க. ஏதோ மீலாது மௌலூது என்று, மீளாது மௌலூது என்று ஏதோ பித அத்துல ஏதோ ஒரு பிதஅத் என்று லேசா கடந்து போயிடாதீங்க. இந்த மீலாதும் மௌலீதும் அதில் இருக்கக்கூடிய, அதில் இவர்கள் செய்யக்கூடிய சடங்குகளும், வெளிப்படுத்தக் கூடிய நம்பிக்கையும், ஷிர்க்குக்கும், குப்ருக்கும் சமமானது. நிகரானது. நெருக்கமானது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஷிர்க்கு நெருக்க மான, குபூருக்கு நெருக்கமான இஸ்லாமை விட்டு வெளியேறு வதற்கு நெருக்கமான அம்சங் களை இந்த மௌலூதிலே மீளாதிலே வைத்துக்கொண்டு அதை எதற்கு அடையாளமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள் சுன்னத்துல் ஜமாத். கேட்கலாம் நாங்கள் அப்படி எதையும் பார்க்கவில்லையே. மீலாதிலே மௌலூதிலே நாங்கள் அப்படி எதையுமே பார்க்கவில்லையே என்று கேட்கலாம். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். மீளாது மஜ்லிஸிலே நடக்கும் போது அதனுடைய கடைசியில் உள்ளுக்குள்ளார அவர்கள் பேசுகிற கதையில் இருக்கிற ஷிர்க்கு குஃபுரு லட்சக்கணக்கில் மூட்ட மூட்டையா அள்ளிக்கிட்டு இருக்க வேண்டியது தான். அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி கதை கற்பனைகளை உருவாக்குவார்கள்.
அப்புறம் இந்த மௌலூது கிதாப் இருக்குது பாருங்க அதற்குள்ளே அவ்வளவு இருக்கு அந்த சபை முடியும் போது எல்லோரும் மொத்தமாக எழுந்திருப்பார்கள். எழுந்திருச்சு அப்படியே திரும்பிக்கிட்டு அதபா நின்று கொண்டுயா நபி சலாம் அலைக்கும் அப்படின்னு ஒரு பாட்டு பாடுவாங்க.
நீங்கள் யாராவது அவர்களிடம் கேட்டிருக் கிறீர்களா ஏன் எழுந்திருக்கிறார்கள் என்று, என்னவென்று சொன்னால் அவர்கள் அந்த மீலாது மஜ்லிஸில் ரசூலுல்லாஹ்வை பற்றி அப்படியே உயர்வா சிறப்பா பேசப்பேச, பேசுறது எல்லாம் பலவீனமான பொய்யான ஹதீஸ்ரசூலுல்லாஹ் உடைய சிறப்பில் சஹிஹான ஹதீஸை சொல்லவே மாட்டார்கள்.
ஏனென்றால் சொன்னால் பிதஅத்தை சேர்ந்தது. பொய்யான பலவீனமான ஹதீஸ்களை கொண்டு தான் அவர்கள் அழிச்சாட்டியமே பண்ண முடியும். என்ன செய்வார்கள் என்றால் அந்த சபையிலே இவர்கள் ரசூலுல்லாஹ்வை புகழப் புகழ அப்படியே மதினாவில் இருந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கபுர ஸரிபிலிருந்து எழுந்திருச்சு, இவர்கள் ரசூலுல்லாஹ்வை புகழ்வதை கேட்பதற்காக வேண்டி அந்த சபைக்கு ஆஜராகிட்டாங்களாம்!
அந்த மௌலூது சபைக்கு மீலாது சபைக்கு யார் வந்துட்டா? லா ஹவ்ல வலாகுவத்த இல்லா பில்லாஹில் அலீயில் அலீம். அந்த சபையில் ரசூலுல்லாஹி வந்த உடனே அந்த சபைக்கு ரசூலுல்லாஹ் வந்து விட்டார்கள் அதனால் தான் எழுந்திருச்சு இருக்க வேண்டும். எழுந்திருச்சு ரசூலுல்லாஹ்விற்கு சலாம் சொல்லி உள்ளே வாங்கன்னு கூப்பிடுகிறார்கள்.
இறந்தவருடைய உயிர் ஒரு இடத்திற்கு வருது என்று நம்பினார்கள் என்றால் குஃபூரு தான். உயிர்கள் அல்லாஹ்விடம் சென்றவை பாதுகாக்கப்பட்டவை. திரும்ப இந்த உலகத்திற்குள் வரவே முடியாது. அது நபிமார் களுடைய உயிராக இருந்தாலும் சரி ,எந்த மனிதருடைய உயிராக இருந்தாலும் சரி.
அப்போ எத்தகைய குஃப்ரை நம்ப வைக் கிறார்கள். அந்த மக்களுக்கு மத்தியிலே, அந்த சபையிலே யார் யாரெல்லாம் இருந்தார்கள். சலாம் சொன்னார்கள் என்று ரஸுலுல்லாஹ் எல்லாரையும் பார்த்துக் கொள்கிறார்களாம் எல்லோருக்கும் பதில் சொல் கிறார்களாம்.
சகோதரர்களே! இந்த மாதிரி குஃப்ரான ஷிர்க் கான கதைகளை சொல்லி மக்களை நம்ப வைத்து அவர்கள் சுன்னத்துல் ஜமாஅத் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். குர்ஆனின் பக்கமும் உண்மையான ரசூலுல் லாஹ்வின் சுன்னாவின் பக்கமும் அழைக்கக்கூடிய அல்ஹம்து லில்லாஹ் நம்மை போன்றவர்களை மக்களுக்கு மத்தியிலே நம் மீது அவர்கள் வெறுப்பு ஊட்டுகிறார்கள்.
மக்களுக்கு மத்தியிலே நம்மைப் பற்றிய தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள். ரசூலுல்லாஹ்வை அவமதிக்கக் கூடியவர்கள். இமாம்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள். மதகப்புகளை நிராகரிக்க கூடியவர்கள் என்று நம்மீது என்னென்ன வார்த்தைகளை அவர்கள் சொல்கிறார்களோ எல்லாம் நம்மீது போடப்படக்கூடிய பலிச்சொற்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
ரசூலுல் லாஹ்வை நேசிக்க வேண்டும் ரசூலுல்லாஹ்வை கண்ணியப் படுத்த வேண்டும். ரசூலுல்லாஹ் வின் மீது மரியாதை வைக்கவேண்டும். இது நம்முடைய அகீதா. இது நம்முடைய கொள்கை, இதற்கு மாற்றமாக செயல்படு பவன், நம்மை விட்டு விலகியவன் அவனிலிருந்து நாம் விலகியவர்கள்.
அதுபோன்று சஹாபாக்களை கண்ணியப்படுத்துவது, தாபியீன் களை கண்ணியப்படுத்துவது, இமாம்களை கண்ணியப்படுத்து வது, அவர்களுடைய கல்விகளை கண்ணியப்படுத்துவது இது உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜமாஆ உடைய உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜமாஆவில் இருக்கக்கூடிய அஹலுல் ஹதீஸ் ஆகிய நம்முடைய அடையாளம், நம்முடைய பண்பாடு.
நாம் என்ன சொல்கிறோம்? அந்த இமாம்களின் பெயரால் இவர்கள் எதை இட்டுக்கட்டினார்களோ, அந்த இமாம்களின் பெயரால் என்னென்ன பித்அத்துகளை இவர்கள் உருவாக்கினார்களோ, அதை நாம் எதிர்க்கிறோம். ஹதீஸ்கள் வந்தாலும் ஒரு மனிதருடைய தனிப்பட்ட கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஹதீஸை விமர்சனம் செய்யக்கூடிய ஹதீஸை, தஃவீல் செய்யக்கூடிய ஹதீஸுக்கு தவறான விளக்கம் சொல்லி, ஹதீஸை பரிகாசம் செய்யக்கூடிய அந்த நிலைப்பாட்டினை தான் நாம் எதிர்க்கிறோமே தவிர, மதஹப்பை நாம் எதிர்க்கவில்லை. மதஹப்பினுடைய இல்மை நாம் எதிர்க்கவில்லை.
ஆகவே, அன்பிற்குரியவர்களே! உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜமாஆ என்பவர்கள் யார்? ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸை பின்பற்றுகிறார்களோ, சுன்னா என்றால் என்ன? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய ஹதீஸ். அவர்களுடைய நிலைப்பாடு என்ன? புகாரியை இந்த பூமியிலே குர்ஆனுக்கு அடுத்து சரியான புத்தகம் இல்லை என்று சொல்வார்கள்.
அந்த புத்தகத்தை படித்துக் கொடுத்து கொண்டு அந்த புத்தகத்தின் உடைய ஒவ்வொரு ஹதீஸையும் படித்துக் கொண்டே செல்வார்கள். இதுவா அஹ்லுஸ் ஸுன்னத்துல் ஜமாத். எந்த ஒவ்வொரு இமாமும் நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ் எனக்கு தெளிவாகி விட்டால், சரியாக கிடைத்து விட்டால் அதுதான் என்னுடைய கொள்கை. அதுதான் என்னுடைய வழிமுறை என்று சொன்னார்களே!
ஹதீஸ் கிடைத்ததற்கு பிறகு என்னுடைய சொல்லை நீங்கள் தூக்கி எறிந்து விடுங்கள் என்று சொன்னார்களே, இன்று மக்கள் என்ன செய்கிறார்கள். ஹதீஸை தூக்கி எறி கிறார்கள். சுன்னாவை தூக்கி எறிகிறார்கள். அந்த உலமாக்கள் உடைய கருத்துக்களை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்குப் பிறகு அவர்கள் தங்களுக்கு பெயர் வைத்துக் கொள்கிறார்கள் அஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜமாஆ
அன்பானவர்களே! ஹதீஸ்களை படிக்க வேண்டும். ஹதீஸ்களில் இருப்பது போன்று நம்முடைய அகீதாவை கொண்டு வர வேண்டும். ஹதீஸ்களிலே இருப்பது போன்று நம்முடைய இபாதத்துகளை கொண்டு வர வேண்டும். ஹதீஸ்களிலே இருப்பது போன்று நம்முடைய அகிலாக்குகளை கொண்டு வர வேண்டும். நம்முடையகொடுக்கல் வாங்கல் நம்முடைய திருமண உறவுகளை, நம்முடைய குடும்ப உறவுகளை அதன் அடிப்படை யிலே கொண்டு வர வேண்டும். நாம் அப்படி கொண்டு வந்தால் தான் உண்மையான அஹ்லுல் ஹதீஸ் உண்மையானஅஹ்லுஸ் ஸுன்னாஹ் ஜமாஆ இன்று நாம் அந்த உண்மையை புரிவதோடு மட்டுமல்லாமல், இன்று லட்சக் கணக்கான மக்கள் இந்த சத்தி யத்தை புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த உண்மையை நாம் வெளிப் படுத்த வேண்டும். அவர்களுக்கு இந்த தெளிவை நாம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். அவர் களுடைய ஹிதாயத்துக்காக நாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இது இன்றைய காலத் தினுடைய மிகப்பெரிய ஜிகாத்.
சகோதரர்களே! இது சுன்னத்தை விளக்குவது, சுன்னத்தின் பக்கம் அழைப்பது, பிதாஅத்தை தெளி வான முறையிலே எடுத்து புரிய வைப்பது, கண்டிப்பாக முறையில் பிதாஅத்தில் உள்ளவர்களை நீ செய்வது பிதாஅத்து என்று துணிந்து சொல்வது, இன்றைய மிகப்பெரிய ஜிகாத் என்பதை புரிந்து கொள்ளுங்கள் மறந்து விடாதீர்கள். அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா இந்த இடத்தை சுன்னாவுக்காக ஏற்றுக் கொள்வானாக, இங்க இருக்கக் கூடிய மக்களை சுன்னாவுக்காக ஏற்றுக்கொள்வானாக,
யார் இந்த இடத்தை அல்லாஹ்விற்காக கொடுக்கின்றார்களோ, அவர்களுடைய இந்த நல்ல முயற்சியின் மூலமாக இங்கு வரக்கூடிய தொழுகையாளிகள், இங்கு படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் மூலமாக இந்தப் பகுதியினை ஸுன்னா உடைய வெளிச்சம் பெறுவதற்கு, ஸுன்னா உடைய நேர்வழி பரவுவதற்கு, அல்லாஹ் சுபஹானல்லாஹு தஆலா லேசாக்கித் தருவானாக, அல்லாஹ் அதற்காக நம்ம ஏற்றுக் கொள்வானாக.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்பு 1)
صحيح مسلم (3/ 1415)
100 - (1789) وحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنَ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ، فَلَمَّا رَهِقُوهُ، قَالَ: «مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ؟» - أَوْ «هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ» -، فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ، ثُمَّ رَهِقُوهُ أَيْضًا، فَقَالَ: «مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ؟ -» أَوْ «هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ» -، فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ، فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ: «مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا»
குறிப்பு 2)
صحيح البخاري (5/ 157)
4330 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ، قَالَ: لَمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ، قَسَمَ فِي النَّاسِ فِي المُؤَلَّفَةِ قُلُوبُهُمْ، وَلَمْ يُعْطِ الأَنْصَارَ شَيْئًا، فَكَأَنَّهُمْ وَجَدُوا إِذْ لَمْ يُصِبْهُمْ مَا أَصَابَ النَّاسَ، فَخَطَبَهُمْ فَقَالَ: «يَا مَعْشَرَ الأَنْصَارِ، أَلَمْ أَجِدْكُمْ ضُلَّالًا فَهَدَاكُمُ [ص:158] اللَّهُ بِي، وَكُنْتُمْ مُتَفَرِّقِينَ فَأَلَّفَكُمُ اللَّهُ بِي، وَعَالَةً فَأَغْنَاكُمُ اللَّهُ بِي» كُلَّمَا قَالَ شَيْئًا قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ، قَالَ: «مَا يَمْنَعُكُمْ أَنْ تُجِيبُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ». قَالَ: كُلَّمَا قَالَ شَيْئًا، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ، قَالَ: " لَوْ شِئْتُمْ قُلْتُمْ: جِئْتَنَا كَذَا وَكَذَا، أَتَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاةِ وَالبَعِيرِ، وَتَذْهَبُونَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رِحَالِكُمْ، لَوْلاَ الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَشِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَشِعْبَهَا، الأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ، إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أُثْرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الحَوْضِ "
[تعليق مصطفى البغا]
குறிப்பு 3)
4075 (4/1574) -[ ش أخرجه مسلم في الزكاة باب أعطاء المؤلفة قلوبهم على الإسلام ... رقم 1061
(أفاء) أعطاه الغنائم وأصل الفيئ الرجوع فكأن الأموال في الأصل للمسلمين فغلب عليها الكفار ثم رجعت إليهم. (وجدوا) حزنوا. (ما أصاب الناس) لم ينلهم ما نال الناس من العطاء. (عالة) جمع عائل وهو الفقير. (أمن) من المن وهو الفضل. (كذا وكذا) كناية عما يقال. (شعار) هو الثوب الذي يلي الجلد من البدن. (دثار) هو الثوب الذي يكون فوق الشعار. (أثرة) ينفرد بالمال المشترك ونحوه دونكم ويفضل عليكم بذلك غيركم. (الحوض) الذي هو لي في الجنة]
[6818]
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/