HOME      Lecture      அழைப்புப் பனியின் அவசியம் | Tamil Bayan - 734   
 

அழைப்புப் பனியின் அவசியம் | Tamil Bayan - 734

           

அழைப்புப் பனியின் அவசியம் | Tamil Bayan - 734


அழைப்பு பணியின் அவசியம்
 
தலைப்பு : அழைப்பு பணியின் அவசியம்
 
வரிசை : 734
 
இடம் : சால்வேஷன் ஆர்மி கேம்ப், குன்னூர்
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 14-08-2022 | 16-01-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்களே! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்ஹம்துலில்லாஹ்! காலையிலிருந்து இந்த தஃவா துறையில் அனுபவும் அதுபோன்று கல்வி திறமையுமுடைய பல அழைப்பாளர்களுடைய அனுபவங்கள், வழிகாட்டுதல்களை தொடர்ந்து நீங்கள் கேட்டு பயன்பெற்று வருகிறீர்கள்.
 
இவ்வளவு அதிகமான தாயிகள் ஓன்றுகூடி இருப்பது பலருடைய தஃவா அனுபவங்கள் அல்ஹம்துலில்லாஹ்! மிகவும் உள்ளங்களை உறுக்ககூடியதாகவும் நம்முடைய தஃவா சிந்தனைக்கு ஒரு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது என்றால் கண்டிப்பாக அது மிகையாகாது.
 
அல்லாஹுவுடைய தீனுக்காக தஃவா செய்யக்கூடியவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். நாம் அவர்களை அறியாமல் இருப்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
 
அப்படித்தான் ஒவ்வொரு இடத்திலும் பொதுவாக என்ன நினைப்பார்கள் என்றால்  நாம் தஃவா செய்கிறோம் வேறு எங்கு நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், சுபஹானல்லாஹ் அல்லாஹுத்தஆலா அவனுடைய தீனின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களை விட்டு இந்த பூமி நீங்காமல் அவன் பாதுகாத்துக் கொள்கின்றான்.
 
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَه لَحٰـفِظُوْنَ
 
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
 
 (அல்குர்ஆன் : 15:9)
 
அல்லாஹுவுடைய தீன் இது. இந்த தீனை  பாதுகாப்பதும், இந்த தீனை அவனுடைய அடியார்களுக்கு கொண்டு சேர்ப்பதும்,  அவனுடைய ஒரு பொறுப்பு. ஏனென்றால் முதல் தஃயி யார்? என்றால் அல்லாஹுத்தஆலா.
 
وَاللّٰهُ يَدْعُوْۤا اِلٰى دَارِ السَّلٰمِ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
 
ஈடேற்றத்தின் இல்ல (மாகிய சொர்க்க)த்தின் பக்கம் அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். இன்னும் அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்.
 
மேலும் அல்லாஹு (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
 
 (அல்குர்ஆன் : 10:25)
 
وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِه‌ وَيُبَيِّنُ اٰيٰتِه لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
 
அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.
 
ஆனால் அல்லாஹுவோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
 
 (அல்குர்ஆன் : 2:221)
 
அல்லாஹு கூறுகிறான் உங்களுடைய இறைவனாகிய அல்லாஹு தாருஸ்ஸலாம் சொர்க்கத்திற்கு உங்களை எல்லாம் அழைக்கிறான். இங்கு நீங்கள் பார்த்தீர்கள் என்றால் مفعول  சொல்லப்பட்டிருக்காது. அழைப்பவர் சொல்லப்பட்டிருக்கும், எதன் பக்கம் அழைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கும்,  யாரை என்று சொல்லப்பட்டு இருக்காது. தப்ஸீரிலே நீங்கள் எடுத்துப் பார்த்தால் அதிலே அறிஞர்கள் எழுதி இருப்பார்கள். அவனுடைய எல்லா அடியார்களையும் அல்லாஹுத்த ஆலா அழைக்கிறான்.
 
தாருஸ்ஸலாமிற்கு வாருங்கள் என்று, அவனுடைய எல்லா அடியார்களையும் அழைக்கிறான், சொர்க்கத்திற்கு வாருங்கள், என்று அவனுடைய மன்னிப்பின் பக்கம் வாருங்கள் என்று ஆகவே, முதல் அழைப்பாளர் அல்லாஹுத்தஆலா.
 
அல்லாஹுத்தஆலா அவனுடைய அடியார்களை, அவனை வணங்குவதன் பக்கம் அழைக்கிறான்.  அதற்குப் பிறகு  நீங்கள் என்னை வணங்கினால் உங்களுக்கு சொர்க்கம் இருக்கிறது. அந்த சொர்க்கத்தை அடையும் வாய்ப்பினை அல்லாஹுத்தஆலா அளிக்கிறான். ஆகவே ஒரு தஃயி ஆனவன் அவன் ரப்புடைய பணியை செய்கிறார். அவர் அல்லாஹுவுடைய பணியை செய்கிறார். இதைவிட இந்த ஒரு பணிக்கு என்ன சிறப்பு வேண்டும்?
 
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ
 
யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்?
 
எவர் அல்லாஹுவின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
 
 (அல்குர்ஆன் : 41:33)
 
 அல்லாஹுத்தஆலா சில குறிப்பிட்ட இடங்களுக்கு என்று  குர்ஆன் உடைய வசனத்தில் ஒரு மாதிரியும்
 
وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغة
 
அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்?
 
“(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்?
 
 (அல்குர்ஆன் 2:138)
 
وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا
 
அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்?, அல்லாஹுவைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
 
 (அல்குர்ஆன் : 5:50)
 
அந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட ஒரு வாக்கிய அமைப்பை அல்லாஹுத்தஆலா தஃவாவுக்கு பயன்படுத்துகிறான். அல்லாஹுவுடைய மார்க்கத்தை விட மிக அழகான மார்க்கம்  யாருடைய மார்க்கம்? அல்லாஹுவை விட நிறத்தால் அழகானவன் யார்? அல்லாஹுவை விட சட்டத்தால் அழகானவன் யார்? அல்லாஹுவை விட உண்மையான சொல் சொல்லக்கூடியவன் யார்? என்று சவால் செய்து தன்னுடைய தனித்துவத்தை அல்லாஹுத்தஆலா அங்கே பறைசாற்றும் பொழுது இப்படிப்பட்ட வாக்கிய அமைப்புகளை அல்லாஹுத்தஆலா பயன்படுத்துவான்.
 
அது போன்று தான் தஃயியை கண்ணியப்படுத்தும் போது அல்லாஹுத்தஆலா இத்தகைய வாக்கிய அமைப்பை பயன்படுத்துகிறான்.
 
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ
 
எவர் அல்லாஹுவின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹுவுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
 
 (அல்குர்ஆன் : 41:33)
 
அல்லாஹுவின் பக்கம் மக்களை அழைக்க கூடியவரை விட அழகான பேச்சு உடையவர் யார்? அவரை விட சிறப்பான பேச்சை யார் பேசி விட முடியும்  அவர் எப்படி தானும் முஸ்லிமாக இருக்கிறார், தானும் அமல்களை செய்கிறார், தானும் இபாதத் செய்கிறார், ஒரு போதும் தன்னை பிற மக்களை விட உயர்ந்தவராக நினைக்கவே மாட்டார், பிற மக்களை விட தனக்கு தனி கண்ணியம் இருக்கிறது, தான் உயர்ந்தவர் என்று நினைக்க மாட்டார்.
 
எப்போதும் முஸ்லிம்களில் ஒருவராகவே நடந்து கொள்வார். சகோதரர்களே! நபிமார்களுடைய அந்த குணங்கள் அவர்களுடைய பண்புகள் இந்த வசனங்களுக்கு ஏற்ப அப்படியே அமைந்து இருப்பதை பார்க்கிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுவுடைய  அந்த தஃவாவை பிற மக்களுக்கு எப்படி எடுத்துச் சொன்னார்கள் 23 ஆண்டு கால நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நபித்துவ அந்த வாழ்க்கையிலே அவர்களுடைய முதல் அறிமுகம் அவர்கள் தஃயியாக iஇருந்தார்கள். அல்லாஹுத்தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிட்டான்.
 
يٰۤاَيُّهَا الْمُدَّثِّرُۙ قُمْ فَاَنْذِرْۙ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْۙ
 
 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
 
 (அல்குர்ஆன் : 74:1,3,4) 
 
இரண்டு காரணங்களுக்காக  கடமைக்காக அல்லாஹு நபியை எழச் சொன்னான். தூக்கத்திலிருந்து எழுந்து விடுங்கள், ஓய்வில் இருந்து எழுந்து விடுங்கள், குடும்ப சுமைகளிலிருந்து எழுந்து விடுங்கள், உங்களை நீங்கள் ஒரு திசையை  நோக்கி, ஒரு கொள்கையை நோக்கி,ஒரு வெற்றியை நோக்கி நீங்கள் உங்களை ஒருமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
وَتَبَتَّلْ اِلَيْهِ تَبْتيلا
 
இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
 
 (அல்குர்ஆன் : 73:8)
 
قال فأخذني جبريل فغطني أي ضمني وعصرني حتى بلغ مني الجهد
 
எல்லா தொடர்புகளை விட்டும் அறுந்து அல்லாஹுவின் பக்கம் நீங்கள் அப்படியே ஒதுங்கி விடுங்கள். இந்த இரண்டு கடமைகளுக்காக அல்லாஹுத்தஆலா நபி அவர்களை எழுப்பினான். எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் ஜிப்ரில் அலைஹி வசல்லம் எவ்வளவு பெரிய சக்தி உள்ள வானவர். அல்லாஹ் அக்பர் இறைவனே அவர்களுக்கு பின்னால் பெயர் வைத்தான் என்று பெயர் வைத்தான். மிகப்பெரிய பலமுள்ளவன் அவர் பிடித்து மூன்று தடவை நெருக்கமாக பிடித்தால் நம் நபி என்ன ஆவார்கள். நபியவர்கள் எவ்வளவு மென்மையானவர்கள் ஜிப்ரீல் அவர்கள் இறுக்கமாக நெருக்கினால் நம் நபி என்ன ஆவது? . நபியவர்களை ஜிப்ரில்  இறுக்கி இறுக்கி அணைக்கும் போது நபி உடம்பில் வலி ஏற்பட்டது, கதையை முடிந்துவிடும் போல ஆயிற்று, வலியின் சிரமமானது எல்லை மீறி போனது.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 3,4953
 
அந்த மாதிரி மூன்று தடவை செய்தார்கள். அல்லாஹு அக்பர் எப்படி வலித்திருக்கும் அதனால் ஏற்பட்ட காய்ச்சல், அந்த நடுக்கம், ஓடி வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள் ஒரு நாள் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  அந்தவாறு சாய்ந்ததில்லை, ஓய்வை தேடியதில்லை, அவ்வளவு பெரிய அந்த மனிதர் வலி தாங்க முடியாமல் படுத்து கிடக்கிறார். அல்லாஹு தஆலா இரண்டு வசனங்களை இறக்குகிறான். இரண்டு வசனங்களிலுமே அல்லாஹுத்தஆலா எழுந்திருங்கள் என்று கூறுகிறான். இரண்டு கடமைகளுக்காக முதல் கடமை,
 
يٰۤاَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَاَنْذِرْۙ
 
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக
 
 (அல்குர்ஆன் : 74:1,2)
 
அல்லாஹு அல்லாதவர்களை படைப்பாளனாக வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய மக்களை அல்லாஹுவுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை படைப்புகளுக்கு செய்யக்கூடிய இந்த மக்களை நீங்கள் எச்சரிக்க வேண்டும்.அவர்களை அழைக்க வேண்டும், அவர்களுக்கு மறுமை குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும், மறுமையின் தண்டனை குறித்து எச்சரிக்கை செய்யுங்கள்.
 
சகோதரர்களே! இந்த இடத்தில் சற்று கவனம் நமக்கு வேண்டும். தஃவா பல மாதிரி செய்கிறார்கள்  நாங்களும் தஃவா பணிக்கு வந்த பொழுது பல மாதிரி குழப்பினார்கள் குர்ஆனில் உள்ளது தஃவா நபிமார்களும் தஃவா பணி செய்துள்ளார்கள். இவர்கள் கூறிய எதுவுமே குர்ஆனிலே இல்லை. நபிமார்களுடைய தஃவா பணியிலும் இல்லையே ஒரே குழப்பம். அல்லாஹுத்தஆலா
 
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ
 
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!
 
 (அல்குர்ஆன் : 16:125)
 
ஹிக்மத் என்றால் என்ன? ஞானம் இந்த ஞானத்தை இவர்களாகவே உருவாக்குகிறார்கள் ஞானம் என்றால் என்ன?
 
يٰسٓ وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ
 
‏யாஸீன். ஞானம் நிரம்பிய இக்குர்ஆன் மீது சத்தியமாக! குர்ஆன் தான் ஞானம்
 
 (அல்குர்ஆன் : 36:1,2)
 
وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌
 
(இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்.
 
 (அல்குர்ஆன் : 2:269)
 
ஹிக்மத் என்றால் என்ன?  குர்ஆன் சுன்னா இதுதான் ஹிக்மத்.  பிறகு தஃவா என்று பலவாறு கூறினர். ஒன்றும் புரியாமல் இருந்தது பிறகு இப்ராஹிம் நபி, நூஹ் நபி அவர்களின் தஃவா பணியை பார்த்தால் மிக எளிதாக இருந்தது, எல்லாருக்கும் புரியும்படி இருந்தது. நாங்கள் அந்த தாஃவாவை எடுத்துக்கொண்டோம். சூராநூர், சூரா அன்பியா, சூராமுஃமின் நபிமார்களின் வரலாற்றை படித்தால் தஃவா தெளிவாக உள்ளது.
 
அல்லாஹுவின் பக்கம் அல்லாஹுவின் அடியார்களை வணங்க அழைப்பது. அல்லாஹு சுப்ஹானஹுவதஆலா இரண்டு கடமைகளுக்காக நபி அவர்களை எழச்சொன்னான். முதலாவது தஃவா நபியவர்கள் எழுந்து நின்றார்கள். தன்னுடைய இறுதி மூச்சு வரை அல்லாஹுவுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தஃவாவுக்காகவே” தன்னை அழித்தார்கள்  இல்லையா? என்றால் இந்த வசனத்தை படித்தால் கண்டிப்பாக ஒத்துக் கொள்வீர்கள்.
 
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
 
(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!
 
 (அல்குர்ஆன் : 18:6)
 
அந்த நபியுடைய இறைவன் நபி மீது இரக்கப்பட்டு கூறுகிறான் நபியே அவர்கள் முஃமினாகாத காரணத்தால் கவலைப்பட்டு, துக்கப்பட்டு, உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்வீர்களோ! அதாவது அந்த மக்கள் தீமையை எதிர்த்து இஸ்லாத்திற்கு வர வேண்டும். அல்லாஹு அல்லாதவரை வணங்கி ஷிர்கிலே இருக்கிறார்களே என்ற கவலை அதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அதனால் அவர்களுடைய உயிர் பிரிந்து விடக் கூடிய அளவுக்கு ஆகிவிட்டது. அல்லாஹுஇரக்கப்பட்டு நபியே! உங்களுடைய கவலையை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே மரணம் ஏற்படும் அளவிற்கு கவலைப்படாதீர்கள் என்று அல்லாஹுத்தஆலா ஆறுதல் படுத்தினான். 
 
طٰهٰ‌ مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى
 
தாஹா. (நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
 (அல்குர்ஆன் : 20:1,2)
 
அல்லாஹு தான் எழ சொன்னான்
 
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ
 
(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக; பொறுமையுடன் இருங்கள் என்று கூறினான்.
 
(அல்குர்ஆன் : 16:127)
 
وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ‌ۘ
 
மீனுடையவரைப் போன்று (யூனுஸ்) (அவசரப்பட்டவர்ரை) போன்று ஆகிவிடவேண்டாம்;
 
 (அல்குர்ஆன் : 68:48)
 
فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ
 
“(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக 
 
 (அல்குர்ஆன் : 46:35)
 
பொறுமையுடன் இருப்பது என்றால் உறுதியாக இருப்பது. ஸப்ர் என்றால் உறுதியாக இருப்பது.  அடி வாங்கினால் அடி வாங்கிய பிறகும் தஃவா பணி செய்வதே ஸப்ர். அடி வாங்கியதால் தஃவா பணியை விட்டுச் சென்றால் அது கோழைத்தனம்.
 
رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا
 
“எங்கள் இறைவா எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக”
 
 (அல்குர்ஆன் : 2:250)
 
எந்த அதிகாரமும் எந்த விதமான சக்தியும் எங்களை தஃவா பணியில் இருந்து தடுக்காது. பிர்அவ்னை விட ஒருவன் வர முடியுமா
 
وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِ الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۙ فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَۙ
 
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)  அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
 
(அல்குர்ஆன் : 89:10,11,12)
 
பிர்அவ்ன் பனு இஸ்ராயில்களின் குழந்தைகளை எப்படி கொள்வான் என்றால் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறக்கும் நேரம் வந்ததும் காபியாத்(செவிலியர்) மூலம்  செய்தியைப் பெற்று  அவர்களை வரவைத்து அவர்களின் ஆடையை கிழற்றி, கைகளை மேலே தூக்கி தொங்கவிட்டு, கீழே மூங்கில் கம்புகளை கூர்மையாக ஆக்கி, அவர்கள் கால் வைத்தால் அந்த கம்புகளில் கால் வைக்குமாறு அந்த கர்ப்பிணி பெண்களை தொங்க விடுவான். பின்னர  வலி தாங்காமல் குழந்தை பிறந்து அந்த கூர்மையான மூங்கிலில் குழந்தை விழும். வலி தாங்காமல் குழந்தை மீது அந்த தாய் கால் வைப்பாள் அந்தவாறு பிர்அவ்ன் பனு  இஸ்ராயில்களின் குழந்தைகளை கொல்வான்.
 
يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ
 
அவர்களின் பிள்ளைகளை அணு அணுவாக வேதனை செய்தான் அல்குர்ஆன் இஸ்ரவேலர்கள் கூறினார்கள் யா மூசா
 
اُوْذِيْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِيَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا‌
 
 நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்” என்ற  அவர்கள் கூறினார்கள்:
 
 (அல்குர்ஆன் : 7:129) 
 
மூசா நபி அவர்கள் கூறினார்கள் பொறுமையாக இருமூசா நபி அவர்கள் தஃவாவை விடவில்லை. தானும் தஃவா செய்தார்கள், இஸ்ரவேலர்களையும் தஃவா செய்ய வைத்தார்கள். எந்த இஸ்ரவேலர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களை தஃவா பணியில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். நம்மில் சிலருக்கு பயம் அவர் வந்துவிட்டார் இவர் வந்துவிட்டார் இனிமேல் தஃவா செய்யாதீர்கள் என்று கூறுவார்கள்.
 
அப்பொழுதுதான், பகிரங்கமாக தஃவா பணியை செய்ய வேண்டும். தஃவா செய்வதால் இந்தியாவில் குற்றமா? தாவா செய்து ஒரு மனிதன் சிறைக்கு சென்றால் என்ன? ஒரு தஃயியாக அவர் அங்கு சென்றும் பணியை செய்ய வேண்டும். ஒரு தஃயிஉடைய உள்ளத்தில் பயமே இருக்கக் கூடாது. காஃபிர்கள் தொந்தரவு செய்தால் அதை இன் முகத்தோடு எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என ரசூலுல்லா கற்றுக் கொடுத்துள்ளார்கள். யாசிர் அடிவாங்கட்டும், அம்மார் அடி வாங்கட்டும், சுமையா கொல்லப்படட்டும் நாம் இவ்வாறே பேசிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்போமா?  
 
சிலர் தஃவா பணி செய்கிறார்கள். அதில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையும் இல்லை, சொர்க்க நரகத்தை பற்றியும் இல்லை. லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை முற்படுத்தாத சொர்க்க நகரத்தை முற்படுத்தாத தஃவா எப்படி  தஃவாவாக இருக்க முடியும்?
 
اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِه اَنْ اَنْذِرْ قَوْمَكَ
 
مِنْقَبْلِ اَنْ يَّاْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
 
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம். 
 
(அல்குர்ஆன் : 71:1)
 
அல்லாஹு கூறுகிறான் தண்டனை வருவதற்கு முன்பு இவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் நூஹே! நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.
 
فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‏
 
ஆகவே நீங்கள் அல்லாஹுவுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின்பற்றுங்கள்.”
 
(அல்குர்ஆன்3:50)
 
وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا
 
“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; 
 
(அல்குர்ஆன் : 11:3)
 
அல்லாஹுவின் பக்கம் திருப்பாத அடியார்களை, சொர்க்கத்தின் மீது ஆசை ஏற்படுத்தாத அடியார்களுக்கு, நரகத்தைப் பற்றி பயத்தை உண்டாக்காத தஃவா எப்படி நபிமார்களின் இஸ்லாமிய மார்க்கத்தின் தஃவாவாக ஆகும்? இப்ராஹீம் அலைஹி வஸல்லம் என்ன கூறினார்கள் 
 
يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ يَّمَسَّك عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا
 
என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).
 
(அல்குர்ஆன் : 19:45)
 
اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا‏
 
“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
 
 (அல்குர்ஆன் : 19:42)
 
இவ்வாறே நபிமார்களின் தஃவா பணி இருந்தது. நரகத்தைப் பற்றியும், சொர்க்கத்தை பற்றியும் தஃவா பணியில் கூற வேண்டும். அதற்காக வேண்டி அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வேண்டும். தஃவா பணியில் அரசியலை கூறுகின்றனர் அறிவியலை கூறுகின்றனர் தஃவா பணியில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டும். அல்லாஹுவைக் கொண்டு வந்து பேச வேண்டும்.
இரண்டு காரணங்களுக்காக வேண்டி நபியவர்களை  அல்லாஹுத்தஆலா எழ சொன்னான்.  அதற்காக வேண்டி நபியவர்களும் எழுந்தார்கள்.அதற்காக வேண்டி அவர்கள் உயிரும் பிரிந்தது. நபியவர்களின் மக்கா வாழ்க்கை 13 வருடம் சுருக்கமாக அதை ஒரே வரியில் கூற வேண்டும் என்றால்  ஹிஜ்ரத்துடைய இரண்டாவது அகபாவின் சம்பவத்தில் அன்சாரிகள் மதினாவில் இருந்து வருவார்கள். வரும்பொழுது, அன்சாரிகள் எல்லோரும் ஒரே பேச்சையே பேசினார்கள்.
 
என்ன கூறுகிறார்கள் என்றால், நம் அனைவரும் மதினாவில் நம் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கின்றோம். நபியவர்கள் மக்காவில் அடி வாங்கியும், ஏசு வாங்கிக் கொண்டும்,மிரட்டப்பட்டு கொண்டும், திட்டப்பட்டு கொண்டும் இவ்வாறு இருக்கிறார்களே, எவ்வாறு நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். நாம் இனி நபியவர்களை காஃபிர்களுக்கு மத்தியில் விட கூடாது. கண்டிப்பாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களை மதினாவிற்கு கொண்டு வந்தே தீருவோம்.யோசித்துப் பாருங்கள்! எந்த அளவு நபியவர்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அன்சாரிகள் எப்படி அந்த காட்சியை பார்த்திருப்பார்கள்.
மதினா வாழ்க்கை எவ்வளவு நபியவர்களுக்கு நேரமில்லாத வாழ்க்கையாக இருந்தது. உலகத்தில் யாராவது நான் நேரமில்லாத வாழ்க்கையில் இருக்கிறேன் என்னால் தஃவா செய்ய முடியாது, என்றால் அவன் தஃவா செய்யக்கூடிய சிந்தனை இல்லாதவன்.
 
ஒரு ஆலிம் நான் தஃவா செய்ய மாட்டேன் எனக்கு நேரமில்லை என்றால் ,ஒரு தலைவன் தஃவா செய்ய மாட்டேன், எனக்கு சமுதாய வேலையை அதிகமாக இருக்கிறது என்றால் அவர்கள் அனைவரும் நபியவர்களை பார்க்கட்டும். 9 மனைவிமார்கள், இத்தனை பிள்ளைகள், பல நூற்றுக்கணக்கான பேர்கள் கலிமாவை கூறி வந்து கொண்டே இருக்கின்றார்கள், அவர்களின் சுமையையும் நபியவர்கள் சுமக்கின்றார்கள்.
 
மதினாவில் நபியவர்கள் 19 பெரிய போர்களையும், 65 சிறிய போர்களையும்,பத்து வருடத்தில் நடத்தினார்கள் என்றால் எவ்வளவு நேரம் இல்லாதவர்களாக இருந்திருப்பார்கள். அது போக, சஹாபாக்களை உருவாக்குவதற்கு, அவர்களுக்கு தீனை சொல்லி தருவதற்கு, அஹ்காம்களை மஸாஜிதுகளை  சொல்லித் தருவதற்கு,எத்தனை லட்சம் ஹதீஸ்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
 
குர்ஆனில் உள்ள 6600 வசனங்களை மனப்பாடம் செய்து, அவர்களையும் மனப்பாடம் செய்ய வைத்து, அதை சரி பார்த்து எவ்வளவு பெரிய கடமைகள். இவ்வளவு கடமைகளுக்கும் நடுவில் நபியவர்கள் எவ்வாறு தஃவா பணியை செய்தார்கள்? கடைசி வரைக்கும் ஒரு போரில்  கூட நபியவர்கள்  சென்று வரும்பொழுது பாத்திமா ரலி அவர்கள் பார்த்துவிட்டு,
 
கவலைப்பட்டு கேட்கிறார்கள் தந்தையே! இவ்வளவு அதாவது தலைமுடி எல்லாம் புழுதி அடைந்த நிலையில் பயணத்தின் உடைய அந்த களைப்புடன் வருகிறார்கள் தந்தையே! ஓய்வெடுக்க மாட்டீர்களா? நபியவர்கள் கூறுகிறார்கள் உன்னுடைய தந்தைக்கு ஓய்வு கிடையாது. இந்த தீனை, இந்த கலிமாவை அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு மாடி வீட்டிலும், ஒவ்வொரு கூரை வீட்டிலும் நுழைக்காத வரை.
 
நபியவர்கள் எழுந்திருத்தார்கள் தஃவாவுக்காக கடைசி தூங்கும் வரை அதாவது அந்த மவுத் வரும் வரை நபியவர்கள் தஃவாவுக்காக எழுந்து கொண்டே இருந்தார்கள்.எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நபியவர்கள் விடவில்லை. தஃவா பணியை விடவில்லை. அது பற்றிய இரண்டு மூன்று சம்பவங்களை பார்ப்போம். நபியவர்கள்  தஃவா பணியில் எவ்வளவு ஆசை உள்ளவர்கள். நபியவர்கள் இடத்தில் ஒரு யஹுதி அடிமை வேலை செய்கிறார்.
 
அவருடைய உள்ளத்தை நபியவர்கள் சம்பாதித்துக் கொண்டார்கள். இது ஒரு முக்கியமான விஷயம் நம்மிடத்தில் வேலை செய்யக்கூடிய முஸ்லிம்கள் அல்லாதவர் உள்ளத்தை நாம் முதலில் சம்பாதிக்க வேண்டும்.30:05 இன்றைய தினத்தில்  முஸ்லிம்களிடத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் எல்லாம் முஸ்லிம்களுடைய குணத்தால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம்களின் உபகாரங்களுக்கு அடிமைகளைப் போன்று மாறி இருக்கிறார்களா? அவ்வாறு மாறினால் தான் நாம் தஃவாவில் வெற்றி அடைய முடியும்.
 
நம்முடைய குணத்தில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு நாமே கடன் வாங்கி கொடுக்காமல், நாமே அண்டை வீட்டாருக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டும் இருந்தால், எல்லா வழியிலும் நம்மை அவர்கள் பார்த்து வெறுப்படையுமாறு செய்தால் நம்மால் எவ்வாறு தஃவா பணி செய்ய முடியும்? நபி அவர்களும் சரி சஹாபாக்களும் சரி அதனால்தான் அவர்கள் கேட்பார்கள் வந்து கொண்டே இருக்கும் குர்ஆனில் என்ன முதலில் அஹ்லாசை சரி செய்வது.
 
ஒரு சஹாபி உலுஹியா மன்னர்களின் காலத்தில் ஷியாமில் ஜெயிலில் போட்டார்கள் அவரை. அங்கிருந்த நஸரானிகள் எல்லோரும் அவரைப் பார்த்து முஸ்லிம் ஆனார்கள். அவருடைய அஹ்லாசை பார்த்து,அவருடைய நடத்தைகளை பார்த்து. அவர் இஸ்லாத்தை கூறினார் மற்றவர்கள் முஸ்லிமாகி கொண்டே இருந்தார்கள். அல்லாஹு அக்பர்  நபியவர்கள் என்ன செய்வார்கள்? என்று சொன்னால் ஒருவர்  நபி அவர்களின் பக்கத்தில் வந்தால் அவர் சரணடைந்து விடுவார். அவர் நீங்கள் என்ன கூறினாலும் சரி என்று கூறிவிடுவார். அந்த மாதிரி குணமுள்ளவர் நபியவர்கள் அதனால்தான் அல்லாஹு கூறுகிறான்.
 
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
 
‏மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
 
 (அல்குர்ஆன் 68:4)
 
ஒரு யஹுதிய அடிமை நபியவர்கள் அந்த சிறுவனின் உள்ளத்தை எவ்வாறு சம்பாதித்தார்கள்? வெகு நாள் காணவில்லை ஆதலால் நபி அவர்கள் தேடிச் சென்றார்கள். அந்த சிறுவன் படுக்கையில் இருந்தான் நபியவர்களின் கவலையை பாருங்கள் அந்த அடிமைக்கு கலிமாவை சொல்லிக் கொடுக்கிறார்கள்.அந்த அடிமை தந்தையை பார்த்து கண்ணால் கேட்கிறான் அந்தத் தந்தை கூறுகிறார், அந்த சிறுவனுக்கு 32:54 யஹுதிகள் நபி என்று கூற மாட்டார்கள் அபுல் காசிமின் தந்தை என்று கூறுவார்கள். அபுல் காசிமுக்கு கட்டுப்படு. என்று அந்த தந்தை கூறினார் உடனே அந்த சிறுவன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினான்.
 
நபியவர்களுக்கு மகிழ்ச்சி தங்கவில்லை ஒரு உயிரை அல்லாஹுத்தஆலா நரகத்திலிருந்து பாதுகாத்தானே! என்று அல்லாஹ்விற்கு நன்றி கூறிவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.
 
قُمْ فَاَنْذِرْۙ‏
 
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக!
 
 (அல்குர்ஆன் 74:2)
 
சுமாமா வருகிறார் பெரிய தலைவர் அவர் உம்ரா செய்துவிட்டு வரும்பொழுது, சஹாபாக்கள் அவரை பார்த்தவுடன் சுமாமாவை நபியவர்களிடம் பிடித்து கொண்டு வந்து பள்ளிவாசலில் கட்டிப் போட்டார்கள் .மூன்று நாள் கட்டி போட்டு கிடந்தார். நபி அவர்கள் ஒவ்வொரு தொழுகை முடிந்து வந்தவுடன் என்ன சுமாமா? என்று நபி அவர்கள் கேட்பார்கள்.  சுமாமா சொல்வார் என்னை கொல்வதாக இருந்தால் கொல்லுங்கள் ஏனென்றால் நான் உங்களுடைய ஆட்களில் பல பேரைக் கொண்டுள்ளேன்,
விட்டுவிடுவதாக இருந்தாலும் விட்டு விடுங்கள். ஏனெனில், நீங்கள் ஒரு நல்ல மனிதரையே விடப் போகிறீர்கள். நபியவர்களும் மூன்று நாள் இதே கூறுகின்றார்கள் அவரும் அதையே சளைக்காமல் கூறுகின்றார்.
 
நபி அவர்கள் போய்விடுகிறார்கள் மூன்றாவது நாள் முடிந்தவுடன், சுபுஹு தொழுகைக்குப் பிறகு என்ன சுமாமா என்றவுடன் அதே பதிலை தான் அவர் கூறுகின்றார். நபியவர்கள் சிறிது தூரம் சென்ற பின் அவரை அவிழ்த்து விடுங்கள் என்றார். சுமாமா நேராக குளிக்க சென்று விட்டு பின்னர் அஷ்ஹது  அல்லா இலாஹ இல்லல்லாஹ் வ அன்ன  முகமதர் ரசூலுல்லா  என்று கூறி விடுகிறார்.
 
நான் கட்டப்பட்ட நிலையில் இந்த சஹாதாவை சொல்லி இருந்தால், இந்த சுமாமா உயிருக்கு பயந்து, விடுதலையைத் தேடி அவன் கலிமா சொன்னதாக ஆகிவிடும். அதை நான் விரும்பவில்லை. அல்லாஹ் யாருக்கு சகாவாத் எழுதினானோ அவரை தவிர, நபியவர்களைப் பார்த்த யாருமே கலிமா சொல்லாமல் இல்லை. மக்காவில் சில குறைஷி காஃபிர்கள் மீது அல்லாஹு சகாவாத் எழுதி விட்டான்.
 
அவர்களுடைய யூதர்கள் என்ன செய்தார்கள்? என்றால் கவிஞர்களிலேயே மிகவும் உயர்ந்த கவிஞனை தேடி ,அவரை வைத்து நபியவர்களை கட்டிப்போட்டு விடலாம் என நினைத்து உயர்ந்த கவிஞனை தேடி பல செல்வங்களை அளித்து ஹசான் இபுனு சாபித்தை பிடித்தார்.
 
ஹசானே! ஒரு கவிதையை கூறினால் இந்த செல்வங்கள் எல்லாம் உனக்குத்தான் முகமதை பார்த்து ஒரு கவிதை மூலம் ஏசுவிராக! அந்தக் கவிதை மூலம் அரபு உலகத்தையே இவரிடத்திலிருந்து மாற்றி விடலாம். ஹசான் இப்னு சாபித்தும் ஒத்துக்கொண்டார். கவிஞர்களைப் போன்று செல்வத்தை வாங்கிக் கொண்டு ஒத்துக் கொண்டார்.நபியவர்களைப் பார்த்ததும் கவிழ்ந்து விட்டார்.
 
இது பொய்யர்களின் முகம் அல்ல என்று கூறி அவர் கூறினார் சுபஹானல்லாஹ் அந்த செல்வங்களை எல்லாம் யூதர்களுக்கு திரும்ப கொடுத்து விட்டார். அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர் வருகிறார் அவரும் போய் பார்க்கிறார் அவரும் கூறுகிறார் இது பொய்யர்களின் முகம் அல்ல நபி அவர்கள் கூறுகிறார்கள்36:52 இப்படிப்பட்ட வார்த்தையை யாரால் கூற முடியும் அப்துல்லாஹ் இப்னு ஸலாமும் அங்கேயே கலிமாவை கூறிவிட்டார். நபியவர்கள் தஃவா இல்லாமல் போரை நடத்தவே இல்லை. இன்றைய காலங்களில் யாரெல்லாம் போரை தவறாக எடுத்துக்கொண்டு தவறான பாதையில் போகிறார்களோ அவர் தஃவா சிந்தனை இல்லாத முட்டாள்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். நபியவர்கள் யஹுதிகளை போருக்காக வேண்டி சூழ்ந்து கொண்டார்கள்.
 
அலியை அழைத்து கூறுகிறார்கள் அலி போகிறார் அலியே நில்லுங்கள். அலியும் நின்றுவிட்டார்.
யாரசூலுல்லாஹ்!என்ன செய்ய வேண்டும். அவர்களை அழையுங்கள், லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் பக்கம் அழையுங்கள்.
 
அது மட்டுமா அல்லாஹு உங்கள் மூலமாக ஒருவருக்கு ஹிதாயத்தை கொடுப்பது சிகப்பு ஒட்டகங்களை இருப்பதைவிட சிறந்தது.
 
போரின் மைதானத்திலும் நபியவர்கள்  தஃவா செய்தார்கள், கைதிகளுக்கும் தாவா செய்தார்கள்.அல்லாஹு கொடுத்த இரண்டு கடமைகளில் ஒரு கடமை தாவா, இன்னொரு கடமை
 
يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏
 
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
 
 (அல்குர்ஆன் : 73:1)
 
قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا ‏
 
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
 
 (அல்குர்ஆன் : 73:2)
 
نِّصْفَه اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ‏
 
அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
 
 (அல்குர்ஆன் : 73:3)
 
اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ‏
 
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
 
 (அல்குர்ஆன் : 73:4)
 
அல்லாஹுவை வணங்க சொல்லுங்கள்  அல்லாஹுவிடத்தில் துவா, அடியார்களிடத்தில் தஃவா அல்லாஹுவை அழைத்துக் கொண்டே இருங்கள், வணங்கிக் கொண்டே இருங்கள்,அல்லாஹுவை வணங்குவதின் பக்கம் அழையுங்கள், இபாதத்தை முன்னிறுத்தி தஃவாவை செய்ய வேண்டும். படைத்த இறைவன் அல்லாஹு ஒருவனை
 
يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ
 
“என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள்.   அல்குர்ஆன் 11:84 நபிமார்களுடைய எல்லா தஃவாவும் அல்லாஹுவை வணங்குவதுவணங்குவது, இபாதத்தில் கொண்டு வந்து நிறுத்துவதும். அல்லாஹுவுக்கு நீ அடிமையாக இருந்து, அல்லாஹுவை நீ வணங்குவது இதுதான் நீ படைக்கப்பட்ட நோக்கம் என்பதை மையப்படுத்தி அழைப்பது.நீ அல்லாஹுவை வணங்கினால் உனக்கு சொர்க்கம் இருக்கிறது. 
 
அல்லாஹுவை வணங்காதவர்களுக்கு அல்லாஹுத்தஆலா நரகத்தை தயார்படுத்தி வைத்திருக்கிறான். இந்த இரண்டுக்காக வேண்டி நபியவர்களை அல்லாஹுத்தஆலா எழுந்து நிற்க சொன்னான். நபியவர்களும் கடைசிவரை எழுந்து நின்றார்கள். இன்றைய காலத்தில் முஸ்லிம்களாகிய நம்மிடத்திலே இபாதத்துடைய ஆசைகள் குறைந்துவிட்டன .அல்லாஹ் நம்மை மன்னிக்வேண்டும், பாதுகாக்க வேண்டும். பர்ளான இபாதத் வெறும் சடங்காகவும், பெயர்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. நபிலான வணக்க வழிபாடுகள் முற்றிலும் குறைந்து கொண்டே சென்று இல்லாத நிலைக்கு மாறிவிட்டன. 
 
இபாதத் என்றால் அது அதனுடைய எல்லா வகையான விரிவாக்கத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். குர்ஆன் ஓதுவது, அல்லாஹுவை திக்ரு செய்வது,நஃபில் நோன்பு வைப்பது, சதக்கா செய்வது, இரவு தொழுகைகள் தொழுவது, பர்லான தொழுகைகளை சரியான முறையில் தொழுவது, ஹஜ் செய்வது, உம்ரா செய்வது, அதேபோல் அல்லாஹ்வுடைய அடியார்களின் பக்கம் அவர்களுக்கு நன்மை செய்வது,உதவி செய்வது.
 
இப்படியாக வணக்க வழிபாடுகளை பரவலான  அர்த்தத்திலே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது எல்லாம் சேர்ந்து நாம் அல்லாஹுவுடைய அடியார்களுக்கு முன் போய் நின்று அல்லாஹ்வின் பக்கம் அவர்களை நாம்  எப்போது அழைக்கிறோமோ அது முழுமையான தஃவா ஆகும்.
 
நாமே தாவா செய்து பின்னர், நாமே ஜமாத் தொழுகைக்கு செல்லவில்லை, நம்மிடத்திலே குர்ஆன் ஓதும் பழக்கம் இல்லை என்றால், இபாதத்துடைய ஈர்ப்பை உண்டாக்க வேண்டும். இந்த ஒரு ஆயத்திற்கு மட்டும் தப்ஸீர்தபரிலே இமாம் எத்தனை விளக்கம் சொல்கிறார் என்று பாருங்கள் அல்லாஹ் கூறுகிறான்.
 
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
 
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. 
 
(அல்குர்ஆன் : 94:7)
 
وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
 
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
 
 (அல்குர்ஆன் : 94:8)
 
இதற்கு எத்தனை விளக்கம் இமாம் தபர்எழுதினார் என்றால், நபியே! நீங்கள் தஃவா பணியை முடித்து விட்டால், தொழுகைக்கு வாருங்கள். தாவாவில் இருந்து ஓய்வு பெற்றால், தொழுகைக்கு வந்து விடுங்கள். அல்லாஹ்வின் பக்கம் தொழுகைக்கு நின்று விடுங்கள். அதுவும் எப்படி நிற்க வேண்டும் என்றால் உங்களுக்கு களைப்பு ஏற்படும் அளவிற்கு நீங்கள் நிற்க வேண்டும். 
 
நஸப் (نصب )  என்று சொன்னால் மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை களைப்பு. அல்லாஹ் கூறுகிறான் நபியே நீங்கள் அத்தகைய களைப்பை இபாதத்திற்கு எடுங்கள். நாம் எவ்வாறு இபாதத் செய்வோம் என்றால்  கையும் வலிக்காது, காலும் வலிக்காது, உடல் வலிக்காது, அந்த அளவிற்கு செய்வோம். குர்ஆன் ஓதி ஓதி எனக்கு கண் வலிக்கிறது
 
நீண்ட நேரம் நின்றதால் எனக்கு முதுகு வலிக்கிறது, நீண்ட நேரம் சுஜூது செய்ததால் எனக்கு நெற்றி வலிக்கிறது, இந்த மாதிரியான தொழுகை நம்மிடத்தில் வந்திருக்கிறதா? நபியவர்களுடைய நபில் தொழுகை எல்லாம் இவ்வாறு தான் இருக்கும் நபியவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத் தொழுவார்கள் சுருக்கமாக.
 
நம்மளுடைய மொத்த தொழுகையுமே நபியவர்களுடைய முன் சுன்னத்தை போன்று ஆகிவிட்டது.   தஹ்ஃபீப் என்று சொன்னால் இபுனு தைமியா சொல்கிறார்கள் உங்கள் இஷ்டத்திற்கு தஹ்ஃபீபா? என்று கேட்கிறார்கள். நபியவர்கள் ஒரு அளவை கொடுத்து விட்டார்கள் அதற்கு மேல் அதிகப்படுத்தாதீர்கள்.
இன்றைய தினத்தில் சுருக்கமாக  தொழுபவரிடம் கேட்டால் நபியவர்கள் கூறினார்கள் ஒருவர் இஷா தொழுகை வைக்கும்பொழுது அவர் நீண்ட தொழுகை வைத்து விட்டார், அவரைப் பார்த்து நபியவர்கள் கேட்டார்கள்நீ என்ன குழப்பவாதியா? இவ்வாறு நம்மக்கள் கூறுகின்றனர்.
 
ஆனால்  முஆத் ரலி அவர்கள் தினமும் இஷா உடைய முதல் ரக்காத்தில் சூரா பகராவையே ஓதிக் கொண்டிருந்தார். அவர்கள் நபியவர்களுடன் தொழுது சென்று, அவர் கூட்டத்திற்கு சென்று அல்லாஹு அக்பர் என்று கூறி சூரா பகராவையே ஓதினார்.
 
எல்லாரும் தொழுதனர் ஆனால் அதில் ஒரு சிலருக்கு கஷ்டமாக இருந்தது. அதற்கு சொன்ன இந்த ஹதீஸை சூரா புரூஜிற்கும்  சூரா அஃலா விற்கும்  எடுத்துக்கொண்டு அதை பாதியாக கத்தரித்து ஓதினால் நாம் அநியாயக்காரனா? இல்லையா? நபியவர்கள் ஒரு அளவு கொடுத்திருக்கிறார்கள்.
 
சுப்ஹா இதிலிருந்து இதுவரைக்கும் ஓதுங்கள், அல்லது இத்தனை ஆயத்து ஓதுங்கள், இந்த சூராவை முழுதாக ஓதுங்கள் என்று.அது போன்று இஷா அதற்கு சூரா நபவிலிருந்து அதற்கு முன் சூரா ஹுஜுராதிலிருந்து வல்முர்ஸலாத் வரைசுபுஹு தொழுகைக்குதொழுகைக்கு, ஒரு ஒரு சூராவை முழுதாக ஓத வேண்டும் அல்லது இரண்டு இரண்டு சூராக ஓத வேண்டும்.பிறகு இஷாவுக்கு ஓதிய அளவையே ளுகருக்கும், பஜ்ருக்கு  ஓத வேண்டும் அஸர், மஹ்ரிப் இது இரண்டிற்கு மட்டும் வள்ளுஹாவிலிருந்து, குல்அஊது பிரப்பின்னாஸ் வரைக்கும் ஓத வேண்டும்.
 
தஃவாஎன்பது இந்த இபாதத்தோடு சேர்ந்திருக்கும் பொழுது தான் அது ரூஹானதஃவாஆகும். அல்லாஹுவுடைய அடியார்களை அல்லாஹுவின் அடியார்களாக இபாதுர்ரஹ்மானாக! அல்லாஹ்வை வணங்கக்கூடிய  நல்லடியார்களாக ஆக்குவது நம்முடைய நோக்கம். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு சொல்கிறான். அல்லாஹு சத்தியமாக சொல்கிறான். அவர்களின் உள்ளத்தில் திகிலை நாம் ஏற்படுத்துவோம் என்று. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் சில நேரங்களில்  அல்லாஹ் நம்மை சோதிப்பான்
 
الٓمّٓ‌ ‏
 
அலிஃப், லாம், மீம்.
 
(அல்குர்ஆன் : 29:1)
 
اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ‏
 
“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
 
 (அல்குர்ஆன் : 29:2)
 
وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ‏
 
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹு அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
 
 (அல்குர்ஆன் : 29:3)
 
முதலில் சஹாபாக்களுக்கு 100 பேர் இருந்து ஆயிரம் பேருடன் மோதுங்கள் என்றான் அல்லாஹ் அடுத்து கூறுகிறான்:
 
اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًا‌ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ‌ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ
 
‏நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
 
 (அல்குர்ஆன் : 8:66)
 
இந்த தீன் ஒன்று அல்லாஹுவுடைய தஃவா ஒன்று. இன்ஷாஅல்லாஹ் குர்ஆன் சுன்னாவை பற்றிப் பிடித்து அல்லாஹ்வின் பக்கம் அல்லாஹ்வின் அடியார்களை மனத்தூய்மையோடு, அல்லாஹ்வின் பக்கம் அவர்களை அழைக்கக்கூடிய அந்த  சிறந்த பணியை செய்வோமாக இறுதி வரை அல்லாஹ் நமக்கு அதற்குதவ்ஹீத்  செய்வானாக என்று அல்லாஹ் புகழக்கூடிய அந்த நன்மக்களிலே அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்குவானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/